தேமொழி
சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே…
– கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1>>
தேமொழி
சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே…
– கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகள்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 1>>
ஜெயஸ்ரீ ஷங்கர்
நாணத்தினால்
தாமரை…
வண்டுகள் வரவு..!
நீ சூடிய மல்லிகை..!
நறுமணம்…
எனைத்தேடி..!
விற்கும் வரை மட்டுமே..
ஒய்யாரமாய்..அணிவகுப்பு..!
செருப்பு…!
வளைந்த வில்லும்
நீந்தும் கெண்டையும்..
உன் முகத்தில்..!
நிறைகுடத்தை
சுமக்கிறாள்
கர்ப்பிணி..!
கால் வலிக்காதா..
சோர்வே வராதா,,..?
கடலலைகள்.
கனல் கொண்டு பறக்கும்
புதுமைப் பெண்..
மின்மினி…!
சொன்ன வாக்கு பலிக்குது…
வீட்டுக்குள்ளே.. குடுகுடுப்பைக்காரன்..
கதவிடுக்கில் பல்லிச் சத்தம்..!
மூடிய விழிகளுக்குள்
வண்ணச் சித்திரம்..
கனவு..!
கட்டித்தொங்கப் போட்டாலும்
சுதந்திரமாய்ப்.. பறக்கும் ஓர்நாள்
சுதந்திர தினத்தில் தேசியக் கொடி..!
சருகாகும் மலர்களே…
வரம் வாங்கி வந்தீர்களா..
சந்ததி வேண்டாம் என்று..!
கண்டெடுத்தேன்..
புதையலை..
உன் மனம்..!
மௌனமாய்…
உயிர் போராட்டம்..
எறும்புகள்..!
உடலுக்குள்ளே…
என்றும் குழந்தையாய்..
மனம்..!
திருமணம்..
இருமனக் கனவின்..
அரிச்சுவடி..!
கர்ப்பத்தை கலைகாதீர்..
விதையோடு பழங்கள்..!
வயிற்றிலா விதைப்பது..?
பாதத்திற்கு பாதுகாப்பு
கைகளுக்கும் தற்காப்பு
செருப்பு..!
நாளைய நெல்லுக்கு..!
நாற்று நடவு…இன்று..
பட்டினியோடு..!
உதிர்ந்த பூக்களை
வாரி அணைக்க
தென்னங்குச்சிகள்..!
முகம் காட்டும் கண்ணாடியே..
என்ன கோவம்..என்மேல்..?
எங்கே ஒளித்தாய் என் இளமுகத்தை….!
உடலுக்குள்ளே..
விஷமருந்து ..
உயிரோடிருந்தது..
பட்டாசு..!
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
இன்றைய இங்க்லாந்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இப்புது வருடத்திலே எத்தகையதோர் திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது புதுவருடச் செய்தியில் ” 2012ம் ஆண்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி நன்கு உணர்ந்துள்ளேன். இந்த நெருக்கடி ப்ழைய அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவினாலும், அனைத்துலக பொருளாதார பாதிப்பினாலும் எழுந்த விளைவுகளேயாகும். இந்தப் பிரச்சனையை வெகுவிரைவாகத் தீர்த்து விடுவோம் என்று கூறுமளவிற்கு எம்மிடம் கைவசம் ஒருவிதமான மந்திரஜாலங்களும் இல்லை. எம் கண் காணும் முன்னேற்றப் பாதை இன்னும் கரடுமுரடானதாகவே இருக்கிறது. இருப்பினும் நாம் போகும் பாதை முன்னேற்றத்தை நோக்கியே செல்கிறது என்னும் நம்பிக்கை எமக்குள்ளது ” எனும் வகையிலான கருத்தை முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் இவ்வரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் மிகவும் அதீதமானவை அவை சிறிது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற போதிலும், அரசாங்கம் தமது தீவிர பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மட்டுமே நாட்டை பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிக்கும் என்று கூறிவருகிறார்கள்.
தமது பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் படி அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். அதில் ஒரு பகுதியாக வருமானம் குறைந்த மக்களின் வருமானத்தை ஈடுகட்டும் முகமாக அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையில் உள்ள சீர்கேடுகளைக் களைவதால் ஏறத்தாழ 300 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான தொகையை மீதப்படுத்தலாம் எனும் கணிப்பை முன்வைக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பிரதமர் டேவிட் கமரனால் முன்னாள் கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர் “இயன் டன்கன்
சிமித்” அவர்கள் பணிக்கப்பட்டார்.
இரண்டுவருட கால ஆராய்ச்சியின் பின்னால் அவர் தனது அறிக்கையில் லேபர் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த குறைந்த வருமானவுள்ளவர்களுக்கான உதவித்தொகையின் பால் சுமார் 171 மில்லியன் பவுண்ட்ஸ் வரை செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வுதவித் தொகை ஒன்றே இங்கிலாந்து அரசாங்கத்தின் சமூக சேவை பட்ஜெட்டில் ஏறத்தாழ 60% பங்கை வகித்திருந்தது எனவும் இதன் நடைமுறையாக்கல் சரியான வகையில் பரிசோதிக்கப்படாததினால் பலர் இதனைச் துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி இவ்வுதவித் தொகைகளை பெறுவது மிகவும் இலகுவாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இக்குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அப்போதைய அரசாங்கத்திலிருந்த லேபர் கட்சி வெறும் ” அரசியல் லாபத்திற்காக தம்மீது சுமத்தப்படும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு ” என்று மறுதலித்துள்ளார்கள்.
ஆனால் அரசாங்கத்தின் சார்பான “இயன் டன்கன் சிமித்” அவர்களோ அனாவசியமான செலவு மட்டுமல்ல அது. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அவர்களை வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளி அங்கேயே வைத்திருக்கும்படியான ஒரு செய்கையே இது என்றும் கூறியுள்ளார்.
இவரின் கூற்றில் ஒருவகை உணமை இருப்பது போலவும் தென்படுகிறது. வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கு உதவுவது எத்துனை அவசியமோ அவர்கள் அந்நிலையிலிருந்து வெளியே வந்து தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.
இல்லையேல் அரசாங்கம் அளிக்கும் உதவித் தொகையில் தங்கியிருக்கும் ஒரு பரம்பரையை உருவாக்கும் செயலை ஊக்குவிப்பதாக இத்திட்டங்கள் அமைந்து விடும்.
அதே சமயம் வேலையில்லாமல் திண்டாடும் மக்கள் கெளரவத்துடன் வாழ்வதற்கு நாட்டின் அடிமட்ட வாழ்க்கைச்செலவு என்று கனிக்கப்பட்ட தொகையை அளிக்கும் அரசின் சமூகக் கடமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.
அர்சாங்கமோ அன்றி அரசியல்வாதிகளோ தனியான இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே ! தமக்க%E
சு. கோதண்டராமன்
புலவர் வகுத்தபடி புகழோடு தோன்றினாய்.
பிறக்கும் கணமுதலே பிரகாசம் பரப்புகிறாய்.
கடமை முடிந்தவுடன் கணமும் உயிர் தரியாய்.
காலம் பலவாகக் கவிந்திருந்த இருளெனினும்
நிற்றல் இயலுமோ நின் முன்னே தேவனே.
சார்ந்தாரைக் காத்திடுதல் சான்றோரின் இயல்பென்பர்.
நீயோ சார்ந்தாரை நீறாக்கி மகிழ்கின்றாய்,
உயர்வும் தாழ்வுமென உனக்கில்லை பேதங்கள்
உன்னதக் கலைப் பொருளை ஓசையின்றி விழுங்கிடுவாய்.
அழுகிய பிணத்தினையும் ஆசையுடன் உண்டிடுவாய்
அழுக்கு தூசிகளை அழித்திடவே விரும்பிடுவாய்
பழையன நைந்தன உன் பசி வாய்க்கு உணவாக்கி
புதுமை பிறத்தற்குப் புவி தன்னில் வழியமைப்பாய்.
தங்கம் ஒளிர்வதுன் தயவின்றி நடைபெறுமோ?
வீட்டில் சமையலகம் வீதியில் வாகனங்கள்
எந்திரத் தொழிலகங்கள் யாவையும் இயக்கிடுவாய்
நீயின்றி எனக்கிந்தப் பொருளெல்லாம் ஏது?
நானே தான் ஏது?
என்னிடம் நீ இன்றேல் எனைத் தூக்கி நான்கு பேர்
உன்னிடம் சேர்ப்பித்தல் உலகில் மரபன்றோ?
மானிடரே வாருங்கள், மகரிஷிகள் சொன்னபடி
வேத மொழி சில கூறி வேண்டிடுவோம் அக்கினியை.
அக்னிமீளே புரோஹிதம்
யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம்
ஹோதாரம் ரத்ன தாதமம்
முன்னின்று வழிநடத்திச் செல்பவனே போற்றி
முதன்மையாய் நலம் செய்யும் முன்னவனே போற்றி
யாகத்தின் தலைவனாய் இயங்கிடுவாய் போற்றி
யாகங்கள் செய்பவனும் நீயே தான் போற்றி
சிறப்பான செல்வங்கள் சேர்த்திடுவாய் போற்றி
சத்தியமணி
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
கண்ணீரில் அவர்கள் கைகட்டி இவர்கள்
தண்ணீரில் சட்டம் டைகட்டி திட்டும்
புதுமைப் பெண்டிர் புகழ்சொன்ன பாரதி
புலம்பி அழுவதை எத்த்மிழிர் கேட்டனரோ
பசும்பொன் புன்னகை ததும்பிடும் காந்தி
விசும்பல் ஒலிகூட உம்காதில் சேராதோ
இப்போது இந்நாளில் இனிமேலும் குறைவது
பாதுகாப்பு பண்பாடு குலநீதி நற்குணமே
எப்போது எந்நாளில் இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே கேடாகும்
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
P.Tamizhmuhil Neelamegam

We all know that plants prepare their food by the process called Photosynthesis. But there are certain plants which depend on living organisms for their livelihood.Such plants are called Carnivorous Plants.
Carnivorous Plants are the plants which capture, kill and digest the insects and other small organisms.These carnivorous plants live in a soil that is deficient in Nutrients.So,they supplement their diet with nutrients obtained by digesting the insects. These plants have some specialized leaves or flowers or tentacles to capture the prey and digest them.
A plant is said to be carnivore, if they possess the following characteristics:
The Plants must possess certain adaptations to capture the prey.The adaptations include trap type and certain modifications in the trap that improve the efficiency of the plant in prey capture.The trapping mechanism always involves certain leaf modifications, in which the leaves acts as a trap.
The different trap types include
Certain examples for the modifications that improve the efficiency may include
Sundew, Pitcher plant/Nepenthes,Butterworts are certain examples of carnivorous plants.
To be continued….
(I Hear America Singing)
Walt Whitman
(1819-1892)
(புல்லின் இலைகள் -1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன்
அநேக கோலாகலப் பாடல்களைக்
கேட்கிறேன்.
எந்திரத் துறைஞன்
ஒவ்வொரு வனும் தனது
தொழில் பற்றிப் பாடுகிறான்,
களிப்பும், கைப்பலம் அளிப்பதால்.
தச்சன் தன் தொழிலைப் பாடுவான்
உத்தரமோ மரப்பலகையோ
ஒன்றை அளந்து,
கொத்தன் தன் தொழிலைப் பாடுவான்
துவங்கும் போதும் பணியை
முடித்து விட்டுப் போகும் போதும் !
படகில் உள்ள தனக்குரிய பொருளைப் பற்றிப்
படகோட்டி பாடுவான்
நீராவிப் படகின் தளத்தி லிருந்து !
செருப்பு தைப்போன் பாடுவான்
ஒரு நாற்காலி மீதமர்ந்து !
பொழுது புலர்ந்ததும் காதில் கேட்கும்
மரம் வெட்டு வோன் கானம்,
பாதையில் நடக்கும் ஏர் உழுவோன்
பாட்டும் கேட்கும் அதி காலையில்.
பகலிலோ அன்றி
பரிதி அத்தமனத் திலோ !
தாயின் சுவையான தாலாட்டு கேட்கும்,
தன் வீட்டு வேலை செய்யும்
தாரத்தின் பாட்டு,
இளமங்கை ஒருத்தி தையல் வேலையில்
அல்லது துணி வெளுப்பில்,
தம்தம் பணியில் ஈடுபட்டுப் பாடுகிறார்
தமது பணி ஊழியர் முன் பாடுவது
தவிர வேறு யாரிடமும்
அவர் பாடுவ தில்லை !
பகற் பொழுது பகலைச் சார்ந்து செல்லும்
இரவில் வாலிபர், மற்றும்
எடை பெருத்தவர்,
இரக்கம் மிக்கவர் உரக்கப்
பாடுவர் வாய் திறந்து
வேடிக்கைப் பாட்டுகளை.
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 16, 2013)
Dhivakar
Good Evening
நாகேஸ்வரி அண்ணாமலை
இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் விமானத்தில் சென்று இறங்கினாலும் டெல் அவிவ் நகருக்குப் போகும் திட்டம் எங்களுக்கு இல்லை. அது இப்போது மிகவும் பெரிய தொழில்நகரமாகி விட்டது. இஸ்ரேலின் ஜெருசலேம் மிகப் பழமை வாய்ந்த ஊர். இங்குதான் கிறிஸ்துவர்களின் வேதப் புத்தகமாகிய பழைய, புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல இடங்களைக் காண முடிகிறது. இதனால் ஜெருசலேமில் தங்கிகொண்டு இஸ்ரேலின் மற்ற இடங்களையும் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் வெஸ்ட் பேங்க்கில் இருக்கும் இடங்களையும் பார்ப்பதென்று முடிவு செய்தோம். டெல் அவிவ் விமான நிலையம் டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கிறது. (டெல் அவிவ் விமான நிலையத்தின் பெயர் பென் குரியன் விமான நிலையம். போலந்தில் 1888-இல் பிறந்த பென் குரியன் தன் இளவயதிலேயே ஸயோனிஸத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆட்டோமான் காலத்திலேயே பாலஸ்தீனத்திற்கு வந்து யூதர்களுக்கென்று தனி நாடு நிறுவுவதில் தீவிரமாகப் பணிபுரிந்தார். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு அதன் முதல் பிரதம மந்திரியானார்.) டெல் அவிவ் விமானநிலையத்தை விட்டு ஜெருசலேம் நோக்கி வர வர சமவெளியாக இருந்த இடங்கள் மலைப்பாங்கான இடங்களாகவும் பாலைவனப்பிரதேசமாகவும் மாறிக்கொண்டிருந்தன. ஜெருசலேமும் இம்மாதிரி மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கிறது.
ஜெருசலேம் நகரம் 48 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இது பரப்பளவைப் பொறுத்த வரை இஸ்ரேலின் பெரிய நகரம் என்று கருதப்பட்டாலும் ஜனத்தொகையில் டெல் அவிவை விட சிறியதுதான். இங்கு வாழும் 7,00,000 பேர்களில் 4,60,000 பேர் யூதர்கள், 2,25,000 பேர் இஸ்லாமியர்கள் (அரேபியர்கள்), 15,000 பேர் கிறிஸ்துவர்கள். இந்த நகரின் மையத்தில் உள்ள புராதனப் பகுதி புராதன நகரம் (old city) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த புராதன நகரத்தைச் சுற்றிப் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியிருக்கின்றன. புராதன நகரம் கடல் மட்டத்திற்கு மேல் 2,600 அடி உயரத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக உருவாக்க ஐ.நா. 1947-இல் திட்டமிட்டபோது ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் ஐ.நா.வின் நேர் பார்வையில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த ஆறு சண்டைகளில் 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமை தனதாக்கிக் கொண்டது. அதனால் அது இப்போது இஸ்ரேலின் கீழ் இருக்கிறது.
புராதன நகரம் முழுவதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருக்கிறது. அது பல மட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது. அதற்குள் போவதற்கு ஏழு வாயில்கள் இருக்கின்றன. நடந்து செல்லக் கூடியவர்கள் மட்டுமே புராதன நகருக்குள் சென்று அங்குள்ள பைபிளோடு தொடர்புடைய, யூதர்களும் முஸ்லீம்களும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் பல இடங்களையும் பார்க்கலாம். அது ஒரு தனி உலகம்.
ஜெருசலேமில் ஆங்காங்கே ஆலிவ் மரங்களும் பேரீச்சம்பழ மரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் இந்தப் பிரதேசத்தில் காலம் காலமாக விளைபவை. ஆனால் அமெரிக்க யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் இன்னும் மற்ற இடங்களில் வாழும் யூதர்களிடமிருந்தும் இஸ்ரேலுக்கு நிறையப் பணம் வருவதால், விவசாயத்தில் புது தொழில்முறைகளைக் கையாண்டு இஸ்ரேல் முழுவதும் பல வகைச் செடிகளைப் பயிர்செய்கிறார்கள். இங்கு விளையும் கத்தரிக்காய் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கிறது. மேலும் மிகவும் பெரிதாக இருந்தாலும் பிஞ்சாக இருக்கிறது. ஒரு நாள் அவற்றை வாங்கிச் சமைத்த எனக்கு அவற்றில் இரண்டையாவது இந்தியாவிற்குக் கொண்டுவர ஆசை. இஸ்ரேலின் சொட்டு நீர்ப் பாசன முறையை அவர்களிடமிருந்து கற்றுத் தமிழ்நாட்டிலும் இப்போது அதைக் கடைப்பிடிப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன். நவீன விவசாயத் தொழில் முன்னேற்றத்தில் இதுவும் ஒன்று. அதுவும் தண்ணீர் அதிகம் இல்லாத இஸ்ரேலில் இந்த முறை மிகவும் பயன்படுகிறது.
ஜெருசலேம் முழுக்க பேருந்துகளிலேயே போய்வரலாம். நிறைய பேருந்துகள் ஓடுகின்றன. சாலைகளின், ஊர்களின் பெயர்கள் ஹீப்ரு, அரேபியம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளன. யூதர்களுக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை ஓய்வு தினம் (shabbath day – அதாவது அன்று இறைவனுக்கு நன்றி சொல்லி முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று கருதுவதால்). அன்று அரசுப் பேருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள்; கடைகளையும் மூடிவிடுகிறார்கள். உணவகங்களும் இதில் சேர்த்தி. ஆனால் துபாயில் ரம்ஜான் சமயத்தில் போல் வெளியில் நம் உணவை உண்பதைத் தடுப்பதில்லை.
ஜெருசலேமில், குறிப்பாக பழைய நகர்ப் பகுதியில் நிறைய யூதர்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளில் நடமாடிக்கொண்டிருந்தனர்.
ஜெருசலேமிலும் புறநகர்ப் பகுதிகளில் அமெரிக்க மாடலில் பெரிய மால்கள் இருக்கின்றன. அமெரிக்க மாடல் மால்கள் உலகெங்கிலும் பரவி வரும்போது அமெரிக்காவிடமிருந்து எக்கச்சக்கமாகப் பண உதவி பெறும் இஸ்ரேலில் இந்த மாதிரி மால்கள் இல்லாமல் இருக்குமா?
ஜெருசலேமைச் சுற்றிலும் சிறிய தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (monasteries) மற்றும் மசூதிகள் இருக்கின்றன. பழைய நகரை விடுத்து ஜெருசலேமில் மிக முக்கியமான இரண்டு இடங்கள் எல்லோரும் பார்க்க வேண்டியவை. ஒன்று இஸ்ரேல் மியுஸியம் (The Israel Museum); இரண்டாவது யாத் வாஷம் (Yad Vashem). முதலாவது யூதர்களின் பழைய பெருமை வாய்ந்த சரித்திரத்தை எடுத்துக் கூறி தங்கள் இனம் இறைவனின் படைப்பில் சிறந்த இனம் என்று எடுத்துக் காட்ட உருவாக்கப்பட்டது. இரண்டாவது ஜெர்மனியில் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுச் சின்னம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை அவர்களுடைய தலைமுறைகளும் உலகமும் என்றும் மறக்காமல் இருப்பதற்காகவும் இனி அந்த மாதிரி கொடுமை யூதர்களுக்கு எப்போதும் இழைக்கப்படாமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. இரண்டிலும் பணத்தைக் கொண்டு கொட்டியிருக்கிறார்கள்.
இஸ்ரேல் மியுசியத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவு யூதர்களுடைய 3000 வருஷ சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறது அவர்களுடைய கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகிய பற்றிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்த சரித்திரம் இருக்கிறது. ஆங்காங்கு அவர்கள் கட்டிய யூதக்கோயில்கள் (Synagogue என்று யூதக்கோயில்களை அழைக்கிறார்கள்) பற்றிய விபரங்களும் நான்கு யூதக்கோயில்களின் உட்புறங்களின் மாடல்களும் இருக்கின்றன. கொச்சியில் இருக்கும் யூதக்கோயில் அவற்றில் ஒன்று. யூதர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தபோது இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் வந்திருக்கிறார்கள். குடிபெயர்ந்த பல இடங்களில் அந்தந்த இடங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றி உபயோகித்த பொருட்கள் – துணிகள், உடைகள், ஆபரணங்கள் – காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அவர்கள் உபயோகித்த மணப்பெண் உடை ஒன்றும் இருந்தது. சரித்திர மத்திய காலத்திலிருந்து இன்று வரை, பல இடங்களிலிருந்தும் – ஸ்பெயின், சீனா போன்ற தூர தேச நாடுகளிலிருந்தும் – சேகரித்த பல பொருள்கள் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
பல வகையான புத்தகங்களின் கைப் பிரதிகளும் இங்கே இருக்கின்றன. 14-ஆம் நூற்றாண்டில் பாஸ் ஓவர் (Passover) பண்டிகையின் போது ஒரு யூத மதத் தலைவர் வாசித்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் 15-ஆம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட பழைய ஏற்பாடு பைபிள், சட்ட சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பிரதிகளும் இருக்கின்றன. Passover என்பது யூதர்கள் எகிப்தில் ஃபேரோவின் அடிமைகளாக இருந்தபோது கடவுளிடம் தங்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட போது இறைவன் யூதர்களை விடுவிக்கும்படியும் இல்லையென்றால் பல இன்னல்களுக்கு உட்படும்படியும் எகிப்து அரசனை எச்சரித்து எகிப்தியர்களுக்குப் பல தண்டனைகள் கொடுத்தார். அதில் எகிப்தியக் குடும்பத்தின் எல்லா ஆண்பிள்ளைகளையும் கொன்றுவிடுவது ஒன்று. இறைவன் யூதர்களிடம் ஆடுகளைப் பலிகொடுத்து அவற்றின் இரத்தத்தை யூதர்களின் வீடுகளின் வாசலில் பூசிவைத்தால் அந்த வீடுகளைத் தான் அடையாளம் கண்டுகொண்டு யூதர்களின் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டுவிடுவதாக வாக்களித்தாராம். அதைக் கொண்டாடும் நாள்தான் Passover ஆகியது.
கலைப் பொருள்கள் பகுதியில் பல காலங்களில் சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்களிலிருந்து தற்கால ஓவியங்கள் – எல்லாம் யூதர்களின் படைப்புகள் – வரை இருக்கின்றன. சீனாவின் பீங்கான் சாமான்களிலிருந்து ஆப்பிரிக்காவின் மனித உருவப் பொம்மைகள், மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு அழகு செய்துகொள்ளும் கலைக்கூடம் வரை இருக்கின்றன. இப்பகுதியில் பெயர்பெற்ற நவீன கலைஞர்களின் படைப்புகளையும் காணலாம்.
இன்னொரு பகுதி தொல்லியல் துறை. இதில் இஸ்ரேலில் தோண்டி எடுக்கப்பட்ட பல தொல்லியல் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாகத் தோண்டப்பட்ட இடம் இஸ்ரேல்தான் என்கிறார்கள். (இப்போதும் புராதன நகரத்தில் பல இடங்களில் தரையைத் தோண்டும் வேலை நடக்கிறது. புராதன நகரத்தில் பல இடங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இருப்பதால் இப்படித் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.) கி.மு.வின் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி.யின் பல நூற்றாண்டுகள் வரை கண்டெடுக்கப்பட்ட பல அரிய பொருள்கள் இருக்கின்றன. சாலமன் அரசன் காலத்தில் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவிலிலிருந்து கிடைத்ததாகக் கருதப்படும் பழைய ஹீப்ரு எழுத்துக்கள் எழுதப்பட்ட தந்தத்தில் செய்த மாதுளம் பழத் தொல்லியல் பொருள் ஒன்றும் இருக்கிறது. யூதர்களின் இரண்டாவது கோவில் மாடல் ஒன்றும் இந்த மியுசியத்தில் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான அம்சம் உயிரற்ற கடலின் (Dead Sea) அருகில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட சுவடிகள் (Dead Sea Scrolls) அடங்கிய பகுதி. 1947-இல் பெடுயின் (Bedouin) இனத்தைச் சேர்ந்த இடையன் ஒருவன் தொலைந்துபோன தன் ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்காகக் குகைக்குள் சென்றபோது அவனுக்குத் தற்செயலாகக் கிடைத்த சுவடிகளை மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு சில தசாப்தங்களில் இன்னும் 800 சுவடிகள் பதினொரு குகைகளில் கிடைத்தனவாம். இந்தக் குகைகளுக்குப் பக்கத்தில் உள்ள கும்ரான் என்ற ஊரில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று இப்போது நம்பப்படுகிறது. இந்தச் சுவடிகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 68 வரை எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இது கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் கிறிஸ்தவ மத வரலாற்றையே இவை மாற்றிவிடலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் இவை யூதர்களின் பழைய வேதமான தோரா (Torah) என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுவடிகளின் மூலப்பொருள் தோலாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகப் பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இவற்றை மியுசியத்தின் தளத்திற்குக் கீழே உள்ள அரை இருட்டு அறையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது காட்சிக்கு வைத்திருப்பவற்றை எடுத்துவிட்டுப் புதிதாகச் சிலவற்றை வைப்பார்களாம். ஒன்றையே வைத்திருந்தால் அவை கொஞ்சம் பழுதடைந்து போகலாம் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
யாத் வாஷம் ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது உலகத் தரம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 1953-இல் கட்டப்பட்டது. இப்போது நிறைய புது விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Hall of Names என்னும் பகுதி 180 மீட்டர் நீளமுடையது. இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் இரண்டு பக்கங்களிலும் ஜெர்மன் படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள், அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் இருபது லட்சம் பக்கங்கள் இங்கு இருக்கின்றன. இதன் கோன் வடிவமான கூரையில் 600 படங்கள் இருக்கின்றன. இதன் ஒருகோடியில் இருக்கும் கணினி அறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய data base இருக்கிறது. அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் உதவியால் யார் பற்றிய விபரம் வேண்டுமானாலும் அதில் தேடலாம்.
கலைக்காட்சியகம் (Art Museum) ஒன்றும் யாத் வாஷத்தின் முக்கிய அம்சம். இங்குள்ள ஓவியங்கள் யாவும் ‘படுகொலை’ (Holocaust) சமயத்தில் பல யூதர்கள் உருவாக்கியவை. படுகொலையில் தப்பிக்காத பலரின் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள Exhibition Pavilion-இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருள்கள் இருந்தாலும் எல்லாம் ஜெர்மானியப் படுகொலையோடு சம்பந்தப்பட்டவை. அடுத்து வரும் Learning Center-உம் அப்படியே. ஜெர்மானியப் படுகொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு விடை காண விரும்புவோர் இங்கு கணினிகள் மூலம் விடை காணலாம்; காதில் மாட்டிக்கொள்ளும் ear phones மூலமும் விடை தெரிந்துகொள்ளலாம். Visual Center-இல் யூதப் படுகொலை பற்றிய எல்லா ஆவணப் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள யூதக்கோவிலில் ஐரோப்பாவில் பல இடங்களில் அழிக்கப்பட்ட யூதக்கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல வகையான பொருள்கள் இருக்கின்றன.
இந்த மியுசியத்தின் சார்பில் பல ஆன் லைன் வகுப்புகள் நடத்துகிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இதில் சேரலாம். யூதர்களின் சரித்திரத்தையும் ஜெர்மானியப் படுகொலை பற்றியும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
யாத் வாஷத்திற்கு அனுமதி இலவசம். ஆனால் இங்கு வருபவர்கள் உரிய முறையில் உடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கால் பேண்ட்டுகள் (shorts), குட்டைப் பாவாடைகள் (mini skirts) அணிந்துகொண்டு மியுசியத்திற்குள் நுழைய முடியாது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் நிமித்தமாக இந்த நிபந்தனை இருக்கிறது என்று நினைக்கிறேன். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘யூதப் படுகொலை’ சம்பந்தப்பட்ட சில காட்சிப் பொருள்கள் அவர்களின் மனதைப் பாதிக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு போலும். எல்லாப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கே மூடிவிடுகிறார்கள். சனிக்கிழமை முழுவதும் விடுமுறை. ஜெர்மானியப் படுகொலை பற்றிய எல்லா விபரங்களையும் பார்ப்பவர் மனதில் இருத்த வேண்டும் என்பதே இம்மியுசியத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. இதற்கு வெளியே வந்து பார்த்தால் இஸ்ரேல் ஊர் முழுவதும் மிக அழகிய முறையில் தோற்றமளிக்கிறது.
நாங்கள் இஸ்ரேலுக்குப் போகும் முன்பே ஒரு அமெரிக்க யூத நண்பர் ‘இந்த மியுசியத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேல் ஏன் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாகப் புரியும்’ என்று சொல்லிக் கண்டிப்பாக இதைப் பார்த்து வரும்படிக் கூறினார். இப்போது இஸ்ரேல் உருவான சரித்திரம் தெரிந்த பிறகு ‘ஜெர்மானியப் படுகொலைக்கு’ வெகு காலம் முன்பே யூதர்கள் தங்களுக்கென்று, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.
Picture of Israel Museum
http://www.google.com/imgres?imgurl=http://www.english.imjnet.org.il/Media/Uploads/Israel-Museum-entry-nighttime%281%29.jpg&imgrefurl=http://www.english.imjnet.org.il/htmls/page_1465.aspx?c0%3D14896%26bsp%3D14393&h=162&w=210&sz=1&tbnid=vt2yO0zlC3pKeM:&tbnh=160&tbnw=207&zoom=1&usg=__T26jleT2QwX_vLNk640UeUOJxU8=&docid=VqhASgAdKKw_UM&itg=1&hl=en&sa=X&ei=yXjzUJLUEMmtqAGcj4DwDg&ved=0CKUBEPwdMA0
overview of Yad Vashem The first of many pictures
http://www1.yadvashem.org/yv/en/museum/overview.asp
model of second Jewish temple
http://en.wikipedia.org/wiki/File:Jerus-n4i.jpg
சத்தியமணி
தாமரைப் பூக்களுக்கு சன்மானம் கற்பழிப்போ
காமனின் பாவத்திலே தன்மானம் வழிபறிப்போ
சேமங்கள் தரும்மாதர் குலத்துக்கோ இத்துன்பம்
சன்மங்கள் தரும்தாயின் பெண்மைக்கோ இத்துயரம்
வன்மங்கள் வீழாதோ வஞ்சகமும் சாகாதோ
தன்மக்கள் பாழாதல் அரசாங்கம் தகர்க்காதோ
என்னக் கொடுமையாடா எதனைச் சொல்லிடுவேன்
உண்ணச் சோறில்லை ஒழுக்கமும் ஊணில்இல்லை
கர்மத்தின் பலியென்றின் கடவுளுக்கும் வலிக்காதோ
பார்த்து இருப்பதுவும் பாரதப் பண்பாடோ
பொறுத்தது போதும் பொங்கிடு பாரதமே – இந்நிலை
கொடுத்தவர் கெடுத்தவர் கூட்டம் வீழ்த்திடுமே
படத்திற்கு நன்றி:
தேமொழி இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
உலகின் மிகத் தொன்மையான இந்தியக் கலாச்சாரத்தில் சிற்பங்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பலகோடி இந்துக்களுக்கு சிற்ப வழிபாடு மத அடிப்படையின் ஆதாரமாக விளங்குகிறது. இன்றும் பின்பற்றப்படும் உலகின் புராதனமான இந்து சமயத்தின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டவை இந்திய தெய்வங்களின் சிற்பங்கள். இவை சான் ஃபிரான்சிஸ்கோ கலை அருங்காட்சியகத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த சிலைகளில் பல தேர்ந்தெடுக்கப்பட்டு “ஆசியக் கலை அருங்காட்சியகத்தின் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்” என்ற சிறப்புக் கண்காட்சியில் ஆகஸ்ட் 25, 2012 முதல் பிப்ரவரி 25, 2013 வரை பார்வைக்கு வைக்கப் பட்டன. இச்சிலைகள் பெரும்பாலும் ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டுகளின் காலத்தினைச் சார்ந்த கோயில் சிற்பங்கள். வழிபாட்டிற்காக கற்களிலும், மரத்திலும் அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட இச்சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனபின்பும் அத்தெய்வங்களின் தெய்வீக அழகினைப் பறைசாற்றுகின்றன.

கீழ் வரும் இக்கட்டுரையின் பகுதி அருங்காட்சியகத்தின் சிலைகளின் படங்களையும், அதற்கு அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் விளக்க உரைகளையும் மொழி பெயர்த்து, அருங்காட்சியகத்தின் முன் இசைவு பெற்று தொகுத்து வழங்கப் படுகிறது.
அருங்காட்சியத்தில் இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்
இந்து மதக் கோயில்களில் எழுந்தருளச் செய்யப்பட்ட தெய்வங்கள் கற்சிலை வடிவில் பக்தர்களின் ஆராதனைக்கும் வழிபாட்டிற்கும் உரியவர்களாய் இருப்பவர்கள். கணக்கிலடங்கா இந்துமத பெருந் தெய்வங்களும், சிறுதெய்வ வழிபாட்டிற்கான தெய்வத்தன்மை உடையவர்களாக கருதப்படும் முன்னோர்களும் கற்சிலை தெய்வங்கள் வடிவில் காட்சியளிக்கிறார்கள். பெரும்பான்மையான இந்து மதத்தினர், படைப்புகள் யாவும் சக்தி வாய்ந்த உயர்ந்த கடவுள் ஒருவரினால் உருவாக்கப் பட்டது என்பதை நம்புகிறார்கள். படைப்புத் தொழில் செய்யும் பிரம்மா, உயிர்களைக் காக்கும் திருமால், அழிக்கும் தெய்வமான சிவன் ஆகியோர், மற்றும் பல உருவங்களைப் பெற்ற சக்தி வாய்ந்த பெண்தெய்வங்கள் யாவரும் அண்ட சராசரங்களையும் தோற்றுவித்து, காத்து, அழித்து எல்லையில்லாத் திருவிளையாடல்களைக் காலம் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பது இந்துமதக் கோட்பாடு.
இத் தெய்வங்களே பல உருக்கொண்டு அவதாரங்களாகவும், சிறு தெய்வங்களாகவும், கிராமிய தேவதைகளாகவும், வணக்கத்துக்குரிய வீரர்களாகவும், காவல் தெய்வங்களாகவும் பல உருவில் தோன்றி மக்களைக் காத்தருள்கிறார்கள். இந்து மத தெய்வ வழிபாடு ஒரு நிலையான முறையில், தொடர்ந்து ஒரு கடவுளை வழிபடும் அமைப்பில் அமைந்ததல்ல. ஒவ்வொரு கடவுளும், ஒவ்வொரு காலக் கட்டத்தில், இந்தியாவின் பற்பல பகுதிகளில் வெவ்வேறு வடிவில், அப்பகுதிகளில் வாழும் மக்களிடம், அவர்கள் வாழ்ந்த காலத்தில் போற்றி வணங்கப் படுபவர்கள். எனினும் பெரும்பான்மையான இந்து மதத்தினரிடம் இக்கடவுள்கள் யாவரும் ஒரு கடவுளின் பல்வேறு மறுவடிவங்களே என்ற மாறாத கருத்தும் உண்டு. பெரும்பான்மையான இந்துக்கள் ஒரு கடவுளை சக்தி வாய்ந்த முதன்மைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு உகந்த கடவுளாக அத்தெய்வத்தை வழிபடுபவர்கள்.
இந்து மதத்தினர் தெய்வங்களின் உருவங்களை தங்கள் இல்லங்களிலும், பக்தர்கள் குழுமும் உற்சவ விழாக்களிலும், கோயிலின் கருவறைகளிலும் வைத்து வழிபடுவார்கள். தெய்வச் சிலைகள் வெறும் அலங்காரமாக வைக்கப் படுவதில்லை. கோயிலின் வடிவத்திற்கும் அமைப்பிற்கும் சிலைகளுக்கும் தொடர்புள்ளது. தெய்வச் சிலைகள் கோயிலின் கருவறையின் வழியாக உயிரோட்டத்துடன் மக்களின் நம்பிக்கைக்கான ஆதாரத்தை வழங்குகிறது.
பிரமாண்டமான கோயில்களில் தெய்வச் சிலைகள் பீடத்தில் தனித்து நிற்கும் உருவங்களாக அமர்த்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒரு தனிப்பட்ட கடவுளுக்காக நிர்மாணிக்கப் பட்டு, தெய்வச் சிலைகள் கருவறையில் எழுந்தருளச் செய்யப் பட்டிருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்கள், பழங்கள், நைவேத்தியங்கள், வேண்டுதல்படி மற்றும் பல காணிக்கைகளைப் படைத்தது, தெய்வங்களை வழிபட்டு, தெய்வ அருளினை வேண்டி வணங்கிச் செல்வார்கள்.
பண்டைய நாட்களில் வரையறுக்கப் பட்ட சிற்பக் கலை விதிகளின் அடிப்படையில் தெய்வச் சிலைகளின் உடலமைப்பும் முகமும் வடிவமைக்கப் படும். ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகள் மிகவும் கலை நுணுக்கத்துடன், அழகிய உடலமைப்புடனும், முகபாவத்துடனும் செதுக்கப் பட்டிருக்கும். மேலும் தெய்வங்களின் சிலைகள் இயல்பு வாழ்க்கை நிலையை ஒத்திராமல், கடவுள்களின் சக்தியை, தெய்வீகத் தன்மையை உணர்த்தும் வகையில் அமைக்கப் பெற்றிருக்கும்.
பல சக்திகளை உடையவர் என்பதனை உணர்த்த திருமால் நான்கு கைகளையும், அவற்றில் சங்கு சக்கரங்களை ஏந்தி அரசர்கள் போன்ற உடையலங்காரத்துடன் இருப்பார். சிவன் ஏறத்தாழ அரை நிர்வாண வகையில் ஆடை அணிந்து பாம்புகளை அணிந்திருப்பார். அவரது தலை முடி துறவிகளைப் போன்று கொண்டையிட்டு முடியப் பட்டிருக்கும். சிவனும், திருமாலும், பராசக்தியும் அவர்களைப் பற்றிக் கூறும் புராண கதைகளுக்கு ஏற்றவாறு பற்பல வடிவங்களில் சிலை எடுக்கப் பட்டிருப்பர்கள். அது போன்றே மற்ற பிற இந்துமதத் தெய்வங்களும் அவர்களுக்கென்று குறிப்பிடப் பட்ட வடிவங்களுடன் சிலை வடிக்கப் பட்டிருப்பார்கள். இவ் வடிவங்களைக் கொண்டு இத்தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வது, இடைக்கால ஓவியங்களில் கிறிஸ்துவ மதத்தின் துறவிகளை அவர்களது உருவங்களைக் கொண்டு அடையாளம் காண்பது போன்ற சவால் நிறைந்த ஒன்றாகும்.
கணேசா:

கணேசர் தடைகளை நீக்கும் கடவுள். எந்த செயலையும் துவக்குவதற்கு முன், —பிற கடவுள்களை வணங்குவதற்கும் முன் கணேசரை வணங்குவது உட்பட, அவரை வணங்குவது வெற்றியைத் தரும். இந்தியாவில் அனைவருக்கும் விருப்பமான கடவுளான கணேசர் மகுடம் மற்றும் அணிகலன்கள் தரித்து, கையில் மழுவாயுதத்துடனும், தாமரையுடனும், கொழுக்கட்டைகளுடனும், உடைந்த தந்தத்துடன் காட்சி தருவார். உடைந்த தந்தம் இந்திய இதிகாசம் மகாபாரதத்தை எழுத எழுதுகோலாக வழங்கப்பட்டது. கணேசரின் துதிக்கையைத் தடவிச் செல்வது வாழ்க்கையில் நல்வாய்ப்புகளை நல்கும் என்பது கணேசரை வழிபடுவோரின் நம்பிக்கை.

கணேசரின் யானை முகமும், கரங்கள் பல பெற்றிருப்பதும் அவரது தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. இவை கணேசருக்கு அமையப் பெற்றிரிருப்பதன் காரணத்தைப் பல்வேறு புராணக் கதைகள் விளக்குகின்றன. கணேசரின் அன்னை பார்வதி தனக்கு ஒரு மகன் வேண்டும் என விரும்பித் தனது கணவன் சிவனுக்குத் தெரிவிக்காமல், அவர் உதவி இன்றித் தானே கணேசரை உருவாக்கினார். உண்மையை அறிந்திராத சிவன் தவறாக எண்ணி கணேசரின் தலையை வெட்டி விட்டார். பிறகு தவறை உணர்ந்து யானையின் தலையை கணேசருக்குப் பொறுத்தி அவரைப் பிழைக்க வைத்தார். யானைகளுக்கு இந்தியக் கலாசாரத்தில் சிறப்பிடம் அளிக்கப் படுகிறது. யானைகள் மழை மேகத்தின் நிறத்தையும் உருவத்தையும் பெற்றிருப்பதனால் அவை வளமைக்கும் செழுமைக்கும் அடையாளமாக கருதப் படுகிறது.
இந்து தெய்வம் கணேசர்: இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தச் சிலை 12-13 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது. அருங்காட்சியக அடையாள எண்: B62S14+ L2012.0801.023
(தொடரும்)
[படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]
Source:
http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
San Francisco Asian Art Museum
August 25, 2012–February 25, 2013
All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
© Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.