இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (41)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்கள்.
இன்றைய இங்க்லாந்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி இப்புது வருடத்திலே எத்தகையதோர் திருப்பத்தை எடுக்கப் போகிறது என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கமரன் அவர்கள் தனது புதுவருடச் செய்தியில் ” 2012ம் ஆண்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளைப் பற்றி நன்கு உணர்ந்துள்ளேன். இந்த நெருக்கடி ப்ழைய அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவினாலும், அனைத்துலக பொருளாதார பாதிப்பினாலும் எழுந்த விளைவுகளேயாகும். இந்தப் பிரச்சனையை வெகுவிரைவாகத் தீர்த்து விடுவோம் என்று கூறுமளவிற்கு எம்மிடம் கைவசம் ஒருவிதமான மந்திரஜாலங்களும் இல்லை. எம் கண் காணும் முன்னேற்றப் பாதை இன்னும் கரடுமுரடானதாகவே இருக்கிறது. இருப்பினும் நாம் போகும் பாதை முன்னேற்றத்தை நோக்கியே செல்கிறது என்னும் நம்பிக்கை எமக்குள்ளது ” எனும் வகையிலான கருத்தை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் இவ்வரசாங்கம் எடுக்கும் திட்டங்கள் மிகவும் அதீதமானவை அவை சிறிது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற போதிலும், அரசாங்கம் தமது தீவிர பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மட்டுமே நாட்டை பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடுவிக்கும் என்று கூறிவருகிறார்கள்.

தமது பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் படி அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். அதில் ஒரு பகுதியாக வருமானம் குறைந்த மக்களின் வருமானத்தை ஈடுகட்டும் முகமாக அளிக்கப்பட்டு வந்த உதவித் தொகையில் உள்ள சீர்கேடுகளைக் களைவதால் ஏறத்தாழ 300 மில்லியன் பவுண்ட்ஸ் அளவிலான தொகையை மீதப்படுத்தலாம் எனும் கணிப்பை முன்வைக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் படி பிரதமர் டேவிட் கமரனால் முன்னாள் கன்சர்வேடிவ் கட்ச்சித் தலைவர் “இயன் டன்கன் சிமித்” அவர்கள் பணிக்கப்பட்டார்.

இரண்டுவருட கால ஆராய்ச்சியின் பின்னால் அவர் தனது அறிக்கையில் லேபர் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த குறைந்த வருமானவுள்ளவர்களுக்கான உதவித்தொகையின் பால் சுமார் 171 மில்லியன் பவுண்ட்ஸ் வரை செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வுதவித் தொகை ஒன்றே இங்கிலாந்து அரசாங்கத்தின் சமூக சேவை பட்ஜெட்டில் ஏறத்தாழ 60% பங்கை வகித்திருந்தது எனவும் இதன் நடைமுறையாக்கல் சரியான வகையில் பரிசோதிக்கப்படாததினால் பலர் இதனைச் துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக நிதி உதவியைப் பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி இவ்வுதவித் தொகைகளை பெறுவது மிகவும் இலகுவாக இருந்த காரணத்தினால் இங்கிலாந்துக்குள் சட்ட விரோதமாக நுழைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இக்குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அப்போதைய அரசாங்கத்திலிருந்த லேபர் கட்சி வெறும் ” அரசியல் லாபத்திற்காக தம்மீது சுமத்தப்படும் கீழ்த்தரமான குற்றச்சாட்டு ” என்று மறுதலித்துள்ளார்கள்.

ஆனால் அரசாங்கத்தின் சார்பான “இயன் டன்கன் சிமித்” அவர்களோ அனாவசியமான செலவு மட்டுமல்ல அது. சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அவர்களை வருமைக் கோட்டிற்குக் கீழே தள்ளி அங்கேயே வைத்திருக்கும்படியான ஒரு செய்கையே இது என்றும் கூறியுள்ளார்.

இவரின் கூற்றில் ஒருவகை உணமை இருப்பது போலவும் தென்படுகிறது. வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கு உதவுவது எத்துனை அவசியமோ அவர்கள் அந்நிலையிலிருந்து வெளியே வந்து தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.

இல்லையேல் அரசாங்கம் அளிக்கும் உதவித் தொகையில் தங்கியிருக்கும் ஒரு பரம்பரையை உருவாக்கும் செயலை ஊக்குவிப்பதாக இத்திட்டங்கள் அமைந்து விடும்.

அதே சமயம் வேலையில்லாமல் திண்டாடும் மக்கள் கெளரவத்துடன் வாழ்வதற்கு நாட்டின் அடிமட்ட வாழ்க்கைச்செலவு என்று கனிக்கப்பட்ட தொகையை அளிக்கும் அரசின் சமூகக் கடமை பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.

அர்சாங்கமோ அன்றி அரசியல்வாதிகளோ தனியான இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல அவர்களும் சாதாரண மனிதர்களே ! தமக்க%E

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (41)

  1. இன்னம்பூரான்

    இங்கிலாந்து கடிதத்துக்கு அங்கு கருத்துத் தெரிவிக்க முடியவில்லையே! ஆகவே, இங்கு:
    இங்கிலாந்தில் ராபர்ட் மாக்டொனால்ட் என்ற பேராசிரியரின் ஆய்வு, பிரதமர் சொல்வதையும் ஆதரிக்கிறது. லேபர் கட்சியின் கூற்றையும் ஆதரிக்கிறது. இரண்டையும் மறுக்கிறது. அவர் சொல்வது தான் சரி. அதாவது இருகட்சியும் மக்கள் நலனுடன் விளையாடுகிறார்கள். ஆனால், அது இந்தியாவை போல மட்டரகம் அல்ல. இன்று இருக்கும் பொருளியல் நிலவரப்படி, பிரதமர் சொல்வது தான் எடுபடும். ஆனால், அதனால், பிரமாதமான சேமிப்பு இல்லை.

Comments are closed.