சுவர்ப்பலகையில்
தான் வரைந்திருந்த
கோணல்மாணல் குலதேவதையை
அவள் வணங்கிக் கொண்டிருக்க
என்னடா செய்திட்டு இருக்க வினவலுக்கு
தங்கச்சிப் பாப்பா நல்லாயிருக்கணும்னு
கும்பிடுறன்ப்பா என்றதும்
தூக்கிவாரிப் போட்டது நமக்கு!
உனக்கேதடா தங்கச்சிப் பாப்பா?
மறுவினவலுக்குச் சொல்கிறாள்
எனக்கு சிறுசாயிடிச்சுன்னு
டொனேசன்ல போட்ட
பட்டுப் பாவாடையப் போடுற பாப்பா
எனக்குத் தங்கச்சிதானேப்பா?
அதான் அந்தப்பாப்பா நல்லாயிருக்கணும்னு
சாமிகிட்ட சொல்லிட்டு இருக்கேன்ப்பா!
மனம் மகிழ்ந்து நாசி திளைக்க
முகமறியா அக்குழந்தைமணம்
வீடெங்கும்!!
Blog
-
யாவரும் கேளிர்
-
இஸ்ரேல் பயணம் 8
நாகேஸ்வரி அண்ணாமலை
புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன. சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன. அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன. அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள். ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன. காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன. இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம். ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன. பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன. புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன. அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது. அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன. இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும். புதுக்கருக்கு மாறாமல் இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும். அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.
புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம். அவர் ஒரு அரேபிய முஸ்லீம். முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு. அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி.
நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில் இருந்தது. மொத்த தூரம் அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும். பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை. அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம். இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும். மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார். நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம். இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும். இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது. இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது. சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது. ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது. பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார். ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel). ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை. நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்.
மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது. மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம். ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.) பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.
ஜெருசலேம் நகரம் இப்போது மிகவும் விரிந்திருக்கிறது. 1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை. அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது. ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன. இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.
1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர். ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர். பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது. இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும். 1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது. 1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது. சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது. 1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை. சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.
இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர். மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம். இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன. இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது. இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.
இது வரை இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார். இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.
இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர். இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.) 1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.
1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார். 1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி. (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது. இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார். மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.) ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை. காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர். இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார். இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார். பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார். இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார். இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.
யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும் பலர் குடியேறினர். ஜெருசலேமைச் சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன. 1967 சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது. இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை. 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது. இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார். 2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.
ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.
ஜெருசலேமின் பல இடங்களில் இந்தச் சுவரைக் காண முடிந்தது. இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது. பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன. இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும். அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம். மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம். சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.
இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது. சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம். பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம். கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது. வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன. சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது. சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது. வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது. இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும். நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.
பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின் வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம் கூறினர். பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம். அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம். நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.
சுவர் பற்றிய படங்களை இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.
https://picasaweb.google.com/108173580006522327175/TheWall?authkey=Gv1sRgCL_Pu8mm_obUPg
-
நான் அறிந்த சிலம்பு – 57 (04.02.13)
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
முரி வரிபாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்(14)என் தோழனே!
பூம்பொழில் தருகின்ற நறுமண மலர்
அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்அங்கே நின்றிருந்த தலைவியின்குற்றமற்ற இனியமொழி
பருத்த இளமையான அழகிய மார்புகள்
முழுமையான மதிபோன்ற முகம்
வளைந்து நின்ற புருவமாம் இருவில்
அழகை எழுதுவதற்கரிய மின்னல் இடை
இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தன.(15)என் தோழனே!
அலைகள் பரந்த நீர்த்துறை
அழகிய மணற்பரப்பு
மணம் அவிழ்க்கும் நறுமண மலர்
மலர்கள் நெருங்கிய சோலை
அங்கே நின்றிருந்த தலைவியின்
மணம் விரவிய சுருள் கூந்தல்
மதி போலும் அழகிய முகம்
இரண்டு கயல்கள் போன்ற இருவிழிகள்
இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.(16)என் தோழனே!
சங்குகள் வளரும் துறை
மணம் பரந்து விரிகின்ற சோலை
கட்டவிழ்ந்த மண மலர்கள்
ஆங்கு அவள் தனித்து உலாவுகின்ற இடம்
முளை போல வளரும் பல்வரிசை
நிறைமதி போன்ற முகம்
இளமைப் பருவத்தினளதுஇணைந்த மார்புகள்
இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:படத்துக்கு நன்றி:
-
சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இருவருக்கு ‘கரிகாலன் விருது’ 03/02/2013
‘கரிகாலன் விருது’ பெற்றுள்ள் பிரபல சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தன் மற்றும் திரு மா. இளங்கண்ணன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
03/02/2013சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலோதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இளங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :
http://tamilmurasu.com.sg/news/national
-
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பதினேழு பில்லியன் பரிதிகள் பளுவில் உள்ள பூதப்பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாhttp://www.youtube.com/watch?v=12FJVvqn1YE&feature=player_embedded
https://www.youtube.com/watch?v=cW7BvabYnn8&feature=player_detailpage
The Largest Black Holes in the Universe
***************காலவெளிக் கருங்கடலில்
கோலமிடும்
ஒளிமந்தைத் தீவுகள் !
காலாக்ஸி மந்தையில்
சுருள் சுருளாய் சுற்றுபவை
கால்களா ? வால்களா ? கரங்களா ?
ஆதி அந்தம் அறிய முடியா
அகில வெளிக் கடலில்
ஆக்டபஸ் போல் நீந்துபவை
காலாக்ஸி தீவுகள் !
மையத்தில் கதிர்கள் வீசும்
கருந் துளைகள்
பிரபஞ்ச ஆழிக் குயவனின்
களிமண் களஞ்சியம் !
அகிலக் கடலில்
அசுரத் தீவுகளாய் நகரும்
பூதத் திமிங் கலங்கள் !
தூங்கியும் தூங்காத உடும்புகள் !
விண்மீன் விழுங்கிகள் !
காலாக்ஸி பின்னலாம் !
விண்மீன்கள் பிறக்கலாம் !
ஒளியை உறிஞ்சிக்
கருமைப் பிண்டமாய் மாற்றும்
மந்திரக் குழிகள்
மாயக் கருந்துளைகள் !+++++++++++
“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன ! காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் ஒளிந்துள்ள பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைக் காட்டி விட்டது !”
ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)
“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல ! அவை ஒளித்துகள் மினுக்கும் வெப்பக் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.
ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)
பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன ! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !
வானியல் மேதை எட்வின் ஹப்பிள்
பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் ! அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !
விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)
இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”
லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.
ஆன்ரியா கீஸ், வானியல் பௌதிகப் பேராசிரியை (Andrea Ghez, UCLA)
இதுவரைக் காணாத பூதப் பெரும் கருந்துளை கண்டுபிடிப்பு
ஜெர்மன் மாக்ஸ் பிளான்க் வானியல் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானக் குழுவினர் ரெம்போ வான்டென் பாஷ் [Remco van den Bosch] தலைமையில் ஒரு பூத வடிவக் கருந்துளை ஒளிந்துள்ளதைக் கண்டுபிடித்துத் தற்போதைய காலாக்ஸிகள் தோற்றத்தின் அடிப்படை மாடல் கருத்துக்களையே அசைத்துள்ளார். ஹப்பிள் வானோக்கி 2012 நவம்பர் 29 இல் சிறிய மட்டமான தட்டு காலாக்ஸி [Disk Galaxy : NGC 1277] ஒன்றின் மையத்தில் இதுவரைக் காணாத பூதப் பெரும் கருந்துளைகளில் ஒன்றிருப் பதை அறிவித்துள்ளார். அந்த அபூர்வக் கருந்துளையின் பளு 17 பில்லியன் பரிதிகளின் நிறை என்று அவரால் கணிக்கப் பட்டுள்ளது. அதாவது காலக்ஸியின் மொத்த நிறையில் 14% பங்கு கருந்துளை யின் வடிவு. சாராசரிக் கருந்துளையின் நிறைப் பங்கு காலக்ஸியில் 0.1% மடங்குதான்.
இதுவரை இத்தகைய பெரு வடிவுக் கருந்துளை ஒரு சிறு காலக்ஸிமையத்தில் இருந்ததாக அறியப் படவில்லை. இது போன்ற பூதக் கருந்துளை 10 மடங்கு பெரிதான காலக்ஸியன் மையத்தில் தான் இருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஒளிமந்தை காலக்ஸி NGC 1277 என்பது பூமியிலிருந்து சுமார் 250 மில்லிய ஒளியாண்டு தூரத்தில் உள்ள பெர்ஸியஸ் காலக்ஸி மந்தைக்குள் [Perseus Galaxy Cluster] ஒன்றாய்ப் பதிந்துள்ளது.
புதிரான இந்தப் பெரு வடிவுக் கருந்துளை ஒரு சிறு காலக்ஸி மையத்தில் இருப்பது, தற்போதைய கருந்துளைத் தோற்ற அடைப்படைக் கருத்தை மாற்ற வைத்திருக்கிறது. குறிப்பாக பூர்வீகப் பிரபஞ்சத் தோற்றத்தை மீண்டும் ஆழ்ந்து ஆராய வேண்டும் என்பது தெரிகிறது. பெரு வடிவுக் கருந்துளைக்கு இருப்பிடம் கொடுத்த காலக்ஸி 8 பில்லியன் ஆண்டுக்கு முன்புதான் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதற்குப் பிறகு கருந்துளையின் நிறை மாறு படாது நிலைத்து இருந்துள்ளது. இந்தக் கருந்துளை உருவாக்கப் பட்டதும் பல மில்லியன் ஆண்டுக்கு முன்னதாக நிகழ்ந்திருக்க வேண்டும்.

நாமறிந்த விஞ்ஞான அறிவுப்படி, ஒவ்வொரு காலக்ஸியின் மையத்திலிலும் ஒரு பெருநிறைக் கருந்துளை [Supermassive Black Hole] இருக்கத்தான் வேண்டும். அப்பெரும் கருந்துளையின் நிறை பல்லாயிரம் பில்லியன் பரிதிகளின் பளுவாக இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. நமது பால்வீதி காலக்ஸியின் மையத்தில் இருக்கும் கருந்துளையின் நிறை 4 மில்லியன் பரிதிகளின் பளுவுக்குச் சமமானது.
ஹப்பிள் விண்ணோக்கி பால்வீதி மையத்தை நோக்கிப் பயணம்
நூறாயிரம் ஒளியாண்டு அகலமான நமது பால்வீதி காலாக்ஸி போல் மில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகள் பிரபஞ்ச விண்வெளிக் கடலில் நகர்ந்து கொண்டு வருகின்றன. மனத்தாலும் படத்தாலும் கற்பனை செய்ய முடியாத அந்த ஒளிமயத் தாம்பாளத்தில் கோடான கோடி விண்மீன்கள் காலாக்ஸி மையத்தைச் சுற்றி வருகின்றன. பேரசுர ஈர்ப்பாற்றல் கொண்ட அத்தனை கோடி விண்மீன்கள் காலாக்ஸியின் பின்னல் வலையிலிருந்து தப்பி ஓடிவிடாதபடி அதன் மையத்தில் மாயமான புதிரான ஓர் ராட்சத விசையின் கவர்ச்சி இருக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் ஊகித்து வந்தார்கள். 2005 ஆம் ஆண்டில் அந்த மர்மான மைய ஈர்ப்புவிசை என்ன வென்று விஞ்ஞானிகள் தெளிவாகக் கண்டறிந்தனர். அது ஒரு பூதக் கருந்துளை என்பது உறுதியாக அறியப்பட்டது. நமது பால்வீதி ஒளிமந்தை பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதன் அகலம் சுமார் : 100,000 ஒளியாண்டு. அதில் உள்ள விண்மீன்கள் எண்ணிக்கை சுமார்: 100 பில்லியன் ! நமது பரிதி அவற்றில் ஒன்று !

1999 ஆம் ஆண்டில் முதன்முதல் துல்லியமாக பரிதி பால்வீதி காலாக்ஸியில் ஒருமுறைச் சுற்றும் காலாக்ஸி ஆண்டு காலத்தை (A Galactic Year = 226 Million Years) 226 மில்லியன் ஆண்டுகள் என்று விண்வெளியில் அளந்து கண்டிருக்கிறார். இதே இடத்தில் முன்பு பரிதி மண்டலம் இருந்த போதுதான் உலகத்தில் ஏராளமான பல்வேறு டைனோஸார்ஸ் பூமியில் உலவி வந்தன ! இதுவரைப் பரிதி மண்டலம் சுமார் 20 அல்லது 25 சுற்றுக்கள் பால்வீதி மையத்தைச் சுற்றி விட்டது என்று ஊக்கிக்கப் படுகிறது !
இப்போது ரேடியோ தொலைநோக்கியைப் (Radio Telescope) பயன்படுத்தி வானியல் விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி கணக்கிடுவதைப் போல் 500 மடங்கு துல்லியமாக அண்டவெளி வடிவுகளை, அவற்றின் இடைவெளித் தொலைவுகளை (Celestical Bodies & Distances) அளந்து விடுகிறார். பால்வீதி ஒளிமந்தையில் பரிதி மண்டலக் கோள்கள் சுற்றியதை அவ்விதம் கணித்ததில், அவற்றின் சுற்று வேகம் (Orbital Speed) விநாடிக்கு 135 மைல் என்று அறிந்திருக்கிறார். அதாவது பால்வீதியைப் பரிதி மண்டலம் ஒருமுறைச் சுற்ற சுமார் 226 மில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றன.

பால்வீதி காலாக்ஸியின் விபரங்கள்
நமது பால்வீதி ஒளிமந்தை ஒரு சுருள் காலாக்ஸி (A Spiral Galaxy). அதன் வளைவுக் கரங்கள் “எரியும் கிருஷ்ணச் சக்கிரம்” போல் சுருளாய் மையத்திலிருந்து தொடங்குகின்றன. ஒரு கரத்தில் உள்ள பரிதி மண்டலம் பால்வீதி மையத்திலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் சுற்றி வருகிறது. பால்வீதி மையத்தைப் பரிதி மணிக்கு 486,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு வடிவும் (Object) பிரபஞ்சம் சீரான விரைவாக்க வீதத்தில் (Constant Accelerating Rate) விரிந்து வருவதால். ஒன்றை விட்டு ஒன்று நகர்ந்து கொண்டே வருகிறது.
பரிதி மண்டல அளப்பின் போது விஞ்ஞானிகள் பால்வீதி மையத்தின் அருகே இருக்கும் “சாகிட்டேரியஸ் A” (Sagittarius A) என்னும் ஓர் விண்மீனைக் குறிவைத்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் [1988] அந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. பத்து நாட்கள் தொடர்ந்து தொலைநோக்கி மூலம் அந்த விண்மீனின் நகர்ச்சியை மற்ற விண்மீன்கள் நகர்ச்சிக்கு ஒப்பாக அளந்தார்கள். அவர் குறிவைத்த “சாகிட்டேரியஸ் A” விண்மீனின் ஒப்பியல் நகர்ச்சித் தூரம் மிக மிகச் சிறியது.
அதாவது பரிதி போல் மையத்தைச் சுற்றும் வேகம் (விநாடிக்கு 135 மைல்) இல்லாமல் “சாகிட்டேரியஸ் A” மையத்தை மிக மிகக் குன்றிய வேகத்தில் சுற்றுவதால் மையத்தில் பேரசுரத் திணிவுள்ள கருந்துளை ஒன்றிருப்பதற்குச் சான்று அளித்துள்ளது. அந்த மையக் கருந்துளையின் அசுர நிறை நமது பரிதியின் நிறையைப் போல் 2.6 மில்லியன் மடங்கு என்று கணிக்கப் பட்டுள்ளது !
நமது பரிதியானது பால்வீதி மையத்தை நோக்கியோ அல்லது விலகியோ காலாக்ஸித் தளமட்டத்திற்கு (Galactic Plane) மேலோ அல்லது கீழோ நகர்ந்து வருவதாக அறியப் பட்டுள்ளது. அவ்விதம் பரிதி மேலும், கீழும் ஏறி இறங்கும் ஒரு சுற்றியக்கத்துக்கு 64 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன ! மேலும் பால்வீதி ஒளிமந்தை “விர்கோ குழுக் கொத்து” (Virgo Cluster) ஈர்ப்பாற்றலால் கவரப் படுகிறது என்பதும் அறியப்பட்டிருக்கிறது. பொதுவாக நமது பால்வீதி ஒளிமந்தையின் காந்தக் களம் நமது பரிதி மண்டலத்தைக் காலாக்ஸியிலிருந்து அடிக்கும் புயலிலிருந்து பாதுகாக்கிறது.

பால்வீதி ஒளிமந்தை மையத்தின் நடுக்கரு
பால்வீதி காலாக்ஸியின் நடுக்கருத் தோற்றம் விண்மீன்கள் பிறப்பிக்கும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு அலைவரிசைகளில் (Invisible Wavelengths) இருக்கும் ஓர் அரங்கமாக அறியப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் ரேடியோ அலை எழுச்சியைக் காட்டும். பச்சை நிறமுட்சிவப்பு நடுநிலைக் கதிர்வீச்சைக் காட்டுகிறது. நீல நிறம் எக்ஸ்-ரே வீச்சைக் காட்டுகிறது. (படத்தைப் பாருங்கள்)
“பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.” என்று காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியை ஆன்ரியா கீஸ் கூறுகிறார். கீஸின் ஆராய்ச்சிக் குறிக்கோள்கள் யாவும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் கோள்கள் ஆகியவற்றின் மூலத் தோற்றத்தை நோக்கியே சென்றன. அத்துடன் அவரது ஆராய்ச்சிகள் காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பிண்டத்தின் பரிமாற்றம், இயற்கைப் பண்பாடு (Distribution & Nature of Matter at the Center of Galaxy) பற்றியும் இருந்தன. புது நோக்கு முறையைப் பயன்படுத்தி தூசிமிக்க பால்வீதி மையத்தைத் துருவி ஆராய்ந்து, பற்பல விண்மீன்கள் விரைவாகச் சுற்றி வரும் ஒரு கருந்துளை வீற்றிருப்பதைக் கண்டார். அது ஓர் சாதாரண கருந்துளை இல்லை. நமது பரிதியப் போல் பல கோடி மடங்கு பேராற்றல் கொண்ட பூதக் கருந்துளை அது !

பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை நமதி பரிதியைப் போல் 3 மில்லியன் மடங்கு பெருநிறை கொண்டது ! அது சாகிட்டேரியஸ் விண்மீன் கொத்துக்களில் (Constellation of Sagittarius) உள்ளது. நமது பால்வீதி காலாக்ஸி மைய்த்தில் இருக்கும் கருந்துளை “சாக்கிட்டேரியஸ் A” என்று அழைக்கப் படுகிறது.
1995 ஆம் ஆண்டிலிருந்து கீஸ் ஹவாயியில் உள்ள மௌனா கியா மலை மீதிருக்கும் 10 மீடர் தொலைநோக்கியில் பால்வீதி மையத்தின் அருகில் காணப்படும் சுமார் 200 விண்மீன்களின் நகர்ச்சியை ஆராய்ந்து வந்தார். காலாக்ஸி மையத்தின் அருகில் 20 விண்மீன்கள் கருந்துளையை மணிக்கு 3 மில்லியன் மைல் படுவேகத்தில் சுற்றுவதைக் கண்டார். அந்த வேகம் சாதாரண விண்மீன் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகும். கீஸின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் கோடான கோடிப் பெரும்பான்மையான காலாக்ஸிகளின் மையத்தில் பூதப் பெருநிறைக் கருந்துளை ஒன்று உள்ளது என்பதற்கு உதவுகிறது. அத்துடன் கருந்துளைகளின் நிறையும் அவற்றின் இயற்கைப் பண்பாடும் அதன் பெருவ டிவத்தைச் சார்ந்தவை என்பதும் அருகில் உள்ள காலாஸிகளை உண்டாக்கியவை என்பதும் புலனாயிற்று.
பிரபஞ்சக் கருந்துளைகள் ஆக்கவும் செய்யும் ! அழிக்கவும் செய்யும் ! அவை அருகில் அகப்படும் விண்மீன்களையும், வாயு முகில்களையும் உறிஞ்சி விழுங்கி விடும் ! அப்போது அந்த நிகழ்ச்சியில் அசுரச்சக்தி தூள்கள் உள்ள உந்து ஒளிக்கதிர்களை (Jets of Super High Energy Particles & Radiation) கருந்துளைகள் வீசும் ! அந்த ஒளிக்கதிர் உந்து வீச்சுகள் பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் விண்வெளியில் நீள்பவை ! அவையே பிண்டமும் சக்தியும் அளித்துக் காலாக்ஸி ஒளிமந்தைகளை தோற்றுவிக்கும் விதைகள் என்றும் அறியப் படுகின்றது.
காலாக்ஸிகள் பிரபஞ்ச வரலாற்றின் அறிகுறிச் சின்னங்கள் !
பிரபஞ்சத்தில் கோடான கோடி விண்மீன்கள் சுற்றும் மந்தை மந்தையான காலாக்ஸிகள் அகிலத்தின் அடிப்படை அரங்கம் (Basic Unit of Cosmology) ! அவற்றில் இருப்பவை பெரும்பாலும் : எண்ணற்ற விண்மீன்கள், வாயுக்கள், தூசி துணுக்குகள், பேரளவில் கரும்பிண்டம் (Dark Matter) ! பூகோளத் தளத்திலிருந்து பிரபஞ்ச விளிம்புவரை தொடும் காலாக்ஸிகள் மட்டும்தான் பிரபஞ்சத்தின் ஆதிகால மூல வரலாறுகளை விளக்கும் பூர்வாங்க “மைல்கற்கள்” அல்லது “அறிகுறிச் சின்னங்கள்” (Signposts) ! காலாக்ஸி ஒன்றில் பில்லியன் கணக்கில் விண்மீன்களும் மற்றும் சில வாயுக்களும், கருமைப் பிண்டங்களும் (Dark Matter) ஈர்ப்பாற்றலால் பின்னிக் கொண்டிருக்கின்றன ! விலக்கித் தள்ளும் “கருமைச் சக்தியால்” (Repulsive Dark Energy) மந்தை காலாக்ஸிகள் நில்லாமல் பிரபஞ்ச விளிம்பை விரித்துக் கொண்டு விரைவாய்ச் செல்கின்றன. வாயுக்கள் நிரம்பச் செழித்து இன்னும் புதிய விண்மீன்கள் உருவாகும் நமது பால்வீதி காலாக்ஸி சுருள் வடிவைக் (Spiral Shaped Milkyway) கொண்டது. நீள்வட்ட காலாக்ஸியில் (Elliptical Galaxy) வாயுக்கள் கிடையா. மற்றும் பால்வீதிக்கு அருகில் “ஆப்பம்” போன்ற தட்டு லென்ஸ் காலாக்ஸியும் (Lenticular Galaxy), வடிவீன காலாக்ஸியும் (Irregular Galaxy), ஸாகிட்டாரியஸ் குள்ள காலாக்ஸியும் (Sagittarius Dwarf Galaxy) பல்வேறு வடிவத்தில் உள்ளன.

பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?
அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ? காலாக்ஸிகளா ? விண்மீன்களா ? அல்லது கருந்துளைகளா ? பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன. ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !
பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் ! பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.
(தொடரும்)
++++++++++++++++++++++++++தகவல்:Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Common are Black Holes ? & How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. Daily Galaxy – Cataclysmic Orbit – Our Solar System’s Journey Through the Milky Way Posted By : Luke McKinney [Sep 26, 2008]
21 Daily Galaxy -GAIA Space Probe – Mapping the Family Tree of the Milky Way Posted By : Casey Kazan (July 2, 2007]
22 Daily Galaxy – Hubble’s Secret – Orbiting the Milky Way Posted By : Casey Kazan [Dec 22, 2008]
23 Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in the Universe Discovered Posted By Rebecca Sato [Dec 30, 2008]
24. Daily Galaxy – Journey to the Center of the Milky Way Postd By : Casey Kazan (Jan 12, 2009)25. http://www.nbcnews.com/id/45673345/ns/technology_and_science-space/t/milky-ways-monster-black-hole-get-colossal-cosmic-feast/ [December 14, 2011]
26. http://www.dailygalaxy.com/my_weblog/2012/11/colossal-black-hole-equal-to-17-billion-suns-discovered-may-overturn-existing-models.html [November 30, 2012]
27. http://www.foxnews.com/science/2012/11/29/monster-black-hole-biggest-ever-found/ [November 29, 2012]
28. http://abcnews.go.com/blogs/technology/2012/11/black-hole-found-17-billion-times-as-massive-as-sun/ Black Hole Found, 17 Billion Times as Massive as Sun [November 29, 2012]
29. http://in2eastafrica.net/ut-astronomers-discover-what-might-be-largest-black-hole-in-universe/ UT astronomers discover what might be largest black hole in universe [November 29, 2012]
30. http://io9.com/5965017/this-galaxy-is-pretty-much-all-black-hole This galaxy is pretty much all black hole… [December 2, 2012]
(தொடரும்)
******************S. Jayabarathan (jayabarat@tnt21.com) [February 3, 2013)
YouTube – Videos from this email -
மொபைல் டாக் ஷோ – 4
திவாகர்
புடவை
ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு..”யாரு…”
சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா நீயே பேசலாம்.. நான் வேணுமின்னா ஒரு ஆப்ஷன் தரேன்.. இவங்க பேரோட முதல் எழுத்து ‘எஸ்’ ல ஆரம்பிக்கும்.. கண்டுபிடி பார்ப்போம்.. .
“ஜோக்கா?.
“சேச்சே.. ரொம்ப ஈஸியான பேரு.. இன்னோரு க்ளூ கொடுத்தேன்னா சட்’னு சொல்லிடுவே.. ஹி.. ஹி.. ஹே..
”ஏன் இப்படி வழியறீங்க.. நீங்க கல்யாணத்துக்குப் போனீங்களா இல்ல க்விஸ் போட்டி ஏதாவது நடத்தப் போனீங்களா.. உங்க மொபைலை சுத்தி ஒரே சப்தமா கேக்குது.. உங்க போன்’ல உங்க பேச்சே சரியா கேக்க மாட்டேங்குது.. முதல்லே மண்டபத்தை விட்டு கொஞ்சம் சத்தமில்லாத இடமா போய் நின்னுண்டு அங்கேயிருந்து கூப்பிடுங்க..”
ஹல்லோ.. சரி.. சரி.. அப்படியே.. ஹி..ஹி.. இட்’ஸ் ஓகே.. ஷ்யூர்.. ஷ்யூர்.. ஹி..ஹி.. ஐ வில்..!
—————————————-
ஹல்லோ.. இப்போ நல்லா கேக்குதா..
ஐய்யோ.. ஏன் இப்படி கத்தறீங்க.. மெதுவாப் பேசுங்க.. நல்லாவே கேக்குது..
ஒருவேளை கேக்கலையோ’ன்னு கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்.. இந்த இடத்துல அவ்வளோ யாரும் கிடையாது..
சரி, சரி,, யாருகிட்டே நான் பேசணுன்னீங்களோ, அவங்ககிட்ட லைனைக் கொடுங்க..
அது வந்து அங்கேயே யாரோ பார்த்துக் கூப்பிட்டாங்களா.. அங்க போயிட்டா..
போயிட்டாளா.. யார் அது..
அதுதான் உன் சினேகிதி சுமா.. அவதான்.. அவளும் இந்த கல்யாண மாப்பிள்ளையும் ஆபீஸ் கொல்லீக்ஸ்.. படு ஸ்டைலா எங்கிட்டே வந்து ஹெல்லோ சொல்லிட்டு ’உன்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு’ ன்னு சிரிச்சாளா.. அதுதான் உனக்கு போன் போட்டேன்..
சுமாவா, இதுக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றீங்களா.. அவ கிடக்க்கிறா.. வேணுமின்னா அவளே பேசுவா.. அது சரி, கல்யாணத்துக்கு உங்க தங்கை வந்தாளா..
ஓ.. வந்தாளே.. புருஷனோட வந்திருக்கா..
“என்ன கலர்..’
என்ன நீ.. அவ கலர் உனக்குத் தெரியாத மாதிரி கேக்கறே.. என்னை விட…”

“ஐய்யோ அழகே.. ஏன் குறுக்கே கெக்கேபிக்கேன்னு பேசறீங்க.. என்ன கலர் புடவையைக் கட்டிண்டு வந்தா’ன்னு கேக்க வந்தேன்..
“அடடே.. நான் சரியா கவனிக்கவே இல்லே..’
“ஓ.. இந்த சுமா வந்தாளே.. அவ..”
“அதுவா.. ஒருமாதிரி வயலெட் கலர்’ல சின்னச் சின்ன பூ டிசைன் போட்டது.. கொஞ்சம் க்ராஸா இருந்தாலும்..”
”அதுதான்.. எதை கவனிக்கணுமோ அதை கவனிக்காதீங்க.. போன மாசம் அங்கே இருக்கறச்சே நான் ஒரு அரக்கு கலர்’ல பார்டர் வச்ச பட்டுப்புடவை வாங்கி உங்க தங்கைக்குக் கொடுத்தேன்.. ஞாபகம் இருக்கா.. மெடீரியல் டிஸைன்’லாம் தனியாப் போட்டுக்கொடுத்த புடவை..”
”தெரியுமே.. அவ கூட ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ’யாரு எடுத்தது.. அண்ணா செலக்ஷனா’ன்னு கேட்டா.. நீ மூஞ்சியைத் தூக்கிட்டு நீயே செலக்ட் பண்ணின விஷயத்தைச் சொன்னியே..”
”சரி சரி.. உங்களுக்கு வர வர தேவையில்லாத விஷயம் எல்லாம் நல்லா நினைவுல இருக்கு.. அந்தப் புடவையை அவ கட்டியிருக்காளா’ன்னுதான் கேட்டேன்..”
“ஏன் அப்படி கேக்கறே..”
“இல்லே.. பெரிசா ஆஹா ஓஹோ’ன்னு அந்தப் புடவையைப் பிடிச்சுப் போய் இனிமே எந்தக் கல்யாணமானாலும் இந்தப் புடவைதான் கட்டிக்கப்போறேன்’னு குதிச்சாளே.. அதுக்காகத்தான் கேட்டேன்.. சும்மா வேஷம் போட்டாளோ’ன்னு”
”ச்சே.. பாவம்.. அவ குழந்தை.. ரொம்பப் பிடிச்சுப் போயி அப்படி குதிச்சிருப்பா.. அவளுக்கு ஒண்ணு பிடிச்சுப் போச்சுன்னா அப்படித்தான் சின்னக் குழந்தையிலேர்ந்து குதிச்சுண்டிருப்பா..”
”குதிக்கட்டும் குதிக்கட்டும்.. கீழே விழாம குதிச்சா சரி..”
“இப்ப என்னாச்சுன்னு இந்த நக்கல் பண்றே?”
”ஆஹா.. உங்க தங்கையை இப்ப ஏதாவது குத்தம் சொல்லிட்டேனா.. ஒரேயடியா பரிஞ்சுண்டு வரவேணாமே. புடவை வாங்கிக் கொடுத்தது நானு.. அதான் கேட்டேன்..”
”அவ நிச்சயம் நீ வாங்கிக் கொடுத்த புடவையைத்தான் கட்டிண்டு வந்துருப்பா.. நான் அவ புருஷன்கிட்டே ஏதோ பேசிண்டே இருந்தேன்னா.. நான் இந்த விவகாரத்தை மறந்துட்டேன்..”
”அதுசரி, கல்யாணத்துல எல்லார்கிட்டேயும் நான் ஏன் வரலே கேட்டாங்களா..”
”ஓ.. எல்லாரும் கேட்டாங்களே.. உன்னால் வரமுடியலே’ன்னு சொன்னவுடனே கல்யாணப்பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டா.. அவ கண்ல தண்ணியே வந்திருச்சு தெரியுமா..”
அப்படியா?
யெஸ்.. நிஜமா.. மனசு எனக்கு உருகிப்போச்சுன்னு வெச்சுக்கோயேன்..
“ஆஹா.. ஹோமப்புகைப் பக்கத்துல ரொம்ப நேரம் இருந்தா எல்லாருக்குமே அவங்க கண்ணுங்க அழறா மாதிரிதான் இருக்கும்.. சரி வுடுங்க..
“அப்படிங்கறே.. இருக்கலாம்.. மாப்பிள்ளை கூட கண்ணைக் கசக்கிகிட்டேதான் இருந்தான்.. ஒருவேளை அவனுக்கும் கூட வருத்தமோ’ன்னு நினைச்சுட்டேன்..ஹி.. ஹி..”
“ஐய்யோ சமத்தே.. சரி சரி.. உங்க தங்கை அந்தப் பக்கம் இருக்காளா;ன்னு ஒரு நோட்டம் விடுங்களேன்..
“அட நான் கிட்டதட்ட வெளில இங்கே வாசல்ல இருக்கேன்.. எப்படிப் பாக்கறது.. உள்ளே மறுபடியும் போய் பார்த்துட்டு வேணா போன் பண்ணட்டுமா..”
“இதுக்குன்னு நீங்க ஒண்ணும் மறுபடியும் போகவேணாம்.. எப்படியும் வெளியே வந்துட்டீங்க இல்லே.. வீட்டுக்கு வந்துடுங்க”
“ஏன் ரொம்ப கோபமாப் பேசறே.. அட.. நாம பேசிக்கிட்டே இருக்கோமா.. அதோ, தங்கையே இங்க வந்துண்டுருக்கா பாரு.. அவகிட்டேயே பேசறியா..”
“ஒண்ணும் வேணாம்.. புடவை விஷயம் மட்டும் சீக்கிரம் சொல்லிட்டு போனை வையுங்க..”
நீ எப்பவுமே தப்பாதான் கணக்குப் பண்ணுவே.. என் தங்கைக்கு நீன்னா உசுரு தெரியுமா… கல்யாணத்துக்கு புடவைன்னு கட்டினா நீ வாங்கித்தந்த புடவைதான் அவ நிச்சயம் கட்டுவா. ஆனா பாரு..
”என்ன ஆனா.. ஊவன்னா.. அந்தப் புடவைதானா அதுன்னு அவ கிட்டக்க வரதுக்குள்ளே நல்லாப் பார்த்து சீக்கிரம் சொல்லுங்களேன்..”
”அது.. அது.. வந்து.. என்னவோ தெரியலே.. இன்னிக்குன்னு பார்த்து சல்வார்’ல வந்துருக்கா.. இங்கேயிருந்து ஆபீஸ் போறாளோ என்னவோ.. என்னன்னு விசாரிக்கிறேன்.. இல்லே நீயே பேசறியா..
ஒண்ணும் வேணாம்.. போனை வையுங்க…
ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ..
படத்திற்கு நன்றி:
http://us2guntur.com/html/sarees.html
-
வால்ட் விட்மன் வசன கவிதை -9
என்னைப் பற்றிய பாடல் -2
(Song of Myself)
(1819-1892)
(புல்லின் இலைகள் -1)மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடாஎன் ஆத்மாவே ! உன்மேல் உள்ளது
எனக்கு நம்பிக்கை !
மற்ற ஆத்மாவை அவமதிக்கக் கூடாது
உனக்காக ! அதுபோல்
உன்னையும்
மற்றதின் முன் அவமதித்தல் கூடாது .
புல்மேல் புரள்வாய் என்னுடன்
தொண்டையில் அடைப்பதை எளிதாக்கு.
சொற்கள் வேண்டாம்,
சந்தமோ, இசையோ வேண்டாம்
சம்பிர தாயம் வேண்டாம்
அறிவு புகட்ட வேண்டாம் எனக்கு
மிகச் சிறந்த தாயினும்
வேண்டேன் !
தாலாட்டு மட்டும் பிடிக்கும்
ஓலமான உன் முணங்கல் ஓசை பிடிக்கும்.
தரணியைச் சுற்றிக் கடந்த அனைத்து
தர்க்க அறிவும், அமைதியும்
சட்டெனத் தோன்றி
சூழ்ந்து கொண்டன என்னை !
தெரியும் எனக்கு
இறைவனின் கைப்பலம் உள்ளது
என் மன உறுதியில் !
கடவுளின் ஆன்மா என்னுடன் தோன்றிய
உடன் பிறப்பாகும் !
இன்றுவரைப் பிறந்தவர் யாவரும்
என் சகோதரர் ஆவார் !
மாதர்கள் என் சகோதரிகள் அல்லது
காதலிகள் ஆவார் !
+++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (January 31, 2013)
-
தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்
மோகன் குமார்
டிவி யில் பார்த்த படம் – மௌன ராகம்
தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் – மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC ஸ்ரீராமின் ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு.. என மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.
கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்தினத்தின் சமீபத்துப் படங்களை பார்த்தால் (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது உடல்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டால்) – இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது
மிஸ்டர் பீன்
போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்…. நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கும் மேலாக மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை. நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவையெல்லாம் எவர் கிரீன் காமெடி..
நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீனாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?
பிளாஷ் பேக் : வந்தே மாதரம்
இன்றைய சோ – தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது
குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திரப் போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்துச் சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும் கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.
ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி
விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..
ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: முதல்வர் நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !
ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே? நம்பிட்டோம் !
அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்
கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்
படம் ஆஹோ ஓஹோ என படக் குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் ” போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது ” தான் நியாபகத்துக்கு வந்தது.
அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் கூட ” எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் ” என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளார் . வெயிட் குறைத்து சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?
என்னமோ போடா மாதவா.. !
படத்திற்கு நன்றி :
http://www.joystiq.com/2007/04/06/mr-bean-game-coming-to-playstation-2/
-
இந்தவார ராசி பலன் (04.02.2013 -10.02.2013)
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகள் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்லத் திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமையால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.
மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்குப் பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.
கடகம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளை பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
சிம்மம்: கலைஞர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பீர்கள். இந்த வாரம் வியாபாரிகள் சரக்கு விநியோகத்தில் குளறுபடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வியாபாரத்தில் தொய்விராது. மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பக்குவமாக நடந்து கொண்டால், நட்பும், உறவும் கசக்காமல் இருக்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட முடியும்.
கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித் தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.
துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கைகொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.
விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.
தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும்.இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள்.பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.
மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகிவிடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.
கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவரச் செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.
மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் மனோபாவத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டால், அவர்களிடமிருந்து நல்ல பெயரை பெற்றுவிடலாம். சுய தொழில் புரிபவர்கள் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். பெண்கள் வாக்குவாதங்களை வளர விடாமலிருந்தால், வீண் தொல்லைகளும் வளராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். கலைஞர்கள் தங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், உங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டும்.
-
ஜனவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன்
எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.
வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது நாலடி கோபுரங்கள் ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது.
பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும். கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம். ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து நாலடி கோபுரங்கள் மாறுபட்டது. தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது
இயல்பாக இருந்திருக்கும்.எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வெ.சா.
இந்த மாதப் போட்டிக்கான சிறுகதைகள்
1. கண்ணாள் ஓதுகம்
2. பச்சைக் கிளி
3. ஆசான்
4. பட்டி நோம்பி
5. “வடு”
6. காதல் கீதை …
7. அம்மாவின் தேன்குழல்
8. பொய் வாழ்க்கை
9. பலிபீடம்
10. ஆத்ம சாந்தி
11. நாலடிக் கோபுரங்கள்…!
போட்டியில் வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!
அன்புடன்
பவள சங்கரி
-
வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4
தேமொழி
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலேவரிகள்: கண்ணதாசன்
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (43)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.
அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.
என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.
“London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.
இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை
தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.
18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.
லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.
இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.
மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington) எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.
இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.
இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.
முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன் -
சிந்தையால் கேள்
வருணன்
ஓலமிடும் தரணியின்
துயர் துடைக்க
சிறியன் நான் என் செய்வேனென
திகைக்கிறாயா நண்பா?
ஒன்றுமில்லை
குருவியின் தலையில்
பனங்காய் சுமக்கத்
தேவையில்லை.
இயன்றதைச் செய்தாலே
இவ்வுலகம் பிழைத்திடும்.
கசக்கி எறிந்து வீணடிக்கும்
ஒவ்வொரு காகிததிலும்
ஒரு மரக் கிளையின்
கண்ணீர் துளியின்
பிசுபிசுப்பு உணர்.
விசிறியடிக்கும்
ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
பூமித் தாயின் மூச்சுக் குழாய்
அடைக்கிறது.
புரி!
நிறைய கனவு காண்
கள்ளமில்லா காற்று
மாசில்லா நீர்நிலை
கருஞ்சாலை நதியின்
கரையெங்கும்
நிழல் காய்க்கும் மரங்கள்…
கனவோடு நில்லாதே
காரியம் கெடும்.
முயற்சி வடம் பிடித்து
கனவுத் தேர் இழு !
விதைகளைப் பதியனிடு
எதிர்காலம் விருட்சமாகும்.
உன் சந்ததியின்
உயிர் துடிப்பை
தளிர்களின் சலசலப்பில்
கேள் !
தோழா !
போகிக்குக் கொளுத்திட
குப்பைகள்
மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
மனவீட்டின் கொல்லையில்…
பின் எதற்கு தெருக்களில்?
சிந்திப்பாய் …!
படத்துக்கு நன்றி
http://www.novadesk.com/go-green-with-nova/













