தேமொழி

 

 

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

வரிகள்: கண்ணதாசன்

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

 1. படத்துக்கு ஏற்ற பாடலா ?
  பாடலுக்கு ஏற்ற படமா ?
  ஓவியன் கைத்திறன் எழிலா ? காவியப் பா அமைப்பு இனிதா ?
  உன்னத ஓவியப் படம் இட்டமைக்குப் பாராட்டுகள் தேமொழி

 2. காவியப் புலவனின்
  கவிதை வரிகளுக்கு
  கண்ணைக் கவரும்
  வண்ண ஓவியம் சிறப்புத்தான்…!
  வாழ்த்துக்கள்…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. என் ஓவியத்தை ரசித்து கருத்துரை வழங்கிய அன்பு ஜெயபாரதன் ஐயாவிற்கும், செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும், அன்பு பழமைபேசிக்கும் நன்றி. உங்கள் கருத்துகள் உற்சாகமூட்டுகிறது.

  ….. தேமொழி

 4. தேமொழி,

  ஓவியப் படத்தில் முடிந்தால் ஒரு திருத்தம் செய்வீர்களா ? அப்பால் தெரியும் தொடுவான் கடலின் நீர்த்தளம், பூமியின் வட்ட வளைவைக் காட்ட வேண்டும்.
  அன்புடன், சி. ஜெயபாரதன்.

 5. அன்பு ஜெயபாரதன் ஐயா, நன்றி. இது ஒரு நாட்காட்டியில் வந்த படத்தினைப் பார்த்து வரைந்து வாரணம் தீட்டியது. உங்கள் கருத்துபடி நேரம் கிடைக்கும் பொழுது திருத்தம் செய்துவிடுகிறேன்.

  ….. தேமொழி

 6. படகோட்டும் மீனவா
  உன்
  வலையை
  கடல் மீனுக்கு மட்டும் வீசு!

  கீழ்வானில்
  குடி வந்த
  என்
  நிஜக் காதலியாம்
  நிலவை
  வான் உலா வர சொல்லி உள்ளேன்
  உன்
  புஜ பலத்தைக்காட்டி
  அவளுக்கு வலை வீசிவிடாதே.

  நல்ல ஓவியம் தந்த தேமொழிக்கு பாராட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *