Blog

  • திருத்தப்படமுடியாத தீர்ப்புகள்!

    பவள சங்கரி

    ”யக்கா, யக்கா இன்னைக்கு நான் ஊட்டாண்ட வர நேரமாவும் போலக்கீது, கொஞ்சம் புள்ளைய பாத்துக்கக்கா. வயித்துக்கு எதுனா சாப்பாடு குடுத்துடு இன்னா.. நான் அப்பாலைக்கி வந்து குயந்தையை இட்டுணுப்போறன். சரியா”

    “…………………..”

    “அட ஆமா யக்கா. இங்க இந்த பெரிசு படுத்துக்கிணு கீதில்ல. அத்தைப் பாத்துக்க இன்னைக்கு ஆளு வரல. அதான் சின்ன ஐயா இன்னைக்கு ஒரு நாளைக்கு இத்தை பாத்துக்கச் சொன்னாரு. என்னால தட்டமுடியல.. பணமும் 200 ரூவா கொடுத்தாரு. அதேன், நீ இருக்க தகிரியத்துலதான் ஒத்துக்கினேன்”

    “……………..”

    “அதா, அத்தை ஏன் கேக்கற, சுய நினைவே இல்லாம மரக்கட்டையாட்டமாத்தான் கிடக்குது. என்னமோ கோமாவுல கடக்குதுன்றாங்க. உசிரும் போவாம இசுத்துக்கினு கடக்குது . மனசுல என்ன ஆசை கீதோ தெரீல, இப்புடி அந்த உசிரு அல்லாடிங்கிடக்குது பாவம்”

    “கடவுளே, இது தேவையா எனக்கு, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி செத்த உடலோட , மனசு மட்டும் சுறுசுறுப்பா வச்சி வதைக்கப் போற. டெர்ரர் சிவசாமின்னு பேரெடுத்த எனக்கு இப்புடி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம். கண் பார்வையிலேயே என்னோட நூல் மில்லுல வேலை செய்த நூத்துக்கணக்கானவர்களும் மிரண்டுபோய் சுழன்றுவேலை பார்ப்பாங்களே. இன்னைக்கு ஒரு வேலைக்காரி கூட என்னை ஒரு ஜடமாட்டம் பாக்கறாளே. இந்தக் கையினால எத்தனை முறை போனசு, குழந்தைக்கு உடம்பு சரியில்ல, புருசனுக்கு உடம்பு சரியில்லேன்னு காசு வாங்கியிருப்பா.. இந்த மூனு மாசமா படுக்கையில கிடக்க ஆரம்பிச்ச உடனே இவ்ளோ அவமானப்படுத்துறாங்களே. வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேச முடியல. இன்னும் என்னவெல்லாம் கேக்கணுமோ.. திடீர்னு அம்மா எப்பவோ பேசுன இதே டயலாக் நினைப்பு வந்தது. ..

    “ஏப்பா, சிவசாமி, உன்ற அப்பாரு குழந்தைக கூட சாவந்தின்னியும் (சாகும்வரை) இருக்கோணும்னு ஆசைப் படுறாக அப்புனு. அன்னாடம் புலம்பித் தீக்குறாக. இன்னும் எம்புட்டு நாளக்கி இருக்கப்போவுது அந்த மனுசன். ஊருக்குக் கூட்டிட்டுப் போப்பா. பாவம்ப்பா .. சமாதானமே பண்ண முடியல”

    “அம்மா, என்னம்மா நீ, எத்தனைவாட்டி சொன்னாலும் கேக்க மாட்டீங்கற. அப்பா அங்க வந்து இருக்க முடியாதும்மா. நிதமும் அவருக்கு சாயங்காலமானா தண்ணிப் போடணும். வீட்டில குழந்தைகள் இருக்கிறாங்க, தேவையில்லாம பிரச்சனை வரும். உங்களுக்கு என்ன பிரச்சனை இங்க. கடலாட்டம் பெரிய வீடு. கூப்பிட்ட குரலுக்கு ஆளு. இன்னும் வேற என்ன வேணும். வாரக் கடைசீல பிள்ளைங்களையும் கூட்டியாந்து காமிச்சுப் போட்டுதானே போறேன். அங்க வந்தா மட்டும் என்ன பண்ணப்போறீங்க. டவுன்ல ஒரே சத்தமுமா கிடக்கு. இங்க கிராமத்துல அமைதியா இருக்கலாம். நிம்மதியா இருக்கறத உட்டுப்போட்டு கோயம்புத்தூர் வறேன்னு அடம் புடிக்கறியகளே.. இதான் எட்டிப் புடிக்கிற தூரத்துல இருக்குற கந்தம்பாளையம். எப்ப வேணா போன் பண்ணா நான் வந்துட்டுப் போறேன். சந்தோசமா இருக்கப் பாருங்கம்மா”

    “ஏப்பா, இப்புடி பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு ஆடற.. உங்கப்பாரு கடைசி காலத்து ஆசையைக்கூட கண்டுக்கிடாம இருக்கறியே. அப்புடித்தான் அவரு என்ன மொடாக்குடியரா? என்னமோ சாயங்காலம் போல கொஞ்சமா போடுவாரு. போட்டாலும் சத்தமில்லாம போய் ரூமுக்குள்ள முடங்கிக்கிடுவாரு. அதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”

    அம்மா இப்படி சண்டை போட்டதால சங்கடப்பட்டுக்கிட்டு 2 வாரம் போய் பார்க்கவே இல்லை. மில்லுல லேபர் பிரச்சனை அது, இதுன்னு வேலையும் கூடிப்போனதாலே ஊருக்குக் கிளம்பும் வாய்ப்பும் இல்லாமல் போனது. அன்று அப்பா ரொம்ப சீரியசான நிலைமைல இருக்குறதா போன் வந்தவுடன் அடிச்சுப் பிடிச்சுப் போயும் உயிரற்ற உடலைத்தான் பார்க்க முடிந்தது. அன்றோடு அப்பாவுடன் சேர்த்து அம்மாவின் உறவும் இறந்து போனது சிவலிங்கத்திற்கு. அதற்குப் பிறகும் அம்மா தனியா இருக்க வேண்டாம் என்று கோவைக்கே வந்துடும்மான்னு எவ்வளவோ கூப்பிட்டும் வைராக்கியம் பிடித்த அம்மா இன்றுவரை வரவே இல்லை. இது எல்லாவற்றையும் விட ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் மூச்சுவிட சிரமமும், லேசாக நெஞ்சு வலியும் இருந்ததால், மகனிடம் கூட சொல்லாமல் வேலைக்காரப் பெண்ணை கூட்டிக்கொண்டு கோவை மருத்துவமனைக்கு வந்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருப்பதாக யாரோ சொல்லி தெரிந்துகொண்டு அவசரமாக ஓடி,

    “அம்மா, ஏம்மா இப்புடி பண்றே. எங்கிட்ட சொன்னா நான் உங்கூட ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பேன்ல. சரி அப்படித்தான் வந்தியே, டாக்டரைப் பார்த்துட்டு வீட்டுக்கு வராம பஸ் ஸ்டேண்டுல உட்கார்ந்திருக்க வேணுமா? இன்னைக்கு திடீர்னு பஸ் ஸ்டிரைக் வேற. இன்னும் எந்நேரம் இது முடியுமோ தெரியாது. வா வீட்டுக்குப் போகலாம். “

    “இல்லப்பா, வேண்டாம் சாமி. நான் எப்புடியும் இராவுக்குள்ள ஊரு போயி சேந்துடுவேன். நீ ஒன்னும் கவலைப் படாம ஊட்டுக்குப் போய் ஓய்வெடுப்பா. இன்னும் செத்த நேரம் பார்த்துப்போட்டு, ஏதாவது வாடகை வண்டி புடிச்சி போயிடுவோம். இவளும் பாவம் புள்ளை குட்டிகளை உட்டுப்போட்டு வந்திருக்கா. நாங்க போயிக்குவோம் ராசா, நீ கிளம்புப்பா”

    “அம்மா, ஏம்மா இப்புடிக் கொல்லறே. மானமே போவுது எனக்கு. வீட்டுக்கு வாம்மா போலாம். என்னமோ என்னைய கொடுமக்காரனாட்டமா பாக்குறாக நம்ம சொந்தமெல்லாம்.”

    “ஓ, அதான பார்த்தேன். என்னடா நம்ம மவனுக்கு திடீர்னு பாசம் பிச்சிக்கிச்சின்னு. போச்சாது, போப்பா. அவிக கடக்குறாக. நீ எம்புட்டு பெரிய ஆளு. உன்னையப்போயி ஒருத்தன் விரலை நீட்டி பேச முடியுமா. அதுக்கெல்லாம் நீ பெருசா ஒன்னும் வெசனப்படாத ராசா. நான் எம்பட வழியைப் பாத்து போயிக்குவேன்.”

    அதற்குப் பிறகு அவ்வப்போது கோவை மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தபோதும் ஒரு முறைகூட வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்தே இருந்தார்கள். இரத்த ஓட்டம் இயல்பாக துரித நடையில் செல்லும் போது தம் தவறுகள் பற்றிய உணர்வே இருப்பதில்லை. இரத்தம் சுண்டி, உடல் வலுவிழக்கும்போது செய்ய இருந்த தவறுகள் கூட விரட்டி வந்து உறுத்தும். அப்பாவின் கவலை தோய்ந்த ஆவலான முகமும், அம்மாவின் கோபமான பார்வையும் விரட்டி வந்து இன்று வதைப்பதை அசையாமல் ஜீரணம் பண்ண வேண்டியிருந்தது. ஈன்றபோது பெரிதுவக்கும் இன்பமாக இருந்தது கடைசி காலத்தில் வேதனையின் உச்சமாகும் போது ஒரு தாயின் மன நிலை எப்படியிருக்கும் என்று தன்னால் எப்படி உணர முடியாமல் போனது என்ற பாரம் பாறையாய் அழுத்தியது. பிள்ளைகள் கல்வி, விளையாட்டு, கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் என்று வளர்ந்துகொண்டே இருக்க, அம்மாவை அடிக்கடி போய்ப் பார்ப்பதுகூட சிரமம் ஆகிவிட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு அன்று கந்தம்பாளையம் செல்வதற்குக் கிளம்பியபோது,

    “ஏனுங்க, இன்னைக்கு நம்ம ரிஷவன் ஸ்கூல்ல சாயங்காலம் விழா இருக்கில்ல. அதில நம்ம பையனும் மாறு வேடப் போட்டியில இருக்கான். நாமதான் போயி அவனுக்கு சிரவணன் மேக்கப் போடணும். சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க”

    “இல்ல இன்னைக்கு நான் கந்தம்பாளையம் போகலாம்னு இருக்கேன். அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குது. போய் ஒரெட்டு பாத்துப்போட்டு வரலாம்னு கிளம்புனேன்”

    நோய்வாய்ப்பட்ட தாய் தந்தையரை கூடையில் வைத்து சுமந்து கொண்டு திரிந்த சிரவணன் கதையை நினைத்துப்பார்க்கக் கூட நேரமில்லை பாவம் அவர்களுக்கு!

    “ஏன் உங்கம்மாவுக்கு என்ன, நல்லாத்தானே இருக்குது. கிழவி இங்க கூப்டா வரமாட்டேன்னு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குது. மனசுல என்னதான் வச்சிக்கிட்டு இருக்குதுன்னு தெரியல. நம்மள அவமானப்படுத்தோணுமின்னே அங்கன கந்தம்பாளையத்துலயே உக்காந்துக்கிட்டு கழுத்தறுக்குது. இங்க நம்ம புள்ளைகள பாக்கறத உட்டுப்போட்டு பொழுதுக்கும் உங்கம்மா பின்னாடி திரிய முடியுமா? அது எல்லாம் வாழ்ந்து முடிச்ச கட்டை , இனிமேட்டு குழந்தைகளத்தானே பாக்கோணும். போங்க, போய் நம்ம புள்ளைகள பாக்குற வேலையைப் பாருங்க. அது கடக்கட்டும். போன் பண்ணி ஊட்டுக்கு வரச் சொல்லுங்க”

    ”இரக்கமே இல்லாம அன்னைக்கு பெண்டாட்டி சொன்னபோது அது நல்லதா, கெட்டதான்னு யோசிக்கிற பக்குவம் கூட இல்லாமப் போனது. அடுத்தடுத்த பிரச்சனைகள், தீர்வுகள் என்று ஓடிக்கொண்டிருந்ததில் அம்மாவைப் போய்ப் பார்ப்பது அரிதாகிப்போனது. ஆடிக்கொருதரம், அம்மாவாசைக்கு ஒரு தரம்னு ஆகிப்போச்சு. ஐயோ அம்மா இந்த தள்ளாத வயசுல தனியா இருக்க எவ்ளோ கஷ்டப்படுதோ, கடவுளே.. இன்னைக்கு என் கதி என்ன. ஒரே மகள் திருமணத்திற்குப்பின் ஆஸ்திரேலியா வாசம். வாரம் ஒருநாள் மட்டும் போன் செய்து பேசுவாள். சமீபத்தில் படுக்கையில்ப்விழுந்தவுடன் இந்த வேலையும் இல்லாமல் போனது. அவ்வப்போது தம்பியிடம் அப்பாவின் உடல் நலம் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதோடு சரி. அப்பா திடீரென்று இப்படி படுக்கையில் கிடையாய் கிடக்கையில் வியாபாரத்தின் மொத்தப் பொறுப்பும் ரிஷவன் தலையில் குருவித்தலை பனங்காயாக விழுந்துவிட்டது! மாசத்தில் 25 நாளும் வெளியூர் சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய நிலை அவனுக்கு . மனைவி, . சந்திரகலா இவங்க இரண்டு பேரையும் எப்படீல்லாம் வளர்த்தாளே. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்ததைத் தவிர, அவிங்களுக்காகவே வாழ்ந்ததை அவள் பெருமையாக நினைத்தாள். ஏன் நான் மட்டும் என்ன.. ஊரில யாருக்குமே கிடைக்காத அருமையான ஒரு மனைவி கிடைச்சது என்னோட நல்ல நேரம்ன்னுதானே நினைச்சேன். குதிரைக்கு லாடம் கட்டினது போல அவளோட பார்வை முழுசும் பிள்ளைகங்க மேலேயே இருந்ததால, சில நேரங்கள்ல என்னையே கூட பாரமா நினைச்சவதானே. நான் கூட அப்ப சந்திரா எவ்ளோ நல்ல அம்மாவா இருக்கான்னு நண்பர்கள்கிட்டயெல்லாம் மார்தட்டிக்கிட்டது அவிங்க பார்வையில கிண்டலா இருந்திருக்குமோ? கண்ணை வித்து ஓவியம் வாங்குறான் பாருன்னு, கிண்டல் அடிச்சிருப்பாங்களோ. எங்க அதெல்லாம் யோசிச்சம் அப்ப.. “

    “ஹலோ, ஹலோ, சின்ன ஐயாவுங்களா? உங்க அப்பாவுக்கு கொஞ்ச நேரமா துக்கிப் போடுது. கை, கால் எல்லாம் ஒரு மாதிரியா உதறல் எடுத்துக்கினே கீது. பயமா இருக்கு. சீக்கிரமா வாரீங்களா.. “

    “அக்கா, நான் இப்ப இருக்குறது நாகப்பட்டிணத்துல. எப்படி நான் உடனே அங்க வந்து சேர முடியும்? ஏற்கனவே அப்பாவுக்கு இப்படி இரண்டு மூனு தடவை இந்த மாதிரி ஆகியிருக்கு. ஒன்னும் ஆகாது. கவலைப்படாதீங்க. நான் டாக்டருக்கு போன் செய்து பார்க்கிறேன். அவர் நர்சம்மாவை அனுப்புவார், அவங்க வர வரைக்கும் அப்பா பக்கத்துலேயே இருங்க. அவங்க வந்து பார்த்தப்புறம் எனக்கு போன் போடச் சொல்லுங்க. அப்பறம் பார்த்துக்கலாம்”

    “சரிங்க தம்பி.” இரண்டு மனசாத்தான் பதில் வந்தது.

    ‘சந்திராவைப் பத்தி நினைச்சப்ப என்னை அறியாமலே இந்த ஜடம் குலுங்கியிருக்கும் போல.. இந்த உலகத்துக்குள்ளேயே இருந்துகொண்டு, எவர் கண்ணிலும் படாம வெகு தூரமான ஒரு அத்துவானக் காட்டில, தனிமைல திரியற மாதிரி நிலை. ரிஷவனுக்கு ஒரு தடவை டைபாய்ட் காய்ச்சல் வந்தப்ப, விடிய விடிய அவனை கவனிச்சிக்கிட்டும் மறு காய்ச்சல் வந்து பையன் ரொம்பவே மோசமாயிட்டான். மருத்துவமனையில சேர்த்தப்ப பையன் துவண்டு போய் என்ன ஆவானோன்னு நான் கூட துடிச்சுப் போனப்ப, சந்திரா எவ்ளோ தைரியமா, நம்பிக்கையோட, டாக்டர் சொன்னதை அப்படியே கேட்டு கிட்டத்தட்ட மூனு மாசம் ஒரு தவமா பையனைக் காப்பாத்துனாளே.. அதை எப்படி மறக்க முடியும்.. அதே போல மகள் மது பதினாறு வயது இளமை வேகத்தில் உடன் பயிலும் மாணவனை லவ் பன்றேன்னு சர்வ சாதாரணமா, இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடம் கொடுத்த தைரியத்துல வெளிப்படையா சொன்னப்ப, நிலைகுலைந்து போனது இப்பவும் நினைத்தால் உள்ளம்(?) பதறுதே.. ஆனா சந்திரா கொஞ்சமும் கவலைப் படாமல் அவளை ஓங்கி ஒரு அறை விட்டதோடு, அந்தப் பையன் வீட்டிலும் போய் பேசி, பள்ளியிலும் எடுத்துச் சொல்லி, மகள் கொஞ்ச நாட்கள் மந்திரிச்சி விட்டது போல திரிந்தாலும், சீக்கிரமே தெளிந்து விட்டது சந்திராவோட சாமர்த்தியம்தான். இன்னைக்கு அவளும் ஒரு இன்ஜீனீயரா, நல்ல கணவன் அழகான ஆண் குழந்தையோட அமைதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கான்னா அது சந்திராவோட வளர்ப்புதானே.. ஒரு பெற்றோர் தம் குழந்தைகளை அறிவுரை சொல்லி திருத்துவதோடு, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லிட்டிருந்ததை, சாதித்து விட்டாள், மது விசயத்தில்… ஆனால் சந்திராவின் இறுதி முடிவும், அமைதியாக இல்லையே… கார் விபத்தில் தூக்கி வீசப்பட்டவளின் தண்டு வடம் நொறுங்கிப் போக, 50 வயதில் படுத்த படுக்கையாகி, இயற்கை உபாதைகள் கூட தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதில், இனி சரியாக வழியில்லை என்பதை அரசல் புரசலாக அறிந்தவள் சமயம் பார்த்து தூக்க மாத்திரைகளை ஒன்றாக அள்ளிப் போட்டுக்கொண்டு போய் சேர்ந்தே விட்டாள். இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்ததில் மனமும், உடலும் நொந்து போய் வெறுப்பின் எல்லையில் போய்ச் சேர்ந்ததை உறவுகளில் கூட எவரும் அதிகம் கவலைப்படாதது அதிர்ச்சிதான். ஆனாலும் இருந்து வேதனைப்படுவதைவிட போனதே மேல் என்று உறவுகள் காதுபட பேசியது மறப்பது சிரமம்தான்’

    மெதுவாக ஒரு புறம் முனகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி திடீரென அதிர ஆரம்பித்தது. பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த மனது மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தது. வேலைக்காரம்மா ஏதோ தனக்குப் பிடித்த நிகழ்ச்சி என்று சத்தமாக வைத்திருக்கும் போல.. குரல் தனக்குப் பழக்கப்பட்ட குரல் என்பதால் சற்று கவனம் வைத்து கேட்கத் தொடங்கிய சிவசாமி,
    காரில் பயணம் செய்யும் போது பல நேரங்களில் விரும்பிக் கேட்கும், பெரியவரின் சொற்பொழிவு. இடையில் அவர் சொல்லும் குட்டிக் கதைகளுக்காகவே பல முறை கேட்கத்தோன்றும்.

    ஒரு பெரிய மனிதரின் உயிர் அப்போதுதான் பிரிகிறது. கடவுள் ஒரு பெட்டியுடன் தன்னருகில் வந்து, ‘”சரியப்பா, கிளம்பும் நேரம் வந்துவிட்டது. கிளம்பு” என்றாராம்.
    அதிர்ந்த மனிதரோ, “ஐயோ சாமி அதற்குள்ளாகவா? இன்னும் என்னுடைய பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அரைகுறையாக இருக்கிறதே?’
    இல்லையப்பா, உன் நேரம் முடிந்துவிட்டது. கிளம்புற வழியைப் பாரு”.என்றார் கடவுள்.

    அந்த மனிதனோ, “அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது” என்று கேட்டான் ஆவல் பொங்க.
    ”உன் உடமைகள்தான்” என்றார் கடவுள்.
    “என் உடமைகளா? என் பணம், தங்கக் கட்டி, துணிமணிகளா?” என்று கேட்டான்.
    ”நீ சொன்ன அதெல்லாம் உன்னுடையது இல்லை. அவையனைத்தும் பூமிக்கே சொந்தம்” என்றார்.

    “ஓ, அப்போ அவையனைத்தும் என் நினைவுகளா?”, என்று கேட்டான் அவன்.
    அதற்கு கடவுளோ, “அது எப்படி அவை உனக்குச் சொந்தமாகும்? காலத்தின் உடமைகள் அவை” என்றார்.

    ”என் தனித்திறமைகளா?” என்றான்.
    புன்னகைத்த கடவுளோ, “அதுவும் உன்னுடையது அல்ல. காலச் சூழலுக்குச் சொந்தமானது அவைகள்” என்றார்.

    “என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோ?” என்று கேட்டான்.
    கடவுள் உடனே, “இல்லை மகனே, நிச்சயம் இல்லை. அவையெல்லாம் வந்த வழிக்கேச் சொந்தம். உனக்கில்லையப்பா” என்றார்.

    “ஓ, என் மனைவியும், மகனும்தானே?” என்றான்.
    கடவுளோ, “அடடா, அதுவும் உன்னுடையது அல்ல. உன் இதயத்திற்குச் சொந்தமானவர்கள் அவர்கள்” என்றார்.

    ”என் உடலா இது?”
    “ஹ..ஹா… அது மண்ணுக்குச் சொந்தமப்பா” என்றார்.

    “ஓ, என் ஆன்மாதானே அது?”
    “வாய்ப்பே இல்லை. அது என்னுடையதப்பா” என்று பதிலளித்தார்.

    அந்த மனிதனுக்கு அச்சம் வந்துவிட, அப்படி என்னதான் அந்தப் பெட்டியில் இருக்கும் என்ற யோசனையுடன், கடவுளிடமிருந்து அதை வாங்கி திறந்து பார்த்தவன், அது காலியாகக் கிடந்ததைக் கண்டு கண்ணீர் மல்க, “எனக்கென்று எதுவுமே இல்லையா?” என்றான்.
    கடவுளோ, “உண்மைதானப்பா, நீ வாழ்ந்த அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான் உனது. வாழ்க்கையே அந்த ஒரு நொடிதான். அந்த நொடியே உன் உடமை” என்றார்.

    ஓ போகும் போது என்னத்தைக் கொண்டு போகப் போறோம் என்று அம்மா அடிக்கடி சொன்னதன் அர்த்தம் மெல்ல புரிந்தது. ‘தேநீரோடு வாழுங்கள்’ என்று சொன்ன பெரியவரின் பேச்சு கூட ஒரு காலத்தில் வேடிக்கையாக இருந்தது நினைவிற்கு வந்தது. எல்லாம் முடியும் நேரம் ஞானம் வந்தது…

    இரண்டாவது நாளாக டயப்பர் மாற்றாமல் துர்நாற்றம் வீசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வதைத்தது. வேலைக்காரியோ ரூம் ஸ்பிரேவை எடுத்து தாராளமாக அடித்துவிட்டு தள்ளிப்போய் உட்கார்ந்து கொண்டாள். உடனடியாக மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில் யார் வந்து மாற்றப் போகிறார்கள் என்று புரியாமல் துடிக்க ஆரம்பித்தது மனம். வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, கடவுளே யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் வரக்கூடாதே, இந்த துர்நாற்றம் அவர்களை அசூசை கொள்ளச் செய்யுமே .. மகன் வந்தால் மாற்றுவான். அவனாக இருக்க வாய்ப்பு குறைவு. வியாபார சம்பந்தமாக டூர் போயிருக்கானே.. தன் உதவியாளராக இருந்தால் தேவலையே …. அம்மா… அம்மா.. என்று உள்ளம் பொங்க ஆரம்பித்தது.

    மூன்று முறை பெல் அடித்த பின்பு, சர்வ சாதாரணமாக எழுந்து, மெதுவாக கதவைத் திறந்தாள். திறந்தவள் ஆச்சரியமாக , ‘அம்மா நீங்களா’ என்று சத்தமாகவே குரல் கொடுத்தாள். அவளைத் துளியும் சட்டை செய்யாமல், கடந்து நேராக மகன் இருக்கும் அறைக்குச் சென்றார் பார்வதியம்மாள். பின்னாலேயே வேகமாக நடையை எட்டிப்போட்ட வேலைக்காரி, தயங்கி நின்றாள்.

    அம்மாவின் மூச்சுக் காற்று ஏற்படுத்திய அதிர்வில் படபடப்பு அதிகமாகி, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது சிவசாமிக்கு. அதைக்கண்ட அந்தத் தாய், “டேய் சிவா, என்னடா இப்படி கிழிஞ்ச நாரா கிடக்கற. என் ராசா” என்று கண்ணீர் மல்க அவன் கண்ணீரைத் துடைத்து தலையைக் கோதிவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 88 வயதில் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு மகனைப் பார்க்க அந்த வீட்டிற்கு வந்த பார்வதி அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரப் பெண்மணி.

    “என்ன இது சிவாவுக்கு ஒழுங்கா சுத்தம் பண்ணலையா? இப்படி வாடை வீசுதே” என்றார் கோபமாக. அம்மாவின் குரலைக் கேட்டவுடன் அப்படியே எழுந்து கழுத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று இதயம் துடித்தாலும், சொரணை கெட்ட உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. சங்கடப்பட்டு நெளிந்து கொண்டிருந்த வேலைக்காரியை அனுப்பி பக்கெட்டில் வெண்ணீரும், உடம்பு துடைக்கும் துண்டும் மாற்று உடைகளும் எடுத்து வரச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மகனுக்கு உடல் துடைத்து பவுடர் போட்டு துணி மாற்றி தலை மாட்டில் அமர்ந்து பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார் அந்தத் தாய்!

    Share
  • எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    எஸ் வி வேணுகோபாலன் 

    அஞ்சலி: பாலு மகேந்திரா

    எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    baluதேர்ந்த கதை சொல்லிகளை உலகம் கண்டிருக்கிறது. காட்சிப் படுத்துவதில் அசாத்திய நேர்த்தி கொண்டிருப்பவர்களையும் திரையுலகம் வழங்கி இருக்கிறது. மவுன மொழியின் தொடர் கிளர்ச்சி அனுப்வங்களை ஏற்படுத்திச் சென்றவர்களும் இருந்தார்கள். கட்டணம் கொடுத்து சீட்டு வாங்கி திரையரங்கின் இருக்கையில் அமர்ந்து பிறகு அங்கிருந்தே வெளியேறிக் கொண்டிருந்த ரசிகர்களை ஃபிரேமுக்குள் இழத்து அந்த நிகழ்வுகளோடே வாழ்ந்துவிட்டுப் போக வைக்கும் ஆற்றல் படைத்திருப்போரது அரிய வரிசையில் இருந்தவர் பாலு மகேந்திரா.

    மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றார் மகாகவி. தனது காமிரா மொழியில் அந்த மந்திரச் சொற்களை தேவைக்கேற்ப பதிப்பிக்கும் திறமையைக் கொண்டிருந்த பாலுவின் மரணம் இன்றைய தலைமுறை திரையுலக படைப்பாளிகளையும், பழைய தலைமுறை ரசிகர்களையும் ஒன்று போலவே பாதித்திருப்பதை அவரது இறுதி ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது. சிந்தனையில் தேக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கே இது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    மூடுபனி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஏற்பட்ட அலைவுறுதல், வேறு படங்கள் மாதிரி அல்ல இது என்பதை அப்போதும், வேறு இயக்குனர்கள் மாதிரி அல்ல இவர் என்பதைப் பிறகும் எனக்கு கற்பித்தது. இயல்பியல் கோட்பாட்டில் சொல்லப்படுவது போல், அலை நீளங்கள் சமமாக உள்ள இரண்டு வெவ்வேறு பொருள்களின் அதிர்வுகள் சந்திக்கும் புள்ளியில் நிகழும் ஒத்திசைவு (RESONANCE) அனுபவத்தை ரசிகர்கள் உள்ளத்தில் நிகழ்த்தும் கலைஞர்கள் கற்பனையில் விரியும் காட்சிக்குள் சென்றுகூட சரி செய்து திரும்பும் திறனைப் பெற்றிருப்பார்கள். திரைப்படம் என்பதைத் திரை மொழி என்று நமக்குப் புரிய வைத்த சில ஆளுமைகளில் முக்கியமானவர் பாலு மகேந்திரா.

    ஒரு காலத்தில் “பேசும் படம் ” திரை இதழின் கடைசி பத்து, பதினைந்து பக்கங்களில் வெளியாகியிருக்குbalu1ம் வசனங்களிலிருந்தும், வானொலியில் மாதம் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளின் (பிற்பகல் 3 மணி என்று நினைவு) ஒரு மணி நேர ஒலிச்சித்திரத்திலும் ஒரு முழு படத்தை அப்படியே உள்வாங்கி அதைப் பார்த்து முடிந்த நிறைவு அடைந்து கொண்டிருந்த இள வயது குதூகலத்தைக் கலைத்துப் போடத் தொடங்கிய படங்கள்,வெறும் கேளிக்கைக்கு அப்பால் ஒரு தேடலை தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டத் தொடங்கின. முப்பரிமாண உணர்வோடு, பின்புலத்தில் விரியும் காட்சிகளில் கசியும் ஒளி, ததும்பும் இசை, பாத்திரங்கள் மட்டுமின்றி அசையாத பொருள்களும் வெளிப்படுத்தும் உடல் மொழி என ஒரு திரைப்படத்தின் கூறுகள் பலவற்றை சாதாரண ரசிகர்களும் தமது கையள்ளிப் பருக முடியும், கோப்பையில் ஏந்தி ஒயிலாக அருந்த முடியும் என்பதை பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ உணர்த்தியது.

    புது மனை புகு விழா அழைப்பிதழில் வீட்டை அச்சில் பதிந்திருப்பது போல அத்தனை இலகுவானதில்லை ஒரு வீடு கட்டுவது என்பதை, பாலு மகேந்திரா திரையில் எழுதிக் காட்டினார். ஒவ்வொரு காசையும் எண்ணி எண்ணி அவள் (அர்ச்சனா எத்தனை அற்புதமாக அதைச் செய்திருப்பார்!) செலவு செய்து அந்த வீட்டை எழுப்பிக் கொண்டிருக்கையில், காதலன் ஆசையாக வாங்கிவந்து கொடுக்கும் சேலை அவளுக்கு அவன் மீதான அன்பைத் ததும்ப வைப்பதற்குப் பதிலாக, இப்ப இந்தப் புடவைக்கு என்ன தேவை என்று அவளது ஆற்றாமையாக வெடிக்கும் காட்சி பார்வையாளருக்கு எத்தனையோ உணர்த்தி விடுகிறது. சொக்கலிங்க பாகவதர் அந்த வேகாத வெயிலில் முடிவற்ற நடையை நடந்து கொண்டிருப்பது பல நூறு மனிதர்களுக்கும் சேர்த்து நடந்த நடை.

    மூன்றாம் பிறை திரைப்படத்தில் வயதான மனிதருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இளம் மனைவி பாத்திரம். பூர்ணம் விஸ்வநாதனும், சில்க் ஸ்மிதாவும் வெளிப்படுத்தும் எதிரெதிர் உளவியல் நிலைகளை – பாலியல் உணர்வுகளின் வடிகாலையும், ஏமாற்றத் ததும்பலையும் பாலுவின் திரை மொழி எழுதியது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவி, கமல் ஹாசன் இருவருக்கு மேலாக சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியின் பாத்திரத்தை அவர் உலவ விட்டது, அந்தப் பெண்ணின் மன நிலையை வாசிக்கக் கொடுத்திருக்கும் புத்தகம் போல இருக்கும். அவரது படங்களில் பாடல்களும், பாடல் காட்சிகளும் தனி ரசனையோடு இணைக்கப்பட்டிருக்கும்.

    balu2“மறுபடியும்” திரைப்படம், அலை பாயும் உள்ளத்தைக் கண்களில் வாசித்தறிய வைக்கும். இளையராஜாவின் ‘ஆசை அதிகம் வச்சு’ (எஸ். ஜானகி) பாடலின் இசை புறப்படும் வேகத்திலேயே, தாளம் தப்பாத ரோகிணியின் நடனத்தின் பாதையில் தன்னைத் தொலைக்கும் நிழல்கள் ரவி பாத்திரம் ஒரு குறியீட்டுக் காட்சி. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்பது, அவரது ‘ரெட்டை வால் குருவி’ சந்தித்த எதிர்வினைகளில் தெரியும். அவர் பாடு எடுத்து வழங்கிய பிற்காலத் திரைப்படங்கள் பெரிய வரவேற்பு பெறாதது அவரை பாதிக்கவே செய்தாலும், தம்மைச் சுற்றி நிறையும் அடுத்தடுத்த இளம் படைப்பாளிகளுக்காகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு கற்பித்தலின் இன்பத்தில் அவர் இறங்கியது தமிழ்த் திரை உலகில் ஒரு புதிய அனுபவம். அது தான் அவர் நிர்மாணித்த சினிமா பட்டறை.

    சின்னத் திரை என்று அழைக்கப்படும் தொலைகாட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பான கதை நேரம் தொடரில் சிறுகதைகள் பலவற்றை அற்புதமான குறும்படங்களாக வடித்து வழங்கிக் கொண்டிருந்தார் பாலு மகேந்திரா. மாலன் அவர்களின் தப்புக் கணக்கு ஓர் அருமையான வடிவில் வழங்கப்பட்டிருந்தது. சுஜாதாவின் கதை ஒன்று உருக்கமாக வார்க்கப் பட்டிருந்தது. மௌனிகா என்ற திறமையான நடிகை எத்தனை எத்தனை பாத்திரங்களில் வந்து போனார் அந்தத் தொடரில்!

    தாமே அவரது வலைத்தள எழுத்துக்களில் பதிவு செய்திருப்பது போல 5 ஆண்டுகளில் 21 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு இயக்குனராக அவர் முயற்சிகளைத் தொடங்கிய பிறகும் மகேந்திரன் கேட்டுக் கொண்டதற்காக முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவாளராக இயங்க ஒப்புக் கொண்டார். உமா சந்திரன் அவர்களது அற்புதமான குறுநாவலின் அசாத்திய திரை வடிவம் வெற்றி பெற்றதில் பாலுவின் பங்களிப்பு முக்கியமானது.அரிதாக் வாய்க்கும் திரை நட்சத்திரங்களில் ஒன்றான ஷோபாவின் வருகையும், மின்னல் வேக மறைவும் திரை ரசிகர்கள் மறக்க முடியாதது. பாலு பேசப்படும் போதெல்லாம் அழியாத கோலமாக ஷோபா நினைவு வந்து போவது தவிர்க்க முடியாதது.

    குழந்தைகளை அவர் எத்தனை நேசித்தார் என்பதை, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சைதன்யா என்ற குழந்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வம்சி வெளியீடாகக் கொண்டு வந்த நேரத்தில், அவளிடம் ஆட்டோகிராஃப் பெற்றதில் விளங்கிக் கொள்ள முடியும்.

    சர்வதேச நிகழ்வு ஒன்றிற்காக பிரதி எடுக்க தனது வீடு படத்தின் நெகடிவ்களை எடுத்துப் பார்த்தபோது ஒரு பிரதி கூட எடுக்க முடியாதபடி அவை சிதைந்து போயிருந்தது கண்டு அவர் மனம் அரற்றியது. ஒரு திரைப்பட காப்பகம் அமைக்க வேண்டும், படங்கள் கால காலத்திற்கும் பாதுகாக்கப் படவேண்டும் என்ற குரலை அதன்பின் ஓயாது அவர் எழுப்பிக் கொண்டிருந்தார். சக படைப்பாளிகளை, சக மனிதர்களை உளமார பாராட்டும் உள்ளம் வாய்த்திருந்த அவரது, ஜனநாயக உணர்வும் சமூக பிரக்ஞையும் பெருமிதம் கொள்ளத் தக்கது.

    தமிழக அரசின் சிறப்புத் தணிக்கை சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய திரைப்பட பாதுகாப்பு சிறப்பு மாநாட்டு மேடையில், மிக எளிமையாக ஓட்டப் பட்டிருந்த ஒரு சுவரொட்டி அவரை அதிர வைத்தது. ஒளிப்படக் கருவியை ஆக்டோபஸ் ஒன்று ஆக்கிரமிப்பது போன்ற அந்த உருவகத்தின் தீப்பொறியில் தொடங்கியது அவரது உரை. எனது ஆயுதத்தை எந்த ஆகடோபசும் கைப்பற்றுவதை நான் அனுமதிக்க முடியாது என்பது அனைவரது கூட்டு பிரகடனமாக அன்று உருவெடுத்தது.

    படம் எடுக்க பிரும்மாண்ட சாதனங்கள் தேவை இல்லை, யாரும் இந்தத் துறைக்குள் வரலாம் என்ற அழைப்பை அவர் இறுதி மூச்சு வரை விடுத்துக் கொண்டே இருந்தார். புதிய படைப்பாளிகளை மனதார ஆசீர்வதித்தார். மாற்று திரைப்படத்திற்கான இடது சாரி முற்போக்கு இயக்கத்தின் குரலுக்கு அவரது ஆதரவு மகத்தானது. தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் கலைஞரான அவரது கடைசி படம் சம காலத்தின் பிரதிபலிப்பையும், சமூக மாற்று சிந்தனைக்கான ஆர்வத்தையும் கலந்து கொடுத்த பரிசோதனை முயற்சி என்று பேசப் படுகிறது. எல்லாப் பண்டங்களையும் தமதாக்கிக் கொள்ளும் சந்தைப் பொருளாதார மூலதனத்தின் கைகளில் திரைப்படங்களும் சிக்கி மூச்சுத் திணறும் சம காலத்தில் இப்படியான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டது கூட ஒரு கலகக் குரல் என்றே தோன்றுகிறது.

    சென்னை சாலி கிராமத் தெருக்கள் கொள்ளாது திணறிய கூட்டத்தின் நடுவே புறப்பட்ட அவரது இறுதிப் பயணம், வேதனையான அந்தக் கணத்திலும், அவரது கனவுகள் வேறு கண்கள்வழி தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையை வழங்கவும் செய்தது.

    மூன்றாம் பிறை திரைப்படத்தை ‘சத்மா’ என்ற பெயரில் இந்தியில் அவர் எடுத்தபோது, க்ளைமாக்ஸ் காட்சியை இயல்பாக எடுக்கக் காத்திருக்கையில் மழை பொழியத் தொடங்கியதாம். இது ஒரு மந்திரத் தருணம் என்று அவர் வியப்போடு சொன்னதாக கமல் ஹாசன் (பிசினஸ் லைன்) தமது அஞ்சலிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். மந்திரம் போல் காட்சி மொழி இன்பம்தான் அவரது உள்ளத் தேடல் கடைசி வரையிலும்!

    பிரியாவிடை அளிக்கிறது ரசிக உலகம், எங்கள் இனிய பொன் நிலாவே உங்களுக்கு!

    நன்றி: தீக்கதிர்

    ********

    மரணிக்கப் போவது எங்கள் உடல்கள், நாங்கள் அல்ல !

    “………எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும், இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும், எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! “
    – பாலு மகேந்திரா (வலைத் தளத்திலிருந்து)

    Share
  • பரம்பொருள் பாமாலை-1

     

    முன்னுரை :

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வட்டூர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோர்ப்பாளையம் என்னும் சிற்றூரில் எழுந்தருளி இருக்கும் வைரவநாதமூர்த்தியின்(பைரவர்)திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானைப் பற்றிப் பாடுவதாக மனதில் நினைத்து “பரம்பொருள் பாமாலை” என்னும் இச்சிறு தொகுப்பை எழுதுயுள்ளேன்.

          சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மோர்ப்பாளையம், சேலம் மாவட்டம்  சங்ககிரி வட்டத்தில் உள்ள மோரூர் மகுடஞ்சாவடி அருகில் உள்ள கூடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மூன்று அடியார்கள் ஆற்றில் நீராடச் சென்ற போது மரப்பேழை ஓன்று மிதந்து வரக் கண்டனர். அந்தப் பேழையைத் திறந்து பார்த்த பொழுது உள்ளே மரத்தினால் ஆன ஒரு அழகான பைரவர் சிலையைக் கண்டனர். இறைவனே தங்களைத் தேடி வந்ததைக் கண்டு மூவரும் பேருவகை அடைந்து இறைவனை வணங்கினர்.

          பின்னர் இறைவனின் திருவுருவச் சிலையை மோர்ப்பாளையம் கொண்டு வந்து கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சிவன் இராத்திரி தினத்தன்று மூன்று ஊர் மக்களும் ஓன்று கூடி இறைவனுக்கு விழா எடுத்துக்  கொண்டாடி வணங்கி வருகின்றனர். தைத் திங்கள் அமாவாசை தொடங்கி, மாசித் திங்கள் அமாவாசை வரை ஒரு மாதம் விரதம் இருந்து அதன் இறுதியில் மகாசிவன் இராத்திரி விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் ஒரு பகுதியாக தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்றான கூத்துக் கலையை வளர்க்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. ஆதிநாதர் என்னும் வம்சத்தைச் சேர்ந்த இம்மக்களால் இறைவனுக்கு, மாதந்தோறும் தொடர்ந்து அட்டமித் தினத்தன்று பூசனைகள் செய்யப்பட்டு அடியார்களுக்கு திருஅமுது வழங்கப்பட்டு  வருகின்றது. கடந்த கி.பி.2001ம் ஆண்டு இறைவனின் அருளினாலும் சமயப் பெரியோர்களின் தொடர் முயற்சியினாலும் இக்கோயில் புனரமைக்கப்பட்டு திருக்குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

     

    பரம்பொருள் பாமாலை

    காப்பு:

     

    சுழல் குழல் கரத் தனின்,

    திகழ் பெருங் கருணை யால்,

    குழல் திகழ் நிலவுடை யோன்,

    எழில் புகழ் புனைந்திடு வோம்!

     

    Share
  • பேராற்றல் மிக்க கூர் ஒளிக்கற்றை தூண்டி பேரளவு அணுப்பிணைவு சக்தி உற்பத்தி

    Laser induced fusion

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    [How A Fusion Power Plant Works]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GbzKFGnFWr0

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4gRnezJNFro

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dnTzFTjlwvw

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=r3zHh81HIAM

    http://www.engineeringchallenges.org/cms/8996/9079.aspx

    பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
    கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன்
    கணிதச் சமன்பாடு மூலம் !
    பிளவு சக்தி புரட்சி மாறி
    பிணைவு சக்தி பிறக்கப் போகுது
    கதிரியக்க மின்றி
    வீட்டு விளக்கேற்ற !
    சூரியன் போல்
    எளிய வாயு எரிந்து
    வலிய வாயுவாய் மாறும் !
    யுரேனியச் சுயப் பிளவில்
    ஈராகப் பிரிந்து
    வெப்பசக்தி உண்டாகும் !
    பேரளவு உஷ்ணத்தில் இயங்கும்
    சூரிய ஒளிப் பிழம்பு
    பேருலை போல்
    அணுக்கருத் தனிமங்கள்
    இணைந்து
    பிணைவுச் சக்தி
    பேரளவில் வெளியேறும்
    கூரிய
    ஒளிக்கற்றை தூண்டி !

    ++++++++++++++++

    fusion-reaction

    “பூமியில் நாம் சூரிய அணுப்பிணைவு சக்தியை மீண்டும் கட்டுப்பாட்டு முறையில் ஆக்க முடிந்தால் அது மனித நாகரீகத்தின் ஒரு பூத எட்டு வைப்பாக இருக்கும்.”

    சாந்த் ஜோஸி [Chand Joshi, பேராசிரியர், மின்சக்தி பொறியியல் துறை, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    மனித இனத்திற்கு எரிசக்தி தேவையைப் பற்றித் தீவிரமாகச் சொல்லப் போனால், ஏதோ ஒற்றை மூலத் தேவையாகவோ அல்லது எளிய முடிவு ஒன்றாகவோ இருக்காது ! மின்சக்தி சிக்கனச் சேமிப்பு முறை மட்டும் நமது பிரச்சனைகளைத் தீர்வு செய்யும் என்றோ அல்லது சூரிய கதிர்ச்சக்தி தீர்க்கும் என்றோ நாம் எதிர்பார்க்கக் கூடாது !

    சாந்த் ஜோஸி [பேராசிரியர், மின்சக்தி பொறியியல் துறை, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]

    Laser induced fusion power

    அணுப்பிணைவு சக்தி ஆக்கத்தில்  விஞ்ஞானிகள் செய்த சமீபத்தைய சாதனை

    கடந்த 40 ஆண்டுகளாக உலக விஞ்ஞானிகள் இணைந்து கதிரியக்கம் குன்றிய பேரளவு அணுப்பிணைவு சக்தியைச் சூரியன் போல் பூமியில் கட்டுப்பாட்டு முறையில் தொடர்ந்து உற்பத்தி செய்ய மெய்வருந்தி உழைத்து வருகிறார். 2013 செப்டம்பர் மாதத்தில் காலிஃபோர்னியா தேசீயக் கனல் தூண்டு சாதனத்தில் [National Ignition Facility (NIF)] பௌதிக விஞ்ஞானிகள் கூர் ஒளிக்கற்றை தூண்டி [Laser Induced Fusion ] அணுப்பிணைவு நிகழ்த்திப் பேரளவு வெப்பசக்தியை முதன்முதல் உண்டாக்கி ஒரு வரலாற்று மைல் கல்லை நட்டிருக்கிறார். அணுப்பிணைவு உற்பத்தி ஆராய்ச்சியில் இது மாபெரும் ஒரு சாதனையாகக் கருதப் படுகிறது.

    நமது சூரியன் இவ்வித அணுப்பிணைவு முறை ஒன்றில்தான் பேரளவு வெப்பசக்தியை பல பில்லியன் ஆண்டுகளாக வெளியேற்றி வருகிறது. அதி உச்ச வேகத்திலும் அதி உச்ச உஷ்ணத்திலும் சேர்ந்து பேரழுத்த நிலையில் உள்ள இருவித ஹைடிரஜ ஏகமூல [Hydrogen Isotopes]  வாயுக்கள் பிணைந்து ஹீலிய அணுவாக மாறிப் பேரளவு வெப்ப சக்தியை உண்டாக்குகிறது. பிரச்சனை என்ன வென்றால் ஒரே சமயத்தில் அதிக அழுத்தம், உச்ச உஷ்ணம், மிகை வேகம் தொடர்ந்து கட்டுப்பாடுடன் ஓர் உருகாத அரணுக்குள் நிலையாய்க் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    fusion process

    தேசீயக் கனல் தூண்டு ஆய்வகத்தில் பேராற்றல் மிக்க 192 கூர் ஒளிக்கற்றைக் கதிர்கள் சிறு துண்டு எருத்திரட்டில் மோதும்படி அமைக்கப் பட்டன.  எருத்திரட்டில் ஹைடிரஜன் ஏகமூலங்கள் இரண்டு [Deuterium + Tritium] கலக்கப் பட்டன !  எருக்கரு உள்வெடிப்பு நேர்ந்ததும், உஷ்ணம் 10 மில்லியன் டிகிரிக்கு [செல்சியஸ்] மேல் ஏறி அழுத்தமும் மிகையாகி, சூரியன் போல் அணுப்பிணைவு சக்தியை வெளியேற்றும். மற்றும் வெப்ப சக்தியோடு விளைவில் ஆல்ஃபா துகளும், நியூட்ரானும் காணப்படும்.

    2014 பிப்ரவரியில் உண்டாக்கிய அணுப்பிணைவு சக்தி சென்ற 2013 செப்டம்பரில் விளைவித்ததைத் தவிர 4 மடங்கு மிகையானது.  இந்த அரிய சாதனை கூர் ஒளிக்கற்றை முறைக்கு முக்கியத்துவத்தை தந்துள்ளது. சென்ற 2013 நவம்பரில் கூர் ஒளிக்கற்றைக் கணைகளுக்கு இரட்டிப்பு ஆற்றல் தந்து அந்த இயக்கம் [2×10^-8 seconds] குன்றிய கண்ணிமைப் பொழுது நீடித்துள்ளது.

    Laser Ignition system

    கூர் ஒளிக்கற்றைக்கு இட்ட ஆற்றல் : 500 மெகா ஜூல்ஸ் மின்சக்தி.

    கூர் ஒளிக்கற்றைக்கு விளைந்த ஆற்றல் 1.9 மெகா ஜூல்ஸ் மின்னாற்றல் [500 x 10^12 வாட்ஸ்]

    எழுந்த அழுத்தம் : 150  கிகா பார்ஸ் [giga bars]

    உண்டாக்கிய உஷ்ணம் : 50 மில்லியன் டிகிரி செல்சியஸ்

    அணுப்பிணைவில் பெற்ற பயன்பாடு : 17 மெகா ஜூல்ஸ் வெப்பசக்தி.

    ஒளிக்கற்றை அணுப்பிணைவு முறைப்பாட்டில் எழும் பிரச்சனைகள் :

    1. ஒளிக்கற்றை முறைப்பாட்டில் விளையும் எக்ஸ்-ரே கதிர்கள் சமநிலையில் எருக்கருவில் ஒளியேற்றப் பரவ வேண்டும். தாறுமாறாகப் பரவினால், எருக்கரு தாறுமாறாய் அழுத்தமாகி, இயக்கம் உடனே நின்றுவிடும்.

    2. ஒளிக்கற்றை உண்டாக்கப் பெறும் அணுப்பிணைவு சக்தியை விடப் பேரளவு பேராற்றல் மின்சக்தி தேவைப் படுகிறது. இது வரவை விடச் செலவை மிகை யாக்குகிறது !

    3. விளைவில் நியூட்ரான் காணப்படுவதால், சிறிதளவு கதிரியக்கம் தாக்குவதைத் தவிர்க்க முடியாது !

    Laser Fusion Experiment

    நாங்கள் செய்யப் போவது இதுதான்:  ஒரு கட்டுப்பாட்டு முறையில்  எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet]  Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி.   அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet]  அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.

    ஜான் எட்வேர்ட்ஸ்  [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]  

    எக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய  ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது.   ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room]  தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது. ஜான் எட்வேர்ட்ஸ்  [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]

    Fusion Power Progress

    பிண்டம் ! சக்தி ! அணுப்பிணைவு சக்தி !

    இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் !  அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.

    கட்டுரை ஆசிரியர் ”

    அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”

    ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)

    Indian fusion program

    அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை

    காலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில்   [Dept of Energy’s Lawrence Livermore National Lab]  [National Ignition Facility- NIF]    ஆராய்ச்சி யாளர்கள்  அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர்.   தேசீய அணுப்பிணைவுத் தூண்டல்  யந்திரத்தில் [National Ignition Facility – NIF]  ஒருமித்த ஆற்றல் மிக்க 192  லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி  [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர்.   இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும்.  அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார். சூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர்.  இவ்வரிய தகவல் செய்தி,  பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில்  [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.   ஆயினும் அணுப்பிணைவு மின்சக்தி  உற்பத்தி வாணிப நிலைக்கு வர,  இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.

    Fusion power -4

    சுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :

    1.  விசைகள் சமநிலைப்பாடு [Equilibrium of Forces]  :

    பிளாஸ்மா  ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும்.  இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும்.   இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு.   அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு.   அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.

    2.  பிளாஸ்மா நீடிப்பு  [Plasma Stability] :

    பிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு  முதல் வடிவத்துக்கு மீள வேண்டும்.   இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும்.   பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.

    3.   துகள்கள் நகர்ச்சி  [Transport of Particles] :

    துகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும்.    அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement]. அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம்.  எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மி விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

    “சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”

    பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”

    பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

    “கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”

    வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)

    “அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

    ” நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)

    பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்

    முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !

    Fusion Reactor -1

    பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

     

    அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்

    வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றி விழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப் பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !

    அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

    — நிலைய மின்சார உற்பத்தி : 500 MW

    — நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).

    — காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter

    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.

    — பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்

    — பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)

    — பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.

    — வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)

    — நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW

    — நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)

    அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?

    சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி

    மிகையானது !அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவ தற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?

    1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.

    2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.

    3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.

    4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம். மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:

    1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)

    2. முடத்துவ முறை (Inertial Method).

    3. காந்தத் தளமுறை (Magnetic Method).

    Fig 1 Fusion Reactor

    சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

    சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளி யாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?

    1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

    அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?

    ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.

    டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி

    Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy

    இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை! பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

    மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது! அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது.

    இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

    அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!

    பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!

    ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத் தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.

    அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

    அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத் துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

    வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !

    ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

    ++++++++++++++++++++++++++++++

    தகவல்

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

    20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)

    21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff

    22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section World Atom Staff Report.

    23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.

    24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html (அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)

    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html (இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)

    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)

    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html (கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)

    29.  http://www.popularmechanics.com/science/energy/next-generation/is-fusion-power-finally-for-real  [June 21, 2011]

    30.  http://world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/#.UkceJNNza9I  [August, 2013]

    31.  http://www.opli.net/opli_magazine/eo/2013/laser-fusion-experiment-yields-record-energy-at-llnl.aspx  [August 26, 2013]

    32.  http://en.wikipedia.org/wiki/National_Ignition_Facility   [September 17, 2013]

    33.  http://en.wikipedia.org/wiki/Fusion_power   [September 27, 2013]

    34. http://www.world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/ [December 2013]

     

    [Message clipped]  View entire message

    How will a fusion power plant work?

    Michio Kaku: Fusion Really Is 20 Years Away

    Inside ITER: “Preparing to Burn” (Steve Cowley)

    Fusion Plasma Physics and ITER – An Introduction (1/4)
    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​20​​

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    சீதாயணம் படக்கதை – 20​

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

    Seetha42
    Seetha43
    தகவல்:

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

     

    Share
  • நானறிந்த காதல்!

    ஷஹான் நூர்

    அன்பு, பாசம், பிணைப்பு, நேசம் இவை போன்ற உணர்வுகளின் ஒரு கவர்ச்சிகரச் சொல்லாடலே காதல் எனப்படுவது. இந்த அளவுகோலில் இருந்துதான் காதலை நாம் நோக்க வேண்டும்.

    “காதல் எங்கு இருக்கிறதோ, அங்குதான் வாழ்க்கை இருக்கிறது” என்று கூறினார் அண்ணல் காந்தி அவர்கள்.

    “காதல் பேய் மாதிரி, எல்லோரும் அதைப் பற்றி பேசுவார்கள். ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்” என்று ஒரு வரைவிலக்கணம் தருகிறார், திரு.லே-ரோச்சி ஃபோகால்ட்.

    இப்படித்தான் நாம் காதலைப் பார்க்க வேண்டியுள்ளது. அன்பு என்பதின் ஆகச்சிறந்த பரிணாமமே காதல். இப்பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அத்துனை உயிர்களும் காதலால் பிணையப்பட்டுள்ளவைகளே. பரந்து விரிந்த இப்பூமியில் எங்கும் வியாபித்துள்ளது காதல். நமக்கெல்லாம் அநேகமாக இது மனித இனத்திற்க்குண்டான ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. இது முற்றிலும் அறிவுக்கு ஒவ்வாத ஒரு பார்வை. காதலானது, பூக்கும் மலருக்கும், செடிக்கும் இடையில் உள்ளது. ஒரு பறவைக்கும் அதன் குஞ்சுக்கும், முளைக்கும் தாவரத்திற்க்கும், மண்ணிற்க்கும், இப்படித்தான் இன்ன பிற விலங்குகளுக்குமாக காதல் ஊன்றி இருக்கிறது. காதல் என்பது வெறும் ஊடல் சார்ந்த நிகழ்வல்ல, அது உயிரின் நுட்பம்.

    பலரும் இவைகளை மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். இளம் பருவ, இரு பாலினர்களுக்கிடையே உருவெடுக்கிற சில அற்பத் தேடல்களுக்குக் கூட இங்கு காதல் ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. ஆனால் ஒரு தாய்க்கும், சேய்க்குமான பாசமோ, சகோதரர்களுக்கிடையேயான பந்தமோ, நல்ல நட்புகளுக்கு இடைப்பட்ட உறவோ இங்கு அவ்வாறாகப் பார்க்கப்படுவதில்லை, குறிப்பாகக் காட்டப்படுவதில்லை.

    காதல் எனும் ஒரு இயற்கை உணர்வை, ஆபாசமாகச் சித்தரிப்பதில் பெரும்பாலும் இன்று ஊடகங்கள் முன்னனியில் உள்ளன. அதன் அசுர வளர்ச்சியில் இருக்கும் சினிமா இன்றியமையாதப் பங்கினை ஆற்றுகிறது. திரைப்படங்கள் யாவுமே இலக்கியங்களின் பிரதிபலிப்புகளே. இலக்கியங்கள் யாவும் வாழ்வின் பிரதிபலிப்புகளே. ஆனால் அவ்விலக்கியங்கள் எடுத்து இயம்புகின்ற நற்க்-காதல் உறவுகளை ஊடகங்கள் மறந்து விடுகின்றன. ஒரு பெரும் கலாச்சார, நாகரீக அழிவுகளுக்கு வித்திடும் மேலை நாடுகளின் கவர்ச்சிகள் இங்கு காதலாகப் பிண்ணப்படுகிறது.

    பிப்ரவரி-14 என்கிற தினமே கூட காதலை முன்னிலைப்படுத்தும் நிகழ்வாக இல்லை. காதலுக்கு என்று எந்த தினமும் கிடையாது, அது தேவையுமற்றது. ‘வெலடைன்ஸ் டே’ என்பது முழுக்க, முழுக்க வணிகப் படுத்தும், வாழ்த்து அட்டைகளை சந்தைப் படுத்தும் ஒரு இலாப நோக்குடன் பரப்பப்பட்ட ஒன்றே. உலகில் கிருஸ்த்துமஸ் பண்டிகைகளுக்கு, அடுத்தாக வாழ்த்து அட்டைகள் அதிகம் விநியோகம் ஆவது பிப்ரவரி14 நிகழ்வில்தான் என்று, அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு அறிக்கை கொடுக்கிறது. இங்கு சமூக அமைப்பு அப்படி கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதில் ஆளும் அரசுகளின் பெரும் சதிகள் பொதிந்துள்ளது என்பது அரசியல். இங்கு இவ்வளவான விசயங்களுக்குள் நுழையத் தேவையில்லை. கிடைப்புகளிலே காதல் ஒரு அழகான கிடைப்பு.

    நான் மேற்க்கூறியது போன்று, காதல் என்பது பருவம் எட்டிய ஆண்,பெண் இருபாலருக்கு இடையேயான மோகமாகச் சித்தரிக்கப்படுவிட்டது. ஆனால் அது ஒரு காதலின் வகையே அன்றி. அதுவே காதல் அல்ல, மேலும், அப்படியான காதல் வகையிலே, இங்கு அது அதன் அளவீடுகளைக் கடந்துதான் பயணிக்கிறது, இளைய வட்டங்களின் மத்தியில்.

    “மாறவேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுதும், மாறாதிருப்பதுதான் காதல்” என்கிறார், ஷேக்ஸ்ஃபியர்.

    “என்றும் மாறாத காதல், பார்த்ததும் வருவதில்லை” என்கிறார் கிறிஸ்டோபர் மார்லோவ்.

    “கடுகளவு நம்பிக்கையே, காதல் பிறப்பதற்க்கு போதுமானது” என்கிறார், ஸ்டென்தாஸ்.

    இவைகள்தான் வயது வந்த பருவத்தினருக்கு இடையே மலரும், மனம் மாற்றி, திருமணம் முடித்து வாழ முற்பட எண்ணி நிகழும் உயிர் கலப்புச் சம்பவமான காதலின் ஒரு வகை. மேற்ச் சொன்னவர்கள் சிறந்த தத்துவியலாளர்கள், இவர்களின் கூற்றும் காதலை இப்படித்தான் சித்தரிக்கின்றது. ஆனால் இன்றுள்ள காதல் என்பது இப்படியானதாகவா உள்ளது என்பதனை நான் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. அதே சமயம் மேற்க்கூறியவைகளைத் தவிர்த்து, வெறுமனே உடல் உராய்வுகளில் தொடர்வது காதலல்ல. காமத்தின் தொடக்க நிலைகளை காதல் என்று அறிந்து வைத்திருக்கும் மடமை. அதேசமயம் காமம் அற்று காதலில்லை. காமம் மட்டுமே காதலுமில்லை. ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியது காமம் என்ற சொல்லாடல் என்பது ஒருவகையான இன மோகம். இது காதல் இல்லாதவனிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காமம் மட்டும் தேடி அலையும் மாந்தரிடத்திலோ, அற்ப பொருள்களுக்காக உடல் விற்க்கும் மாந்தரிடத்திலோ காதல் ஒரு நாளும் வராது, இருப்பதில்லை, என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் காதல் புனிதப்படுகின்றது.

    திருமண பந்தத்திற்க்குப் பிறகு நிகழ வேண்டிய பலவும், காதல் என்கிற பெயராலே பரிமாற்றிக் கொள்வதன் விளைவு, திருமணத்திற்குப் பிறகு அவைகளெல்லாம் சலிப்படைந்துவிடுகிறது. சதை, சரும ஈர்ப்புகளால் கொள்ளப்படும் காதலானது, அதன் தேவை முடிந்தவுடன், கலங்கப்பட்ட காதலும் முடிந்துவிடுகிறது. மேற்ச்சொன்ன கிறிஸ்டோபர் மார்லோவின் கருத்தினை நான் மீண்டும் நினைவு படுத்துகிறேன். அநேகப் பேரின் காதல்கள் பார்த்த மாத்திரத்தில் வந்து விடுகின்றது. இது அப்பட்டமாக வயதின் ஈர்ப்பே அன்றி வேறில்லை. அதேசமயம் மணவாழ்வு சிறக்க வேண்டுமெனில் இரு உள்ளங்களும், தங்களின் எதிர்பார்ப்புகளைக் கொண்டே துணை அமைக்க வேண்டும். அதில் வெறுமனே உடல் கட்டமைப்பு, அழகு, வெளுப்பு போன்றவைகளை எதிர்நோக்கும் அதே நேரம் குணம் என்ற ஒன்றையும் சேர்த்தே நோக்க வேண்டும். இவைகளில்தான் மரணிக்கும் வரையில் அப்பந்தமானது நீடிக்க வழி வகுக்கும். அதே சமயம் இரு மனங்களும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர்களின் முடிவுப்படி தலையசைப்பது, எதிர்காலத்தில் ஆழ்பெரும் இன்னல்களை உருவாக்கிக் கொடுக்கும். காதல் காலத்தில் காமம் தவறு, திறுமணத்திற்க்குப் பிறகு காமம் மட்டுமே தவறு.

    இறுதியாக காதலைப் பற்றி ஷேக்ஸ்ஃபியரின் இந்தக் கூற்றை வைக்கிறேன்.

    “காதலிக்காதவர்கள் என்று யாருமில்லை. தங்கள் காதலை வெளிப்படுத்தாதவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

    இதுதான் உண்மை, காதல் அப்படி எங்கும் எவரிடத்திலும், எதன் மீதும் பற்றி வியாபித்திருக்கிறது. வயது எய்திய பாலினருக்கு இடையே மலர்வது மட்டுமல்லக் காதல், அது ஒவ்வோர் வயதினரிடத்தும், பிறப்புகளினிடத்தும், தோன்றிய ஓர் உடன் பிறப்பு. அதில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகையே நாமெல்லாம் பேசிக் கொள்கிற ஆண்,பெண் உறவான காதலென்பது. இறைவனைக் கண்ணால் காணாமல் நாம் வைக்கின்ற நம்பிக்கையில் இருப்பதும் கூட ஒரு வகையான காதலே.

    ஆக இப்படியாக, காதல் எனும் ஓர் அழகிய இயற்கை வரத்தினை வகைப்படுத்தலாம். இன்னும் நீளமாகச் செல்லவோ, விரிவாகச் சொல்லவோ நிறைய இருந்தாலும், காதலை அனுபவித்தவர்களுக்கு, நுகர்ந்தவர்களுக்கு இச்சிறு எழுத்துக் கோர்வைகளே ஓர் விளங்கியல் உணர்வை தருமென கருதுகிறேன்.

    Share
  • வார ராசி பலன்கள்:17.02.14-23.02.14

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும் .

    ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள் புதிய உணவு வகைகளை விலக்குவது நலம். பெண்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித் தனமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலம் சுமாராக இருக்கும். இருந்தாலும் பித்தம் போன்ற  உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.   பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய வேண்டிய பலனோடு  எதிர்பார்த்த  பாராட்டும், புகழும்  தானே வந்து  சேரும்

    மிதுனம்:   இந்த வாரம்  கலைஞர்கள்   மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் இறங்கும் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவில் விஷயங்கள் அமையாமல்,  சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும் வரை பொறுமையாகசெயல்படுவது அவசியம்.. பொதுவாக இந்த வாரம் மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.     பெண்கள் பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும்.

    கடகம்: முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள்   அவ்வப்போது  வழக்குகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள்  உடன்  இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும்.   லாபத்தைப்பெற வியாபாரிகளும் பணியாளர்களோடு  சேர்ந்து  உழைக்க வேண்டியது இருக்கும் . வேலையில் இருப்பவர்கள் புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்  பளு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும்   கலைஞர்கள்   சக கலைஞர்களிடம் தங்கள் கோப தாபத்தைக் கொட்ட வேண்டாம்.

    சிம்மம்: பொருட்களை வாங்கி விற்பவர்கள் தேடி வரும் வாய்ப்புகளை வியாபாரமாக, உங்கள் வாய்ச் சொல்லால் மாற்றி விடுவீர்கள். உங்கள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல் உடனுக்குடன் சுமூகமான முறையில் முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். மாணவர்கள் எந்த சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருங்கள்! வாழ்க்கை வசந்தமாகும். பண விவகாரங்களில் பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின்புலம் பற்றி அறிந்து செயல்பட்டால், சட்டச்சிக்கல்களுக்கு இடமிராது. நெருங்கிய நண்பர்களுடன் வாக்குவாதத்தில் இறங்குவதைத் தவிர்த்துவிட்டால், நட்பின் இழை விலகாமலிருக்கும்.

    கன்னி: பணியில்  இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு , இந்த வாரம் அனுகூலமான  தகவல் வந்து சேரும்.   பெண்கள் இல்லத்தில் அவ்வப்போது தோன்றும்  சிறிய பிரச்னைகளை, பெரிதாக வளரவிடாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்  .  தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைப்பதால், மாணவர்கள் புதுத் தெம்புடன் திகழ்வார்கள்.  கலைஞர்கள்  உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும்.

    துலாம் : மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமலிருப்பது நல்லது. வெளி இடங்களில் கவனமாக நடந்து கொள்வதன்  மூலம் கலைஞர்கள் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதைத் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பி விடலாம்.  . சிறு தொழில் புரிபவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றியோடு, வேண்டிய லாபமும் வந்து சேரும் . பெண்கள் குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும்.

    விருச்சிகம்; பெண்கள் எப்போழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறலாம்: புதிதாய் வேலையில் சேர்ந்தவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள்.  இந்த வாரம் கலைஞர்களுக்கு  புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் சிக்கனமாக இருப்பது அவசியம். . வியாபாரிகள் இது வரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக தொழிலாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பார்கள்.

    தனுசு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாக குறைந்து விடுவதால், வியாபாரிகள் விரும்பியவாறு விரிவாக்கப் பணிகளை செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.  இந்த வாரம் மாணவர்கள் அரசு அளிக்கும்  சலுகைகளை  பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்னைகளும் தீர்ந்து விடும்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள கலைஞர்களுக்கு உழைப்பு கை கொடுக்கும்.   வேலையில் இருப்பவர்கள் பணிகளைத் திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்த போதிலும் கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் .  பெண்களுக்கு  மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மகிழும் வாய்ப்பு  வந்து சேரும்.

    மகரம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.   தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் நடிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    கும்பம் இந்த வாரம்  மாணவர்களுக்கு  புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, என்று பொழுது போகும்.  பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து இணக்கமாக நடந்து கொள்வார்கள்.   பொது வாழ்வில் இருப்பவ ர்களுக்கு  பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும்  . கலைஞர்கள் எந்த சூழலிலும் அமைதிக் குறைவு, பதற்றம் ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம் .  வியாபாரிகள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ,இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம். குடும்ப விவகாரங்களில்  பெண்கள் பிறரை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

    மீனம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும்.. மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும்   பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது.  பெற்றோர்கள், கல்லூரி செல்லும்  பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்

    Share
  • 25. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

    25. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம் (2), சுவிஸர்லாந்து.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    க்ருவெயர் சீஸ் எவ்வகையில் மக்களின் உணவுப் பயன்பாட்டில் இடம்பெருகின்றது எனப் பார்ப்போம்.

    க்ருவெயர் சீஸ் மெலிதான இனிப்புச் சுவையுடன் சிறு துவர்ப்பும், க்ரீம் சுவையும் கலந்தது. இதனை தனித்தனி துண்டுகளாக, வட்ட வடிவில் சற்றே பெரிதாக, ப்ளாஸ்டிக் சுற்றப்பட்டு தனித்தனியாக வெட்டிய சான்வீட்சில் பயன்படுத்தக் கூடிய துண்டுகளாக என விதம் விதமாகவே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றது. காலை, மதிய, மாலை, இரவு உணவு என அனைத்துக்குமே பயன்படுத்தக் கூடிய ஒரு சீஸ் இது.

    சிலர் இரவு உணவு சாப்பிட்டு முடிந்து டிஸெர்ட்டாகவும் இதனைச் சாப்பிடுவதுண்டு. அப்படி சாப்பிடும் போது அதனுடன் சிவப்பு வைன் அருந்துவதும் வழக்கம். க்ருவெயர் சீஸ் சமையலிலும் பயன்படுத்தக்கூடியதே. உதாரணமாக நூடுல்ஸ், அல்லது காய்கறி பேக்கிங் செய்யும் போது அக்கலவையில் இதனைச் சேர்க்கலாம். உணவில் உள்ள ஏனைய பொருட்களின் சுவையையும் வாசனையையும் மறைக்காது இது உணவிற்கு மேலும் சுவை கூட்டும் தன்மை கொண்டது.

    பண்டைய காலத்திலிருந்து சீஸ் என்பது ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கத்தில் இருப்பது. அதிலும் பண்டைய ரோமானியர்களின் சீஸ் தயாரிப்புக் கலை என்பது புகழ்பெற்றது. இதற்கு உதாரணமாக அதிலும் இந்த க்ருவெயர் சீஸை தொடர்பு படுத்தி ஒரு கதையும் சொல்வர். 2ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு ஆட்சி செய்த மன்னன் அந்தோன், சீஸை சாப்பிடும் தன் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் சாப்பிட்டதால் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இறந்தாராம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

    1115ம் ஆண்டில் க்ருவெயர் பகுதி அமைந்திருக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட அரசைப் பற்றி சில ஆவணங்கள் உள்ளன. அதில் ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட என பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களில் க்ருவெயர் சீஸின் பெயரும் அடங்குகின்றது. இந்த க்ருவெயர் இருக்கும் ஃப்ரைபோக் கண்டோனில் இந்த சீஸ் விற்பனை 1249 வாக்கில் நடந்தைக் குறித்த ஆவணங்களும் கிடைத்துள்ளன. போர் காலங்களில் இந்த சீஸ் வணிகம் என்பது சற்றே தடைபெற்றிருக்கின்றது. உதாரணமாக 1618-1648 வாக்கில் நடைபெற்ற முப்பது ஆண்டு கால போர் சமயத்தில் க்ருவெயர் மட்டுமல்ல, ஏனைய பொருட்களின் விற்பனையும் கூட இக்கால கட்டத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

    அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களில் ஒன்று  ஒரு கிலோ க்ருவெயர் சீஸ் தயாரிக்க12 லிட்டர் பால் தேவைப்படுவதைக் காட்டுகிறது (2009)
    அருங்காட்சியகத்தில் உள்ள தகவல்களில் ஒன்று ஒரு கிலோ க்ருவெயர் சீஸ் தயாரிக்க12 லிட்டர் பால் தேவைப்படுவதைக் காட்டுகிறது (2009)

    மேலும் கிடைக்கின்ற ஆவணங்களின் படி 1740ம் ஆண்டில் இதன் தயாரிப்பாளர்கள் இந்த சீஸிற்கு பிரத்தியேக லேபல் அதாவது G லேபல் கேட்டு அரசாங்கத்திற்கு மனு அனுப்பி இதனைப் பெற்றிருக்கின்றனர். அக்கால கட்டத்திலேயே 2,500லிருந்து 3,000 டன் சீஸ் உற்பத்தி இருந்ததாக அறிய முடிகிறது. 1762ம் ஆண்டில் l’Académie Française அகராதி இந்தச் சீஸின் பெயரை (Gruyere) அகராதி சொற்பட்டியலில் இணைத்தது. மேலும் முக்கியமாக 1864ல் பாரீஸ் நகரில் நடைபெற்ற உணவு விற்பனையாளர்கள் சந்தையில் இந்த Gruyere சீஸ் கடைக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.

    இந்தச் சீஸின் வணிக வளர்ச்சி சுவிஸர்லாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே நிகழ்ந்த ஒப்பந்தத்தின் வழி உயர்வடைய ஆரம்பித்தது. இதன் வழி வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் சீஸிற்குத் தேவையான மாற்றங்களை உட்புகுத்தி குருவெயர் சீஸ் தன் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு படி வளர்ந்தது. 1860ம் ஆண்டு வாக்கில் ஃப்ரைபோக் கண்டோன் 254 க்ருவெயர் சீஸ் தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது என அறியும் போது ஒரு நாளைக்கு எவ்வளவு க்ருவெயர் சீஸ்கள் தயாரிக்கப்பட்டன என்று யூகித்துக் கொள்ளலாம்.

    க்ருவெயர் சீஸின் தயாரிப்பு இப்போது ஃப்ரைபெர்க் கண்டோனோடு நின்று விடவில்லை. அமெரிக்காவின் விஸ்கான்ஸின்னிலும் இதன் தயாரிப்பு நடைபெறுகின்றது. அடிப்படை தயாரிப்பு முறையிலிருந்து சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் ப்ரான்ஸ், கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இப்போது க்ருவெயர் சீஸ் தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன.

    தயாரிப்புப் பணிகள் (2009)
    தயாரிப்புப் பணிகள் (2009)

    க்ருவெயர் சீஸை தயாரிக்க முதலில் நன்கு சேகரிக்கப்பட்ட மாட்டுப் பாலினை 34 °C (93 °F) சீதோஷ்ணத்தில் வெண்கலப் பாத்திரத்தில் சூடாக்க வேண்டும். அதில் சேர்க்கப்பட வேண்டிய ஏனைய பொருட்களைச் சேர்த்து தயிரையும் சேர்த்து பின்பு பதப்படுத்த வேண்டும். பிறகு அச்சுக்களில் இந்தக் கலவை ஊற்றப்பட்டு கட்டியாகும்படி தயார் செய்ய வேண்டும்.

    பின்னர் இவை அறை சீதோஷ்ணத்தில் இரண்டு மாதங்கள் மரப்பலகையின் மேல் வைக்கப்பட வேண்டும். சில நாட்கள் இடைவெளி என்ற வகையில் இந்த சீஸ் திருப்பி வைக்கப்பட வேண்டும். இப்படி மூன்றிலிருந்து பத்து மாதங்கள் இந்த சீஸ்கள் இப்படி பதப்படுத்தப்படும் .பின்னர் இவை வெவ்வேறு தேவைக்கேற்ப வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்படும் வகை என்று விற்பனைக்குத் தயார் செய்யப்படும்.

    நான் நேரில் சென்று பார்த்து வந்த க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகத்திலேயே உணவகமும் சீஸ் விற்பனை நிலையமும் இணைத்திருக்கின்றார்கள். ஆக வரும் பொழுது எங்களுக்குப் பயன்படுத்த சில சீஸ்பேக்கட்களையும் வாங்கிக் கொண்டோம்.

    அருங்காட்சியக உணவகத்தில் (2009)
    அருங்காட்சியக உணவகத்தில் (2009)

    இப்போதும் சூப்பர்மார்க்கெட்களில் க்ருவெயர் சீஸ் நான் வாங்கும் போது எனக்கு இந்த அருங்காட்சியகம் சென்று வந்த நினைவுகள் என் மணக்கண்முன் வந்து செல்லும். அங்கு பார்த்த காட்சிகளும் க்ருவாயெர் நகரின் பசுமையும் அங்கு புல் தின்று நடைபயிலும் மாடுகளும் இன்றும் பசுமையாகவே என் நினைவில் இருக்கின்றன.

    இத்தொடரின் அடுத்த பதிவில் வாசகர்கள் உங்களை மேலும் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன். நாம் அடுத்து செல்லவிருக்கும் அருங்காட்சியகம் கூட வித்தியாசமான ஒன்று தான்.

    வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் இது. வருடத்தின் 365 நாட்களில் ஒரு நாள் மட்டுமே பார்க்கக் கூடிய இந்த அருங்காட்சியகத்தைக் காண உங்களுக்கும் ஆவல் இருக்கின்றது தானே..?

    Share
  • ஒரு தரம்.. ஒரே தரம்.. -கவிஞர் வாலி….

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு தரம்.. ஒரே தரம்..

    ஒரு தரம் ஒரே தரம் .. என்று தொடங்குகிறது.. பல்லவி.. சுமதி என் சுந்தரிக்காக.. காதல் சுகம் என்னவென்று அறியவிரும்புவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்! ஆயகலைகள் அறுபத்து நான்கு என்கிறார்கள்.. அது சரி .. காதல் என்பது எந்தக் கலை? ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்குத் தெரியாத பந்தம் வளர்த்து.. கணநேரப் பிரிவைக்கூடத் தாங்கமுடியாமல் வலிக்கிறதே.. அது எப்படி? இருவேறு உடல்களுக்குள் இயங்கிக் கொண்டிருந்த இதயங்கள் இடம்மாறித் துடிக்கிறதே அது எப்படி? சுகமான வேதனை இது என்றுகூட துணிவோடுக் கூறிவிடலாம்! மனதுக்குள் தென்றல் வீசுகிறதா? புயல்வீசுகிறதா? கேட்டுச்சொல்லுங்கள் சிலநேரம்!!

    எத்தனை எத்தனையோ காதல்பாடல்கள் கணக்கின்றி வந்து கொண்டுதானிருக்கின்றன! கவிஞர்கள் எழுதிக்கொண்டு தானிருக்கிறார்கள்! காலங்களைக் கடந்து சிலபாடல்கள் மட்டும்தானே முணுமுணுக்கப்படுகின்றன. அந்த ரகம்.. ஒரு தரம்.. ஒரே தரம்.. மெல்லிசை மன்னர் இசையின் அணுக்களை சுகம்பிரித்து நம் இதயங்களுக்கு ஏற்றுமதி செய்துவைத்த பாடல்! டி.எம்.எஸ். பி.சுசீலா கூட்டணியில் கொள்ளையின்பம் கொண்டுவரும் பாடல்!

    இந்தத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களும் கவியரசு கண்ணதாசன்.. இந்த ஒரு பாடல் மட்டும் கவிஞர் வாலி!!
    காதல் சுகத்திற்கும் மயக்கத்திற்கும் தகுந்த பாடலிது!!
    முதல் முறை மட்டுமே முன் அனுமதி வேண்டும்
    பின் உன் முனகல்கூட முழுஅர்த்தம் தந்திடும் என்று நான் எழுதிய கவிதை நினைவில்..

    அன்பின் ஆலாபனையா இது? காதலின் உச்சக்கட்டமா? காமதேவன் வாசல் திறப்பு விழாவா? கற்பனைக் கொடிகட்ட.. கவிஞரின் எண்ண ரதத்தில் எழுத்துப் படையல்! பெண்மை லாவகம் காட்ட.. ஆண்மை அதை ஆமோதிக்க.. வண்ணக் கவிதை வந்துவிழுகிறது!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்? (2)
    ஒருதரம்.. ஒரே தரம்..
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    பெண்மை என்றால் கண்மறைவாய்
    மூடிவைத்தால் சுவை இருக்கும்
    இருவருக்கும் முதல் மயக்கம்
    இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
    உள்ளதெல்லாம் அள்ளித்தந்தால்
    காலமெல்லாம் சுவையிருக்கும்!

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உறவு தேடும் கண்கள் பாவம்
    தனிமையில் உருகிடும்
    பார்வையின் என்னென்ன பாவம்
    உதவி செய்தால் என்ன பாவம்

    வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
    கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
    தொட்டுக் கொள்ள தடை செய்வாளோ
    தத்தித் தத்தி மெல்ல செல்வாளோ..
    தங்க வளைத் தளிர் கையோடு
    வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
    முத்துப் பந்தல் நகை தன்னோடு
    மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு..

    சித்திரத்தின் முகம் கண்டேனே..
    செம்பவளம் நிறம் என்றேனே..
    உண்ண உண்ண இதழ் செந்தேனே..
    உன்னிடத்தில் என்னைத் தந்தேனே..
    இல்லை எனும் இடை தள்ளாட
    மெல்ல மெல்ல உன்னை மன்றாட
    சொல்லச் சொல்ல தொட வந்தாயோ
    என்ன என்ன சுகம் கண்டாயோ

    ஒருதரம்.. ஒரே தரம்..
    உதவி செய்தால் என்ன பாவம்
    இருவரும் அறிமுகம்
    காதலில் வேறென்ன லாபம்?

    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ
    http://www.youtube.com/watch?v=T5r9QpQUzJQ

    திரைப்படம் – சுமதி என் சுந்தரி (1971)
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்கம் – சி.வி. இராஜேந்திரன்
    நடிப்பு – சிவாஜி, ஜெயலலிதா
    பாடல் – கவிஞர் வாலி

    ஒரு தரம் ஒரே தரம் – Oru tharam ore tharam

    Share
  • திருமால் திருப்புகழ் (4)

    கிரேசி மோகன்

    d8140d4c-c435-4932-87bb-666bf00fd18a_S_secvpf
    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன-தனதான….

    சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
    பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
    பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
    பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
    பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
    விரையுமதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
    தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
    அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
    ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
    தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
    பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
    கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
    சுகமுரளி இசைபழகு யதுவாசி  தோழனென
    வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
    விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
    சிறகுமையில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
    அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
    முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
    பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
    முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
    புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண்
    பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
    கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
    அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே!
    ————————-
    —–——————————————————————————————

    Share
  • தங்கக் குணத்தான்!

    தி. சுபாஷிணி

    tkc

    ரஸிகமணி டி.கே. சி. அவர்களின் 60 வது நினைவு நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை.

     

                              அன்னைபோல் என்னை

                                      அருவியில் நீராட்டி

                                   இன்னமுதும் பக்கத்(து)

                                      இருந்தூட்டி–தன்னொடு

                                   தங்கு தங்கு என்று சொன்ன

                                       தங்கக் குணத்தானை

                                   எங்கு நான் காண்பேன் – இனி

    என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தங்கக் குணத்தானைப் போற்றுகிறார்.யார் இந்தத் தங்கக் குணத்தான் என்று திகைக்கிறீர்களா?கவிமணியே  அவர் யாரென்று சொல்கிறார்.

                                                       கன்னித்தமிழ் போல் கம்பன் கவிபோல் 

                                                        மன்னும் பொதிகை மலையே போல்–பன்னுநம்

                                                          நாடு மகிழச் சிதம்பரநாத நண்பா       

                                                               நீடுநீ வாழ்க நிலைத்து

    கவிமணியை உலகறியச் செய்த பெருமகனார் தான் இவர்–டி கே  சிதம்பரநாத முதலியார்.இவரை ரஸிகமணி என்றுதான் அழைப்பர் தமிழுலகம். ரஸனையை வாழ்வின் அடிநாதமாய்க் கொண்டு வாழ்ந்த மாமனிதர்.நல்ல கவியென்றால் அதில் மூழ்கித்  திளைத்தவர் அவர்.’உணர்ச்சியோடு சொல் , இசை,கட்டுக்கோப்பு இவைகளோடு ஒத்த உருவத்தில் வந்துவிட்டதென்றாலே கவி; அதுவே அற்புத சிருஷ்டி’ என்று கவிமணியின் பாடல்களைப் பற்றிப் போற்றுவர் டி.கே,சி அவர்கள்

    15tkc

    டி,கே,சி   அவர்களின் புதல்வன் தீத்தாரப்பன்(தீபன்) அவர்கள் அகால மரணமடைந்ததைக் கேட்டு கவிமணி அவர்கள் ஒரு இரங்கற்பா எழுதி அனுப்பியிருந்தார், அதைப் படித்துவிட்டு தன் துக்கத்தையும் மறந்து “இத்தகைய வெண்பா தங்களால்தான் எழுத முடியும் கவீக்கும் உயிரையேக் கொடுக்கலாம் என்பது நம்மரபு.தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது.”என்று அவருக்குக் கடிதம் எழுதினார் .’இதோ அந்தப் பாடல்

                                          எப்பாரும் போற்றும் இசைத் தமிழ்ச் செல்வா !என்  

                                                     அப்பா அழகிய செல்லையா–இப்பாரில் 

                                                                  சிந்தை குளிர  சிரித்தொளிரும்  நின்முகத்தை

                                                                          எந்தநாள்  காண்பேன் இனி.

     டி.கே.சி அவர்கள்  18-8-1881 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஜயந்தியன்று பிறந்தார்.தென்காசியில் வளர்ந்தார். குற்றாலம்தான் அவரை ரசனை என்னும் அருவியில் மூழ்கச் செய்து அவ்வின்பத்தைப்  பலரும் துய்க்கச் செய்த புண்ணியத் தலம்.வக்கீலுக்குப் படித்த அவர் தமிழ் இலக்கிய ரசனையின் பக்கம் சாய்ந்து அதில் பிரம்மானுபவத்தைக் கண்ட பிரம்ம ஞானி. ஒரு இரத்ன வியாபாரி ரத்தினக் கற்களைச் சோதித்துப் பார்த்து அவற்றினின்று உண்மையான கற்களைத் தேர்ந்தெடுப்பது போல் தமிழ்ப் பாடல்களைத் தட்டிப் பார்த்து பொய்க் கவிதைகளை புறம் தள்ளி உண்மையான பாடல்களைத் தந்த அன்னப் பறவை அவர்.

    தமிழை நினைத்தால் போதும்; தமிழ்ப் பண்பாட்டை, சமய நெறியை,கவியை நினைத்துப் பார்க்க ரசிகமணி நம் எதிரில் நின்று காட்சி கொடுப்பார். தமிழிசை,, நாடகம் ,நடனம்,ஓவியம்,கோவில்,பக்தி இவ்வாறு எல்லாத் துறைகளீலும் அவர் விற்பன்னர்.தமிழ் உரைநடை,தமிழர் வீரம், அவர்தம் வாழ்க்கை ,கொடை, பண்பட்ட உழைப்பு என்று எல்லாவற்றையும்அலசிப் பார்த்த  ஆராய்ச்சியாளர் அவர்.

    நமக்கு முறுக்குச் சுற்றுவதும் இட்டிலி செய்வதும் சாதரணமாக இருக்கலாம்.ஆனால் ரசிகமணியோ ஒரு பெரிய கட்டிடம் கட்டும் அளவிற்கு  முக்கியத்துவம் கொடுத்து  இவற்றை விளக்குவார்.ஏனென்றால் சமையல் செய்வதிலும் ஒரு ரசனை வேண்டும் என்பார்.ஆன்மிகம்,விஞ்ஞானம்,மருத்துவம், பொறியியல்  எதுவாயினும் தமிழில் விளக்க முடியும் என்பார் எப்பொழுதும் நண்பர்கள் சூழ அமர்ந்து தமிழ்ப் பாடல்கள் சொல்லி அவர்களைக் குதூகலப் படுத்துவார்.

                                    சார்ந்தாரை எவ்விடத்தும்

                                         சார்வனவும் சார்ந்தன்பு

                                   கூர்ந்தார்க்கு    முத்தி

                                          கொடுப்பனவும் –கூர்ந்துள்ளே

                                  மூளத்    தியானிப்பார்

                                         முன்வந்து    நிற்பனவும்

                                 காளத்தி    யார்தம்

                                         கழல்

    காளத்தி நாதர்போல் தன்னைச் சார்ந்தோர்க்கு பாடல்களை ரசிப்பதன் மூலம் முக்தியே கொடுத்து விடுவார் நம் ரசிகமணி அவர்கள்.

    கவிதானுபவமே அவரை ஆழ்ந்த தியான நிலைக்கு  இட்டுச் சென்று விடும்.அதனால் கவியில் கடுகளவு பிழை இருந்தாலும் அணு அளவு பிறழ்ந்தாலும் டி.கே,சி அவர்களுக்குத் தெரிந்து விடும்.அதனால்தான் கம்பராமாயணத்தின் பாடல்களைப் படித்து ஆராய்ந்து  தமிழுலகுக்கு அவரால் அளிக்க முடிந்தது .இவரைத் தமிழ்ப் புலவர்கள் சாடினாலும் அதைப் பொருட்படுத்தாது  கம்பன் பாடல்களைப் பிரித்தெடுத்து கம்பனுக்கு மகுடம் சூட்டியவர் அவர்.

    நாயகனைப் பிரிந்து துடிக்கிறாள் நாயகி.மன்மதனே தன்னைத் துன்புறுத்துவதாக எண்ணுகிறாள்.திடீரென நாயகன் வந்துவிட்டான் .அவளுக்கோ எல்லையில்லா ஆனந்தம்.மன்மதனும் நாணிக் கோணி வருகிறான். மன்மதனைப் பார்த்து எக்காளத்தோடு பாடல் பாடுகிறாள்.இதோ அந்தப் பாடல்;

                                    எய்ய வந்த காமா நீ

                                           இங்கு வர வேண்டாம் காண்

                                           உய்ய வந்தானோடு

                                            உறவானேன்-பையவே

                                          தேரை விடு  பூவைமுடி

                                             தின்றுவிடு  மென்கரும்பை

                                           மீனை ஒரு காசாக

                                             வில்

    இந்தப் பாட்டைப் படிப் பாடிப் பார்க்கிறார். ரசிகமணியின்  வகுப்பில் பாடல் படிக்கும் முறையே தனி .ஒவ்வொரு அடியாக பிரித்துப் படிப்பார். முன்னுரையாக  ஒரு கதை வரும்.முடிவில் நமக்குள்    பாடல் போய்விடும். இந்த மாய வித்தை அவரால்தான் செய்ய முடியும்.இது எப்படி எனக்குத் தெரியும் என்று எண்ணுகிறீர்களா?.நான் அவருடைய சீடர் திரு ல.சன்முக சுந்தரம் அவர்களிடம் பாடல் சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவர் இன்று நம்மிடையே இருக்கிறார்.அவருக்கு வயது 93 ஆகிறது.என் தந்தையும் அவரும் ஒரே சமயத்தில்(1946-ல் ) டி கே சி யிடம் சேர்ந்தனர்.

    மேற்சொன்ன பாடலைப் படிக்கிறார்.சொல் தட்டுகிறது, பிழைகள் நீக்கப் பட்டு புதிய பாடல் ஒன்று துள்ளி வருகிறது

                                                      எய்ய வந்த காமா!

                                                   இனி உனக்கு வேலை இங்கென்!

                                                       உய்ய வந்தான் தன்னோ(டு)

                                                    உறவானேன் –பையவே

                                                      தேரை விட்டு மென்கரும்பைத்

                                                    தின்றுவிட்டுச் செய்ய வந்த

                                                      போரை விட்டுப் பூ முடித்துப்

                                                   போ

    இப்படித்தான் பாடல்களுக்கு  உயிர் கொடுத்தார் ரசிகமணி அவர்கள் இதுதான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு.

    விருந்தோம்பலில் பிரம்மானுபவத்தைக் கண்டவர் மாமுனி ரசிகமணி அவர்கள்.அவருடைய இல்லத்தில் விருந்தினர்கள் நண்பர்கள் , உறவினர்கள் குழாம் எப்பொழுதும் இருந்தவண்ணம் இருக்கும். ரசிகமணியின் கவிதானுபவத்தைக் கேட்டு மகிழவே  தமிழ்ப் புலவர்கள் ,அறிஞர்கள்,அரசியலறிஞர்கள் , சாதாரன வேலைக்காரர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.காபிபொடி விற்பவரும் கவர்னர் ஜெனரலும் அவர்முன் சமம்.செவியின்பத்திற்குப்பின்  பசியாற உணவு பரிமாறப்படும். பந்தியிலும் எல்லோரும்  சமமாக உட்கார்ந்திருப்பார்கள்.தினமும் பலர் உண்பார்கள்.திடீரென்று நண்பர்கள் வந்தாலும் அவர் மனைவி பிச்சம்மாள் அவர்கள் மனம் சலியாமல் மகிழ்ச்சியுடன் உணவு தயாரித்து பரிமாறுவார்கள். எல்லோரும் எவ்வாறு உண்கிறார்கள்  என்று பார்த்துவிட்டு பலவகை உணவுகளை  எவ்வாறு ரசித்து உண்ண வேண்டும் என்று பிரசங்கமே செய்வார். ஏனெனில் வாழ்க்கையே ஒரு ரசனையான அனுபவம் தானே என்பது அவர் கருத்து. வாழ்க்கையில் ஒரு லயம் இல்லையெனில் அது வாழ்க்கையாகாது, மாடு தண்ணீர் குடிப்பதுபோல பாயாசத்தை குடிக்கக் கூடாது; அதை ரசித்து  ரசித்து இலையிலிருந்து எடுத்து உண்ண வேண்டும் என்பார்.இடையிடையே பாடலும் சொல்லுவார்.உண்பதை மறந்து அனைவரும் ரசிப்பார்கள்.அப்பொழுது அம்மையார் அவர்கள் மற்றொரு பாடல் சொல்லுங்கள். டிபன் நேரமும் வந்து விடும். எல்லோருக்கும் டிபன் பரிமாறிவிடலாம் என்பார்கள்.இத்தகையதொரு குதூகலமான குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டும் என்று உண்மையாக நினைத்தவர் ரசிகமணி அவர்கள்.இது பிரம்ம ஞானிகளின் நிலைதானே.

    இலக்கியத்தை ரசித்தவர்கள் பலர் இருக்கலாம். இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கலாம்.ஆனால் ரசணையின் உண்மைப் பொருளை உனர்ந்து தானே மெய்மறந்து ரசித்து ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்ற ஞானிதான் இந்த ரசஞ்ஞானி.ரசிகமணியும் அவரது சீடர் திரு.ல.சண்முக சுந்தரம் அவர்களும்  தென்காசியில் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டு நபரை அழைக்கிறார்கள்.அவர் வரவில்லை.ஆனால் அவர்கள் இருவரும் வீட்டுத் திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பெசிக் கொண்டிருந்தார்கள்.அரைமனி நேரங்கழித்து வந்த அந்த வீட்டு நபர் இவர்கள் இருவரையும் பார்த்து  சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.மேலும் அரைமணிநேரம் காத்திருந்து விட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.சிறிது தொலைவு சென்றபின் சண்முக சுந்தரம் அவர்கள் ரசிகமணியிடம்   ”என்ன அநியாயம் அவன் உங்களை மதிக்கவில்லை; சும்மா அவன் வீட்டில் அமர்ந்து விட்டு வந்ததன் நோக்கமென்ன? என்று கேட்டார்.அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை;என்னை நகையாடிக் கொண்டிருந்தான்;அவன் என்னை அவமானப் படுத்த வேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு ஆனந்தத்தைத் தரலாம் என்றுதான் வந்தேன் என்றார். நகையாடியவனுக்கு இப்படியொரு மரியாதையா என்று நீங்கள் நினைக்கலாம்.கவர்னர் ஜெனரல் , ஜவஹர்லால் நேரு, கல்கி, பெரியார் .உ,வே சா போன்ற  பெரிய மனிதர்களுடன் பழகிய மாமேதை இந்தச் செயலைச் செய்யலாமா? என்று நீங்கள் நினைக்கலாம். ”தம்மை வெறுத்தாரை தாம் உகத்தல்என்பது ஞானிகளின் நிலை.அந்த நிலையை உணர்ந்தவர் ரசிகமணி அவர்கள்.அந்த நிலையை அவருக்கு அளித்தது ரசனைதான்,  இத்தகைய பண்பு துறவிகளிடத்திலும் முனிவர்களிடத்திலும் நாம் எதிர்பார்க்கலாம்.ஆனால் ஒரு இலக்கிய வாதியிடம்  நாம் காண முடியுமா. அதுதான் ரசிகமணியின் உன்னத பண்பு.

    வழக்கறிஞருக்குப் படித்தவர் ரசிகமணி அவர்கள். ஆனால் வழக்கறிஞர் தொழில் பார்க்கவில்லை.பிரம்ம ஞானி அல்லவா அவர் .பொய் சொல்லத் துணியாது அவர் மனம்.குடும்பச் சொத்து  டி.கே.சி யின் பொறுப்பில் இருந்தது.சொத்து பிரிக்கப் படவில்லை.அதனால் அவரை எதிர்த்து அவர் தமையனார் மகன்  சொத்து வழக்கு ஒன்று பதிவு செய்தார்.வழக்கு விசாரணைக்கு வந்தது.ரசிகமணி அவர்கள் நீதிபதிமுன் நின்று”சொத்துக்களின் மீது எனக்கு நாட்டம் இல்லை.என் சகோதரன் அவர் பங்கை கேட்பது நியாயம்.என்னிடம் நேரிடையாகக் கேட்டிருக்கலாம்அவர்கள் சொத்து முழுவதையும் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.அவர் எடுத்துக் கொண்டது போக மீதியை நான் எடுத்துக் கொள்கிறேன்”என்று சொன்னார்.நீதிபதி அவர்கள் ஆச்சரியப்பாட்டார், நீதிமன்றமே அதிசயித்தது இக்காலத்தில் இம்மாதிரி ஒரு மனிதனா?என்றார் அவர்.இப்பண்பு அவருக்கு ரசனை அளித்த கொடை

    வாழ்க்கையை ரசிக்கப் பழக வேண்டும். அணு அணுவாக ரசிக்க வேண்டும்.அந்த ரசனையை பள்ளிகள் தருவதில்லை.பாடத்தை மாணவர்கள் தலையில் திணிக்கிறார்கள் என்பாரவர். அது இன்றும் நிகழ்கின்ற விஷயம்தான்.அதனால் தன் மகன்களுக்கு வீட்டிலேயெ கல்வி போதித்தார்.பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளுக்கும் புரிதலில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவார். மகாத்மா காந்தி, வினோபா,நேரு. போன்ற அரசியல்வாதிகளைச் சந்தித்தாலும் தமிழ்க் கவி இன்பத்தை அவர்களுக்கு அளித்து தமிழின் பெருமையை விளக்காமல் இருக்கமாட்டார்.இவரது கம்ப ராமாயண ரசனையில் மோகித்து வீழ்ந்தவர் இராஜாஜி அவர்கள்.கல்கி அவர்களை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் ரசிகமணிதான்.”பண்பாடு’,’வாய்க்குருவி’என்ற சொற்களைஅறிமுகப் படுத்தியவர் இவர்தான்.

    இக்கட்டுரையை எழுதியதன் நோக்கம் தமிழகத்தில் இத்தகையதொரு அரிய மாணிக்கம் தமிழை வளர்த்தார் என்று நம் இளைஞர்களுக்கு தெரிய வேண்டு மென்பதே.  இசை,இயல்,நாடகம் முதலிய மூன்று துறைகளிலும் தமிழ் சிறக்க வேண்டும் என்று தமிழ்  இசை ஆராய்ச்சி மன்றத்தை நிறுவிய முதல் தமிழர்.கம்ப இராமாயணம் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று முதன் முதலில் கம்பன் கழகத்தை  அமைத்தவர்.வட்டத்தொட்டி என்ற அமைப்பை உருவாக்கி வட்டமாக பல அன்பர்களை அமரவைத்து தமிழ்ப் பாடல்களில் தான் பெற்ற அனுபவத்தை அவர்களிடம் பரிமாறி ஆனந்தத்தில்  திளைக்க வைத்த மாமுனிவர். எதையும் நாம் உண்மையாக உணர்ந்து உண்மையாக செயல்பட்டால் அது உயரிய ஆன்மநிலைக்கு  இட்டுச் செல்லும்  என்பதற்கு டி.கே,சி யின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு மரணத்தையும் ஆனந்தமாக அணைத்துக் கொண்டவர். மரணிக்கும் தருவாயில் பிற்பகல் 12 மணி வெய்யிலை அவர் குளிர்ந்த நிலவொளியாக உணர்ந்து மரணத்தைத் தழுவினார் 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள்.தங்கக் குணத்தானின் ரசானுபவத்தை நம் தமிழுலகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகமணியின் அன்பர்களின் விருப்பமாகும்.

    Share
  • கண்ணன் திருப்புகழ் (2)

     

    கிரேசி மோகன்

    krishna_radha
    ’தளிறு இளம்ராதை தழுவ வெறியோடு,
    துளஸி மணிமாலை நழுவ, அணியாது -விரைவோனே
    தளர இடையாடை, திலக நுதல்கூன,
    தலையின் மயில்பீலி, சரிய படையோடு -மெதுவாக
    துயில இடையாயர், தளிகை அறைதாவி,
    உறியில் தயிர்பாலை ,திருட வரும்போது -விரைவோனே
    குளிர குளமாடும், மகளிர் அணிசேலை,
    உருவி கரைமேவி, மருத மரமேறி -மெதுவாக
    அலறி ஒருநாளில், அழுத மகள்சோகம் ,
    விலக துணிசேர்க்க, விரையும் மெதுவான,
    -பெருமாளே’’

    படத்திற்கு நன்றி

    http://thanikaatturaja.blogspot.in/2010/09/blog-post_14.html

    Share
  • வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

    மேகலா ராமமூர்த்தி

    (சென்ற ஆண்டு வெளியிட்ட கட்டுரையின் மறுபகிர்வு இது)

    தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

    அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

    அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.

    இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…

    தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள்.

    இதனையே,
    “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.

    இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?

    இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?

    ”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.

    வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

    இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள்…..

    ”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து.”

    அத்தோடு விட்டானா? நிலவே! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?

    ”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.

    இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.

    தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….

    ”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.”
    மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.

    அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? அக்குறள் நம் பார்வைக்கு…

    ”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”

    இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. “ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்” என்கிறார் கவிஞர்.

    தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் ஆசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.

    அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.

    ”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.”

    மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.

    “மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்தது இலேன்.”

    அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.

    “நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.

    தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசுமையான நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,

    ”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.

    பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.

    ”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.”

    சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, ’யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது’ எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?
    இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.

    “வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.

    தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது!!) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.

    ”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.” என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவர்.

    இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க குறட்பாக்கள் பல குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் வான்புகழ் வள்ளுவர் சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.

    அன்புடன்,
    மேகலா

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (96)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இதோ அடுத்த மடல் கொஞ்சம் வித்தியாசமாக என் மனவோட்டங்களை உங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனும் ஆதங்கத்தில் உங்கள் முன்னே வந்து விழுகிறது.

    உள்ளத்தின் ஆழத்தில் உருண்டும் நினைவுகள் வெள்ளமாய் பள்ளம் பார்த்து வடிந்தோடிட, அதிலே தெள்ளத் தெளிவான சில சிந்தனை முத்துக்கள் மின்னியபடியே பளிச்சென்று வலம் வந்து கொண்டிருக்கும்.

    மனித மனங்களில் இவ்வெண்ண அலைகளின் ஓட்டம் இல்லலாவிடில் வாழ்க்கையே நின்று போய்விடும். கடிகாரத்தின் முள் நின்று விட்டால் எவ்வாறு அக்கடிகாரம் உபயோகமில்லாத ஜடப்பொருளாய் தூக்கிப் போடப்படுகிறதோ அதே போலத்தான் எண்ண ஓட்டமில்லாத மனித உள்ளமும் ஜீவனற்றுப் போய் விடுகிறது.

    இவ்வெண்ணங்கள் எமக்கு கொடுப்பவை எல்லாம் மனதுக்கு இதமான உணர்வுகள் தானா? எப்போதுமே எம் எண்ணங்கள் எமக்கு ஆனந்தம் அளிப்பவையாகத்தான் இருக்கின்றனவா?

    இல்லை அவ்வப்போது சிற்சில ஆனந்தக் கணங்களைத் தந்திடும் வல்லமை படைத்தவையாக இருப்பினும் வாழ்க்கையின் சுமைகளும் அச்சுமைகளின் அழுத்தம் உள்ளத்தில் ஏற்படுத்தும் வலிகளுமே அதிகமாக எமது எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கின்றன.

    எப்போதுமே எதிலுமே ஏதோ ஒரு அனர்த்தம் நிகழக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல எமது உள்ளமும் எத்தகைய ஒரு செயலைச் செய்யும் போதும் அதன் விளைவின் தாக்கங்கள் எதிர்மறையாகத்தான் இருக்கும் எனும் ஒரு அச்சத்தினல் தவித்துக் கொண்டுதானிருக்கிறது.

    எமக்கு நடக்கும் நன்மைகளையும், தீமைகளையும் நாமடையும் இன்பங்களையும் துன்பங்களையும் அது எமக்கு பிறரால் அல்லது இயற்கையால் அன்றி அனைவர்க்கும் பொதுவான இறை எனும் சக்தியால் ஏற்பசுத்தப்படுகின்றது என்று எண்ணிப்பார்க்கும் வரை அவைகளின் தாக்கமும் அவைகளை ஏற்படுத்தியவர்கள் என்பவர்கள் மீதான எமது காழ்ப்புணர்வும் அதிக அளவில் இருக்கத்தான் போகின்றன.

    ஆனால் நடந்தைவைகள், நடப்பவைகள் எவ்வகையான நிகழ்வுகள் ஆக இருந்தாலும் அதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருப்பினும் அது இயற்கையாக எமது வாழ்வில் நடந்தேறிய நிகழ்வுகள் எனும் பொதுப்படையான் நோக்கில் பார்க்கப் பழகிக் கொள்வோமாகில் அது நிச்சயமாக எமக்கு அமைதியான ஒரு மன ஓட்டத்தைக் கொடுக்கும் என்பதில் ஜயமில்லை.

    ஆனால் அப்படி ஒரு மனதை ஒரு சாதாரண மன உளைச்சல்களுக்கு உட்பட்ட இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒரு மனிதனால் அடைந்து விட முடியுமா?

    அது அவ்வளவு எளிதானதா ?

    இல்லை ஆனால் அத்தகைய ஒரு மனநிலையை அடையும் முயற்சியின் முதலாம் படியில் நிற்கிறோம் ஒரு எண்ணமே மனதில் அலையாடும் அல்லலான உணர்வுகளுக்கு ஒரு தெளிவான பாதையை வகுத்துக் கொடுக்கும் வல்லமை படைத்தது என்பதே உண்மையானது.

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்று ஈழத்தின் வடபுலத்தில் மத்தியதரக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளையெனும் மமதையில் உழன்று கொண்டிருந்த எனது பாதையை இத்தனை வளைவு சுளிவுகளுக்கு உள்ளாக்கி அனுபவப் பட்டறையில் அடிமேல் அடி கொடுத்து இன்று என் இனிய உறவுகளுடன் அவ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வழி வகுத்ததவர் அன்றி வழி வகுத்தது எது?

    காலமா? அன்றிக் அக்காலத்தின் மூலமாய் யாரின் கண்களுக்கும் தென்படாமல் இயற்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தியா ?

    இதோ வென்று விட்டேன் என்று நினைத்துக் கொண்டு ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு அடி பின்னே தள்ளி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான் அனைவருக்கும் மேலானவன்.

    சரி பின் வைத்த அடி இரண்டையும் முன் வைக்க தேவையான முயற்சிகளை எடுக்கும் போது தானகவே இரண்டு அடிகள் முன்னே கொண்டு போய் நிறுத்தி விட்டு இப்போ என்ன செய்வாய் ? என்பது போல ஒரு கேள்வி.

    இதைத்தான் கவியரசர் “நடக்கும் என்பார் நடக்காது , நடக்காது என்பார் நடந்து விடும் ” என்றாரோ ?

    எண்ணிய இடத்தில் தொடங்காது எண்ணாத இடத்தில் முடிந்து விடும் இவ்வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஓராயிரம்.

    சொந்தமென்று நம்பியவர்கள் தந்திரமாய் தப்பித்துக் கொண்டதும் எங்கிருந்தோ யாருமறியாத இடத்திலிருந்து சொந்தமாக என்னைக் கொண்டு அன்பு பொழியும் உள்ளங்கள் மறுபுறம் அப்பப்பா ! இந்த வாழ்க்கை ஒரு பகடையாட்டம் என்றால் இக்காய்களை நகர்த்துபவன் யாராலுமே புரிந்து கொள்ள முடியாத ஒரு அதி விற்பனன் என்பதுவே உண்மை.

    அடாது பெய்யும் மழையில் உருவாகும் வெள்ளத்தில் மிதக்கும் நீர்க்குமிழியைப் போன்ற எமது வாழ்க்கையில் எதுவுமே நான் கொண்டு வந்ததுமில்லை எதையுமே நான் உருவாக்கியதுமில்லை எதுவுமே என்னால் கொண்டு போகப்படப் போவதுமில்லை இதனுள்ளே இத்தனை போராட்டாமா? இதற்க இத்தனை திண்டாட்டமா?

    புரிந்து கொள்ள முடியா வினைகள் விளக்கமில்லா விடயங்கள் விளங்க முடியாச் சூழல்கள் இவரினால் பின்னப்பட்டுள்ள நாம் எண்ணங்களின் மையத்தை நோக்கி தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய இந்த அலசல்.

    Share
  • கண்ணன் திருப்புகழ்

     

    கிரேசி மோகன்

    download (2)

    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று hqdefault
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….

     

    படத்திற்கு நன்றி:

    https://www.google.co.in/search

    Share