திருமால் திருப்புகழ் (4)

கிரேசி மோகன்

d8140d4c-c435-4932-87bb-666bf00fd18a_S_secvpf
தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன
தனனதன தனனதன தனதான தானதன-தனதான….

சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
விரையுமதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
சுகமுரளி இசைபழகு யதுவாசி  தோழனென
வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
சிறகுமையில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண்
பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே!
————————-
—–——————————————————————————————

1 thought on “திருமால் திருப்புகழ் (4)

  1. திருப்புகழ் தான் இவ்வளவு எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் போகும் என் நினைத்தேன். உங்களது  பாவும்  ஊடாடி பல்திசையும் தொட்டு வருகிறது.அளித்த வல்லமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க