கிரேசி மோகன்

krishna_radha
’தளிறு இளம்ராதை தழுவ வெறியோடு,
துளஸி மணிமாலை நழுவ, அணியாது -விரைவோனே
தளர இடையாடை, திலக நுதல்கூன,
தலையின் மயில்பீலி, சரிய படையோடு -மெதுவாக
துயில இடையாயர், தளிகை அறைதாவி,
உறியில் தயிர்பாலை ,திருட வரும்போது -விரைவோனே
குளிர குளமாடும், மகளிர் அணிசேலை,
உருவி கரைமேவி, மருத மரமேறி -மெதுவாக
அலறி ஒருநாளில், அழுத மகள்சோகம் ,
விலக துணிசேர்க்க, விரையும் மெதுவான,
-பெருமாளே’’

படத்திற்கு நன்றி

http://thanikaatturaja.blogspot.in/2010/09/blog-post_14.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கண்ணன் திருப்புகழ் (2)

  1. அன்று சேர்த்த சேலைகளைப் பாஞ்சாலியிடம் அனுப்பிவைத்தானோ. சில மெது சில விரைவு. திருடன் கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *