Blog

  • திருமால் திருப்புகழ்…. (49)

     

    கிரேசி மோகன்
    வடுவூர் ராமர்
    ————————–

    Vaduvur Ramar04

    தனனா தனதான தனனா தனதான
    தனனா தனதான -தனதான….

    —————————————————————————————————————–

    Vaduvur Ramar13

     

    ஒருநாள் இசைபாடும், மறுநாள் வசைபாடும்Vaduvur Ramar15
    அதனால் மதியீனம் -அறிவாயே
    நதிபோல் மதிமூலம் அறிவோர் மனமேளும்
    அறிவால் அறியாமை -இருள்போகும்

    அருணா சலஈசர் அகமாய் உருவாகி
    குருவாய் ரமணேசர் -உபதேசம்
    பெறநான் சமுசார கடல்சூழ் புவிசேரா
    பிறவா வரம்காண -அருள்வாயே

    மறைநான் கருள்ஓமின் பொருளோ தபிதாவின்
    மடிசேர் மகனான -குமரேசன்Vaduvur Ramar07
    குறமா துடனானை மயிலே றவுலாவும்
    திருவே ரகவேலன் -முறைமாம

    திருஜா னகிசேடர் இளையோன் வரகானில்
    மறுதாய் பணியாக -திரிவோனே
    அனுமான் எஜமான அவதா ரசொரூப
    வடுவூர் சிலைராம -பெருமாளே

    ——————————————————————————————————————-

     படங்களுக்கு நன்றி :

    http://periyathiruvadi.blogspot.in/2012/02/blog-post_10.html

    Share
  • திருமால் திருப்புகழ் … (48) – பெருமாள் துவாதச நாமத் துதி..

    கிரேசி மோகன்

    அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….
    —————————————————————————————————————

    “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..ஆக பெருமாளின் 12 திவ்ய நாமங்கள்….கிரேசி மோகன்….
    ———————————————————————————————————————-

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கேசவன்
    ——————

    “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக்
    கழுவிடு தீர்த்தமாம் கீதையதால்
    உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை
    பலமுற காட்டினை பாதையதை
    பொலபொல என்றுதி காலையை முந்திடும்
    பரவசக் கோதையின் பாசுரத்தால்
    அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை
    கட்டிடக் கேட்டிடும் ”கேசவனே”….(1)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ———————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    நாராயணன்
    ————————–
    “சரியபி தாம்பரம் நழுவக தாயுதம்
    பிளிறும்க ஜேந்திரன் குரல்கேட்டு
    பறவைசு தாகரம் விரையவ னாந்திரம்
    எறியசு தர்சனம் விரல்விட்டு
    துரிதநி வாரண முனிகள்த போவனம்
    பறையும்க தாம்ருத காரணனே
    முரளிம னோகர கமலப தாம்புய
    அனந்த”ந ராயண” பூரணனே”….(2)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    —————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மாதவன்
    ——————

    “அவையென இவையென அளவிடல் தவறென
    கவிமணி மலையணில் கூட்டியதை
    புவிதனில் ஏழையை பிள்ளையை வேழனை
    மகிழ்வுறச் செய்ததைக் காட்டினையே
    தவியுற ஆய்க்குடி தளிர்விரல் தூக்கிட
    குளிர்மழை காத்தனை யாதவனே
    கவிகளின் காப்புக் கடவுள்முன் தோப்புக்
    கரணம்செய் காக்கும் ”மாதவனே”….(3)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கோவிந்தன்
    ————————

    “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை
    அடைத்திடத் தொட்டனை ஏழுமலை
    பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய்
    புகல்ஜர கண்டியில் வாழயிலை
    துளசியை மென்றிட குறையிலை என்றிடும்
    நிலைதர நின்றிடும் ”கோவிந்தா”
    அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில்
    வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் ; கேஷவ்
    ஓவியம் ; கேஷவ்

    விஷ்ணு
    —————-

    “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும்
    முகநுனி தாரணி கொண்டவனே
    சதையுறி உந்தியில் பதபலி புந்தியில்
    விதவித பந்தியில் உண்டவனே
    விதையுழு ராமனும் மழுமுனி ராமனும்
    தொழுரகு ராமனும் பாகவதக்
    கதைசொலும் க்ருஷ்ணனும் பலபல ஸ்ருஷ்டியும்
    சதைவுயிர் ”விஷ்ணுவின்” சாகசமே”….(5)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————-

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    திருவிக்ரமன்
    —————————-

    “அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
    உணர்குரு சுக்கிரர் கட்டளையை
    பலியிட அக்கணம் குறள்”திரு விக்ரம”
    வடிவினில் திக்கது தொட்டனனே
    புலனுரு வாமனம் பழகிட நீமனம்
    பெருகுவை ஆணவ கந்தையிலே
    சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
    சரணடை கோவண சந்நிதியில்”….(6)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ————————————————————————————————————-

    ஓவியம்: கேஷவ்
    ஓவியம்: கேஷவ்

    வாமனன்
    ——————

    “சிறைவசு தேவகி கருவச மாகிட
    இரவினில் ஏகினன் கோகுலமே
    கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
    தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
    மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
    குடுமியின் உச்சமும் பூமணமாய்
    குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
    களபலி சேய்வளர் ”வாமனனே” ….(7)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    ——————————————————————————————————————-

    ஓவியம்: கேஷவ்
    ஓவியம்: கேஷவ்

    சீதரன்
    ————

    “இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
    திருமகள் பூணிடும் ”சீதரனே”
    அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
    மலைசிவ சங்கரி சோதரனே
    அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
    சிலைபரு தண்டமும் கண்டவுடன்
    விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
    விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ரிஷிகேசன்
    ——————–
    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவ”ரிஷி கேசனை” வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(9)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பதுமநாபன்
    ————————
    “கரனுடன் தூஷணை வனஉழை வேஷனை
    தசமுக பூஷனை இம்சைதரும்
    இரணிய ராட்ஷசன் இணையிரண் யாட்ஷகன்
    துரியனின் சூழ்ச்சியை ,கம்சனையும்
    குறைசிசு பாலனை மதுகைட பாணனை
    வதம்புரி மாலனை நம்பிடுவாய்
    பிரமனுய் நாபனை புவியுமிழ் நாபனை
    ’’பதுமம்கொள் நாபனை’’ கும்பிடுவாய்”….(10)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    —————————————————————————————————————–

    ஓவியம் : ராஜா ரவிவர்மா
    ஓவியம் : ராஜா ரவிவர்மா

    தாமோதரன்
    ————————-

    “கரமொடு களவாய் பிடிபட உனதாய்
    உரலிட இழு”தா மோதரனே”
    மரமதை சாய்த்தனை மருதிடை வாய்த்தவர்
    மறுவுல கேத்திடும் ஆதரவே
    புரிவிஷ மத்தினில் முடிவில்ந லத்தினை
    வெளியுற வைத்திடும் யவ்வனனே
    சரியென தப்பென அறியும்ம னத்தினை
    அரிகழல் வைத்தறு வெவ்வினையே”….(11)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

    ——————————————————————————————————————–

    images (3)
    மதுசூதனன்
    ———————

    “மகளிர்உ டுப்பினை மறைவிளோ ளித்தனை
    பிறகுஅ ளித்திடும் திட்டமொடு
    துகிலுரி துட்டனை தளர்வுற கொட்டினை
    துருபதைக் எட்டிட பட்டதனை
    புகுவிட பூதனை விடவுடல் வேதனை
    முலையுறி மா”மது சூதனனே”
    புகுகருங் காளியுன் பிறவியைக் கோளிட
    வ்ரஜநிலம் ஏளிய சோதரனே….(12)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
    ————————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

     

    Share
  • தாயுமானவன் திருப்புகழ்

    கிரேசி மோகன் P1030953  
    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆகshivan
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….(1)….10-3-2009

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….(2)….10-3-2009

     
    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(3)….10-3-200912056_468338519868554_1663975219_n
    ————————————————————————-

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….10-3-2009

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….10-3-2009

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….10-3-20092

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….11-3-2009

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….11-3-2009

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….11-3-2009

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ1506395_633641266707576_1028299500_n1
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….11-3-2009

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….11-3-2009

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….11-3-2009

     
    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமணG_T2_313
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….11-3-2009

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….12-3-2009

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….12-3-20091780843_587204171369869_249422305_n

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….12-3-2009

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….13-3-2009

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)15-3-2009

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்annabiseham sivan1
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….19-3-2009

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..20-3-2009

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….20-3-2009

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….20-3-2009

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை_siva21
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….22-3-2009

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)….25-3-2009

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    படங்களுக்கு நன்றி

     

     

     

    Share
  • அமெரிக்காவின் மத்தியஸ்தம்!

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை என்பது நூறு ஆண்டுகளாக நடந்துகொண்டிருப்பது.  ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபதுகளிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருகிறது.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே நடந்து வந்திருக்கிறது.

     pon2

    பைபிள் காலத்தில் இப்போதைய சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன நாடாக உருவாகப் போவதாக பாலஸ்தீனர்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் வெஸ்ட் பேங்க், காஸா இடங்களையும் சேர்த்து பாலஸ்தீனம் என்று அழைத்தார்கள்.  இப்போது மத்திய தரைக் கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஜோர்டான் நதியின் மேற்குக்கரைப் பகுதிக்கும் இடையேயான இடம் பாலஸ்தீனம் என்றும் அது தங்கள் மூதாதையர் மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்தவந்த இடம் என்றும் அதனால் தங்களுக்கு அதில் முழுப் பாத்தியதையும் இருக்கிறது என்று கூறிக்கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து வெளியிலிருந்து வந்த யூதர்கள் அங்கு ஏற்கனவே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைத் தங்கள் வசதிக்காக மறந்துவிட்டுக் குடியேறிக்கொண்டே இருந்தார்கள்.  அப்போது வளம் மிகுந்த நாடான அமெரிக்காவில் ஏற்கனவே குடியேறி பல யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக விளங்கினார்கள்.  இவர்களின் பண உதவியாலும் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் தங்களோடு கொண்டுவந்த தொழிநுட்ப அறிவாலும் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் நிலங்களை வாங்கிப்போட்டு அந்த நிலங்களில் அமோக விளைச்சலை உண்டுபண்ணினர்.  இந்த நிலங்களில் யூதர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக்கொண்டனர்.  இதனால் அரேபியர்கள் தங்கள் நிலங்களை இழந்ததோடல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.  இதனால் பலர் அரேபியர்கள் கொதித்தெழுந்தனர்.  இதனால் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நிறைய மோதல்கள் நடந்தன.

    1922-லிருந்து பாலஸ்தீனம் பிரிட்டிஷ் நியமனத்தின் (British Mandate) கீழ் இருந்து வந்தது.  பிரிட்டனும் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் பல முயற்சிகளுக்குப் பிறகு பாலஸ்தீன நிர்வாகத்தை இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நாடுகளிடையே ஏற்படும் சச்சரவுகளைத் தீர்க்க ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட்டு பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியது.  ஐ.நா.வும் வெளியிலிருந்து வந்த யூதர்கள், தங்கள் மூதாதையர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால் இருந்த சம்பந்தத்தைக் காட்டி பாலஸ்தீனத்தில் பங்கு கேட்பது சரியல்ல என்று யூதர்களுக்கு அறிவுறுத்தவில்லை.  சமரசம் செய்வதாக நினைத்து பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் கொடுத்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்கள் தங்கள் மூதாதையர் வாழ்ந்த தங்களுடைய புண்ணிய தலத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு அமைக்கும் உரிமை கிடைத்தது என்று மகிழ்ந்துபோய் அந்தப் பிரிவினையை ஒத்துக்கொண்டனர்.  அரேபியர்களோ தங்கள் நாட்டை வெளியிலிருந்து வந்த, வரும் யூதர்களோடு எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று கோபமடைந்து தங்கள் ஆயுத பலத்தால் எப்படியும் தங்கள் நாட்டை யூதர்களிமிருந்து திரும்பப் பெற்றுவிடுவது என்று தீர்மானித்து காரியத்தில் இறங்கினர்.  அவர்களுடைய படைபலத்தை விட அமெரிக்க யூதர்கள் கொடுத்த பண உதவியால் இப்போது யூதர்களின் படைபலம் அதிக அளவு உயர்ந்துள்ளது என்பதை அவர்கள் உணரவில்லை.  பல முறை யூதர்களோடு மோதியும் பலன் இல்லை.  முழு நாடும் தங்களுக்கு வேண்டும் என்று அரேபியர்கள் வீம்பிக்கொண்டிருக்க, யூதர்கள் மிகவும் தந்திரமாக இஸ்ரேல் என்ற நாட்டை தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டதோடு ஐ.நா. அரேபியர்களுக்குக் கொடுத்த இடங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது.  இஸ்ரேலைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையாதலால் இஸ்ரேல் தன்னிச்சையாகப் பாலஸ்தீனத்தில் இடங்களைப் பிடித்துக்கொள்ளும் தன் பேராசையைத் தொடர்ந்து வருகிறது.

    தன் சொந்த நன்மைக்காகவும் அமெரிக்கா வாழ் யூதர்கள் கொடுத்த நிர்ப்பந்தித்தினாலும் அமெரிக்கா 1967-க்குப் பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டு வருகிறது.  இதற்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் நிறைய அதிகாரம் வகிக்கும் அமெரிக்க யூதர்கள்.  அமெரிக்க யூதர்களிடம்தான் அமெரிக்காவின் பெரிய வங்கிகள் இருக்கின்றன.  ஹாலிவுட் முழுவதும் இவர்களின் கைகளில்தான்.  எல்லாவற்றிற்கும் மேலாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் எல்லாம் இவர்களின் அதிகாரத்திற்குள்தான்.  அமெரிக்க மக்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் அமெரிக்கா வாழ் யூதர்களால் திசை திருப்ப முடிகிறது.

    இதற்கும் மேலாக இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இவர்களின் பாக்கெட்டிற்குள்.  வித்தியாசமான அரசியல், பொருளாதாரக் கொள்கைகளையுடைய இரண்டு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் இஸ்ரேலைப் பொறுத்த வரை ஒரே மாதிரியான கொள்கைகளைத்தான் கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால் இவர்களுடைய தேர்தல் நிதி பெருமளவு யூதர்களிடமிருந்து வருகிறது.  யூதர்களைப் பகைத்துக்கொண்டு யாரும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராகவோ வர முடியாது.  இதனால்தான் தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.  இஸ்ரேலை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னாலும் அமெரிக்க அரசியலில் குப்பை கொட்ட முடியாது என்பது ஒபாமா உட்பட எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரிந்திருக்கிறது.  தேர்தல் பிரச்சாரத்தின் போது பாலஸ்தீனர்களின் மீது தனக்கிருந்த பச்சாதாபத்தைப் பற்றிக் கூறிய ஒபாமா, ஜனாதிபதி ஆன பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.  அமெரிக்க அரசு கூறும் எந்த அறிவுரையையும் இஸ்ரேல் செவிமடுப்பதாக இல்லை.  அதனால் ஒபாமாவும் அறிவுரை கொடுப்பதை விட்டுவிட்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடுவே நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையில் அவருடைய வெளியுறவு அமைச்சர் கெரிக்கு கொஞ்சம் அதிகமாகவே சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

    பல தசாப்தங்களாக நடந்துவரும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  கார்ட்டர் தவிர மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிக் கவலையில்லை.  மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்து மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் என்பதை விட  எப்படியாவது பேச்சுவார்த்தைகள் முடிந்து – இன்னும் கொஞ்சம் அநீதி பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்டாலும் – அவற்றை முடித்த அமெரிக்க ஜனாதிபதி என்ற பெயர் சரித்திரத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் நோக்கம்.

    இஸ்ரேலுக்குச் சாதகமாகவே பேசிக்கொண்டிருக்கும் எல்லா அமெரிக்க மத்தியஸ்தர்களையும் போல் இப்போது பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வரும் கெரியும் எப்படியாவது பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைவர் அப்பாஸை வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்.  எப்படியாவது அவரை ஏதாவது ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  பாலஸ்தீனத் தலைவர்கள் முன்னால் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை இப்போது அப்பாஸ் மறுக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வேறு.  பாவம் அப்பாஸ் அமெரிக்கா கொடுக்கும் நிர்ப்பந்த பிடியில் சிக்கித் தவிக்கிறார்.  அப்பாஸுக்கு இவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவுக்கு உள்ளுக்குள் கோபம் இருக்கும் போலும்.  ஏப்ரல் நான்காம் தேதி அல்ஜீரியாவுக்கும் மொரோக்கோவுக்கும் விஜயம் செய்த கெர்ரி நேற்று அல்ஜீரியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவரைப் பார்க்க வந்திருந்த தூதரக ஊழியர்களிடமும் அவர்களுடைய குடும்பத்தாரிடமும் தான் தாமதமாக வந்ததற்கும் அவர்களைக் காக்க வைத்ததற்கும் வருத்தம் தெரிவித்துவிட்டு ‘நான் இங்கு வருவதற்கு முன் போனில் பேசிக்கொண்டிருந்தேன்.  என்னோடு பேசிக்கொண்டிருந்தவருக்கு நான் பேச்சை முடித்துவிட்டேன் என்பதை புரிய வைப்பதற்கு மிகவு கஷ்டமாகப் போய்விட்டது’ என்று கூறியிருக்கிறார்.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹுவைத்தான் பேச்சை நீட்டித்தார் என்று மறைமுகமாகக் குறை கூறியிருக்கிறார்.  நேத்தன்யாஹுவிடம் இதை நேரிடையாகச் சொல்லத் தைரியம் இல்லை.  பாவம் அமெரிக்கா, அமெரிக்காவின் உதவியாலும் அமெரிக்கா வாழ் யூதர்கள் செய்யும் உதவியாலும் இன்று மத்திய கிழக்கில் இராணுவ பலத்தில் பூதாகாரமாக வளர்ந்திருக்கும் இஸ்ரேலுக்கு (மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டும்தான் அணு ஆயுதங்கள் இருக்கின்றன) அமெரிக்கா பயப்பட வேண்டியிருக்கிறது.  இது காலத்தின் கோலமா அல்லது அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கொடுத்திருக்கும் /கொடுக்கும் அதிக சலுகையா?

    படத்திற்கு நன்றி:

    http://samuthayaarangam.blogspot.in/2013/12/blog-post_25.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஏப்ரல் 7 , 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள்

    **************************************************************************************

    M.Rishan Shareef

    எம்.ரிஷான் ஷெரீப் இணையத் தமிழ் வாசகர்களை தொடர்ந்து தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வருபவர்.

    இலங்கையின் மாவனல்லையைச் சேர்ந்த எம்.ரிஷான் ஷெரீப் அவர்கள் கவிஞர் என்ற வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ‘வீழ்தலின் நிழல்’ என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தாலும், அவரைக் கவிஞர் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் நம்மால் அடக்க இயலாது. இத்தமிழ் எழுத்தாளர் ஒரு கவிஞர் மட்டுமின்றி ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

    எம்.ரிஷான் ஷெரீப் தனது படைப்பாற்றலை கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, புகைப்படம், ஓவியம், எனப் பல துறைகளின் வழியாகவும் வெளிப்படுத்தி வருபவர். இதுவரை இவரது படைப்புகள் இலங்கையிலிருந்து வெளிவரும் இதழ்கள், தமிழகத்தின் பிரபலமான இதழ்கள், மற்றும் மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளின் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் எனப் பலவற்றிலும் வெளிவந்துள்ளன. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இவரது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.

    இவரது பலதுறை பங்களிப்புகளின் அடிப்படையாக உள்ள ஓர் இழை சமுதாய அக்கறை என்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வல்லமையில் நூலறிமுகக் கட்டுரைக்காக இவர் தேர்ந்தெடுத்த நூல் அன்றைய இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக பலியிடப்பட்ட மக்களைப்பற்றிய ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி இருந்தது என்றால், இவர் எழுதும் செய்தி விமர்சனக் கட்டுரை பள்ளியில் அவமானப்படுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததற்கு பள்ளி நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் அமைந்தது. இவையாவும் வல்லமை வாசகர்களுடன் ரிஷான் ஷெரீப் முன்னர் பகிர்ந்து கொண்டவையே.

    ஆனால் இவ்வாரம் ரிஷான் ஷெரீப் மீண்டும் அவரது வழக்கமான கவிஞர் என்ற கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டு இரு சிறப்புமிகு கவிதையை வல்லமை வாசகர்களுக்கு வழங்கியுள்ளார். “பனிபடர்ந்த இரவின் காலம் எனது கைவிரல்களை ஒற்றியொற்றி உன் நேசத்தைச் சொல்லிற்று” என்று மனதிற்கு இதம் தரும் சூழலில் அறிமுகமாகி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தோழமை ஒன்று தன்னை விட்டு விலகித் தொலைதூரம் சென்றுவிட்ட சோகத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘நுழைதல்’, ‘விலகல்’ என்ற இரு கவிதைகள் மூலம் உறவை இழந்த பின்னர் மனதில் தோன்றும் வெறுமை உணர்வை அருமையாக வடித்துக் கொடுத்துள்ளார். ஒரு சில வரிகள் கீழே….

    நுழைதல்
    http://www.vallamai.com/?p=43635

    எல்லாம் கடந்துவிட்டன
    நேற்றிருந்த மேகத்தைப் போல
    இக் கணத்து நதி நீர் போல
    உனது பயணங்கள் முடிவற்றன
    எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
    ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
    அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
    பாளங்களாய்க் கனன்றெரிந்து
    உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
    உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
    தெப்பமென நனைந்தேன்

    விலகல்
    http://www.vallamai.com/?p=43769

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்
    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே

    இவ்வாறு ஈழத்தமிழர் ஒருவர் பிரிவுத் துயரக் கவிதை வடிக்கும் பொழுது, அந்த உறவு பிரிந்து சென்றுவிட்ட காரணம் புலம் பெயரவேண்டிய கட்டாயச் சூழலோ என்றும் தோன்றுகிறது. இவர் வெளிப்படுத்தும் ஏக்கம் உண்மையில் எத்தனை மக்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதோ என்ற கலக்கத்தையும் ஏற்படுத்தும் கவிதை வரிகள் இவை.

    இது போன்ற உணர்வு மிகுந்த இவரது கவிதை வரிகளைப் படிக்கும் பொழுது, ரிஷான் ஷெரீப் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒரு சமுதாய அக்கறை கொண்ட துடிப்புமிக்க இளைஞர் ஒருவர், வருங்கால உலகம் பற்றி நினைக்கும் பொழுது நமக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத்  தெரிபவர் என்ற எண்ணமே. இவ்வாறு தனது எழுத்துப் பணியின் மூலம் இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழும் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 114 (31.03.14)

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்திய வண்ணம் இளமரக் காவில் புகுதல்

    அம்மண்டபத்தில் ஒரு மறையோனும் இருந்தான்.
    அவன் பாண்டியர்களின் பெருமைகளை
    இங்ஙனம் பேசினான்.

    “வாழ்க எம் மன்னன்!
    மன்னர் பெருந்தகையாளன்!
    பல்லாண்டு காலம் இவ்வுலகை
    அவனே காத்து நிற்பானாக!
    அவன், தன் பெருமை
    பிற மன்னர்களுக்குப் புலப்படும்படி
    அவர்களைத் தம் காலடியில்
    பணிந்திட வைத்தவன்.
    அவன் தன் வடிவேலைக் கடல்மீது எய்திட
    அதனைத் தாங்காத கடலானது
    பஃறுளி ஆற்றோடு சேர்த்துக்
    குமரிமலை அடுக்குகளையும் விழுங்கியது.

    வடக்குத் திசையிலுள்ள
    கங்கையையும் இமயத்தையும்
    கைப்பற்றிய அம்மன்னன்,
    தென் திசை முழுவதையும்
    ஒரு குடையின் கீழ் ஆண்டவனுமாவான்.
    அவன் வாழ்வாங்கு வாழ்வானாக!

    சந்திரகுலத் தோன்றலாகிய
    பாண்டியர் மரபு சிறக்க
    ஆயிரம் சிவந்த கண்களையுடைய
    இந்திரன் பூட்டிய
    வலிமைமிக்க ஆரத்தைத்
    தன் மார்பில் அணிந்து வாழ்ந்து வந்தான்.
    அப்பாண்டிய மன்னன் வாழ்வானாக!

    முதல்வனாகிய இந்திரன்
    தன் தலையில் சூடிய முடியில் இருந்த
    கிம்புரியை உடைத்தவன்..
    அவனது நாட்டில் சிலகாலம்
    இடி கொண்ட மேகங்கள்
    மழை பொழிவிக்காது பொய்த்தன.
    அவ்வேளையில்,
    மேகக்கூட்டத்தை விலங்கிட்டு அழைத்துவந்து
    பெருமழை பொழியச்செய்து
    விளைநிலங்களை விளையச் செய்தவன் அவன்.
    உக்கிரகுமாரபாண்டியன்..
    அவனது புகழ் வாழ்வதாக!”

    இங்ஙனம்
    குற்றமற்ற பெருமை வாய்ந்த
    பாண்டியர் மரபினை
    வாழ்த்திக் கொண்டிருந்தனன் மறையோன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 31
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

     

    Share
  • தெளிதல்

    எம். ரிஷான் ஷெரீப்images

    ஏமாற்றத்தின் சலனங்களோடு

    மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்

    அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது

    மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்

    இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்

    எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்

    மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன

    வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை

     

    மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்

    ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன

    நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்

    மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்

    விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது

     

    மிக எளிய ஆசைகள் கொண்டு

    நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ

    புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது

    வெளிச்சம் எதிலுமில்லை

     

    கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்

    அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது

    ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க

    அலைகளும் எங்குமில்லை

    நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது

     

    எந்த நேசமுமற்று எப்பொழுதும்

    உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்

    ஏமாற்றத்தின் முதல் தளிரோடு

    ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று

     

    நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை

     

     http://news.nationalgeographic.com/news/2011/01/photogalleries/110127-christo-arkansas-river-art-environment-water/

     

    Share
  • நான்

    பிச்சினிக்காடு இளங்கோimages

    யாரோ ஒருவருக்கு
    இதமூட்டும் தென்றல் நான்
    யாரோ ஒருவருக்குக்
    கால்வைக்கும் படிக்கல் நான்

    யாரோ ஒருவருக்குக்
    கைகொடுக்கும் கைநான்
    யாரோ ஒருவருக்கு
    முதலில்  வருமுதவி நான்

    யாரோ ஒருவரின்
    புண்ணுக்கு மருந்து நான்
    யாரோ ஒருவரின்
    புன்னகைக்குக் காரணம் நான்

    யாரோ  ஒருவரின்
    சுமை தாங்கி நான்
    யாரோ ஒருவரின்
    கை விளக்கு  நான்

    யாருக்கோ  ஒருவனாய்
    யாவர்க்கும் கவிஞனாய்
    வாழும் ஆசையில்
    வாழ்கின்ற மனிதன் நான்

    http://online.wsj.com/news/articles/SB10001424052702303753904577450841336465230

    Share
  • “குரோட்டன்ஸ் மனிதர்கள்’’

    ஸ்ரீதேவி

    devi

    ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்திருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். பெருநகரங்களைப் போலவே இப்போதெல்லாம் குடியிருப்புகள் பெருகிவிட்டிருக்கும் சிறிய நகரங்களில் இதுவும் ஒன்று.

    நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தாண்டித்தான் அந்த குடியிருப்புக்கு சென்றாக வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டி ஒரு பெரிய கல்கிடங்கு இருக்கும். சிறு வயதில் அந்தக் கல்கிடங்கில் மீன் பிடிக்க தூண்டிலோடு அப்பாவுடன் சைக்கிளில் போன நினைவுகள் வந்தது.

    இப்போது கல்கிடங்கே இல்லை. அத்தனை பெரிய கல்கிடங்கை எப்படி மூடி சமன்படுத்தி கட்டிடம் கட்டியிருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆயாசத்தை தந்தது. அந்தக் கட்டிடம் கல்கிடங்கு தண்ணீருக்கும் அதில் வாழ்ந்த ஜீவராசிகளுக்கும் உயிரோடு கட்டப்பட்ட சமாதியாகவே தெரிந்தது.

    ஊருக்கு நடுவில் அடுக்கி வைத்த தீப்பெட்டிகளாய் நெருக்கியடித்துக் கிடந்த தெருக்களுக்குள் 28 வருடங்களாய் குடியிருந்த அம்மா இந்த ஒதுக்குப்புற குடியிருப்பில் எப்படி இருக்கப் போகிறாள் என்ற கவலை புதிதாய் முளைத்தது. பக்கத்து வீட்டில் அடுப்பெரிகிறதா இல்லையா என்பதைக் கூட குறிப்பாலுணர்ந்து ”என்னக்கா இன்னைக்கு சோறாக்கலையா” என்று கேட்கக்கூடிய அன்பான மனிதர்கள் நிறைந்த இடத்தை எப்படி ஈடு செய்யப் போகிறது ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி கேட் போடப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்?

    அம்மா…….முப்பது வருடங்களாய் ஒரு மிகச் சிறந்த மனிதரோடு வாழ்க்கை நடத்தியவள் இதுவரை கழுத்தில் காதில் மூக்கில் ஏன் மஞ்சள் கயிற்றுத் தாலியில் கூடப் பொட்டு தங்கத்தைப் பார்க்காதவள். தங்கமனைத்தும் மனிதனாய் உருவெடுத்தது போல் வாய்த்த கணவரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு போட்டுக் கொண்டவள்.

    அப்பா மாரடைப்பால் இறந்த பின் வந்த அடுத்த மூன்று வருடங்களில் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் கடனையெல்லாம் அடைத்து விட்டு கையிருப்பாய் இப்போது நகைகளும் பணமும் வசதி வாய்ப்புகளும் வந்த பின்னும் கூட பகட்டை வெளிக்காட்டிக் கொள்ளாதவள். மகன்கள் ஆசையாய் செய்து தந்த தங்கச் சங்கிலியைக் கூட அணிய மறுத்து மகளின் திருமணத்தில் தான் அணிவேன் என்று பிடிவாதத்தோடு இருப்பவள்.அப்பாவின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாய் இருப்பது இப்போதிருக்கும் இந்த வீடும் தான்.

    வீட்டு வாசலில் அம்மா ஆசையோடு வளர்த்த வாத நாராயணன் மரம் இப்போது தான் பூத்துக் குலுங்கி ஒன்றிரண்டாய் காய்க்கவும் தொடங்கியிருக்கிறது. நகராட்சி தெருக்களில் எல்லாம் இப்போது தரைகளில் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்ட பின்னும் இரண்டு கற்களை வாசற்படியோரம் நெம்பி எடுத்து அதில் நட்டு வளர்த்த மரம் இது. மரத்தையொட்டியிருக்கும் ஒரு சின்ன தொட்டியில் சங்குப்பூவும் பூத்துக் கிடக்கும். அதற்கடுத்தாற் போல ஒரு கற்றாழைச்செடி, தக்காளி, மிளகாய்……

    இந்தப் புதிய அப்பார்ட்மெண்ட்டில் மொத்தம் பன்னிரண்டு வீடுகள். கீழ்த் தளத்தில் இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் நடுவில் விஸ்தாரமான மாடிப் படிக்கட்டுகளோடு முதல் மாடியிலும் அதே வரிசையில் ஆறு வீடுகளுமாய் அழகாய் இருக்கிறது. இரண்டு கெஸ்ட் ரூம்களோடு கூடிய அகலமான மொட்டை மாடி துணி காயப் போடும் கம்பிகளோடு வரவேற்கத் தயாராய் காத்துக் கிடக்கிறது.

    முதல் மாடியில் படிக்கட்டு முடியுமிடத்தில் வலது பக்கம் திரும்பியவுடன் முதல் வீடு எங்களுடையது. வீட்டினுள்ளே நுழைந்ததும் சின்னதாய் ஒரு இடம். காலணிகள் வைக்கும் இடம் போக இரண்டு பேர் தாராளமாய் படுத்து தூங்கும் அளவு இருந்தது. அதைத் தாண்டியதும் பெரிய ஹால், இடது பக்கம் சமையலறை நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் நிறைந்திருந்தது. இரண்டு படுக்கையறைகளோடு ஒரு அட்டாச்டு டாய்லட் பாத்ரூம். எல்லா அறைகளிலும் தேவையான அளவுக்கு அடுக்குகள்… பளிச்சிடும் டைல்ஸ் தரையுமாய் வீடு வெகு அம்சமாய் இருந்தது.

    வசதியான வீட்டுக்குக் குடி போகும் போது கார் வாங்கப் போவதாய் தம்பி சொல்லியிருந்தது பார்க்கிங் பகுதியைக் கடக்கும் போது அம்மாவுக்கு ஞாபகம் வந்திருக்கும் போல….”வண்டி வாங்கினா இங்க நிறுத்திக்கலாம்ல”ன்னு ஒரு இடத்தைக் காட்டிப் பெரிதாய் புன்னகைத்தாள்.

    ”ம்மா இங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்ல…நீங்க இருந்துக்குவீங்களா? நம்ம தெரு மாதிரி இல்ல….பேச்சுத் துணைக்கு ஆள் இருக்க மாட்டாங்க. எதிர்ல பார்த்தா வெறுமனே சிரிக்கக் கூட கொஞ்சம் நாள் ஆகும். இதெல்லாம் பரவால்லயா உங்களுக்கு?”

    “நான் என்ன இப்ப எனக்காகவா இங்க வரேன். பசங்க எல்லாரும் வளர்ந்துட்டீங்க. வீட்டுல நல்ல நாள் விசேஷம்னா கொஞ்சம் வசதியோட இருக்க வீட்டுல இருந்தாத்தான நமக்கும் நல்லா இருக்கும். இப்ப இருக்க வீட்டுல பழைய சாமான்கள்லாம் இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் திரும்பி வந்து இருந்துக்கலாம்ல.”

    “அந்த வீட்டுல இப்ப இருக்க சங்குப்பூ, தக்காளி, பச்சை மிளகாய், கத்தாழ , வாதாம் மரமெல்லாம் இங்க வைக்க முடியாது”

    “செடி வைக்கணும்ன்னா வீட்டுக்குள்ளேயே வளர்க்குறாங்களே…அது மாதிரி வாங்கிக்குவோம்…என்ன ஒண்ணு அந்த வீட்ல இருக்க செடியெல்லாம் பார்த்துக்க தான் ஆளிருக்க மாட்டாங்கல்ல. ஒவ்வொண்ணும் பிள்ள மாதிரி வளர்த்தது. மத்தபடி எனக்கு பிரச்சனை இல்ல. உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கில்ல….அப்புறம் என்ன. நான் இருந்துக்குவேன்டி”

    “ம்ம்…..”

    பூரண சுதந்திரத்தோடு தரையில் வளரும் செடி கொடி மரங்கள் இப்போதெல்லாம் நிறையவே மாற்றங்களுக்குட்பட்டு வீடுகளுக்குள்ளேயே வளர்க்கப்படுவது போலத்தான் இன்றைய மனிதர்களும் போல. வசதிகள் இருப்பது மட்டுமே வீடாகிப் போவதில்லை….வாழ்வதற்கு உகந்ததே வீடாக இருக்கிறது. வெறும் கட்டடங்களையே வாழுமிடமாக மாற்ற அம்மா போன்ற மனிதர்களால் மட்டுமே முடிகிறது. தரையில் வளர்ந்தாலும் மரமாய் நிழல் தந்தும் , வீட்டுக்குள் வைத்தாலும் பார்வைக்கு அழகாய் இருக்குமிடத்தை வைத்திடும் அம்மா போன்ற “குரோட்டன்ஸ் மனிதர்கள்”..மட்டுமே வாழ்தலை சாத்தியமாக்கி வருகிறார்கள்…

    Share
  • இறைவா உன் மாளிகையில்!…

     

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    kavingar vaali

     

     

     

     

     

     

     

    இறைவா உன் மாளிகையில்…

     

    வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது.  அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர்.  இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும்.  ஆனால்,  நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. மட்டுமின்றி மக்கள் நெஞ்சிலும் நிலைத்து வாழ்கின்ற பேறு பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் – திரைத் துறையில் தனக்கென்று தனியிடம் பெற்று திகழ்ந்ததோடு.. அரசியலிலும் ஈடுபட்டு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவனாக உயர்ந்து – முதல் அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் பதவி வகித்தமை உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.

     

    எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு..  பாத்திரப்படி கள்வனாக இருந்தாலும் – ஏழைகளுக்கு உதவுகின்றவராக – ஊரில் பரவிய கடும் நோயின் காரணமாய்.. அனைத்து மக்களும் ஊரைவிட்டு ஓடிடும்போது.. உடல்நிலை குன்றிய நிலையில் உள்ள ஒரு விதவையை மட்டும் வெறுத்து ஒதுக்கி.. அவ்வீட்டிலேயே விட்டுச்செல்லும் காட்சியில் கள்வனாக அவ்வீட்டில் திருடவந்த கதாநாயகன் அவளைக் காப்பாற்றி புகலிடம் கொடுக்கிறான்.

     

    பின்னர் ஒரு கட்டத்தில் ஏழைக்குடிசைகள் தீக்கிரையாகையில் – ஒரு குழந்தையைக் காப்பாற்றிடும்போது தன் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு  உயிருக்குப் போராடும் உணர்வுமிகுந்த கட்டத்தில் .. அவனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் அவனது உயிருக்காக கடவுளிடம் வேண்டுவதை காட்சியமைப்பு..  தனக்கு பாதுகாப்பு தந்து காத்த அந்த நாயகனை எமனின் பிடியிலிருந்து காப்பதற்காக அந்த நாயகி பாடுகின்ற பாடல்.  வாலி அவர்களின் இந்த வரிகள் தமிழகத்தின் ஒரு வரலாற்றுப் பதிவன்றி வேறென்ன?

     

    வார்த்தைகளை கவிஞர் வாலி அவர்கள் வரைந்தெடுத்தபோது ஒவ்வொரு வரியும்.. ஒவ்வொரு வார்த்தையும் என்னை எடுத்துக் கொள்.. என்னை எடுத்துக் கொள் என்று சொல்லியதோ..  உள்ளம் உருக.. மெல்லிசை மன்னர் அமைத்த இசையில்  இது வெறும் பாடல் அல்ல..  பி. சுசீலாவின் குரலில் இழையோடும் சோகம்.. நம் இதயங்களை நனைக்கிறதே!

     

    பிற்கால வரலாற்றின் முன்பதிவு என்பதை சூசகமாய் சொல்லி வைத்தாரோ?

     

    இறைவா உன் மாளிகையில்

    எத்தனையோ மணிவிளக்கு

    தலைவா உன் காலடியில்

    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன்

    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை

    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்

    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

    உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்

    மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

    இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

     

    http://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ

     

    பாடல்: இறைவா உன் மாளிகையில்

    திரைப்படம்: ஒளிவிளக்கு

    பாடியவர்: பி. சுசீலா

    இயற்றியவர்: கவிஞர் வாலி

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ஆண்டு: 1968

     

    Share
  • ராசி பலன்: 07.04.2013-13.04.2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: பொது வாழ்வில் இருப்போர்கள், வீண் வதந்திகளை நம்பி செயலில் இறங்காமலிருந்தால், உங்களின் உயர்வு சீராக இருக்கும். கலைஞர்களுக்கு உங்கள் திறமைகளை மிளிரச் செய்யும் வாய்ப்புக்கள் பல தேடி வரும். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவது உங்கள் கையில்தான் உள்ளது! மாணவர்கள் புதிய இடங்களில் பழக்கமில்லாதவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பெண்கள் குடும்ப விஷ யங்களில் கோப தாபத்தை கட்டுக்குள் வைத்தால், எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்! சிறிய சச்சரவுகளை பெரிதாக்காதவாறு சமாதானமாக நடந்துகொள்ளுங்கள். அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கமும் தானே விலகி விடும். வியாபாரிகள் எதிலும் நேர்மைக்கு இடம் கொடுக்க, வெற்றியோடு நல்மதிப்பும் உங்களுக்கே!
    ரிஷபம்: வியாபார வாய்ப்புக்களில், சில சந்தர்ப்பங்களில், கைக்கெட்டிய பொருள் வாய்க்கெட்டவில்லை என்ற நிலை நேரிடும். எனினும் விடாமுயற்சியால் விரும்பியதை அடைந்து விடுவீர்கள். பெண்கள் உழைப்பிற்கு நேரம் ஒதுக்குவதை போல, ஆரோக் கியத்திற்கும் நேரம் ஒதுக்கினால், மருத்துவச்செலவுகள் கணிசமாக குறையும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில்தான் இருக்கும். தம்பதிகள் மன வேற்றுமைகள் நீங்க மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்து விடும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், அதிக ஆசை யினால் அதிக பணம் முடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஞாபக மறதியால் வரும் சிக்கல் களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது.
    மிதுனம்: குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும் இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கோடு, வேலைப்பளுவும் உயரும்.  சுய தொழில் புரிபவர்கள்  செய்யும் பொருளாதார முயற்சிகள் வெற்றி பெற தகுந்த படி  திட்டம்  இட்டு வேலை செய்வது அவசியம். வெளி வட்டாரத்தில் கவனமாக இல்லை என்றால், மாணவர்கள்  வேண்டாத  தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். கலைஞர்கள் , சுறுசுறுப்பாக செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும்,   வியாபாரிகள்  வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
    கடகம்: பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைகள் உங்களின் விருப்படியே நடைபெறும் . வீண் செலவுகளைக் குறைப்பதில் சற்று கவனமாக இருங்கள். சேமி ப்பதற்கான வழி வகைகள் மேலும் அதிகரிக்கும். வியாபாரிகளும், தொழிலதி பர்களும், பொருளாதாரத்தில் அகலக் கால வைக்காமல், கட்டுக் கோப்பாய் செயல் பட்டால், லாப த்தின் வரவில் குறைவிராது. பணி புரியும் இடங்களில் முரண்பட்ட கருத்துள்ளவர்களு டன் மோதுதலைத் தவிர்க்கவும். பெண்கள் கணவன் வழி உறவினர்களின் கோரிக்கைக ளை நிறைவேற்றுவதற்கு முதலிடம் கொடுத்து விடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்!
    சிம்மம்: பெண்கள் எந்த நல்ல விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். கிடைக்கும் பலனும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். நண்பர்களின் சந்தோஷத்திற்காக அதிக பணம் செலவழித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்! வியாபார விரிவாக்க விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் மீண்டும் குடும்பத்தில் இணைவதால், மகிழ்ச்சிப் பூ மீண்டும் மலர்ந்து விடும். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராகத் திகழும்.
    கன்னி: பிறரிடம் உள்ள குறைகளை விடுத்து, நிறைகளை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள். நேசம் பாராட்டி உதவுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது சிந்தனையை சிதற விடாமலிருப்பது நல்லது. வரும் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பவரிடம் கலைஞர்கள் உஷாராக இருந்தால், உங்கள் திறமைகளை பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியும். அலுவலக அளவில் பொதுப் பிரச்னைகளுக்காக, நண்பர்கள் சிலரின் நட்பை முறித்துக் கொள்ள நேரிடும். முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை சற்று அதிகரிக்கலாம். எனவே கவனமாக செயல்படுவது அவசியம்.

    துலாம்: வியாபாரிகளுக்கு முன்பிருந்த சுணக்கமான நிலை என்பது மறைந்து இணக்கமான சூழல் நிலவும். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் பார்த்துக் கொள்ளவும். மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், பணியில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக் கைகளில் தென்படும் மாறுதல்களை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உங்களை புரிந்து கொள்வார்கள்.

    விருச்சிகம்: இயன்ற வரை வீண் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். வரவுக்குள் செலவுகள் அடங்கிவிடும். காரணமற்ற கோபம் மற்றும் எரிச்சலால் பெண்களுக்கு வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். போட்டிகள் மூலம் உங்கள் திறமை வெளி படும் வரை கலைஞர்கள் பொறுமையாய் இருப்பது நல்லது. வியாபாரிகள் ஆரோக் யமான போட்டி மூலம் வாடிக்கையாளர்களின் வரவைத் தக்க வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்புடன் திகழலாம். சொத்து விஷயங்களில் உங்களின் நேரடி கவனம் தேவை.
    தனுசு: புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம், கூட்டுத் தொழிலில் இருக்கும் பிரச்னைகள் தீரும். பொருளாதார சிரமங்கள் குறைவதால், பெண்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். இல்லத்தில்,கோபத்தைக் குறையுங்கள். பிரச்னைகளின் தாக்கமும் தானே குறைந்து விடும். சக மாணவர்களின் மனோபாவத்திற்கேற்றவாறு , உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொண்டால், கல்வி தொடர்பான வேலைகள் கடகடவென்று முடிந்து விடும். கடும் பணியில் உள்ளவர்கள் உழைப்பில் சலிப்பு சேராமல், பம்பரமாய் சுழல, சத்தான உணவு வகைகள் சாப்பிடுவது நல்லது. இது நாள் வரை எட்டியும், தட்டியும் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கலைஞர்களை நாடி வரும்.
    மகரம்: வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாக இருக்கும் தம்பதிகளுக்கு வாழ்வு இனிக்கும். மாணவர்கள் கல்லூரி விழா, போட்டிகள் ஆகியவற்றில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள்.சில நேரங்களில் உடன் பணி புரிபவர் ஏட்டிக்குப் போட்டியாக செயல் படுவர். முக்கிய பொறுப்புக்களை ஏற்றுள்ளவர்கள் பதவிக்குரிய அதிகாரம் வரம்பு மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நினைத்ததைவிட நல்ல பலன் நிறையவே கிடைக்கும். வியாபாரிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் சலுகைகளை வலுக்கட்டாயமாய் பெற முயற்சிப்பவர்களோடு கூட்டு முயற்சியில் இறங்க வேண்டாம்.சிறு உடல் உபாதைகளால், பெண்கள் அவதிப்பட நேரிடும்.
    கும்பம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும்.பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது .சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவை பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்கு தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.
    மீனம்: நிலுவையில் உள்ள பாக்கியெல்லாம் வசூலாகி விடுவதால், புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் இறங்குவீர்கள். பொதுவாழ்வில் இயங்கி கொண்டிருப்பவர்கள் தம்மு டைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், உங்கள் பணிகளில் எவரும் பழுது சொல்ல முடியாது. மாணவர்கள் புதிய சூழலில் வீண் வம்பு தும்புக்கு வேலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிக உரி மைஎடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகிவருவது நல்லது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெற, சில நெருக்கடிகளை தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும் .எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

    Share
  • ‘ப்ரமான் சூபியங்க’

    அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.

     லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.

     ‘ஹுய மார்ஹன்’ என்பதற்குப் பதிலாக ‘குட் மார்னிங்’ என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

     “ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?” என்று கேட்டேன்.

     “இல்லை, ரஷ்யா!” என்று கூறியவர், “தாங்கள் பாகிஸ்தானியா?” என்றார்.

     “எப்படி இருவருமே ‘சரியாக’ தவறாகக் கேட்கிறோம்?” என்று நினைத்துக்கொண்டே, “இல்லை, இந்தியன்!” என்றேன்.

     சிறிது நேர  மௌனத்திற்குப் பிறகு, “தாங்கள் ரஷ்யா சென்றதுண்டா?” என்று கேட்டார்.

     “இல்லை, நண்பரே. ஆனால், நானும் என் பள்ளி நண்பனும் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்க ஆசைப்பட்டதுண்டு.” என்றேன்.

     அவர் புன்னகைத்தார். நான் தொடர்ந்து, “நீங்கள் ‘தாய்’ (தி மதர்) நாவலைப் படித்ததுண்டா?” என்று கேட்டேன்.

     அவர் மிகுந்த ஆச்சர்யத்துடன், “உங்களுக்கு மதர் நாவலைப் பற்றி எப்படித் தெரியும்?” கேட்டார்.

     “மாக்சிம் கோர்கி என் அபிமான எழுத்தாளர்!” என்றேன்.

     பரவசத்தோடு, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு எந்த கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும்?” என்று கேட்டார்.

     “அந்தத் தாய் – பெலகேயா நீலவ்னா!” என்றேன்.

     “எனக்கு பாவெல்!” என்றார்.

     தாய் பற்றிய சிலமணித்துளி உரையாடலில் இலக்கை சென்றடைந்தோம்.

     “என் பெயர் ‘ப்ரமான் சூபியங்க’ (Roman Zubenko)” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, என் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, என் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு, “மாலையும் நானே வர விரும்புகிறேன்!” என்று கூறிவிட்டு சென்றார். மாலையும் வந்தார். மீண்டும் பேசினோம். பேச்சு தாய், மாக்சிம் கோர்கி, ஆன்டன் செக்கோவ், ரஷ்யா, இந்தியா என்று சுற்றிவந்தது. இதோ, இன்று, இதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில் கூட ஜி-டாக்கில் ஆன்லைனில் இருக்கிறார்.

     மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத மனிதர்!

     “மொழி இனத்தை இணைக்கிறது. இலக்கியம் உலகையே இணைக்கிறது.”

    Share
  • திருமால் திருப்புகழ்…. (47)

     

    கிரேசி மோகன்

    rajagopalaswamy
    தன்னாதன தான தானான தன்னாதன தான தானான
    தன்னாதன தான தானான -தனதான….

    ——————————————————————————-

    முன்நூல்புரி வேதன், மாலோலன், கண்ணால்முடி பாதம் காணாத, IMGP0774
    அண்ணாமலை ஈசன் நாலாவ -துகுமாரன்
    தன்ஆர்வவி சாரம் நானாரை என்னாலெளி தாக ,தேரேறி
    அந்நாளில்விஜ யோன்வில் போராட -தெளிகீதை,

    சொன்னோய்அது போலென் காதோரம்,அம்மாபொருள் ஓதி நாயேனை,
    சும்மாயிரு நாதர் போலாக,-அருள்வாயே.
    விண்ணோர்மகிழ் வாக சூர்மாய, அன்னார்மகள் ஆனை,ஆலோல
    பெண்ணோ(டு)அலை வாயில் வேலோடு-மயிலேறி,

    நின்னோனுமை பாலன், ஈராறு கண்ணான்,படை ஆறன், தீவீசு
    கண்ணார்மகன், சேவல் தோளோனின் -முறைமாம.
    முன்னாள்இலை ஆலில் ஈரேழை, உண்ணோய்உமிழ் வாயோய், பேரூழி
    கண்ணாகுரு வாயூர் கீதாசி -ரியபாலா,

    பெண்ணாறலை வீசும் காவேரி தன்னால்வளர் சோலை பூவாசம்
    முன்னேவரும் சோழ மாகாணம் -அதில்மேயும்,
    உண்ணாமுலை மாதர் சீராட அம்மாயென ஓடும் சேயாகும்,
    மன்னார்குடி ராஜ கோபால -பெருமாளே….

    ————————————————————————————————————

    images (7)

     

    படங்களுக்கு நன்றி

    Share
  • மக்கள் கேட்கும் கேள்வி (8)

    பவள சங்கரி

    தலையங்கம்

    பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,

    ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?

    குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?

    முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?

    பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.

    தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !

    unnamed

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    Location

     

     

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA

    http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=qAqubO0R4Z0

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kg67JKzoXmY

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ERVa7MZP87Y

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E426goB47kE

    http://www.bbc.com/news/world-latin-america-26862237

     

     

    Earthquake damage -5

     

    பூமகள் சற்று தோளசைத்தாள் !
    தாமாக வீழ்ந்தன
    மாளிகைகள் !
    மாந்தர் மரித்தார்
    சிதைவு களில்
    சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
    கடற்தட்டு
    தடம்மாறிக் கால் உதைத்தால்
    உடனே சுனாமி எழும் !
    பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்
    பூகோள அச்சை !
    காலம் மாறும் ! பருவம் மாறும் !
    நாளின் நீட்சி குன்றும் !
    கனல் திரவம் அழுத்தமாகிக்
    குப்பெனப் பொங்கும் எரிமலைகள் !
    சூழ்வெளி
    பாழாய்ப் போக
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் போர்தான்
    சூழ்ந்துள்ள தப்பா !
    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும் மனிதருக்குத்
    தொல்லை யப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயக் கூத்து அடுத்தடுத்து
    அரங்கே றுதப்பா !
    முடுக்கி விட்ட  பூகோளம்
    உடுக்கடிக்கும்
    ஊழியின் மேளம் !

    +++++++++++++++++++

     

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற் செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் ஓயாதவன் கை !
    குலுக்கிய பின் மீண்டும் குலுக்க வரும் !

    புதிய உமர் கையாம்

     

    Location of Warning

     

    தென் அமெரிக்காவை அருகிய பசிபிக் கடற்தள அடித்தட்டு “மாஸ்கா”  [Mazca Tectonic Plate]  ஆண்டு ஒன்றுக்குச் சராசரி 3 அங்குல நகர்ச்சியில் பிறழ்ச்சி அடைகிறது.   முதல் நடுக்கத்திற்குப் பிறகு  அடுத்த ஓரிரு வாரங்கள் தொடரப் போகும் “பின்னதிர்ச்சியே”  [Aftershocks] மிக்கச் சேதாரம் அளிக்க வல்லது.    அதுபோல் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பூகம்பம், அதே தளத்தில் நேர்ந்த முதல் நடுக்கத்துக்கு முன்னதிர்ச்சியாய் [Beforeshocks]  வந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

    பீட்டர் ஸ்பாட்ஸ்  [கிறிஸ்டியன் விஞ்ஞானக் கண்காணிப்பு வெளியீடு]

    “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ விநாடி குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி ( 8 செ.மீடர்)  (3 அங்குலம்) சரிந்து விட்டது.”

    ரிச்சர்டி கிராஸ் (Richard Gross, Geophysicist NASA Jet Propulsion Lab, California)

    “இந்து மாக்கடலில் 2004 ஆண்டில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லியார்க் விநாடி (milliarc-sec)  (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.”

    நாசா விஞ்ஞானிகள் அறிக்கை

     

    Ring of Earthquake Fire

     

    தென்னமெரிக்காவின் சில்லி நாட்டில் மீண்டும், மீண்டும் பேரிடர்ப் பூகம்பங்கள் ! 

    2014 ஏப்ரல் முதல் தேதியன்று 8.2 ரிக்டர் அளவுப் பூகம்பம் இரவில் ஏற்பட்டு, 7 அடி [2 மீடர்]  உயரச் சுனாமியும் எழுந்து, அரசாங்கம் எச்சரிக்கை விடுத்து, கடற்கரை நகரான லிகுயிக் [[Lquique] பகுதியில் 900,000 மக்கள்  இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது.   அடுத்து 24 மணி நேரத்தில் அதே பகுதியில் 7.6 ரிக்டர் அளவு பின்னதிர்ச்சியாய் [Aftershocks] 14 மைல் கடல் ஆழத்தில் தாக்கியது !   8.2 அளவு முதல் பூகம்பம் 12.5 மைல் கடல் ஆழத்தில் நேர்ந்தது.  லிகுயிக் நகரின் ஜனத்தொகை : 200,000.   விபத்தில் ஆறு பேர் உயிழந்தார்.  நிலநடுக்கத்தில் 2600 இல்லங்களுக்கு மேலாகச் சேதாரம் ஏற்பட்டது.   40,000 பேருக்கு மின்சாரப் பரிமாற்றம்  தடைப்பட்டது.  வட கரைப் பகுதிகளில் மீனவர் படகுகள் பல  தகர்க்கப் பட்டன.

     

    அந்த நிகழ்ச்சி நேர்வதற்கு முன்பு அதே தொடர் முறிவுப் பகுதியில் உள்ள பனாமா, காலிஃபோனியா பூதளங்களில் நிலநடுக்கம் உண்டானது.  பனாமா கால்வாய் போக்குவரத்து இயங்கும் பகுதியில் 6.2 ரிக்டர் அளவும், லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலும் பூகம்பம் உண்டாகி யுள்ளது.  2010 ஆண்டு சில்லி யில் நேர்ந்த 8.8 ரிக்டர் பூகம்பத்தில் சுமார் 700 பேர் மாண்டனர். அப்போதைய  கோர நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பண விரையம் : 30 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் படுகிறது !  இப்போதைய சேதாரத்தால்  நிதியிழப்பு இத்தனை அளவு பெருந் தொகை இல்லை என்று  தெரிகிறது.

     

    Panama Canal on the Fault Line

    சில்லி பெரு நடுக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு  முன்பே 7.6 அளவில் ஒரு முன்னதிர்ச்சியும் [Beforeshocks], நேர்ந்த 24 மணி நேரத்துக்குள்  6.1 அளவில் பின்னதிர்ச்சியும் [Aftershocks] நிகழ்ந்ததும் குறிப்பிடத் தக்கவை.  பின்னதிர்ச்சி பசிபிக் கடலில் கரையிலிருந்து 14 மைல் தூரத்தில், 12 மைல் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாய்க் கணிக்கப் படுகிறது.  1960 இல் சில்லியில் நேர்ந்த 9.5 அளவு மிகப்பெரும் பூகம்பத்தில் 1655 பேர் மாண்டனர் !

    நிலநடுக்கம் நேர்ந்த இம்மூன்று பகுதிகளும் [காலிஃபோர்னியா, பனாமா, சில்லி நகர்ப் புறங்கள்]  பூகம்ப அரங்குகள் கொண்ட “தீக்கனல் வளையத்தில்” [Ring of Fire]  படிந்துள்ளன.  உலகில் ஏற்பட்ட 90% நில நடுக்கங்கள் [எண்ணிக்கை : 81] இந்த தீக்கனல் வளையத்தில்தான்  நேர்ந்துள்ளன என்று அமெரிக்கன் பூதளவியல் அளப்பகம் [United States Geological Survey] கூறுகிறது !  சில்லியில் நேர்ந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்தள அடியில் உள்ள  7000 மைல் நீளமுள்ள  நாஸ்கா அடித்தட்டு முறிவில் [Nazca Tectonic Fault Plate] ஏற்பட்டுள்ளது.

    உலகில் மிகப்பெரும் பூகம்பப் பேரிடர்கள்  கடல் சூழ்ந்த அடித்தட்டுப் பெயர்ச்சித் தளங்களிலேதான் நிகழ்கின்றன !   அந்த அடித்தட்டுப் பிறழ்ச்சிகளின் இடையே நசுக்கப்படும் நீர் மண்டலம் அழுத்தமாகிப் பிளவுச் சேதாரங்களில் பன்மடங்கு அதிகமாகின்றன.  2010 பிப்ரவரி 27 இல் நேர்ந்த சில்லி மாபெரும் பூகம்பத்தைப், பூதளவியல் ஆராய்ச்சி மைய ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆய்ந்து,  அடித்தட்டு களுக்கு இடையே நிரம்பி  நேரும் நீரழுத்தம் சிதைவுகளில் பெரும்பங்கு ஏற்றுள்ளதாகக் கண்டுள்ளார்கள்.

     

    Earthquake damage -2

     

    Earthquake damage -3

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப் படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

     

    சில்லியின் பூகம்பத்தால் பூகோளத்தின் அச்சு நகர்ந்திருக்கலாம் !

    தென்னமெரிக்காவின் சில்லியில் பிப்ரவரி 27 இல் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்து ஒரு நாளின் மணிக்கணக்கைக் குறைத்தி ருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணினிப் போலி மாடலின் (Computer Simulation) மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். “உலகில் நிகழும் மாபெரும் நில நடுக்கங்கள் பல்நூறு கி.மீடர் பாறைகளைப் பூமிக்குள் நகட்டிப் பூகோளத்தின் பளுச் சமன்பாட்டை வேறிடத்துக்குத் தள்ளிவிடும்.  அதன் விளைவால் பூமியின் சுழற்சி பாதிக்கப்படும்.  (சில்லியின் 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பத்தில்) ஒரு நாளின் நீட்சி 1.26 மைக்ரோ-செகண்டு குன்றி விட்டது.  பூகோள அச்சு பளுவைச் சமப்படுத்த 2.7 மில்லியார்க் விநாடி (milliarc-sec) ( 8 செ.மீடர்) (3 அங்குலம்) சாய்ந்து விட்டது.” என்று நாசா ஜெட் உந்துக்கணை பூதளவியல் விஞ்ஞானி, ரிச்சர்டி கிராஸ் கூறுகிறார்.

     

    இம்மாதிரிப் பூகம்ப மாடல்களைக் கணினிப் போலி மாடல் மூலம் காணலாம்.  ஆனால் அந்த மிகச் சிறிய பூகோள விளைவுகளை கருவிகள் மூலம் உளவி அளப்பது மிகச் சிரமமானது.  சில மாறுதல்கள் மட்டும் வெளிப்படையாகத் தெரிபவை.  “அருகில் உள்ள சில தீவுகள் நகட்டப் படலாம்,” என்று பாதிக்கப் பட்ட தளங்களை உளவு செய்த பிரிட்டன் லிவர்பூல் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன்டிரியாஸ் ரியட்பிராக் (Andreas Rietbrock) கூறுகிறார்.  சில்லியின் மிகப் பெரிய நகரம் கன்செப்ஷன் (Concepcion) கரைக்கு அப்பால் உள்ள ஸான்டா மரியா தீவு (Santa Maria) பூகம்பத்தால் 2 மீடர் (6 அடி) உயர்ந்திருக்கும் என்றும் கூறுகிறார்.  தீவில் காணப்படும் பாறைகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களால் நேர்ந்த மேல்மட்ட நகர்ச்சியை நோக்கிக் காட்டின என்றும் கூறுகிறார்.

    பூகம்பத்தின் பனிவழுக்கு விளைவு என்றால் என்ன ?

    பிரிட்டிஷ் புவியியல் தள ஆய்வு நிபுணர் டேவிட் கெர்ரிட்ஜ் (David Kerridge) இதைப் ‘பனி வழுக்கு விளைவு’ (Ice Skater Effect) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது பனி வழுக்குத் தளத்தில் வட்டமிடும் ஒரு பெண் தன் கரங்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் போது அவளது சுற்று வேகம் மென்மேலும் மிகையாகிறது.  அதுபோல் பூகோளம் சுற்றும் போது அதன் உட்பளு நகர்வதால் அதன் சுழற்சி வேகம் மாறுகிறது என்று டேவிட் கெர்ரிட்ஜ் கூறுகிறார்.

     

    Earthquake damage -4

    “பூகம்ப மானது ஐயமின்றிப் (பளுவை நகர்த்தி) பூகோளத்தை ஒரு வளையமாக்கி ஓர் ஆலய மணி போல் ஆக்கி விட்டது,” என்று உதாரணம் கொடுக்கிறார். ஆலய மணியின் நடுத் தண்டு இங்குமங்கும் நகரும் போது மணிச் சிமிழும் அதற்கேற்பச் சாய்கிறது.  மணிச் சிமிழின் அச்சும் சரிகிறது. “இந்து மாக்கடலில் 2004 இல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு இந்தனேசியப் பூகம்பத்தில் மாபெரும் சுனாமி எழுந்து ஒரு நாளின் நீட்சியை 6.8 மைக்ரோ விநாடிகள் குன்ற வைத்துப் பூகோள அச்சும் 2.3 மில்லி வளைவி விநாடி (7 செ.மீ) (2.5″) மாற்றம் அடைந்தது.” என்று நாசா அறிக்கை ஒன்று கூறுகிறது.  இம்மாதிரி மாற்றங்கள் பூமியில் விளைந்து அடுத்து மாறுவது வரை அப்படியே தொடர்கின்றன !  மேலும் பூமியில் அத்தகைய சிறு மாறுபாடுகள் சூழ்வெளி வாயு மண்டலத்தில் நேரும் பெரும் மாறுபாடுடன் இணைந்து கொள்கின்றன என்று அறியப் படுகின்றது.

     

    History of Chile Earthquakes

     

    சில்லியின் நில நடுக்கம் எவ்விதம் புவி அச்சை மாற்றியது ?

    சமீபத்தில் சில்லியில் நேர்ந்த 8.8 ரிக்டர் அளவுப் பூகம்பம், உட்தளப் பளுவை உள்ளே தள்ளி இருந்தால் அம்மாற்றம் புவி அச்சை நகர்த்தி இருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கருதுகிறார்.  ஆலய மணி அடிக்கும் போது மணித் தண்டு மையத்தை நோக்கி வரும்போது மணிச் சிமிழும் சாய்கிறதல்லவா ?  அதை மூட்டி விடுவது பூமியின் ‘அடித்தட்டு நகர்ச்சி இயக்கமே’ (Plate Tectonics Interactions).  வெவ்வே றான அடித்தட்டுப் பளுக்களின் தனித்துவ நகர்ச்சியே  நில நடுக்கத்தை உண்டாக்குகிறது.  மெதுவாகப் புவி அச்சு பம்பரம் போல் வட்டமிடுவதே ‘அச்சு நகர்ச்சி’ என்று கூறப்படுகிறது. (The Shift of the Earth’s Axis is called “Precession”). பூமி தன்னைத் தானே சுற்ற 24 மணி நேரம் ஆகிறது.  பூமியின் சாய்ந்த அச்சு நகர்ச்சியால் மெதுவாக ஒரு வட்டமிட சுமார் 25800 ஆண்டுகள் ஆகின்றன.  அச்சு நகர்ச்சி புவிச் சுற்றில் அடித்தட்டு ஆட்டப் பளுத் தள்ளுதலால் நிகழும் ‘நெம்பு மாறுபாட்டால்’ (Change in Torque) உண்டாகிறது.  அதனால் புவி அச்சுக் கோண வேகமும் (Angular Velocity) மாறுகிறது.

     

    உதாரணமாக இரண்டு மெல்லட்டைப் புத்தகங்களை எதிர் எதிரே வைத்து ஒன்றை ஒன்று நெருங்கச் செய்வோம்.  சில சமயம் புத்தகத் தாள்கள் ஒன்றுக்கு அடியில் ஒன்றாய்ச் சுமுகமாகச் சொருகிக் கொள்ளலாம்.  அல்லது ஒன்றுக்குள் ஒன்று நுழைய முடியாது கட்டுத் தாள்கள் சுருட்டிக் கொண்டு புத்தக இடத்தை மாற்றலாம்.  இந்தப் புத்தகங்களே புவிக்குப் பளுவாய் அமைந்துள்ள அடித்தட்டுகள் (Tectonic Plates) என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவ்விதம் அடித்தட்டுகள் நெருங்கும் போது பூமியின் உட்பளு இடம் மாறுகிறது.

    சில்லி நாட்டின் பல மைல்களுக்குக் கீழே நாஷ்கா அடித்தட்டு, தென் அமெரிக்க அடித்தட்டு   (Nazca Plate & South American Plate) என்று இரண்டு அடித்தட்டுகள் ஆண்டுக்கு 7 செ.மீடர் வேகத்தில் ஒன்றை ஒன்று நெருங்கி வருபவை.  அவை ஒன்றின் மேல் ஒன்று குதிரை ஏறும் போது நில நடுக்கம் உண்டாகிறது.  அப்படி ஏறும் போது மேலும் கீழும் ஆடும் ஸ்பிரிங் போல் (Spring Wire) அடித்தட்டுகள் குதிக்கின்றன.  அந்த அதிர்வலைகளே நில நடுக்கமாக பூமியின் தளப்பகுதியில் மேலும் கீழும் தாவி அல்லது பக்க வாட்டில் எதிர் எதிராய் நகர்ந்து வீடுகளை இடிக்கிறது, பாலங்களை உடைக்கிறது, வீதிகளைப் பிளக்கிறது !

     

    Locaton of Chile Earthquake

     

    பூகோள அதிர்ச்சிகளில் என்ன நிகழ்கின்றன ?

    பூகம்பத்தின் போது பொதுவாக நேரும் விளைவுகள் :

    1.  புவி அடித்தட்டுகள் நகர்ச்சி :  நாஷ்கா தென் அமெரிக்க அடித்தட்டுகள் மோதி ஒன்றின் மேல் ஒன்று ஏறுதல் அல்லது, அடித்தட்டுகள் எதிர் எதிர் உராய்வு.  அல்லது அடித்தட்டுகள் மேல் கீழ்ச் சரிவு.

    2.  அசுரப் பூகம்பம் ஏற்படுதல் : உதாரணம் சில்லியின் 8.8 ரிக்டர் அளவுத் தீவிரம். (பிப்ரவரி 27, 2010)

    3.  பூமியின் உட்பளு தள்ளப்படுதல் :  பளுக் கடத்தல் நில நடுக்கத் தீவிரத்தைச் சார்ந்தது.

    4.  புவி அச்சு சாய்வு :  பளுவைப் பொருத்தும், இட நகர்ச்சியைப் பொருத்தும் அச்சின் சரிவு மாறுபடும்.

    5.  புவி அச்சுக் கோணத்தின் வேகம் மாறுபடுதல் (Angular Velocity Changes).

    சுருங்கச் சொன்னால் பூகம்பத்தின் போது நேரும் பளுத் தள்ளல், இடமாறுபாடு, வேகம் ஆகியவை ஈடுபாடு கொண்டு புவி அச்சைத் திரிபு செய்கின்றன.  பூகம்பங்கள் ஏற்படும் போது இவ்விதம் பன்முறைப் பூமியின் வரலாற்றில் புவி அச்சின் சரிவு மாறுபட்டுள்ளது.

     

     

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவித்தார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

     

     

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத் தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டி ருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளை யாடல்கள்!

     

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

     

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

    உலகத்தில் நேர்ந்த பேரிடர் நிலநடுக்கங்கள்

     

    2010 ஆண்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குடிமக்கள் வசிக்கும் உலகப் பகுதிகளில் பல நில நடுக்கங்கள் நேர்ந்துள்ளன.  நமக்கு வரலாறு அறிந்த காலம் முதல் உலகில் ஏற்பட்ட எரிமலைகள், நில நடுக்கங்கள் செய்த கோர விளைவு களைப் பதிவு செய்து வந்திருக்கிறோம்.  சைனா கிங்கை மாநிலத்தில் (Qinghai) ஏப்ரல் 14 இல் 6.9 ரிக்டர் அளவில் ஒன்று, எப்ரல் 5 இல் மேற்கு மெக்ஸிகோவில் 7.2 ரிக்டர் அளவில் ஒன்று, ஜனவரி 13 இல் ஹெய்தியில் 7.0 ரிக்டர் அளவில் ஒன்றும், பிப்ரவரி 17 இல் சில்லியில் 8.8 ரிக்டர் அளவில் ஒன்றும் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவை.  சில்லியின் கடற்கரைப் பகுதியில் மட்டும் 1973 முதல் 7 ரிக்டர் அளவை மிஞ்சிய 13 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன !  இவை அனைத்தும் பூமியின் உட்பளுவை அங்குமிங்கும் நகர்த்திப் புவி அச்சில் திரிபுகளை உண்டாக்கி வந்துள்ளன !  இவற்றால் நாளின் நீட்சி குன்றியும் மிஞ்சியும் போகலாம் !  அதைத் தவிர பூமிக்கு வேறென்ன சூழ்வெளி மாற்றங்கள் நேரும் என்று இன்னும் நாசா விஞ்ஞானிகள் விளக்கமாய் அறிவிக்கவில்லை !

     

     

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று சில மணிநேரங்களுக்கு முன்பாக மக்களுக்கு அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் கண்டு பிடிக்கப்பட வில்லை !   இப்போது உள்ள கருவிகள் சில விநாடிகளுக்கு முன் (20 -30 sec) மட்டும் அறிவிக்கக் கூடியவை.   அவை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதா !    எரிமலை வெடிப்பு எழுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத் தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து இப்போது முன்னெச்சரிக்கை செய்ய முடிகிறது ! ஆனால் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணிநேரம் முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஞ்ஞானக் குறைபாடாகும் !

     

     

    (தொடரும்)

     

    தகவல்:

    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)

    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Seismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/seismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
    (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html (Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html (Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html (Major Earthquake in Iran
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html (Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    7 (f) http://jayabarathan.wordpress.com/2009/04/09/earthquake-in-italy/ (Italian Earthquake 2009)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9. Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)
    14. Precession of the Earth’s Axis Coming to Light
    15. BBC News : Chile Counts Costs as Tsunami Ebs (Feb 28, 2010)
    16. Business Week : Chilean Quake Likely Shifted Earth’s Axis, NASA Scientist Says By : Alex Morales (March 1, 2010)
    17 BBC News : Hundreds Die in West China Quake (April 14, 2010)
    18. How the Chile Earthquake Changed the Earth’s Axis By : A.W. Berry (Mar/April 2010)
    19. http://www.bbc.com/news/world-latin-america-26862237 [April 3, 2014]
    20. http://www.cnn.com/2014/04/01/world/americas/chile-earthquake/ [April 2, 2014]
    21. http://en.wikipedia.org/wiki/2010_Chile_earthquake [April 2, 2014]
    22.http://rt.com/news/chile-earthquake-aftershock-evacuated-025/ [April 3, 2014]
    23.http://www.livescience.com/39110-japan-2011-earthquake-tsunami-facts.html [August 22, 2013]
    24.http://www.eurasiareview.com/04042014-ring-of-fire-fears-following-earthquakes-in-california-chile-and-panama/ [April 4, 2014]
    25. http://rt.com/usa/eathquakes-ring-fire-pacific-145/

    ********************

    [S. Jayabarathan]  jayabarathans@gmail.com   (April 5 , 2014)

    3/30/2014 — Urgent Earthquake Watch — Yellowstone, California, New Madrid, East Coast, PNW

    Tsunami alert after 8.2 earthquake strikes off the coast of Chile

    S0 News March 31, 2014: West Coast Earthquakes

    The Ring Of Fire is Heating Up

    BREAKING: Major 8.2 Earthquake Hits Chile, TSUNAMI Warning for Pacific Coast

    4/01/2014 — 8.2M Earthquake Strikes Chile — Tsunami warnings were issued
    Share