Blog

  • பார்ப்பனர் மீது பகைமை

    –சு.கோதண்டராமன்.

    பார்ப்பனர்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திரைப்படங்களில் பரிகசிக்கப்படுகின்றனர். மேடைகளில் இகழப்படுகின்றனர். ஒரு உறுப்பினர் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குறை கூறும் போக்கு தமிழ் நாட்டில் காணப்படுகிறது. ஒரு பார்ப்பான் குடித்து விட்டுத் தரையில் கிடந்தால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவார்கள். அதுவே வேறு சாதி்க்காரன் செய்தால் அவனது சாதிப் பெயரைச் சொல்வதில்லை. தமிழ்ச் சமூகம் பார்ப்பனர்களிடத்தில் உயர்வான நடத்தையை எதிர்பார்க்கிறது.

    தமிழ்நாட்டில் இன்றுவரை நடந்த சாதிக் கலவரங்களில் ஒன்றில் கூட பார்ப்பனர் பங்கு பெற்றதில்லை. ஆனால் சாதிக் கொடுமை என்று சொன்னால் முதலில் விமர்சிக்கப்படுவது அவர்கள் தாம்.

    பார்ப்பனர்களில் கலப்புத் திருமணம் நடந்துள்ள அளவுக்கு வேறு சாதிகளில் ஏற்பட்டுள்ளதா? சர்வே எடுத்து சதவீதம் பாருங்கள் தெரியும். ஆனாலும் சாதிக் கட்டுப்பாடு என்றால் சாடப்படுவது பார்ப்பனர் தாம்.

    பிரதாப முதலி தவறு செய்தால் ஆசிரியர் அவனைத் தண்டிக்கக் கூடாது, பதிலாக அவனுடைய நண்பன் கனகு முதலியை அடிக்க வேண்டும் என்று பெற்றோர் உத்திரவிடுவதாக  பிரதாப முதலி சரித்திரத்தில் வரும். ஆங்கிலத்தில் whipping boy என்பார்களே, அது போல யார் தவறு செய்தாலும் அடி வாங்குவதற்கு என்று விதிக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

    பாலசந்தர் அரங்கேற்றத்தில் ஒரு பார்ப்பனப் பெண் விபசாரியாக ஆவதைக் காட்டினார். பார்ப்பனர் உள்பட எல்லாரும் கண்டு மகிழ்ந்தார்கள், பாராட்டினார்கள். எழுத்தாளர் சுஜாதா தன் கதைகளில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை விவரித்திருக்கிறார். அதை எல்லோரும் படித்து இன்புற்றார்கள். அவரே ஒரு நாடார் பெண் ஓடும்போது ஏற்படும் உடல் அசைவை அவருக்கே உரிய நடையில் வர்ணித்தபோது நாடார் சமூகமே கொதித்து எழுந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

    தனிப்பட்ட பார்ப்பனர் தாக்கப்பட்டால் வெகுண்டு எழுவர். ஆனால் சமூகம் என்ற வகையில் பார்ப்பனர்களுக்கு சூடு சொரணை கிடையாது. யாரையோ வைகிறான், வைதுவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவர்.

    ஏனெனில் பார்ப்பனர்களுக்கு சமூக உணர்வு என்று ஒன்று கிடையாது. சமூகம் என்றால் ஒன்றுபடுத்தும் சக்தி ஒன்று இருக்க வேண்டும். பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துவது எது? மொழியா? அல்ல. தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு பேசும் பலர் உள்ளனர். அவரவர் ஆசாரங்கள் வேறு.

    சமயக் கொள்கையா? அல்ல. சைவம் வைணவம் என்று இரு பெரும் பிளவுகளுக்கு இடையே மூண்டிருந்த பகைமைத் தீ அணைந்துவிட்டாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. மாத்வ சம்பிரதாயம் வேறு. பார்ப்பனர்களிலே கோயிலே கதியாகக் கிடப்போரும் உண்டு, கோயிலுக்கே போகாதாரும் உண்டு, நாத்திகவாதிகளும் பலர் உண்டு. வடமர், வாத்திமர் என்று தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத உட்பிரிவுகள் பற்பல.  குடும்பத்துக்குக் குடும்பம் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன.

    ஒரு தலைமை உண்டா? இல்லை. வைணவர்களில் வடகலை தென்கலைப் பிளவுகள். சைவர்களில் காஞ்சி மடத்தைச் சார்ந்தவர்களும் உண்டு, சிருங்கேரி மட ஆதரவாளர்களும் உண்டு. எந்த மடத்தையும் ஏற்காதவர் எண்ணிக்கை தான் மிகுதி.

    இத்தகைய நிலையில் பார்ப்பனர்களை ஒரு சமூகமாகக் காணவேண்டும் என்றால் அதற்கான ஒரே நியாயம் அவர்களது முன்னோர் வேதம் கற்றிருந்தனர் என்பது தான். இந்தத் தலைமுறையில் வேதம் கற்போர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. எதை வைத்து இன்று எல்லாப் பார்ப்பனரையும் ஒரே சமூகமாகக் கூற முடியும்?

    சிவாசாரியார்கள் பார்ப்பனர்களா? அல்ல. இரு திறத்தாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பூணூல் அணிந்திருக்கிறார்கள், ஸம்ஸ்கிருத மந்திரம் கூறுகிறார்கள் என்பது தான் அவர்களைப் பார்ப்பனரோடு இணைப்பது. அவர்களுக்கு வேதப் பயிற்சி இல்லை, ஆகமப் பயிற்சி மட்டும் தான் உண்டு என்பதும் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டவர் என்பதும் பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    பூணூல் மட்டும் தான் பார்ப்பன அடையாளம் என்றால் பத்தர்களையும் கோமுட்டி, வாணிய செட்டியார்களையும் கூட பார்ப்பனர் என்று கூறலாம். ஸம்ஸ்கிருதம் அறிந்திருப்பது தான் பார்ப்பனீயம் என்றால் இன்று பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்களில் ஸம்ஸ்கிருதம் அறிந்தோர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. தமிழுக்குத் தொண்டு செய்த பார்ப்பனர்கள் அன்றும் இன்றும் மிகப் பலர். சென்ற நூற்றாண்டு வரை ஸம்ஸ்கிருதம் அறிந்த பிற சாதியினர் தொகை மிகுதி. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு எடுத்துக்காட்டு.

    தாக்கப்படுதல் என்ற ஒரு தன்மை தான் பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துகிறது.

    மேடையில் பார்ப்பனர்களைத் தாக்குவோர் தங்கள் அந்தரங்க ஆலோசகராக, வழக்கறிஞராக, மருத்துவராக, ஆடிட்டராக பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்வது உலகறிந்தது.

    கேட்டால் பார்ப்பனர்கள் மீது எங்களுக்குப் பகை இல்லை. பார்ப்பனீயம் தான் எங்கள் எதிரி என்பார்கள். அது என்ன ஈயம்? விளக்கம் கேட்டால் பதில் கிடைக்காது. அவர்களுக்கே தெரியாது.

    மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்க மறுப்பது தான் பார்ப்பனீயம் என்ற வாதம் தற்போது எடுபடாது. எந்தச் சாதியாக இருந்தாலும் பூணூல் அணிவித்து வேதம் கற்பிக்கத் தயாராக உள்ள பார்ப்பன நிறுவனங்கள் இன்று உள்ளன. பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர் அதில் சேர்ந்துள்ளார்கள்?

    இணையத்தில் வேதம் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதே, வேதத்தை இகழ்வோர் எத்தனை பேர் அதைப் படித்துவிட்டு ஆதாரத்துடன் இகழ்கிறார்கள்?

    கோயில் பூசைக்கு மற்றவர்களை அனுமதிக்கவில்லை என்பது அந்த ஈயங்களில் ஒன்று. இன்று எல்லாச் சாதியினருக்கும் ஆகமப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பயிற்சி பெற்ற சிலரும் அதில் போதிய வருவாய் வருவதில்லை என்று அதை விட்டு விட்டு வேறு தொழிலை நாடுவதைப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

    ஒரு நேர்முகத் தேர்வில் தோற்றுப் போன ஒருவன் பார்ப்பானுக்குப் பார்ப்பான் உதவி செய்துவிட்டான். எனக்குக் கிடைக்கவில்லை என்று புலம்பினான். நேர்முகம் நடத்தியவர் பார்ப்பனர் அல்ல என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே பேச்சை மாற்றிக் கொண்டு பார்ப்பான் ஏதோ சாமர்த்தியம் செய்து காசைக் கீசைக் கொடுத்து வேலை வாங்கிவிட்டான் என்று சொல்லத் தொடங்கினான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பார்ப்பனீயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் அவர்களுக்கு ஒரு சமாதானம் ஏற்படுகிறது.

    பார்ப்பனீயம் என்று இவர்கள் சொல்வதின் உண்மையான வடிவம் என்ன என்றால் அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். விரைவில் முன்னேறி விடுகிறார்கள் என்பது தான். இது தோல்வியுற்றவர்களுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு. இதை மறைத்து அதற்கு வரலாற்றைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

    3000 ஆண்டுகள் முன்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்து வட இந்தியாவிலிருந்த திராவிடர்களைத் தெற்கே துரத்தியதும் அல்லாமல் தெற்கிலும் குடியேறினர் என்று என்றைக்கோ ஒரு விஷமக்கார ஆங்கிலேயன் எழுதி வைத்த,  புளித்துப் போன வாதத்தைக் கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் இவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. அவன் எழுதியது சரி தானா என்று எத்தனை பேர் சுயமாக வரலாற்றை ஆராய்ந்திருக்கிறார்கள்?

    பார்ப்பனர் மீது வெறுப்பு என்பது தமிழ்நாட்டுக்கே உரியது. கேரளம் முதலான பிற தென் மானிலங்களில் உள்ள பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அங்கு இந்தத் துவேஷம் காணப்படாதது ஏன்? இவர்கள் கூற்றுப்படி வட இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் கைபர் கணவாய் மூலம் வந்தவர்கள் தாமே?

    இந்த வெறுப்பு பற்றி முழுமையாக ஆராய்வோம். இதற்கு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணம் உண்டு. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் (எல்லோரும் அல்ல) வந்தேறியவர்கள் தாம். பாரசீகத்திலிருந்து அல்ல. தென்னிந்தியாவின் வடபகுதியிலிருந்து. 3000 வருடங்கள் முன்பு அல்ல. சுமார் 1500 வருடங்கள் முன்பு. கடந்த 3000 வருட இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் கடந்த காலங்களில் பார்ப்பனரும் அல்லாதாரும் இணக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். பகைமை உணர்வு ஏற்பட்டது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். முழுமையாக ஆராய்வோம்.

    பூர்விகக் குடிகள் – தொல்காப்பியர் காலம்  
    தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 ,  பாயிரம்.]

    பூர்விகக் குடிகள் – சங்க காலம்
    சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

    சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் –  தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல்  வேண்டும்.

    பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்
    களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

    1. தீட்சிதர்கள்    
    நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

    2. நம்பியார்கள்    
    சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

    3. தென்கலை வைணவர்கள்    
    பழந் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

    4. ஆனைக்கா அந்தணர்கள்
    திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள். இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும். (பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவெள்ளறைக் கோவிலின் முதிய பட்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு சொலவடை சொன்னார். ஆதி ரங்கம், அடுத்து வெள்ளறை, அடுத்தது ஆனைக்கா என்று பொருள்படும் அது எனக்கு மறந்து விட்டது. மறவாதது, இம்மூன்று தலங்களிலும் பூசை செய்பவர்கள் சோழியர்கள் என்று அவர் கூறியது.)

    5. வீழி அந்தணர்    
    ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

    6. நயினார், பட்டர், திருசுதந்திரர்
    திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்லது குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

    7. களப்பிரர் கால அந்தணர்கள்
    சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

    அது என்ன சமய மாற்றங்கள்?
    தொல்காப்பியத்தில் சிவன் வழிபாடு இல்லை. சங்க இலக்கியங்களிலும், அம்மையார் பாடல்களிலும் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் ஏற்பட்டதும் ஐந்தெழுத்து பிரபலமானதும் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச் சமயமாக ஆனதும் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

    சைவம் அரச ஆதரவைப் பெற்றது. இத் தெய்வம் வேதத்தில் இல்லாதது என்பதால் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை மற்ற அந்தணர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

    புதிய குடியேற்றம்
    அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. (சங்க காலத்திலும் வடமர் இருந்தனர் என்று பார்த்தோம்.) மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில்  குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

    இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

    சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சமணத்தால் சீரழிந்த வைதிக சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

    ஜெயமோகன் 9.8.2014 அன்று அவரது வலைத்தளத்தில் எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

    கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய – வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

    அது போல, சோழ மன்னர்களும் புறச்சமயத்தோரான களப்பிரர்களுக்கு எதிராகத் தங்கள் அதிகாரத்தைச் சைவம் மூலம் நிலைப்படுத்துவதற்காக, வட மாநிலங்களிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்கலாம்.

    புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.  3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

    வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. (அம்மையார் ஈசனைச் சுடலைச் சாம்பல் பூசியவனாக வர்ணிக்கிறாரே அன்றித் தானோ பிற அடியாரோ திருநீறு பூசியிருப்பதாகக் கூறவில்லை.) இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது.

    திருநாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், திருவொற்றியூர் காரோணம் என்ற பெயர்களை குஜராத் மாநிலத்தின் கார்வான் பகுதியில் தோன்றிய லகுலீச பாசுபத சமயத்தோடு தொடர்பு படுத்தும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. இந்தப் பாசுபதர்கள் தாம் சைவத்தை ஒரு தனிச் சமயமாக உருவாக்கினர். அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தான் மிகுதியாக ஏற்பட்டது என்பதையும் கவனிக்க.

    மராட்டிய வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும். என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் மிகக் குறைவு. அவர்கள் சென்ற நூற்றாண்டு வரை மத்தியான்னப் பறையர் என்று அழைக்கப்பட்டனர்.

    அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
    அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
    சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
    நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

    இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப் புலையனும் அஃதென்னும் வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

    இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு  நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

    குடியேறிய வடமர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி – வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

    சிவாச்சாரியார்கள்
    சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் பூசகராக ஆக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.

    சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

    மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I  page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

    திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர்– மு.நளினி, இரா.கலைக்கோவன்.] பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார்.[புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாகப் பூசகர் ஆக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

    பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

    தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல
    தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

    பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் ஸம்ஸ்கிருதம் இலக்கிய மொழியாக இருந்தது. பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

    வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

    திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்

    எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

    ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?
    சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி  இருக்கலாம்.

    சோழ அரசர்கள் அந்தணர்களுக்கு வரியில்லாத நிலங்களை மானியமாக அளித்தார்கள் என அறிந்தோம். இந்த நிலங்கள் எங்கிருந்து வந்தன? நிலம் புதிதாக உற்பத்தி செய்ய முடியாதது. ஏற்கெனவே பழந்தமிழ்க் குடிகள் விவசாயம் செய்த நிலத்தைத் தான் அரசர்கள் அந்தணர்களுக்குக் கை காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் அரசருக்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக இந்தப் புதிய அந்தணர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்திரவிட்டிருக்க வேண்டும்.

    இதில் விவசாயிகளுக்குப் பொருளாதார நட்டம் ஏதுமில்லை. அரசனுக்குச் செலுத்துவதற்குப் பதிலாக அந்தணருக்குச் செலுத்தினர். அந்தணரும் வந்ததைக் கொண்டு எளிமையாக வாழ்ந்து தத்தம் கடமையைச் செய்து கொண்டிருந்தனர்.

    17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சாதிப் பெயரைப் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வது வழக்கில் இல்லை. கம்பர் படையாச்சி, ஓட்டக்கூத்தர் முதலியார் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அருணகிரிநாதரின் சாதியை அவர் பெயரைக் கொண்டு சொல்ல முடிகிறதா?

    சாதிப் பின்னொட்டுகள் தலைதூக்குவது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட ஆங்கிலேயர் நில உடைமையை ஆவணப்படுத்தத் தொடங்கும்போது இந்த இறையிலி நிலம் யாருக்கு உரியது என்று விசாரிக்கத் தொடங்கினர். இங்கிலாந்து நாட்டு முறைப்படி உழுது விளைவித்தவரைக் குத்தகைதாரர் என்றும் உட்கார்ந்து சாப்பிட்டவரை உரிமையாளர் என்றும் ஆவணப்படுத்தினர். இது பரம்பரையாக உழுது பயிரிட்டவர்களுக்குக் கசப்பை ஊட்டியிருக்க வேண்டும். பார்ப்பன வெறுப்பின் வேர் இங்கே தான் இருக்கிறது.

    ஆங்கிலேயர் தங்கள் நாட்டில் உள்ளது போல இங்கு சர்நேம் இல்லாதது கண்டு வியந்தனர். மக்களுக்கு சர்நேம் ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தினர். அப்பொழுது ஒவ்வொரு குழுவினரும் ஒரு உயர்ந்த பெயரைத் தேர்ந்தெடுத்தனர். ஐயன், முதலி, படையாட்சி, தேவன், செட்டி (சிரேஷ்டி- உயர்ந்தவர்) என்று எல்லாப் பட்டப் பெயர்களும் உயர்வைப் பறை சாற்றுவதாகவே உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்தப் பெயர்கள் எளிமையாகவே இருந்தன. அதன் பின்னர் தான் இவற்றில் அர் ஆர் விகுதி சேர்க்கப்படலாயிற்று- ஐயர், முதலியார், படையாட்சியார், தேவர், செட்டியார் என. 19ஆம் நூற்றாண்டுக் கதைகளைப் பார்க்கவும். பாரதியின் கதைகளிலும் காணலாம்.

    மக்களைப் பிரிப்பதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றுவிட்டனர். தங்கள் கம்பெனியிலும் அரசாங்கத்திலும் வேலை செய்ய வல்ல இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தபோது கல்வியே தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கை கொடுத்தனர். மற்றவர்கள் தயங்கியபோது இவர்கள் மேலைநாட்டுக் கல்வியைத் துணிந்து ஏற்றனர். அவர்களது பொருளாதாரம் மேலோங்கத் தொடங்கியது. மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்படலாயிற்று.

    பார்ப்பனர்களிலும் ஏழைகள் உண்டு, மண்டுகள் உண்டு, குணக்கேடர்கள் உண்டு. ஆயினும் பெரும்பாலான பார்ப்பனர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள், பதவி உயர்வு பெருகிறார்கள். பிற சாதியினர், பிற மதத்தவர் கூடத் தங்கள் நிறுவனங்களில் பார்ப்பனரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஏன்? பார்ப்பனர்களின் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அவர்கள் மீது தேவையற்ற காழ்ப்புணர்வு குறையும், எல்லோரும் முன்னேற முடியும்.

    பார்ப்பனர்களுக்கு என்று கடவுள் விசேஷமான அறிவைக் கொடுக்கவில்லை. அறிவாளிகள் எல்லாச் சமூகத்திலும் உண்டு. பார்ப்பனர்களின் சிறப்புக்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறையில் உள்ள சிறப்பு தான்.

    அது என்ன வாழ்க்கை முறை?
    வேதம் கற்கும் முறை பற்றி அறிவீர்கள். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. இதில் பயின்றவர்கள் எந்தக் கல்வியையும், கலையையும் எளிதாகக் கற்க முடியும். தற்காலத்தில் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வேதக் கல்வியை விட்டுவிட்டபோதிலும், கடுமையான வேதப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவரும் புரோகிதர்களால் வழிநடத்தப்படுவதால் அவர்களுக்கு எந்த வேலையைச் செய்தாலும் சிரத்தையோடு செய்வது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

    சந்தியா வந்தனம் முதலாக பல சடங்குகளைப் பார்ப்பனர்கள் அனுசரிக்கிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தாமாகவே விரும்பி தம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதில் பயிலும் எல்லாச் சாதி மாணவர்களும் மேல் நிலை அடைவதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    சாதிகளற்ற சமுதாயத்தை விரும்பிய பாரதி பார்ப்பானைப் பூணூலைத் துறக்கச் சொல்லவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவிக்கிறார். அவர் தன் பூணூலை நீக்கிக் கொண்டதாகத் திரைப்படத்தில் காட்டுவது உண்மையா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

    அவர் சொல்கிறார், காஷ்மீரில் இந்துக்களிடையே சாதிகள் கிடையாது. எல்லோரும் பிராமணர்கள் தாம். அது போல இந்தியா முழுவதும் மற்ற எல்லா சாதியினரையும் மச்ச மாமிசங்களைக் கைவிடச் சொல்லி ஒரு பூணூலை அணிவித்தால் சாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்.

    வெவ்வேறு நீளமுள்ள இரு கோடுகளைச் சமப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இரு வழிகள் உண்டு. பெரிய கோட்டை அழிக்கலாம் அல்லது சிறிய கோட்டை நீட்டலாம். பார்ப்பனர்களைத் தரம் தாழ்த்துவதன் மூலம் அடையப்படும் சமத்துவத்தை விட அவர்களது வெற்றியின் அடிப்படையைத் தெரிந்து கொண்டு அவர்களது நிலைக்கு உயர்வது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்துக்கான வழியாகும்.

    படம் உதவிக்கு நன்றி:  http://thamizhoviya.blogspot.com/2011/11/blog-post_07.html

    Share
  • ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    Ore Naal Unnai Naan

    அன்பின் ஆர்ப்பரிப்பா?  காதல்.. இல்லை.. அது ஆனந்த பைரவியா?

    எப்போது இது தோன்றுமென்பதை எவரும் முன்கூட்டி சொல்வதில்லை! இந்த ஒற்றைப்பூ நெஞ்சுக்குள் பூத்துவிட்டால் சந்தோஷ மழைக்கென்றுமே பஞ்சமில்லை!  கண்ணுக்கு மட்டுமே முதல் தகவல் கிடைக்க..  அது மனசுக்குள் சென்று செய்யும் கலவரமிருக்கிறதே .. காதலித்தவர்களுக்கே புரியும் – அந்த ஆனந்த அவஸ்தை! பார்வையில் தொடங்கி நெஞ்சப் பரிமாற்றமென காதலின் நிலைகள் பலவும் கவிதையில் கேட்பது இனிமை!  வரைமுறைக்குள் நடக்கின்ற இந்த வாலிபத் திருவிழா பூங்காக்கள்.. கடற்கரை..  திருக்கோவில்.. தெருவீதி.. என அடிக்கடி இடம் மாற்றம் நிகழ்ந்தாலும் இதயங்கள் இரண்டு மட்டும் இணைந்தே இருப்பதென்ன?

    vaali(1)director sridharILAYARAJAspb vanijeyaram

    இளமை ஊஞ்சலாடுகிறது என்னும் திரைப்படத்திற்காக கவிஞானி வாலி இயற்றி இசை ஞானி இளையராஜா அமைத்த இசையில் இதோ மெல்லிய பூங்காற்று செல்லமாய் பேசுவதைப் போல் எஸ்.பி. பாலசுப்ரமணியமும்  வாணிஜெயராமும் வழங்கியிருக்கும் சுகமான பாடல்! இது சிவரஞ்சனியா தெரியவில்லை.  காதல் மிதமிஞ்சிப் போகும் கலை!

    ஒற்றைப் பாடலுக்குள் இத்தனை சுகங்களா? எண்ணிப் பாருங்கள்!!   இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் பாடல் பற்றி இளையராஜா அவர்கள் ஒரு மேடையில் குறிப்பிடும்போது கவிஞர் வாலி அவர்களின் பாடல் இயற்றும் திறம்பற்றி புகழ்ந்துரைத்து…  ஆரோகணத்தில் தொடங்கும் பல்லவியை அடுத்து..  உனை எனை என்று வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். வேறு எந்த வார்த்தைகளும் அந்த இடத்திற்கு இத்தனைப் பொருத்தம் ஆகா என்றார்.

    வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களையும் அதன் ஆழத்தையும் தன் கற்பனையிலே கொண்டுவரும் வித்தகமே கவிதை!  அதைத் தன் இசை ஞானத்தால் இதயம் தொடும் விதத்தால் இளையராஜா நடத்தும் ராஜாங்கத்தில் என்றுமே சுகம்!  சுகம்!!

    http://youtu.be/th3LJyFDZzY
    காணொளி: http://youtu.be/th3LJyFDZzY

    படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
    பாடல்: கவிஞர் வாலி
    இசை: இளையராஜா
    பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்

    ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

    ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
    உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…

    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
    மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

    சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

    மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன….

    [ஒரே நாள்…]

    நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
    நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

    கற்பனைகளில் சுகம் சுகம்
    கண்டதென்னவோ நிதம் நிதம்

    மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன…

    [ஒரே நாள்…]

    பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க
    பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க

    கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
    கையிரண்டிலும் ஒரே லயம்

    இரவும், பகலும், இசை முழங்க….

    [ஒரே நாள்…]

    Share
  • முந்திரிக்கொட்டை ……

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒரு காலத்தில் முந்திரி பேர ஊழல் பிரசித்தி பெற்றது. அது போல நம் சமையலிலும் முந்திரி பருப்பு முக்கியமான இடம் பிடித்துள்ளது. துடுக்குத் தனமாகவோ அல்லது முந்திக் கொண்டோ, எதையேனும் செய்பவர்களை முந்திரிக் கொட்டை என்று விளையாட்டாகச் சொல்வார்கள். காரணம், பெரும்பாலான பழங்களில் பழத்திற்குள்ளே இருக்கும் கொட்டை, முந்திரிப்பழத்தில் மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

    பிரேசில் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாக இருந்தாலும், உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது நம் இந்தியாவில்தான். நம் இந்தியாவில், ஒரு ஆண்டிற்கு சராசரியாக 60,000 டன் முந்திரி விளைவிக்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அவை தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு உள் நாட்டுச் சந்தைக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    images (1)ஆரம்பத்தில் பச்சை நிறமாகத் தோன்றி, பின் பழுக்கும்போது மஞ்சள் அல்லது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தை அடையும் இதன் பழங்கள் உண்ணப்படக் கூடியதாகவும், இனிப்பான சுவையுடன் இனிய மணமும் உடையதாக இருப்பதுடன், சிறந்த மருத்துவ குணமும் உடையதாக இருக்கிறது. மிக மெல்லிய தோலுடையதாகவும், சதைப்பகுதி மிகவும் சாறு நிறைந்ததாகவும் இருக்கும் இவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதில் சற்று சிரமம் இருக்கலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் சாறு பல வகையில் பயனுள்ளது. போலிப் பழம் என்று சொல்லக்கூடிய இந்த முந்திரிப் பழத்திற்கு வெளியே, சிறுநீரக வடிவில் காணப்படும் கடினமான ஒரு வெளி ஓட்டுப்பகுதியும், அதனுள்ளே ஒரு விதையையும் கொண்டிருக்கும். அந்த விதையே முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகிறது. இந்த முந்திரிக்கொட்டையின் மேலுள்ள கடினமான இரட்டை ஓட்டில் ஒவ்வாமையால், தோலில் நமைச்சலை ஏற்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. அதனால் இதை மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் வறுத்து பதப்படுத்தப்படுத்த வேண்டியதும் அவசியம்.

    இந்த முந்திரிப்பழங்களை நம் நாட்டில் பெரும்பாலும் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை. முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரிப் பழங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வைட்டமின் சி செறிந்துள்ள இப்பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளின் தன்மையால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்புத் தன்மை ஏற்படுகிறது. இதனைப் போக்க பழத்தை ஒரு பத்து நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தோ அல்லது உப்புநீரில் ஊறவைத்தோ உண்ணலாம். ஆரஞ்சுப் பழத்தை விட, முந்திரிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு, பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு நோயைக்கூட குணமாக்கும் தன்மை கொண்டுள்ளது என்றும், ‘ஸ்கர்வி’ என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குவதோடு, கிருமி நாசினியாகவும் செயல்பட்டு தொற்று நோய்களை குணமாக்கவும் பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதோடு, டானின் எனும் வேதிப் பொருளும் உள்ளதால் அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படவும் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வை துலங்கும்.

    இத்துனைச் சிறப்புமிக்க பழத்திலிருந்து பழச்சாறு, சிரப், பழக்கூழ், மிட்டாய் போன்ற பல வகையான மதிப்புக் கூட்டிய பொருட்களை தயாரித்துப் பயன்படுத்த முடியும் என்றாலும், நம் நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரிப் பழங்களில் 10 சதவிகிதம்கூட பயன்படுத்துவதில்லை என்பதுதான் நாம் இப்போது முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விசயம்.

    இப்பழங்களிலிருந்து பழ ரசம் எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் விவசாயப் பெருமக்களுக்கு ஊடு பணமாகக் கிடைக்கக் கூடும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கக் கூடிய ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதன் மூலமாக வரியாக அரசாங்கத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கக்கூடும். முந்திரிக்கொட்டையின் மேல்புறம் உள்ள நிலக்கடலை தொப்பி போன்ற ஓட்டுப்பகுதியையும் நாம் சரிவர பயன்படுத்துவதில்லை. இதன் பயன்கள் குறித்து நம் அரசு ஆய்வுத் (R&D) துறை ஆய்வு செய்து அதையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், விவாசாயிகளின் வாழ்வாதாரம் மேலும் சிறப்படையும். சமீபத்தில் பெப்சி கம்பெனியின் மேலதிகாரி ஒருவர் இப்பழத்தைச் சுவைத்துவிட்டு, இதனை அவர்களின் கம்பெனி சார்பாக சந்தைப்படுத்த எண்ணுகின்றனர். நாம் விழிப்படைய வேண்டிய அவசரத் தருணமிது!

    இப்படி நமது தமிழ்நாட்டில் பல வகையான இயற்கை வளங்கள் அனைத்துப் பகுதியிலும் நிரம்பியிருக்கின்றன. அவைகளை சரியான முறையில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், நம் இந்தியா உலக அரங்கில் பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, வரட்சி மிகுந்த தென் மாவட்டங்களில், சுவை மிகுந்த பதநீர் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. அந்தப் பதநீரோ, சுவை மிகுந்தது. வயிற்றுப் புண்ணை ஆற்றுவிக்கக் கூடியது. கரிசல் மண்ணில் , கண்ணீருடன் வாழக்கூடிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடியது. விளம்பர யுகமாகிய இக்காலங்களில், அங்கு கிடைக்கக்கூடிய, பனை வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, போன்றவைகளை அரசாங்கம் மூலமாக சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, சந்தைப்படுத்தினால் சிறப்பாகும். மருத்துவக் குணம் கொண்ட இவைகளை அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நம் வருமானமும் கனிசமாகக் கூடும்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் 10, 15 தறிகளே வைத்திருப்பவரும் துணி தயாரிப்பது போல, கடலையே நம்பி வாழக்கூடிய கடற்கரை மாவட்ட மக்களுக்கு அங்குள்ள உப்பளங்கள் வழியாக உப்பு மற்றும் இரசாயண உரங்களையும், உப்பையும், நவீனமான எளிய முறையில், தயாரித்து சந்தைப்படுத்தினால், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கும். கண்ணீரில் வாழும் மீனவ மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும். ஒரு காலத்தில் பிரசித்தமாக இருந்த இறால் வளர்ப்புப் பண்ணைகள் நாளடைவில் அழிந்துவிட்டன. ஆர் & டி துறையினரின் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பண்ணைகளை அமைத்து, மீண்டும் இறால்களைப் பதப்படுத்தி, ஏற்றுமதி செய்தால் அவர்களுடைய பொருளாதாரமும் வளர்ச்சியடையும் வாய்ப்பு கூடும். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மலிந்துள்ள எண்ணற்ற வளங்களை சரியான முறையில் நெறிப்படுத்தினால், நம் இந்தியப் பொருளாதாரம் சீரடைவதோடு, நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது சத்தியம்.

    Share
  • வாமனாவதாரம்….

    கிரேசி மோகன்

     

    வாமனாவதாரம்….
    ——————————–

    ஓணங்கட்டிக்கு ஓணம் (நாராயணீயம்-பட்டத்திரி படித்து எழுதியது)
    ————————————————————————————————————————-

    crazy

    யாகாதி பாகத்தை ஈயாது போனதால்
    ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற
    சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான்
    சக்கிர வர்த்தி சிறப்பு (or) ஜொலிப்பு….

    பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய்
    அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை.
    பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய்
    ஓணத்தில் சேயாய் உதிப்பு….

    அதிதி உபசாரம் அன்று புரிந்தோன்
    புதிய அவதாரப் பிள்ளை -குதியிட்டு
    மாவலி முன்சென்றான் மூன்றடி வாமனனாய்
    தாவலில் நெஞ்சம் திளைத்து….

    தாழங் குடையிடக்கை, தண்ணீர் கமண்டலம்
    வாழிய காட்டும் வலக்கையில் -சோழியன்
    உச்சியொடு வந்தவன் அச்சுதன் என்றுகுரு
    எச்சரித்தும் மாபலி ஏற்பு….

    அந்தண வாமனர்க்கு வந்தனம் செய்துபலி
    தந்தனன் கேட்ட திருவடிக்கு -மண்தனை
    வண்டெனநீர் வார்க்கையில் வாத்தியார் வந்துக
    மண்டல வாயை மறைப்பு….

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட
    சேதாரம் இன்றியவன் சேர்பு….

    தானாகக் தானத்தை தந்திடும் தந்தைமுன்
    வீணாக வேடமிட்டு வாமனமாய்ப் -போனீர்கள்!
    பாணா சுரப்பிள்ளை போட்ட வினாக்(கு)ஏன
    மீனாமை சிம்ம மறுப்பு….

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு….

    —————————————————————-

     

    Share
  • நானும் நீயும் நாளும் இரவும்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (44)

    நானும் நீயும் நாளும் இரவும்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE/[/mixcloud]

    10624987_654161001345716_6964382405334813555_n

    நானும் நீயும்
    நாளும் இரவும்
    பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    வானம் புவியை
    வருடும் கோட்டில்
    வரிசை வரிசையாய் அமர்ந்திருக்கும்!

    தேனும் மலரும்
    தென்றலும் வந்து
    தெம்பு வேண்டி இளைப்பாறும்! அதில்
    கானம் கவிதை
    யாவும் காதலில்
    களஞ்சியமாகக் கொழித்திருக்கும்!

    அவசரமாய்ச் சில தேவியர்கள்
    அமரர்கள் பார்க்கா வண்ணம், தம்
    கவலைகள் தீர நம் காதல் சொற்களைக்
    கவர்ந்து செல்வர் மெல்ல!

    திவலைகளாய் நாம் இருவரும் இரவில்
    சிந்திய கண்ணீர்த் துளிகளைக் கண்டு
    கவலைப் பட்டுச் சில விண்மீன்கள்
    கள்ளத் தனமாய் இறங்கும்

    தீபச் சுடரின் பரபரப்பாய், நீ
    சிரித்த சிரிப்பின் திகழ்ச்சியிலே
    திகைத்த மின்னல் நடுவழியில், ஒரு
    கேள்வியின் வடிவில் சிலைத்திருக்கும்!

    பாபம் துடைக்கும் பரிவினிலே, நீ
    பாஷையை மீறிச் சொன்னதெல்லாம்
    படித்துறையாகிப் பழம்பெரும் முனிவர்
    பவித்திரமாக முழுக்கிடுவார்!

    நானும் நீயும் பேசியதாக
    நான்சொன்னதெல்லாம் பிழைதான்
    நான்யார்? கண்ணை இமைக்காமல்
    நமச்சிவாயன் முன் நந்தி!
    தேனாற்றங்கரை திமிறியதைப்போல், நீ
    திரும்பித் திரும்பிச் சொன்னதெல்லாம்
    தித்திக்கத் தித்திக்கச் சிரித்ததெல்லாம்
    திணறத் திணற அணைத்ததெல்லாம், ஒரு
    தீர்ப்பைப் போலே கொடுத்ததெல்லாம்
    வானெங்கும் பல காவியங்களில்
    வந்து விட்டதாம் கேட்டாயா?

    நீ
    சொன்னவற்றுக்கே இப்படி என்றால்
    சொல்லாது வைத்துக் கொண்டவை?!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    கண்ணன் இன்று “ஆடிப்” பெருக்குகிறான் அருளை, ஆண்டாள் பாசுரம் போல்….”ஆத்திலொரு கால் கனைத்திளம் கற்றெருமை நனைத்தில்ல சேத்திலொரு கால்”….

     

     

    crazy

    “ஆற்றுக் குமுதம்நின்(று), ஆனந் தவிகடன்தன்,
    சோற்றுக்கால் காமதேனு(THE HINDU) சாப்பிட, -தோற்றம்,
    நடராஜா போஸில், நவனீதைத் தந்தாய்,
    படராஜா கேசவ்ச பாஷ்”….கிரேசி மோகன்….

    Share
  • பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்

    Multiverse -5

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fJqpNudIss4

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=QzIbpwcm0pk

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TdzLf0DpRUY

    http://i.dailymail.co.uk/i/pix/2014/07/19/video-undefined-1FCA552600000578-535_636x358.jpg

     

    ஓயாது விரியும் பிரபஞ்சத்தின்
    மாய வயிற்றுக் குள்ளே
    ஓராயிரங் கோடி
    ஒளி மந்தை, கருஞ்சக்தி, கருந்துளை !
    பிரபஞ்சம் ஒன்றில்லை !
    ஒன்றின் தொப்புள் கொடியில்
    ஒட்டி, வெடித்து விரிந்து செல்லும்
    பல்லடுக்கு அகிலங்கள் !
    சோப்புக் குமிழிப் பிரபஞ்சங்கள் !
    எல்லை யற்ற
    இணைப் பிரபஞ்சங்கள் !
    பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ?
    திறந்த காலவெளியா
    கோள வெளியா ? கூம்பு விரிவா ?
    நீள நெளிவா ? நீண்ட முட்டையா ?
    தட்டை வடிவா ?
    மூடி யில்லாக் குவளையா ?
    முடிவற்று  உப்பிடும்  குமிழியா  ?
    காலக் குயவன்
    ஆழியில் வடித்த சட்டியை
    உள்ள வாறு
    சொல்ல முடியுமா ?

    +++++++++++++

     

     

    “கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்பதை அறிய நான் விழைகிறேன் !  அது இந்த விதியா அல்லது அந்த விதியா என்று தர்க்கமிடுவதில் விருப்பமில்லை எனக்கு !  கடவுளின் சிந்தனைகளை நான் அறிய விரும்புகிறேன்;  மற்றவை எல்லாம் பிறகு விளக்கங்கள்தான் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

    “ஆக்கவழி விஞ்ஞானத் தத்துவங்கள் (Creative Principles) யாவும் கணித முறையில் தான் அடங்கி யிருக்கின்றன.  பூர்வீக மாந்தர் கனவு கண்டதுபோல் நமது தூய சிந்தனை மெய் நிகழ்வைப் (Reality) பற்றிக் கொள்ளுவதால் ஒரு சில தேவைகளில் நான் கணிதத்தை உண்மையாகப் பின்பற்றுகிறேன்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “அகிலப் பெருவீக்கம் (Inflation of the Cosmos) என்பது ஆதி காலத்துப் பிரபஞ்சப் பெரு விரிவைப் (Hyper-Expansion) பற்றிய கோட்பாடு !  அதுவே பிரபஞ்சம் மேற்கொண்டு ஆறு பரிமாணம் கொண்டது (4+6=10) என்று நிரூபிக்க உதவும் மூல நிகழ்ச்சியாகும்.”

    ஸ்டீவென் நாடிஸ் (Steven Nadis, Editor Astronomy Magazine)

     

    Patch Universe

     

    பல்லடுக்குப் பிரபஞ்சம் என்பது மெய்யாக உள்ளதா ? 

    கடந்த பத்தாண்டு காலத்தில் அகிலவியல் விஞ்ஞானிகளை [Cosmologists] ச்ஒரு மகத்தான கருத்தோட்டம் பேரளவில் கவர்ந்துள்ளது.  அதாவது நம்மைச் சுற்றியுள்ள, நாம் ஓரளவு நோக்கக் கூடிய இந்தப் பிரபஞ்சம் ஒன்று மட்டுமில்லை.  காலவெளியில் நமக்குத் தெரியாத பல்வேறு பில்லியன் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது.   ஒரு பிரபஞ்சம் இல்லை; பல்லடுக்குப் பிரபஞ்சம் [Multiverse] உள்ளது.   அஸ்டிரானமி, [Astronomy] சயன்டிஃபிக் அமெரிக்கன் [Scientific American] மாத இதழ்களில் அது பற்றிக் கட்டுரைகள் வந்திருப்பதோடு, அமெரிக்க விஞ்ஞான மேதை பிரையன் கிரீன் [Brain Greene] கூட “மறைந்திருக்கும் மெய்ப்பாடு  [The Hidden Reality] என்னும் நூலில் பல்லடுக்குப் பிரபரபஞ்சம் பற்றி எழுதியுள்ளார்.  இது தீவிரக் காப்பர்னிக்கன் புரட்சி  [Super Copernican Revolution] மூலம் தோன்றிய ஒரு விளைவுக் கருத்தோட்ட மாகக் கருதப் படுகிறது !

     

    jay

    ஐரோப்பிய விஞ்ஞானி காப்பர்னிகஸ் கூறிய தென்ன ?   பூமி மையமான தில்லை !  சூரியனே மையமாகக் கொண்டு பூமி, போன்ற மற்ற கோள்கள் அதைச் சுற்றி வருகின்றன.  ஹப்பிள் போன்ற தொலை நோக்கி மூலம் நாம் அறிந்தவை :  சூரிய மண்டலம் நமது பால்வீதிக் காலக்ஸி ஒளிமந்தையில்  சுற்றிவரும் கோடான கோடி பரிதி ஏற்பாடுகளில் ஒன்று.   நமது பால்வீதி ஒளி மந்தை பிரபஞ்சத்தின் கோடான கோடி காலஸிகளில் ஒன்று;  தற்போதைய கண்டுபிடிப்பு என்ன வென்றால், நமது பிரபஞ்சமும் கோடிக்கணக் கான பிரபஞ்சங்களில் ஒன்றே.   இக்கூற்று படைப்பின் எல்லையற்ற சித்தாந்தத்தைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

    பல்லடுக்குப் பிரபஞ்சம் என்பது பலருக்கு பல்வேறு வடிவத்தைக் காட்டுகிறது.  தற்போது வானியல் விஞ்ஞானிகள்  பிரபஞ்சத்தில் தொலை நோக்கிகள் மூலம் 42 பில்லியன்  ஒளியாண்டு தூரத்தை மட்டுமே காண முடிகிறது !   ஆனால் அத்துடன் பிரபஞ்சத்தின் வரம்பு முடிந்து போவதில்லை.   அந்த எல்லையைத் தாண்டியும் பிரபஞ்சம் நீடிக்கிறது.   ஏறக்குறைய எல்லா விஞ்ஞானிகளும் இந்த பல்லடுக்கு பிரபஞ்சக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.   சிலர் அதைக் கடந்து புதுவித வேறுபட்ட பிரபஞ்சகள் இருப்பதையும் ஊகிக்கிறார்.  அங்கே வேறுபட்ட பௌதிக விதிகள், வேறுபட்ட வரலாறுகள், வேறுபட்ட அண்டங்கள்,  அளவை முறைப்பாடுகள், அளப்புக் கருவிகள் இருக்கலாம் என்று கருதுகிறார்.

     

    Multiverse -1

     

    பல்லடுக்குப்  பிரபஞ்ச இருப்புக்கு மூலாதாரக் கோட்பாடுகள்

    1.  வரம்பற்ற பிரபஞ்சங்கள்:

    காலவெளித் தோற்ற வடிவம் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் தீர்மானமாக முடிவு செய்ய முடியாததால், கோள வடிவோ, துளை வடை [Donut Shape] வடிவோ கருதப் படாது, வரம்பற்ற தட்டையான வடிவமாக  இருக்க கூடியது என்று கருதினர்.   காலவெளி வரம்பற்றுப் போனால், ஓர் அங்கில் அது மீள வேண்டும் என்று கருதுகிறார்.  ஏனெனில் காலவெளியில்  துகள்கள் சீராய் அமைவது வரம்புக்கு உட்பட்டது.

    விண்ணோக்குத் தொலைநோக்கிகள் ஒளி செல்லும் தூரத்து அளவுப் பிரபஞ்சத்தை மட்டுமே உளவிட முடியும்.  இதுவரை நாம் கண்டது 13.7 பில்லியன் ஒளியாண்டு தூரமே.  அதற்குப் பிறகு ஒட்டியிருப்பது அதன் நீட்சிப் பிரபஞ்சமே.  இப்படி அடுத்தடுத்து ஒட்டியுள்ளது ஒரு பூத ஒட்டு மெத்தைப் பிரபஞ்சமே.  எல்லையற்ற ஒட்டு மெத்தைப் பிரபஞ்சங்கள்  [Patch Quilt of Infinite Universes] என்னும் பெயரைப் பெற்றது.

     

     

    “இயற்கையை நாம் அளக்கும் பரிமாணங்கள் அனைத்தும், அடிப்படை மூலமென்று நாம் கருதும் நுண்துகள்கள் அனைத்தும்,  உதாரணமாக குவார்க்ஸ், எலெக்டிரான் திணிவு நிறைகள் (Masses of Quarks & Electrons) போன்றவை யாவும் கலாபி-யாவ் வெளி வடிவத்திலும் பரிமாணத்திலும் உருவாக்கப்படுகின்றன !”

    ஜோஸஃப் போல்சின்க்ஸி (Joseph Polchinksi, University of California, Santa Barbara)

    “இழை நியதியை ஆதரிப்போர் சொல்வது மெய்யானால், நமது மூக்கு முனை, வெள்ளிக் கோளின் வட துருவம், டென்னிஸ் பந்தாடும் விளையாட்டுத் தளம் போன்று விண்வெளியில் கண்ணில்படும் அனைத்திலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய ஆறு பரிமாணமுடைய கலாபி-யாவ் கூடு (Calabi-Yau Manifold) இருக்கும் !  அந்த ஆறு பரிமாண வரைவுப் பகுதி விண்வெளிப் புள்ளி ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கிறது.”

    லீஸா ரண்டால் (Physicist Lisa Randall Harvard University)

     

    “இழை நியதி (String Theory) கூறும் மேற்பட்ட பரிமாணங்கள் (Extra Dimensions) யாவும் எப்படிச் சுருண்ட நிலையில் உள்ளன ?  “அகிலத்தின் நுண்ணலைப் பின்புலத்தைத்”  [Cosmic Microwave Background (CMB)] துல்லியமாக அளக்க முடிந்தால் அவையே மேற்பட்ட பரிமாணங்களைக் கண்டுகொள்ள வழி காட்டும்.”

    காரி ஷியு (Gary Shiu, Physicist University of Wisconsin)

    “(நாமறிந்த மூன்று காலவெளிப் பரிமாணங்கள் கலாபி-யாவ் பரிமாணங்களைச் சாராமல் தனிப் பட்டவை).  அவை ஒரே திசைநோக்கிச் செல்லாமல் செங்குத்தாகப் போகின்றன.  நாமெல்லாம் ஆறு பரிமாணக் காலவெளியின் ஒரு சிறு முனையில் தான் உட்கார்ந்திருக்கிறோம்.”

    லியாம் மெக்காலிஸ்டர் & ஹென்றி டை (Physicists : Liam McAllister, Princeton University & Henry Tye, Cornell University)

     

    பிரபஞ்சத்தின் மர்மமான வடிவத்தைத் தேடி !

    வானைத்தை உற்று நோக்கி அறிய விரும்புவோர், அது எங்கே முடிவாகிறது அல்லது பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்று விந்தை அடைவோர் “வில்கின்ஸன் நுண்ணலைத் வெப்பத்திசை விண்ணுளவி” [Wilkinson Microwave Anistropic Probe (WMAP)] பிரபஞ்சம் தோன்றி 380,000 ஆண்டுகள் கடந்த பிறகு எழுந்த முணுமுணுக்கும் நுண்ணலைகளைப் (Whisper Space Microwaves) பதிவு செய்து வைத்திருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  அது காட்டிய படம் என்ன ?  அதாவது ஆதியில் உண்டான பிரபஞ்சம் 2% எல்லைக்குள் துல்லிமையான தட்டை வடிவத்தைக் (Flat Universe within 2% margin of Error) கொண்டிருந்தது !  பிரபஞ்சம் பேரளவு உருவத்தில் ஆப்பமாக இருந்தாலும் சரி, பொரி உருண்டையாக இருந்தாலும் சரி, வளையம் போலிருந்தாலும் சரி அதன் தோற்றம் தட்டையாகத் தோன்றும் ! “புறவெளியில்” (Outer Space) நாம் வடிவத்தை உருவகிக்க வெறும் காலாக்ஸி ஒளிமந்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.  பௌதிக விஞ்ஞானிகள் “அகவெளி” (Inner Space) எனப்படும் ஒன்றும் உள்ளதாகக் கூறுகிறார்.  நாம் நேரிடையாக அனுபவம் பெற முடியாமல் தனியாக “நுண்ணரங்கம்” (Microscopic Realm) ஒன்று மிக அடர்த்தியாக ஒளிந்துள்ளது !  இந்த நுண்ணரங்கில்தான் இயற்கை நிலையை முதன்மையாய் விளக்கும் “இழை நியதி” (String Theory) பத்துப் பரிமாண பிரபஞ்சத்தைப் (10 Dimensional Universe, X,Y,Z Sides & Time + 6 More) பற்றி விளக்கிக் கூறுகிறது !

    நூறாண்டுகளுக்கு முன்பு ஐன்ஸ்டைனின் பொது ஒப்புமை நியதி நான்கு பரிமாணமுள்ள காலவெளியைப் பற்றிக் கூறியது.  பிறகு மேற்கொண்டு வேறு பரிமாணங்கள் உள்ளதாகக் கூறும் இழை நியதி எவ்விதம் நுழைந்தது ?  விஞ்ஞானிகளின் கொள்கைப்படி நம் கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு “கலாபி-யாவ் வரைகணிதக் கூடுகளில்” (Tiny Geometrical Containers called Calabi-Yau Manifolds) சுருண்ட வண்ணம் உள்ளன ! “இழை நியதியை ஆதரிப்போர் சொல்வது மெய்யானால், நமது மூக்கு முனை, வெள்ளிக் கோளின் வட துருவம், டென்னிஸ் பந்தாடும் விளையாட்டுத் தளம் போன்று விண்வெளியில் கண்ணில்படும் அனைத்திலும், கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய ஆறு பரிமாணமுடைய கலாபி-யாவ் கூடு (Calabi-Yau Manifold) இருக்கும் !  அந்த ஆறு பரிமாண வரைவுப் பகுதி விண்வெளிப் புள்ளி ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கிறது.” என்று லீஸா ரண்டால் (Physicist Lisa Randall Harvard University) கூறுகிறார் !

     

    அகிலத்தின் சிக்கலான புரியாத ஆறு பரிமாண வடிவம்

    பௌதிக விஞ்ஞானிகள் இந்தச் சிக்கலான நெளிந்த வரைவு வடிவத்தைச் சுருங்கத் திரண்ட சிறுமை (Compact Geometric Form) என்ற வகுப்பில் பிரித்து வைக்கிறார்.  கலாமி-யாவ் கூடுகள் முடிவில்லாப் பேரளவு கொண்டவை என்பதை நிராகரிப்பது போல் மேற்கூறிய தகவல் காட்டுகிறது.  அவற்றின் உண்மையான அளவு பதிலற்ற கேள்வியாகத்தான் இருக்கிறது.  ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகள் அவற்றின் அளவை மிகச் சிறியதாகக் (10^-13 செ.மீ.) கூறி வந்தார் !  ஆனால் இப்போது அவை 10,000 டிரில்லியன் (1000 மில்லியன் மில்லியன் 10^15) மடங்கு பெரியவை என்று கருதப் படுகின்றன.

     

    Multiverse -6

    பௌதிகக் கோட்பாடுவாதிகள் (Theoretical Physicists) சிக்கலான ஆறு பரிமாண விண்வெளியைப் பற்றிக் கூர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.  கலாபி-யாவ் கூட்டு வரைவே “துகள் பௌதிக விஞ்ஞானத்தின் நியதிகளை” (Laws of Particle Physics) இயக்குபவை என்று எண்ணப்படுகிறது.  அத்துடன் ஈர்ப்பியல் ஆற்றல், அகிலப் பெருவீக்கம், கருமைச் சக்தி ஆகியவற்றைத் தூண்டி ஊக்குவிப்பவை என்றும் அறியப்படுகின்றது ! “இயற்கையை நாம் அளக்கும் பரிமாணங்கள் அனைத்தும், அடிப்படை மூலமென்று நாம் கருதும் நுண்துகள்கள் அனைத்தும்,  உதாரணமாக குவார்க்ஸ், எலெக்டிரான் திணிவு நிறைகள் (Masses of Quarks & Electrons) போன்றவை யாவும் கலாபி-யாவ் வெளி வடிவத்திலும் பரிமாணத்திலும் உருவாக்கப் படுகின்றன !” என்று பௌதிகக் கோட்பாடுவாதி ஜோஸ·ப் போல்சின்க்ஸி (Joseph Polchinksi, University of California, Santa Barbara) கூறுகிறார்.

     

     

    இழை நியதிக்கு ஏற்றபடி கலாபி-யாவ் வடிவங்கள் எத்தனை விதமான இணைப் பிரபஞ்சங்கள் (Parallel Universe OR Multiverse) இருக்க வாய்ப்புள்ளதோ அவற்றுக்குச் சார்பாக உள்ளன.  விஞ்ஞான ஆராய்ச்சி புரிவோர் அந்த வடிவங்கள் ஐஸ்கிரீம் கூம்பு, கழுத்து, சுருட்டு, கையுறை (Ice Cream Cones, Throats, Cigars, Gloves) போன்றவை யாக இருக்கலாம் என்று கருதுகிறார்.  “நாமறிந்த மூன்று காலவெளிப் பரிமாணங்கள் கலாபி-யாவ் பரிமாணங்களைச் சாராமல் தனிப் பட்டவை.  அவை ஒரே திசைநோக்கிச் செல்லாமல் செங்குத் தாகப் போகின்றன.  நாமெல்லாம் ஆறு பரிமாணக் காலவெளியின் ஒரு சிறு முனையில்தான் உட்கார்ந்திருக்கிறோம்.” என்று லியாம் மெக்காலிஸ்டர் & ஹென்றி டை (Physicists : Liam McAllister, Princeton University & Henry Tye, Cornell University) கூறுகிறார்.

     

    Multiverse -4

     

    அகிலப் பெருவீக்கம் ஆக்கிய அசைவு மென்தகடு (Membrane Driving Cosmic Inflation) !

    பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலங்களில் அகிலப் பெருவீக்கம் (Cosmic Inflation) உண்டாக்கியவை அசைவுத் தகடுகள் (Membranes OR Branes) என்னும் அடிப்படைக் கருத்துக்கள் உள்ளன !  இந்தக் கொள்கைப்படி தகடும் எதிர்த்தகடும் (Brane & Antibrane) எதிர்த்தன்மை கொண்டு விலக்குபவை அல்லது ஈர்ப்பவை.  ஓரினத் தகடுகள் ஒன்றை ஒன்று விரட்டி விலக்குபவை.  ஒன்றை ஒன்று ஈர்க்கும் வேறினத் தகடுகள் மிகச் சக்தி வாய்ப்புள்ளவை.  ஆகவே அவற்றைப் பிரித்து வைத்தால் பெருவீக்கத்தைத் தூண்டும் (Triggering Cosmic Inflation) அபார ஆற்றல் உண்டாகிறது !  இந்த ஓட்ட இயக்கம்தான் நான்கு பரிமாண காலவெளிப் பிரபஞ்சத்தை அவை மோதி முறியும் வரைச் சேர்ந்து டிரில்லியன், டிரில்லியன் மடங்கு விரிய வைத்துள்ளது !  இந்தக் காட்சி மாதிரியில்தான் பெரு வெடிப்புக்கு முன்னால் பெருவீக்கம் (Inflation Occurring Before the Big Bang) நிகழ்ந்துள்ளது !  மெய்யாக தகடுகள் இவ்விதம் மோதி முறிந்தழிந்து எழுந்த சக்தியில்தான் பெரு வெடிப்பும் நேர்ந்திருக்கிறது !

     

     

    பிரபஞ்சத்தின் வடிவத்தை விளக்க முடியுமா ?

    பிரபஞ்சத்தின் வடிவம் என்ன என்பது அறிய முடியாமல் இன்னும் புதிராகவேதான் உள்ளது !  அது பூமியைப் போல் கோளமாக இருக்க வேண்டியதில்லை !  அது தட்டை வடிவமானதா ?  விரிந்த வளைவா ?  திறந்த வளைவா ?  முடிச்சு போன்றதா ?  நெளிந்து வளைந்து கோணிப் போனதா ?  கண்களும், கருவிகளும் காண முடியாத மிகச் சிக்கலான, உப்பி விரியும் பிரபஞ்சத்தின் உருவத்துக்கு ஒரு வடிவத்தைக் கூறுவது அத்தனை எளிதா ?

    வடிவத்தை விளக்க முதலில் நமக்கு ஒரு வித வழிகாட்டியவை : 1993 இல் நாசா அனுப்பிய “கோபே துணைக்கோளும்” (Cosmic Background Explorer COBE Satellite) 2001 இல் அனுப்பிய வில்கின்ஸன் நுண்ணலைத் வெப்பத்திசை விண்ணுளவியும் [Wilkinson Microwave Anistropic Probe (WMAP)].  கோபேயும், வில்கின்ஸன் விண்ணுளவியும் பிரபஞ்ச ஆரம்பத்தில் நுண்ணலை விண்வெளியில் வெவ்வேறு திணிவு அடர்த்தியில் குளிர்ந்தும், வெப்பமாகவும் இருந்த கொந்தளிப்புத் தளங்கள் (Splotches) இருந்ததைக் காட்டியுள்ளன.

    2.   சோப்புக் குமிழி பிரபஞ்சங்கள் :

    3.  இணைப் பிரபஞ்சங்கள்:

    4.  சேய்ப் பிரபஞ்சங்கள்

    5.  கணக்கு முறைப் பிரபஞ்சங்கள்:

    +++++++++++++

    [பாகம் -2 தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Does the Inflation Theoy Govern the Universe ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 Science Daily : What Shape is The Universe ? Columbia Astronomers Have Clue !  [Feb 17, 1998]
    20 Fold Testament : What Shape is The Universe By Stepher Battersy (Dec 7, 2006)
    21 Scinece Daily : Particle Accelerator May Reveal Shape of Alternate Dimensions, University of Wisconsin-Madison [Feb 4, 2008]
    22 Physicists Find Way to See the Extra Dimension (Feb 2, 2007)
    23 Astronomy Magazie : Is This The Shape of The Universe ? Cosmic Inflation May Be the Key to Proving the Cosmos Has 6 Extra (10) Dimensions ! Searching for the Shape of the Universe By Steven Nadis [April 2008]

    24.  http://www.space.com/18811-multiple-universes-5-theories.html  [December 7, 2012]

    25. http://www.scientificamerican.com/article/does-the-multiverse-really-exist/  [August, 2011]

    26.   http://en.wikipedia.org/wiki/The_Hidden_Reality  [June 15, 2014]

    26.  http://www.theatlantic.com/video/index/378620/a-fascinating-short-film-about-the-multiverse/ [September 2, 2014]

    27.   http://en.wikipedia.org/wiki/Multiverse   [September 1, 2014]

    28. Scientific American :   Does the Muiverse Really Exist ?   [September -October 2014]

     

    ******************
    S. Jayabarathan  (jayabarathans@gmail.com)  [September 6, 2014]

    Attachments area
    Share
  • பலவும் ஒன்றும் பராசக்தி

    இசைக்கவி ரமணன்

     

    (நவராத்திரி வரப் போகிறது. பராசக்தி முற்றத்தில், முத்தையாவின் முத்துக்களை வைத்துக்கொண்டு பல்லாங்குழி ஆடப் போகிறாள் அபிராமி. அதுவரை பொறுக்குமா இந்தப் பிள்ளை மனம்?!)

     

    an111111 (1)

     

    வெளியாய்ச் சும்மா கிடக்கின்றாள்3501189646_19543e015b

    வானாய் நீலம் சூடுகிறாள்

    ஒளியாய் இருளில் எழுகின்றாள்

    ஒவ்வொரு துளியாய் விழுகின்றாள்

    துளியெனும் ஒற்றை ஊசியினால்

    துயரக் கடலைக் கடைகின்றாள்

    அளித்தல் அன்றி வேறறியா

    அன்பே என்றன் பராசக்தி!

     

    அவளாய் இருப்பது அவளழகு

    அடயா ரறிவார் அவளியல்பு?

    ஆடும் கடலும் அவளேதான்

    Durga-J

    அசையா மலையும் அவளேதான்

    தவத்தின் முனைப்பும் அவளேதான்

    தவியாய்த் தவிப்பதும் அவளேதான்

    தருணத் திற்கோர் விதம்காட்டித்

    தான்மாறா தவளே பராசக்தி!

     

    வீசி அடிக்கும் சவுக்குமவள்

    விரியும் சின்ன மலருமவள்

    பேசி முடியாப் பெருமையவள்

    பிதற்றித் திரியும் பேதையவள்

    யோசிக் காத ஞானமவள்

    உயிர்நரம் பில்வரும் கானமவள்

    நேசிப்பா ரின் நேசத்தில்

    நிதம்வளர் பவளே பராசக்தி!

     

    காதல் அவளது கண்ணாடிimages (1)

    கவிதை அவளது முன்னோடி

    சாதல் வரைக்கும் முகம்காட்டா

    சாகசம் அதுதான் என்னேடி?

    வேதனை அவளது விந்தைமுகம்

    வேதம் அவளது மெய்ப்பாடு

    போதையின் மடுவில் மிகமெதுவாய்ப்

    புலரும் தெளிவே பராசக்தி!

     

    சொல்லில் படாமல் இருந்தபடிimages (2)

    சொல்லில் சுடரும் மகராணி

    சொட்டுச் சொட்டாய்த் துளித்துளியாய்

    உயிரைப் பருகும் ஒரு தேனீ

    புல்லின் மென்மையும் அவள்சக்தி

    புயலின் வலிமையும் அவள்சக்தி

    போதும் முடியா தெனும்போது

    பொருந்திச் சிரிப்பாள் பராசக்தி!

     

    07.09.2014 / ஞாயிறு / 06.20

    Share
  • ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!

    பவள சங்கரி

    “துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை”
    சுவாமி விவேகானந்தர்

    நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் சின்னம் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். அந்த வகையில் துறவறம் பூண்டு, நாட்டை விட்டு காட்டில் சென்று தவம் புரிந்த சங்க காலத்தின் சக்கரவர்த்திகளாகட்டும், சகல செல்வங்களும் கொட்டிக்கிடக்க, எந்தச் சுகமும் தேவையில்லை என்று துறந்து தெருவில் இறங்கிச் செல்லும், செல்வந்தராகட்டும், நாகரீக உலகில் பிறந்து, வளர்ந்தாலும் இளமை முதல் எதிலும் எதுவித நாட்டமும் இன்றி, இறைமையை அல்லும், பகலும் மனதிலேற்றி மெல்ல, மெல்ல துறவை நாடியோராகட்டும், அனைவரின் இலக்கும் இறைவனை அடைவது என்பதோடு, உள்ளத் தூய்மையும், அதனால் பெறக்கூடிய மன நிம்மதியும்தான். அந்த வகையில், இறைவனின் படைப்பில் ஒவ்வொரு மலரும் ஒரு தனிப்பட்ட குணமும், மணமும், நிறமும் கொண்டிருப்பது ஆச்சரியப்படத்தக்கது. இயல்பாகவே பெண்கள் இளம் வயதிலிருந்தே, தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் தனி விருப்பம் கொண்டவர்களாக இருப்பவர்கள். ஒரு இளம் பெண் மனதில் ஆசா, பாசங்கள் அனைத்தும் மறைந்து, அன்பும், அமைதியும், பேரானந்தமும் நிலைத்து நிற்கும் வண்ணம் துறவு நிலையை தேர்ந்தெடுப்பது என்பது சாமான்ய காரியம் அல்ல. பிறவியிலேயே அப்படி ஒரு எண்ணம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே இது சாத்தியம் என்பதே நிதர்சனம்.

    வண்ண வண்ணச் சிற்றாடையுடன், சிங்காரம் செய்து, இன்பமாய் வலம் வரும் காலத்தில், பாண்டியும், பல்லாங்குழியும் விளையாடும் பருவத்தில், தூய வெண்ணாடையை உடுத்தி, அதே தூய்மையை உள்ளத்திலும் புகுத்தி, மங்கையரில் தாம் ஒரு தனி ரகம் என்பதை ஆச்சரியமாகக் காணச் செய்துள்ளவர் ஸ்ரீ ஹரிஓம் அம்மையார் அவர்கள். தம் இளம் பருவத்திலேயே இறைவனின் மீது நாட்டம் கொண்டு, இயற்கையாய் ஒரு இளம் பெண்ணிற்கு உள்ள எந்த உணர்வினாலும் ஆட்படாமல், அறிவும், இறைமையும் தம் இரு கண்களாக எண்ணி தம் வாழ்நாளைத் தவமாக கழித்துக் கொண்டிருப்பவர். அதற்கு இணையான ஆசிரியப் பணியில் தம் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி, எண்ணிலடங்கா பெண் குழந்தைகளை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்கியுள்ள பெருமை அம்மையாரையேச் சேரும். தாம் புனிதமாகக் கருதியத் தம் ஆசிரியப் பணியிலும், மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தவர், 72 வயது நிரம்பிய ஸ்ரீஹரிஓம் அம்மையார் அவர்கள்.

    ஒரு மனிதரின் தனிப்பட்ட அடையாளத்தை அவருக்கே புரிய வைப்பவரே நல்லாசிரியர் என்பவர். இளம் சிறார்கள், ஊக்கம், தன்னம்பிக்கை , விடா முயற்சி ஆகிய நற்பண்புகளைக் கொண்டு ஒரு நாட்டின் சிறந்த குடிமகனாக உருவாகுவதற்கு ஆசிரியத் தொழில் பெரும்பங்கு வகிப்பதை எவரும் மறுக்க இயலாது. அந்த வகையில் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு, தம் ஆன்மா கடைத்தேற வழிவகுக்கும் எண்ணம் மட்டுமேயன்றி, சமுதாயத்திற்கும் தம்மால் ஆன சேவையைச் செய்துள்ள மன நிறைவையும் பெற்று ஈரோடை மாநகரின், அவல் பூந்துறை கிராமத்தில், பெரியமணியம்பாளையம் என்னும் புனிதமான இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ண வித்யா குருகுலத்தில் தம் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும், அம்மையாரைச் சந்தித்து உரையாடினோம்.

     paval

    வினா : துள்ளி விளையாடும் பருவத்திலேயே, தூய வாழ்வைப் பற்றிய சிந்தை தோன்றியதன் பிண்ணனி குறித்து அறியத் தாருங்கள் அம்மா.

    அம்மா: ஆம். இளம் வயதிலேயே எனக்கு ஆழ்ந்த வாசிப்பின்பாற் ஈடுபாடு ஏற்பட்டது. அதுவே எனக்குக் கிடைத்த வரமாக எண்ணுகிறேன். பத்து, பன்னிரெண்டு வயதிலேயே, மு.வரதராசனார் புத்தகங்களும், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ எனும் புதினமும் என்னை அதிகமாகவேக் கவர்ந்தன. ஆன்மீகமும், சரித்திரமும், தேச பக்தியும் என்னை ஆட்கொண்டது என்றே சொல்ல வேண்டும். நல்ல வாசிப்பு, ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது என்பதற்கு ஆதாரமே என் வாழ்க்கை. வளர் இளம் பருவத்திலேயே மற்ற குழந்தைகள் போல இயல்பான இச்சைகள் எதுவுமே எனக்கு இல்லாமலே போனது. வெள்ளை ஆடை உடுத்துவது மட்டுமே என் விருப்பமாக இருந்தது. உடன் பயின்ற மாணவர்களுக்கும் நான் ஒரு வித்தியாசமான பிறவியாகவே காட்சியளித்திருக்க வேண்டும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    pavala2

    வினா : ஆன்மீகப் பாதையில் தங்களின் வளர்ச்சி பற்றி சொல்லுங்களேன்

    pavala1அம்மா: நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, என் பள்ளிக் கல்வியுடன், பற்றில்லாத ஒரு நிலையும் என்னையறியாமல் என்னுடன் வளர்ந்து வந்தது என்றே சொல்ல வேண்டும். பெற்றோர் (இவர் தந்தை பிரபலமான ஒரு மருத்துவராக இருந்தவர்) சகோதரிகள் என அனைவரும் என்னுடன் இருந்தபோதும், தனிமை மட்டுமே என் உள்ளொளியை பெருகச் செய்தது என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே என் முதுகலை கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, வினோபாஜியின் மடத்தில் சென்று இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டேன். அங்குதான் தேசபக்தியும், என் ஆன்மீகமும் இணைந்த பயணம் தலை தூக்கியது. வினோபாஜியின் உரைகள் என்னை மென்மேலும் பண்படுத்தியதோடு, என் ஆன்மீகத் தேடலுக்கும் நிறைய நூல்கள் களம் அமைத்துக் கொடுத்தன. கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் தயாராக முடிந்தது.

    வினா : தேச பக்தியும், துறவும் ஒன்றிணைந்து பயணிக்க இயலுமா?

    அம்மா: இல்லை. என்னைப் பொருத்தவரை தேசப்பற்றும், என்னுள் இருந்த கலைப்பற்றும் என் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடையாகவே இருந்தது. நாட்டியம், பாடல், கவிதை எழுதுவது போன்ற கலைகள் நான் கற்றிருந்தேன். ஆனாலும் அதைச் சுமக்க விரும்பாமல் விட்டுவிட்ட பின்புதான் என் துறவு வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதாவது எதுவுமற்ற வெறுமையே வழிபாடு என்ற நிலை அரும்பியது. எந்தத் தேவையும் இருக்கவில்லை. தம் தொண்ணூறு வயதுகளில் இருந்த வினோபாஜியின் அறிவுரைகளும், வாழ்க்கை முறைமைகளும் எனக்குள் பெரும் மாற்றத்தையே ஏற்படுத்தியது. அதன் பின் ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்து, மாணவச் செல்வங்களுக்கும் நல்ல ஆன்மீக ஒழுக்க நெறியுடன் இயைந்த கல்வியைப் புகட்ட முடிந்தது. என்னுடைய இந்த எழுபத்தி இரண்டு வயதிலும், இன்று திருமணம் ஆகி நல்ல நிலையில் வாழும் பெண்கள் பலர் தங்கள் அமைதியான வாழ்வின் ஆதாரமாக என் பயிற்சி முறைகள் இருந்துள்ளது என்று மகிழ்வுடன் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

    வினா: துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்த ஒருவர் நாட்டிற்கான சேவை ஏதும் செய்யத் தேவையில்லையா? குறிப்பாக அரசியலில் அவர்கள் ஈடுபடலாமா?

    அம்மா : தேவையில்லை. சும்மா இருத்தலே துறவறம். (உண்மையான துறவிகளுக்கு). அவர்களின் இருப்பே நன்மை. ஏதும் செய்ய வேண்டிய தேவையே இல்லை.

    வினா: புரியவில்லை அம்மா. சும்மா இருப்பதில் யாருக்கு என்ன நன்மை விளையப் போகிறது. நாட்டிற்கும், வீட்டிற்கும் நம் சக மனிதர்களுக்கும் கூட எந்த சேவையும் செய்யாமல் சும்மாயிருப்பதில் தன்சுகம் காண்பதன்றி வேறு என்ன நன்மை விளையப்போகிறது.

    அம்மா: ஆம். உண்மையான துறவு நிலையை மேற்கொண்டிருப்பவர்களின் இருப்பே நாட்டிற்கு நலம் விளைவிப்பவை. ஒரு தீபச் சுடர் போல ஒளி பரவும். அந்த ஒளியில் எண்ணற்ற நலம் பெருகும்.

    வினா: அப்படி ஒரு நல்ல அலை பரவும் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் ஏதும் செய்யாமலே காத்திருப்பது சரியா? அப்படி ஒரு நிலை வந்துவிட்டது என்பதை ஒருவரால் உணர முடியுமா?

    அம்மா: நிச்சயம் உணர முடியும். உண்மையான துறவு நிலையில் இருப்பவர்களுக்கு அந்த பேருண்மையை உணர முடியும். உள்ளத்தில் ஒரு நிரந்தர மகிழ்ச்சியும், அமைதியும் குடிகொண்டிருக்கும். தன்னைச் சுற்றி இருக்கும் சகல சீவன்களும் அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்.

    வினா: அம்மா, தவறாக எண்ண வேண்டாம். என் ஐயம் தீர வேண்டியே இப்படி ஒரு வினா. துறவு நிலையில் இருப்பவர்கள் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதே நலம் என்ற தங்களின் வாதம் உண்மையென்றால், சுவாமி விவேகானந்தர் நாடு முழுவதும் சுற்றி மக்களுக்கு நாட்டுப் பற்றை ஏற்படுத்தியதோடு, பல வெளிநாடுகளுக்கும் சென்று நம் நாட்டின் பெருமையை பரவச் செய்தாரே அந்த துறவறமும் சரிதானே?

    அம்மா: நிச்சயமாக ஆம். சுவாமிஜி, நாட்டின் அப்போதையத் தேவையைக் கருத்தில்கொண்டு, மக்களுக்கு தேசப்பற்றுpavala4 வளரவேண்டும், சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் தம் செயல்களை மேற்கொண்டிருந்தார். அதனால் நாட்டில் பெரும் நன்மைகளும் விளைந்தது. இந்து மதத்தை எப்படியும் உயர்வான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு விதத்தில் அது அவருடைய மறைமுகமான ஒரு சுதந்திரப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். நம் இந்தியாவில் சமஸ்கிருதம், வேதங்கள், உபநிசத்துகள் போன்ற பல அற்புதமான வளங்கள் இருக்கின்றன என்பதை உலக அரங்கில் எடுத்துச் சென்றார். அவருடைய உள்நோக்கம் துறவறம் என்பதைக்காட்டிலும், நாட்டுப் பற்று என்பதிலேயே இருந்தது. ஆனாலும் அவரும் தனக்குள் ஏதும் இல்லாமலேதான் இருந்தார். துயரப்படுவோருக்காக அவர் மனம் அழுதாலும், அவருக்குள் தனிப்பட்ட எந்தவிதப் பற்றும் இல்லாத வெறுமையே இருந்தது. அதுவே அவருக்கு வெற்றியையும் தந்தது.

    வினா: அப்படியானால் துறவு நிலையிலும் வேறுபாடுகள் உள்ளது என்கிறீர்களா?

    அம்மா : ஆம். அவரவர் சூழலுக்கேற்ப மாற்றங்கள் உண்டு. வாழ்க்கையில் படாத துன்பங்களெல்லாம் பட்ட பின்பு, துறவு நிலையைத்
    தேர்ந்தெடுத்தவர் பலர் மிகவும் மனம் ஒன்றிய நிலை துறவில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    வினா : காலம் குறித்து தங்களுடைய கருத்து என்ன? எதிர்காலம் பற்றி தங்களால் சொல்ல முடியுமா?

    அம்மா: காலம் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இறந்த காலம் முடிந்துபோன ஒன்று. எதிர்காலம் நம் கையில் இல்லை. நிகழ் காலமென்றாலும் அடுத்த நொடி என்றாலே அது முடிந்துபோன காலம். ஆக காலம் என்பது இல்லாத ஒன்று. இருப்பில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது…

    வினா : உங்கள் குடும்பம் பற்றி?

    அம்மா: ஒரு சன்யாசிக்கு இந்த உலகமே குடும்பம்தான். அவர்களுக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை என்றாலும், தாய் தந்தை இல்லாமல் எவரும் பிறக்க முடியாது. என் தந்தை ஒரு பிரபல மருத்துவராக இருந்தவர். தாய் மிக நல்லதொரு ஆத்மா..

    வினா: குடும்பம் எனும் சாகரத்தில் நீந்தி இன்ப துன்பங்கள் அனைத்தும் கடந்த நிலையில் பிற்காலங்களில் சன்னியாசம் பெறுவது நல்லதா? அது தேவையா?

    அம்மா: நம் இந்து மதம் இதை வானப்பிரஸ்தம் என்று முழுமையாக ஆதரிக்கிறது. நம் முன்னோர்கள், அரசர் முதல் ஆண்டி வரை எண்ணற்றோர் அப்படி வானப்பிரஸ்தம் சென்றுள்ளார்கள். இன்றும் வயதான காலத்தில் பெற்றோர் பிள்ளைகளை விட்டு விலகி இருத்தலே நலம். அதற்காக காவி உடுத்தி காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதல்ல. மனதில் எந்த எதிர்பார்ப்பும், ஆசைகளும் இன்றி தனிமையில் அமைதியான நிலையை மேற்கொள்வதே தவம். வாழ்ந்து முடித்தவர்கள் வாழ வேண்டியவர்களுக்கு வழி விட்டு விலகி இருத்தலே சிறந்த தவம்.

    வினா: அப்படியாயின் கூட்டுக் குடும்பம் என்ற ஒரு விசயமே தேவையில்லையா? தாத்தா, பாட்டி என்ற உறவு குழந்தைகளுக்கு அத்தியாவசியம் இல்லையா?

    அம்மா: எல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டு இருந்தாலே அமைதியான வாழ்க்கை கிடைக்கும். குடும்பத்தில் உழன்று கொண்டே இருப்பதால், தன் மன அமைதி, இறை நிலை ஆகிய அனைத்தும் இழக்க வேண்டியும் வந்துவிடுகிறது. மின் கட்டணமும், பால் அட்டையும், காய்காரி பிரச்சனையிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டு ஆன்மா கடைத்தேறும் வழியறியாது திகைத்து நிற்பதே முடிவாகிவிடும். அவரவர் கடமையை அவரவர் காலமறிந்து செய்வதே சிறந்த தவம். அதுவே மன அமைதிக்கும் வழி.

    வினா: புனிதப் பயணங்கள் செல்வது தேவையா?

    அம்மா: புனிதப் பயணங்கள் செல்வதன் மூலம் மனம் தூய்மை அடைகிறது. நம் முன்னோர்கள், புண்ணிய ஆத்மாக்கள் பாதம் பதிந்த மண்ணையும், ஆதிசங்கரர் போன்ற மகான்கள் கண்ணுற்ற தெய்வங்களை நாமும் தரிசிக்கும் போது நல்ல அலைகள் பரவும் வாய்ப்பு அதிகமாகிறது.
    ஆனால் ஒரு துறவிக்கு அதுவும் தேவையில்லை. தானே இறைவனுமாய் இருப்போரே உண்மையான துறவிகள். காட்டில் சென்று அமைதியாக தனிமையில் வாழுவதே சிறந்த தவம்.

    வினா: வினோபாஜியின் ஆசிரமத்தில் இருந்தபோது நீங்கள் கற்றுக்கொண்டவைகள் எவை?

    booksஅம்மா: ‘கேதாரேஷ்வர் தாம்’ நதிக்கரையில் உள்ள அந்த ஆசிரமத்தில், வாழ்க்கையின் நெறி முறைகள் அனைத்தும் அங்குதான் கற்றேன். வினோபாஜியின் ஆசிரமத்தில் என்னுடைய இரண்டாண்டு வாழ்க்கையில் நான் தவ வலிமையும், யோகமும், வேத சாத்திரங்கள் மற்றும் உபநிசங்களும் ஞானமாய் பெற்றேன். ஒரு வேளை உணவு மட்டுமே உயிர் வாழப் போதுமானது என்று அங்கு பழகி வந்ததை கடந்த ஐம்பது ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். அதனால்தானோ என்னவோ இந்த 72 வயதிலும் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அவரவர் உழைப்பிற்கேற்ற உணவு எடுத்துக்கொள்வதே சிறந்தது. சத்தான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்றாலும், கூலித் தொழிலாளி தன்னுடைய கடிமான வேலைக்குப் பிறகு சாப்பிடும் அதே அளவு உணவை உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்க்குத் தேவையில்லை. அந்த வகையில் துறவு நிலையில் சும்மா இருப்பவர்கள் இன்னும் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொள்வதே சரியாகும்.

    வினா: தியானம் யாருக்கெல்லாம் அவசியம்?

    அம்மா: தியானம் அனைவருக்கும் அவசியமான ஒன்று. குறிப்பாக குடும்பத்தில் உள்ளவர்கள் அன்றாடம் இருபது நிமிடங்களேனும் செய்ய வேண்டியது அவசியம். நான் தியானம் பயின்றது, தம்மகிரியில் கோயங்காவிடம். அதன் பிறகு தயானந்த சரசுவதி சுவாமிகளிடம் தியானம் பயின்றேன். நான் மிக அதிகமாகக் கற்றுக்கொண்டது என்றால் அது நுவரேலியாவில், காயத்ரி பீடத்தின், காயத்ரி சுவாமிகளிடம்தான். “கடைசி காலத்தில் நீ ஸ்ரீலங்காவில்தான் வந்து சேருவாய்” என்றும் சொல்லியிருக்கிறார் சுவாமிகள். தியானம் அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் செய்யும் வேலையை அரை மணியில் முடிக்க முடியும்.

    வினா : இன்றைய பெண்களின் நிலை பற்றி?

    அம்மா: என் கருத்து சற்று மாறுபட்டும் இருக்கலாம். பாரதி சொல்வான், ‘பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்த விந்தை மனிதர் தலை சாய்ந்துவிட்டார்’ என்று. ஆனால் அன்று பெண்களை அப்படி வீட்டில் பொத்தி வைத்திருந்ததாலேயே நம் இந்தியக் கலாச்சாரம் காப்பாற்றப்பட்டிருந்தது என்றே சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானதாகவே இருந்தது. பல ஆயிரம் வருடங்களாக அந்நியர் பூந்துவிட்ட நாடு இது. நம்நாட்டில் திலகவதியார், மைத்ரேயி, மங்கையர்கரசியார் போன்ற எத்துனை மாதரசிகள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சுதந்திரமும் இருக்கத்தான் செய்தது.

    இன்றைய நிலையில் ஒரு பெண் அநாவசியமாக, இரவு நேரங்களில், பாதுகாப்பற்ற சாலைகளில் அச்சத்துடன் செல்வதைக் காட்டிலும், வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதே முழுமையான சுதந்திரம் என்றே கூற முடிகிறது. பெண்கள் என்றுமே தங்களுக்கென ஒரு கட்டுப்பாடு வைத்துக்கொண்டு அதற்குள் வாழ்வது மட்டுமே சிறந்ததொரு வாழ்க்கை. சுதந்திரம் என்ற பெயரில் தேவையற்ற செயல்களைச் செய்து மாட்டிக்கொள்வதில் அல்ல சுதந்திரம். இன்று பெண்கள் கட்டாயமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிலையில், ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் துணிவு, அதாவது, அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடைவராகிறார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் பணிக்குச் செல்வதால், குழந்தை வளர்ப்பு பெரும் சவாலாகிவிடுகிறது. குழந்தைகளிடம் சில மணி நேரங்கள் செலவிடுவது கூட பெற்றோருக்கு இயலாமல் போகிறது. இதனால் இன்று குழந்தைகளின் மன நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சம நிலை என்பதிலெல்லாம் பெரும் அர்த்தம் இல்லை. அவரவர் கடமையை அவரவர் சரிவர செய்வதே சிறந்த சமத்துவம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே இனிமையான வாழ்க்கை. அதை உணர்ந்து வாழவேண்டியதே இன்றைய தேவை.

    மெய்ஞ்ஞான உணவை ஊட்டியது போதாது என்று நினைத்த அன்னை எங்களுக்கு அரிசிச் சாதமும், கொத்தமல்லித் துகையலும், தேங்காய் எண்ணெயும் கலந்து, தம் கைகளால் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொடுத்து வயிரையும் நிறையச் செய்தார்கள். மதிய நேரமான அந்த பகல் வேளையிலும், திறந்த வெளித் திண்ணையில், நல்ல நினைவலைகளின் பகிர்வுகளோடு, நிலாச்சோறு உண்ட மன நிறைவையும் ஏற்படுத்திய அன்னையை நெஞ்சில் சுமந்தபடி, அமைதியாக அவர் சிந்தைகளை அசை போட்டபடியும் வந்து சேர்ந்தோம், எங்கள் கடமைகளைத் தொடர….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “நடந்தவனை, நின்றவனை, நீளத் திருப்பாலில்,
      கிடந்தவனை, கேசவ் கொடுத்தான், -படந்தனில்,
      பாண்டவர்க்கு தூதாக, பங்கைப் பெறுவதற்கு,
      வேண்டி  விரைந்த  வனாய்”….கிரேசி மோகன்….
    Share
  • கன்னத்தில் மின்னலொன்று

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (43)

     

    கன்னத்தில் மின்னலொன்று
    (பாடல்)

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1/[/mixcloud]

    10599175_739284626129228_1932362888911507228_n

    கன்னத்தில் மின்னலொன்று
    கண்சிமிட்டித் தான்மயங்க
    கள்ளூறும் கண்ணிரண்டைக்
    கண்டுகண்கள் தாம்கிறங்க

    பொன்னூறும் பூவிதழில்
    வானமிழ்தம் தானிறங்க
    என்னசொல்லிப் பாடுவதோ
    என்னுயிரே தாலேலோ!

    பாறையினில் ஈரமென
    பாலையினில் சாரலென
    பந்துநிலவாய் நுழைந்தாய்
    நெஞ்சில் நின்று நீ நெகிழ்ந்தாய்

    சூறையினில் காவலென
    கூரையினில் சேவலென
    சொந்தபந்தமாக வந்த
    தோழமையே தாலேலோ!

    அன்றிலிருந் தின்றுவரை
    இன்பமிது போல இல்லை
    என்றுமிது நீள்கவென்றே
    என்றன்மனம் ஏங்கும் எல்லை

    குன்றில்வரும் வெண்ணிலவே!
    கொப்புக்குயில் பண்ணழகே!
    சிட்டுக் குருவிச் சிறகே!
    சித்திரமே தாலேலோ!
    பார்த்தவிழி பார்த்திருக்க
    பருகும்விழி பருகிநிற்க
    சேர்த்தகதை தீர்ந்ததம்மா
    ஜென்மம்கரை சேர்ந்ததம்மா

    ஆர்த்துவரும் பொன்னருவி
    அள்ளிவரும் சீதனமே
    அன்புமயமான அன்பே
    ஆனந்தமே தாலேலோ!

    படத்திற்கு நன்றி

     

    Share
  • திருமால் திருப்புகழ்….திருநீர் மலை அணிமா மலர்மங்கை சமேத நீர்வண்ணப் பெருமாள்….

     

    திருநீர் மலை ‘’நீர்வண்ணப்’’ பெருமாளை 3தினங்களுக்கு முன் தரிசித்தேன்….திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி தண்ணீர் இருந்ததால் பெருமாளை தரிசிப்பதற்காக எதிர் மலையில், சூழ்ந்த தண்ணீர் வற்ற ஒருமாத காலம் காத்திருந்து, பிறகு தரிசித்து…. மலையடிவாரம் நின்ற பெருமாளை ‘’நீர்வண்ணா’’ என்று பாடி மங்களாஸாஸனம் செய்தார் என்பது ஐதீகம்….பூதத்தாழ்வாரும் இவரைப் பாடியிருக்கிறார்….ஆழ்வானாக முடியாவிட்டாலும் பதங்களில் வீழ்வானாக இருப்போமே என்ற ஆசையில் எழுதிய ‘’திருமால் திருப்புகழ்’’….கிரேசி மோகன்….

     

    thiruneermalai2

    —————————————————————————————————————–

    தனனா தனதந்த தனனா தனதந்த
    தனனா தனதந்த -தனதான….
    ————————————————————————————————–

    Picture 017

    Picture 036

    மரணா வதைவென்ற எமனார் எதிர்நின்ற

    ரமணார் வழிசென்று -லகுவாக
    எனைநான் அதுவென்று அறிவால் உணர்வென்ற,
    அருணா சலர்பங்கு -உமையாளின்,

    கரவே லதுகொண்டு திருவா வினன்குன்றில்
    அரைகோ வணம்தெண்ட -குருபாலன்
    மருமா னவன்கொஞ்ச குறமான் மகள்தந்த
    முறைமா மமுகுந்த -அனுபூதி

    பெறநான் சுடர்சங்கு கதைவாள் சிலைஐந்து
    படையோ டலைமங்கை -உடனேள
    புயமா யிரம்கொண்ட படசே டரணைந்த
    கடலா டிடும்ரங்க -அருள்வாயே

    ஒருநாள் ஜலமங்கை மலைசூழ் தினம்வந்து
    திருவாய் மொழிமங்கை, -உபசார
    அணிமா மலர்மங்கை அருகே வலம்கொண்டு
    திருநீர் மலைநின்ற. -பெருமாளே….கிரேசி மோகன்….

    படங்களுக்கு நன்றி : http://enthamizh.blogspot.in/2012/02/450-thiruneermalai.html

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”கைக்கெட் டியகயிறேன், கேசவ்  குழந்தையின்,

     மெய்கட்ட மட்டும்  மறுக்குது! -மைகொட்டும்,

     கண்களில்  பீதி, கடவுளா!  சைத்தானா! ,

     மண்களித்(து) உண்ட மகன்’’….கிரேசி மோகன்….

     

     

     

    Share
  • மழைவந்தது போல்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (42)

     

    மழைவந்தது போல்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]

    10300956_511805985622125_9062938083888487518_n
    மழைவந்தது போல் நீ வந்தாயா?
    நீ வந்தது போல் மழை வந்ததா?

    இழை இழையாய் விழுந்துகொண்டிருக்கும் இந்த
    இன்ப விந்தையின்
    இடைவெளிகளில் ஏதோ ஒன்று
    கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது

    என்னால் அதைப்பிடிக்க முடியாது என்றாலும்
    நின்ற இடத்தில் புரிந்துவிட்டது இன்று

    என்றைக்கு வந்தாயோ அன்றிலிருந்து
    இன்றைக்கும்
    இன்றைக்குத்தான் நீ வந்ததுபோல்

    நான்
    பரவசமாகிறேன்…படபடக்கிறேன்..
    பதறுகிறேன்…நெகிழ்கிறேன்…
    பற்றமுடியாமல் உடைந்து அழுகிறேன்…
    பருக முடியாமல் நெஞ்செல்லாம்
    பாறையொன்று ஏறிக்கொண்டு அமர்ந்ததுபோல்
    பாரம் தாங்க முடியாமல் பரிதவிக்கிறேன்
    பாடலே உயிராக வரவேற்கிறேன்

    என்
    வரவேற்பின் நேர்மையை நீ மதித்தாலும்
    சங்கடப் படுகிறாய்..துணுக்குறுகிறாய்..
    சந்தேகத்தை, உன் நல்லெண்ணத்தால்
    தவிர்க்க முயல்கிறாய்

    இன்றுதான் உன் நியாயம் புரிந்தது
    இத்தனைநாள் உன்னை எப்படியெல்லாம்
    சங்கடப்படுத்திவிட்டேன்!
    தன்போக்கில் சென்றுகொண்டிருந்த தெய்வம்,
    என்னைத்தான் சந்திக்க வந்தது என்று
    பேதைமையால் நம்பிக்கொண்டு
    பாதையை மறித்துப் படுத்துக்கொண்டேனே!

    எனக்கு
    நீதான் உயிர்.
    வாழ்க்கை.
    எ..ல்..லா..ம்

    உனக்கு?
    நான்
    ஒ..ன்..று..மே இல்லையே!!

    அடடா! உன்னை
    எதிரே கண்ட பதற்றத்தில், என்
    ஏழ்மையை மறந்தே போய்விட்டேனே!!!

    சரி
    எனக்கும் உனக்கும் வேறு வழியில்லை
    எனவே என்னை மன்னித்துவிடு!!
    இதற்குப் பிறகு என்ன நடக்குமோ
    எனக்குத் தெரியாது
    கதையைச் சொல்லும் எழுத்துக்குக்
    கதையோ புரியாது………..

    Share
  • ஆசிரியர் தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    teachers day

     

     

     

     

     

     

     

    மாதா, பிதா, குரு  
    மூவரும் கண்கண்ட தெய்வம்
    அன்பிற்கு அன்னை, அறிவுக்குத் தந்தை
    கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே!

    மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை
    இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே பெருமை
    மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி
    ஏணியாய் இருந்தவர்களுக்கு என்றும் ஆசிரியர் எனும் பதவியே!

    ஆசிரியர் பணி மகத்தான பணியன்றோ!
    அவர்களை நினைவுகொள்வது நமது கடமையன்றோ!
    ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே!
    அவர்தம் பிறந்தநாளே ஆசிரியர் தினமாக அறிமுகமானதே!

    அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை 
    அதிலும் தரமான கல்வியை அளிப்பதே நாட்டின் கடமை
    வாழ்க்கையில் கல்வி என்பது மனிதனின் இருகண்கள்
    கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதீர்கள்!   

    Share