ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
— கவிஞர் காவிரிமைந்தன்.
அன்பின் ஆர்ப்பரிப்பா? காதல்.. இல்லை.. அது ஆனந்த பைரவியா?
எப்போது இது தோன்றுமென்பதை எவரும் முன்கூட்டி சொல்வதில்லை! இந்த ஒற்றைப்பூ நெஞ்சுக்குள் பூத்துவிட்டால் சந்தோஷ மழைக்கென்றுமே பஞ்சமில்லை! கண்ணுக்கு மட்டுமே முதல் தகவல் கிடைக்க.. அது மனசுக்குள் சென்று செய்யும் கலவரமிருக்கிறதே .. காதலித்தவர்களுக்கே புரியும் – அந்த ஆனந்த அவஸ்தை! பார்வையில் தொடங்கி நெஞ்சப் பரிமாற்றமென காதலின் நிலைகள் பலவும் கவிதையில் கேட்பது இனிமை! வரைமுறைக்குள் நடக்கின்ற இந்த வாலிபத் திருவிழா பூங்காக்கள்.. கடற்கரை.. திருக்கோவில்.. தெருவீதி.. என அடிக்கடி இடம் மாற்றம் நிகழ்ந்தாலும் இதயங்கள் இரண்டு மட்டும் இணைந்தே இருப்பதென்ன?
இளமை ஊஞ்சலாடுகிறது என்னும் திரைப்படத்திற்காக கவிஞானி வாலி இயற்றி இசை ஞானி இளையராஜா அமைத்த இசையில் இதோ மெல்லிய பூங்காற்று செல்லமாய் பேசுவதைப் போல் எஸ்.பி. பாலசுப்ரமணியமும் வாணிஜெயராமும் வழங்கியிருக்கும் சுகமான பாடல்! இது சிவரஞ்சனியா தெரியவில்லை. காதல் மிதமிஞ்சிப் போகும் கலை!
ஒற்றைப் பாடலுக்குள் இத்தனை சுகங்களா? எண்ணிப் பாருங்கள்!! இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் பாடல் பற்றி இளையராஜா அவர்கள் ஒரு மேடையில் குறிப்பிடும்போது கவிஞர் வாலி அவர்களின் பாடல் இயற்றும் திறம்பற்றி புகழ்ந்துரைத்து… ஆரோகணத்தில் தொடங்கும் பல்லவியை அடுத்து.. உனை எனை என்று வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். வேறு எந்த வார்த்தைகளும் அந்த இடத்திற்கு இத்தனைப் பொருத்தம் ஆகா என்றார்.
வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களையும் அதன் ஆழத்தையும் தன் கற்பனையிலே கொண்டுவரும் வித்தகமே கவிதை! அதைத் தன் இசை ஞானத்தால் இதயம் தொடும் விதத்தால் இளையராஜா நடத்தும் ராஜாங்கத்தில் என்றுமே சுகம்! சுகம்!!
http://youtu.be/th3LJyFDZzY
காணொளி: http://youtu.be/th3LJyFDZzY
படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
பாடல்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது…மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்கசங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன….
[ஒரே நாள்…]
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன…
[ஒரே நாள்…]
பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்ககண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்இரவும், பகலும், இசை முழங்க….
[ஒரே நாள்…]