Blog

  • அணிலின் குரல்

    அணிலின் குரல்

    அணில் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். இது ஏன் இப்படி உரக்க, இவ்வளவு நேரமாகக் குரல் கொடுக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி | தமிழில் விளக்கம்

    சௌந்தர்ய லஹரி | தமிழில் விளக்கம்

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொங்கா கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி

    தொங்கா கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி

    சி. ஜெயபாரதன், கனடா

    Tonga photos before and after volcano eruption, tsunami

    Powerful undersea volcano eruption in Tonga on January 14.

    Powerful undersea volcano eruption in Tonga on January 14., 2022

    Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud. Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in the Philippines, New Zealand-based volcanologist Shane Cronin told Radio New Zealand.

    பசிபிக் பெருங்கடல் தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்

    2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.

    2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.

    A tsunami measuring 1.5 meters triggered by the shockwave hit Tonga during the weekend, inundating homes and roads and damaging communication lines. However, no death has been reported so far.

    The shockwave was registered as far away as Alaska and Chennai in a sharp rise and fall of air pressure. The booming sound was reportedly heard as far as New Zealand that lies about 2,500 km from Tonga.

    More recent reports claimed that most communications lines could be down for up to two weeks. Nevertheless, Tonga also made the news on the crypto front. The tiny island nation in the Tasman Sea of the South Pacific Ocean is accepting bitcoin donations in the aftermath of Saturday’s volcanic shockwave that caused the tsunami.

    Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific

    A grab taken from footage by Japan’s Himawari-8 satellite and released by the National Institute of Information and Communications (Japan) on January 15, 2022 shows the volcanic eruption that provoked a tsunami in Tonga. – The eruption was so intense it was heard as “loud thunder sounds” in Fiji more than 800 kilometres (500 miles) away. (Photo by Handout / NATIONAL INSTITUTE OF INFORMATION AND COMMUNICATIONS (JAPAN) / AFP)

    தகவல்:

    Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific

    https://en.wikipedia.org/wiki/2022_Hunga_Tonga_eruption_and_tsunami#:~:text

    Share
  • தக்காளிக் காய் மசியல்

    தக்காளிக் காய் மசியல்

    தக்காளிக் காய் மசியல், சுவையும் சத்தும் நிறைந்தது. இதைக் கலந்து சாப்பிட்டால், சாப்பாடே களை கட்டும். இதை எப்படிச் செய்வது தெரியுமா? இதோ சுதா மாதவன் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஷிர்டி சாய்பாபா ரதம்

    ஷிர்டி சாய்பாபா ரதம்

    பொங்கல் அன்று தாம்பரத்தில் இந்தச் சாய்பாபா ரதத்தைப் பார்த்தேன். ரதம் முழுக்க ஷிர்டி சாய்பாபா படங்களும் சிலைகளும் இருந்தன. கூடவே திருமால், இலட்சுமி, விநாயகர்… என இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ரதத்துக்குச் சிறிய காணிக்கைகள் கிடைத்தவண்ணம் இருந்தன. இந்த ரதத்தை இயக்குபவருக்கு இதுவே முழு நேரத் தொழில். அவருடன் ஒரு சிறிய உரையாடலும் இந்தப் பதிவில் உள்ளது.

    ரதத்துடன் ஒலித்த இந்திப் பாடலுக்குக் காப்புரிமை இருப்பதால், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரை வேண்டினேன். சாயி பக்தரான அவர், உடனே ஒரு பாடலை இயற்றி இசையமைத்துப் பாடிக் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • யானைத்தந்த வெண்டை விதைகள்

    யானைத்தந்த வெண்டை விதைகள்

    நம் மாடித் தோட்டத்திலிருந்து யானைத்தந்த வெண்டை விதைகளைச் சேகரித்து வைத்துள்ளோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – 2022 ஜனவரியில்.

    படங்கள் – ஓவியர் ஸ்யாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    மூர்த்தி நாயனாரை அடக்கியாண்ட வடுக மன்னன் சிவச்சார்பு இல்லாமையால்  விரைவில் மாண்டு நரகம் புக்கான். மக்கள் அவனுக்கு இறுதிக்கடன்  செய்தனர். அவனுக்கு வாரிசு இல்லாமையால், மன்னன்  இல்லா அரசு உயிரற்ற உடல்போன்றதாகும்.  என்றனர். ஆதலால் யானை ஒன்றைக்  கண்கட்டி அனுப்பினால், அவ்வேழம் கைக்கொண்டமனிதன் அரசாட்சி கொள்வான் என்று, பூசனைசெய்து, ‘’உரிய அரசனைக் கொணர்க’’  என்று ஏவினர். அந்த யானை எங்கும்  திரிந்து , ஆலவாய்  அண்ணல் கோயிலை அடைந்தது.

    முன்னாள்  இரவில் மூர்த்தியார்  கனவில்  இறைவன்  அருள் வாக்கு கூறியதைக் கேட்ட  அடியார் ‘’இறைவன் அருளியவாறே  அரசுரிமை பெறுவேன்’’ என்று  திருக்கோயில் வாயிலுக்கு வந்தார்.   அரசயானை அங்கே வந்து உலகம் உய்யும் பொருட்டு, அடியாரை எடுத்து தன்  பிடரிமேல் தாங்கிச் சென்றது. மக்கள் பணிந்து   செய்த  ஆரவாரத்தின் இடையே அரசனின் ஆட்சி மன்றத்தில் இருந்த  அரியாசனத்தில்  அடியாரை ஏற்றி  வணங்கியது.

    மக்கள் அனைவரும் அடியாராகிய அரசனைப் போற்றி, அரசாபிடேகம் செய்ய விரும்பினார். மக்கள் வேண்டியதால்  சடாமுடியே அரசமுடி, திருநீறே  அபிடேகம்  சிவனுடைய  மாலைகளையே அணிகலன்கள்  எனக் கொண்டு  தவராச  யோகியாக  அரியணை ஏறினார்.  அறிவார்ந்த  அமைச்சர்களும் அதற்கேற்ற சடங்குகள் செய்தனர். அவ்வாறே அரசேற்ற அடியார்  அரச வீதியில் யானைமேலேறிச் சென்று , சிங்காதனம் ஏறினார்.

    சமணர் நெறி நீக்கிச்  சிவநெறி  மேற்கொண்டு அக்கமணிமாலை தாங்கி  மூர்த்தியார், அரசாட்சி  செய்யத்  தொடங்கினார்.  பெண்களின் பால் காமம் நீக்கி,  ஐம்புலன்களையும் அடக்கி, உலக உயிர்களுக்கு இடர் வராமல் காத்து, அவர் ஆண்ட  இறைவனடி  சேர்ந்த  சிறப்பைச்  சேக்கிழார் பாடுகிறார்,

    பாடல்:

    பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
    ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு, தொண்டின்
    பேதம் புரியா அருள் பேர் அரசுஆளப் பெற்று
    நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.

    இதன்பொருள்: தமது பாதங்களைவேற்றரசர்கள் சூழ்ந்து பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால் இவ்வுலகினை அரசாண்டு திருத்தொண்டினின்றும் விலகாத அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது கழலணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர்.

    விளக்கம்:

    பரமன்னவர் – வேற்றரசர். வென்றனர் என்பது முன்னரே  கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட பரமன்னரும், வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை வலிமையும் கண்டு வந்து சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து போற்றினர் என்க.

    திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து பலதேய மன்னர்களும் தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு நடந்தனர் என்ற செய்தியை இங்கே நினைவுகூர்க.

    ஏதம் பிணியா  வகை  இவ்வுலகு ஆண்டு  என்பதற்கு,  புறப்பகையால் வரும் ஏதம்

    பிணியாவகையிலும், அகப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும் உலகாண்டனர் என்க.

    தொண்டின் பேதம் புரியா – சிவத்தொண்டினின்றும் பிரியாத – சிறிதும் திறம்பாத. அருட்பேரரசு – சிவனதருளின் கீழதாகிய பெரும்பாக்கியம். உலகாளும் அரசினும் அரனது திருத்தொண்டாகிய அரசே பெரிது என்று காட்டுவார்  அருட்பேரரசு எனச் சிறப்பு அடைமொழி தந்து விதந்து எடுத்துக் கூறினார். உலகுயிர்மேல் வைத்த சீவகாருண்ணியத்தினும் சிவனருட் பெருமையே பெரிதெனக் கொண்டனர் மூர்த்தியார் என்பது காண்க. (உலகு) ஆண்டு என்றமைந்த ஆசிரியர், (பேரரசு) ஆளப்பெற்று என்று சிறப்பித்துக் கூறிய திறனும் இக் கருத்தே பற்றியது. மேல்வரும் பாட்டில் களிற்றன்பர் என்றதும் காண்க.

    முடிமன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்களில் ஒருவராய், “மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் றமிழ்முதலாம், பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா” ராகிய ஐயடிகள் காடவர்கோ னாயனார் இக் கருத்துப்பற்றியே (உலக)

    “அரசாட்சி இன்னல் என  இகழ்ந்து  அதனை யெழிற்குமரன் மேல் இழிச்சி,

    நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்”

    என்ற சரிதம் கேட்கின்றோம். அவரது திருவுள்ளநிலை இக்கருத்தே பற்றிய தென்பது

    “படிமுழுதும்  வெண்குடைக்கீழ்ப்    பாரெலா   மாண்ட,
    முடியரசர்   செல்வத்து  மும்மை  – கடியிலங்கு,
    தோடேந்து  கொன்றையந்தார்ச்   சோதிக்குத்   தொண்டுபட்டு
    ஓடேந்தி   யுண்பது  உறும்”

    என்று அவர் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பாவினால்  அறியப்படும். இதனையே வியந்து எடுத்துப் பாராட்டி

    “முடியரசாம்   அத்திற்கு   மும்மைநன் றால்  அரற்கா
    ஐயம்  ஏற்றலென்னும், பத்திக்கட லையடிகள்”

    என்று துதித்தருளினர் நம்பியாண்டார்நம்பிகள் .

    “போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்”

    என்ற திருவாசகம்  முதலியவை காண்க.

    “கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்;
    மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன்;
    மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்;
    சால நின்பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்”

    என்று  கந்தபுராணத்தில்  வீரவாகுதேவர் கேட்ட வரத்தின் உள்ளுறையும் கருதுக.

    அண்ணலார்  என்ற சொல்,  பெருமையுடையவரைட் குறித்தது.  பெரும்பேறாகிய

    சிவனடிப் பேறு பெற்ற இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

    இப்பாடலால், ‘’அரசாட்சி  ஏற்பவர்  துறவியாக  இருக்க வேண்டும்’’  என்ற உலகியல்  மொழியைப்  பெரிய புராணம்  கூறுவதை  உணரலாம்.  இறையருளையே  வேண்டுபவர்  செய்யும் அரசாட்சி  இறையருளாட்சியாகவே  இருக்கும் என்பதை  இப்பாடல் குறிக்கிறது.

    Share
  • தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

    பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

    ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

    செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

    தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

    ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

    அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

    இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

    சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

    “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

    அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

    ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

    “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

    “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

    “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

    “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

    “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

    “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

    முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

    “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

    ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

    குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

    ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

    தைப்பூசத்திற்கு முதல் நாள்.

    எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

    முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

    “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

    அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

    Share
  • கூடங்குள அணுமின்சக்தி ஆலை

    கூடங்குள அணுமின்சக்தி ஆலை

    சி. ஜெயபாரதன், கனடா

    கூடங்குள அணுமின் உலைகள்
    கூவத்து நதிக் கரையில்
    மேவப் பட்ட
    தீவிர மரணப் பீடங்கள் அல்ல!
    சிதைந்து போய்ச்
    சாம்பலான செர்நோபில்
    சமாதி அல்ல !
    இந்தியர் வரிப்பண
    உப்பைத் தின்று
    வளரும்
    ஒப்பிலா விஞ்ஞானிகள்
    உன்னத பொறித் துறை
    நிபுணர்கள் கட்டி
    எழுப்பிய
    பிரம்மாண்ட மின்சாரப்
    பிரமிடுகள் !

    ஊரே தீப்பற்றி எரிய
    வீணை வாசித்த ரோமாபுரி
    நீரோ மன்னன்
    எழுப்பிய
    கோரக் காலிஸீய அரண் அல்ல!
    கூடங்குள அணு உலை மூடிக் கிடந்தால்
    நாடு வளம் குன்றும்!
    கணினிகள்
    மிளகாய்ப் பெட்டிகளாய்
    கண்ணீர் சிந்தும்!
    மின் விசிறிகள் மூச்சிழக்கும்!
    மின்சார மின்றி
    சம்சாரம்
    மங்கலம் பாடும்!

    சினிமாக் கொட்டகை
    மாட்டுக்
    கொட்டமாய்க்
    கொட்டாவி விடும்!
    கவச குண்டல மாய்த்
    தொங்கும்
    செல்லரித்துப் போன
    கைபேசிகள்!
    மாட்டு வண்டிகள் இழுக்கும்
    சாணி யுகம் மீளும்.
    காணி நிலத்தில், புற்றுப்
    பாம்புகள் படமெடுக்கும்
    எரிந்த
    சாம்பலி லிருந்து!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    -மேகலா இராமமூர்த்தி

    அனுமனை அயன்படையால் பிணித்து இழுத்துவந்து இராவணன் முன்னிலையில் நிறுத்தினான் இந்திரசித்து. அவனைப் பார்த்து ”யார் நீ?” என்று இராவணன் சினத்தோடு வினவ, தன்னைப் பற்றியும் தான் சீதையைத் தேடி வாலி மைந்தன் அங்கதன் அனுப்பிய தூதனாக இலங்கைக்கு வந்தது பற்றியும் இராவணனுக்கு விரிவாய் விளம்பினான் அனுமன்.

    வாலி மைந்தனைப் பற்றி அனுமன் குறிப்பிட்டதைக் கேட்ட இராவணன், தன் பல்வரிசையைக் காட்டிச் சிரித்து, ”வாலி மைந்தன் அனுப்ப வந்த தூதனே!  மிகுவலி படைத்த வாலி நலமா? அவன் அரசாட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா?” என்று கேட்டான். அனுமன் நகைத்தபடியே, ”அரக்க இராவணனே! அஞ்சாதே! கொடுஞ்சினம் கொண்டவனான வாலி விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டான்; இனித் திரும்பி வரமாட்டான்; அவன் போன அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது. அஞ்சனமேனியான் இராமனின் அடுகணை ஒன்றினால் வருந்தி இறந்தான் வாலி. இப்போது எங்களுக்கு அரசன் சூரியன் மகனான சுக்கிரீவன்” என்றான்.

    அஞ்சலை அரக்க பார்விட்டு
    அந்தரம் அடைந்தான் அன்றே
    வெஞ்சின வாலி மீளான்
    வாலும்போய் விளிந்தது அன்றே
    அஞ்சன மேனியான் தன்
    அடுகணை ஒன்றால் மாழ்கித்
    துஞ்சினன் எங்கள் வேந்தன்
    சூரியன் தோன்றல்
     என்றான். (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5888)

    ”வாலி இறந்துவிட்டான்; இனி அவனையும் அவன் வாலையும் எண்ணி அஞ்சவேண்டா” என்று இராவணனை எள்ளல்செய்த அனுமன், வாலி மரணித்த விதத்தைக் கூறுமுகத்தான் இராமனின் வில்திறனையும் இராவணனுக்குக் குறிப்பாலுணர்த்தித் தான் சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்.

    அஞ்சனை மைந்தன் வஞ்சனையின்றி இராமனின் வீரப் பிரதாபங்களை விதந்தோதுவதைக் கேட்ட இராவணன், ”வாலியைக் கொன்ற இராமனுக்கு நீவிர் அடிமைத் தொழில் செய்வது இழிசெயல் இல்லையா?” என்று பழித்துரைத்துவிட்டு, ”தூதனாக வந்த நீ இலங்கையில் சோலைகளையும் அரக்கர்களையும் அழித்தது ஏன்?” என்று கேட்டான் காட்டமாக.

    சற்று சிந்தித்த அனுமன், இவனிடம் அனைவர்க்கும் பொதுவான அறக்கருத்துக்களை எடுத்துரைக்க இதுவே ஏற்ற தருணம் என்ற முடிவுக்கு வந்தவனாய், பதினாறு பாடல்களில் அவற்றை எடுத்தியம்புகின்றான்.

    ”நெருப்பினும் தூயவளான சீதையைத் துன்புறுத்தியதால் பெருந்தவம் ஆற்றிப் பெற்ற பலனை நீவிர் இழந்துவிட்டீர். தீமையால் என்றுமே நன்மையை வெல்ல முடியாது என்பதை உணர்க!

    இச்சையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்கும் வண்ணம் நாணமற்றவனாய், பசுமையான செழித்த உடம்பு காமதாபத்தால் உலரப்பெற்றுப் பழிப்பை அடைகின்ற ஆண்மையும் சிறப்பினைப் பெறுமோ? என்று இகழ்ந்துரைத்தான்.

    இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
    நச்சி நாளும் நகைஉற நாண்இலன்
    பச்சை மேனி புலர்ந்து பழிபடூஉம்
    கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5903)

    பிறன்மனை நயத்தலின் இழிவு இப்பாடலில் வீரியமாய் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம்.

    எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    (குறள் – 145) என்ற குறட் கருத்தையே மேற்கண்ட பாடல் பிரதிபலிக்கின்றது.

    ”ஆகவே, இந்த இழிசெயலை விடுவாய். பெறற்கரிய உன் செல்வத்தையும், பல்வகைச் சுற்றத்தையும், உன்னுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் சீதையை இராமனிடம் ஒப்படைப்பாய் என்று உன்னிடம் சொல்லச் சொன்னான் சூரியன் மகனாகிய சுக்கிரீவன்” என்று இராவணனிடம் இயம்பினான் அனுமன்.

    ஆனால், அனுமனின் உரைகளுக்கு இராவணன் செவிசாய்க்கவில்லை; மாறாக ஒரு குரங்கு எனக்கு அறிவுரை கூறுகின்றது என்று எள்ளி நகையாடிவிட்டு, ”அது இருக்கட்டும்! தூதனாக இங்குவந்த நீ அரக்கர்களைக் கொன்றது ஏன்?” என்று மீண்டும் வினவினான்.

    ”அதுவா? உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை; அதனால்தான் காவல்மிகுந்த உன் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்லவந்தவர்களை நான் கொன்றேன்; அதன்பின்னரும் எளியவனாய் உன்மாட்டு வந்தது உன்னைக் கண்டு சில செய்திகளைக் கூறவேண்டும் என்பதற்காகவே” என்றான் அனுமன் அலட்சியமாக.

    காட்டுவார் இன்மையால் கடி காவினை
    வாட்டினேன் என்னைக் கொல்ல வந்தார்களை
    வீட்டினேன் பின்னும் மென்மையினால் உன்தன்
    மாட்டு வந்தது காணும் மதியினால்.  
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5913)

    ”நான் வரவேண்டும் என்று விரும்பியதால்தான் மிகவும் எளிய(வ)னாக என்னைக் காட்டிக்கொண்டு இங்கே வந்தேன். அயன்படைக்கு அஞ்சியன்று” என்ற குறிப்புப் பொருளும் அனுமனின் சொற்களில் பொதிந்திருக்கின்றது.

    அனுமனின் அச்சமற்ற அலட்சியச் சொற்களால் சீற்றமடைந்த இராவணன், ”இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான். அனுமனை நெருங்கிய கொலையாளிகளைப் பார்த்து, அவையிலிருந்த இராவணனின் தம்பியும் அறநெறியில் நடப்பவனுமான வீடணன், ”நில்லுங்கள்!” என்று தடுத்தான். அவர்கள் தயங்கி நிற்கவே, எழுந்துநின்று இராவணனை வணங்கிவிட்டு, ”ஐயனே நீ அறிவாற்றல் மிக்கவன்; வேதங்களை நன்கு கற்றவன்; இந்திரனை வென்ற பேரரசன். அப்படியிருக்க மற்றொருவர் சொல்லச் சொன்னதைச் சொல்லும் தூதனைக் கொல்லக் கருதுதல் முறையா? என்று அமைதியாய்க் கேட்டான்.

    தொடர்ந்தவன்… “இப்புவியிலும், அண்டக் கோளத்திலும், அதன்புறமாகிய பகிரண்டத்திலும், பொய்ம்மையில்லா வேதநெறியைப் பொருந்திவாழும் உலகங்களிலும், வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களிலும் மாதரைக் கொன்றவர் உளர் என்றபோதிலும், பழமையான நீதி தவறாதவர்களில், தம்மிடம் வந்த தூதரைக் கொன்றவர் யாருளர்?” என்ற வினாவை எழுப்பினான்.  

    பூதலப் பரப்பின் அண்டப்
    பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர்
    வேதம் உற்றுஇயங்கு வைப்பின்
    வேறுவேறு இடத்து வேந்தர்
    மாதரைக் கொலை செய்தார்கள்
    உளர்என வரினும் வந்த
    தூதரைக் கொன்றுளார்கள்
    யாவரே தொல்லை நல்லோர்
    . (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5917)

    பாவங்களில் கொடிது மாதரைக் கொல்வது; அதனினும் கொடிது தூதரைக் கொல்வது என்ற செய்தியை வீடணன் இப்பாடலில் தெளிவாய் வெளிப்படுத்துகின்றான்.

    சங்க இலக்கியத்தில் பெண்கொலை புரிந்த நன்னன் என்று ஓர் மன்னன் குறிக்கப்படுகின்றான். நன்னனது காவல் மரத்து மாங்காயை அருகிலுள்ள ஆற்றில் குளிக்கும்போது கண்டெடுத்த பெண்ணொருத்தி அதனைத் தின்றுவிட, அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான் நன்னன். அப்பெண்ணின் தந்தையார் அக்குற்றத்திற்குக் கழுவாயாக அப்பெண்ணின் எடைக்குச் சமமான பொன்னாலான பாவையையும், எண்பத்தொரு களிறுகளையும் தருவதாய்க் கூறியும் அதனையேற்காது தன் கொலைத் தண்டனையை நிறைவேற்றி நீங்காப் பழி சுமந்தான்.

    இவ்வாறு ஓர் அபலைப் பெண்ணைக் கொல்வதைவிடவும் பிறரிடமிருந்து வந்த தூதரைக் கொல்வது கொடியதாய் அன்று கருதப்பட்டது என்பதை அறிகையில் அரசாட்சி என்பது அறத்தின் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதில் அற்றைய அரசர்கள் செலுத்திய கவனம் புலப்படுகின்றது.

    வீடணனின் பொருளுரையை ஏற்ற இராவணன், ”நல்லது உரைத்தாய் தம்பி! இவன் குற்றம் புரிந்தவனாயினும் தூதன் என்பதால் நீ சொல்வதுபோல் இவனைக் கொல்லுதல் இழுக்கமுடையதே ஆகும் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அனுமனை நோக்கி, ”நீ உன்னை அனுப்பியவர்களிடம் சென்று, சீதையை விடமுடியாதென்ற, என் நோக்கத்தை உரைத்து அவர்களைப் போருக்கு அழைத்து வா!” என்றான்.

    அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து, ”இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலானது அடியோடு அழியும்படி அதில் நெருப்பை வைத்து, இவனை நகரைச் சுற்றி இழுத்துச் சென்று பின்பு நகரின் எல்லையைக் கடந்துபோகும்படி விட்டுவிடுங்கள்!” என்று கட்டளையிட்டான். இலங்கைக் காவலனின் ஆணையை ஏற்ற அரக்கர்கள் ஆரவாரத்துடன் கிளம்பினார்கள்.

    தம் மனைவிமார்களின் கழுத்திலிருந்த மங்கலக் கயிற்றைத் தவிர வீட்டிலும் நாட்டிலும் தட்டுப்பட்ட அனைத்துக் கயிறுகளையும் அள்ளிக்கொண்டு வந்து அவற்றால் அனுமனைக் கட்டினார்கள்.

    இவ்வாறு கயிறுகளால் கட்டப்பட்டபோதே அயன்படையிலிருந்து விடுபட்டான் அனுமன். (அயன்படையால் கட்டுண்டிருக்கும்போது வேறொரு கயிற்றினால் கட்டினால் அது பலமிழந்துவிடும்; அதனை அரக்கர்கள் அறியவில்லை.) தன் வாலில் இவர்கள் நெருப்பு வைப்பது மிகவும் நல்லது; இலங்கையை நான் கொளுத்துதற்கு அதுவே பெருந்துணைசெய்ய வல்லது என்று தன்னுள் எண்ணி மகிழ்ந்தான் அஞ்சனையின் அருமை மைந்தன்.

    இராவணன் அரண்மனையைக் கடந்து வெட்டவெளிக்கு அனுமனை அழைத்துச் சென்ற அரக்கர்கள், அவன் வாலில் துணிகளைச் சுற்றி அவ்வாலை நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து அதில் கொடுநெருப்பைக் கொளுத்திவிட்டு அண்டம் பொடிபட மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

    வேந்தன்கோயில் வாயிலொடு
    விரைவில் கடந்து வெள்ளிடையின்
    போந்து புறம்நின்று இரைக்கின்ற
    பொறைதீர் மறவர் புறம்சுற்ற
    ஏந்து நெடுவால் கிழிசுற்றி
    முற்றும் தோய்த்தார் இழுதுஎண்ணெய்
    காந்து கடுந்தீக் கொளுத்தினார்
    ஆர்த்தார் அண்டம் கடிகலங்க.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5927)

    இவ்வாறு அரக்கர்கள் ஆர்த்திருக்க, இச்செய்தி அறிந்த சீதையோ மிகுந்த வேதனையுற்றவளாய் அங்கியக் கடவுளைத் தொழுது, ”தீயே! நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் நீ அனுமனைச் சுடாதே!” என்று வேண்டிக்கொண்டாள்.

    அங்கியக் கடவுள் சீதையின் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றினான். அதன்விளைவாய் அனுமனின் வாலில் தீ எரிந்துகொண்டிருந்தபோதும் அஃது அவனைச் சுடவில்லை; மாறாகச் சில்லென்ற குளிர்ச்சியைத் தந்தது.

    தன் காயம் (உடல்) சுடாமல் குளிர்வது சனகன் பாவை கற்பினால் ஏற்பட்ட மாயம் என்றுணர்ந்த அனுமன் களிப்படைந்தான்.

    இலங்கை நகர் முழுவதையும் பகலில் மற்றொரு முறை காணுதற்கு இது நல்ல வாய்ப்பு என்றெண்ணித் தன்னைக் கயிறுகளால் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்களோடு நகரின் எல்லைவரை சென்ற அனுமன் திடீரென்று உயரே கிளம்பவே அவனைக் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்கள் அனைவரும் மேலிருந்து கீழே விழுந்தனர்.

    அவர்களிடமிருந்து தப்பிய அனுமன் இலங்கை நகர மாளிகைகள்தோறும் எரியும் வாலோடு தாவிச் செல்ல இலங்கை நகர் முழுவதிலும் தீ பரவியது.

    தீ பரவியதால் இலங்கையில் நிகழ்ந்த அவல நிகழ்வுகளை நாம் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரித்தபோது ஆங்கே நிகழ்ந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    சிலம்பின் வென்ற சேயிழை நங்கையான கண்ணகி ”தீத் திறத்தார் பக்கமே சேர்க” என்று அங்கியக் கடவுளுக்கு ஆணையிட்டதால் நல்லோர்கள் தீயின் வாயிலிருந்து தப்பினர். ஆனால், அனுமன் அவ்வாறெல்லாம் யாருக்கும் விலக்களிக்கவில்லை. அதனால் இலங்கையெங்கும் அழல் மண்டியது. இராவணனின் பிரம்மாண்டமான எழுநிலை மாளிகையும் எரியால் அழிந்ததால் அவன் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. அரக்கர்களோடும் தன் உரிமை மகளிரோடும் மாளிகைவிட்டு வெளியேறிப் புட்பக விமானத்தில் ஏறியவன், தன்னோடு வந்த அரக்கர்களைக் கண்களில் தீயெழ நோக்கி, “உலகங்களை எரித்தழிக்கும் ஊழிக் காலம் வந்துவிட்டதா? அல்லது வேறு காரணங்களால் இலங்கை நகரம் வெந்துவிட்டதா?” எனக் கேட்டான்.

    அரக்கர்கள் அவனிடம், ”அரசே! நம்மால் வாலில் எரியூட்டப்பட்ட குரங்கு சுட்டது இலங்கையை” என்றனர். அதுகேட்ட இராவணன், “புன்தொழில் குரங்கின் வலிமையால் இலங்கை எரிந்து சாம்பலானது; நெருப்பு நம் நகரத்தைத் தின்று ஏப்பம் விட்டது; இதனைக் கண்டால் நம்மிடம் தோற்றோடிய தேவர்கள் நகைப்பார்கள்; நம் போர்த்திறமை மிக நன்று!” என்று வெகுளி மேலீட்டால் சிரித்து, ”இலங்கைக்குத் தீங்குசெய்த அந்தக் குரங்கு ஊரைவிட்டு நீங்குமுன் பற்றி வாருங்கள்!” என்று கட்டளையிட்டான்.

    அனுமனோடு மீண்டும் போரெதிர்ந்து அவனைப் பற்ற முயன்றனர் அரக்கர்கள்; போரில் அவர்களை அழித்த அனுமன், தான் வைத்த நெருப்பு சீதையிருந்த சோலைப்புறத்தைச் சுடாதது கண்டு நனிமகிழ்ந்து சீதையை நாடிவந்து அவள் அடிதொழுது விடைகொண்டான்.

    அனுமன் இருக்கும் தைரியத்தில் இலங்கையை அதுவரை அழித்துவந்த அக்கினி தேவன், அனுமன் அங்கிருந்து புறப்பட்டுவிடவே, அரக்கர்கள் தன்னைக் கண்டால் நிந்தித்துப் பிடித்துச் செல்வர் என்றஞ்சி, ஓடி ஒளிந்துகொண்டான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பெரியசாமித் தூரன் இயற்றிய ‘பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்’ என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றால் உருகாதோ!

    முருகா என்றால் உருகாதோ!

    ‘முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 100 கி.மீ. வேகத்தில் ஒரு பயணம்

    100 கி.மீ. வேகத்தில் ஒரு பயணம்

    சென்னைப் புறவழிச் சாலையில் அண்மையில் 100 கி.மீ. வேகத்தில் ஒரு சோதனைப் பயணம் மேற்கொண்டோம். சென்னையில் வேறு எங்கும் இவ்வாறு செல்ல இயலாது. புறவழிச் சாலையிலும் போக்குவரத்து குறைவாக இருக்கும் சில இடங்களில் மட்டுமே இவ்வாறு செல்ல இயலும். அந்த வேகத்தில் மாருதி டிசயர் வாகனத்தின் அதிர்வையும் இரைச்சலையும் நிலைத்தன்மையையும் இதில் நாம் கவனிக்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தைப்பூசத் திருநாள்!

    தைப்பூசத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    எம்மைப் படைத்த பரம்பொருளினை வாழ்வெல்லாம் எண்ணிட வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் விடியும் ஒவ்வொரு நாளினையும் அந்தப் பரம்பொருளுக்கு உரிய நாளாகவே ஆக்கி அதற்கென்று ஒரு பெயரினையும் சூட்டி பக்தியின் பாதையிலேதான் பயணித்து வந்திருக்கிறார்கள்.  அந்த வகையில் வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை தெய்வத்துக்குரிய மாதமாக்கி – திருவெம்பாவை என்றும், திருப்பாவை என்றும் பக்திப் பனுவல்களை அதிகாலை வேளையிலே ஆலயத்தில் பாடிப் பரவி நின்றார்கள். சைவம் என்றோ, வைணவம், என்றோ பார்க்காமல் அந்தப் பரம்பொருள் புகழ்பாடும் மாதமாகவே வருடத்தின் இறுதி மாதமான மார்கழியினை ஆக்கி விட்டார்கள். வருடத்தின் இறுதி மாதம் பரம்பொருளின் புகழ்பாடும் மாதமாக அமைத்த எங்கள் முன்னோர் வருடத்தின் தொடக்கத்தையும் பரம்பொருளினை எண்ணி பக்திவழியிலேயே தொடங்கும் வண்ணம் ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியமாகும். பூமாதேவியைத் தொட்டு ஆதவனை அகமிருத்தி பஞ்சபூதங்களையும் வணங்கி நன்றி நவிலும் முகமாக தைப்பொங்கல்த் திருநாளினை வருடத்தின் தொடக்கமாகவே அமைத்த முன்னோர்களின் மகத்தான வாழ்வியல் நெறியினை வியந்துதான் பார்க்கவேண்டி இருக்கிறதல்லவா!

    நட்சத்திரங்களை, நாட்களை, திதிகளை எல்லாம் மனமிருத்தி அவை ஒவ்வொன்றும் உரிய வகையில் பரம்பொருளினைப் போற்றிக் கொண்டாடும் வகையில் பக்தித் திருநாட்களை ஒழுங்கமைத்த பாங்கினைப் பாராட்டியே ஆதல் வேண்டுமல்லவா! மார்கழியில் ஆதிரை நட்சத்திரத்தை சிவனுடன் இணைத்து திருவாதிரைத் திருநாள் வருகிறதல்லவா! மார்கழிமூலம் ஆஞ்ஞனேயருக்கு உரியதாக்கி அதனையும் திருநாளாக்கினார் களல்லவா! தைப்பொங்கல் தைமாதப் பிறப்பாக அமைகிறது. தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது மனத்தைரியத்தையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினையும் நல்கிறதல்லவா! ” ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்பது யாவர் மனத்திலும் பதிந்திருக்கும் பெரு மந்திரம் அல்லவா! அந்த மந்திரச் சொல்லுக்கு உரித்தான தகம்பன் சாமியான முரு கனுடன் தையில் வரும் பூச நட்சத்திரத்தை எங்கள் முன் னோர்கள் இணைத்திருக்கிறார்கள். பொங்கலில் பிறந்த நம் பிக்கைக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது இருக்க வேண்டுமேயானால் அதற்கு பெருந்துணை அந்தக் கந்தப்பெரு மானேதான். ஏனென்றால் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகக் காட்சிதருபவர் எங்கள் கந்தப்பெருமானே! அந்தப் பெருமானின் திருநாளாய் மலர்வதுதான் தைப்பூச நன்னாள்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக கந்தப்பெருமான் விளங்குகின்றார். அவரது அருங்கருணையால் அனைவருக்கும் அல்லலகன்று அகமகிழ்வு ஏற்பட வழி பிறக்கும் என்று அடியார்கள் அனைவருமே பெரு நம்பிக்கையுடனேதான் இருக்கிறார்கள். அடியார் ஒரடி நடந்தால் ஆண்டவன் நூறடி வருவான். அடியார் நூறடி நடந்தால் ஆண்டவன் ஆயிரமடி வருவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். முருகா என்று ஒருமுறை அழைத்தால் – இம்மைக்கும் மறுமைக்கும் என்றுமே நல்லதையே முருகப்பெருமான் நல்குவான். அந்த அளவுக்கு அளப்பெரும் ஆற்றல் கொண்டவன் முருகப்பெருமான்.

    இதனால்தான்  கலியுகத்தில் எவர்வாயிலும் முதலில் வருகின்ற வார்த்தை எது தெரியுமா? “முருக ” என்பதேயாகும். ஓம் முருகா – ஓம்முருகா – என்று அழைக்கும் பொழுது,  உள்ளமெலாம் பூரிக்கின்றது! உடலிலே ஒருவித பரவசம் உருவாகிறது! உணர்வுகள் தூய்மை அடைகின்றன. மயிலேறி அந்த மால்மருகன் நிச்சயம் வந்திடுவான். வாழ்விருக்கும் வினையனைத்தையும்  வேல் கொண்டு ஒழித்திடுவான்! என்னும் தெளிவு அனைவருள்ளத்திலும் பிறக்கிறது.

    அழகு, ஆற்றல், கருணை, நிரம்பிய முருகப்பெருமானுக்கு என்று  பல விசேட தினங்கள் அமைந்திருக்கின்றன ஆனாலும் “தைப்பூசம்” என்னும் திருநாளானது அடியவர்களால் முருகனுக்குரிய சிறப்புத் தினமாகக் கொள்ளப்பட்டுவருகிறது என்பது நோக்கத்தக்கத்தக்கதாகும். தைமாதத்தில் பெளர்ணமியில் வருகின்ற பூச நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்ததினமாகக் கொள்ளப்பட்டு  நீண்ட காலமாக தைப் பூசம் என்பது  பெருவிழா வாக தெய்வத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது நோக்கத்தக்கது.

    தைப்பூசத் திருவிழா என்பது  இன்று, நேற்று,  ஏற்பட்டதல்ல என்பது மனத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்தத் திருநா ளானது, எங்கள் தேவாரம் பாடிய செல்வக் குழந்தை திருஞான சம்பந்தப் பெருமானது  காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகும். அது மட்டுமன்றி பழைய இலக்கியங்களிலும் இவ்விழா பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பல தெய்வங்கள் பற்றிய வழிபாட்டினை நோக்கும் பொழுது  முருக வழிபாடு என்பது மிகவும் பழைமை வாய்ந்தது என்றுதான் அறிந்த்து கொள்ள முடிகிறது. தைப்பூசம் என்னும் திரு நாளோடு  முருகப் பெருமான் பல நிலைகளில் இணைக்கப்படுகிறார் என்பது இங்கு கருத்திருத்த வேண்டியதேயாகும். முருகன் என்னும் நாமம்கூட மிகவும் அர்த்தம் பொதிந்தாகக் கருதப்படுகிறது. முருகு – என்றால் இளமை. முருகன்  – என்றால் அழகன் என்றும் என்றுமே இளமையானவன் என்றும் கருத்துக்கள் நிறைந்தே சொல்லப்படுகின்றன. முருகன் என்னும் பெயரினை எங்களின் அன்னைத் தமிழுடன் இணைத்துப் பார்க்கும் அடியவர்களும் பலர் இந்த அவனியிலே நிறைந்திருக்கிறார்கள். அந்த வகையிலே  தமிழில் காணப்படுகின்ற எழுத்துக்களை – வல்லினம், மெல்லினம், இடையினம் என்று இலக்கணத்தார் வகைப்படுத்தியிருக்கிறார்கள். “முருகன்” என்னும் பெயரினை உற்று நோக்கினால் அங்கே தமிழ்ன் மூவின வகை யான தன்மையும் ஒருங்கே இணைவதைக் கண்டு கொள்ளமுடியும். இதனால் முருகப் பெருமானை தமிழுடன் இணைத்துப் பேசுவார்கள். அதுமட்டுமல்ல முருகன் என்றாலே தமிழே வடிவானவன் என்னும் ஒரு எண்ணமும் மேலோங்கி நின்று முருகப்பெருமான் தமிழ் மயமாகவே விளங்குகிறார் என்று சொல்லிப் பெருமைப்படும்  நிலையும் இருப்பதையும் கண்டுகொள்ளலாம்.

    பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து, படாத வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு – அந்தப் பரம்பொருளை நோக்கி தவமிருந்து  வரம்பெற்று – அப்படிப் பெற்ற வரத்தினால் பரம்பொருளின் அனுக்கிரகத்துக்கு ஆளாகி  வந்தவர்கள் – பெற்ற வரத்தினைப் பேணாது அதனை தங்களின் சுய இச்சைகளுக்காகப் பயன்படுத்துவது பொருந்தக் கூடியதா? அது மட்டுமன்றி அந்தவரத்தை நல்வழியில் பயன்படுத்தாது – ஆணவத்தால் அற வழியை மறந்து தம் மனம்போன போக்கில் செயற்பட நினைந்தால் என்னாகும். முடிவில் அழிவுதானே வந்து நிற்கும். பெற்ற வரத்தினைப் பேணிக் காக்காமல் மறவழியில் ஆணவத்துடன் செயற்பட்டான் சூரபதுமன். தேவர்களையே சிறைப் பிடித்தான். வரம் கொடுத்த பரம் பொருளையே மதியாது ஆணவத்தின் உச்சியில் ஏறி நின்றான். ஆணவம் எங்கு மேலோங்குகிறதோ அங்கு – வரமளித்த அந்த ஆண்டவனின் சக்தியானது எப்படியோ தோன்றி மறத்தை அழித்து அறத்தை ஓங்கச் செய்யும் என்பதுதான் உண்மையாகும். அரத்தினை நிலைநிறுத்த ஒரு சக்தி வெளிப்பட்டது. அந்தச் பெருஞ் சக்திதான் “முருகப் பெருமான்” என்னும் நிலையில் வந்தமைந்தது. ஆணவ இருளை, அகத்தை இருளை அகற்ற வேண்டுமேயானால் அங்கு ஒரு பேரொளி தோன்ற வேண்டும் அல்லவா! அந்தப் பேரொளி எப்படி அவதாரமாக அமைந்தது என்பதைக் காண்போமா!

    “அருவமும் உருவமாகி
    அனாதியாய் பலவாய் ஒன்றாய்
    பிரமாய் நின்றஜோதி
    பிளம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும்
    கரங்கள் பனிரெண்டும் கொண்டு
    ஒருதிரு முருகன் வந்தாங்கு
    உதித்தனன் உலகம் உய்ய”

    என்று அந்தப் பேரொளியாக  முருகனது பிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறது. பேரொளியாக முருகப் பெருமான் வந்த நாளாகவே தைப்பூசத் திருநாள் அமைகிறது என்பதுதான் முக்கியமாகும். இதனால்  முருகப்பெருமானது ஆலயங்கள் தோறும் தைப்பூசத் திருநாள் பக்திபூர்வமாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்று தைப்பூசத்துக்கும் முருகனுக்குமான தொடர்ப்பைப்பற்றி ஒரு கதை நெடுங்காலமாகவே வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது என்பதும் நோக்கத்தக்கது.

    ஆணவத்தின் உச்சியிலிருந்து அட்டூழியம் செய்யும் அரக்கரை அழித்திட பரம்பொருளாம் சிவனால் உருவக்கப்படுகிறார் முருகப் பெருமான். வரம் கொடுத்த தான் போகாமல் தன்னிலிருந்து வெளிப்படுத்திய சக்தியான முருகனைக் கொண்டே சரியான பாடம் புகட்டிட இறைவன் எண்ணுவதும் இங்கு நோக்கத் தக்கது. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளியான சக்தியாய் முருகப் பெருமான் விளங்குகின்றார். பாலகனாய் இருக்கும் அவரை வரமும் உரமுமுடைய அரக்கரை அடக்கி ஆணவத்தை அழிக்க அனுப்பும் பொழுது – அவருக்கு உறுதுணையாக ஒரு பெருஞ்சக்தியாக உமையம்மன் ஒரு வேலினைப் பாலகனான முருகனுக்குக் கொடுக்கின்றார்.   அம்மை கொடுத்த சக்திவாய்ந்த வேல் என்னும் ஆயுதத்தால் அட்டூழியம் புரிந்த அரக்கனை வதம்செய்து முருகப் பெருமான அறமென்னும் வெற்றியினைப் பெற்ற தினமாகவும் தைப்பூச விழாவானது  அமைகிறது என்று ஒரு கதையும் மரபாக வழக்கில் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

    இதுமட்டுல் அல்லாமல் இன்னுமொரு கதையும் தைப்பூசத்துடன் முருகப் பெருமானை சம்பந்தப் படுத்த சொல்லப்படுவதும் நோக்கத்தக்கது. எம்பெருமான் சிவனால் பார்வதிதேவியாருக்கு மந்திரம் ஒன்று உபதேசிக்கப்படுகிறது. உபதேசிக்கும் வேளை அதனை முருகப்பெருமானானவர் மறைந்திருந்து கேட்ட தாகவும், இதனை அறிந்த பார்வதிதேவி – கோபங்கொண்டு முருகனைச் சபிக்கின்றாராம். இதனால் முருகன் கோபித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் சென்று அமர்ந்துவிடுகிறார். முருகனின் கோபத்தை நீக்க சிவனும், பார்வதியும்  முருகன் இருக்கும் இடமான திருப்பரங்குன்றம் சென்று சிவனும், பார்வதியும்  கொடுத்த சாபத்தை மீளப்பெற்று முருகனை அரவணைத்த தினமே தைப்பூசம் என்றும் ஒரு கதை வழக்கில் இருந்து வருகிறது.

    கதைகள் என்னும் பொழுது அத்தனையும் பலகாலமாகவே வழக்கில் நிறைந்தே வந்திருக்கின்றன. அந்தவகையிலேதான் முருகப் பெருமான் பற்றிய பலவித கதைகளும் மக்கள் மத்தியில் உருவாகி அப்படி உருவான கதைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் தைப்பூசத்துடன் இணைக்கப்பட்டு விட்டன என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. முருகனது அவதார தோற்றத்தைக் கந்தபுராணம் காட்டுகின்ற பொழுது “பிரம்மாய் நின்ற ஜோதிப் பிளம்பதோர் மேனியாகி – கருணைகூர் முகங்கள் முகங்கள் ஆ றும் கரங்கள் பனிரெண்டும் கொண்டு ஒரு திருமுருகன்” வந்தான் என்று காட்டுவததைக் கருத்துவதுதான் மிகவும் முக்கியம். முருகப் பெருமான் என்னும் பொழுது அங்கே பிரகாசிக்கும் ஜோதியே வெளிப்பட்டு நிறிறது. ஜோதி என்றால் பிரகாசம் என்று தானே அர்த்தமாகிறது. தைப்புசத்தன்று பெளர்ணமி தினமாகும். பெளர்ணமி பெரு வெளிச்சம் அல்லவா! அந்தப் பெரு வெளிச்சத்துடன் பிரம்மமாய் நின்ற ஜோதியாக உதித்த முருகப் பெருமானை இணைப்பது பொருத்தமாய் இருக்கிறதல்லவா!

    தைபிறந்தால் வழிபிறக்கும்.தைப்பொங்கல் சூரியனுக்குரியது. சூரியன் வெப்ப மயமானவன். சூரியனுக்குரிய பொங்கலையடுத்து வருகின்ற பெளர்ணமி சிறப்புடையது. அந்தத்தினத்தில் வருகின்ற பூசமும் சிறப்புடையது. இத்தகைய காரணங்கள் தைப்பூசத்துடன் முருகப் பெருமான் இணைக்கப்பட்டது பொருத்தமாய் இருப்பதாக தெரிகிறதல்லவா?

    தைப்பூசம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதற்கு – சம்பந்தப்பெருமானே தனது தேவாரத்தில் குறிப்பிட்டிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மைப்பூசும் ஒண்கண் மடநல்லூர் மாமயிலை
    தைப்பூசும் நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசும் ஒண்புகழ் நேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசம் காணாது போதியோ பூம்பாவாய் “

    சைவத்தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ்நாடு,  இலங்கை,  சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, பிரான்ஸ், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும் – தமிழரல்லாத மக்கள் வாழுகின்ற கேரளப் பகுதிகளிலும்கூட தைப்பூசமானது திருநாளாகக் கொண்டாடப்படுகிறது என்பது நோக்கத்தக்ததாகும்.                      

    முருகப்பெருமானை முன்னிறுத்தும் தைப்பூசம் தமிழர் வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகளுக்கும் இடமளிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். வயலில் நெற்பயிர்கள் முற்றி விளைந்திருக்கும் காலமிதுவாகும். முற்றிய நெல்லிருந்து புத்தரசி எடுப்பதும் தைப்பூசத்தில்த் தான் என்பதும் நோக்கத்தக்கது. இதனை “புதிரெடுத்தல்” என்று சிறப்புடன் கொண்டாடி மகிழுவதும் மனமிருத்த வேண்டியதேயாகும். புதிரெடுத்து புத்தரியினைக் கொண்டு பொங்கலிட்டு இறைவனுக்குப் படைத்து மகிழுவதும் தைப்பூச நன்னாளில் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டோம். “புதிரெடுத்தல்” என்னும் சொல்லே மிகவும் ஆழமுடைய வாழ்வியல் தத்துவத்தை அறிவுறுத்தும் சொல்லாகும். அந்தக் கருத்தினை அரங்கேற்றும் நன்னாளாய் தைப்பூசம் இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய தேயாகும்.

    தைபிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்லுவதை நாம் எவருமே மறப்பதேயில்லை. அதற்கான அர்த்தத்தைத் தைப்பூசத் திருநாள் நன்றாகவே நிறைத்தே வைத்திருக்கிறது. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவருக்கு வாழ்க்கையிலே கல்வி அறிவு என்பது கட்டாயம் இருந்தே தீரவேண்டும். “கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்” என்று ஒரு பாடசாலையில் மகுடவாசகமாய் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் அங்கு “கற்றிடு” என்பதுதான் முக்கியமாய் எனக்குள் உதயமானது. அப்படிக் கற்பதற்கு உரிய பருவத்தில் கற்றலைத் தொடங்க வேண்டும். அதனைத்தான் எங்களின் முன்னோர்கள் “வித்தியாரம்பம்” என்று வியந்து நின்றார்கள். அந்த வித்தியாரம் செய்வதற்கு உகந்த நாளாகத் தைப்பூசம் திகழ்கிறது என்பது மிகவும் முக்கியத்துவமாய் வாழ்வில் அமைகிறதல்லவா! ஆலயங்களில் வித்தியாரம்பம் நடைபெறும். வீடுகளில் நடை பெறும். தைப்பூசத்தில் வித்தியாரம்பம் என்பது மிகவும் விசேடமாநது என்னும் கருத்து யாவர் மனத்திலும் பதிந்தே இருக்கிறதல்லவா!

    காது குத்துதல் என்பது அழகுடன் சம்பந்தப்பட்டதல்ல. அது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாகும். அதனால்தான் அக்காலத்தில் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்குக் காது குத்துவதுபோல் குத்தினார்கள். காதுகுத்துதல் என்பது சுற்றஞ்சூழ இருந்து கொண்டாடி மகிழுகின்ற பெருங் கொண்டாட்டமாகவே ஒரு காலத்தில் அமைந்திருந்தது. தாய்மாமன் மடியில் பிள்ளையினை வைத்துக் காதுகுத்துதல் என்பது மரபாகவே இருந்து வந்தது. அப்படிக் காதுகுத்தும் சிறப்பான குடும்ப விழாவினை நடத்து வதற்குயாவரும் காத்திருக்கும் தினம் என்ன தெரியுமா அந்த நல்ல தினந்தான் தைப்பூச நன்னாளாகும். தைப்பூசத்தை மனமெண்ணி காது குத்தக் காத்திருக்கும் சுகமோ அது ஒரு தனியான சுகமாகும். அதனைச் சொன்னால் புரியாது. அனுபவித்தவர்களுக்குத்தான்  அதன் ஆனந்தம் தெரியும். காதுகுத்த லோடு தைப்பூசம் நின்றுவிடுவதில்லை. வியாபாரம் செய்பவர்கள் புதுக்கணக்கினை ஆரம்பிப்பதும் தைப்பூசத்திலேதான். இந்தவகையில் பார்க்கின்ற பொழுது – சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவும், புது முயற் சிகளைத் தொடங்கௌம் உவப்பான தினமாக அமைந்திருப்பது தைப்பூசத் திருநாள்தான் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.

    வாழ்க்கையில் பல நல விஷயங்களுக்கு வழிசமைக்கும் சிறப் பான திருநாளான தைப்பூசத்தினை ஆலயங்களில் பக்தி பூர்வமாகக் கொண்டாடுவார்கள். முருகனுக்கு உகந்த நாளாகவே அமைகின்ற காரணத்தால் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகள் பலவற்றை அடியார்கள் அவனது சன்னதியில் எடுத்து ஆடிப் பாடி அவன் புகழ் பாடியே நிற்பார்கள்.  மலேசிய நாட்டில் பத்த மலை என்னும் பதியில் அமைந்திருக்கும் முருகப் பெருமானது ஆலயத்தில் சைவத்தமிழ் அடியார்களுடன் இணைந்து சீனமக்கள் பலரும் பக்தி பூர்வமாகக் காவடி ஆடிவரும் காட்சிபக்திப் பரவசமாகவே அமையும் பாற்காவடி,  பன்னீர்க் காவடி,  புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, பறவைக்காவடி, என்று அடியார்கள் வகை வகையாய் காவடிகளைத் தாங்கி ஆடலும் பாடலுமாய் இசையுடனும் தாளத்துடன் ஆடிவரும் காட்சியானது தைப்பூச நன்னாளை பூலோக கைலாசமாகவே மாற்றிக் காட்டி நிற்கும்.

    ஆடலும், பாடலும், பக்தியுடன் அமைந்த விழாவாக தைப்பூச திருநாள் அமைகிறது என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. இந்த விழாவுடன் ஜோதிமயமான முருகப் பெருமானும் வந்து இணைகிறார் என்பதையும் கருத்திருத்த வேண்டும். இறைவனை “ஒளிவளர் விளக்கே” என்கிறோம். “மாமணிச் சோதியான்” என்கிறோம். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்கிறோம். “அளம்பரும் ஜோதி” என்கிறோம். “தீபமங்கள ஜோதி நமோ நம” என்று பாடுகிறோம். இவையனைத்துமே இறைவனுக்கு மிகவும் பொருத்தமான இலக்கணங்களேயாகும். அந்தவகையில் முருகன் என்னும் அளப்பருந் தெய்வமும் மிகப்பெரிய ஜோதியே. அந்த ஜோதியினைக் காட்டும் பெருவிழா திருவிழா மாநிலமெங்கணும் பட்டொளி பரப்பும் பெளர்ணமி நன்னாளான தைப்பூசத் திருநாளேயாகும். பக்தியுடன், வாழ்வியலுக்கு பொருத்தமான விஷயங்களையும் இணைத்து நிற்கும் இந்தப் புனிதமான திருநாளுக்கு “தகப்பன் சாமியின் திருநாள்” என்று பெயரிட்டு பெருநிறைவு அடைவோம் வாருங்கள்!

    Share