Blog

  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

    மூலம் : எமிலி டிக்கின்ஸன் 
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன் -27

    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன்
    விளக்க உரை விட வியப்பு வீடு.
    தேவைக்கு மிஞ்சிய ஜன்னல்கள்
    மேல் தரக் கதவுகள் அமைப்பு.

    I dwell in Possibility –
    A fairer House than Prose –
    More numerous of Windows –
    Superior – for Doors –

    தேக்கு மரத்தால் கட்டிய வீடுகள்
    தகர்க்க முடியாதவை கண்களால்
    நிரந்தர மான கூரை அமைப்பு
    இருபுறத்திலும் தணிவான சரிவு.

    Of Chambers as the Cedars –
    Impregnable of eye –
    And for an everlasting Roof
    The Gambrels of the Sky –

    மனை சுற்றிப் பார்க்க வருவோர்
    தொழிலுக்கு ஏற்றவர் தான்
    விரிந்தென் சிறு கரங்கள் அகண்டு
    சொர்க்க புரி மனை விளக்கும்.

    Of Visitors – the fairest –
    For Occupation – This –
    The spreading wide my narrow Hands
    To gather Paradise –

    Share
  • குறளின் கதிர்களாய்…(393)

    குறளின் கதிர்களாய்…(393)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(393)

    அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.

    – திருக்குறள் – 289 (கள்ளாமை)

    புதுக் கவிதையில்

    அடுத்தவர் பொருளை
    அபகரித்தல் தவிர
    அடுத்துள
    அறவழிகளை நம்பித் தெளியார்,
    அளவில்லாமல்
    அச்செயல்களையே செய்து
    அவற்றாலே
    அழிந்தே போவர்…!

    குறும்பாவில்

    திருடுதல் தவிர மற்றுள
    நல்வழிகளை நம்பித் தெளியார், அளவிலாதந்தத்
    தீச்செயலைச் செய்தே அழிவர்..!

    மரபுக் கவிதையில்

    அடுத்தவர் பொருளைக் களவிடுதல்
    அல்லால் மற்ற அறவழிகள்
    கொடுத்திடும் நலனைக் கருதாதே
    கொண்ட கொள்கைத் தெளிவின்றி
    எடுத்திடும் பொருளை எண்ணியேதான்
    என்றும் திருட்டை விட்டிடாமல்
    கெடுத்திடு மதையே தொடர்வோர்கள்
    கெட்டே யழிவர் அதனாலே…!

    லிமரைக்கூ

    கொடிய குற்றம் திருட்டு,
    கருதாமலிதை அறவழியலாது செய்வோர் வாழ்வே
    ஆகிடும் என்றும் இருட்டு…!

    கிராமிய பாணியில்

    வேண்டாம் வேண்டாம்
    களவு வேண்டாம்,
    அடுத்வங்க பொருளுக்கு
    ஆசப்பட்டழியும் களவு
    வேண்டவே வேண்டாம்..

    ஓலகத்தில உள்ள
    நல்ல வழியயெல்லாம்
    நெனச்சிப்பாக்காம உட்டுப்புட்டு,
    அடுத்தவங்க பொருளுக்கு
    ஆசப்பட்டுத் திருடுறத உடாம
    அளவில்லாம செய்யிறவன்,
    அழிஞ்சியே போவான்
    அந்தக் களவுனாலயே..

    அதால,
    வேண்டாம் வேண்டாம்
    களவு வேண்டாம்,
    அடுத்வங்க பொருளுக்கு
    ஆசப்பட்டழியும் களவு
    வேண்டவே வேண்டாம்…!

    Share
  • கிளியின் குரல்

    கிளியின் குரல்

    சற்றுமுன் நம் ஜன்னலோர வேப்பமரக் கிளையில் இந்தக் கிளி வந்து அமர்ந்தது. மதுரமாய், அமுதமாய் இனிய மொழி பேசியது. அதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மோர்க்குழம்பு செய்வது எப்படி?

    மோர்க்குழம்பு செய்வது எப்படி?

    கலக்கல் சுவையும் கமகம மணமும் அருமையான சத்தும் நிறைந்த மோர்க்குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் – 3

    மதுமிதாவின் குடும்பநல ஆலோசனைகள் – 3

    நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்திற்கு மறுக்கிறார் மணப்பெண். காரணம் என்ன? அவர்களுக்கு ஆலோசனை கூறிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்

    காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில்

    108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்தி வரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்… எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கதிரியக்கப் போரை நிறுத்துவீர்!

    கதிரியக்கப் போரை நிறுத்துவீர்!

    சி. ஜெயபாரதன், கனடா

    செர்நோபிள் கதிர்ச் சமாதி
    புட்டின் வசமாச்சி ! போரை நிறுத்துவீர் !
    கதிர் வீச்சு ஈரோப்பில் பரவலாம் !
    நேட்டோ சும்மா நிற்குது !
    வீட்டோ  சக்தி தோற்குது  !
    உக்ரேன் ரஷ்யப் பிரச்சனைகள்
    பீரங்கிப் போரால் தீராது !
    வீடிழந்து, நாடிழந்து, எல்லாம் இழந்து
    கால் நடையில்,
    கட்டிய துணியுடன்,
    பெண்டு, பிள்ளையுடன்,
    மில்லியன் கணக்கில்
    மாந்தர்
    அந்தோ புலப் பெயர்ச்சி !

    அண்டை நாடுகளின் நலிந்த
    எக்கானமி நாசமாச்சி !
    காரணம் யார்  ?
    பேராசை பிடித்த பேயாட்சி
    வல்லரசும்,
    வலிமை யற்று
    ஆயுதம் கடன் வாங்கும்
    மெல்லரசும்.
    ஓராண் டுக்கும் மேலாய்
    கொரோனா தொத்து நோயில்
    திக்கு முக்காடிச் செத்தவர்
    கோடி, கோடி !
    சூறாவளி யிலும், பேய் மழையிலும்
    காட்டுத் தீ எரிப்பிலும்
    எல்லாம் இழந்து தவிக்கும்
    இல்லற மக்கள்
    பல்லாயிரம் !  பல்லாயிரம் !

    ஓர் நாட்டில்
    போர் நிகழ்ந்தால்
    உலக நாடுகளில் எல்லாம்
    எதிரொலிக்கும் !
    உணவுப் பண்டங்கள்
    விலை ஏறுது !
    பெட்ரோல் விலை  ஏறுது !
    வீட்டு வாடகை,
    காய்கறி, பால் தயிர், பீட்ஸா
    விலை ஏறுது !
    போர் நின்றாலும், வெடிப் புகை
    ஆறினாலும்
    ஏறிய விலை ஒருபோதும்
    இறங்கா !
    சரித்திரம் மீளுது தரணியில் !
    மரிப்பான்,
    ஹிட்லர் ஆன புட்டின்
    விட்டில் போல் !

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 45

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 45

    -மேகலா இராமமூர்த்தி

    ”சீதையை விடுதலே நமக்கு வெற்றி” என்றுரைத்த வீடணன் சொற்களைக் கேட்ட இராவணன், தன் கரங்களைக் கோத்துக்கொண்டு, தோளும் மார்பும் குலுங்க நகைத்தவாறே,

    ”ஏற்கனவே ஊனமான வில்லை முறித்து, ஓட்டை மரத்திலே அம்புசெலுத்தி, கூனிசெய்த சூழ்ச்சியால் அரசை இழந்து, உயர்ந்த மரங்கள் நிறைந்த வனமடைந்து, நான் செய்த செயலால் மனைவியை இழந்து இன்னுயிரைச் சுமந்து திரியும் ஒரு மானுடனின் வலிமையை உன்னையல்லாது மதித்தவர் வேறு யாருளர்?” என்றான் பரிகாசத்தோடு.

    ஊனவில் இறுத்து ஓட்டை மாமரத்துள் அம்புஓட்டி
    கூனி சூழ்ச்சியால் அரசுஇழந்து உயர்வனம் குறுகி
    யான் இழைத்திட இல்இழந்து இன்உயிர் சுமக்கும்
    மானுடன்வலி நீஅலாது யார்உளர் மதித்தார்.
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6179)

    இராமன் வில்லை முறித்ததும், மராமரங்களைத் துளைத்ததும் அரிய செயல்கள் என்று பலரும் புகழ, அவற்றை இங்கே கேலிசெய்து பேசுகின்றான் இராவணன். இச்செயல் இராமன்பால் அவனுக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றது.

    இராவணனின் இகழ்ச்சியான பேச்சுக்களைத் தொடர்ந்து வீடணன் மீண்டும் அவன் அடிதொழுது நல்லுரைகளை எடுத்துக்கூறத் தொடங்க அவற்றைப் பொருட்படுத்தாது,

    ”கொடுஞ்சினத்தை உண்டாக்கும் போரில் பங்குகொள்வதற்கு நீ எங்களுடன் புறப்பட வேண்டாம்! மதில்சூழ்ந்த மாநகரான இலங்கையில் நிறைய இடமிருக்கின்றது. நீ இங்கேயே தங்கியிரு! அஞ்சாதே! அஞ்சாதே!” என்று சொன்ன, விடத்தினும் கொடியோனான, இராவணன் தன்னருகிலிருந்த அமைச்சர் முதலியோரின் முகத்தைப் பார்த்துக் கைகொட்டி இடி இடித்ததுபோல் நகைத்தான்.

    வெஞ்சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
    இஞ்சி மாநகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி
    அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
    நஞ்சின் வெய்யவன் கைஎறிந்து உரும் என நக்கான். 
    (கம்ப: இராவணன் மந்திரப் படலம் – 6187)

    அண்ணன் இராவணனின் எள்ளலைக் கண்டு மனங்கலங்காத இளவல் வீடணன், இராவணனுக்கு அறிவுகொளுத்தும் பொருட்டுத் திருமாலை எதிர்த்தழிந்த இரணியன் கதையைச் சொல்லத் தொடங்குகின்றான். அதுவே கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ’இரணியன் வதைப் படலம்.’

    யுத்த காண்டத்திலுள்ள படலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையிலேயே அமைக்கப்பட்டிருக்க, இரணியன் வரலாற்றைச் சொல்லும் இரணியன் வதைப் படலம் மட்டும் யுத்த காண்டத்தோடும் இராமன் கதையோடும் தொடர்பின்றி அமைந்திருக்கக் காண்கிறோம்.

    தமிழகத்தின் முதல் திறனாய்வாளராக அறியப்படும் வ.வே.சு. ஐயரும், பல்கலைச்செல்வர் முனைவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும் இப்படலம் காப்பியத்தோடு தொடர்பின்றித் தனித்து நிற்பதையும், 176 பாடல்களில் விரிவாகப் பாடப்பட்டுள்ள இது காப்பியத்துள் மற்றொரு குறுங்காப்பியமாகப் பொலிவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    அறிஞர்கள் பலரும் பொருத்தமற்றதாகச் சுட்டுகின்ற இந்தப் படல அமைப்பு காப்பியம் படைத்த கவிச்சக்கரவர்த்திக்குத் தெரியாமல் இருக்குமா? தெரிந்தேதான் அவர் இதனைப் படைத்து இடையில் இணைத்திருக்கவேண்டும்.

    அதற்கான காரணங்களாகக் கம்பனில் தோய்ந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் முன்வைப்பவை:

    ”பக்தி இயக்கத்தின் எழுச்சிக்குப் பின்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆதிசங்கரர், அத்வைதம் என்ற கொள்கையையும் உபநிடதக் கருத்துக்களையும் தமிழகத்தில் பரப்பினார். அறிவுவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அவ்வியக்கம் சண்டமாருதம்போல் தமிழகத்தில் தன் வேகத்தைக் காட்டியதால் பக்தி இயக்கத்தின் பலம் குறையலாயிற்று.

    பக்திநெறியில் திளைத்தவரான கம்பருக்கு அவ் அத்வைதக் கோட்பாடுகளில் உடன்பாடில்லை. அதனாலேயே பக்தியின் மகிமையை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் சங்கரர் உயர்த்திப் பிடித்த உபநிடதங்களிலும் பக்தியைப் போற்றும் அம்சங்கள் இருப்பதைப் பறைசாற்றும் வகையிலும் இரணியன் வதைப் படலத்தை உள்நுழைத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    இரணியன் வதைப் படலம் மூலநூலான வான்மீகத்தில் இல்லை.

    இனிக் கம்பகாதையில் மற்றொரு குறுங்காப்பியமெனக் காட்சிதரும் இரணியன் வதைப் படலத்தின் கருத்துக்களை நாமும் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

    மாவீரனான இரணியனின் இயல்பையும் ஆற்றலையும் விளக்கி இப்படலம் தொடங்குகின்றது.

    மும்மூர்த்திகளும் தம் தொழில்களை முடிக்க இயலாதவர்களாய் ஆயினர்; யோகியர் தமக்குரிய பதவிகளை இழந்தனர். தேவரும் இரணியனின் பாதங்களை அல்லால் வேறொன்றையும் பூசிக்கமாட்டார் எனும்படி வாழ்ந்தான் இரணியன்.

    பெரும் புறக்கடலில் விதிப்படி நீராடிமுடித்துப் பின் நாகலோகத்து மகளிருடனே இனிய (காலை) உணவினை உண்டு, எல்லோராலும் போற்றப்படும் இந்திரலோகத்தில் பகல்பொழுதைக் கழித்து, இரவுநேரத்தில் பிரமனின் உலகமான சத்தியலோகத்தில் கொலுவீற்றிருப்பான் இரணியன் என்று அவனுடைய அன்றாட நிகழ்வுகளை விளக்கி நம்மை வியக்கவைக்கின்றார் கம்பர்.

    மரபின்மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி
    அரவின் நாட்டிடை மகளிரோடு இன்அமுது அருந்தி
    பரவும் இந்திரன் பதியிடைப் பகற்பொழுது அகற்றி
    இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6193)  

    தான் பெற்ற வரத்தால், பெண்ணாலோ ஆணாலோ அலியாலோ உயிருள்ளவற்றாலோ உயிரற்றவற்றாலோ மண்ணிலோ விண்ணிலோ மரிக்கமாட்டான் இரணியன்; தேவராலோ இயக்கராலோ அரக்கராலோ மும்மூர்த்திகளாலோ அவனுக்கு மரணமில்லை; ஐம்பூதங்களாலும் அவன் ஆயுளுக்கு பாதிப்பில்லை; யாரிடும் சாபமும் அவனை ஒன்றும் செய்யாது.

    வீட்டுக்கு உள்ளேயோ வெளியேயோ சாகமாட்டான்; தெய்வப் படைக்கலங்கள் எவையும் அவனைக் கொல்லும் ஆற்றலற்றவை; அவனுக்கு இரவிலும் மரணமில்லை; பகலிலும் மரணமில்லை; கூற்றுவனாலும் அவனுயிரைக் கவரமுடியாது. மந்திரங்களால் அவனைக் கொல்லவியலாது; அவனைப் பெற்ற தந்தையே அவனைக் கொல்ல நினைத்தாலும் அது நடவாது!

    இத்துணை விவரமாக வரம் பெற்றவனை வெல்லவும் கொல்லவும் ஆற்றல் பெற்றவர் யார்? ஒருவருமில்லை!

    எனவே, அனைத்து உலகங்களுக்கும் தானே இறைவன் எனும் அகந்தையோடு ஆட்சி செலுத்திவந்தான் இரணியன்.

    அந்த இரணியனுக்கு அரியதோர் மைந்தன் இருந்தான். அவன் பெயர் பிரகலாதன். அறிவிற் சிறந்தவனாக விளங்கிய அவனுக்கு வேதங்களைக் கற்பிக்க அந்தண ஆசிரியன் ஒருவன் இரணியனால் நியமிக்கப்பட்டான்.

    வேதங் கற்பிக்க வந்த அந்த ஆசிரியன் மாணவன் பிரகலாதனை “இரணியாய நம” என்று ஓதுமாறு பணிக்க, காதுகளைப் பொத்திக்கொண்ட பிரகலாதன், ”அறிவில் மூத்தவரே! இப்பெயரை உச்சரிப்பது நன்னெறியன்று! வேதத்தின் முடிவான உபநிடதங்கள் உரைக்கும் மெய்ப்பொருளின் பெயரான “ஓம் நமோ நாராயணாய!” எனும் பெயரே நாம் உச்சரிக்க வேண்டியது” என்றுரைத்து அப்பெயரை ஓதினான்.

    இதனால் அச்சமுற்ற அவ் அந்தண ஆசிரியன், ”கெடுமதியோனே! இரணியனின் பெயரைக் கூறாமல் வேறு பெயரைக் கூறினால் என்னையும்… ஏன்…உன்னையும் இரணியன் தண்டிப்பானே! இருவருக்கும் நீ கெடு சூழ்ந்தாயே” என்று பிரகலாதனை ஏசினான்.

    அதனை மறுத்த பிரகலாதன், ”என்னையும் உம்மையும் என் தந்தையையும் உய்யச் செய்யும் மந்திரத்தையே நான் மொழிந்தேன். இதில் என்ன குற்றம் உள்ளது?” என்று மறுமொழி பகர்ந்தான்.

    கோபங்கொண்ட ஆசிரியன், ”தேவர்களுக்கும் அவர்களுக்கு முதல்வர்களான அயன் அரி அரன் ஆகியோருக்கும் முதன்மை பெற்றவனாக விளங்குகின்றான் உன் தந்தை. ஆகவே, அவன் திருநாமத்தை உச்சரிப்பவனாக அந்தணனாகிய நான் உள்ளேன்; என்னிலும் அதிகம் அறிந்தவனோ நீ?” என்று முனிந்து மொழிய, மீண்டும் ஆசிரியனின் சொற்களை மறுத்த பிரகலாதன்,

    ”அந்தணர் ஓதும் வேதங்களெல்லாம் யாரைச் சிறப்பித்துப் பேசுகின்றனவோ, கற்றுணர்ந்த சான்றோர்கள் நினைந்துரைப்பது எப்பொருளையோ, அதுவே உபநிடதங்களும் முடிந்த முடிபாகக் கூறும் பொருளாகும். அதனை உணர்ந்த தேவரும் முனிவரும் செப்பும் அப்பேரைச் சொல்லாது தவிர்த்துச் சொல்லுவதற்கு வேறொன்றும் உளதோ?” என்று கேட்டான்.

    ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை அறிந்தோர்
    ஓரச் சொல்லுவது எப்பொருள் உபநிடதங்கள்
    தீரச் சொல்பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
    பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6217)

    ’உபநிடதம்’ என்ற சொல்லை முதன்முதலில் தமிழில் பயன்படுத்தியவர் கம்பரே என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. உபநிடதம் என்ற சொல்லை மட்டுமல்லாது அவற்றின் சாரத்தையும் இப்படலத்தில் வடித்துத் தந்துள்ளார் கம்பர் என்பதனைச் சான்றுகளோடு விளக்கியுள்ளனர் கம்பனில் ஆழங்காற்பட்டவர்களான பேராசிரியர் அ. பாண்டுரங்கனும், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனும்.

    இரணியன் கதைக்கு வருவோம்!

    பிரகலாதனின் உறுதியான மறுமொழியைக் கேட்ட ஆசிரியன், இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து இரணியனிடம் சென்றான். ”நான் கற்றுத்தர விரும்பிய வேதங்களை உன் மகன் கற்றுக்கொள்ளவில்லை; அவன் வேறொரு நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறவே, ”அது என்ன?” என்று கேட்டான் இரணியன். ”அதனை நான் என் நாவால் சொல்லமாட்டேன்” என்று ஆசிரியன் மறுத்துவிடவே, பிரகலாதனை அழைத்துவரச் செய்தான் இரணியன்.

    பிரகலாதன், ”ஓம் நமோ நாராயணாய” எனும் அத்திருவெட்டெழுத்தின் சிறப்பினை இரணியனுக்கு விரித்துரைத்து, ”என்னுயிர்க்கும் உன்னுயிர்க்கும் இம்மன்னுயிர்க்கும் உறுதிபயப்பது இம் மந்திரமே”  என்று சொல்ல கடுங்கோபம் கொண்டு விழிகளில் தழலெழ நோக்கிய இரணியன்,

    ”மண்ணுளோரும் விண்ணுளோரும் தொழுவது என்னிரு கழலை; துதிப்பது என் பெயரை; இவ்வாறிருக்க நீ இந்தப் பெயரை அறிந்தது யாரிடம்?

    உலகு ஏழையும் தன் வயிற்றினுள் அடக்கும் ஆற்றலாளனான என் இளவல் இரணியாட்சனைப் பன்றி வடிவெடுத்து வந்து தந்தங்களால் குத்திக் கொன்றவன் பெயரைச் செப்பவோ உன்னை நான் மகனாய்ப் பெற்றேன்?

    போகட்டும்! அறிவு நிரம்பப் பெறாத சிறுவனான உன் பிழை பொறுத்தேன்! நம் பகைவரின் புகழ்பேசும் மொழிகளை இனிப் புகலாதே! உன் ஆசிரியன் சொல்லித்தருவனவற்றைக் கற்றுக்கொள்!” என்று ஆணையிட்டான் இரணியன்.

    அப்போது திருமாலின் பெருமைகளைத் தன் தந்தையிடம் உரைக்கத் தொடங்குகின்றான் பிரகலாதன்.

    ”அரிய வேதங்களின் உச்சியில் அமைந்த மெய்ப்பொருள் எனத் தெளிந்துரைத்த பரதத்துவமாக விளங்குபவன் அவன்; தம்மை உணர்ந்த ஞானியர் அதனை அறிவார்கள்; வேறுவேறாகப் பிறழ உணரும் பித்தர்கள் சிலர் உளர்; ஞானியரும் யோகியரும் அடையத்தக்க வீடுபேற்றைப் பெறாதவர்கள் அவர்கள்.

    அந்தப் பரம்பொருளின் சிறப்பை எந்தப் பிரமாணங்களாலும் அளந்தறிய இயலாது; சொல் பொருள் இவற்றின் துணைகொண்டு இத்தகையவன் என்று கூறற்கியலாதவன் அவன்; அவனது மெய்ந்நிலையைக் கண்டவரில்லை; எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுமாக உள்ளான் அவன்; எங்கும் நிறைந்து விளங்குபவன் அவன்.

    இத்தகு பேரியல்பு வாய்ந்த இறைவனை இகழ்ந்துரைத்துத் தவபலத்தால் எய்திய செல்வங்களையும் நற்பெயரையும் வாணாளையும் தொலைத்து உயிரையும் இழக்கப் போகின்றாயே என்று அஞ்சியே அப்பரமனின் திருநாமத்தை நான் வாழ்த்தினேன்” என்றான் பிரகலாதன்.

    பிரகலாதனின் மொழிகளைக் கேட்டுச் சினத்தின் உச்சிக்கே சென்ற இரணியன், அவனைக் கொன்றுவிடுமாறு தன் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

    அரசன் ஆணையை ஏற்ற ஏவலர்கள் பிரகலாதனை வாளாலும் மழுவாலும் தாக்கினர். திருமாலைத் தியானித்தபடியே இருந்த அவனை அவ் ஆயுதங்கள் வீழ்த்தவில்லை; அடுத்துப் பிரகலாதனைத் தீக்குழிக்குள் தள்ளினர்; ”அரி” என்று உச்சரித்த அவனை எரி தீண்டவில்லை; விடப் பாம்புகளால் கடிக்க வைத்தபோது அவற்றின் விடம் அவனைத் தாக்கவில்லை; யானையின் காலால் அச்சிறுவனை இடறவைக்க முயன்றபோது யானை அவனை வணங்கிவிட்டுச் சென்றுவிட்டது.

    தன் முயற்சிகள் ஏதும் பலிக்காதது கண்ட இரணியன், பிரகலாதனை மலையோடு சேர்த்துக்கட்டிக் கடலில் வீசச் செய்தான். அந்த மலை பிரகலாதனுக்குப் புணைபோல் ஆகி அவனைக் கரைசேர்த்ததே ஒழியக் கடலில் மூழ்கடிக்கவில்லை. கடுமையான நஞ்சை அந்தப் பிஞ்சுப் பிள்ளையின் வாயில் ஊட்டியும் அவன் சாகவில்லை.

    இந்தக் கொலை முயற்சிகள் அப்பர் பெருமானைக் கொல்ல மகேந்திரவர்ம பல்லவன் மேற்கொண்ட முயற்சிகளை ஒத்திருக்கக் காண்கின்றேன். ”நமச்சிவாய” மந்திரத்தின் துணையோடு அவர் அம்முயற்சிகளை வென்றதுபோல், ”நாராயண” மந்திரத்தின் துணையால் பிரகலாதன் வெல்கிறான்.  

    எதிலும் பிரகலாதன் சாகாதது கண்ட இரணியன், ”நானே என் மகனைக் கொல்வேன்” என்றெழுந்தான்.

    தன்னைக் கொல்லவந்த தந்தையை வணங்கிய பிரகலாதன், ”எந்தாய்! என்னுயிரைக் கவர நினைப்பாயானால் அஃது உன் வசப்பட்டதன்று! உலகைப் படைத்த அந்தப் பரமன் வசப்பட்டது” என்றான்.

    ”உலகைப் படைத்தவர் யார்? என்னைத் தொழுது நிற்கும் மும்மூர்த்திகளா? அந்த மூவரும் அல்லரென்றால் முனிவர்களா? என்னிடம் தோற்றோடிய தேவர்களா?” என்று சீற்றத்தோடு கேட்டான் இரணியன்.

    ”அத்தா! உலகினையும் உலகுவாழ் உயிர்களையும் படைத்தவன் அந்தத் திருமால்; உன் இளவல் பொற்கண்ணனின் (இரணியாட்சன்) உயிரை மாய்த்த அந்தத் தாமரைக் கண்ணான், நீ காணுதற்கு அரியவன்; ஆனால், என் கண்களுக்கு அவன் எங்குமுள்ளவன்” என்றான் பிரகலாதன்.

    அதுகேட்டு ஏளனமாய்ச் சிரித்த இரணியன், ”உன் இறைவன் எங்குமுள்ளான் என்கிறாய்; அந்த வஞ்சகன் இந்தத் தூணிலுள்ளானா? அப்படியானால் அவனை எனக்குப் புலப்படும்படிக் காட்டு” என்றான்.

    ”ஆம், ஒரு சாண் அளவுடைய பொருளிலும் அவன் இருப்பான்; பிரிக்கவியலாதபடி ஒன்றுபட்ட ஓர் அணுவை நூறு பகுதிகளாகப் பிரித்த நுண்பகுதியிலும் இருப்பான்; மிகப் பெரிய மலையிலும் இருப்பான்; இங்கு நின்ற இந்தத் தூணிலும் இருப்பான்; நீ சொன்ன சொல்லிலும் இருப்பான்; எங்குமவன் நிறைந்திருக்கும் தன்மையை நீ விரைவில் காண்பாய்” என்றான் பிரகலாதன். ”நல்லது” என்றுகூறிவிட்டு மீண்டும் ஏளனமாய்ச் சிரித்தான் இரணியன்.

    சாணினும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறு இட்ட
    கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற
    தூணினும் உளன் நீசொன்ன சொல்லினும் உளன் இத்தன்மை
    காணுதி விரைவின் என்றான் நன்றுஎனக் கனகன் நக்கான்.
    (கம்ப: இரணியன் வதைப் படலம் – 6312)

    தன் ஏளனச் சிரிப்பை உடனடியாய் நிறுத்திவிட்டு, ”நீ சொன்னபடி இந்தத் தூணில் உன் இறைவனைக் காட்டாவிட்டால் யானையை வலியசிங்கம் பற்றிக் கொல்வதுபோல் இப்போதே உன்னைக் கொன்று உன் குருதியைக் குடித்து உடலையும் தின்பேன்” என்று பிரகலாதனிடம் சினந்துரைத்தான் இரணியன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பெருஞ்சித்திரனார் வீட்டைப்போல்!

    பெருஞ்சித்திரனார் வீட்டைப்போல்!

    ஏறன் சிவா

    ஓடுடைந்து விதவிதமாய்
    உறுத்துகின்ற பல்பூச்சிக்
    கூடடைந்து மனைக்குரிய
    கோலந்தான் முற்றழிந்து
    வீடிடிந்து ஒளிவீசும்
    விளக்கிழந்து நிற்பதைப்போல்
    நாடிழந்து நிற்குதையா
    நற்றமிழர் பேரினந்தான்!

    நடையிழந்து குருதிபாயு
    நரம்பிழந்து வானுயர்ந்த
    கொடியிழந்து  வளையாச்செங்
    கோலிழந்து மறவரெனும்
    படையிழந்து பார்ப்பதற்குப்
    பேய்வீடாய் நிற்பதைப்போல்
    உடையிழந்து உயர்மானம்
    இழந்ததையா தமிழினந்தான்!

    காலங்கள் மாறுமையா
    கனித்தமிழர் எழுச்சிவரும்
    வேல்எங்கள் பகைவர்தம்
    வீதிகளை வெற்றிகொள்ளும்
    கோலங்கள் மாறிவிடும்!
    கோட்டைஎழும்! கொடிபறக்கும்!
    வாழுங்கள் அதுவரையில்
    வண்டமிழர் நெஞ்சத்தே!

    (மார்ச் 10, பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்)

    Share
  • தேன்சிட்டின் மாலைப் பாடல்

    தேன்சிட்டின் மாலைப் பாடல்

    இன்றைய மாலைப் பொழுதில் இன்னிசை பாடி, இனிமை சேர்த்த தேன்சிட்டு.

    இடம்: சென்னை, தாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காஞ்சிபுரம் பொம்மைகள் | பொம்மைக் கலைஞர் சுரேஷ்

    காஞ்சிபுரம் பொம்மைகள் | பொம்மைக் கலைஞர் சுரேஷ்

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ் பெற்றது. நவராத்திரி கொலு முதலாக, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன்… என ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற பொம்மைகளை இங்கே தயாரிக்கிறார்கள். ரூ.5 முதல் 50,000 வரை இங்கே பொம்மைகள் இருக்கின்றன. மரபுவழியுடன் நாம் கேட்கும் வடிவங்களிலும் பொம்மைகளை உருவாக்கித் தருகிறார்கள். இவற்றை உருவாக்கும் பொம்மைக் கலைஞர் சுரேஷ் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வேடல் சிவன் கோவில் | காஞ்சிபுரம்

    வேடல் சிவன் கோவில் | காஞ்சிபுரம்

    ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தின் வேடல் என்ற பகுதியில் நிர்மாணித்துள்ள சிவன் கோவிலுக்கு இந்த வாரம் சென்றோம். பிரமாண்டமான சிவனையும் நந்தியையும் தரிசித்தோம். அந்த அற்புதக் காட்சிகள், இதோ உங்களுக்காக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் 162 (பகர்ந்துலகு)

    சேக்கிழார் பாடல் நயம் 162 (பகர்ந்துலகு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி 

    மும்மையால்  உலகாண்ட சருக்கம் 

    19 திருநாளைப்  போவார்  புராணம் 

    வரலாறு

    அடுத்து  வருபவர் திருநாளைப்போவார்  நாயனார். இவரைப்பற்றி சேக்கிழார் கூறிய வரலாறு, பிற்காலத்தில் மாற்றங்களுடன் அமைந்துள்ளது. இங்கே பத்தொன்பதாம் நாயனாராகிய திருநாளைப்போவார் வரலாறு புராணமாகக் கூறப்பெறுகிறது. இந்நாயனார் தோன்றிய ஆதனூர் என்ற ஊரின் சிறப்பை சேக்கிழார் கூறுகிறார்.

    பாடல் 

    பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
    திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான்
    முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
    அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனூர்.

    பொருள்

    விளக்கங்கொண்ட நீரினையுடைய கொள்ளிடம் என்ற ஆறு, பொன்னையும் செழுமணிகளையும் அலைகளாகிய கையினால் முகந்துதர இருபக்கங்களிலும் உள்ள தாமரைகளின் மலர்க்கையினாலே அவற்றைஏற்றுக்கொள்கின்ற இடமகன்ற வயல்களையுடைய நன்மை தருகின்ற நீர் நாட்டிலே மேற்கானாட்டின் உள்ள ஆதனூர் என்பது; உலகம் அதன் சிறப்பினை எடுத்துச்சொல்லித் துதிக்கின்ற பழைமையாகிய வளத்தையுடைய வூர்.

    விளக்கம்

    சீர்பகர்ந்து உலகம் போற்றும் என்பது பொருள். அத்திருப்பதியின் சீர் இந்நாயனாருக்கு முற்காலத்தில் போற்றப்படாமல், அவர் அருள்பெற்ற பின்னரே பேசப்படுவதனால்சீர் என்பதனை முன்வைக்காது பின்வைத்தோதினார். சீர் என்ற சொல்  நந்தனார் அவதரித்து வாழ்ந்து திருவருள் பெறநின்ற சிறப்பைக் குறித்தது..

    பழைய வளம்பதி – என்ற தொடர் , நந்தனார் அவதரித்ததன் பின், சீர்,வந்ததேயாயினும் அதன் வளம் பழைமையுடைத் தென்பது. பழைய வளமாவது கொள்ளிடத் திருநதியின் நீர்வளத்தாலாவது என்பார், அதனை  பொன் – மணி – முளரி – பணை – நீர் – நன்னாடு என்றிவற்றால் விளக்கினார்.

    பதி ஆகும் – என்ற தொடர் இதுவே உயிர்களுக்கு ஆகுவது எனவும்,  ஏனை வெறும்உலக வளம்பதிகள் இத்தகையன ஆகா என்பதும் குறிப்பு.

    திகழ்ந்த புனல் கொள்ளிடம் – என்ற தொடர் கொள்ளிடத் திருநதியானது காவிரியினது மிக்க நீரினைக் கடலினுட் செல்ல விடுத்தற்கமைந்த வடிகால் ஆறு, பெரிய அணையின்கீழ் வடியும் ஊற்றுநீர் இதனுள்ளே செல்வதாதலின் எப்போதும் தெளிந்த நீரினையுடையது என்று குறிக்கத் திகழ்ந்தபுனல் என்றார்.  திகழ்ந்த என்பதற்கு இவ்வாறன்றி வெள்ளகாலத்தில மிகுதியாய்ப்போந்து விளங்கிய என்றுகூறுதலுமாம்.

    பொன் செழுமணிகள் – என்ற தொடர்  பொன்னையும் செழுமணிகளையும் குறித்தது .பொன்னும் மணிகளும்காவிரியினால் மலையினின்றும், வழியில் உள்ள நிலங்களினின்றும்அலைத்துக்கொண்டு வரப்பட்டன.. பொன்விளை மலைநிலங்களிற் போந்து பொன் கொண்டு வருதலிற் பொன்னி எனப்படும்.

    திரைக் கரத்தால் முகந்துதர – திரைக்கரம் – முகத்தலும் தருதலும் செய்தலால் திரையைக் கையாக உருவகம் செய்தார். முகந்து தர – எடுத்துக் கொடுக்க. உருவகத்தால் இயைந்த வினையை விரித்ததுக் காட்டியவாறு.

    “நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்” என்றபடி காற்றின் வேகத்தால் நீரின் பரப்பு உந்தப்பட்டுச் சுருண்டுமேலே எழும்; அவ்வாறு அது சுருண்டு எழும்போது நீரின் கீழே கிடந்த பொன்மணல் மணி முதலியவற்றை அள்ளிக்கொண்டு மேற்கிளம்பும்; பின்னர்க் கரையில் மோதிப்பரவும்போது அவற்றை அங்கு உதிர்த்துவிடும். இச்செயல்களையே  முகத்தலாகவும் தருதலாகவும் உருவகித்தார்.

    கொள்ளிடத்தின் இரு கரைகளிலும் அகன்ற வயல்கள் உள்ளன.அவற்றினுள்ளும் அங்குள்ள தடாகங்களினுள்ளும் தாமரைகள்பூத்துள்ளன. அத்தாமரைப் பூக்களினுள் கொள்ளிடத்தின் அலைகளால்  தரப்படும் பொன்னும் மணிகளும் சென்றுதங்கும் தோற்றம் தாமரைமலராகிய கைகளினால் பணை அவற்றை ஏற்கின்றது போன்றது என விரிவு செய்துகொள்க.

    மலர்க்கை – திரைக்கை என்றதற்குரைத்தபடி உரைத்துக்கொள்க. “வயல்புகு பொன்னி” என்றபடி காவிரியின் நீர் வயலுள்ளே வந்து புகுவதுபோலக் கொள்ளிடநீர் புகாது; வெள்ளம் பெருகும் காலத்தில் அலைகளால், நீர், கரைகளின் அயலின் வயல்களில் வீசப்படும் இயல்பு குறிக்கப்பட்டது.

    வள்ளன்மையுடையோர் தம் வழியிற்சென்றுகொண்டே தமது பொருள்களை வாரிஇறைத்து ஈந்து செல்லும் இயல்பும், அவ்வாறே அவ்வழியிலே நின்ற இரவலரும் தாந்தாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயராது தம் கைகளை விரித்திருந்து அவற்றுள் வீழ்வனவற்றைப் பெறும் இயல்பும் போலக் கொள்ளிடத்தின் திரைகள் பொன்மணிகளை வீச இருபுறமும் முளரிக்கைகளால் அகன்பணைகள் ஏற்றன என்ற குறிப்பும் காண்க.

    ஈதலும் ஏற்றலுமாகிய தற்குறிப்பேற்ற அணியின்சுவையும் கருதுக.

    நீர் நன்னாடு – என்றதொடர், நீர் நாடு என்று வழங்கும் சோழநாடு.நன்மைஎன்பது இங்கு ஏற்குமிடத்து வந்த இடைப்பிறவரல்.

    மேற்கானாடு – சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்று.கானாடு – கோனாடு – கானாட்டுமுள்ளூர் முதலியவை காண்க.

    ஆதனூர்- நந்தனார் அவதரித்த ஊரின் பெயர். ஆதனூர் -பதி ஆகும் – இது நாயனாரது திருவவதாரத்தினால் தன்
    சீரினை உலகு பகர்ந்து போற்றும் பதி ஆகும் பெருமைபெற்றது என்பது குறிப்பு.

    இப்பாட்டு, தன்மை, உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் முதலிய பல அணிநலன்களும் விரவிக், குறிப்பு முதலிய பல உள்ளுறைகளுடன் விளங்கும் கவிநயம் காண்க.

    “உணர்வினின்வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” என்றதற்கு இஃது ஒப்பற்ற இலக்கியமாய் விளங்குவதென்க.

    இப்பாட்டில் கொள்ளிடத்தின் கரையில்  அமைந்த வயல்களில் நீட்டிய தாமரைக் கைகளில் பொன், முத்து ஆகியவற்றைக்  கொடுக்கும் காட்சி, தம் தாழ்வை எண்ணி  ஒதுங்கியபோதும் , நந்தியை விலக்கிக் காட்சி தந்த சிவபெருமானின் எளிவந்த தன்மையை விளக்குகிறது.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதை – (26)

    எமிலி டிக்கின்ஸன் கவிதை – (26)

    மூலம்: எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    How Happy I Was If I Could Forget -26

    எத்தகை மகிழ்ச்சி என்னால் மறக்க முடிந்தால்,
    எத்தகைக் கொடிய துயர் நினைத்தி ருந்தால்,
    அத்தகைய காலக் கேடு தாழ்வு நிகழ்ச்சி
    ஆயினும் மீண்டு புலரும் அரும் மலர்ச்சி

    How happy I was if I could forget
    To remember how sad I am
    Would be an easy adversity
    But the recollecting of Bloom

    கனத்துப் போகும் நவம்பர் மாதம்
    மனத்து உறுதி எனக்கு மீளும் வரை,
    சிறுமி போல் செல்வழி தவறினேன்,
    பனிக்குளிரில் மரண எதிர்பார்ப்பு.

    Keeps making November difficult
    Till I who was almost bold
    Lose my way like a little Child
    And perish of the cold.

    Share
  • மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மண்மகிழ, பெண்மகிழ வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.” மண்மகிழப் பெண்மகிழ வேண்டும். பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை   பூமித் தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம்.  பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம்  செய்கின்ற  சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க்கிறதுஅந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறதுஅந்தப் பெண்மையின் நிலைதான் என்ன?   இவை யெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன!

    உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனால்த்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் னாலும் ஒரு பெண் இருப்பாள்‘ என்று சொல்லப்படுகிறது. அவள் – தாயாக,   தாரமாக,   சகோதரமாகமகளாகதோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும்ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண்மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் சர்வதேச மகளிர் தினம்” முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.

    பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தனபெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணி னம் எந்த ளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது? இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.

    தடைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்துதனித்துணிவுடன் களத்தில் இறங்கிஆணுக்குச் சமமான நிலை பெண்களுக்கும் உண்டு – பெண் களுக்கும் இருக்க வேண்டும் என்று போராடிய பெண்களின் போராட்டம் வெற்றியைத் தொட்ட நாளே “பெண்கள் தினமாக” இன்று உலகம் முழுவதும் பரவி நிற்கிறது எனலாம். இவ்வாறான தினம் கொண்டாட் டம் அல்ல ! போராடிப் பெற்ற தினம் என்பதே மிகவும் பொருத்தம் உடையதெனலாம்.!

    பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலைமையைப் பொறுத்தே நிற்கும்” என்னும் திரு. வி. கவின் கூற்று யாவரும் மனமிருத்த வேண்டியதே.

    இன்று “சர்வதேச மகளிர் தினம்” உலகெங்கும் வரவேற்புப் பெற்று பெண்களின் பெருமை விதந்து பேசப்படுகின்ற தென்றால் அதற்கு வித்தாக விளங்கியவர் 18 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு கிராமத்தில் பிறந்த கிளாரா ஜெட்கின்‘ என்னும் பெண்மணியாவார். இவர் இளம் வயது முதலே பெண்களின் உரிமைபெண்களின் நலன்யாவற்றிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தார் எனலாம். பெண் தொழிலா ளர்களின் உரிமையைபிரச்சினைகளைமனமிருத்தி – உலகெலாம் ஒலிக் கும்படி செய்தமையால் – பெண்களின் இயக்கங்களுக்கும் அவர்களின் செயற்பாடுக ளுக்கும் பெரும் உந்ந்துதலை அளித்தது எனலாம்.

    பெண்கள் பற்றிய உரிமைப் போராட்டங்கள் என்னும் வகையில் 1789 இல் பாரீஸில் சமத்துவத்துவத்துக்காக பெண்கள் எழுந்தனர். பெண்கள் தொடர்பான வேலை நேரங்கள்பெண்களின் வாக்குரிமைபெண் அடிமை, விடுதலைஎன்னும் கோஷங்களுடன் பேரெழுச்சி யாய் அப்போராட்டம் வெடித்தது. போராட்டத்தின் முடிவில் பெண்களின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அரசு ஒப்புதல் வழங்கியது. வழங்கிய அந்த நாள் மார்ச் 8 – 1848 ஆகும்.இந்தத் திகதியும் மாதமும் “மகளிர்க்கு உரிய தினம்” என்னும் நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவாக அமைந்தது எனலாம்.

    பிரான்சில் பெண்களின் எழுச்சிபோல் 1857 இல் அமெரிக்காவில் நியூயோர்க்கிலும் பெண் களின் உரிமைக்குரல் எழுப்பப்பட்டது. பெண்கள் ஒருமித்துப் போராடினால்த் தான் அவர்க ளுக்கான உரிமைகள் கிடைக்கும் என்னும் எண்ணம் பரந்து விரிந்தது.

    சர்வதேச மகளிர் தினத்துக்கு” வித்திட்ட – கிளாரா ஜெட்கின் தலைமையில் 1919 இல் ஹேகனில் அனைத்துலாகப் பெண்களுக்கான மாநாடு கூடியது. இம்மாநாட்டின் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு‘ என்பது உருவாக்கப்பட்டது.   ஜேர்மனி ,   ஆஸ்திரியா,    டென்மார்க்குடன் சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் இந்த அமைப் பின் சார்பில் 1911 இல் மார்ச்சு மாதம் 19 ஆந் திகதி முதல் சர்வதேச மகளிர் தினத்தைக்” கொண்டாடினார்கள். பெண்கள் பல நாடுகளிலிருந்து கலந்து கொண்ட இவ்வரலாற்று வேளையில்தான் – பெண்களுக்கான வாக்குரிமையினை அளிப்பதற்கு மன்னன் லூயி ஸின் இணக்கம் தெரிவிக்கப் பட்டது. இது இடம் பெற்றது மார்ச் மாதம் ஆந் திகதியே யாகும். பெண்களின் ஒத்துழைப்பால் இவையனைத்தும் நிகழ்ந்த அந்த நாளை “சர்வதேச மகளிர் தினமாக” ஆண்டு தோறும் கொண்டாடும் தினமாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    1917 ஆம் ஆண்டு மார்ச் ஆம் திகதி ரஷ்சியாவில் சென்பீட்டர்ஸ் நகரில் ஒரு போராட் டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை அடுத்து 1921 மார்ச் ஆம் திகதி “சர்வதேச மகளிர் தினமாக” பிரகட னப்படுத்தப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டினை “சர்வதேச மகளிர் ஆண்டாக” அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1977 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் “சர்வதேச மகளிர் தினத்தை”  மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. அதனால் துணிந்த பெண்கள் முழு வீச்சுடன் முனவந்து போராடிப் பெண்களுக்கான பல உரிமைகளை பெற்றெடுத்தார்கள். ஆனாலும் இன்னும்தான் பெண்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்த படியே தான் தொடர்கதையாய் தொடர்கிறது எனலாம்.

    மனித வாழ்விலே பெண்ணின் பங்கு மிக மிக இன்றியமையாதது எனலாம். இதனை எவருமே மறுத்துவிட முடியாது. ஆனால் அப்படிப்பட்ட பெண்களை  பெண்கள்” என்னும் தோற்றத்தையும் அவர்களது உடலையும் வைத்துக் கொண்டு அரங்கேறும் அவலங்கள் சொல்லமுடியாதன.

    பெண்களுக்கு வாக்குரிமை எதற்குபெண்களுக்கு பேசும் உரிமை எதற்கு? பெண்களுக்கு வேலைபார்க்கும் உரிமை எதற்குபெண் களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல் லும் உரிமை எதற்கு பெண்கள் என்றால் திருமணம் செய்ய உதவும் ஒரு மனித உருவம். பிள்ளைகளைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு இயந்திரம். ஆணுக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு நுகர்வுப் பொருள். இப்படியெல்லாம் எண்ணி பெண்ணினத்தை வதைத்த வரலாறு மறைக்க முடியாத வரலாறாகும். அவற்றை யெல்லாம் உடைத்தெறிந்து போராடி பெண் கள் வந்து நிற்கும் நிலையினை இன்று உலகெங்கும் காணு கிறோம்.ஆனாலும் பெண்க ளுக் கான அச்சம் என்னும் நிலைமட்டும் அகலவே இல்லை எனலாம்.

    பட்டங்கள் ஆள்வதும்சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் பெற்று நிற்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. நாட்டின் ஜனாதி பதியாகபிரதம மந்திரியாக, உயர்நீதித்துறையின் தலைவராகஅரச பதவிகளில் உயர் நிலையில் இருப்பவர்களாகதொழில் முனை பவர்களாகபல்கலைக்கழக துணை வேந்தர்களாககல்லூரி முதல்வர்களாக,   பத்திரிகைகளின் பிரதம ஆசியர்களாக இன்று உலகம் முழுவதும் பெண்கள்  மிளிர்ந்து நிற்கிறார்கள் எனலாம். மருத்துவம் தொழில் நுட்பம்கலைகள் என்று பெண்களின் ஆளுமை பல்கிப் பெருகி நிற்பதையும் காணுகிறோம்.

    ஆனாலும் பெண்கள் என்னும் படைப்பால் அவர்களை நோக்கும் விதமும், அவர்களை வதைக்கும் விதமும் சமூகத்தை விட்டு அகலவே இல்லை என்றே எண்ண முடிகிறது.

    பெண்களைப் பொறுத்தவரை சட்டரீதியாகவும்சமூக ரீதியாகவும் எல்லோரையும் போல சமூகநீதி வழங்கப்படவேண்டும். ஆணும், பெண்ணும் சமமென்று பேசப்படுகிறதே தவிர அவர்களது நடை முறை வாழ்வில் கிடைக்காது இருபதால் கிடைத்திடச் செய்திடல் அவசியமாகும். பெண்கள் பொருளாதார ரீதியாகவும்இன சமூகரீதி யாகவும் பாதிக்கப்படும் நிலையினை மாற்றிட முயலுதல் அனை வரதும் தார்மீகக் கடமை யாகும்.பெண்களின் பிரச்சினைகளை அணுகவும்அவற்றை அகற்றிடவும் ஆற்றல் மிக்க அதிகாரிகள் நியமி க்கப்படுதல் அவசியமாகும். காவல்துறையில் கூட பெண்க ளின் நிலை பரிதாபமாகவே காணப்படுகிறது.

    காவல் துறையில் உயர்பதவியில் இருக்கும் பெண்களுக்கே தக்க பாதுகாப்பு இல்லாதிருக்கிறது. மேலதிகாரிகளால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை இன்றும் காணப்படுகிறது. அதுபோன்று ஏனைய உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கும் – அவர்கள் பெண்கள் என்ற காரணத்தாலேயே அவர்களும் பல மன உழச்சல் களுக்கு ஆளாவதும் – சிலர் மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கே சென்று விடுவதும் – ஏன்.. தற்கொலையே செய்துவிடுவதையும் காணமுடிகிறது. இவை அனைத்துமே சமூகத்தைவிட்டுக் களையப் பட வேண்டியனவாகும்.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்து வோம்
    வைய வாழ்வு தன்னில் எந்த
    வகையினும் நமக்குள்ளே
    ஆண்களோடு பெண்களும்
    சரிநிகர் சமானமாக
    வாழ்வம் இந்த நாட்டிலே “

    அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம் கற்பு நிலை யென்றால் இரு சாரா ருக்கும் பொதுவாக்குவோம்” என்று முழக்கமிட்டுப் பெண்ணுரிமை பேசி நின்றான் புரட்சிக்கவி பாரதி. பாரதி வீர முழக் கத்தைப் படிப்பதோடு நின்று விடக் கூடாது. அதனைக் கருத்தில் இருத்தி யாவரும் செய லாக்குதலே மிகவும்  அவசியமானதாகும். தாயாய்தமைக்கையாய், தங்கையாய்மனைவியாய்மகளாய்மருமகளாய்பேத்தியாய்வாழ்வில் இணைந்திருக்கும் பெண்ணை – பெண்மையினைக் காப்பது அனைவரதும் தலையாய பொறுப்பு அல் லவா ?

    பெண்ணால் நலன் அடையும் நாங்கள் பெண்களைக் காத்திடுதல் கட்டயமான கடன் அன்றோ! பெண்ணைத் தூற்றுவதும்பெண்ணை இழிவு செய்வதும்பெண்ணை மனமுடையச் செய்வதும்பெண்ணை அடிமை என்று நினைப்பதும்பெண்ணைப் போகப்பொருள் என்றே எண்ணுவதும் பொருத்தமுடையதா! அனைவரும் சிந்திப்போம்! மகளிர் தினம் என்பது ஒரு நாளில் மேடை போட்டு  சொற்பொழி வுகள் பொழிந்து நிற்பதல்ல! வாழ்வின் துணையாகஇணையாக இலங்கிடும் பெண்ணை, பெண் மையைக் காப்பதுதான் நம் அனைவரதும் தலையாய கடமையாகும்.

    அவர்களுடைய உரிமைகள் பேணப்பட வேண்டும். ஏனெனில் உலகெங்கும் சிறந்த பெண்களே உள்ளனர். ஆனால் அவர்களு க்கான அழகான வாழ்க்கை கிடைத்திரு க்கிறதா என்பதே கேள்வியாகி நிற்கிறது எனலாம்! .

    Share