Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ் (17)

    கிரேசி மோகன்

    DSC00151
    தனன தானதத்த தனனதானதத்தvishnu_seated_on_a_lotus_guler_school_hb55
    தனன தானதத்த -தனதான

    சிறிய நானகற்றி பெரியஞானமுற்று
    அருணை வாசியர்க்கு-மகனான
    ரமண வாயுரைத்த ரமிய மானநிட்டை
    ருசியை நானும்பெற்று-நலம்காண

    சிறகை வான்விரித்து வினதை சேய்பறக்க
    முதலை வாயிருக்கும்-களிறோனின்,
    உயிரை வாழவைக்க சுழலும் ஆழிசக்ரம்
    எறிய வேகமுற்று-விரைவோனே

    குறைய பூகனத்தை உருளும் தேர்நடத்தி,
    பெரிய பாரதத்தின்-களமேகி
    விஜய னாரவத்தை விலக சோர்வகற்றும்,
    புனித கீதைசெப்பும்-இடையோனே

    கரிய வானையொத்த நெடிய மேனிநித்ரை
    சரிய ஆழிசொக்கும் -சுகவாசி
    பெரிய பாளயத்தி பெரிய சோதரத்வ,
    அருள வாமனத்துள்-பெருமாளே

    —————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (16)

     
    கிரேசி மோகன்

    Tirupati15-v

    தானதன தானதந்த – தனதான….

    ———————————————————————–

    “சோணமலை மீதமர்ந்து -ரமணேசர்images (1)

    ஞானமலை யாயகந்தை -யதன்முலம்
    காணுவகை தானுகந்த -வழியேகி
    நானெனது பேதபந்தம் -விலகாதோ
    தானமென மூணுகந்த -பலிசாய
    வானவழி போயளந்த -நெடுமாலே
    சேணமுற கேணிநின்று -கவிராஜன்(பாரதியார்)
    கானமென வேவுயர்ந்த -பெருமாளே”

    படத்திற்கு நன்றி:

    http://www.vaisnava.cz/clanek.php3?index=40&no=167&hl=ANO
    —————————————————————————————————————————

     

     

    Share
  • ஹஸ்தாமலக கீதம்….

     

    கிரேசி மோகன்

    unnamed (2)unnamed (3)
    நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
    படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
    நொச்சூர் அவர்களின் ஆங்கில முன்னுரையையும் இணைத்துள்ளேன்….
    முன்கதையாக….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும்
    இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….
    ————————————————————————————-
    (காப்பு)
    ———
    ‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
    கருணா கரர்காம கோடி -உருவாய்
    அரனா கவந்து அரணா கநின்றோய்
    வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….
    —————————————————————————————–
    ‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
    சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
    காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
    நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….
    —————————————————————————————
    முன்கதை சுருக்கம்
    ————————–

    “பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
    சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
    மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
    உலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….

    ஆதிசங்கரர் கேள்வி….
    ————————–

    “யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
    பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
    வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
    அத்தா மலக அமுது”…..(1)

    அத்தாமலகர் பதில்…..
    —————————-
    “பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
    “நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
    நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
    நானல்ல, நானுணர்வே நான்”….(2)….

    “காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
    சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
    அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
    எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….
    (OR)
    எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….
    எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….

    “கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
    உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
    சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
    நாதனே, என்றுமுள நான்”….(4)….

    “ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
    ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
    கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
    தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….

    “முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
    கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
    மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
    ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….

    “எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
    கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-
    கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்- நன்மையா னந்தமே நான்’’ ….(7)….
    “கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
    உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
    ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
    நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….

    ’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
    கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
    சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
    பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….

    ’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
    தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
    பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
    நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….
    ”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
    ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
    ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,
    வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….
    ”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
    போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
    வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
    நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….

    ’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
    ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
    எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
    நிற்போனே நிர்மல நான்’’….(13)….
    “செய்யும் முறையால் ஸ்படிக நிறம்மாறும்,
    அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
    மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
    ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….
    (சுபம்)
    (முடிவு)
    (மங்களம்)
    ——————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (15)

     

    கிரேசி மோகன்

    unjal seva1
    தான தத்த தானா தனந்தன தான தத்த தானா தனந்தன
    தான தத்த தானா தனந்தன -தனதான….

    ———————————————————————————————————————–

    “சீதம் முத்தி சாவாய் முடிந்திட மாலை இட்டு மாரார் மயங்கிட img1090925013_1_1
    ஓலை கட்டி நாலாள் சுமந்திட -வனமேகி
    சூடு பட்டு சோறாய் அவிந்திட கூடு விட்டு பேயாய் அலைந்திடும்,
    வேடன் தொட்டு வாவா விளம்பிட -உனதாவி

    ஓதும் முத்தி சோணா சலந்தனில் வாழும் சித்தர் நானார் விளம்பலில்
    ஞான முற்று தானாய் விளங்கிடும் -சுகமேவ
    ஆழி சத்தம் ஆகா முழங்கிட சேட மெத்தை மீதே வளர்ந்திடும்
    யோக நித்ரை மாலே வழங்கிட -வருவாயே

    மாது சக்தி பாகா னசங்கரன் தோடு குத்தும் காதோ ரமந்திரம்
    ஓது வித்த ஓமா திமைந்தனின், -மகமாயி
    ஆதி சக்தி ஆகா ரமுண்டவள் வீர சக்தி வேலா ளுகின்றவன்,
    சூரை குத்தி கூறாய் வகிர்ந்தவன், -முறைமாம

    ஏது புத்தி அய்யா முணங்கிடும் ஏழை கத்தல் ஏனோ மறந்தனை
    ஆத ரிக்க வாராய் அனந்தச -யனசாமி
    போதி சத்வம் வேணாம், முகுந்தனுன் பாடல் பெற்ற ஆழ்வார் தலங்களில்
    பாடும் பக்தி வாநாள் உகந்திடு -பெருமாளே”

    படத்திற்கு நன்றி : தினமணி

    Share
  • திருமால் திருப்புகழ் (14)

     

                      கிரேசி மோகன்

    krishna3xp

    தான தத்தன தானதத்தன
    தான தத்தன தானதத்தன
    தான தத்தன தானதத்தன-தந்ததான….
    ———————————————————————————————————————–

    “தாம சத்தொடு ராஜ சத்தினை p36b
    தூய சத்வமும் தான கற்றிவி
    சார யுக்தியில் நானொ ழித்துளம் -சம்புவாக
    மோன நிட்டையில் மூழ்கி பக்தரின்
    ஞான சத்குரு வாய்ச கத்தினில்
    சோணை வெற்படி வார முற்றவர் -சொன்னவாறு

    மாம முத்தமிழ் வேல வர்க்கபி
    ராமி சக்தியின் நேச முற்றச
    கோத ரத்துவ, வாழ வைத்திடு -செங்கண்மாலே
    வாத பித்தக பாதி சர்க்கரை
    சோகை ரத்தவி யாதி உற்றுவ
    யோதி கத்தினில் சாயு மக்கணம் -நொந்திடாது

    ராம தத்துவ தார கத்தினை
    நாளும் செப்பிடு யோக பக்தியில்
    நார தற்கிணை யாய்நி லைத்திடல் -தந்திடாயோ
    ராச தத்துவ லீலை யுற்றெமு
    னாந திக்கரை கோபி யர்க்கென
    ஞான பக்குவ காம நர்த்தன -நந்தலாலா

    நேமி சக்கிர ,கூவும் நிர்பய
    ஆழி ,விற்தொகை, வாளும், மொத்திடும்
    கோலும் உற்றுல கேழும் ரக்ஷனை -தந்துபோகும்
    சீர ணைத்திட சேட மெத்தையில்
    சீற லைத்தவ யோக நித்திரை
    நீல பத்தும நாப நிர்குண -எம்பிரானே”
    —————————————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (13)

    101-0105_IMG

    கிரேசி மோகன்

    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன
    தந்த தனன தனதானன தனன-தனதான….

    ————————————————————————————————————-
    “சிந்தை மகிழ சிவநேசர்செ விதனில்images (1)
    மந்த்ர வடிவ உபதேசம ருளிய
    கந்த முருக கதிர்காமம ருகனின் -முறைமாம
    அந்த ரிவயி ரவிவாமமி றைவனின்
    பங்கு திரும யிலைவாழுமை இளைய
    தங்கை வருகை சினமாமனி டம்உரை -சிறைபால
    முந்தை வினைகள் முளையோடுவி டுபட
    சிந்தை வடிவில் பலநாள்பழ கியவ
    கந்தை விலக ரமணேசர்வ ழிதனில்-நடமாட
    எந்தை வருக ரகுநாயக வருக
    என்று அருண கிரியார்புகழ் தமிழின்
    சந்த நடையில் வரவேணும்நெ டிதுயர் -பெருமாளே”….

    ————————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (12)

     

    கிரேசி  மோகன்

    perumal1

    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான….
    ———————————————————————————————————————–

    “திரைகட லுளோடி திரவிய வியாச 5709796
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”
    ————————————————————————————————————————-

    Share
  • திருமால் திருப்புகழ் (11)

     

    கிரேசி மோகன்

     images (2)

    தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
    தந்ததன தந்தனம் – தந்ததான….

    ———————————————————————————————————————–

    “சஞ்சலமொ ழிந்திடும் சிந்தைமவு னம்பெறும்PESUMPERUMAL KOOZHAMANDHAL VAAMANA
    செங்கிரிய மர்ந்திடும்-வெங்கடேசன்
    பின்புரம ணன்சொலும் அந்தர்முகம் சென்றிடும்
    அன்பரின கந்தையுளம்-எந்தநாளும்
    அஞ்சலென சென்றமரும் அந்தரிசி வன்பதம்
    அந்தவழி சென்றிடும்-நெஞ்சுதாராய்
    சங்கொடுசு ழன்றிடும் செந்திகிரி தண்டமும்
    நந்தகிவில் தங்கிடும் -அங்கையோடு
    பஞ்செனப டர்ந்திடும் செந்திருக ரம்தரும்
    சங்கமசு கம்பெரும் -ரங்கநாதா
    வந்திரணி யன்பலம் வென்றவனை கொன்றிடும்
    கம்பமுறை சிங்கமுகம் -கொண்டமாலே
    தஞ்சமென வந்துதன் செஞ்சரண்அ டைந்ததும்
    தம்பிமுறை தந்திடும் -அஞ்சனாவின்
    பஞ்சமுகம் கொண்டவன் இந்திரியம் வென்றவன்
    அந்தஅனு மன்தொழும் -எம்பிரானே”……..

    Share
  • திருவிளையாடல்….

     

    கிரேசி மோகன்

    ஓவியம் ; கிரேசி மோகன்
    ஓவியம் ; கிரேசி மோகன்

    அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
    அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
    குதியிட்டுத் தாழ்ந்தேன் மதியில் சதங்கை
    ஜதியிட்டுத் தாண்டவ மாடு….
    அசையும் உயிரில் அசைவாய் இருந்து
    அசையாது நிற்கும் அரனே – இசைந்து
    பசையாய் இடபாகம் பற்றிய உமையும்
    அசைந்திடத் தாண்டவ மாடு….
    இல்லையென்று சொல்வோர்(கு) இயம்ப பதிலில்லை
    தில்லையில் என்வீட்டுத் திண்ணையில் -இல்லையேல்
    கொல்லையில் நான்மட்டும் காண்பதற்கு இல்லையென்று
    சொல்லாது தாண்டவம் ஆடு….
    இல்லம் புகந்தன்று பிள்ளைக் கறியுண்டு
    வெள்ளை மனச்சிறுத் தொண்டர்தம் -உள்ளத்தை
    சோதித்த ஆண்டவா சொக்கநாதா என்நெஞ்சில்
    தாதித்தை தாண்டவம் ஆடு….
    கால்கட்டு சுந்தரர்க்கு கைகட்டு போட்டவரின்
    மால்கட்(டு) அவிழ்த்த மகாதேவா -நூல்கட்டி
    ஆட்டுவிக்கும் அம்பலனே ஆடுமிந்த பொம்மையை
    ஆட்படுத்த தாண்டவம் ஆடு….

    மண்சுமந்து பிட்டுக்குப் புண்சுமந்தாய் மேனியில்முக்
    கண்சுமந்து கந்தனைக் கண்டெடுத்தோய் -பெண்சுமந்த
    பாகத்தோய் நஞ்சுண்ட தாகத்தோய் என்நெஞ்சில்
    ஆகமத் தாண்டவம் ஆடு….
    முடவனன்று வேண்ட தடதடவென்(று) ஓடி
    குடமுழுக்(கு) ஆடிய கும்பேசா -விடமுண்டோய்
    ஆடை கரித்தோல் அணிந்தெனது நெஞ்சமாம்
    மேடையில் தாண்டவம் ஆடு….
    நாம்நமதை விட்டு நமச்சிவாய நாமத்தை
    ஒம்நமஹ சேர்த்தென்றும் உச்சரிப்போர் -காமமதை
    வென்றிடக் கைகொடுக்கும் விஸ்வேசா என்நெஞ்ச
    மன்றிடைத் தாண்டவம் ஆடு….

    நாரதன் தும்புரு நந்தி மிருதங்கம்
    பாரதி வீணை பயின்றிட -வாரிதி
    வானைப் பிடித்திட வையம் அறிந்திட
    தாணுவே தாண்டவம் ஆடு….
    நாவாரப் பைந்தமிழில் தேவாரப் பிள்ளைக்குப்
    பாவூற வைத்த பரமசிவா -பூவாரம்
    கொன்றையும் கங்கையும் கொண்டையில் சூடியோய்
    என்றென்முன் தாண்டவம் ஆடு….

    பதினாறைப் பெற்றோன் பெருவாழ்வைப் போக்க
    அதிகாரம் செய்த எமனை -குதிகாலால்
    எட்டி உதைக்க எழுந்த பதமென்மேல்
    பட்டிடத் தாண்டவம் ஆடு….
    பெரிய புராணம் படித்தறி யேனே
    நரியைப் பரியாக் கியவா -இறைவாநான்
    நாயன்மார் ஆகிஉன் நாமம் ஜபித்திட
    நீயென்மார் தாண்வம் ஆடு….
    பிரிவோடு வாழ்ந்த திருநீல கண்டன்
    உறவோடு சேர உகந்தோய் -திருவாரூர்
    த்யாகேசா தில்லை நடராசா நெஞ்சத்(து)
    ஆகாசம் தாண்டவம் ஆடு….
    பூசலா நாயனாரின் மாசிலா நெஞ்சத்து
    வாசியாக கோயில் வளர்த்தோய் -காசிக்கு
    வந்துன்னைக் காண்போரை வாழ்விப்போய் என்நெஞ்சில்
    தந்தனத்தோம் தாண்டவம் ஆடு….

    தேனிக்குப் போட்டியாய் மாணிக்க வாசகன்தன்
    ஆணிப்பொன் பாக்கள் அருந்தியுந்தன் -தீவிக்கும்
    கண்டத்து நஞ்சை அமுதாக்கிய சங்கரா
    பண்டைஊழ் தாண்டவம் ஆடு….
    விழிமலர்த் தூவி வழிபட்ட வேடன்
    அழிவிலா நாயன்மா ராக -வழிவகுத்தோய்
    நானார் அறிந்திட நீயென்னுள் ஆனந்தக்
    கோனாராய் தாண்டவம் ஆடு….

    அஞ்சை அடக்கிடலாம் அஞ்சா(து) இருந்திடலாம்
    அஞ்சிரெண்டு மாதகர்பம் ஆட்படாய் -அஞ்சிலொன்றில்,
    அஞ்சிலொன்றைத் தாண்டிய அஞ்சனசேய் அம்சமான
    அஞ்செழுத்துக் காரன் அளிப்பு
    ————————————————————————————————————————–

    Share
  • திருமால் திருப்புகழ் (10)

    கிரேசி மோகன்

    VISHNU_CLOUDS_by_VISHNU108
    தனனதன தானதத்த தனனதன தானதத்த
    தனனதன தானதத்த….

    ————————————————————————————————————————–
    “மனமதனின் ஆணவத்தை உதியுமிட மேவொடுக்க11
    மலையருணை வாசமுற்ற -ரமணேசர்
    அருவியென வேவுரைத்த இருயிருப தானயுக்தி
    உளமதனில் நானகற்றி -உயர்வாக
    அனுதினமு மேஜபிக்க திடவுறுதி தாயெனக்கு
    கடல்கடையும் நாளுதித்து -சபரீசன்
    பெறவுதர பாரமுற்ற ,புலிமுதுகில் ஏறவிட்ட
    கிளரொளியில் மோகினிப்பெண் -அவதாரா
    பணமுடியில் ஏறிநச்சு உமிழவுயிர் தானெடுத்து
    நடனமிடு காளியத்து -விடராசா
    மழலையிவன் ஞானபக்தி கருமமதில் ஆகசித்தி
    கவிதைவடி வாயெனக்கு -அருள்வாயே
    ஜனகமக ளேவொருத்தி ஒருவனிவ னேவுரைக்க
    சிவதனுசை போய்முறித்த -ரகுநாதா
    ஜனனமர ணாதிவட்ட சகலபரி பாலனத்தில்
    ஜகமதனில் பூரிநிற்கும் -பெருமாளே (OR ) ஜெகன்னாதா”….

    ————————————————————————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (9)

    கிரேசி மோகன்

    images (1)

    தந்ததான தான தான தந்ததான தான தான
    தந்ததான தான தான -தனதான….

    ——————————————————————————————————————————-

    “எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண images (2)
    மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
    தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
    வென்றுதீர னாக மேவு -ரமணேசர்

    கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
    கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
    கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
    என்றுகூறு தோழ பாவ -ரகுராமா

    அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
    அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
    அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
    அம்சனாரின் நேச மான -சகவாசன்

    நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
    அன்பினோடு தாழி டாது -சிலையோடு
    அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
    கும்பகோண ராம சாமி -பெருமாளே”
    ———————————————————————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (8)

     

     

    கிரேசி மோகன்

    download (2)

    தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன
    தான தானன தத்தன தத்தன -தனதான….

    ———————————————————————————————————-

     

    ஆல வாயினில் செத்துணர் வுற்றவர் நானை யாரென கற்றுடல் விட்டவர்
    சோணை மாமலை உற்றது ரைத்திடு -ரமணேச
    ஞான மாமுனி செப்பிய சத்தினில் நானும் வாழயில் பற்றுவி ருப்பினை
    கீதை நாயக விட்டுவி ரக்தியில் -விஜயோனாய்

    தோளி லாளிடும் விற்கணை விட்டது போல யாவையும் விட்டுயர் வெற்றியை bali_vamana
    வாழும் நாளிலே வெற்றிலை வட்டிலில் -எளிதாக
    ராஜ யோகமும் ,பக்தியும் ,கர்மமும் ஞான மார்க்கமும் வைத்தருள் இக்கணம்
    ராசா லீலையில் முக்திய ளித்திடும் -குருநாதா

    கால நேமிவ லக்கரம் விட்டிட ஆழி ஊதலி டக்கரம் பற்றிட
    தோளி லாடிட விற்சுமை மற்றிரு -கதைவாளை
    ஆளு மாதவ விக்ரம சொப்புரு வான வாமன நச்சர வத்துயில்
    ஆதி நாரண உச்சரி பத்திரு -திருநாமம்

    நாளு மோதிட நற்கதி பெற்றுயர் வான வாசலில் விட்டுவின் நித்திய
    சூரி யாகுவர் இப்பிற விப்பிணி -குணமாகும்
    கோல மாமயி லைப்புகழ் கற்பக பாலி ஈசனின் பக்கஅ கத்துறை
    சீனு வாசம கத்துவ மைத்துன -பெருமாளே”
    ————————————————————————————————

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (8)

    கிரேசி மோகன்

     

    திருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….

    download (3)

    தய்யான தான தானன தய்யான தான தானன
    தய்யான தான தானன -தனதான

    “பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும் download (2)
    செல்லாத காசு ஆகுவை -அதனாலே,
    அவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்
    வல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்

    சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட
    செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே
    செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்
    கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா

    கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்
    கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்
    அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட
    பொய்யான மாய மேனியில் -தளர்வாகி

    புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்
    கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்
    வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்
    வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….
    ஸ்தல புராணம்….
    ——————————-
    “எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில்
    வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….
    ———————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (7)

     

     
    கிரேசி மோகன்
    பெருமாள் திருப்புகழ்….

    தனதய்யத் தான தாத்தன தானன
    தனதய்யத் தான தாத்தன தானன
    தனதய்யத் தான தாத்தன தானன -தனதான….
    —————————————————————————————————————–
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்
    ——————————————————————————–

    lordlakshmiperumal

    “ஒருகள்ளக் காதல் வாட்டிட வேடுவ
    குறவள்ளிக் காக காட்டினில் மேவிடும்
    சுரரில்லக் காவல் சூர்ப்பகை வேலவன் -முறைமாம
    பலவெள்ளிக் காசு பார்ப்பினும் ஊழவன்
    உனையள்ளிப் போக வீட்டிடை ஏகுமுன்
    வரமள்ளித் தாராய் வாய்த்திட சோணையின் -ரமணேசdownload (2)

    குரு,அய்யப் பாடு ஆக்கிடும் ஆணவ
    மதையள்ளிப் போடும் சாக்கில்வி சாரணை
    புரிவுள்ளத் தாழம் பூத்திடும் மாமெனும் -உபதேசம்
    மனதுய்யப் ,பாதம் வீற்றிட மாதுபொன்
    அலைவெள்ளப் பாலில் போட்டிடும் சேடனில்
    அறிபள்ளிக் கார ,ப்ராட்டியர் சூழவந் -தருள்வாயே

    முறைஅவ்வைப் பேதை கூட்டுடன் ஏகிட
    இலைவில்வக் காரர் வீட்டினில் சேரவும்
    தலைபெய்அத் தோளில் தூக்கிய வேழனுன் -சுடராழி
    தனைகவ்வக் காதின் நாற்கர ஆடலில்
    நகையள்ளித் தூவும் மேய்த்திடும் கோகுல
    உறிநெய்யைப் பாலை ஆய்ச்சியர் ஏசிட -களவாடி

    உறுகொள்ளைக் கார மூர்த்தியுன் லீலையை
    தடைசெய்யத் தாம்பில் பூட்டிடு தாயவள்
    உரலள்ளிப் போக வீழ்த்தினை மாமரம் -ஒருநாளில்
    கருமல்லிப் பூவுன் காத்திர வாசனை
    விரலுய்யத் தீயில் பார்த்தவுன் பாரதி
    திருவல்லிக் கேணி பார்த்தனின் சாரதி -பெருமாளே”

     

     

    படத்திற்கு நன்றி:

    http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=1639&page=1

    Share
  • திருமால் திருப்புகழ் (6)

     

     

    கிரேசி மோகன்

    12_big
    தானன தானன தந்தத் தனத்தன
    தானன தானன தந்தத் தனத்தன
    தானன தானன தந்தத் தனத்தன-தனதான….
    ———————————————————————————————————————-
    “நானென தானென பந்தத் தவிப்பினில்
    நாளொரு மேனியும் நம்மைப் பிணைத்திடும்v163Ramanar2
    ஆணவ மாயவ கந்தைக் குடத்தினை -ரமணேசர்
    கூறுவி சாரணை விந்தைக் களித்திட
    தூரக டாசிஎ றிந்தக் கினிச்சுடர்
    ஞானப ராபர பந்தைச் சுழற்றிட – அருள்வாயே
    சோணையில் சாவுற எம்பிக் குதித்தவர்
    நாவினில் வேலது முந்திக் குறிப்பிட
    வேலவர் மேலவர் சந்தத் திருப்புகழ் -தனையோத
    சீரலை வாய்தனில் வஞ்சிக் குறத்தியும்
    வானவர் ஆனையும் கொஞ்சத் தவித்திடும்
    மாமயில் ஏறிடும் சங்கத் தமிழ்க்கிறை -முறைமாம
    கானகம் போவெனும் தந்தைக் குறிப்பது
    ஆரண மாயடி உந்தப் புறப்படு
    தாசர தீரகு வம்சப் பிறப்பிறை -அவதாரா
    நூறது வேரற ,அஞ்சுக் களித்திட
    பாரத வாகனம் தன்னைச் செலுத்திய
    கோகுல பாலமு குந்தக் கிருட்டிண -நவநீதா
    வானெழு தூண்என நின்றப் பலித்தலை
    மூணென வாமனம் பொங்கிக் களித்திட
    மோகன ரூபசு கந்தச் சிரிப்புடன் -வனமாலி
    ஆணென ஆயினும் பம்பைப் புழைத்துறை
    வாவரின் தோழனை உந்திக் கருப்பொருள்
    ஆகம ஹேசனின் விந்தைப் புவிக்களி -பெருமாளே”….

    —————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://www.appusami.com/Default.asp?ColsName=2&ColsValue=5561&hidtxtvid=163&catid=31

     

    Share