திருமால் திருப்புகழ் (9)
கிரேசி மோகன்
தந்ததான தான தான தந்ததான தான தான
தந்ததான தான தான -தனதான….
——————————————————————————————————————————-
“எம்பிரானும் வேதம் ஓதும் அன்னவாக னாரும் காண
மண்ணைவானை மீறு மேனி -கிரிசோணை
தன்னில்தேக வாசம் போக அன்றுஆல வாயில் சாவை
வென்றுதீர னாக மேவு -ரமணேசர்
கொம்புஞானம் காண காலில் தெம்பிலாத மூடன் வாயில்
கொஞ்சமேனும் தேனை சேர -அருள்வாயே
கங்கையோடன் தோள்கு லாவி அஞ்சுமானை நீயும் கூட
என்றுகூறு தோழ பாவ -ரகுராமா
அண்ணல்சோகம் தீர வானில் பொங்குமாழி மீது தாவி
அன்னைவாழும் சேதி கூறும் -அனுமானின்,
அஞ்சனாவின் சேயின், வாயு மைந்தனாரின், வாசி ஈசன்
அம்சனாரின் நேச மான -சகவாசன்
நம்பினோர்கள் நாளில் கோளில் துன்புறாது கோயில் வாசல்
அன்பினோடு தாழி டாது -சிலையோடு
அம்புறாவும் தோளில் ஆட தம்பியோடு தாரமொடு
கும்பகோண ராம சாமி -பெருமாளே”
———————————————————————————————————————