திருமால் திருப்புகழ் (6)

 

 

கிரேசி மோகன்

12_big
தானன தானன தந்தத் தனத்தன
தானன தானன தந்தத் தனத்தன
தானன தானன தந்தத் தனத்தன-தனதான….
———————————————————————————————————————-
“நானென தானென பந்தத் தவிப்பினில்
நாளொரு மேனியும் நம்மைப் பிணைத்திடும்v163Ramanar2
ஆணவ மாயவ கந்தைக் குடத்தினை -ரமணேசர்
கூறுவி சாரணை விந்தைக் களித்திட
தூரக டாசிஎ றிந்தக் கினிச்சுடர்
ஞானப ராபர பந்தைச் சுழற்றிட – அருள்வாயே
சோணையில் சாவுற எம்பிக் குதித்தவர்
நாவினில் வேலது முந்திக் குறிப்பிட
வேலவர் மேலவர் சந்தத் திருப்புகழ் -தனையோத
சீரலை வாய்தனில் வஞ்சிக் குறத்தியும்
வானவர் ஆனையும் கொஞ்சத் தவித்திடும்
மாமயில் ஏறிடும் சங்கத் தமிழ்க்கிறை -முறைமாம
கானகம் போவெனும் தந்தைக் குறிப்பது
ஆரண மாயடி உந்தப் புறப்படு
தாசர தீரகு வம்சப் பிறப்பிறை -அவதாரா
நூறது வேரற ,அஞ்சுக் களித்திட
பாரத வாகனம் தன்னைச் செலுத்திய
கோகுல பாலமு குந்தக் கிருட்டிண -நவநீதா
வானெழு தூண்என நின்றப் பலித்தலை
மூணென வாமனம் பொங்கிக் களித்திட
மோகன ரூபசு கந்தச் சிரிப்புடன் -வனமாலி
ஆணென ஆயினும் பம்பைப் புழைத்துறை
வாவரின் தோழனை உந்திக் கருப்பொருள்
ஆகம ஹேசனின் விந்தைப் புவிக்களி -பெருமாளே”….

—————————————————————————————

படத்திற்கு நன்றி:

http://www.appusami.com/Default.asp?ColsName=2&ColsValue=5561&hidtxtvid=163&catid=31

 

2 thoughts on “திருமால் திருப்புகழ் (6)

  1. அன்புள்ள ஆசிரியரே, திருமாலையும் அவரது மருமானையும்(பகவான் ரமணர் முருகர் அவதாரம்….தந்தையைத் தேடி திருவருணை வந்த தனயர்) படமாகப் போட்டமைக்கு நன்றி….கிரேசி மோகன்….

  2. அன்பின் திரு மோகன் சார்,

    கண்ணீர் மல்க வாசிக்கச் செய்த அற்புதமான பாடல் பகிர்விற்கு மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க