திருமால் திருப்புகழ்

திருமால் திருப்புகழ் (17)

கிரேசி மோகன்

DSC00151
தனன தானதத்த தனனதானதத்தvishnu_seated_on_a_lotus_guler_school_hb55
தனன தானதத்த -தனதான

சிறிய நானகற்றி பெரியஞானமுற்று
அருணை வாசியர்க்கு-மகனான
ரமண வாயுரைத்த ரமிய மானநிட்டை
ருசியை நானும்பெற்று-நலம்காண

சிறகை வான்விரித்து வினதை சேய்பறக்க
முதலை வாயிருக்கும்-களிறோனின்,
உயிரை வாழவைக்க சுழலும் ஆழிசக்ரம்
எறிய வேகமுற்று-விரைவோனே

குறைய பூகனத்தை உருளும் தேர்நடத்தி,
பெரிய பாரதத்தின்-களமேகி
விஜய னாரவத்தை விலக சோர்வகற்றும்,
புனித கீதைசெப்பும்-இடையோனே

கரிய வானையொத்த நெடிய மேனிநித்ரை
சரிய ஆழிசொக்கும் -சுகவாசி
பெரிய பாளயத்தி பெரிய சோதரத்வ,
அருள வாமனத்துள்-பெருமாளே

—————————————————————————–

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க