Author: கிரேசி மோகன்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆயிரம் கைகள் அகட்டி அணைக்கின்றாள்,
மாயிருள் கண்ணனை, மாற்றாந்தாய் -ஆயினும்
காகம்தன் குஞ்சுபொன் குஞ்சென்ற ஆய்ச்சியால்
தேகம்அக் ரூரர் தொலைப்பு(தேகான்ம பாவம் தொலைப்பு)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“கண்ணன் சுமப்பது கோவர்த் தனமல்ல-
தன்னைத்தான் ஏந்தலே, தாத்பர்யம்: -மண்ணில் –
இருப்பது யாவுமே இங்கே அவர்தான் –
மறுப்போர்க்கும் உண்டுமறு மை”….கிரேசி மோகன் ….!மறுமை -மோட்சம்….!
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பானை பிடித்தவள் பாக்கிய சாலியாய்
’’நானை’’ உணர்த்திட, நிர்விகல்ப -ஞானத்தை
மந்திக்காய் காட்டியவர், மாயத்தால் கட்டினார்:
சிந்தித்த தாய்க்கு ஜுரம் (யோக மாயா ஜுரம்)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”நான்முகன் எங்கென்றாள்’’ ,நாபியிடம் நந்தகோபி(நந்தகோபன் பத்தினி),
வான்முக விஷ்ணு வயிற்றுக்கு -ஊண்மிகக்(உணவு மிக)
கேட்டான், உரலிழுத்தக் கண்ணன் களைப்புற்று,
ஊட்டும் வரையில் உறவு’’….கிரேசி மோகன்….! -
‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….! ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….
‘’பார்க்க யாரும் இல்லாத போது ஆகாஸம் நீலமா’’….!
ஆதிசங்கரரின் அத்வைத கேள்வி….!‘’காண எவரும் கிடையாத போதுவான்,
பூணுமோ நீலத்துப் பட்டாவை:! -ஆனதால்,
பார்க்கும்நாம் உள்ளதால்,பாரும்பூ தங்களும்,
மேற்கும் கிழக்கும் மனசு!’’….கிரேசி மோகன்…. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
” மந்தி நெகிழ்ந்து மாதவர் கால்பிடிக்க –
சந்திர வம்சத்து சூரியன்(Ramar) , -சந்திர-
வெண்மையான வெண்ணையை வழங்கிடும் –
தண்மையான தாமோ தரர்”….கிரேசி மோகன் ….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’மாதவனின் காதினை மாதவள்(மாது அவள்) கிள்ளிடும்
போதினில் வானர(வான் ப்ளஸ் அரன் -அனுமார் ருத்திராம்ஸம்) போஜனம்: –தாதை(அப்பன்)
விருந்துண்ணும் முன்பு, குரங்கெண்ணம்(நன்றிக் கடன்) கொள்ள,
கருந்தா மரைக்கையில் கட்டு’’….!
(அல்லது)
திருந்தாத கள்ளனென்றாள் தாய்(யசோதா பாவம் கண்ணன்)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
யசோதை உவாச….!
—————————————————குறையெனக்குன் காட்சி நிறையெனக்குன் நாமம்
சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி -அரியுனக்கு
இன்னும் தயக்கமேன் என்னைப் பிடித்திட
கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….மீண்டும் உரலிழுத்து மாமருதம் சாய்த்தரவத்
தாண்டவம் ஆடித் தயிருண்டு -வேண்டிய
ராதையை காதலித்து போதனையாய் கீதையை
யாதவா வந்திங்(கு) எழுது….!
——————————————————————————————————
——————————————————————————————————
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
ஆயாசம் ஆனதா லா….
பழிவாய் மணக்க பகலும் இரவும்
மொழிவாய் முகுந்தா முராரி -விழுவாய்
வணங்க வரதன் வளரடி தன்னில்
இணங்கும் இகபரம் இங்கு….
மூப்பும் பிணியும் முகமன் உரைத்திடும்
தோற்பும் பகையும் திரண்டெழும் -போப்போய்
மருதம் முறித்து மதயானை கொன்ற
வரதனை நெஞ்சே வணங்கு….திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….
சகஸ்ரமவன் நாமம் சகலமவன் ரூபம்
ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர் -அகஸ்மாத்தாய்
வானம் வசப்பட நானவன் தானென்ற
ஞானத்தில் நிற்பார் நிலைத்து….பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கொஞ்சல்போல் கொஞ்சி கயிறுடன் காத்திருக்க,
மிஞ்சுகிறான் ஆய்ச்சியவள் மைந்தன்: -அஞ்சியவன்
வாய்க்குளே பார்த்திட வையம் தெரிகிறது:
தாய்க்குள்ளே தாமோ தரன்’’….கிரேசி மோகன்….! -
‘அண்ணாமலை’’….!
’’கட்டாந் தரைதனில் கையே தலையணையாய்
கொட்டாவி விட்டுறங்கு கோமானாய் -கட்டாயம்
தன்னாலே வந்துனக்கு தாலாட்டு பாடிடுவார்
பெண்ணாளும் அண்ணா மலை’’….’’கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய்
உண்டதோர் பிக்ஷையில் உன்மத்தம் -கொண்டுநீர்
ஏகான்மம் ஏற்றிட ஏற்றிடுவான் உச்சிக்கு
மீகாமன் அண்ணா மலை’’….’’கற்ற கரத்தளவே பெற்ற பகுத்தறிவை
முற்றும் துறக்க முனைந்திடுவாய் -சற்றும்
நினையாத வேளை நினக்கருள் செய்வான்
மனையாளும் அண்ணா மலை’’….’தொட்ட குறைதோஷம், விட்ட குறைவேஷம்
எட்டநின்று சாட்ஷியாய் ஏற்றிட -அட்டவணை
போட்டுயர்ந்த ஞானம் படிப்படியாய் நல்கும்
மாட்டமர்ந்த அண்ணா மலை’’…’’அச்சம் பொறாமை அசூயை அவமானம்
மிச்சமின்றி போட்டு மிதித்திடு -உச்சம்
உனக்களிக்கும், ஒன்றிலும் ஒட்டாத இன்ப
மனக்களிப்பே அண்ணா மலை’’…கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”வாயூட்டும் தாய்க்கு விஸ்வரூ பம்காட்ட
சேயூட்டம்(ஊட்டச்சத்து) கொண்டதோ! ,சவ்யஸாஸி(அருச்சுனன்) -நோயோட்ட(போரிட பயநோய்)
கீதா வடித்தலா !,கேசவ் வரைதலா!,
மாதா யசோதை மயர்வு!(மாய மயக்கம்)’’….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’ஏரார்ந்த கண்ணி யசோதையார் கட்டினாலும்,
மீறாத மாதவர், மத்தூன்றி, -தேரூர்ந்த
கீதை தெறிக்கக் கடைகின்றார்,உரலிலிட்ட,
பேதையை மாயத்தில் போட்டு’’….கிரேசி மோகன்….! -
’’நிர்வாண ஷட்கம்’’
———————————
‘’வேறு’’
——————‘’தவம்நான், தளர்ச்சிநான்,
அவம்நான், அலட்டல்நான்
சவம்நான், சைதன்ய ரூப
சிவம்நான் சிவானந்தமயம்நான்’’….பாயும் பூனைநான்
பதுங்கும் புலியும்நான்
தாயும் தந்தைமகனும்நான்
ஓய்வும்நான், உழைப்பும்நான்
ஓங்கார வடிவும்நான்
வாயுவெளி நீர்மண் காற்று
வடிவான சிவானந்தமயம்நான்அஞ்சாத சிங்கம்நான் அஞ்சுமணிற்பிள்ளைநான்
பிஞ்சுநான் பூவாகிக் காய்க்கும் புடலைநான்
பஞ்சாயுதன்நான் ,பஞ்சாங்க பிரம்மன்நான்
பஞ்சபூதத்தாலான பரமானந்தசிவம்நான்….கிரேசி மோகன்….
























