அன்பு நண்பர்களே,
வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான். ‘கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது சொந்த ஊர் சென்னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்தைகளுடன் குவைத்தில் வசித்து வருகிறார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!
வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)
அன்புடன்
பவள சங்கரி


Leave a Reply