இலக்கியம்கவிதைகள்

வாழ்வே இதுதான்

 

ஆர்.எஸ்.மணி

 

vaazhvE idhudhaan- new

(தேனிசையைக் கேட்டு மகிழ!)

 

வாழ்வே இதுதான்: சுழலும்  உலகம்.

இரவும், பகலும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

காலை ஒளியும், மாலை இருளும்,

உறவும், முறிவும், வருமே மாறியே   (வாழ்வே இதுதான்)

 

சுற்றம் என்ன, சூழல் என்ன,

நிலையானதாகுமோ?

சொந்தம் என்ன, பந்தம் என்ன

செல்லாமலே நில்லுமோ?

ஒருநாள் இன்பம், ஒருநாள் துன்பம்,

மாறாதே இக்கோலம்.      (வாழ்வே இதுதான்)

 

கன்னி என்ன, காதல் என்ன,

வண்ணம் எல்லாம் மாறுமே!

பாசம் என்ன, நேசம் என்ன,

வந்து பின்னே போகுமே!

ஒருநாள் இங்கே, ஒருநாள் அங்கே

எங்கே எந்தன் வீடும்!    (வாழ்வே இதுதான்)

 

 

—ஆர்.எஸ்.மணி

(கேம்ரிஜ், ஆன்டேரியோ, கனடா)

கிஷோர் குமாரின் “ஏ ஜீவன் ஹை” என்னும் ஹிந்தி பாட்டின் மெட்டில் எழுதி,

என் குரலில் பதிவு செய்யப்  பட்டது..

Print Friendly, PDF & Email
Share

Comments (7)

 1. Avatar

  நீர் குமிழி போன்றது இந்த வாழ்க்கை.. 
  அதனை பெரிதாக மெச்சி… என்று 
  கும்பகர்ணன் விபீஷணனிடம் சொல்லும் 
  கம்ப இராமாயண வரிகள் தாம் நினைவிற்கு வந்தது..

  கவிதை நன்று!
  கருத்தும் நன்று!
  பகிர்விற்கு நன்றி!

  ஒலி வடிவத்தை செவிகளில் வார்க்க வழியில்லாது போயிற்று.. 🙂

 2. Avatar

  Thanks for your comments, Alasiam!
  The audio has been re-uploaded.  Now you will be able to listen to it.
  —R.S.Mani

 3. Avatar

  அருமையாக எழுதி, மிக அருமையாகப் பாடியும் உள்ளீர்கள்.
  இனிமையான அமைதி நிறைந்த குரல் உங்களுக்கு, வாழ்த்துக்கள் ஆர்.எஸ்.மணி.

  அன்புடன்
  ….. தேமொழி

 4. Avatar

  தேமொழி!
  என் பாடலைக் கேட்டு  ரசித்ததை அறிந்து மகிழ்ச்சி!  
  —ஆர்.எஸ்.மணி

 5. Avatar

  இசையுடன் மிக அருமையாக ஒன்றியுள்ளன கவிதை வரிகள். மனதை வருடும் ஆகான மெல்லிசை. வாழ்த்துக்கள்.

 6. Avatar

  அழகான குரலும் அருமையான வரிகளும் இணைந்த அற்புதமான சங்கமம். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!!!

 7. Avatar

  நன்றி, சச்சிதானந்தம், பார்வதி!
  ரசிப்பவர்கள் இல்லாவிட்டால் கலைஞனுக்கு என்ன வேலை!
  —ஆர்.எஸ்.மணி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க