ஆசிரியர் குழுவில் ஒரு புதிய முகம் அறிமுகம்!

அன்பு நண்பர்களே,

DSCF4667

வணக்கம். நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இன்று பர்வத வர்தினி நம்மோடு இணைகிறார். இவர் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.கால இயந்திரம் ’, என்ற ஒரு தொடரின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்தவர். பல அரிய படைப்புகளை நம் வல்லமைக்கு வழங்கியுள்ள இவர், ஒரு பட்டயக் கணக்கர் (Chartered Accountant). இவரது ​சொந்த ஊர் ​சென்​னை. படித்து முடித்ததும் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக கணவர் மற்றும் குழந்​தைகளுடன் குவைத்தில் வசித்து வருகி​றார். சில காலம் குவைத்தில் பணிபுரிந்தாலும், தற்சமயம் முழு ​நேர இல்லத்தரசியாக இருக்கிறார். நாவல்கள், குறிப்பாக சரித்திர நாவல்கள் படிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார் இவர். பர்வத வர்தினியை வாழ்த்தி வரவேற்போம். வருக.. வருக வர்தினி!

 வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு (2013)

அன்புடன்
பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “ஆசிரியர் குழுவில் ஒரு புதிய முகம் அறிமுகம்!

 1. பர்வதவர்த்தினிக்கு நல்வரவும் நல்வாழ்த்துகளும்; தங்கள் வருகையால், வல்லமை மேலும் பொலிவு பெறுகிறது. 

 2. வல்லமைக்கு மேலும் வல்லமை சேர்க்கும் விதமாக, ஆசிரியர் குழுவில் இணைந்த வர்தினியின் வரவு நல்வரவாகுக.                                                                                                                                     
  வாருங்கள் வல்லமையின் வளர்ச்சிக்கு, இணைந்து செயலாற்றுவோம்.                                  
  வாழ்த்துக்கள் வர்தினி அவர்களே!..                                                                                                   
  அன்புடன் பெருவை பார்த்தசாரதி

 3. ஆசிரியர் பர்வதவர்தினி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.

 4. வருக, வருக பர்வத வர்தினி.  
  உங்களின் ‘கால இயந்திரம்’ இன்னமும் என் நினைவில் சுழன்று கொண்டிருக்கிறது.  

  அன்புடன்
  ….. தேமொழி

 5. ஆசிரியர் பர்வத வர்தினி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறேன்.

 6. ஆசிரியர் குழுவில் புதிதாய் இணைந்திருக்கும் பர்வதவர்த்தினி அவர்களுக்கு நல்வரவும் வாழ்த்துக்களும்!!

 7. வாழ்த்தி வர​வேற்ற அ​னைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *