அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம் . நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, வல்லமை மின்னிதழும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கமும் இணைந்து வழங்கும் கர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டியின் நடுவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தீர்ப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
தமிழருவி மணியன்
வணக்கம். வளர்க நலம்.
பெருந்தலைவர் குறித்த கட்டுரைகளின் முடிவுகளை அனுப்பி வைத்துள்ளேன். கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்…
முதல் பரிசு :
1. ச. சசிகுமார் – ”பார்க்கட்டும்… ஆகலாம் …” – கர்மவீரர் காமராசர்!
2. ஸ்வேதா மீரா கோபால் – கர்மவீரர் காமராசர்!
3. ஞா. கலையரசி – கர்ம வீரர் காமராசர்!
இரண்டாம் பரிசு :
1. இன்னம்பூரான் – “பாரத ரத்னா கே.காமராஜ்” – கர்மவீரர் காமராசர்!
2. வில்லவன் கோதை – “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!
3. கீதா மதிவாணன்- “பெருந்தலைவர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!
மூன்றாம் பரிசு :
1. தஞ்சை வெ.கோபாலன் – கர்மவீரர் காமராஜர்
2. ஜெயஸ்ரீ ஷங்கர் – “வான்புகழ் கொண்ட பாரத ரத்தினம்” – கர்மவீரர் காமராசர்!
3. சரஸ்வதி ராசேந்திரன் – ”கர்மவீரர் காமராஜர்” – கர்மவீரர் காமராசர்!
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை நெஞ்சில் நிறுத்தி கட்டுரைப் போட்டிகள் நடத்திச் சிறப்பிக்கும் “வல்லமை” இணைய இதழுக்கும் அதற்குத் துணை நின்ற கவிஞர் திரு. காவிரிமைந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
அன்புடன்,
தமிழருவி மணியன்
போட்டியை சிறப்பாக நடத்திக்கொடுத்திருக்கும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், கவிஞர் திரு காவிரிமைந்தன் அவர்களுக்கும் வல்லமையின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து இணைந்திருப்போம். பரிசு பெற்றவர்கள் தங்களுடைய உள்நாட்டு முகவரியை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்து பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
அன்புடன்
பவள சங்கரி


Leave a Reply