Year: 2017

  • 65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்

    aj
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
    ++++++++++++++++++
     
     

    வக்கிரக் கோள் வழி தவறி
    வையத்தில் மோதிச்
    சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறி
    பிரளயம் நேரும், தட்ப வெப்பம்  மாறும்  !
    பரிதிக்கு அப்பால் நகன்று
    பூமி சூடு தணியும் !
    டைனசார்ஸ் மரித்தன
    நீண்ட இருட்டடிப்புக் குளிர்ச்சியில் !
    புதுவித உயிரினம் தோன்றும் 
    முதல் மானிடம் உதிக்கும்
    டைனசார்ஸ் மீண்டும் தோன்றவில்லை !
    பிழைத்தவை பறவை இனம் !
    பூமியின் ஆட்டத்தில்
    பொங்கி எழுந்தன எரிமலைகள் !
    புவியும் தீக்குளிப்பில்
    புத்துயிர் பெற்று மீண்டது !
    புதிய பயிரினங்கள் தோன்றின !
    “புலர்ச்சி” விண்ணுளவி நாசா ஏவியது
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !
    இரு விண்வெளி விமானிகள்
    2025 ஆண்டுக்குள்
    வக்கிரக் கோள் ஒன்றில்
    வைப்பார்  தடம் !
    வையத்தைத் தாக்க வரும்
    வக்கிரக் கோளைத்
    திக்கு மாற்றித்
    திசை திருப்ப முயல்கிறார்  !

    +++++++++++++++++

     
     
    மெக்சிகோ நாட்டின் சிக்குலுப் பகுதியை ஆராய்ந்த விஞ்ஞானிகள்
    2017 மே மாத 24 ஆம் தேதியில் [?]  வெளியான விஞ்ஞானச் செய்தி இது. ஒன்பது மைல் [15 கி.மீ.] அகண்ட முரண்கோள் [Asteroid] ஒன்று தாக்கி டைனோசார்ஸ் போன்ற பூத விலங்குகளைக் கொன்ற  சிக்குலுப் பகுதி மெக்சிகோவின் யுகட்டான் வளைகுடா [Yucattan Peninsula] கடற்கரை முனையில் பல்வேறு  ஆழ்குழிகள் தோண்டி, பாறைகள் மாதிரி எடுத்துச் சோதித்தனர்.  அந்தப் புதைச் சின்னங்கள் [Fossils] 10 செ.மீ. [4 அங்குலம்] தடிப்பு அடுக்குகளில்தான் பதிவாகின்றன.  விலங்கினம் தாக்கப்பட்ட அதிர்வில் உடனே செத்துப் புதைபடும் என்று  கூறுகிறார் விஞ்ஞானிகள். அந்த பூதளவியல் கால நிமித்தமே குறிப்பிடத் தக்க, உடன் பதிவானத் தருணம்.  அப்பகுதிக் குள்ள மட்டக் கடல் பரப்பிலிருந்து ஏராளமான கந்தகம் [Sulphur from the mineral Gypsum]  வெளியாகிச் சூழ்வெளியில் பரவி வெடிப்புக்குப் பின் உடனே  “பூகோளக் குளிர்ச்சி” [Global Winter] உண்டாக்கி விட்டது.  வெடிப்பின் விளைவுகள் முரண்கோள் வடிவு, பாய்ச்சல் அகலம், ஆழம், விலங்கின மரிப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவை அல்ல. அனைத்தும் முரண்கோள் விழுந்த இடத்தைப் பொறுத்தது  என்று சொல்கிறார் தலைமை ஆய்வாளர் : அலிஸ் ராபர்ட்ஸ் [Alice Roberts].
    Image result for Permian Period Mass Extinction Timeline
    முரண்கோள் கடல் குள்ள மட்டத் தணிவில் தாக்காமல், கடல்மீது விழுந்திருந்தால் விளைவே வேறாக இருந்திருக்கும்.  கடல் வெள்ளம் அதிர்ச்சியை ஏற்று, சிறிதளவு பாறைகளே உடைந்து, சிறிதளவு கொடிய ஜிப்சம் உப்பு [Deadly Gypsum] ஆவியாகி இருக்கும்.  புகை மண்டலம் திணிவு குன்றி] பரவிச் இருண்ட கண்டம் ஆவதைத் தவிர்த்து, சூரிய வெளிச்சம் பூதளத்தைத் தொட்டிருக்கும்.  பூகோளக் குளிர்ச்சி பொங்கிப் பெருந்தீங்கை விளைவித்திருக்காது.  குளிர்ந்து போன இருண்ட கண்டத்தில் கடல் உணவுகள், நிலப் பயிர்கள் தீய்ந்து போகும். பூத விலங்கினங்கள் பிழைத்து வாழ முடியாமல் மரிக்கும் என்று சொல்கிறார் அலிஸ் ராபர்ட்ஸ்.
    சிக்குலுப் பகுதியில் 1300 மீடர் [4300 அடி] ஆழம்வரைத் தோண்டிப் பாறை மாதிரிகள் எடுத்தவர் பேராசிரியர் ஜோஸஃப் மார்கன் & பேராசிரியர் ஷான் குலிக்.  அவர் இருவரும் முரண்கோள் தாக்கிய பின் நேர்ந்த, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளையும், சூழ்வெளி மாறுதல்களையும் எழுதியுள்ளார். படத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும் வெளிவளையக் குழி [Outer Rim Crater] யுகட்டான் வளைகுடாப் பீடத்திலும், உள்வட்டக் குழி [Inner Peak Ring Crater] கரை மீதிருந்து தொடுவதுபோல் உள்ளது.  15 கி.மீ. [9 மைல்] அகலமுள்ள ஒரு முரண்கோள்  பூதளத்தில் விழுந்து,  30 கி.மீ. [18 மைல்]  ஆழ,  100 கி.மீ. [60 மைல்] அகண்ட குழி உண்டாக்கி, அதுவும் சீர்குலைந்து 200 கி.மீ. [120 மைல்] அகல, ஒரு சில கி.மீ. ஆழக்குழியாய் ஆக்கிவிட்டது.
    Image result for chicxulub crater Asteroid impact
    இப்போது அது மீண்டும் சீர்குலைந்து குழி புதைக்கப் பட்டு 600 மீடர் [2000 அடி] புழுதிப் படிவாய், சுண்ணாம்புக் கல்லாய் [லைம்ஸ்டோன் Limestone]  மாறிவிட்டது. அப்பகுதியில் 25,000 புதைச் சின்னத் துணுக்குகள் [Fossil Fragments]  இதுவரைச் சேமிக்கப்பட்டுள்ளன.
    +++++++++++++++++++++

    முரண்கோள் ஒன்று தாக்கிய பிறகு, மெக்சிகோ சிக்குலுப் [Chicxulub] குழி உண்டானது, புவி வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப் படுகிறது. கிரிடேசியஸ் யுகத்தின் [Cretaceous Era] முடிவு காலத்தில், தர்க்கத்துக்கு உள்ளான டைனோசார்ஸ் மரிப்புக்கு உறுதியான காரணத்தைப் புரிந்து கொள்ளப் புதிய ஆய்வுக் காட்சியை இப்போது நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

    ஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர், பாட்ஸ்டம் காலநிலைத் தாக்கம் ஆய்வகம்]

    முரண்கோள் [Asteroids] தாக்கி மூன்று ஆண்டுகளாய், சூரிய வெளிச்சம் தடைப்பட்டு நீண்ட இருட்டடிப்பு நேர்ந்து மெய்யாகப் பூமி குளிர்ந்து, கடுமையாய்க் குளிர்ந்து போனது. பூகோளத்தின் ஆண்டுச் சராசரித் தளவாயு உஷ்ணம் 26 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தணிந்தது.  வேனிற் தளங்களில் சராசரி 27 டிகிரி C இருந்து 5 டிகிரியாகக் குறைந்தது.  இப்பெரும் குளிர்ச்சி சுமார் 30 ஆண்டுகள் நீடித்தன.  டைனோசார்ஸ் போன்ற வெப்பச் சூழ்வெளி விலங்குகள் செத்துப் புதைந்தன.

    ஜூலியா புரூக்கர் [தலைமை ஆய்வாளர்

    Five Global Extinctions 

    [Click to Enlarge]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0EyDd7rZWnE

    http://science.discovery.com/tv-shows/greatest-discoveries/videos/100-greatest-discoveries-chicxulub-crater.htm

    http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html

    http://www.space.com/19637-asteroid-s-alarmingly-close-flight-path-depicted-in-animation.html

    +++++++++++++++++

    Image result for dinosars extinction

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெக்சிகோவில் நேர்ந்த பூத முரண்கோள் தாக்குதல்

    65 ஆண்டுக்கு முன்பு திடீரென பூத வடிவான டைனோசார்ஸ் யாவும் மரித்து, சிறிய வடிவான பால்குடி விலங்குகள் தோன்றி, முடிவாக மனித இனம் பெருகி வளர்ச்சி அடைய வழி வகுத்தது.  இப்போது அவற்றை மூலமாய் எடுத்துக் கொண்டு காலநிலை விஞ்ஞானிகள், புதிய கணினிப் போலி இயக்க மாடல்களைத் [Computer Simulation Models] தயாரித்து, எப்படி ஓர் முரண்கோள் தாக்கிச் சூழ்வெளி மண்டலத்தில் ஸல்ஃபியூரிக் அமில நுண்ணிய துளிகள் உண்டாகிப் பல்லாண்டுகள் சூரிய ஒளி தடைப்பட்டு, பூமியில் உயிரினம்  பாதிக்கப்பட்டன என்று ஆய்வு செய்கிறார்.

    முரண்கோள் மோதலில் பயிரினம் அழிந்தன.  உணவு வளங்கள் சீர் கெட்டன.  முதலில் வெளியான அறிவிப்புகள் முரண்கோள் மோதலில் சிறிது காலம் வெடித்துப் பரவிய தூசி, துணுக்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டன.  இப்போது [ஜனவரி 2017] புதிய கணினிப் போலி இயக்க மாடல்களில் ஆயும் போது, வெடிப்புத் துளிகள் [Droplets] மூன்றாண்டு நீண்ட காலக் குளிர்ச்சியை விளைவித்தன என்று தெரிகிறது.  அதுவே உஷ்ண நிலைப் பூத விலங்குகளான டைனோசார்ஸ் மரிப்புக்குக் காரணம் என்பது புரிகிறது.  அடுத்த கொல்லி என்ன வென்றால் கடல் நீர் வெள்ளம் கொந்தளிப்புடன் கலந்து, மேற்தளக் குளிர்ச்சி அடைந்து, நச்சுப் பாசானம் சேர்ந்து, கடல்வாழ் உயிரினச் சீர்மைகள்  [Marine Ecosystems] பாதிக்கப் பட்டன என்று அறிகிறோம்.

    Image result for fossil dinosaurs

    சூழ்வெளியில் பரவிய ஸல்ஃபேட் வாயுத்தூள்கள் [Sulphate Aerosols] நீண்ட காலப் பெருங்குளிர்ச்சி விளைந்திடச் செய்தன.  இவையே 3 ஆண்டுகள் சூரிய வெளிச்சத்தைத் தடை செய்து, பூமியை நீண்ட இருட்டடிப்பில் தள்ளி விட்டன.  இந்தச் சூழ்வெளிக் கொந்தளிப்பி லிருந்து வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆயின என்று கூட்டு விஞ்ஞானி ஜார்ஜ் ஃபியூல்னர் கூறினார். அத்துடன் கடல் நீர் வெள்ளச் சுழற்சிகள் பாதிக்கப்பட்டு,  மேற்தள நீர் குளிர்ந்து, கனமாகிக் கீழே செல்ல, சூடான நீர் வெள்ளம் மீனின உணவு வளத்தோடு [Food Nutrients] மேல் வந்தது.  அதுவே திரண்டு நச்சுப் பாசானம் [Toxic Algae] ஆகிப், பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் [Like Ammonites] பாதிக்கப்பட்டன.  பூமியில் வலுத்த பயங்கர  டைனோசார்ஸ் மரித்து, பால்குடி விலங்குகள் [Mammals] பிறக்க வழி பிறந்தது.  இறுதியாக ஆற்றல் மிக்க ஆறறிவு மனித இனம் பெருக, முரண்கோள் மோதல் விளைவுகள் பாதை இட்டன.

    Asteroid Impact-1

     

    மெக்ஸிகோ யூகடான் சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico]  பகுதியைத் தாக்கியதாகக் கருதப்படும், ஆறு மைல் விட்டமுள்ள வக்கிரக் கோள்  பெற்ற பேராற்றல் 100 மில்லியன் மெகாடன் டியென்டி [megatons TNT]வெடிப்பு சக்தி கொண்டது என்று கணிக்கப் படுகிறது.   அந்த வெடிப்பு வெளியேற்றிய அண்டத் துணுக்குகள் கக்கிய “வெப்ப வீச்சலை [Heat Pulse] பூகோளம் முழுவதும் தீப்பற்றி,  கடல்நீர், குகைகள் பாதுகாக்காத, உயிரினப் பயிரின வளர்ச்சிகள் அனைத்தையும் எரித்துப் பொசுக்கி விட்டது.   அவற்றில் எழுந்த “இயக்க சக்தி”  [Kinetic Energy] வெப்ப சக்தியாக மாறி, நீல வானம், செவ்வானமாய்ப் பல நாட்கள் நீடித்திருக்க வேண்டும் !

    டக்ளஸ் ராபர்ட்சன் [தலைமை ஆய்வாளர், பூதளவியல் விஞ்ஞானத் துறையகம்]

    Asteroid impact -3

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூகோளத்தில் நேர்ந்த கோரப் பிரளயம்

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு 6 மைல் விட்டமுள்ள வக்கிரக்கோள் ஒன்று வழிதவறி பூமியின் கவர்ச்சி ஈர்ப்பில் இழுக்கப் பட்டு, பெரு வேகத்தில் மோதி  யுகப் பிரளயம் நேர்ந்திருக்க வேண்டும் என்பதைச் சமீபத்தில் பூதளவியல் விஞ்ஞானிகள் அழுத்தமாய் நிரூபித்துள்ளார்கள்.   அந்தப் பிரபஞ்ச மோதல் [Cosmic Impact] பூகோளத்தில் ஒரு பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது மெய்யென்று பௌதிக விஞ்ஞானி லூயிஸ் அல்வாரஸ், அவரது மகன் பூதளவியல் விஞ்ஞானி வால்டர் அல்வாரஸ் இருவரும் முதன்முதல் அறிவித்தார்கள்.  பின்னால் வந்த பூதளவியல் விஞ்ஞானிகள் மோதல் நேர்ந்த இடம், வட அமெரிக்கா மெக்ஸிகோவில் உள்ள யூகடான் பகுதி நகர்ப்புறம், சிக்செலூப் [Chicxulub, Yucatan, Mexico]. என்று கண்டுபிடித்துள்ளார்கள்.   விழுந்த முரண்கோளின் விட்டம் 6 மைல் [10 கி.மீ] என்று ஒருசிலர் மதிப்பிடுகிறார்.   முரண்கோள் 12 மைல் விட்டம் இருக்கலாம் என்று மற்றும் சிலர் கருதுகிறார்.   மோதலின் தாக்க சக்தி சுமார் :  100 டிரில்லியன் டன் டியென்டி [trillion TNT Power] என்று கணிக்கப் படுகிறது.  அதாவது அணுகுண்டு ஆற்றல் மதிப்பீட்டில் ஒரு பில்லியன் மடங்குக்கு மேற்பட்ட ஹிரோஷிமா-நாகசாக்கி அணுகுண்டு களுக்கு நிகரானது !   அந்தப் பேரடித் தாக்கம் பூமியில் பறித்த குழியின் விட்டம் 110 மைல் [180 கி.மீ]

    Chicxulub Seismic Expt

    65 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூமி மிகவும் சூடாக இருந்து குறிப்பிட்ட டைனசார்ஸ் மிருகங்கள் மட்டும் நடமாடி வந்தன.   அப்போது அந்தக் கடும் வெப்ப யுகத்தில் மற்ற உயிரினங்கள், மனித இனங்கள் எவையும் தோன்ற வில்லை.  முரண்கொள் மோதலும், பூத மிருகங்கள் மரிப்பும் ஒரே சமயத்தில் நேர்ந்திருக்கலாம் என்று யூகிப்போரும் உள்ளார்.   மற்றும் சிலர் சிக்செலூப் மோதல் நேர்ந்ததற்கு 300,000 ஆண்டுகள் முந்தியோ அல்லது  180,000 ஆண்டுகள் பிந்தியோ  டைனசார்ஸ் இனப் பேரழிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று கணிக்கிறார்.   ஆராய்ச்சியாளர்  சிலர் தர்க்கத்துக் குரிய மோதல் தளம் : இந்தியாவின்  குஜராத் பகுதியில் உள்ள “சிவா பெருங்குழி”  [Shiva Crater] என்று கூறுகிறார்.   2013 பிப்ரவரி புதிய கதிர்வீச்சளவி கணக்குப்படி [Radiometric Dating]  சிக்செலூப் மோதல் நேர்ந்து,  துல்லியமாக 11,000 ஆண்டுகட்கு மேற்படாமல் டைனசார்ஸ் யுகம் மாறிப் புதைந்து போயிருக்க வேண்டும்  என்று பூதளவியல் விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

    A miracle event

    [Asteroid 2012 DA14 is about half the width of a football field (150 feet, or 45 meters), and will fly within 17,200 miles (27,700 kilometers) of our planet on Friday, Feb. 15, 2013, zooming closer to the planet than the ring of satellites in geosynchronous orbit.]

    Path of Asteroid

    சிக்செலூப்பில் தூண்டப் பட்ட  பிரளயத்தில் டைனசார்ஸ் இனங்கள் மட்டும் அழிந்து போகவில்லை. 6 மைல் விட்டமுள்ள பூத முரண்கோள் பூமியில் வேகமாய் மோதி  பல்கோடி அணுகுண்டு வெடிப்புச் சக்தி ஆற்றலில் பூமியைப் பரிதிக்கு அப்பால் தள்ளி இடம்மாற்றிப் பிரளயத்தில் தட்ப வெப்ப நிலை கொந்தளித்து, ஏறி இறங்கி, முடிவில் உஷ்ணம் தணிந்துள்ளது.    அந்தக் கொந்தளிப்பில் தப்பியவை பெரும்பாலும் பறவைகளும், கடல்நீரில் வாழும் உயிரினங்களும்  என்பது தெரிய வருகிறது. பிரளய முடிவில் பூமி தீக்குளித்து புதிய தட்ப, வெப்பச் சூழ்நிலையில்  [New Ecosytem]  புது யுகம் தோன்றியது.  பிறகுதான் மனித இனங்கள், புதிய உயிரினங்கள் உதித்தன, பயிரினங்கள் முளைத்தன என்று நாம் கருதலாம்.

     Impact Evidence

    தற்போது நம் கைவசம் இருந்து விருத்தியாகும் விண்வெளிப் பொறியியல் நுணுக்கத்தில், ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து முரண் கோள் ஒன்றில் மனிதர் இறங்கும் ஒரு குறிப்பணி நிச்சயம் சாதிக்கக் கூடியது.

    மேஜர் டிமதி பீக் (பிரிட்டிஷ் விண்வெளி விமானி)  (Major Tim Peake,  ESA, European Space Agency)

    முரண் கோள்கள் எப்போதும் நமது பூமிக்கருகில் தாக்க வருகின்றன.   ஆனால் நாம் அவற்றைப் பற்றி அபூர்வமாய்த் தெரிந்து கொள்கிறோம்.   சென்ற ஆண்டு முரண்கோள் ஒன்று பூமியின் புவிச்சுற்று  நிலைத்துவ வீதிக்குள்ளே (Earth’s Geostationary Orbit) சில துணைக் கோள்களுக்கும் கீழே வந்து விட்டது. போதிய எச்சரிக்கைக் காலத்துக்குள், நாமோர் சுயத்தாக்கு விண்ணுளவியை (Robotic Impact Spacecraft) அனுப்பி பூமியை நெருங்கும் முரண் கோளை மோதித் திசையைத் திருப்பி, ஏற்படப் போகும் எதிர்பாராத பிரளயத் தீங்குகளைத் தடுக்க  முடியும். முரண் கோளுக்குப் போகும் அவ்விதக் குறிப்பணி செய்ய நான் விரும்புகிறேன்.   இந்த முயற்சி சீராக முன்னேறினால் 2025 ஆண்டுக்குள்ளே என்னாலோ அல்லது வேறு ஈசா (ESA) விண்வெளி விமானி களாலோ அந்தக் குறிப்பணி நிறைவேறும்.

    மேஜர் டிமதி பீக் (ESA விண்வெளி விமானி)

    ஒளிமந்தையில் (Galaxy)  வாழும் அறிவுசார்ந்த உயிரினத்துக்கு பேரிடர் தரும் பயமுறுத்தல் முரண் கோள்கள் மோதுவதால் நேரப் போவதே !

    ஸ்டீஃபன் ஹாக்கிங்.

    “(முரண்கோள்களில் பனிநீர் உள்ளது) என்னும் கண்டுபிடிப்பால் நமது சூரிய மண்டலத்தின் முரண்கோள் வளைய (Asteroid Belt) அரங்கத்திலே பேரளவு நீர்ப்பனி இருந்திருப்ப தாக எதிர்பார்க்கப் படுகிறது. அக்கருத்து முரண் கோள்கள் பூமியைப் பன்முறைத் தாக்கிப் பேரளவு நீர் வெள்ளத்தைக் கடலில் நிரப்பியது என்னும் கோட்பாடுக்கு ஆதாரம் அளிக்கிறது.  புவியில் உயிரினம் தோன்றவும் விருத்தி அடையவும் முரண்கோள்களின் உள்ளமைப்புப் பொருட்கள் மூலச் செங்கற்களாய் இருந்துள்ளன.”

    ஹம்பர்டோ காம்பின்ஸ், மத்திய பிளாரிடா பல்கலைக் கழகம்

    “முரண்கோள்களில் காணப்படும் உலோகப் பொருட்கள் பரிதிக் கோள்கள் தோன்ற கட்டுமானப் பொருட்களாய் உதவியவை.  முரண்கோள் #2 பல்லாஸ் (Asteroid #2 Pallas), முரண்கோள் #10 ஹைஜியா (Asteroid #10) (Hygiea) ஆகிய இரண்டிலும் விஞ்ஞானிகள் நீர்ப்பனியும், கார்பன் அடிப்படை ஆர்கானிக் கூட்டுகளும் இருப்பதாக நம்புகிறார்.”

    கரோல் ரேமண்டு (Dy Principal Investigator, NASA Dawn Mission

    Arizona Crater

    பூமிக்கருகில் நேரப் போகும் ஓர் அற்புதப்  பயங்கர  விண்வெளி நிகழ்ச்சி 

    2013 பிப்ரவரி 15 இல் சிறிய வக்கிரக் கோள் [Asteroid : 2012 DA14] முதன் முறையாக பூமிக்கு அருகில் 17,000 மைல் தூரத்தில் குறுக்கிட்டுக் கடந்தது செல்லப் போவதாய் நாசா முரண்  கோள்  விஞ்ஞானிகள் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிவித்துள்ளார்கள்.   இந்த வக்கிரக் கோள் நகர்ச்சியை நாசாவின் துணைக்கோள் [WISE (Wide-field Infrared Survey Explorer) Spacecraft]  தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.   2011 ஆண்டில் நாசாவின் புவிச்சுற்றி  [NASA Orbiter] பூமிக்கு அருகே சுற்றும் 100 மீடர் (300 அடி) பரிமாணத்துக்கு  மேற்பட்ட  சுமார் 20,500 முரண் கோள்களின் போக்கைக்  கூர்ந்து  நோக்கி வருகிறது.   அவற்றில் குறிப்பாக 100 முரண் கோள்களே பூமிக்கு மிக்க அருகில் நெருங்கி வருவதாகத் தெரிகின்றன. சிறிய வக்கிரக் கோள்  [2012 DA14]  பூமிக்கும் நிலவுக்கும் இடையே 17,000 மைல் தூரத்தில் கடக்கப் போவதாக அதன் சுற்றுப் பாதை கணிக்கப் பட்டுள்ளது.  நிலவு சுமார் 239,000 மைல் தூரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.   உலக நாடுகளின் பல்வேறு தொடர்புத் துறை,  கால நிலை அறிவிப்புத் துணைக் கோள்கள் 22,200 மைல் [35,800 கி.மீ.] உயரத்தில் பூமியைச்  சுழலிணைப்புச்  சுற்று வீதியில் [Geosychronous Orbit]  வலம் வருகின்றன.  ஆனால் 17,000 மைல் உயரத்தில் குறுக்கிடப் போகும் சிறிய முரண்கோள் நிலவையோ, பூமியையோ, துணைக் கோள்களையோ  மோதப் போவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிக்கிறார்.    இது ஓர் அற்புதப் பயங்கர நிகழ்ச்சி.   இதுவரை நேராத  ஓர் ஆபத்து நிகழ்ச்சி.

    WISE Spacecraftசிறிய முரண்கோள்  [2012 DA14] பூமிக்கருகில் குறுக்கிடும் விந்தை விபரங்கள்

    முரண்கோள்  [2012 DA14] 2.7 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள போது, 2012 பிப்ரவரி 23 இல் ஸ்பெயின் தேசத்து மல்லோர்கா விண்ணோக்கி ஆய்வுக்கூட விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டது.  சிறிய முரண்கோள் 150 அடி அகலமும், 130,000 மெட்டிரிக் டன் எடையும் கொண்டது.   அது பூமிக்கு மிக நெருங்கி வரும் நாள் 2013 பிப்ரவரி 15 ஆம் தேதி.  பூமிக்கு ஒப்பாக அதன் வேகம் : வினாடிக்கு சுமார் 5 மைல் [வினாடிக்கு 8 கி.மீ.] அது கடந்து செல்லும் போது, கிழக்கு இந்து மாக்கடலில் சுமாத்ரா தீவுக்கு அப்பால் தென்படும் என்பது தெரிகிறது. அப்போது அது பூமிக்குச் சுமார் 17,200 மைல் [27,700 கி.மீ.] உயரத்தில் சுற்றிச் செல்லும். துல்லியமாகச் சொல்லப் போனால் முரண்கோள் 17,180 மைலுக்குக் [27,650 கி.மீ.] கீழே நெருங்கி வரப் போவதில்லை என்று அதன் வேகத்தை வைத்து நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளார். பூமிக்கும் நிலவுக்கும் இடையே அந்தச் சிறிய முரண் கோளின் குறுக்கீடு 33 மணி நேரங்கள்தான் நீடிக்கும் என்று அறியப் படுகிறது. பிப்ரவரி 16 ஆம் தேதி சிறிய முரண் கோள் பூமிய விட்டு அப்பால் சென்றுவிடும். அந்தக் குறுக்கீட்டின் போது, பூமியிலோ, நிலவிலோ எந்த விதக் “ஒளி மறைப்போ” அல்லது “நிழலடிப்போ” [Eclipse] இருக்காது என்று நாசா முரண்கோள் கண்காணிப்பு விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்.

    Asteriods -1பூமிக்கு அருகில் சுற்றி வரும் [Asteroid 2012 DA14]  போல் பயங்கரச் சிறிய முரண்கோள்களின் எண்ணிக்கை சுமார் 500,000 என்று நம்பப் படுகிறது.   அவற்றில் 1%  கீழ் எண்ணிக்கை முரண் கோள்கள்தான் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன  என்று தெரிகிறது.   நாசாவின் புவி அண்டக்கோள் திட்ட விஞ்ஞானிகள் சராசரி 40 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோல் சிறிய முரண் கோள்கள் பூமிக்கு அருகில் நெருங்குவதாய் மதிப்பீடு செய்துள்ளார்.  அந்தச் சராசரி மதிப்பீட்டின்படி 1200 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சிறிய முரண்கோள் பூமியில் மோதலாம் என்றும் ஊகிக்கப்  படுகிறது. அமெரிக்க, ரஷ்ய, கனடா,  ஜப்பான் ஆகிய நாடுகளின்  அகில நாட்டு விண்வெளி நிலையம் பூமிக்கு மேல் 240 மைல் உயரத்தில் சுற்றி வருகிறது.   சிறிய முரண்கோள் பூமியைக் குறுக்கிடும் 17,000 மைல் உயரத்தில் எந்த துணைக்கோளும் இப்போது பூமியைச் சுற்றி வருவதில்லை.   இது போன்ற சிறிய முரண்கோள் ஒன்று பூமியின் மீது மோத நேரிட்டால்,  ஏற்படும் பூமி அதிர்ச்சி சுமார் 2.5 மெகா டன் சக்திக்கு  ஒப்பாகும்.   1908 இல் சைபீரியாவின்  துங்கஸ்கா நதிக் காடுகளில் நேர்ந்த சிறிய முரண்கோள் [சுமார் 100- 130 அடி நீளம்] தாக்கம் 750 சதுர மைல் தகர்ப்பை உண்டாக்கி மட்ட மாக்கி உள்ளது.   அது முரண்கோள் குழுவினரால் “துங்கஸ்கா நிகழ்ச்சி”  [Tunguska Event] என்று  குறிப்பிடப் படுகிறது.  நாசாவின் நியோ திட்ட  விஞ்ஞானிகள்  [NEOO – NASA Near Earth Object Observation Program]  பூமிக்கருகே வரும் முரண்கோள்களைத் தொடர்ந்து  கண்காணித்து  எச்சரிக்கை செய்து வருகிறார்.

     

    Asteroid Impact -2

    (தொடரும்)

    ************************

    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)

    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth

    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]

    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]

    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]

    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)

    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]

    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]

    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)

    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)

    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)

    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010

    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand By : John Matson (June 11, 2010)

    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)

    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)

    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)

    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)

    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)

    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)

    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)

    20 Wikipedea :http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)

    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)

    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)

    23 BBC News :  Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)

    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ?  (July 19, 2011)

    25. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Ceres_(dwarf_planet) (July 20, 2011)

    26. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) ((July 25, 2011)

    27. Wikipedia – http://en.wikipedia.org/wiki/Colonization_of_Ceres (July 29, 2011)

    28. Space Daily – http://www.spacedaily.com/reports/Dawn_Views_Dark_Side_of_Vesta_999.html(July 29, 2011)

    29.  NASA Trains Astronauts to Land on an Asteroid before 2025  (May 16, 2012)

    30.  http://www.smh.com.au/technology/sci-tech/asteroids-earth-flyby-will-enter-satellite-zone-20130208-2e28j.html   [Asteroid’s Earth fly-by will enter satellite zone]  (Februrary 8, 2013)

    31.  http://www.space.com/19518-asteroid-will-fly-within-18-000-miles-of-earth-video.html  [NASA Discusses Asteroid 2012 DA14 Earth Flyby Today: How to Watch Live]  (February 7, 2013)

    32.  http://www.space.com/19653-asteroid-2012-da14-earth-impact-threat.html   [Next Week’s Asteroid Flyby Shows Earth is in ‘Cosmic Shooting Gallery’ ] (February 5, 2013)

    33.  http://www.upi.com/blog/2013/02/05/Asteroid-DA14-February-15th-flyby-Fear-vs-Fact-VIDEO/4191360083623/  (Asteroid DA14 February 15th flyby Fear vs. Fact [VIDEO])

    34.  http://en.wikipedia.org/wiki/Wide-field_Infrared_Survey_Explorer  WISE Spacecraft  [February 1, 2013]

    35. http://en.wikipedia.org/wiki/Chicxulub_crater  [Chicxulub Crater ] [July 17, 2013]

    36  http://news.nationalgeographic.com/news/2013/13/130214-biggest-asteroid-impacts-meteorites-space-2012da14/?rptregcta=join_free_np&rptregcampaign=20130722_lightbox_membership_nonhp_all_1#finished

    37  http://dsc.discovery.com/tv-shows/other-shows/videos/bad-universe-asteroid-impact-simulation.htm

    38  http://www.livescience.com/26933-chicxulub-cosmic-impact-dinosaurs.html  [February 7, 2013]

    39.  https://www.eurekalert.org/pub_releases/2017-01/pifc-htd011317.php [January 13, 2017]

    39.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/01/the-asteroid-winter-chicxulub-impact-blocked-sunlight-led-to-extinction-of-dinosaurs.html  [January 16, 2017]

    40. http://www.spacedaily.com/reports/How_the_darkness_and_the_cold_killed_the_dinosaurs_999.html   [January 17, 2017]

    41. http://www.spacedaily.com/reports/Cash_crunch_for_anti-Armageddon_asteroid_mission_999.html  [January 25, 2017]

    42. http://www.spacedaily.com/reports/Objective_To_deflect_asteroids_thus_preventing_their_collision_with_Earth_999.html  [January 27, 2017]

    43. https://en.wikipedia.org/wiki/Cretaceous%E2%80%93Paleogene_extinction_event [May 20, 2017]

    44.http://www.terradaily.com/reports/Large_volcanic_eruption_may_have_caused_the_first_mass_extinction_999.html [May 23, 2017]

    45. http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/the-day-the-dinosaurs-died-asteroid-impact-equivalent-to-10-billion-hiroshima-bombs-hit-in-worst-pos.html   [May 24, 2017]

    ++++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (May 26, 2017) [R-3]

    https://jayabarathan.wordpress.com/

    Attachments area

    Preview YouTube video The Day the Dinosaurs Died BBC trailer -Alice Roberts

    The Day the Dinosaurs Died BBC trailer -Alice Roberts

    Preview YouTube video Dinosaurs Documentary Discovery Channel Last Day Of The Dinosaurs National Geographic Animals

    Dinosaurs Documentary Discovery Channel Last Day Of The Dinosaurs National Geographic Animals

    Preview YouTube video How the Dinosaurs Died – First Apocalypse – History Channel Full Documentary

    How the Dinosaurs Died – First Apocalypse – History Channel Full Documentary

    Preview YouTube video The Chicxulub Crater

    The Chicxulub Crater
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”காத்தால(காலையில்) வந்து கரம்கொடுக்கும் கண்ணா!
    வாத்ஸல்யம் காட்டும் வரதரே! -மாத்தாடும்(கன்னடம்)
    கோகுலமா டாயெனைக்கொள் கோபாலா! கோவிந்தா!
    ’’ஆ’’குலம்சேர் ஆரா அமுது!’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கேசவ்ஜி, அளவுக்கு மீறிய அமுது நஞ்சு….ஆரா அமுது கண்ணனோ, அளவுக்கு மீறிய காளியன் நஞ்சை அமுதாக்கி நிலவுக்கு அளித்தார் (அமுதைப் பொழியும் நிலவே)….ஒரு கற்பனை ஓகேதானே சார்….!

    kesav

    ”கண்ணனவர் கோபமும் கையாசி என்றனர்,
    பெண்களவர் காளியன் பத்தினியர்: -மன்னன்
    அளவுக்கு மீறினாலும் ஆடிஅந் நஞ்சை
    நிலவுக்(கு) அமுதாக்கி னார்’’….கிரேசி மோகன்…!

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி-14

    –மீனாட்சி பாலகணேஷ்

     

    ‘மதியப் பொழுதின் வேலை முனைப்பில் நான் கூட்டத்துடன் ஒன்றிப் போய் விடுகிறேன். ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில், உன்னை மட்டும் எதிர்பார்த்தே காத்திருக்கிறேன்’- தாகூர் (கீதாஞ்சலி)

    ^^^^^^^^^^^^^^^^

    ஷீலா உறக்கம் பிடிக்காமல் தவித்தாள். எப்படி உறக்கம் வரும்? பங்களாவின் மற்றொரு அறையில் ஜிம், வேறொரு அறையில் கீதாஞ்சலி எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவளுக்கு எப்படி உறக்கம் வரும்?!

    அவளுக்குத் தெரிந்து சமீபத்தில் இதயபூர்வமான களங்கமற்ற அன்பில் நனைந்து குளிர்ந்தது இன்று மாலை தான். இந்த வீடு கலகலப்பாக, இனிமை நிறைந்ததாக விளங்கியது இன்று தான்.

    எட்டுமணி வரை அமுதா ஆடலரசு அவர்கள் குழந்தைகள் எல்லாரும் இருந்தனர். ஒரு எளிய, ஆனால் ருசியான டின்னருக்குப் பிறகு பேசிக் களித்த வண்ணம் இருந்தவர்கள், கீதா ‘ஜெட்லாக்’ எனப்படும் நேரம் மாறியதால் உண்டாகும் களைப்பினால் உறங்கத் தவிப்பதை உணர்ந்து, பேச்சுக்குத் தற்காலிக முடிவு கட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

    இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஜிம் தன்னிடம் வெகு சகஜமாகப் பழகியதைக் கண்டு ஆனந்தக்களிப்பில் துள்ளியது ஷீலாவின் உள்ளம்.

    இப்போதும் பொங்கிய மகிழ்வின் மிஞ்சிய தித்திப்பைத் திரும்பச் சுவைத்து எண்ண அலைகளைப் புரட்டினாள்.

    ஜிம்மையும் கீதாவையும் வரவேற்க ‘ஏர்போர்ட்டு’க்குப் போவது என்று ஏற்பாடு. அமுதாவும் ஆடலரசும் உடன் வர வேண்டும் என்று பிடிவாதமாக வேண்டினாள். ஜிம், கீதாவுடனான அவளுடைய சந்திப்பு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான சூழலில் நிகழும்பொழுது தாங்கள் இடைஞ்சலாக இருப்பதை அமுதாவும் ஆடலரசும் விரும்பவில்லை. ஆனால் ஷீலா மிகவும் வற்புறுத்தியதன் பேரில் ஒப்புக்கொண்டனர்.
    விமானநிலையத்தில் ஷீலாவின் தவிப்பு வேடிக்கையாக இருந்தது. பத்து நிமிடம், இன்னுமொரு பதினைந்து நிமிடம் என்று விமானம் தாமதமாக வந்ததில் அவள் நெற்றிக் கண்ணைத் திறந்து விமானநிலையத்தையே எரித்து விடுபவள்போல் பொறுமையிழந்து தவித்தாள்.

    விமானம் வந்து நின்ற அறிவிப்பைக் கேட்டதும் அமுதாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆவலுடன், கண்ணிமைக்காமல் ஒவ்வொரு பயணியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    கீதாவின் புகைப்படங்களை அடிக்கடி பார்த்திருந்ததால் அவள் எப்படி இருப்பாள் என்று தெரியும். ஆனால் ஜிம்மைப் புகைப்படத்தில் கூட இத்தனை நாட்களாகப் பார்த்திராததால் அவன் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி மாறி இருப்பான் என ஊகிக்கக்கூட முடியவில்லை. தன் புகைப்படம் அவளுக்கு அனுப்பப்படக்கூடாது என்பதில் ஜேம்ஸ் மிகவும் உறுதியாக இருந்தான். அவள் மனத்தில் மேலும் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.

    அதோ, அங்கே ஜிம்…. அது தானா, ஆமாம். அந்தச் சிறிய பெண், கீதா தான் அது. ஜிம் மாறவே இல்லை. அன்று கண்டது போல அப்படியே இருந்தான். குதிநடையிட்டு வரும் இளம்பெண் அப்படியே சிவகாமியின் அச்சாக இருந்தாள். விழிகள் மட்டும் ஜிம்மின் நீலவிழிகள்.

    மனதில் சிறைப்பட்டுக் கிடந்த தாய்மை, பொங்கிப்புரண்டு பிரவகித்து, இனம் புரியாத சங்கடமான தவிப்பையும், பேரானந்தத்தையும் உண்டாக்கியதால் செய்வதறியாது மயங்கி நின்றாள் ஷீலா ராபர்ட்ஸ் என்ற சூப்பர் வுமன். ஆடலரசு இதற்குள் அவர்களைப் பார்த்து விட்ட பரபரப்பில் இவர்கள் பக்கம் விரைந்து வந்தான்.

    “அமுதா, சைலஜா ஜூனியர் பார்த்தியா? அப்படியே அதே அச்சு!” பரவசத்தில் அமுதாவின் தோளை உலுக்கினான். ஷீலாவின் இதயம் சிறகடித்து பறந்துபோய் மகளை மானசீகமாகத்தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டது.

    “தேர், தேர் ஷி இஸ், டார்லிங் கீதா, ஹியர் இஸ் யுவர் மதர்,” ஜிம்மின் குரல் அருகாமையில் கேட்டதும் ஷீலாவின் உடல் சிலிர்த்தது. “ஹலோ, கீதா டியர், எப்படி இருக்கே?” என்று இத்தனை வருடங்களாக அன்னியப் பட்டுப்போன தன் மகளாகிய அந்த இளம் பெண்ணின் கரங்களை, கம்பித் தடுப்பினூடே தனது கரங்களை விட்டுப்பிடித்தபடி மென்மையாக வருடிக் கொண்டு வினவினாள் ஷீலா.

    “மம்மி டியர், ஓ. எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ, உன்னைப் பார்த்ததில் நான் ரொம்பவும் பரவசப்பட்டுப் போயிருக்கிறேன்,” என்று உற்சாகமும் ஆனந்தமும் பொங்கக் கூறிய கீதா, ஷீலாவின் கரங்களை இழுத்துப் பற்றி, அழுத்தி முத்தமிட்டாள். ஷீலாவின் உணர்ச்சிகள் புயலாகக் கொந்தளித்தன. ‘நான் இரண்டாம் பட்சம் என்று ஒதுக்கிவிட்டு வந்தது எவ்வளவு இன்றியமையாததாக இன்று ஆகி விட்டது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை நாட்கள் ஆயினவே,’ என்று பச்சாதாபத்தில் குமைந்தாள்.

    தாய்- மகளின் சந்திப்பை அருகில் நின்று அமைதியாகக் கைகளைக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் முகத்தில் மகிழ்ச்சியின் அலைகள். எப்போதுமே கலைந்தது போல இருக்கும் தலைமுடியை விரல்களால் கோதியபடி, “ஷீலா, ஹவ் ஆர் யூ? நான் இந்தியாவிற்கு கீதாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

    ame
    ‘இத்தனை ஆண்டுகளின் பின்பு, டைவர்ஸ் செய்த ஆண்மகனின் கைகுலுக்கலில் இப்படி ஒரு மின்சாரம் பாயுமா? நான் மனதை மிகவும் அலைபாய விடுகிறேனோ? இல்லை, அவன் கடிதத்தில் எழுதி இருந்தவைகளால் தான் என் மனது திரும்பவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கிறது. ஜிம் நீ எவ்வளவு உயர்ந்தவன்- நீ என்னைப் புரிந்து கொண்ட அளவில் நான்கில் ஒரு பங்காவது நான் என்னைப் புரிந்து கொண்டிருந்தால், இந்தக் குழப்பங்களெல்லாம் வந்தே இருக்காதோ என்னவோ–

    ‘ஜிம், நான் தேடி வந்ததைத் தவிர, அது கிடைக்காததை விட இழந்தது மிக அதிகம். என் சுய கௌரவம், மனிதத் தன்மை, பெண்மையின் இனிமையான தாய்மை உணர்வு, இன்னும் என்னென்னவோ- எல்லாம் இழந்து- நீயும் இல்லை என்றாகி விடுமோ என்று நொந்து போனபோது, ‘இதோ இருக்கிறேன்,’ என்று நீ இங்கு வந்தது என்ன நிகழ்வு? தெய்வச் செயலா? என் அதிர்ஷ்டமா……’

    “சைலஜா, லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு அவங்க வந்துட்டாங்க பாரு, வா போகலாம்,” ஷீலாவை இழுத்துக் கொண்டு ஜிம்மை நோக்கி விரைந்தாள் அமுதா.

    “மம்மி டியர், ஐ லவ் யூ ஸோ மச்…..”

    “கீதா பேபி, என் கண்ணே, லிட்டில் ஏஞ்சல்,” வார்த்தைகள் குழற, அந்த இளம் பெண்ணை அணைத்தபடி பிதற்றினாள் சைலஜா. பட்டுப் போன்ற கூந்தலிலும், கண், மூக்கு, முகம், கரங்கள் என முத்தமாரியில் நனைத்தாள். சுற்றுச் சூழலை மறந்தாள்.

    அந்தக் குழந்தையும் தாயின் அணைப்பில், காலம் கடந்து கிடைத்தாலும், கிடைத்தற்கரிய பேரானந்தத்தைத் தரக்கூடிய ஒரே ஒருத்தியின் அணைப்பில் துவண்டு ஒடுங்கி, விசும்பியபடி அவளின் கரங்களில் தவழ்ந்தது.

    அமுதா, கண்கள் பனிக்க, ஆடலரசின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கலங்கிய கண்களை நாசுக்காகத் துடைத்தபடி, தன்னை ஜிம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்டான் ஆடலரசு.

    எல்லாரும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி கடந்து போகும் நிகழ்வினால் கூச்சமடைந்த அமுதா, “சைலா, வாம்மா, காருக்குப் போகலாம்,” என்று சைலஜா, கீதா இருவரையும் மெல்லத் தட்டி அழைத்தாள். ஒருவர் அணைப்பிலிருந்து மற்றவர் பிரியாமல் தாயும் மகளும் வந்து காரில் ஏறியதும், வீடு வந்ததும் ஏதோ கனவு போலத்தான் இருந்தது.

    ஜிம் நாகரிகம் தெரிந்தவனாக இருந்ததால் தனக்கு ஹோட்டலில் ரூம் ரிஸர்வ் செய்து கொண்டிருந்தான். ஷீலாவின் பெரிய பங்களாவில் தங்குவதை அவன் எதிர் பார்க்கவில்லை. எனவே, டின்னருக்குப் பின் அவன் ஹோட்டலுக்குக் கிளம்பியதும், அதுவரை இதைப் பற்றி அறியாத ஷீலாவுக்குத் ‘துணுக்’கென்றது. மெல்ல ஆடலரசை விட்டு, “ஜிம்மை இங்கேயே தங்கிக்கச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. ப்ளீஸ், ஆடலரசு, எனக்கு எப்படி அவரிடம் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ பண்ணுவது என்று புரியல,” என்றதும், ஜிம்மின் சமீபத்திய கடிதத்தின் உட்பொருளை நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் அவர்களுடன் ஷீலா பகிர்ந்து கொண்டிருந்ததால், உரிமையுடன் ஆடலரசு, “ஏன் சைலா, நீங்களே சொல்ல மாட்டீங்களா? இதென்ன, அரசு விடு தூதா?” என்று குறும்பாக வினவினான்.

    பதினைந்து வயதில் தான் அவள் முகத்தில் கண்டு ரசித்த நாணக் கலவை இப்போது அதே அளவில், மேலும் பொலிவோடு மின்னி மிளிரக் கண்டான். அன்று அந்த நாணம், அவனுக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தியதென்றால், இன்றும் வேறு யாரையோ கருதி ஏற்பட்ட நாணம், அவனுக்குக் களிப்பையும், உல்லாசம் நிறைந்த மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணியது.

    ஜிம்மை ரொம்ப வற்புறுத்த வேண்டியிருக்கவில்லை. ஷீலாவின் ஒரு வேண்டுகோளுக்காகக் காத்திருந்தவன் போல உடனே ஒப்புக்கொண்டு விட்டான்.

    கீதா மிகவும் களைத்துப்போய் உறங்க விரும்பியதாலும் ஜிம்மின் கண்களில் ஷிவாவுடன் தனித்துப்பேசும் ஆர்வமும் ஆவலும் மின்னியது வெளிப்படையாகத் தெரிந்ததாலும், ஆடலரசும் அமுதாவும் விடை பெற்றுக் கொண்டனர்.

    “குட் நைட் மம்,” கீதாவிற்கு என்று ஷீலா ஒரு அறையை அழகாகத் தயார் செய்து வைத்திருந்தாள். கீதா தன் தாயை இறுக அணைத்து முத்தமிட்டபடி, ‘குட் நைட்’ சொல்லிவிட்டு உறங்கச் சென்றாள்.

    மெல்லத் திரும்பி வந்தவளிடம் ஜிம் தானும் களைப்பாக இருப்பதாகவும், இருந்தாலும், “ஒரு ஷவர் எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும். உனக்கு நேரம் இருக்குமானால்….” என்றான். பத்துப் பதினைந்து நிமிஷங்கள் பால்கனியில் காத்திருந்த ஷீலா அவன் வரக்காணாதது கண்டு, ‘ஒருவேளை களைப்பினால் உறங்கிப் போயிருப்பான்,’ என எண்ணியபடி தன் அறைக்குச் சென்றபோது மணி ஒன்பது.

    கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. உறக்கம் வராததால், சிந்தனை ஓட்டங்களில் தன்னை இழந்திருந்த ஷீலா மெல்லத் தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். நிராசையில் மனம் துடிதுடித்தது. இரவில் மலர்ந்த மலர்களின் மெல்லிய வாசம் தோட்டத்திலிருந்து வந்து அந்த அமைதியான இரவில் அவளுடைய மனத்தின் அமைதியை மாத்திரம் கலைத்தபடி சவால் விட்டது. வானில் நட்சத்திரங்கள் ஒன்றையொன்று பார்த்து கண் சிமிட்டிக்கொண்டன.

    “சைலஜா,” அழைத்தது யார் என்று திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிட அவளால் முடியும். இந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாளே- திரும்பிப் பார்த்தவளை ஜிம் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்து ஆழ்ந்த நீல நிற விழிகளால் கனிவுடன் பார்த்தவண்ணம் கைகளை நீட்டி அவள் கைகளைப்பற்றிக் குலுக்கினான். “உன்னைக் காக்க வைத்து விட்டேன், மன்னித்துக்கொள்.”

    ஒன்றுமே பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் அவனையே சில கணங்கள் நோக்கியவள், என்ன பேசுவது எனப் புரியாத தவிப்பில், “ஜிம், நீ மாறவேயில்லை. அப்படியே இருக்கிறாய். சற்றுப் பருத்திருக்கிறாய்,” என்றாள். இரவின் நிசப்தத்தை கிழிக்க அச்சப்பட்டவள் போல சன்னமான குரலில் பேசினாள்.

    “ஹ்ம், இதை நானும் உனக்குத் திருப்பிச்சொல்வேன் என்று நினைக்காதே. நீ ரொம்பவும் மாறி இருக்கிறாய்…”

    நட்பின் கனிவோடு, பரிவாக வந்த வார்த்தைகள்- கண்களில் பொங்கிய நீரை அவன் காணாவண்ணம், திரும்பி, பால்கனியின் மறுகோடிக்கு நடந்தாள் சைலஜா.

    “நான் ஏதாவது தப்பாகச் சொல்லி விட்டேனா சைலா?” பின் தொடர்ந்தான் ஜிம்.

    “இல்லவே இல்லை. நீ எப்போதும் உண்மையை நேருக்கு நேர் கூறுபவன். அதனால் நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். நீ சொன்னது உண்மை. நான் மிகவும் மாறிவிட்டேன். பழைய சைலஜா இல்லை….” விரல்களைக் கோர்த்துக்கோர்த்துப் பிரித்தபடி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

    “நீ என் லெட்டரைப் படித்தாயா?” நேரடித் தாக்குதலாக வந்து விழுந்த கேள்வியின் பொருளுணர்ந்து திகைத்தாள் ஷீலா. சில நொடிகள் மௌனத்தின் பின் பேசினாள், “ஜிம்,… உன் கடிதத்தைப் படித்தபின்புதான் நான் புத்துணர்ச்சியில் புதுமனுஷியாக நடமாட ஆரம்பித்து இருக்கிறேன். நீ என்னிடம் எதிர்பார்க்கும் பதில் என்னவென்று எனக்குப்புரிகிறது. நானும் அதைக்கூறி விடுவேன். ஆனால் சில புதுவிதமான கவலைகளும் அச்சங்களும் தோன்றி என்னை அலைக்கழிக்கின்றன.

    “என் கடந்தகால வாழ்வை, உன்னைப் பிரிந்து நான் வாழ்ந்த இந்த நாட்களை, வருடங்களை நான் சிந்தித்துப் பார்த்தபடி இருக்கிறேன். எனக்குக் சிறிது அவகாசம் கொடு..ப்ளீஸ்.. உன்னால் இது முடியுமா?”

    “வேண்டிய அவகாசம் எடுத்துக்கொள். உன் பதில் மறுப்பாக இருந்தாலும் கூட எனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் மனோபலம் இருக்கிறது. ஒரு சிறு விஷயம்.. இதோ…” ஒரு சிறு நகைப் பெட்டியை டிரௌஸர் பாக்கெட்டிலிருந்து எடுத்தான். ரத்தச் சிவப்பான ‘ரூபி’ என்னும் மாணிக்கங்கள் பதித்த ஒரு அழகிய மோதிரம் வெல்வெட் குஷனில் அமர்ந்தபடி ஷீலாவைப் பார்த்துப் புன்னகைத்தது. “இதை நாங்கள் டெல்லியில் இருந்த ஆறுமணி நேரங்களில், கீதா உனக்காக வாங்கினாள். நான் இதை உனக்குப் பரிசாகத்தர வேண்டும் என்பது அவளது விருப்பம். அதுவும் நாம் இருவரும் தனிமையாக இருக்கும்போது என்றும் சொல்லியிருக்கிறாள். ‘டீன் ஏஜ்’ பெண் அல்லவா? காதல் சம்பந்தமான உணர்வுகள் மிகவும் அதிகமாகப் பாடுபடுத்தும் வயது! அவளுடைய விருப்பப்படி, ஏன், நானும் கூட விரும்பித்தான், உனக்கு இதைத் தருகிறேன்,” எனப் பெட்டியை அவளிடம் நீட்டினான்.

    பெட்டியை வாங்கிக் கொள்ளாமல், ஒரு கையால் தூணை அணைத்தபடி மறுகை விரல்களை மடக்கிக்கொண்டு மோதிரவிரலை அவனிடம் நீட்டினாள். வெட்கமேயில்லாமல் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தது.

    மென்மையாக அவ்விரலைப்பற்றி மோதிரத்தை அணிவித்தவனுடைய கரங்களும் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது.

    ‘ஜிம், நீ தான் எனக்கு வேண்டும். நீ மட்டுமே எனக்கு வேண்டும். பகலும் இரவும் என்னைப் பொய்மை மிகுந்த எண்ணங்கள் அலைக்கழிக்கின்றனவே,’ என மனம் கதறியது. அந்த உயரமான ஆறடி ஆகிருதியில் தன்னைப் புதைத்துக்கொண்டு கதறத்துடித்தது உள்ளம். எது அவளை இப்போது பலாத்காரமாகத் தடுக்கிறது? வெறும் ஒரு சட்டபூர்வமான காகிதம், மனங்கள் விழையும் உறவைக் கூடாதென்று தடுக்குமா என்ன? இல்லை, இது வேறு ஏதோ ஒன்று.

    புதிய ஒரு குழப்பம் ஷீலாவை அலைக்கழிக்கத் துவங்கி இருந்தது.

    மோதிரம் அணிவித்த விரலையும் கரத்தையும் விட்டு விடாமல், “வித் யுவர் பர்மிஷன்,” என்று அக்கரத்தைத் தன் இதழ்களில் பதித்துக்கொள்ள விரும்பி அவள் முகத்தை ஏறிட்டான் ஜிம். ‘ஆமாம்,’ என்பது போல அவள் தலை லேசாக அசைந்தது. ஒரு மின்சார அலை ஆத்மாவை ஊடுருவிப் பாய்ந்து, நெஞ்சத்தைச் சம்மட்டி போலப் பிளந்தது.

    தன் பாக்கட்டிலிருந்து ‘டிஷ்யூ’ பேப்பரை உருவி, அவள் கண்களை மென்மையாக ஒற்றித் துடைத்த ஜிம், “சைலஜா, உனக்கு இப்போது நல்ல ரெஸ்ட் தேவை. நாளை காலையில் பார்க்கலாம்,” என்றதும், அன்பான கட்டளைக்குக் கீழ்ப்படியும் குழந்தையைப் போல, தன் புதுமோதிரத்தைத் திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டு நடந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து உறங்க முயன்றாள் ஷீலா.

    (தொடரும்)

    தாரகை இணைய இதழ்

    ********************************

    Share
  • உழவன் உயிர்

    ராஜகவி ராகில்

     

    எழுதுகோல்

    நிலம் காகிதம்

    எழுதுகிறான்

    உழவனெனும் கவிஞன்

     

    தேகம் கருமேகம்

    வியர்வை மழை

    பொழிகிறான்

    பயிர்கள்

    செழிக்க

     

    பச்சை நிற

    நெற்பயிரை

    மஞ்சளாக்கி மகிழ்கிறது

    உழவன் உழைப்பு

     

    வயல் என்பது

    சேற்று நிலமல்ல

    உழவன்

    கருந்தோல்

     

    அவன் கண்ட

    கனவின் நிஜம்

    நெல்மணி

     

    உழவன் இல்லாத

    ஊரில்

    நீர் நிலமிருந்தும்

    அது

    பாலைவனம்

     

    ஓர் உழவன்

    சமன்

    ஆயிரம்

    அரசர்களுக்கு

     

    உழவனை மதிக்காத

    ஊர்

    எரியும்

    பஞ்சத்தால்

     

    வெறும் பானைக்குள்

    சோறு

    நிரப்புகிறது

    உழவன் வியர்வை

     

     

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி (3)

    பவள சங்கரி

    சிறுவர் இலக்கியம்

    ஒரு குயவன் பானையை உருவாக்குவதற்கும், தச்சன் மர அலமாரி செய்வதற்கும், சிற்பி சிலை வடிப்பதற்கும் சில நெறி முறைகளையும், சட்ட திட்டங்களையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அனைவரும் பாராட்டும்படியான கலைகளாக அவைகள் பரிமளிக்க வாய்ப்பே இல்லாமல் போகலாம். இதே போலத்தான் சிறுவர் இலக்கியம் என்ற அற்புத கலையின் உருவாக்கமும்.

    கதையின் உருவாக்கம்

    நல்ல எழுத்தாளர்கள் பல நேரங்களில் தெரிந்தே, எந்தவிதமான கட்டுத் திட்டங்களையும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

    குழந்தைகளுக்கான சுவையான கதைகள், நல்ல கருப்பொருள்கள், சரியான திட்டமிடல், பொருத்தமான கட்டமைப்பு, நினைவில் நிற்கும் கதாப்பாத்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், கவர்ச்சிகரமான பாணி, எளிய நடை, எதிர்பாராத திருப்பம் / முடிவு போன்ற அனைத்து பகுதிகளிலும் அதீத கவனம் கொண்டு உருவாக்கவேண்டியவை.

    கருப்பொருள் :

    ஒரு கதை நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை அறிய கருப்பொருள் முக்கியமாகிறது. அதாவது நம் வாழ்க்கைக்குத் தேவையான எதையாவது சொல்ல வருவதே அந்த கருப்பொருள். எல்லா கதைகளும் கருப்பொருள் கொண்டதாக இருப்பதில்லை என்றாலும் அப்படி இருப்பது சிறப்பு.

    அதிகமான அறிவுரைகள் அவசியமற்றது. கதையிலிருந்து பூத்து வருகிற கருப்பொருளே வாசகர்களுக்கு தன்னிச்சையாக எதையோ கற்றுக்கொண்ட நிறைவை ஏற்படுத்துகிறது. கதைக்கான நீதியை தனியாகச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

    காட்சி :

    பெரும்பாலும் கதையின் முக்கியமான கதாப்பாத்திரத்தின் மோதல் அல்லது போராட்டமே கதைக்கான காட்சி. அந்த மோதல் மற்றொரு கதாபாத்திரத்துடனோ அல்லது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் அல்லது அந்த கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள் அல்லது தேவைகள் பற்றியதாக இருக்கலாம்.

    முக்கியமான கதாபாத்திரமான  ‘கதாநாயகன் / கதாநாயகி’ என்றால் அது வெற்றியோ அல்லது தோல்வியோ சந்திக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சமாக ஓரளவிற்காவது, அடுத்தவரால் காப்பாற்றப்படாமல், தன்னையே காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு தனித்து இயங்கக்கூடியதாக இருக்கவேண்டும். பெரும்பாலும் கதாநாயக கதாபாத்திரம் முன்னுதாரணமாக இருக்கக்கூடியதும் பாடம்  கற்பிக்க வல்லதாகவும், தம் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டடையக்கூடியதாகவும் இருக்கும். அந்த பாத்திரம் என்ன கற்றுக்கொள்கிறதோ, அதற்கான சூழல் எதுவோ அதுதான் அந்தக் கதைக்கான களம் என்கிறோம்.

    கதையில் மோதல் என்று வரும்போது அது அதிகமான அழுத்தமும் உற்சாகமும் ஏற்படுத்தவேண்டும். அந்த அழுத்தம் உச்சத்தைத் தொடவேண்டும். அதேபோன்று கதையின் உச்சக்கட்டத்தில் அந்த அழுத்தங்கள் படிப்படியாகக் குறைந்து இயல்பாகிவிட வேண்டும்.

    காட்சியமைப்பின் அடிப்படை கட்டமைப்புகள் – மோதலின் ஆரம்பம், சரியாகவோ, தவறாகவோ செல்லலாம். இறுதியில் வெற்றி அல்லது தோல்வி அல்லது அடிபணிதல் என்பதை சார்ந்திருக்கும். மீண்டும் சரி – தவறு காட்சிகள் தொடரும்.

    ஒரு புதினத்தில் அதிக மோதல் காட்சிகள் இருக்கலாம் ஆனால் சிறுகதை என்று வரும்போது அங்கு  ஒரேயொரு மோதல் காட்சி மட்டுமே இருக்கவேண்டும்.

    கதை அமைப்பு :

    ஆரம்பத்திலேயே நேரடியாக செயல்பாட்டிற்குள் (ஆக்‌ஷனில்) இறங்கிவிடவேண்டும். இறுதிப் பகுதியை நீட்டி முழக்காமல் சுருக்கமாக விரைவாக முடித்துவிடவேண்டும்.

    முதலில் கதையை தன்னிலையில் எழுதப்போகிறீர்களா அல்லது படர்க்கையிலா என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். படர்க்கையில் எழுதப்போவதானால், அவர், அவள், அது என்ற வகையில் இருக்கும் என்பதால் அடுத்தவரைப் பற்றிய கதையாக அது இருக்கும். நான், எனது, எனக்கு என்று அமையும் தன்னிலையில் எழுதுவதாக இருந்தால் அது உங்களுக்கு நேர்ந்த நிகழ்வாக இருக்கும். அதனால் ஆரம்பத்திலேயே தெளிவாக இதை முடிவு செய்துகொள்வது அவசியம்.

    படர்க்கை நிலையில் சொல்வதாக இருந்தாலும், இயன்றவரை கதை முழுவதையும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் வாயிலாக கூறுவதாக இருக்கட்டும். அந்த கதாபாத்திரத்திற்கு தெரியாத எந்த ஒன்றையும் சொல்லிவிடாதீர்கள். இதைத்தான் ‘கண்ணோட்டம்’ என்று சொல்கிறோம். நீங்கள் வேறு ஏதாவது சொல்ல நினைத்தால் முற்றிலும் தனியானதொரு வேறு பாத்திரத்தை உருவாக்கி அதன் கண்ணோட்டத்தில் சொல்லவேண்டும்.

    அடுத்து காலத்தை நிர்ணயிக்க வேண்டும். இறந்த காலமா அல்லது நிகழ்காலத்தில் எழுதப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யவேண்டும். இறந்த காலம் என்றால் அந்த கதை ஏற்கனவே நடந்து முடிந்ததாக இருக்கும். பல கதைகள் பெரும்பாலும் இறந்த காலத்திலேயே எழுதப்படுகிறது. நிகழ்காலத்தில் எழுதுவதென்றால் அந்தக் கதை அப்போதைய நேரத்தில் எழுதக்கூடியதாக இருக்கும். ஏதாவது ஒரு காலத்தை தேர்ந்தெடுத்து கதை முழுவதையும் அதே காலத்தில் கொண்டு செலுத்தவேண்டும்.

    கதாபாத்திரங்கள்:

    எழுத ஆரம்பிக்கும் முன்னர் உங்கள் கதாபாத்திரங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்திருங்கள்.

    முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது வாசகர்களுக்கு, தங்களுள் ஒருவராகவோ அல்லது தாங்கள் அக்கறை கொள்ளத்தக்க ஒருவராகவோ இருப்பது அவசியம். அந்த பாத்திரத்தைப்பற்றிய முழுமையான விவரிப்பு தேவையில்லை. அந்தப் பாத்திரத்தின் தோற்றம், நடவடிக்கை பற்றி ஓரிரு செய்திகள் கூறினாலே போதுமானது.

    முக்கியமான கதாபாத்திரத்திற்கு ஏதேனும் ஒரு குறைபாடோ அல்லது பலவீனமோ இருந்தால்தான் அது வாசகர்களுக்கு ஆர்வம் கூட்டுவதாக அமையும். ஒழுக்கமான கதாபாத்திரங்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை. அது பொதுவான குணாதிசயமாகவோ அல்லது பரிதாபம் ஏற்படுத்துகிற படைப்பாகவோ இருக்காது. அதில் பாடம் பெறவும் ஏதும் இல்லாமல் போகலாம். இதுமட்டுமன்றி, அது எவ்வளவுதான் மோசமான பாத்திரப்படைப்பாக இருப்பினும், ஏதாவது ஒரு நல்ல விசயமாவது அதனிடம் இருக்கவேண்டும்!

    கதையமைப்பு:

    கதையின் காலம் அல்லது முக்கியமான சம்பவம் நடக்கும் இடம் வாசகர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாகவோ, ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நடையும், பாவனையும்:

    உங்கள் கதைக்கு ஏற்ற நடையை தெரிவு செய்யுங்கள். இயன்றவரை என்ன நடக்கிறது என்பதை நேரடியாகச் சொல்லாமல், செயல்பாட்டின் மூலமாகவோ, காட்சியமைப்பின் மூலமாகவோ உணரும்படி செய்யுங்கள்.

    வசனங்கள் நேரடியாக இருக்கவேண்டும். உதாரணமாக, “வெளியேபோ” என்று நேரடியாகச் சொல்ல வேண்டிய இடத்தில், “அவன் அவளை வெளியே போகச்சொன்னான்” என்று சுற்றி வளைத்துச் சொல்லாதீர்கள்.

    நல்ல எழுத்திற்கு அலங்கார வார்த்தைகள் அவசியமில்லை. எளிமையான வார்த்தைகளும், எளிமையான நடையும் வாசகர்களுக்குத் தொல்லையில்லாத வாசிப்பைக் கொடுப்பதால் படிப்பதற்கு ஆர்வமும் கூட்டுவதாக அமையும்.

    உற்றார் உறவினருடன் உல்லாசப் பயணம் செல்லும் சிறுவர்கள் அடிக்கும் லூட்டி சுவையானது. குழந்தைகளுடன் செல்ல நேரும்போது நல்ல கதைக்களமும், வசனங்களும் அமையும் வாய்ப்புகள் அதிகம். 12/13 வயது சிறுவன் நீண்ட பயணக் களைப்பில் எப்படியொரு வசனம் சொல்வான்?  குழந்தைத்தனத்திற்கேயுரிய குறும்பும் குசும்பும் கலந்த அந்த பேச்சு, “யப்பா.. டிக்கி ஃபயரிங்..” இதன் யதார்த்தம் இவனுடைய சம வயது சிறார்களை எப்படி கவர்ந்துவிடாமல் போகும்?

    மிகச்சிறந்த வார்த்தைகளை – தெளிவாக விளங்கச்செய்யும் சரியான வார்த்தையை, காட்சியின் பிம்பத்தை சரியாகக் காட்டும் அந்த வார்த்தையைத் தேடிப்பிடித்துப் போடுங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள் கிடைக்காவிட்டால் நிகண்டுகளின் உதவியை நாடலாம். ஒவ்வொரு வார்த்தை, சொற்றொடர்கள், வரிகள், பத்திகள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களுடைய ஆகச்சிறந்த படைப்புதானா இது என்பதை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ‘ஆம்’ என்ற பதில் கிடைத்தால் மட்டும் வெளியிடுங்கள். இல்லையென்றால் மீண்டும் திருத்தி எழுத முயலுங்கள்.

    அகத்தூண்டுதல் :

    “அந்த காலத்தில் ‘நீதி போதனை’ என்று ஒரு வகுப்பு வாரந்தோறும் வைப்பார்கள். அப்போது நல்ல கதைகளை மாணவர்களுக்குச் சொல்வார்கள். நாங்கல்லாம் வாரம் பூரா அதுக்காகக் காத்திருப்போம். இப்போல்லாம் நல்லதெல்லாம் போயே போயிடிச்சே..” என்று பெரியவர்கள் அடிக்கடி அங்கலாய்ப்பதைக் கேட்கும்போது தற்காலக் குழந்தைகளின் தேவைகளும், எதிர்பார்ப்புகளும் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதை இவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்களே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. வெறும் நீதிக்கதைகளைச் சொல்லி அவர்களை நிறைவடையச் செய்யமுடிவதில்லை என்பதே நிதர்சனம். தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, சமுதாய பொதுஅறிவு வளர்ச்சி போன்ற அனைத்தின் முன்னேற்றங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சிறார்களின் பொழுதுபோக்குகள் எதிர்பார்ப்பிலும் பிரதிபலிக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இன்றைய சிறுவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் படைப்பாளர்களுக்கு உண்டு.

    உண்மையில் நம் அனைவருக்குள்ளும் ஒரு படைப்பாளி இருந்துகொண்டுதான் இருக்கிறான்.

    எழுத்தாளர்கள் எங்கிருந்து படைப்பாற்றல் பெறுகிறார்கள்? கதைக்கான கரு எப்படி கிடைக்கிறது? அந்த கருவைக்கொண்டு ஒரு காட்சியை எப்படி கட்டமைக்கிறார்கள் அவர்கள்?

    தொடருவோம்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 89

     பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன், இங்கிலாந்து

    முனைவர் சுபாஷிணி

    உலகின் மிகப் பிரசித்தி பெற்ற பத்து அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்திருக்கின்ற பிரித்தானிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததும் நமக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒரு நாள் போதுமா? என்பதுதான். போதாது என நம் மனம் சொன்னாலும், சில வேளைகளில் நம்மை வேறு அலுவல்கள் இழுப்பதால் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வருவது நிகழகத்தான் செய்யும். லண்டனுக்கான பயணங்களில் மூன்று வெவ்வேறு சமயங்களில் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கண்களுக்கு அங்குள்ள பொருட்கள் தெரியாத கேள்விப்பட்டிராத செய்திகளைத்தான் சொல்கின்றன. மீண்டும் சென்றாலும் இதுவரை நான் அறிந்திராதா ஏதாவது ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்வேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    இந்த அருங்காட்சியகம் மிகப் பழமையானது. சர் ஹான்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1660–1753) என்னும் மருத்துவர் ஒருவரது வாழ்நாள் சேகரிப்புகளான 71,000 அரும்பொருட்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அருங்காட்சியகம். தனது மறைவுக்குப் பின்னர் தான் சேகரித்த அரும்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இவர் விரும்பினார். அதனால் அன்றைய மன்னர் 2ஆம் ஜோர்ஸ் அவர்களை அணுகி இந்த அரும்பொருட்களை இங்கிலாந்து பவுண்டு £20,000 ஐப் பெற்றுக் கொண்டு கொடுத்தார். இது 1753ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்தது. அதிகாரப்பூர்வமாக அன்று பிரித்தானிய அருங்காட்சியகம் உருவானது.

    asu1
    ஆரம்பத்தில் இதில் ஏராளமான நூல்கள், ஆவணங்கள், காசுகள், பட்டயங்கள், வரைபடங்கள் தொடர்பான பொருட்கள் நிறைந்திருந்தன. 1757ஆம் ஆண்டு மன்னர் 2ஆம் ஜோர்ஜ் பழைய அரச நூலகத்தை இங்கிலாந்து அரசுக்கு தன் நினைவாகப் பரிசளித்தார். 1759ஆம் ஆண்டு பொதுமக்களுக்காக பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆரம்பகாலகட்டத்தில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இன்று நுழைவுக்கட்டணம் செலுத்தித்தான் உள்ளே சென்று காண முடியும். அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட நாள் முதல் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டாலும் முதலாம், இரண்டாம் உலகப்போர் காலங்களில் இது மூடியே வைக்கப்பட்டிருந்தது என்பதை அறியமுடிகிறது.

    18ஆம் நூற்றாண்டிலும் அதற்கடுத்த நூற்றாண்டிலும் இந்த அருங்காட்சியகம் விரிவடைந்தது. இது விரிவடைந்ததற்கு முக்கியக் காரணம் இங்கே வாங்கி குவிக்கப்பட்ட அரும்பொருட்களே.

    18ஆம், 19ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் இங்கிலாந்தின் தொல்லியல் துறையினர் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். இக்காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்கள் பல இங்கே கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல. இங்கிலாந்து தனது காலணித்துவ ஆட்சியை விரிவாக்கியிருந்த நாடுகளிலிருந்து ஏராளமான விலைமதிப்பற்ற பொருட்களைத்தன் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. அவற்றில் சில தனியார் சேகரிப்புகளும் அடங்கும். இங்கிலாந்து ஆட்சி செய்த நாடுகளில் தமது காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏராளமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சற்று பார்ப்போம்.

    1826ஆம் ஆண்டு சார்ல்ஸ் மேசன் என்ற ஆங்கிலேய சுற்றுப்பயணி ஒருவர் தனது பயணத்தின் போது ஓரிடத்தில் பழமையான அரண்மனை போன்ற ஒரு அமைப்பினைக் கண்டு அது பற்றி குறிப்பெழுதி வைத்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 1856இல் ரயில் பாதை அமைக்கும் வேளையில் பொறியியலாளர்கள் அங்கு மேலும் பல கட்டுமான அமைப்புகள் இருப்பதைக் கண்டனர். 1920ஆம் ஆண்டில் ஆங்கிலேய தொல்லியல் அறிஞர்கள் இப்பகுதியில் அகழ்வாராய்ச்சியினை நிகழ்த்தத் தொடங்கினர். மறைந்து போன சிந்து சமவெளி நாகரிகம் உலகில் வெளிச்சத்திற்கு வந்தது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் தொடர்ச்சியாக அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டன. அந்த அகழ்வாராய்ச்சியில் ஏறக்குறைய 3,500 முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முத்திரைகளை இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகத்தின் ஆரம்ப நிலை என்ற வகையில் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் இன்று வளர்ந்து வந்திருக்கின்றன. தமிழ் மொழியின் திராவிட மொழிக்குடும்பத்தோடு தொடர்புடைய பண்டைய எழுத்து வடிவமாக இது இருக்கலாம் என்ற குறிப்பிடத்தக்க ஆய்வுகளும் மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பேசப்பட்டு வருகின்றன என்பதை அறிவோம். இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் இந்த அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய சதுர வடிவில் அமைந்த முத்திரைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இங்கே கண்ணாடி அலமாரியில் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    ​asu2

    எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துருவை வாசிக்க முடியாது ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ஆய்வுலக அதிசயமாகக் கிடைத்ததுதான் ரொசேட்டா கல் (Rosetta Stone). எகிப்தின் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் எழுத்து ஹீரோக்ளிப்ஸ். ஓவியங்களே எழுத்துக்கள் என்ற வகையில் இவை அமைந்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக ஹீரோக்ளிப்ஸ் எழுத்துகளை வாசிக்க முடியாமையினால் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்றே அறியமுடியாமல் ஆய்வுலகம் தவித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சனைக்கு வடிகாலாக அமைந்தது இந்த ரொசேட்டா கல். பார்ப்பதற்கு அது ஒரு பெரும் பாறை போன்ற கல் தான். ஆனால் அதில் இருப்பதோ உலகின் மிக முக்கிய ஆவணம். இதில் உள்ள செய்தி மிக சாமானியமானதுதான் ஆனால் அதில் உள்ள எழுத்துருதான் சிறப்பு பெற்றது. ஏனெனில் மூன்று மொழிகளின் எழுத்துருக்கள் ஒரே கல்லில் ஒரே செய்தியை வழங்கும் வகையில் இந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கி.மு 196இல் 5ஆம் தாலமி முடிசூடிக்கொண்ட நிகழ்வை இந்தக் கல் ஹீரோக்ளிப்ஸ், எகிப்திய டெமோட்டிக் எழுத்துரு, கிரேக்கம் ஆகிய மூன்று மொழி எழுத்துருக்களில் காட்டுகின்றது. இதில் உள்ள கிரேக்க, எகிப்திய டெமோட்டிக் எழுத்துருக்களைக் கொண்டு ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களை ஆய்வாளர்கள் உடனே மொழிபெயர்த்து ஒலியை அறிந்தனர். இதுவே விடைகாணாது இருந்த பல எகிப்திய ஆராய்ச்சிகளுக்கு விடையளிக்கும் மந்திரக்கோலாக அமைந்தது. இந்த ரொசேட்டா கல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் தான் உள்ளது.

    ​asu3
    இறந்தோர் புதைக்கப்படுவர் அல்லது எரிக்கப்படுவர். ஆனால் எகிப்திய நாகரிகமோ அரச குடும்பத்தினரையும் முக்கியஸ்தர்களையும் பாடம் செய்து மம்மியாக்கி அவர்களது உடலை நீண்ட காலம் பாதுகாக்க வழி செய்தது. அந்த வகையில் இந்த பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கி.மு 1250ஆம் ஆண்டில் எகிப்தில் புகழ்பெற்ற பாடகியாகத் திகழ்ந்த கத்தேபெத் (Katebet) என்ற பெண்மணியின் உடல் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 3250 ஆண்டுகள் பழமையான இந்த மனித உடல் இந்த அருங்காட்சியகத்திற்குப் புகழ்சேர்க்கும் அரும்பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது.

    ​asu4

    கிரேக்க சிற்பக்கலை வியக்கத்தக்கது. மேற்குலகின் எல்லா பெரிய அருங்காட்சியகங்களிலும் கிரேக்க சிற்பங்கள் இல்லாத காட்சிப்பகுதி இருக்காது என உறுதியாகச் சொல்லலாம். ஆக, பிரித்தானிய அருங்காட்சியகம் மட்டும் விதிவிலக்கா என்ன? கிரேக்கத்தில் செதுக்கப்பட்ட ஏராளமான சிற்பங்கள், சிதைக்கப்பட்ட சிலைகளின் எச்சங்கள் ஆகியவற்றோடு, கட்டப்பட்ட ஒரு கோயிலையும் அருங்காட்சியகத்தின் உள்ளே நாம் காணலாம். கி.மு.5ஆம் நூற்றாண்டில் ஏதன்ஸ் நகரின் அக்ரோபோலிஸ் பகுதியில் சிதைந்த பார்தேனோன் (Parthenon) கோயிலின் சுவர்களும் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரான கிரேக்க மனிதர்களின் தத்ரூபமான வடிவங்களை இந்த சுவர் சிற்பங்கள் நமக்கு வழங்குகின்றன.

    asu5

    மேலே குறிப்பிட்ட அரும்பொருட்கள் மட்டுமன்றி இந்திய, சீன, கிழக்காசிய, ஐரோப்பிய, தென் அமெரிக்க அரும்பொருட்கள் ஏராளமாக இந்த அருங்காட்சியகத்திற்குள் உள்ளன. வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு பிரித்தானிய அருங்காட்சியகம் ஒரு சுவர்க்கலோகம் தான். ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல. பொது மக்களுக்கும் ஏராளமான தகவல்களை வழங்கும் ஒரு ஆய்வுக்களஞ்சியமாக இது திகழ்கின்றது. என்றென்றும் மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திகழும் ஒரு அருங்காட்சியகம் இது. நுழைவுக்கட்டணம் பெருவதற்கு நிற்கின்ற நீண்ட வரிசையைப் பார்த்தாலே நமக்கு தலைசுற்றிவிடும் என்றாலும் வரிசையில் நின்று கட்டணம் கட்டி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்க்கும்போது உலக நாகரிகத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டு வந்த மன திருப்தி நிச்சயம் ஏற்படும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . . .(236)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.  ஒரு சில வார இடைவெளிக்குப்பின் இம்மடல் உங்களை நாடி வருகிறது. நான் மிகவும் முனைப்பாக ஈடுபட்டிருந்த ஒரு செயல் முடிவடைந்து விட்டது எனும் மகிழ்வில் ஆர்ப்பரிப்பதற்காகக் காத்திருந்த நான் காலத்தின் கோலத்தினாலும் சில மனிதாபிமானமற்ற வெறியர்களின் செயலாலும் கனத்த இதயத்தோடு இம்மடலை வரைகின்றேன்.உள்ளத்தில் ஓர் பதைபதைப்பு, உணர்வில் ஓர் துடிதுடிப்பு. கடந்த திங்கட்கிழமை எனது பேத்தியை மகனின் இல்லத்தில் சென்று பார்த்து விட்டு இரவு நேரம் கடந்து வந்ததினால் நேராக படுக்கைக்குச் சென்று விட்டோம் நானும் எனது மனைவியும்.அடுத்தநாள் காலை முதல்நாள் எனது பேத்தி சிறிது உடல்நலம் குன்றியிருந்ததினால் அவள் எப்படியிருக்கிறாள் என்று கேட்பதற்காக எனது மகனுக்கு போன் செய்தேன். காரில் வேலைக்குப் பயணித்துக் கொண்டிருந்த என் மகன் பேத்தி இப்போது நலமாக உள்ளாள் என்று கூறினான்.

    அடுத்து “பயங்கரவாதத் தாக்குதல் மிகவும் பாரதூரமானது அல்லவா?” என்றதும் “எங்கே? எப்போது?” எனும் கேள்விகள் என்னிடமிருந்து “மான்செஸ்டரில், நேற்று இரவு 10.45மணியளவில், நியூஸ் பார்க்கவில்லையா?” என்றான் மகன், உடனடியாக அவனது சம்பாஷணையைத் துண்டித்து விட்டு அவசரமாக தொலைக்காட்சிப் பெட்டியைத் திருகினேன். அப்போதுதான் திங்கட்கிழமை இரவு மான்சேஸ்டர் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பயங்கரம் புரிந்தது. 22 வயதே நிரம்பிய இளைஞன் பதின்ம வயது நிரம்பிய பாலகர்கள் பலர் தமது அபிமானத்துக்குரிய அமெரிக்கப் பொப்பிசைப் பாடகியான அரியானாவின் இசைநிகழ்ச்சியைப் பார்க்கப் போயிருந்தோரைப் பழிவாங்கும் படலமாகத் தன்னை ஒரு தற்கொலைக் குண்டுதாரியாகப் பயன்படுத்தி நிகழ்த்திய பயங்கரவாதச் செயல்.

    ஐக்கிய இராச்சியம் முழுவதுமே அதிர்ந்து போயிருந்தது. 22 பேர் உயிரிழந்து சுமார் 60 பேர்வரை காயமடைந்து மூர்க்கத்தனமான எதுவிதமான காரணங்களுமின்றி நடத்தப்பட்ட இப்பாதகச் செயலால் பாதிக்கப்பட்டார்கள்… குழந்தைகளை இழந்த பெற்றோர்கள், பெற்றோர்களை இழந்த பாலகர்கள் என இழப்புகளின் மத்தியில் தவித்துக் கொண்டிருந்தது மான்செஸ்டர் எனும் மாபெரும் நகரம். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒருவகை மனோவியாதிக்குட்பட்ட இத்தகைய எண்ணம் கொண்டோர் அடுத்தவர் உயிரை அதுவும் பதின்ம வயதுப் பாலகர்களைப் பழிவாங்குவது உள்ளத்தின் அனைத்துப் பகுதிகளையும் வலிக்கப் பண்ணுகிறது .

    மதம் என்பது உருவாக்கப்பட்டதே மனித சமுதாயத்தை மனிதாபிமானம் எனும் ஒரு கோட்பாட்டுக்குள் வைப்பதற்காகவே !  எந்தவொரு மதமும் எப்போதும் கொலை,களவு, சூது, பெண்ணடிமை என்பனவற்றை நியாயப்படுத்தியது கிடையாது. இம்மதத்தினை மக்களுக்கு போதிக்கிறோம் என்று கூறி இம்மதங்களின் காவலர்கள் என்று கூறிகொள்வோரில் சிலர் தம் மனம் போன போக்கிற்கு இம்மதங்களை விளக்குவதனால் மக்களிடையே உருவாக்கும் பேதங்களே பல குற்றங்களுக்கு அடிகோலுகின்றன.

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு” என்றான் ஒருவரி தந்து பலபொருள் சொன்ன வள்ளுவப் பெருந்தகை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய அவ்விளைஞனின் பின்னணியை எடுத்துப் பார்த்தால் புரியும்.

    லிபிய நாட்டில் கேர்னல் கடாபி சார்வாதிகாரம் புரிந்து வந்த வேளை அந்நாட்டின் சர்வாதிகாரக் கொடுமைகளில் இருந்து தப்பி இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியவரே இவ்விளைஞனின் பெற்றோர். இங்கிலாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இங்கிலாந்துப் பல்கழகத்தில் நுழைந்த இவ்விளைஞன் தமது குடும்பத்தின் உயிரைக் காப்பதற்குத் தஞ்சமளித்த நாட்டின் சில இளந்தளிர்களின் உயிரைப் பறித்ததுதான் இந்நாட்டிற்கு அவனளித்த நன்றியறிதலாகும்.

    சரி இனி இத்தகைய தக்குதல்களினால் ஏற்படும் பின்விளைவுகளைப் பார்ப்போம். கடந்தவருடம் நடைபெற்ற பிரெக்ஸிட் எனப்படும் சர்வஜன வாக்கெடுப்பினால் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தில் மக்களிடையே ஒருவிதமான பிரிவு தோன்றியிருந்தது. வெளிநாட்டில் இருந்து ஐக்கியைராச்சியத்துக்கு வந்து குடியேறியவர்கள் இங்கிலாந்து தேசமக்கள் தம்மை அந்நியதேசத்து மக்களெனும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் எனும் வகையில் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். இப்பிரிவுக்கு இங்கிலாந்தின் இனத்துவேஷ கட்சிகளைச் சார்ந்தவர்கள் தூபமிட்டுக் கொண்டிருந்தார்கள். இத்தகைய தாக்குதல்கள் அத்தகைய தீவிரவாத சக்திகளின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பவையாக அமைகின்றன.

    அடுத்து ஐக்கிய இராச்சியம் இன்னும் மூன்று வாரங்களில் பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது, தேர்தல் பிரச்சாரம் சூடாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தான் இத்தகைய தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. தேர்தலில் கட்சிகளின் உண்மையான் அரசியல் நிலைப்பாடுகளைக் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சியின் மீது பொதுமக்களுக்கு ஒருவிதமான சாயத்தைப் பூசுவது போன்றே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலின் விளைவு என்றே கருத வேண்டியதாகவுள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் தேர்தல் வெற்றியானது ஒருவகையான இனத்துவேஷத்தைக் கிளறிவிட்டிருந்தது என்றே கூறவேண்டும். அவர் இப்போது தனது நிலைப்பாட்டை சிறிது தீவிரமற்ற ஒரு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாலும் அவரது வெற்றியின் பின்னணியில் ஒருவகையான வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான குரல் இருந்தது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாகும். இஸ்லாம் எனும் மதத்தினருக்கு எதிராகச் செய்யப்படும் பிரசாரங்கள் வெறும் பிரசாரங்களாகவே இருந்தாலும் இத்தகைய தாக்குதல்கள் அப்புனித மதத்தின் மீது அவதூற்றைப் பரப்பும் ஒரு செய்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிரானவர்களாகவும், அனைத்து மதத்தினரோடும், தாம் வாழும் ஐக்கிய இராச்சியத்தின் உண்மையான விசுவாசிகளாக இருப்பினும் ஒருவகை அச்சத்திலேயே வாழ்கிறார்கள். அந்நிலையை மேலும் நிரூபிக்கவே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உதவும்.

    இத்தாக்குதலைத் திட்டமிட்டுச் செய்தது ஒரு தனிநபரல்ல; அவரின் பின்னணியில் ஒரு நாசகாரக் கும்பல் இயங்கியுள்ளது என்பது இங்கிலாந்து பாதுகாப்புக் குழுவினரின் கணிப்பாகிறது. இத்தாக்குதலின் நோக்கம் எதுவென்று எண்ணிச் செய்யப்பட்டதோ அதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. ஆம், இத்தாக்குதல் மக்களுக்கிடையே பேதங்களை உருவாக்குவதற்குப் பதிலாக அனைவரையும் இணைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். இத்தாக்குதலை அடுத்து மனிதர்களுக்கிடையே கட்டப்பட்ட மனிதாபிமானம் அனைவரையும் உணர்ச்சிக்களிப்பில் மூழ்கவைத்துள்ளது. மன்செஸ்டர் நகரில் இயங்கும் பல டாக்ஸி வண்டிகள் இலவசமாக இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை அவர்கள் வேண்டும் இடத்துக்கு கொண்டு சென்று விட்டமை, எந்தவித வேற்றுமையும் காட்டாது பொதுமக்கள் தாக்குதலில் அகப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிட வசதிகள் என அனைத்துத் தேவைகளுக்கும் முன்நின்று உதவியமை,வைத்தியாசலைகள், மற்றும் அம்பியூலன்ஸ் சேவையினருக்கு உணவு, குடிபானம் என்பன வழங்கி உதவியமை எனப்பல்வேறு வகைகளில் மனிதாபிமானம் மேலோங்கி நின்றதையிட்டு பிரதமர் முதல் அனைவரும் பெருமையுடன் மெச்சுகிறார்கள். அது மட்டுமன்றி ஓய்வில் இருந்த வைத்தியர்கள், தாதிமார், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் தாமாகவே முன்வந்து சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது..

    மிகவும் குறிப்பிடக்கூடிய விடயம் எது தெரியுமா? இஸ்லாம் எனும் மதத்தின் பெயரால் பல உயிர்களைக் கொலைசெய்த அந்த இஸ்லாமிய இளைஞனா? அன்றி தாக்குதலகப்பட்ட அனைவருக்கும் தம்மாலான அனைத்து உதவிகளையும் புரிய முன்வந்த மான்செஸ்டர் நகர் வாழும் பல இஸ்லாமிய மக்களா? யார் உண்மையான இஸ்லாமியர்?

    ஒன்று மட்டும் உண்மை. மனிதாபிமானத்துக்கு மதம் கிடையாது. கடைசியில் ஜெயிப்பது மனிதம் மட்டுமே ! பயங்கரவாதம் அல்ல!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”காபி குடிப்பதேன்! , காலை சுறுசுறுப்பை,
    கோபிகா கண்ணன் கொடுக்கையில், -டோபிகா(வண்ணான்)
    வாலா மனவழுக்கில்(மனதின் அழுக்கை) வெண்மை பளிச்சிட,
    மாலா(திருமாலா) எமையும் மடி(வண்ணாமடி)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ராதா சமேதராய் ரங்கன், விஜயருக்கு
    கீதா சமேதராய் , கண்ணன்கோ -மாதாக்கு
    பாதா சமேதர், பலவடிவம் ஏற்றும்ய
    சோதா சமேதரென்றும் சேய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கை :- போதை
    தலைக்கேற கண்ணப்பர் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் போரென்றாள் மாது”….!

    ’’ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில்: – மாலிங்கு
    மாதை இடுப்பேந்தி காதல்கூத் தாடுகிறான்
    கீதை வரிகள் மறந்து….கிரேசி மோகன்….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (10)

    க.பாலசுப்பிரமணியன்

    ஆசைகளின் வடிவங்கள்

    திருமூலர்-1

    மனிதனுடைய மனத்தில் எத்தனையோ வகையான ஆசைகள் பிறக்கின்றன. ஆனால் பெரியோர்கள் அவைகளிலே நம்மைப் பின்னித் துயரத்தில் தள்ளும் ஆசைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றனர். – மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று. இந்த மூன்றும் ஒரு மாயவலையில் சிக்க வைத்து அவன் மனத்தின் அமைதியை அறவே அழிக்கின்றன.

    ஓர் நண்பர் சென்னையிலே வீடுகள் பல வாங்கியிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் அவருக்குப்  பெரும் குழப்பம் – அவைகளை என்ன செய்வதென்று. அவர் செல்லும் “வீட்டிற்கு” இந்த வீடுகளை உடன் எடுத்துச் செல்ல முடியாத நிலை. இந்த மண்ணாசையால்  அவர் பெற்றது துன்பம் தான் – கடை நாட்களில் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைந்தே அவர் நிம்மதி அழிந்தது.

    மண்ணாசையில் மேலும் மேலும் நிலங்களையும் வீடுகளையும் வாங்கிவிட்டு முழிக்கின்றவர் எத்தனை பேர்!

    திருமூலர் சொல்கின்றார்

    ” மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது

    மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்

    மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்

    சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.“

    மாட மாளிகைகளைக் கட்டிவிட்டு, பல்லக்கில் படுக்கைவிரித்து உறங்கி, பல பேர்களுக்கும் கோடிகோடியாகத் தானம் வழங்கினாலும், அவனுக்கு இறைவன் பெயரை நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

    இந்தத் துயர மாயவலையிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லும் பட்டினத்தார் கேட்கின்றார் :

    “ஆசையாய் பாசத் தகப்பட்டு மாயாமல்

    ஓசைமணித் தீபத்தி லொன்றி நிற்ப தெக்காலம்?”

    ஒரு முறை ஒரு பேராசைக்காரன் இறைவனிடம் வேண்டுகிறான் – கண்ணுக்கெட்டியவரை உள்ள பூமிக்கு அவன் சொந்தக்காரனாக வேண்டும் என்று.

    அவனுக்கு தரிசனம் கொடுத்த இறைவன் கூறுகிறார். “நீ இன்று காலை முதல் ஓடத் தொடங்கு. எவ்வளவு தூரம் உன்னால் சென்று மாலை கதிரவன் மறைவதுற்குள் இங்கு வருகின்றாயோ அவ்வளவு நிலமும் உனக்குச் சொந்தம்”.

    அவன் காலையில் ஓடத்தொடங்குகின்றான். மனம் இன்னும் கொஞ்ச தூரம் இன்னும் கொஞ்ச தூரம் என்று அவனை ஊக்குவிக்கிறது. மாலை மூன்று மணி அளவில் அவன் நினைக்கிறான் தன்னால் புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவிட முடியுமா என்று.!

    வேக வேகமாகத் திரும்பிகின்றான். ஓடுகிறான், ஓடுகிறான். .மூச்சு விட முடியாமல் கிழே விழுகின்றான். இறைவன் அவனுக்கு கொடுத்த வரத்தை அவனால் சரியாக உபயோகிக்க முடியவில்லை. இதுதான் நம்  வாழ்க்கையின் நிலையும்.

    தெளிவின்றி வாழ்க்கையை ஒரு ஒட்டப்பந்தயமாக நினைத்து ஓடுகின்ற பல மனிதர்கள் பின்பு மனம் வருந்தி “இதற்காகவா நாம் இப்படி ஓடினோம்? இவ்வாறெல்லாம் பாடுபட்டோம்?” என்று நினைத்து வாழ்க்கையில் விரக்தி அடைகின்றனர். இந்த நிலையை    அழகாக வர்ணிக்கின்றார் திருமூலர்:

    கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்

    அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்

    விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

    கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.

    ஐம்பொறியின் ஆசைகளுக்கு உணவிட்டு அடங்கிய நெஞ்சம் தன்னைத்தானே குறைகூறிக்கொள்கின்ற நேரம் வரும்பொழுது காலம் கடந்து விடுகின்றது. இந்த அறிவு நமக்கு முன்னமேயே வந்திருக்கக் கூடாதா என்றும் தோன்றுகின்றனது. அப்படிப்பட்ட ஒரு நெஞ்சின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் பட்டினத்தார்:

    சந்தனமுங் குங்குமமுஞ் சாந்தும் பரிமளமும்

    விந்தைகளாய்ப் பூசிமிகு வேடிக்கை பொய்யாரக்

    கந்தமலர் சூடுகின்ற கன்னியருந் தாமிருக்க

    எந்தவகை போனாயென்  றெண்ணிலையே நெஞ்சமே 

    வாழ்வின் உண்மை நிலை பற்றி அவர் எவ்வாறு விளக்குகின்றார்?

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

    மடக்கொடியாரோடு மத்தணங் கொண்டார்

    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

    கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!

    அநித்தியமான இந்த வாழ்வை நித்தியமாக நம்பி நாம் போற்றும் பொழுது இதன் நிலையற்ற தன்மையை நாம் மனத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியம்

    (தொடரும்)

    Share
  • குழந்தையின் குரல்

    பெருவை பார்த்தசாரதி

    crying-baby

    கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பர்

    குழந்தையில்லா வீட்டில் குதூகல இருக்காதெனலாம்..!

     

    குடும்பமொன்றில் குழந்தையின் குரலொன்று கேட்கநீ

    கோடி புண்ணியம் செய்திருத்தல் வேண்டுமம்மா..!

     

    பெருஞ்செல்வ மெளிதில் கிடைக்கும் குழந்தையெனும்

    அருஞ்செல்வம் இறையருளால் மட்டுமே கிட்டும்..!

     

    மண்டியிட்டு மண்சோறு உண்டபல நாட்கள்..

    வேண்டியவரம் கேட்டு கும்பிட்டபல கோவில்கள்..

     

    உள்ளம்குளிர நீராடிய புண்ணிய திருக்குளங்கள்..

    பிள்ளை வரம்வேண்டி பித்தாக அலைந்த நாட்கள்..

     

    இவை யனைத்தும் வீணாகவில்லை யொருநாள்..

    அவை யனைத்துப் பலனுமுடன் பலித்தது..!

     

    கும்பிடவந்த சாமியிடம் குழந்தைவரம் கேட்கும்போது..

    குழந்தையின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினேன்..

     

    வேண்டுவோர்க்கு வானத்தில் எழும் அசரீரிபோல..

    வேண்டாமென வீசிச்சென்ற குழந்தையினழு குரலொடு..

     

    அரும்புமலர் சோலைதனில் இறையருட் கொடையால்..

    ஆதரவின்றிக் கிடந்தன்று பிறந்த குழந்தையொன்று..!

     

    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளைபோல்..

    பெரிதாக அரியசெல்வமென கிட்டிய தெனக்கும்..!

     

    அன்னையின் பிரசவலிகூட மறக்கும்…குழந்தையின்

    அழுகுரல் கேட்டவுடன்..பட்டதனைத்தும் மறந்தேன்..!

     

    குறையேதும் வலியேதும் இல்லாமல் குழந்தையொன்று..

    இறையருளால் பெற்றதுபெரும் பேறென்றன் பாக்கியமே..!

     

    கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்ததுபோலென்

    குழந்தையின் குரல்கேட்டால் ஓடோடி வருவேன்நான்

     

    குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளா தவர் . . . .எனும்

     

    ஐயன் வள்ளுவன் கூற்றுக் கிணையாக

    ஐயமுற வலிமை சேர்த்தோர் ஆருமில்லை

     

    இவ்வுலகில்..!

     

    தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “குழந்தையின் குரல்”

    நன்றி கவிதைமணி வெளியீடு::22-05-17

    படஉதவி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • மருத்துவ மேற்படிப்பிற்கான கட்டணங்கள் பற்றி அரசு அறிவிப்பு ஏற்கக்கூடியதா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மருத்துவ மேற்படிப்பிற்கான கட்டணங்கள் பற்றி அரசு அறிவிப்பு ஏற்கக்கூடியதா?
    மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ள, அரசு ஒதுக்கீட்டிற்கும் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டிற்கும் தனித்தனி கட்டணம் என்ற வகையில் கட்டண விகிதங்கள் நிர்ணயிப்பது வருந்தத்தக்கது . இதனால் மாணவர்களின் சுமையை அதிகமாக்கக்கூடியதாகவே இருக்கும். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புறங்களில் பணி செய்யவேண்டிய சூழலில், அவர்கள் மேற்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தால், ஆண்டிற்கு 12 /13 இலட்சம் என எப்படி கட்டணம் செலுத்த முடியும்? இதைத் தவிர்த்து தங்கும் விடுதி செலவு, உணவு, போக்குவரத்து போன்றவற்றின் அதிகப்படியான செலவு அவரவர் விருப்பம்போல் செய்துகொள்ளலாம். தரம் மிகுந்த மருத்துவர்களை உருவாக்கவேண்டும் என்ற நல்லதொரு செயல் திட்டத்திற்கு இதுபோன்ற முட்டுக்கட்டைகள் பாதகமாக அல்லவா இருக்கும்? அரசு ஒதுக்கீட்டைப் போன்றே மற்ற அனைத்து ஒதுக்கீடுகளுக்கும் பொதுவாக குறைவான கட்டணங்களை நிர்ணயித்து திறமை மிகுந்தவர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. உயிர் காக்கும் மருத்துவத்தைப் பொறுத்தவரை, பொருளாதார நோக்கில், வருமானம் சம்பாதிப்பதைக் குறியாகக்கொண்டு கல்லூரி நடத்துவது ஏற்புடையதல்ல.

    அனைவருக்கும் 12ஆம் வகுப்புவரை இலவச கல்வி என்று பல மாநிலங்கள் செயல்பாட்டில் இருக்கும்போது ஒன்றாம் வகுப்பிற்கு 4000 ரூபாய், 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு கட்டணங்கள் இருப்பது அரசின் கொள்ளைகளில் உள்ள குளறுபடிகளைக் காட்டுகிறது. 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளும் அரசுடைமையாக்கப்படவேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 112-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    working women

    புன்னகை சிந்தும் வனிதையர் குழாத்தை ஆசையாய்ப் புகைப்படம் எடுத்து வந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மங்கையரின் பங்கயக் கைகள் இப் பாரில் செய்யாத பணியில்லை. ஒரு பெண், தனக்கென வாழ்வதைக் காட்டிலும் தன்னைச் சார்ந்தோர்க்காக  வாழ்வதே அதிகம். பிஞ்சுக் குழந்தையை நெஞ்சிலணைத்துத் துயில்கொள்ளச் செய்யும் அவளின் அருஞ்செயலில் தாய்மையின் தூய்மை தெரிகின்றது.

    இனி, கவிதைகளை நோக்குவோம்! 

    ***

    ”மிஸ். இந்தியா போட்டியை மிஸ் செய்த அழகிகள் நாங்கள். கழிப்பறையே எங்கள் இருப்பறை. குபேரர் கொடுக்கும் பிச்சையில் கும்பி நிரப்பும் குசேலர் நாங்கள்” என வேதனைக் குரல் எழுப்பும் விளிம்புநிலை மாதரைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில்.

    மிஸ். இந்தியா!

    உலக
    அழகிப் போட்டியில்
    இதுவரைக்
    கலந்து கொள்ளாத நான்தான்
    மிஸ். இந்தியா!
    என்னுடலில் ஓடுவது
    யுக யுகமாய்ச்
    செந்நிறக் குருதி அல்ல!
    கறுப்பு ரத்தம்!
    சூரிய பகவான்
    கரியைப் பூசிக் கருப்பராகி
    உரிமை பறிபோய்
    ஒதுக்கப்பட்ட குடிமக்கள்
    நாங்கள்!
    கழிப்பறையே எமது
    இருப்பறை!
    கழுவிச் சுத்தம் செய்வதெம்
    பொறுப்பு!
    தெருக்குப்பை அள்ளுவான்
    என் புருசன்!
    பள்ளிக்கூட முற்றத்தில்
    செருப்பு தைப்பான்
    அருமை மகன்!
    குபேரர் கொடுக்கும் பிச்சை
    அமுதில்
    கும்பி நிரப்பும்
    குசேலர் நாங்கள்!
    அனுதினம்
    கிடைக்கும் கூலியை மதுக்
    கடையில் கொட்டி
    குடி வெறியில்
    அடிப்பான் கட்டிய புருசன்!
    குடிமக்கள் எங்களுக்கு
    வீட்டிலும் சிறை!
    விடுதலை
    நாட்டிலும் சிறை!

    ++++++++++++++

    ”மன்பதையில் உயர்ந்த செல்வம் மழலைச் செல்வமே. ஏழை எம் வீட்டில் எமை வாழவைக்க முளைத்த வாழைக் குருத்து அது! எம்மிடம் வளமான மாடி வீடில்லைதான்; ஆனால் வாடிநிற்கும் பிள்ளையைத் தாங்கிப்பிடிக்கத் தளராத அன்புண்டே” எனும் வனிதையரின் வாஞ்சைக் குரலைத் தன் கவிதையில் ஒலிக்கவிட்டிருக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    குழந்தைச் செல்வம்

    ஏழையெங்கள் இல்லத்திலே
    வாழைக்குருத்து முளைத்ததுவே
    பாழுமெங்கள் வாழ்வினிலே – செல்வ
    பேழையாய் வந்துச் சேர்ந்ததுவே

    தொட்டிலில் இட்டிட வசதியில்லை
    கட்டிலில் போட்டிட வாய்ப்புமில்லை
    கட்டிய துணிக்கு மாற்றுயில்லை – இருந்தும்
    மட்டிலா மகிழ்ச்சிக்குங் குறைவுமில்லை

    எட்டு மாடி வீடு கட்டி-அதில்
    பட்டு விரிப்போடு குளிரூட்டி
    தொட்டு நிலா காட்டி – தினம்
    ஊட்டிடச் சோறு கிட்டுவதில்லை

    இருந்தும்…

    வெட்டவெளியே வீடாகும்
    கொட்டும் சூரியன் விளக்கேற்றும் – அன்னை
    வேர்வைத்துளி பன்னீர்த் தெளிக்கும் – அவள்
    சேலை தினமும் தூளி கட்டும்

    இலவம் பஞ்சில் செய்த மெத்தை
    இல்லை என்கிற போதிலுமே
    உலவும் தென்றல் வாசல் வந்து
    குளிரும் சாமரம் வீசி நிற்கும்

    பட்டு நிலா பாய்விரிக்கும்
    வெட்டவெளி உண்டு -அது
    நித்தமிங்குக் காட்டும் பல
    வித்தைகளும் உண்டு

    கட்டி, இன்பங்கொட்டி –
    இதழ்தொட்டு முத்தமிட்டு
    விளையாடபெரும் சுற்றமுண்டு; அவர்
    காட்டும் அன்பும் நன்று

    மாடி வீடும் மெத்தையணையும்
    காட்டிடாத நிம்மதியை
    வாடி நிற்கும் காலந்தன்னில் – அன்னை
    மடியின் அன்பு சுகந்தந்திடுமே!!!

    ***********

    ”கண்ணுங் கருத்துமாய்க் குடும்பம் காத்துக் குழந்தைகள் பேணும் நங்கையரை முற்றாய் நம்பிடு மானிடனே!” என்று நங்கையரின் சார்பாய் நல்வார்த்தைகள் உதிர்க்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நம்பிடு நங்கையரை…

    வேலையாய் வெளியே சென்றாலும்
    வெட்டியாய்ப் பொழுதைக் கழித்தாலும்,
    நாலுந் தெரிந்த ஆண்மகனும்
    நம்பிட வேண்டும் பெண்ணினத்தை,
    காலைச் சுற்றிடும் பிள்ளைகளை
    கண்ணும் கருத்துமாய்க் காப்பதெல்லாம்
    வாலைக் குமரி வந்தமனையாள்
    வணங்குந் தாய்போல் வனிதையரே…!

    **************

    ”பசியைத்தவிர எமக்குப் பக்கத்துணை யாருமில்லை; அதற்காய் நாங்கள் அழவில்லை; புன்னகையைப் பொன் நகையாய்ச் சூடி அழுகையை அருங்காட்சியம் அனுப்பும் வீர மகளிர் நாங்கள்” என்று கம்பீர முழக்கமிடும் வீரக் காரிகையரை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ஆதலினால் சிரித்திருப்போம்

    வயிற்றுப் பசிக்கு இங்கே சோறில்லை!
    பிள்ளைச் செல்வத்திற்கு இங்கே குறைவில்லை!
    மண்ணில் பிறந்த காரணம் இன்னும் எங்களுக்கு
    விளங்கவில்லை!
    பசியைத் தவிர எங்களுக்கு பக்கத் துணை என்று
    யாருமில்லை!
    பசியை ருசித்ததால் கண்ணுறக்கம்
    கொண்டதில்லை!
    கண்ணுறக்கம் மறந்ததால் கனவுகள்
    கண்டதில்லை!
    ஆதலினால் கனவில் கூட வசதிகள்
    பார்த்ததில்லை!
    ஏழையாய் நாங்கள் பிறந்ததற்கு என்ன காரணம்
    தெரியவில்லை!
    இறைவா உந்தன் கருணைப் பார்வை இன்று வரை
    எங்கள் மேல் விழவில்லை!
    இருந்தும் நாங்கள் அழவில்லை!
    என் பெண் பெற்ற பெண்ணே!
    பொன்னாய் நீ கிடைத்தாய் !
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    ஒருவருக்கு உணவில்லை என்றாலும்
    உலகத்தை அழிக்கச் சொன்ன பாரதி
    வழி நடப்பாய்!
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    இன்று உன்னோடு புதிதாய் பிறந்தோம்!
    ஆதலால் நாங்கள் அழவில்லை!
    புன்னகை இனிப் பெண்களுக்கு
    பொன் நகையாய் ஆகட்டும்!
    அழுகை இனி அருங்காட்சியகம்
    போகட்டும்!

    ******************

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது வெறும் பேச்சு; உழைத்து, உழைத்து எங்கள் உடம்புதான் வீணாய்ப் போச்சு! என்றும் குமுறும் கோதையரைக் காட்டுகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கொடிது, கொடிது, இளமையில் வறுமை
    அதிலும், ஏழையாகப் பிறப்பதே கொடுமை
    ஏழை என்று பிறந்தாலே, உழைக்கும் உழைப்பாளி
    கையும், காலுமே உதவி; அது தருமே தினக்கூலி!
    வயிற்றுப்பசி குறைவானாலும், தீய பழக்கத்திற்குக் குறைவில்லை,
    இன்றோ பசியைப் போக்க, தண்ணீர்கூடக் குடிக்கக் கிடைக்கவில்லை
    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது வெறும் பேச்சு
    உழைத்து, உழைத்து எங்கள் உடம்புதான் வீணாய்ப் போச்சு!
    தெருக் கூட்டுவதும் , கழிப்பறை சுத்தப்படுத்துவதும் எங்கள் வேலை,
    கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் வெவ்வேறு வேலை
    காலைப் பசியாற, அம்மா உணவகமே, காலை உணவு
    பசி போக்க அரசு காட்டும் திட்டத்தில் ஓர் நல வாழ்வு!
    ஆளுக்கொரு வீடு, திட்டம் மறைந்து, மரத்தடியே வீடானது
    எங்கள் குழந்தைக்குச் சேலைத் தொட்டில் கட்டும் மரத்தடியானது
    நிலா வெளிச்சமும், மரக்கிளைகளும் கையசைத்துச் சிரிக்கும்
    இரவில் தென்றல் காற்றே சாமரம் வீசி நிற்கும்!
    ஏழையின் குடிசையில் மகிழ்ச்சிக்கு என்றும் அளவில்லை
    பெற்ற பிள்ளைகளுக்கும் என்றும் குறைவில்லை
    குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் பார்க்க நேரமில்லை
    ஏனோ எங்கள் வாழ்க்கைத் தரத்தினை நினைத்துப் பார்ப்பதில்லை!

    ***

    ஏழைமையுடன் தோழமை கொண்ட பாவையர் படும் பாட்டைத் தம் பாட்டில் பக்குவமாய் விளக்கியிருக்கிறார்கள் கவிஞர்கள்! பாராட்டுக்கள்!

    ***

    அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிற்றுக்கேனும் உணவு எனும் நிலையில் எத்தனையோ பெண்கள் தம் வாழ்வை வறுமைக்கு அடகுவைத்து மிகுந்த போராட்டத்திற்கிடையே வாழ்க்கைப் படகைச் செலுத்திவருகிறார்கள். அவர்களின் கலங்காத நெஞ்சுரமே அப்படகைக் கவிழாது காக்கும் துடுப்பு!

    ”வெயிலில் உழைத்து அவர்தம் மேனி  கறுத்திருக்கலாம்; ஆனால் அவர்கள் உள்ளத்தின் நிறமோ கள்ளமற்ற வெள்ளை! நாயுடன் நடைபயிலும் வசதிபடைத்த நகர நங்கையர்க்கு நடுவில் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடி உழைத்துண்ணும் இப்பெண்களே இவ்வுலகின் கண்கள்” என்று இப்பெண்டிரைக் கொண்டாடும் கவிதையொன்று!

    உழைக்கும் பெண்கள் உலகின் கண்கள்..!

    பெண்கள் முன்னேற்றமானது பேச்சள வில்தானோ
    கண்கள் கசங்காத நாளில்லை..!

    பணிக்குச் சென்றால்தான் எம்பசி தீருமென்று
    பலவிதப் பணிக்கும் செல்கிறோம்..!

    கல்மண் சுமந்து பெருங்கட்டிடங்கள் உருவாக
    நெல்மணி வயலிலுழைத்தும் வாழ்கிறோம்..!

    துவைப்பதும் சுத்தம் செய்வதும் பாத்திரம்
    துலக்குவது மெங்களிதர வேலையாகும்..!

    இடுப்பிலும் தலையிலும் இன்னலுறக் கைவண்டி
    இழுக்கும் வேலைகூடச் செய்வோம்..!

    அண்டை அயலூருக்குத் தினமுழைக்கச் செல்லும்
    அவலத்தையும் நாங்கள் பொறுப்போம்..!

    நாயுடனே நடைபயிலும்நகர நங்கைவாழ் மத்தியிலே
    வாயுடன் வயிற்றிற்கும் போராடுகிறோம்..!

    சுகம்காணும் எண்ணமுடன் சும்மாயில்லை நாங்கள்
    சோதனைகள் ஏற்பதற்கே பிறந்தவரே..!

    பிள்ளை சுமந்துகொண்டு உழைக்கும் வர்க்கமென
    வெள்ளை மனக்கறுமேனி மாந்தர்கள்யாம்..!

    முடமாகி வாழ்வில் முடங்காமல் வறுமையகலக்
    கூடையேந்தி கூவிபலவிற் கவும்செய்வோம்..!

    கல்யாணமானாலும் உழைத்து உழைத்து மனம்
    கல்லாகிய வர்க்கம் தானெனினும்..

    பற்றாக்குறைக் கூலியில் பகல்பூரா உழைத்துவிட்டுப்
    பற்றுடன் நல்லுறவோடுதான் வாழுகின்றோம்..!

    பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும்
    எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ..!

    நலிந்தால் வாழ்விலையென உழைப்பின் உயர்வை
    மெலிந்தயெங்கள் தேகமதைச் சொல்லுமென்பதை..

    களைபோக்குச் சிறுபயன் விளைக்க இவர்கள்
    உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
    ஒவ்வொரு துளியிலும் கண்டேன் – இவ்வுலகு
    உழைப்பவர்க்கு உரியதென் பதையே..!

    உழைக்கும் மகளிரை உயர்த்திப் பிடிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனக் குறிப்பிட்டுப் பாராட்டுகிறேன்.

    Share