Month: October 2017

  • தமிழிசைப் பண்கள் – முத்துத்தாண்டவர்

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    தமிழிசைப்பண்கள்
    **********************

    இசைத்தமிழின் தொன்மை – 80
    பழந்தமிழிசையில் பண்கள் 

    தமிழ் மும்மூர்த்திகள்
    *************************

    முத்துத் தாண்டவர் (1525-1625)
    அருணாசலக் கவிராயர் (1711-1779)
    மாரிமுத்துப் பிள்ளை (1712-1787)

    முத்துத் தாண்டவர் (1525-1625)

    muthuமுத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி ஆவார். ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.

    ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள்:

    அருணாசலக் கவிராயர் (1712-1779),
    மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787),
    முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.

    தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். 

    அநுபல்லவியை இணைத்து, பல்லவி – அநுபல்லவி – சரணம் என்ற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். 

    பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். 

    இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். 

    பல்லவி-அநுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

     இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். 

    மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். 

    முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். 

    இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில: 

    பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற்,
    புவனத்தில் வேறுமுண்டோ.

    இராகம் கல்யாணி, தாளம்ஜம்பை தாளம்

     ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு
    தெய்வ மிப்படியுண்டோ.

    இராகம் – தோடி, தாளம் – ஏக தாளம்

     சேவிக்க வேண்டுமையா – சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. இராகம் -ஆந்தோளிகா, தாளம் ஆதி தாளம். 

    சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும்.
    இராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுடை தாளம் 

    நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. இராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம் 

    இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். 

    தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. 

    சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தைப் பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். 

    அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. 

    ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். 

    இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். 

    அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். 

    தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். 

    தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி. 

    முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. 

    ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். 

    நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். 

    ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது. ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. 

    ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். 

    1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 98

    க. பாலசுப்பிரமணியன்

    இயற்கைசார் நுண்ணறிவு (Naturalistic Intelligence)

    education-1-1-1

    ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner)  அவர்களின் பல்முனை நுண்ணறிவுகளில் (Multiple Intelligences) எட்டாவதாக இடம் பெற்றுள்ள நுண்ணறிவு இயற்கைசார் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவு பல்லாயிரம் காலம் தொட்டு மனிதஇன மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த அகண்ட பூகோளத்தையும் அதைச் சார்ந்த நீர், நிலம், காற்று, செடி கொடிகள், மிருகங்கள் மற்றும் இயற்கை வளங்களைக் காப்பதற்கு இந்த நுண்ணறிவு மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. இன்று உலக அளவில் நாம் சந்திக்கும் பல பருவநிலை மாற்றங்கள் . நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்த நிலையில் நம்முடைய மனித இனத்தின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கு இந்த நுண்ணறிவைப் பற்றிய கல்வி, பயிற்சி மற்றும் திறன்கள் மிக அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றன.

    பொதுவாக இந்த நுண்ணறிவு உள்ளவர்களின் கவனம், ஆர்வம், ஈடுபாடு ஆகியவை இயற்கை நலன்களைப் போற்றுதல், காத்தல், பேணுதல், ஆகியவற்றில் அதிகமாக இருக்கும். இந்தத் திறனில் மேம்பட்டவர்கள் கீழ்கண்ட தொழில்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள்

    1. விவசாயம் (Agriculture)
    2. தோட்டக்கலை (Horticulture)
    3. மீன் மற்றும் நீர் வளம் (Fisheries and Marine Development)
    4. வானிலை (Meterology)
    5. வானியல் (Astronomy)
    6. நிலவியல் (Geography))
    7. தாவர இயல் (Botany)
    8. தொல்லியல் (Archeology)
    9. புவியியல் (Earth Sciences)(
    10. சூழலியல் (Ecology)
    11. மானிடவியல் (Anthropology)
    12. புதைப்படிமவியல் (Paleontolohy)
    13. பறவையியல் (Ornithology)

    இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களிடம் இருக்கக்கூடிய வெளிப்படையான திறன்கள் ஆர்வங்கள் :

    1. செடிகள்-மரங்கள் நடுதல் (Growing of plants/Trees)
    2. விலங்கினங்கள் வளர்த்தல் (care of Pet animals)
    3. தொட்டிகளில் மீன்கள் வளர்த்தல் (maintenance of aquarium)
    4. சுற்றுப் புறச் சூழ்நிலைகள் பற்றிய ஆரய்ச்சிகள் செய்தல் (Environmental Research)
    5. முகாமிடுதல், நடைப்பயணம் செய்தல் (Camping, Hiking)
    6. மலையேறுதல் (Mountaineering)
    7. இயற்கை வளங்கள், கனிமங்கள் சேர்த்தல் (collection of natural and mineral specciments)
    8. இயற்கை சார்ந்த புகைப்படங்கள் எடுத்தல் (Nature Photography)
    9. சுற்றலாக்கள் மேற்கொள்ளுதல் (Toursim)
    10. டிஸ்கவரி சேனல் போன்ற இயற்கைசார் படங்கள் பார்த்தல் (Visuals and serials relating to Nature)

    இயற்கைசார் நுண்ணறிவு உள்ளவர்களை NATURE SMART என்று பொதுவாக அழைக்கின்றனர்.

    இந்த இயற்கை சார்ந்த நுண்ணறிவு மற்ற சில நுண்ணறிவுகளுடன் இணைந்து வேலை செய்யும் பொழுது மிகச் சிறப்படைகின்றது. அப்பொழுது இயற்கை சார்ந்த உள்ளுணர்வுகள் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக ஒரு கவிஞனாக இயற்கை பற்றிய கவிதைகள் இயற்றுதல், ஒரு சமூக ஆர்வலனாக சுற்றச் சூழல் பற்றிய கருத்துக்களுக்களை வலுப்படுத்துதல், ஒரு விஞ்ஞானியாக விவசாயம் அல்லது விலங்கினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தல், ஒரு வனப் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்தல், ஒரு புகைப்பட நிபுணராக இயற்கை சார்ந்த படங்களை எடுத்தல் போன்ற பல தொழில்களில் ஈடுபாடுகொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இந்த வகையில் நாம் கீழ்கண்ட சிலரின் வாழ்க்கை வரலாறுகளை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்

    1. ரபீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore)
    2. எம். எஸ். ஸ்வாமிநாதன் (M. S. Swaminathan)
    3. சார்லஸ் டார்வின் (Charles Darwin)
    4. வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth)
    5. அலெக்சாண்டர் ஹம்போல்ட் )Alexander Humboldt)

    சிறிய வயது முதற்கொண்டே இயற்கை சார்ந்த ஆர்வங்கள் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு. முன்காலத்தில் நம்முடைய நாட்டில் பலர் இயற்கையைச் சார்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். நிழல்களை பார்த்து நேரங்கள் அறிதல், மண், பருவங்கள் பார்த்து பயிர்களை நடுதல், இயற்கையோடு இணைந்த உணவு முறைகள், வாழ்க்கை முறைகள்   இயற்கை மருத்துவங்கள் ஏற்றுக்கொள்ளுதல், நீர் நிலைகளை பராமரித்தல் போன்ற பல வாழ்க்கையோடு இணைந்து இருந்தன. இந்த அறிவு, குடும்பத்தில் மூத்தவர்கள் மூலமாகவும்,  சமுதாய நண்பர்கள் மூலமாகவும், நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கிடைத்து வந்தன. காலப் போக்கில் சமுதாய வளர்ச்சிக்காக பல இயற்கை சார்ந்த செயல்கள் கைவிடப்பட்டது மட்டுமின்றி அதற்கு எதிர்மறையான கற்றலிலும் செயல்களிலும் நம்முடைய கற்றல் மற்றும் செயல் போக்குகள் மாறிவிட்டன. அதனுடைய பலனை நாம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம்.

    தற்போதைய கல்வி முறையில் கற்றலில் போதுமான அளவிற்கு இயற்கையைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும் அதிவேகமாக அழிந்துவரும் இயற்கை சாதனங்களை பாதுகாக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டும் உச்ச நீதிமன்றம் கல்வி நிலையங்களில் உள்ள பாடத் திட்டங்களில் சுற்றுப்புற சூழல் பற்றிய கல்விக்கு கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம் தர வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இந்த உணர்வுகள் பள்ளியின் ஆரம்ப காலம் தொட்டு கல்லூரி பாடத் திட்டங்கள் வரை இணைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த உணர்வுகளைப் பற்றிய கருத்துக்கள் நேர்முகமாகவும் மற்ற கருத்துக்களோடு ஒருங்கிணைந்த வகையிலும்  திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஆயினும் நமது கல்வி முறையில் முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கருத்தும் அதில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கி நிற்பதால் சரியான அளவில் இந்தக் கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்பட வில்லை. மேலும் இதற்கான வழிமுறைகள் தகவல்களை அதிகமாகப் பரிமாறிக் கொள்ளுவதில்   கவனம் காட்டுவதால் நடைமுறையில் அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அளவில் வெற்றி பெற வில்லை. இது ஒரு வேதனைக்குரிய நிலை. இதில் மாற்றங்கள் ஏற்படுத்தி பள்ளி கல்லூரிகளில்; மட்டுமல்லாது பொதுவாக சமுதாய அளவில் இயற்கைசார் நுண்ணறிவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுய காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(187)

    -செண்பக ஜெகதீசன் 

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின். (திருக்குறள் -160: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்… 

    உடலை வருத்தி
    உண்ணா நோன்பிருப்போர்
    உயர்ந்தோரே…

    அவரிலும் பெரியோர்
    அடுத்தவர் சொல்லும்

    கொடுஞ்சொல் கேட்டும்,
    பொங்கிடாது
    பொறுமை கொள்வோரே…! 

    குறும்பாவில்… 

    பிறர் சொல்லும் இன்னாச்சொல் கேட்டும்
    பொறுமை மேற்கொள்வோர்,
    உண்ணா நோன்பிருப்போரைவிடப் பெரியோரே…!      

    மரபுக் கவிதையில்… 

    உரிய நேரம் உண்ணாமல்
    -உடலை வருத்தி நோன்பிருப்போர்,
    பெரியோ ரென்றே புவனமிதில்
    -பெருமை வந்து சேர்ந்திடுமே,
    தெரிந்தே கொடுஞ்சொல் பேசிவரும்
    -தீயோர் முன்னும் பொறுமைகாக்கும்
    அரிய மாந்தர் இவர்கள்தான்
    -அவரிலும் மேலாம் பெரியோரே…! 

    லிமரைக்கூ… 

    பெரியோராவர் நோன்பிருப்போர் உண்ணாமல்,
    இவரினும் பெரியோரே பொறுமைகாப்போர்
    பிறரின் கொடுஞ்சொல்லை எண்ணாமல்…! 

    கிராமிய பாணியில்… 

    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…

    வாயக்கெட்டி வயித்தக்கெட்டி
    பட்டினிகெடந்து நோம்பிருந்தா
    பெரியவருண்ணு பேருவரும்…

    அடுத்தவஞ் சொல்லும் கொடுஞ்சொல்லக்
    கேட்டபின்னும் கோவப்படாம
    பொறும காக்கிறவங்கதான்
    அவரமிஞ்சுன பெரியவங்க…

    அதால,
    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…!

     

     

    Share
  • கைப்பேசியினால் இழந்தவை

    -முனைவர் க. முத்தழகி

    muthazhagiசமூகம் சிறப்புற மனிதன் அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழவேண்டும். அவ்வாறு மனிதர்கள் வாழ்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர உண்மையான மகிழ்வு அவர்களிடம் இல்லை. மனித மனங்களில் இன்று மனிதநேயம் குறைந்துகொண்டே வருகிறது. மனிதர்கள் இன்று உறவுகளைத் தேடுவதைவிட ஊதியம் தேடுவதை நோக்கமாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். இயந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் மனிதர் ஒருவருக்கு ஒருவர் உரையாடி மகிழ்வது என்பது கடினமான செயலாக இருக்கிறது. அதனையும்விட மனித மனங்கள் சுயநலப்போக்கில் செல்கிறது. சாலையில் நடந்துசெல்லும் பொழுது சிறு விபத்து நிகழ்ந்தால்கூட நின்று பார்க்க முடியாத அளவிற்கு மனிதநேயம் பெருகிக்கொண்டு வருகிறது. இதனையும்விட நமக்கு ஏன் தேவையில்லா பிரச்சனைகள் என தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்களே அதிமாக இருக்கிறார்கள். அவ்வாறு தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்கள் இன்றைய நிலையில் கைப்பேசிக்கும், தொலைக்காட்சிக்கும், இணையத்திற்க்கும் தங்களை அடிமைப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவைகளுள் கைப்பேசியினால் இச்சமூகத்தில் நிகழும் அவலங்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    கைப்பேசி என்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதன் பயன் நமக்கு எவ்வகையில் இருக்கிறதோ அதே அளவில் அதில் தீமையும் உள்ளது என்பதையும் நாம்

    தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இவற்றுள் கைப்பேசியினால் இழந்து கொண்டிருப்பவைகளே அதிகமாக உள்ளது. 

    குழந்தைகள்

    குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு நம்மை ஈர்க்கக் கூடியது. அத்தகைய மழலை செல்வங்களின் மனனத் தன்மையை அதிகரிக்கக் கூடியது தாலாட்டுப் பாடல்கள். அத்தகைய தாலாட்டுப் பாடல்களை தாய் பாடும்பொழுது குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பு முழுமையாக வெளிப்படுவதுடன், உறவுமுறைகளையும் கூறிப் பாடுவதால் குழந்தைக்கு உறவு முறைகளையும் தன் குழந்தைக்குச் சுட்டிக்காட்டுகிறாள். இன்று குழந்தைகளுக்கு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கைப்பேசியினை தொட்டிலின் கீழ்வைத்துக் குழந்தையை தூங்க வைக்கின்றனர். இதில் தாயின் உணர்வு, அன்பு குழந்தைக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

    பாரதியார் குழந்தைகளை ஓடிவிளையாட வேண்டும் என்றார்.

    ஓடிவிளையாடு பாப்பா
    ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
    கூடிவிளையாடு பாப்பா
    ஒரு குழந்தையை வையாதே பாப்பா
    காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
    கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுவதும் விளையாட்டு
    என வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்.

    ஆனால் இன்றைய குழந்தைகளே ஓடியாடி விளையாடுவதையே விரும்புவதே இல்லை.

    கைப்பேசியினை கொண்டு
    காலையில் எழுந்தவுடன்
    முதல் வணக்க அலைபேசியில்
    அயல்நாட்டில் உள்ள அப்பாவுக்கு
    மாலை வந்தவுடன் மயக்கம்
    கைப்பேசியில் விளையாடுவதில்

    இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்  பாதிப்பு அடைகிறார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழக விரும்புவதும் இல்லை, மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழவும் தெரிவது இல்லை. இவர்களிடம் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துச்செல்ல வேண்டும். நாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வயதினை கருத்தில்கொண்டு வெற்றி, தோல்வி மற்றும் சரி, தவறு நான்கையும் பிள்ளைகளுக்கு அனுபவபூர்வமாக உணர்த்தவேண்டும். வாழ்க்கைப் பாடத்தைப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கப் போதுமான சுதந்திரத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றவர்கள் அறிவுறுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு எவ்விதமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை நாம் கண்காணிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

    தம்படம் (selfi) எடுத்தல்:

    இன்று கைப்பேசியில் புகைப்படம் எடுத்தல் என்பது எளிமையான ஒன்றாகும். இதில் இளமை முதல் முதுமை வரை ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலையில் இருக்கும் பரபரப்பில் தயக்கமின்றிப் புகைப்படம் எடுக்க மறப்பதில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் அதில் உள்ள ஆபத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். சுற்றுலாச் செல்லும் மாணவர்கள் தம்படம் எடுக்கும் ஆர்வத்தில் தாம் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்ற நிலையை மறந்து தன்னுடைய உயிரையும் இழக்கிறார்கள்.

    ஒரு கல்லூரியின் மாணவர்கள் சுற்றுலாச் சென்றபொழுது அங்கு நீராடச் சென்றுள்ளனர். நீராடிக்  கொண்டிருக்கையில் ஒருவருக்கு ஒருவர் தம்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தன்னுடன் வந்த நண்பன் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தமையைப் பார்க்கவில்லை. பின்பு அவர்கள் எடுத்த தம்படத்தை காணும் பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. தம்படம் எடுப்பதில் ஏற்படும் ஆபத்தினை குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

    அலுவலகங்களில்

    அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் கைப்பேசியை வைத்துக் கொண்டு மற்றவர்களின் நேரங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை உணர மறுக்கின்றனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயர் அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு சில அலுவலர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது கைப்பேசியில் புலனம் (வாட்ஸ் அப்) பார்ப்பதும், முகநூல் (பேஸ் புக்) பார்ப்பதும், தகவல்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இப்படிக் கைப்பேசியுடன் அலுவலர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தால் எங்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி எனப் பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.

    மருத்துவர் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி போட்டுள்ளார். அது முன்பே ஒருவருக்கு போடப்பட்ட ஊசி என்பதை பார்க்காமல் கைப்பேசியில் உரையாடிக் கொண்டு நோயாளிக்கு ஊசி போட்டமையால், அந்த நோயாளிக்கு எய்ட்ஸ் பரவியது. மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காக்கக் கூடிய இறைவனாக மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் செய்த கவனக்குறைவால் ஒருவரின் வாழ்கையே சீரழிந்துவிட்டது. நாட்டுப்பண் பாடும்பொழுது ஒரு மருத்துவர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காகத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். ஆகவே அலுவலர்கள் தங்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல் படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    விபத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள்:

    இன்று விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாக இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் கைப்பேசியினால் ஏற்படுவதே என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. வாகனம் ஓட்டும் பொழுது கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று கூறினாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். நம் அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டு இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால் இன்று ஒரு குழந்தையின் போட்டோ போட்டு,

    “அப்பா பிளிஸ்
    கைப்பேசியில் பேசிக்கொண்டே
    வாகனம் ஓட்டாதீர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் ஓட்டுநரிடம் உம்மை நம்பி உமது குடும்பம் உள்ளது என்பதையும், வாகனத்தின் உள்ளே நம்மைப்போன்ற பல குழந்தைகளின் குடும்பங்களும் உள்ளன என்பதும் உணர்வுப்பூர்வமாக ஓட்டுநருக்கு உணர்த்தப்படுகிறது. தலைக்கவசம் அணியப்பட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கே. ஆனால் வாகன ஓட்டிகளோ அந்த தலைக்கவசத்திற்குள் கைப்பேசியை வைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தனது உயிருக்கே ஆபத்து என்பதை தெரிந்துக் கொண்டே தங்கள் உயிருடனே விளையாடுகிறார்கள். ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசுவதினால் யாருக்கும் எந்த விதமான இழப்பும் ஏற்படப் போவதில்லை. இதனை உயிர்ச் சிந்தனையாக வாகன ஓட்டிகள் மனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

    இக்கட்டுரையில் கைப்பேசியினால் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய இழப்புகள் பற்றியும், தம்படம் எடுக்கும் ஆர்வத்தினால் ஏற்படும் இழப்புப் பற்றியும், அலுவலகத்தில் இருப்பவர்களின் கவனச்சிதைவினால் ஏற்படக் கூடிய இன்னல்கள் குறித்தும், வாகனங்கள் ஓட்டும் பொழுது கைப்பேசியினை பயன்படுத்துவதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், ஒரு சில கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 129-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    bull fight

    காளையும் காளையரும் ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் வேளையில் எடுத்த படம் இதுவென நினைக்கிறேன். புகைப்படம் எடுத்த திரு. யெஸ்ஸெம்கேவுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

    பகட்டோடு (காளை) தமிழர்க்குள்ள உறவு தலைமுறைகள் பலகடந்தும் தெவிட்டாது தொடர்ந்துவருவது. உழவுக்குடிகளாய் நம் மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டுக்கொரு பசுவும் காளையுமேனும் இருந்துவந்தன. அவர்களின் மாடாய் (செல்வம்) இருந்தவை இந்த மாடுகளே!

    இன்றோ உழவுத்தொழில் விரைந்து அழிந்துவரும் நிலையில் கால்நடைகளைப் பேணுவோரும் அருகிவிட்டனர். தமிழகத்தின் ஒரோவிடங்களில் ஏறுதழுவும் விளையாட்டில் பயன்படுத்துதற்கென்று சில நாட்டுக் காளையினங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. இக்காளைகளை நாம் காலத்தே பாதுகாக்கத் தவறினால் நாட்டு மாட்டினமே தமிழ்நாட்டில் இராது. அப்புறம் நாட்டுக் காளைகளை நாம் ஏட்டில்மட்டுமே காணும் அவலநிலை வாய்த்துவிடும்.

    இனி, படக்கவிதைப் போட்டிக்கு வருவோம்.

    காளையும் காளையரும் இணைந்திருக்கும் இப் புகைப்படத்தைக் காணும் நம் கவிஞர்கள் மண்மணம் கமழும் கவிதைகளை ஏந்திவருவர் என்ற எதிர்பார்ப்போடு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    *****

    ”வீரவிளையாட்டாம் ஏறுதழுவுதலை விவேகத்தோடு விளையாடுங்கள்; உயிர் விரயத்தைத் தவிருங்கள்!” என்று காளையர்க்கு அறிவுரைகூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காளைகளே…

    துள்ளிவரும் காளையைத்
    துடுக்கடக்கக்
    காத்திருக்கும் காளையர்-
    எள்ளளவும் பயமின்றி..

    காளையரே,
    வீர விளையாட்டு இதில்
    விவேகமும் சேர்ந்திருக்கட்டும்..

    விளையாடுங்கள் விளையாடுங்கள்
    வீரம்காண விளையாடுங்கள்-
    விரயம் வராமலே…!

    *****

    ”புகைப்படத்தில் ஒயிலாய் ‘போஸ்’ கொடுக்கும் இந்தக் காளை, சிராவயல் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்தது; அரளிப்பாறை இளைஞரை அலறவைத்தது; அலங்காநல்லூர் காளையரைக் கலங்கவைத்தது” என்று காளையின் பெருமையைக் கடைவிரிக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    எங்க ஊர் காளை:

    அஞ்சாது அனைவரையும் எதிர்த்து நிற்கும் காளை!
    ஆயிரம் பேர் வந்தாலும் அஞ்சாத காளை!
    சிராவயல் மஞ்சு விரட்டில் சீறிப் பாய்ந்த காளை!
    அரளிப் பாறை மஞ்சு விரட்டில் அஞ்ச வைத்த காளை!
    அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் செயித்து வந்த காளை!
    மேல் பாய்ச்சல், கீழ்ப் பாய்ச்சல் பழகி வந்த காளை!
    வெற்றி மேல்வெற்றிகளைக் குவித்து வந்த காளை!
    காளையரைக் கதிகலங்க வைத்த எங்க ஊர் காளை!
    துணிச்சலிலே தமிழருக்கு இணை இந்தக் காளை!
    அன்புக்கு மட்டும் அடி பணியும் காளை!
    அடக்க நினைப்பவர்க்குக் காலனாகும் காளை!

    *****

    புழுதிப் பொடியாடி நிற்கும் இந்தக் காளை, அருகிருக்கும் காளையர்க்கு நன்றி நவில்கிறதோ என்று ஐயுறும் திரு. கா. முருகேசன், ”காளையே நீ எமக்கு நன்றி சொல்ல வேண்டா! எம் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும் உனக்கும் பசுவுக்கும் நாங்களல்லவோ எம் நன்றியறியதலைப் புலப்படுத்தவேண்டும்” என்று நெகிழ்கின்றார்.

    காளையும் – மனிதனும்

    காளை – காளையர்
    எங்கிருந்து வந்தது இந்தப் பெயர் பொருத்தம்!

    காளையை அடக்குபவனும்,
    கல்லைத் தூக்குபவனும்,
    கன்னியின் கழுத்தில் மாலையிடலாம்
    எங்கிருந்து வந்தது இந்த எழுத்து ஒற்றுமை!

    இது என்ன மரபா? இல்லை வழக்கமா?

    உலகிற்கே சொன்னோம் உணவு முறையை
    ஏர் பிடித்து!
    இன்று ஆள் இல்லை ஏர் பிடித்து உழ,
    ஆனால்,
    காளைகள் உண்டு!
    காகிதத்தில், அழியும் இனம் என்று!

    நாட்டுப் பூக்கள் உண்டு!
    நாட்டுப் புலிகள் உண்டு ….!
    என ஏராளம் உண்டு!
    எல்லா இடத்திலும், ஆனால்,
    நாட்டுப் காளை இனம் இங்கு மட்டுமே உண்டு,
    என்பதனை மறந்தனரோ!

    எத்தனைக் கூட்டம் இருந்தாலும்,
    வாலிபன் இரத்தம் சொட்டினாலும்,
    எந்தப் பக்கம் திரும்புமோ!
    என் வீரத்தைச் சோதிக்க, என்றெண்ணினாலும்!
    நிற்க இடம் தேடிக் காணுவோம்
    உன் நிமிர்ந்த முகத்தையும்,
    உன் அழகிய திமிலையும்!

    இப்பொழுது தோன்றுகிறது நீ
    எங்களுக்கு நன்றி சொல்வது போல்!

    என்னையும்,
    என் பளுவையும்,விட்டுக் கொடுக்காது,
    ஒற்றைக் கோட்டில் நின்ற உங்களுக்கு,
    நன்றி சொல்லி நிற்கின்றேன்,
    அதே நிமிர்ந்த நடையில்!

    இத்தனையும் போட்டிக்காகவா?
    இல்லை, நம் கலாசாரத்திற்காக,
    நமக்கும், காளைக்கும், கோ-விற்கும்
    இடைப்பட்ட பந்தத்திற்காக.

    அன்பினால் அஞ்சுகிறோம்
    உன் முன்பு
    நன்றி வேண்டாம்
    வேண்டிக்கொள்கிறோம் உங்களிடம் நாங்கள்!
    வீடு செழிக்கும், கோ -வின் கால் பட்டால்!
    பூமி செழிக்கும் காளையின் கால் பட்டால்!

    மறந்து விடாதீர்கள்!
    யாரையும் மறக்கவும் விடாதீர்கள்!
    நீங்கள் இந்த பூமியின்…………..!

    *****

    ”கொல்லேற்றைத் தழுவி வெல்லும் காளையையே புல்லுவாள் ஆயமகள்” என்று சொல்லுகிறது இலக்கியம். சிந்துவெளி நாகரிகம் தொடங்கித் தொடர்ந்துவரும் அவ்வீர மரபை அழியாது காப்பதே தமிழர் கடன்” என்று பொருத்தமாய்ப் பொருளுரை பகர்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    ஏறுதழுவ வாருங்கள் இளைஞர்களே!

    கால்நடையின் வளத்தை கட்டிக்காத்த தமிழினம்
    கண்ணியமாக நிகழ்த்தியது காளைப்போர்
    எங்கே சென்றது நம் மானமரபு
    பேணமறந்தீரோ?
    முல்லைநிலத்தில் ஆயர்களின் வீரத்தை
    காளையின் நேரெதிரில் கண்டோமே!
    கொல்லேறு தழுவா ஆண்மையை
    கனவிலும் தழுவா பெண்மை
    திமில் பற்றி திடம் காட்டிய வீரம்
    குடரோடு குருதியோடிய நேரம்
    குரவைக்கூத்தாடி குதூகலித்த மானம்
    கட்டுக்குலைந்து கலைந்து போன மாயம்

    மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டென
    மங்கையின் முன் சாகசம் காட்டும் பேரம்
    போலியான பாவனையில் பண்பாட்டுச் சோரம்
    நாகரிக மாற்றத்தில் மரபணுமாற்றமாக
    நாட்டுப்பசு நாட்டுக்காளை நலமொழிந்து….
    சிதிலமடைந்த சின்னமதை சிறப்பாக்க
    சிந்தனை செய் மனமே!
    சிந்துவெளி நாகரிகத்தில் புதையுண்ட மரபு
    செப்பம் செய்வதே பண்பாட்டின் நல்வரவு

    *****

    சிந்தனைவளம் செறிந்த பாக்களை அள்ளித்தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றி!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காளையின் பெருமை..!

    காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
    ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்!
    பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
    ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்!
    தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
    ……….தொய்ந்துயரச் சற்றேபக்க வாட்டில் சாயும்!
    வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
    ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்!

    முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
    ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்!
    கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
    ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்!
    கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
    ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்!
    போட்டியென வந்துவிட்டால் போதும் அது
    ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்!

    வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
    ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு!
    ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
    ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை!
    பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
    ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்!
    நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
    ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்!

    ”உழவனின் உயர்நண்பனாய்த் திகழும் காளை, போட்டியென்று வந்துவிட்டால் சிங்கமாய் சீறிப் பாய்ந்து மானுடக் காளைகளை மிரளவைக்கும்; அரளவைக்கும். திமிர்கொண்ட காளையரைத் திமில்கொண்ட காளை தன் கொம்பிலே குத்தித் தூக்கும்; கடுமையாய்ப் பாய்ந்து தாக்கும்” என்று சல்லிக்கட்டுப் போரில் காளை நிகழ்த்தும் வீரசாகசங்களை நம் கண்முன் அழகாய் வி(வ)ரிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • கசக்கி பிழியப்படுகிறார்களா மக்கள் ?

    பவள சங்கரி

    தலையங்கம்

    திரையரங்குகளுக்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை 25% ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு மேல் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரிகளும் சேர்த்து வசூலிக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே திரைப்படத்திற்கு திரையரங்குகளுக்குத் தகுந்தாற்போல் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதான். குளிர்சாதன வசதி இல்லாத அரங்கிற்கு ஒரு கட்டணம், குளிர்சாதன வசதி இருக்கும் அரங்கிற்கு ஒரு கட்டணம், மல்டிபிளக்ஸ் அரங்குகளுக்கு ஒரு கட்டணம். இது மட்டுமன்றி திரையரங்கு நகராட்சி பகுதிகளில் இருந்தால் ஒரு கட்டணம், மாநகராட்சி பகுதியில் இருந்தால் அதிக கட்டணம். இதன் மூலமாக திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உரூபாய் வரை கொள்ளையடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் போதாமல் திரையரங்கை மூடி வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வருமானத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். பல கோடிகள் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் மக்களிடம் அதிகமாகக் கொள்ளையடித்து இந்த ஒரு சில நூறு பேர்களை வாழவைக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இதில் புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்ற அறிவிப்பு வேறு. உண்மையிலேயே திரைப்படங்கள் வெளியிடப்படாவிட்டால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் இல்லை. பாதிப்புகள் ஏகப்பட்ட இலாபம் பார்க்கும் திரைத்துறையினருக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில் திரையரங்கக் கட்டணங்களை மிக அதிகப்படுத்துவதால் திரைத்துறை நலிவடைந்து அழியும் அபாயத்திற்கு உள்ளாகும் என்பதே நிதர்சனம்.

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (12)

     

    மீ.விசுவநாதன்

    பகுதி: 12

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

    காலையில் நதிக்கரையில்

    மங்கையரில் சிறந்தவளாம் கோசலையுன் அன்னை
    மடிபெற்ற புண்ணியத்தால் வந்துதித்த ராமா,
    செங்கதிரால் கோலமிட்டுச் சீர்கொண்டு உன்னை
    தெய்வீக ராகத்தில் எழுப்புகிறான் சூர்யன் !
    செங்கரும்பும் மஞ்சளுமாய் சேர்ந்தயிக் காட்டில்
    சிறகடிக்கும் பறவையெலாம் செயல்மறந்து உன்றன்
    செங்கமலப் பாதத்தை சிற்றலகால் தொட்டு
    ஸ்ரீராமன் நீவிழிக்கக் கீர்த்தனைகள் பாடும் ! (1)

    உதயகாலத்தில் கதிரவனை வணங்கினர்

    சந்தியிது காலத்தில் தவநீரை வார்த்து
    தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராம னோடு
    வந்திருக்கும் இலக்குவனும் மதியொன்றி நின்று
    மந்திரங்கள் சொல்லிப்பின் மாமுனியின் பாத
    வந்தனைகள் செய்தங்கு கைகட்டி நின்றார் !
    வழிகாட்டும் முனிவருடன் வழிநடந்து போக
    வந்தடைந்தார் அக்”காமா சிர”மத்தின் பக்கம் !
    மகத்தான முனிக்கூட்டம் வாசமிடும் கூடம் ! (2)

    காமாசிரமம் வந்தடைதல்

    ஆசார்யர் முகம்பார்த்து “அய்யனேநீர் சொல்வீர்
    அழகாமிவ் வாசிரமம் யாருடைய” தென்று
    லேசான தென்றல்போல் ஸ்ரீராமன் கேட்டார் !
    “சிவனொருநாள் இங்குவந்து தவம்செய்யும் வேளை
    பேசாமல் அவர்மீது ஏவிவிட்டான் அம்பை
    பிரியமுள காமனெனும் சிற்றின்பத் தேவன் !
    கூசாமல் விழித்தீயால் கொன்றிட்டார் காமக்
    கொற்றவனை மாதேவன் ஓர்நொடியி லங்கே ! (3)

    காமனை எரித்த இடம்

    உடலற்ற அனங்கனென உருமாறிப் போனான்
    உலகத்தில் காமத்தீ மூட்டுகிற தேவன் !
    இடமிதையே உய(ர்)”அங்க தேச”மென்று சொல்வர் !
    இன்றிரவு மட்டும்நாம் இங்குதங்கிப் போவோம்”
    தடையேதும் இங்கில்லை தவத்தோர்கள் சேர்க்கை
    சரியான பாதைக்கே சத்தியமாய்ச் சேர்க்கும்
    விடையிதுதான் என்றுவிசு வாமித்ரர் சொல்ல
    விநயமுடன் கேட்டார்கள் சீடரிரு வர்கள் ! (4)

     

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 23ம் பகுதி நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171007 -Govinda Pattabhishekam -lr

    ’’சனிக்கிழமை ஆவின் சுரத்தலை ஏற்று
    மணிக்கணக்கில் நின்றார் மாலர், -தணிக்கை
    ஏதுமின்றி, ஏழுமலை ஃபாதர்க்கு(FATHERக்கு) கோமாதா
    கீதகோ விந்தக் கறப்பு’’….!

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….!

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயண
    மால்ஏழ் மலையப்பர் மார்”….கிரேசி மோகன்….!

    Share
  • பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

    Posted on October 6, 2017
    Pyramid
    unnamed

    (The Great Pyramids of Egypt)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++

    நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்

    ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்

    வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்

    சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!

    புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!

    சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!

    கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!

    பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்!

    ++++++++++++++

    https://youtu.be/T4cA6oGwzvk

    https://youtu.be/Jt6ZdheNyek

    https://youtu.be/xo2f4IVhuPs

    http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    +++++++++++++++++

    Pyramid 10

    பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய  கண்டுபிடிப்புகள்.

    நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கட்டிய பிரமிக்கத் தக்க பிரமிடுகள் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் திடுக்கிடும் அரிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியுள்ளன.  பூர்வீக நைல் நதிச் செடி “பாபிரஸ்” [Papyrus Plant] பற்றிய விளக்கம்,  “மேன்மையான நீர்ப்பயணக் கடத்தி ஏற்பாடு” [An ingenious System of Waterworks], 4500 ஆண்டு வயது “மரபுப் படகு” [Ceremonial Boat] ஆகிய மூன்றும், பிரமிடுகள் மெய்யாக எவ்விதம் கட்டப் பட்டன என்ற பல்லாயிர ஆண்டு கால மர்மத்தைத் தீர்த்து வைக்கும் கண்டுபிடிப்புகளாக 2017 செப்டம்பர் 24 இல் பிரிட்டனின் தொல்பொருளாரின் புதிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

    3,800-year-old relief carving in Egypt depicts over 100 boats. Credit: Josef Wegner.

    3,800-year-old relief carving in Egypt depicts over 100 boats. Credit: Josef Wegner.

    கீஸா பிரமிடுகளைப் [Pyramids of Giza] பற்றிய பல நூற்றாண்டு ஆராய்ச்சிகள் இருப்பினும், இதுவரைப் பூர்வீக எகிப்தியர் கனமான [சராசரி 2.3 டன்] பெரும்பாறைகளை எவ்விதம் வெட்டினார், பல மைல் தூரம் தூக்கி வந்தார், மேலே தூக்கிச் சீராக அடுக்கினார் என்று தெளிவாகக் கூற முடியவில்லை.

    எப்படிப் பெரும்பாறைத் துணுக்குகள் கடத்தப் பட்டன ?

    கிஸாவுக்கு எட்டு மைல் தூரத்தில் உள்ள தூரா [Tura] வென்னும் தளத்திலிருந்து லைம்கற்கள் [Limestone] கொண்டு வந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.  பெரிய பிரமிட் உட்பகுதியில் உள்ள பாறைத் துணுக்குகள் [Granite] 533 மைல் தூரத்தில் இருக்கும் அஸ்வான் பகுதியிலிருந்து கொண்டுவரப் பட்டன.   ஆயினும் தொல்பொருளார் தொடர்ந்து ஏராளமான, கனமான பாறைத் துணுக்குகளை எப்படிக் கடத்தி  குஃபு பிரமிடைக் கட்டினார் என்று  அறிந்து கொள்ள முடியவில்லை.   மண்ணை ஈரமாக்கிப் பெரும்பாறைகளை நகர்த்தினார் என்று 2014 ஏப்ரலில் ஒரு புதிர் விடுவிக்கப் பட்டது.  ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மூன்று ஆராய்ச்சி முடிவுகளில் வேறு வித உறுதி நிகழ்ச்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.

       

    An Ancient Egyptian Boat. Credit: Canadian Museum of History

    பெரிய  படகுகள் மூலம்  பெரும்பாறைத் துணுக்குகள் நதிப் போக்குவரத்தில் கடத்தப் பட்டன என்று புதிய சான்று.

    வாடி இல் ஜார்ஃப்   [Wadi el-Jarf]  என்னும் பூர்வீகச் செங்கடல் துறைமுகத்தில், புராதன பாபிரஸ் செடி [Papyrus Plant] கீஸா பீடபூமிக்கு  அடியில், ஒரு குகையில் காணாமல் போன ஓர் ஆற்றுப் போக்குவரத்து  [Waterway] ஒரு மரபுப் படகுடன் [Ceremonial Boat] காணப்பட்டது.   அதிலிருந்து ஆயிரக் கணக்கான வேலையாட்கள் 170,000 டன் லைம்கற்களை மரப் படகுகள் மூலமாய் நைல் நதி வழியாகக் கடத்தி வந்துள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.

    பூர்வீகக் கால்வாய்ப் போக்குவரத்தின் மிச்சத் தோற்றம் இன்னும் உள்ளதா ?  ஆம்.  கீஸா பீடபூமிக்குக் கீழ் காணாமல் போன கால்வாய்த் தடம் இருப்பதை மார்க் லேனர் [Mark Lehner] இப்போது காட்டியுள்ளார்.  பாறைக் கற்கள் ஏற்றப்படும் கால்வாய்ப் பகுதியையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    ++++++++++++++++++++++++++++++++

    The Osirion at Abydos showing sophisticated stone construction. Photo by Hugh Newman.

    The Osirion at Abydos showing sophisticated stone construction.

    Photo by Hugh Newman.

    Remnants of an Ancient System of Canals

    If this account is accurate, where are the canals that Merer speaks of? Until recently, there was little evidence of such a system of waterworks that could have been used to transport the giant blocks. However, archaeologist Mark Lehner has now revealed the discovery of a lost waterway beneath the Giza plateau. “We’ve outlined the central canal basin which we think was the primary delivery area to the foot of the Giza Plateau,” he told Mail Online

    ++++++++++++++++++++++++++++++++

    4500 ஆண்டு வயது பாபிரஸ் செடியை வாடி இல் ஜார்ஃப் துறைமுகத்தில்  கண்டது, பிரமிட் கட்டமைப்புப் புதிர்களில் ஒன்றை விடுவித்துள்ளது  மேலும் ஃபாரோ குஃபு [Pharaoh Kufu] காலத்தில் வாழ்ந்த ஒரு கட்டட மேலாளர் மேரர் [Supervisor Merer] கைப்பிரதி கிடைத்துள்ளது.  அதில் மேரர் பிரமிட் எப்படிக் கட்டப் பட்டுள்ளது என்று விளக்கமாக எழுதியுள்ளார்.

    குஃபு பிரமிட் அருகே ஏழு படகுகள் தங்கும்  கால்வாய்ப் பிரிவுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  மேலும் சில மரபுப் படகுகளும் எப்படிக் கப்பல்கள் கட்டப் பட்டுள்ளன என்று காட்டியுள்ளன.  வித விதமான கப்பல் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

    +++++++++++++++++++++++++++++++++++++

     Pyramid Arts

    Transport Vessels Found

    Seven boat pits have been found in the area around Khufu’s pyramid, two on the south side, two on the east side, two in between the queens’ pyramids and one located beside the mortuary temple and causeway. In addition, archaeologists have found ceremonial boats, which reveal in detail how the ships were constructed, and detailed relief carvings of hundreds of transport vessels.

    The Diary of a Pyramid Builder

    The 4,500-year-old papyrus found at Wadi el-Jarf offers a significant insight into the construction of the pyramids. Written by Merer, an overseer in charge of a large team of elite workers, the ancient logbook from the 27th year of the reign of the pharaoh Khufu, described in detail the construction of the Great Pyramid.

    “The hieroglyphic letters … detailed over the course of several months the construction operations for the Great Pyramid, which was nearing completion, and the work at the limestone quarries at Tura on the opposite bank of the Nile River,” reports History.com. “Merer’s logbook, written in a two-column daily timetable, reports on the daily lives of the construction workers and notes that the limestone blocks exhumed at Tura, which were used to cover the pyramid’s exterior, were transported by boat along the Nile River and a system of canals to the construction site, a journey that took between two and three days.”

    ++++++++++++++++++++++++++++++++++++

    The Great Pyramid of Giza. Credit: BigStockPhoto

    5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டினர்.

    Upper Cover

    புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

    சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!

    எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.

    பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.

    5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.

    Pyramid -1

    பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?

    எகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோணச் சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!

    பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.

    Pyramid 11

    ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

    பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

    Paintings

    (தொடரும்)

    தகவல்

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. Secrets of the Great Pyramid By : Peter Tompkins (1971) & (1978)

    10.  http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    11.  https://en.wikipedia.org/wiki/Pyramid_(geometry)  February 7, 2016

    12.  http://science.nationalgeographic.com/science/archaeology/giza-pyramids/

    13.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

    14.  https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza  [March 23, 2016]

    15. http://www.ancient-origins.net/unexplained-phenomena/giants-ancient-egypt-part-ii-physical-evidence-giant-characters-008745 [September 6, 2017]

    16.  https://www.ancient.eu/pyramid/  [September 2, 2009]

    17. http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    18. https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza [September 15, 2017]

    19. http://www.ancient-origins.net/news-history-archaeology/archaeologists-announce-new-discoveries-solve-mystery-how-great-pyramid-was-021628?nopaging=1 [September 24, 2017]

    20. https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [October 3, 2017]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  October 7, 2017 [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….

    171006 -Rajagopala -wm

    ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
    னார்குடி கோபுலு(கோகுல) நாயகர்- சாரே!(மலையாள ‘’சாரே’’)
    கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
    ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….!

    ’’கோபா லபுரத்தில் கோயில்கொண் டுள்ளராஜ
    கோபாலா கோலோக கோவிந்தா: -லாபாதி,
    நஷ்டங்கள் நம்மை நமஸ்கரித்(து) ஓடிடும்
    அஷ்டமி கண்ணன் அரண்(காப்பு)’’….கிரேசி மோகன்….!

    ”குண்டு பஸவப்ப(பழைய சினிமா பாட்டு), கண்ண கரியப்பா(மேஜர் ஜெனரல்)
    தெண்டமிட்டேன் உந்தன் திருவடியில் -மண்டென(மண்டு எனை)
    ராஜகோ பாலரே ரட்ஷித்து அருள்புரிவீர்:
    தேஜஸாய் அமர்ந்த தேவு’’….!

    “விண்ணார்வம் வேண்டேன்,! வியனுலகும் வேண்டேனே,!
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • முகநூல் மோகம்?

    பவள சங்கரி

    உலக அளவில் முகநூல், சிட்டுரை போன்ற இணைய தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவோர்  இந்தியர்களே! இதில் பெண்களே மிக அதிகமாக  பங்கேற்கிறார்களாம். பத்திற்கு எட்டு பெண்களுக்கு இதன் மூலமாக பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக நட்பு வட்டத்தில் இருப்பவர்களாலேயே அத்தகைய பல பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…  எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளாலும் நன்மை, தீமை இரண்டும் சம அளவிலேயே இருக்கின்றன. அதை உணர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை விளங்கச் செய்கிறது..

    Share
  • தம்படம் மோகம்!

    பவள சங்கரி

    எச்சரிக்கை! தம்படம் (செல்ஃபி) 4 முறைகளுக்கும் மேல் எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களாம்.. அதன் பிறகு தன்னிலை மறந்து ஓடும் ரயில், மலை முகடுகள், அதள பாதாளம், பொங்கி வரும் அலைகள் போன்ற எதைக்கண்டும் அஞ்சாமல், இயற்கையின் இயல்பைக்கூட உணரமுடியாமல் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 400 பேர் இதனால உயிரிழந்திருப்பது அதிர்ச்சியான தகவல்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் 🙁 தம்படம் எடுக்கும் உபரி உபகரணங்கள் (செல்ஃபி ஸ்டிக்) பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக விதவிதமாக விளம்பரம் செய்து குறிப்பாக இளைஞர்களை விட்டில் பூச்சிகளாக விழவைப்பது கண்டிக்கத்தக்கது!

    Share
  • “அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 50

    கவிமாமணி கு. தேவநாராயணன் அவர்களை சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் ஒரு ஞாயிறு அன்று நடைபெற்ற பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் சந்தித்தான். அன்று அவர் பாரதி இரா. சுராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஹாகவி பாரதியாரின் “மங்கியதோர் நிலவினிலே” கவிதையை உள்ளம் உருகும்படிப் பாடி அவையோர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். அப்படித்தான் அவனது உள்ளத்திலும் அன்று அவர் புகுந்தார். அவரது வெண்மையான கதர் சட்டையும், வேஷ்டியும், வெண்கலக்குரலில் அவர் பாடிய இனிமையும், மெல்லிய புன்னகை தவழும் முகமும் அவனை அவரின் பக்கம் செல்லத் தூண்டியது. கவியரங்கம் முடிந்து அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். “அடடே..உனக்கும் கல்லிடைக்குறிச்சியா?..எனக்கும் அதுதான் பூர்வீகம். தொந்திவிளாகம் தெருவில்தான் இருந்தேன்.” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டு, “நீ வாசித்த கவிதை நன்னா இருந்தது. தொடர்ந்து கவியரங்கத்துக்கு வா. நான் மந்தவெளிலதான் இருக்கேன். ஆத்துக்கு வா” என்று அழைத்தார். அதிலிருந்து அவருடன் அவனுக்கு நெருக்கம் அதிகமானது. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சித் தொடருக்கும் வசனமும், பாடல்களும் எழுதிக் கொண்டிருந்தார்.

    அவனுக்கு அப்பாவின் சதாபிஷேகம் 20.04.2008 அன்று அவனது சென்னை இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அதற்கு அவரை அவன் அழைத்திருந்தான். அன்று அவருக்கு வேலை இருந்ததால் அவர் அவனிடம், ” விஸ்வநாதா….நான் சதாபிஷேகத்திற்கு முன்தினம் வந்து கலந்து கொள்கிறேன்” என்றார். ” ரொம்ப சந்தோஷம் மாமா. அன்று மாலை நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்பில் உரையாற்ற வேண்டும். உங்களின் உரைக்கு முன்னால் கொல்கத்தா சகோதரிகள் “கலா-சித்ரா” (அவனுக்கு மனைவி சீதாலட்சுமியின் சகோதரிகள்) பாரதியாரின் பாடல்களை ஒரு மணிநேரம் பாடுவார்கள்” என்று அவன் சொன்னதுமே, ஒரு தனி குஷியுடன், “பலே..பலே” என்று சொன்னார்.

    முந்தியதினம் மாலை நான்கு மணிக்கே அவனுடைய இல்லத்திற்கு வந்து, அவனுக்கு அப்பா மற்றும் உறவினர்களுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ” விஸ்வநாதா…இதுக்குத்தான் இன்னிக்கு நான் சீக்கிரமே வந்தேன். நம்ம மனுஷாளப் பார்த்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது” என்று சொல்லி மகிழ்ந்தார். அன்று அவர் இரவு எட்டு மணிமுதல் ஒன்பதரை மணிவரை உரையாற்றினார். தன் வாழ்வில் ஏற்பட்ட இறக்கம், மாற்றம், ஏற்றம் என்று மிகவும் அருமையாகப் பேசியும் பாடியும் அனைவரின் கவனத்தையும் தன்பக்கமே வைத்திருந்தார். தான் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தது பற்றியும், தன்னிடம் இராமாயணக் கதையைச் சொல்ல அரைமணி நேரமே அவர் முதலில் ஒதுக்கியதாகவும், தான் கதை சொல்லிய விதத்தில் சுமார் மூன்று மணிநேரம் கேட்டு விட்டு,” தேவநாராயணன்…இப்படி ஒருத்தர் எனக்கு முன்பே கதை சொல்லி இருந்தால் நான் ஏன் நாத்திகனாகப் போகிறேன்” என்று பாராட்டியதாகவும் சொன்னார். காந்தியின் மீதும், நம் தேசத்தின் மீதும், மகாகவி பாரதியார் மீதும் தான் கொண்டிருந்த பக்தியினை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். உரையின் முடிவில் அவர் மகாகவி பாரதியார் பற்றி எழுதிய,

    “பாரதியே ஒரு பாரதம் – அவன்
    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்
    பாரத மண்ணின் காவிய வளம்தான்
    பாரதி தோன்றக் காரணம்”

    என்ற கவிதையைத் தன் தேன்கலந்த குரலில் பாடி அனைவரையும் சொக்கவைத்தார். அந்தப் பாடலில் வரும் “ஏட்டில் எழுத்தில் இனிவரப்போகும், எழுச்சிகள் எல்லாம் பாரதி” என்ற வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். எத்துணை பக்தி அவருக்கு பாரதியாரின் மீது என்று அவன் அவரைப் பற்றிப் பெருமிதங் கொள்வான்.

    பாரதி கலைகழகம் சார்பாக பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தைப் பேராசிரியர் தி.வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் எழுதி இயக்கினார்கள். அதில் சகுனியின் வேடத்தில் தேவநாராயணன்தான் நடித்தார். அந்த நாடகத்தில் பங்குபெற்ற அத்தனை பேர்களுமே கவிஞர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு நடிப்புப் பயிற்சியை பேராசிரியர் சொல்லித்தரும் பொழுது,” தேவநாராயணன் சார் இந்த ஒத்திகைக்கு வல்லைன்னு கவலைப்பட வேண்டாம். அவர் நடிகர் சகஸ்ரநாமத்தின் நாடகக்குழு நடத்திய பாஞ்சாலி சபதத்தில் சகுனியாக நடித்துப் பழக்கப் பட்டவர். வசனமெல்லாம் அவருக்கு மனப்பாடம். மேடைல அவர் கைதட்டு வாங்கிண்டு போயிடுவார்” என்று பெருமையாகச் சொல்லுவார். அதேபோல நாடக அரங்கேற்றத்திற்கு முன்பு நடந்த இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குத்தான் அவருக்குக் கலந்துகொள்ள நேரம் இருந்தது. அனால் ஒத்திகைகளிலும் சிறப்பாக நடித்து, மேடையிலும் அமர்க்களம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தேவநாராயணன் அவர்களின் குரலினிமையைப் பற்றி பேராசிரியர் நாகநந்தி அவர்கள்,” தினமணியின் தலையங்கத்தைக் கொடுத்து இதை இசையமைத்துப் பாடுங்களேன் என்றால் கூட அற்புதமாகப் பாடக் கூடிய திறமை பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், தேவநாராயணனும்” என்று சொல்லுவார்.

    ஒருமுறை அவர் அவனை அவரது மயிலாப்பூர் இல்லத்திற்கு அழைத்தார். தான் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதையை அவனுக்கு வாசித்துக் காட்டினார். “இத ஏன் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டறேன் தெரியுமா? ஒனக்கு என்னோடு குடும்பச் சூழல் தெரியும். அதனால் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டுறதுல எனக்கு ஒரு சந்தோஷம்” என்றார். அப்பொழுது அவர் ஒரு மூன்று அத்தியாயங்கள் எழுதி இருந்தார். அதற்குள் அவர் உடல்நலம் குன்றி நோயின் வாயில் விழுந்து விட்டார். அப்பொழுது அவரைப் பார்க்க அவரது இல்லம் சென்றிருந்தான். அவரது இளைய மகன் “ரவி” உடன் இருந்தார். அவரால் அதிகம் பேச முடியவில்லை. எண்பது வயதிற்கு மேலாக வாழ்ந்த அந்த அன்புக் கவிமாமணி கு. தேவநாராயணன் 07.09.2009 அன்று இறைவனுடன் கலந்துவிட்டார். செய்தி அறிந்து அவன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தான்.

    அவரது படைப்புகளான, “அகல்யை”, “கைகேயின் கண்மணி ஸ்ரீராமன்”, “அமுதன் விரும்பிய ஸ்ரீராம பாதுகை” போன்ற கட்டுரைகளையும், கவிதைத் தொகுப்பையும் L.K.M. பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

    பாரதி கலைக்கழகத் தலைவர் திரு.பாரதி இரா.சுராஜ் அவர்கள் கவிமாமணி தேவநாராயணன் அவர்களைக் கவியரங்கங்களில் கவிதைகளைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார். அப்படி அவர் பாடும் பல கவிதைகள் அவனுக்குப் பிடிக்கும் என்றாலும் “இந்தியா எனது நாடு, இந்தியா எனது வீடு” என்ற கவிதையும்,

    “உழைக்கத் தெரிந்த என்னை ஒருநாள்
    உலகம் உணருமடா
    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைப்பேன்
    என்மாளிகை உயருமடா”

    என்ற அமர வரிகளைக் கொண்ட கவிதையும் என்றும் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    அவர் நிறைய மெல்லிசைப் பாடல்களும் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலும் அதன் வரிகளும், இசையும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    “ஸ்ரீராமன் கதையே ராமாயணம்
    சீதையின் பெருமை ராமாயணம்
    ராமாயணம் தினம் பாராயணம்
    ராமனின் நாமமே ஷேமம்தரும்”

    கவிமாமணி கு.தேவநாராயணன் நல்ல கவிஞர் மாத்திரம் அல்ல, அன்பு நிறைந்த சிறந்த மனிதரும் கூட.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • எழுத்து- 4

    14212124_605045806324274_6346503443436024746_n

     

    நூல் படிக்க எழுத்து கற்கிறோம்
    மேலுலகு செல்லு முன்னர் கற்றிடுங்கள்!
    நாலெழுத்து வாசிக்கும் இன்பக் கவர்ச்சியால்
    நூலும் விரும்பியவர் வாசிக்கும் விலைமகளே
    இறக்காத விடயங்களில் எழுத்தும் ஒன்று.
    நிற்காத தொடர் வண்டி போல
    உறங்காத நயகரா நீர் வீழ்ச்சியாக
    இறங்குவது எழுத்துச் சாரல் தொடர்ச்சியாக

    சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ
    மந்திரமோ அல்ல மன விதைகள்
    முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும்
    அந்தக் கம்பன் தமிழும் எம்
    நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை.
    நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்!
    நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட!
    பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.

    நல்ல எழுத்தை அலட்சியமின்றிப் பாராட்டலாம்
    வெல்லும் கொலுசுச் சத்தம் அது
    புல்லரிக்கும் மனதில் எண்ணும் தோறும்
    வெல்லும் வரிகள் மின்னும் வைரங்கள்
    புலன்களை ஊடுருவிப் பிறக்கும் முத்துகள்
    வலமிடமின்றி எழுத்துக் கருவியால் குதிக்கும்.
    கடற்கரை மணல் சிறு நண்டோவியப்
    படமாக ஊர்ந்து ஊர்ந்து சிலிர்க்கும்.

    ஆக்கம்:- பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க். 5-10-2017
    _______________

    Share