முகநூல் மோகம்?
பவள சங்கரி
உலக அளவில் முகநூல், சிட்டுரை போன்ற இணைய தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவோர் இந்தியர்களே! இதில் பெண்களே மிக அதிகமாக பங்கேற்கிறார்களாம். பத்திற்கு எட்டு பெண்களுக்கு இதன் மூலமாக பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக நட்பு வட்டத்தில் இருப்பவர்களாலேயே அத்தகைய பல பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது… எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளாலும் நன்மை, தீமை இரண்டும் சம அளவிலேயே இருக்கின்றன. அதை உணர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை விளங்கச் செய்கிறது..