Tag: பா. ராஜசேகர்

  • அன்னையவள் தெய்வமாக !

    -பா. ராஜசேகர்

    ஆயிரம்
    சொந்தங்கள்
    ஆரவாரம்
    செய்தாலும்…

    காசு
    பணம்
    கை நிறைய
    சேர்த்தாலும்…

    வான் முழங்க
    உன் புகழ்
    கொடிகட்டிப்
    பறந்தாலும்…

    உலகமெல்லாம்
    உன்
    கைக்குள்
    வந்தாலும்…

    அதிசயங்கள்
    செய்வதிலே
    நீ ஆளாகிப்
    போனாலும்…

    தொப்புள்கொடி
    உறவுன்னு
    உனக்கில்லை
    என்றிருந்தால்…

    பத்து மாசம்
    சுமப்பதற்குப்
    பெத்தவளே
    மறுத்திருந்தால்…

    வித்தைகாட்டி
    நீ நடத்தும்
    நாடகத்தின்
    உருவெங்கே?

    பெத்தவளைப்
    பட்டினியில்
    தள்ளிவிடும்
    நிலை நிறுத்து !

    அன்னையவள்
    தெய்வமாக
    எண்ணுகின்ற
    நிலைவேண்டாம் !

    உனக்கு
    அவளுயிரைப்
    பங்கிட்ட
    மனம் போதும் !

     

    Share
  • முதுமைக் காதல் !

    -பா. ராஜசேகர்

    துணை
    தடுமாற
    மனம்
    ஓடி எழும்!

    விழுந்தெழுந்து
    கைகொடுத்துத்
    தூக்கிவிடும்
    தானும் விழும் !

    அடிபட்ட
    இடம்தேடித்
    தட்டுத்தடுமாறிக்
    காயம்தடவி
    இணைகள்
    பாசம் பரிமாறி
    நெஞ்சங்கள்
    பசியாறும் !

    கொஞ்சிக்
    கொஞ்சிப் பேச
    இளம்ஜோடிகளும்
    பொறாமை கொள்ளும் !

    காதல் இங்கு
    வாழும் உண்மை
    காமமெல்லாம்
    ஒண்ணுமில்லை !

    உண்மை காதல்
    அன்பன்றோ ?
    வாழும் தாஜ்மஹால்
    இதுவன்றோ?

     

    Share
  • உழவே உயிரெனக் கொள்க !

    -பா. ராஜசேகர்

    தூங்கி
    எழுந்ததும்
    வானத்தைப்
    பார்ப்பான்
    தூறல்                                                              farmer
    வருமா
    மேகத்தை
    கேட்பான்!

    அள்ளிய
    சாணியைக்
    கழனியில்
    சேர்ப்பான்
    தண்ணியக்
    காட்டி
    மாட்டையும்
    பூட்டி
    ஏரைப்
    புடிச்சி
    உழுகும்
    போ பாரு!

    கண்ணும்
    சொருகும்
    மண்ணும்
    பழகும்
    பழகிய
    மண்ணில்
    பலன்களைச்
    சேர்த்துப்
    பயிர்களை
    விதைப்பான்
    பசியிலே
    கிடப்பான்!

    நீருக்கு
    ஏங்கி
    வானத்தைப்
    பார்ப்பான்
    வரப்பிலே
    தூங்கிக்
    காலத்தைக்
    கழிப்பான்!

    உழவன்
    நலம்பேணும்
    காலங்கள்
    வருமோ?
    உழவுத்
    தொழிலும்
    மதிப்புதான்
    பெறுமோ?

     

    Share
  • ஒருவரியில் எப்படி ’அம்மா’?!

    -பா.ராஜசேகர்

    ஒருவரியில்
    எப்படிச் சொல்ல…?
    நீயே உலகமம்மா!

    என்மேல
    மனசு வைத்தாய்
    இதயம் உண்டாச்சு !

    வேதனையில்
    கண்விழித்தாய் உயிரே
    உண்டாச்சு !

    சோதனைகள்
    நீ கடந்தாய் உன்உதிரம்
    என்னுயிர் மூச்சாச்சு !

    சுமைகள் நீசுமந்து
    தொப்புள் கொடி
    இரண்டாச்சு!

    தூங்காம
    தாலாட்டி
    நீ தூங்க நாளாச்சு !

    பசிக்குப் பாலூட்ட
    உன் ரத்தம்
    சோறாச்சு !

    நான்தவழ நடைபழக
    உன்கண்ணீரே
    கவிதையாச்சு!

    நீயே உலகமம்மா
    ஒருவரியில்
    எப்படிச் சொல்வேன் ’அம்மா’?!

     

    Share
  • முதுமை !

    -பா. ராஜசேகர்

    நடை தளரும்
    நரை மலரும்
    முகச்சுருக்கம்
    அழகாகும் !

    கண்பார்வை
    நினைவூட்டும்
    கனிவு நெஞ்சம்
    மெருகூட்டும் !

    முகம் காணும்
    வரிச்சுருக்கம்
    அனுபவத்தின்
    அழகுரைக்கும் !

    தளர்ந்தநடை
    கடந்துவந்த
    பாதையதைத்
    தெளிவாக்கும் !

    ஒளியிழந்த
    கண்கள் அல்ல
    உலகை ரசித்த
    பொக்கிசமே !

    வெளித்தெரியும்
    நாடி நரம்பு
    ஓடி உழைத்த
    அழகுரைக்கும்!

    எட்டிப்பார்க்கும்
    தோள் எலும்பு
    சுமைசுமந்த
    சுமைதாங்கி !

    கடினப் பற்கள்
    போனதெனக்
    கவலையில்லை…
    கனிவுச் சொற்கள்
    வெளித்தள்ளும்
    குணம் பாரு !

    மனிதரிலே
    மாணிக்கம்
    முதுமையடா!

    முதுமை கண்டால்
    முகம் சுளிக்கும்
    மனிதா!

    உன் இளமை
    நிலையில்லை
    எண்ணிப்பாரு !

     

    Share
  • வெற்றி மீது காதல்!

    -பா. ராஜசேகர்

    நித்தம்
    உன்னை
    நினைக்கையில்
    போராட்டம் !

    கத்திமேல
    நடந்திடும்
    கனவுபோல்
    தீ மூட்டும் !

    இரண்டு படி
    ஏறினா
    நாலு படி
    வழுக்கிடும் !

    வித்தகனைப்
    பார்க்கையில்
    கற்ற வித்தை
    மறந்திடும் !

    தோல்வி வந்து
    தழுவிடும்
    சுற்றம் நம்மை
    இகழ்ந்திடும் !

    உன்னை முத்தம்
    கொடுக்கணும்
    வாரி நெஞ்சில்
    அணைக்கணும் !

    கட்டித்தங்கம்
    உன் நினைப்பே
    கண்ணுக்குள்ள
    உன் தவிப்பே !

    வாழ்க்கையின்னா
    ஜெயிக்கணும்
    ஒவ்வொரு நொடியும்
    உழைக்கணும்!

    முயற்சிக்கு
    ஆமை கதை
    கவிதைன்னா
    உவமைக் கதை !

    வெற்றி வந்து
    தோளைத்தட்டும்
    புகழ் வந்து
    விண்ணை முட்டும் !

    முயற்சியை
    மனதில் கொள்ளு
    வாழ்க்கையில்
    வெற்றி கொள்ளு !

     

    Share
  • அன்னப்பறவையே தூது செல்வாயோ ?

    -பா. ராஜசேகர்

     

    aaa

    நீர் பிரித்துப்
    பாலருந்தும்
    நீயறியாயோ
    நான் வருந்தும்
    காரணமே !

    நீர் நிலம்
    வான் உலவும்
    நீயறியாயோ
    என் மனமே !

    மான் என்றான்
    கண்ணிரண்டும்
    மீன் என்றான்
    மனம் கொய்தான்
    என் காதல்
    தூது செல்வாயோ?

    வழிதேடி
    விழி நொந்து
    நீர் வடித்த
    விழியிரண்டும்
    ஒளியிழந்த
    கதை சொல்வாயோ?

    தேனென்ற
    இதழிரண்டும்
    அவன் நாமம்
    உச்சரித்துச் சோர்வான
    கதை சொல்வாயோ ?

    அவன் உலவும்
    நந்தவனம்
    என்னிதயம்
    வேதனையைச்
    சொல்வாயோ?

    கார்கூந்தல்
    நீர் நனைத்துப்
    பொலிவிழந்து
    முடிந்து நாளான
    கதை சொல்வாயோ?

    திசையெல்லாம்
    அவனுருவம்
    முகர்பொழுது
    அவன் வாசம்
    சொல்வாயோ ?

    சலசலக்கும்
    சருகொலியில்
    அவன் குரலே
    ஒலிப்பதென்ன
    என் மனம் சொல்வாயோ
    அன்னப்பறவையே?

     

    படத்திற்கு நன்றி

    Share
  • பச்சோந்திகள்!

    -பா.ராஜசேகர் ​

    சிறு உருவம்
    சுழலும் விழி
    பலம் பெரிது !

    காரிருளில்
    கண்
    மிளிரும்!

    சத்தமின்றிக்
    கால்
    நகரும் !

    பசை
    அதிகம்
    நா நீளும் !

    கயமை
    நெஞ்சு
    நிறம் மாறும்!

    பட்சிகள்
    எல்லாம்
    உணவாகும்!

    இது
    காலதேவன்
    சுழற்சியிலே;

    கழுகுக்கும்
    பாம்புக்கும்
    உணவாகும் !

    மனிதரிலும்
    இதுபோல ;

    உடன் வருவான்
    மெல்ல நகர்ந்து
    மனம் பிடிப்பான் !

    குணமறிந்து
    நிறம் கொடுத்து
    அவன் மறைவான் !

    மாயப் புகழ்
    நாப் பசைதடவி
    நம்மை
    விழுங்கும் வரை !

     

    Share
  • தாமரையே !

    -பா. ராஜசேகர்

    சிப்பியில்
    மழை விழுந்து
    முத்தாக !

    சேற்றிலே
    மழை விழுந்து
    தாமரையாய்!

    நீ
    பிறந்த இடம்
    சகதி கண்டேன் !

    நோய்களுக்குக்
    காரணியாய்ச்
    சாதனைகள்
    பல கண்டேன் !

    சோதனை
    நீர் சூழும்
    தலை நிமிர்ந்தாய்!

    தலைக்கனமே
    உன்னில் இல்லை
    நீர் இறங்க
    நீ இறங்கி!

    உன்னழகில்
    காதல் கொள்ளும்
    நீர் தவழும்!

    தாமரை இலை
    நீர் படர
    உலகறியும்
    உன் குணமறியும்!

    கண்ணகியும்
    உனைக்கண்டு
    கற்பு கொண்ட
    கதையறியும் !

    உன் குணப்பெருமை
    உலகறிய
    நானுரைப்பேன் !

    மனிதா
    பிறப்பாலே
    ஒன்றுமில்லை
    வாழ்ந்து நீ
    பெருமை கொள்ளு !

     

    Share
  • சிரித்துவிடு !

    -பா. ராஜசேகர்

    உலக
    மொழிகளிலே
    உயிர்மொழியே
    தமிழென்பேன்!

    தமிழ்
    வார்த்தைகளில்
    உயிரோட்டம்
    பல கண்டேன் !

    சிரித்துவிடு
    இதன் அர்த்தம்
    உங்களுக்கும்
    தெரியுமன்றோ ?

    சிரி;
    த்து…
    விடு ?
    பிரித்துச் சொன்னால்
    இதன் அர்த்தம்
    வேறு அன்றோ ?

    இதை
    உணர்த்தும்
    உள்ளர்த்தம்
    உள்ளதையா!

    ஒன்று
    சேர்ந்த
    வார்த்தையிலே
    உள்ளது போல்!

    நாம்
    ஒற்றுமையில்
    வாழ்வதுதான்
    சிறந்ததையா !

    பிரித்தெடுத்த
    எழுத்து போல
    பிரிவினைகள்
    நமக்குத் தீமையல்லோ ?

     

    Share
  • ஏழையின் அந்த(ப்)புரம்!

    -பா. ராஜசேகர்

    நாலடிச் சுவரு வச்சு
    நாற்பது ஓலை மேஞ்சு!                                  hut
    சின்னதாக் கதவு வச்சுத்
    தரையிலே சாணிபூச!!

    நிலவு வந்து ஒளிகொடுக்க
    இயற்கையாகக் குளிரடிக்க!
    படுத்தா கால் தடுக்கும்
    நிற்கையில தலையிடிக்கும்!!

    அன்புக்குப் பஞ்சமில்ல
    அழகுக்கு இணையுமில்ல !
    ஊருக்கு ஒதுக்குபுறம்
    அது எங்க கிராமப்புறம் !!

     

    Share
  • பூமி வெப்பம் தடுப்போம் !

    -பா. ராஜசேகர்

    பிண்டம்
    நடமாடும்
    ஐம்புலன்கள்
    வரமாகும் !

    அண்டம்                                                                 earth-day
    உருண்டோடும்
    பஞ்சபூதங்கள்
    விதியாகும் !

    நீர் நிலம்
    காற்று
    ஆகாயம்
    நெருப்பு
    அதுவன்றோ ?

    நீரின்றி
    அமையாது
    உலகு என்பர் !

    நெருப்பின்றி
    விழையாது
    என்பேன் !

    வெயிலுக்குக்
    குடை கண்ட
    மனிதனே !

    உலகுக்குக் குடைதந்த
    இறைப் பரிசு
    ஓசோன் அன்றோ ?

    விஞ்ஞானம்
    படைத்தவனே
    மெய்ஞ்ஞானம்
    மறந்ததென்ன ?

    இறைவனின்
    படைப்பெல்லாம்
    இவ்வுலகைக்
    காத்து நிற்கும்!

    மனிதா உன்
    படைப்பெல்லாம்
    இயற்கையை
    அழிப்பதென்ன ?

    ஓசோனில்
    ஓட்டைகண்டு
    இவ்வுலகை
    எரிப்பதென்ன ?

    வெப்பம் தடுப்போம் !
    உலகைக் காப்போம் !!

     

    Share
  • உள்ளம் கொள்ளை போகுதே !

    -பா.ராஜசேகர்

    இரவுப்பெண் 
    தலை சூடிய
    மலரோ 
    அது நிலவு !

    வளர்மங்கை 
    மனம் தேடிய 
    மலரும் 
    வனம் தினம் 
    தேடிவரும் வண்டோ                             
    அது நான் !

    கண் மீனது                                                            younggirl
    பெண் மானது 
    வெண் மேகங்களும் 
    தலை சாயும் 
    அவள் தேகம் !

    மலர் மொய்க்கும் 
    வண்டுகளைப் போல 
    ஊர் கூடிவரும் 
    நீ மலர்சூடி
    வரும்போது !

    மழை 
    நீர் அருவி 
    மலை மேலிருந்து 
    தென்றலிடை 
    வளைந்து நீ வரும் 
    அழகில் நாணும் !

    உன் 
    முன்னழகு 
    என் கண்களிலே 
    பூமி பந்தை 
    இரண்டு துடுண்டுகளாக 
    வெட்டி ஓட்டும் !

    உன் 
    கட்டழகில் ஒட்டிக்கொண்ட 
    ஆடை தேனில் 
    ஊறச் சுளை 
    சுவைக்கும் !

    காரிருளை 
    ஓர் பின்னலில் 
    ஊஞ்சல் 
    உன் கூந்தல் !

    உன் 
    புன்னகையைச் 
    சுருட்டி கூந்தல் 
    முனையில் கட்டி 
    நீ நடந்து 
    வர அழகு!

    கூந்தலாடும் 
    அசைவும் 
    கொள்ளை போகும் 
    மனசு !
    கொல்லுதடி வயசு!!

     

    Share
  • தாயுணர்வு !

    -பா.ராஜசேகர்

    உச்சி வெளிவரும்
    உசிரு போய்டும்;
    தொப்புள்கொடிவரை
    தொற்றிக்கொண்டிடும் !                               Picture 1551

    நாடி நரம்புகள்
    இனிய வேதனை;
    கண்ணு இரண்டுமே
    இழுத்துச் சொருகிடும்!

    நினைவிழந்து
    செயலிழந்து;
    மயக்கம் துரத்தும்
    மரண எல்லைவரை !

    குழந்தை அழுகுரல்
    அவளை எழுப்பிடும்;
    அமுத சுரபியும்
    அடி எடுத்திடும் !

    மயக்க நிலையிலும்
    பாசம் துடித்திடும்;
    தாய்மை வீரமே
    தலைதூக்கிடும்!

    உதிரப் பரிசை
    வாரியணைத்து;
    உச்சிமுகர்ந்து மார்பதை
    வாயில்திணிக்க!

    அழுகைநிறுத்தி
    அமுதை அருந்த;
    வானளாவிய சுகம்
    தாய்மைக்கே புரியும்!

    Share