-பா.ராஜசேகர்
உச்சி வெளிவரும்
உசிரு போய்டும்;
தொப்புள்கொடிவரை
தொற்றிக்கொண்டிடும் ! 
நாடி நரம்புகள்
இனிய வேதனை;
கண்ணு இரண்டுமே
இழுத்துச் சொருகிடும்!
நினைவிழந்து
செயலிழந்து;
மயக்கம் துரத்தும்
மரண எல்லைவரை !
குழந்தை அழுகுரல்
அவளை எழுப்பிடும்;
அமுத சுரபியும்
அடி எடுத்திடும் !
மயக்க நிலையிலும்
பாசம் துடித்திடும்;
தாய்மை வீரமே
தலைதூக்கிடும்!
உதிரப் பரிசை
வாரியணைத்து;
உச்சிமுகர்ந்து மார்பதை
வாயில்திணிக்க!
அழுகைநிறுத்தி
அமுதை அருந்த;
வானளாவிய சுகம்
தாய்மைக்கே புரியும்!

Leave a Reply