ஒரு காலி டப்பாவைச் செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

ஒரு காலி டப்பாவைச் செல்பேசிக் கூடாக உருவாக்க முடியும். எப்படி என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Baskar Seshadri
I exercised my franchise at Vidya Mandir school mylapore and went round to many booths to cover the polling within my limited capacity. I should say that this is the best polling I have seen in these forty long years. It was orderly, perfect, well mannered with the best possible adherence.
I covered to a maximum of ten booths from santhome to Mandaveli and from Royapettah to Mylapore and I found the same pattern of discipline in all the booths. The police officials. para military forces, and election duty officers were too kind enough in extending their best service today.
The officials inside the booth were quiet and were impartial and the elderly were given the best respect. Besides their handling of these massive exercise during this pandemic period is extremely laudable. From the distribution of the glove to the assistance of exercising it was no doubt a job well done by the ECI.
Thankfully it’s not too hot and the turnout was really good. The ECI Top man Mr. Sahu in charge of Tamilnadu says its close to twenty Four percent in five hours indicating an average of five percent per hour roughly. The Electorates are brilliant and they need no education honestly since their presence all over show how concerned and conscious they were to elect their Representative. Kudos to the stakeholders, polling and police officials and the ECI.
I am proud to be a voter of this soil and I hold this Pride with me. Hail India.

திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
எறிபத்தர் வரலாற்றின் நிறைவுப் பகுதி இது. யானை, பாகருடன் கொல்லப் பட்டுக் கிடந்ததையும் எறிபத்த நாயனார் சினம்பொங்க நின்றதையும் கண்ட அரசர், அவர்முன் சென்று இவ்வாறு வெட்டிக் கொன்றது எதனால்? எனக் கேட்டார். உடனே எறிபத்தர் தேவர்களின் தேவராகிய ஈசரின் அன்பர் சிவகாமியாண்டார் இறைவனுக்குச் சாத்தக் கொண்டுவந்த மாலையை, இந்த யானை தும்பிக்கையால்,பாகர் தடுத்தும் சிதற வீழ்த்தியது. அதைக்கண்டு சினந்து நானே இதனையும் பாகரையும் வெட்டிவீழ்த்தினேன்.
என்றார். அதுகேட்டமன்னன் அஞ்சியபடி அடியாரைப்பணிந்தான்.இவ்வாறு சிவாபராதம் புரிந்த யானையின் உரிமையாளனாகிய என்னையும் கொல்வதேமுறை! உங்கள் கையில் உள்ள நல்ல மழுவால் கொல்லுதல் தகாது! என் கைவாளால் கொல்லுக என்று நல்ல தீர்வுக்காகத் தம்வாளை உருவித்தந்தார்.
அதைக்கண்ட எறிபத்தர், சிவபெருமான் பால் இவர் கொண்ட அன்புக்கு ஓர் அளவேஇல்லை; என்றெண்ணி அந்த வாளை வாங்காமல், சற்றுயோசித்து, வாங்கா விட்டால், அரசரே தம்மைக் கொன்று கொள்வார், என்றெண்ணி ‘’இவர்தந்த வாளால் இவரைக் கொன்று நான் செய்யவிருக்கும் பிழையை நீக்க இவரால் உதவி செய்யப்பெற்றேன்! தம்களிறும் பாகரும் மடிந்த பின்னும் உடை வாளைத் தந்து என்பிழைநீங்க என்னையும்கொல்க!’’ என்ற அரசருக்கும்தீங்கு நினைத்தேனே, என்று எண்ணி, முதலில் என்னுயிரை நீக்கிக் கொள்வேன்! என்று அந்த வாளால் தம்கழுத்தை அரிய முற்பட்டார். ‘’ஆகா! இப்பெரியோரின் செயல் எத்தகையது? நான் கெட்டேன்!’’ என்று விரைந்து அடியாரைத் தடுத்து வாளுடன் கரத்தையும் இறுகப் பிடித்துக் கொண்டார்.
இருவரும் விடாமல் முயன்றபோது, அன்பர்களின் பரிவால் வந்த துன்பத்தை நீக்கும்படி, கழுத்தில் கருத்த விடமேந்திய கருணையாளராகிய இறைவன் அருளால், வானில் ஓர்ஒலி எழுந்தது! வணங்குதற்கு உரிய சிவபத்தித் திறத்தால் சிறந்தஉங்கள் தொண்டின் சிறப்பை உலகமே அறிந்து கொள்ளும் வகையில், கூத்தப்பிரான் அருளால் இன்று இந்த யானை அடியாரின் மலரைத் தள்ளியது!’’ என்ற அளவில் பாகரும் வெட்டுப்பட்ட யானையுடன் பிழைத்து எழுந்தனர்! கழுத்தில் வைத்தவாளைக் கைவிட்டு எறிபத்தரும், மன்னரும் இறைவன்திருவடி போற்றிப் பணிந்தனர்! அப்போதுவிண்ணவர் பூமழை பொழிந்தனர். வானில் எழுந்த ஒலியை இருவரும்போற்றும்போதே, பூக்கூடையினுள் இறைவனுக்கு உரிய மலர்மாலை நிறைந்தது; அத்திருவருளைக் கண்டு சிவகாமியாண்டார் திகைத்து எழுந்துநின்றார்!
தேன் நிறைந்த வெற்றிமாலை யணிந்த மன்னன்முன்னே உறக்கத்திலிருந்து எழுந்தாற்போலே முட்டிப்போர்புரியும் ‘பட்டவர்த்தனம்’ என்றயானையை நோக்கிப் பாகர்கள் வந்தனர். அடியாரும் ‘’அரசே! அடியேன் மகிழும்படி இந்த யானை மேல் ஏறி வருக!’’ என்றார். அவ்வாறே குதிரைமேல் வந்த அரசரும் செய்தார்! அப்போது மக்களின் வாழ்த்தால் எழுந்த பேரொலியால் உலகமே மகிழ்ந்தது! இறைவன் திருவடியைத் தலைமேற்கொண்டு சோழ மன்னனும் அரண்மனை புகுந்தான் .பூக்கூடை தாங்கிய சிவகாமி யாண்டார் திருக்கோயில் சேர , எறிபத்தரும் சோழவரசன் பெருமையைப் போற்றித் தம் தொண்டினைத் தொடர்ந்து செய்து, கயிலை மலையில் சிவகணத் தலைமை பெற்றார். அவர் செய்த வலிய தொண்டே சிவதன்மம் ஆகும் என்பதைத் திருக்களிற்றுப் படியார் என்றசாத்திரம்,
“மெல்வினையே யென்ன வியனுலகு ளோர்க்கரிய
வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் – சொல்லிற் சிவதன்மமாம்”
என்று கூறுகின்றது. இதனைச் சேக்கிழார்,
ஆளுடைத் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்று அவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கில் அன்றி,
நீளும் இத் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்
என்ற பாட்டில் கூறுகிறார். இதன் பொருள் ஆளுடைய தொண்டராகிய எறிபத்த நாயனார் செய்த வீரச் செயலினையும், தம்மையுங் கொல்லும்படி தமது உடைவாளையுங் கொடுத்து நின்ற சோழனாரது பெருமையினையும், நாளும்நாளும் அவர்க்கு அருள்கள் நல்கும் நம்பராகிய இறைவர் தாமே அளந்தாலன்றி, நீளச் செல்கின்ற இந்தத் திருத்தொண்டின் தன்மைகளை நினைக்குமிடத்து யாவர் அளக்கும் வன்மையுடையா ராவர்? (ஒருவருமிலர்.)
விளக்கம்:
ஆளுடைத் தொண்டர் என்றதொடர் தாம் அடியார்க்கு ஆளாகவும் தம்மை அவர்களது உடைமைப் பொருளாகவும் கொண்ட தொண்டர் என்பதைக் குறித்தது
அடுத்து, ஆண்மை – வீரச் செயல். அதாவது யானையின் பலமும், அதுவும் மதங் கொண்டதும், பாகரும் பலராய்ப் பெரிய அரசரின் வலிய சார்பு கொண்டதும், தமது தனிமையும் முதலிய ஒன்றும் எண்ணாது திருத்தொண்டினுக்குச் செய்த அபசாரம் ஒன்றினையே கருதிச் செய்த தீரச் செயலை இங்கு எண்ணுக.
நல்கும் நம்பர்தாம் அளக்கில் அன்றி என்றதொடரை,
“அன்புடையாரை அறிவன் சிவன்”,
“அழுதுகாமுற்று அரற்றுகின் றாரையும்,
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பரீசனே”,
“விடமுண்டவெம் அத்த னார் அடியாரை யறிவரே”,
என்பன விளக்கும்! அளத்தல் – அளவிட்டறிதல்.
நீளும் என்றசொல், எஞ்ஞான்றும் எவ்விடத்தும் பொருந்த நீள்கின்ற என்ற பொருள்தந்தது. தத்தம் பயன்களைத் தந்து அழியும் பசு புண்ணியங்கள் போலன்றி, அழியாது பெருகும். ஆண்மையும் பெருமையும் தொண்டின் திறங்கள் என்பதாம்.
யார் அளக்க – வல்லார்? வினா ஒருவருமிலர் என்று குறித்தது. அளக்கவல்லார் என்றது அளந்து இனைத்து என்று அறிவால் நிச்சயிக்கும் வன்மையுடையா ராதலை.
மேற்பாட்டில் வரலாற்றை நிறைவு செய்த ஆசிரியர், இவ்வரலாற்றில் நிகழ்ந்த தொண்டின் நினைப்பரிய பெருமைகளைச் சிந்தித்துக் கொண்டு அதில் தாம்பெற்ற அற்புத உணர்ச்சியை இதனைக் கற்போருக்கும் அழகு பெற ஊட்டுகின்றார். இவ்வரலாறு ஆசிரியர் கற்பித்த கற்பனையாய் இதன் அருமை பெருமைகளை உணர்த்தி நின்றது.

06-04-2021 அன்று குருபகவான் மகர ராசியிலிருந்து அதிசாரமாக கும்ப ராசிக்குப் பெயர்ச்சி அடைந்தார். 15-09-2021 வரை கும்ப ராசியிலேயே சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்குத் திரும்புவார். இந்த அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை உரிய பரிகாரங்களுடன் ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

அழகுணர்வும் ரசனையும் ஒரு புள்ளியில் சேர்ந்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ராகுல், ஸ்வேதா தம்பதியினரின் வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
முன்னுரை
தொல்காப்பியம் பொருட்பகுதியின் பொருள் புலப்பாட்டுக்காகப் பொருத்தமான உவமங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் பாங்கினை ஆராயும் முந்தைய கட்டுரைப் பொருளுடன் இந்தக் கட்டுரையும் இதற்கு அடுத்து வரும் கட்டுரையும் தம்மை இணைத்துக் கொள்கின்றன. இலக்கண ஆசிரியன் ஒருவனுடைய இலக்கிய உள்ளத்தை அறிந்து கொள்வதற்கும் இவை பயன்படக்கூடும். மேலும் இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியர் காலத்திலேயே காழ்கொள்ளத் தொடங்கியிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். கணிதம் போலச் சொற்களைக் கோத்து அதனைக் ‘கவிதை’ என்று நம்ப வைக்க முயலும் தற்காலப் படைப்பாளர்கள் இதனைச் சிந்திப்பது பயன்தரலாம். ‘தொல்காப்பியம் ஒரு காடன்று அது ஒரு பூங்கா’ எனப் பின்னுள்ள கலைஞர்கள் அதனை அழைப்பதற்கான காரணங்கள் அந்த நூலிலேயே இருந்திருக்கின்றன. அகப்பொருள் இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்ல வந்த தொல்காப்பியர் அகத்திணை மணம் குறையாமலும் அறச்சிந்தனை மேலோங்கும் வகையிலும் உவமங்களைப் பயன்படுத்தியுள்ளார். இது பற்றிய ஆய்வினை இக்கட்டுரை முன்னெடுக்கிறது.
வெள்ளத்தைத் தடுத்த மலை
வெள்ளம் வருமுன் அணையிடுதல் என்பது ஒரு சொலவடை. மண்ணாசை காரணமாகத் தொடுக்கின்ற போருக்கு வஞ்சித்திணை என்று பெயர். பதின்மூன்று துறைகளை உள்ளடக்கிய அத்திணையுள்,
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்” 91
என்பதாகிய துறையும் ஒன்று. விசையொடு பெருகிவரும் கடும்புனலைக் கல்லாகிய அணை தடுத்து நிறுத்துமாறு போலத் தன்மேல் கடுகித் தொகையாக வரும் பகை மறவரைத் தான் ஒருவனே தடுத்து நிறுத்தும் பெருமிதமும் வஞ்சித்திணையாகும் என்பது கருத்து. பகைவர்களை வெள்ளமாகவும் தடுக்கின்ற வீரனைக் கல்லணையாகவும் உவமித்தது ஓர் இலக்கியப் புலவன் என்றால் இந்த ஆய்வுக்கு இங்குத் தேவையிருந்திருக்காது. தொல்காப்பியத்தின் இந்த உவமம் பின்னால் வந்த ஐயனாரிதனாரையும் கவர்ந்திருக்கிறது. அதனை அவர் சற்றொப்ப ஆசிரிய வசனமாகவே வழிமொழிந்திருக்கிறார். ஓர் இலக்கணத்தில் இடம்பெற்றதால் தனிக்கவனத்திற்கு ஆளாகிறது.
“பொருபடையுட் கற்சிறைபோன்று
ஒருவன் தாங்கிய நிலையுரைத்தன்று”
என்பது வெண்பாமாலையின் தனிநிலை பற்றிய கொளுவாகும். இதற்கு இலக்கண விளக்கம் தந்திருக்கும் ஐயனாரிதனார் வினையின் நீங்கிய விளங்கிய அறிவும் எதனையும் வியந்து நோக்காத பக்குவமும் உடைய சான்றேர்களும் அத்தகைய வீரத்தையுடைய மறவனைப் பெற்ற முதியவளின் வயிற்றை வியப்புடன் நோக்குவதாக,
“வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாம்!(ஆல்) இந்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் – கூடார்
பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம்!”
என்னும் துறைவிளக்கப் பாடலில் குறிப்பிடுகிறார். காப்பியரும் ஐயனாரிதனாரும் பயன்படுத்திய அந்த உவமத்தை,
“வேந்துடைத் தானே முனைகெட நெறிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவனாகி
தன்னிறந்து வாராமை விலக்கலின் பெருங்கடற்கு
ஆழியனையான் மாதோ என்றும்
பாடிச்சொன்றோர்க்கன்றியும் வாரிப்
புரவிக் காற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே!” புறம் 330
என்னும் புறநானூற்றுப் பாடலிலும் காணமுடிகிறது. ‘நெரிதர’, ‘ஒருவனாகி,’ ‘பெருங்கடற்கு ஆழியான்’ என்னும் சொற்களை அப்படியே புறநானூற்று ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நோக்கத் தகுந்தது.
உவமங்களான உணர்வுகள்
பருப்பொருளை உவமமாக்குவது ஒன்று, நுண்பொருளை உவமமாக்குவது ஒன்று, காட்டலாகாப் பொருட்களெல்லாம் நுண்பொருள்களே. நுண்மையை உணரலாமேயன்றி ஐம்பொறிகளால் நுகர்தல் இயலாது. தொல்காப்பியம் இதனை ‘நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள்’ என்று கூறும்.
“ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
கற்பும் ஏரும் எழிலும் என்றா
சாயலும் நாணும் மடனும் என்றா
நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரும் கிளவியெல்லாம்
காட்டலாகாப் பொருள என்ப”
என்பது நூற்பா. இந்நூற்பாவில் பயின்றுவரும்‘ ஆவயின் வரூஉம் கிளவியெல்லாம்’ என்பதனால் தாய்மை அன்பை அடக்கிக் கொள்ள இயலும். தாய் போன்றாள் என்றால் அது உருவத்திற்கான உவமமாகாது பண்பிற்கான உவமமாகும். பண்பு காட்டலாகாப் பொருள். தாய்போல் பேசி என்றால் தாய் தன் சொற்களில் காட்டும் பரிவைக் கலந்து பேசி என்பதே பொருளாகும். பெண்மையின் உச்சம் தாய்மை. பெண்மை சிறப்படைவது தாய்மையால். தாய்மையன்றிப் பெண்மையில்லை. தாய்மையடையாத பெண்மை பெருமைக்குரியதாகாது. தாய்மை பரநலத்தின் அடையாளம். இந்தப் பண்பைப் புதிய வரவான மனைவியிடத்தும் ஒருவன் எதிர்பார்க்கிறான். தலைவன் எதிர்பார்க்கும் இந்த உணர்வை நன்கு புரிந்து கொண்ட காமக்கிழத்தி என்னும் உறவுடையாள் ஊடல் காரணமாகப் புலந்து நிற்கும் தலைவியைத் தலைவனோடு சேர்த்து வைக்கும் கடமையைச் செய்கிறாள்.
“காதற்சோர்வில் கடப்பாட்டு ஆண்மையின்
தாய்போல் கழறித் தழீஇய மனைவியைக்
காய்வின்று அவன் வயின் பொருத்தற்கண்ணும்”
என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். காமக்கிழத்தியின் கூற்றுச் சூழலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தாயன்பு பற்றிய இந்த உவமத்தைத்,
“தாய்போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப”
என்னும் நூற்பாவிலும் உவமமாக்கியிருக்கிறார் தொல்காப்பியர். உரையாசிரியப் பெருமக்கள் இந்த இரண்டு நூற்பாக்களையும் மாட்டேற்றாகக் கொள்வர். இதனால் காமக்கிழத்தியாயினும் மனைவியேயாயினும் எல்லா நேரங்களிலும் காமக்குறிப்பே வெளிப்பட நிற்பர் என்னும் கற்பனை பொய்த்தும் அவ்விருவரும் அன்பில் தலைமகனுடைய தாயன்பை வெளிப்படுத்தியே நிற்பர் என்பதும் பெறப்படும். படவே தாயன்பு உறவுநிலை மாறியும் நிற்கும் என்பதும் தலைவனுக்கும் காமக்கிழத்தி, மனைவி என்னும் உறவுகளுக்கும் இடையில் நிலவும் அன்பு தாயன்பின் கலப்பே என்பதும் அனுமானிக்கப்படும்.
உண்மையான நட்பு உள்ளமே
உலகியல் சார்ந்த உதவிகளை ‘ஒப்புரவறிதல்’ என்றும் அறப்பயன் நோக்கிய உதவிகளை ‘ஈகை’ என்றும் திருவள்ளுவர் ஆராய்வார். ‘பொருளெல்லாம் வேளாண்மை செய்தற்பொருட்டு’ என்பதனாலும் ‘ஒன்று ஈவதே ஈகை’ என்பதனாலும் அவ்விரண்டு அறங்களும் பொருளைக் கருவியாக உடையவை என்பது பெறப்படும். அருவப் பொருளால் அவ்வறங்களைச் செய்ய இயலாது. தொல்காப்பியம் அருவப் பொருளால் உதவி செய்யலாம் என்று தெளிவாக்குகிறது. உதவும் இந்த அருவப்பொருளை அவர் ‘உள்ளம்’ என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்று செல்வமாக்குகிறார். ‘உதவி எதுபோல அல்லது ‘யார் செய்வது போல’ என்றால் பொதுவாகப் பாரியைத்தான் சொல்வார்கள். தொல்காப்பியமோ ‘உள்ளம் போல’ உதவ வேண்டும் என்று கூறுகிறது.
“உள்ளம் போல உற்றுழி உதவும்
புள்ளியல் கலிமா உண்மை யான”
என்னும் நூற்பா பொருள்வயிற் பிரிந்த தலைமகன் மீண்டுவரும் சூழலை விவரிக்கிறது. தலைவியைப் பிரிந்த தலைவன் மீள்வது நெடிய சுரமாயினும் தலைவியை வழிநடைச் சோர்வு ஆங்காங்கே தங்கி மீளுமாறு புலனெறிவழக்கம் செய்யும் வழக்கம் தமிழில் இல்லை. ஆதலின் தலைவியைக் காணச்செல்லும் அவன் உள்ளத்தின் வேகம் போலத் தாவிச்செல்லும் (பறந்து செல்லும்) பறவையை ஒத்த குதிரை இருப்பதால் அவன் எவ்விடத்தும் தங்காமல் தலைவியை வந்தடைவான் என்பது கருத்து. இந்த உவமத்தால் தலைவியை உடனே காண வேண்டுமென்றால் மனக்கண்ணில கொண்டு காணுதற்கு உதவும் உள்ளத்தைப்போலத் தலைவன் சென்று மீளும் குதிரை விரைவினையுடையது என்பது விளக்கப்பட்டது. உள்ளம் என்னும் அருவப் பொருளும் உதவும் என்பது தொல்காப்பியப் புதுமை.
நிறைவுரை
மேற்கூறிய சில கருத்துக்களால் பொருண்மையை விளக்குதற்கு அகத்திணை, புறத்திணை மற்றும் பொருளியல் ஆகியனவற்றில் உவமங்கள் பன்படுத்தப்பட்டுள்ள பாங்கு ஓரளவு புலனாகலாம். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கனுக்கும் பருப்பொருள் மட்டுமேயன்றி நுண்பொருளும் உவமமாக்கப்படலாம் என்னும் கருத்தும் பெறப்படும். இலக்கணத்தை இலக்கியமாக்கும் முயற்சி தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது என்பதை இதனால் உணரமுடியும். தொல்காப்பிய உவமத்துள் பேராண்மை சார்ந்ததொரு உவமம் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.
(தொடரும்…)

பாஸ்கர்
நினைத்து பாருங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் சுற்று புற சூழல் பாதிப்பில்லாத மயிலாப்பூர் மற்றும் அதன் மாட வீதிகள். அதுவும் நான் சொல்ல போவது அந்த எட்டாம் நம்பர் வடக்கு மாட வீதி. மூன்றடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சந்தில் என் சினேக காலம் ஊன்றியது. அது நண்பர் மௌலியின் வீடு. நீளமான சந்து. அந்த பக்கம் போனால் பலா தோப்பு வந்து விடும் போல். அவ்வளவு நீளம். அதில் ஒரு அஞ்சடி மர பெஞ்ச். அதில் தான் அய்யாசாமி என்கிற மௌலியின் தாத்தா அமர்வார். கையில் ஒரு விசிறி. சுமார் ஆறடி உயரம். பார்த்தாலே பயம் வரும் ஒரு உருவம். எங்களை திட்டுவதே அவர் பொழுது போக்கு. ஆனால் மிக அன்பானவர். கட்டை குரலில் அவர் கத்துவது ஊரெல்லாம் எதிரொலிக்கும். ஒரு அலாதியான அன்பு அவருக்கு மௌலியிடம் உண்டு.
அப்போதெல்லாம் குறைவான போக்குவரத்து. நன்கு நீர் நிரம்பிய கோவில் குளம். அதிரடி வேகத்தில் எப்போதும் காற்று. அதுவும் அந்த சந்தில் முட்டி மோதி உள்ளே செல்கையில் அதன் வேகம் கூடும். வாழ்வில் கோபப்பட வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு விவரம் புரியாத சந்தோஷம். எல்லாம் இலவசம். மிதி வண்டியில் ஊர் சுற்றி வரும் எங்களுக்கு எல்லா தெருக்களும் அத்துப்படி. திரும்ப திரும்ப கொஞ்சம் சினிமா, காரம்போர்ட், அவ்வப்போது கிரிக்கெட். இரவு பொழுது தான் எல்லோர்க்கும் அவஸ்தை. வெளியே செல்ல கட்டுப்பாடு. அதனால் என்ன ? அடுத்த நாள் திட்டம் பின்னிரவே தயார். பசிக்கும்போது தான் எங்களுக்கு வீட்டு நினைப்பு.
அதுவும் மௌலியின் அம்மா எங்களுக்கு கொடுக்கும் தயிர் சாதம் ஒரு வரப்ரசாதம் – காற்றில் முடி பறக்கும் அந்த மதிய பொழுதில் சுமார் வெய்யிலில் அந்த ஜில்லென உணவு நிஜ தேவாம்ருதம். அந்த ஒரு சுவையை நான் இன்று வரை ருசித்ததில்லை. கமலா மாமியின் கை வண்ணம் அது – எத்தனை அன்பு இதயங்களை கடந்து வந்து இருக்கிறது இந்த வாழ்க்கை. எந்த முனையில் உறவுகள் முளை விடுகிறது என்றே புரிவதில்லை. அது எப்படி வீர்யம் அடைந்து பல்கி பெருகிறது என்றும் தெரிவதில்லை. வாழ்வின் வடிவமைப்பு புரிபடவில்லை. இது இப்படி என எண்ணும்போது வேறு ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. எதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு நிர்ணயம் செய்ய முடியவில்லை – இதோ எல்லோரும் அறுபதை தொட்டாகி விட்டது குளம் இருக்கிறது. நீர் இல்லை. மனம் இருக்கிறது. வயசு இல்லை. இன்றும் தயிர் அல்லது மோர் சாதம் நினைப்பு வந்தால் கமலா மாமி தான் நினைவுக்கு வருகிறார்கள்.. உணவின் சுவை கைப்பதத்தில் இல்லை. அது மனசில் இருக்கிறது. வாழ்க்கை தீராநதி.

ஜோதிர்லதா கிரிஜா
2013 இல் இதே தலைப்பில் தினமணியில் வந்த என் கட்டுரை வல்லமையின் 27.09.2013 இதழில் சிலரால் விவாதிக்கப்பட்டது. அக்கட்டுரையில் நான் சொல்லவே சொல்லாதவை யெல்லாம் சாடப்பட்டன. அதாவது எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் ஆண்-பெண் நட்புறவாக இருக்க “பெண்ணுரிமை” பற்றிய விவாதங்கள் அரங்கேறின. எனது பதிலில் அதை நான் சுட்டிக் காட்டியாகிவிட்டது. (விருப்பமுள்ளவர்கள் “வல்லமையில் ஜோதிர்லதா கிரிஜா” என்று சொடுக்கிப் பார்த்துக்கொள்ளலாம்.) நிற்க.
ஒரு மிக முக்கியமான விஷயம் பற்றிப் பெற்றோர்களுக்குச் சொல்லும் பொருட்டே இக் கட்டுரை. என் கட்டுரையில், “பத்து வயதுச் சிறுவர்கள் கூட நமபத் தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை; எல்லாத்துக்கும் சின்னவன், ஆனா, கல்யணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு” என்பதோடு மேலும் சிலவற்றையும் கூறியிருந்தமைக்கு நண்பர் செல்வன் அவர்கள் மறுப்பு எழுப்பியிருந்தார். ‘பத்து வயதுச் சிறுவனை வன்புணர்ச்சியாளனாகப் பார்க்கச் சொல்லும் கட்டுரையை என்னவென்று ஏற்றுக் கொள்ளுவது’ என்கிறார்.
அடுத்து, புவனா அவர்கள் விஞ்ஞான ரீதியாகச் சில கேள்விகளை எழுப்புகிறார்: ‘எழுத்தாளர், உலகில் உள்ள அத்தனை ஆண்களையும் அறிவாரா? பத்து வயசுப் பையன்கள் உட்படக் காம எண்ணம் உள்ளவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? அவருடைய sample set என்ன? என்ன survey எடுத்தார்? Etc…..’
நியாயமான கேள்விதான். தாய்மார்கள் தங்களின் 5 – 8 வயதுப் பெண்கள் அக்கம்பக்கத்து 10, 12 … (மேலும் அதைக் கடந்த) சிறுவர்களால் வன்னுகர்வு செய்யப்பட்டு உடல் உபாதைகளில் ஈடுபட்டது, அந்தப் பிள்ளைகளின் பெற்றோருடன் அதனால் விரோதம் விளைந்தது போன்றவற்றை எனக்கு எழுதியதுண்டு. ஆனால் நான் கேள்விப்பட்டவற்றைக் கூறி எனது கூற்றை மெய்ப்பிக்க முடியாதல்லவா? அதனால் மவுனமாய் இருக்க நேர்ந்தது. ஆனால், அப்போது தோன்றாத எண்ணம் இத்தனை நாள்கள் கழித்துத் தோன்றியதில் வலைத்தளதில் ஒரு தகவலைக் கண்டேன். நான் ஆய்வு ஏதும் செய்யாவிட்டாலும், ஒரு வெளிநாட்டுத் தாய், மற்றும் சிலர் செய்த ஆய்வறிக்கையின் சில வாக்கியங்களைக் கீழே தருகிறேன்:
Low-income kids report first sexual intercourse at 12 years old in new ISU study
Boys having sex earlier, more often than girls
In the study, boys reported their first sexual intercourse at younger ages (averaging 12.48) than girls (13.16). Boys also had nearly 10 percent higher frequency of Posted Aug 12, 2009
AMES, Iowa — As a new mother herself, Brenda Lohman admits to being shocked by the results of a new study she co-authored. It found that among nearly 1,000 low-income families in three major cities, one in four children between the ages of 11 and 16 reported having sex, with their first sexual intercourse experience occurring at the average age of 12.77.
“So if 12 years was the average age here, that meant that some kids were starting at 10 or younger,” said Lohman, an Iowa State University associate professor of human development and family studies (HDFS). “A handful of kids reported having sex as early as 8 or 9. We know from our follow-up interviews that one boy who reported having sexual intercourse for the first time at age nine had fathered four children by the time he was 18.”
“Those people who say that kids don’t have sex at that young of age should think again,” she said. “Definitely the age is the most shocking thing about this study.”
Tina Jordahl, a former Iowa State HDFS and public policy graduate student who is now a market research specialist with Hospice of Central Iowa, collaborated with Lohman on the study. It analyzes data from the “Welfare, Children and Families: A Three-City Study” — a six-year longitudinal investigation of low-income families living in Boston, Chicago and San Antonio. Their paper, titled “A biological analysis of risk and protective factors associated with early sexual intercourse of young adolescents,” was posted online in the Children and Youth Services Review and will be published in an upcoming issue of the journal.
மற்றோர் ஆய்வறிக்கையில் ஆய்வாளர்கள் அந்தப் பத்து வயதுச் சிறுவர்களில் பெரும்பாலோர் அது தவறு என்று தெரிந்தே ரகசியமாய்ச் செய்வதாய்க் குறிப்பிடுகிறார்.
எனவே, எனது எச்சரிக்கைக் கூற்றில் எந்தத் தவறும் இல்லைதானே?
‘வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது’ என்ற என் சொற்களுக்கு, “ஓஹோ! அப்படியா? என்ன அஹங்காரம்!” என்று இவர் தெரிவித்த கருத்தில் தப்பே இல்லை. அப்படித்தான் சொல்லத் தோன்றும். “விமர்சகர்கள்” என்பதற்குப் பதிலாய் “வாசகர்கள்’ என்று நான் கை தவறி அப்படி எழுதிவிட்டேன் என்பதே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பு, வெறுப்பைப் பொறுத்தது. “விமர்சகர்கள்” என்று சொன்னால் மட்டும் “அஹங்காரம்” இல்லை என்றாகிவிடுமா எனும் கேள்வியும் எழத்தான் செய்யும். என் கட்டுரையில் நான் சொல்லாதவற்றை யெல்லாம் விமர்சிப்பவர்களைப் பற்றி ‘அய்யோ! இப்படி விமர்சித்து விட்டார்களே!’ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா? அதுதான் நான் நினைத்தது. “அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது” என்று சொன்னதும் அதனால்தான். இந்த என் எதிர்வினை “அஹங்காரம்” எனில், நான் சொல்லாதவற்றை யெல்லாம் (பெண்ணுரிமை என்னும் தலைப்பில்) விவாதித்துத் தேவையற்று என்னை வம்புக்கு இழுத்த விமர்சகர்களின் தன்மைக்கேட்டுக்கு என்ன பெயரோ!
அடுத்து, நண்பர் பிரசாத் “படிப்பவர்களில் பெரும்பாலோர் ஒரு கருத்தை எழுதியவரின் கோணத்தில் பார்க்காமல் வேறு திசையில் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அது எழுதுபவரின் எழுத்து நடைக் குற்றமே அன்றிப் படிப்பவரின் குற்றமாகாது.’ என்று கூறியுள்ளது உண்மைதான். ஆனால், நான் ஆணாதிக்கத்தை எதிர்த்து வந்திருப்பவள் / வருகிறவள் என்கிற கோணத்திலேயே நான் எழுதுகிற ஒவ்வொன்றையும் தப்பாக எடை போட்டு, நான் எழுதாதவற்றைக்கூடச் சம்பந்தமே இல்லாமல், ஏற்கெனவே கொண்டுள்ள கணிப்பின் (pre-conveived notion) அடிப்படையில் அன்றோ சிலர் விவாதித்துவிட்டு எழுத்தாளருக்குத் தன் கருத்தை வாசகர்களுக்குப் புரியவைக்கும் திறன் இல்லை என்று மட்டம் தட்டுகிறார்கள்! இது படிப்பவரின் குற்றமே அன்றோ! கறுப்புக் கண்ணடி யணிந்து பார்த்தால் பார்வை மங்கத்தானே செய்யும்?
‘எனக்கு ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்று நான் சொன்னது நான் “ஆண்களை வெறுப்பவள் அல்லேன்” என்பதைத் தெரிவிக்க மட்டும்தான். என் “அதி புத்திசாலித் தனத்தை” விளம்பரப்படுத்துவதற்காக அன்று! எனினும் உங்கள் வாதம் வக்கீல்தனமாகவும் பாராட்டும்படியும் உள்ளது. என் பாராட்டுகள், நண்பரே!
கடைசியாக, “தற்பெருமைக்காரி” அல்லது “தலைக்கனம் உள்ளவள்” என்று விமர்சிக்கப்படக் கூடிய ஓர் அறிவிப்பு! தினமணி கட்டுரையைப் படித்துவிட்டு, என் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டறிந்து, மண்ணடி (சென்னை) யிலிருந்து மின்சாதனங்கள் விற்பனையாளர் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் தொலைப்பேசியில் சொன்னது:
“அம்மா! எனக்குக் கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிறாள். பெண்களைப் பெற்ற தகப்பன்மார்களுக்கு உங்கள் கட்டுரை மிகவும் பிடிக்கும். உங்கள் ஆண்-பெண் நட்புறவு” கட்டுரையைப் பிரதிகள் எடுத்து அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் விநியோகம் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.”

Baskar Seshadri
Myrtle Social Welfare Network is running remedial education centres at 8 SC & ST villages in Attrambakkam, odappai, seethanjeri Panchayat Poondi block, Tiruvallur district, by providing every day evening nutritional supplements such as cooked 150 gms of white and black chenna, white and black karamani, peanuts, double beans etc.
But due to funding we have restricted to 5 villages now, our needs are Rs. 2000 as a part time tuition teacher salary for each village and 10 kg pulses required every day for 5 centers, pulses each kg Rs.75 approximately, donor can give us cash or kind also. And cook salary is Rs.9000 including delivering in the respective villages.
Donor can transfer directly to the tution teachers and cook Bank account directly as money transfer. Beyond this if anyone can donate that could be helpful for the children they are most welcome. Donors can also give utensils and unused items like water filters, Good Mats, Mosquito coil among other things.
Now they urgently need fans in this hot summer as a priority item.
For any assistance on this i can be reached for guidance needed if any.
Contact: Baskar Seshadri – 9841033888

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா
2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, கால்வாய்க் குறுக்கே மாட்டி, இருபுறக் கப்பல் போக்கு வரத்தை, சுமார் 7 நாட்கள் தடை செய்தது. அது சிக்கிக் கொண்ட தோடு, 37 கப்பல்கள், வாய்க்கால் மத்தியிலும், 70 கப்பல்கள், கால்வாய் முழு தூரத்திலும் முடக்கம் ஆயின. அத்துடன் நான்கு நாட்களில் கடக்கப் போகும் 306 கப்பல் களுக்கு நுழைவு எச்சரிக்கை விடுத்து, நிறுத்தம் அடைய எதிர்பார்த்தன. எவர் கிவன் பூதக்கப்பல் கரைக்குள் புகுந்த மண் கட்டி 30,000 குபிக் மீட்டர் [1,059,000 குபிக் அடி] எடுக்க, பல்வேறு கிரேன்களும், மண் தோண்டிப் படகுகளும் இராப் பகலாய் வேலை செய்தன. மேலும் முழுநிலவுக் காலமானதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, மார்ச்சு 29 ஆம் தேதி பூதக் கப்பல் நேர்படச் செல்ல விடுதலை ஆனது. இப்போது [மார்ச் 29] 45 கப்பல்கள் இரு புறத்திலும் நகர்ந்து வருகின்றன. ஒரு நீள் கப்பல் 200 கி.மீடர் [120 மைல்] தூரக் கால்வாய் கடக்க சுமார் 12 மணி நேரம் ஆகிறது.
ஒருவாரம் சூயஸ் கடல் மார்க்கப் போக்கு தடைப்பட்டதால், உலக நாடுகளின் வாணிப இழப்பு நிதி நாள் ஒன்றுக்கு சுமார் 9.6 பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது. அத்துடன் உலக நாடுகளில் பெட்ரோல் விலை ஏறும். மற்றும் சாதனங்கள், பொருட்கள் விலை ஏறும்.

சூயஸ் கால்வாய் அடைப்பால் வாணிப வருவாய்ப் பேரிழப்பு

சூயஸ் கால்வாய் குறுகிய அகற்சி [120 மைல்]

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய கால்வாய்!
கி.மு.1920 ஆண்டில் எகிப்து பெரோஸ் மன்னர்கள் [Pharaos] காலத்திலே மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் கால்வாய் மூலம் இணைக்கும் முன்னோடிப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப் பட்டன என்று எகிப்து சூயஸ் கால்வாய்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மம்தோவ் ஹம்ஸா [Dr.Mamdouh Hamza] அறிவிக்கிறார். டாக்டர் ஹம்ஸா நிலவியல் யந்திரப் பொறியியல் நிபுணர் [Civil Engineer, Soil Mechanics]. நீள நைல் நதியின் கடல் சங்கமப் பகுதியில் ஒரு கால்வாயை வெட்டி, இரண்டு கடல்களையும் சேர்த்ததாக வரலாறுகளில் அறியப் படுகிறது. முற்காலத்தில் ஈரோப்பிலிருந்து இந்தியாவுக்கு வர நைல் நதியின் வழியாகக் கப்பல்கள் முதலில் பயணம் செய்து, கால்வாய் மூலமாகக் கடலை அடைந்ததாகத் தெரிகிறது. அதன் பின்பு கால்வாய் கவனிப்பாரற்று அடுத்து கிரேக்க, ரோமாபுரி வேந்தர் களால் பல தடவைத் தோண்டப் பட்டு மீண்டும் புறக்கணிக்கப் பட்டது! எகிப்து நாடு அரேபியர் கைவசம் ஆன பிறகு, மறுபடியும் கால்வாய் தோண்டப்பட்டு, நிரப்பப் படாமல் பல்லாண்டுகள் கிடந்தது! பின்னால் கால்வாயில் நீர் நிரப்ப பட்டது.
கடல் மார்க்க சூயஸ் கால்வாய் அமைப்பு வரைபடம்
இந்தியாவுக்கும் ஈரோப்பிற்கும் எகிப்து கால்வாய் வழியாக சுருக்குப் பாதை அமைக்க முதன்முதல் ஆலோசனை கூறியவர் பிரென்ச் அதிபதி நெப்போலியன்! நூறு மைல் நீளம், 200 அடி அகலமுள்ள சூயஸ் கால்வாய், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மனிதரால் படைக்கப்பட்ட மகத்தான ஒரு பொறியியல் பூதக் கால்வாயாகக் கருதப்படுகிறது! அந்த நூறு மைல்களைக் கடக்க ஒரு கப்பலுக்குச் சுமார் 15 மணி நேரம் எடுக்கிறது. பத்தாண்டுகளாக 2.4 மில்லியன் பணியாளிகள் அல்லும் பகலும் பணி செய்து, கட்டிய கடற்பாதை அது! கால்வாய் பூரணமாக 125,000 நபர்கள் உயிரைப் பலி கொடுத்துள்ளதாக அறியப் படுகிறது! டோக்கியோ, ராட்டர்டாம் [ஹாலந்து] கடற் பயண தூரத்தை 23% சதவீதம் சூயஸ் கால்வாய் குறைக்கிறது! செளதி அரேபியா துறைமுகம் ஜெட்டாவிலிருந்து [Jeddah], கருங்கடல் துறைமுகம் கான்ஸ்டென்ஸாவுக்குச் [Constanza] செல்லும் கப்பல், சூயல் மூலமாகச் சென்றால் 86% தூரத்தைத் தவிர்க்கிறது! அதுபோல் ஆஃபிரிக்கா முனை வழியாகக் கப்பல் லண்டனிலிருந்து பம்பாயிக்குச் சென்றால் 12,400 மைல்! ஆனால் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றால் லண்டன், பம்பாய் கடல் தூரம்: 7270 மைலாகச் சுருங்குகிறது.







தகவல்:
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(344)
தெளிவி லதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்.
– திருக்குறள் -464 (தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்...
தமக்குத் தரக்குறைவு
என்னும்
குற்றம் வருவது குறித்து
அஞ்சும் இயல்புடையோர்,
அமைச்சர்கள் ஆலோசனை பெற்றும்
தாமும் ஆராய்ந்து
என்ன பயனைத்தரும் என்பதைத்
தெளிந்தறியாத செயலைச்
செய்யத் தொடங்கமாட்டார்…!
குறும்பாவில்...
அவமானம் வருவது குறித்து
அஞ்சும் இயல்புடையோர், தெளிவு இல்லாத
செயலைச் செய்யத் தொடங்கார்…!
மரபுக் கவிதையில்...
செயலால் தமக்கே இழுக்கதுதான்
சேரு மென்றே அஞ்சுகின்ற
இயல்பைக் கொண்ட ஆட்சியாளர்,
ஈடு பாடு மிகக்கொண்டே
அயலார் அமைச்சர் என்றுநன்றாய்
ஆராய்ந் தறிந்து தெளிந்திடாமல்
செயலின் பலன தறியாமல்
செய்யத் தொடங்க மாட்டாரே…!
லிமரைக்கூ..
அவமானம் வருவதற் கஞ்சியே
செல்லார் செயல்தொடங்க, செயலதன் தன்மைகள்
ஆய்ந்து தெளிந்ததை மிஞ்சியே…!
கிராமிய பாணியில்...
செயல்படணும் செயல்படணும்
எதயும்
தெரிஞ்சி செயல்படணும்,
நல்லாத்
தெளிஞ்சி செயல்படணும்..
செய்யப்போற செயலாலத்
தமக்கு அவமானக்
குத்தம் வந்துருமோண்ணு
பயப்படுற கொணமுள்ள ராசா,
மந்திரிமாரோடக் கலந்தாலோசிச்சித்
தானும் நல்லா ஆராஞ்சறிஞ்சித்
தெளியாம அந்தச்
செயலச்செய்யத் தொடங்கமாட்டார்..
எப்பவுமே
செயல்படணும் செயல்படணும்
எதயும்
தெரிஞ்சி செயல்படணும்,
நல்லாத்
தெளிஞ்சி செயல்படணும்…!

அமுதத் தமிழில் அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள், இதோ உங்களுக்காக. திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைப்பில், கிருஷ்ணகுமாரின் கணீர்க் குரலில் கேட்டு மகிழுங்கள். அபிராமவல்லியின் அருள் பெறுங்கள்.
கிருஷ்ணகுமாரின் இதர பாடல்களைக் கேட்க:
https://www.youtube.com/playlist?list=PLMaFf7VrfFhLwywMNOlu9aNQAk1eXcun5
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் ஸ்யாம். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிக்க அழைத்தபோது ஸ்யாம் நடிக்காதது ஏன்? இப்போது தாடி வளர்ப்பது ஏன்? கத்திச் சண்டை கற்றுக்கொள்ளுங்கள் என்று இயக்குநர் சொன்னது ஏன்? சட்டென அழுவதற்குச் சக நடிகை பயன்படுத்தும் உத்தி எது? அதிகமாக ரீ டேக் வாங்கிய காட்சி எது? பிடித்த நடிகர்கள் யார் யார்? இதோ மனம் திறக்கிறார், ஸ்யாம். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)