Blog

  • குறளின் கதிர்களாய்…(189)

    செண்பக ஜெகதீசன்

     

     

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோ னெனக்கேட்ட தாய்.

    -திருக்குறள் -69(புதல்வரைப் பெறுதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அன்னைக்கு ஆனந்தம்

    தன்னை

    அம்மாவென அழைக்க

    மகன் பிறந்தபோது..

     

    அதைவிடப் பேரானந்தம்,

    அவனை அடுத்தவர்

    சான்றோன் என

    சொல்வதைக் கேட்கும்போதுதான்…!

     

    குறும்பாவில்…

     

    பெற்ற பொழுதைவிடப் பேரானந்தம்

    பெற்ற தாய்க்கு, மற்றவரவனைச்

    சான்றோனென்பதைக் கேட்கையில்தான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அன்னை யென்றே அழைத்திடத்தான்

    அன்பு மகனைப் பெற்றவுடன்

    அன்னை யடைவாள் ஆனந்தமே,

    அகில வாழ்வில் அவளுந்தான்

    இன்னும் மேலாய் மகிழ்ந்திடுவாள்

    இந்தப் பிள்ளைக் கற்றுயர்ந்தே

    மன்றம் மெச்சிடும் சான்றோனென

    மற்றவர் சொல்லக் கேட்கையிலே…!

     

    லிமரைக்கூ..

     

    தாய்மகிழ்வாள் தன்மகன் பிறப்பில்,

    அதைவிட அதிகமாய் மகிழ்ந்திடுவாள்

    அம்மகன் சான்றோனெனும் சிறப்பில்…!

     

    கிராமிய பாணியில்…

     

    சந்தோசம் சந்தோசம்

    சம்சார வாழ்க்கயில

    புள்ளபொறப்பு சந்தோசம்..

     

    அம்மாண்ணு கூப்புடத்தான்

    மகன்பொறந்தா

    பெத்தவளுக்கு சந்தோசம்..

     

    அதுலயும்

    அவன்வளந்து பெரியவனா

    நாலெழுத்து படிச்சி

    நல்லவண்ணு

    நாலுவரு சொல்லக்கேட்டா

    பெத்தவளுக்கு அது பெரும்சந்தோசம்..

     

    சந்தோசம் சந்தோசம்

    சம்சார வாழ்க்கயில

    புள்ளபொறப்பு சந்தோசம்…!

     

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 2

    -முனைவர் ச.அருள்

    தமிழ் வளர்த்த சான்றோரைப் பாராட்டல்

    19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அறிஞர்கள் பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் எனப் பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தால் தொய்வுற்றிருந்த தமிழ் மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் தலைசிறந்த தமிழ் அறிஞராக இன்றும் என்றும் போற்றத்தக்கவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். இவர் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிடில் எத்தனையோ இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். ‘ஏடு காத்த ஏந்தல்’ என்று இவரைச் சிறப்பிக்கின்றார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றவர்.  உ.வே.சாமிநாத ஐயர் சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை முதலிய இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

    கவிஞர் வைரமுத்து, ‘மொழி காத்தான் சாமி’ என்னும் பொருண்மையில் உ.வே.சா. குறித்து எழுதிய கட்டுரையில், “தமிழ் என்பது விழுமியம், பெருமிதம், வீரம், ஈரம், காதல், பண்பாடு, தத்துவம் என எல்லாம் கூடிக் கலந்த ஒரு பெரிய கலாசாரக் கடல். இத்தனை கருவிகளுக்கும் சான்று தந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். அவர் இல்லையெனில் தமிழின் தொன்மைக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் தடயங்களும் சான்றுகளும் ஆவணங்களும் இல்லை. ஊர் ஊராய் ஏடு தேடி அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் ஒரு செம்மொழியின் முதல் தகுதியான தொன்மை என்பதற்கு நாம் ஆதாரமற்றுப் போயிருப்போம்” என்று கூறியுள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார், ‘மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்க்கு’ என்னும் கவிதையில்,

    பார்காத்தார் ஆயிரம்பேர் பசித்தார்க்காகப்
    பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக
     மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
    மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம்
    யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா
    யான்காப்பேன் எனவெழுந்தான்
    சாமி தான்!
    நீர்காத்த தமிழகத்தார்
    நெஞ்சின் உள்ளான்
    நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்.
       பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி!
    போகாத புகழ்க்கன்னி மணந்த நாத!
    செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய!
    சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
    எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
    இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
    நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
    நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க!”             – (மாமலர்கள், .72)

    என்று வாழ்த்துகிறார். உலகினைக் காத்தவர்கள் பசித்தோர்க்கு உணவு கொடுக்கப் பயிர் செய்து அந்தப் பயிரைக் காத்தவர்கள்; குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக தாய்மடி காத்தவர்கள்; இவர்கள் மத்தியில் தமிழ்த்தாயின் உடைமைகளை, தமிழ் இலக்கியங்களைக் காப்பதற்காக தன்னார்வத் தொண்டராக வந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். இவர் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில்லாமல் தமிழ்த் தொண்டாற்றி தமிழர்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறார். தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டவர் தமிழுக்கு உயிரானவர் உ.வே.சா.சாமிநாதையர் அவர்தம் தாள் வாழ்க என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.

    அண்ணாமலை செட்டியார்

     செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வி வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் இசை மீது ஈடுபாடு கொண்ட அண்ணாமலை செட்டியார் தமிழிசையை ஆய்வு செய்வதற்காக 1941– இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தார். இந்த நிதியானது தமிழிசை இயக்கத்திற்கு ஓர் உந்துதலாக இருந்தது. வ.சுப.மாணிக்கனார் ‘வள்ளல் அண்ணாமலையரசர்’ என்னும் கவிதையில்,

    நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்;
    நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
    கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
    காணாத பெருங்கழகம் களத்து வைத்தான்;
    இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
    இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
    வெல்லாத செயலில்லை என்று போற்ற                                    விளங்கியவன் மன்அண்ணா மலையன் வாழ்க.” – (மாமலர்கள், 76)

    என்று அண்ணாமலை செட்டியாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். நிலைத்து நிற்காத செல்வத்தை நிலைக்கச் செய்து, கலைகளில் புரட்சி செய்தவர் அண்ணாமலையரசர். மிகப்பெரும் பல்கலைக்கழக்தை உருவாக்கி, கல்லாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கியவர். தமிழறிஞர்களை ஊக்குவித்து தமிழின் புகழை உலகறியச் செய்தவர். அண்ணாமலை அரசர் தம் பல்கலைக்கழகத்தில் (மீனாட்சி, தமிழ்க்கல்லூரி) தலைவராக உ.வே.சாமிநாதையரை நியமித்து, விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார், அ.சிதம்பரநாதன், கோ.சுப்பிரமணியப் பிள்ளை, மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலிய தமிழ் அறிஞர்களைப் பணியில் அமர்த்தியவர். இவர்களைப் பற்றி விரிவாக மேற்கண்ட கவிதையில் மேலும் வரிகள் நீட்சி பெறுகின்றன.

    தமிழ்சூடி

    ஔவையார் எழுதிய ஆத்திசூடியின் பாயிரம் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்று அமைந்திருந்ததால் பாடலின் முதல் சொல்லையே இந்த இலக்கியத்திற்கு உரிய பெயராக அமைத்துக் கொண்டனர். ஔவையாருக்குப் பின்னர் ஆத்திசூடிகள் எழுதியவர்களில் பாரதியார் – புதிய ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, வாணிதாசன், சுத்தானந்த பாரதி, ந.சஞ்சீவி, மு.வரதராசன் ஆகியோரின் புதிய ஆத்திசூடி, ந.ரா.நாச்சியப்பன் – நெறிசூடி, ச.மெய்யப்பன் – அறவியல்சூடி, தமிழண்ணல் – ஆய்வு சூடி, ரெ.முத்து கணேசன் – முத்துசூடி, புலவர் சோம.இளவரசு – நீதி சூடி எனத் தங்கள் விருப்பத்திற்கேற்ப பெயர்களை அமைத்துக் கொண்டனர். இவர்களைப் போல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்சூடி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் சிறுவர்கள் சிந்திக்கத்தக்க 118 சிறந்த அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்சூடி பாயிரத்தில்,

    தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
    தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்
    திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்
    தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்
    துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்
    தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்
    தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்
    தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்
    தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய்
    தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்
    தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்
    தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்”                               – (மாமலர்கள், ப.140)

    என்று வ.சுப.மாணிக்கனார் பாடியுள்ளார். தாய்மொழியாம் தமிழ் மொழியைத் தவறாமல் கற்றுத் திருக்குறளில் தெளிவு பெற்றால் மனத்தில் தீமைகள் அண்டாது என்கிறார். துடிப்போடு பள்ளிக்குச் சென்று தூய தமிழில் பேச சொல்கிறார். இயற்கைக் காற்றை சுவாசித்து, நூலகத்தில் நல்ல நூல்களை வாசித்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நன்றாகக் கொண்டாடப் பணிக்கின்றார். வாண்டுகள் தொண்டுகள் பல செய்து, தமிழ் நூல்களைத் தொகுத்து தமிழை மாலையாகச் சூடி வழிபடச் சொல்கின்றார்.

    வ.சுப.மாணிக்கனார் தமிழ் சூடியில் தமிழ்மொழி, தமிழ் நூல்கள், தமிழ் இனம் குறித்துப் பேசுகிறார். செந்தமிழ் பயில் (50), சொல்லைக் கலவேல் (53), இந்தியை விலக்கு (21), தாய்மொழி முதன்மொழி (62), அகத்தமிழ்படி (1), புறத்திணை படி (88), தொல்காப்பியம் படி (70), திருக்குறள் வரப்பண் (63), சங்க நூல் போற்று (44), ஔவையைப் போற்று (12), குறுந்தொகை படி (36), முத்தமிழ் பரப்பு (100), தமிழிசை பரப்பு (61), யாப்புப் பழகு (108), தேவாரம் பாடு (68), விவிலியம்படி(113), மொழிபல கல் (104), நூல்கள் எழுது (77), கண்ணகி வழிநட (19), சிலம்பை நடி (46), பூம்புகார் போற்று (89), பேகனைப் புகழ் (91), ஆழ்வார் நெறிநில் (2) எனத் தமிழ்சூடி உரைக்கின்றது. தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்று, அதற்கு ஏற்ப வாழுமாறு வலியுறுத்துகின்றார். மேலும், தீண்டாமை யொழி (64), போரையொழி (94), மதுவை விலக்கு (96), கையூட்டு மறு (40), கிளர்ச்சி எதற்கு (34) எனச் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். நெஞ்சை உயர்த்து (78), உன்னைத் திருத்து (31), ஏனென்று கேள் (8), சாவிலும் மகிழ் (45), பிறவியை மதி (86), மக்களை மதி (14), யமனைப் புறங்காண் (45), மாற்றம் விரும்பு (97) என தன் முன்னேற்றச் சிந்தனைகளை விதைத்துச் சென்றுள்ளார்.

    பெண்மையைப் போற்றிய வ.சுப.மாணிக்கனார்

    இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்டோதரி, அரக்க மன்னன் தேவதச்சன் மயனின் மகள். அழகு, கடமை, கண்ணியம், நேர்மை பண்புகள் நிறைந்தவள். இராவணன் பிறன் மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு மண்டோதரி மனம் உடைந்து கலங்குகிறாள். அவனைத் திருத்தத் துணிவு கொள்கிறாள். இராவணன் நள்ளிரவில் அசோகவனம் சென்று இரந்து சீதையின் காலடியில் விழ முற்பட்டபோது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே நிற்கிறாள். தன் மனைவியைக் கண்ட இராவணன் நடுங்குகிறான். மண்டோதரி அவனுக்கு அரசு நெறியையும் ஒழுக்க நெறியையும் இடித்துச் சொல்லிச் சீதைக்கு உடனே, விடுதலை அளிக்கிறாள். கணவனைத் திருத்திய மண்டோதரியின் கற்புப் புரட்சியை,

    நுழையாத குடிசைக்குள் நோன்பிருப்பார்
      விட்டகன்ற நொடிமை பார்த்து
    விழையாத முனிவேடம் மேற்கொண்டு
      பிறனுடலை விரும்பித் தூக்கி
    இழையாத துயர்வனத்தில் இல்லாள்கள்
      செவிகேட்க வைத்தான் என்றால்
     பிழையாத மனைவியர்க்கும் பிழைசெய்ய
       இடங்கொடுத்த பிசடு போமே
    களித்தாடுங் கணவனையும் கழிகாமக்
      கணவனையும் கன்று சூதல்
    விளித்தாடுங் கணவனையும் வினைசுருக்கித்
       தசைபெருக்கி வீம்பே பேசி
    நெளித்தாடுங் கணவனையும் நெஞ்சரிக்கும்
       புகைகுடித்து நீள ஊதித்
     திளைத்தாடுங் கணவனையும் திருத்துகின்ற
      பொறுப்புடையாள் தீமை யில்லாள்                               – (மாமலர்கள், பக்.147-148)

    என்று ‘புரட்சி மண்டோதரி’ பாடல் பாடுகின்றார். இராமன் இல்லாத கவிதையில் நேரத்தில் முனிவர் வேடத்தில் சீதையைத் தூக்கி வந்த இராவணனைத் திருத்தும் கற்புடையாளாக மண்டோதரியைக் காட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார். இந்தப் படைப்பில் இராவணணின் கயமை, பேதைமை, கீழ்மை, சூழ்ச்சி பேசப்படுகிறது. மண்டோதரியை புரட்சிப் பெண்ணாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

    வீரச்செல்வி செம்மலர்

    ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் கவிதையில், பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவள் தன் வீட்டின் உள்ளறைக்குள் விலை உயர்ந்த சிலம்பு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைத் திடீரென காண்கிறாள். பாண்டிமாதேவி தன் ஒரு சிலம்பு காணாமல் போயிற்று என்று சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. குடுகுடுப்பைக்காரனுக்குப் பொற்கொல்லன் கொடை செய்த அருமையும் அவள் நினைவுக்கு வருகிறது. உடனே, பாண்டியன் தேவியைப் பார்க்கிறாள். புகாரிலிருந்து மனைவியொடு வந்த ஒரு வணிகன் தன் சிலம்பைக் களவாடினான் எனவும் பெருந்தண்டனை பெறுவான் எனவும் தேவி வெளிப்படுத்துகிறாள். இவருவரும் அரசவைக்குச் சென்ற சமயம் கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருக என்று பாண்டியன் ஊர்க் காவலர்க்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான். அரசனை இடைமறித்துச் செம்மலர் இத்தீர்ப்பு முறையற்றது எனக் கூறித் தான் அன்று எதிர்பாராது ஓரிடத்துக் கண்ட சிலம்பினைக் காட்டுகிறாள். அதுதான் காணாமல் போன பாண்டிமாதேவியின் காற்சிலம்பு.

                    நிகழ இருந்த கொலையைத் தவிர்த்து செங்கோலையும் தங்கள் உயிர்களையும் காத்து அளித்த செம்மலர் நல்லாளைப் பாண்டியன் அரசவையில் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டுகிறான். அவளது பெருந்தொண்டினையும் துணிச்சலையும் உலகத்தார் அறிய வேண்டிய ‘செம்மலர்’ என்ற நாடகம் அரசு விழாவாக ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் என்று ஆணையிடுகிறான். பாண்டியன் அன்புப் பரிசாக வழங்கிய முத்து மாலையைச் செம்மலர் தன் தொண்டின் பரிசாக வாங்க மறுத்து விடுகிறாள். தங்களுக்கு வர இருந்த தீய விளைவுகள் செம்மலரின் கடமை வீரத்தால் மாறி விட்டன என்ற நிலையறிந்த கோவலனும் கண்ணகியும் ‘வீரச்செல்வி’ என்று செம்மலராளை மனத்தில் வைத்துப் போற்றுகின்றனர். செம்மலர் நங்கையின் நற்புகழினை,

    ”சோலை மலருட் சுருண்ட பாம்புபோல்
      சேலை யடுக்கினுட் சிலம்பணி கண்டாள்
    பொன்செய் கொல்லன் பொன்னன் மனையாள்
    நன்செய் போலும் நல்வரம் புடையவள்
    பைங்கலன் கொழிக்கும் பட்டினம் பிறந்தவள்
    செம்மலர் என்னும் செல்லப் பெயரினள்
     நாற்பது வயதினும் நலியா இளமையள்
     ஏற்பதை ஏற்பாள் எதிர்ப்பதை எதிர்ப்பாள்
    திண்ணைப் பள்ளியிற் சிறுதமிழ் கற்றாள்
    எண்ணல் பெருக்கல் இளங்கணக் கறிவாள்
    உண்மைக் கதைகளை உள்ளங் கொள்வாள்
    அரிய தாயினும் உரியதைப் பேணி
    உரிய தாயினும் ஊர்வம்பு பேசாள்
    அன்புடைக் கணவன் அரண்மனைக் கொல்லன்
     என்ற தொடர்பால் இல்லற முதலே
     பாண்டிய தேவியொடு பழகி வருவாள்”    – (மாமலர்கள், ப.153)

    என்று வ.சுப.மாணிக்கனார். புகழ்ந்துப் போற்றியுள்ளார். செம்மலர் என்பவள் நல்லவற்றை ஏற்பவளாகவும் அல்லவற்றை எதிர்ப்பவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள். பாண்டியனைக் கொலைப் பழியில் இருந்து காப்பாற்றியதற்காக,

        “எதிரது அறிந்துடன் எல்லாம் தடுத்த
           முதுக்குறை நங்கைக்கு முடிதாழ் வணக்கம்!
          கொலையும் பழியும் கொடுமையும் தவிர்த்து
          நிலையும் புகழும் நேர்மையும் காட்டி
          உற்ற காலத்துள் ஓடோடி வந்து
          குற்றம் புகாமல் கோன்மை காத்துப்
          பெற்ற தாயினும் பேரன்பு செய்த
          வெற்றிச் செம்மலர் வீரியை வணங்குதும்”           – (மாமலர்கள், பக்.157-158)

    என்று செம்மலரைப் புகழ்ந்து வணங்குகிறார். பெற்ற தாயினும் சிறந்தவளாக செம்மலரை பாண்டிய மன்னன் உயர்த்திப் போற்றியுள்ளான். கண்ணகியைப் புலம்ப வைத்த பொல்லாச் சிலம்பை கொல்லாச் சிலம்பு என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். சிலம்புக்கு உரியவளான கண்ணகியையும் அவளது கணவன் கோவலனையும் கொல்லாச் சிலம்பு புகழ்ந்து பேசுகிறது. பாண்டிய மன்னனின் தீர்ப்பு இந்தப் படைப்பில் ரத்து செய்யப்படுகிறது. கோவலன் மீது சுமத்தப்பெற்ற குற்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் நல்லவனாகவும் குடிமக்களுக்கான நீதியை நிலை நாட்டக் கூடியவனாகும் கடமை தவறாதவனாவும் காட்சிப்படுத்தபட்டிகிறான். இந்தப் படைப்பை வ.சுப.மாணிக்கனார் சிலப்பதிகாரத்தின் மாற்றுச் சிந்தனைக்கான விதையாக ஊன்றியுள்ளார்.

    முடிவுரை

    வ.சுப.மாணிக்கனார் படைப்பாளர், பேராசிரியர், தமிழ்ப் பற்றாளர், பதிப்பாளர், உரைநடை ஆசிரியர், உரை ஆசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், ஆங்கிலப் புலமையாளர் எனப் பன்முக ஆற்றல் வாய்ந்தவராக ஒளிர்கின்றார். இவரது கவிதை நூல்கள் இவரை மிகச் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்துகின்றன. தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், இராமாயணம், பாரதியம் ஆகியவற்றில் தனித்த ஈடுபாடு கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. குறிப்பாக, மாமலர்கள் என்னும் கவிதை நூல் இவரை மாபெறும் கவிஞராகவும், சிந்தனையாளராகவும் வெளிக்காட்டியுள்ளது. இந்நூலினைப் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருண்மைச் சார்ந்ததாகப் படைத்திருக்கிறார்.

    பழைமையில் பிடிப்பும் புதுமையில் வேட்கையும் கொண்டவராகத் திகழ்கின்றார். இந்தியை எதிர்த்தும் தாய்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியை ஆதரித்தும் எழுதியுள்ளார். தாய்மொழியைக் கற்க வலியுறுத்தும் வ.சுப.மாணிக்கனார் மொழிக்கலப்பினால் தாய்மொழியான தமிழ்மொழிக்குக் கேடு விளையும் என்பதையும் தெளிவுற உரைக்கின்றார்.

    எழுத்துச் சீர்திருத்தத்தை பெரிதும் ஏற்றுக் கொள்ளாதவர் என்பதை இவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன. தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் இனம் பற்றிய சிந்தனைகள் இவரது கவிதைகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

    தமிழர்கள் ஆங்கிலத்தின் பால் கொண்ட மோகத்தைச் சாடியுள்ளார். இந்தி இந்தியாவின் பொதுமொழி இல்லை என்பதைத் தம் கவிதை வழி நிறுவியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழ்க் கல்வி, தமிழர் கலை வளர்த்த சான்றோரை உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூய்மையானவர் என்பதால் நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் சிந்தித்து எழுதியுள்ளார். சிறார் மனங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திசூடி அமைப்பில் தமிழ்சூடி இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிப்புற வழிவகைக் கண்டுள்ளார். ‘புரட்சி மண்டோதரி’, ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் இரண்டு கவிதைகளும் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்த காப்பியங்களாகவும், இவை பெண்மைக்கும் பெண்களின் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிக்கும் புதிய படைப்புகளாக மிளிர்கின்றன.

    தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்துத் தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் செய்து தானே தமிழாகி விட்ட தமிழ்ப் பேராசானுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (78)

    நிர்மலா ராகவன்

    இல்லறத்தில் இன்பம் சூழ

    நலம்

    பணம் மட்டும் மகிழ்ச்சியைத் தருமா?

    என் சக ஆசிரியை மிஸஸ் சின்னின் கதையைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.

    முப்பத்தைந்து வயதான மிஸஸ் சின் மலேசியாவிலுள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவள்.

    “நான் மிகவும் மகிழ்ச்சியானவள், இல்லை?” அடிக்கடி இப்படிக் கேட்பாள். இன்னாரிடம் என்றில்லை.

    “திருமணத்துக்கு முன்பு, நாங்கள் காதலர்களாக இருந்தபோது, எப்போது அவரை மீண்டும் பார்ப்போம் என்றிருக்கும் எனக்கு. இப்போதோ!” என்று தலையில் அடித்துக்கொள்வாள்.

    அவனது வேலையிலேயே முழுகிப்போயிருந்த ஒரு பணக்காரன் அவளுடைய அழகிற்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். நண்பர்களிடையே பெருமையாகக் காட்டிக்கொள்ள அப்படி ஒரு மனைவி தேவைப்பட்டிருப்பாள். அதன்பின், அவளை அதிகம் கவனிக்கத் தோன்றவில்லை.

    அப்படி ஒரு ஏமாற்றத்தை, பராமுகத்தை, எந்தப் பெண்தான் தாங்குவாள்! `அவள் வீட்டுக்கு எந்த வேளையில் போனாலும், சாப்பிட ஒன்றும் இருக்காது!’ என்று ஒரு சில ஆசிரியைகள் தெரிவித்ததுண்டு.

    ஒரு முறை, எங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளுக்கு மட்டும் என்று நடந்த ஒரு விருந்தில் அவளுடைய கணவன் விரைந்து வந்து சாப்பிட ஆரம்பித்தான். எவ்வளவு பணம் இருந்தென்ன!

    மிஸஸ் சின் சொல்வதைக் கேட்டு, `அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை! கணவன் கைநிறைய சம்பாதிக்கிறார்! பெரிய கார் வைத்திருக்கிறாள்!’ என்பார்கள் பிறர்.

    நான் மட்டும், “உண்மையில் அவளுக்குச் சந்தோஷமே கிடையாது. மகிழ்ச்சியாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் அவளுக்கே வந்துவிட்டது. அதனால்தான் அடிக்கடி பிறரிடம் அப்படிக் கேட்கிறாள்!” என்பேன்.

    “எதனால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லை?” என்று ஒருத்தி கேட்டபோது, “அவள் எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைத்திருக்காது. கணவன் தன் வேலையிலேயே ஆழ்ந்துபோகிறான். இவளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்குவது கிடையாது. இதெல்லாம் அவள் சொல்வதுதானே! அவள் எப்படி கணவரைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்று கவனியுங்கள். புரியும்,” என்று பதிலளித்தேன்.

    `என்னையும் கொஞ்சம் கவனிக்கக்கூடாதா!’ என்று கணவரிடம் கேட்டால், அவர் என்ன சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் அவளைப் போன்றவர்களுக்கு.

    `பெரிய வீடு வாங்கியிருக்கிறார், நான் என்ன செலவு செய்தாலும் கண்டுகொள்வதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?’ என்று சமாதானம் செய்துகொள்ள முயற்சித்து, தோல்வி கண்டவள் அவள்.

    அவர் கொடுக்கும் பணத்தால் அவள் விரும்பும் ஆடையணிகளையும், கைப்பைகளையும் வாங்க முடியும். அதனால் மட்டும் நிறைவு கிடைத்துவிடுமா?

    `இன்னுமா உனக்குப் பேராசை?’ என்று கேட்டுவிட்டால்?

    `நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டவள், பிறரும் அப்படியே நினைக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது அவள் பேச்சும் நடத்தையும்.

    தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள். அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் பொறுக்க முடியாமல் போய்விட்டது. சமைக்கத் தோன்றவில்லை. தான் பெற்ற சிறு பிள்ளைகளை வேலை வாங்குவதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வாள்.

    இப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க ஒரே வழி தம்பதிகள் மனம்விட்டுப் பேசுவதுதான். சாதாரணமாக ஆரம்பித்த உரையாடல் சண்டையில் முடியலாம். ஆனாலும் வேறு வழியில்லை. இருவரில் ஒருவருக்கு மனத்தாங்கல் என்றாலும், அதை மற்றவரிடம் தெரிவித்தால்தானே மற்றவருக்குப் புரிய வைக்க முடியும்? நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறதோ, இல்லையோ, தனது குறையைச் சொல்லிக்கொள்பவருக்கு `முயற்சி செய்து பார்த்துவிட்டோம்,’ என்ற ஆறுதலாவது கிடைக்கும்.

    பல தம்பதியர் ஒருவர்போலவே மற்றவரும் இருப்பதுதான் காதலின் அடையாளம் என்று எண்ணுகிறார்கள். மாறுகிறார்கள், அல்லது மாற்றுகிறார்கள். உண்மையில், அன்பைத் தகர்க்கும் வழி இது.

    நொந்துவிட்டதுபோல் நயமாகப் பேசி (`நான் சொல்வதைக் கேட்காவிட்டால், உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’), அது பலிக்காவிட்டால் வசவுகளால், அல்லது வன்முறையால் தாம் நினைத்தபடி வாழ்க்கைத்துணையை நடக்க வைப்பார்கள் சிலர்.

    கதை

    கீதா இயல்பிலேயே கலகலப்பானவள். தந்தையின் பரிபூரணமான அன்பிற்குப் பாத்திரமாகி இருந்ததால், எல்லா ஆண்களுடனும் தயக்கமின்றி பழக முடிந்தது.

    அவளுக்கு நேர் எதிரிடையானவன் முரளி. பாசமற்ற பெரிய குடும்பத்தில் வேண்டாத மகனாகப் பிறந்தவன். பிறருடன் பேசவே வெட்கம் தடுக்க, தயக்கப்பட்டவன்.

    கீதாவின் கலகலப்பு அவனை அயரவைத்தது.

    அவளுக்கு அவனது வாழ்க்கைப் பின்னணி தெரிந்திருந்தபோதும், தன்னால் அவனை மகிழ்விக்க முடியும், சமூகத்தில் பிறர் மதிக்கும் நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினாள்.

    கல்யாணமாகி ஓரிரு மாதங்களிலேயே புரிந்தது, முரளியால் மாற முடியாது என்று. ஏனெனில், அவளை அவன் மாற்ற முயன்றான். கீதாவின் குணம் புரிந்திருந்தும், பிற ஆண்களைப்பற்றிப் பேசினாலே சந்தேகம் வந்துவிடும். வார்த்தைகளாலேயே அவளை வதைத்தான்.

    அவளோ, பிடிவாதமாக, `என்னால் அவரை மாற்றிக்காட்ட முடியும். என்னைப் பழையபடி சுதந்திரமாக இருக்க விடுவார்!’ என்று நம்பினாள். எல்லாவற்றையும் பொறுத்துப்போனாள். இதனால் அவளுக்கு மன அழுத்தம் அதிகரிக்க, உடல் உபாதைகள் ஏற்பட்டதுதான் கண்ட பலன்.

    இம்மாதிரியான சில பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பிறர் பக்கபலம் அளிக்க, பழைய தன்மையைப் பெறுவார்கள் – அப்படி மாறுவது குடும்ப மகிழ்ச்சியை ஓரளவு குறைக்கும் என்பதை ஏற்று.

    விட்டுக்கொடுப்பதால் யாருக்கு மகிழ்ச்சி?

    தன் சுக துக்கங்களைவிட தனக்குத் தாலி கட்டிய கணவரின் மகிழ்ச்சியே முக்கியமானது என்று போதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், `விட்டுக்கொடுப்பதுதான் நல்ல மனைவிக்கு அடையாளம்!’ என்று நம்புகிறார்கள். அப்படியானால், ஒரு பெண்ணின் மன நிலை, இன்ப துன்பம் இதெல்லாம் மறைக்கப்பட வேண்டியனவா, இல்லை, முக்கியம் கிடையாதா?

    கணவர் என் குழந்தை

    `என் கணவருக்கு ஒவ்வொன்றையும் நான்தான் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். அவர் ஒரு சிறு குழந்தைபோல!’ என்று பெருமை பேசிக்கொள்ளும் பெண்களைப் பார்த்திருக்கிறேன்.

    கணவர் எந்த விதத்திலாவது தன்னை நாட வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தம் கணவருக்குச் சுயேச்சையாக எதையும் செய்துகொள்ளத் தெரியாதபடி ஆக்கிவிடுகிறார்கள். நாளடைவில் அம்மாதிரியான நடப்பே இரு தரப்பினருக்கும் எரிச்சலை மூட்டிவிடும்.

    `நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்!’ என்று தம்பதியரில் ஒருவர் கேட்பது மற்றவருக்குப் பெருமையில்லை.

    ஒருவர் சொன்னார், “நான் கல்யாணம் செய்துகொண்டால், மனைவி என் சட்டையில் பிய்ந்துபோன பித்தான்களை தைத்துத் தருவாள் என்று நம்பினேன்!” என்று.

    அப்போது அவர் அக்காரியத்தைத் தானேதான் செய்துகொண்டிருந்தார்.

    புரிந்தும், “என்ன ஆச்சு?” என்று நான் சிரித்தேன்.

    “`நீங்களே தைத்துக்கொள்ளுங்கள்,’ என்றுவிட்டாள்!” ஏமாற்றத்துடன், பெருமூச்சு விட்டார்.

    அவருக்கு அப்போது புரியவில்லை, தன்னைச் சுதந்திரமாக வாழப் பழக்குகிறாள் மனைவி என்று.

    ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்வது என்றால் அது ஒருவரின் விருப்பத்திற்கு எல்லாம் மற்றவரும் செவிசாய்க்க வேண்டும் என்பதில்லை.

    அதிகாரம் செலுத்துபவர் ஆரம்பத்தில் பெருமையாக உணரலாம். ஆனால், `என் மனைவி நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டாள்!’ என்று பெருமை பேசுகிறவர் சில வருடங்களுக்குப்பின் அவளுக்கு அடங்கிப்போவதுதான் நடக்கிறது.

    தொடருவோம்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171022 - tvameva -lr

    ”பாவனை எண்ணங்கள், பாவனை செய்கைகள்,
    பாவனை பெற்றதோர் பேரின்பம்: -பாவனை
    அற்ற பசுவைப்போல் ஆயர்தம் பாடிமடி
    உற்ற மனமே உறவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (14)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 14

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1
    தாடகையின் பிறப்பு
    பிரும்மாவின் வரம்பெற்றுப் பிறந்தவளே இந்த
    பிரும்மாண்ட பலங்கொண்ட தாடகைப்பெண் என்பாள் !
    விரும்பித்தான் “சுந்தனை”யே திருமணமும் செய்தாள் !
    விவேகமிலா கோபத்தால் அகத்தியரைச் சீண்ட
    திரும்பியவர் சாபமிட வீழ்ந்திட்டான் சுந்தன் !
    தீராத ஆத்திரத்தில் தெய்வமுனி செய்யும்
    பெருமைமிகு வேள்விகளைச் சீர்கெடுத்து வந்தாள்
    பெயருக்குப் பெண்னென்ற பேரரக்கிப் பேயாள் !

    தீயோரைத் தீர்த்துவிட தெய்வபலங் கொண்ட
    ஸ்ரீராமா உன்னால்தான் திடமாகக் கூடும் !
    மாயோனாம் திருமாலே வதம்செய்தான் நன்கு
    மதிப்புள்ள பிருகுமுனி பத்தினியை அன்று !
    ஓயாது யோசித்தால் ஒருநாளும் எண்ணம்
    ஒளிபெற்றுத் திகழாது ! உடன்நீயும் அந்தப்
    பேயான தாடகையைப் பிணமாக்கி வீசு
    பெரும்பேர் சேருமென்றார் விசுவாமித் ரர்தான்!

    தாடகை வதம்
    குருவினது வார்த்தையைக் கும்பிட்டுக் கேட்டு
    குறிபார்த்து அம்பொன்றால் கொன்றிட்டான் அந்த
    உருபெரிய தாடகையை உயர்வீர ராமன் !
    உத்தமர்கள், தேவர்கள் ஓதினரே ஆசி !
    “வரும்நாளில் உன்காட்டில் மகத்தான வெற்றி
    மழைகொட்டும்! மனிதருக்குள் மாணிக்கம் உன்னால்
    பெருமைபெறும் ரகுவம்சம் ! பீடித்த துன்பம்
    விலகியோடும் நம்பிக்கை பெற்றோமே” என்றார் !

    விசுவாமித்திரர் வழங்கிய அத்திரங்கள்

    ராஜரிஷி மகிழ்ச்சியுடன் ராமனிடம் வந்து,
    “ராகவனே உன்பெருமை ரகசியங்கள் யாவும்
    ஆனமுதல் மூவருக்கும் அறியவொண்ணா தென்றார் !
    அளப்பில்லா அத்திரங்கள் அத்தனையும் தந்தேன்
    போனவுடன் அத்தனையும் திரும்பியுனைச் சேரும்
    பொல்லாரைக் கொன்றதனால் புகழ்பரணிப் பாடும் !
    வானவரின் துன்பத்தை மாயத்திடுக நன்றாய் !
    வருங்காலம் உன்பெயரை மறக்காது வைக்கும் !
    (தர்ம சரிதம் வளரும்)

     
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 25, 26, 27, 28,ம் பகுதி நிறைந்தது)

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை நெருங்கும் போது, சுழலும் வால்மீன் சுழற்சி விரைவாய்த் தளர்கிறது !

    Posted on October 20, 2017
    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    பூர்வீக வால்மீன்கள் !
    பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு 
    வலையில் சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    இப்போது சுழலும் வால்மீன்
    புவி நெருங்கின்
    சுழற்சி வேகம் தளர்க் கண்டார் !
    உயிரின மூலத்தை உளவிட
    ஏவிய விண்ணுளவி
    பூமிக்கு மீண்டது !
    வால்மீன்  ஒளிக் கிளர்ச்சியை
    ஐரோப்பிய  விண்ணுளவி
    முதன்முதல் திடீர்ப் பதிவு செய்து
    தகவல் அனுப்பும் !

    +++++++++++++++

    புவி நெருங்கும் வால்மீனின் புதிரான மாற்றியக்கம்

    அரிசோனா லோவெல் வானோக்கு ஆய்வகத் தொலைநோக்கி மூலம்  டேவிட் ஸ்லைச்சரும் அவரது சக விஞ்ஞானிகளும் சென்ற வசந்த காலத்தில் கண்ட வால்மீன் [41P /Tuttle-Giacobini-Kresak] சுழற்சி புவியை நெருங்கும் போது விரைவாகத் தளர்வதை முதன்முறை அறிந்து வெளியிட்டுள்ளார்.  வால்மீனின் சுயச் சுழற்சி 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாய், ஆறு நாட்களுக்குள் விரைவாய் நீட்சி அடைந்த தாகக் குறிப்பிட்டுள்ளார்.  இன்னும் தொடர்ந்து சுழற்சி குறைந்து வருவதாகவும், முற்றிலும் நின்று, அடுத்து வால்மீன் மறு திசையில்  சுழலத் துவங்கும் என்றும் தெரிவித்துளார்.

    unnamed

    வால்மீன் [41P /Tuttl…] சூரியனை வெகு வேகமாக 5.4 ஆண்டுக்கு ஒருமுறையாகச் சுற்றி வருகிறது.  அந்தப் புதிரான வால்மீனை 1858 இல் முதலில் வானில் கண்டுபிடித்தவர் ஹெச். டூடுல் [H. Tuttle] என்பவர்.  பிறகு அது பல்லாண்டுகள் தென்படாது, மீண்டும் 1907 இல் எம். கையகோபினி [M. Giacobini] என்பரால் கணப் பட்டது. மறுபடியும் அது தென்படாது, மூன்றாம் முறையாக 1951 இல் கே. கிரிஸாக் [K. Kresac] என்பவர் கண்ணில் பட்டது,  இப்போது அந்த வால்மீன் அம்மூவர் பெயராலும் அழைக்கப் படுகிறது.

    2017 ஆண்டுவரை வானியல் விஞ்ஞானிகளால் அந்த வால்மீனை ஆழ்ந்து அறிந்து கொள்ள இயலவில்லை.  பூமிக்கு அருகே13 மில்லியன் மைல் [21 மில்லியன் கி.மீ.] வந்த போது அதைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.  அதன் தலைக்கரு [Comet Nucleus]  ஒரு மைலுக்கும் [1.4 கி.மீ] குறைந்தது.  இறுதியில் அந்த வால்மீன் காணும் அளவு ஒளி வீசியது.

    புவி நெருங்கும் வால்மீன் சுழற்சி தளர்ச்சி அடையும்.

    ++++++++++++

    2017 மார்ச்சு மாதம் முதல் மே மாதம் வரை எட்டு வாரங்கள் காணப் பட்ட அந்த வால்மீன் பூமியிலிருந்து சுமார் 18 மில்லியன் [30 மில்லியன் கி.மீ] தூரத்திலும், சூரியனிலிருந்து சுமார் 93 மில்லியன் மைல் [150 மில்லியன் கி.மீ] தூரத்திலும் இருந்தது. சூரிய குடும்பக் கோள்கள் உருவான பிறகு மிஞ்சிய பிண்டத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளாய் வடிவம் பெற்றவை வால்மீன்கள். பரிதிக்கு அருகில் வரும் போது, வால்மீனின் பனிப்படிவுகள் சூடாகி, ஆவியாகி வாயுக்களும் தூசிகளும் ஆயிரக் கணக்கான மைல் நீட்சியில், தலை உருவாகி  ஒளிவாலுடன் தோற்றம் அளிக்கிறது.  வால்மீனில் முக்கியமாகக் காணப்படும் வாயு சையனோஜென் [Cyanogen].   அரிசோனா ஆய்வாளிகள் வால்மீன் தலையிலிருந்து [Coma]  இரண்டு உந்து வீச்சுகள் [Jet Streams] எழுந்தன என்று கூறுகிறார்.  அந்த உந்து வீச்சுகள் மூலம் தான் வால்மீன் சுழற்சி நேரம் கூடுவதைக் கணிக்க முடிந்தது. அதாவது மார்ச்சு மாதத்தில் அறிந்த 24 மணி நேரச் சுழற்சி, ஏப்ரலில் 48 மணி நேரச் சுழற்சியாய் நீண்டது.  மே மாதக் கடேசியில் சுயச் சுழற்சி மேலும் மெதுவானது.  இந்த ஆய்வு முன்னோடி முடிவுகள், யூடாவில் 49 ஆவது அமெரிக்கன் வானியல் குழு – கோள் விஞ்ஞானப் பிரிவகத்தின் வெளியீடாக வெளிவரும்.

    Halley's comet -1Comet Halley

    ++++++++++++++
    Comet Outbursts -2
    Comet Outbursts -1

    கடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.  ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.

    ஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.  ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.

    மாத்தியூ டெய்லர் [ESA Rosetta Project Scientist]

    Halley's comet -2
     ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.
     எபெர்கார்டு குருயன் [Eberhard Grun, Nuclear Physics, Max-Plank Institute, Heidelberg, Germany]

    Which Instruments saw outbursts

     2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்
    ரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name :  67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன.  இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.  வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது.  அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].
    Comet Halley
    ரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது.  அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus].  வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது.  ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின.  மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது.  சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது.  ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது.  புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.
    ரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள்  நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில்  [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது.   விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார்.  வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும்.  உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.
    ++++++++++++++++
    Rosetta launch

     

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cArihDTnOZg

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5b7u6stKgfs

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    Difficult landing

    ஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது.  பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும்.  இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள்  யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.

    பார்பரா கொஸ்ஸோனி  [ஜெர்மன் விண்வெளி மைய எஞ்சினியர்] 

    240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.

    எல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்] 

    Rosetta probe landing

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Roetta Probe on comet -1

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனை யாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    First comet image from Philae

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Comet chasing probe

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    Philae Lander parts

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2

     விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    Rosetta Program -1

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    Philae Lander

    4. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]

    5. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]

    6. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]

    7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]

    8. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]

    9. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    Philae Lander components

    அணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்

    2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார்.  அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார்.  செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறி வார்கள்.  அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது.  டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.

    Rosetta Spaceship Launching 

    [Message clipped]  View entire message

    Attachments area

    Preview YouTube video Comet 67P Outburst Slams Rosetta Probe With Dust | Video

    Comet 67P Outburst Slams Rosetta Probe With Dust | Video

    Preview YouTube video Rosetta – Comet 67P

    Rosetta – Comet 67P

    Preview YouTube video Rosetta – Comet 67P

    Rosetta – Comet 67P

    Preview YouTube video Comet Catalina To Pass By Earth For The Final Time

    Comet Catalina To Pass By Earth For The Final Time

    Preview YouTube video LANDING ON A COMET – The Rosetta Mission

    LANDING ON A COMET – The Rosetta Mission

    Preview YouTube video CHASING A COMET – The Rosetta Mission

    CHASING A COMET – The Rosetta Mission

    Preview YouTube video Rosetta – Space Mission to a Comet

    Rosetta – Space Mission to a Comet

    Preview YouTube video Rosetta media briefing at ESOC 10 November

    Rosetta media briefing at ESOC 10 November

    Preview YouTube video Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT

    Rosetta mission: Results from comet landing: 14 Nov, 13:00 GMT
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஹரிச் சுவடி
    —————-

    171021 - Srinivasa- lr (Utsav series)

    அந்தரி அண்ணா கோவிந்தா
    ஆவுடை அப்பா கோவிந்தா
    இந்திர லோகம் கோவிந்தா
    ஈ கொசு எனக்கு கோவிந்தா
    உந்தன் மலையில் கோவிந்தா
    ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
    எந்த நாளுமே கோவிந்தா
    ஏகாந்த சேவை கோவிந்தா
    ஐந்து பொறிகட்கு கோவிந்தா
    ஐயமிட்டிடு கோவிந்தா
    ஒன்றி உரைப்போம் கோவிந்தா
    ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….!

    ’’சத்திரபதியே கோவிந்தா
    சாரங்கபாணி கோவிந்தா
    சித்திர வடிவே கோவிந்தா
    சீனுவாசா கோவிந்தா’’….!

    Share
  • நலிந்து வரும் ஜவுளித்துறை

    பவள சங்கரி

    தலையங்கம்

    விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய, ஜவுளித்துறையின் நலிந்துவரும் இன்றைய நிலை மத்திய , மாநில அரசுகள் அதனை புறக்கணிப்பதையே வெளிப்படுத்துகின்றது. மற்ற நாடுகளில் இதற்கான மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு 4% வட்டி மட்டுமே விதிக்கப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் 12% வட்டி விதிக்கப்படுகின்றது. பருத்தி விளைச்சல் அமோகமாக இருப்பினும் ஆலை உரிமையாளர்களால் அதிக கொள்முதல் செய்யமுடிவதில்லை. பண முதலைகள் பருத்தியை அதிகமாகக் கொள்முதல் செய்து பதுக்கி வைத்து செயற்கையான விலையேற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இதைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசு பருத்தியைக் கொள்முதல் செய்வதற்கு 4% வட்டியில் கடன் அளிக்க ஏற்பாடு செய்தால் ஆலை உரிமையாளர்கள் 6 மாதம் முதல் 10 மாதம் வரை பயன்படுத்தக்கூடிய பருத்தியைக் கொள்முதல் செய்து உற்பத்தியில் தங்களுடைய முழுத் திறனையும் வெளிக்கொணரமுடியும். இதனால் நூல் விலை குறைவதோடு ஜவுளி உற்பத்தியையும் பெருக்க முடியும்.

    ஒரு காலத்தில் தமிழ்நாடு பருத்தி விளைச்சலில் சிறந்து விளங்கி அதனை ஏற்றுமதி செய்யும் மாநிலமாகத் திகழ்ந்தது. இன்று விளை நிலங்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் அதன் விளைச்சலும் 5% ஆகக் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த ஆலைகளுக்குத் தேவையான பருத்தியின் 95 சதவிகிதம் வெளி மாநிலங்களிலிருந்து எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நமது தமிழ்நாட்டில் மட்டும் 52 மில்லியன் சுழல் அச்சுகள் உள்ள ஆலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையொட்டிய ஜவுளியின் மற்ற துறைகளிலும் நிர்வாகத்திறமை, தொழில் திறமை போன்றவைகள் அதிகப்படியாக இருப்பினும், அரசின் ஆதரவு இல்லாததால் கூலிக்கு வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையில் உள்ளது என்பதோடு வட மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது. ஏற்றுமதியிலும் ஜவுளிக்கு ஆதரவான கொள்கை இல்லாததால் ஏற்றுமதி மூலமாக கிடைக்கக்கூடிய மிகப்பெரும் அந்நியச் செலாவணியையும் இழக்கக்கூடிய நிலையே உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஜவுளித் துறையை மத்திய அரசு உதாசீனப்படுத்தாமல் அதற்குரிய நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியம் .

    Share
  • நாவாய்

    பவள சங்கரி

    clip_image001_thumb

    உயிர் எல்லை நோக்கிய பயணம்
    சக பயணியர் வரலாம் போகலாம்
    புரிந்த மொழியில் புரியாத கதைபல பேசி
    பரந்த உலகில் இறக்கை கட்டிப் பறக்கும் பாவலர்கள்
    பண்பாளர், பாசப்பட்சிகள், நேசக்கனல்கள்
    என்றெவரும் பட்டுக்கம்பளத்தில் பாதம்பதிக்கலாம்
    பகடைகள், பச்சோந்திகள், பலிகெடாக்கள்
    என்றெவரும் முகநட்பொடு பயணிக்கலாம் படகில்
    சென்றுசேரும் இலக்கு எவர்க்கும் ஒன்றுதான்
    நிதானமும் பொறுமையும் நிறைவாய் இருந்தால்
    எதிர்நீச்சல் போடலாம் வாழும் ஆசையிருந்தால்
    அமைதியாக அடங்கிப்போகலாம் வீழநினைத்தால்
    சுருதிமீட்டி சுகம் காணலாம் அல்லது
    குருதி கொதிக்க நொறுங்கிப் போகலாம்
    இறுதியில் போகும் இடம் ஒன்றுதான்
    சடுதியில்போக நினைத்தால் சறுக்கலை சந்திக்கலாம்
    விட்டுவிலக நினைத்தால் மூழ்கிப்போகலாம்
    கட்டுவிலக நினைத்தால் கடந்துபோகலாம்
    பட்டுத்தெளிய நினைத்தால் பண்ணிசைக்கலாம்
    சூரைக்காற்று வீசினாலும் சுதாரித்தால் பிழைக்கலாம்
    வாடைக்காற்றில் வாட்டமின்றி வண்ணம் காணலாம்
    கணக்கும் வழக்கும் பிணக்கும் துரோகமும்
    கருப்பும் வெளுப்பும் படகிற்கு பொருட்டல்ல
    சொர்கம் சுமந்தபடி கனவில் மிதந்துச் செல்லலாம்
    நரகம் அஞ்சியே துஞ்சாமல் கடந்து செல்லலாம்
    துடுப்பு போடுபவனையும் துளையிடுபவனையும்
    கணித்து துணிந்துவிட்டால் ஏற்றமும் இறக்கமும்
    பொருட்டல்ல .. இலக்கை அடையத் தடையுமல்ல!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171020 -Goverdhan-lr

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது
    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை வேறுவடி வாக்கு”….!

    ”பிறந்து புவியில் பிருந்தா வனத்து
    விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்
    எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்
    மந்தை வெளியிலிரு வந்து”….கிரேசி மோகன்….!

    Share
  • பங்குச்சந்தையின் இன்றைய உச்சம் நிலைக்குமா?

    பவள சங்கரி

    தேசிய குறியீட்டு எண்ணும், மும்பை குறியீட்டு எண்ணும் (நிஃப்டி, சென்செக்ஸ்) தங்கள் தகுதிக்கு மீறிய உச்சத்தை தினந்தோறும் தொட்டுக்கொண்டிருக்கின்றன. பல பங்குகள் 100 மடங்கு, 200 மடங்கு என்று விலை ஏறியுள்ளன. இதனால் கோடீசுவரர்கள் ஆனவர் பலர். தகுதிக்கு மீறிய வளர்ச்சி என்றும் நிலைத்து நிற்பதில்லை. 100 ரூபாய் பங்கு 110 க்கோ அல்லது 120க்கும் கூட விற்கலாம். 200 ரூபாய்க்கும்கூட விற்கலாம். ஆனால் 1000 ரூபாய்க்கு விற்றால் அது எப்படி நிலைத்து நிற்கும்?  இது திட்டமிட்டு பன்னாட்டு நிறுவனங்களால் ஒரு மாயையான உச்சத்தை அடைந்துள்ள நிலை. இந்த நிலையில் இது என்று வேண்டுமானாலும் அதள பாதாளத்தை அடையலாம். பல இலட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடலாம். இந்த உச்சம் நிலைத்து நிற்பது சாத்தியமில்லாதொன்று என்பது உறுதி. அமெரிக்காவில் 1987 இல் பங்குச்சந்தையில் Black  Monday ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்றதொரு வீழ்ச்சியை நாம் சந்திக்க நேர்ந்தால் நம் பொருளாதாரமே வீழ்ச்சியடையக்கூடும். நம் மத்ய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இதில் தலையிட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது அவசியம். இன்று சீனாவின் மத்திய வங்கி பங்குச்சந்தை பற்றி கூறியுள்ளதும் கருத்தில் கொள்ளத்தக்கது..

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 1

    -முனைவர் ச.அருள்

    முன்னுரை

    நேர்மையின் இலக்கணமாய், புலமையின் இயக்கமாய், எளிமையின் உருவமாய்ச் சங்கப் பனுவலில் திளைத்தவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து காட்டியவர்; திருவாசகத் தேன் உண்ணும் தும்பியிவர். ஏழிளந்தமிழில் வாழப்பழகியவர்; மாணவர்களின் மனக்கோவிலில் நிலைபெற்றுத் தெய்வமானவர்; கற்றோர் உள்ளத்தில் கலந்திட்ட மாமேதை; ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று கூறி, தமிழ் வழிக்கல்விக்காகத் தெருவில் இறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர் இவர்; தில்லையம்பலத்தில் தேவார, திருவாசகத் திருமுறைகளை முழங்கச் செய்தவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்கு அண்ணாமலைச் செட்டியார் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் (வள்ளல் அழகப்பர்) பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் புலமை வழித்தோன்றலில் இவரும் ஒருவர்; தமிழ்ப் பகையை எதிர்த்து நின்றதில் சிங்கம் போன்றவர்; பார் காத்தவர்களையும் பயிர் காத்தவர்களையும் போற்றும் உலகில் செந்தமிழ் காத்தவர்களைப் போற்றிய பண்பாளர் வ.சுப.மாணிக்கனார். இவர்தம் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலினை இக்கட்டுரை ஆராய்கிறது.

    மாமலர்கள் – கவிதைப் பொருண்மைகள்

    1.இந்தியப் பாயிரம், 2. காந்தி எட்டு, 3. திருவாசகச் சுவட்டில், 4. உரிமைப் பாடல்கள்,       5. கையுறைப் பாடல்கள், 6. வள்ளல் அண்ணாமலையரசர், 7. பாராட்டுப் பாடல்கள்,                  8. வாழ்த்துப் பாடல்கள், 9. குழந்தைப் பாடல்கள், 10. அறப்பாடல்கள், 11. பாடற் கலம்பகம்,   12. அழகப்பர் பத்து, 13. எண்ணம் இருபது, 14. ஊர்தி முப்பது. 15. தமிழாட்டு, 16. தமிழ் சூடி,   17. புரட்சி மண்டோதரி, 18. கொல்லாச் சிலம்பு,
    19. அன்னை கொதிக்கிறாள்,   20. உலகப்பாயிரம்.

    பாயிரம்

     பாயிரம் என்பது முன்னுரை, முகவுரை, அணிந்துரை, மதிப்புரை போன்றதாகும். எனினும் இலக்கணத்தில் கூறப்படும் முன்னுரையே பாயிரம் என்னும் சிறப்புடைத்தாகும் என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். இலக்கணப் பாயிரத்தில் மொழி வழங்கும் எல்லைகள், அடிப்படை, நுவல்பொருள், நெறி, நோக்கம், அரங்கேறிய இடம், காலம், ஆசிரியன் பெயர், ஆசிரியர் தகுதி என்னும் அறிமுகக் கூறுகள் பெருமிதமாகவும் சுருக்கமாகவும் சுட்டப்படுதல் உண்டு.

    வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலில் இடம் பெற்றுள்ள தொடக்கக் கவிதையின் தலைப்பு ‘இந்தியப் பாயிரம்’ என்பதாகும். முடிவுக் கவிதையின் தலைப்பு ‘உலகப் பாயிரம்’ என்பதாகும். இந்தியப் பாயிரத்தில் தொடங்கி, உலகப் பாயிரத்தில் முடிவது போல் இந்நூலை வ.சுப.மாணிக்கனார் படைத்திருக்கும் திறம் போற்றத்தக்கதாகும்.

                    தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார்,
    வடவேங்கடம் தென்குமரி
    ஆயிடைத்
                     தமிழ் கூறு நல்லுலகம்”   (தொல்.சிறப்புப்பாயிரம்,1-3)

    என்று தமிழகத்தின் எல்லைகளைக் குறித்துள்ளார். எனவே, வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரி வரை தமிழ் பேசப்பட்டதாக இதன் மூலம் அறியமுடிகிறது.

    வ.சுப.மாணிக்கனார் இந்தியப் பாயிரம் என்னும் கவிதையில்,

                    வடவிமயம் தென்குமரி
    ஆயிடைக்
    குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல்
    படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய”                  (மாமலர்கள், ப. 63)

    என்று கூறியுள்ளார். அஃதாவது வடவேங்கடத்துக்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சிறப்பாக குடியாட்சி நடத்தும் பழம்பெருமை வாய்ந்த பாரதநாடு வாழிய என்று சுட்டுகின்றார். சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடையநாடு. இங்குத் தோன்றிய சிந்து வெளி நாகரிகம், உலக நாகரிகங்களுள் தொன்மையானது. நில வளமும், நீர் வளமும்  கலை வளமும் மிகுந்த நாடு பாரதநாடு. இதன் சிறப்பினை பாரதியாரும்,
    பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
    பாரதநாடு”                
                                   – (பாரதநாடு – பல்லவி)

    என்று புகழ்ந்துரைக்கின்றார்.

    உலகப் பாயிரம் என்னும் கவிதையில், வ.சுப.மாணிக்கனார்,
    உலகம் என்பது கலகம் ஆகி
    இன்றோ
    நாளையோ என்றோ அறியோம்
    வாரா அழிவுகள் வருவ போலும்;
    மாயமுன் னேற்றம் மயங்க வேண்டா;
    அடக்கமொடு வளர்தல் அறிவா கும்மே;
    உலகம் என்பது உயிர்களின் உடைமை
    மரமுத லாக மானிடம் ஈறா
    எல்லா வுயிர்க்கும் இருப்பிடம் ஆகும்”       – (மாமலர்கள், ப. 183)

    என்று உரைக்கின்றார். இதில்,  உலகில் கலகம் ஏற்பட்டு இன்றோ, நாளையோ, என்றோ ஒரு நாள் அழிவுகள் ஏற்படலாம்; ஆனால் மாய முன்னேற்றம் கண்டு மயங்காமல் அடக்கத்துடன் வளர்ச்சி அடைவதே அறிவுக்கு உகந்ததாகும் என்கிறார். மேலும், உலகம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, மரம் முதலாக, மனிதன் ஈறாக எல்லா உயிர்களுக்கும் இதுவே இருப்பிடமாகும் என்கின்றார்.

    நாட்டுப் பற்று

    நாட்டுப் பற்று என்பது ஒவ்வொரு குடிமகனிடமும் அவசியம் இருக்க வேண்டும். குடிமக்களிடம்  நாட்டுப் பற்று நிலை கொண்டிருந்தால் நாட்டை சிறந்த முறையில் வழி நடத்துவதோடு நாட்டை மேம்படுத்தவும் முடியும். வ.சுப.மாணிக்கனார் தம் படைப்பின் வழி நாட்டுப் பற்றை வெளிப்படுத்துகின்றார்.

    சாதிப் பற்றும் சமயப் பற்றும்
    காதல்
    அன்ன கட்சிப் பற்றும்
    மோதல் இல்லா மொழியின் பற்றும்
    ஆசை நீங்காக் காசுப் பற்றும்
    பாசம் ஏறிய பதவிப் பற்றும்
    நேசங் கலந்த ஈசன் பற்றும்
    தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக;
    பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
    மற்றோர் பற்று மனம்புகல் வேண்டா”        – (மாமலர்கள், ப. 63)

    இந்தியாவில் வாழும் அனைவரும் தேசப்பற்று கொண்டவர்களாகவும், தேசத்திற்காக உயிர் விடவும் துணிந்தவர்களாகவும், எந்தச் சூழலிலும் யாருக்காகவும் எதற்காகவும் தேசத்தை விட்டுக் கொடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இந்தியத் திருநாடு எந்தச் சூழ்நிலையிலும் பிளவுப்பட்டுப் பிரிவினைவாத நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற நோக்கத்தில் சாதி, சமயம், காதல், கட்சி, பதவி, பணம், மோதல் இல்லா மொழிப்பற்று ஆகியவற்றில் குறைவான பற்றும் நாட்டின் மீது அதீதப் பற்றும் கொள்ளவேண்டும் என மொழிகின்றார்.

    மொழிப்பற்று

     உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் தாய்ப்பால் போன்றது அவரவர் தாய்மொழி. பாரதியார் தன் தாய்மொழியான தமிழ் மொழியை,

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்”         – (பாரதியார் கவிதைகள் – தமிழ், வரி.1-2)

    என்கின்றார். இந்த உலகில் மிக உயர்வான பண்புகளைக் கொண்ட இனம் தமிழினம். தமிழ், தமிழர் என்று மொழியாலும் இனத்தாலும் அடையாளப்படுத்தி பெருமைப்பட வேண்டியவர்கள் இன்று தமிழில் பேசுவதற்கே தயங்குகிறார்கள். மொழியைப் பற்றி தந்தை பெரியார் கூறுமிடத்து, “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு தேவைப்படும் பற்றுகளுள் முதன்மையானது மொழிப்பற்றே ஆகும். அத்தகைய மொழிப்பற்று இல்லாதவனிடத்து தேசப்பற்றும் இருக்காது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழி அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆதலால் தமிழர்களுக்கு மொழிப்பற்று பெருக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை” என்கிறார்.

    வ.சுப.மாணிக்கனார் தாய் மொழியாம் தமிழ் மொழியை உயர்த்திப்பாடுகின்றார்.

    தாய்காட்டும் தாய்மொழிக்கே முதன்மை வேண்டும்
    தாராத
    அரசினையாம் மதிப்பதில்லை
    தாய்நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும்
    தடுமாறும் கட்சியையாம் மதிப்பதில்லை”           – (மாமலர்கள், ப.104)

    அரசும், அரசியல் கட்சிகளும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவ்வாறு தரவில்லை எனில் அவற்றை நான் மதிக்க மாட்டேன் என்கிறார்.

    தமிழ் மொழியின் பெருமைகளை ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் கவிதையில் அழகுறப் பட்டியலிடுகின்றார்.

    இந்திய மொழிகளுட் செந்தமிழ் ஒன்றே
    உலக மொழியெனும் ஒண்புகழ்க் குரியது
    இலங்கை சிங்கை எழிலார் மலேயா
    பருமா செய்கோன் பல்வள மொரைசு
    பீசி முதலாப் பிறநா டெல்லாம்
    தமிழ்மொழி பேசுந் தங்குடி கொண்டது”                   – (மாமலர்கள், ப.162)

    செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ் மொழியை உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். தமிழ்மொழி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா (இன்றைய மியான்மர்), மொரீசியஸ், செய்கோன், பிஜி தீவு ஆகிய நாடுகளில் பேசப்படுவதாக வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிப் புலப்படுத்துகின்றார்.

    ‘பச்சைத் தமிழர்’ என்று பெரியாரால் பாராட்டப்பட்டவர் காமராசர். இவர் தம் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றவர். கேரளத்தில் இருந்த குறைவான காலத்தில் மளையாளம் கற்றுக் கொண்டார். தெலுங்கும் தெரியும், இந்தியும் பேசுவார்.  நாடாளுமன்றத்தில் அவர் ஒருமுறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை ‘மாசற்ற ஆங்கிலம்’ என்று புகழ்ந்து எழுதியது ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழ் ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தமிழில்தான் பேசுவார். கையெழுத்தும் தமிழில்தான். இவரது பெருமையைப் போற்றி கவிதைப் படைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார்,

    உலகுபுகழ் நேருவின் உடல்மறை காலை
    ஞாலத் தலைவர்கள் நடத்திய தில்லி
    இரங்கற் கூட்டத்து எளியோர் தலைவன்
    காமனை வென்ற காமராசன்
    தமிழிற் பேசித் தாய்புகழ் நிறுத்தினன்;
    ஞாலப் பெரியோன் நம்மகன் காந்தி
    சாலும் தமிழில் தன்பெயர் எழுதினன்;
    தன்கல் லறையில் தண்டமிழ் மாணவன்
    என்று பொறித்தனன் இறையடி போப்பன்;
    முதுமையில் தமிழை முறையொடு கற்றபின்
    எதுகை குறையா ஏகக் காப்பியம்
    ஆரமா அணிந்தான் வீரமா முனிவன்;
    தனித்து வளரும் தகையது எனவே
    கணித்துப் புகழ்ந்தனன் கால்டு வேலன்;
    வடமொழி பிரெஞ்சு வளமார் ஆங்கிலம்
    நடைமொழி பலவும் நவின்ற பாரதி
    யாமறி மொழிகளுள் நற்றமிழ் ஒன்றே
    தாமினி தாகும் சால்பது என்றான்;”                                – (மாமலர்கள், பக்.163-164)

    காந்தியடிகள் தன் பெயரைத் தமிழில் எழுதியதை நினைவுபடுத்தியுள்ளார். மகாத்மாவின் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் தமிழ்மொழி மீதும் பற்று கொண்டவர். வள்ளுவரைப் பற்றி மகாத்மா, “யான் தமிழ் கற்க விரும்பியதற்குக் காரணம், வள்ளுவரின் வாய்மொழியை அவருடைய தாய்மொழி மூலம் படித்தறிவதற்கேயாம்” என்று தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். ஜி.யு.போப் தன் இறப்புக்குப் பின் தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்னும் வாசகம் இடம்பெற வேண்டும் என தனது உயிலில் எழுதியிருந்தார். ஆனால், இவரது ஆசை நிறைவேறவில்லை.

    தமிழிகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவர். தேம்பாவணி என்னும் காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு ‘செந்தமிழ்த் தேசிகர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவர் இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவரைப் புகழ்ந்துரைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. இவருக்கும் வ.சுப.மாணிக்கனார் கவிதை மலர்களால் மாலைச்சூட்டியுள்ளார். பாரதியார், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். ஆனால், ‘தமிழ்மொழி போல் இனிமையான மொழி வேறு எங்கும் இல்லை’ என்று தன் தாய்மொழியான தமிழ் மொழியை உயர்த்திப் பாடியதற்காக மகாகவிக்கு கவிதை மாலை சூட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார்.  பாரதியின் தமிழ்மொழிப் பற்றை வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிக் கலந்து தமிழர்களுக்கு தமிழமுதம் ஊட்டுகின்றார்.

    ஆங்கில மோகம்

    குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் இதற்குக் காரணம். சீனத்திற்கும் ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகில் உள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை. தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்து ஆங்கில மோகத்தில் அலைகிறார்கள். தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் அறிவை மழுங்கடிக்கிறார்கள். இதனை வ.சுப.மாணிக்கனார்,

    பாலர் பள்ளியாம் பாழ்கொலைக் களங்கள்
    காளான் போலவும் கறையான் போலவும்
    பட்டி தொட்டி பட்டினம் எல்லாம்
    எட்டிப்பிடித்தும் இழுவலை வீசியும்
    மூன்று வயதில் முழுத்தமிழ்க் குழவிகள்
    அஆ என்பதை அறியா வகையில்
    ஆங்கிலம் ஒன்றே ஆசையொடு கற்கும்
    பாங்கில் உணர்ச்சியைப் பரப்புகின்றன
    பள்ளிச் சிறாஅர் படிப்பிது வாயின்
    கொள்ளி தமிழ்க்கெனக் கூறவும் வேண்டுமோ?”            -(மாமலர்கள், ப.170)

    என்று ஆதங்கத்தோடு சாடியுள்ளார். காளான் போலவும் கறையான் போலவும் பட்டி தொட்டி எங்கும் பரவியிருக்கு மழலையர் (Nursery) பள்ளிகளைக் கொலைக்களங்கள் என்று மனக்குமுறலோடு குறை கூறுகின்றார். மூன்று வயதே நிரம்பிய மழலைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து தமிழ்ப்பாலை (தமிழ்மொழியை) ஊட்டாமல், புட்டிப்பாலை (ஆங்கிலத்தை) ஊட்டுவது பொருத்தப்பாடு இல்லாததாகும்.

    இந்தி எதிர்ப்பு

    இந்தி மட்டும் இந்திய அரசாங்கத்தின் மொழியாக ஆவதையும் அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாள்தோறும் எதிர்த்து வருகிறார்கள். இன்றைய சூழலில் இந்தி படித்தால்தான் நடுவண் அரசின் பதவி கிட்டும் என்றும், வடநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும் என்றும் கூறிச் சிலர் இந்தியைக் கற்கும்படி மக்களை வற்புறுத்துகின்றனர். “இந்திக்கு அடிமையாகி இறப்பதை விட இப்பொழுதே இறந்து விடுவது மேல்” என எண்ணி எரியில் மூழ்கி உயிர் நீத்த சின்னசாமியின் வீரச்செயல் கூடத் தமிழர்களை தட்டி எழுப்ப வில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் வ.சுப.மாணிக்கனார்,

    இந்தியை ஏனையோர் இனித்துக் கற்க
    உந்தும் நடுவரசு உறுபொருள் அளிக்கும்;
    நந்தமி ழரசோ நம்மவர் தமக்கே
    செந்தமிழ் வாயிலாய்ச் சிறப்புமேற் கல்வியை
    வந்து கற்க வருபொருள் வழங்கும்.
    சிறுமையோ பெருமையோ சிந்திப் பீரே
    ஆண்மையும் துறவும் அரசுக் கில்லை
    மானமும் தெளிவும் மக்கட் கில்லை”       – (மாமலர்கள், ப.171)

    என்று கேள்வி கேட்கிறார். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பார் பெரியார். ‘மானமும் தெளிவும் மக்களுக்கு இல்லை’ என்று சாடுகிறார் வ.சுப.மாணிக்கனார்.

    இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலரும் இந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்திதான் தேசிய மொழி என்கின்றார்கள். ஆனால் உண்மையில் இந்தி தேசிய மொழி அன்று. இந்திய அரசால் அங்கீகரிக்கப் பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று. வட மாநிலங்களில் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்படுகிறது. பிற மாநிலங்களில் இரண்டாவது, மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தி மொழி இந்தியாவிற்கான பொதுமொழி இல்லை என்பதை,

    இந்திய மொழிகளுள் இந்தியும் ஒன்றாம்
    என்னுடைப் போர்த்தியுள் இவளொடு சிறுமி
    அன்ன உறவில் அன்பும் உடையேன்
    அவள்தன் வளர்ச்சியில் அழுக்காக றில்லை
    இந்தி ஒன்றே பொதுமொழி என்பதை
    இந்தியன் இன்றே எதிர்க்க வேண்டும்
    எதிர்க்கா எவனும் இந்தியன் ஆகான்
    இந்தித் தாய்மொழி இந்தியன் கூடப்
    புந்தியில் கொள்கையைப் பொசுக்க வேண்டும்
    இந்தியை எதிர்த்தல் இந்தியத் தொண்டாம்”                       – (மாமலர்கள், ப. 177)

    என்னும் கவிதை வழி வ.சுப.மாணிக்கனார். உணர்த்துகின்றார். இந்தி மொழி வளர்ச்சி அடையட்டும். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தி மொழி ஒன்று மட்டுமே இந்தியா முழுவதும் ஆட்சி மொழி என்பதை நான் எதிர்கிறேன், இந்தியர்களும் எதிர்க்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.

    [தொடரும்]

     

     

     

     

    Share
  • “அவன், அது , ஆத்மா” (52)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 52

    ‘ கவிமாமணி ந.சீ.வரதராஜன்

    கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்களை அவன் பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில்தான் சந்தித்தான். அவர் ஒரு நல்ல ரசிகர். மற்றவர்களின் கவிதைகளைக் கூர்ந்து கேட்டு, படித்து அதன் நிறைகளை வாய்விட்டுக் கூறி பாராட்டி, ஊக்குவிக்கும் அற்புத ரசிகன்(ர்). அவரது கவியரங்கத் தலைமையில் கவிதை பாடுவது தனி அனுபவமாக அவனுக்கு இருந்தது. அவனிடமிருந்து கவிதைகளை வாங்கிப் படித்து விட்டு தேவைப்பட்டால் திருத்தங்களும் சொல்லுவார். கவிதையை மிக உணர்ச்சிபூர்வமாகப் படிக்கும் பொழுதே கேட்பவர்களின் இதயத்தில் அவர் சிமாசனம் போட்டு அமர்ந்து கொள்வார். ஒரு கவிதையை எப்படி அரங்கில் படிக்க வேண்டும் என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அந்தக் கவிமாமணி. அவரது பிறந்த ஊர் நாங்குநேரி. அவனும் அவரது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால்,” டேய்…விசு..நானும் தாமிரபரணித் தண்ணியக் குடிச்வண்டா” என்று அவனிடம் வாஞ்சையாகப் பேசுவார். கவியரங்கங்களில் பங்கு பெரும் கவிஞர்களை அவர்தனது கவிதைவரிகளில் அழைத்து, பாடிய கவிஞரின் கவிதையின் ஜீவனைப் பிடித்து ரசித்து அதையும் தனது கவிதையிலேயே அவர் உணர்வுபூர்வமாகச் சொல்வதை நேரில் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்.

    கவிஞர் வாலி ஆனந்தவிகடனில் ஸ்ரீராமாயணத்தை வசன கவிதையில் “அவதார புருஷன்” என்ற தலைப்பிட்டு எழுதி வந்தார். அவன் அதைத் தொடர்ந்து படித்துவிட்டு அன்றே காலை வேளையில் அந்தக் கவிதையின் அழகை, வார்த்தைப் பிரயோகத்தை கவிஞர் வாலியிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வான். அவரும் அவனது கருத்துப் பரிமாற்றத்தை மிகவும் ரசிப்பார். அதுபோலவே கவிஞர் ந.சீ.வா.வும் அந்தத் தொடரைப் படித்து,” விசு…இந்தவாரம் படிச்சியா….அந்த ஆளு என்னமா எழுதறார் பாரு….ஒவ்வொரு வாரமும் பின்னி எடுக்கரார்ப்பா” என்று தொலைபேசியில் அவனோடு பகிர்ந்து கொள்வார். ஒரு முறை கவிஞர் வாலி அவர்களைச் அவன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது கவிஞர் ந.சீ.வா.வைப் பற்றியும், அவர் “அவதார புருஷனை”ப் பற்றிப் பகிர்ந்து கொண்டது பற்றியும், “பீஷ்மன்” என்ற பெயரில் அவர் சிறுகதைகள், நாவல்கள் எழுதிவருவதையும் தெரிவித்தான். ” ஓ..பீஷ்மனா…அவரது கதை, கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தது கிடையாது” என்றார் கவிஞர் வாலி. “ந.சீ.வா.வின் தொலைபேசி இருக்கிறது தரட்டுமா? என்றான். “தா..என்று வங்கிக் கொண்டு, உடனேயே அவரது இல்லத்தில் இருந்து ந.சீ.வா.வுடன் தொலைபேசியில் ஒரு பத்து நிமிடங்களுக்கு மேலாக உரையாடினார். பேசி முடித்ததும்,” விஸ்வநாதன்….ந.சீ.வா.வும் ஒரு ரசிகமணி. அவதார புருஷன் கவிதைகளை எப்படி ரசிக்கிறார் பாருங்க…அவரை ஒரு முறை வீட்டுக்கு அழைத்து வாருங்கள்” என்றார் கவிஞர் வாலி. வாரா வாரம் ந.சீ.வா. வாலியின் கவிதைகளை வரிக்கு வரி ரசித்து தொலைபேசியில் அவருடன் பகிர்ந்து கொள்வார். நேரில் பார்க்காமலேயே இருவரும் இப்படித் தங்களுக்குள் இலக்கியப் பரிமாற்றம் செய்து வந்த பொழுது, கவிஞர் ந.சீ.வா.வின் மகளின் திருமணத்திற்குக் கவிஞர் வாலி அவர்களை ந.சீ.வா.வின் மகன் பிரகாஷ் , மற்றும் குடும்பத்தார்கள் நேரில் சென்று அழைத்தனர். அவரும் வருவதாக உறுதி செய்தார். திருமணம் அடையாறில் இருக்கும் “ஆண்டாள் திருமண மண்டபத்தில்” வைத்து நடந்தது. திருமணத்திற்கு முந்தய நாள் காலையில் கவிஞர் வாலி அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,” விஸ்வநாதன்…..இன்று மாலையில் நம்ம ந.சீ.வா.வின் மகள் கல்யாண வரவேற்புக்கு வரலாம்னு இருக்கேன் . மண்டப வாசலில் நீங்கள் இருங்கள். நாம் இருவரும் சேர்ந்தே வரவேற்புக்குப் போகலாம்.” என்றார். அதன்படியே அன்று மாலையில் அவன் கவிஞர் வாலியின் வரவை எதிர் நோக்கி அந்த மண்டப வாசலில் காத்திருந்தான். அவரும் சரியான நேரத்தில் மண்டப வாசலில் வந்து காரில் இருந்து இறங்கிய உடன்,”விஸ்வநாதன்….எனக்கு ந.சீ.வா. யார்? என்பதைக் காட்டும். போனில்தான் பேசி இருக்கிறோம்..நேரில் சந்தித்தது கிடையாது” என்றார். அந்த மண்டபத்தில் பாரதிக் கலைகழகத்தின் தலைவர் இரா.சுராஜ், கவிமாமணி தமிழழகன், கவிஞர் ஐயாரப்பன் போன்ற இலக்கிய அறிஞர்களிடம் ந.சீ.வா. பேசிக் கொண்டிருந்தார். “அதோ நடுவில் இருக்கிறாரே..அவர்தான் ந.சீ.வா., அவரிடம் பேசிக் கொண்டிருப்பவர்தான் இரா.சுராஜ்” என்று கவிஞர் வாலியிடம் அவன் சொல்லிக் கொண்டு வந்தான். வாலி வருவதைப் பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் இருகைகளையும் நீட்டி,” வாருங்கள் கவிஞரே” என்று ந.சீ.வா. வரவேற்று அங்கு இருக்கும் நண்பர்களை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காட்சியைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சி கொண்டான். நிகழ்ச்சி முடிந்து வாலி அவர்கள் புறப்படும் பொழுது,” ந.சீ.வா. ஒரு கவிஞர் மட்டுமில்லை…நல்ல ரசிகர்…நல்ல மனிதர் அவரது குடும்பம் நல்லா இருக்கும் விஸ்வநாதன் ” என்று வாயாரப் புகழ்ந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அவரிடம் நெருங்கிப் பழகிய அவன் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

    ந.சீ.வா. திருவல்லிக்கேணியில் வசித்து வந்த காலத்தில் அவரது வீட்டிற்கு அவனும், அவனுக்கு மனைவியும் அடிகடி சென்று பார்த்து பேசிக்கொண்டிருந்து விட்டு வருவார்கள். அவனுக்கு மனைவி சீதாலட்சுமி, வங்க எழுத்தாளர் “சரத்சந்திர சட்டர்ஜி”யின் நாவலை தமிழில் “கல்யாண மானவள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததை “புதிய பார்வை” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவைச்சந்திரன் தொடராக வெளியிட்டு வந்தார். அந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வந்த ந.சீ.வா., சீதாலட்சுமியின் மொழிபெயர்ப்பை மிகவும் பாராட்டி, அந்தக் கதையைப் பற்றியும் அவர் விவாதித்தது அவனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே ந.சீ.வா.வின் மனைவி அவனுக்கும், சீதாலட்சுமிக்கும் சுடச்சுட தோசை தந்து அன்போடு உபசரிப்பார்கள்.

    அவன் எழுதிய “தேர்” என்ற சிறுகதையை சுபமங்களாவில் படித்து விட்டு அவனுக்கு ஒரு தபால் கார்டில் பாராட்டி எழுதியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசி ஊக்கம் தந்தார். இது போன்று அவன் எழுதும் ஒவ்வொரு சிறுகதைகளையும் படித்துவிட்டு அவனோடு அவரின் விமர்சனக் கருத்தைப் பகிர்ந்து கொள்வார். கடிதமும் எழுதுவார். அதையெல்லாம் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.

    பேராசிரியர் நாகநந்தி அவர்கள் பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கவிதையை (சேவா ஸ்டேஜ் மூலமாக நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமன் குழுவினர் நடித்தது) பாரதி கலைகழகக் கவிஞர்களைக் கொண்டு நடிக்க வைத்து 1982ம் ஆண்டு நாடகமாக மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் அரங்கில் அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் “விதுரன்” பாத்திரத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக ந.சீ.வா.நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

    ந.சீ.வா. எழுதிய கடேசிக் கவிதை “பிரிவு”. அதில் இருந்து சிலவரிகளை இங்கே பதிவு செய்கிறேன்:

    “காலத்தின் மாயத்தில் கனவு நிழலும் மறைய
    வேளை-வேகம்-மனைவி , வீட்டில் குழந்தைகள் !
    ஓடியுடல் களைத்தேன்; ஓய்வுபெற்று நிற்கையிலே
    நாடி வந்த இக்கடிதம் நமனுலகு நீசென்ற
    சேதியினைச் சொல்கிறது! சிந்தை கலங்கவில்லை
    போதிமர வாழ்க்கையதில் புத்தனென ஆனேனா?
    என்றோஎன் நினைவில்நீ எரிந்துவிட்டாய் என்பதனால்
    இன்றிங்கே நான்ஜடமாய் இறுகிப்போய் விட்டேனா?”

    இந்தக் கவிதை அவர் இறப்பதற்கு முன்பாகக் கல்கி பத்திரிகைக்கு அனுப்பி இருக்கிறார். அது வெளியாகும் போது “ந.சீ.வா.” இவ்வுலகை விட்டு வெளியேறி விட்டார். அவர் இறந்த செய்தியை அவனுக்கு நண்பனும், ந.சீ.வா.வுக்கு மிகவும் பிரியமான எழுத்தாளரும், கல்கி பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் இருந்தவருமான “பா.ராகவன்” அவர்களிடம் அவன் சொன்னவுடன்,” விபரம் இன்று காலையில் எனக்குத் தெரிந்தது. மிகவும் வருந்துகிறேன். அவர் தந்த கவிதையைத்தான் இப்பொழுது இந்த வார கல்கி இதழுக்காக அச்சேற்றிக் கொண்டிருக்கிறேன். இதுதான் அவரது கடேசிக் கவிதையாக இருக்கும்” என்றார்.

    கவிமாமணி, ரசிகமணி ந.சீ.வா.வின் அன்பான குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு அவனுக்கு இறைவன் அளித்த வரம். இன்றும் அவரது மகன் பிரகாஷ் மற்றும் குடும்பத்தார்களிடம் அவன் தொடர்பு வைத்து வருகிறான்.

    20.10.2017 அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • கண்டேன் ஒரு புதுமுகம்

    image (3)

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    இப்போது நான் கண்ட ஒரு முகத்தை

    எப்போதும் மறக்க மாட்டேன் !

    எனக்கு அவளே நிகரானவள்;

    இருவரும் சந்தித்ததை இவ்வுலக மாந்தர்

    அறிவதை நான் விழைகிறேன்.

    அந்த நாளின்றி வேறொன் றாயின்

    சிந்திப்பது மாறுபடும்.

    தெரியாமல் போன தெனக்கு,

    இரவுக் கனவில் இன்று வருவாள் !

    வீழ்ந்தேன் காதலில் நான்

    வீழ்ந்தேன் !

    மீண்டும் விளிக்கிறாள் என்னை !

    இதுபோல் தவிக்கும் அனுபவம்

    எனக்கில்லை !

    தனிமையில் உழல்கிறேன் !

    அனுமதிப் பதில்லை எந்தப் பெண்ணையும் !

    ஆயினும், இப்போது

    வீழ்ந்தேன் காதலில் நான்

    வீழ்ந்தேன் !

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171019 - Goverdhan -lr

    ”கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்
    சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்
    உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க
    குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்”….கிரேசி மோகன்….!

    ’’நட்டுவாங் கம்செய்தார், நாகத்தின் மேலன்று:
    கட்டுவா ளங்கம்தாய்க்(யசோதை) கண்ணியின்(ஏரார்ந்த கண்ணி) -விட்டலடி(விட்டல் திருவடி),(OR) எட்டடியில்(எட்டானவர் கண்ணன்)-
    அட்டாங்க யோகமாய் ஆழ்ந்துறங்கு, சேய்க்கன்னுக்
    குட்டியாய்க் காலில் கிட’’….கிரேசி மோகன்….!

    Share