Blog

  • தமிழால் வாழ்த்துவோம் !

     

    ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

     

     

    அறிவுநிறை தமிழ் கொழுந்தே

    ஆண்டாண்டு வாழியவே

    நிறைவுடைய வாழ்வு பெற்று

    நீண்டநாள் வாழியவே !

     

    கனிவுநிறை உள்ளம் கொண்டு

    காலமெல்லாம் வாழியவே

    கற்கண்டே கனி அமுதே

    களிப்புடனே வாழியவே !

     

    இனிமைநிறை வாழ்வு பெற்று

    ஏற்றமுடன் வாழியவே

    பருவமெலாம் வளம் பெற்று

    பாங்குடனே வாழியவே !

     

    முத்தமிழே முழு நிலவே

    சொத்தேநீ வாழியவே

    அர்த்தமுள்ள வாழ்வு வாழ

    அகமார வாழ்த்துகிறோம் !

     

    வசந்தம்நிறை வாழ்வு பெற்று

    வையகத்தில் வாழியவே

    வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு

    வாழ்ந்திடுக பல்லாண்டு !

     

    பிறந்தநாள் கொண்டாடும் வேளை இப்படி வாழ்த்தினால் இனிக்குமல்லவா

    வாழ்த்திப் பாருங்கள்

    வண்ணமாயிருக்கும்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170723 - megh malhar -icam

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
    தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
    ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
    கீதோ பதேசகா காப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !

     

    Image result for Flying Car Personal

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    Mary (Missy) Cummings, professor in the Department of Aeronautics and Astronautics and the Engineering Systems Division, holds a quad-rotor.

    துணைப் பேராசிரியர் மேரி கம்மிங்ஸ் 

    http://news.mit.edu/2010/profile-cummings-0405

    http://mems.duke.edu/faculty/mary-cummings

    http://www.bbc.com/future/story/20131031-a-flying-car-for-everyone

    https://en.wikipedia.org/wiki/Missy_Cummings

    ++++++++++++++++++++

    பறப்பியல் பொறித்துறைப் புரட்சி ! 
    செங்குத்தாய் உயரும் கார் !
    சீராக ஏறி இறங்கும் தரைக் கார் ! 
    முன்னோடி வாகனம் உருவாகி விட்டது !
    வாணிபத் தயாரிப்பு வாகனமாய் 
    வாசலில் நிற்கப் போகிறது ! 
    புதிய வானூர்தி  
    பரிதி சக்தியால் பறக்கும் !
    எரி வாயு வின்றிப் பறக்கும் !
    பகலிலும் இரவிலும் பறக்கும் !
    பசுமைப் புரட்சியில் உதித்தது !
    பாதுகாப்பாய் இயங்குவது !
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் 
    நான்கு காற்றாடி உந்துது !
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி அளிக்கும் !
    ஒற்றை விமானி ஓட்டுவது !
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    அட்லாண்டிக் கடலைக் கடந்து,
    அகில உலகினைச் சுற்றி இறங்கியது !
    நூறாண்டுக்கு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெற்றது !

    ++++++++++++++++++++++++

    Image result for Flying Car Personal

    MOLLER  M100 SKYCAR [VERTICAL TAKE-OFF & LANDING]

    பறவையை நோக்கினான், பறக்கும் வாகனம் ஆக்கினான்.

    பாதி ஓடும் கார், பாதி பறக்கும் கார் கற்பனை அற்புதம் கடினமான, இடையூறு மிக்கப் பொறிநுணுக்கம் அல்ல ! சாதிக்கக் கூடிய வாகனமே.  பறக்கும் கார் எதிர்கால மனிதத் தேவை என்று மேரி மிஸ்ஸி கம்மிங்ஸ் [Mary Missy Cummings, Duke University]  உறுதியாகக் கூறுகிறார். பறக்கும் கார் என்பது பறக்கும் தட்டும், சுய இயக்கி காரும் [Drone + Robotic car] சேர்ந்தது. எதிர்காலப் போக்குவரத்து பிணைப்புச் சிக்கல் [Transportation Network] இனிமேல் தரையிலும், வானிலும் சுய இயக்கக் கணினிக் கண்காணிப்பு மூலம் நிகழப் போவதால், புதிய பறக்கும் கார் மிகப் பாதுகாப்பாக இயங்கும்.  இதில் எந்த பொறி நுணுக்க இடையூறும் இருக்கா தென்று உறுதியாகக் கூறுகிறார், படைப்பாளி மிஸ்ஸி கம்மிங்ஸ். உலகில் மனிதருக்கு நேரும் உண்மையான அதிர்ச்சி, அந்தப் படைப்பால் மனத்துவ, கலாச்சார நடைமுறை வழிகளில் இருக்கும் என்றும் கூறுகிறார்.

    unnamed (4)

     

    20 ஆம் நூற்றாண்டில் செய்த முதல் வானேறிக் கார்கள்

    1. 1940 இல் ஹென்றி ஃபோர்டு கூறியது : என்னுரையைக் குறிப்பிடுவீர். பாதி விமானமும், பாதிக்காரும்  சேர்ந்த வாகனம் வரப் போகிறது.  நீங்கள் சிரிக்கலாம்;  ஆயினும் வரப் போகிறது பாருங்கள்.
    2.  1956 -1958  இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க ஃபோர்டு கம்பேனி முற்போக்குப் படைப்பில்  ஒரு வானக்கார் மாடல் [Volante Tri -Athodyne] 3/8 சிற்றளவு வடிவம், அமைக்கப் பட்டது. அது தனி மோட்டார் கொண்ட  மூன்று குழல் காற்றாடி. மாடல் [Three Ducted Fans with their Own Motor].   அவை காரைத் தரையிலும் ஓட்டும். டிரோன் போல் [Drone] செங்குத்தாய் உந்தி வானிலும் பறக்க வைக்கும்.  ஆனால் ஃபோர்டு மாடல்பின்னர் விருத்தியாக வில்லை.

    1. 1956 இல் அமெரிக்கப் படைத்துறை போக்குவரத்து ஆணையகம் “பறக்கும் ஜீப்கார்”  [Flying Jeeps] [Ducted Fan Based Aircrafts] தயாரிக்க ஆரம்பித்தது.  சிறிய வடிவான பறக்கும் ஜீப்கார் இயக்கம், பூதக் கனமான ஹெலிக்காப்டரை விட எளிதானது. தனியார் தொழிற்துறைகள் முன்வந்தன. ஆனால் யுத்த தளத்தில் பறக்கும் ஜீப்கார் பயனற்றவை என்று முயற்சிகள் பின்னர் கைவிடப் பட்டன.
    2. 1980 ஆண்டில் போயிங் எஞ்சினியர் ஃபிரெட் பார்க்கர் [Fred Barker]  ஒரு தரைவான் ஊர்தியைத் [Sky Commuter VTOL Aircraft] [ இருவர் ஓட்டும் 14 அடி நீள குழல்-காற்றாடி மாடல்] ஒன்றைத் தயாரித்தார்.

    1. 1942 ஆண்டில் ரஷ்யப் படைத்துறையும் முயற்சி செய்தது.
    2. 2006 ஆம் ஆண்டில் அர்பன் ஏரோனாட்டிக்ஸ் [American Urban Aeronautics X -Hawk] ஒரு செங்குத்து எழுச்சி டர்போ ஜெட் காரை [VTOL Turbojet] அமைத்தது.  ஆனால் பறப்பியல் சோதனை நடத்த வில்லை.
    3. 2013 மே 7 ஆம் தேதி டெர்ரஃபூஜியா ஒரு வித வானக் கார் மாடலை அறிவித்தது  [Terrafugia announced its Model TF -X, a Plug-in Hybrid Tilt Rotor Vehicle].  அதுவே முதல் சுய இயக்கு பறக்கும் கார் என்று வெளியிடப்படுகிறது.  ஒரு மூச்சில் 500 மைல் [800 கி.மீ.] கடக்க வல்லது. மின்கலன்கள் மீளூட்டத் தகுதி உடையவை. TF -X மாடல் விருத்தியாகி வர 8 முதல் 12 ஆண்டுகள் ஆகலாம்.  அதாவது அவை 2021 – 2025 ஆண்டு களில் ஆகாயத்தில் பறக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    பிரான்ஸ் விருத்தி செய்த வான் வாகனம் [French SkyRider Xplorair PX200]

    பிரான்ஸின் முழு வடிவ முன்னோடி வான் வாகனம் 2017 பாரிஸ் விமானக் காட்சி நிகழ்ச்சியில் காட்டப் பட்டது. பறக்கும் தட்டு [Drone Flying] கோட்பாட்டில் நேர் செங்குத்தாய் உயரப் பறப்பது. வான் வாகனம்  செங்குத்து எழுச்சி, வானேற்றம், தரை மீட்சித் தகுதி [Vertical Take-of and Landing (VTOL)] பெற்றது. படைப்பு, விருத்தி செய்ய நிதிச் செலவு : 10 மில்லியன் டாலர்.  அனுதின நடப்பு / வாடிக்கை வர்த்தகப் பயணம் பாதுகாப்பானது.

     

    MOLLER M400 SKYCAR 180 HP [VERTICAL TAKE-OFF & LANDING]

    அமெரிக்கத் தொழிற்துறை மோலர் 40 ஆண்டுகளாய் டாலர் 100 மில்லியன் செலவழித்து விருத்தி செய்த, முன்னோடிக் கார் ஊர்தி, M400 வானக்கார் 2010 இல் பயிற்சிக்குத் தயாரானது. ஆனால் 2016 வரை வெற்றிகரமான பறப்பு நிகழவில்லை.

    முன்னோடி வானக்கார் [Prototype Flying Car] இரண்டு அல்லது நால்வர் பயணம் செய்யும் தகுதி உடையது. அதன் நீளம் 21.5 அடி. இறக்கை நீட்சி : 8 அடி.  உயரம் : 7.5 அடி வெற்று எடை : 2400 பவுண்டு. 8 மோட்டார் சுழற்சி எஞ்சின் : 530 cc. ஆற்றல் : 180 HP. உச்ச வேகம் : 330 mph. ஓட்டும் வேகம் : 300 mph. தூர நீட்சி : 800 மைல்,  கால நீட்சி : 6 மணி நேரம். வான் உயரம் 36,000 அடி. ஏறும் வேகம் : 4800 ft/min.

    2017 ஆண்டு முன்னோடிப் பறக்கும்  கார் M400 விலை மதிப்பீடு : சுமார் 3 மில்லியன் டாலர். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா பொறியியல் நிபுணர் போட்டி போட்டு பல்வேறு புதிய வான் வாகனங்கள் வாணிபச் சந்தைக்கு வந்தால் விலை குறையும்.

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    சூரிய சக்தியில் மின்சேமிப்பியோடு இயங்கி  ஒரு நாளில் உலகம் சுற்றிய முதல் வானூர்தி

    (ஜூலை 8, 2010)


    “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”

    பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)

    “நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன்.  பூரிப்படைகிறேன் !  (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு !  இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம்.  நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”

    சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)

    “எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது.  நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது.  தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”

    கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)


    வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி

    2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது.  எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி.  பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது.  ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன.  ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள்.  ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது.  சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும்  சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது.  வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி).  வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.

    சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.

    இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன..  இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும்.  நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது.  மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை.  அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது.  காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது.  ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது.  அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் !  அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.

    சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்

    சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது !  திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர்.  பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர்.  அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் :  சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport).  புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51.  கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00.  ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி).  பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம்.  பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது.  இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது.  63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன.  ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.

    இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது !  ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை.  சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் :  1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி.  2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது.  3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது !  2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது.  இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் !  ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.

    2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது.  12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை.  அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை.  ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது.  நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி).  அவை மெதுவாகச் சுற்றின.  ஊர்தியின் நீளம் 72 அடி.  இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி.  மொத்த எடை 1.6 டன்.   தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph.  பறக்கும் வேகம் 43 mph.  உச்ச வேகம் 75 mph.   பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.

    சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர்.  அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது.  உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது.  ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.

    சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :

    1.  2007 மே 22 :  பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார்.  அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.

    2. 2009 ஜூன் 26 :  சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்பு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.

    3. 2010 ஏப்ரல் 7 :  சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.

    4. 2010 ஜூலை 7 :  சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.

    5. 2010 ஜூலை 8 :  சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது.  ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).

    6. 2011 ஆண்டில் :  இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.

    7. 2012 ஆண்டு வரை :  ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
    விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.

    8.  2013 -2014 :  விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது,  உலகத்தைச் சுற்றி வருவது.


    +++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites

    1.  BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)

    2.  Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)

    3.  Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)

    4.  BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)

    5.  Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity  coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.

    6. http://www.bbc.com/news/world-australia-40527784  [July 7, 2017]

    7. http://www.onenewspage.com/video/20170707/8359018/Tesla-to-Build-World-Biggest-Battery-in.htm

    8.  http://solarpv.tv/index.php/2016/08/10/solarstorage-in-india-seci-publishes-tender-for-100-mw-grid-connected-solar-pv-projects-along-with-large-scale-battery-energy-storage-system-at-kadapa-solar-park-andhra-pradesh/ [August 10, 2016]

    9.  http://www.cnbc.com/2017/07/07/tesla-largest-battery-system-in-the-world-elon-musk-says.html [July 7, 2017]

    10.  http://www.cbsnews.com/news/flying-cars-ready-to-take-off-15-04-2005/

    11. http://www.bbc.com/future/story/20131031-a-flying-car-for-everyone [October 31, 2013]

    12. https://youtu.be/_dNPjqLyxSI

    13. http://www.spacedaily.com/reports/Flying_cars_and_no_more_pilots_in_flight_revolution_Airbus_999.html  [July 13, 2017]

    14.  https://en.wikipedia.org/wiki/Missy_Cummings  [March 20, 2017]

    15.  https://en.wikipedia.org/wiki/Moller_M400_Skycar  [June 4, 2017]

    16.  https://en.wikipedia.org/wiki/Flying_car_(aircraft)  [July 19, 2017]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 22, 2017] [R-3]

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (2)

     
    மீ.விசுவநாதன்

     
    பகுதி: இரண்டு
    பாலகாண்டம்

    ஆதிகவி வால்மீகியும் நாரதரும்

    ஸ்ரீராம தர்ம சரிதம்
    (காப்பு)
    வில்லெடுத்த வீரன் விநயமிகு ராமகதை
    நல்லொழுக்கத் தீன்தமிழில் நான்சொல்லச் சொல்லெடுத்து
    நீதருவாய் சாரதையே ! நித்திலப் பேரொளியே !
    சீருடன் என்னுள்ளே சேர். (8)

    சிருங்கேரி மாமலைவாழ் தெய்வதமே ! ஞானப்
    பெருங்கோவில் கொண்டவளே ! பிள்ளை அருமைத்
    திருராமன் வாழ்ந்த திசைநோக்கிப் பாடக்
    கருவாக வந்துநீ கா. (9)

    தட்டச்சில் வார்த்தை தவறாமல் வந்திடவும்
    பட்டத்து யானையெனப் பைந்தமிழ்த்தேன் சொட்டுகிற
    உச்சத்துப் பாக்களையே உள்ளொளியால் கொட்டிடவும்
    இச்சையுட(ன்) ஈவார் குரு. (10)

    ஒருதிருடன் “மகரிஷி”யானார்
    அந்தவோர் காட்டில் அவனேதான் ராஜா !
    அடுத்தவரின் பொருட்களை அள்ளிக்கொண் டோடும்
    விந்தைமிகு கள்ளனவன் ! வேட்டையி லோர்நாள்
    வேதரிஷி நாரதரைத் தீக்காற்றாய்ச் சுற்றி,
    “சொந்தமாய் உள்ளவுன் பொருட்களைத்தா” வென்றான்!
    “சுகமாகக் கொண்டுபோயுன் சுற்றத்தார் முன்னே
    வந்தபாவச் செல்வத்தை வாரிக்கொண் டோரே
    வரும்பாப மூட்டையில் பங்குகொள் வீரோ ? (11)

    திருடிதினம் நான்தரும் தீமையிலே நீங்கள்
    தேகத்தை வளர்க்கின்றீர்! தீராத பாபம்
    ஒருபங்கு கொள்வீரோ? சொல்லெனக் கேட்டுச்
    சொன்னபதில் பெற்றுவந்து சொல்லுக” வென்று
    கருணையுடன் நாரதர் கள்ளனிடம் சொன்னார்!
    கள்ளனவன் சென்றுதன் காதல்மனை யாளை
    அருகழைத்துக் கேட்டவுடன் !”அன்னமிட லுங்கள்
    அன்றாட தர்மந்தான், அறங்கொன்ற பாபம் (12)

    உங்களுக்கே எங்களுக்கு ஒட்டாதே என்றாள்”
    உடனேயே காட்டிற்கு ஓடிவந்து,”ஞானி
    உங்களைநான் பணிகின்றேன்! ஒட்டிய தீமை
    ஒழிவதற்கோர் நல்வழியைச் சொல்லுக வென்றான்!”
    அங்கேயே “ராமநாம” அற்புதத்தை ஓத
    அலுங்காமல் ஆழ்தவத்தில் அப்படியே மூழ்கி
    மங்காத ஆதவனாய் வானோர்கள் மெச்சும்
    மகத்தான ஆதிகவி வால்மீகி யானார். (13)

    வால்மீகி
    ஓமெனும் உள்ளொலி உற்சாக வெள்ளம்
    ஓயாமற் பாய்கிற உத்தம யோகி
    நாமமே வால்மீகி ! நல்முனிவோர்க் கூட்ட
    ஞாலமே போற்றுகிற நல்வினையால் வந்தோன் !
    சேமமே எப்போதும் செந்நாவில் பொங்கிச்
    சீரிளமைக் கவிதையாய்ச் செய்துபேர் கொண்டோன்!
    காமமே இல்லாத கர்மவினை என்று
    காலத்தால் நீங்காத காவியத்தைச் செய்தோன் ! (14)

    நாரதர்

    அந்தவோர் ஆதிகவி ஆசிரமம் தேடி
    அவராக வந்தாரே நாரதராம் ஞானி !
    எந்தவோர் ஆசையும் கிஞ்சித்து மின்றி
    எப்போதும் நாரணன் நாமத்தில் மூழ்கும்
    பந்தத்தைக் கொண்டவர் ! பக்தியால் முக்தி
    பளிச்செனப் பெற்றவர் ! பாட்டிலே விஷ்ணு
    சிந்தையை ஆழமாய்ச் சேர்த்திசைத் துள்ளே
    சீதள குணமாகச் சிரித்தபடிச் செல்வோன் ! (15)

    நாரதருக்கு வால்மீகி செய்த மரியாதை

    நாரதர் வந்தவுடன் நல்வணக்கங் கூறி
    ஞானியவர் பாதமதை நன்னீரால்த் தூய்மை
    பூரணமாய்ச் செய்துவுடன் பூசித்தார் ! உண்ணப்
    புதுப்பழங்கள் தந்தவரைக் கௌரவித்தார் ! பின்னர்
    நாரதரை நோக்கியே நல்விநயங் கொண்டு
    “நல்லோரே ஞானியரில் உச்சமாய் நின்று
    வாரணம்போல் ஆன்மபலம் வாய்த்தோரே ! இந்த
    வால்மீகி கேள்விக்கு விடைவேண்டு மென்றார்”! (16)

    வால்மீகி கேட்ட கேள்விகள்

    “முனிவரே இவ்வுலகில் மோகமே இன்றி
    முன்னோர்சொல் கேட்பவரும், முனைமுறியா தர்மத்
    தனிவழியே செல்பவரும், தன்னாற்றல், தண்மைத்
    தவவாழ்வைக் கொள்பவரும், தந்தைதாய் போற்றும்
    கனிவினைத்தான் பெற்றவரும், கடுங்கோபம் நீக்கிக்
    கல்யாண குணத்தோடு கற்பூர புத்தி
    இனிதாகப் பெற்றவரும், ஈடில்லா வீர
    இதயத்தோ டிருப்பவரும் எவர்தான் என்றார் ?” (17)

    நாரதர் கூறிய பதில்
    கேள்விகளைக் கேட்டவுடன் கீர்த்திமிகு உள்ள
    கீதமிசை நாரதரும் விடையினைத் தந்தார் !
    “கோள்களே குதூகலித்துத் தந்ததோர் பிள்ளை!
    குணக்குன்று ! இஷ்வாகு குலத்தோன்றல் ராமன்
    தோள்வலிமை கொண்டவன்! தொண்டிலே தேர்ந்தோன் !
    துன்பத்தைத் துடைக்கின்ற துடிப்பினைப் பெற்றோன் !
    ஆளிவன்போல் யாருமில்லை ஆன்மபலம் மிக்கோன்
    அறிவாளன், நீதிமான், அன்பாலே வெல்வோன் ! (18)

    கார்மேகம் வெட்க்கிடும் அருட்கொடையான் ! நீண்ட
    கைகளும், அகன்றதோர் கண்களும், சங்குச்
    சீரான நீள்கழுத்தும், செதுக்கியதோர் தாடை,
    சிரசழகும் வெண்ணைபோல் சிரிப்பழகும், நன்கு
    நேரான நாசியும், நேர்மைநிறை நெஞ்சும்,
    நிமிர்ந்தநல் நடையுடை நேர்த்தியும் கொண்டோன் !
    பாராளும் ராஜனுக்குப் பரிந்துரைக்கும் தூய
    பண்புகள் அத்தனையும் பரிசாகப் பெற்றோன். (19)

    தாயான கௌசல்யா தன்பிள்ளை என்றும்
    தயாநிதி எனமகிழும் தன்மையினைப் பெற்றோன் !
    மாயாவி விஷ்ணுவின் மறுஅவ தாரம்
    மக்களைக் காத்திடவே வந்துதித்த ராமன் !
    ஓயாது அறம்செய் தோங்குபுகழ் சேர்த்த
    ஊர்மெச்சும் தசரதனின் உயிரான பிள்ளை !
    தாயான கைகேயி தன்வரக் கேட்டால்
    காடேகிப் போனவன்தான் காகுத்த னென்பேன் ! (20)

    Share
  • வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் நாளை முதல் சகஸ்ரசண்டி மகாயாகம்

    23.07.2017 முதல் 30.07.2017 வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

    சர்வதேச தரச்சான்றிதழுடன் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை கொண்டு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன் மகான்களும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக இயற்கை சூழலுடன் மூலிகை வாசத் ஸ்தலமாக அமைந்து உள்ளது.
    ஷண்மத பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம், மருத்துவ சேவை கோ பராமரிப்பு நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பல்வேறு வகையான பிரம்மாண்ட யாகங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், சதசண்டீ யாகம், 365 நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம், லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம், 55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம், சத்ரு சம்ஹார ஹோமம், சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி ஹோமங்களும் மாதம் தோறும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று வருகிறது..

    இத்தகைய சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய், உடல் நோய் ,தீர்க்கும் வகையில் அம்மனுக்குரிய ஆடி மாதத்தை முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் என்ற வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

    தன்வந்திரி பீடத்தில் நாளை 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் )ஸ்ரீ ஜகன்மாதாவின் அருளால் உலக நன்மைக்காக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நிகழும் ஆடி மாத அமாவாசையில் இருந்து வளர்பிறை அஷ்டமி வரை எட்டு நாட்கள் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவதற்கு சஹஸ்ர சண்டி யாகம் முப்பத்து முக்கோடி தேவதா ஆஹ்வான பூஜை ஹோமங்கள் அனைத்து ஜீவராசிகளின் ‌க்ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நடைபெறும் இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.இந்த யாகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், குரு மஹான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    23.07.2017 ஞாயிறு காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    23.07.2017 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், 7.00 மணிக்கு பஞ்ச சூக்த பாராயணம், மங்களார்த்தி,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம்.

    24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், சுப்ரமண்ய சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் மற்றும் அர்ச்சனை, பூர்ணாஹுதி, இடும்பன் பூஜை, மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.

    25.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு துர்காஷ்டகம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்) மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, யாகசாலை ப்ரவேசம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், ரித்விக் வரணம், கலச பிரதிஷ்டை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், திதிநித்யா மூல மந்த்ர விசேஷ ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர்பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    26.07.2017 புதன் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவி மஹாத்மியம் சப்தசதி பாராயணம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ வராஹி மூலமந்த்ர விசேஷ ஹோமம், ராகு கேது பெயர்ச்சி ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுகபைரவர் பூஜை, பூர்ணாஹுதி, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    27.07.2017 வியாழக் கிழமை மாலை 6.00 மணிக்கு தேவிமஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம் பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ சோடஷ மஹால‌ஷ்மி யாகம், ஸ்ரீசூக்த ஹோமம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை கன்னியா பூஜை, வடுகபைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    28.07.2017 வெள்ளி கிழமை மாலை 6.00 மணிக்கு, தேவி மஹாத்மியம் பாராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் குபேர ல‌க்ஷ்மி யாகம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம்.

    29.07.2017 சனிக் கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், நவ துர்கா ஹோமம், சந்தான பரமேஸ்வரி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, வடுகபைரவர் பூஜை, கன்னியாபூஜை, வசுவத்தார ஹோமம், மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.
    29.07.2017 சனிக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சஹஸ்ர சண்டி ஹோமம் பூர்ணாஹுதி, சதுர்வேத உபசாரம், மங்களார்த்தி, பிரசாத விநியோகம்.
    30.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், கலச பூஜை, நவாவரண பூஜை, ஸ்ரீ வித்யா ஹோமம், தசமஹாவித்யா ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவர் பூஜை, மங்களார்த்தி, தேவி மஹாத்மியம் பாராயணம், பிரசாத விநியோகம்.

    30.07.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை தேவி மஹாத்மியம் பராயணம் சண்டி ஹோமம் பாவன உபநிஷத் உபசாரம், மஹா பூர்ணாஹுதி, வசோத்த்வாரா ஹோமம், மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், விசேஷ ஆராதனை, ரித்விக் சம்பாவணை, அக்‌ஷத ஆசீர்வாதம், மஹா பிரசாதம் வழங்குதல்.

    தன்வந்திரி பீடம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும்
    இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன் சகலஐஸ்வரியம் பெற்று இறையருளுடன் ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் எட்டு நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது என்றார்.

    தொடர்புக்கு,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
    வாலாஜாபேட்டை – 632513.
    வேலூர் மாவட்டம்.
    Ph : 04172-230033 / 230274
    Cell : 9443330203
    Web: www.danvantritemple.org
    eMail : danvantripeedam@gmail.com

    Share
  • ’’அம்மா’’….!

    சென்ற வருட ஆடி அம்மாவாசை….!

    ஓவியம் - கிரேசி மோகன்

    ஓவியம் – கிரேசி மோகன்

    ஆடிப் பெருக்கு, அம்மாவாசை, குருப்பெயர்ச்சி ,மூன்றும் சேர்ந்து வருவது காலெண்டர் பார்க்கும் அனைவரும் அறிந்ததே….

    எங்கள் குடும்பம் மட்டுமே அறிந்தது….நான்காவது ஒற்றுமை எனது
    ‘’அம்மாவின்’’ திவசம்….பஞ்சாங்கப் படி….வருடத்திற்க்கு ஒருமுறை வரும் ‘’அதிதி தேவோ பவ’’ அவள்….
    ‘’ஆடிப் பெருக்கம்மா ஆசை குருபெயர்ச்சி
    கூடி வருகதென்று காலெண்டர் -கோடிட,
    ஆகஸ்ட் இரண்டின்று ,அம்மா சிரார்த்தம்
    ஆGUESTபஞ் சாங்கி அவள்’’….கிரேசி மோகன்….

    நாளை -ஆடி அம்மாவாசை

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (1)

    கஷ்டம் கலைந்திடும், நஷ்டம் நகர்ந்திடும்,
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய, லேகிய வண்ணனை
    ஏகிட எல்லாம் எளிது….கிரேசி மோகன்….!

    Share
  • சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (11)

    பவள சங்கரி

    சிறுவர் இலக்கியம்

    ஒரு கதையை சுவைபடச் சொல்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பயிற்சி முயற்சியாக கொண்டு அதை பல்வேறு முறைகளில் மாற்றி எழுத முயற்சிக்கலாம்.
    ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் ஒவ்வொரு முறையிலும் எழுதிப்பார்க்கலாம். இதனால் எழுத்து நடையில் ஒரு இலகுவான தன்மையும், தெளிவும் ஏற்படுவதோடு பல சவால்களையும் எதிர்கொள்ள இயலும். இவையனைத்திலும் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டியது வாசகர்களை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலில் வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தே.

    திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு (ஃபிளாஷ் பேக்) வாசகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு எழுத்து முறை. அதேபோன்று நேரிடையாகக் கதையை முன்னெடுத்துச் செல்வதிலும் இனிமை கூட்டலாம். கதை மாந்தர்களின் குணநலன்களுக்கேற்ப அதன் போக்கிலேயே கதையை நகர்த்திச் செல்வதும் ஓர் வகை. எது எப்படியாயினும் வாசகர்களின் அடுத்த காட்சிக்கான எதிர்பார்ப்பு மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டும். பயிற்சிக்கான பரிட்சார்த்த முறையில் எழுதி முடித்தவுடன் எழவேண்டிய வினாக்கள்:

    ⦁ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போக்கு தொடரப்பட்டுள்ளதா?
    ⦁ வாசகர்களின் எண்ணத்தில் வினாக்கள் உருவாக வழியமைந்திருக்கிறதா?
    ⦁ கதை மாந்தரின் செயல்பாட்டிற்கு தடையேற்படுத்தும் பாத்திரங்களும், களமும் குழப்பமின்றி உருவாக்கப்பட்டுள்ளதா?
    ⦁ விவரம் அறிய ஆர்வமேற்படுத்தும் வெளிப்படையான பிரச்சனைகள் உள்ளனவா?
    ⦁ வித்தியாசமான பாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளனவா?
    ⦁ பிரச்சனைகளை இலாவகமாகக் கையாளும் கதாநாயகன் உருவாக்கப்பட்டுள்ளானா?
    ⦁ உறுதியான அடித்தளத்தில் இனிமையான கட்டமைப்புகள் காணப்படுகின்றனவா?
    மேற்கண்ட வினாக்களுக்கு நேர்மறையான பதில்கள் கிடைக்கும்பட்சத்தில் அதன் வெற்றியை நிர்மாணித்த கட்டமைப்புகள் குறித்த தெளிவை உண்டாக்கும் வினாக்களை எழுப்பினால் அதன் விடைகளே நல்லதொரு படைப்பின் அடித்தளமாக அமைந்துவிடும்.

    ⦁ எந்தவிதமான கதைப்போக்கு இயல்பான எழுத்துகளை உருவாக்கியுள்ளது?
    ⦁ சிறந்த வகை கதைப்போக்காக உறுதிப்படுத்தும் முறை எது?
    ⦁ என் கதைக்கு எந்த விதமான போக்கு சுவையளிக்கக்கூடியது?
    ⦁ கதையைத் தெளிவாகச் சொல்லும் முறைமை எது?

    மேற்கண்ட வினாக்களுக்கு ஆக்கப்பூர்வமான விடைகளை அளிக்க முடியுமென்றால் அது சுவையானதொரு படைப்பின் அறிகுறி என்பதை அறியலாம்.
    திடீரென ஒரு பொறி தட்டுகிறது. அருமையான கதைக்கான கரு உருவாகிவிட்டதென்று மனம் பரபரக்கிறது! இந்தக்கதை இதுவரை உலகில் எவரும் தொடாத ஒரு கருவைக்கொண்ட சிறந்த கதை என்பதை எண்ணி பெருமை பிடிபடவில்லை. எல்லாம் சரி. கதையின் ஆரம்பம் கூட அருமையாக அமைந்துவிடுகிறது. எல்லாம் திட்டப்படி சரியான முறையில் நடந்திருக்கிறது. ஆனாலும் திடீரென ஒரு புள்ளியில் அப்படியே நிற்கிறது. மேலே நகரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்து நெஞ்சில் ஏதோ பந்து அடைத்தது போன்ற நிலையை ஏற்படுத்தி தொல்லையேற்படுத்துகிறது. இப்படியொரு அனுபவம் ஏற்படுவது உங்களுக்கு மட்டும்தானா என்றால் நிச்சயமாக இல்லை. மிகப்பெரிய எழுத்தாளருக்கும்கூட இந்த நிலை ஒரு கட்டத்தில் வந்திருக்கும். மிகப் பிரபலமான அந்த நூலை எழுதும்போதுகூட இது போன்ற அசைவற்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்திச்செல்வது என்ற குழப்பத்தில் உறைந்திருக்கலாம்.

    இதற்கான பதிலும் நீங்கள் எழுதிய அந்த ஆரம்பப்பகுதியின் இறுதி வரிகளிலேயே உள்ளது என்பதே உண்மை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும் வகையில் இறுதிப்பகுதி அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

    கதைப் பயணத்திற்கும், வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள வேறுபாடு என்றால் அது, யதார்த்தமான வாழ்க்கையைப் போன்றல்லாமல் கதையில் காரணமில்லாமல் காரியங்கள் இருக்கவியலாது. அதாவது, கதையின் ஒவ்வொரு அசைவிற்கும், திருப்பங்களுக்கும் தெளிவான காரணங்களை வாசகர்கள் முன் படைக்க வேண்டியது அவசியம். ஒரு மொட்டு மலர்ந்து மலராவதைக் குறிக்கும் முன்பு மண்ணில் ஊனும் விதையினையும், அது துளிர்விடும் காட்சியையும் தெளிவாக வாசகர்கள் முன் படைக்க வேண்டியது அவசியம். அதேபோன்று அது மலரவும், பசுமையாய் மணம் பரப்பவும் உரமாய் இருக்கும் அந்த உன்னதத்தையும் வெளிப்படுத்தவேண்டும். அதோடு அப்பயிரை வளர விடாமல் தடையேற்படுத்தும் களைகள், சூழல்கள் என அனைத்துக் கோணங்களையும் ஆழ்ந்து நோக்கி அளவாக விளக்கம் தரவும் வேண்டும். படைப்பிலக்கியம் என்பதே கற்பனைகளை சற்றே விரிவாக்கி கருத்துகளை உள்வாங்கி, அதனை உணர்வுப்பூர்வமாகவும், சற்றே மிகைப்படுத்தப்பட்ட வடிவிலும் வழங்கக்கூடியதாகும். அதாவது வாழ்வின் யதார்த்தங்களை, சம்பவங்களை அது இயல்பாகவே இருக்கும்வகையில் மிகைப்படுத்திச் சொல்வதிலேயே ஒரு கதைச்சொல்லியின் வல்லமை அடங்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான படைப்புகள் எனும்போது அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தாத வகையில் பக்குவமாகச் சொல்லவேண்டிய பொறுப்பும் கூடிவிடுகிறது. திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவோ (ஃபிளாஷ் பேக்) அல்லது நேரிடையான முன் நகர்த்தலோ, கதை மாந்தரின் குணாதிசயங்களுக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லக்கூடியதோ எதுவாயினும் உங்களுடைய ஆரம்பப் பகுதியின் அடிப்படையிலேயே தொய்வின்றி தொடர வேண்டியதாகும்.

    கதையின் மத்திய பகுதியின் ஆரம்பம் உங்களுடைய மொத்த கவனத்தையும் உள்ளடக்கியதாகவும், கற்பனைச் சிறகை விரிக்கும் தளமாகவும், கருவின் ஆழ்ந்த கருத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் அமைவது சிறப்பு. உதாரணமாக,
    “ஆண்டவருக்கு அனுதினமும், ஆகம முறைப்படி பூசைகள் செய்துவந்த சிவ கோசரியார் அவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இறைவன் மீதிருந்த இறைச்சியையெல்லாம் நீக்கி சுத்தம் செய்து பூசை செய்துவிட்டு, மனம் நொந்து புலம்பலானார். ஆண்டவன் அன்று இரவு சிவ கோசரியார் கனவில் தோன்றி திண்ணனாரின் அன்பு வெளிப்பாட்டை அடுத்த நாள் காலை மரத்தின் பின்னால் மறைவாக நின்று கவனிக்கும்படி கூறி மறைந்தார்.”

    கண்ணப்ப நாயனாரின் வரலாற்றுக் கதையில், இப்பகுதியின் அடுத்து நடக்கப்போவதை ஆர்வமுடன் வாசிக்கத் தயங்கமாட்டார்கள். ஆன்மீகக் கதையோ, அறிவியல் கற்பனையோ அன்றி நவீனக் கதைகளோ எதுவாகினும் அடிப்படைக் கருத்தாக்கங்கள் சரியான கட்டமைப்பிற்கு வழியமைக்கும்.

    தொடருவோம்

    Share
  • 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடா?

    பவள சங்கரி

    தலையங்கம்

    2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து கொண்டு வருகின்றன. மத்திய வங்கி படிப்படியாக 2000 ரூபாயை நிறுத்த முடிவு செய்துள்ளதா என மக்கள் மனதில் ஐயம் தோன்றியுள்ளது. மத்திய வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அனுப்பப்படுவதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இன்று வங்கிகள் அளிக்கக்கூடிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மறு சுழற்சியில் வரக்கூடியவை மட்டுமே. மத்திய அரசின் ஆணைப்படி சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள் ஆகியவைகளில் பெருந்தொகைகளை செலுத்தினால் சட்டப் பிரச்சனையை சந்திக்க நேரும் என்பதால் அந்த 2000 ரூபாய் நோட்டுகளை தனி நபர்கள் வங்கியில் செலுத்தாமலே கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள். சில தவறான அணுகுமுறைகளால் அல்லது வங்கிகளுக்கு வருமானத்தைக் கூட்டுவதற்காக ஏடிஎம்களிலிருந்து 3 – 5 முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிப்பதால் சிறு சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துவது குறைந்து வருகிறது. இந்த ஏடிஎம்கள் சேவை புரிபவர்களால் (சர்வீஸ்மேன்) மிகவும் சுத்தமாகவும், எப்பொழுதும் பணம் நிரம்பியும் இருக்கும். ஆனால் வங்கிகளின் தவறான அணுகுமுறையால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏடிஎம்கள் குப்பை மேடாகக் காட்சியளிக்கின்றன. நாம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் இன்று பத்திற்கு ஐந்து ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இது போன்ற தவறான அணுகுமுறைகளே வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ளன. சுமாராக 50,000 ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனங்களே இதன் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் ஒரு முறை நிரப்பினால் அவைகள் சராசரியாக 4 நாட்களுக்கு வரும். ஆனால் தற்போது 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் வைப்பதால் தினசரி நிரப்பப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசும், மத்திய வங்கியும் சரியான கொள்கை முடிவையெடுத்து ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்குரிய கட்டுப்பாடுகளையும், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்குரிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் வங்கியிலிருந்து எடுக்கப்படும் தொகைக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் சில மாற்றங்கள் செய்தால் நம் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்பதில் ஐயமில்லை. சமீபத்திய செய்தியின்படி 200 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு மத்திய வங்கிக்கு மத்திய அரசின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சரியான நடைமுறையாக இருந்தாலும் மாற்று ஏற்பாடுகள் செய்வது அவசியம். உயர் மதிப்பு நோட்டுகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற கட்டுப்பாடுகள் கொண்டுவருவதாகவே தெரிகிறது. இவ்வாறு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்கும் விதத்தில் அரசின் செயல்பாடுகள் இருந்தால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும். அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பூண்டிலிருந்து போஃபார்ஸ் உதிரிப்பாகங்கள் வரை தரமற்ற பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்கலாமே.

    —————————————–

    Share
  • பிரதோஷம்

     

    ஆட வருகவே….
    ———————–

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)….கிரேசி மோகன்….!

    Share
  • சிற்றிதழ் என்றால் என்ன? அதன் வரையறைகள் யாவை ? அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    சிற்றிதழ் என்றால் என்ன? 
    அதன் வரையறைகள் யாவை ? 
    அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?
    ******************************************************

    சிற்றிதழ்கள் – 06
    ******************************

    20140135_1451187758253321_3907356523018521070_n

    ஈழத்துச் சிற்றிதழ்கள்
    ********************************************04MAY
    இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்

    கோப்பாய் சிவம்
    இலங்கையில்
    தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
    (1841-1984)

    ஒரு கையேடு
    கோப்பாய் – சிவம்

    ஆசிரியரின் பிற நூல்கள்
    கனவுப் பூக்கள் (புதுக்கவிதைகள்)
    (சௌமினி சிவம்)
    அன்னை பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
    நியாயமான போராட்டங்கள்.
    (ரூபா 5,000 பரிசுபெற்ற சிறுகதைத் தொகுதி)
    ********************************************
    அணிந்துரை

    பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்த்துறை
    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

    நூல்கள் எரிந்து போகின்ற ஒரு காலகட்டத்திலே வாழ்கின்ற நாம் எம்முடைய பல்வேறு நிலைப்பட்ட பல நாட்டுத் தரவுகளையும் செய்திகளையும் ஆவணப்படுத்தி வைப்பது முக்கியமான கடமையாகும்.

    எம்முடைய நாட்டிலே தோன்றிய தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியன பற்றி எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள அவற்றை நூலகங்லிலே அரும் பொருளகங்களிலே சேகரித்து வைக்க வேண்டும்.

    அவற்றைச் சேகரித்து வைக்க முடியாவிட்டாலும் அவை பற்றிய தகவல்களை ஒன்று திரட்டிச் சேர்ப்பதாவது பயன் தரும்.

    திரு. ப. சிவானந்த சர்மா (கோப்பாய்- சிவம்) இத்தகைய பயனுள்ள பணியினையே இந்நூல்; மூலமாகச் செய்துள்ளார்.

    1841ல் தொடங்கிய முதல் பத்திரிகையாகிய உதயதாரகை இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் பெருமையுடையது.

    அதன் பின்னர் முன்னூறுக்கு மேற்பட்.ட தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன.
    அவை பற்றிய விபரங்களையெல்லாம் ஒன்று திரட்டும் பணியினைக்; கோப்பாய் சிவம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

    அப்பணியின் விளைவாக வெளிவருதே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்னும் இந்த நூலாகும்.

    நூல் மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

    வெறுமனே பட்டியலை மட்டும் கொடுப்பதைவிட, குறிப்பிடத்தக்க சில பத்திரிகைகளைப் பற்றிய மேலோட்டமான கருத்துக்களை முதலாவது பகுதியில் ஆசிரியர் தருகின்றார்.

    1841ல் தொடங்கிய உதயதாரகை தொடக்கம் 1984ல் தொடங்கிய சுவர் வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியனவற்றின் மேலெழுந்தவாரியாக நோக்கி, அவற்றுள் விதந்து குறிப்பிடப்படவேண்டியனவற்றுக்குச் சுருக்கமான கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    வீரகேசரி ஆசிரியர் திரு ஆ. சிவநேசச் செல்வனும் தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதனும் இத்துறையிலே ஆராய்ச்சி செய்து முதுகலைமானிப் பட்டம் பெற்றுள்ளனர்.

    அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வுபூர்வமாகப் பல தரவுகளைக் கொண்டிருக்கின்றன.

    கோப்பாய் சிவம் அவர்களுடைய நூல் ஆய்வு நோக்குடையதல்ல. அது ஆய்வுக்குத் தரவாக அமையும் நூல் எனவே அது தமிழுலகுக்குப் பயனுடையது.

    நூலின் இரண்டாவது பகுதி 1984வரை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆண்டுவரிசைப்படி நிரைப்படுத்திய பட்டியலையுடையது.

    பத்திரிகையின் பெயர், ஆசிரியர் அல்லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர், முகவரி ஆரம்பித்த ஆண்டு ஆகிய விபரங்கைளைக் கொண்டதாக இப்பட்டியல் அமைகின்றது.

    ஈழத்துத் தமிழியல் ஆய்வு மாணவர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவவல்லது.

    எறக்குறைய 375 தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய விபரங்களைத் தேடிச் சேகரித்துப் பட்டியல் போட்டுத்தருவது இலகுவானகாரியமல்ல.

    பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளை அறிந்துகொள்வதிலே கஷ்டமிருக்காது.

    ஆனால், ஆசிரியரோ இந்நாட்டில் எழுந்த எந்த சிறிய பத்திகையையும் விடாது குறிப்பிடவேண்டும் என்னும் நோக்குடையவராக அமைகிறார்.

    எனினும், எங்களுக்கேயுரிய சில விசேட காரணங்களால் பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் முதலியவற்றிலிருந்து ஆண்டுதோறும் தனிப்பட்டவகையில் வெளியிடப்படும் சஞ்சிகைகளை இப்பட்டியலிலே சேர்த்துகொள்ளவில்லை.

    இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ள எல்லாப் பத்திரிகைகள். சஞ்சிகைகளின் பெயர்கள் அகரவரிசைப்படி அட்டவனைப்படுத்தி நூலின் மூன்றாவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

    இவருடைய தந்தையார் திரு. ச. பஞ்சாட்சர சர்மா மறுமலர்ச்சி தந்த ஓர் எழுத்தாளர்.

    கோப்பாய் – சிவம் பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் தன் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

    தந்தையார் பெயரையும் தன் பெயரையும். முன்வைத்த பத்திரிகைகள் சஞ்சிகைகளின் பெயர்களையும் முன்வைக்கவேண்டும் என்னும் ஒரு தார்மீகக்கடமையுடன் ஆசிரியர் இந்த நூலை அமைத்துள்ளார்.

    ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிப்போக்கிலே நினைவில் வைக்கவேண்டியவை என ஈழகேசரி, மறுமலர்ச்சி, கலைச் செல்வி ஆகிய மூன்று சஞ்சிகைகளைக்கூறி. அவை தென்னிந்தியாவிலே மணிக்கொடிக்காலம், சரஸ்வதி காலம் என்று கூறப்படுவதுபோல ஈழத்திலும் தமக்கென ஒவ்வொரு காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தில் பல புதுமைகள் புரட்சிகள் செய்து நினைவில் நிற்பவை என்று ஆசிரியர் பொருத்தமாகக் கூறியுள்ளார்.

    அதேவேளையில் மல்லிகை, சிரித்திரன் ஆகிய இதழ்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் கூறத்தவறவில்லை.

    தூய இலக்கியத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் என்று தொடர்ந்து நீண்ட காலமாக வெளிவரும் மல்லிகை சிரித்திரன் ஆகியவற்றின் வெற்றி நடை நம்மை இறும்பூதெய்வைக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    நூலகவியல் மாணவர்களே இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடுவது வழக்கம்.

    ஆனால், ஆக்க இலக்கியம் படைப்பவரான கோப்பாய் -சிவம் இம் முயற்;சியிலே ஈடுபட்டிருப்பது பராட்டுக்குரியதாகும்.

    உடனடி உசாவலுக்கென சில நூல்கள் நூலகத்திலே வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நூல்;களுள் இதுவும் ஒன்றாகும்.

    எங்கள் நாட்டுப் பத்திரிகைகளை சஞ்சிகைகளை நேரே பார்த்து விரிவான தகவல்களைப் பெறுவதற்கு முன்னர், அவை பற்றிய முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்நூல் நன்கு உதவும்.

    தமிழியல் மாணவர்களுக்கும் நூலகவியல் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க வகையிலே இந்நூலை ஆக்கி வெளியிடும் கோப்பாய் சிவம் அவர்களுக்கு தமிழ் உலகம் சார்பில் நன்றி கூறுகின்றேன்.

    பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
    தமிழ்த்துறை
    யாழ் பல்கலைக்கழகம்.

    ————————————————————-

    ஆக்கியோன் முன்னுரை

    கலை கலாச்சார, இலக்கிய வளர்ச்சிக்கும் விஞ்ஞான அறிவியற் தேவைகட்கும் பரஸ்பர அறிவு உணர்வுப் பரிமாறல்கட்கும் செய்திப் பரவல்களுக்கும் இணையற்ற சாதனங்களாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் இருந்து வருகின்றன.

    அவைபற்றிய ஆய்வு சுவையான ஒர் அனுபவமாகும் .

    தமிழ் நாட்டிலிருந்து இத்தகைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வுகள், பட்டியல்கள் பல நூல் வடிவில் வெளியாகியிருக்கின்றன.

    அவற்றுட் சிலநூல்களில் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சிலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    இலங்கையின் பத்திரிகைத் துறைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால வரலாறு இருக்கிற தெனினும், அத்துறையில் பூரணமான ஆய்வு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

    நான் அறிந்தவரையில் குரும்பசிட்டி கனகரத்தினம், ஆ.சிவநேசச்செல்வன், இ.சிவகுருநாதன், ச. பஞ்சாட்சரசர்மா ஆகியோர் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்ட சிலராவர்.
    முதலாமவர் இத்துறையில்; சுடர் சஞ்சிகையில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்.

    ஆ, சிவநேசச்செல்வன் இ.சிவகுருநாதன் இருவரும் இத்துறையில் ஆய்வுகள் சில மேற்கொண்டிருந்தனர்.

    எனது தந்தையாரான பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பல பத்திரிகைகள் – சஞ்சிகைகளை (மாதிரிப்பிரதிகளையாவது) சேகரித்து வந்ததுடன் பல தகவல்களையும் சேகரித்து வந்தார்.

    அவர் வழியில் இம்முயற்சியை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன்.

    1974 ஆம் ஆண்டில் இத்துறையில் இரு கட்டுரைகளை வானொலி மஞ்சரியில் வெளியிட்டிருந்தேன்.

    இதைத் தொடர்ந்து மலர் சஞ்சிகை பற்றிய விமர்சனத்தை இலங்கை வானொலி கலைக்கோலம் நிகழ்ச்சியிலும், மரகதம் பற்றிய விமர்சனக் கட்டுரையை தினகரன் பத்திரிகையிலும் தேன்மொழி, கற்பகம் ஆகியன பற்றிய கட்டுரைகளை மல்லிகையிலும் எழுதினேன்.

    ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரை அல்லது பட்டியல் தானும் இதுவரை நூல் வடிவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்தந்தையார் தேடித்தொகுத்து வைத்த தகவல்களுடன் படுத்திய பட்டியலை வெளியீட்டுக்குத்தயாராக வைத்திருந்தேன்.

    இருந்த போதும் இப்பட்டியல் பூரணமானதா என்ற ஐயப்பாட்டினாலும் மேலும் தகவல்களைச் சேகரிக்கும் ஆவல் காரணமாகவும், பிரசுரவசதிகள் கிட்டாததனாலும் பல ஆண்டுகள் தாமதிக்க நேர்ந்தது.

    இன்று இத்தொகுப்;பை உங்கள் முன் சமர்ப்பிக்கும் துணிவை நான் அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இதனைப் பூரணப்படுத்துவதே நமது பார்வைக்குத் தட்டுப்படாமலும் கேள்விக்கு எட்டாலும் பல இதழ்கள் வெளிவந்திருக்கலாம்.

    மலையகத்திலும், மட்டுநகர், திருகோணமலை போன்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட பல இதழ்கள் நமது கேள்விக்கு எட்டாமலே இருந்திருக்கலாம்.

    மேலும் இலங்கைப் பத்திரிகைத் துறையில் விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இச்சிறு நூல் ஒரு முதல் நூலாக அமையும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    இந்நூலை வெளியிடுவதற்கேற்றவகையில் எனக்கு உதவியும் உற்சாகமும் ஊட்டிய எனது மேலதிகாரி கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணியாளார் திரு. ம. சபாரத்தினம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

    என்னோடு முன்னர் நேரடி பழக்கமெதும் இல்லாமல் இருந்தும் கூட நான் போய்; கேட்டவுடன் இந்நூலுக்குப் பொருத்தமான ஒரு அணிந்துரையை இன்முகத்துடன் உவந்தளித்த பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

    பல இதழ்களைப் பற்றிய தகவல்களை எனக்குக் கிடைக்கச் செய்த எழுத்தாளர் திருவாளர் மயிலங்கூடலூர் நடராஐன் அவர்களுக்கும் இந்நூலை உருவாக்கும் போது வேண்டிய ஆலோசனைகள் வழங்கி உருவமைப்புக்கொடுத்த திரு. பா. பாலசண்முகநாதன் அவர்களுக்கும் அழகுற அச்சேற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் ஊழியர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் உரித்தாகுக.

    கோப்பாய் சிவம்
    பிரதிப்பணிப்பாளர் பணிமனை,
    நீர்ப்பாசனத் திணைக்களம்,
    கிளிநொச்சி.

    இதழ்கள் இன்னும் விரியும்….

    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    21/07/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (1)

     

     

    ”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
    (எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
    கன்றுண்ணும் கோவிந்தன், என்றும் புதியவர் (NEW FOR EVER)
    நன்றவர் தாளை நினை’’கிரேசி மோகன்….

    முரளி -வேணுகானம்

     

    Share
  • பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அறியாமையா?

    பவள சங்கரி

    நடந்து முடிந்துள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% மேலாக வாக்களித்து நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இவர்களில் 77 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லாத வாக்களித்துள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விசயம். இந்த 77 உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு 20,000 வாக்குகள். இந்த 20,000 வாக்குகள் என்பது பல இலட்சம் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கேலி செய்யும் விதமாகவே உள்ளது. தங்களுடைய முதலாவது, இரண்டாவது விருப்ப வாக்குகளை பதிவு செய்யாது இருந்தாலே அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த 77 உறுப்பினர்கள் கட்சி அபிமானத்தோடு தங்களுடைய வாக்குகளை பதிவு செய்திருந்தாலோ அல்லது அறியாமையால் செய்த தவறு என்றாலும் அது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு சம்பளமாக பல இலட்சங்களும், இதர செலவுகளுக்காக பல கோடிகளும் மக்கள் பணம் செலவு செய்யப்படுவது வருத்தத்திற்குரியது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் இதுபற்றி சரியான நடவடிக்கை எடுத்தால் அடுத்து வரப்போகும் பொதுத்தேர்தலுக்கு இது ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும்.

    Share
  • வாழ்த்தி வரவேற்போம்!

    பவள சங்கரி

    20-1500553226-ram-nath-kovind-26-1498438622

    குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்! எளிமைக்கும், தியாகத்திற்கும் அடையாளமாக விளங்கிய டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் , சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் சங்கர்தயாள் சர்மா போன்றவர்கள் குடியரசுத் தலைவர்களாக இருந்து நாட்டிற்கு தன்னலமிலாத் தொண்டளித்ததைப்போன்று கட்சிப்பாகுபாடின்றி, நம் இந்திய நாட்டிற்குரிய உயரிய மரபைக்காத்து மக்களுக்காகவே தாம் என்று பணியாற்ற நமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.

    பதவியில் இருந்தபோதும், பதவிக்காலம் முடிந்தபின்பும் மக்கள் மனதில் குடியரசுத் தலைவராகவே வாழ்ந்து மறைந்த மேதகு அப்துல் கலாம் போன்று எளிமையும், நேர்மையும், தன்னலமற்றும் சேவையாற்றவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்.

    Share
  • INDIA /IX – Observing an Ox, I reflect

     

    எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
    தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாகத் தங்கிவிடுவதல்ல.

    மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
    ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
    தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

    பூமியில்லா வானமும் இல்லை,
    வானமில்லா பூமியும் இல்லை.

    ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
    முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

    Share