”நீல யமுனையில் நீந்திய கோபியர்
சேலைப் புதையலை சேகரித்தோய்: -நாளை
சபையில் துரோபதை சோகம் களைந்து
அபயம் அளிக்கத்தா னே!”….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
படக்கவிதைப் போட்டி 119-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
சிரத்திலும் கரத்திலும் சுமையோடு பயணம் புறப்பட்டுவிட்ட இந்தத் தாயையும் உடன்வரும் சேயரையும் தன் படப்பெட்டிக்குள் நேயத்தோடு சுமந்துவந்திருப்பவர் திருமிகு. அனிதா சத்யம். இப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் பணிவான நன்றி!
வாழ்வெனும் நெடும்பயணத்தில் மனிதர்களுக்குத்தான் எத்தனை எத்தனை சுமைகள்! அவற்றில் சில சுகமானவை; பல இறக்கவும் துறக்கவும் இயலாக் க(டி)னமானவை. ஆயினும் பயணங்கள் தவிர்க்க இயலாதவை. சுமைகளோடும் கனவுகளோடும் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றிப்பயணமா, பயனற்ற வெற்றுப்பயணமா என்பதைக் காலமே தீர்மானிக்கின்றது.
கவிஞர்களின் சிந்தனையில் பூத்த கவிதை மலர்கள் அடுத்து அணிவகுக்கக் காத்திருக்கின்றன. அவற்றை வரவேற்போம்!
”சுமைகளே வாழ்க்கையாகிப் போனது பெண்களுக்கு. மற்றவர்களுக்காகவே சுமந்து கூன்விழுந்துபோன பெண்ணே! இனியேனும் உனக்காக வாழு! சுமைகளை உதறிச் சிறகுவிரித்துப் பறந்திடு!” என்று பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
சுமை தலையில் ஒரு சுமை!
இடையில் ஒரு சுமை!
இருந்தும் உன் மனதில் இல்லை என்றும் குறை!
பெண்ணாக பிறந்ததினால் சில வருடம்
பெற்றார், உற்றாரின் வசவுகளை நீ சுமந்தாய்!
அண்ணன், தம்பி மகிழ்ந்து விளையாட பெற்றோர்
அனுமதிக்க! நீ விளையாட அவர் மறுத்துரைக்க
ஏக்கத்தை நீ சுமந்தாய்!
படிக்கும் வயதில் தாலியைத் தான் சுமந்தாய்!
பிள்ளைகளை வயிற்றில் சுமந்தாய்!
குடும்ப நலத்தை மனதில் சுமந்தாய்!
உன் கனவுகளை நீ தொலைத்து குடும்பத்தை
வாழ வைத்தாய்!
சுமப்பதினால் இது வரை என்ன சுகம் கண்டாய்! ;
உன்னை சுமக்க வைக்க மற்றவர்கள் சொல்லும்
பொய்களை நம்பியது போதும் பெண்ணே!
மற்றவர்களுக்காய் நீ சுமந்தது போதும் பெண்ணே!
உன் இரக்கத்தை ஏணியாக்கி ஆண்கள்
ஏறிச் சென்றது போதும் பெண்ணே!
இனியாவது புதுமைப் பெண்ணே !
உன் எண்ணச் சிறகுகளை விரித்து பறந்திடு !
இனிய வாழ்க்கையை என்றும் வாழ்ந்திடு !***
”தன்னம்பிக்கை எனும் பிடிமானமே எங்கள் வருமானம்; பகுத்துண்டு வாழ்தலே எங்களுக்கு வெகுமானம். உழைத்து வாழ்கின்றோம்; பிறர் உழைப்பில் வாழ்வதில்லை” என்று தன்மான வார்த்தைகளைத் தலைநிமிர்த்தி உச்சரிக்கும் பெண்மணியைத் தன் கவிதையில் உலவவிட்டிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
உழைப்பே எங்கள் உடன்பிறப்பு
அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
….பக்குவமாய் உழைத்து வாழ்வோர் உதாரணமாவோம்.!***
பள்ளிச் சீருடைகளிலும் ரிப்பன்களிலும் மட்டுமே காணக்கிடைக்கின்ற சமத்துவம் சமூகத்தில் ஏனோ சீர்கெட்டுப்போயிருக்கின்றது. ரிப்பன் கட்டிய சிறுமியாய்த் தொடங்கும் பெண்ணின் வாழ்க்கை, நடை தளர்ந்து, நரை வளர்ந்து, முதியவளாய் அவள் மாறியபின், (பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு) முதியோர் இல்லத்தில் முற்றுப்பெறுவதை உணர்வுபூர்வமாய் விவரிக்கின்றார் திரு. கா. முருகேசன்.
நிழல்!
தலை நிறைய மூட்டை,
சின்னஞ்சிறு மழலைகளின் சிரிப்பு,
நடக்க நல்ல ஒரு மணல் பரப்பு!
வெயிலின் பிரதிபலிப்பால்
அவர்களை விட்டு பிரியாது தொடரும்
நிழல்!முடி நரைத்தாலும் மூட்டை தூக்குவதில்
சலிப்பில்லாத முதுமை!பள்ளிகூடங்களில் மட்டும் சமத்துவம் என்பது,
இல்லாதிருந்தால் நாம் மறந்திருப்போம்,
ரிப்பன் கட்டும் பழக்கத்தை!
பெண்களின் அழகை
சீர்தூக்கி நிறுத்தும் ரிப்பன் இப்போது,
பல கொடிகளின் வண்ணங்களாய்
மிளிர்கிறது!
பள்ளிக்கூடங்கள் திணறுகின்றன,
எந்த வண்ணத்தை தீர்மானிக்க என்று!இரட்டைச் சடையும்,
ஒற்றைச் சடையுமாய் வளர்ந்து
முதுமையடைகிறாள் பெண்!முதுமை என்றதும் நினைவுக்கு வருவது
மீன் குழம்பும், கத்தரிக்காய் கூட்டும்!
அப்போது!
இப்போது!
முதுமை என்றதும் நினைவுக்கு வருகிறது
முதியோர் இல்லம்!கூன் விழாத முதுகுத்தண்டு சொல்லும்
அவள் உழைப்பை!
நரைத்த முடிகள் சொல்லும்
அவள் கஷ்டத்தை!
தன் மகனும், மகளும் படிக்க,
வயல் தோட்டங்கள், தொழில் கூடங்கள் என
உழைப்பிற்காக நடந்த நடையைச் சொல்லும்
அவளின் செருப்பில்லாத பாதங்கள்!
குழந்தைகளை நிழல் போல் காக்கிறாள்!
நிலத்தில் விழுந்து விடக்கூடாதென்று!எல்லாவற்றையும் கடந்து உழைக்கிறாள்!
என் மகன், மகள் கஷ்டப்படக்கூடாதென்பதற்காக!ஆனால், அவர்களோ!
முதுமையின் முதுமையாய் முதிர்ந்தவர்களை,
விடுகின்றனர் முதியோர் இல்லத்தில்!இந்த உலகத்தில் முதுமைக்கு
விலையில்லாத விலைமதிக்கத்தக்க ஒன்று,
ஒரு வேளை சோற்றை விடவும் உயர்ந்தது!
மொழி கடந்து, சொல் கடந்து,
அந்த மௌனச்சிரிப்பினால்,
முதுமையின் கன்னத்தை வருடும்
பேரன் பேத்திகளின் ஸ்பரிசம் ஒன்றுதான்!
அது கிடைக்காதா! என்று
ஏங்குகிறாள் முதியோர் இல்லத்தில்!முதுமை நினைத்துப்பார்க்கிறது!
என்றும் உங்களின் நிழலாக இருக்கிறேனே
நான்!உங்களைப் படிக்க வைத்தேன்
படித்தும் புரியவில்லையே!
நிழலைப் பிரிக்கமுடியாது என்று!
என் குழந்தைகளுக்கு!கடவுளே என் மகனும் மகளும்
நன்றாக இருக்க வேண்டும்!
நான் மறைந்தாலும் அவர்களுக்கு
நிழலாக!***
முதுமை மேற்கொண்ட நடைப்பயணம் கண்டு மனங்கசிந்து, மடைதிறந்த வெள்ளமெனக் கவிமழை பொழிந்திருக்கின்றனர் நம் வித்தகக் கவிஞர்கள். அவர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்கள்!***
மனித வாழ்வுக்குத் தேவை ’இலக்கு’ என்பது பெரியோர் வாக்கு. ’குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்று ஞானச் செல்வரான அப்பர்கூட மொழிந்திருக்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வுக்கு உகந்த இலக்கினை அமைப்பதும், அதனை வெற்றிகரமாய்ச் சென்றடைவதும் அத்தனை இலகுவன்று என்பதே உண்மை!
மதுஅரக்கனின் பிடியில் சிக்கி மனைவியை நட்டாற்றில் தவிக்கவிடும் மணாளர்களுக்குப் பஞ்சமில்லை நம் தாய்த்தமிழ் நாட்டிலே!
கட்டியவனைப் பறிகொடுத்த காரிகையொருத்தி, சுட்டெரிக்கும் வெயிலில், பட்டமரமெனப் பிஞ்சுக் குழந்தைகளோடு நடந்துசெல்லும் இலக்கற்ற பயணத்தைக் காட்சிப்படுத்தியுள்ள கவிதையொன்று நெஞ்சைச் சுடுகின்றது!
இலக்குகள்…
போகுமிடம்
மதுக்கடை மட்டும்
தெரிந்தவன்
போய்ச் சேர்ந்தான்,
பெண்டாட்டி பிள்ளைகளைத்
தெருவில்
திண்டாட விட்டு…புறப்பட்டுவிட்டார்கள்
இவர்கள் இப்போது,
பிழைப்புத் தேடி-
போகுமிடம் எதுவென்ற
இலக்குத் தெரியாமலே…!சிறிய கவிதையில் நடப்பியலைச் சிறப்பாய்க் கூறியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு”….கிரேசி மோகன்….!’’உந்த எதுகை, உருவாக மோனைகள்,
வந்ததே வெண்பா விதவிதமாய், -அந்தக்,
குழலினிது யாழினிது என்போர்கள், கண்ணன்,
மழலைச்சொல் கேளாத தவர்’’….கிரேசி மோகன்…. -
INDIA / VIII – The transcending eye
கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரிகண்களைக் கடந்து
ஓ ஒளியே, மெய்மையில் சுடர்மிகும் ஒளி நீயே.
சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.நாளுக்கு நாளும்
இரவின் பின் இரவும்
ஓ ஒளியே, பிரார்த்தனையில்
உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
மலர்கிறாய் நீ.உறுதியாய் நித்தியத்திற்காய்
மலரும் மணமிகு தாமரையாய்
ஆகிவிட்டாய் நீ. -
கறுப்பு
இன்னம்பூரான்
ஜூலை 14, 2917
கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் சேர்ந்த போது, ‘தணிக்கைக்கு அப்பாற்பட்டவை, கிட்ட வராதீர்கள்’ என்று கதறினார்கள்; எங்களை உதறினார்கள்; அலறினார்கள். விடாக்கொண்டன், தொடாக்கொண்டன் கதை தான். எங்கள் துறை முள்ளை முள்ளால் எடுத்தது. பிறகு என்ன? ‘அம்புட்டுக்கொண்டான் தும்மட்டிக்காய் பட்டர்’ கதை தான்.
வருமானவரி விதிமுறைகள் பாலைத்திணை போல் கரடு முரடானவை. ஏமாற்றுபவனைக் காப்பாற்றி, ஏமாந்தவனைத் தூக்கில் போடக்கூடிய சாமர்த்தியம் உள்ள அதிகாரிகள் அந்த இலாக்காவை ஆட்டிப்படைத்ததும் உண்டு. தற்காலம் விதிகள் புரியக்கூடியவை; எளிய மொழி கையாளப்படுகிறது. தண்டனைகளும் அக்கு வேறு, ஆணி வேறாக, கூவிக்கூவிப் பிரகடனம் செய்யப்படுகின்றன. தப்புத்தவறு செய்யும் அதிகாரிகள்,வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் செம்மையாக மாட்டிக்கொள்கிறார்கள். எங்கள் துறையின் பளு குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்!
இன்றைய செய்தி:
என் வங்கிக்கணக்கில் என்னுடைய ஊதியத்திற்கு மேல் எக்கச்சக்கமாக வரவு வைக்கப்பட்டிருந்தால், அது எப்படி என்று வருமான வரி இலாக்கா விசாரிப்பது அவர்கள் கடமை. நவம்பர் 9, 2016க்கு பிறகு 5.56 லக்ஷம் ஆசாமிகள் அந்த மாதிரி பினாமியாக இயங்கி, கோக்குமாக்கு செய்துள்ளார்கள். அவர்கள் மீது கேள்விக்கணை பாய்கிறது. இது இரண்டாவது கட்டம்.
முதல் கட்டத்தில், தன்னுடைய பற்பல வங்கிக்கணக்குகளைப் பற்றி மெளனம் சாதித்தவர்கள் 1.04 லக்ஷம் நபர்கள். தடபுடலாக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் லக்ஷக்கணக்கில் வங்கியில் வரவு வைத்தவர்கள் 17.92 லக்ஷம் நபர்கள். அவர்களில் 9.72 லக்ஷம் நபர்கள் மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளார்கள். வருமான வரி இலாக்காவும் https://incometaxindiaefiling.gov.in. மூலம் தங்களை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கலாம். வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட தேவையும் இன்றி வரி செலுத்துவோர் ஆன்லைன் விளக்கத்தைச் சமர்ப்பிக்க முடியும். அகப்பட்டுக்கொண்ட தும்மட்டிக்காய் பட்டர்கள் எல்லாருக்கும்
எஸ்எம்எஸ் மூலம் தாக்கீது அனுப்பப்படும். 2 லக்ஷம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் வைப்புத்தொகை தகவல் அவர்கள் தெரிவிக்கவேண்டும் என்று ஆணை.
சுருங்கச்சொல்லின்: உண்மை விளம்புக.
-#-
படித்தது: நாளைய ஹிந்து இதழ்.
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Flag_of_Afghanistan_%281880–1901%29.svg/1200px-Flag_of_Afghanistan_%281880–1901%29.svg.png
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
-
படக்கவிதைப் போட்டி (120)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
-
நலம் .. நலமறிய ஆவல் (64)
நிர்மலா ராகவன்
விழு-அழு-எழு
முன்பு, என் பக்கத்து வீட்டு மலாய்க்காரப் பெண் சாயங்கால வேளைகளில் எங்கள் வீட்டுக்கு அவளுடைய கைக்குழந்தையுடன் வந்து, என்னுடன் பேசிக்கொண்டிருப்பாள்.
“எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது,” என்று ஆரம்பித்தவள், “குழந்தையின் குரல் ஆண்பிள்ளைகளுடையதுபோல் கட்டையாக இல்லையே!” என்றாள். அவளுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
“மூன்று மாதம்தானே ஆகிறது! பையனோ, பெண்ணோ, எல்லாக் குழந்தைகளுக்கும் குரல் கீச்சு மூச்சென்றுதான் இருக்கும். தானே பதினான்கு வயதானால் ஆண்பிள்ளைகளின் குரல் உடைந்துவிடும்,” என்று சமாதானப்படுத்தினேன்.
““நிஜமாகத்தானே சொல்கிறீர்கள்? நான் ரொம்ப பயந்துவிட்டேன்!” என்று, திரும்பத் திரும்ப அதையே நான் சொல்லும்படி கேட்டுக்கொண்டாள்!
ஆண்பிள்ளை என்றால் கட்டைக்குரலுடன், யாருக்கும் படியாத முரடனாக இருக்க வேண்டுமா, என்ன?
`வீரம்’ என்றால் மீசையை முறுக்குவது, சிறு காரணத்திற்கெல்லாம் பிறரை அடித்து உதைப்பது, சட்டையின் பின்புறத்திலிருந்து அரிவாளை உருவுவது என்பதெல்லாம் தமிழ்ப்படங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதிகாரத்தால் பிறரை பயப்பட வைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் உண்மையான அன்போ, மரியாதையோ கிடைக்குமா?
மூன்று, நான்கு வயதுக் குழந்தை அழுதால்கூட, “ஐயையே! வெக்கமேயில்லே. ஆம்பளை அழலாமா?” என்று கேலி செய்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் ஆண்மையின் லட்சணம் என்று சிறு வயதிலேயே உணர்த்திவிடுகிறார்கள்.
அதனால், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளும்போது, `அழுதால் பிறர் கேலி செய்வார்களே!’ என்று பயந்து, அதை அடக்கிக்கொள்வார்கள். எதையும் பொறுத்துப்போவதும் உண்டு. அது தவறு.
கதை
ஐந்து வயதுக்குள் இருக்கும் அவனுக்கு. எப்போதும் அழுவான். அப்படி என்ன வருத்தம் அவனுக்கு?
தாத்தா காரணமில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பார். மரியாதை கருதி, அவனைப் பெற்றவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில், அந்த வீட்டில் தாத்தா வைத்ததுதான் சட்டம். அப்படி ஒரு சர்வாதிகாரம்.
உறவினர்கள் அச்சிறுவனுக்குக் கொண்டுகொடுக்கும் விளையாட்டுச் சாமான்களை உடனே பிடுங்கி, அவனுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவார்கள். உடனே உடைத்துவிடுவானே! `என்ன கொண்டு வந்தார்கள்?’ என்று வம்படிக்க வரும் அக்கம்பக்கத்தினருக்கு உடைந்த சாமான்களையா காட்டுவது?
தான் யாருக்குமே ஒரு பொருட்டாக இல்லையே என்ற ஏமாற்றத்துடன், வாயைத் திறந்தாலே மிக உரக்கத்தான் பேசுவான் சிறுவன். இல்லாவிடில், அழுதுகொண்டே இருப்பான். நல்ல வேளை, எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருந்ததால், நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
இப்போது, உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனம் ஒன்றில் தலைமைப் பதவியில் இருக்கிறான். சிறு வயதில் அவனை அறிந்தவர்கள், `இவன் எப்படி இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்தான்!’ என்று வியப்படையும் அளவுக்கு ஒரு வளர்ச்சி. பொறுமையும் நிதானமும் அவன் குணமாகிவிட்டது.
இளமையில் எவ்வளவோ கஷ்டப்பட்டபோதும், அவ்வப்போது அழுது அவைகள் தன்னைப் பாதிக்க விடவில்லை அவன். அத்துடன், பிற மனிதர்களின் குணமும் புரிந்துபோயிற்று.
ஆண் என்றால் அதிகாரம்
ஆண் என்பவன் எந்த நிலையிலும் உறுதி படைத்தவனாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதியால் ஒருவரின் மன அழுத்தம்தான் அதிகரிக்கிறது. வளர்ந்த பின்னரும், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது இருப்பவர் ஆண்மை மிகுந்தவராக இருக்கிறார் என்று பிறரை நினைக்க வைக்க முயலுகிறார்கள். தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களோ?
அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பவர்கள் வீட்டில் தம் அதிகாரத்தைக் காட்டி ஆறுதல் தேடிக்கொள்வார்கள். இவர்களைப் போன்றவர்கள் பெண்கள் தம்மைவிட உயர்ந்த நிலையில் இருந்தால் பலவீனமாக உணர்வார்கள். தம் அதிகாரத்தை மறைமுகமாக அவர்கள்மேல் செலுத்துவார்கள். மட்டம் தட்டவும் தயங்குவதில்லை.
`ஆண்’ என்றாலே அதிகாரம் என்று எளியவர்களை ஆட்டிப்படைக்கும் குணம் எப்படி வருகிறது?
முன்காலத்தில், ஒருவயதுக்குட்பட்ட பெண்களைவிட ஆண்குழந்தைகளே அதிகமாக இறக்க, அவர்களது உடல் நிலையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம். `பெற்றோரும் உற்றாரும் தம்மீது பாசத்தைப் பொழிகிறார்களே, தாம் உயர்த்தி என்பதால்தானே!’ என்ற எண்ணம் ஆண்களுக்கு அப்படி ஏற்பட்டிருக்கலாம். ஹார்மோனால் கூடுதலான உடல் வலிமைவேறு!
(இப்போதும், முதுமையில் பெண்களைவிட ஆண்கள்தாம் சில வருடங்கள் முன்னரே இறக்கிறார்கள். பெண்கள் அவ்வப்போது அழுது தம் மனக்கவலைகளைத் தீர்த்துக்கொள்வதும் ஒரு காரணம்).
`தவறு செய்துவிடுவோமோ!’ என்று பயந்து எதுவுமே செய்யாதிருப்பவரும் இல்லாமலில்லை.
ஒரு வேலைக்கான பேட்டிக்கு வந்த பட்டதாரியிடம் கேட்கப்பட்ட கேள்வி: “சம்பளம் கிடைத்தால், என்ன செய்வாய்?”
“வங்கியில் போடுவேன்!”
அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை. புதிதாக எதையாவது கற்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமோ, தைரியமோ இல்லையே!
பிறர் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று எதிர்பாராது, `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் பொறுப்பாக இறங்குபவர்கள்தாம் முன்னேறுகிறார்கள்.
சோம்பலுக்கு இடங்கொடேல்
மிகுந்த பிரயாசையுடன் மலையேறுகிறார்களே சிலர், ஏன்? கடினமாக உழைப்பதே நாம் எதிலும் தோல்வி அடையாது இருக்கும் வழி என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.
ஒரு கடினமான முயற்சியில் ஈடுபடும்போது எவ்வளவோ வேண்டாத விமரிசனங்கள், இன்னல்கள் எழலாம். சில சமயங்களில், அபாயங்களும் இருக்கக்கூடும். அவை நிகழும்போது சற்று மனம் தளர்ந்தாலும், கீழே விழுந்து மீண்டும் எழுந்திருப்பதுபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், முன்பு இருந்ததைவிட உயரத்தில் இருப்பதைக் காண்போம். மனமும் உறுதி பெற்றிருக்கும்.
“ஆண்மை என்றால் தனிமையை விரும்புவது, அலட்டலாக நடந்துகொள்வது என்பதில்லை. சரியென்று நமக்குப்பட்டதை, விளைவு என்ன ஆகுமோ என்று யோசிக்காது, துணிச்சலுடன் செய்வது”. (மகாத்மா காந்தி)
உடல் வன்மை இருக்கிறதோ, இல்லையோ, அறிவு, ஒழுக்கம், கடமை உணர்ச்சி எல்லாவற்றிலும் சிறந்திருப்பவர்களே மரியாதைக்கு ஏற்றவராகக் ஏற்கப்படுகிறார்கள்.
கதை
தமிழ்நாட்டில் ஓரிடத்தில் பெண்பார்க்க என்னையும் அழைத்துப்போனார்கள் உறவினர்கள், என் மறுப்பை லட்சியம் செய்யாது.
`நான் மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்!’ என்று திரும்பத் திரும்ப என்னிடம் கூறினார் பெண்ணின் தந்தை.
அவர் வீட்டில் அவ்வளவாக வசதி இருக்கவில்லை. ஆனால் தன் சுகத்துக்காக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காது இருந்த தந்தை! கணவரின் போக்கில் குறுக்கிடாது, அவருக்குப் பக்கபலமாக இருந்த தாய். இவர்களிடம் வளர்ந்த பெண்ணும் அப்படித்தானே இருப்பாள் என்று நாங்கள் நினைத்தது வீண்போகவில்லை. எங்கள் குடும்பத்தில் ஓரங்கமாகி, எல்லாருடைய பாராட்டையும் பெற்றுவிட்டாள் அப்பெண்.
சிறு பிராயத்தில் உலகமே தன்னைச் சுற்றித்தான் இயங்குகிறது என்ற எண்ணம் இயற்கையாக எழுவது. வளர்ந்தபின்னும் அப்படியே இருந்தால் அது அழகல்ல. எப்போது, எதிலும், தான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால் நடக்கிற காரியமா!
பிறரை அடித்துப்பிடித்துக்கொண்டு முந்தாமல், விட்டுக்கொடுத்து, வெற்றியடைந்தால் அதற்காக தோல்வி அடைந்தவரை ஏளனமாகக் கருதாது இருப்பவர்களை ஜெண்டில்மேன் (gentleman) என்று குறிப்பிடுகிறோம். இவர்களே மாறுபட்டவர்களையும் புரிந்துகொள்ளும் சூட்சுமம் நிறைந்தவர்கள்.
பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுவிட்ட நடிகரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “நீங்கள் தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”
தொண்ணூறு வயதான அவரது பதில்: அப்படி நினைத்தால், அன்றே நான் இறந்துவிடுவது நல்லது!”
தொடருவோம்
-
கற்றல் ஒரு ஆற்றல் (86)
க. பாலசுப்பிரமணியன்
மறைமுகமான பாடத்திட்டத்தின் சில குறிக்கோள்கள் (Salient features of the Hidden curriculum)
வெளிப்படையான பாடத்திட்டங்களைக் காட்டிலும் மறைமுகமான பாடத்திட்டத்தின் குறிக்கோள்கள் மிக முக்கியமானவையாகவும் அவசியமானவைகளாகவும் அமைகின்றன. வெளிப்படையான பாடத்திட்டத்தில் ஒரு மாணவனுக்குத் தேவையான பல கற்றல் துறைகளின் (disciplines of learning) அறிமுகமும் அவைகளைச் சார்ந்த நல்லறிவும் திறனும் கிடைக்கின்றது. உதாரணமாக கணிதம், இயற்பியல், வேதியல் , பொருளாதாரம், சரித்திரம், புவியியல் போன்ற வாழ்க்கைக்கும் பிற்காலத் தொழில்களுக்கும் தேவையான அறிவும் பயிற்சிகளும் கிடைக்கின்றன. ஆனால் மறைமுக பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரியங்கள் பற்றிய அறிவு, சமுதாயக் கண்ணோட்டம் , சிந்திக்கும் திறன்கள், முடிவெடுக்கும் திறன்கள், அரசியல் மற்றும் அறிவியல் கண்ணோட்டங்கள், சமூகச் சீரமைப்பு, நாட்டு நலன், தேசீய பண்பாட்டுக் கண்ணோட்டங்கள் போன்ற பல அறிவு சால் திறன்கள் வெளிப்படுகின்றன. இவைகள் பாடத்திட்டங்களில் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், வெளிப்படைப் பாடத்திட்டங்களின் உள்நோக்காக அமைகின்றன
வாழ்க்கைக் கல்வி
கற்றலில் வாழ்க்கைக் கல்வி மிக முக்கியமான மற்றும் அவசியமான பங்கு வகிக்கின்றது. கல்வியின் முக்கிய நோக்கமே வாழ்க்கையை சீராகவும் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்கான திறன்களை வளர்ப்பதாகக் கருதப்படுகின்றது. எனவே, ஒரு மாணவன் அறிவில் எவ்வளவு சாலச் சிறந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையைத் திறனுடன் சமாளிப்பதற்கான அறிவினைப் பெற்றிருத்தல் மிக அவசியம்.
இதற்கான வித்துக்கள் இளமையில் பள்ளியின் ஆரம்ப நாட்கள் முதலிருந்தே விதைக்கப்படுகின்றன. இந்த வளரும் பருவத்தில் இளம் சிறார்களுக்கு தன்னைப் பற்றிய அறிவு (Self-concept) பெற்றுக்கொள்வதற்கான சூழ்நிலைகளை பள்ளிகளும் பெற்றோர்களும் உருவாக்க வேண்டும். இந்த நிலையில் அவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய கருத்துக்கள்:
- நான் யார்?
- என் உறவுகள் யார்?
- குடும்பம் என்றால் என்ன?
- என்னைச் சுற்றி அமைந்திருக்கும் சூழ்நிலைகள் என்ன?
- நான் என்னை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்?
- என்னைச் சார்ந்தவர்களிடமும் என்னோடு உறவாடுபவர்களிடமும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?
இது போன்ற கருத்துக்கள் தன்னறிவை உருவாக்குவதற்கும் தன்னைப் பற்றிய சரியான உணர்வுகளையும் சிந்தனைகளையும் ஏற்படுத்திக்கொள்ளுவதற்கும் ஏதுவாக இருக்கும்.
இதை அடுத்து இரண்டாவது படியாக அமைவது தன்னம்பிக்கை.(Self-confidence) வளரும் பருவத்தில் தன்னம்பிக்கையின் வித்துக்களை விதைத்தல் ஒரு வாழ்க்கைப் பயணத்திற்கு மிக அவசியமாகின்றது .தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றிக்கு ஆணிவேர். பல நேரங்களில் அதிக அளவில் கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கூட வாழ்க்கையில் சாதிக்க முடியாமல் தோல்வியுற்றோ அல்லது துவண்ட உள்ளதோடு இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்கு எதிர்மாறாக கல்வியில் சிறப்பாகச் சாதிக்காதவர்கள் கூட வாழ்க்கையில் சாதனைகள் புரிந்திருப்பதை பார்க்கின்றோம். இவர்கள் வாழ்க்கைக் கல்வியில் அதிகத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகின்றனர். பல நாடுகளில் இளம் பிராயம் முதற்கொண்டே மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய அறிவூட்டல்களையும் கைத்திறன்களையும் வளர்ப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கித் தருகின்றனர். இந்த தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழ்நிலைகளை சுமார் 7 அல்லது 8 வயது முதற் கொண்டே நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளை கற்றல் நேரங்களிலும் கற்றல் நடக்கும் இடங்களிலும் எவ்வாறு ஏற்படுத்தலாம்?
- மாணவர்களை கற்றலில் பங்குதாரர்களாக ஆக்கவேண்டும். ஏதோ ஒரு மலை உச்சியில் இருந்து அறிவு பெருகி ஓடி வந்து அவர்களை அடைவது போன்ற ஆணவப் போக்கை வகுப்பறைகளிலிருந்து நீக்கி கற்றலை அவர்களின் முயற்சியாகவும் அவர்களின் ஆக்க சக்தியின் பலனாகவும் ஆக்கும்பொழுது அந்தக் கருத்துக்களுடன் அவர்களுடைய சொந்தமும் உரிமையும் அதிகமாகின்றது (Ownership in learning ). அந்த நேரங்களில் கற்றல் ஒரு அனுபவ பூர்வமான நிகழ்வாக மாறி (Experiential Learning) சிறப்படைகின்றது
- கற்றல் நடக்கும் நேரத்தில் மாணவர்களை கருத்துக்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அவைகளை கேள்விக்கணைகளால் துளைத்தும். அவைகளை அலசி ஆராய்ந்தும், அவற்றிற்கு எதிர்மறையான கருத்துக்களால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று விவாதித்தும் தங்கள் ஆர்வங்களை பகிர்ந்துகொண்டும் பங்கேற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பல நேரங்களில் வகுப்பறைகளில் மாணவர்கள் வினாக்களை எழுப்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்கள் தங்களை சோதிப்பதாகவோ அல்லது ர்ப்பதாகவோ அல்லது விளையாட்டுத்தனமாக நேரத்தை வீணடிப்பதாகவோ கருதி உதாசீனப் படுத்தி விடுகின்றனர். இது ஒரு தவறான போக்காகும். வகுப்பறையின் நோக்கமே வினாக்களை எழுப்பி அதற்க்கான தகுந்த பதில்களையும் தீர்வுகளையும் காண்பதுவே. இதற்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்கின்றது என்று பொதுவாக எழுப்பப்படும் கேள்வி சில நேரங்களில் விவாதத்திற்கும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையானதாக இருந்தாலும் அவை மாணவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய சீரிய சிந்தனைத் திறன்களை வளர்ப்பதற்கு உதவுவதாகத் தெரியவில்லை.
- மூன்றாவதாக, ஒரு கோட்பாட்டையோ அல்லது கருத்தையோ சொல்லிக்கொடுக்கும் நேரங்களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரங்களிலும், ஆசிரியர்கள் மாற்றுக கருத்துக்களை வரவேற்க வேண்டும். அவை தவறான கருத்துக்களாக இருந்தாலும், அவற்றை ஒதுக்காமல், அவற்றை கண்டனம் செய்யாமல், அந்தக் கருத்துக்கு அந்த மாணவர் வந்த வழியையும் போக்கையும் விளக்கி தவறுகளை திருத்துதல் அவசியம். பெரும்பாலும் நமது பள்ளிகளில் இருக்கும் “சரியான விடை” என்ற ஒரு போக்கு காலம்தொட்டு நிரந்தரமாக பின் போற்றப்பட்டு வந்தாலும் போற்றத்தக்கதாக பல கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வினாக்களுக்கு கொடுக்கப்படும் மாற்று விடைகள், மாற்றுச் சிந்தனைகளின் வடிவங்கள், மாற்று வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு பாராட்ட தயக்கம் காட்டக் கூடாது. மாற்றுச் சிந்தனைகளும், மாற்றுக கருத்துக்களும் தான் புதிய உத்திகளுக்கும் புதிய கண்டுபிடிஉப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்குகின்றன.
“நான் என்னுடைய மாணவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்கள் கற்றுக்கொள்ளுவதற்கான சூழ்நிலைகளை மட்டும் ஏற்படுத்துகின்றேன் “ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(தொடரும்)
-
குறளின் கதிர்களாய்…(175)
செண்பக ஜெகதீசன்
புறத்துறுப் பெல்லா யெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு.
–திருக்குறள் –79(அன்புடைமை)
புதுக் கவிதையில்…
மனித உடலிலுள்ள
புறத்துறுப்புக்களால்
பயனேதுமில்லை,
அகத்துறுப்பாம்
அன்பு இல்லையெனில்…!
குறும்பாவில்…
அன்பெனும் அகவுறுப்பில்லையேல்,
மானிட உடலில்
புறவுறுப்புக்களால் பலனேதுமில்லை…!
மரபுக் கவிதையில்…
உயிருடன் மனிதன் உலவிடவே
உடலது கொண்ட அங்கங்கள்
வயிறு முதலா பற்பலவும்
வாய்த்தும் பலனாய் ஏதுமில்லை,
உயர்ந்த உண்மை அன்பதுதான்
உள்ளே உறுப்பாய் அமைந்தால்தான்
உயர்வது பெற்றிடும் உடலதுவே,
உண்மை இதுதான் உணர்வீரே…!
லிமரைக்கூ..
அகத்தினில் அன்புதான் அங்கமே,
அதுயிலாது புறவுறுப்புக்களால் பலனில்லை,
அவற்றால் வாழ்வினில் பங்கமே…!
கிராமிய பாணியில்…
அன்புவேணும் அன்புவேணும்
உள்ளத்தில அன்புவேணும்,
அதுதான் ஒடம்புல
உள்ளுறுப்பா அமயவேணும்..
அதுயில்லாம
வெளியவுள்ள உறுப்பெல்லாம்
உண்மயில உறுப்பில்ல,
அதுகளால பயனுமில்ல..
அதால,
அன்புவேணும் அன்புவேணும்
உள்ளத்தில அன்புவேணும்…!
-
இந்த வார வல்லமையாளர்! (231)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக Inter University Centre for Astronomy & Astrophysics (IUCAA),& Indian Institute of Science Education and Research (IISER) (புனே) ஆகிய அறிவியல் ஆய்வு மையங்களை சேர்ந்த இந்திய வானவியல் விஞ்ஞானிகள் டீமை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அவர்கள் பெயர்:
ஜாய்தீப் பாக்சி
சிஷிர் சங்காயன்
பிரகாஷ் சர்க்கார்
சோமக் ராய்சவுத்ரி
ஜோ ஜேக்கப்
ப்ரதிக் தபாடே(ஆங்கிலத்தில் Joydeep Bagchi, Shishir Sankhyayan, Prakash Sarkar, Somak Raychaudhury, Joe Jacob, Pratik Dabhade)
இந்த ஆறு விஞ்ஞானிகளும் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டத்தையே (கேலக்ஸி) கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயர் சூட்டியுள்ளனர். அதிலும் சரஸ்வதி கேல்க்ஸியானது சூப்பர்க்ளஸ்டர் எனப்படும் மிகப் பெரிய கேலக்சி வகையை சார்ந்தது.
சரஸ்வதி கேலக்ஸி பூமியில் இருந்து 400 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 60 கோடி ஒளியாண்டுகள் ஆகும். இதில் உள்ள நடசத்திரங்களின் எண்ணிக்கை (மூச்சை பிடித்துக்கொள்ளவும்) 20 லட்சம் ஆயிரம் கோடி.
பிரபஞ்சம் தோன்றி 1000 கோடி ஆண்டுகள் கழித்து சரஸ்வதி தோன்றியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது குறித்த நம் கணக்கீடுகளை சரஸ்வதியை ஆய்வதன் மூலம் மாற்றியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த மகத்தான சாதனையை செய்த இந்திய விஞ்ஞானிகளைப் பாராட்டி அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“பார்த்தன் பார்த்த விச்வருபத்தை, பார்வையற்ற திருதராஷ்டிரன் சார்பாக சஞ்சயனும் பார்த்தான் …. இதுதான் “குருட்டு அதிர்ஷ்டம் ” என்பதோ ….!கிரேசி மோகன் ….
Nellai Gomathi: அண்ணா நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் பாய்வதும் குருட்டு அதிர்ஷ்டம் தானே..சகோதரி கோமதி சஞ்சயன் கண்ணனின் விஸ்வரூபம் கண்டது
சத்சங்கத்தால் என்று சொல்லாமல் சொல்லி அடியேனுடைய திருதராஷ்டிரன் விழிகளுக்கு ‘’விடிகாலை வெளிச்சம்’’ அளித்தாள்….நன்றி சகோதரி….”நெல்லுக்குப் பாய்ச்சிய நீரோடி, கூடிவளர்,
புல்லுக்கும் பாயுமாப்போல், பாண்டவ, -வில்லுக்(கு),
இருட்டினைப் போக்க கிருட்டிணன் காட்டல்,(விஸ்வரூப தரிசனம்)
குருட்டதிர்ஷ்ட மல்லசத்சங் கம்’’….கிரேசி மோகன்… -
உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது
World’s Largest Lithium Ion Battery Banks
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++++++++
சூரிய மின்சக்தி சேமிக்க,
நூறு மெகாவாட் பேராற்றல் உடைய
ஓரரும் பெரும் மின்கலம்
தாரணியில் உருவாகி விட்டது
வாணிபப் படைப்புச் சாதனமாய் !
தட்டாம்பூச்சி போல் பறக்க
வானூர்திக்குப் பயன்படப் போகுது !
பரிதியின் சக்தியால் பறக்கும் !
எரி வாயு இல்லாமல் பறக்கும் !
பகலிலும் இரவிலும் பறக்கும் !
பசுமைப் புரட்சியில் உதித்தது !
பாதுகாப்பாய் இயங்குவது !
நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்
நான்கு காற்றாடி உந்துது !
பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
பரிதிச் சக்தி அளிக்கும் !
ஒற்றை விமானி ஓட்டுவது !
ஒருநாள் பறந்த ஊர்தி
இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
அட்லாண்டிக் கடலைக் கடந்து,
அகில உலகினைச் சுற்றி இறங்கியது !
நூறாண்டுக்கு முன் பறந்த
ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
வரலாற்று முதன்மை பெறுவது !+++++++++++++++++++++++
மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.
2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார். 2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலியாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார். 2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது 100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும். அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது. மீள்சுழற்சி கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும். நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும். மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன. அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது. 2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய் ஏறிவிடும் என்று ஊகிக்கப் படுகிறது.

மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் -அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும். எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது. லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட 20% கனல்சக்தி திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு. நேரோட்டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும். 2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன. சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.
சூரிய சக்தியில் மின்சேமிப்பியோடு இயங்கி ஒரு நாளில் உலகம் சுற்றிய முதல் வானூர்தி

(ஜூலை 8, 2010)
“மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.”
பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab)
“நான் இன்னும் காற்றில் மிதப்பது போல்தான் உணர்கிறேன். பூரிப்படைகிறேன் ! (சூரிய ஊர்திப் பறப்பு) ஓர் முக்கியப் படிக்கட்டு ! இப்போது நாங்கள் அதற்கு மேலும் போகலாம். நீண்ட காலப் பயணங்களிலும் முற்படலாம்.”
சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் (Swiss Pilot Andre Borschberg)
“எதிர்பார்த்ததை விடப் பயணத்தில் வெற்றி கிடைத்தது. நல்ல காலநிலை அமைந்திருப்பதற்கு எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவைப்பட்டது. தகுந்த காலநிலை விமானிக்கு அமைந்தது.”
கிளாடி நிக்கலியர் (Flight Director & Former Space Shuttle Astronaut)
வரலாற்று முதன்மை பெற்ற மனிதன் இயக்கும் சூரிய ஊர்தி
2010 ஜூலை 8 ஆம் தேதி முதன்முதல் சுவிஸ் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் சூரிய சக்தி இயக்கி நான்கு எஞ்சின்கள் உந்தும் வானவூர்தியை 26 மணிநேரங்கள் பகல் இரவாய் ஓட்டிப் பாதுகாப்பாய் ‘பேயெர்ன்’ விமான தளத்தில் (Payerne Airport, Swiss) இறக்கினார். 1903 இல் அமெரிக்காவில் முதன்முதல் ரைட் சகோதரர் தாம் தயாரித்த ஆகாய ஊர்தியில் பறந்தது போல் இதுவும் மனிதன் இயக்கிய முதல் சூரிய ஊர்தியாக வரலாற்றுப் பெருமை பெறுவது. எரிசக்தி எதுவும் இல்லாமல் இயற்கையான சூரிய சக்தியைப் பயன்படுத்தி மனிதன் ஓட்டிய முதல் வானவூர்தி. பேயெர்ன் விமானம் தளம் சுவிஸ் நாட்டின் தலைநகரம் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ. (30 மைல்) தூரத்தில் உள்ளது. ஊர்தியின் இறக்கைகள் மீது அமைத்திருந்த 12,000 பரிதிச் செல்கள் சூரிய சக்தியைச் சுழலும் நான்கு காற்றாடிகளுக்கு அளித்தன. ஊர்திக்கு உந்து சக்தி கொடுத்து வானத்தில் ஏற்றி இறக்கியவை அந்த நான்கு காற்றாடி மோட்டார்கள். ஒவ்வொன்றும் 10 குதிரைச் சக்தி (10 HP – 6 Kw Each) ஆற்றல் கொண்டது. சூரிய ஒளி மாலை வேளையில் மங்கியதும் சூரிய மின்கலன்கள் (Solar Cell Batteries) சேமித்திருந்த மின்னாற்றலை வான ஊர்தி பயன்படுத்திக் கொண்டது. வானில் ஊர்தி பறக்கும் போது அதன் உச்ச உயரம் 8700 மீடர் (28,500 அடி). வெகு நீளமான இறக்கைகளின் அகலம் : (63 மீடர்) 207 அடி.
சோதனைப் பயிற்சி முடிந்து விமானம் தளத்தில் இறங்கி அதிர்வோடு நிற்கப் போகும் போது, விமானம் பக்கவாட்டில் சாய்ந்து இறக்கைகள் முறியாமல் தாங்கிக் கொள்ள இருபுறமும் உதவி ஆட்கள் ஓடி வந்தனர்.இதற்கு முன்பு நாசா மற்றும் பிரிட்டன், சைனா போன்ற சில நாடுகள் சூரிய சக்தியில் ஓடும் மனிதரில்லா ஊர்திகளை ஏவிப் பயிற்சி சோதனைகள் புரிந்துள்ளன.. இதுவே சூரிய சக்தியில் மனிதன் இயக்கிய வானவூர்தியின் நீண்ட காலப் பயணம், உச்ச உயரப் பதிவுகளாகும். நான்கு காற்றாடி மின்சார மோட்டர்களை சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜெட்விமானப் படையைச் சேர்ந்த ஆன்ரே போர்ச்பெர்க் (Former Fighter Jet Pilot, Andre Borschberg) இயக்கிச் செலுத்திய வானவூர்தி இது. மேலும் ‘பரிதி உந்துசக்தி படைப்பு நிறுவகம்’ (Solar Impulse Deisgn Group) இடைவிட்டுப் பயணம் செய்த பல்வேறு பயிற்சி சோதனைகளைத்தான் இதுவரை நடத்தி வந்துள்ளது !
சூரிய உந்துசக்தி நிறுவகத்தை உருவாக்கி வான ஊர்திகளை டிசைன் செய்து சோதனை செய்து வருபவர் இருவர் : விமானி ஆன்ரே போர்ச்பெர்க் & அவரது விமானக் கூட்டாளி பெர்டிராண்டு பிக்கார்டு (Andre Borschberg & Fellow Aviator Bertrand Piccard). “மனிதன் இயக்கிய சூரிய சக்தி விமானம் இரவு முழுவதும் பறந்தது இதுவே முதல் முறை. அந்த நிமித்தமே எங்கள் குறிக்கோள் வெற்றி அடைந்ததை நிரூபித்தது. காலைப் பொழுது புலர்ந்ததும் எதிர்பார்த்தை மீறி, மின்கலன்களில் இன்னும் 3 மணிநேர மின்னாற்றல் சேமிப்பு மிஞ்சி இருந்தது. ஊர்தி தரையில் வந்திறங்கிய போதே உதய சூரியனிலிருந்து புதிய ஆற்றலைச் சேமிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்தோர் இராப் பகல் பயணத்தைத் தொடரும் எங்கள் ஆர்வம் நின்று விடவில்லை. ‘தொடர்ப் பயண நினைப்பிலிருந்தும்’ எங்களை எதுவும் தடுக்க வில்லை.” என்று பெர்டிராண்டு பிக்கார்டு (Aviator, Solar Impulse Design Lab) செய்தி நிருபருக்குக் கூறினார் ! அடுத்த குறிக்கோள் 2013 ஆண்டுக்குள் ஆற்றல் மிக்க ஒரு பரிதி சக்தி வானவூர்தியைப் படைத்து உலகத்தை ஒருமுறை சுற்றி வரப் போவதாகக் கூறினார்.
சூரிய உந்துசக்தி நிறுவகம் தயாரித்த வானவூர்தியின் சாதனைகள்
சூரிய உந்துசக்தி நிறுவகத்தின் அதிபர் ஆன்ரே போர்ச்பெர்க் (57 வயது) தானே விமானியாக இயக்கி 26 மணிநேரம் தொடர்ந்து ஓட்டிய வானவூர்தி அது ! திட்ட அதிகாரி பெர்டிராண்டு பிக்கார்டு 1999 இல் வாயு பலூன் ஊர்தியில் வெற்றிகரமாய் உலகம் சுற்றி வந்தவர். பிக்கார்டின் தந்தையார், பட்டனார் விமானப் பறப்பில் புதிய வரலாற்றைப் படைத்தவர். அந்த முன்னோடி மனித வானவூர்தியின் பெயர் : HB-SIA. பயணம் ஆரம்பித்த விமானத்தளம் : சுவிஸ் நாட்டின் தலைநகர் பெர்னிலிருந்து (Bern) 50 கி.மீ (30 மைல்) தூரத்தில் உள்ளது பயேர்ன் விமானத்தளம் (Payerne Airport). புறப்பட்ட தேதி : 2010 ஜூலை 7 காலை மணி : 06:51. கீழிறங்கிய தேதி : 2010 ஜூலை 8 காலை மணி : 09:00. ஏறிய உச்ச உயரம் : 8700 மீடர் (28540 அடி). பயணக் காலம் : 26 மணி 9 நிமிடம். பயேர்ன் விமானத் தளத்திலிருந்து மேலேறுவதற்கு முன்பு வானவூர்தி 14 மணிநேரம் சூரிய ஒளியில் மின்னாற்றலை முதலில் சேமித்தது. இது நான்கு காற்றாடி மோட்டர்களை இயக்கவும் இரவில் விமானம் பயணம் செய்யவும் தேவைப் பட்டது. 63 மீடர் (207 அடி) நீளமுள்ள விமானத்தின் இறக்கைகள் (Similar to A340 Airbus Wings Length) 12,000 சூரிய செல்களைத் தாங்கி இருந்தன. ஒவ்வொன்றும் 10 HP ஆற்றலுள்ள நான்கு மோட்டார்கள் காற்றாடிகளைச் சுற்றி ஊர்திக்கு உந்துசக்தி அளித்தன.
இரவு விமானத்தைக் கவ்விய போது உச்ச மட்டக் காற்றடிப்பு ஊர்தியை ஆட வைத்து சேமிக்கப்பட்ட மின்னாற்றலை வீணாக்கி விடும் என்றோர் அச்சம் குடிகொண்டது ! ஆனால் அதிட்ட வசமாக அப்படி ஒன்றும் நிகழவில்லை. சூரிய உந்துசக்தி நிறுவகத்தாரை முழு மூச்சாக ஊக்கிவித்த குறிக்கோள் : 1. பசுமைச் சக்தி மாசற்ற தூய சக்தி. 2. விலைமிக்க ஆயில் எரிசக்தியை விலக்குவது, சேமிப்பது. 3. பரிதியின் இயற்கைச் சக்தியை விமானத் துறை போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவது ! 2013–2014 ஆண்டுக்குள் அடுத்த சவால் சாதனையான அட்லாண்டிக் கடல் கடப்புப் பயணம், உலகச் சுற்றுப் பயணம் ஆகியவற்றில் முற்படுவர் என்று அறியப் படுகிறது. இந்த சூரிய ஊர்தித் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு (75 மில்லியன் ஈரோ) 95 மில்லியன் டாலராகும் ! ஊர்தியின் எடை ஒரு ஸ்கூட்டர் அல்லது சிறு காரின் எடை அளவில் (1600 கி.கிராம்) அமைக்கப் பட்டது.
2007 இல் சுவிஸ் சூரிய உந்துசக்தி நிறுவகப் பொறிநுணுக்கரால் டிசைன் செய்யப்பட்டு பல்வேறு மின்னியல், பொறியியல், விண்வெளி விமானத்துறை நிபுணரால் உருவானது. 12,000 மெலிந்த சூரிய செல்கள் 200 சதுர மீடர் பரப்பளவைக் கொண்டவை. அவை அனுப்பிய மின்னாற்றலைச் சேமித்த மின்கலன்கள் 400 கி.கிராம் எடையுள்ள லிதியம் – பாலிமர் (Lithium Polymer Batteries) இரசாயனம் கொண்டவை. ஒவ்வொரு மின்சார மோட்டாரில் (Electric Motor) 10 குதிரைச் சக்தி (6 Kw) ஆற்றல் உண்டானது. நான்கு மோட்டாரில் சுற்றும் காற்றாடியின் நீளம் : 3.5 மீடர் (12 அடி). அவை மெதுவாகச் சுற்றின. ஊர்தியின் நீளம் 72 அடி. இறக்கையின் அகலம் 208 அடி. உயரம் 21 அடி. இறக்கையின் பரப்பு 2200 சதுர அடி. மொத்த எடை 1.6 டன். தரையிலிருந்து ஏறும் வேகம் 22 mph. பறக்கும் வேகம் 43 mph. உச்ச வேகம் 75 mph. பயண உயரம் 27900 அடி (எவரெஸ்ட் உயரம்). உச்ச உயரம் 39000 அடி.
சுவிஸ் விமானத் தளத்திலிருந்து விமானக் கட்டுப்பாடு அரங்கத்திலிருந்து இராப் பகலாக விமானிக்கு உதவி செய்து வந்தனர். அவரது பணி ஊர்தி நேராக, மட்டமாகச் சீராக மணிக்கு 100 கி.மீ. (மணிக்கு 60 மைல்) வேகத்தை மிஞ்சாமல் பறக்கக் கண்காணித்து வருவது. உறக்கமின்றி ஓட்டும் விமானியை விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்கக் கட்டுப்பாட்டு அரங்கிலிருந்து பேசிக் கொண்டிருப்பது. ஊர்தி பறக்கும் போது 8000 மீடர் (27000 அடி) உயரத்தில் -28 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் சென்றாலும் பரிதிச் செல்கள் பாதிக்கப் பட வில்லை.
சூரிய சக்தி வானவூர்தின் முற்கால /எதிர்காலப் பயிற்சிச் சோதனைகள் :
1. 2007 மே 22 : பெர்டிராண்டு பிக்கார்டு நான்கு ஆண்டுகள் திட்டமிட்டு “சூரிய உந்துசக்தி” நிறுவகத்தைத் துவங்கி வைக்கிறார். அந்தத் திட்டப்படி சூரிய ஊர்தி உலகத்தை ஒருமுறை சுற்றி வருவதற்கு முன்பு அட்லாண்டிக் கடல் அகற்சியை ஒரே பயணத்தில் கடப்பது.
2. 2009 ஜூன் 26 : சுவிஸ் வட புறத்தே உள்ள டூபென்டார்ஃபு (Duebendorf) இராணுவ விமானத் தளத்தில் சூரிய சக்தி முன்னோடி ஊர்தி (Prototype Plane) கொண்டாட்ட விழா.
3. 2010 ஏப்ரல் 7 : சூரிய உந்துசக்தி நிறுவகம் 1.5 மணி நேரப் பயணச் சோதனை செய்தல்.
4. 2010 ஜூலை 7 : சூரிய ஊர்தி பயேர்ன் விமானத்தளத்தில் காலைப் பொழுதில் விமானி ஆன்ரே போர்ச்பெர்க் இயக்கி மேலேறி எங்கும் நிற்காது 26 மணிநேர ஒற்றை இராப் பகல் பயணத்தை ஆரம்பித்து வைத்தது.
5. 2010 ஜூலை 8 : சூரிய ஊர்தி 26 மணி நேரப் பயணத்தை முடித்துப் பாதுகாப்பாக பயேர்ன் விமானத் தளத்தில் வந்திறங்குகிறது. ஏறிய உச்ச உயரம் : கடல் மட்டத்துக்கு மேல் 8564 மீடர் (28540 அடி).
6. 2011 ஆண்டில் : இதே மாடல் சூரிய ஊர்தி (HB-SIB) நீண்ட தூர, நீண்ட காலப் பயிற்சியில் பல இராப் பகலாய் ஈடுபடுவது.
7. 2012 ஆண்டு வரை : ஊர்தி மாடல் HB-SIB விடப் பெரிய பரிதி ஊர்தியைப் படைத்து
விமானிக்கு நகரத் தேவையான இடமளித்து நீண்ட காலப் பயணத்துக்குப் புதுமை நுணுக்கங்களைப் புகுத்தி பளு குறைந்த, மெல்லிய சூரிய செல்களால் இயங்கும் திறன் மிக்க பறக்கும் சாதனமாய் அமைப்பது.8. 2013 -2014 : விருத்தியான பெரிய மாடலில் (Large & Improved HB-SIB) அட்லாண்டிக் கடலைக் கடப்பது, உலகத்தைச் சுற்றி வருவது.
+++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits : Swiss Solar Impulse Design & Other Web Sites
1. BBC News : Solar-powered Plane Lands Safely After 26 Hour Flight (July 8, 2010)
2. Swiss Solar Plane Makes History with Round-the-clock (Manned) Flight (July 8, 2010)
3. Aerospace – Solar Impulse Plane Packed with Technology (July 8, 2010)
4. BBC News – Science & Environment – Zephyr Solar Plane Set for Record Endurance Flight By: Jonathan Amos (July 14, 2010)
5. Wikipedia – Electric Aircraft – electric aircraft is an aircraft that runs on electric motors rather than internal combustion engines with electricity coming from fuel cells, solar cells, ultracapacitors, power beaming and/or batteries.
6. http://www.bbc.com/news/
world-australia-40527784 [July 7, 2017] 7. http://www.cnbc.com/2017/
07/07/tesla-largest-battery- system-in-the-world-elon-musk- says.html [July 7, 2017] 8. http://www.onenewspage.com/
video/20170707/8359018/Tesla- to-Build-World-Biggest- Battery-in.htm ******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) [July 15, 2017] [R-1]
-
“ஸ்ரீராம தர்ம சரிதம்” (1)
களிப்பில் கவனம் கரையா திருக்க
அளிப்பா(ய்) அகத்தி(ல்) அணுவின் துளியாய்
அமுதனாம் ராம(ன்) அருளின் ஒளியை !
குமுதமாய்க் கும்பிடுவேன் கொண்டு. (2)கொண்ட அறிவோ குறைவு, மனத்திலே
கொண்ட அளவோ குணராமன் கொண்ட
தருமத்தின் உச்ச தரத்தி னுயரம் !
குருசித்த மென்றிதைக் கொள். (3)கொள்வதும் தள்வதும் கூடியோர் ஞானத்தின்
உள்ளிருக்கும் ஆத்ம உபதேசம் – பிள்ளையிவன்
அள்ளித் தருகின்ற அன்புக் கவிச்சுவையை
வள்ளியின் மைத்துனனே வாழ்த்து. (4)வாழும் தருமமாம் மாமனித ராமனைச்
சூழும் பகையெல்லாம் சோகத்தில் வீழும்
வரலாற்றை இச்சிறுவன், வான்மீகி மெச்சத்
தரவேண்டும் இந்தக் கணம். (5)
(அறுசீர் விருத்தம்)
வால்மீகி சொன்ன கதையை
வழங்கிடவே என்னைப் பணித்தான்
வேல்வாங்கி நின்ற பெயரோன்
வெள்ளைமன “பால குமாரன்” !
நூல்வாங்கிக் கற்ற படிப்பும்
நூறாண்டாய்க் கேட்ட கதையும்
ஆல்போன்ற வம்ச குருவின்
அருளோடும் பாடத் துணிந்தேன் ! (6)ஊமையான நான்யார் அருளில்
உயர்ந்தராம வாழ்வை அளக்க ?
தீமையிலே தோய்ந்த கருவா
திருமாலின் மேன்மை உரைக்க ?
தாமதமே இன்றிக் கவிதைத்
தரத்தோடு கொண்டு குவிக்க ?
நாமமது “ராம” சுகத்தால்
ஞானமது தானே சுரக்கும் ! (7)(தர்ம சரிதம் வளரும்)
-
Srinivasa Ramanujan – INDIAN MATHEMATICIAN
C.K. Ashok Kumar
I was thrilled and excited when I came to know on my UK visit, ( as a part of the Indian Delegation of higher learning) to trinity college Cambridge that Ramanujam the mathematician of par excellence the greatest one mother India had created was the proud alumnus of this historical institution.
I must acknowledge the quality of education imparted here is of the highest standards that even the dullest head will become a brilliant one. But the selection process and getting an entry here will be very very tough as they look for bright talents and it not for average or a dull student. All can’t become Ramanujam’s but one can spot the right talent and connect to the exceptional universities like Cambridge Godfrey Hardy.
On my visit back to India I would passionately search for the unsung heroes from namma Cuddalore my mother land and from rest of India and connect them to world class Universities.
I know very well I can’t be a Ramanujam but definitely I can make a sincere effort to make one. -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
————————————————
”மூடபக்தி பெய்து முழங்கால் வழிவார(பாதத்தில்)
மாடுண்ண மாதவர் மேய்க்கின்றார்: -தேடுநீ
பச்சைப் புயலவரை பக்திப் பெருக்கெடுக்க,
மிச்சதைப் பார்த்துப்பார் மால்’’….கிரேசி மோகன்….!


























