கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“பார்த்தன் பார்த்த விச்வருபத்தை, பார்வையற்ற திருதராஷ்டிரன் சார்பாக சஞ்சயனும் பார்த்தான் …. இதுதான் “குருட்டு அதிர்ஷ்டம் ” என்பதோ ….!கிரேசி மோகன் ….
Nellai Gomathi: அண்ணா நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் பாய்வதும் குருட்டு அதிர்ஷ்டம் தானே..
சகோதரி கோமதி சஞ்சயன் கண்ணனின் விஸ்வரூபம் கண்டது
சத்சங்கத்தால் என்று சொல்லாமல் சொல்லி அடியேனுடைய திருதராஷ்டிரன் விழிகளுக்கு ‘’விடிகாலை வெளிச்சம்’’ அளித்தாள்….நன்றி சகோதரி….
”நெல்லுக்குப் பாய்ச்சிய நீரோடி, கூடிவளர்,
புல்லுக்கும் பாயுமாப்போல், பாண்டவ, -வில்லுக்(கு),
இருட்டினைப் போக்க கிருட்டிணன் காட்டல்,(விஸ்வரூப தரிசனம்)
குருட்டதிர்ஷ்ட மல்லசத்சங் கம்’’….கிரேசி மோகன்…

