Blog

  • ’யங் இந்தியா’!!

    பவள சங்கரி

    HATS OFF ‘YOUNG INDIA’ GUYS!!

    IMG_20170805_153535289

    IMG_20170805_153559378

    IMG_20170805_153648727

    ‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த அமைப்பில் இளைஞர்கள் , ஓவியர்கள், மாணவர்கள் , படித்த இளம் குடும்பப்பெண்கள் என்று இளைய சமுதாயமே நகரை அழகுபடுத்த முனைந்துள்ளனர்! நேற்று ஈரோடு இரயில்வே காலனி வழியாக சென்றபோது அங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விசயம், இவர்களில் ஒருவருமே தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாமல், ‘நாங்கள் யங் இந்தியா உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள் போதும்’ என்று சொன்னதுதான்! தற்பெருமை நாடாத, நல்வழிகாட்டும் இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    Share
  • ஹிரோஷிமா அணு ஆயுத அழிவுநாள் நினைவு [August 6th 1945]

    அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

    Image result for hiroshima japan

    சி. ஜெயபாரதன், கனடா

    பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து விழுதற்றுப் போக,
    விதையும் பழுதாக
    ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு!
    நாகசாகியும் அணுப் பேரிடியால்
    நாசமாகி
    மட்டமாக்கப் பட்டது!
    திட்ட மின்றி
    தென்னாலி ராமன் போல்
    மூடர்கள் அணு உலையைச்
    சூடாக்கி
    வெடிப்புச் சோதனை அரங்கேறி
    நிர்வாண மானது,
    செர்நோபில் அணு உலை !

    மாய்ந்தனர் மக்கள்,
    மடிகிறார் !
    மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
    நாடு நகரம்
    வீடு வயல்கள் எங்கும்
    மூடின வெங்கதிர் வீச்சுகள்!
    கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
    கடத்தப் பட்டார் வேறூர்
    கைப்பையுடன்
    கதிர்மழைப் பொழிவால்!
    புற்று நோயும், இரத்த நோயும்
    பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
    மன்னிக்க முடியாத,
    மாபெரும்
    மனிதத் தவறால் நேர்ந்த
    இரண்டாம்
    அணுயுகப் பிரளய
    அரங்கேற்றம் !

    ++++++++++++

    the-crying-soul

    [செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
    பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (1)
    “ஜராவேடன் அம்பால் ஜனார்த்தனன் மீண்டும்
    அராவணை செல்லல் அறிந்த -கராம்பசு;
    கோவிந்தன் காலுற்ற காலன்தன் கையெழுத்தை
    ஆவின்தன் நாவால் அழிப்பு”….

    (OR )…. ….-காராம்பசு
    வாசவன்தன் காலின் வலியை விலக்குதோ
    கேசவன் ப்ரஷாய் குவிந்து”…..கிரேசி மோகன்….!

    “நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
    வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
    மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
    நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!

     

    Share
  • ’’வெண்பூ வெண்பாக்கள்’’….!

     

    ’’வரலஷ்மி விரதம் ஆச்சு…அடுத்து வரவீணா நமஸ்துப்யம்’’….!
    ———————————————————————————————————————
    நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
    பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
    அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
    கலையாளை சேரக் கவி….(1)

    நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
    தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
    கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
    அலைபாய்ந் திடா(து) அடங்கு….(2)

    ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
    கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
    பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
    ஆய கலையாள் அருள்….(3)

    வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
    மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
    வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
    தேக்கும் வடிக்குமே தேன்….(4)

    பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
    தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
    நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
    வாணி வரமருள வா’’….(5)

    தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
    ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
    புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
    மனக்கிலேச யாழினை மீட்டு….(6)….கிரேசி மோகன்…!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    FullSizeRender

    ———————————————————–

    சரணா கதியென்று சார்ந்து கிடப்போர்க்(கு)
    அரணாய் இருக்கும் அரியே -நரனாய்ப்
    பிறந்து வளர்ந்து பிணியென்ற சாக்கில்
    இறந்தில்லை யாவ(து) எதற்கு….!

    அகந்தை இறக்குமங்(கு) ஆன்மா பிறக்கும்
    புகழ்ந்திகழ்ந்த வாசனை போகும் -மகிழ்ந்திருப்போம்
    ஆரா அமுதத்தில் ஆனந்த சாகரத்தில்
    நாரா யணஓம் நம….!
    நமநம என்றவனை நச்சரிப்பாய் நாமம்
    கமகமக்கும் நாவால் கணமும் -எமனெதிர்
    வந்தாலும் அச்சமின்றி நந்தமகன் அச்சுதன்
    சொந்தம் நமக்கென்று சொல்….

    கொட்டுது தேளின் கொடுக்காய்ப் புலனைந்தும்
    பட்டது போதும் பரந்தாமா -சட்டென
    வந்தெனக்குச் சத்துவ வாழ்வை அளித்திடுவாய்
    நந்தலாலா இந்தநாளே நீ….!

    நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு
    தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே
    வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய்
    அப்பனே ஆரா அமுது….!

    அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்

    Share
  • ‘’படமும் பாடலும்’’….!

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    ”மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
    வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
    பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
    தோள்தழுவும் பூவான தே”….கிரேசி மோகன்….!

    Share
  • கிரேசி QUOTE from கிரேசிஸ் கிழிஞ்ச COAT….!

    1)தை பொறந்தா வழி பொறக்கும்….ஆனா ஆடி பொறந்தாத்தான் தை பொறக்கும்….!
    2)”சினிமா வாழ்க்கை மாதிரிதான்….ஃபர்ஸ்ட் -ஹாஃப் நன்னா இருந்தா செகெண்ட் -ஹாஃப் சுமாராத்தான் இருக்கும்’’….அதான் சொல்றேன் ‘’இண்டெர்வெல் விடாதீங்க….
    கிரேசி கோட் ஃப்ரம் க்ரேசிஸ் கிழிஞ்ச கோட்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender (2)

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • ’’பொது வெண்பாக்கள்’’….!

     

    அச்சம் விலகிடும் ஆண்மை பெருகிடும்
    நிச்சயித்தக் கர்மம் நொறுங்கிடும் -இச்சகச்
    சேறான மாயையில் செந்தா மரைபூக்கும்
    கூறாமல் சந்யாசம் கொள்….

    பயமில்லா வாழ்வே பெருவாழ்வு மற்று
    ஜயமென்ப(து) எல்லாம்வீண் ஜம்பம் -முயலாமை
    காதை உரைத்தது கீதை உரைத்தது
    ஏதும் உறைக்கலை யே….

     
    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான மூட மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் இருக்கும்
    சுவைசுகித்து வாழ சுகம்….

     
    வருவதை ஏற்று வராததை விட்டு
    தருவதில் கொள்வாய் பெருமை -இறைவனவன்
    தானேதன் கைப்பட தானியம் எண்ணிடுவான்
    தானேமே நாம்லிக்கா ஹை….கிரேசி மோகன்….!

    Share
  • ’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’(பொன்மகள் வந்தாள்)….!

    VaraMahaLakshmi
    “பிருகு குலத்தில் பிறந்த திருவே
    உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
    அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
    வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….!
    —————————————————————————————————————————

    பொன்மகள் வந்தாள்…. மூவர்க்கும் சேர்த்து முதற்பாடல்
    ——————————————————————————————————–

    “படைத்திடும் வாணி துடைத்திடும் துர்க்கா
    இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
    ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
    பாகப் பிரிவினையில் பார்ப்பு”….!
    ——————————————————————————————————————

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….!

    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….!கிரேசி மோகன்….!
    ————————————————————————————————————————–

    Share
  • புறநானூற்றில் – அறம்

    -முனைவர் கோ.வசந்திமாலா 

         தனிமனிதன் தன் கடமைகளைத் தவறாது செய்வது அறமாகும். மனிதனின் நல்லொழுக்கம் என்பது செயல், எண்ணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததாகும். பண்டைய தமிழ்ச் சான்றோர்கள் அறத்தைக் கொள்கையாகவோ, கோட்பாடாகவோ போற்றவில்லை. சமயமாகவும் கருதவில்லை. அறத்தை வாழ்க்கை நெறியாகவே போற்றினார்கள்; வாழ்ந்தார்கள். மனிதன் தன் வாழ்க்கையின் பலவகை அனுபவங்களிருந்து அறிவு பெறுவதே சிறந்த வாழ்வியலாகும். அவ்வாழ்வியல் தூய்மையானதாக அமைய வேண்டுமெனில் மனிதன் தனக்கென ஒரு தனி நியதி அறத்தை மேற்கொண்டு வாழவேண்டும். அத்தகைய அறவாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பதனை, நமது சங்க இலக்கியப் பேழை என்று அழைக்கப்படும் புறநானூறு செம்மையுறச் செய்துள்ளது. நமது தமிழ் நாகரிகத்திற்கு ஒரு மூலதாரம்.

    அறம் – சொற்பொருள் விளக்கம்:

         அறம் என்பதற்குத் தமிழ் அகரமுதலி, “தருமம் புண்ணியம் அறச்சாலை, தருமதேவதை, யமன், தகுதியானது, சமயம், ஞானம், நோன்பு, இன்பம், தீப்பயன் உண்டாக்கும் சொல்”1 என்றுபொருள் தருகின்றது. இதில் கூறப்பட்டுள்ள அனைத்துச் சொற்பொருள்களும் மனிதனுடைய வாழ்வோடு தொடர்புடையனவாகும்.

         அறம் என்னும் சொல் முறையே வழக்கம், நீதி, கடமை, புண்ணியம், ஈகை, அறக்கடவுள், சமயம் என்ற பல்வேறு பொருள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது”2 என்று க.திருநாவுக்கரசு அவர்கள் அறம் என்பதற்குப் பொருள் கூறுகின்றார். எனவே, மனிதன் அறவழிப்பட்ட வாழ்க்கை வாழ்தலே தனி மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் நன்மையும், உயர்வும் தரும் என்பதனைக் கருத்தில் கொண்டு வாழவேண்டும்.

    இலக்கண நூல்களில் அறம்:

         பண்டைத் தமிழிலக்கண நூல்களும், இலக்கியங்களும் அறத்தைப் பின்பற்றியே எழுதப்பட்டனவாக அமைந்துள்ளன.

         தொல்காப்பியம் தமிழ்மொழியில் சிறந்த இலக்கண நூல். தமிழ் மொழியின் இலக்கணத்தைச் செம்மையாகக் கூறுவதுடன் அறக்கருத்துக்களையும் விளக்குகின்றது. தலைவன் தலைவியின் வாழ்வியல் அறன் வழிப்பட்டதாய் அமைய வேண்டும் என்பதனை,

         காமஞ் சான்ற கடைக் கோட் காலை
         ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
         அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
         சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”3 என்றும்,

    அன்பே அறனே இன்பம் நாணொடு”4 என்றும் மற்றும் பிற அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

    களவியல் உரை:

         இறையனார் களவியல் உரையிலும் அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில்,
    பெண்டிற்கு அறமென்பது கற்பு
         கற்பின் தலைநிற்றல்
         அறத்தொடு நிற்றலாகும்”5 என்ற அடிகளால் அறியலாம்.

    சங்க இலக்கியங்களில் அறம்:

         சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இருப்பினும் பெரிதும் அறக்கருத்துக்களையும், அவ்விலக்கியங்கள் போற்றுகின்றன. வீரத்திற்கு முதலிடம் கொடுத்தவர்கள் அறக்கருத்துகளையும் நினைவு கூர்ந்தனர்

         அறனும் அன்றே ஆக்கமும் தேயும்”6 என்று நற்றிணையும்,

    திறவோர் செய்வினை அறவது ஆகும்”7என்று குறுந்தொகையும்.

    அறம்புரி அருமறை நவின்ற நாவின்”8என்று ஐங்குறுநூறும்,

    அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி”9

    என்று பதிற்றுப்பத்தும்.

    ஞாயிறு திங்கள் எறனும் ஐவரும்”10என்று பரிபாடலும்,

    பிறர் நோயுந் தந்நோய் போல் போற்றி அறனறிதல்”11
    என்று கலித்தொகையும்,

    அறன் கடைப் படாஅ வாழ்க்கையும்”12
    என்று அகநானூறும், அறக்கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

         அறநூல்களில் முதலாவதாக அமையும் திருக்குறள் மனித சமுதாயத்தைப் பண்படுத்தத் தேவையான அறக்கருத்துக்களக் கூறியுள்ளது. தனி மனிதனுக்குத் தேவையான அறங்களை வலியுறுத்துகிறது.

         “அறத்தான் வருவதே இன்பம்”13என்றும்.

    “அறனிழுக்கா தல்லவை நீக்கி”14என்றும்,

    “ அறன் அறிந்த மூத்த அறிவுடையார்”15என்றும்,

    அறன்அறிந்து ஆன்றமைந்த சொல்லான்.”16என்றும்,

         “அறத்திற்கும், ஆதியாய் நின்றது”17     என்றும் கூறுவதை நோக்க இல்லறம் ஆடம்பரத்தாலோ, பொருள் சேர்க்கையாலோ, இன்னும் பிறவற்றாலோ உயர்ந்திருப்பின் பெருமையில்லை. பழிநீங்கி வாழ்வதலே சிறந்தது என்பதனைக் குறிப்பால் ஆங்காங்கே வள்ளுவர் உணர்த்துவதை அறியலாம். அரசுக்கும் அறமே துணை என்று வலியுறுத்துவதை அறிய முடிகின்றது. மேலும் அறத்தின் மாண்பினையும், அறம் செய்யப்படும் விதத்தையும் உணர்த்துகிறது.

    அறத்தின் சிறப்புக்கள்:

         ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தான் மறத்தலின் மேம்பட்ட கேடும் இல்லை. இதனை வள்ளுவர்,

         அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
         மறத்தலின் ஊங்கில்லை கேடு”18 என்கிறார்.

    புறநானூறு போற்றும் அறம்:

         பதினெண் மேல்கணக்கு நூல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனக் கூறுவார். அவற்றில் எட்டுத்தொகை நூல்களின் வரிசையில் புறநூலாக இடம் பெறுவது புறநானூறு. இதில் பண்டைத் தமிழகத்தின் அரிய வரலாற்றுத் தொகுப்பு, பண்பாட்டுக் களஞ்சியம், இலக்கியக் கருவூலம், இதனுள் தமிழகத்தின் கோநகரங்கள், துறைமுகங்கள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் பற்றிய செய்திகளும், புரவலர்கள், புலவர்களைப் போற்றி அவர்களின் அறிவுரைகளைச் செவிமடுத்து ஒழுகிய சிறப்புக்களும், மன்னர் தம் மாண்பு பற்றிய அரிய குறிப்புகளும் போர்த்தினவுற்று அறமுறை பிறழாது போர்புரிந்து மார்பில் வேலேற்ற மைந்துடைக் காளையின் வீரப்பெருமைகளும், மூவேந்தரின் குடிமை முதலான பண்புகளும், குறுநில மன்னர்களின் ஆண்மை, ஈகை, ஒப்புரவு முதலான சால்புகளும், களச்சாவுற்ற தம் மைந்தரின் உடல் கண்டு பெருமிதமெய்திய தாயரின் மறக்குணங்களும் பிறவும் மிகவும் அழகுற எடுத்துணர்த்துகின்றன. மேல் எடுத்துரைக்கப்பட்ட அனைத்திலும் “அறம்” என்ற உணர்வு தோய்ந்து காணப்படுவது நாம் அறியத்தக்கது என்பதற்குச் சில சான்றுகள்.

         இவ்வுலகம் இன்றளவும் நிலையாக அமைவதற்குக் காரணங்கள் எவை என்று வேண்டுவோர்க்கு அறம் செய்வோரும், அறச்சிந்தனையுடையோருமே என்பதனை, கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி,

         உண்டால் அம்ம, இவ் உலகம் – இந்திரர்
         அமிழ்தம் இயைவது ஆயினும். இனிது” எனத்
         தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்,
         துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
         புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்
         உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
         அன்ன மாட்சி அனையர் ஆகி,
         தமக்க என முயலா நோன் தாள்
         பிறர்க்கு என முயலுநர் உண்மையானே”19  என்கிறார்.

         அமிர்தமே இயைவது ஆயினும் தாமே தனியே உண்பவர்கள் இல்லை. அறம் செய்து வாழும் தன்மையுடைய பெரியோர்கள் இவ்வுலகில் வாழ்வதால் தான் இவ்வுலகம் நிலைந்துள்ளது என்று அறத்தின் சிறப்பு பேசப்படுகிறது.

         இக்கருத்து திருக்குறளில் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்,

         விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
         மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று”20 

         என்று வள்ளுவர் விருந்தினர் வெளியே இருக்க சாவா மருந்து என்றாலும் அமிர்தம் என்றாலும் உண்ணக்கூடாது என்று குறிப்பிடுகின்றார்.

    மறத்திலும் அறம்

         தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள். எனினும் அறம்போற்ற மறந்தில் என்ற கருத்தினை, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடடுமிப் பெருவழுதி நெட்டிமையார்,

         ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
         பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
         தென்புலவாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
        பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
         எம்அம்பு கடி விடுவதும், நும் அரண் சேர்மின்
        என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்”21என்ற படலில், போர் செய்வதிலும் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகளைப் புறநானூற்றுப் பாடல்கள்வழி அறியலாம்.

         உலகிலுள்ள உயிர்களைக் காத்துநின்று வலிமை மிக்கவர்களுடன் மட்டுமே போர் செய்ய வேண்டும். இல்லை எனில் பழி பாவங்கள் உண்டாகும் என்ற  இக்கருத்தை வள்ளுவர்.

         மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
         தன்னுயிர் அஞ்சும் வினை”22 

    காலத்தை வென்ற புறத்தில் – அறம் :

         நம் நாட்டின் பழந்தமிழர்கள் எக்காலத்திலும், எந்த நேரத்திலும் எல்லோருக்கும் வழங்கி அறம் போற்றி வாழ்ந்தார்கள் என்ற சிந்தனையை அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடிய

         ஒருநாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
         பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்
         தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ –
        இழைஅணி யானை இயல்தேர் அஞ்சி
        அதியமான்; பரிசில் பெறூம் காலம்
         நீட்டினும் நீட்டாது ஆயினும் யானைதன்
        கோட்டுஇடை வைத்த கவளம் போலக்…என்ற படலில் அதியமான் அஞ்சி எவ்வாற அறம் செய்து வாழ்ந்தான் என்பதனைப் புறப்பாடல் கல்வெட்டு போல் பதிவு செய்துள்ளது நமக்கு அகச்சான்றாய் அமைகின்றது.

    வள்ளுவர் கூறிய,

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
         பேரறி வாளன் திரு”24

    என்ற குறளைப் போல் அதியன் உள்ளூரில் பழுத்த பயன்மரம் போன்று வாழ்ந்தான் என்ற வாழ்வியல் இலக்கியமாய்ப் புறநானூறு புலப்படுத்துவது தெளிவாகிறது.

    அளந்தறியா – அறம்:

         அறம் என்பது மழை எவ்வாறு கைமாறு கருதாமல் வரையாது எல்லோருக்கும் ஏற்றத்தாழ்வின்றி வாரி வழங்குகிறதோ, அதுபோல் நம் முன்னோர்கள் அறம்செய்து வாழ்ந்தனர் என்பதற்கு மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடண்திணை வழிப் பாடியுள்ள பாடல்,

         நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
         யார்க்கும் எளிதே. தேர் ஈதல்லே
         தொலையா நல்இசை விளங்கு மலையன்
         மகிழாது ஈத்த இழை அணி நெடுந்தேர்
         பயன் கெழு முள்ளுர் மீமிசைப்
         பட்ட மாரி உறையினும் பலவே 

    நன்றாக வாழும் நாள்களில் மதுவை உண்டு மகிழ்ச்சியுடன் வாழும் நாள்களில் அறம் செய்தோர் பலர். ஆனால் மது அருந்தாமல் இருக்கும் வேளையிலேயும் விருப்பமுடன் பொன் அணிகலன் அணிந்த நெடுந்தேரினைக் கொடையாக வழங்கினான். அவ்வாறு வழங்கிய தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலை உச்சியின்கண் பெய்த மழைத்துளியினும் பலவாகும் என்று கூறியுள்ள இருக்கருத்து அறத்தின் உச்சநிலையைக் காட்டுவதாய் அமைந்துள்ளது.

    ***

    பார்வை :

    1. ம.சண்முகம்பிள்ளை – தமிழ் – தமிழ் அகரமுதலி
    2. க.த. திருநாவுக்கரசு – திருக்குறள் நீதிஇலக்கியம்
    3. தொல்காப்பியம்
    4. இறையனார் களவியலுரை
    5. நற்றிணை
    6. குறுந்தொகை
    7. ஐங்குறுநூறு
    8. பதிற்றுப்பத்து
    9. அகநானூறு
    10. புறநானூறு

     

     

     

    Share
  • ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

    சி.ஜெயபாரதன்

    cover-image

    வெனிஸ்  கருமூர்க்கன்

    [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
    தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++++++++++

    தோல்வி காயப் படுத்தி ஊனமுற்ற ஆத்மா, 
    ஓல மிட்டால் அமைதி செய்ய  முயல்வார் !
    வலித்துயர்  மிகுந்து பாரம் அமுக்கி விட்டால்
    புலம்புவோம்  அதிகம், அன்றி இணையாய்.

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ காலக்கேடு ] 

    என்னரும் இறைவா ! நற்பெயர் மாந்தர்க்
    குதவும் அணிகலன், அவர் ஆத்மா வுக்கும்….
    ஆயினும் எனது நற்பெயர் கெடுப்போன்
    தான் இழந்ததை என்னிடம் களவாடி
    என்னை வறியன் ஆக்குவ துண்மை. 

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ ஒத்தல்லோ ]

    +++++++++++++++++++

    முன்னுரை :  உலகப் புகழ்பெற்ற நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 நாடகங்கள், பல ஈரேழு வரிப் பாக்கள் எழுதியதாகத் தெரிகிறது.  கடந்த 400 ஆண்டுகளாய் அவரது நாடகங்கள் எல்லா மொழிகளிலும், அனைத்து நாடுகளிலும் பன்முறை அரங்கேறியுள்ளன.  அவரது நாடகங்களில் மனித ஆசாபாசங்கள், வெறுப்பு விருப்புகள், கோப தாபங்கள், அச்சம், மடமை, பொறாமை, அகந்தை, மோகம், மோசடி, வஞ்சக வாணிப இச்சைகள், நிறவெறி, இனவெறி மாந்தர்களைக் காணலாம். அவரது இறுதிக் காலங்களில்தான் ஹாம்லெட், மாக்பெத், கிங் லியர், ஒத்தல்லோ போன்ற துன்பியல் நாடகங்கள் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. இந்த ஒத்தல்லோ நாடகம் அவரது காலத்திலும் இன வெறுப்பு, நிற பேதச் சண்டைகள், கொலைகள் இருந்ததைக் காட்டுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர்.  தானே நாடங்கள் எழுதியவர்.  நாடகக்கலை மன்றங்கள் அமைத்தவர். அவர்க்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஆணும் இருந்துள்ளனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும் [ஏப்ரல் 23, 1564] இறந்த நாளும் [ஏப்ரல் 23, 1616] ஒரே தேதியில் நேர்ந்ததாகச் சிலர் கருதுகிறார்.

    othello-image-10

    மோனிகா & ஒத்தல்லோ

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் : 

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ துன்பியல் நாடகம் 400 ஆண்டுகட்கு முன்னர் வெனிஸ் நகரிலும் , சைப்பிரஸ் தீவிலும் நிகழ்ந்த இன வெறுப்பு, பொறாமையால் விளைந்த தீவினைக் காட்சிகள். அந்த இனச்சண்டை, நிறச்சண்டைகளால் பரிதாபமாகப் பலியான நபர்களைப் பற்றியது.  நாடகம் வெனிஸ் சாம்ராஜிய வல்லமைக் கருந்தளபதி ஒத்தல்லோ, அவனது வெள்ளைக் காதலி, இளங்குமரி மோனிகா ஆகியோரைச் சுற்றி நடப்பது. மோனிகா தந்தைக்குத் தெரியாமல் ஓடி, பலத்த எதிர்ப்பு மீறி, கருந்தளபதியை மணம் செய்து கொள்கிறாள்.  அவரது காதல் திருமண வாழ்க்கை நிற வெறுப்பு, இனக் கசப்பு சமூகத்தால் முறிந்து போகிறது.  முற்போக்குச் சிந்தனையுடைய, பராக்கிரம கருந்தளபதி ஒத்தல்லோ, பொய்யான மாற்றான் சொற்கேட்டு, மனைவி மீது நம்பிக்கை இழந்து, பயங்கரக் கொலை செய்யத் துணிகிறான். முன்கோபியான ஒத்தல்லோ “மூர்” [Moore] எனப்படும் ஆப்பிரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.  வெனிஸ் சாம்ராஜியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப் பட்ட பராக்கிரம வீரன்.

    othello-image-9

    மோனிகா, ஒத்தல்லோ, புரூனோ

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் மூலம் வெனிஸில் 1565 ஆண்டில் வெளியான  ஓர் இத்தாலிய நாவல் ஹெகாடோமிதி [Hecatommithi] எனப்படுவதில் ஒரு பகுதி எழுதிய இத்தாலியர் பெயர் கிரால்டி சிந்தியோ [Giraldi Cinthio]. ஷேக்ஸ்பியர் தன் நாடகத்துக்காக,  அதில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்.

    20 ஆம் நூற்றாண்டில் உலக மாந்தரைத் துயர்ப் படுத்தும்  நிற வெறுப்பும், இனக் கசப்பும், ஷேக்ஸ்பியர் காலத்திலேயே [1600 ஆண்டுகளில்] மத்திய தரைக்கடல் ஐரோப்பிய பகுதியில் இருந்திருப்பதை ஒத்தல்லோ நாடகம் மிகக் கொடூரமாகக் காட்டியுள்ளது. 1940 ஆண்டில் அமெரிக்கா பிராட்வே தியேட்டரில் முதன்முதல் அரங்கேறிய ஒத்தல்லோ நாடகம்  [American and the Son of a Slave]  அடிமைகளைக் கொடுமைப் படுத்தி வந்த அப்போதைய அமெரிக்க வாழ் மாந்தருக்குப் பேரதிர்ச்சியும், பேரடியும் கொடுத்துள்ளது !  அந்த இன வெறுப்பும், நிற வேற்றுமையும் உலக நாடுகளில்  21 ஆம் நூற்றாண்டிலும்  பெருகி பேரிடர் அளித்து வருவது, நாகரீக மனித சமூகம் வெட்கப் பட வேண்டிய நிகழ்ச்சி !

    unnamed

    +++++++++++++++++++

    புரூனோ & ஷைலக்

    ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்

    [ வெனிஸ் கருமூர்க்கன் ]

    அங்கம் –1 காட்சி –1 பாகம் : 1

    ++++++++++++++++

    நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]

    ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]

    மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]

    புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]

    காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]

    ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன்

    சிசாரோ :  மோனிகாவின் தந்தை.வெனிஸ் செனட்டர் [60 வயது]

    கிராடினோ :சிசாரோவின் சகோதரன்.

    லோடாவிகோ : மோனிகா உறவினன், அரசாங்க அதிகாரி.

    எமிலியோ : புருனோவின் மனைவி.

    மான்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.

    பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.

    மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ்,  சாம்ராஜிய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். 

    நிகழ்ச்சிகள் நடப்பது வெனிஸ் நகரம் & சைப்பிரஸ் தீவு

    ++++++++++++++++++

    othello-image-5

    ஒத்தல்லோ & மோனிகா

    அங்கம் : 1 காட்சி : 1 பாகம் : 1

    இடம் : வெனிஸ் நகரத்தில் ஒரு தெரு.

    நேரம் :  மங்கிய மாலைப் பொழுது.

    அமைப்பு :  தெரு ஓர மரத்தடியில் இராணுவச் சேவகன் புரூனோ பெருஞ் சினத்துடன் ஒருவனைத் திட்டிக் கொண்டு நிற்கிறான். அப்போது  செல்வந்த நண்பன் ஷைலக்  வருகிறான்.

    ஷைலக் : புரூனோ !  யாரைத் திட்டிக் கொண்டிருக்கிறாய் ? யார் மீது கோபம் உனக்கு ?

    புரூனோ : கேட்காதே அந்த அநியாயத்தை ! நான் நொந்துபோய் உள்ளேன்.  என மனத் துடிப்புக்கு அந்த கருப்பன் தான் காரணம் ! என் உயர் பதவி போச்சு !  என் யுத்த அனுபவம் வீணாய்ப் போச்சு ! மூவர் ஆதரித்து எடுத்துரைத்தும் எனக்குக் கிடைக்காமல் போச்சு !

    ஷைலக்: யாரந்தக் கருப்பன் ?   எந்த வேலை கிடைக்காமல் போச்சு ?

    unnamed (1)

    மோனிகா

    புரூனோ :  அந்த தடித்த  உதடன் எனக்குத் தர வேண்டிய லெஃப்டினென்ட் வேலையைத் தகுதியே இல்லாத  காஸ்ஸியோவுக்குக் கொடுத்துவிட்டான். வெனிஸ் நகரத்தைச் சேராதவன்.  பிளாரென்ஸ்  நகரத்தைச் சேர்ந்தவன் காஸ்ஸியோ ! உயர் பதவி  கொடுத்த ஆப்பிரிக்க  மூர்க்கன் வெனிஸ் நகரத்தைச் சேர்ந்தவன் ! அகந்தை கொண்டவன் !  அண்டங் கறுப்பன்  !

    ஷைலக் : யார் ?  அந்த மைக்கேல் காஸ்ஸியோவுக்கா மேற்பதவி கிடைச்சது ?  நம்ப முடியவில்லையே !  யாரை மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

    புரூனோ :  ஆம் !  எனக்குத் தெரிந்த அந்த கருப்புத் தளபதி ஆப்பிரிக்க  “மூர்” இனத்தவன்தான் !  காட்டுமிராண்டி ! ஆற்றல் படைத்த கருப்பன், அறிவில்லாத அந்தக் கழுத்தைக்குத்தான் உயர்பதவி  அளித்துள்ளான் !  எனக்குத் தருவதாய்க் கூறி, என்னை ஏமாற்றி விட்டான்.  எனக்குத் தெரியாமல் எப்படிக் காஸ்ஸியோவுக்கு  தரலாம் ?  அவனுக்குக் கூட்டல், கழித்தல் மட்டுமே தெரியும்.  எந்தப்  போரிலும் கலந்து கொள்ளாதவன். முன்னின்று படை நடத்திச் செல்லும் அனுபவமும் கிடையாது.

    ஷைலக் :  ஜெனரலை ஏன் மூர்க்கன் என்று திட்டுகிறாய் ?

    புரூனோ:  கருப்பன் என் மேலதிகாரி.  மூர்க்கன் !  முரடன் ! காமாந்தகன் ! கன்னிப் பெண்ணைத் தூக்கிச் சென்றவன் !  கள்ளத்தனமாய்க் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டவன் !  ஆப்பிரிக்க  “மூர்”  இனத்தைச் சேர்ந்தவன் ! அவன்  ஒரு  முசுடன் !  அதனால்  கரு மூர்க்கன் என்று திட்டுகிறேன்.

    ஷைலக்:  என்ன ?  இளங்கன்னி மோனிகாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டானா?  மோனிகா என்னருமைக் காதலி அல்லவா ?  என்னைப் பற்றி, அவள் தந்தையிடம் சொல்லி மோனிகாவைக் கட்ட நீயெனக்கு உதவி செய் ! , புரூனோ ! நானுனக்குப் பண முடிப்பு அளிக்கிறேன் !   அவள் தந்தை சிசாரோவுக்கு இதை நாம் தெரிவிக்க வேண்டும் !   அவர் மோனிகாவை எனக்கு மண முடிப்பதாய் வாக்குறுதி அளிக்க வேண்டும் !

    புரூனோ :  நான் கருமூர்க்கனை வெறுக்கிறேன்.   மோனிகா வெண்ணிலவு போன்ற வெள்ளைப்புறா !  அவன் கருநிலவு ! ஏதாவது உடற் பொருத்தம் உள்ளதா ?  அவள் வெனிஸ் அழகி ! வீனஸ் !  சிறு வடிவம்.  அவன் பூத வடிவம் ! இருவரையும் பார்த்தால் யானைக்குப் பக்கத்தில் வெள்ளைப் பசு நிற்பது போல் தெரியும் !  அவள் அப்பனைக் கூப்பிடு ! மகள் தப்பினைக் காட்டிடு ! கோபத்தைக்  மூட்டிடு !  மகிழ்ச்சி மனத்தில் விஷத்தை  ஊற்றிடு !  தெருவைக் கூட்டி முரசடி ! ஊரார், உற்றார் உறவினர்க்கும் உரைத்திடு !  ஊரைக் கூட்டி அவர் பேரைக் கெடு !  தளபதிக்கு எதிராய்ப் பேசி மோனிகாவின் தந்தைக்கும் அவருக்கும் பிளவை உண்டாக்கித் தளபதியின் புது மண வாழ்வைச் சீர்குலைத்திடு !

    villain-bruno

    வில்லன் புரூனோ 

    ஷைலக் :  எதிரில்தான் மோனிகா இல்லம் !  இருட்டி விட்டது ! விளக்கில்லை !  உரத்த குரலில் அவள் அப்பனை விளிக்கிறேன் !

    புரூனோ :  இடி முழக்கம் எழட்டும் வீட்டு முன் !  இரவில் யாருக்கும் தெரியாமல் நேர்ந்த கள்ளக் கடத்தல் கன்னியைப் பற்றிச் சொல் !

    ஷைலக் :  [மோனிகா வீட்டு முன் சென்று, கதவைத் தட்டி உரத்த குரலில் ]  ஐயா பெரியவரே ! விழித்தெழுவீர் ! வெளியே வாரீர் !   உமது வீட்டில் களவு போயிருக்குது ! பெருங்களவு !

    புரூனோ :  [மோனிகா வீட்டு முன் சென்று]  விழிதெழுவீர் கிழவரே !  உமது குமரிப் பெண்ணைக் கடத்தி விட்டான் கரு மூர்க்கன்! கள்ளன் ! வீட்டுக்குள் தேடிப் பாரீர் !  பணப் பெட்டியைத் திறந்து பாரீர் ! கன்னிப் பெண் எங்கே ? கண்ணைத் திறந்து பாரீர் பெண்ணைப் பெற்றவரே !

    [ கதவைத் திறந்து பரபரப்புடன் சிசாரோ, சிசாரோவின் மனைவி புதல்வர், வெளியே வருகிறார்]

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. Othello By William Shakespeare,  Folger Shakespeare Library [1993] 
    2. Othello DVD Movie by Warner Brothers [2007] 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    170803 - Vanvihari -Inink-papyrus -icam -lr

    SRI AUROBINDO
    ————————-
    AN ETERNAL CHILD PLAYING AN ETERNAL GAME IN AN ETERNAL GARDEN….!

    ”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
    எந்தையே ஏகப் பரம்பொருளே -விந்தையே
    தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்
    சீராக ஆடிடும் சேய்’’….!
    ——————————————————————————————————————————————

    BEYOND PERSONALITY THE MAYAVADIN
    SEES INDEFINABLE EXISTANCE; I FOLLOWED
    HIM THERE AND FOUND MY ”KRISHNA”
    BEYOND IN INDEFINABLE PERSONALITY….

    முடிந்தவரை மொழிபெயர்ப்பு
    ————————————
    நேதிநேதி என்று நினைப்பைக் கடந்தமாயா
    வாதிகள் கண்டனர் வாழ்விருப்பை -பாதையில்
    சென்றன்று கண்டேன்காண் கன்றன்று மேய்த்தோனை;
    ஒன்றென்று உள்ளம் உவப்பு….!
    ——————————————————————————————————-
    ”சேணம் குதிரைபோல் சேர்ந்தே செல்வது
    ஞானம் அறிவு நமக்குள்ளே -காணும்நாம்
    வேகத் திலைவதால் வேறாகும், உண்மைவி
    வேகக்கண் ணேதெய் வதம்”….கிரேசி மோகன்….!
    —————————————————————————————————————

    Share
  • ’’ஆடிப் பெருக்கு’’….!

    images (2)

    ”ஆடிப் பெருக்கினாலும் ஆடா(து) இளைத்தாலும்
    வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி
    இருக்கையில் இன்பம் பிரிகையில் துன்பம்
    பருக்கைக்கோ தீராப் பசி”….கிரேசி மோகன்….

    Share
  • ஆடிப் பெருக்கு..!

     

    பெருவை பார்த்தசாரதி

     

     

    ஆடிப்பெருக்கு

     

     

     

     

     

     

     

     

     

     

    ஆற்றுப் பெருக்கினால் குளம் வாய்க்கால்..

    ……அனைத்தும் நீர்நிரப்பி வளமாக்கும் வேணியே.!

    சேற்றுடன் கதிரும் தலைசாய்க்கு முனைக்கண்டு.!

    ……செங்கதிரோன் முகம்பார்க்கவுன் நீர்நாடி வருவான்.!

    காற்றோடு வந்தசெய்தி காதிற்படா கலைந்ததுபோல்..

    ……காலத்தே வருமழையும் வாராது பொய்த்ததின்று,!

    ஊற்றாக எழுமுன் கருணையை எதிர்பார்த்து..

    ……ஊருணியும் வயலும் வாய்பிளந்து எதிர்நோக்கும்  .!

    ஆற்றுமணல் திருட்டால் அழிந்தது வயல்வளமே.!

    ……ஆறறிவால் வந்ததெலாம் நமக்கென்றும் வினையே.!

     

    ஆடித்திங்கள் ஈராறில் பொங்குமுன் புனலில்..

    ……அமிழ்ந்து நீராடிக்களித்த ஆனந்தம் எங்கே.?

    ஓடிவயல் நிறைக்குமுன் வள்ளல் நீரெல்லாம்..

    ……ஒளிந்து கொண்ட இடத்தைத்தான் யாரறிவர்.?

    வாடிய முகத்துடன் வறண்ட காவிரிதனை..

    ……வாட்டமுடன் காண கல்நெஞ்சம் வேணுமம்மா.!

    நாடியுனை ஆராதித்து நாங்களிட்ட உணவை..

    ……உன்னருளால் பெற்றுனை மகிழ்விக்க வந்தோம்.!

    பாடியுனை ஆராதிக்க பகல்பொழுது கழிந்தபின்..

    ……அருஞ்சுவை உணவைப் புனலுக்கு அளிப்போம்.!

     

    வற்றியகாவிரி வளமாக மாமழையை அழைப்போம்..

    ……வருணனை வேண்டியே இன்று தவம்செய்வோம்.!

    நாற்றுக் கன்றுகளெலாம்  பயிராய்த் தழைத்துவளர..

    ……நலமுடன் மிதமாய் பொழியுமுன் அருள்வேண்டும்.!

    பற்றியுனை நினைத்து தினமுனைத் தொழுவோம்.!

    ……பண்டங்கள் பலபடைத்துன் மனங்குளிரச் செய்தால்..

    ஆற்றுப்படுகைச் சோலையில் குயில்களும் கூவுமா.?

    ……ஆடிப்பெருக்கின்று காவிரியில் கயல்கள் உகளுமா.?

     

     

    Share