”நாரதர் பக்திக்கு, சாரதை கல்விக்கு,
தேரதில் கீதோப தேசஆயர் -ஊரதன்
கண்ணனைக் காட்டிய கேசவ் உனக்கென்றும்
வண்ணமாய்(Colourful) பக்திகல் வி(V for VICTORY)’’….கிரேசி மோகன்….!
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++++++++++++
”நாரதர் பக்திக்கு, சாரதை கல்விக்கு,
தேரதில் கீதோப தேசஆயர் -ஊரதன்
கண்ணனைக் காட்டிய கேசவ் உனக்கென்றும்
வண்ணமாய்(Colourful) பக்திகல் வி(V for VICTORY)’’….கிரேசி மோகன்….!
கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : சோ.ஊஞ்சை
தமிழாக்கம் : பவள சங்கரி
பனிபடர் காலையில்
பொறாமையில் கருகும் பைன்கள்
மஞ்சள் பச்சை தீப்பிழம்புகள்,
விழுங்கலைப் போன்று உனது முகத்தைக் கழுவிக்கொண்டாய்
நீரில் மூழ்கி,
உன் பின்புற முடி வறண்டுவிடும் முன்பு
பளபளக்கும் கண்களுடன் என்னிடம் வந்துவிடு நீ.
ரா.பார்த்தசாரதி
மனித வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம்,
ஏனென்று தெரியாத வருத்தம்
மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்
உள்ளத்தினில் சத்தம் போடாத ஆசைகள்
எதற்குமே வெட்கப்படாத ஏக்கம்
நெஞ்சினில் வேதனை கலந்த துக்கம்
படபடப்பில் ஏற்படும் காரணமில்லாத கோபம்
இழந்ததை கண்டு, கண்ணீர் சிந்தும் தோல்வி!
வாழ்வில் மறக்க விடாத நினைவுகள்
மனதினில் மறைக்க முடியாத உறவுகள்
மனதிலே அலைபாயும் காதல்
மனிதன் அலைந்து தேடும் வேலை!
என்றும் விட முடியாத தொடர்புகள்
விட்டொழியாத தொல்லைகள்
கலங்க வைக்கும் அவமானங்கள்
கலைய மறுக்கும் கனவுகள்!
இத்தனையும் மொத்தமாகி நிற்க
இவ்வளவு தான் வாழ்க்கை என
எதையும் தொலைத்து விட வேண்டாம்!
கிடைத்த வாழ்க்கையை
குறைகள் சொல்லி உடைத்து விடாமல்
இருப்பதை கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தாலே!
மகிழ்ச்சி என்றும் நம்பக்கம் !
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
க.பாலசுப்பிரமணியன்
கற்றலும் சுயகட்டுப்பாடும்
ஒரு மனிதனுக்கு எவ்வளக்கெவ்வளவு தன்னம்பிக்கை தேவையோ அதே அளவுக்கு அவனுக்கு சுயகட்டுப்பாடும் தேவை. பல நேரங்களில் மாணவர்கள் வளரும் பருவங்களில் அதிகமான தன்னம்பிக்கையோடு வளர்ந்தாலும் சுயகட்டுப்பாடு இல்லாததால் வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோள்களையும் வெற்றிப்படிகளையும் தவற விட்டுவிடுகின்றார்கள். காலம் தவறியபின் வருந்தும் நிலையில் அவர்கள் தள்ளப்படும் பொழுது தங்களுடைய சுயகட்டுப்பாடின்மையையும். வெளி கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் தவறுகளை தொடர்ந்து செய்ததையும் நினைத்து வேதனைப்படுகின்றனர். ‘சுயகட்டுப்பாடு’ என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலி. அது நம்மைப் பல துயரங்களிலிருந்து சரியான நேரங்களில் காப்பாற்றும். சுயகட்டுப்பாடு இயலாமையின் அறிகுறி அல்ல. அது ஒரு மனிதனின் பயத்தையோ அல்லது அறியாமையையோ காட்டுவதாக எண்ணுதல் தவறான கருத்தாகும். ஒரு கருத்தையோ அல்லது நிகழ்வையோ நன்றாக ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக நாம் எடுக்கும் ஒரு முடிவே சுயகட்டுப்பாடாகும். கற்கும் காலங்களில் இதை நல்ல அறிவாற்றல் மூலமாகவும் முடிவெடுக்கும் திறன்கள் மூலமாகவும் நாம் வளர்த்துக்கொள்ளலாம். சுயகட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் திக்குத் தெரியாத காட்டில் வழி தேடுவது போல் வாழ்க்கையில் அலைவது பல நேரங்களில் பார்க்க முடிகின்றது.
வளரும் பருவங்களில் சுயகட்டுப்பாட்டிற்கான நெறிகளை வளர்ப்பதற்கு பள்ளிகளை விட பெற்றோர்களின் பங்கே முதன்மையாகவும் அவசியமானதாகவும் தென்படுகின்றது. வீடுகளில் உள்ள பழக்க வழக்கங்கள் சுய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தால் அதுவே மறைமுகமான கற்றலின் வித்தாக அமைந்து அத்துடன் சார்ந்த திறன்களையும் பழக்கங்களையும் வளர்ப்பதற்கு ஏதுவாக அமையும். பல வீடுகளில் தங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாகக் கருதி அல்லது தங்கள் அன்பின் வெளிப்பாட்டாகக் கருதி கட்டுப்பாடற்ற சூழ்நிலைகளுக்கு வழி வகுக்கின்றனர். பிற்காலத்தில் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான வளரும் குழந்தைகள் அந்தச் செயல்களுக்கு மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது மட்டுமின்றி அவைகளைத் தங்கள் இயலாமையின் அறிகுறியாக ஏற்றுக்கொள்கின்றனர். சுயகட்டுப்பாட்டிற்கு குழந்தைகளை உருவாக்குவது எந்த வகையிலும் அவர்களிடம் நம்முடைய அன்பின் குறைபாடாகக் நினைக்கக் கூடாது. உண்மையில் அது அவர்களை பிற்காலத்தில் பல எதிர்மறையான விரும்பத்தகாத சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் தடுமாற்றமின்றி சந்திப்பதற்குத் தேவையான உள்ளத் திறனை வளர்ப்பதற்கு உதவும்.
சுய கட்டுப்பாடு என்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்திற்கோ தேடலுக்கோ விருப்பு வெறுப்புக்களுக்கோ அல்லது மகிழ்விற்கோ எதிர்மறையான கருத்து அல்ல. மாறுதலாக, அந்தத் தேடல்களையும் அதற்கான முயற்சிகளையும் சுயகட்டுப்பாடு பாதையிட்டு வளப்படுத்தி சிறப்புற உதவி செய்யும்.
வீடுகளில் பெற்றோர்கள் கற்றலின் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கக் கூடிய சில முக்கியமான சுயகட்டுபாட்டுத் திறன்கள்:
கற்றல் என்பது வெறும் புத்தகங்களை சார்ந்த அறிவு ஈட்டல் மட்டும் அல்ல. சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதே கற்றலின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த சுய கட்டுப்பாட்டுத் திறன்களையும் பழக்கங்களையும் கற்றலின் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொண்டு மேன்மைப்படுத்திக்கொள்ளும் பொழுது வாழ்வின் பிற்காலத்தில் அது பல நல்ல போற்றலுக்குடைய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
உதாரணமாக, சுயகட்டுப்பாடுள்ளவர்களின் கீழ்கண்ட திறன்கள் சிறப்படைவதாக மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சுயகட்டுப்பாட்டின் மூலம் தன்னை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளாத ஒருவனால் எப்படி மற்றவர்களை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடியும்? சப்பானிய சிந்தனையாளர் லா-திசு என்பவர் கூறுகின்றார் : “மற்றவர்களை வெற்றிபெற படை தேவை. தன்னை வெற்றிகொள்ள வலிமை தேவை.” (Conquering others requires Force; Conquering the self requires strength- Lao-Tzu)
இந்த வல்லமைக்கு வலிமைக்கும் கற்றல், வீட்டிலும் பள்ளியிலும் வழி வகுத்தல் மிக்க அவசியம்.
தொடருவோம்
நிர்மலா ராகவன்
பயணம் செய்யலாமா?
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தனர். நீதிபதிகள் ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவித்திருந்தனர்: அந்த இருபது எழுத்தாளர்களும் ஒரு நாட்டிற்குமேல் வசித்திருப்பவர்கள். (அவைகளில் என்னுடையதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது).
வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களைத் தவிர, வெகு சிலருக்குத்தான் பயணம் செய்யப் பிடிக்கிறது. சிலர் உள்நாட்டில்கூடப் பிரயாணம் செய்யத் தயங்குவார்கள்.
கதை
“விடுமுறை வரப்போகிறதே! எங்கே போகப்போகிறாய்?” என்று என்னுடன் வேலை பார்த்த மிஸஸ் சின்னைக் கேட்டேன்.
அந்த இளம் சீனப்பெண், “எனக்கு வெளியூர்களுக்குப் போகவே பிடிக்காது. திரும்பி வந்ததும் குப்பை மாதிரி சாமான்கள் கிடக்கும்! அவைகளை ஒழித்துவைக்க எனக்குப் பொறுமை கிடையாது,” என்று முகத்தைச் சுளித்தாள்.
அவளுடைய போலிச்சிரிப்பும், நயந்து பேசி, பிறரை உபயோகப்படுத்தும் தன்மையும் அவளைப் பிறருக்குப் பிடிக்காமல் செய்திருந்தது.
நிறையப் பயணம் செய்பவளாக இருந்திருந்தால், பலதரமான மக்களை அறிந்திருக்க முடியும். பார்ப்பவர்களெல்லாம் தனக்கே உதவ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அகன்றிருக்குமோ?
அனுபவம் புதுமை
`வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்!’ என்கிறார்கள். நம் வாழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று தெரியாது. அதுதான் சுவாரசியமே.
வீட்டைவிட்டு வெளியே செல்லும் பயணமும் அப்படித்தான். நல்லதும் நடக்கலாம், நமக்குப் பிடிக்காததும் நடக்கக்கூடும். அனுபவங்கள் என்று எடுத்துக்கொண்டால், நமக்கு வேண்டாதவற்றை மறுமுறை தவிர்க்கலாம்.
விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே! பிறர் வீட்டில் தங்கினால் நாம் அடுத்தவருக்குச் செலவு வைக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நம் சௌகரியத்துக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடத்தில் வசதி, பிறருடைய பழக்கவழக்கங்களைப் புரிந்து நடப்பது — இதெல்லாம் நமக்கும் கடினம்தான்.
நாட்டின் அருகாமையிலுள்ள பிற நாடுகளைச் சுற்றிப் பார்க்கவோ சில தினங்களே போதும். வீடு திரும்புகையில், எல்லாமே புதியதாகத் தோற்றமளிக்கும். புத்துணர்ச்சி பெருகுவது இதனால்தான். எவ்வளவுதான் புதிய அனுபவங்களைப் பெற்று வந்தாலும், வெளியில் அலைந்து திரிந்து, ஓய்ந்துபோய் வந்தால், `நம் வீடு, நம் அறை!’ என்று நிம்மதியாக, மிதப்பாக இருக்கும்.
வியட்நாமில் ஒரு கோயிலில் ஷேக்ஸ்பியரைக் கடவுளாகக் கும்பிடுகிறர்கள்! புதிதாக ஓரிடத்திற்குச் செல்கையில், அங்கு எதை எதிர்பார்க்க முடியும் என்பதை அறியாததே உற்சாகத்தை அளிக்கவல்லது. எதையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதால், அங்கு பெறும் அனுபவங்களே சிறந்த கல்வி.
வித்தியாசமான பிறரை ஏற்று, விசாலமான மனப்பான்மையை அடைய ஒருவருக்கு தூரப்பயணத்தைப்போன்று வேறில்லை. ஆனால், அவை மட்டமானவை என்ற எண்ணம் கொண்டால் நம் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் இருக்காது.
இருபது ஆண்டுகளுக்குமுன், இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்பில் சாரோங் மட்டும் உடுத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். மார்பு திறந்திருக்கும். அது அவர்கள் கலாசாரம். மலேசியாவிலும், பூர்வ குடியினப் பெண்கள் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர்கள் இவர்களை புகைப்படம் எடுத்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. பெண்மையை மதிக்கத் தெரியாதவர்கள்!
ஆனால், இப்போது இப்பெண்களெல்லாம் சட்டை அணிகிறார்கள். அவர்களது நாகரீகத்தை மதிக்காது, உல்லாசப்பயணிகள் விரிந்த கண்களுடன் புகைப்படம் எடுத்ததன் விளைவோ?
புதிய இடங்களில், நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை வேறு கோணத்திலிருந்து பார்க்கவும் கற்கிறோம். அவைகளை மாற்றுவதிலேயே ஒரு மகிழ்ச்சி.
கதை
மழை நாட்களில் என் தாய் என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள், `மழையில் நனைந்தால் ஜூரம் வரும்!’ என்று.
மறுநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன், `நீ என்ன வெல்லக்கட்டியா? கரைஞ்சு போயிடுவியா?’ என்று.
சில ஆண்டுகளுக்குமுன், பாலியில் நானும் என் பேத்தியும் ஒரு சாயங்கால வேளையில் உலவச் சென்றோம். எங்களுடன் அருகில் தங்கியிருந்த செல்லம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் வந்திருந்தாள்.
வழியில் மழை வரும்போல் இருந்தது. அந்த அம்மாள் பயந்து, திரும்பிப் போய்விட்டாள்.
நாங்கள் தங்குமிடம் பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்க, “இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது. எப்படியும் நனையப்போகிறோம். எதற்காக ஓடவேண்டும்?” என்றேன். என் பேத்திக்குப் பரம சந்தோஷம். (எந்தச் சிறுமியைத்தான் நனைய விட்டார்கள் பெற்றோர்!)
மழை கொட்ட, இருவரும் கைகளைக் கோர்த்து, வீசிக்கொண்டு, பாடியபடி மெதுவாக நடந்தோம். பார்ப்பவர்களெல்லாம் சிரித்து, “குடை கொண்டுவரவில்லையா?” என்று (அநாவசியமாக) விசாரித்தார்கள்.
நாங்களும் சிரித்தபடி கையை ஆட்டினோம்.
அறைக்குத் திரும்பியதும், குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்தோம். அப்போதுதான் மழைநீர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
மறுநாள் காலை. செல்லம்மாள், “நல்ல வேளை, நான் ஓட்டமும் நடையுமா மழைக்குமுந்தி வந்துட்டேன்!” என, நான், “நாங்க ஜாலியா மழையிலே நனைஞ்சுண்டே வந்தோம்!” என்றேன், அந்த நினைவு எழுப்பிய பூரிப்புடன்.
“ஜாலியா?” என்று விழித்தாள் அம்மாது.
எங்களுக்குக் காய்ச்சல் வரவில்லை என்பதுடன், சில வருடங்களுக்குப் பின்னரும் அந்த நிகழ்ச்சி பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது அந்த வித்தியாசமான அனுபவம் அளித்த மகிழ்ச்சியால்.
எல்லாம் மனதில்தான்
கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவில் (அது ஆர்க்டிக் பகுதியாம்) நான் சந்தித்த ஒரு ஐரோப்பிய மாது மிக மெல்லிய சட்டை மட்டும் அணிந்திருந்தாள். நானோ, சட்டைக்குமேல் ஸ்வெட்டர், கோட்டு இத்தியாதிகளோடு நடுங்கிக்கொண்டிருந்தேன்.
“உங்களுக்குக் குளிரவில்லையா?” என்று அதிசயப்பட்டுக் கேட்டேன்.
“நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என் பாட்டி, “குழந்தே! ரொம்பக் குளிர்கிறது. வாசலில் நிற்காதே!’ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது இந்தக் குளிர் என்னை எதுவும் செய்வதில்லை. எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது,” என்று சிரித்தாள்.
அவள் வீட்டில் பல பூனைகள் இருந்தன. சாய்பாபா பஜன் கேட்கும்போதெல்லாம் அவை ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் என்று கூற ஆச்சரியமாக இருந்தது.
எந்தப் பயணமும் எளிதாக அமைந்து விடுவதில்லை. காய்ச்சல், தலைவலி, அஜீரணம் (அல்ட்ரா கார்பன்தான் (ULTRA CARBON) மிகச் சிறந்தது என்று விமானதளத்தில் உள்ள கடையில் சிபாரிசு செய்ய, உடனுக்குடன் குணப்படுத்தும் அது இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை), வயிற்றுப்போக்கு என்று பலவித உபாதைகளுக்கும் மருந்துகளை எடுத்துப்போவது நல்லது. புதிய இடத்தில் மருந்துக்கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.
எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டாலும், எப்படியோ குளறுபடி ஆகிவிடும். அதற்குப் பயந்து, நமக்குப் பழக்கமான சொகுசான இடத்திலேயே இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்னதான் படித்தாலும், தொலைகாட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா?
தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் அங்கோர் வாட்டைக் கண்டு களிக்க கம்போடியா சென்றிருந்தபோது, போரில் கால்களை இழந்தவர்கள் உட்கார்ந்த நிலையில் பாடிப் பிழைப்பதையும், அங்கிருந்த KILLING FIELDS என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்டையோட்டையும் கண்டு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று.
அதேபோன்ற பாதிப்பைத்தான் வியட்நாமிலிருந்த யுத்த கால அருங்காட்சியகமும் உண்டாக்கியது.
“இனிமேல் இங்கெல்லாம் வரவே கூடாது,” என்றேன், அந்த வேதனை அளித்த அலுப்புடன்.
என் மகள், “இங்குள்ள மக்களின் பிழைப்புக்கு நம்மைப்போன்ற உல்லாசப் பயணிகள் பெருமளவு உதவுகிறார்கள். யாருமே வராவிட்டால் என்ன ஆகும்?” என்றாள்.
உண்மைதான். பயணங்கள் மேற்கொள்வதால், நமது அறிவும் விசாலமாகிறது, அந்நியர்களும் பலனடைகிறார்கள்.
`எப்போதும் மகிழ்ச்சி குன்றாத நிலையில்தான் இருப்பேன்!’ என்றால் நடக்கிற காரியமா? துன்பம் அனுபவித்தால்தானே இன்பத்தின் அருமை புரியும்?
தொடருவோம்
-முனைவர் மு.புஷ்பரெஜினா
தமிழக வரலாற்றைச் சிறப்பித்த பெருமை சோழர்களையே சாரும். சோழர்களின் வரலாற்றை அறிய
உதவியாகப் பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள் இன்றிமையாத ஒன்று இலக்கியங்கள். இலக்கியங்களிலும் குறிப்பாக இக்கால இலக்கியங்களில் சோழர்களின் வரலாற்றை நம் கண்முன் கொணர்ந்த பெருமை வரலாற்று நாவல்களை இலக்கிய உலகிற்கு படைத்தளித்த கல்கியின் படைப்புகளையே சாரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
வரலாற்று நாவல்களின் தந்தை – கல்கி
சோழநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம், மாயூரத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்ற சிற்றூரில் பிறந்து, வரலாற்று நாவல்களால் தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் கல்கி. ஒருமுறை நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை மணல்வெளியில், நிலவொளியில் அமர்ந்திருந்த போதே கல்கிக்கு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் மனத்தில் தோன்றியதாகச் ’சிவகாமியின் சபதம்’ நாவலின் முன்னுரையில் கூறியுள்ளதன் மூலம் அறியலாம்.
கல்கியின் மனத்தில் வரலாற்று நாவலை எழுதவேண்டும் என்ற ஆவல் தோன்றியவுடன் தன்னை ஒரு வரலாற்று ஆராய்ச்சி மாணவனாகவே கருதிக் குறிப்புகளைத் திரட்டலானார். பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்ததோடு தான் எழுதவிருக்கும் வரலாற்று நாவலோடு தொடர்புடைய மாமல்லபுரம், தஞ்சை. இலங்கை போன்ற நாடுகளுக்கும், ஊர்களுக்கும், அஜந்தா போன்ற இடங்களுக்கும் சென்று கண்டு வந்தார்.
கல்கி தம் வரலாற்று நாவல்களில், வரலாற்றுச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று மாந்தர்களையும், கற்பனை மாந்தர்களையும் சேர்த்து வரலாற்றுக்கு முரணாகாமல் அக்கால மக்களின் பழக்க வழங்கங்கள், மனவியல்புகள், கலை, இலக்கியச்சிறப்பு முதலானவைகள் வெளிப்படுவதற்கு ஏற்ற கற்பனை வளத்தோடு, நாவலுக்குரிய தோற்றம், உள்ளடக்கம் குன்றாத வகையில் படைத்தளித்தார். ஆகவே கல்கி வரலாற்று நாவல்களின் வழிகாட்டி என்று புகழப்படுகிறார்.
கல்கியின் பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு கல்கியின் முதல் வரலாற்று நாவலாகும். மகத்தான மானுட நாடகங்களை உருவாக்க கல்கி எடுத்து வைத்த முதல் அடி இது எனலாம்.
அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு நாட்டுப்பற்று தோன்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கல்கி வரலாற்று நாவலை எழுதியிருக்க வேண்டும் என்று கூறும் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், கல்கியின் பார்த்திபன் கனவு நாவலின் முன்னுரையில்,
“சோழநாடு சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்டம் முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு, அக்கனவைச் சித்திரமாக எழுதி, ஏங்கி ஏங்கி வருந்துகிறான். தனது ராணியாகிய அருள்மொழியையும், தன் புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான். சுதந்திரத்தை மீட்கும் பொருட்டு நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியுடன் வீரப்போர் செய்து மடிகிறான். இவ்வாறு நாவலின் முதலிலிருந்து கடைசிவரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்பார்.
நாவலின் வெற்றி அதன் கதைக்கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு, உரையாடல், உத்திமுறைகள், காட்சி, வருணனை, நடை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே அமையும்.
பார்த்திபன் கனவு – கதைப்போக்கு
பார்த்திபன் கனவைக் கல்கி அவர்கள் மூன்று பாகங்களாகப் பகுத்துள்ளார். பார்த்திப சோழன் மரணத்துடன் முதல் பாகமும், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பதாகத் தொடங்கும் இரண்டாம் பாகம் விக்கிரமன் செண்பகத்தீவுக்குச் செல்ல, அரசி அருள்மொழி சிறுத்தொண்டருடன் புண்ணிய நகரங்களைத் தரிசிக்கச் செல்வதாகவும், அதன் பின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியுடன் மூன்றாம் பாகம் தொடங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை சுமார் பத்து ஆண்டுகள் நடப்பதாகக் கல்கி அமைத்துள்ளார்.
பார்த்திப சோழனின் கனவு, அவன் விக்கிரமனிடம் பெறும் வாக்குறுதி, சிவனடியாரான நரசிம்மர் பார்த்திபனுக்குத் தரும் வாக்குறுதி, அதன்படி விக்கிரமனைச் சுதந்திர மன்னனாக்கச் செண்பகத்தீவுக்கு அனுப்புதல், அவன் மாவீரத்தை விளக்கச் சிவனடியாரைக் கபால பைரவனிடமிருந்து விக்கிரமன் காப்பாற்றுதல், நரசிம்மர் அவனைச் சோழ நாட்டின் சுதந்திர மன்னனாக்குதல் என்பதாக நாவலின் கதை கட்டுக்கோப்போடு முரணின்றி வளர்ந்து முழுத்தன்மை பெறுவதை அறிய முடிகிறது,
பாத்திரப்படைப்பு
தன் சோழநாடு எப்படி இருக்க வேண்டும் என்று கனவு கண்டு ஓவியமாக வரைந்து, பெரும் படை கொண்ட நரசிம்ம வர்ம பல்லவனிடம் தோல்வி அடைந்து இறப்பதாகப் பார்த்திப மகாராஜா காட்சியளிக்கிறார்.
பார்த்திப மகாராஜாவின் மகனாக அவசரப்பட்டு எதையாவது செய்து மாட்டிக்கொள்வதும், அடுத்தவரின் உதவியில் தப்பித்துக் கொள்வதுமாக விக்கிரமனின் கதாப்பாத்திரம் மூலம் சுவாரசியப்படுத்தி இருக்கிறார் கல்கி.
படகோட்டி பொன்னனும், அவன் மனைவி வள்ளியும், சக்கரவர்த்தி மகள் குந்தவியும் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றனர். குந்தவி விக்கிரமனை நினைத்து உருகுவதும், அவனுக்காகத் தன் தந்தை நரசிம்மச் சக்கரவர்த்தியுடன் வாக்குவாதம் செய்வதுமாகிய இடங்களில் கல்கி அழகான வர்ணனையைத் தந்துள்ளார்.
நரசிம்ம வர்மனால் செண்பகத்தீவு சென்று மன்னனான விக்கிரமன் தேவசேனனாக மாறுவேடம் பூண்டு மாமல்லபுரம் செல்ல, வீரசேனனால் காப்பாற்றப்படுகிறான். மாரப்பனால் காஞ்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட விக்கிரமன் கபாலிகர்களிடமிருந்து பொன்னனால் காப்பாற்றப்பட்டு, மகேந்திர மண்டபத்தில் சிறுத்தொண்டர் குழுவினருடன் இருந்த அருள்மொழியைச் சந்திக்கின்றான்.
சிறுத்தொண்டர் பல்லவரின் படைத்தலைவராக வாதாபி சென்ற போது, அவரால் உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட, நீலகேசியே கபாலருத்ரபைரவன் என்றும், அவன் சூழ்ச்சியினால் கலகம் உண்டாக்கி நாட்டை வெல்லக்கருதியதாகக் கூற, மாரப்பன் நீலகேசியாகிய பைரவனைக் கொன்றார்.
விக்கிரமன் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட, விசாரணையில் நரசிம்மரே சிவனடியார் என்பதாகப் பாத்திரங்களைப் படைத்துச் செல்கிறார் கல்கி.
பார்த்திபன் கனவு நாவலின் தொடக்கமும் முடிப்பும்
பார்த்திபன் கனவு நாவல் தோணித்துறை எனும் அத்தியாயத்தில் காவிரிக்கரையின் இயற்கை வருணனையோடு தொடங்குகிறது. ராஜாவும் ராணியும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு யுத்தம் வரப்போவதாகப் பொன்னன் கூறுகிறான். அப்போது மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்த வீரன் ஒருவன் தோணியைச் செலுத்துமாறு கூறுகிறான்.
சோழநாட்டில் போர் வரப்போகிறதே! யாருடன் சோழன் போரிடப் போகிறான்? அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் ஒரு வீரன்! அது என்ன செய்தி? போரைப்பற்றிய செய்தியா? வேறு செய்தியா? என்று வாசகர்களைப் பார்த்திபன் கனவு எனும் கோட்டைக்குள் ஆவலுடன் நுழையச் செய்கிறது கல்கியின் நடை.
இவ்வாறு ஆவலுடன் தொடங்கிய பார்த்திபன் கனவு நாவல், நரசிம்மனின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனைக் கைப்பிடித்தாளா? விக்கிரமன் பார்த்திபனின் கனவை மெய்ப்பித்தானா? விக்கிரமனின் தாய் மீட்கப்பட்டாளா? விக்கிரமனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
பார்த்திபன் சிறந்த வீரன் என்பதை அறிந்த நரசிம்மர் தனது இலட்சியத்தையும் விடுத்து நாடு கடத்தப்பட்ட விக்கிரமன் அதை மீறித் திரும்பியதால், சோழரின் மணிமகுடத்தை விக்கிரமச் சோழர் இனிமேல் தனியாகத்தான் தலையில் தாங்க வேண்டும் என்று புதுமையான தண்டனை அளிக்க, விக்கிரமன் சோழ நாட்டின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தான்.
மேலும் பார்த்திபன் கனவில் ‘கனவு நிறைவேறியது’ என்னும் இறுதி அத்தியாயத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு நாடாக்கித்தன் கீழ் கொண்டுவந்து ஆளும் நரசிம்மவர்மரின் இலட்சியக்கனவு நிறைவேறவில்லை என்பதாக நாவல் சுவையிறக்கமாக அமைகிறது.
சோழ வரலாற்றை உணர்த்திய பார்த்திபன் கனவு
பொதுவாக வரலாற்று நாவல்களில் காணப்படுவது போன்றே வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்படுகின்றன என்றாலும், தமிழகத்தில் சைவமும் சமணமும் மோதிக்கொண்ட ஒரு காலச்சூழலில் காபாலிகச் சமயம் அரசியலில் செல்வாக்குப்பெற்றிருந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலும் சமயமும் கைக்கோர்த்துக் கொள்வதனால் நிகழும் தீமை தெளிவாக முன்வைக்கப்படுகிறது.
ஆனாலும் கடல் கடந்த நாடுகளில் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று பார்த்திபன் கண்ட கனவு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர், இராசராசன், இராசேந்திரன் ஆகிய சோழப்பேரரசர்கள் காலத்திலேயே முழுமையாக நிறைவேறியது என்னும் வரலாற்றை உண்மையை உணர்த்தும் வகையில் பார்த்திபன் கனவு நாவல் அமைந்துள்ளது. கல்கியைப் போன்ற வரலாற்று நாவலாசிரியர்களின் படைப்புகள் வழி நாட்டுப்பற்றும், மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும் இளைய சமுதாயத்தினரால் உணரப்படவேண்டும்.
துணை நூல்கள்:
–செண்பக ஜெகதீசன்
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும். (திருக்குறள்-817: தீ நட்பு)
புதுக் கவிதையில்…
உள்ளத்தில் பகைமையுடன்
உதட்டிலே சிரிப்பைக் காட்டும்
உறவு நட்பல்ல…
அதைவிட,
பகைமையையே காட்டிடும்
பகைவர் தரும் துன்பம்,
பத்துகோடி மடங்கு
இன்பந்தரும்…!
குறும்பாவில்…
பகைகொண்ட உளத்துடன் நகைப்போர்
நட்பைவிட, பகைவர்தரும் துன்பம்,
பத்துகோடி மடங்கு இன்பமே…!
மரபுக் கவிதையில்…
நெஞ்சில் முழுதும் நஞ்சுவைத்து
-நிறைந்த பகையை மறைத்துவிட்டே
கொஞ்சும் மொழியுடன் நகைத்துவரும்
-கொடியோர் நட்பு வேண்டாமே,
பஞ்சில் நெருப்பாய்ப் பகைவர்தரும்
-பற்பல வகையாம் துன்பங்களும்,
அஞ்சிடத் தக்கயிந் நட்பைவிட
-அதிகக் கோடியாய் இன்பமாமே…!
லிமரைக்கூ…
சிரித்திடுவார் பகையையுள் மறைத்து,
தீநட்பிதனைவிடக் கோடிமடங்கு இன்பமே, வரும்
தீயோர்துன்பம், பகையதை நிறைத்து…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம் தீநட்பு
வெசமாக் கொல்லும் தீநட்பு…
உள்ளே பகய மறச்சிவச்சி
வெளியே சிரிப்போர் ஒறவுவேண்டாம்…
அப்புடிப்பட்ட நட்பவிட
நேருல மோதுற பகயாளி
நமக்குக் குடுக்கிற துன்பமெல்லாம்
கோடி மடங்கு இன்பந்தான்…
அதால,
வேண்டாம் வேண்டாம் தீநட்பு
வெசமாக் கொல்லும் தீநட்பு…!
-இன்னம்பூரான்
ஜூலை 28 2017

பிரசுரம்:
மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது:
‘… தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது… உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது “புளியமர விளாரால்’ அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோமீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர். உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.
கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப்போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்…தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார். இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில்
கடும்தண்டனையும் அனுபவித்தார். தனது இளையமகன் சங்கரனையும் விடுதலை போராட்டத்தில் வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார். இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. மகளின் திருமணத்தைக்கூட சிறைத் தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது. அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த “தியாகதீபம்’ வைத்தியநாதய்யர். அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்…’. அந்த பதிவை படித்த திரு நரசய்யா அவர்களின் ஆதங்கம்:
‘இது தான் இன்றைய அரசியல்! தலை குனிய வேண்டியவர்களாயுள்ளோம். நான் சென்ற வாரம் மதுரை சென்றிருந்த போது, ஊரெல்லாம் ஒரு தலைவரின் கட் அவுட்டுகளாகவே இருந்தன. சுதந்திரம் இந்தியாவில் எவருக்குக் கிடைத்துள்ளது? தீர அலோசிப்போம்!’.
[அவருடைய குடும்பத்திற்கும் வைத்யநாதய்யர் குடும்பத்திற்கும் தொடர்புண்டு. அவர் குமாரர் வை சங்கரன் இவரது சகோதரரின் உற்ற நண்பர். ஆலயப்ரவேசத்தில பங்கு கொண்ட புலி அய்யர் – இயற் பெயர் சுப்ரமணிய அய்யர்- இவரின் உறவினர்.
ஆம் மதுரை ஏ. வைத்தியநாதய்யர் அவர்களை பற்றிய இந்த நூலின் பெயர் ”ஹரிஜனத் தந்தை.” தன் இடம், பொருள், உடல், ஆவி, குடும்பம் எல்லாவற்றையும் முழுமையாக நசுக்கப்பட்டவர்களை உய்விப்பதற்கு அர்ப்பணம் செய்த இவர் திட்டமிட்டு மீனாக்ஷி ஆலயப்பிரவேசம் செய்து, ராஜாஜி இதற்கேற்ற சட்டம் இயற்றியதை போற்றவேண்டும். அதற்கு முன் ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி நசுக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளவில்லை என்பது வரலாறு. அது மேன்மக்களாட்சி.
எல்லாவற்றிற்கும் அரிஜன சேவாசங்கத்தின் தலைவர் என்ற முறையில் பொருளுதவி முதல் பல தொண்டுகள் செய்த சான்றோன், இவர். மதுரையில் இவருடைய விசாலமான வீடு ஓர் அன்னதான சத்திரம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://upload.wikimedia.org/wikipedia/ta/d/d7/Vaithiyanatha_aiyar.jpg
”செத்தாத்தான் என்னவோய் ! சேதாரம் மேனிக்கே!
பத்தாம்நாள் பாலூத்தும் பங்காளி ! -சத்தான
ஆன்மா இருக்கிங்(கு) அனைத்துக்கும் சாட்சியாய்,
வீண்நான் உடம்பை விலக்கு’’….கிரேசி மோகன்…
“பார்வையின் கோணத்தில் பேதம் விலகிட –
பார்க்கும் பொருள்கள் பரமசிவம் -தீர்வை –
அவனிடமே விட்டு அகார்யமாய் வாழு,
சிவனிட பாகத்தைச் சார்ந்து “….கிரேசி மோகன் ….!
சரியா !….இல்லை பகவான் சொல்வது போல ‘’சப்தஜால மஹாரண்யத்தில்(சொற்கள் என்னும் பெருங்காடு)’’ சஞ்சரிக்கின்றேனா….!
”அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
வாடிக்கை யாளனாக வா”….கிரேசி மோகன்….!
பவள சங்கரி
தலையங்கம்
சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைகளைப் பொறுத்தவரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தின் (DRDO) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் சிஏஜி யால் தரம் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால் தவறு எங்கே நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பாதுகாப்பு விசயத்தில் மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.
http://www.cbsnews.com/videos/
http://www.onenewspage.com/
https://astrogeology.usgs.gov/
+++++++++++++++
நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில்
நீர்ப்பனித் தேக்கம் பேரளவு
இருப்பதாய் நாசா நிபுணர்
தெரிவிக்கிறார் !
குடிநீரை விண்கப்பலில்
கொண்டு செல்வது
கோடி கோடிச் செலவு !
மறைமுக நீர்ப்பனிப் பாறை
பல யுகங்களாய்
உறைந்து கிடக்கும்
பரிதி ஒளிக்கதிர் படாமல் !
எரிசக்தி உண்டாக்கும்
அரிய வாயு ஹைடிரஜன்
சோதனை மோதலில் வெளியேறும் !
செவ்வாயிக்குச் செல்லும்
பயணிகட்குத்
தங்குமிடம் அமைக்க
வெண்ணிலவில் பனிப்பாறைத்
தண்ணீர் வசதி !
எரிசக்தி ஹீலிய வாயு
பிராண வாயு சேமிக்கும் !
மீதேன், மெர்குரி, மெக்னீசியம்
வெள்ளி, அம்மோனியம்
உள்ளன !
இந்திய விண்ணுளவி சந்திரியான்
துருவக் குழிகளில்
பெரும் பனிநீர்ப் பாறைகள்
இருப்பதைக் காட்டும் !
நிலவின் அடித்தட்டிலும் நீர் உள்ளது !
பரிதி ஒளிக்கதிர் புகாத
படு பாதாளத்தில்
பாறை நீரைத் திரவ மாக்கி
மேற்தளத் துக்கு
ஏற்றுவது சிரம மானது !
+++++++++++++++++

நிலவின் நீர்மயக் கரும் படிவுகள் பல தளங்களில் பரவியுள்ளன. அவற்றிலிருந்து தெரிவ தென்ன ? அப்பெலோ -15 & -17 பயணத்தில் அமெரிக்க விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நீரியல் மாதிரிகள் ஒருதடவை நேர்ந்தவை அல்ல. நிலவின் எரிமலைக் கரும்படிவு மாதிரிகள் [Lunar Pyroclastics] யாவும், நிலவின் உட்தள நீர்மயச் செழுமையைக் காட்டுகின்றன.
ரால்ஃப் மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]
அப்பொலோ மாதிரிகள் நிலவின் உட்தளம் வெளியேற்றிய எரிமலைச் சாம்பல்கள். அவை ஆழ்ந்து சோதிக்கப் பட வேண்டியவை. ஆனால் சோதிக்கப் படாதவை. ஏறக்குறைய மாதிரிகள் அனைத்தும் நீர்த்தடம் உள்ளதாகக் காட்டியுள்ளவை. ஆதலால் நிலவின் உட்தளம் ஈரமானது என்பது இப்போது ஆய்வு மூலம் அறியப் படுகிறது.
ரால்ஃப் மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

நிலவின் உட்தளத்தில் நீர்மய இருப்புக்கு மிகுந்த ஆதாரங்கள், எப்படியோ சந்திரனில் நீர் வெள்ளம் நீடித்துப் பிழைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. மோதலில் தோன்றிய நிலவை, முரண்கோள், வால்மீன்கள் தாக்கி நீர் மேவி உடனே உறைந்து போயுள்ளது. நிலவின் உட்பகுதியில் எப்படி நீர்வெள்ளம் புகுந்தது என்பதுதான் நமது இப்போதைய பெரிய கேள்வி !
சூவாய் லி : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்
நிலவின் குளிர்ந்த துருவங்களில் உள்ள ஒளிமறைவுக் குழிகளில் நீர்ப்பனிக்கட்டிகளை விண்ணுளவிகள் படமெடுத்துள்ளன. ஆனால் நிலவின் மேற்தளத்தில் காணும் எரிமலைச் சாம்பல் படிவுகளை [Pyroclastic Deposits] எடுத்து ஆய்வு செய்வது எளிது. எதிர்கால விண்வெளி விமானிகட்கு பூமியிலிருந்து ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதைத் தவிர்க்கும் எந்த நீர்மயக் கண்டுபிடிப்பும் ஒருபெரும் முன்னடித் தடவைப்பே ! எமது ஆய்வு விளைவும் ஒரு புதிய மாற்று வழியைக் காட்டுகிறது.
சூவாய் லி : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்
நிலவின் தளம் மீது நீர்மயப் பாறைகள் கண்டுபிடிப்பு
நிலவின் குளிர்ந்த துருவப் பகுதிகளில் உள்ள ஒளிபுகா உச்சக்குளிர் ஆழக் குழிகளில் [Shackleton Crater in South Pole] பேரளவு நீர்ப்பனிக் கட்டிகள் இருப்பதை நாசா விண்ணுளவி [Lunar Reconnaissance Orbiter (LRO)], இந்திய விண்ணுளவி சந்திரியான் -1 ஆகிய இரண்டும் கண்டுபிடித்துள்ளன. இந்த நீர்வளம் நிலவிலிருந்து திரவமாய் எடுக்கப்பட்டால் அம்முயற்சி சிக்கன முறையில் எதிர்கால அண்டவெளிப் பயணங்கள் தொடர்ந்து திட்டமிடப் பேருதவி புரியும்.
அந்த உச்சக்குளிர் ஆழ்குழியில் எத்தனைத் டன் நீர்ப்பனிக் கட்டிகள் உள்ளன என்று தெரியாது. ஆழ்குழி முழுவதும் நிரம்ப வில்லை. சாக்கிள்டன் ஆழ்குழி 12 மைல் [20 கி.மீ.] விட்டம் உள்ளது, 3 மைல் [4.4 கி.மீ.] ஆழம் கொண்டது. அது நிலவில் உள்ள மிகப்பெருங்குழி என்று அறியப் படுகிறது. நிலவின் வட துருவ ஆழ்குழிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் நீர்ப்பனிக் கட்டிகளில் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் நீர் வெள்ளம் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது. அந்த நீர்க் கொள்ளளவை மின்சாரம் மூலம் பிரித்தெழும் வாயுக்களைத் திரவ ஹைடிரஜன்/ திரவ ஆக்சிஜென் ஆக மாற்றினால் 2200 ஆண்டுகளுக்கு தினமொரு விண்வெளி மீட்சிக் கப்பலை [NASA Space Shuttle] ஏவிட முடியும். விண்வெளிப் பயணத்தின் போது விமானிகள் குடிக்க ஏராளமான நீர்ப்புட்டிப் பாட்டில்களை மிகுந்த செலவில் சுமந்து செல்ல வேண்டாம். விண்வெளி விமானிகள் தங்கவும், ராக்கெட் எரிசக்தியை மீண்டும் நிரப்பிக் கொளவும் நிலவுக் குடியிருப்புக் கூடாரங்கள் நிறுவ ஏதுவாக இருக்கும்.
“நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை ! இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும். நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம். முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.
டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)
“நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது. விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”
மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)
“வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ? நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது. ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன. அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C). அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”
டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.
“நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”
கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)
“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”
ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)
நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் சேமிப்புகள் இருப்பது உறுதியானது
2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில் (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன. நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழி களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது. ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது. முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது. மோதலில் வெளியேறிய தூசி, துணுக்கு களில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது. 2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது. இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.
நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி. 1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது. இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது. அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது. 1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !

2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.
நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?
சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார். சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி. ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும். அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன. தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.
சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது. பரிதியி லிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன. அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.
நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன. சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது. சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது. சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.
வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார். வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்தி ருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார்.
காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387 F (-233 C). இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறை யாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன ! இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !
வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தி உள்ளது
2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது. லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது. உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலை களின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.
அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது. லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது. நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A). 25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை
2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின ! முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.
அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப் பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !
நிலவு பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்
நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே ! அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும். இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை : பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி ! அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி ! அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத் துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி ! அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் ! இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !
தகவல்:
Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites
1. Indian Space Program By: Wikipedia
2 http://www.thinnai.com/?
3. http://www.thinnai.com/?
4. Times Now India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
6 Cosmos Magazine The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
7. Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]
8. Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
9 Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)
12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)
13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)
14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)
15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)
16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)
17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)
18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)
19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)
20. Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)
21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)
22 Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)
23. Scientific American : LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)
24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)
25. National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)
26. International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)
27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)
28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)
29 https://jayabarathan.
30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)
31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)
32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)
33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)
34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)
35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)
36. https://www.
37. https://www.theverge.com/
38. https://www.sciencedaily.com/
39. https://www.
40. http://earthmysterynews.
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July 29, 2017)