Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”வைதசிசு பாலன் வசவுநூறைத் தாண்டிட
    மைதவழ் கண்ணன் முறுவலித்து -எய்த,
    சுதர்ஸனம் சென்றவன் சென்னியைக் கொய்து
    நுதற்சிவன் கண்ணா னதே’’….கிரேசி மோகன்….!

    நுதற்கண் -நெற்றிக் கண் நெருப்பு
    சென்னி -கழுத்தை நெறித்துக் கனலானது….!(சிவன் -நெற்றிக் கண்ணன், இவர்-வெற்றிக் கண்ணன்)….!

    Share
  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 04.08.2017 ல் வரலக்ஷ்மி தினத்தை முன்னிட்டுவரம் அருளும் ஸ்ரீ வர மஹாலக்ஷ்மி யாகத்துடன் கூழ்வார்த்தல் விழா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குளந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோபூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெறவுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும் முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன.ஆயுள், ஆரோக்யம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள் இருக்கின்றன.

    வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.

    ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

    அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமி பூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.

    மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம்.

    இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமி விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். இத்தகைய சிறப்புவாய்ந்த வரலக்ஷ்மி தினத்தில் நடைபெறும் மேற்கண்ட யாகத்திலும் கூழ்வார்த்தல் நிகழ்சியிலும் கலந்துகொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

    மேலும் விபரங்களுக்கு,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
    வாலாஜாபேட்டை – 632513
    வேலூர் மாவட்டம்.
    Ph : 04172-230033 / 230274/9443330203
    Web: www.danvantritemple.org

    Share
  • Encounter With A Difference – வேறுபாட்டுடன் ஓர் சந்திப்பு

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின் – மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    1 (1)

    எனக்காகக் காத்திருக்கிறாய் நீ,
    உனக்காகக் காத்திருக்கிறேன் நான்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருக்கிறோம்.

    நீ என்னிடம் வருவதில்லை,
    நான் உன்னிடம் வருவதில்லை.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் வருவதில்லை.

    ஒருநாள் நான் உன்னிடம் வருவேன்
    ஆனால் நீ என்னிடம் வராமலே போகலாம்.

    ஒரே மனமுள்ள நீயும் நானும் காத்திருந்தாலும்
    ஒரே மனமென்பதால் என்றுமே வருவதில்லை.

    Share
  • மருதத்தச்சன்

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். இவை புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும். அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் பங்கயத்தில் உறைபவர்கள். பங்கயமெனும் தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    Vishnu- Lakshmi

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முதல் பாட்டிலேயே அழகுபட ஒரு சுவையான மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். முதல்பருவமான காப்புப்பருவத்தின் முதல்பாடலில் திருமாலின் பெருமையைக் கூறும்போது அவன் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார்.1

    காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.

    (மீனாட்சியம்மை பி. த.- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

    ‘கையணை முகந்துசெல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல’ எனும் பொருள்படும்.

    ***

    அடுத்து, தாலப்பருவத்தினின்று ஒரு அழகான கற்பனைக்குவியல்!

    கயல்மீன்கள் துள்ளிக் குதித்து மகிழ்கின்றன. மேகங்கள் பொழிகின்ற மழைநீரிலும், சுழியை வீசியெறியும் கழிமுகத்திலும், சிறிய குழிகளிலும், கரையிலும், கரையை மோதுகின்ற அலையிலும், தலையை விரித்துக் கொண்டிருக்கும் தாழம்புதர்களிலும், இளம்பெண்கள் விளையாடுமிடங்களிலும், நெற்போர்களிலும், அதன் பக்கமாக அமைந்துள்ள உழவர்களின் வீடுகளில் உள்ள நெற்கூடுகளிலும் குளத்தில் நிறைந்த நீரிலும் இந்தக் கயல்மீன்கள் குதித்துக் கூத்தாடிப் போர்புரிந்து மகிழ்கின்றன. இவை மருதநிலத்துச் செழிப்பினைப் புலப்படுத்துகின்றன.

    இவற்றை, இக்கயல்மீன்களை மதுரைநகர்வாழ் கணிகையரின் கண்களுக்கு உவமையாக்கி அவை புரியும் போரினை நயம்பட விளக்குகிறார் புலவர்.

    அப்பெண்டிர்தம் கண்களாகிய கெண்டைமீன்கள், தேரில் செல்லும் இளைஞர்களுடைய மார்பிலும், அவர்களுடைய செல்வச் செழிப்பிலும், போர்புரியும் ஒப்பில்லாத கட்டமைந்த வில்லிலும், திரண்ட மலைபோன்ற தோள்களிலும், ஊடலை நீக்கிட அவர்கள் பெண்டிர் கால்களில் பணியும்போது உதிர்ந்த மாலையிலும், சென்று போர் செய்கின்றன; அத்தகைய மதுரைக்கு அரசியே! தாலோ! தாலேலோ! சங்கம் வளர்ந்திட நின்று அருள்செய்த பொற்கொடியே! தாலோ! தாலேலோ!

    நீரிலுள்ள கயல்மீன்கள் பெண்களின் கண்களாகிய கெண்டைமீன்களுக்கு உவமையாகின்றன.

    உவமைநயம் மட்டுமின்றி, சந்தநயமும் பொருந்தியதொரு சிறப்பான பாடல் இதுவாகும். பாடியோ பொருள்கூட்டிப் படித்தோ பார்த்தாலே இதனழகு கண்முன் விரியும்!

    காரிற் பொழிமழை நீரிற்சுழியெறி

    கழியிற் சிறுகுழியிற்

    கரையிற் கரைபொரு திரையிற்றலைவிரி

    கண்டலில் வண்டலினெற்

    போரிற் களநிறை சேரிற்குளநிறை

    புனலிற் பொருகயலிற்

    பொழிலிற் சுருள்புரி குழலிற்கணிகையர்

    குழையிற் பொருகயல்போய்த்

    தேரிற் குமரர்கள் மார்பிற்பொலிதரு

    திருவிற் பொருவில்வரிச்

    சிலையிற் றிரள்புய மலையிற்புலவி

    திருத்திட ஊழ்த்தமுடித்

    தாரிற் பொருதிடு மதுரைத்துரைமகள்

    தாலோ தாலேலோ

    சங்கம் வளர்ந்திட நின்றபொலன்கொடி

    தாலோதாலேலோ

    (மீனாட்சியம்மை பி. த.- தாலப்பருவம்- குமரகுருபரர்)

    இன்னும் பிறிதோரிடத்திலும் மருதநிலத்துச் சிறப்பை நயம்பட உரைக்கிறார் குமரகுருபரனார்.

    Paddy-field (1)

    அழகான மருதநிலத்து வயல். அந்தப் பசிய மருதநிலத்தில் திருமகள் குடியிருக்க விருப்பம் கொண்டுள்ளாள். அவள் ‘மருதம்’ எனும் பெயர்கொண்ட தச்சனிடம் தனக்காக அழகான ஒரு வீட்டினை அமைக்க வேண்டுகிறாள். அவள் விருப்பம் என்னவென்று தெரிந்த தச்சன் அவன். அவன் அழகான பல தாமரைப்பூக்களாகிய கோவில்கள் பலவற்றை அவளுக்காகச் சமைத்தருளுகிறான். இனி அவள் குடிபுக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமே! அவள் உள்ளே புகுவதற்காக அவ்வீடுகளின் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாமா?

    இதற்காக வண்டுகள் துணை செய்கின்றனவாம்! மகரந்தப்பொடியை அளைந்து தேனருவிப் பெருக்கில் துளைந்து மூழ்கி விளையாடும் அறுகால் தும்பிகளாகிய அவ்வண்டுகள் விடியற்காலையில் அத்தாமரைமலர் வீடுகளின் பசிய இதழ்களெனும் கதவுகளைத் திறக்கின்றனவாம்! பின் இலக்குமி குடியேற ஏது தடை? இவ்வாறு குமரகுருபரர் மதுரையின் மருதநில அழகினைச் சொல்லோவியமாக நம் கண்முன்பு வரைகின்றார்.

    ‘சுண்ணந் திமிர்ந்து தேனருவி

    துளைந்தா டறுகால் தும்பிபசுந்

    தோட்டுக் கதவம் திறப்பமலர்த்

    தோகை குடிபுக் கோகைசெயும்

    தண்ணங் கமலக் கோயில்பல

    சமைத்த மருதத் தச்சன்………. ‘

    (மீனாட்சியம்மை பி. த.- வருகைப்பருவம்- குமரகுருபரர்)

    இவ்வாறு எண்ணற்ற இலக்கிய நயங்களைக் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. இன்னும் கண்டு களிப்போம்.

    *****

    மீனாட்சி பாலகணேஷ் . இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-1- வல்லமை – செப்.9, 2015. )

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • திரைப்பாடல்களில் உறவுமுறை: தந்தை-மகன்/தாய்-மகள் – ஆய்வு  

     –பேரா.செல்வ கனிமொழி 

    முன்னுரை:

    உறவுமுறைகள் காலங்கடந்தும் வாழுகின்ற மக்கட்பண்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இவற்றில் தந்தை – மகன் – தாய் – மகள் என்னும் உறவு பிரிக்கமுடியா நிலையுடையது. அவ்வுறவில் பொதிந்திருக்கும் அன்பின் அடர்த்தியை உணர்ந்த இயல்பான மக்கள் தாங்கள் பாடிவைத்த மக்கட்பாடல்களில் அதைப் பதிவுசெய்திருந்தனர். அதனையொட்டி எழுந்த பல்வேறு இலக்கியங்களிலும் அதைக் காணமுடிகின்றது. இத்தன்மையைத் திரைப்படப்பாடல்களில் பாடலாசிரியர்கள் உறவுமுறைகளின் உயிர்மை குறையாமல் எடுத்தாண்டுள்ளனர். அவ்வகையில் திரையிசைப்பாடல்களில் வெளிப்படும் தந்தை – மகன் – தாய் – மகள் உறவுமுறை குறித்த அடர்ந்த அன்பை ஆராய்வது இக்கட்டுரை. 

    உறவுப் பொதுநிலை: 

    தாயிற் சிறந்த கோயிலுமில்லை
    தந்தைசொல் மிக்க  மந்திரமில்லை
    ……………………………
    அன்னை தந்தையே அன்பின் எல்லை. 

    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    மாதா பிதா குரு தெய்வம்  (முன்னோர் மொழி)

    இவ்வாறாகத் தாய் தந்தையரின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சமூக வாழ்வியல் இல்லறத்தில் கணவன் மனைவி என்பதான உறவு முறை ஒரு கூறாகும். இதில், இருவருக்கிடையிலான புரிதல், மற்றும் இன்பவாழ்வின் வெளிப்பாடு மழலை எனலாம்.

    கணவன் மனைவி என்ற நிலையில் இருந்து அடுத்த படிநிலையாகத் தாய் தந்தை என்னும் வளர்ச்சியை, பெருமையினை எய்துகின்றனர். வழித்தோன்றல் என்பது முக்கிய ஒன்று எனலாம். மனித வாழ்வில் பல உறவுமுறைகள் காணப்படுகின்றன. தாத்தா-பாட்டி – மாமன்–அத்தை – பெரியப்பா–பெரியம்மா – சித்தப்பா–சின்னம்மா – அண்ணன்–தம்பி – அக்கா–தங்கை – எனக் குறிப்பிடலாம். இவை மனிதகுலத்தைப் பிணைப்போடு வாழச் செய்கின்ற உறவின் முறை ஆகும். இவற்றையெல்லாம் கடந்து பார்க்கின்றபோது,

    `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்பது கணியன் பூங்குன்றனாரின் அன்பினை எடுத்துரைக்கும் வலிமைமிக்க பாடல்.  இதில், இவ்வுறவு முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுவது,

         தாய்-மகன்
         தந்தை-மகள்

    உறவின் நிலைப்பாடு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தை இருந்தாலும், அன்பு என்பது ஒன்றே. இருப்பினும், தாய்க்கு மகன்மீதும், தந்தைக்கு மகளின் மீதும் இருக்கக் கூடிய அன்பு, பாசம் என்பது இயற்கையான ஒன்று. இதே போல் பெண்மகள் தந்தை மீது செலுத்தக் கூடிய பாசமும், ஆண்மகன் தாய்மீது வைக்கக்கூடிய பாசமும் சமுதாய வாழ்வில் கண்கூடு.

    தாயானவள் தன்மகனை வாழ்வின் ஆதாரம் என்று கருதுகின்றாள். ஆனால், தந்தையோ தன்மகளை இன்னொரு தாயாகவே பார்க்கின்றான்.

    `தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டத் தாய்`
    என்று வள்ளுவம் சுட்டுகின்றது.

    `மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்` என்கிறார் கவிமணி.

    இதன்மூலம் ஆண்- பெண் குழந்தையின் பெருமை உணரப்படுகின்றது.

    அவ்வகையில் தாய்–மகன் – தந்தை–மகள் பிணைப்பு திரைப்படங்களில், குறிப்பாக சிறுவருக்கான திரைப்பாடல்களில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகக் கொள்ளலாம்.

    திரைப்பாடலில் தாய்-மகன்:

    திரைப்படங்களில் பொருண்மை என்பது வரலாறு, காதல், துயரம், வீரம், நகைச்சுவை என வகைப்படுத்திக் கொள்ளலாம். இதில், ஏதாவது ஒரு காரணியாகக் குழந்தை அல்லதி சிறாரின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். அப்படிப் பார்க்கின்றபோது சில படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    ராம், வேலையில்லாப் பட்டதாரி, மன்னன், அப்பா, தோனி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

    சான்றாகப் பாடல்,

    `ஆராரிரோ நான் இங்குப் பாட
    தாயே நீ கண்ணுறங்கு
    என்னோட மடிசாய்ந்து` (ராம்)

    `அம்மா அம்மா எனக்கு யாரு? அம்மா!
    உன்ன விட்டா எனக்கு யாரு? அம்மா!` (வேலையில்லாப் பட்டதாரி)

    `அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையே` (மன்னன்)

    என்பது போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். தாய்-மகன் உறவு நிலையில் இவை சில. இதுபோல எண்ணிலடங்காப் பாடல்கள் காணக்கிடக்கின்றன.

    `சான் பிள்ளை ஆனாலும்
    ஆண் பிள்ளை` (பழமொழி)

    எனக்கருதும் மனப்போக்கு தாயிடம் உள்ளது எனலாம். தன் வாழ்வாதாரம் தன் மகன் என நினைக்கின்றாள் தாய்; அதுபோலவே மகனும் தன் தாயின் மீது எல்லையற்ற பாசமும் பற்றும் கொண்டவனாக இருக்கின்றான்.

    `அம்மா என்றால் அன்பு`என்பதற்கேற்பப் பசித்திருக்கும் வேளையறிந்து உணவுத்தரக்கூடியவள், தன்னலனை நாடாமல் தன்மகன் நலனையே எண்ணிப் போற்றுபவளாக இருப்பவள், வாழ்பவள் தாய் என்றால் மிகையன்று.

    தந்தை – மகள் – பிணைப்பு:

    குழந்தைக்குத் தாய் முதன்மையானவள் என்றால், தந்தை அதற்கு அடுத்து போற்றப்படக் கூடியவர். பல வீடுகளில் தந்தையே தாயாக மாறி வாழ்பவர் இருக்கின்றனர். தாயுமானவன் என்று சொன்னால் அது அமிழ்தம்.

    ஒரு தந்தைக்குத் தன் இருபால் குழந்தைகள் மீதும் அன்புஉண்டு. இருப்பினும் பெண் பிள்ளைகளைத் தாயாகப் பார்க்கும் தந்தையர் ஏராளம் ஏராளம். ஒரு குடும்பத்தில் மூத்தபிள்ளை பெண்ணாகப் பிறக்கின்றபோது, அக்குழந்தையினை மகாலட்சுமியாகவே கருதுகின்றனர். சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவை காலப்போக்கில் அழிந்துவிட்டன எனலாம்.

    தந்தை மகளின் அன்பினை வெளிப்படுத்தும் சில படங்களின் பாடல்களைக் காணலாம்.

    • கன்னத்தில் முத்தமிட்டால்
    • சொல்ல மறந்த கதை
    • அபியும் நானும்
    • சிறுத்தை
    • தெய்வத்திருமகள்
    • தங்க மீன்கள்
    • உன்னை அறிந்தால்
    • உன்னைச் சொல்லி குற்றமில்லை
    • பசங்க-2

    இதில்,  சில படங்களில் பாடல்களைக் பார்க்கின்றபோது தந்தை – மகளின் பிணைப்பு நெகிழச்செய்கிறது எனலாம்.

    சான்றாக, 

    வாவா என் தேவதையே
    பொன்வாய் பேசும் தாரகையே
    பொய் வாழ்வின் பூரணமே
    பெண் பூவே வா (அபியும் நானும்)

    என்பதில், தந்தை தன் மகளை இளவரசியாக, தேவதையாகப் பல வடிவங்களில் நோக்குகின்றான்.

    `சித்தாடைக் கட்டியவள் நடக்கும்போது
    பெத்தவள் சாயல் என்று நினைத்துக்கொண்டேன்.

    எனவும், `தங்கத்தை மார்போடு அணைக்கையிலே தாய்மையின் பெருமையினை உணருபவராக குறிப்பிடுவது மறுக்க இயலாத உண்மை.

    இதைப்போல், வேறொரு பாடலில்,

    `உனக்கென்ன வேணும் சொல்லு`

    என்பதில் மகளோடு தந்தை இருக்கும்போது உலகமே மாறிவிட்டதாகவும், புது உலகம் சென்றதாகவும் எண்ணச்செய்வது உடல் சிலிர்க்கச் செய்கின்றது. தாலாட்டு என்பது தாய்க்குரியது மட்டுமல்ல தந்தைக்கும் உண்டு என்பதைப் பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது. 

    ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
    ………………………….. மழலையின் மொழிகேட்டு
    தாயாகத் தந்தை மாறும்………………     (அபியும் நானும்)

    என்பதிலிருந்தும்,

    ஆராரோ ஆரிரரோ
    அம்புலிக்குத் தான் இவரோ (சிறுத்தை) 

    எனவரும் பாடலிலும் தந்தை தாலாட்டுப் பாடுவதாக இருப்பது அவர்களின் அன்பினைப் புலப்படுத்துவதாகவே அமைகின்றது. மேலும்,

    ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
    நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
    அன்பெனும் குடையை நீட்டுகிறாய்… (தங்கமீன்கள்)

    மகளை ஆனந்தயாழ் இசையாகக் கருதுவது சொற்களில்லா வார்த்தை எனலாம். 

    முடிவுரை:

    திரைப்பாடல்கள் தரமுள்ளவை தரமற்றவை என்னும் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அப்பாடல் மக்கள் மனத்தில் எளிதில் சென்றுசேரும் ஊடகக்கருவியாகத் திகழ்ந்துக்கொண்டிருக்கிறது. திரையிசைப்பாடலுக்கான மெட்டுக்குள் வார்த்தைகளை நுழைப்பது நேர்த்தியே. திரைப்பாடல்களில் குழந்தைகளுக்கான பாடல்கள், குழந்தைகள் பிம்பங்களாக வந்து நிகழ்த்தும் பாடல்கள் என்று குழந்தைகளுக்கும் தாய் தந்தையர்களுக்குமான உறவுநிலை உணர்த்தும் பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கால வேறுபாடின்றி இத்தன்மைத்தான பாடல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

     

    Share
  • ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

    start-dot

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இலக்கில்லாமல் யாவரும் வாழ்வில் பயணித்தாலந்த

    ……இல்வாழ்க்கை யென்பதொரு போதும் பயன்தாரா.!

    இலகுவாகப் வாழ்வின் உச்சம்தொட நினைத்து

    ……இதுதான் வழியென வகுத்துக் கூறவுமுடியாது.!

    பலபிறவி எடுத்தாலும் மாந்தர்பிணி யென்றும்தீராதாம்.!

    ……சிந்தனைசெய்து சீரும்சிறப்புமாக வாழ்வதற்கு மனித

    குலத்திற்கே மகத்தான வரமாகுமந்தச் சிந்தனையே..

    ……ஒரு புள்ளியில் தொடங்கும் புனிதப்பயணமாகும்.!

     

    கருப்பையில் தோன்று மதற்குள்ளொரு புள்ளியாகத்

    ……தொடங்குகிற வாழ்க்கை பயணமதன் முடிவுவரை..

    கருத்தோடு வாழக் கற்கவேண்டு மொருபாடம்.!

    ……கருவறைமுதல் கல்லறைவரை கற்றலே வாழ்க்கை.!

    பொருள் பொதிந்த வாழ்வதனை வாழ்வதற்கேநாம்..

    ……பெற்றிடுவோம் அனுபவங்கள் புதிதா யனுதினமும்.!

    ஒருநிறுத்தமிலா பயணம்தான் வாழ்க்கை என்றாலது..

    ……புள்ளியிலா வாக்கியமாயது இனிதே தொடரவேணும்.!

     

    உமையாளின் துணையின்றி ஈசனுலகாள முடியாது.!

    ……வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்தும் பயனில்லை.!

    நமைக்கேட்டு நம்தோலின் முடியுதிர்வ தில்லை.!

    ……பயணமென்று வரினதில் படுந்துன்பம் இயற்கையே.!

    இமைகேட்டு விழியிரண்டும் மூடிக் கொள்வதில்லை.!

    ……வழிகேட்டுநம் வாழ்க்கைப் பயணம் அமைவதில்லை.!

    சுமையென்று தாய்தன் கருவைச் சுமப்பதில்லை.!

    ……சுகமான பயண மென்றெதுவும் தொடங்குவதில்லை.!

     

    எண்ணத்தில் நல்லெண்ணம் சேர்ந்து விட்டால்..

    ……இயல்பு வாழ்க்கை யென்பது மாந்தர்க்கெளிதாகும்.!

    மண்ணுலகில் பிறப்பதற்கு மாதவனருள் வேண்டும்.!

    ……மனம்நிறைந்த வாழ்க்கைப் பயணமதில் வேண்டும்.!

    புண்ணிய மொன்றே செய்யின் பிறவியில்லையாம்..

    ……புதிதாய் மீண்டுமீண்டும் பிறக்கவேணு மேனென்றால்.!

    பண்ணுடனே பார்த்தவெது வொன்றையும் பாடும்..

    ……புலவராகயெம் பயணம் முடிவுவரை தொடரவேணும்..!

    ==============

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::31-07-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்..

     

    Share
  • எரியும் இருள்

     

    ராஜகவி ராகில்

     

    நான் ஓட்டை விழுந்த கம்பல்ல

    புல்லாங்குழல்

     

    உன் உளி தொடும் வரை

    கல்லாய்க் காத்திருக்கிறேன் நான்

     

    நான் செய்வதை நிழலும் செய்தது

    பொம்மை வெறுத்தேன்

     

    கல் வீசியும் விழாத மாங்காய்

    என் கனவில் விழுந்து கிடந்தது

     

    கண்ட கனவை

    காலையில் கட்டிலில் தேடினேன் நான்

     

    உன் அழகு குளிர்த் தேநீர்

    என் கண் குவளையில் ஊற்றி அருந்துகிறேன் நான்

     

    சொற்களால் என்னைக் கிழித்த நான்

    சொற்களால்தான் தைக்கிறேன்

     

    நான் நீர்க் குமிழி

    என்னை உடைத்து விடாதீர்கள்

     

    நான் பட்டாம் பூச்சி

    பூவென்று நினைத்து சிலந்தி வலையில் அமர்ந்து விட்டேன்

     

    நீ விளக்கேற்றினால்

    எரியும் எனது இருள்

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 95

    குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா

    முனைவர் சுபாஷிணி

    ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.

    ​1s

    உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் தேடுதல்களின் பலனாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களின் தேடுதல் முயற்சியினாலா, அல்லது வணிகம் செய்ய மலாயா வந்த சீனர்களின் தேடுதல் முயற்சியா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கினர். இது நிகழ்ந்தது 19ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் எனலாம்.

    குகைகளுக்குள் சென்று, ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடினமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலர் இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.

    இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலாற்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இங்கு பணி செய்தோரில் பலர் குகைக்குள் இருக்கும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காகப் பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்துத் தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.

    ​2s

    உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து இப்பகுதியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

    இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.

    ​3s

    தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

    இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு செல்வதற்குக் குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.

    ​4s

    ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். மிக வியப்பாகவும் இருந்தது.

    ​5s

    இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர் மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கனத்தது.

    இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

    Share
  • ’’ஜீவான்மன்’’….!

     

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    ’’பிரம்மா, விஷ்ணு, ஈசர்கள் மூவரும்
    பூமியைப் பிரித்து ஆள்கின்றார்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    லாப நஷ்டங்கள் கொள்ளாதவரை
    கஷ்டம் என்செய்யும் சொல்ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    கவிதை கணக்கு கற்பூரத்தை
    கழுதைக்கு காட்டுவதேன் ஜீவா
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை

    அட்டமா சித்திகள் வந்த பிற்பாடு
    அரேணா ஒரேணா வாய்ப்பாடேன்
    ஏனோ ஜீவா இந்த விசாரம்
    ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (20)

    க. பாலசுப்பிரமணியன்

    இறையுணர்விற்கு என்ன வழி?

    திருமூலர்-1

    ஒரு முறை ரோமாபுரியின் பேரரசராக இருந்த  ஜூலியஸ் சீசர் தன்னுடைய குருவை சந்திக்கச் சென்றார். அவரை வணங்கிய மாமன்னர் குருவிடம் “நான் தங்களுக்கு என்ன சேவை செய்யலாம்” என்று கேட்டாராம். அவனைப் பார்த்துச் சிரித்த குருவோ ” நீ என்னுடைய வெளிச்சத்தில் நிற்காமல் இருந்தாலே போதும்” என்றாராம். ஒவ்வொரு குருவும் இதையே தான் விரும்புகின்றார். தன்னுடைய சீடனுக்குத் தான் வழிகாட்டியாக இருந்தாலும், தன்னுடைய வழியை அவன் தானே  தேடிக்கொள்ள வேண்டும் என்பதே உட்கருத்து. எந்த ஒரு குருவும் தன்னுடைய சீடனின் கைகளை பிடித்துக் கடைசி வரை நடப்பதில்லை.

    இறைவனைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் இருளை நீக்கும் குருவின் துணைகொண்டு தன் உள்ளத்துள்ளே இருக்கும்  ஆன்மீகப் பாதையில் பயணம் செய்கின்றான். அவ்வாறு செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம், ஏராளம் ! அந்த அனுபவங்களைத் தருவதற்கு குரு என்னவெல்லாம் செய்கின்றார்? பின் வரும் பாடல் அதை நன்கு விளக்குகின்றது

    பத்தி பணித்து பரவும் அடிநல்கிச்

    சுத்த உரையால் துரிசறச்  சோதித்துச்

    சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்

    சித்தம் இறையே சிவகுருவாமே.

    அனுபவங்களின் முத்தாய்ப்பாக சீடனுக்குக் கடைசியில் அறிவும் ஒளியும் கிட்டுகின்றன. இது ஒரு ஆனந்தமான அனுபவம். இந்த ஆனந்த அனுபவத்தை உணர்கின்ற ஒருவன் இறைவனைத் தன்னுடைய இதயத்தில் நிறுத்தி மகிழும் பொது அவனுக்கு இந்த வெளி உலகையெல்லாம் துறந்து ஆன்ம உலகின் வெளிச்சமும் அதைச் சார்ந்த ஒரு முக்தி நிலையும் தென்படுகின்றது. இந்த நேரத்தில் அந்த குருவே இறைவனின் உருவாகாத்  தென்படுகின்றார் . அந்த இறைவனும் குருவின் வடிவில் தோற்றமளிக்கின்றார் . இந்த இனிய பயணத்தை விளக்குவது போல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    மாடத்து  ளானலன் மண்டபத் தானலன்

    கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்

    வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்

    மூடத்து ளேநின்று முக்திதந் தானே .

    இதயத்தின் உள்ளே இறைவன் அமர்ந்தாலும் அவனை அறிந்து கொள்ளக்கூடிய அறிவும் அதற்கான முயற்சியும் அனைவருக்கும் இருப்பதில்லை. குருவின் துணைகொண்டு இந்த அறிவை பெற்றால் உள்ளும் புறமும் இறை சக்தியே சூழ்ந்திருப்பதை உணரமுடியும். இந்த உன்னத அறிவு நிலையே உண்மையான முக்தி நிலை. இதை உணர்ந்த பட்டினத்தார் கூற்று இதோ :

    எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க

    மனக்கவலை தீர வரமருள்வாய் பூரணமே.

    இந்த முக்தி உணர்வு நிலையை விளக்கும் அப்பரோ தேவாரத்தில், இந்த நிலையை அடைவதற்குக் காரணம் கூட அந்த பரம்பொருளின் அருள்தான் என்று எடுத்துச்  சொல்லும் வண்ணம் பாடுகின்றார் :

    “ஊனாகி உயிரோடு யதனுள் நின்ற உணர்வாகிப்

    பிறவனைத்தும் நீயாக நின்றாய்

    நானேதும் அறியாமே என்னுள் வந்து

    நல்லனவும் தீயனவுங் காட்டா நின்றாய் ..”

    இப்படிப்பட்ட உன்னதமான உணர்வுநிலைக்கு வழிகிடைத்தாலும் அதைச் சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நெஞ்சை எப்படிப் போற்றமுடியும்? அதனால்தானோ மாணிக்க வாசகர் எல்லாம் இருந்தும் அவனை அறிய முயலாத நெஞ்சை “பிண நெஞ்சே” என்ற சொற்றொடரால் அழைக்கின்றார்

    அறிவு இல்லாத என்னைப் புகுந்து ஆண்டுகொண்டு

    அறிவதை அருளி மேல்

    நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையைப்

    பந்தனை அறுப்பானைப்

    பிறவி இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்

    மாறு ஆடுதி பிண நெஞ்சே

    கிரி எலாம்  மிகக் கீழ்படுத்தாய் கெடுத்தாய்

    என்னைக் கெடுமாறே

    (தொடரும்)

    Share
  • “வேர்களும் விழுதுகளும்” – “ஈழத்து இலக்கியப் பரப்பு”

    20431640_1461941410511289_3613242538548371941_n

    **********************************************
    வைத்திய கலாநிதி
    தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
    (தி. ஞானசேகரன் – பகுதி-I)
    *********************************
    தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.
    15.4.1941 பிறப்பு (74 வயது).
    நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
    ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார்.
    பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
    அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார்.
    யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது
    சிறுகதைகளாகவும், குறுபுதினம்களாகவும், புதினங்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
    இவர் “ஞானம்” என்னும் சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார்.
    1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும்
    ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த
    அவரது புதிய சுவடுகள் என்னும் புதினம்
    விதந்தோதத்தக்கது.
    அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும்
    பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன.
    தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு புதினங்களும், புதினங்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
    இவரது படைப்புகள்
    *************************************************
    வட இந்தியப் பயண அனுபவங்கள் – 2013
    எனது இலக்கியத் தடம் முதலாம் பாகம் (2013)
    கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
    ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
    அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
    புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
    அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
    கவ்வாத்து (குறும் புதினம்) – 1996
    லயத்துச் சிறைகள் (புதினம்) – 1994
    குருதிமலை (புதினம்) – 1979
    புதிய சுவடுகள் (புதினம்) – 1977
    காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973
    ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட தி ஞானசேகரன் தம்பதிகள் லண்டனுக்கும் வந்தனர்.
    இவர்களுடனான சந்திப்பை “தேசம்நெற்” நவம்பர் 08 இல் கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் ஏற்பாடு செய்திருந்தது.
    ஒரு இலக்கியக் கலந்துரையாடலாகவும் இலக்கிய நண்பர்களின் சந்திப்பாகவும் இந்நிகழ்வு இடம்பெற்றது.
    புலம்பெயர் இலக்கியங்களை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றிய உரையாடல் முக்கியத்துவம் பெற்றமைந்தது.
    புலம்பெயர்ந்தவர்கள் எழுதுவது எல்லாம் புலம்பெயர் இலக்கியங்களாகக் கொள்ளப்பட முடியாது என்றும்
    அதன் உள்ளடக்கம் புலம்பெயர்ந்த சூழலின்
    வெளிப்பாடாக அமைய வேண்டும் என்றும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    புலம்பெயர் இலக்கியங்கள் ஆரம்பத்தில் முற்றாக
    தாயக நிகழ்வுகளையே பதிவு செய்வதாக அமைந்து
    படிப்படியாக புலம்பெயர் சுழலை வெளிப்படுத்தி
    தற்போது முற்றுமுழுதாக புலம்பெயர் சுழலை,
    அங்குள்ள சமூகங்களை மையைப்படுத்தி
    வெளிவருவதை தி. ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    ஞானம் இதழின் தொகுப்பு இதழ்கள்
    வரலாற்று ஆவணங்கள் என்றும்
    இவை ஆண்டாண்டு காலத்துக்குமான
    இலக்கியப் பதிவை மேற்கொண்டுள்ளது என்பதும்
    அங்கு ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டது.
    போருக்குப் பின்னான ஒரு இலக்கியப் பதிவை
    ஞானம் கொண்டு வரவேண்டும் என்பதை
    எழுத்தாளர் உதயணன் வலியுறுத்தினார்.
    அதனை நிச்சயம் கொண்டு வரத் திட்டமிட்டு
    இருப்பதாகவும் ஆனால் அதற்கான காலம்
    இன்னமும் உள்ளதாகவும்
    தி ஞானசேகரன் சுட்டிக்காட்டினார்.
    இதனை ஏனையவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
    இன்னமும் போருக்குப் பின்னான பதிவுகள் வந்து கொண்டிருப்பதால் அதற்கான தொகுப்பை சிறிது
    காலத்திற்குப் பின் வெளியிடுவதே உகந்தது என்ற
    கருத்து அங்கு வெளியிடப்பட்டது.
    ஈழத்தின் முன்னணி சஞ்சிகை ‘ஞானம்” ஆசிரியர்.
    2000 ஜுன் முதல் வருகிறது. இறுதியாக 184ஆவது இதழ்
    கடந்த மாதம் இணையத்திலும் வருவதால் அதிக
    வாசகர்களை உள்வாங்குகின்றது.
    பகிர்தலின் மூலம் விரிவும், ஆழமும் பெறுவது ‘ஞானம்’ எனும் பணிக்கூற்றுடன் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றது.
    1960களிலிருந்து எழுதிவரும் இலக்கியப் படைப்பாளி.
    வைத்தியர்- மலையகத்தில் நீண்ட காலமாக
    (புசல்லாவையில்) பணியாற்றியவர்.
    கல்வி:
    புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை,
    உரும்பராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்
    பழைய மாணவராவார்.
    தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய வித்துவசிரோமணி
    சி. கணேசையர் இவரின் பூட்டனார்.
    நல்லை ஆதினம் அமைத்து தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய சுவாமி நாதர் தம்பிரான் சுவாமிகள்
    இவரது தாய் மாமா.
    இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘கண்ணன்’ என்ற
    சிறுவர்களுக்கான சஞ்சிகையில் பள்ளிப் பராயத்தில்
    சிறு துணுக்குகள், வாசகர் கடிதங்கள் போன்றவற்றை
    அடிக்கடி எழுதி வந்தார்.
    1964ஆம் ஆண்டில் ‘கலைச்செல்வி’ எனும் சஞ்சிகையில்
    “பிழைப்பு” எனும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது.
    ‘கலைமகள்” இவரின் சில கதைகள் பிரசுரம் செய்தது.
    இதுவரை 200 இற்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார்.
    எண்பதுகளில் தோன்றிய போர்ச்சூழல் காரணமாக
    எமது படைப்பாளிகள் பலர் நாட்டை விட்டும்
    புலம்பெயர்ந்தனர்.
    மேலும் பலர் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தனர்.
    வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவாயின.
    சுதந்திரமாக இயங்க முடியாத சங்கடம்.
    இவை யாவும் எமது படைப்பாளிகளின்
    படைப்புச் செயற்பாட்டில் ஆர்வம் குறைந்த
    நிலைமையை தோற்றுவித்தன.
    வாசிப்புப் பழக்கம் இளைய தலைமுறையிடம்
    அருகத் தொடங்கிற்று.
    ஆனாலும், இலக்கியச் செயற்பாடுகள்
    காலத்துக்குக் காலம் முன்னெடுத்துச் செல்லப்பட
    வேண்டியது அவசியமானது என்பதை உணர்ந்து,
    இன்று மிகவும் சிரமமான ஒரு சூழ்நிலையிலேயே
    இப்பணியில் ஞானசேகரம் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்.
    முன்னைய இலக்கிய சஞ்சிகைகள் ஆற்றிய
    இலக்கியப் பணியின் தொடர்ச்சியைப் பேணி
    அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய
    நிலையில், ஈழத்து இலக்கியத்தின் உறவுப் பாலமாக இயங்குகின்றார்.
    உண்மையிலேயே தற்போதைய காலசூழ்நிலையைப் பின்னணியாகக் கொண்டு நோக்குமிடத்து ஒரு இலக்கிய சஞ்சிகையை தொடர்ச்சியாக வெளியிடுவதில் உள்ள சிரமம் அனைவரும் அறிந்ததே.
    மாதந்தோறும் தவறாமல் ஞானம் சஞ்சிகையை வெளியிடுவதினூடாக ஞானசேகரன் ஒரு புதிய
    சாதனையைப் படைத்து வருகின்றார்
    என்றால் மிகையாகாது.
    இவர் 1997ஆம் ஆண்டு மத்திய மாகாண
    சாகித்திய விழாவில் இலக்கிய சேவைகளுக்காகக் கௌரவிக்கப்பட்டார்.
    மேலும், ரத்னதீப பதநம என்ற அமைப்பு,
    1998 ஆம் ஆண்டில் கண்டியில் ரத்னதீப
    விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.
    அகில இலங்கை சமாதான நீதவானான இவருக்கு
    அரசு வழங்கும் அதியுயர் கௌரவமான கலாபூஷண
    அரச விருதும் கிடைத்துள்ளது.
    மிக அண்மையில் உடத்தலவின்ன சிந்தனைவட்டம்
    இவருக்கு இதழியல் வித்தகர் எனும் பட்டம்
    வழங்கி கௌரவித்தது.
    இவ்வாறாக பிரதேச, மாவட்ட, மாகாண,
    தேசிய மட்டத்தில் இவர் பல விருதுகளையும்,
    கௌரவங்களையும் பெற்றுள்ளார்.
    டாக்டர் ஞானசேகரன் அவர்களின் புகைப்படத்தை
    தனது முகப்பட்டையில் பிரசுரித்து 1998 அக்டோபர்
    கொழுந்து சஞ்சிகை கௌரவத்தை வழங்கியது.
    அதேபோல 1998 ஏப்ரல் அட்டைப்பட அதிதியாக
    மல்லிகை சஞ்சிகையும் இவரை கௌரவித்தது.
    ஞானசேகரன் நூல்கள்:
    1973 கால தரிசனம் – சிறுகதைகள்.
    12 சிறுகதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுதிக்கு
    பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை எழுதியிருந்தார்.
    1977 புதிய சுவடுகள் (மறுபதிப்பு 2004) முதல் நாவல்.
    வீரகேசரி நாவல் போட்டிக்காக எழுதப்பட்டது.
    இந்நாவல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அந்த ஆண்டுக்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
    1979 குருதிமலை- நாவல் (2005 மீள்பதிப்பு)
    1979ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது.
    அவ்வாண்டுக்கான சாகித்திய விருதினைப் பெற்றது.
    தான் மலையகத்தில் வைத்திய அதிகாரியாகத்
    தொழில் புரிந்ததால் அங்கு பெற்ற அனுபவம்
    இந்த நாவலை எழுதத் தூண்டியுள்ளது.
    இந்நாவல் ‘தகவம்’ பரிசினையம் பெற்றுக் கொண்டது.
    1986ல் ஈழத்தில் அதுவரை வெளிவந்த
    ஆக்க இலக்கியங்களில் நாவல் சார்ந்த சிறந்த நூல்களில் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றது.
    1992இல் தமிழகத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில்
    எம்.ஏ. வகுப்புக்குப் பாடநூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
    கொடகே நிறுவனத்தினரால் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
    தமிழகத்திலும் இலங்கையிலும் மூன்று
    பதிப்புகளைக் கண்டது.
    மணிமேகலைப் பிரசுரத்தின் முதற் பதிப்பாக
    2005இல் வெளியிடப்படுகின்றது.
    ஈழத்தமிழரின் ஒரு முக்கிய சமூகப்பிரிவினரான
    மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின்
    பௌத்த சிங்கள பேரினவாதச் சூழலில் தம் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகத் தற்காப்புப்
    போராட்டத்தை நிகழ்த்திவருபவர்களின்
    வரலாற்றின் ஒரு காலகட்டம் இந்த நாவலின்
    மூலம் எமது காட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
    1994 லயத்துச் சிறைகள் 1995ல் சிறந்த நாவலுக்கான மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
    இலங்கை இலக்கியப் பேரவையின் சிறந்த
    நாவலுக்கான சான்றிதழையும் பெற்றுள்ளது.
    1996 கவ்வாத்து குறுநாவல் தேசிய கலைஇலக்கியப் பேரவையும், சுபமங்களாவும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசுபெற்றது.
    ‘விபவி” கலாசார மையத்தின் 1996ல் வெளிவந்த சிறந்த படைப்பிற்கான ‘தங்கச்சங்கு” விருதும், சான்றிதழும் பெற்றது.
    மத்திய மாகாண சாகித்திய விருதினையும் பெற்றது.
    இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறுநாவல்களுள்
    1995ஆம் ஆண்டு தமிழக சுபமங்கள சஞ்சிகை நடத்திய ஈழத்து குறுநாவல் போட்டியில் பரிசும், பாராட்டும் பெற்ற கதையொன்று இடம்பெற்றுள்ளது.
    1998 அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்).
    தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் BA வகுப்பிற்குரிய பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
    1999 அவுஸ்திரேலியப் பயணக்கதை புதிய சூழலில் அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ள வாற்றையும், தமது ஆன்மீக, உலகியல் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும் கோவில்களையும் கல்வி நிலையங்களையும் கலை-இலக்கிய மன்றங்களையும் அவர்கள் அமைத்துள்ளவாற்றையும் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.
    1999 புரிதலும் பகிர்தலும். அவுஸ்திரேலிய எழுத்தாளர்களுடனான நேர்காணல் தொகுதி.
    அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துக் கலை இலக்கிய கர்த்தாக்கள் ஐவரின் நேர்காணல்கள் இங்கு இடம்பெறுகின்றன.
    எஸ்.பொன்னத்துரை,
    மாத்தளை சோமு,
    லெ.முருகபூபதி,
    அருண் விஜயராணி,
    சி.மனோகரன்
    ஆகியோரது கலை இலக்கியம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும், கருத்துக்களையும் அவர்களது மன உணர்வுகளையும் சிறப்பான முறையில் இந்நேர்காணல்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
    ****************************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    01/08/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இன்று பார்க்க ‘’தன்வந்த்ரி” போலிருக்கார், உடுப்பி கிருஷ்ணர், அமிர்த கலஸ ஹஸ்தராய்….!
    —————————————————————————————————————————————-

    170801 - Udupi Krishna -lr

    ‘புண்வந்(து) அரித்து புரையோடிப் போனாலும்
    தன்வந் திரியிருக்கார் தீர்வுக்கு: -மண்வந்த
    எல்லோர்க்கும் உண்டு எமபயம், தன்வந்த்ரி
    கொள்வார்க்கு என்றுமவர் காப்பு”….கிரேசி மோகன்….

    ’’பானைக்குள் பாற்கடல், த்வாபர(துவாபர -த்வார) பாலகன்,
    ஆனைக்கா அய்யன் அகிலாண்ட -மோனே(மலையாளம்)
    எதுகையாய் வந்தோன் யதுகுல அண்ணன்
    முதுமை இலாமுகுந்த(மூவா முகுந்தர்க்கு இளையவளே-அபிராமி அந்தாதி) மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (233)

    செல்வன்

    இந்த வார வல்லமையாளர் – திரு. என். சொக்கன்

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர், கவிஞர் திரு என்.சொக்கன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    திரு என். சொக்கனை பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். இவ்வாரம் இவரது “பக்தித்தமிழ்” எனும் நூல் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இதை பற்றி குறிப்பிடும் என்.சொக்கன் அவர்கள்

    “தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

    எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என். சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து நூறு அத்தியாயங்கள் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். சுமார் எண்ணூறு பாடல்களுக்கான எளிய விளக்கங்களோடு பலப்பல கதைகள், சுவையான நிகழ்வுகளோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
    இந்நூல் தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. அச்சு நூலின் முதல் பாகம் வெளியாகிவிட்டது, அடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

    1

    Screen Shot 2017-07-31 at 10.30.19 PM

    குழந்தைகளுக்கு தமிழை அழகான எழுத்துநடை மூலம் கொண்டுசேர்க்கும் தமிழாசிரியர் என்.சொக்கன். குழந்தைகளுக்கான திருக்குறள் எனும் ஆடியோ, விடியோ தொகுப்பையும் வலையேற்றி வருகிறார். இவ்வாரம் அதில் 158வது விடியோ/ஆடியோ பதிப்பு வெளியானது. கம்பராமாயண வகுப்புகள், குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை எடுப்பதும் இவரது சாதனைகளில் சேர்ந்தது.

    தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர் ஆவார். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

    அம்பானி, ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி , சல்மான் ரஷ்டி, குஷ்வந் சிங், வால்ட் டிஸ்னி போன்ற பலரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தினமணி போன்ற பல நாளிதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    இவரைப் போல தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் கிடைக்கும் வகையில் இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • படக்கவிதைப் போட்டி 121-இன் முடிவுகள்

     

    -மேகலா இராமமூர்த்தி

    coinsinhand

    உழைப்பின் கறைபடிந்த மனிதரை அக்கறையோடு படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. ஜேக்ஸன் ஹெர்பி. படக்கவிதைப் போட்டிக்கு இந்தப் படத்தைத் தேர்வுசெய்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படப்பிடிப்பாளர், தேர்வாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.

    உழைப்பில் வரும் கறையில் குறையில்லை. எனினும் இவ்வுழைப்பு போதிய வருவாய் திரட்டி குடும்பத்தின் வறுமையை விரட்ட உதவாதது வருந்தத்தக்கதே!

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரின் இன்மை அகலவேண்டும்; துயரம் நீங்கி உயரப்பராய் அவர் ஓங்கும் காலம் கனியவேண்டும்!

    இனி, இவ்வாரக் கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம்!

     ***

    படித்து முன்னேறவேண்டிய பருவத்தில் தோன்றும் தேவையற்ற சிந்தனைச் சிதறல்களால் சிலர்தம் வாழ்வே சில்லறையாய்ச் சிதறிப்போவதை வேதனையோடு  விளம்புகின்றது திருமிகு. அமுலாதாவின் கவிதை.

    அன்று எனது சிந்தனைகளைச்
    சிதற விடாமல்இருந்திருந்தால்
    இன்று சில்லறைகளை எண்ணும்
    நிலை வந்திருக்காது…!

    *** 

    ”கையில் கறையிருந்தால் என்ன? என் காசுக்காக அல்லாமல் காதலுக்காகக் காத்திருக்கும் மனையாள் துணையிருக்க எனக்கென்ன மனக்குறை?” என்று மகிழும் மனிதனை மனக்கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. மங்கை.

    சம்பள நாள்!

    பையில் ரூபாய் கையில் சில்லறை
    இது என் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம்
    கிடைக்கும் நல்ல உணவு நாளை மதியம்
    கையில் கறை இருந்தாலும் மனதில் குறை இல்லை
    சட்டைப் பை நிறைந்திருக்கும் மாதம் ஒரு நாள் மட்டும்
    கைக்குள்ளே காசை ஒளித்து வைக்க ஆசைதான்
    கடன்காரன் வந்து கையைப் பிரித்து எடுத்து செல்வானே
    எது எப்படி இருந்தாலும்,
    வாசலில் காத்திருப்பாள் மனைவி காசுக்காக அல்ல இந்தக் காதலனுக்காக!!!!!

    ***

    ”முறையற்ற சில்லறை வேலை செய்தால்தான் கைநிறைய வெள்ளிப்பணம்; அதைவிடுத்து மாடாய் உழைத்தால் வெறும் சில்லறைதான் மிஞ்சும்” என்று இன்றைய சமூகநிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றார் திரு. ஆனந்த். 

    உழைப்பின் கறைபடிந்த
    உன் கரங்களில்
    சில்லறைதான் மிஞ்சும்
    சில்லறை வேலைசெய்யும்
    ஊழல் உத்தமர்க்கே
    ஊதிப்பெருகும் பணம்…!

    ***
    வாழ்வுக்கு அவசியம் ஆனபோதிலும் நல்லவரையும் கெடுமதியாளராய் மாற்றவல்லது பணம். அத்தகு பணத்தைப் பார்த்து, ”உன்னோடு வாழ்தல் அரிது” என்று பொருத்தமாய்ப் பகர்கிறார் திரு. சி. ஜெயபாரதன். இவ்வரிகள், ”என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று வயிற்றின் இயல்பைப் பாடும் அவ்வையின் நல்வழியை நினைவூட்டுகின்றன.

    கைப்பணம் போதாது
    கள் குடிக்க!
    பைப்பணம் போதாது
    பட்டப் படிப்புக்கு!
    வங்கிச் சேமிப்புப் போதாது
    வாஷிங்டன் சுற்றுலா
    போய்வர!
    திருடத் தூண்டும் பணம்!
    தீப்பெட்டி போட்டு
    பசியாற்றும் மனையாள் காசைப்
    பறிக்கச் சொல்லும்!
    தினமும் வீடு வீடாய் நடந்து
    பேப்பர் போடும்
    சிறுவன் கூலிப் பணத்தைப்
    பறிக்கச் சொல்லும்!
    லஞ்சம் வாங்கத் தூண்டும்!
    லட்சாதி பதியாய்
    வாழ்வதற்குப்
    பஞ்சமா பாதகம் செய்ய
    அஞ்சாது!
    உண்ட வீட்டைத் துண்டாக்கி
    உரிமை ஆக்கும்!
    வேலைக்காரி கொலையும்
    செய்வாள்,
    வீட்டுக்காரியை!
    நாட்டில் நடக்கும் அத்தனை
    நயவஞ்சகமும்
    நோட்டுப் பணத்தால்
    நேர்வது!
    அசுரப் பற்களில் கடிக்கும்
    திமிங்கலப் பணமே!
    தேவை நீ ஆயினும்,
    துரோகி !
    உன்னோடு வாழ்தல் அரிது!

    ***

    சலசலக்கும் சில்லறைக்காசுகள் தம் சில்லறைத்தனத்தைப் பறைசாற்ற, மதிப்புமிக்க உரூபாய் நோட்டுக்களோ நிறைகுடமாய்ச் சத்தமின்றி இருக்கும் வாழ்வியல் தத்துவத்தைத் தன் கவிதைவழிச் சத்தாகப் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஓசை…

    சட்டைப் பையில்
    ரூபாய் நோட்டு,
    சத்தமில்லாமல் இருக்கிறது..

    கையிலுள்ள
    சில்லறைக் காசுகள்,
    சலசலவெனச்
    சத்தமிடுகின்றன..

    ஓ,
    வாழ்க்கைத் தத்துவம்
    இதுதானோ-
    மதிப்புமிக்க இடத்தில் அமைதி,
    குறைந்த இடத்தில் கூத்தாட்டம்தான்…!

    ***

    கடும் உழைப்பைக் கைக்கொண்டாலும் பாட்டாளியின் கையில் செல்வம் தங்குவதில்லை. இளமையில் நன்றாய்க் கற்று உயர்பதவி பெற்றிருந்தால் ஏழைமையோடு தோழமை கொள்ளவேண்டிய அவலநிலை இல்லையே” என்று இரங்குகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வியே அல்லவா!

    இளமையில் கல்!

    ஏழைக் குடிலையும் ஏழ்மையின் கொடிதையும்..
    ……என்றேனும் பார்த்ததுண்டா அல்லது கேட்டதுண்டா.!
    உழைக்கும் வர்க்கத்துக்கு ஊதியமே சில்லறையில்தான்
    ……உழைப்பாலுயர்ந்து பெரும் பணத்தை ஈட்டியவரரிதே.!
    தாழ்வைப் பெரிதாய் எண்ணாமல் தன்னலமின்றி..
    ……உழைத்து வருமற்பச் சம்பளத்திலுயர வழியில்லை.!
    வாழ்வு வளமாக வளரும்போதே கற்கவேண்டும்..
    ……வளர்ந்த பின்யோசித்து வருந்துவ தாலென்னபயன்.?

    படிக்காமலிள வயதில் பொறுப்பின்றிச் சுற்றியதால்..
    ……பலரைப்போல் நானும் படாதபாடு படுகிறேன்.!
    விடிந்ததுமுதல் மீண்டுமடுத்த நாள் விடியும்வரை..
    ……வியர்வை சிந்தியுழைத்தாலும் சில்லரைதான் மிஞ்சும்.!
    ஓடிஓடி உழைத்தாலும் ஓட்டைவிழுந்த சட்டைதான்..
    ……ஒழுங்காகக் கற்காவிட்டால் ஏழ்மைதான் வாழ்க்கை.!
    இடித்துரைத்தான் வள்ளுவனும் இதையே தான்..
    ……இனியாவதெம் சந்ததியைப் படிக்க வைப்பேன்!

     ***

    உழைக்கத் தெரிந்த மனிதருக்குப் பிழைக்கத் தெரியவில்லை. அதனால் பிழைக்கத் தெரிந்த கூட்டம் இவர்தம் உழைப்பில் சவாரி செய்கிறது எனும் திரு. பழ. செல்வமாணிக்கத்தின் வரிகள் நம்மைச் சிந்தக்க வைக்கின்றன.

    உங்கள் பார்வையில் தெரிவது அழுக்குக்கறை!
    உண்மையில் இது ஏழைகளின் இன்றைய நிலை!
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
    என்றார் ஓர் அறிஞர்!
    உண்மை முற்றிலும் உண்மை!
    இது வரை எந்த ஏழையும் சிரித்ததுமில்லை!
    இறைவனை எவரும் பார்த்ததுமில்லை!
    சில்லறைகளே ஏழைகளுக்குச் சொத்தாகிப் போனதால்
    கல்லறைகளே இவர்களுக்கு நிச்சயம் ஆனது!
    பணம் இவர்களுக்கு எதிரியாய்ப் போனது!
    உழைக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும்!
    பிழைக்கத் தெரியாது!
    இவர்களின் உழைப்புப் பல்லக்கில்
    ஊர்வலம் போகும் பணக்காரக் கூட்டம்!
    வாழ்க்கை என்பது என்றும் ஒரு வட்டம்!
    போதும்! போதும் உங்களின் ஆட்டம்!
    பகிர்ந்துண்டு வாழ்தல் நல்ல பழக்கம்!
    இதை உணர்ந்தவர் வாழ்வில் இல்லை குழப்பம்!

     ***

    அயரா உழைப்பால் உடையும் உள்ளங்கையும் கறைபட்டிருக்கும் மனிதனின் அவலநிலையை, பணத்துக்காக அந்த ஏழை படும்பாட்டைத் தம் பாட்டுக்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் மனம்நிறைந்த பாராட்டு!

    *** 

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து நம் பார்வைக்கு…  

    எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன?
    வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
    இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
    கணக்கு இன்னும் கைவரவில்லை.
    உழைத்துக் காய்த்துப்போன
    உள்ளங்கைப் புண்ணில்
    சில்லறை உறுத்துகிறது.
    பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
    நெஞ்சுக்குள் நெகிழ்வு.

    வயிற்றில் எரியும் அங்கியை(தீ) அவிக்க அங்கையில் இருக்கும் சில்லறை போதாதெனினும் பிஞ்சுக்குழந்தையின் பிஸ்கெட் செலவுக்காவது ஆகும் என்று சிறுபிள்ளையாய் மகிழும் ஏழைமனிதனை நம் பார்வையில் நிறுத்தி நம்மை நெகிழ்த்தும் இக்கவிதையின் சொந்தக்காரர் திரு. அ. இராஜகோபாலனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கின்றேன். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • ’’பாமரன் vs பண்டிதன்”….!

     

    ”பாத்தா பண்டிதன்
    படுத்துவிட்டா நொண்டிதான்
    தோத்தா தெரியும் சேதிடா -ஞானதங்கமே
    தீயிலிட்டா எரியும் ஜோதிடா

    பாமரர்கள் நாலுபேரு சில்லறைக்காக, -இவுரு
    மாமரமாய் சாச்சாங்க கல்லறைக்குள்ளே
    இளமையிலே கல்லென்று எழுதி வச்சாரு-இவரை
    இழுத்துபோட காட்டினிலே கல்லானாரு….

    பாமரனும், பண்டிதனும் பக்கம்பக்கம்தான் -அந்த
    பரமன் அருள்சிக்னலிலே நிக்கவப்பாரு-நடைபாதை
    பாமரனோ முந்தி கொண்டாரு -கடைவிரித்த
    பண்டிதனோ காரில் பிந்திபுட்டாரு….கிரேசி மோகன்….!

    Share