Blog

  • தமிழிசைப்பண்கள் (1)

     

    சிறீசிறீஸ்கந்தராஜா

    **************************************************

    உலகின் முதல் இசை

    தமிழிசையே!!

    ***********************************************

    இசைத்தமிழின் தொன்மை – 74

    ***********************************************

     20733166_1468717456500351_41761712_n

    பழந்தமிழிசையில் பண்கள்

    **********************************

    **************************************************

    தமிழ்க்கீர்த்தனைக் காலம் : கி.பி.1550 – 1800

    *******************************************

     

    கீர்த்தனை என்பது இசைப்பாடல் வகைகளுள் ஒன்றாகும்.

     

    பெரும்பாலும் இறை புகழ் பாடும் இசைப்பாடல்களாக உள்ளன.

     

    பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய நிலையில்

    எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் நிலையில்

    இவை அமைந்துள.

     

    கலித்தொகைப்பாடலில் உள்ள தரவு, தாழிசை, சுரிதகம்

    இவ்வகை முன்னோடிகளாக உள்ளன.

     

    இவ்வகையில் தமிழில் கீர்த்தனைப் பாடல்கள்

    சீகாழி முத்துத்தாண்டவர் கி.பி.1525 – 1605 காலம் முதல் தொடங்கிற்று.

     

    முத்துத்தாண்டவர் திருஞான சம்பந்தரைப் போல்

    சீகாழியில் பிறந்தவர்.

     

    இவர் பாடிய 60 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

     

    இவர் தமிழ்க் கீர்த்தனையின் தந்தையாக விளங்குகிறார்.

     

    நாட்டியத்திற்குரிய பதம் என்கிற இலக்கிய வகையையும்

    இவர் படைத்துள்ளார்.

     

    தமிழ்நாட்டியப் பதத்தின் தந்தையாகவும்

    இவர் போற்றப்படுகிறார்.

     

    இவர் பாடிய நாட்டியப் பதங்கள் 25 கிடைத்துள.

     

    இவர் தமிழ்க் கீர்த்தனை பாடிய காலம் கீர்த்தனைக்

    காலமாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.

     

    முத்துத் தாண்டவரைத் தொடர்ந்து

    பாபநாச முதலியார் (கி.பி.1640-1740)

    மிகச் சிறந்த இயலிசைப் புலவராக உள்ளார்.

     

    இவர் படைத்த கும்பேசாக் குறவஞ்சி எனும்  நூலைப் பாடியுள்ளார்.

     

    குறவஞ்சி நூலின் முதல் நூலாக இந்நூல் திகழ்கிறது.

     

    இவரைத் தொடர்ந்து இராமநாடகக் கீர்த்னை பாடிய

    சீகாழி அருணாசலக் கவிராயர் உள்ளார்.

     

    கம்பராமாணயத்தை இசை நாடகக் கீர்த்தனையாக

    இவர் இயற்றியுள்ளார்.

     

    இவர் இசை நாடகக் கீர்த்தனை பாடிய முதன்மையராக

    உள்ளார்.

     

    இவரைத் தொடர்ந்து தில்லைவிடங்கன்

    மாரிமுத்தாப்பிள்ளை (1712 – 1787) உள்ளார்.

     

    பழிப்பதுபோல் புகழ்ந்து பாடும் நிந்தாஸ்துதியில் அமைந்த தமிழ்க் கீர்த்தனை பாடிய முன்னோடியாக இவர் உள்ளார்.

     

    இவர் பாடிய 25 கீர்த்தனைகள் இன்று கிடைத்துள.

     

    முத்துத்தாண்டவர்,  

    அருணாசலக் கவிராயர்,

    மாரிமுத்தாப்பிள்ளை

    மூவரையும் சீர்காழி மூவர் என்றும்

    தமிழ்க் கீர்த்தனை பாடிய மூவர்

    என்றும் அழைப்பர்.

     

    இவர்கள் பெயரால் சீர்காழியில் மணிமண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது.

     

    தமிழக அரசு சீர்காழி மூவர் விழாவையும்

    ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

     

    இம்மூவர்களையும் தொடர்ந்து “தாயே யசோதா” என்று தொடங்கும் தோடி இராகக் கீர்த்தனை பாடிய

    ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் (1715 – 1775) உள்ளார்.

     

    இவர் பாடிய 11 க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள்

    இன்று வழக்கில் உள்ளன.

     

    இவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை இறைவன் மீது அருணாசலக் கீர்த்தனை பாடிய வீரணப் புலவர் (1720 – 1810) உள்ளார்.

     

    இவர் பாடிய 398 இசைப்பாடல்கள் உள.

     

    இக்காலத்தில் பள்ளு நாடகம், நொண்டி நாடகம், குறவஞ்சி என்கிற இசை நாடக இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.

     

    குறவஞ்சியில் மட்டும் சுமார் 130 நூற்கள் உள.

     

    கும்பேசர் குறவஞ்சி, குற்றாலக் குறவஞ்சி,

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, விராலிமலைக்குறவஞ்சி, தியாகேசர்குறவஞ்சி என்கிற நாட்டிய நாடகங்கள் தோற்றம் பெற்றன.

     

    குமரகுருபரர் (1615 – 1688),

    பரஞ்சோதி முனிவர் (1675 – 1725),

    அவிநாசி நாதர் (1725 – 1785),

    தொட்டியக்கலை சுப்பிரமணிய முனிவர் (கி.பி.1740-1810) போன்றோர் தோன்றி  நூற்களைப் படைத்துள்ளனர்.

    இந்நூற்களில் இசைபற்றிய செய்திகள் உள.

    நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும்

    இதர கீர்த்தனைகளையும்

    பாடிய கோபால கிருஷ்ணபாரதியார் (1790-1885)

    இசைத்தமிழ் உலகிற்குப் பெரிதும்

    சேவை புரிந்தவராக உள்ளார்.

    இவரின் நந்தன் சரித்திரக் கீர்த்தனை மிகச் சிறந்த

    இசை நாடக நூலாகும்.

     

    இவரின் ஏனைய கீர்த்தனைகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.

     

    இவரையும் சேர்த்து தமிழ்க் கீர்த்தனை நால்வர் என்று கூறும் வழக்காறும் நிலவுகிறது.

     

    18, 19 நூற்றாண்டுகளில் இசைத்தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகளைத் பலர் தந்துள்ளனர்.

     

    இராமகவி (1750-1810) என்பார் தஞ்சையிலிருந்து

    சென்னைக்குச் சென்றவர்.

     

    இவர் பாடிய 9 பதங்கள் அச்சில் வந்துள.

     

    பாலகவி செண்பக மன்னார் (1789 – 1840)

    பார்வதி திருக்கல்யாண நாடகம்,

    சிவராத்திரி நாடகங்களை எழுதியுள்ளார்.

     

    ஆனைஐயா (1798 – 1824) தஞ்சை இரண்டாம் சரபோஜி

    அவையில் இருந்தார்.

     

    இவரும் இவரின் சகோதரர் ஐயாவையர் சிறந்த இசைவிற்பன்னர்களாக இருந்தனர்.

     

    தெலுங்கு, தமிழ் மொழிகளில் இசைப் பாடல்களைப்

    பாடியுள்ளனர்.

     

    26 தமிழ்க் கீர்த்தனங்கள் வழக்கில் உள.

    வைத்தீசுவரன் கோயில் சுப்பராமையர் (1800-1850)

    வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமாரசாமி மீது

    76 பதங்கள் பாடியுள்ளார்.

     

    இவை குஜ்லி பதிப்பில் வெளிவந்துள்ளன.

     

    கனம் கிருஷ்ணய்யர் (1825-1880) கன இராகங்களில்

    பாடுவதில் வல்லவர்.

     

    இவர் கவித்தலம் இராமபத்திர மூப்பனார் மீது குறவஞ்சி பாடியுள்ளார்.

     

    இவர் பாடிய 57 கீர்த்தனைகளை உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்துள்ளார்.

     

    இசைத்தமிழ் அறிஞர்களுள்

    நீலகண்ட சிவனும் (1839-1900) ஒருவராவார்.

     

    இவர் பாடிய இசைப் பாடல்கள் திருநீலகண்ட போதம்

    என்கிற பெயரால் 1895 இல் அச்சில் வந்துள.

     

    தேவாரம், திருவாசகம், தாயுமானவர்  பாடல்கள் போல்

    இவை உள.

    இவர்4446 பாடல்கள் வெளிவந்துள்ளன.

     

    தஞ்சை கரந்தையைச் சார்ந்த ஆறுமுக உபாத்தியாயர் (1820-1890) பாடிய கீர்த்தனங்கள் சிவ சுப்பிரமணிய சுவாமி கீர்த்தனம்

    என்கிற பெயரில் அச்சில் வந்துள.

     

    மரக்கத்தூர் ஆறுமுக சுவாமிகள் (1827-1888)

    போலீஸ்காரராக இருந்தவர்.

    கிளிக் கண்ணி பாடியுள்ளார்.

     

    தஞ்சை வாசுதேவ கவிபாடிய 76 பதங்கள்

    தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையம் மூலம்

    வெளிவந்துள்ளன.

     

    இவர்களைப் போல் பலர் இசைத்தமிழ்ப் பாடல்களைப் படைத்துள்ளனர்.

    அருட்பிரகாச இராமலிங்க அடிகளார்,

    வேதநாயகம் பிள்ளை,

    கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள்,

    மாம்பழக் கவி,

    காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார்,

    குணங்குடி மசுதான் சாகிப்

    போன்றோர் இசைத்தமிழ் வளர்த்த

    சான்றோர்களாக உள்ளனர்.

     

    இராமலிங்க அடிகளார் (1823 – 1874) படைத்த

    திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன.

     

    இவை 5818 பாடல்களைக் கொண்டுள.

    இவைகளில் 1011 பாடல்கள் இசைப் பாடல்களாக உள்ளன.

     

    இவை இன்றைய இசை அரங்குகளில்

    பாடப் பெற்று வருகின்றன.

     

    மாயூரம் வேத நாயகம் பிள்ளை (1826 – 1889) பாடிய

    சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்கிற இசைப்பாடல்கள்

    இன்றைய இசை அரங்குகளில் பாடப்பெற்று வருகின்றன.

     

    192 இசை உருப்படிகள் உள.

     

    கிளிக்கண்ணி என்கிற இசை வகை உருப்படிகளைப் பாடிய கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (1820 – 1890) காவல்துறையில் தலைமைக் காவலராக இருந்தவர்.

     

    இவர் பாடிய 102 கிளிக்கண்ணிப் பாடல்கள் உள.

    இவரைப் பின்பற்றி பாரதியார் கிளிக் கண்ணிப் பாடல்களைப் பாடியுள்ளார் பலரும் பாடி வருகின்றனர்.

     

    மாம்பழச் சிங்க நாவலர் (1836 – 1884) பழனியில் பிறந்தவர் மூன்றாவது வயதில் ஏற்பட்ட அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்.

     

    இவர் பாடிய பாடல்கள் கீதாமிர்தசாரம் என்கிற பெயரில் வெளிவந்துள்ளது. இந்நூலில் 56 கீர்த்தனைகள் உள.

     

    காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் (1865 – 1891) பாடிய காவடிச்சிந்துப் பாடல்கள் கிளிக் கண்ணியைப் போல்

    இசைத்தமிழ் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உளது.

     

    இப்பாடல்களில் அமைந்துள்ள இசையமைதி அப்துல்காதர்

    என்கிற இசுலாமியரையும் பாரதியாரையும் ஈர்த்தது.

     

    இவர்களைப் போல் பலரும் காவடிச் சிந்துப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

     

    குணங்குடி மஸ்தான் சாகிபு (1825 – 1875) பாடிய பாடல்கள் இசைத்தமிழுக்கு வளம் சேர்த்துள்ளன.

     

    இவைகளைத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள்

    கண்டு கொள்வதில்லை என்பதும் மிகவும் வருந்துதற்குரிய ஒன்றாகும்.

     

    இசைத்தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியோர்:

    1. திருவாரூர் இராமசாமி பிள்ளை
    2. பெரிய திருக்குன்றம் சுப்பராமையர்
    3. இராமகவி
    4. ஆனை ஐயா
    5. பட்டாபிராமய்யர்
    6. கனம் கிருஷ்ண ஐயர்
    7. பராங்குசதாசர்
    8. நீலகண்ட சிவம்
    9. பட்டணம் சுப்ரமணிய ஐயர்
    10. செவற்குளம் கந்தசாமிப் புலவர்
    11. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
    12. சுந்தர முதலியார்
    13. ஆறுமுக உபாத்தியாயர்
    14. முருகேச கவிராயர்
    15. சுப்பிரமணிய பண்டிதர்
    16. செய்யூர் செங்கல்வராய சாஸ்திரி
    17. அகத்தியலிங்க கவிராயர்
    18. இராசப்ப முதலியார்
    19. சின்னசாமி நாயுடு
    20. சரவணபவ தாசர்
    21. வ. த. சுப்ரமணிய பிள்ளை
    22. நமச்சிவாய நாவலர்
    23. குப்புசாமி கிராமணி
    24. காஞ்சி சபாபதி முதலியார்
    25. கிருஷ்ணசாமி ஐயா
    26. வேலாயுதக் கவிராயர்
    27. கோவிந்தராச தேசிகர்
    28. சண்முக முதலியார்
    29. சாமிநாத தாசர்
    30. பாலசுப்ரமணிய முதலியார்
    31. காமியப்பக் கவிராயர்
    32. முத்துசாமிக் கவிராயர்
    33. வடலூர் வள்ளலார் இராமலிங்கர் (கீர்த்தனைகள்)
    34. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் (காவடிச் சிந்து)
    35. குணங்குடி மஸ்தான் சாகிபு
    36. கோட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர்
    37. கவி குஞ்சரபாரதி
    38. முத்துத் தாண்டவர்
    39. பாபநாசம் சிவன்
    40. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
    41. பாரதியார்
    42. தேசிக விநாயகம் பிள்ளைபல கீர்த்தனைகளை இயற்றினார்.
    43. பாரதிதாசன்
    44. சுத்தானந்த பாரதியார்
    45. பெரியசாமித்தூரன்தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

     

     

     

    ***********************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    08/08/2017

     

     

    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    Share
  • கோடைக்கு இரை ஈரம்

    எம்.ரிஷான் ஷெரீப்

     

     

    யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்

    புறக்கணித்துவிட்ட

    இலையுதிர்த்த விருட்சங்களில்

    பௌர்ணமி நிலவு

    கோடையை வாசித்தபடி வானில் நகரும்

     

    வனத்தில்

    புள்ளி மான்கள் நீரருந்திய

    குட்டைகள் வரண்டு விட்டன

     

    அகோரச் சூரியன் தினமும்

    தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்

    பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்

    தன் மென்பரப்பையிழந்து

    வெடிக்கத் தொடங்கி விட்டது

     

    சாம்பல் குருவிகள் ஏழு

    இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு

    தினந்தோறும் காலையில்

    முற்றத்திலிறங்கும்

     

    காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்

    உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த

    காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி

    தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன

     

    எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்

    தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென

    கேட்டுக் கொள்ளும் பார்வைகளை

    சேமித்து வைத்தவாறு

    வட்டமிட்டபடியே இருக்கின்றன

    கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட

    மரங்கொத்திப் பறவையின் கண்கள்

     

    கொக்குகளும் நாரைகளும்

    தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட

    தண்ணீர்க் குளங்களின்

    ஈர மணற்தரையைத் தொடுகின்றன

    ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்

    தாகித்த மேக விம்பங்கள்

     

    அவ்வாறாக

    கோடைக்கு இரை

    ஈரமென ஆயிற்று

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-21

    க. பாலசுப்பிரமணியன்

    எந்த வடிவில் இறைவனைக் காணலாம்?

    திருமூலர்-1-3

    உள்ளத்தில் இறைவனை நிறுத்தி வழிபட நாம் முனைகின்றபொழுது நம்முள்ளே எழும் கேள்வி “எந்த இறைவனை நாம் வழிபட வேண்டும்?” “அவன் உருவம் எவ்வாறு இருக்க வேண்டும்?” “அவன் அமைதியானவனா இல்லை கோபத்தை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவனா?” என்ற பல தேவையற்ற கேள்விகள் உள்ளே எழுகின்றன. இந்தக் கேள்விகள் அனைத்தும் தெளிவில்லாத மனதின் அறிகுறியாக அமைகின்றது. “உண்மை ஒன்றே; அதைக் காண்பவர்கள் தங்கள் பார்வைக்குத் தகுந்தவாறு விமர்சிக்கின்றார்கள்” என்று நமது மறைகள் அழகாகச் சொல்லுகின்றன.

    சுந்தரமூர்த்தி நாயனாரோ இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கூறுகின்றார்:

    “பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

    இந்தக் கருத்தை மேலும் தெளிவுறுத்துவதுபோல திருமூலர் விளக்குகின்றார்:

    “திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவோர்க்கு

    புரையற்   றிருந்தான் புரிசடை யோனே.” 

    பட்டினத்தாரோ அவனுடைய எங்கும் நிறைந்த நிலையை விளக்கி அவனை அனுபவபூர்வமாக உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்

    “நூலா லுணர்வரிய நுண்மையினு  நுண்மையன்காண்

    பாலாறு சர்க்கரைபோற் பரந்தபரி பூரணன்காண் “

    எவ்வாறு பாலில் கரைந்த சர்க்கரையின் இனிப்பு பால் முழுவதிலும் பரவி நிற்கின்றதோ அதுபோல் அவனும் எங்குமாகி நிற்கின்றான். அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த உருவத்தில் காண்பது.? அவன் அணுவுக்குள்ளும் உள்ளானா? அல்லது மாமலைகளிலே இருக்கின்றானா?   இதற்குத் தீர்வு காண்பதுபோல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    அணுவுள் அவனும் அவனுள் அணுவுங்

    கணுவுற நின்ற கலப்ப துணரார்

    இணையிலி யீச னவனெங்கு மாகித்

    தணிவுற நின்றான் சராசரந் தானே..” 

    இறைவனின் இந்தப் பரந்த விரிந்த உலகளாவிய உண்மையினை விளக்கும் வகையில் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றார் மாணிக்க வாசகர்:

    அற்புதன் காண்க அனேகன் காண்க

    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

    பத்தி வலையிற் படுவோன் காண்க

    ஒருவ னென்னு மொருவன் காண்க

    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

    அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

    இணைப்பறும் பெருமையி லீசன் காண்க

    அரியதில் அரிய அரியோன் காண்க

    மருவிய பொருளும் வளர்ப்போன் காண்க

    எத்தனை வடிவத்தில் அவன் காட்சி அளிக்கின்றான் ! அவனை ஏதாவது ஒரு வடிவத்தில், ஒரு உருவத்தில் அடைத்து வைக்க முடியுமா?

    ஒன்றே பலவாகி நிற்கின்ற இந்த உண்மையை விளக்கும் வண்ணம் வள்ளலாரோ இறைவனை எவ்வாறு காண்கின்றார் எனபதை விளக்குகின்றது கீழ்கண்ட பாடல் :

    மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

    மறை நான்கின் அடிமுடியும் நீ

    மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

    மண்டல மிரண்டேழும் நீ.

    பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

    பிறவும் நீ ஒருவன் நீயே

    பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ

    பெற்ற தாய் தந்தை நீயே.

    உணர்வு பூர்வமாக, அறிவு பூர்வமாக நாம் சிந்திக்க முயன்றால் அவனே ஒன்றாகவும் அவனே பலவாகவும் தென்படுவான். எவ்வாறு ஒரே ஒளி பல வண்ணங்களில் கண்களுக்குப் புலப்படுகின்றதோ அவ்வாறே அவனது பல வண்ணங்கள் நம் கண்களுக்குத் தென்படுகின்றன. அனைத்திலும் உள்ளிருந்து அனைத்தையும் கடந்து அனைத்துமாக அனைத்தும் ஒருங்கிணைந்த ஒன்றாகத் தெரிகின்ற அவன் வடிவை நாம் எப்படிப் போற்றினாலென்ன !

    தொடருவோம்

    Share
  • நாணம்

          ரா.பார்த்தசாரதி

     

     

    கதிரவனை கண்ட  நாணலே,  நாணத்தால் தலை குனிந்தாயோ

    காதலன்  நெருங்கி வருவதை கண்டால் நாணம் கொள்வாயோ

    இனியவளே ! உன் நாணத்திற்கு  என் நெருக்கம்தான் காரணமோ

    இரு கைகளைக் கொண்டு மறைத்தால்  நாணம் போய்விடுமோ !

     

    நாணமெனும்  போர்வைக்குள் உன் உடல் மறைகின்றதோ

    கருமேக கூட்டத்திற்குள்  பால் நிலா  மறைகின்றதோ

    நாணமென்பது  பெண்ணிற்கு  ஓர்  அணிகலமானதோ

    முகத்தை மறைத்தாலும்,கன்னங்கள் சிவந்து வெளிப்படாதோ !

     

    நான் விண்ணை பார்க்கும்போது என்னை பார்க்கின்றாய்

    நான் உன்னை நோக்கும்போது, குனிந்து காலால் கோலமிடுகின்றாய்

    உன் நெஞ்சத்திற்குள்ளே  உன் முன் உலா  வருவேன்

    உன்  கன்னம்  சிவக்க காதல் மொழி பேசிடுவேன் !

     

    நாணம் என்பது  பருவத்தின்  கண்ணாடியோ !

    காதலில் பழகுவதற்கு ஓர் முன்னோடியோ

    இலைமறை காய்மறைவாய் காதலை  வெளிப்படுத்துமோ

    பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் கதைகள் பேசிடுமே !

     

    நாணமும், அச்சமும்  காதலியின்  உடைமையாகுமே

    ஒன்று கலந்த நெஞ்சம் உறவை நாடிக்   கெஞ்சுமே

    நாணத்தால் முகம் சிவந்து காதல் வெளிப்பட்டதே

    அன்பை நினைத்து ஏங்கி, அமுத நிலையை நாடுதே !

     

     

     

     

    Share
  • கடல் பயணம்..!

    பெருவை பார்த்தசாரதி 

    கட்டுமரம்

     

     

     

     

     

     

     

     

     

    தெம்பிருந் தாலுடலில்..தேர்கூடத் தனியேயிழுக்கலாம்..

    …….தெம்புடனுறுதியும் வேணும்..செல்லவே கடல்பயணம்.!

    கொம்புபோல சீவிய கட்டுமரமதைக் கடலில் செலுத்த..

    …….கையிரண்டில் கம்புகொண்டு கடல்நீரைத் தள்ளினால்..

    அம்புபோலச் சீறிப்பாயும்…ஆங்கே கடல்வெளியில்.!

    …….அப்போதே வீசிச் செல்வோம் மீன்பிடிவலையை.!

    வெம்பிய மனதுடன்தான் மீன்பிடிக்கச் செல்கிறோம்..

    …….எம்முயிர் உடைமைக்கே உத்திரவாத மில்லையப்பா.!

     

    ஓடும் மரக்கலம்தான் அதொருவழியேது மில்லாத..

    …….கடல்பயணம்..வழிதவறிச் சென்றால் கரைசேராது.!

    ஆடுகின்ற பாய்மரத்தில் சிலசமயமெம் வாழ்க்கை..

    …….ஆட்டம்கூட பாதியிலே முடிந்துவிடு மவலமுண்டு.!

    ஓடும் ராட்சதலை நடுவேகடும் கடல்பயணமதில்..

    …….ஓயாது உழைத்தால்தான் ஒருவேளை பசியடங்கும்.!

    தேடுகின்ற மீன்களெலாம் ஓரிடத்தில் கிடைத்தாலும்..

    …….தீராதெம் வாழ்வாதாரப் பிரச்சனை கடலுளவரை.!

     

    கப்பலிலே சீறிவரும் ஸ்ரீலங்கா கடற்படையது..

    …….கபடமில்லா மீனவனை அடித்துக் கைதுசெய்யும்.!

    தப்பேதும் செய்யாதெங்கள் மீனவ நண்பனை..

    …….தப்பாமல் படகிலேற்றி பலநாட்கள் சிறைவைக்கும்.!

    எப்போதுமெங்கள் கடல் வாழ்வே சூனியம்தான்..

    …….எதற்குமே எங்களுக் காரும்துணை நிற்பாரில்லை.!

    உப்பு நீரின் மேலெங்கள் கடல்பயணம்…அது..

    …….உண்ணாமல் உறங்காமல் பலநாள்கூட நீடிக்கும்.!

    ===========

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::07-08-2017

    நன்றி:: கூகிள் இமேஜ்..

    Share
  • வனநாயகன் – புதினம்: ஓர் அறிமுகம்

    வல்லமை வாசகர்களுக்கு,

    ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள்!

    baskar-pic“வனநாயகன் – மலேசிய நாட்கள்” எனும் எனது இரண்டாவது புதினம் (நாவல்) கிழக்குப் பதிப்பகத்தால் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.

    2017-சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியான நாள்முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வனநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

    வனநாயகன் குறித்து நான் எழுதுவதைவிட, “காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்” எனும் தலைப்பில் நண்பரும் விமர்சகருமான  திரு. சுரேஷ் கண்ணன் எழுதிய விரிவான அறிமுகக் கட்டுரையின் ஒரு சிறுபகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

    “…..மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பான் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப் போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே ‘வனநாயகன்‘ எனும் இந்தப் புதினம். 

    புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண்விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் ‘இதைப் பற்றி சொல்கிறேன் பார்‘ என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. “

    என்னைப் பொறுத்தவரை எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதை விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடிய ஒரு விசயம் அந்நூல் குறித்தான உரையாடல்கள்தாம். அந்த வகையில் வனநாயகனை வாசித்து பதிவுகள், மின்னஞ்சல்கள் வழியாகத் தொடர்ந்து உற்சாகமளித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ***

    புதின ஆசிரியரைப் பற்றி…

    அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் திரு. ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  தனது சொந்த ஊரான ஆரூரை (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ஆரூர் பாஸ்கர் எனும் புனைபெயரில் எழுதிவருகிறார்.

    “சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

    இவருடைய நூல்கள் : என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை), பங்களா கொட்டா, வனநாயகன் – மலேசிய நாட்கள் (புதினங்கள்).

    இணையதளம்: http://aarurbass.blogspot.com/
    முகநூல்: https://www.facebook.com/aarurbass
    மின்னஞ்சல்: aarurbass@gmail.com

    ***

    நூல்கிடைக்கும் விவரம்:

    வனநாயகன் – மலேசிய நாட்கள்
    ஆரூர் பாஸ்கர்,

    கிழக்கு பதிப்பகம்,
    பக்கங்கள் 304, விலை ரூ.275

    நூலை இணையவழியே வாங்க:
    வனநாயகன் – மலேசிய நாட்கள்
    https://www.nhm.in/shop/9788184936773.html

    அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
    https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

     

     

     

    Share
  • கோப்புக்கூட்டல் [5]

    -இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 7, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [5]

    வல்லமையாளர்

    innam

    வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரைத் தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தைப் புடம் போடும் ஆசாரி போலும், நன்கு ஆராய்ந்தபின் நமக்கு நற்செய்திகள் பல அளிக்கிறார், தேர்வு செய்யப்பட்ட வல்லமையாளரின் சாதனைகளை விவரிக்கும்போது. எனக்கு எவிடென்ஸ் கதிர் பற்றிப் பல வருடங்களாகத் தெரியும்; திரு வின்சென்ட் ராஜ் பற்றி இன்றுதான் தெரியும்.

    திரு. வின்செண்ட் ராஜ் தன்னலம் நாடாதவர், நீதிக்குப் போராடும் விடாக்கொண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் அடிக்கசண்டாகத் தங்கிக்கொண்டு, சமுதாயத்தில் நஞ்சு விதைக்கும் சாதி,மத, இன பேதங்கள், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,ஊழல்கள், முறைகேடுகளுக்கு அரசு முன்னின்று கவசம் பூட்டும் கேவலங்கள் ஆகியவற்றை எதிர்ப்பது உயிருக்கு அபாயம் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அவர் அத்துடன் நிற்காமல், சமுதாயத்தால் காயம் பட்டவர்களுக்கு புத்துணர்ச்சியும், புனர்வாழ்வும் அளிக்கப் பாடுபடுவது போராளியின் அமைதிச்சாரல் என்க. போனஸ்:  கூட்டுப் போராளி.

    திரு.செல்வன், எவிடென்ஸ் கதிர் அவர்கள் சட்டத்தைக் கையாளும் விதத்தை வருணித்திருப்பது தேவையான அணுகுமுறைதான். சட்டத்தை எதிர்க்குமுன் அமலில் இருக்கும் சட்டத்துக்கு நாம் கட்டுப்படுகிறோமா என்ற வினாவுக்கு விடை நாடுவது நலம் பயக்கும்.

    தேசியச் சட்ட ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சாதியப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தும், இன்னும் இந்த அரசாங்கம் அதை நிறைவேற்றாமல் கிடப்பில்போட்டு வைத்திருப்பது பிரதிநிதித்துவ மேலாண்மைக்கு, ஓர் இழுக்கு. ஏன்? தமிழ்நாட்டு அரசியலில் சாதீயம் தான் பல்லாண்டுகளாகப் பேயாட்டம் ஆடுகிறது. இந்தச் சூழ்நிலையில் நமக்கு நூற்றுக்கணக்கான எவிடென்ஸ் கதிர்கள் தேவை.

    உச்ச நீதிமன்றத்தில் 22 மாநில அரசுகள் தங்களின் மாநிலங்களில் சாதியப் படுகொலையில் நிகழ்வதை ஒப்புக்கொண்டபோதும், கலப்புத் திருமணங்கள் அதிகம் நடக்காத மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் அவலட்சணத்தில், தமிழகஅரசு தங்கள் மாநிலத்தில் சாதியப் படுகொலைகள் நிகழ்வதே இல்லை என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது மட்டுமன்று; அவ்வாறு சாட்சியம் பதிவு செய்தவர் மீது ‘பொய்சாட்சி’ வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். பல்லாண்டுகளாக, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மலம் அள்ளுவது, துப்புரவு செய்வது ஆகியவற்றைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அரசு இயந்திரத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 175 சாதியப் படுகொலைகள் இங்கு அரங்கேறி உள்ளன. அவற்றில் கொலையுண்டவர்களில் 80% பேர், தலித் இளைஞர்களைக் காதலித்து மணமுடித்தப் பெண்களே என்ற புள்ளி விவரம் தமிழ்ச் சமுதாயத்தை, நமது சங்க காலப் பண்பை, எள்ளல் செய்கிறது. ஓர் ஆறுதல் செய்தி: ஒரு பெண் ஓர் இளைஞனை அழைத்து வருகிறாள், காதலனாக. அவர் நசுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வந்த குடும்பம். அதனால் மேல்தட்டு தருமமிகு சென்னைச் சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்வதைக் கண்ணாரக் கண்டேன். பிறந்த வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்களிடம் சொல்லப்போவதில்லை என்பதில் திடமாக இருந்தாள். என் செய்வது? என் தீர்மானத்தை ஒப்புக்கொள்வதிலும் தீர்மானமாக இருந்தார்கள், இருவரும். அதாவது என் சம்மதமில்லாமல் திருமணம் முடிப்பதில்லை என்ற தோற்றம். யாதொருவிதமான அசம்பாவிதம் இல்லாமல் திருமணம் நிறைவேறியது. பிறந்த வீட்டிலும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டது, மேலும் மென்மையான செய்திகள் உண்டு. அவரவது தனிமை உரிமையை மதித்து (ப்ரைவசி) மேலதிக விவரங்களை கூறவில்லை. இந்த உண்மை வரலாறு ஒரு பாடம் போதிக்கிறது. அவரவரது குடும்பத்தில் முதியவர்கள் அறிவு முதிர்ச்சியையும், சங்கப்பாடல்களில் வரும் முக்கோல்பகவர்களைப் போல் இயல்பு வாழ்க்கையின் சுவாசத்தையும், தங்கள் மலர்ந்த நினைவுகளின் இன்பத்தையும் முன்னிறுத்திக் கலப்புமணமோ, சாதி மணமோ, மனம் ஒத்து நடக்கும் காதல் மணங்களை வரவேற்க வேண்டும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://discoverybookpalace.com/product_images/p/766/_சமுதாயம்__11579_zoom.JPG

     

     

     

    Share
  • அவலம் ஓயனும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    இழிவுகளும் நாட்டினிலும் பெருகுது 

    பெரும் இடரதனால் நாட்டின்வளம் கருகுது 

    மிக அழிவதனை அன்னைநாடு அணைப்பதற்கு

    முன்னதனைக் காக்கனும் – துயர் – போக்கனும்!
    அண்ணல்காந்தி தந்தவுயர் விடுதலை 

    தனை அடகுவைத்து வளர்க்கின்றார் கெடுதலை 

    பெரும் தன்னலத்தார் அரசியலால் தாய்நாடு தள்ளாடி வீழுது

     துயர் – சு+ழுது!
    காந்தியவர் வாரிசெனச் சொல்லுறார் 

    அதில் கருணையதும் இன்றியுமே கொல்லுறார் 

    மிக வாந்தியுமே எடுத்தாற்போல் வகையற்ற துயராட்சி நடத்துறார் 

    காலம் – கடத்துறார்!
    அவசரக் கோலமெனும் திட்டம் – தந்த அலங்கோலத் தால்கண்டோம் நட்டம்

     பெரும் நவரச நாயகனாய் நடித்தேய்க்கும் தாடிமிக மோசம்

     வெற்று – கோஷம்!
    ஊர்ஊராய் சுற்றியுமே திரிவார்

    மிக உத்தமராய் காட்டியுமே வருவார்

     உற்றுப் பாரெந்தன் நடிப்பதனை பாரனைத்தும்

    போற்றுதெனை என்கிறார் – நாட்டைத் – தின்கிறார்!
    தாமரையை வளர்க்கவுமே எண்ணுறார் 

    ஆட்சித் தளவாடத் தால்துயரும் பண்ணுறார் 

    பெரும் பு+மறையும் நாகமெனப் பெருந்தீங்கை

    மறைந்தவரும் செய்யுறார் வாகை – கொய்யுறார்!

    தூஙகும்வரை தொடையில்கயிறு திரிப்பார் 

    நம் தயவாலும் ஜெயித்துமிகச் சிரிப்பார் 

    துயர் தாங்குதற்கா நாம்பிறந்தோம்?

    துணிந்தெழுந்து நாம்புயலாய் பாயனும் – அவலம் – ஓயனும்!
    08.08.2017

    Share
  • ‘’நந்தனார்’’….!

     

    இன்று ‘’நந்தனார்’’ சினிமா பார்த்தேன்….அடடா க்ளைமாக்ஸ் ஆடடா என்றிவர் பாட ,நடராசர், உமையாளொடு ஆட அட்டகாசம்….மெய்சிலிர்ப்பு….அதனால் அம்பலவாணரே ‘’ஆட வருகவே’’…..!

    ஆட வருகவே….
    ———————–

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)
    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)
    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)
    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)
    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)
    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)
    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)….கிரேசி மோகன்….!
    ————————————————————

    Share
  • Elegy – இரங்கற்பா

     

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இரங்கற்பா

    images (3)

    உன்னால்தான் உயிரோடிருக்கிறேன்.
    உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான்.
    ஓ எனதன்பே.

    குரலற்ற எமது இரைச்சல்
    விண்ணையே குத்திக் கிழித்தாலும்
    உன்னை மட்டும் அடைவதேயில்லையது
    எனினும் பனியாய் உறைந்து
    தொலைதூர சிகரங்களில் குவிந்திருக்குமது
    மீண்டும் ஆதிநாளுக்கே இழுக்கிறது.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_7255

    ’’ராஜாவாய் ஆனாலும் ரங்கனவர் ராதைக்கு
    கூஜாவாய் ஆனாரே காதலால் : -’’ஆஜா’’(ஹிந்தி -Come)
    அவள்சொல்ல வந்திடுவார், ஆவினத்தை விட்டு
    இவளுக்(கு) இணை இவள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா

    ​​தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

    IMG_20170804_100748
    கல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு இன்று 07.08.2017 ஆவணி திருவோணம் – ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரையுடன், லக்ஷ்மி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார்.

    IMG_20170807_105622

    இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர்

    ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.பங்கேற்ற மாணவ மாணவிகளுக்க பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்ன படையலும் இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
    வாலாஜாபேட்டை – 632513.
    Ph: 04172- 230033, 9443330203
    Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com
    Bank Details :Name : Sri Muralidhara Swamigal , Bank Name : State Bank of India,
    Account Number : 10917462439, Branch : Walajapet, Bank Code:0775,
    IFSC: SBIN0000775

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”நூதனர் , நித்ய நவனீதர், வந்துசெல்லும்
    சேதனர், சீராயர் சீதரர், -யாதவர்,
    மாதவர், கேசவர், மாபா ரதம்செய்து
    தீதகற்றும் கீதையாம் தேர்’’….கிரேசி மோகன்….

    Share
  • தானத்திலே சிறந்த தானம்!

    பவள சங்கரி

    மனிதர்களின் ஐம்புலன்களின் ஆகச்சிறந்த புலன் கண்கள்தான். கண்கள் இல்லையென்றால் ஏற்படும் இழப்பு ஈடுசெய்ய இயலாததொன்று.

    20621144_679452455587023_2567135607939585084_n

    உலகில் கிட்டத்தட்ட  3 கோடியே 70 இலட்சம் பேரின் பொழுதுகள் இருண்டே கிடக்கின்றன. பிறவியிலேயே பார்வையின்றி பிறந்தவர்கள், இடையில் நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளால் பார்வையிழந்தவர்கள் போன்றவர்கள் இதில் அடக்கம். நம் இந்தியாவில் சுமாராக, 27 மில்லியன் பேர்கள் மித பார்வை கோளாறுகளாலும், 9 மில்லியன் பேர்கள் இருகண் பார்வையின்மையாலும், 2,60,000 குழந்தைகள் பார்வையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

    New Doc 2017-08-07_1

    ஒரு முக்கியமான, மகிழ்ச்சியான விசயம் என்றால் இவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் மட்டும் 1 1/2 கோடி பேர் பார்வையற்றவர்கள். அதாவது உலக பார்வையற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர்.

    20170805_102301

    இதில் 60% பேர் குழந்தைகள் என்பது கொடுமையிலும் கொடுமை. மொத்த பார்வையற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு கீழே உள்ளவர்கள்.  இவர்களுக்குப் பார்வை கிடைக்கவேண்டுமானால் ஆண்டொன்றுக்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் கருவிழிகள் தானமாக தேவைப்படுகின்றன. ஆனால், கண்கள் தானமாகப் பெறக்கூடியவைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

    New Doc 2017-08-07_2

    ஆண்டொன்றிற்கு சராசரியாக 80 இலட்சம் பேர் இறக்கிறார்கள்.  இறையருளால் கண் பார்வை பெற்றுள்ள மனிதர்கள் பார்வையற்றோர் மீது இரக்கம் கொண்டு தங்கள் வாழ்க்கை முடிந்த பின்பு மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் கண்களை தானமாகக் கொடுக்க மனது வைத்து, உற்றார் உறவினரிடம் சொல்லிவைப்பதன் மூலம்  உலகத்தில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும் என்பதே நிதர்சனம்.

    கண் தானம் கொடுக்க வேண்டியதன் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதில் இன்று பேர் சொல்லும் வகையில் முன்னணியில் இருப்பவர், பட்டாசு நகரான சிவகாசி அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா டாக்டர் கணேஷ் அவர்கள். இதுவரை 7500 விழிகளுக்கு ஒளி வழங்க தம் தன்னிகரில்லா சேவையை வழங்கியுள்ளார். இவர் நீண்ட காலங்களாக கல்லூரி, பள்ளிகளில் தொடர்ந்து கண் தான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்.     சென்ற 05/7/2017 அன்று தமது 1011 வது கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பெண்கள் கலை& அறிவியல் கல்லூரியில் நடத்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியை மாணவர்களுக்கு சிறிதும் சலிப்பு ஏற்படாத வகையில், மிக அழகாகத் திட்டமிட்டு சுவையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண் தானம் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும், ஐயங்களுக்கும் சரியான விளக்கமும் அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு, அவர்கள் சரியான முறையில் அக்கருத்துகளை உள்வாங்கியதற்கான ஆதாரங்களாக அவர்களின் பின்னூட்டங்களும் அமைந்தது பாராட்டுதலுக்குரியது!

    இருளின்பிடியில் கருமையின்நெடியில்
    கோடிபேர் கொத்தடிமைகளாய்
    ஒளியாய் விடியுமென நாடியுள்ளோர்
    விழியில் குருதியென வாடியுள்ளோர்
    மொழியில் பேதமென சாடியுள்ளோரும்
    அருளில் பாவமில்லையென பாடியுள்ளோர்.

    பசும் மரங்களும் புல்பூடுகளும்
    வண்ண மலர்களும், நீல வானும்
    சிற்றலைகளுடன் நீர்நிலைகளும்
    பேரிரைச்சல்களுடன் நீர்வீழ்ச்சிகளும்
    உலகின் காணக்கிடைக்காத அதிசயங்கள்
    அனைத்தும் மொத்தமாய் கருமையாய்
    கடக்கும் கொடுமை எதிரிக்கும்
    கிடைக்கக் கூடாத சாபம்.

    பட்டும் பளபளப்பும் தொட்டு
    உணரவியலா உச்சபட்ச இரணங்கள்
    ஐந்து நிமிட தியானம் அமைதிக்கு வரமாம்
    கண்ணொளியிலா வாழ்நாள் தியானம் சாபமாம்

    இருளில் வாடும் வறியோருக்கு
    ஒளியில் வாழ்ந்து வானமேகியோர்
    மண்ணில் மக்கிப்போகும் கண்ணின்
    மணியை தானமாய் அளித்து
    விண்ணில் நிலையாய் உயர்ந்தோர்
    நிலையைப்பெற்று புண்ணியம் கோடியும்
    இயைந்து பெற்று நல்லறம் காப்பீரே!
    ஈசனின் திருவடியை உவந்து பெறுவீரே!!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (123)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20645963_1399821553405373_447907129_n

    முருகானந்தன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
            

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share