Blog

  • பரிபூரணம்

    -தமிழ்த்தேனீ

    1. “காலடிகள்“

    ஒருவர் எப்போதும் ராமநாம  ஸ்மரணையிலேயே இருப்பார்.  சிறந்த  ராமபக்தர்   அவர்  எப்போதுமே இறைவனை  வேண்டுவதால்   இறைவனும் அவரைக் காக்க  அவர்  கூடவே  நடந்து வருவாராம்.  அப்போது பின்னால் பார்த்தால் இரு காலடிகள் கூடவே வருவது  தெரியுமாம் அந்த  பக்தருக்கு. ஒரு நாள்  அவர்   காலில்  அடிபட்டு  நடக்க  ஸ்ரமப்பட்டுக் கொண்டிருக்கையில்  பின்னால் திரும்பி இறைவன் வருகிறானா  என்று பார்த்தாராம்.  அங்கே இறைவனின் திருவடிகளின்  தடம் காணவில்லை.   ஒரே ஒரு ஜோடிக் கால்தடங்கள் மட்டுமே  தெரிந்ததைப் பார்த்து  இறைவா என்னைக்  கைவிட்டு விட்டாயா   உன் காலடித் தடம் காணோமே  என்றாராம்.

    அதற்கு  இறைவன் நான் உன்னை  எப்போதுமே கைவிடமாட்டேன்  இப்போது தெரிவது  உன் காலடித் தடமல்ல;   என் காலடித் தடமே  உனக்கு காலில் அடிபட்டிருப்பதால் உன்னையும் தூக்கிக் கொண்டு நான் நடந்து கொண்டிருக்கிறேன்  என்றாராம் இறைவன்.

    *****

    2. “பரிபூரணம்”

    ஒருவன் மலைப்பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது தவறி விழுந்துவிட்டான். உடனே அவன் கைக்குக் கிடைத்த மரத்தின் வேரைப் பிடித்துக் கொண்டு இறைவா காப்பாற்று என்று கதறுகிறான். அசரீரியாக, ”நீ அந்த வேரை விட்டுவிடு நான் காப்பாற்றுகிறேன்” என்று ஒரு குரல் கேட்கிறது. அதெப்படி விடமுடியும் இதையும் விட்டுவிட்டால் நான் கீழே விழுந்துவிடுவேன் என்றான் அந்த மனிதன்.

    உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறதா நான் காப்பாற்றுவேன் என்றது அந்த அசரீரி.

    இ ரு க் கி ற து ஆனாலும் பயமாய் இருக்கிறதே என்றான் அந்த மனிதன்.

    அப்படியானால் பயப்படாமல் அந்த மரத்தின் வேரை விட்டுவிடு என்றது அசரீரி.

    இல்லை எனக்குப் பயமாய் இருக்கிறது என்றான் அவன்.

    நான் ஏற்கெனவே உன்னைக் காப்பாற்றிவிட்டேன் நீதான் கவனிக்கவில்லை என்றது அசரீரி.

    அப்படியா எப்படி என்றான் மனிதன்.

     கீழே குனிந்து பார் என்றது அசரீரி.

    அந்த மனிதன் கீழே குனிந்து பார்த்தான். அவன் காலுக்கும் பூமிக்கும் இடையே இரண்டடி இடைவெளிதான் இருந்தது.

    தெய்வமே என்னைக் காப்பாற்றிவிட்டாய் என்று சொல்லிக்கொண்டே கீழே குதித்தான் அந்த மனிதன் அனவன் குதித்தவுடன் அங்கே அந்தப் பூமியில் புதைமணல் அவனை ஊள்ளே இழுக்கலாயிற்று.

    அந்த மனிதன் அலறினான் காப்பாற்றிவிட்டேன் என்றாயே தெய்வமே இப்படிப் புதை மணலில் தள்ளி விட்டாயே என்று அலறினான்.

    கவலைப்படாதே என் மேல் உனக்கு முழு நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறதே என்றது அசரீரி.

    அப்போது ஒரு பெரிய ராக்‌ஷதக் கழுகு அந்த மனிதனைக் கால்களால் பற்றிக்கொண்டு பறந்தது.

    அந்த மனிதன் இறைவா புதைமணலிலிருந்து ராக்‌ஷதக் கழுகிடம் மாட்டிவிட்டாயே என்று அலறினான்.

    அடே மனிதா நான் எது செய்தாலும் அது உன்னைக் காக்கவே என்று நீ எப்போது புரிந்துகொண்டு எப்போது என்னை நம்பப் போகிறாய் என்றது அசரீரி.

    அந்த மனிதனுக்கு பயம் வந்துவிட்டது. இந்த ஒரு அசரீரிதான் இப்போது துணையிருக்கிறது இதையும் பகைத்துக் கொண்டால் நம் கதி அதோ கதிதான் என்று நினைத்து இறைவா நான் உன்னை நம்பாமல் யாரை நம்பப் போகிறேன் அதற்காக என்னை ஒரு ஆபத்திலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் தள்ளி அதிலிருந்து மீட்டு இன்னொரு ஆபத்தில் என்று சொல்லிக்கொண்டே போனவன், ஆமாம் நான் பேசுவது உன் காதில் விழுகிறதா இந்த ராக்‌ஷதக் கழுகு என்னைக் கவ்விக்கொண்டு வெகு வேகமாகப் பறக்கிறதே காற்றிலே நான் பேசுவது எனக்கே கேட்கவில்லையே உனக்கு கேட்கிறதா இறைவா என்று அலறினான்.

    அந்த அசரீரியிடமிருந்து ஒரு பதிலும் இல்லை.

    இறைவா நீயென்ன செவிடா ஊமையா நான் வேண்டுவது உன் காதில் விழுகிறதா என்று அலறினான் அந்த மனிதன். அந்தக் கழுகு ஓரிடத்தில் அவனை பத்திரமாக இறக்கி விட்டுவிட்டு நின்றது.

    அந்த மனிதன் தன்னைச் சுற்றிப் பார்த்தான் அப்பாடா வேறு ஆபத்து ஏதுமில்லை. நல்லவேளை இந்தக் கழுகு என்னைக் காப்பாற்றி விட்டது; ஆனால் நீ என்னைக் கைவிட்டு விட்டாயே என்றான் அந்த மனிதன்.

    நான் உன்னைக் கைவிடவே இல்லை. மனிதனே இது கழுகு அல்ல என் வாகனம் ஆகிய கருடன். இந்தக் கருடன் மேல் நானிருக்கிறேன் என்றது அசரீரி.

    இறைவா நீயிருக்கிறாயா இந்தக் கருடன் மேல் என்னால் காண முடியவில்லையே என்று அலறினான் அந்த மனிதன்.

    காலம் காலமாக உண்மையான பக்தியுடன் என்னை நோக்கித் தவமிருந்த பக்தர்களே காண முடியவில்லையே. என்னையே நம்பாமல் போலியாக பக்தி காட்டும் உன்னால் எப்படிக் காணமுடியும் என்னை? அதுவரை நீ உன் பக்தி போலியானதாக இருந்தாலும் உன்னை காப்பது என் கடமை ஆதலால் காப்பேன். ஆனால் என்னை நீ எப்போது பரிபூரணமாக நம்புகிறாயோ அப்போதுதான் நான் உனக்கு காட்சி அளிப்பேன் அதுவரை அசரீரியாகவே இருப்பேன்.

    நீ உன்னையும் உணர்ந்து என்னையும் உணரும் நேரம் வரும்போது சரீரியாகவே காட்சி அளிப்பேன் வருகிறேன் அல்ல அல்ல எங்கும் நிறைந்திருக்கிறேன் என்றது அசரீரி.

    கழுகு தன் அகலமான சிறகை விரித்து ஜிவ்வென்று மேலே எழுந்தது அல்ல அல்ல கருடன் பறந்து போனது.

    அதன் மேல் நாராயணன் உட்கார்ந்திருப்பதைப் பல கண்கள் கவனித்தன; அவையெல்லாம் பரிபூரண சரணாகதி பெற்ற கண்கள்.

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’கண்டேன் அனுமனை’’….!
    ——————————————————

    kesav

    இந்திர ஜித்தனின் தந்திரக் கட்டகல
    எந்திர வேகத்தில் ஏகிய -சுந்தரன்
    வெற்ப்பெடுத்து வந்தவனின் வீரக் கழல்களை
    நிர்பயம் கொள்ள நெருங்கு….

    எங்கு இராமன் காதை நிகழ்ந்தாலும்
    அங்கு விழியிலா னந்தபாஷ்பம் -பொங்கிவர
    கைத்தாளம் இட்டு குதூகலிக்கும் மருதியின்
    மெய்த்தலம் சிந்திக்க மாண்பு….

    ”மருந்துண்ணும் போது மறவேல் குரங்கை,
    குரங்கில் அனுமனைக் காண!, -மருந்தாகும்
    சஞ்சீ வினியாக, சாகா வரம்பெற்று,
    உன்ஜீவன் வாழும் உலகு’’….
    அணிலுக்கு மூணு கோடு
    அனுமனுக்கு ஆலிங்கனம்
    வேலைக்கு ஏத்த கூலி….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – ஸ்ரீ ராம நவமி….!

     

    இராமன் திருப் புகழ்….
    ————————————————

    kesav
    “கோசலைகு மாரனென கொஞ்சுமுகம் ஒன்றுcrazy
    தேசுமுனி வாசிஷ்ட யோகமுகம் ஒன்று
    கோசிகனின் சீடனென கண்டமுகம் ஒன்று
    கோரமகள் தாடகையை கொன்றமுகம் ஒன்று
    ஈசன்சிலை யாகசிலை இற்றமுகம் ஒன்று
    வாசமகள் ஜானகியின் ஆசைமுகம் ஒன்று
    ஆசுகவி மாருதியின் நட்புமுகம் ஒன்று
    ஆதிகவி ஒதுமிதி காசபெரு மாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • தர வரிசைப் பட்டியல்!

    பவள சங்கரி

    கல்வித்தர வரிசைப் பட்டியலில் இந்தியாவிலேயே முதல் இடத்தை, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐஐடி தக்க வைத்துக்கொண்டுள்ளது. பல்கலைகழகங்களுக்கான தர வரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. பங்களூருவைச் சார்ந்த அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. கோவை மாவட்டத்தைச் சார்ந்த 10 கல்வி நிறுவனங்கள் சிறப்பான நிலையை பெற்றுள்ளன.

    Share
  • ’’கண்டேன் அனுமனை’’….!

     

    கிரேசி மோகன்

    ——————————————————-

    crazy
    ’’சுந்தர காண்ட சுருதி உரைத்திடும்
    மந்திர வாசக மாருதியே -எந்திரமாய்
    உண்டுறங்கி ஓய்ந்தேன்! உலகக் கிணற்றில்
    மண்டூகம் ஆச்சே மதி’’….

    ”திருத்துழாய் காட்டில் கருத்துடன் ராமன்
    திருப்பெயர் ஓதும் தவமே -மருத்துவக்
    குன்றேந்தி வந்தோய் குணமயக்கம் போக்கிட
    இன்றேந்தி வாருமய்யா இங்கு”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி – (106)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17690638_1279947372059459_1584759799_n
    130800147@N03_rஷேக் முகமது எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.04.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • அகாலத்தில் மரித்தவனின் கைபேசி எண்கள்

    எம். ரிஷான் ஷெரீப்

     

    மரணித்தவர்களுக்கு வரும் கைபேசி அழைப்புக்கள்

    அலைவரிசைகளில் அதிர்ந்து பெருகி

    பேரலையாகித் துரத்த

    கரை மணலென எங்கும் பரந்து விடுகின்றன

    அவர்களது தொலைபேசி எண்கள்
    கடற்கரைச் சிப்பிகள் பொறுக்கும் சிறுமி

    மீன் வலைக்காரன்

    மணற் சிற்பக் கலைஞன்

    உப்பு நீரில் கால் நனைப்பவர்களென ஓரோரும்

    தாமறியாது எண்களைப் பொறுக்கி

    கடலில் எறிந்து விடுகிறார்கள்

     

    அன்றிலிருந்து
    இருளில் தொலைந்துவிடும்
    ஆத்மாக்களின் சுவடுகள்

    அம் மணலை மிதித்துதிர்க்கும் துகள்கள்

    தனித்தனி எண்களாகி

    படகுகளென வெளியெங்கும் மிதக்கும்
    எக் காலமும்

    அவ்வாறானதொரு காலத்தில்
    அகாலத்தில் மரித்தவனின் எண்கள்

    அவனை அழைப்பவர்களது விரல் துடுப்புக்களினூடு

    அசைந்தசைந்து… அசைந்தபடியே

    – எம்.ரிஷான் ஷெரீப்

    Share
  • ’’தசாவதாவது அவதாரம் ”(கல்கி)….!

    ”க்ரேஸி” மோகன்

    ”நீ சொல்வது மெய்யாலுமே நிஜமா?….எங்கே தில்லிருந்தால் கற்பூரத்தைக் கொளுத்தி உள்நாக்கில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எச்சப்பண்ணாம அணைத்து முழுங்கு….மேல் துண்டைப் போட்டு அது மிதி படாமல் பின்பக்கமாக எகிறித் தாண்டு ” என்றெல்லாம் சில்லறைத்தனமான சத்தியங்களைச் செய்யச் சொல்லி என்னை சிரம தசைக்கு ஆளாக்காமல் நான் சொல்லப் போகும் இந்தக் கதையை….IN FACT இது கதை கூட அல்ல….ரகசியம்!….அதுவும் தேவ ரகசியம்!….வெயிட்டாகச் சொல்லப் போனால் இந்த தேவ ரகசியத்தோடு ஒப்பிட்டால் அந்த ”தங்க மலை ரகசியமே” தண்டோரா போட்டு தெருத் தெருவாக சொல்லும் அளவுக்கு சொத்தையாகி விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்….”தாது புஷ்டியான பீடிகை போதும் ” என நீங்கள் கிசுகிசுப்பது என் காதில் குடைகிறது….பலான ரகசியத்திற்கு வருகிறேன்….

    சில பல வருட மாத நாட்களுக்கு முன்பு (உண்மைக் கதையில் நாள், கிழமை ,தேதி, திதி கமிட் செய்யாமல் இருப்பதே உத்தமம்) த்ரில்லர், க்ரைம், ஹாரர், செக்ஸ் படங்களாகப் பார்த்துப் பார்த்து கற்பிழந்து கிடந்த எனது டி.வி.டிஐ மடியாக்க ”திருமால் பெருமை”, ”திருவிளையாடல்”, ”ஸ்ரீ சக்கிரதாரி” போன்ற பக்திப் படங்களைப் போட்டு (எனது வேலூர் பாட்டிக்காக பிரத்யேகக் காட்சிகள்) வயதான கிழங்கள் சமேதராகப் பார்த்தேன்…. ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படத்தின் இறுதிக் காட்சியில், வெண் குதிரையில் ”வனமாலி கதி சார்ங்கி சங்கி ச நந்தகியாக” தசாவதாவது அவதார (கல்கி அவதாரம்) விஸ்வரூப தரிசனத்தை கேவலமான க்ராஃபிக்ஸில் ஒருவன் கொடுக்க ( நடித்த ராவ் ஜலமோகினியில் நால்வரை கற்பழித்தது வேலூர் பாட்டிக்குத் தெரியாது), வேலூர் பாட்டிக்கு உடம்பில் பெருமாள் ஆவேசம் வந்து விட்டது…. ” கண்ட கதைகளைப் படிக்கற…. கண்ட கதைகளை எழுதற…. கண்ட கண்ட சினிமாக்களை பாக்கற…. கடங்காரா… .கலி முத்திப் போச்சு…. கல்கி அவதாரம் எடுத்துதான் உங்களைக் கரையேத்தணும்…. போ…. பிரபந்தம் படி…. போ” என்று உச்சஸ்தாயியில் கத்திவிட்டு, ஒரு நிமிடம் மயக்கம் போட்டு, உடனே தெளிந்து, ஒன்றரை சொம்பு மோர் குடித்து விட்டு, ஒன்றுமே நடக்காதது போல தனது பேத்தியின் சீமந்தத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள்….

    crazy

    வேலூர் பாட்டியின் பாதிப்பால் ஆழ்வார்கள் நாலாயிரத்துக்கு அண்ணங்கராச்சாரியார் எழுதிய நோட்ஸை எடுத்துக் கொண்டு நான் பன்னிரெண்டு திருமண் இட்டுக் கொண்டு பக்திப் பரவசத்தோடு பால்கனிக்கு ஓடினேன். தசாவதாவது.. அதாவது.. பத்தாவது அவதாரம் கல்கி பற்றிய ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் பிடித்து படித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனது நினைவில்லை. மழைத்துளி மேலே பட்டு நிமிர்ந்த என்னைச் சுற்றி ஹிட்ச்காக்கின் மர்ம இருட்டு. அப்போது வானத்தில் ஈசான்ய மூலையில் பி.ஸி. ஸ்ரீராமின் காமிராவில் எபெக்ட் லைட்டிங் ஒன்று தோன்றி மறைந்தது. கூடவே ரஹ்மானின் எலக்ட்ரானிக் இடியோசை. அந்த ஒளியும் ஒலியில் கண் மூடித் திறந்த போது, பால்கனி விளிம்பில் பெருமாளின் மோகினி அவதார போஸில் ரவிவர்மா வரைந்தது போல ஒரு ஸ்திரி. சாதாரண ஸ்திரி அல்ல. மடிப்பு கலையாத இஸ்திரி… ஒரு மோனோலிஸா மந்தகாசத்தை உதிர்த்து விட்டு என்னைப் பார்த்து, “அஜஹ குஜஹ ஆகச்சதி கரிஷ்யாமி லம்போதர கோடீ ரோஜ்வல தாம்பூல ப்ரவசதி…” என்று புரியாத தேவநாகிரியில் சம்பாஷிக்கத் தொடங்கினாள். நான் முழிப்பதைப் பார்த்து முறுவல் பூத்து, “ஏ மனிதா! நான் சொல்லப் போகிறேன், கேள்..” என்று பால்கனியிலிருந்து குதித்து செந்தமிழுக்குத் தாவினாள்.

    தான் ஒரு தேவ தூதி (தேவ தூதனுக்கு பெண் பால்) என்று பகர்ந்தவளின் பெயரைக் கேட்டதுக்கு, “மச்ச நாகேந்திர கச்சபர்லிகா; சொச்ச நச்ச கஜ தந்திர நாபிகா; பக்க லாவண்ய படுபுஷ்டி சாமுத்திரிகா” என்று ஆரம்பித்து ஏழு காண்டங்களுக்குக் குறையாமல் அரை மணி நேரம் ஒரு அமரகோசமே பாடினாள். இந்திரன் சபையில் மேனகா, ஊர்வசி, ரம்பா ஆடும்போது ‘அட்மாஸ்பியரு’க்காக ஆடும் ‘எக்ஸ்ட்ரா’ ஜாதி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

    “விக்ர மயூர விரக படீர காமகாசாம் புய…” என்று ஆரம்பித்து, அரை மணி நேரம் கழித்து முடியும் பெயர் கொண்ட கந்தர்வ காதலன் அவளைத் “தனபாக்யம்” என்று சுருக்கமாக செல்லமாக விளிப்பதாகக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினாள்.

    ஊடலின் உச்சகட்டத்தில் ஓட்டை வாய் கந்தர்வ காதலன் கல்கி அவதாரம் பற்றிய தேவ ரகசியத்தை தனபாக்கியத்திடம் உளறிக் கொட்டியிருக்கிறான். என்னதான் தேவலோகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தனபாக்கியமும் கேட்ட ரகசியத்தை காப்பாற்றாமல் பரப்ப வேண்டும் என்ற அனிச்சை செயலின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ‘ஆர்டினரி’ பெண்தானே!

    தனபாக்யம் சொல்லக் கேட்டு நான் உங்களிடம் கூறப் போகும் இந்த தேவ ரகசியத்தை தயவு செய்து யாரிடமும் கூறி விடாதீர்கள்.

    “சொன்னால் எங்கள் தலை வெடித்து ஆயிரம் சுக்கல்களாக சிதறும்” என்று விடாமல் விட்டலாச்சார்யா படம் பார்த்த பாதிப்பில் நீங்கள் நினைப்பது என் வலது ஞானச் செவியில் விழுகிறது.

    பி.எஸ். வீரப்பா பாணியில் புருவத்தைப் பர்பண்டிகுலராக கண்ணையே குத்தும் அளவிற்கு நிமிர்த்தி, ஒரு ரீல் ஓடும் நேரத்திற்கு எக்காளமாக சிரித்து விட்டு சொல்கிறேன்: “உங்கள் நினைப்பு தவறு . நீங்கள் நினைப்பது போல தேவ ரகசியத்தை சொன்னவன் தலையை வெடித்துச் சிதறுவது துவாபரயுகத்தோடு சரி. கலியுகத்தை பொறுத்தவரை ரகசியத்தை சொன்னவன் தலைக்கு பதிலாக கேட்டவன் தலைதான் ஆயிரம் சுக்கல்களாக வெடித்துச் சிதறுமாம். பத்தாத குறைக்கு ரகசியம் கேட்டவன் ரெட்டை மண்டைக்காரனாக இருந்தால் ரெண்டாயிரம் சிக்கல்கள். தேவலோகத்தில் சிலபஸ் இப்போது வெகுவாக மாறி விட்டதாம். நான் சொல்லவில்லை. தனபாக்யம் சொல்கிறாள். ‘என்ன எழவுடா இது.. நீ சொல்லப் போற ரகசியத்தைக் கேட்டு தலை வெடிச்சு கபால மோட்சம் (மோட்சமா? நரகமா? தனபாக்யம்கிட்ட கேட்டியா?) எங்களுக்கு கிடைக்கும்கறது தெரிஞ்சும் மூதேவி மகாகாரியமா ஏன் எங்ககிட்ட சொல்ற? எங்கள்ள யார்கிட்டயானு கடன் வாங்கியிருக்கியா?” என்று நீங்கள் நினைப்பது எனது இடது ஞானச் செவிக்குக் கேட்கிறது.

    “நான் என்ன பண்ணுவேன்? ஏற்கனவே எனக்கு கந்தர்வக் காதலன் மாதிரி ஓட்டை வாய்.. இந்த ரகசியத்தை இத்தனை நாள் பாதுகாத்து பாதுகாத்து எம் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே. இது எப்படி? ரகசியத்தை சொன்னாலும் சொல்லாட்டாலும் மண்டை வெடிக்கப் போறது என்னவோ என் விஷயத்துல நிச்சயம். நம்ம ரெண்டு பேர் மண்டையும் வெடிக்காது. ஏன்னா அந்த தனபாக்யம்கிட்ட என் தலை வெடிக்காதுன்னு வரத்தை அவ என் தலையில அடிச்சு சத்தியமா வாங்கிண்டதுக்கப்புறமாத்தான் ரகசியத்தையே கேட்டேன். உங்க தலைக்கு வருவோம். ரகசியத்தை நான் செல்லி நீங்க கேட்டாத்தானே மண்டை உடையும். நான் எழுதி மனசுக்குள்ளதானே நீங்க படிக்கப் போறீங்க. அப்புறம் என்ன பயம்? தைரியமா படியுங்க. மேலும் இதைப் படிக்கற ஆண்களில் யார் சம்சாரமாவது உம்மனாமூஞ்சியா இருந்து நீங்க எது செஞ்சாலும், ‘வந்து சேர்ந்தேளே, நீங்க அடிக்கற கூத்தைப் பாக்கறதை விட பேசாம நிம்மதியா உங்களுக்கு முன்னாடி சுமங்கலியா போயிடலாம்’ அது இதுன்னு ப்ளாக் மெயில் பண்ணற பட்சத்துல மனசை கல்லாக்கிண்டு, காதும் காதும் வச்சா மாதிரி இந்த ரகசியத்தை சம்சாரம்கிட்ட சொல்லிடுங்க. அவ ஆசைப்படி சுமங்கலியாவும் போயிடலாம். உங்க விருப்பப்படி தலை வெடிச்சு சுக்குநூறாவும் போயிடலாம்.

    எப்படி வசதி? என்ன ரகசியத்தைக் கேக்காமலேயே யார் யார் கிட்டல்லாம் ரகசியத்தைச் சொல்லலாம்னு லிஸ்ட் எழுத ஆரம்பிச்சாச்சா? வர தீபாவளிக்கு வேண்டாத நரகாசுரன்களையெல்லாம் வரவழச்சு நான் சொல்லப் போற ரகசியத்தை அள்ளி வுடுங்க.

    சிங்கம், புலி மார்க் மாதிரி தனபாக்யம் மார்க தேவ ரகசிய வெடி திரி கிள்ளாம வச்சா வேண்டாதவங்க மரிமரி உங்க முன்னே.. தேவ ரகசியத்துக்கு வருவோமா? கமா, புள்ளி நீங்கலாக தனபாக்யம் சொன்னதை அப்படியே அச்சுப்பிழை இல்லாம சொல்றேன். கேளுங்க. ஸாரி… படியுங்க.

    கந்தர்வக் காதலன் உவாசிச்சதை தனபாக்யம் உவாச: (உவாச என்றால் உரைத்தல்)

    படைக்கும் கர்த்தா பிரம்ம தேவர் தலைமையில் பாற்கடலில் அன்று நாங்கள் – அதாவது இந்திரனில் தொடங்கி என் வரை (என் கந்தர்வக் காதலன் கடைசி ‘ரோ’) உள்ள முப்பது முக்கோடி தேவர்கள் தம்பூரா நாரதர், தர்பை வசிட்டர் உட்பட முப்புரி நூல் முனிவர்கள், அசுர கணங்கள், ஈரெட்டு திக்கு அஷ்ட ப்ளஸ் டூ பாலகர்கள் (தென்மேற்கு, வடகிழக்குக்கெல்லாம் புதிதாக இப்போது பாலகர்களை போஸ்ட் செய்து இருக்கிறார்களாம்). காமதேனு, கற்பக விருட்சம்… அது தவிர மண்ணிலிருந்து சொர்க்கம் எய்திய மகாத்மா காந்தி, நேரு, மோகனின் தாத்தா கூடினோம்.

    திருமகள் பாதம் வருட, கருநாகம் குடை பிடிக்க, முகில் வண்ணன் கொண்டையா ராஜு போஸில் துயில் கொண்டு இருந்தார். “எங்கள் நாராயணா!” சப்தம் கேட்டு முகுந்தன் தனது மோனத் துயிலைக் கலைத்து கண் மலர்ந்தான்.

    “பிரம்மதேவா… என்ன இது கும்பல், அமளி? இவ்வளவு பேரும் நின்று பாற்கடலைக் குடைந்து தயிர்க்கடலாக ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று கோகுல கிருஷ்ணன் என்.எஸ். கிருஷ்ணன் ஸ்டைலில் விஷமமாக விட்டடித்தார்.

    “பிரபோ! நாராயணா! ஸம்பவாமி யுகே…யுகே! இது நீ அளித்த உறுதி இல்லையா? எப்போ தர்மம் தாழ்ந்து அதர்மம் தலையெடுக்குமோ, அப்போதெல்லாம் அவதாரம் எடுத்து பூவுலகை ரட்சிப்பேன்’ இது உன் வாக்கன்றோ! இதை மறந்து நீ கண் அயருதல் முறையோ?” என்று நான்கு தலைகள் மோதும் அவஸ்தையைக் கூட பொருட்படுத்டாமல் ஆவேசமாக புலம்பினான்.

    “பிரம்ம தேவா, பூவுலகில் தர்மத்திற்கு வந்த அபாயம் என்ன? அதர்மம் புரியும் அசுரன் யார்? ராவணனா, துரியோதனனா, பஸ்மாசுரனா இல்லை சிசுபாலனா? சொல்” என்று கேட்ட பகவானின் முகத்தில் பத்து அவதாரம் எடுத்த அலுப்பு தெரிந்தது.

    ”கோபாலா! இது வரை நீ பார்த்து அழித்த அதர்மங்கள் உருவங்களாக இருந்தன. ஆனால் கலியுகத்தில் அவை அருவங்களாக உள்ளன. பொய், புனை, வஞ்சம், சூது, சுருட்டு, பீடி, கஞ்சா, அபின்… அடுக்கிக் கொண்டேப் போகலாம். மொத்தத்தில் பூலோகத்தில் “மனிதர்கள் ஜாக்கிரதை” என்று பலகை தொங்க விட வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது” என சரஸ்வதியின் புருஷன் சளைக்காமல் பேசினார்.

    அனந்தசயனன் அலைமகளைப் பார்த்து விஷமமாக சிரித்து விட்டு, “படைக்கும் கர்த்தாவே, இதுவரை எல்லா யுகங்களிலும் உன் படைப்பில் ஏற்பட்ட சிறு தவறுகளால் தோன்றிய அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்தேன். ஆனால் கலியுகத்தில் நீ தவறுகளைப் படைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளாய். நான் என்ன செய்வது? என்று கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் பிரம்மா பரப்பிரம்மாவானார்.

    நல்ல சமயத்தில் நாரதர் முன் வந்து, “நாராயணா, நீ எடுக்கப் போவதாக இருந்த தசாவதாவது அதாவது பத்தாவது அவதாரமான ‘கல்கி’ அவதாரத்தை ஏன் இன்னும் எடுக்காமல் இருக்கிறாய்? இதுவே தக்க தருணம்.. ‘கல்கி’ அவதாரம் எடுத்து கலியுகத்தைக் காப்பாற்று” என்று நினைவுபடுத்தினார்.

    அழகிய வெண் புரவியில் அமர்ந்த படைவீரனாக, தான் எடுப்பதாக இருந்த ‘கல்கி’ அவதாரம் பகவானின் கண்களில் ‘ப்ளாஷ் பேக்’காக தோன்றி மறைந்தது. “பிரம்ம தேவா, இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் ஒரு நல்ல நாளாக பார்த்து குறித்து வை. அன்று நான் கல்கி அவதாரம் எடுக்கு பூலோக பிரவேசம் செய்யப் போகிறேன்” பத்மனாபனின் குரல் பாஞ்ச சன்யமாக ஒலித்தது.

    பிரம்ம தேவன் குறித்த நாளும் வந்தது. பெருமாளின் பூலோக பிரவேசத்தைப் பார்க்க எல்லோரும் வைகுந்தத்தில் ஆஜர் ஆனார்கள்.

    ஆதிசேட மெத்தையைச் சுருட்டி வைத்து விட்டு, அலர்மேல் மங்கையிடம் அரிமுகுந்தன் சிறிது தாமதித்தான்.

    ” ராமாவதாரத்தில் கோசலையின் குமாரன்; கிருஷ்ணாவதாரத்தில் அரசி – வசுதேவியின் மகனாய்ப் பிறந்து ஆய்ச்சி யசோதையின் மகனாய் வளர்ந்தேன். கலியுகத்தில் யாருக்கு குழந்தையாய் பிறப்பது?” கண்ணனின் முகத்தில் கேள்விக்குறி. பூமியை உற்றுப் பார்த்து விட்டு உற்சாகமாக திருவாய் மலர்ந்தான்.

    “பிரம்மதேவா! நான் எடுக்கப் போவது ‘கல்கி’ அவதாரம் வெண்குதிரையில் ஏறி வினைகளை வேகமாக விரட்டப்போகும் வீரன். அங்கு பார்”

    கண்ணன் காட்டிய இடம் கிண்டி ரேஸ் கோர்ஸ்! பலத்த கரகோஷத்திற்கு நடுவே ஒரு வெண்குதிரையில் அமர்ந்து அன்றைய ஜாக்பாட் வீரன் ஜெயபால் ரேஸ் மைதானத்தை வளைய வந்தான். பகவானின் சித்தம் பிரம்மதேவன் பக்கம் நின்ற சிவனுக்கே புரியவில்லை!

    “பிரம்மதேவா! நீ பார்த்தாயே இப்போது ஜெயபால், வெண் குதிரை வீரன், அவன்தான் எனது ‘கல்கி’ அவதாரத் தந்தை. ஆம் – அவன் மனைவி சுதா என் தாய். இன்று நான் சுதாவின் வயிற்றில் அணுவிலும் சிறிய கருவாக நுழையப் போகிறேன். இன்றிலிருந்து பத்தாவது மாதம் சுதா என்னைப் பெற்றெடுப்பாள்” பகவான் கூறி முடித்து மூவுலகையும் அளந்த தன் உருவை அணுவாக மாற்றிக் கொண்டான்.

    விண்ணுலகில் “நாராயணா” கோஷம் அதற்கு மேல் உள்ள உலகை பிளந்தது! மகாவிஷ்ணு என்ற தத்துவம் ”கடவுள் துகள்(BIG BANG THEORY) அணுவாகி” சுதா ஜெயபால் குடியிருக்கும் மயிலாப்பூர் வீட்டை நோக்கி விரைந்தது.

    ஜாக்பாட்டில் பெற்ற வெற்றியைக் கொண்டாட ஜெயபால் மனைவி சுதாவுடன் சயன அறைக்குள் நுழைந்தான். அறைக்கதவை ஜெயபால் மூடினான். திருமால் அணுவாக சாவி துவாரம் வழியாக சயன அறைக்குள் நுழைந்தார். உணர்ச்சி வசப்பட்டு வழக்கம் போல பூமாரி பொழிய வந்த தேவர்களாகிய எங்களை பிரம்மா ‘உஷ்’ என்று தடுத்து நிறுத்தினார்.

    சயன அறைக்குள் சுதா நைலக்ஸ் புடவையோடு சேர்ந்து நால்வகை குணங்களையும் களைந்தாள். சுதாவின் சிரிப்பு… ஜெயபாலுக்கு சிலிர்ப்பு. ‘அணுமால்’ அடி மேல் அடி வைத்து அவர்களை நெருங்கினார்.

    திருமால் அருகில் இருந்ததால் சுதா தெய்வீகமாக முனகினாள். ஜெயபால் திவ்யமாகக் களித்தான். தேவர்கள் நாங்கள் டென்ஷனாக விண்ணுலக விளிம்பில் விரல் கடித்தபடி நின்றோம்.

    சுதா ஜெயபால் இருவர் முகத்திலும் களைப்போடு கூடிய சந்தோஷம். இல்லை; பரிபூரண திருப்தி.

    திருமாலின் அணுவைக் காணவில்லை! ஆம். அது அப்போது சுதாவின் வயிற்றில் கருவாக ஜொலித்தது. ‘கல்கி’ அவதாரம் ஆரம்பம். தேவர்கள் எங்கள் முகத்தில் சோமபான சந்தோஷத்தை உண்டாக்கியது. கல்கி அவதார ஆரம்பத்தைப் பார்த்த நாங்கள் அதன் வளர்ச்சியை ஞான பைனாகுலரால் பார்க்க முண்டியடித்துக் கொண்டு வானத்தில் ஒரு மேகம் விடாமல் வசதியாக அமர்ந்து கொண்டோம்.

    அணுவாக நுழைந்த திருமாலின் கரு சுதாவின் வயிற்றில் சிசுவாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.

    அன்று ரேஸ் கிடையாது. வீட்டுக்குள்ளே இருந்த ஜெயபாலை மயக்கம் போட்டு உசுப்பினாள் சுதா. மயக்கம் தெளிந்தவள் வெண்ணெயாக வாந்தி எடுத்தாள்.(வயிற்றில் உள்ளவன் கண்ணன் அல்லவா) திருமாலின் பிரதிபலிப்பு சுதாவின் முகத்தில் நீலமாக பாரித்தது. இது அறியாத ஜெயபால் டாக்டரைப் பதறியபடி வரவழைத்தான்.

    சுதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்த லேடி டாக்டரின் கண்களில் சினிமா டாக்டர் மலர்ச்சி தோன்றியது. ஜெயபால் அப்பாவாகப் போகும் சேதியை லேடி டாக்டர் வழக்கம் போல் கண்ணாடியைக் கழற்றி விட்டுக் கூறினாள். திருமாலின் கரு வளர்ச்சியைக் கேட்ட தேவர்களாகிய நாங்கள் கரகோஷம் செய்தோம்.

    அன்று மாலை சுதாவும், ஜெயபாலும் லேடி டாக்டர் சந்தான லட்சுமி நர்ஸிங் ஹோமுக்கு சென்றனர். ‘எங்க வீட்டு பிள்ளை’ திருமாலின் தாய் தந்தையர் சம்பாஷணையை தேவர்களாகிய நாங்கள் ஞானக் காதால் கேட்கத் தீட்டிக் கொண்டோம்.

    முதலில் சுதா, “அத்தான்.. இது ஒண்ணும் தப்பில்லையே?” என்றாள். “சேச்சே.. ரொம்ப சர்வ சாதாரணம் சுதா.. தோ பார்.. நமக்கு கல்யாணமாயி ஏழு மாசம் கூட ஆகலை.. இன்னும் நாம் அனுபவிக்க எவ்வளவோ இருக்கு.. இப்பப் போயி இடைஞ்சலா இது வேற சனியன்” என்று ஜெயபால் சுதாவின் வயிற்றைத் தொட்டுப் பேசினான்.

    “குழந்தையைப் போய் சனியங்கறேளே.. நீங்க சொல்றது வாஸ்தவம்தான்.. இருந்தாலும் இது பாவமில்லையா?” – இது சுதா.

    “பாவமாவது புண்யமாவது.. பெரிசா என்னவோ கிருஷ்ணரையே பெத்துடப் போற மாதிரியில்லே பேசற.. தைரியமா இரு. எல்லாம் ஒரு வருஷம் கழிச்சு பாத்துப்போம்.. எல்லாம் அன்னிக்கு நான் இருந்த ‘மூட்ல’ முன்னேற்பாடு இல்லாம இருந்துட்டேன்.. பரவாயில்லை விடு.. இடிமே நான் மறந்தாலும் நீ அதை ஞாபகப்படுத்து” ஜெயபால் காட்டிய திசையில் தடுப்பு சாதன விளம்பரம். சுதாவின் சிவந்த முகம் வெட்கத்தில் வெளுத்தது.

    டாக்டர் சந்தான லட்சுமியின் நர்ஸிங் ஹோமுக்குள் அவர்கள் நுழைந்தனர். அவர்கள் பேசிய பேச்சு விஞ்ஞானத்தில் பின் தங்கிய தேவர்களாகிய எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை. தான் படைத்த மனிதனின் போக்கு பிரம்மதேவனுக்கே புரியவில்லை.

    நர்சிங் ஹோமில் அவர்கள் ஒரு மணி நேரம் இருந்தார்கள். காலத்தைக் கடந்த தேவர்களாகிய எங்களுக்கே அந்த ஒரு மணி நேர சஸ்பென்ஸ் ஒர் கல்ப கோடி காலமாகப் பட்டது. முதன் முறையாக சொர்க்கத்தில் ஒரு நரக வேதனை.

    நர்ஸிங் ஹோம் கதவு வைகுந்த வாசல் போல திறந்தது. ஜெயபால் சுதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தான். சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி மயிலாப்பூருக்கு மிதிக்கச் சொன்னான். ரிக்ஷா நகர்ந்து சந்து பொந்தில் மறைந்தது.

    என்ன நடந்தது என்பது புரியாமல் ஞானக் கண்களால் நாங்கள் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தோம். சந்தான லட்சுமி நர்சிங் ஹோம் சன்னல் வழியாக எங்களுக்கு பரிச்சயமான ஒரு ஒளிப்பந்து (பாரதியார் பாஷையில் அக்னி குஞ்சு) விண்ணுலகை நோக்கி வாட்டத்துடன் வந்தது. ஆம், அந்த ஒளிப் பந்து… அக்னி குஞ்சு…கடவுள் துகள்….

    எங்கள் அண்ணலின் கல்கி அவதார அம்பது நாள் கரு. இப்படியாக கருவிலேயே கலைந்தது ‘கல்கி’ அவதாரம்.

    வைகுந்தம் வந்த விஷ்ணு பிரம்மதேவனைப் பார்த்து நரசிம்ம அவதார ஆவேசத்தில், “பிரம்மதேவா, இப்போது புரிந்து கொண்டாயா? கலியுகத்தில் நான் ஏன் கல்கி அவதாரம் எடுக்காமல் இருந்தேன் என்று. நீ படைத்த மனிதன் என்னை கருவிலேயே கலைத்து அனுப்பி விட்டான்” விஷ்ணுவின் வதனத்தில் சீதையைப் பிரிந்த சோகம் தெரிந்தது.

    “பிரம்மதேவா! அவதாரம் எடுப்பது எனக்கு பெரிதல்ல. ஆனால் அவதாரங்களின் பெற்றோரைப் படைப்பதில் நீ ஒத்துழைக்க வேண்டும். இராமாவதாரத்தில் என் அவதார அன்னையாக இனியவள் கோசலையைப் படைத்தாய். கிருஷ்ணாவதாரத்தில் என் தாயாக நல்லவள் வசுதேவியையும், என் வளர்ப்புத் தாயாக களங்கமில்லா ஆச்சி யசோதையையும் படைத்தாய். ஆனால் கலியுகத்தில் நீ படைத்ததெல்லாம் சுதா, போன்ற குழந்தைகள். முதலில் நான்முகரே நீங்கள் அன்னையைப் படைப்பீர்கள்…. அவர்கள் குழந்தைகளைப் படைப்பார்கள்…. எனக்கு கோசலையைப் போல், வசுதேவி போல், யசோதையைப் போல் ஒரு தாயைப் படைத்து பூலோகத்தில் உலவ விடுங்கள்…. அதன் பிறகு கல்கி அவதாரம் பற்றி பேசுங்கள்” உணர்ச்சிப் பெருக்கில் பேசி விட்டு உலகளந்தவர் ஆதிசேட மெத்தையைத் தட்டிப் போட்டு அமர்ந்தார்….!

    பிரம்ம தேவன் வெட்கத்தால் தனது நான்கு தலைகளும் குனிய தேவர்களாகிய எங்களோடு வைகுந்தத்தை விட்டு விலகினான்.

    மறுபடி பழையபடி திருமகள் பாதம் வருட, கருநாகம் குடை பிடிக்க, கார்முகில்வண்ணன் கண்களை மூடி முடிவில்லா யோகமாம் நித்திரையில் மூழ்கினான்….கிரேசி மோகன்….!

    ——————————————————————————————————————————————————————————————————————————–

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ’’கண்டேன் அனுமனை”….!
    ————————————————-

    kesav

    எஜமானன் ராமனுக்(கு) என்றும் பணிந்த
    நிஜமான பக்தன் அனுமான் -புஜத்தில்
    வடைமாலை சார்த்தி வணங்கி உறங்க
    விடிகாலை காண்போம் வியப்பு….

    cra

    சினத்தீ இராவணன் சீர்மல்கு தீவில்
    கணத்தில்தீ வைத்து கொளுத்தி-(அசோக)வனத்தில்
    கணையாழி தந்தன்னை கண்ணீர் துடைத்தோய்
    வினையாழி தாண்டிட வை….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 39

    மீனாட்சி பாலகணேஷ்

    கங்கையும் வேலும் மயிலும் துணை!

    ame2

    ஆறுமுகனான குமரவேள் மீது இயற்றப்பட்டுள்ள பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்திலும் காப்புப் பருவத்தில் பிள்ளைத்தமிழ்நூல் இலக்கணப்படியே திருமாலில் துவங்கி, சிவபிரான், உமையன்னை, கணபதி, இந்திரன், அலைமகள், கலைமகள், சத்தமாதர், முப்பத்து முக்கோடி தேவர்கள் வேண்டிக்கொள்ளப்படுவர். சில நூல்களில் உருத்திராக்கம், திருநீறு, திருவைந்தெழுத்தான ‘நமசிவாய,’ ஆகியனவும் பாடப்பட்டுள்ளன.

    வரகவி மார்க்க சகாயதேவர் அருளிச்செய்துள்ள திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் அருமையான ஆச்சரியங்கள் இவ்விதத்தில் நம்மை எதிர்கொள்கின்றன. முதலில் புலவர் பாடுவது இறையருளாம் ‘திருவருளை’ வேண்டித்தான். திருவருள், திருநீறு, மார்க்கசகாயசுவாமி, மரகதவல்லி, இவர்களை அடுத்து கங்கை எனும் நதிப்பெண்ணாள் குழந்தை முருகனைக்காக்க வேண்டிக்கொள்ளப்படுகிறாள். குமரனின் அவதாரத்தின்போது சிவனாரிடம் உதித்த ஆறு பொறிகளையும் தாங்கிக் காத்த தாயல்லவா அவள்?

    பின், கணபதி, வைரவன் (சிவபிரானின் திருக்குமாரர்களுள் ஒருவன்) இவர்களை அடுத்து, குமரன்கைத் திருவேல், திருமயில், திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் ஆகிய நூல்கள் முதலானோர்களும், பதினொன்றாவதாக பலதேவரும் காப்புப் பருவத்தில் விளிக்கப்படுகிறார்கள்.

    முருகனைப்பாடும் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் அருணகிரிநாதரை விளிப்பதுண்டு; அல்லது முருகனின் தம்பியாகிய அரிகரபுத்திரன், வீரபத்திரர், தாயாரான கார்த்திகைப்பெண்டிர் ஆகியோர் விளிக்கப்படுவர்.

    திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூல் இவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. இலக்கணப்படி, ஒற்றைப்படையில் பதினோரு பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இதன் சில சிறப்பம்சங்களைக் கண்டு களிக்கலாமே!

    ***

    கங்கை எனும் தாயை அழைத்து குமரனைக் காக்க வேண்டுபவர், பாடலின் முதல் பகுதியில் முருகனின் பெருமையையும், பிற்பகுதியில் கங்கையின் பெருமைகளையும் விரிக்கிறார்.

    ame

    “கம்போநதி, குற்றமற்ற காவேரி, காளிந்திநதி, கோதாவரி, பாலிநதி எனப்படும் பாலாறு, கனகாநதி, கண்டிகை எனப்படும் உருத்திராக்கமும் குண்டிகை எனப்படும் கமண்டலமும் சூழ்ந்து விளங்கும் பம்பாநதி, வானத்தினின்று இழிதருதலால் வானதி எனவும் பெயர்படைத்த கங்கை, சீதைநதி எனப்படும் தமஸாநதி (அயோத்திலுள்ளது. இங்கு தான் இராமன், சீதை, இலக்குவன் மூவரும் அயோத்தி மக்களைப் பிரிந்து வனவாழ்க்கையை மேற்கொள்ளப் பயணித்தனர்; பின், சீதை கருவுற்றுத் தங்கியிருந்து, இலவ, குசர்களைப் பெற்றெடுத்ததும் தமஸா நதிக்கரையில் தான்), பாஞ்சாலிநதி ஆகிய தவம்செய்ய உகந்த கரைகளைக்கொண்ட புண்ணிய நதிகளாகப் பலவாகி பிரிந்து ஓடும் பாகீரதியே! பகீரதன் தன் தவத்தினால் ஆகாயத்தினின்றும் பூமிக்குக் கொண்டுவந்த கங்கை நதியே!” என கங்கையின் பெருமைகளைக் கூறி விளித்து, குமரனைக் காக்க வேண்டுகிறார்.

    “எனது பாதகங்களையெல்லாம் (பாவங்கள்) நீக்கியவன் இந்த வேலவன். இவன் இமையோராகிய தேவர்களின் அரசன், குமரேசன்; எனது இதயத்து இருளாகிய அறியாமையைக் களைந்தெறியும் குகன். அழகான இனிய பால்போலும் மொழிபேசுபவளான உமையம்மை அளித்த அமுதக்கனி போன்றவன். கரனூர் ஆகிய திருவிரிஞ்சை எனும் ஊரில் வாழும் அடியவர்களின் பெருவாழ்விற்கு ஊன்றுகோலாக விளங்குபவன்; அவனைக் காத்தருள்வாய் தாயே!” என அமைகிறது இவ்வழகிய பாடல்.

    கங்கை

    எம்பாதகநீக்கிய வேலவனை இமையோர் அரசைக்குமரே சனையென்
    னிதயத்திருளைக் களையுங்குகனை
    அம்பால்மொழி யம்மையளித்தரு ளும்அமுதைக்கனி யைக்கரனூர் தனில்வாழ்
    அடியார்பெருவாழ் வையளித்தருள்க
    கம்பாநதிகோ தமைகாவேரி காளிந்தி கோதாவிரி பாலிநதி
    கனகாநதிகண் டிகைகுண்டிகைசூழ்
    பம்பாநதிவா னதிசீதைநதி பாஞ்சாலி தபோநதியே முதலாம்
    பலவாநதியா னபகீரதியே.

    கங்கையைப்பற்றிக் கூறப்புகுந்தால் பெரும் காப்பியமே இயற்றலாம். இங்கு முருகனின் பெருமைகளுக்கு இணையாக ‘எல்லா நதிகளும் கங்கையின் வடிவே’ எனும் அழகான பேருண்மையை விளக்கிய நயம் இரசிக்கத்தக்கது. வைதிகமுறையில் பூசனை செய்யும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளையும் ஆவாகனம் செய்து பூசை செய்வது நமது வழக்கம் அல்லவா? கங்கையின் பெருமை கொஞ்சநஞ்சமா? ஆகாயத்திலிருந்து அவள் வந்த கதையைக் கூறுவாரா? முருகப்பிரானின் பிறப்பில் அவள் வகித்த பெரும்பங்கை விளக்குவாரா? ஆகவேதான் மற்ற நதிகளனைத்துமே கங்கையில் அடக்கம் என நான்கு வரிகளில் கங்கையின் புகழை அழகுறப்பாடுகிறார் வரகவியார்.

    ***

    திருவேல்

    ame1

    முருகனடியார்களுக்கு, வேலும் மயிலுமே என்றும் காத்து வழிநடத்தும் துணையாகும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, குழந்தை முருகனைக் காப்பதற்கு, அவனுடைய கைவேலையே விளித்துப் பாடுகிறார் புலவனார். இது முருகனுக்கு உமையம்மை வழங்கிய வேல். ஆகவே தாய் கொடுத்தவேல் அவனைக் காக்கட்டும் என விளிப்பது மிகப்பொருத்தம்தானே?

    “கொடிய அசுரர்களைக் கொன்று அவர்களுடைய குருதியில் நீராடி, அவர்களுடைய குடலை மாலையாகவும் தரித்துக்கொண்ட வேலே! பின் அவர்களுடைய உடலின் கொழுப்பையெல்லாம் அருந்தியதான வேலே! முருகன் உன்னைத் தன் கையில் பிடித்துள்ளான்,” எனப் புகழ்ந்து விளிக்கிறார்.

    “ஆறு தலைகள் கொண்ட எங்கள் முருகனை, முதல்வனாகத் திகழ்பவனை, சிவந்த நிறம்கொண்டு திகழும் செவ்வேளை, இவ்வுலகமெல்லாம் புகழ்ந்து ஏத்தும் தேவனை, திருவிரிஞ்சை எனும் இப்பதியில் விளங்கும் எமது முருகனை என்றும் நீ துணைநின்று காக்க வேண்டும்,” என வேண்டிக்கொள்கின்றார்.

    இந்த வேல் செய்ததாக புலவர் பாடும் செயல்களனைத்தும் முருகன், தான் அதனைக் கரத்தில் ஏந்திச் செய்தவையே! புலவர் அதனை அறியாதவரா? இருப்பினும், வேலை ஒரு தனிப்பொருளாக்கி, ‘இத்தகு வீரச் செயல்களைச் செய்த எமது முருகப்பிரானின் கரத்தில் நீ இருந்ததனால் அல்லவோ அவன் இவற்றைச் செய்ய இயன்றது,’ எனும் பெருமை தோன்ற இவ்வாறு பாடியருளியுள்ளார் எனக் கொள்ளலாமா? பாடலைக் காண்போம்:

    முடியொராறுடை யானையெம்மையனை முதல்வனைச் செவ்வேளைப்
    படியெலாம் புகழ்தேவனை விரிஞ்சையம் பதிமுருகனைக் காக்க
    கொடியதானவர் குருதியிலாடிவெங் குடலெனுந் தொடைசூடி
    நெடியயாக்கையின் நிணமெலாம் அருந்தியவவன் கையிநெடுவேலே.

    வேலையும் மயிலையும் பெருமைப்படுத்தி முதல்முதலில் பாடியவர் அருணகிரிநாதராவார். வேல்விருத்தம், மயில்விருத்தம், வேல் வகுப்பு, மயில் வகுப்பு என அவர் பாடாத ஒன்றுமே இல்லை. அவ்வளவு முருகனிடம் ஆழ்ந்து அடைக்கலம் புகுந்தவர் அவர். அற்புதமான சந்தம் நடமிடும் பாடல்கள் அவை.

    அவருடைய அடிச்சுவட்டில், இங்கு மார்க்கசகாய தேவர் மயிலை விளிப்பதனைக் காணலாமா?

    “ஓ மயிலே! (மயூரமே!) வானத்தின் உச்சியான மேகக்கூட்டங்கள் நடுங்கவும், பெரிய மலைகள் தவிடுபொடியாகவும், அப்பொடித்துகள்களால் ஏழுகடல்களும் நிரம்பி மேடாகிவிடும்படியும் உனது தோகையை விரித்து அடித்து எழுந்து எட்டுத் திசைகளிலும் கண்மூடி இமைக்குமுன்பு உலாவி, என்றும் இவ்வாறு ஆடலைச்செய்து வாழும் அந்த முருகப்பிரான் ஏறுகின்ற மயிலே!” எனப் பெருமிதம் தோன்ற விளிக்கிறார். அதாவது மயில் இவ்வாறெல்லாம் செய்யுமாறு அதனைச் செலுத்துபவன் இம்முருகவேள். ஆகவே இந்த ஆடலை மயில் செய்வதாகவோ அன்றி, முருகனே செய்வதாகவோ, எவ்விதமாகவும் கொள்ளலாம்.

    “இந்த முருகன் எம்மைத் தனது தொண்டனாகக் கொண்டு ஆள்பவன்; உருவில் சிறிய (குழந்தையானதால்) பெரிய தலைவனாவான்; நான்கு வேதங்களையும் உணர்ந்து அவற்றை மணிபோலும் மொழியால் உரைப்பவன்; அணிவதனால் குளிர்ச்சியும் மணமும் தரும் இன்பமான கடப்பமாலையை அணிந்தவன். திருக்கரனூரில் வாழ்கின்ற மரகதவல்லி எனும் கொடிபோன்ற அன்னை பெற்றெடுத்த சிவந்த சுடர் போலும் அழகன். அவனை நீ அன்போடு காக்க வேண்டும்,” என் வேண்டுகிறார்.

    மயில்

    am3
    தொண்டனாக வெமைக்கொ ளுஞ்சிறு தோன்றலைச் சதுர்வேதநூல்
    சொல்லுமாமணி வாயனைச்சுக மாயிருந்தும ணங்கொளும்
    வண்டுசேர்தரு நீபமாலைய னைத்தி ருக்கர னூரில்வாழ்
    மரகதக்கொடி பெற்றசெஞ் சுடர்மணியை யன்பொடு காக்கவே
    அண்டகூட நடுங்கமால் வரைதூளி யாகஅத் தூளியால்
    ஆழிஏழுநி ரம்பிமேடுப டக்கலாபம டித்தெழுந்
    தெண்திசாமுக முங்கடைக்க ணிமைக்கு முன்னமு லாவியே
    என்றுமாட லியற்றிவா ழவனேறு கின்றமயூரமே.

    இன்னும் நக்கீரரின் திருமுமுருகாற்றுப்படையையும் அருணகிரியாரின் திருப்புகழையுமே விளித்து, குழந்தை முருகனைக் காக்க வேண்டுகிறார். புலவனாரின் பக்திப்பெருமிதத்தை, முருகனிடமும், முருகனடியார்களிடமும் அவர் கொண்டுள்ள அன்பை, நேசத்தை, உணர இவைகளே சான்றாகத் திகழுகின்றன எனலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (50)

    நிர்மலா ராகவன்

    மகிழ்ந்திருங்கள்

    நலம்-1

    `நான்கு வயதிலிருந்தே எல்லா பாட்டுப் போட்டிகளிலும் நான்தான் முதல்! எனக்குப் பாடகராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் என் பெற்றோர் என்னைக் கலந்து பேசாமல், இஞ்சினீயராக ஆக்கிவிட்டார்கள்!’ நாற்பது வயதாகிவிட்ட ஒருவரின் ரகசியப் புலம்பல் இது.

    தனக்குப் பிடித்த துறையை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

    `மகனுக்கு நல்லதுதானே செய்கிறோம்!’ என்று நினைத்து அவர்கள் செய்தது அவருக்குப் புரிந்தாலும், கௌரவமான பதவியோ, நல்ல வருமானமோ அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. வேண்டாவெறுப்பாகவே உத்தியோகம் பார்க்க வேண்டிய நிலைமை.

    மகிழ்ச்சியை எப்படி அடைவது?

    நமக்கு வேண்டும் என்பதை அடைந்தால் மகிழ்ச்சி. இது மனிதருக்கு மனிதர் மாறுபட்டிருக்கும்.

    `என் குழந்தைகள் உடல் உபாதை எதுவுமில்லாது, சிரித்தபடி இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!’ என்கிறார் ஒரு தாய்.

    `எனக்குப் பிடித்த ஒரு காரியத்தை நல்லவிதமாகச் செய்து முடித்தால்!’ — இன்னொருவர்.

    பலர் மனதில் எழும் கேள்வி: `நான் எவ்வளவோ பாடுபட்டும் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றனவே?’

    கதை

    ஒரு காய்கறிச்சந்தையில் இந்திய தம்பதி இருவர் இட்லி வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இட்லியுடன் இருவகை சட்னி. மலாய், சீனர்கள் எல்லாரும் ஆசையுடன் வாங்கிப்போனார்கள்.

    அந்த மாது என்னிடம் கூறினார், “போன வாரமும் கடைபோட்டோம். ஒரே நஷ்டம்!”

    வியாபாரம் செய்தால் நிறைய பணம் ஈட்டலாம் என்று நம்பி வந்திருக்கிறார்கள். ஆனால், அதற்குமுன் கணக்கு கற்கத் தவறிவிட்டார்கள்.

    சுவையான, அளவில் பெரிதான இட்லிகள். இரண்டு இட்லி நாற்பத்தைந்து காசு என்று ஏதோ விலை சொல்லி, அதற்குமேல் ஒருவர் வாங்கிப்போனால், அதற்கான கிரயத்தைச் சரியாகச் சொல்லத் தெரியாது, வாய்க்கு வந்ததைக் கேட்டு வாங்கியிருக்கிறார்கள்.

    `இரண்டு இட்லிக்கு இவ்வளவு செலவாகிற்று. அதைவிடக் கூடுதலாக விலை சொன்னால்தான் லாபம்,’ என்றெல்லாம் கணக்குப்போடத் தெரியாமல் போக, ஆழம் தெரியாமல் காலை விட்டிருக்கிறார்கள்.

    ஒரு காரியத்தைச் செய்யுமுன், அதற்கான திறமை நம்மிடம் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டாமா?

    பொதுவாக, எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிட்ட நம் இலக்கு சரியாக இருக்க வேண்டும். அதன்பின், அதை நோக்கி உழைக்க வேண்டும் — என்ன இடர் வந்தாலும் மனந்தளராது.

    “உழைப்பு, விளையாட்டு, மௌனம் மூன்றும் கலந்தது வெற்றி”. (ஐன்ஸ்டைன்)

    மௌனம் எதற்கு என்று யோசித்தோமானால், நாம் செய்யப்போவதைப்பற்றி எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது புரிகிறது. எல்லாரும் நம்மைப்போலவே சிந்திப்பார்கள் ன்று சொல்ல முடியாது. ஊக்குவிப்பதற்குப் பதில் அச்சத்தை ஏற்படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். ஆரம்பத்திலேயே தளர்ச்சி அடைந்துவிடுவோம்.

    விளையாட்டு என்பது ஒரே காரியத்தை அலுக்கும்வரை செய்யாது, போதுமான ஓய்வு அல்லது வேறு காரியங்களிலும் ஈடுபடுவது என்று கொள்ளலாம். செய்பவருக்கு அலுப்பு தட்டினால், அக்காரியம் சோடையாகிவிடும்.

    இதெல்லாம் ஒரு வெற்றியா!

    வெற்றி, மகிழ்ச்சி என்பதெல்லாம் சமூகத்தில் ஒருவருக்கு என்ன இடம், அவரிடம் என்னென்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தல்ல.

    இக்காலத்தில் பதவி மோகம் என்ற வியாதி பெரும்பான்மையோரை ஆட்டுவிக்கிறது. விலையுயர்ந்த கார்கள் பல, கிலோ கணக்கில் தங்க நகைகள், பட்டங்கள் இதெல்லாம் ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருமா என்பது யோசிக்க வேண்டிய சமாசாரம்.

    சட்டத்துக்கு உட்பட்டு இவ்வளவும் சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். எப்படி எப்படியோ சேர்த்த சொத்தைப் பிறர் கண்ணில் படாது ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமே, பிடிபட்டுவிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் உழன்றிருந்தால் மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?

    வெற்றி கிட்ட

    எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்னரும் பயம் எழுவது தவிர்க்க முடியாதது. `வெற்றி பெற்றே தீருவேன்!’ என்ற தீவிரம் `தோல்வி அடைவோமோ?’ என்ற பயத்தைப் போக்கிவிடும்.

    நாற்பது வயதுக்குமேல் ஒரு பெண்மணி நீச்சல் கற்றுக்கொள்ள முடியுமா?

    எனக்கு வயது ஒரு பொருட்டாகவே படவில்லை. வீடியோவைப் பார்த்துக் கற்க ஆரம்பித்தேன். முதலில் திணறலாக இருந்தது. அவ்வப்போது என் மகள் வந்து கற்றுக்கொடுக்க முயற்சித்து, `உன் டீச்சர்கள் உனக்கு எப்படித்தான் பாடம் சொல்லிக்கொடுத்தார்களோ!’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

    எந்த ஒரு காரியத்தையும் எப்படிச் செய்வது என்பது அவரவர் திறமையையும் துணிச்சலையும் பொறுத்தது. முப்பதுக்குமேல் வயதானவர்களுக்கு எந்த புதிதான விஷயத்தைக் கற்பிப்பதானாலும், சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், `இப்படிச் செய், அப்படிச் செய்’ என்று கூறுவது தவறு. இம்முறையால், `என்னால் முடியுமா?’ என்ற அவர்களுடைய குழப்பமும், பயமும் இன்னும் அதிகரிக்கும்.

    நீருக்குள் மூச்சு விடுதல், கைகளை எப்படி அசைப்பது என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, நீந்துவதை அவர்கள் போக்கில் விடவேண்டும். (என் மகள் ஆரம்பப்பள்ளி மாணவியாக இருந்தபோது, இருபதடி உயரத்திலிருந்து நீருக்குள் குதிக்கச்சொல்வார்கள். அந்த வயதில் பயம் தெரியாது. எப்படியோ திணறி, நீர்மட்டத்துக்குமேல் வந்துவிடுவாள்).

    பெரியவர்களின் மனநிலை புரியாது, ஒரு நீச்சல் பயிற்சியாளர், தன்னிடம் பழகவந்த பெண்களுக்குத் தான் சொல்வது புரியவில்லையே என்ற எரிச்சலுடன், `உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா, இல்லையா?’ என்று விரட்ட, எல்லாரும் அவரிடம் கற்பதை நிறுத்திக்கொண்டார்கள்.

    சில பெண்கள், `நீச்சலால் உடல் குண்டாகி விடுகிறது!’ என்று பாதியில் விட்டார்கள். புதிய உடற்பயிற்சியினால் பசி அதிகமாக எடுக்கத்தான் செய்யும். அதற்காக உணவின் அளவை அதிகரித்தால், எடை கூடாமல் என்ன செய்யும்?

    வேறு சிலர் முகம் கறுத்துவிடுகிறது என்று நிறுத்தினார்கள்.

    எதைக் கற்கும்போதும் பல இன்னல்களுக்கும், தடங்கல்களுக்கும் ஆளாகுவது தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காகப் பயந்து பாதியில் விட்டால் முழுமையாகக் கற்பது எப்படி?

    நான் நீச்சல் கற்கும்போது, (நிசமாகவே) கண்ணை மூடிக்கொண்டு எதிரில் நீந்திவந்து கொண்டிருந்த ஒருவர் கைகளை சுழற்றிப்போடும்போது, அது அறைவதுபோல் என் முதுகில் பட, நான் அமிழ்ந்து போய்விட்டேன். எப்படி நீருக்குமேலே வருவது என்று புரியாமல் திணறிக்கொண்டு, ஏதேதோ முயற்சிகள் செய்தபோது, ஆபத்பாந்தவனாக ஒரு கரம் என்னைத் தூக்கிவிட்டது. காவலர்தான்.

    சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பின் வீடு திரும்பினேன். ஒரு பெண்மணி, `என்னையும் ஒரு தடவை காப்பாற்ற நேரிட்டது,’ என்று கூறியது பலம் தருவதாக அமைந்தது.

    வழக்கம்போல் மறுநாளும் உற்சாகம் குன்றாது போனேன்.

    நீச்சல் காவலர்கள் என் மகளிடம் சொன்னார்களாம், `எங்களுக்கு தண்ணீரில் இறங்கிச் சொல்லிக்கொடுக்க அனுமதி கிடையாது. ஆனால் உன் தாயின் மன உறுதி அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது!’ என்று. குளத்திற்கு வெளியே நின்ற நிலையில், கையசைவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

    தண்ணீரில் அமிழ்ந்து கிடப்பது எனக்குப் பிடித்த விஷயம். உடலில் புத்துணர்ச்சி பெருகும். ஒவ்வொரு நாளும் இதுவரை உபயோகப்படுத்தப்படாத ஒரு பாகத்தில் வலி உயிர்போகும். இருந்தாலும், எடுத்த முயற்சியை அரைகுறையாக விட மனமிருக்கவில்லை.

    மிக ஆழமாக இல்லாத இடத்திலேயே பயமின்றி, சாவகாசமாக நீந்திக்கொண்டிருந்தவளை, ஒரு காவலர், `நீங்கள் ஆழமான இடத்தில் LAPS செய்யத் தயாராகிவிட்டீர்கள்,’ என உற்சாகப்படுத்த, அடுத்த கட்டத்துக்குத் தாவினேன். அதனால், இரண்டு மாதங்களில் 500 மீட்டர் தொலைவு நீந்த முடிந்தது. ஒரு நாள் விடாது போவேன்.

    வெற்றி என்பது எடுத்த காரியத்தில் பிரச்னைகளையும், தோல்விகளையும், பிறரது கேலியையும் லட்சியம் செய்யாதிருப்பது.

    யாரோ சொல்கிறார்களே என்று நமக்கு உடன்பாடில்லாத ஒன்றில் ஈடுபட்டால், திருப்தியோ, மகிழ்ச்சியோ கிடைக்காது — ஆரம்பத்தில் பார்த்த பொறியாளர்போல். விரக்திதான் மிஞ்சும்.

    நமக்குப் பிடித்தவற்றை, நம் தகுதியை உணர்ந்து செய்தால் வெற்றியும், அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உறுதி.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 72

    க. பாலசுப்பிரமணியன்

    சுய-அடையாளங்களின் மாறும் பரிமாணங்கள்

    education-1-1

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்வியைப் பற்றி தன் கருத்துக்களை வெளியிடும்பொழுது மிக அழகாகக் கூறினார்:

    ” ஒருவன் தனது பள்ளிக்காலத்தில் கற்றவைகள் அனைத்தும் மறந்த பின் எது மீதி இருக்கின்றதோ அதுவே கல்வியாகும்.” (Education is what remains after one has forgotten what one has learned in the school)

    மேற்படிக் கூற்று மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்று. வார்த்தைகள், கருத்துக்கள், சிந்தனைகள் இவற்றையெல்லாம் கடந்து அவற்றை அலசி ஆராயக்கூடிய  திறன் மிகவும் இன்றியமையாதது. மாறிவரும் உலகத்தில் பல கருத்துக்கள், செயல்முறைகள், திறன்கள், சமுதாய நோக்கங்கள், அரசியல் பார்வைகள் மற்றும் அறிவியல், தொழில் சார் நுட்பங்கள் அதிவேகத்தில் மாறிக்கொண்டும் தங்கள் ஆதிக்கங்களை வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் பள்ளிகளில் நாம் கற்றுக்கொண்ட பல உண்மைகள் கருத்துக்கள் கேள்விக்குறியாகவும் தவறாகவும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் நடைமுறைக்கும் பயனற்றதாகவும் மாறிவிடுகின்றன. ஆகவே, ஒருவருடைய கற்றலில் நிலைபெற்ற உண்மைகள், அறிவுத்துகள்கள் ஓதுக்கப்பட்டு புதிய தேடல்களும், புதிய அறிவியல் நோக்கங்களும், புதிய செயல்பாட்டுத் திறன்களும் தேவைப்படுகின்றன. மனித மனமும் மூளையும் இவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் மட்டுமின்றி அவற்றால் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. ஆகவே புதிய கற்றல்களும் புதிய திறன்களில் பயிற்சியும் முதிர்ச்சியும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் இந்த மாற்றங்களை   ஏற்றுக்கொள்ளுவதுமட்டுமின்றி அதற்கான புதிய கற்றலுக்குத் தங்களைத் தயார்செய்து கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது.  இந்த மாற்றங்கள் தொடர்ச்சியானவை. எனவே இதைச்சார்ந்த கற்றலும் தொடர்ச்சியானதாக அமைகின்றது. இந்தக் கற்றல் எப்பொழுது நிறைவு பெரும் என்று அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகின்றது. சற்றே கூர்ந்து நோக்கினால் இந்தக் கற்றல் நமது கடைசி மூச்சு உள்ளவரை விரும்பியோ விரும்பாமலோ நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆகவே தான் தற்காலக் கல்வி வல்லுனர்களும், சமுதாயச் சிந்தனையாளர்களும், மூளைநரம்பியல் ஆராய்ச்சியாளர்களும் கற்றலை  ஒரு “வாழ்நாள் தொடர் செயலாகக்” (LIfe Long Learning) கருதுகின்றனர்.

    “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று போற்றிய நாம் இன்று இவைகளுக்கு அப்பாலும் தேவைப்படுகின்ற பல திறன்களை கற்றலின் முக்கிய மிகத்தேவையான குறியீட்டுக்களாகக் கருதி போற்றிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருக்கின்றோம். “வருங்காலத்தின் தாக்கங்கள்” ( The Future Shock ) என்ற ஒரு அரிய சிந்தனையைத் தூண்டும் புத்தகத்தை எழுதிய ஆல்வின் டாப்ளர் (Alvin Toffler) என்ற மேதை தன்னுடைய புத்தகத்தில் சமூக மாற்றங்களையும் அதற்குத்தக்கவாறு எவ்வாறு கற்றலும் செயல்திறன்களும் மாறிவருகின்ற என்பதை அலசும்பொழுது கூறும் ஒரு சீரிய கருத்து: “கற்றலின் மாற்றங்களின் தாக்கத்தைவிட, இந்த மாற்றங்களின் வேகத்தின் தாக்கங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை”. அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களின் வேகங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த வேகங்களின் மாற்றங்கள் நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமும் நம்மை பின்னடையச் செய்துகொண்டிருக்கின்றன. இந்த வேகங்களின் தாக்கல் கற்றலின் அடிப்படைக் கருத்துக்களையும் சிந்தனைப் பின்னல்களையம் மாற்றுவதுமட்டுமின்றி பலவற்றை தற்கால வாழ்க்கைக்குத் தேவையற்றதாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றன.

    சமுதாய மாற்றங்களை மிகப்பெரிய அளவில் நான்கு பருவங்களாக அவர் நோக்குகின்றார்:

    1. விவசாயம் சார்ந்த காலம் (Agricultural Society)
    2. தொழில்வளர்ச்சி சார் காலம் (Industrial ‘society)
    3. தகவலியல் சமூகக் காலம் (Informatics Society)
    4. அறிவுசால் சமூகக் காலம் (Knowledge Society)

    இந்த நான்கு காலங்களிலும் கருத்துக்களின் வாழ்வுக்காலத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, முதலாக வரும் விவசாயம் சார்ந்த காலத்தில் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளுக்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்த தொழில் சார் சமுதாயத்தில் இந்தக் கருத்துக்களின் வாழ்வுக்காலம் குறைந்து சில நூற்றாண்டுகளாக மட்டும் ஆனது. மூன்றாவதாக வரும் தகவலியல் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக் காலம் சில பத்தாண்டுகளாகக் குறைந்து விட்டது. தற்போதைய அறிவுசால் சமுதாயக் காலத்தில் கருத்துக்களின் வாழ்வுக்காலங்கள் மிகக்குறைந்து சில ஆண்டுகளாக மட்டும் மாறிவிட்டன. இதன் தாக்கங்கள் கற்றலின் அடிப்படைத்தளங்களை ஆட்டிவிட்டது மட்டுமின்றி, கற்றலின் நோக்கம், முறைகள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் வேகத்தை அதிக அளவில் பாதித்து வருகின்றன. இதனால்தான் தற்போதைய மாணவர்களின் கற்றல் வகைகளும், போக்குகளும் சில பத்தாண்டுகளுக்குமுன் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. இதைக்கருத்தில் கொண்டே ஆல்வின் டாப்ளர் கூறுகின்றார் “இருபத்தியொன்றாம் ஆண்டின் அறிவிலி எழுதப் படிக்கத் தெரியாதவன் அல்ல; ஆனால் எவனொருவன் கற்கவும், கற்றலை மறக்கவும் மற்றும் புதிய கற்றலுக்கு மாறவும் தயங்குகிறானோ அவனே அறிவிலி” (The Illiterate of the 21st century is not one be those who cannot read and write, but those who cannot learn, unlearn and relearn)

    கற்றலின் இந்த அதிவேக மாற்றங்கள் ஒரு தனிமனிதனின் சுய அடையாளங்களின் வடிவங்களையும் தன்மைகளையும் நோக்கங்களையும் வெகுவாக மாற்றிவருகின்றன. ஆகவே தற்கால மாணவர்களிடம் இந்த வேகத்தின் பாதிப்பால் ஏற்படுகின்ற சுயஅடையாள நெருக்கடிகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை சமாளிப்பதும் இதற்குத் தேவையான தீர்வுகள் ஏற்படுவதற்க்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதும் கல்வியாளர்களுக்கும் கல்விநிலையங்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமுதாயங்களுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

    (தொடரும்)

    Share
  • குருவும் சீடனும்!

    -தமிழ்த்தேனீ

     

    guru

    சீடன்  : குருவே  நான்  என்னை உணர  என்ன செய்யவேண்டும்?

    குரு : நீ உன்னை உணர  உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :   உள்ளே பார்க்க  எப்படிப் பயிற்சி எடுக்க வேண்டும்?

    குரு : முதலில் வெளியே பார்க்கவேண்டும்  வெளியே பார்த்துப் பார்த்து  உள்வாங்கிக் கொண்டால் அதன் பிறகு உள்ளே பார்ப்பது சுலபமாகிவிடும்.

    சீடன் :  அப்படியானால் ஆலயம் தொழவேண்டுமென்கிறீர்களா?

    குரு : ஆலயம் தொழலாம்  ஆனால்  தெய்வத்தைக் காண வேண்டும்.

    சீடன் :   தெய்வத்தை  எப்படிக் காண்பது?

    குரு :  விக்ரகத்தின் மூலமாகக்  காணலாம் .    அப்பு வாயு தேயு ப்ரித்வி ஆகாயம்  என்கின்ற  வெறும் பஞ்சபூதங்களாகிய  நீர்  நெருப்பு நிலம் காற்று  ஆகாயம் ஆகியவைகளிலும்  காணலாம்;  அது உன்னுடைய  மன முதிர்ச்சியைப் பொறுத்தது.

    சீடன் :  அப்படியானால் காணும் பொருட்கள் யாவிலும்  இறைவனைக் காணும்  அளவுக்கு  மனமுதிர்ச்சி அடைய   என்ன செய்ய வேண்டும்?

    குரு :  உன்னை உணரவேண்டும்; உன்னை  உணர உள்ளே பார்க்க வேண்டும்.

    சீடன் :  மீண்டும் தொடங்கிய  இடத்துக்கே வந்துவிட்டீர்களே   குருதேவா  சற்றே விளக்கமாக சொல்லக் கூடாதா!

    குரு :   தொடங்கிய இடத்துக்கே  வருவதுதான் தெய்வம்.  ஆதி அந்தமில்லாமல் ஒரு புள்ளி என்றில்லாமல் அனைத்துப் புள்ளிகளிலும் இணைவதே  தெய்வம்.  அதனால்தான்  ஆதியும் அவனே அந்தமும் அவனே என்கிறார்கள்  விஷயம் அறிந்தவர்கள்.

    சீடன் :  அப்படியானால் என் போன்ற  சாமானியர்களுக்கு  இறையை உணர   அல்லது எங்களை உணர  வேறு வழியே இல்லையா  குருதேவா?

    குரு :  இருக்கிறது சீடனே!  பக்தி மார்க்கத்தில்  மர்க்கட நியாயம், மார்ஜால  நியாயம் என்று இருவகையைச் சொல்கிறார்கள் .  மர்க்கடம் என்றால்  குரங்கு , குரங்கு  எப்போதுமே  குட்டிகளைப் பற்றிக் கொள்ளாது ஆனால் குட்டிகள்  குரங்கைப் பற்றிக் கொண்டே இருக்கும்.   பற்றியதை விட்டுவிட்டால் குரங்குக் குட்டி  கீழே விழுந்துவிடும்.

    ஆனால்  மார்ஜால நியாயம் என்பது  என்ன தெரியுமா?  மார்ஜாலம் என்றால் பூனை.  பூனை எப்போதும் தன் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டே  இருக்கும்.   எப்போதும் கூடவே இருந்து அந்தக் குட்டிகளுக்கு  எழுந்து நடக்க  ஓட  எகிறிக் குதிக்க உணவை வேட்டையாடக்  கற்றுக் கொடுக்கும்.  அதுபோலத்தான்   இறைவனும் இரண்டு விதமானவன்.

    சீடன் :  என்ன  குருவே  இறைவன் இரண்டு  விதமானவனா  அதெப்படி?

    குரு :   நீ ஏற்கெனவே கேட்டாயே  என்னை நான் எப்படி உணர்வது  என்று.  அதற்கு எளிதான வழி ஒன்று இருக்கிறது.  அது உன்னிலிருந்து நீயே இரண்டாகப் பிரிந்து  உன்னையே நீ கண்காணிப்பது.,    த்வைதம் அத்வைதம் என்று சொல்வார்கள்.  ஒன்றுதான்  இல்லை இரண்டு   ஆனால்  இரண்டுமே ஒன்று  என்று  அது போலத்தான்.

    சீடன் :  அதெப்படி முடியும்?

    குரு :   கண்ணாடி அறையிலே  நீ இருக்கும் போது உன்னுடைய  பல பிம்பங்கள் தெரிகிறது. அத்தனையும் வெவ்வேறா  எல்லாம் நீதானே!  அது போலத்தான்  நீ இரண்டாகப் பிரிந்தாலும் அல்லது பலவாகப் பிரிந்தாலும் அல்லது  ஆயிரம் கோடி அணுக்களாகப் பிரிந்தாலும்  அது நீதானே?  உன்னிலிருந்து பிரிந்தவைதானே  அது?

    சீடன் :   அது சரி  ஆனால்  இறை பிரிந்தால் என்ன ஆகும்?  ஒருவன் சிவன் என்கிறான் ஒருவன் விஷ்ணு என்கிறான்  யாரை நம்புவது?

    குரு :   நீ யாரை நம்புவது  என்று குழம்பாதே  நீ யாரை நம்பினாலும் அவன்தான் இறைவன். அவன் சிவன்  விஷ்ணு  என்கிற பலவடிவங்களில்  இருந்தாலும்  எல்லாம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்துவிட்டால் அதன்பின்  உன் குழப்பங்கள் தீர்ந்துவிடும். ஆனால் யாரை  நம்பக் கூடாது  என்று முதலில் தெரிந்துகொண்டால்  அதன் பின் யாரை நம்புவது என்று எளிதாகப் புரிந்துவிடும்.

    சீடன் :  குருவே ஒவ்வொருவர் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகிறார்களே அதற்குண்டான விதிமுறைகள் மாறுகின்றனவே . ஒருவன் சொல்கிறான் கடவுளுக்கு உருவம் கிடையாது  என்று;  இன்னொருவன்  உருவம் உள்ளவன்தான்  கடவுள் என்கிறான். விக்ரக  வழிபாடு கூடாது என்கிறான் ஒருவன்;  விக்ரகத்தை ப்ரதிஷ்டை செய்து வழிபடுவதே சிறந்தது என்கிறான் மற்றொருவன்.

    குரு :   சீடனே நீயும் மற்றவர்களும்  நானும் போய்ச்சேருமிடம்  ஒன்றுதான்  என்பதை அறிவு பூர்வமாக ஆத்ம பூர்வமாக ஒப்புக்கொண்டால்  எல்லாம் விளங்கிவிடும்.   போய்ச்சேருமிடம் ஒன்று என்றால் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  இரு சக்கர வாகனத்திலோ  காரிலோ விமானத்திலோ  போகிறார்கள். ஆனால் போய்ச்சேருமிடம் ஒன்றுதானே  என்பதை உணர்ந்து பார்.   இந்த  மதங்கள் என்பது வெறும் வாகனங்கள்தான்.  நாம் எப்போதாவது  வாகனத்தில் சென்று ஓரிடத்தை  அடைந்து விட்டால் அந்த  வாகனத்தையும் போகுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டா அலகிறோம்? இல்லையே… அதுபோலத்தான் மதம் என்பதும் அதிலே ப்ரயாணம் செய்யலாம்; ஆனால் தூக்கிக் கொண்டு  அலையக் கூடாது.

    சீடன் :   எப்போது நான் என்னை உணர்ந்து  இறையை உணர்ந்து  குழப்பம் நீங்கித் தெளிவு கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை குருவே!

    குரு :   சீடனே  நீயும் இறையும் வெவ்வேறு  என்று எண்ணுகிறாய்?

    அப்படி அல்ல  என்பதை உணரத்தான் உன்னை உணர் என்றேன் . அதனால்தான் அணுவைச் சத கூறிட்ட அணுவிலும் உளன்  என்கிறார்கள்  இறைவனை .  ஆகவே நீ உன்னை உணர்ந்தால் இறையை உணரலாம் . இறையை உணர்ந்தால் உன்னை உணரலாம்.  அதன் பின் இறையும் நீயும் வெவ்வேறல்ல  என்பதையும் உணரலாம்.

    சீடன் :   குருவே கடைசியாக ஒரு கேள்வி.  நான் என்னை உணர்கிறேனோ இல்லையோ  இறையை உணர்கிறேனோ இல்லையோ  குறைந்த பக்‌ஷம் என் கூடவே இருந்து காட்சிதரும் உங்களை உணர  நான் என்ன  செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்!

    குரு: சீடனே இறையும் நீயுமே வேறில்லை என்கிறேன்.  என்னை உணர  முயற்சிக்கிறேன் என்கிறாயே?  நீயே நான் நானே நீ  புரிகிறதா ?   இன்னும் புரியவில்லை என்றால்  முதலில்  உன்னை உணர்.

    சீடன்: குருவே  எனக்கு மயக்கமாக வருகிறது.

    குரு :    குழம்பினால்தானே தெளிவு வரும்;  அதனால் சீக்கிரம் நீ தெளிந்துவிடுவாய்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(162)

    -செண்பக ஜெகதீசன்

    தினைத்துணையாக் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
    (திருக்குறள்-433: குற்றங்கடிதல்)
     

    புதுக் கவிதையில்…

    வந்திடுமே
    வாழ்வில் பழியென்று
    அஞ்சுபவர்கள்,
    கொஞ்சமாய்க் குற்றம்
    தினையளவு வந்தாலும்,
    கொள்வர் அதைப்
    பனையளவாய்…! 

    குறும்பாவில்…

    பழிக்கு அஞ்சுபவர்கள்,
    தினையளவு குற்றம்வரினும் கொள்வரதைப்
    பனையளவாய்…! 

    மரபுக் கவிதையில்…

    வந்திடும் வாழ்வில் பழியென்றே
         -வருந்தி நாணும் குணமுடையோர்,
    நொந்திடச் செய்யும் குற்றமது
         -நிலையில் சிறிய தினையளவில்
    வந்த போதும் அதனைத்தான்
         -உருவில் பெரிய பனையதுபோல்
    சிந்தையில் கொண்டு வெறுப்பாரே
         -செயலில் காட்ட மறுப்பாரே…! 

    லிமரைக்கூ…

    கண்டால் குற்றம் தினையளவில்,
    கொள்ளுவர் அதனை பழிக்கஞ்சுவோர்
    காணப் பெரிய பனையளவில்…! 

    கிராமிய பாணியில்…

    செய்யாதே செய்யாதே
    குத்தமேதுஞ் செய்யாதே…
    சிறுசுபெருசு கணக்கில்ல,
    குத்தமேதுஞ் செய்யாதே… 

    பழிபாவத்துக்குப் பயப்படுறவன்
    பார்வயில இப்புடித்தான்-
    தெனயளவு சிறுகுத்தமும்
    அவனுக்கு
    பனயளவாத் தெரியுமாமே… 

    அதுக்கு,
    செய்யாதே செய்யாதே
    குத்தமேதுஞ் செய்யாதே…!

     

     

     

    Share
  • நாளொரு பக்கம்: 6: 2017

    -இன்னம்பூரான்

     

    innam

     

    नभसो भूषणं चन्द्र:

    नारीणां भूषणं पति: |

    पृथिव्या भूषणं राजा

    विद्या सर्वस्य भूषणं ||

     

    நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:

    நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |

    ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா

    வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||

    சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

    ***

    சித்திரத்துக்கு நன்றி:

    http://4.bp.blogspot.com/-FW8viYN3nBs/VN8WVM59C7I/AAAAAAAADt4/UGnTZ_BmQxo/s1600/booksanddegree.jpg

    Share