இரயில் பயணிகளால் ஆண்டுதோறும் இரயில்வேத் துறைக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு 35,000 கோடியாக இருந்தது இந்த ஆண்டு 39,000 கோடியாக உயர்ந்துள்ளது. பயணச் சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களால் ஏற்படும் இழப்பு ஒழுங்காக, நேர்மையான முறையில் பயணச் சீட்டு வாங்கி பயணம் செய்பவர்கள் தலையில் தான் விடிகிறது. உரிமையைக் கேட்டு போராடும் பலர் கடமையைப் பற்றி நினைப்பதே இல்லை என்பதையே இது காட்டுகிறது.. 🙁 சில பிரிவுகளில் பாதிக்கும் மேலான பயணிகள் பயணச் சீட்டு வாங்குவதே இல்லை என்பதே உண்மை! இவையெல்லாம் பரிசோதகர்கள் கண்ணில் எப்படி தப்புகிறது என்றும் ஆச்சரியமாக உள்ளது!
உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், வானியல், சமூகவியல் என அனைத்திலும் முன்னேற்றங்களும், கண்டுபிடிப்புகளும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இவையனைத்தும் உடனுக்குடன் மக்களைச் சென்றடைய உறுதுணையாக இருப்பவை நூல்கள், இணையம், செய்தித்தாள்கள் போன்றவைகளே. நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது!
இதுமட்டுமன்றி, வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.
அந்த வகையில் நல்ல நூல்களை வாசிப்பதை ஒரு தவமாகவேக் கொண்டிருப்பவர் பலர். அப்படிப்பட்ட ஆகச்சிறந்த நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில், அதுவும் கழிவு விலையில் கிடைப்பதென்றால் அதைவிட பேறு வேறு என்ன வேண்டும். அப்படியொரு மகத்தானப் பணியைத்தான் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழாசெய்து கொண்டு வருகிறது!
எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களையும், சிறந்த பேச்சாளர்களையும் தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் விதமாகவே இத்திருவிழா தொடர்ந்து நடந்துவருவது சிறப்பு.
மக்கள் சிந்தனைப் பேரவை என்ற இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகசிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் பேரவை சார்பில் முழுக்கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான பல செயல்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை சிறப்பாக நடத்தி வருகின்றது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ஈரோடு வாசிக்கிறது’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரப் புத்தக வாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளைக் கடந்த சில ஆண்டுகளில் பேரவை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் ‘ திருவள்ளுவர் விருது ’ வழங்குதல்… அருகில் நீதிபதி பொ. நடராசன் , திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் க. கருத்தப்பாண்டி, செயலர் நம். சீனிவாசன், துணைத்தலைவர் ச. திருமலை முத்துச்சாமி ஆகியோர் உள்ளனர்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன்மிகச்சிறந்த பேச்சாளரும், வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். பல்வேறு விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் ஏற்கனவே பெற்றிருந்தாலும், சமீபத்தில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் திருக்கரங்களால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் மன்றத்தின் 45ஆம் ஆண்டுவிழா 18.02.2017 ஆம் தேதி ‘திருவள்ளுவர் விருது’ பெற்றது அவர்தம் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது என்றால் அது மிகையாகாது.
பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிய முப்பரிமாணங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ்ப்பணியும் சமூகப்பணியும் ஆற்றிவருவதை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்படுவதாக விருதாளர் அறிமுகத்தில் இம்மன்றத்தின் தலைவர் பேராசிரியர் க. கருத்தப்பாண்டி தெரிவித்ததும், விருது வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதாளர் சமூகத்திற்கு ஆற்றிவரும் பல்வகைப் பணிகள் குறித்து தனது சிறப்புரையில் விரிவாகப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் மிகச்சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழா மற்ற மாவட்டங்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு இதன் அடுத்தக்கட்ட நகர்வாக, ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘வார்டுதோறும் வாசகர்வட்டம்’ என்ற மிகச்சிறப்பானதொரு திட்டத்தையும் முன்னெடுத்துள்ளதை அறிந்து அதுகுறித்து திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:
18 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் மக்கள் சிந்தனைப் பேரவையின் அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம்’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சிறந்த வாசகர்களாகவும், கல்விமான்களாவும், படைப்பாளர்களாகவும் உருவாகவும் வழிவகுக்கும் என்று தாம் திடமாக நம்புவதாகக் கூறினார்.
வாசகர் வட்டத்தின் நோக்கமும் செயல்பாடும் குறித்து வினவியபோது,
ஒரு பகுதியில் குறைந்த பட்சம் 20 பேர் இவ்வாசகர் வட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தால் அங்கு ஒரு வாசகர் வட்டம் தொடங்கலாம். அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அவ்வட்டத்தில் இருக்கலாம். அதற்கும் மேல் உறுப்பினர்கள் சேர்ந்தால் அதே பகுதியில் இன்னொரு வாசகர் வட்டத்தைத் தொடங்கலாம். 50 க்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை இருந்தால் அவ்வட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது.
இவ்வாசகர் வட்டத்தில் இணைய அடிப்படைத் தகுதி அவர் புத்தகம் மற்றும் இதழ்களை வாசிப்பவராக இருக்க வேண்டும். இப்போது தீவிர வாசகராக இல்லாவிடினும் இனிமேலாவது வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணமுடையவராக இருக்கவேண்டும்.
மாதமொருமுறை வாசகர் வட்டம் கூட்டப்பட வேண்டும். இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, மூன்றாவது சனிக்கிழமை என்று ஏதாவது ஒருநாளை தொடக்கத்திலேயே அனைவரும் கூடிப்பேசி அப்பகுதிக்குப் பொருத்தமான ஒருநாளைத் தேர்வு செய்துகொண்டு ஒரு மாதம் கூட இடைவெளி விடாமல் முறையாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டம் சரியான நேரத்திற்குத் தொடங்குவதும், முடிவதும் மிகவும் முக்கியம்.
வாசகர் வட்ட மாதாந்திர கூட்டத்திற்கு யாராவது ஒரு படைப்பாளியை அழைத்து வந்து சிறிது கருத்துரை வழங்க ஏற்பாடு செய்யலாம். அவ்வாறு அவர் பேசி முடித்த பிறகு அவர் பேசிய கருத்திலிருந்து சில கேள்விகளை எழுப்பி அவருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். பிறகு வட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த மாதத்தில் அவர்கள் படித்த ஏதேனும் ஒரு புத்தகத்தில் அவருக்கு பிடித்த சில அம்சங்கள் குறித்துப் பேசலாம். அதே போல ஒவ்வொருவரும் அவசியம் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். அழைக்கப்படும் படைப்பாளி ஒரு பேச்சாளர் பாணியில் பேசுபவராகத் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. வட்டக் கூட்டங்களில் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறான கூட்டங்களின் விளைவாக புதிய புதிய பயனுள்ள புத்தகங்கள் அனைத்து வாசகர்களுக்கும் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. புத்தகப் பரிமாற்றமும் நடைபெறும். செய்தித் தாள்களிலோ, வார – மாத இதழ்களிலோ வாசித்தவை குறித்தும் இதில் பேசலாம்.
வாசகர் வட்ட உறுப்பினர்களின் அறிவை விரிவு செய்வது மட்டும் இவ்வட்டத்தின் நோக்கமல்ல. தங்களை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவ்வட்டம் அமைந்துள்ள ஊரிலோ அப்பகுதியிலோ உள்ள பிற மக்களையும் புத்தகம் வாசித்துப் பயன்பெறக் கூடியவர்களாக வளர்ந்திடத் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாசிப்பு குறித்த விழிப்புணர்வை தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், நாடகங்கள், குறும்படங்கள் போன்ற பல வடிவங்களைப் பின்பற்றி மக்களிடத்தில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
வாசகர் வட்ட உறுப்பினர்கள் அவரவர் பகுதியிலோ, அருகாமையிலோ உள்ள அரசு நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அத்தோடு அந்நூலகம் சிறப்பாகவும் உயிரோட்டமாகவும் செயல்பட அந்நூலகரோடு ஒருங்கிணைந்து எல்லா முறைகளிலும் ஒத்துழைக்க வேண்டும்.
ஆண்டுக்கொருமுறை நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவை வாசகர் வட்டம் உள்ள பகுதிவாழ் மக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் அளவில் புத்தகத் திருவிழா நடைபெறும் சமயங்களில் திருவிழா குறித்த துண்டறிக்கை, அழைப்பிதழ் போன்றவற்றை மக்களிடத்தில் நேராக வீடு வீடாகச் சென்று வழங்குவதோடு அவர்களுக்கு புத்தகத் திருவிழாவைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்ற அளவில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஈரோடு புத்தகத் திருவிழா குறித்து சுவரெழுத்து, சுவரொட்டி, பரப்புரை போன்ற முறைகளிலும் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் சிறிய அளவிலேனும் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
வாசகர் வட்டம் உள்ள பகுதிகளில் ஆண்டுக்கொருமுறை வட்டத்தின் சக்திக்கும் அப்பகுதி மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு சிறிய அளவிலேனும் 2 நாட்கள், 3 நாட்கள் என்ற அளவில் புத்தகக் கண்காட்சி வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட வேண்டும். அளவு சிறியதாக இருப்பினும் இப்புத்தகக் கண்காட்சி உயிரோட்டமானதாக அமைய வேண்டும். அதிக செலவினங்கள் செய்யாமல் அந்தப் பகுதியிலுள்ள பள்ளிகள், கட்டணமில்லாமல் கிடைக்கிற தனியார் கட்டிடங்கள் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய புத்தகக் கண்காட்சிகளுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைமையே தக்க ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்.
வாசகர் வட்டம் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் மீது வட்டம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அப்பள்ளி நிர்வாகத்தின் அனுமதி பெற்று மாணவர்களுக்கு வாசிப்பு குறித்த விழிப்புணர்வை வட்டத்தின் சார்பில் பல உத்திகளைப் பின்பற்றி ஏற்படுத்த வேண்டும். போட்டிகள் வைத்தல், அரசு நூலகங்களில் உறுப்பினராகச் சேரத் தூண்டுதல், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு அருகிலுள்ள அரசு நூலகங்களில் உறுப்பினர் கட்டணத்தை வட்டமே செலுத்துதல், உரிய சொற்பொழிவாளர்களை அழைத்து வந்து புத்தகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களிடையே உரையாற்றவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒருவாசகர் வட்டம் தன்னுடைய தரத்தில், செயல்பாட்டில் முன்னேற்றம் காண முயலுகிற அதே நேரத்தில் இன்னொரு வாசகர் வட்டத்தை உருவாக்குகிற பணியிலும் இறங்க வேண்டும். Each One Catch One என்பதைப் போல ஒரு வாசகர் வட்டம் இன்னொரு வாசகர் வட்டத்தை உருவாக்குவதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
உலக புத்தக தினம், உலக எழுத்தறிவு தினம் போன்ற புத்தகம், அறிவு, படைப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்படுவது அவசியம்.
நகரங்களில் – படித்தவர்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களில் ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டும் அவசியம் வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும்.
நூலகமோ வாசக சாலையோ இல்லாத பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு சிறிய அளிவிலான வாசகசாலையாவது வாசகர் வட்டத்தின் சார்பில் உருவாக்க முயல வேண்டும். வாய்ப்பிருந்தால் தனியார் நூலகங்களை ஆங்காங்கு தொடங்கலாம்.
வாசகர் வட்டங்கள் வெறும் பொழுதைப்போக்கும் நோக்கில் அல்லாமல் சமூக உணர்வோடும் சமூக அக்கறையோடும் நடத்தப்பட வேண்டும். சிறந்த, அறிவார்ந்த, பண்பட்ட, ஆளுமை மிக்க தனிமனிதர்களை உருவாக்குவதும் சமூக முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டும் இவ்வாசகர் வட்டங்கள் செயல்படுதல் வேண்டும்.
மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோடு அலுவலகத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழகம் தழுவிய அமைப்பாகும்.
வேறு மாவட்டங்களிலும் பேரவையின் மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு உருவான பின்பு தமிழகம்தழுவிய முறையில் வாசகர்வட்டங்கள் அந்தந்த மாவட்டத் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்படும். இதற்கெல்லாம் ஒரு முன்னோட்டமாகவே ஈரோடு மாநகராட்சியில் ‘வார்டுதோறும் வாசகர் வட்டம்’ என்ற திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது என்று உற்சாகமாகக் கூறினார்.
மேலும் அவர், தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைமை அலுவலகத்தை அணுகி அதற்கான துண்டறிக்கைகளையும் படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்றும் கூடுதல் விபரங்களும் தகவல்களும் பெற விரும்புவோர் 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறினார்.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக்கழகமாக விளங்க வேண்டுமென்றால் அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் கல்வி கற்றிருத்தல் வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அவள் குடும்பமே கல்வி கற்றதற்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் பெண்களுக்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் வாசகர் வட்டம் என்ற இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு நாடு முழுவதும் நல்ல வாசகர்களை உருவாக்க வேண்டும் என்று வல்லமை வாழ்த்துகிறது.
தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலேயே ஜனாதிபதி ட்ரம்ப் (தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று அவரே நினைக்காத நேரத்திலேயே) ‘ஜனாதிபதி ஆனவுடன் நான் முதல் முதலாக ஒபாமாவின் ‘எல்லோருக்கும் மருத்துவக் காப்பீடு’ திட்டத்தை எடுத்துவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவருவேன்’ என்று கூறிக்கொண்டிருந்தார். 2012-இல் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவியேற்றவுடனேயே அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்று சூளுரைத்தார். அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அடுத்த தேர்தலில் 2016-இல் போட்டியிட்ட ட்ரம்ப் ராம்னி கூறியது மாதிரியே தானும் அந்தச் சட்டத்தை எடுத்துவிடுவேன் என்றார். பதவிக்கு வந்தவுடனேயே தன் கட்சிக்காரர்களிடமும் தன் ஆலோசகர்களிடமும் சீக்கிரமே ஒபாமா கொண்டுவந்த சட்டத்திற்கு மாற்றுச் சட்டம் கொண்டுவரும்படி கூறிக்கொண்டிருந்தார்.
ஒபாமா 2009-இல் பதவிக்கு வந்தவுடனேயே எல்லோருக்கும் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கும் திட்டத்தை கொண்டுவர முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார். பல வல்லுனர்களைக் கலந்தாலோசித்து, அந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களையும் தானும் ஆராய்ந்து அவருடைய மிகப் பெரிய சாதனையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அந்தத் திட்டத்திலும் சில குறைகள் இருப்பதாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனாலும் இதுவரை உள்ள திட்டங்களில் இதுதான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுகளிலேயே கட்டுக்கடங்காமல் போய்விட்டிருந்தன. 1945-இல் பதவிக்கு வந்த ட்ரூமன் முதல் கிளின்டன் வரை எல்லா ஜனாதிபதிகளும் எவ்வளவோ முயன்றும் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் மருத்துவ இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. ஒபாமா இதை ஒரு சவாலாக ஏற்றுத் தன் முழு உழைப்பையும் கொடுத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றினார். அதை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு குடியரசுக் கட்சித் தலைவர்கள் திட்டம் தீட்டினர். ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பல வெள்ளையர்கள் விரும்பவில்லை. அவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தனர்.
இப்போது ட்ரம்ப் ஜனாதிபதி பதவி கிடைத்தவுடன் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் ஒழித்து அவருக்குக் கிடைத்திருக்கும் சாதனையாளர் என்ற நல்ல பெயரை எப்படியும் கெடுத்துவிட வேண்டும் என்று காரியங்கள் செய்துவந்தார். ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பதவி ஏற்புக்கு முன்னால், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருக்குச் சில யோசனைகள் கூறியதாகவும் அவற்றை ஏற்று நடப்பதாக ட்ரம்ப் கூறியதாகவும் ஒபாமா அறிவித்தார். ஆனால் அப்படி ஒபாமாவிடம் வாக்களித்தாலும் ட்ரம்ப் முதல் நாளிலிருந்தே ஒபாமா கொண்டுவந்திருந்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஓழித்துக்கொண்டிருக்கிறார். வங்கிகள் செய்துகொண்டிருந்த சில அநியாயங்களை ஒழிக்க ஒபாமா கொண்டுவந்த சில கட்டுப்பாடுகளை எடுத்தார்; வங்கிகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறார். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் கனடாவிலிருந்து அமெரிக்க மாநிலம் டெக்ஸாஸிற்குக் கச்சா எண்ணெய் கொண்டுவரும் திட்டத்திற்கு ஒபாமா சம்மதம் கொடுக்கவில்லை. இப்போது ட்ரம்ப் அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.
ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சட்டத்தை எதிர்க்கும் மசோதாவிற்கு ஓட்டுப் போடவில்லையென்றால் கீழவை உறுப்பினர்கள் பதவி அடுத்த தேர்தலில் போய்விடும் என்று பயமுறுத்தினார். தன் கட்சி உறுப்பினர்களையே அவரால் புது மசோதவிற்கு ஓட்டுப்போடவைக்க முடியவில்லை. (இந்தியாவில்போல் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை. எல்லோரும் சுயமாகச் சிந்திப்பவர்கள். தாங்கள் சரியென்று நினைப்பதைச் செய்வார்கள்.) கீழவையிலேயே அது தோற்றுப் போனது. 435 உறுப்பினர்கள் உள்ள கீழவையில் 235 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களிலேயே பழமைவாதிகளில் சிலர் ஓட்டுப் போடவில்லை. குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஓட்டுப் போடவில்லை. அதனால் பெரும்பானமை கிடைக்காமல் மசோதா தோல்வியுற்றது.
தோல்விக்குப் பிறகும் ட்ரம்ப் தன் தவறை உணர்ந்ததாகத் தெரியவில்லை. எப்போதுமே பொய்களாகச் சொல்லிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் இதிலும் ஒரு பொய்யைக் கூறுகிறார். தான் ஒருபோதும் உடனேயே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாகச் சொல்லவில்லை என்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே, தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே ஒபாமாவின் சட்டத்தை மாற்றுவதாக திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தவர் இப்போது அப்படியொன்றும் தான் கூறவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். அது மட்டுமல்ல, ஒபாமாவின் சட்டம் இன்னும் சில நாட்களில் தானாக வெடித்துவிடும் அல்லது சிதைந்துவிடும் என்றும் கூறி அவர் சொல்வதையெல்லாம் நம்பும் தன் ஆதரவாளர்களை ஏமாற்றி வருகிறார். ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து ஒத்துழைக்காததால்தான் மசோதா தோற்றுவிட்டது என்று இன்னொரு பொய். இந்தப் பொய்களை யார் நம்பப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதையும் சிலர் நம்புவார்களோ என்னவோ. இப்போது ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ப்ரீத் பரேரா (இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் ட்ரம்பால் பதவி இறக்கம் செய்யப்படவில்லை. நேர்மையான அரசு வழக்கறிஞர் என்பதால்) கூறியதுபோல் ஆட்டுமந்தைகள் அடங்கிய சமூகம் ஓநாய்கள் ஆளும் அரசைத்தான் தேர்ந்தெடுக்கும். இந்த ஓநாய்கள் செய்வது எதையும் இந்த ஆட்டுமந்தைகள் ஏற்றுக்கொள்ளும்.
இந்த மசோதா தோற்றுப் போனதால் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குஷியாக இருக்கிறார்கள். ஆவணப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் மூர் இதை வெற்றியாக நினைத்து விழாக் கொண்டாடுவதற்குப் பதில் தொடர்ந்து ஜாக்கிரதையாக இருந்து இனியும் ட்ரம்ப் செய்யபப்போகும் காரியங்களை முறியடிக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்வது மிகவும் சரி. அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே உயர்த்த வேண்டும் என்று எண்ணி ஒபாமா செய்த நல்ல காரியங்கள் அனைத்தையும் ட்ரம்ப் முறியடித்து அமெரிக்கா என்றாலே உலகம் வெறுக்கும் அளவிற்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது.
வெனிஸ் நகரின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று டோஜஸ் அரண்மனை. இத்தாலிய மொழியில் இது Palazzo Ducale எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாக உருவாக்கம் கண்ட இந்த அரண்மனை தொடர்ச்சியான தாக்குதல்களால் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தற்சமயம் மிஞ்சி இருக்கும் பகுதி என்பது 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டு வெளிப்புறக் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மெல்லிய இளஞ்சிவப்பு நிற பளிங்குக்கற்களால் வடிவமைக்கப்பட்ட கோத்திக் அமைப்பிலான கட்டுமானம் கொண்டது இக்கட்டிடம். இவ்வகை அமைப்பு என்பது அக்காலத்து வழமையான கட்டிட அமைப்பிற்கு ஒரு மாற்றாக அமைந்தது.
வெனிஸ் நகர அமைப்பின் ஆரம்பக்காலம் தொட்டு இந்த டோஜஸ் அரண்மனை அரசாங்க அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. அது மட்டுமன்றி இதே கட்டிடத்திற்குள் தான் நீதிமன்றமும் வெனிஸ் பிரபுவின் தங்கும் இடமும் அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒரு அரண்மனை மட்டும் தான் வெனிஸ் நகரில் அரண்மனை என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தின் உட்பகுதி சுவர் சித்திரங்கள் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டவை. உலக கலைக் கூடங்களின் உயர் தரக் கலைக்கு உதாரணமாக இந்தக் கட்டிடத்தின் உட்பகுதியில் அமைந்திருக்கும் பிரமாண்டமான ஓவியங்களும் சித்திரங்களும் அமைந்திருக்கின்றன .
கண்காட்சியும் அருங்காட்சியகமும் அமைந்துள்ள பகுதிக்குச் செல்லும் முன் நாம் நுழைவாயிலைக் கடந்து செல்வோம். இது 15ம் நூற்றாண்டு கோத்திக் வகை முகப்பு. கோத்திக் அமைப்பு என்றாலே நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அமைந்த ஒரு அமைப்பு எனக் கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் நாம் அருங்காட்சியகத்தை வந்தடைந்து விடுவோம். இந்த அருங்காட்சியகப் பகுதியில், முன்னர் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களின் போது சேதமடைந்த இந்த அரண்மனையில் தூண்கள், பகுதிகள், ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்படி சேதமடைந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான சிற்பங்களின் சிதறிய பகுதிகளும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் மட்டுமன்றி இன்று வருகையாளர்களுக்காகத் திறந்து விடப்படும் அனைத்துப் பகுதிகளுமே சிற்பங்களும் வரலாறுகளும் நிறைந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு அருங்காட்சியகமாகவே திகழ்கின்றன.
கட்டிடத்தின் முன் பகுதியில் ஆதாம் ஏவாள் ஆகிய இருவரின் சிலையும் நுண்ணிய முறையில் பளிங்கில் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அந்தோனியோ ரிஸோ என்னும் சிற்பி வடிவமைத்தார். அரிய ஒரு சிற்பம் இது. இன்னொரு பக்கத்தில் Torture Chamber என அழைக்கப்படும் சித்ரவதை அறை உள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நபர்கள் இங்கே தான் விசாரிக்கப்படுவார்களாம். எவ்வகை விசாரணை என்பது இந்த அறையின் பெயரை வாசிக்கும் போதே நம்மால் ஊகித்துக் கொள்ள இயலும் தானே?
இதனைப் பார்த்து விட்டு வரும் போது நம்மைப் பிரமாண்டத்தில் ஆழ்த்தும் சுவர் சித்திரங்கள் நிறைந்த கூடங்கள் வரவேற்கும்.அதில் Sala del Maggior Consiglio என அழைக்கப்படும் மைய அறை சிறப்பு வாய்ந்தது. மலைத்துப் போய் நம்மை நிற்க வைக்கும் வகை ஓவியங்கள் இவை. உலகின் மிகப்பெரிய அரண்மனைச் சுவர் சித்திரம் என அறியப்படும் தி பேரடைஸ் (The Paradise) இங்கு தான் அமைந்துள்ளது. 1557ம் ஆண்டு தொடர்ச்சியாக ஒன்றின் பின் ஒன்றாக இந்த அரண்மனை தீக்கிரையானது. தீயினால் சேதமடைந்த பகுதியைப் புதுப்பிக்கும் சமயத்தில் புதிய சுவர்ச்சித்திரங்களை அரண்மனையில் நிறைக்க வேண்டும் என வெனிஸ் பிரபு முடிவெடுத்து அந்த நூற்றாண்டின் இத்தாலியின் தலைசிறந்த ஓவியக்கலைஞரான டிண்டொரெட்டோ (Tintoretto) அவர்களுக்கு இப்பணியை வழங்கினார். சொர்க்கம் என்ற பொருளில் அந்தப் பிரமாண்டமான சுவரில் நூற்றுக்கணக்கான உருவங்களை நிறைத்து சொர்க்கலோகத்தில் இறையடியார்களும் தேவதைகளும் உலா வருவது போல இந்தச் சித்திரத்தை வடிவமைத்தார். ஆண்டுகள் ஐநூறைக் கடந்தாலும் இன்றளவும் உலகளாவிய அளவில் பேசப்படும் ஒரு கலைப் பொக்கிஷமாக இந்த ஓவியம் காட்சியளிக்கின்றது.
இந்த அரண்மனையின் கீழ்த்தளம் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு பகுதி சிறைச்சாலையாக கி.பி16ம் நூற்றாண்டு தொடக்கம் இயங்கி வந்துள்ளது. இந்தச் சிறைச்சாலைப் பகுதியில் கொடுமையான தவறிழைத்தவர்கள் சிறை வைக்கப்படவில்லை. சிறிய திருட்டுக்கள், ஏமாற்றுத்தனம் செய்தோர் ஆகியோர் தண்டனை வழங்கப்பட்டு இங்கே கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர் என்ற செய்தியையும் இங்கே அறிய முடிகின்றது. மிகக் குறுகலான அறை. செல்லும் பாதையும் குகைக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடும். ஒவ்வொரு அறையும் சிறிதாக, உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நானூறு வருடம் பழமை வாய்ந்த சிறைச்சாலை இன்றும் சேதமடையாமல் நல்ல நிலையில் இருக்கின்றது. இதில் என்ன வியப்பென்றால், மேல் தளத்தில் வெனிஸ் நகரை ஆளும் பிரபு தங்கியிருக்க, கீழ்த்தளத்தில் சிறைச்சாலைக் கைதிகள் இருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வித்தியாசமாகத்தான் இருக்கின்றது.
இதே அரண்மனையின் ஒரு பக்கத்தில் அரசின் ஆயுதக் கிடங்கு உள்ளது. கி.பி.14ஆம் நூற்றாண்டு தொடங்கி இந்த ஆயுதக்கிடங்கு பயன்பாட்டில் இருக்கின்றது. வாள், துப்பாக்கி வகைகள், பீரங்கிகள், குதிரைப்படையினரின் இரும்புக் கவசங்கள், பல்வேறு வகையான தாக்கும் கருவிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இந்த ஆயுதக் கிடங்கில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைப் பேர்க்கும் போது வருகையாளர்களுக்கு இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களின் நினைவு நிச்சயம் வந்து செல்லும்.
டோஜஸ் அரண்மனை வெனிஸ் நகரின் ஒரு வரலாற்றுச் சின்னம். அருங்காட்சியகம், அரசாங்கக் கட்டிடம், பிரபுவின் மாளிகை, சிறை, ஆயுதக்கிடங்கு கலைக்கூடம் என வெவ்வேறு வகையில் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியக்கட்டிடமாக இந்த அரண்மனை திகழ்கின்றது. இதன் உள்ளே சென்று அனைத்து விசயங்களையும் நேரில் பார்த்து, ரசித்து, அதன் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டு குறிப்பெடுத்து வருவதற்கு நிச்சயம் ஒரு நாள் தேவைப்படும். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல வசூலிக்கப்படும் கட்டணம், மற்றும் சிறப்புக் கண்காட்சிகள் பற்றி அறிந்து கொள்ள இதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் நீங்கள் அலசலாம். http://palazzoducale.visitmuve.it/en/home/ .
அன்பான வணக்கங்கள். மார்ச் மாதம் கடைசி வாரமாகிய இவ்வாரத்தில் இம்மடல் மூலம் நான் எடுத்து வரப் போகும் விடயம் என்னவாக இருக்கும் என நீங்கள் எண்ணலாம். கடந்த ஞாயிறு அதிகாலை அதாவது 26ஆம் திகதி அதிகாலை ஒரு மணி முன்னோக்கி நகர்த்தப்பட்டு இரண்டு மணியாக்கப்பட்டது.
சிலர் என்ன இது என்று புருவத்தை உயர்த்தலாம் .
வேறு ஒன்றுமில்லை! வருடாந்தரம் நடைபெறும் ஜரோப்பிய கோடைகால நேரமாற்றம் தான் அது. அட… இதைப் போய் பெரிய விஷயமாகச் சொல்ல வந்திட்டாரா சக்தி? எனத் தொடரப் போகும் உங்கள் வினா எனக்குப் புரிகிறது. சரித்திரப் பிரசித்தி வாய்ந்த ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் நிகழ்ந்திருப்பதைப் போட்டு உடைக்கும் முன்னால் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தலாமே என்றுதான்.. .
ஆமாம் ஏறத்தாழ 42 வருடங்களாகப் பங்கு வகித்து வந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாம் வெளியேறப் போகிறோம் என்பதை உத்தியோகபூர்வமாக எமது பிரதமர் தெரேசா மே அவர்கள் கடந்த 29ஆம் திகதி அதாவது புதன்கிழமை 12 மணிக்கு இங்கிலாந்துக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மூலம் ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவரிடம் கடிதம் மூலம் அறிவித்த நிகழ்வே நான் மேற்குறிப்பிட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். இந்த அறிவித்தலைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு அளித்த அறிக்கையில் ” ஐக்கிய இராச்சியமானது திரும்ப முடியாத ஒரு திருப்பத்தினுள் நுழைந்து விட்டது. இத்திருப்பத்தினுள் எதை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் ஆதங்கம் இருந்தாலும் அனைத்தும் எமக்கு அனுகூலமாக அமைவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே எம் முன்னால் இப்போது இருக்கும் பாரிய பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் சரித்திரத்தில் இது ஒரு மைல் கல்லே! இம்மாற்றத்தினால் இங்கிலாந்து சுபீட்சமடையப் போகிறதா? இல்லை… பாரியப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போகிறதா? என்பது அனைவருக்கும் இப்போது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால் முடிவு எதுவாக இருப்பினும் அம்முடிவினை உத்தியோகபூர்வமாக முடுக்கிவிட்ட பொறுப்பைத் தற்போதைய பிரதமராகிய தெரேசா மே அவர்களே ஏற்க வேண்டும் என்பது சரித்திரத்தில் இடம்பெறப் போகும் உண்மையாகும்.
சரி இனி நடக்கப் போவது என்ன ?
உத்தியோக பூர்வ அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு இரண்டு வருட காலக்கெடு விதிக்கப்படுகிறது. அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதியிலிருந்து இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உறவு நிரந்தரமாக முறிக்கப்படுக்கிறது. அதன் பின்னால் இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வகையிலான உறவினைப் பேணப்போகிறது என்பது இந்த இரண்டு வருட இடைவெளியின்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படும் இணக்கங்களையும், ஒப்பந்தங்களையும் பொறுத்தே அமையப் போகிறது. இந்தத் திருப்பம் இங்கிலாந்தில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது? என்பதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இருந்து கிளம்பியுள்ளது. இப்போது இங்கிலாந்து எடுத்திருக்கும் இம்முடிவானது இனிவரும் பல தலைமுறைகளின் வாழ்வாதரத்தைப் பாதிக்கப் போகிறது என்பது தவிர்க்கப்பட முடியாத உண்மை என்பது அனைத்துத் தர அரசியல் அவதானிகளினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதிப்பு அனுகூலமானதா ? அன்றிப் பிரதிகூலமானதா? என்பதே இவர்களுக்கிடையில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படை.
இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்களின் முடிவு என்பதே யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை என்பதன் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு யதார்த்தம் புதைந்து போன ஒரு உண்மை . இந்தச் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பகுதியின் வாக்கு வீதம் 52 மட்டுமே! ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாக்களித்தோர் வீதம் 48 ஆகும். வெறும் 4 வீதத்தினால் மட்டுமே இன்று இங்கிலாந்து இந்தப் பாரிய திருப்பத்துக்குள் தன்னை நுழைத்திருக்கிறது. எவர் எதைச் சொன்னாலும் 48 வீதமான மக்களின் அபிலாஷைகளைப் பிரதமர் எந்த வகையில் அனுசரித்து போகப்போகிறார் என்பது பலரது பார்வையில் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகிறது.
இந்த மடல் வரிசையில் இன்னும் பல மடல்களில் இதைப்பற்றிய விரிவான அலசல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு ஆரம்பமே! விளையாட்டை பிரித்தானியப் பிரதம மந்திரி ஆரம்பித்து வைத்திருக்கிறார். இவ்விளையாட்டில் மற்றும் 27 விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தகைய பகடைகளை உருட்டப் போகிறார்கள் என்பது போகப் போக வெளிச்சமாகும்.
இன்றைய நிலையில் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு முக்கியமான திருப்பம் ஏற்[பட்டதை வருங்காலச் சரித்திரத்தில் படிக்கும்போது நாம் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருந்தோம் எனும் கேள்வி எழும்போது சக்தி இங்கிலாந்தில் இதைப்பற்றிய மடலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தான் என்பதுவே விடையாகும்.
திலகாவும் சைலஜாவும் திலகா வீட்டுத் திண்ணையை ஒட்டிய சிறிய அறையில் ரகசியமாக ஏதோ பேசிச் சப்தமிடாமல் சிரித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள்.
திலகாவின் கண்கள் அகல விரிந்தன.”அவன் இவன்னு சொல்லறே, உங்க அத்தை கோவிச்சுக்க மாட்டாங்களா?”
சைலா இத்தனை நாட்கள் இதைப் பற்றி சிந்தித்ததேயில்லை. இப்போது, ‘ஓ இப்படியும் ஒரு சம்பிரதாயம் உண்டா?,’ என அவளுடைய இளம் உள்ளம் தத்தளித்தது.
“ஆமாம், நாளைக்கு என்ன பாவாடை தாவணி போட்டுக்கப் போறே?” என்று சீண்டினாள் திலகா.
“அம்மா சொல்லறதத் தான். நானா எப்படி எடுத்துக்க முடியும்? போன வருஷம் ராஜிச் சித்தி நவராத்திரிக்கு ஹைதராபாதில இருந்து அனுப்பியிருந்தாங்களே, கல் வைச்ச வளையல், அதைப் போட்டுக்கவாடி திலகா?” என்று கன்னத்தில் சிறிது செம்மையேற, தலையைச் சாய்த்துக் கேட்டதில், குடை போன்ற ஜிமிக்கிகள் அவள் காதில் உரசி ரகசியம் பேசின.
ஆடலரசு அப்போது அந்த அறை வாயிலில் எட்டிப் பார்த்து, “திலகா, எனக்கு அட்லாஸ் வேணும்; படிக்கணும். என் புத்தகம் எல்லாம் இங்க தான் இருக்குது,” என்று சற்று விரைப்புடன் கூறவே இரு பெண்களும் வெளியே வந்தனர்.
ஆடலரசு சிடுசிடுத்தானே தவிர, சைலஜா தலை சாய்த்து வினவிய அழகுக் கோலம் அவன் மனத்தில் பதிந்து அவனை அலைக்கழித்தது. கன்னத்தில் விழுந்த குழியின் அழகில் மூழ்கிப் போனான் அவன். உதட்டோரத்தில் முகிழ்த்த நாணச் சிரிப்பு போதை போல ஒரு உபாதையை உள்ளத்தில் ஏற்றியது. தன் மனதில் ஒளித்து வைத்துக் காப்பாற்றிய ஒரு பரம ரகசியம் இப்போது அவனைத் தத்தளிக்க வைத்தது.
பக்கத்து வீட்டிற்குக் குடி வந்து தன் தங்கையின் தோழியாகிப் பின் தன் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என அவன் அறிவான். ஆனாலும் அவளுடைய புத்திசாலித்தனம், சமர்த்து எல்லாம் தனக்கு ஒரு சவாலாக அமைந்ததென அவன் கருதினான். அவள் முன்பு அறிவிலும், படிப்பிலும் சிறந்து விளங்கி அவளை வியப்பினால் புருவத்தை உயர்த்த வைக்க வேண்டும் என்பது அவன் கனவு.
‘அவள் மீது தான் கொண்ட அன்பு நிறைவேறாது. தான் இதை அவளிடம் கூட வெளியிட முடியாது,’ என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் தான் அவளை, அவளுடைய செயல்களை ஆர்வத்துடன் ரசிப்பதை அவள் அங்கீகரிக்கிறாள் என்று அவளுடைய கடைக்கண் வீச்சுகள் நன்றாக உணர்த்தியிருந்தன. ‘தொடக்கமும் முடிவும் இது தான்,’ என்று இரு இளம் உள்ளங்களும் உணர்ந்திருந்த போதிலும், தங்களுடைய பருவத்துக்கும், இளமைக்கும் இது ஒரு பரஸ்பர அங்கீகரிப்பு என ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இந்த திருட்டுப் பார்வைகளிலும், கண் வீச்சுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால் இன்று சைலஜாவின் நாணம் புதியதாக இருந்தது. ஆடலரசு இதுவரை காணாதது அது. ‘இத்தனை நாள்வரை அந்தக் கண்களில் சவால் விடும் விஷமமும் குறும்பும் தான் தென்பட்டு வந்தது. இப்போது நாணக்கலவையும் சேர்ந்து அவளை எவ்வளவு அழகாக மாற்றிவிட்டது! அவளுடைய அத்தை மகனுக்காகத் தான் இந்த நாணமும் கொஞ்சலும் அழகுமா? ‘என் தேவதை, நான் எட்டாத உயரத்தில் வைத்துப் பார்த்து மகிழும் இவளுடைய பார்வை கூட இனி என் பக்கம் திரும்பாதோ…’
‘இத்தனை நாள் உன்னை உயர்வாக மதித்துப் போற்றியிருக்கிறேனே பெண்ணே. என் இளம் மனத்தின் கதவுகளை மெல்லத் திறந்து அன்ன நடையிட்டு உள்ளே புகுந்தவள் நீ. நானாக உன்னை வெளியேற்ற மாட்டேன். நீயாக வெளியேற முற்படுகிறாய். நீயும் எவரும் அறியாமல் எத்தனை நாள் இங்கு குடியிருப்பாய்? உன் இருப்பு தெரிந்தால் தானே எனக்கும் மதிப்பு, உனக்கும் கௌரவம்…..
‘நீ போய் விட்டாலும் கூட, நீ அமர்ந்திருந்த என் இதயபீடத்தில், உன் காலடிச் சுவடுகள் உள்ளனவே, இதய அறையினில் இனிய நறுமணம் நிரம்பியுள்ளதே, இதைப் போற்றிப் பாதுகாத்து நான் உள்ளளவும் வழிபடுவேன். இதை நீ உணரவில்லையே சைலா….’
ஆடலரசுக்கு இதில் தான் மிகவும் வருத்தம்.
——————————————————————
சைலஜா துள்ளல் நடையிட்டுத் தங்கள் வீட்டுக் கூடத்தில் நுழைந்ததும் அப்பாவின் லேசான குறட்டையொலி கேட்டது. அவர் இருந்த கோலம் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது எனில், ரேடியோவிலிருந்து ஒலித்த பாடல் கன்னங்களைச் செம்மையேற்றி இதயத்துடிப்பை அதிகரித்தது.
தான் பாட்டை ரசிப்பதை யாராவது பார்த்து விட்டார்களோ என்ற பதைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தபடி, விடுவிடெனச் சமையலறையை நோக்கி ஓடினாள் சைலஜா. “பாட்டி, அப்பாவைப் பாரேன். தூங்கியே போய் விட்டார், ” என்றாள். அலமு கூடத்துக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.
“இதோ தட்டு வைத்தாயிற்று. சாப்பிட வாங்கோ. அந்த கண்றாவிப் பாட்டை நிறுத்துங்கோ. பெண் குழந்தைகள் எல்லாம் கெட்டுப் போகணுமின்னே தான் போடறாங்கள் இந்த மாதிரிப் பாட்டெல்லாம்.”
எழுந்து நின்று சோம்பல் முறித்த வெங்கடேசன் ரேடியோவை நிறுத்தினார். பேப்பரை ஒழுங்காக மடித்து வைத்தார். ‘இளம் பெண்கள் கெட்டுப் போக இந்தப் பாட்டைக் கேட்க வேண்டாம். அத்தைமகன், முறைப்பெண் என்று முடிச்சுப் போடும் சம்பிரதாயங்களும், கேலிப் பேச்சுகளும், இளம் பெண்களின் மனதை எவ்வளவு பாதித்து, வீண் கனவுகளை வளர்த்துக் கொண்டு பின்பு சங்கடத்துக்குள்ளாக வைக்கின்றன,’ என நினைத்துக் கொண்டார். பழியைச் சுமர்த்த வேறு யாராவது கிடைத்தால் சரி!
அப்பாவோடு பக்கத்திலமர்ந்து குழந்தை என்கிற ஹோதாவில் சைலஜா எப்போதும் சாப்பிடுவாள். அவள் ‘பெரியவளாகி’ விட்ட பின்பு இதை மாற்ற முயன்று கொண்டிருந்தாள் அலமேலு. வெங்கடேசன் இந்தச் சிறிய சலுகையைத் தன் செல்ல மகளிடமிருந்து பறிப்பதை விரும்பவில்லை. அதனால் வழக்கம் போல இன்றும் தந்தையின் அருகிலேயே சைலஜா அமர்ந்து கொண்டாள்.
பாட்டி சாம்பார் பரிமாறி விட்டுப் போனதும் மெல்லக் கேட்டாள், “அப்பா, நானும் கூட சீனுவை மாதிரி டாக்டருக்குப் படிக்கலாமாப்பா?”
கேட்டுக் கொண்டிருந்த அலமுவோ, “நாளைக்கு உன் அத்தை என்ன சொல்லறா என்று கேட்டுக் கொண்டு, பின்னே கோட்டை கட்டலாம்,” என்றாள்.
தன் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதற்காக அத்தை தன் கருத்தை வெளியிட வேண்டும் என்று சைலாவுக்குக் குழப்பமாக இருந்தது. வீம்பாக, “அத்தை பிள்ளை சீனு தான் படிச்சு பெரிய டாக்டர் ஆகலாமோ? நானும் படிச்சா என்னவாம்? எங்கப்பா என்னைப் படிக்க வைக்கிறார்,” என ‘வெடுக்’கென மொழிந்தாள் அந்தப் பதினாலு வயதுப் பெண்.
“நீ கவலைப்படாதே அம்மா, நானாயிற்று உன் படிப்புக்கு உத்தரவாதம்,” என்ற தந்தையின் சொற்கள் அவளைச் சிறிது குளிர்வித்தன.
படிப்பில் என்றைக்குமே அவளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எல்லாரும் அவள் மனத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள்.தானும் அது போல ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேணும், இதனால் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று கனவு காண்பது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். ‘டாக்டர் சைலஜா’ என மனதுக்குள்ளேயே போர்டு மாட்டிக் கொண்டு பார்த்து மகிழ்வாள்! வானளாவக் கோட்டை கட்டுவாள். “டாக்டரம்மா, டாக்டரம்மா,” என்று நோயாளிகள் அவளைச் சுற்றி வருவதாகவும், கொடுக்கும் மருந்தில் குணமாகி அவளை வாழ்த்துவதாகவும் கற்பனை செய்து உள்ளம் நெகிழ்வாள்.
இந்த இலட்சியக் கனவுகளிடையே இப்போது இளமையின் வசந்தக் கனவுகளும் புகுந்து கொண்டு விட்டன. இரண்டும் ஒரு கலவையாகி, கற்பனைக் குதிரை இப்படியும் அப்படியுமாக ஓடியதால், சிறிது தடுமாறத்தான் செய்தாள் சைலஜா.
படிக்கும் பருவத்தில் ஒருவரது வாழ்வில் எது முக்கியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதற்குப் பெற்றோர் உதவி மிகவும் அவசியம். எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பதில்லை. மக்கோ, புத்திசாலியோ, குடும்ப வாழ்வு மட்டும் எல்லாருக்கும் எப்படியோ அமைந்து விடுகின்றது.
வெங்கடேசன் ஒரு லட்சியவாதி. தன் மகளைப் பற்றிய பெருமை நிரம்ப உண்டு அவருக்கு. அவளுடைய சமர்த்தையும் புத்திசாலித்தனத்தையும் கண்டு பெரிதாக எதையோ சாதிக்கப் பிறந்தவள் என்று திடமாக நம்பினார்.
அலமுவும் தன் தாயும் போடும் சம்பிரதாயமான சட்ட திட்டங்களுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு, அவர்கள் மனம் நோகாதபடியும் அனுசரித்துக் கொண்டு வந்தார்.
நாளை ஜானகி குடும்பத்தினரின் விஜயத்தால் என்ன மாறுதல்கள் ஏற்படப் போகின்றனவோ, எப்படி அவற்றை சமாளிக்க வேண்டும் என்று சிந்தித்தபடி சாப்பிட்டு எழுந்தவர், படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, “காலம்பற ஸ்டேஷனுக்குப் போகச் சீக்கிரம் எழுந்திருக்க வேணும். நான் படுத்துக்கப் போகிறேன்,” என்று தலையைச் சாய்த்தவர், ஐந்தாவது நிமிடமே குறட்டையொலியுடன் தூங்கியும் போனார்.
சொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட செவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே செய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர் கொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா
கல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும் கள்ளுறும் கேச ஜானகி -இளையோனும் அய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட பொய்யான மாய மேனியில் -தளர்வாகி
புள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும் கொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும் வில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும் வள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….(33)
“எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில் வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….
நம் வல்லமை இதழின் தலைசிறந்த படைப்பாளரும், அபிமானியும் ஆன திருமிகு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வல்லமையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இசைக்கவியின் இதயம் என்ற பகுதியில் இவருடைய ஆகச்சிறந்த படைப்புகள் அனைத்தையும் காணலாம்.
இசைக்கவியாரின் பணிகள் மென்மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளோடும், நிறைவான ஆரோக்கியத்துடனும், அன்பான குடும்பத்தாருடனும் இனிமையாக வாழ எல்லாம் வல்ல எம் இறையை உளமாரப் பிரார்த்திக்கிறோம்.
“I speak to everyone in the same way, whether he is the garbage man or the president of the university.” -Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் ஒரு ஆத்மஞானி. சமத்துவத்தை எளிய சொற்களில், அதுவும் தனது பண்பே அதுதான் என்பதையும் இரு வரிகளில் கூறிவிட்டார். அவரது பெளதிக அறிவாற்றல், ஆய்வுத் தீர்மானங்கள் ஆகியவை உலகளவில் புகழப்பட்டாலும், அவற்றை புரிந்து கொண்டவர்கள் சொற்பம்.
விளையும் பயிர் முளையிலே என்பதற்கேற்பப் பள்ளியில் முதல் மாணவன் மட்டுமல்ல; 15 வயதிற்குள் கணக்குப்புலியாக கருதப்பட்டார். காதல் பரவசத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கும், மனைவி மிலெவா மெரிக் அவர்களுக்கும் திருமணத்துக்கு முன் பிறந்த பெண்குழந்தையைப் பற்றி தகவல் இல்லை. இந்த மட்டும் அவருடைய சேகரத்திலிருந்து 1980களில் தெரிய வந்தது. இதைக் கூறுவதின் காரணம், அவரும் சராசரி மனிதனாகத்தான் வாழ்ந்து வந்தார்.
தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் அவருக்கு ஐயமிருந்தது இல்லை. மிலெவாவுடன் இல்லறம் நீடிக்கவில்லை. விவாகரத்து; எல்ஸாவுடன் திருமணம். அப்போது மிலெவாவிடம், தனக்கு நோபல் கிடைத்தவுடன் அதில் ஒரு பங்கு அவளுக்குக் கொடுப்பதாக 1919இல் சொன்னார். 1922இல் அது கிடைத்தவுடன், தன் வாக்கைக் காப்பாற்றினார்.
ஆதவனின் அருள் அவருக்குக் கிட்டியது. 1919ஆம் வருட சூரிய கிரகணத்தை ஆராய்ந்த ஸர் ஆர்தர் எட்டிங்க்டன், ஐன்ஸ்டீனின் சிந்தனையில் எழுந்த விஞ்ஞானத் தீர்மானங்கள் இதனால் நிரூபிக்கப்பட்டது என்றார்.
மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.
மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல விளையாட்டு நல்ல உடற்பயிற்சி நல்ல கலைகளை வளர்த்துக் கொள்ளும் திறமை . என்று நல்லவைகளையே போதித்து அவைகளைப் பின்பற்றவைக்க வேண்டும் .
ஒரு குறிப்பிட்ட வயது வரை அரசியல், சினிமா போன்ற மாயவலைகளை அவர்கள் ஒதுக்கி சுய கட்டுப்பாட்டுடன் மனதை ஒருமைப் படுத்தி ஆரோக்கியமான குளியல் சுத்தமாக உடலைப் பேணுதல் பெரியவர்களிடம் மரியாதையாக நடத்தல் நம் பாரம்பரியத்தின் மூத்த இதிகாசங்கள் புராணங்கள் வேதங்கள் ஆகியவற்றில் இருக்கும் உன்னதமான அறிவுரைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி தற்போதைய விஞ்ஞானமே அந்தக் காலத்து மெய்ஞ்ஞானம் என்பதை விளக்கமாக அவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லி பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நற்குணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் நியம நிஷ்டைகள் ஆகியவற்றை போதிக்கும் வகையில் அவர்களின் பாடத் திட்டங்களை மாற்றவேண்டும் .
நம் பெற்றோர்கள் நம் தாய் நாடு நம் கலாசாரம் நம் தேசத்தின் பெருமை பற்றிய விளக்கங்களை எடுத்துச் சொல்லி நம் தேசத்துக்காக பாடு பட்ட பெரியோர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி நம் சுதந்திரத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும் வருங்காலத்தில் நம் நாடு எப்படி முன்னேற வேண்டும் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நாகரீகமான நாணயமான நேர்மையான தலைமுறைகளை உருவாக்கும் வண்ணம் நம் கல்வி இருக்க வேண்டும்.அப்ப்டிப்பட்ட கல்வித் தரத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இனிய ,வாழ்க்கைக்குத் தேவையான பல அறிவார்ந்த, செய்திகளை அறிந்து கொள்ள,நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள என்னும் உண்மையை அவர்களுக்கு மனதில் ஏற்படுத்தவேண்டும் என் சிறு வயதில் ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்.
“ தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
பாட சாலைக்கு போவென்று
சொன்னாள் உன் அன்னை
சிலை போல ஏன் அங்கு நின்றாய்
சிலை போல என் அங்கு நின்றாய்
நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
மலைவாழை அல்லவோ கல்வி
மலைவாழை அல்லவோ கல்வி
உன் வாயாற வாழ்த்துவாய்
போ என் புதல்வீ
என்கிற இந்தப் பாரதிதாசன் அவர்களின்
பாடலில் எவ்வளவு அழகாக அத்துணை நாட்கள் பெற்றோர் அருகிலேயே இருந்து விட்டு முன் பின் தெரியாத புதுச் சூழலில் பெற்றவர்களை விட்டு தனியே பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதையும்
கலங்கும் பிள்ளைகளுக்கு அதன் அவசியத்தையும் கல்வி என்பது மலை வாழைப் பழம்போல் அவ்வளவு இனிமையானது அது உள்ளத்துக்கும் உடலுக்கும் நன்மை செய்யும். சுவைக்க இனிமையாய் இருக்கும் என்று மிக எளிதாக கல்வி என்பதை விளக்குகிறது இந்தப் பாடல் . அது போல முதலில் பிள்ளைகளுக்கு கல்வி என்பது இனிமையானது நம் அறிவை வளர்த்துக்கொள்ளத் தேவையானது என்று இதமாக பதமாக உணர்த்தவேண்டும்
இந்த அடிப்படை உணர்த்துதலை செய்யாவிடில் பிள்ளைகளுக்கு வெறும் காகிதச் சுமையாகத்தான் கல்வி மனதில் பதியும் . அடிப்படை கல்வியே மனதில் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும்ம் கடினமான செயல் என்னு எண்ணத்தை விதைப்பதே கல்வி என்பது வெகு சுலபமானது இனிமையானது என்று உணர வைத்தலே அவர்களை நல்ல மாணவர்களாக உருவாக்கும் முறை.
கற்றலின் கேட்டல் நன்று என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது. அதன் பொருளை ஆராய்ந்தால்
“ செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை”
என்று வள்ளூவர் தலை சிறந்த செல்வமாக போற்றிய செல்வம் செவிச்செல்வம் ஏனென்றால் முதன் முதலில் மந்திர உபதேசங்கள், குருவின் மூலமாக தெளிவான குரலில் ,தெளிந்த நடையில் இலகுவான முறையில் படிப்படியாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதுதான் முதற்க் கல்வி முறை
அப்படி கற்பிக்கும் முறையில் ப்ரதானமாக மாணவர்கள் ஆசிரியர் ,அல்லது குரு சொல்லும் சொற்களின் ஒலியை மிகக் கவனமாக காதால் கேட்க வேண்டும் ஒலி என்பது மிகவும் ப்ரதானமான சாதனம். நம்முடைய ஒலி வாங்கியாகிய காது என்னும் உறுப்பு வாங்கும் ஒலியை மூளைக்கு அனுப்பி அந்த ஒலியின் பொருளை நமக்கு உணர்த்துகிறது. ஆகவே காதுகள் வாங்கும் ஒலி நேரிடையாக மூளைக்கு அனுப்பப்படுவதால் தாமாகவே ஒரு ஐம்பது சதவிகிதம் பதிந்து விடுகிறது.
மற்ற ஐம்பது சதவிகிதப் புரிதல் என்பது கவனம் சிதறாமல் ஒரு தியானம் போன்று குரு சொல்லுவதை மனதை சிதறவிடாமல் உன்னிப்பாக கவனித்து, மனதை அதில் செலுத்தி இன்னமும் சற்று ஆராய்ச்சி மனப்பன்மையுடன் மூளைக்கு வேலை கொடுத்து சுய சிந்தனைக்கு வேலை கொடுத்து மீண்டும் மீண்டும் குரு சொல்லியதை நினைவில் நிறுத்தி தொடர் சிந்தனைகளாக அதையே நினைத்து நினத்து அசைப்போடுதலின் மூலமாக இன்னும் சற்று விவரமாக ,ஆழ்மாக பொருள் புரியும்.
இங்கே நான் கூறியது மன ,அல்லது மூளையின் அசைபோடுதல் ஆனால் பொதுவாக அசைபோடும் மாடுகளைக் கவனித்தால் புரியும் அவைகள் அசைபோடும் போது கன்னத்தின் தசைகள் ஆடுதலின் காரணமாக காதுகளின் உள் உறுப்புகளும் அசியும் நிலை ஏற்படுகிறது அதனால் மாடுகள் உணவை அசை போடும் போதே எண்ணங்களையும் அசைபோடுகின்றன என்றே தோன்றுகிறது . அதனால்தான் மனிதருக்கும் எண்ணங்களை அசைபோடுதல் என்னும் சொல் வழக்கு உபயோகத்துக்கு வந்திருக்கிறது.
அல்லது சில நேரங்களில் ப்ரமை பிடித்தாற்போல் இருக்கும் மனக் குழப்பத்தை அடைந்த சிலரை தெளிய வைக்க லேசாக முதுகில் தட்டுதலோ,அல்லது பலமாக கன்னத்தில் அறைதலோ செய்கிறார்கள். இது அவர்களை அறைய வேண்டும் என்னும் எண்ணத்தில் அறையும் அறையல்ல அவர்களைத் தெளிய வைக்கும் முயற்சி.
ஏனென்றால் அப்ப்டி அறைதலின் மூலமாக ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளைக்கு சென்று செயலற்றிருந்த மூளயின் செயல் பாட்டுக்கு காரணமாக ஆகும் என்பது மருத்துவர்களின் கண்டு பிடிப்பு,அப்படி கன்னத்தில் அறையும் போது காதின் செவிப்பறைகளில் ஏற்படும் ஒலி அதிர்வுகள் மூளையில் பதிவாகின்றன.
ஆக மொத்தம் கற்றலின் கேட்டல் நன்று அல்லவா காட்டு மிருகங்கள் கூட வாசனையை நுகர்வதாலோ, அல்லது மற்ற மிருகங்கள் வரும் ஒலி அதிர்வுகளை காதால் கேட்கும் திறன் பெற்றிருப்பதால்தான் தங்களைக் காத்துக்கொள்ள முடிகிறது ஒரு முறை சிங்கத்தின் கர்ஜனை,அல்லது அதன் நடையால் ,ஓட்டத்தால் ஏற்படும் அதிர்வுகளின் ஒலியை காதில் வாங்கிவிட்ட மிருகங்கள் அடுத்த முறை மிக எளிதாக சிங்கத்தின் வருகையை அறிந்துவிடும் திறன் பெறுகின்றன. ஏனென்றால் காதால் கேட்ட ஒலிகள் மூளையில் மிக எளிதாகப் பதிகின்றன.
பேசும் கிளி என்று சொல்கிறோம் நாம் பேசுவதை அடிக்கடி காதால் கேட்கும் கிளிகள் அவைகளை அறியாமலே நாம் சொல்வதை திருப்பிச் சொல்லும் வல்லமை பெறுகின்றன . அதே போலத்தான் குழந்தையாகப் பிறந்த நமக்கு நம்முடைய தாயார் பேசும் மொழி காதால்,கேட்பதன் மூலமாகவே மனதில் பதிந்து நம் தாய்மொழியையே கற்கும் அளவுக்கு மூளைத்திறன் பழக்கப்படுகிறது. பொதுவாக ஊமைகளின் குழந்தைகளும் ஊமைகளாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம்,
ஏனென்றால் அங்கு ஒலிகள் எழுப்ப யாருமில்லாததுதான் முதற் காரணம் . அப்படிப் பிறந்த குழந்தைகளை ஒலிகள் கேட்குமிடத்தே வளரவிட்டு அவைகளுக்கு பேசும் சக்தியை மீட்டுத் தந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே காதுகள் மிக முக்கியமான கருவி கல்வி கற்க, குழந்தை முதன் முதலில் கருவாகி இரண்டு சென் டி மீட்டர் அளவில் இருக்கும் போதே அதன் இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது . அந்த இதயத்துடிப்பின் லப்டப் ஓசைதான் முதன் முதலாக ஒவ்வொரு ஜனனமும் கேட்கும் முதல் ஒலி.
அப்போதே கேட்க ஆரம்பித்துவிடுகிறது . முதன் முதலாக ஒரு குழந்தையின் இயக்கம் என்று பார்த்தால் காதால் கேட்பதுதான். அதன் பிறகுதான் மற்ற இயக்கங்கள் தொடர்கின்றன. அதனால்தான் கற்றலின் கேட்டல் நன்று ஒலிதான் முதலில் மனிதனின் மொழிக்கே வழி வகுத்தது’
தாயின் கர்பத்திலிருக்கும்போதே தாயின் தாலாட்டையும் , கேட்கும் திறன் கொண்டது குழந்தை, மஹாபாரதத்தில் அர்ஜுனன் மகன் அபிமன்யூ தாயின் கர்பத்திலிருக்கும் போதே கிருஷ்ணனால் விளக்கப்பட்ட சக்கரவியூகத்தின் நுணுக்கத்தை கேட்டு அறிந்தான் என்கின்றனர்.
முதன் முதலில் ஒலியின் மூலமாகத்தான் மனிதனும் ,மிருகங்களும் தங்களின் இயல்பையும், உணவுதேடும் முறையையும் கற்றன .ஒலி என்பதே வாழ்க்கைக்கு தேவையான ஜீவாதாரம் . ஒலியும் ஒளியும் என்கிறார்களே .அதில் கூட ஒலிக்குதான் முதன் முதல் மரியாதை வானொலி வந்து பல காலம் ஆகிய பின்னர்தான் தொலைக்காட்சி வந்திருக்கிறது ஒலியின் ஸ்ருதி பேதம் தான் எண்ணங்களை வெளிப்படுத்தும் முறையாக அமைந்தது.
கத்திப் பேசும் பலருக்கு நடுவே அமைதியாகப் பேசும் நபரை நம் கவனிக்கிறோம் . அமைதியாக சொல்லும் போது கவனிக்கப் படாத போதுதான் உரக்க கத்திப் பேசி கவனத்தை ஈர்க்க முயல்கிறோம். ஆகவே நம் கவனம் என்பது எதால் ஈர்க்கப்படுகிறதோ அங்கே நம் மூளை உற்றுக் கவனிக்க ஆரம்பிக்கிறது. மூளை கவனிக்க ஆரம்பித்தால்தான் ஒருமுகப்படுதல் சாத்தியமாகிறது. ஒருமுகப்படுதல் சாத்தியப்படும்போதுதான் உள்வாங்க முடிகிறது
உள்வாங்கினால்தான் புரிகிறது, புரிந்தால்தான் லயிப்பு வருகிறது லயிப்பு வந்தால் இன்னும் அதிகமாகப் புரிகிறது. அதிகமாப் புரிந்து கொண்டால்தான் கல்வி மேம்படுகிறது. கல்வி என்பது வாங்கிக் கொண்டதை புரிந்து கொள்ளாமலே அப்படியே வாந்தி எடுத்து அதிக மதிப்பெண் பெறுவதல்ல, புரிந்து கொண்டு நம்முடைய எண்ணங்களையும் சேர்த்து ,நம் ஆராய்ச்சியின் விளைவுகளையும் சேர்த்து அளிக்கும்போதுதான் மதிப்பெண் அதிகம் பெற்ற மாணாக்கரைக் காட்டிலும் அதிகமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடிகிறது.
பல முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதன் பிறகு முன்னேறாமல் போவதும் இந்தப் புரிதல் விகிதாசார அடிப்படையிலேதான் விளைகிறது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியான தருணத்திலே ஏற்கெனவே முதல்; மதிப்பெண் பெற்ற மாணவர்களை பத்திரிகைகள் பாராட்டிய மாணவர்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எழுதும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே மேலும் முன்னேறி யிருக்கிறார்கள் என்னும் விளைவுகளை.
ஆகவே கல்வி என்றாலே புரிந்து கொள்ளல் என்பது மறுக்க முடியாத உண்மை .
அந்தப் புரிந்து கொள்ளல் என்னும் தன்மையை ஆராய்ந்து அடிப்படைக் கல்வியை வடிவமைத்தாலே கல்வி முறையை மாற்றினாலே கல்வியும் மேம்படும் ,மாணவர்களும் மேம்படுவர். கல்வியின் தரம் குறைவதற்கு மிக முக்கியமான காரணம் பாடத் திட்டங்கள் சரியாக வடிவமைக்கப் படாமை , தற்போது கல்வி பாட அமைப்பில் படிக்கும் பல செய்திகள் வாழ்க்கைக்கு என்றுமே தேவையில்லாதவை.
மற்றும் இனி வருங்காலத்தில் நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற பண்பாடு சம்பந்தமான செய்திகள், மற்ற நாடுகளின் வளர்ச்சி பற்றிய விவரங்கள்” நம் நாடு காண வேண்டிய வளர்ச்சி பற்றிய செய்திகள். விஞ்ஞான முன்னேற்றங்கள் நம்முடைய பழைய மரபுகள் சமபந்தமான செய்திகள். மரபுகளைக் காக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் செய்திகள்.போன்ற பல செய்திகளை அளிக்கலாம். அவற்றையெல்லாம் விடுத்து,
ஆபாசமான திரைப்படங்கள், வன்முறை கூடிய திரைப்படங்கள் மந்திரம் மாயம் செய்யும் தொலைக் காட்சித் தொடர்கள் ஆகியவைகளை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் அளித்தால் எப்படி ஒரு நல்ல தலைமுறை உருவாகும்? ஆகவே மாணவர்களுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் நல்ல செய்திகளை நல்ல ஞானத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை அவர்களும் கண்டு குழந்தைகளையும் காணவைக்கவேண்டும். ஒழுக்கம் போதிக்க வேண்டுமானால் போதிப்பவர் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் . ஆகவே நாமும் நல்ல விதத்தில் நம்மை மாற்றிக் கொண்டு நம் வருங்கால சந்ததிகளையும் நல்ல விதமாக வளர்த்தால் நம் நாடும் நம் கலாசாரமும் நம் பெருமையும் உயரும் என்பதில் ஐயமில்லை