கிரேசி மோகன்

”பாப்புவின்’’ இயக்கத்தில் ,எஸ்.பி.பியின் குரலில் ‘’தியாகய்யா’’ படத்தில் வரும் ‘’சீத்தம்மா மாயம்மா’’ காட்ஷியைக் கண்ட நெகிழ்ச்சியில் எழுதிய வெண்பா…

crazy1

”மாயம்மா சீத்தம்மா மாதேவி ஜானகித்
தாயம்மா, ராமனைத் தேடிடவைத் -தாயம்மா,
ஏனம்மா, உன்விழிக்(கு) ஏற்ற உவமானம்
மானம்மா, ஏனுனக்கு மான்’’….

’’நாணும்வில் கோதண்ட நாண்ராமன் கைதழுவ
நாணி வளைந்து நிமிர்ந்திடும், -ஜானகியின்
மெல்லிடைக்கு, கம்பரே, சொல்லிடையே சொக்கவைப்போய்,
வில்லிடை என்றெழுது வீர்’’….

crazy

’’ வளைத்தாள் புருவத்தை வைதேகி வில்லாய்
வளைத்தான் ரகு,சிவன் வில்லை – முளைத்த
முகச்சிகை கோதி முனிவன் குளிர்ந்தான்
இகத்தில் பரத்தை இணைத்து’’….

crazy2

’’எச்சரிக்கை ராமா’’ எனப்பாடி த்யாகய்யன்
உச்சரித்த தாரகத்தை ஓடவிட்டு, -நச்சரித்து
போவனமான் பின்னே பிடித்ததைத் தாருமென்ற
ராவண தொந்த ரவே’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.