”வியாழக்கிழமை பாபா’’….!
————————————————–

crazy
அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….

“உதிநுதல் சூடி, நதிகங்கை ஆடி(நீராடி)
சதிபதியாய் ஷீரடி சாயி, -அதிபதி,
பாபா வழிசென்று, பக்கிரிப் பிக்ஷையில்,
தீபா வளிகாண் தினம்”….

உதி-விபூதி, நுதல்-நெற்றி….

ஆடை கபினி அணிந்தடி யார்களின்
பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
மரம்நிழல் சாயி மகான்….

ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
ஷீரடி மாயி சிரிப்பு….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *