”உந்தினர், ஈரேழ் உலகளந்த உத்தமர்,
குந்தி மகனை குருநிலத்தில்: -சந்திர
சூரியன்போல் ஜோதியென்று சொல்லிய ஸ்ரீவில்லி
நாரியின் பாடல்(திருப்பாவை) நலம்’’…..கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
படக்கவிதைப் போட்டி (93)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
-
2017………
வேதா இலங்காதிலகம்
வலிமையாய் விரியட்டும்
மெலியார் வலியவராகட்டும்
மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.
பொலியட்டும் சிறப்புகள்
பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்
நலிவுகள் ஒழியட்டும்
வலிவுடை சான்றிதழ்கள்
பொலிவுடை தமிழ்
மலிவற்ற உயர்ச்சியாய்
சலிக்காது சேர்ந்தது.
சிலிர்க்கும் நிறைவிது.
சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.
அலட்சியங்கள் தாண்டி
அவமானங்கள் நீராக்கி
தவமெனும் வாழ்வு
அவமின்றிச் சித்திக்கட்டும்.
புவனம் சிறக்க
புத்தாண்டு மலரட்டும்.
-
நலம் .. நலமறிய ஆவல் … (37)
நிர்மலா ராகவன்
பூனைகள் பலவிதம்
பூனையே கடவுள்
பண்டைய எகிப்தில் பூனை வடிவிலிருந்த கடவுளைத் தொழுதுவந்தார்கள். ஏனெனில், உயிருக்கு அபாயம் விளைவிக்கும் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களைக் கொல்லும் ஆற்றல் பூனைக்கு இருந்தது. அதன்பின், ஒரு குடும்பத்தின் மக்கள் பெருக்கம், அமைதி ஆகியவைகளுக்கான தெய்வமாக மாறியது.
இப்போது எல்லா நாடுகளிலும், வீட்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக பூனைகள் இருந்து வருகின்றன.
மனிதர்களைப்போலவே பிராணிகளுக்கும் உணர்வுகள், திறமைகள் எல்லாம் இருக்கின்றன. அது புரியாதவர்கள்தாம், `எனக்கு நாய், பூனையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. சூ, சூன்னு விரட்டுவேன்!’ என்கிறார்கள்.
பூனைகள் மக்கு!
முன்பொருமுறை ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கேலிப்படம் பார்த்தேன். `நில், படு, கைகுலுக்கு!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும் ஒரு பூனை எதுவும் புரியாது, அப்படியே உட்கார்ந்திருப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. இறுதியில், `சமர்த்துப் பூனை!’ என்று பாராட்டுவார் கட்டளையிட்டவர். அப்போது வேடிக்கையாக இருந்தது.
ஆனால், நாய்களைப்போல் பூனைகளுக்கு எதுவும் புரியாது, மனிதர்கள் சொன்ன சொல் கேட்டு நடக்காது என்ற கருத்து எவ்வளவு தவறு என்று பூனைகளுடன் நெருங்கிப் பழகியபின் புரிகிறது.
பூனைக்குட்டிகளின் வரவு
ஒரு தாய்ப்பூனை வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பிரசவிக்கும். ஒரே சமயத்தில் மூன்று குட்டிகளை ஈனும்போது, அவைகளைப் பார்த்துக்கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், எங்காவது கொண்டு விட்டுவிடும்.
அப்படி எங்கள் வீட்டுக்கு ஐந்து முறை பூனைக்குட்டிகள் வந்திருக்கின்றன.
பாவம் வரும்!
எங்கள் பாட்டி வீட்டில் பூனைகள் சர்வசாதாரணமாக நடக்கும். சிறு வயதில், `பூனைகளைத் தொடாதே! அதன் ஒரு ரோமம் உதிர்ந்தால், ஏழேழு ஜன்மங்களிலும் துயர்ப்படுவாய்!’ என்று பயமுறுத்தி இருந்தார்கள். அத்துடன், `பூனை பிராண்டிவிடும்!’ என்ற மிரட்டல் வேறு. அதனால், பூனைகளைப் பார்த்தாலும் பாராததுபோல் நடந்துவிடுவேன்.
முதலாம் குட்டி
பதின்மூன்று வருடங்களுக்குமுன் நடந்த சம்பவம் அது. எங்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து ஒரு பூனைக்குட்டியின் மெல்லிய குரல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. `ஐந்து நாட்களே ஆன குட்டி!’ என்றார் மிருக வைத்தியர். அக்குட்டியின் உடல் ரோமம் இல்லாது வழவழவென்று இருந்தது. `யாரோ அதைக் கொல்ல முயற்சித்து, சுடுநீரை அதன்மேல் கொட்டியிருக்கவேண்டும்!’ என்று அவர் மேலும் கூற, அதிர்ந்தோம்.
அந்தக் குட்டியின் வாயில் பாலில் தோய்த்த பஞ்சைப் பிழிய ஒருவர், மடியில் போட்டுக் கொஞ்ச சிறுவர்கள் என்று சிலர் எங்கள் குடும்பத்தில் இருந்ததால், எனக்கு வேடிக்கை பார்க்கும் வேலைதான் கிட்டியது. ஆனால், அடிக்கடி இடியோசை கேட்கும்போதெல்லாம் குட்டி (அந்தப் பெயரே நிலைத்துவிட்டது) என் மடியில் வந்து உட்கார்ந்துகொள்ளும். நான் விறைத்துப்போவேன்.
அதைத் தொடப் பிடிக்காது, `யாராவது இதைக் கீழே போடுங்களேன்!’ என்று கத்துவேன்.
`பாவம்! அது உன்னை அம்மாவா நினைக்கிறதும்மா. விரட்டாதே!’ என்று என் மகள் கூற, சற்று இளகினேன்.
அதுவரைக்கும் சில பூனைக்குட்டிகள் எங்கள் வீட்டில் கொண்டுவிடப்பட்டிருந்தாலும், அவைகளை வீட்டில் வளர்க்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்ததால், மார்க்கெட்டில் கொண்டு விட்டுவிடுவோம்.
இந்தக் குட்டிக்கோ சரியாக நடக்கத் தெரியவில்லை. தடுமாறி விழுந்துகொண்டே இருந்தது. மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. `நாமே கவனிக்காவிட்டால், என்ன பண்ணும், பாவம்!’ என்று, அது தங்கலாம் என்று பெரிய மனது பண்ணினேன்.
காலையில் என் அறைக்கு வெளியே குட்டி கத்தியதால், ஆகாரம் அளிக்கும் பொறுப்பு என்னுடையதாயிற்று. `உள்ளே வாயேன்!’ என்று நான் அழைக்கும்வரை கதவுக்கு வெளியே காத்து நிற்கும்.
எல்லாருடைய அன்புக்கும் உகந்ததாக ஆன குட்டி, எட்டு மாதங்களுக்குப்பின் காணாமல் போயிற்று. அதன் உடல்நிலை சீராக ஆகாததால், எங்காவது தனியாகப் போய் இறந்திருக்கும்.
அந்த துக்கம் மறைய சில மாதங்களாயின.
அம்மா பூனை
சில வருடங்களுக்குப் பிறகு வெள்ளையும் கறுப்புமான ஒரு தாய்ப்பூனை தன் குட்டி ஒன்றுடன் வாசலில் நின்று எதையோ வேண்டுவதுபோலக் குரல் எழுப்பியது. `பசி!’ என்று அதை உள்ளே அழைத்து உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தங்கிவிட்டது. ஆனால் வீட்டுக்குள் வரக்கூடாது என்ற தடையை மீறவேயில்லை. நான் தமிழில் என்ன பேசினாலும் உடனே புரிந்துகொண்டது.
`தட்டில் தண்ணி விடறேன். நகர்ந்துக்கோ,’ என்றால் விலகும். `இப்போ குடி!’ என்று நான் சொல்லும்வரை ஒதுங்கி நிற்கும்.
சில நாட்களுக்குப்பின் அதன் குட்டி காணாமல் போய்விட, தாய் துடிதுடித்தது. என் காலைச் சுற்றி சுற்றி வந்தது. அதன் வேதனை எனக்குப் புரிய, அருமையாகத் தடவிக்கொடுத்தேன். இப்போது பயமோ, அருவருப்போ இருக்கவில்லை.
மாஞ்சா
அதே சமயத்தில் இன்னொரு குட்டி பின்பக்கத்திலிருந்த கதவின்வழி எட்டிப்பார்த்து, தீனமான குரலில் கத்தியது. குழந்தைகள் குதூகலமாக அதைத் தேட, பயந்துபோய் எங்கோ ஒளிந்துகொண்டது. `வேண்டாம்!’ என்று பெற்ற தாயே எங்கோ கொண்டுவிட்டபிறகு, யாரை நம்புவது!
அம்மா பூனையிடம், `எங்கே அந்த இஞ்சி நிறக் குட்டி?’ என்று கேட்க, அது புதரிடையே ஒளிந்திருந்ததைக் காட்டிக்கொடுத்தது.
இருந்தாலும் பெரிய பூனைக்கு அந்தப் புதிய வரவு பிடிக்கவில்லை. தனக்கு ஆகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். `ஸ்..’ என்று அதனருகில் போய் சீறும். குட்டி நடுங்கும்.
இந்தப் புதிய குட்டி எல்லாரிடமும் மிகவும் அன்பாக இருந்தது. அதன் அன்பைக் கண்ணிலேயே காட்டும். என் பேரன் உடலெல்லாம் ஏறி விளையாடும். `ரொம்பத்தான் செல்லம் கொஞ்சுகிறது! மாஞ்சா!’ (MANJA – மலாய் மொழியில் செல்லம்) என நாங்கள் கேலி செய்ததால், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
ஓயாத கர்ப்பம்
குட்டிகள் பிறந்த உடனே தாய்ப்பூனை மீண்டும் கருவுற்றுவிடும். மூன்றே மாதங்களில் மற்றொரு பிரசவம்.
அம்மா பூனையும் இந்த விதிக்கு விலக்கில்லை.பருத்த வயிற்றுடன் அது தள்ளாடியபடி நடக்க, மாஞ்சா அதைத் துரத்தியது!
மூன்று குட்டிகள்! அவை தாய்ப்பால் குடிக்கும்போது, மாஞ்சாவும் குடிக்க ஆரம்பித்தது. தடுக்காமல், அம்மா பூனை அதைத் தான் பெற்றதாகவே ஏற்று, அருமையாக நக்கும். ஒரு குட்டியைத் தானே எங்கோ கொண்டுபோய்விட, மிஞ்சியிருந்த இரண்டில் ஒன்று காரில் நசுங்கி இறந்தது. மிஞ்சியிருந்த `கறுப்புக்குட்டி’க்கு சுவற்றின்மேல் தாவுவது, ஒரு மெல்லிய சுவற்றின்மீது நடப்பது போன்ற வித்தைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மாஞ்சா விரும்பி ஏற்றுக்கொண்டது.
மீண்டும் கருவுற்ற அம்மா பூனை எங்கோ போய் இறந்துவிட, மாஞ்சாதான் மிகவும் துக்கப்பட்டது. இரண்டு முறை, பெற்ற தாயையும், பாலூட்டி வளர்த்த தாயையும் இழந்த துயரம் அதற்கு. சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்தது. ரொம்ப இளைத்தது. உடல் உபாதைகள் வர ஆரம்பித்தன.
ஆதரவாக ஒரு அண்ணன் இருந்ததால், கறுப்புக்குட்டிக்குத் தாயின் இழப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கோ சாப்பிடுவதுதான் உலகமே. தன் பங்கை அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, மாஞ்சாவின் தட்டுக்குப் போகும். அதைத் தவிர்க்க, அதைக் குண்டுக்கட்டாக வீட்டுக்குள் தூக்கிப்போய், கதவைச் சாத்திவிடுவோம். வெளியே மாஞ்சா சாவதானமாகச் சாப்பிடும்.
ஒரு முறை, `மாஞ்சா பாவம், குட்டி! அதைச் சாப்பிட விடு! நீதான் சாப்பிட்டாச்சே!’ என்று நான் சொல்ல, தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதுபோல வீட்டுக்குள் போய் உட்கார்ந்துகொண்டது!
சங்கீதம்
சாயந்திர வேளைகளில் பூனைகளுக்கு ஆகாரம் போட்டுவிட்டு, என் பேத்தி என்னிடம் இசை கற்க வருவாள். அப்போது இரண்டு பூனைகளும் உள்ளே வரும்.
`எப்படி ஒலி எழும்புகிறது?’ என்று ஸ்ருதிப்பெட்டியை கடித்துப் பார்த்து, திட்டு வாங்கியது மாஞ்சா! `அடிப்பேன்!’ என்று நான் ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அதற்குப்பின், விட்டுவிட்டது.
இசைஞானமுள்ள பூனைக்குட்டி
ஒரு நாள், நான் எங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நடந்துகொண்டிருந்தேன். அப்போது, அங்கு ஒரு மேசைமேல் கண்ணை மூடியபடி படுத்துக்கொண்டிருந்த கறுப்புக்குட்டி ஒரு நீண்ட மூச்சை இழுத்து, `ஸா’ என்ற ஸ்வரத்தை நீண்ட நேரம் மூச்சுப்பிடித்துப் பாடியது!
எனக்கு மகிழ்ச்சியும், ஆனந்தமும் பொங்கின. நான் யாருக்கோ கற்றுக்கொடுப்பதை இந்தப் பூனைக்குட்டி சரியாகக் கற்றுக்கொண்டுவிட்டதே!
`அட சமர்த்து! இன்னொரு தடவை பாடு!’ என்றதும், மிகக் குறுகிய காலம் அதையே பாடிவிட்டு, தூங்கிவிட்டது!
அதன்பின், சில நாட்கள் நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாடிக் காட்டி, `எங்கே பாடு! சமத்து!’ என்று கொஞ்ச, திரும்ப இசைக்கும். உச்சரிப்பு சீனர்களுடையதைப்போல. அதாவது, `கா’ என்றால், `ங்கா!’ என்று கேட்கும். `மா’ என்ற ஸ்வரம் `ம்வா’ என்று கேட்கும். ஸ்ருதி சுத்தமாகப் பாடி, கேட்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். என்னைத் தவிர வேறு யார் பாடச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாது இருந்துவிடும்.
குரு வந்தனம்
ஒரு முறை, கறுப்புக்குட்டி தன் நெற்றியால் என் காலைத் தேய்த்து, அதன்பின் நக்கியது.
`என்ன பண்றது?’ என்று நான் அதிசயப்பட்டபோது, பேத்தி விளக்கினாள்: `பாடி முடிந்ததும் நான் உன் காலைத் தொட்டு வணங்குவதுபோல் இதுவும் செய்கிறது!’தீனிப்போத்தி
தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் பேச்சும், சிரிப்புமாகப் பலகாரங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்க, `தீனிப்போத்தி’யான (பாலக்காட்டு பிராமணர்களிடம் நான் கற்ற சொல்) கறுப்புக்குட்டி, அங்கேயே வட்டமிட்டது.
`நீ பாடு, மொதல்லே!’ என்று நான் ஒவ்வொரு ஸ்வரமாகப் பாட, அதுவும் உணவு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியில் பாடிக் காட்ட, விருந்தினர் பிரமித்தார்கள். பரிசாக, அன்று சாப்பாட்டு நேரத்திற்கு முன்னரே குட்டிக்கு உணவு.
யாரோ மாஞ்சாவைக் காட்டி, `இது பாடாதா?’ என்று கேட்டார்கள்.
விட்டுக்கொடுக்காமல், `இது வேட்டைத்திறன் மிக்கது!’ என்று பதிலளித்தேன்.
பல்லி, கரப்பான் பூச்சி, தவளை, வெட்டுக்கிளி, போன்றவைகளை எங்கள் காலணிமேல் கொண்டுவந்து அர்ப்பணித்திருக்கிறது மாஞ்சா — `நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கிறீர்கள். பிரதிபலனாக, நானும் என்னால் முடிந்ததை உங்களுக்கு அளிக்கிறேன்!’ என்பதுபோல்.
ஒரு முறை, இரண்டு பூனைகளும் என் காலணியைச் சுற்றி உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. அருகில் போய் பார்த்தால், ஓரடி நீளத்தில் உயிருள்ள பாம்பு! (அருகே இருந்த செம்பனைத் தோட்டங்களை நாசம் செய்யும் எலிகளைக் கொல்ல பாம்புகளை வளர்ப்பார்கள்).
`நான் பாம்பெல்லாம் சாப்பிடுவதில்லை. தாங்க்ஸ், மாஞ்சா!’ என்றேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு இறந்ததும், அதை வீட்டுக்கு வெளியே எறியலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். மாஞ்சாவுக்கு அது புரியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
துடைப்பத்துடன் வந்தபோது, பாம்பைக் காணோம். தேடியபின், மாஞ்சா அதைக் காரின் அடியில் ஒளித்து வைத்திருந்தது தெரியவந்தது. அரைமணி நேரம் அதனுடன் போராடி, அந்தப் பாம்பை வெளியே எடுத்து, வாசலில் தூக்கிப்போட்டோம். மீண்டும் மீண்டும் தூக்கிக்கொண்டு வந்தது!
இன்னொரு முறை ஒரு குருவிக் குஞ்சைக் கொண்டுவந்தது.
`அதைத் தூக்கி எறியணும். வீட்டு வாசலெல்லாம் இறகும், ரத்தக்களறியுமாக ஆகிவிடும்,’ என்று நாங்கள் பேசியபடி உள்ளே போய்விட்டு வந்தபோது, குருவியைக் காணோம்.
`GOOD BOY, MANJA!”
`எங்கே போட்டே, மாஞ்சா?’ என்று நைச்சியமாகக் கேட்டதும், ஒளித்த இடத்திலிருந்து கொண்டு வந்து காட்டியது!
பெரியவர்களால் ஏமாற்றப்படும் குழந்தைக்கும், இந்தப் பூனைக்கும் என்ன வித்தியாசம்?
பூனைகளால் விளையும் நன்மைகள்
பூனைகள் ரத்த அழுத்தத்தையும், ஒவ்வாமையையும் குறைக்கும். ஒரு முறை பூனையைத் தடவினாலே நம் மனது அமைதிப்பட்டுவிடும். மாரடைப்பு வரும் சாத்தியக்கூறும் குறைவுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதெல்லாம் நானும் அனுபவத்தில் கண்ட உண்மை.
தொடருவோம்
-
மார்கழி மணாளன் 18
க. பாலசுப்பிரமணியன்
திருச்செம்பொன் செய் கோயில் -அருள்மிகு ஹேமரங்கப் பெருமாள் திருக்கோவில்
கயிலையைச் சுமந்து Sவரம்பெற்ற இராவணனை
கைவீணை கலங்கிடவே காம்போதி இசைத்தவனை
கையேந்திக் கபடத்தால் கற்புடையாள் கவர்ந்தவனை
கைகொண்ட வில்லாலே களம்கொண்ட அருளாளா !
அறமிழந்த அரசனையும் மனம்திருந்த அழைத்தவனே
அருளிழந்த அரக்கனையே இலக்காக்கி கொன்றபாவம்
அகம்விட்டு புறம்விட்டு நிலம்விட்டுச் சென்றிடவே
அகம்விட்ட முனிவருக்கே மனமுவந்து பொன்தந்தாய் !
செம்பொன் பசுவொன்றைத் தானமாய் பெற்றவனும்
வந்தவினை அகன்றிடவே பெற்றசெல்வம் பெருகிடவே
செங்கமல நாயகியின் சிந்தைநிறைச் சிங்காரனைச்
செம்பொன் சிலையாக்கிக் கோயில் கொண்டான் !
மலையான துன்பம் மடைநீராய் வந்தாலும்
கலையாத நினைவோடு கணநேரம் நினைத்தாலே
நிலையாது போகும் நின்னருளாலே நீர்வண்ணா !
சிலையாக இருந்தாலும் சிந்தையில் நிறைந்தவனே !
பொன்னான மேனியிலே பொன்னாடை படைத்தாலும்
பொன்னான மனமறியாப் பொல்லாத நெஞ்சங்கள்
புண்ணாகித் துடித்தாலும் நல்லோரின் நலம்நாடும்
நாரணனே ! நின்னடிகள் நினைத்தாலே பொன்னாமே !
பலியாடு போன்றென்னை கலிதீர்க்க வளர்த்தாயோ
நிலையாத செல்வத்தின் நிழலாகப் படைத்தாயோ
மதியென்றும் புதிர்போட்டுச் சதிராட, பரந்தாமா !
கதியென்று வந்தேனே கரைசேர அருள்வாயோ?
-
கற்றல் ஒரு ஆற்றல் -59
க. பாலசுப்பிரமணியன்
கற்றலும் வீட்டுச் சூழ்நிலைகளும் (7)
வீட்டுச் சூழ்நிலைகள் எவ்வாறு குழந்தைகளுடைய மனநிலைகளையும் அவர்களுடைய கற்றலின் திறன்களையும் முறைகளையும் பாதிக்கின்றன என்று நாம் பார்த்து வருகின்றோம். பல நேரங்களில் பெரியவர்களுக்குப் புலப்படாத சிறிய நிகழ்ச்சிகள், வார்த்தைப் பரிமாற்றங்கள் சிறார்களின் மனத்தில் வியத்தகு பாதிப்புக்களையும் அதனால் அவர்களுடைய சிந்தனை மற்றும் வாழ்க்கைப் போக்குக்களையும் மாற்றியதற்கான முன்னுதாரணங்கள் நமக்கு நித்தம் கிடைக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் கணிதத் தேர்வுக்கு முந்திய தினம் ஒரு மாணவனின் தாயார் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக இறந்து விடுகின்றார். அதனால் அந்த மாணவன் அந்தத் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை. மறுதினம் அவர்கள் கண்ணீருடன் என்னைச்சந்தித்தபோது “நான் IIT தேர்வில் நிச்சயமாகத் சார். ஆனால் இந்த கணிதத் தேர்வில் எழுத முடியாததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன் ” என்று துயரத்தோடு கூறினான். அவனை சமாதானப்படுத்தி “நீ மற்ற தேர்வுகளைச் சிறப்பாக எழுது. அதற்குப் பின் பார்க்கலாம் ” என்று தேறுதல் கூறி அனுப்ப அவன் மற்ற தேர்வுகளை சிறப்பாக எழுத, தேர்வின் அறிவுப்புகளுக்குப் பின் நடந்த தனித்தேர்வில், கணிதத் தேர்வில் மீண்டும் எழுதி நூறு விழுக்காடு மார்க்குகள் பெற, அவனுடைய தேர்வுமுடிவை தனியாக முன்னிலைப் படுத்தி வெளியிட அவன் அதன் காரணமாக IIT யில் சேர்ந்து படித்தான்.
கற்றலில் சிறப்பாக இருந்தாலும் சில நேரங்களில் மாணவர்களுக்கு நோய் வாய்ப்படுவதாலோ, அல்லது குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாகவோ பாதிப்புகள் ஏற்படும் பொழுது அதற்க்கு குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் உதவியாக இருந்து வழிநடத்திச் செல்லுதல் அவசியமாகின்றது.
அதே போல மிகச்சிறப்பாக பள்ளியிலே பத்தாம் படித்துக்கொண்டிருந்த மாணவனின் மதிப்பெண்களும் கல்வியைப் பற்றிய கவனமும் தொடர்ந்து பாதிக்கப் பட்டதை கண்டு கவலைகொண்ட பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த பொழுது, தாயை இழந்து நின்ற அந்த மாணவனின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன் மறு திருமணம் செய்து கொண்டு புதிய உறவு வீடுதேடி வந்திருக்கும் நிலையில் அந்த நிர்பந்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவனின் மனம் “திக்குத் தெரியாத காட்டில் ” இருப்பது போன்று உணர்ந்து நிலை மறந்தது.
இதுபோன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நித்தம் வீட்டிலேயே குடிக்கின்ற தந்தை, சூதாட்டங்களில் சம்பளங்களை இழந்து ஊர் முழுவதும் கடன் வாங்கிய பெற்றோர்கள், எப்பொழுதும் மற்ற குடும்பத்தினாரோடு தங்களை போட்டியிட்டு தேவைக்கு அதிகமான வாழ்க்கைகளோடு போராடும் குடும்பங்கள், பொய்மை மற்றும் லஞ்சம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், வன்முறையாலேயே தங்களுடைய சோதனைகளுக்கும் வெற்றிப்பாதைகளுக்கும் வழிதேடும் பெரியவர்கள் உள்ள இல்லங்கள் போன்றவற்றில் கற்றலுக்கான ஏதுவான சூழ்நிலைகள் இருக்க மிகக் குறைவான வாய்ப்புகளே உண்டு.
சரியாகப் படிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்காத தந்தை தன் மகனிடம் “உன்னை இந்த வருஷம் பாஸ் பண்ண வைக்க யார் யார் காலிலேயெல்லாம் விழுந்தேன் தெரியுமா” என்று தன் மகனுக்குத் தன்னுடைய அதிகாரப் போக்கையும் செல்வச் சிறப்பையும் முன்னுதாரணம் காட்டும் பொழுது அந்த மாணவனின் வாழ்க்கைத் தோல்விக்கான அடிக்கல்கள் நாட்டப் படுகின்றன. அதே போன்று “இந்தப் பள்ளியிலே பொதுவாக உன்னுடைய மதிப்பெண்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எல்லாம் நான் செலவழித்த பணம் பேசியதாக்கும்” என்று தற்பெருமை செய்து கொள்ளும் தந்தை சில நேங்களில் உண்மை விளம்பியாக இருந்தாலும் கூட அது அந்த மாணவனின் சிந்தனைச் சிறப்புக்கு ஒரு தடங்கலாக நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு
எவ்வாறு “இளமையில் வறுமை கொடிது ” என்ற கருத்துக்கேற்ப, வறுமை கல்வியின் முன்னேற்றத்திற்கும் வளமைக்கும் ஒரு தடைக்கல்லாக இருக்க வாய்ப்பிருக்கின்றதோ, அதே நேரத்தில் அந்த வறுமையே பெற்றோர்களின் நல்லெண்ணங்களாலும், தியாகங்களினாலும், நல்வழி காட்டுதலாலும் குழந்தைகளை வெற்றிப் படிகளில் ஏற்றிவிட உதவியாகவும் இருந்திருக்கின்றன. தெருவெளிச்சத்தில் படித்து நீதிபதிகளாகவும், சட்ட வல்லுனர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மேதைகளாகவும் உயர்ந்து சாதனை படைத்த மாணவர்களின் சரித்திரங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இந்த சரித்திர மேடைகளில் நாம் பெற்றோர்களின் மற்றும் வீட்டு உறவினர்களின் முக்கிய பங்கையும் ஆக்கபூர்வமான செயல்களையும் காண முடிகின்றது. “இல்லாமையை இல்லாமல்” செய்ய அவர்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குடையவை!
அதே போல் நல்ல செல்வச் சூழ்நிலைகளில் வளர்ந்து தகாத வீட்டுச்சூழ்நிலைகளினால் வாழ்க்கையில் நற்பண்புகளை இழந்து தோல்வியைத் தழுவிய மாணவர்களைக் கண்டு நாம் துயரமும் அடைகின்றோம். சில நேரங்களில் பெற்றோர்கள் “நான் சம்பாதிப்பதெல்லாம் அவனுக்காகத் தானே , சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே ” என்ற மேதாவித்தனமான போக்கை மேற்கொள்ளும் பொழுது அந்த மாணவச் செல்வங்களின் தேவைகள் தினசரி வளர்ந்து கொண்டே செல்ல , ஒரு நேரத்தில் தேவைக்கு “இல்லாமையால்” வாடும் அவர்கள் தவறான வழிகளை மேற்கொண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கெட்ட பெயரை வாங்கித்தருவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். சிறுவர்களிடம் தங்கள் தேவைகளை அறிந்து கொள்வதற்கும், அதை கட்டுப்படுத்திக்கொள்ளவும், சமநிலைப்படுத்திக் கொள்ளவும் பயிற்சி அளித்தல் மிக அவசியமானது. வளமான சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தவறல்ல. ஆனால் “விரலுக்கேற்ற வீக்கம்” என்ற பழமொழிக்கேற்ப “வயதுக்குத் தகுந்த அனுபவங்களை ” கொடுக்கும் பொழுது அவர்கள் மனநிலை சிறப்பாகி கற்றலின் சிறப்பும் அத்தோடு வெளிப்படுகின்றது.
குழந்தைகளை நல்வழிப் படுத்துதற்க்கான சிறப்புப் பயிற்சிகள் பெற்றோர்களுக்கு அளிக்கப்படவேண்டும். பள்ளிகளும் நிறுவனங்களும் இதை முன்னிலைப்படுத்திச் செய்தால் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
தொடரும்..
-
குறளின் கதிர்களாய்…(149)
–செண்பக ஜெகதீசன்
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை யுள்ளதாங் கேடு. (திருக்குறள் -889: உட்பகை)புதுக் கவிதையில்…
எள்ளின் பிளவளவு
மிகச் சிறிதளவே இருந்தாலும்
உட்பகை,
அரசையே அழிக்கவல்ல
கேடு அதில்
அதிக அளவில் நிறைந்திருக்கும்…!குறும்பாவில்…
உருவில் சிறிதாய் எள்பிளவுபோலிருந்தாலும்,
உட்பகையில் நிறைந்திருக்கும்
ஊறு செய்யும் கேடு…!மரபுக் கவிதையில்…
உருவில் சிறிய எள்ளதனின்
-உள்ளே யிருக்கும் பிளவதுபோல்
உருவம் சிறிதா யிருந்தாலும்
-உட்பகை யென்னும் பெருங்கேடு,
திருவே யுருவாம் மன்னருக்கும்
-தீங்கு செய்தே அழித்துவிடும்
திருட்டு குணத்தைப் பெருமளவில்
-தாங்கி யிருக்கும் அறிவீரே…!லிமரைக்கூ…
மிகச்சிறிது எள்ளின் பிளவு,
இவ்வளவிருக்கும் உட்பகையிலுமுண்டு அழிக்குங்கேடு
மிகவும் அதிகமாம் அளவு…!கிராமிய பாணியில்…
நல்லதில்ல நல்லதில்ல
உள்பகதான் நல்லதில்ல,
வாழ்க்கயில அரசாச்சியில
உள்பகதான் நல்லதில்ல…எள்ளுக்குள்ள இருக்குஞ்சின்ன
பௌவுபோலச் சின்னதாத்தான்
உள்பகயே இருந்தாலும்,
ஒலகத்தயே அழிக்கத்தக்க
கேடதுல நெறஞ்சிருக்கும்,
பெருமளவு நெறஞ்சிருக்கும்…அதால,
நல்லதில்ல நல்லதில்ல
உள்பகதான் நல்லதில்ல,
வாழ்க்கயில அரசாச்சியில
உள்பகதான் நல்லதில்ல…! -
படக்கவிதைப் போட்டி 92-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
வல்லமை வாசகர்கள் படைப்பாளர்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்!
இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்குரிய இப்படத்தை எடுத்திருக்கும் திரு. பிரவீண்குமார் பழனிசாமிக்கும், இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எம் நன்றி!
பறக்கும் காகிதங்களும் அதைநோக்கி நீண்டிருக்கும் பாவையவள் மலர்க்கரமும் நம் சிந்தனையையும் சிறகடித்துப் பறக்கவைக்கின்றன!
மானுட வாழ்க்கையில் கழிந்த ஒவ்வொரு நாளுமே கிழிந்த காகிதங்கள் தாமோ?
***
கவிஞர்களின் ஆக்கங்களைப் படித்துச் சுவைக்கும் தருணமிது!
”குழந்தையாய்ப் பிறந்ததும் சிசு அழிப்பு; தப்பிப்பிழைத்தாலோ வாழ்க்கை முழுவதும் அலைக்கழிப்பு. பிறரின் கனவுகள் சுமந்தே தன்னைத் தொலைக்கும் அவலப் பிழைப்பு! இதுதான் இன்றைய பெண்ணின் நிலை! எனினும், சோதனைகள் அனைத்தையும் தகர்த்துப் பெண்ணினம் படைக்கவேண்டும் சாதனை!” என்று அறிவுறுத்துகிறார் திரு. செல்வமாணிக்கம்.
வண்ணக் கனவுகள்
ஆயிரம் உனக்கு!
அத்தனையும் தொலைந்தது
யார் இதன் பொறுப்பு!
பெண் மகவு பிறந்ததும்
அழிப்பு!
தப்பிப் பிழைத்தால் அன்றாடம்
நீ பார்ப்பது அன்னை தந்தையின்
வெறுப்பு!
அன்றிலிருந்து இன்று வரை நீ
பார்த்ததெல்லாம் சமூகத்தின்
அலைக்கழிப்பு!
இருந்தும் பெண்ணே மனித
இனத்தை காத்திருப்பது உன்
சிறப்பு!
சிறுவயதில் பெற்றோரின் கனவுகளை
சுமந்தாய் !
திருமணம் ஆனவுடன் கணவனின்
கனவுகளைச் சுமந்தாய்!
பின்னொரு நாளினிலே பிள்ளைகளின் கனவுகளை
சேர்த்தே நீ சுமந்தாய்!
பெண்ணே நீ பொறுத்தது போதும்!
மற்றவர்கள் கனவுகளை சுமந்தது போதும்!
நன்று! நன்று!, காற்றில் இப்போது
விடுவதெல்லாம் மற்றவர்கள் கனவுகளா ?
மறந்து விட்ட உன் எண்ணக் கனவுகள் இனி வண்ணக் கணவுகள் ஆகட்டும்!
கனவுகள் நனவாக ஆண் குலம்
ஆதரவு காட்டட்டும்!
எதிர்ப்பவர்கள் எரிந்து சாம்பலாய் போகட்டும் !சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்
பறவையென பெண்கள் புகழ்
நிலைக்கட்டும்!***
”எண்ணத்தைச் சீராக்கித் திண்ணமொடு செயற்பட்டால் வண்ணம் பெறுமே வாழ்க்கை” என்று நானிலத்துக்கு நல்வார்த்தை நவிலும் வளியைக் காண்கிறோம் திரு. சுரேஜமீயின் கவிதையில்!
காற்று பேசியது…!
கண்ணில் தெரிவதில்லை
கையில் இருப்பதில்லை
ஊனில் இருப்பதனால்
ஊதி வெளியேற்றி
உன்னதம் கொள்கின்றாய்
உன்னை அறிகின்றேன்மண்ணில் பயணித்தே
மாண்புகள் கொண்டதனால்
புல்லும் செடிகொடியும்
புள்ளும் விலங்கினமும்
இன்னமும் வாழ்ந்திடவே
இன்பங்கள் சேர்க்கின்றேன்வண்ணங்கள் சேர்த்தீர்கள்
வண்ணம் சிதைகின்றேன்
வாழும் இனங்களுக்கு
வாய்ப்பாடு சொல்கின்றேன்
திண்ணம் கொள்ளுங்கள்
தீமை விலக்குங்கள்பேதம் எனக்கில்லை
வேதமும் கற்றதில்லை
விஞ்ஞானம் தொட்டதில்லை
மெய்ஞ்ஞானம் விட்டதில்லை
தொன்மையாய் இருப்பதனால்
தன்மையாய் இருக்கின்றேன்உட்செல் விரைவாக்கி
ஊதல் மெதுவாக்க
ஊனும் வளர்ந்திடுமே
நீளும் வருடங்களாய்
வாழ்வு ஒருமுறைதான்
வாழ்ந்து உணர்ந்திடுங்கள்மானுடம் உய்வுபெற
மாசுகள் தொய்வுபெற
மாநிலம் நன்மைபெற
மாந்தரும் வாழ்வுபெற
எண்ணங்கள் சீராக்கி
ஏற்றங்கள் செய்திடுங்கள்!சொன்னதைக் கேளுங்கள்
சொர்க்கத்தில் வாழ்ந்திடவே!!***
தன் எண்ணக் கனவுகளை வண்ண மாலைகட்டிப் பார்க்கும் இந்த வனிதையைக் கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை; அவள் ஆசைக் கனவுகளைத் துண்டாடாதீர்கள்! என்று சமூகத்தை இறைஞ்சுகின்றார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.
வண்ணக் கனவுகள்
இரவில் பூடக்கும் மலர் போல்
இராப் பகலாக தன் எண்ணங்களை
தொடுத்துப் பார்க்கிறாள்
வண்ண மலர் மாலையாககனவுகள் நினைவுகளாக
மலரும் நேரம்…
எண்ண மலர் மாலையை
துண்டுகளாக்கி விட்டார்கள் ..அறிவிலிகள்..இவளது வெற்றி இவர்களுக்கு வேதனை
தோல்வியை ச்ந்திக்க இயலாமையில்
இவளது எண்ணம் துண்டுகளாக பறக்கின்றனதுவண்டு விடுவாள் என நினைப்பு
துவள்வது இவள் உடலின் இயற்கை-ஆனால்
நாணலாக நிற்பது இவளின் இலக்கணம்கையில் ஏந்துகிறாள்
எண்ணக் கனவுகளின் வண்ணத் துகள்களை
மாலையாக தொடுக்கிறாள் மறுபடியும்சாதிக்கப் பிறந்தவள் இவள்
சரித்திரம் படைத்தவர்களின்
சந்ததியில் வந்தவள்ஈன்றவளும் இவள் வர்க்கமே
கற்பிக்கும் தெய்வமும் இவள் வடிவே
காவல் காக்கும் தெய்வமும் இவள் வடிவே
ஆதியும் அந்தமும் இவள் வடிவேபோற்றத் தெரியாதவர்கள்
தூற்றித் திரிய வேண்டாம்
தூற்றுபவனையும் மன்னித்து தன்னுள்
ஊற்றென பாயும் அன்பினால்
அணைக்கும் இவள் நிற்கிறாள்
ஏறு அழிஞல் மரமெனஇவளின் கனவுகளுக்கு
துணை போகாவிட்டாலும்
துண்டிக்க வேண்டாம்
தொலைவில் நின்றாவது வாழ்த்துங்கள்
இவளது எண்ணக் கனவுகளை***
”கேள்விகளால் வேள்விசெய்து, அதில் மடமையைக் கொளுத்தி, அறிவொளிபெற்று உலகாளவேண்டும் பெண்கள்!” என்று புத்தாண்டில் முத்தான வார்த்தை பகர்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.
புத்தாண்டு நாளதனில்
கலவைக் காகிதம் காற்றில் பறக்குது
கவலை மறந்தே மனம் வானில் சிறகடிக்குது
ஊதித் தள்ளிடும் காகிதம்
உன்மத்தமானது பிள்ளைமனம்
ஒவ்வொரு வண்ணமும்
ஒவ்வொரு எண்ணமாய்
எண்ணத்தின் வண்ணத்தில்
புதுஉலகு வரைந்திட
துடிக்குது கரங்கள்
மடிந்திடும் கூட்டமல்ல நாம்
கேள்விகளால் வேள்விகள் செய்வோம்
கன்னி மனமதில் கேள்வி ஞானம் ஊறிடும்
கண்ணில் தெரியும் கடமைகள் ஆயிரம்
தடைகளைத் தாண்டிட வேகம் கூடிடும்
தலை நிமிரவே மனம் தத்தித் தாவிடும்
புதுமைப் பெண்ணாய் புது உலகை ஆள
புத்தாண்டு நாளதனில்
வண்ணக் கனவுகளால்
பதியனிடட்டும் பாவையர் உலகு***
பிறக்குமுன்பே மரணப் படுகுழி தோண்டப்படுகின்றது பெண்டிருக்கு! படுகுழிகள் பலதாண்டிச் சாதனைப் படிக்கட்டில் அடி வைக்கத்தான் பெண்ணினம் செய்யும் பிரயத்தனம் எத்தனை எத்தனை! இனியேனும் பெண்களை வாழவிடுவோம்! பெண்மையைப் போற்றுவோம் என்று நல்லுரை சொல்லுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
பெண்மையைப் போற்றுவோம்…!
மாதவம் செய்து
மங்கையாய்ப் பிறக்குமுன்னே,
மலையாய் இடறும் வழித்தடைகள்
ஏராளம் ஏராளம்..கள்ளிப்பாலாய்
கொல்லும் நெல்லாய்
கொலை மாத்திரையாய்,
மாய்க்கும் தடைபல கடந்து
பிறக்கிறாள் பெண்ணாய்..பிறந்தது பெண்தானாவென
பெண்ணே
சலித்திடப் பிறந்து,
பாலைநிலப் பயிராய் வளர்ந்து
பருவத்தை எட்டுகிறாள்
பாதுகாப்பில்லா உலகில்..பல்லிளிப்பு
பலாத்கார மலைகளைத் தாண்டி
புகுந்திடும் மணவாழ்விலும்,
மலிந்து கிடக்கும்
மாற்றங்களும் ஏமாற்றங்களும்..பின்னுள்ள வாழ்வில்
பிள்ளைக்காக
பிறருக்காக என்ற ஓட்டத்தில்,
தன்னை மட்டும்
மறந்த
துறவுப் பயணம்..இத்தனையும் தாண்டி
இதற்கு மேலும்
இடர்களையும் கடந்து
நடந்துதான்
ஆணின் வெற்றிப் படிக்கட்டாகி
வெந்து போகிறாள்..இவளின்
சாதனைக்குமுன்
சரித்திரங்களெல்லாம்
சாதாரணம்தான்..பெண்மையைப் போற்றுவோம்
புது உலகம் காண்போம்…!***
பெண்ணுரிமைக்கு விண்ணதிரக் குரல் கொடுத்திருக்கும் கவிஞர்குழாத்துக்கு நன்றி!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது இனி…
ஊதிவிடு கவலைத் துகள்களை!
ஊக்கமுடன் எழுந்திரு
ஊகங்களால் எழுப்பும் சந்தேக
ஊனத்திலாழும் வஞ்சகரை
ஊதிவிடு துணிவுக்காற்றெனும்
ஊன்றுகோலால் விரட்டிவிடு!கவலை கிழியும் தாள்தான்
காற்றாய் ஓடும் துகள்தான்
காலம் ஓட்டும் நகல்தான்
காவல் தன்னம்பிக்கை பகல்தான்
காயம் மாற்றும் அகல்தான்!முழங்கால் குத்திட்டு
முட்டிமோதி அழுதால்
முதலுதவி யாவாரேது
முயற்சிவாய் கொண்டுதுயர்
முட்களை ஊதினால்
முடக்கும் கவலையேது!முழங்கால் குத்திட்டு அமர்ந்தால் வாழ்க்கை வெற்றியை வழங்காது. ’முயற்சி திருவினையாக்கும்’ என்பது வான்புகழ் வள்ளுவம். ஆதலால் முயற்சிவாய் கொண்டு துயரெனும் முட்களை ஊது; வெற்றி மலர்களைப் பறிக்க இனித் தடை ஏது? என்று பெண்ணுக்குத் துணிவூட்டும் வீரவரிகளைச் சுமந்துவரும் திருமிகு. நாகினி கருப்பசாமியின் கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகின்றது. கவிஞருக்கு என் கனிவான பாராட்டு!
-
பெருமாள் திருப் புகழ்….
தத்தத் தனதத்தத் தனதன
தத்தத் தனதத்தத் தனதன
தத்தத் தனதத்தத் தனதன-தனதான(முத்தைத் தருபத்தித் திருநகை மெட்டு)——————————————————————————————-
பெருமாள் திருப் புகழ்….
“பெற்றப் பிணிமுற்றப் பிணமென
பக்கத் தினில்சுற்றத் தினரழ
முற்றத் தினில்வைத்துக் கிரியைகள் -நிறைவேற
சத்தத் தொடுவொற்றைப் பறையெழ
பச்சைப் பனைமெத்தைத் துயிலுற
இட்டுச் செலும்பெற்றப் பயலுகள் -இடுகாடு
சிற்றப் பனகத்துப் புறமதில்
இக்கட்டு டல்கட்டுக் கதையென
புத்திக் கறிவித்தக் கிரிவளர் -ரமணேசர்
உற்றச் சுகமுற்றுச் சரணுற
பக்திப் புனலிட்டுப் பயமற
வெட்டிச் சமநிட்டைப் பொருளினை -அருள்வாயே
ஒற்றைக் கரம்வெற்ப்புக் கடிதனில்
வைத்துச் சுரர்கொட்டுத் துயரதில்
திக்கற் றுழல்மக்கட் குடிமகிழ் -முகிலோனே
கற்றைக் குழல்பற்றித், துருபதை
துட்டர்க் கரம்பட்டுச் சபைதனில்
நிற்கத் திரைபட்டுப் புடவைகள் -இடுவோனே
உற்றக் கலிதப்பச் சரணுற
உத்ரத் தினிலுச்சிச் சபரியில்
பெற்றுப் பதினெட்டுப் படிதனில் -விளையாட
விட்டுச் செலும்பித்தர்க் கொருகணம்
இச்சைத் தருபத்னிப் பெருமையை
உற்றத் திருவுற்றத் திரள்புய -பெருமாளே”….கிரேசி மோகன்….! -
இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 33
மீனாட்சி பாலகணேஷ்
நந்தின் கடமும் உடையாதோ!
ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாட்டுடைத்தலைவர்களாக விளங்கும் சிறு குழந்தைகளான முருகன், திருமால் ஆகியோரிடம் சிறுபெண்கள் தாம் கட்டும் மணல் வீட்டினைக் காலால் உதைத்து அழிக்கவேண்டா என முறையிடுவர். அவ்வாறு முறையிடுங்கால் அச்சிற்றிலை எப்பாடுபட்டு என்னவெல்லாம் வைத்துக் கட்டினோம் என்று நயம்படக்கூறும் ஒருபாடல் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் சிற்றில் பருவத்தில் காணப்படுகிறது.

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனும் இவ்வருமையான நூல் பொற்களந்தை எனும் ஊரினரான அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர இந்த முருகன் பேரில் இவர் ஒரு கலம்பகமும் பாடியுள்ளார். இவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவராக இருந்தாலும், கல்வியில் மிகச்சிறந்து விளங்கினார் என அறிகிறோம். அருமையான இப்பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்திலிருந்து நாம் காணப்போகும் இரு பாடல்களே இதற்குச் சாட்சியாகும்.தமது சிறுவீட்டினைக் காலால் எற்றி உதைத்து அழிக்கவரும் முருகப்பெருமானிடம் நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும் “எம் சிற்றிலைச் சிதைக்காதே,” எனும் பாடலிதுவாம்.
தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தைக்குப் பால்கொடுத்து நீராட்டி, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே!
சிறுமியர் ஒளிபொருந்திய குளிர்ச்சியான அழகான முத்துக்களை அரிசியாக வைத்துக்கொண்டு, அதில் இனிமையான தேனையும் வார்த்து உலையில் இட்டுப் பொய்தல் விளையாட்டு விளையாடுகிறார்கள்; அதாவது சோறு சமைப்பது போலப் பாவனை செய்து விளையாடுகிறார்கள். இது உண்மைச் சோறு இல்லையானதால் பொய்தல் விளையாட்டு எனப்படும். “இந்த உலையைக் கவிழ்த்து விடாதே முருகா!” எங்கின்றாள் மங்கையர்க்கரசி எனும் சிறுமி.
சங்கினைச் சோறு சமைக்கும் பாத்திரமாக வைத்துக் கொண்டுள்ளனர்; நெருப்பின் நிறம் கொண்ட மாதுளை மலர்களை, அடுப்பில் தீ எரிவது போலப் போட்டுவைத்துள்ளார்கள். குளிர்ச்சி பொருந்திய பவளக்கொடிகளை தாம் கட்டியுள்ள சிறுவீட்டினுக்கு விளக்குகளாகப் பொருத்தி உள்ளனராம். “இந்த சங்குக்கடத்தை உடைத்து விடாதே! மாதுளைத்தீயை அவித்துவிடாதே! பவளவிளக்கை அணைத்து விடாதே!” எனவெல்லாம் கமலம் முருகனை வேண்டுகிறாள்!
அதுவுமின்றி, பாவைகளுக்குத் திருமணம் நிகழ்த்துகிறோம் என்று கூறித் தாய்மார்களிடமிருந்து பலவிதமான தின்பண்டங்களையும் வாங்கிவந்திருக்கிறார்கள்; திருமண விருந்து படைக்க வேண்டுமல்லவா? “அந்த விருந்தெல்லாம் வீணாகிப் போய்விடாதோ முருகா?”எனக்கேட்கிறாள் குமுதம்!
சிறுபெண்களின் குழந்தைத்தனமான பெரியமனித விளையாட்டில் இன்னொன்று! கேட்பவர்களுக்கு நகைப்பை விளைவிக்கும்! தாமரை மொட்டுகளை முலைகள்போல தமது இளம் மார்பில் வைத்துக் கட்டிக்கொண்டு அன்னைமார் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவதுபோலத் தாமும் தமது (மண்ணால் செய்த) பொம்மைகளுக்கு விளையாட்டாகப் பாலூட்டி உறங்க வைத்துள்ளார்கள். “அந்தக் குழந்தை தனது தாமரைபோன்ற கண்ணை விழித்துத் திகைத்துத் தேம்பி அழும் அல்லவோ முருகா?” என்று கேட்கிறாள் சுந்தரி.
“ஆகவே குழந்தாய் முருகா! எங்கள் சிறிய இல்லமாகிய இச்சிற்றிலை நீ சிதைக்காதே,” என எல்லாருமாகத் தொழுது வேண்டுகிறார்கள் போல் உள்ளது.
நமக்குமொரு இனிமையான பாடல் படிக்கக் கிடைத்ததல்லவோ?
நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ”
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.(சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)
*****
பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே தொன்மங்களும் கதைகளும் குறைவில்லாத இரத்தினச் சுரங்கள்கள்! தத்துவ வேதாந்த விளக்கங்களின் தொகுப்புகள்! கூறிய கதைகளையே திரும்பக் கூறிடினும் கூறும்விதத்தை வேறுபடுத்துவதனால் ஒவ்வொரு பாடலும் புதுமை மாறாமல் இலங்குகிறது.
சிறுபெண்கள் இழைக்கும் சிற்றில்; அதனை உதைத்துச் சிதைக்க வரும் பாட்டுடைத் தலைவனான சேயூர் முருகன். முறையிடும் பெண்கள்; தொடரும் சுவையான, புதுமையான வாக்குவாதங்கள்.
என்னவென்றுதான் பார்ப்போமே! சிறுபெண்கள் தங்கள் சிற்றிலைச் சிதைக்க முயலும் முருகனிடம் சண்டையிடுகிறார்கள் போலுள்ளதே!
“பண்டு உன் மாமன்- அவன் பெரிய வித்தகன் அல்லவோ?- சூரியன் எரிக்கும் பகல்பொழுதினை பாண்டவர்களுக்காக இரவாக்கித் தந்திரம் செய்ய வல்லவன்- அவன் எல்லார் வீட்டிலும் விருப்பப்படி புகுந்து வெண்மையான பாலையும் தயிரையும் உறியிலிருந்து எடுத்து உண்டுவிட்டான்; அவர்கள், அதுதான் அவ்வீட்டார், அந்த ஆய்ச்சியர் அவனைப் பிடித்து இரு கைகளையும் கட்டிப்போடவில்லையோ?அந்த இடையர்குலப் பெண்கள் ‘உலகினைக் காக்கும் பரந்தாமன் இவன்’ என பயபக்தியினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்களா என்ன? விடவில்லையே?
“கேட்டுக்கொள் முருகா! நீ நாங்கள் பாடுபட்டுக் கட்டிய இந்தச் சிறிய வீட்டினைச் சிதைத்துவிட்டால் நாங்கள் ‘ஐயோ’ என அழுது புலம்பி உன்னுடைய அன்னைமார்களிடமும் செவிலித்தாய்மார்களிடமும் சென்று முறையிடுவோம் தெரியுமா? அப்போது உன்னிடம் அவர்கள் சீறிச் சினம் கொள்ள மாட்டார்களோ? (கட்டாயம் சினம் கொள்வார்கள்) அனைத்துப் பொருட்களும் சுட்டும் பெரும் தலைவனாகி நிற்கும் எம் அண்ணல் சிவபிரானின் செல்வச் சிறுமகன் நீ என்று பயத்தினால் உன்னைத் தண்டிக்காமல் அஞ்சி நிற்பார்களா என்ன? மாட்டவே மாட்டார்கள்!
“ஆகவே எங்கள் சிற்றிலாகிய இந்தச் சிறிய மணல்வீட்டினை அழிக்கும் தொழிலைச் செய்யாதே முருகா! சிறு குழந்தையே! சேயூரில் உறையும் பெருமானே! சிறுபெண்களாகிய எங்கள் சிறியவீடுகளைச் சிதைத்து அழிக்காதே!” என வேண்டுகின்றனராம்.
அருமையான சுவை நிரம்பிய பாடல்கள்.வெய்யோன் பகலை யிரவாக்கும் விரகிற் பெரிய நின்மாமன்
மேனாட் பொதுவ ரகம்புகுந்து *வெண்பா லுறியி னடுக்குழிப்பக்
கையோ ரிரண்டும் பிணித்திலரோ குடவர் மடவார் சகங்காக்குங்
கடவு ளெனத்தான் பயந்தனரோ கட்டா தகல விட்டனரோ
வையோ புலந்து தமியேமு மன்னை மார்க்குஞ் செவிலியர்க்கு
மழுது மொழிந்தாற் சீறாரோ வனைத்து மொருவ னாகிநிற்குஞ்
செய்யோன் மகனென் றஞ்சுவரோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே
(சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}********************************
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
பொலியட்டும் சிறப்புகள்!
வேதா.இலங்காதிலகம்
2017………
வலிமையாய் விரியட்டும்
மெலியார் வலியவராகட்டும்
மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.
பொலியட்டும் சிறப்புகள்
பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்
நலிவுகள் ஒழியட்டும்வலிவுடை சான்றிதழ்கள்
பொலிவுடை தமிழ்
மலிவற்ற உயர்ச்சியாய்
சலிக்காது சேர்ந்தது.
சிலிர்க்கும் நிறைவிது.
சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.அலட்சியங்கள் தாண்டி
அவமானங்கள் நீராக்கி
தவமெனும் வாழ்வு
அவமின்றிச் சித்திக்கட்டும்.
புவனம் சிறக்க
புத்தாண்டு மலரட்டும்.பா ஆக்கம் பா வானதி
வேதா.இலங்காதிலகம்
டென்மார்க் 31-12-2016 -
மார்கழி மணாளன் 17
திருஆதனூர் – அருள்மிகு ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் திருக்கோவில்
மார்கழி பிறந்தது மாநிலம் மகிழ்ந்திட
மனத்தேர் இழுத்தே வந்தேன் மாதவா!
மரக்கால் எடுத்து மங்கலம் பகிர்ந்திட
மறுக்காமல் வருக மங்கையை அணைத்து !
பகடைகள் ஆடிடும் பன்னிரு மாதங்கள்
பகலவன் பார்வையில் பறந்திடும் பனித்துளி
பாற்கடல் நித்திரை விலக்கியே பரமனே
பரிவுடன் வந்திடு மார்கழி மணாளனே!
ஆயிரம் பசுக்களின் ஆனந்த தரிசனம்
ஆதனூர் அண்ணலின் ஆலயம் உறைவிடம்
பாயிரம் படைத்த பக்தர்கள் அனுபவம்
தாயிடம் சேர்ந்திடும் கன்றுகள் வைபவம் !
பாதைகள் மாற்றிடும் பார்வைகள் விலக்கி
போதையில் வந்தேன் ஆதனூர் நோக்கி !
சாதனை வேண்டேன் வேதனை நீக்கு
போதனை போதும் பார்த்தனின் சாரதி !
பிணக்குகள் நிறைந்த வாழ்க்கையின் வழியில்
கணக்குகள் எண்ணிலா காலங்கள் எழுதும்
கடந்த ஊழ்வினை காத்திடும் நல்வினை
கடமையில் சேர்த்திடு காளிங்கக் கண்ணா !
சாமரம் வீசியே செந்தமிழ்ச் சொற்களால்
சந்நிதி வந்தேன் செங்கமலிச் சீதரா !
முன்னிரு மாதவா ! பின்னிரு நாரணா !
பொன்னிரு பாதங்கள் போற்றுவேன் பணிவுடன் !









