பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை வறட்சி பீடித்து இதுபோன்று பல்வேறு விவசாயிகள் மாண்ட நிகழ்வு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. கொத்துக் கொத்தாக மக்கள் மடியும் நிலை சமீப காலங்களில் வட மாநிலங்களில் மட்டுமே நடந்த நிகழ்வாக இருந்தது. ஆனால் இன்று தமிழகத்திலும் இந்த நிலை தொடர்கிறது. அனைவருக்கும் உண்டி கொடுத்தோர் உயிர்விடும் காட்சிகள் தொடரும் நிகழ்வாக அனைவரையும் இரத்தக் கண்ணீர் சொரியச்செய்வதாக இருக்கின்றன. அமைச்சர்களின் பொறுப்பற்ற பதில்களோ வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளன. உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்தும் அதைச் செயல்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது. நொடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் ஆணையிட்டும் அந்நீரைப் பெற்றுத்தர இயலாத நிலையிலேயே தமிழக அரசு உள்ளது வேதனைக்குரிய விசயம். பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் விளை நிலங்கள், கருகி அழியும் பயிர்கள் ஆகியவற்றைக்கண்டு வேதனையுறும் விவசாயிகள் மாளுகின்ற நிலை தொடர் நிகழ்வுகளாக உள்ளன. வரும் முன் காப்போம் என்று கோசமிடும் அரசு வந்த பிறகும் செயலிழந்து இருப்பது ஏன்? விவாசாயப் பொருட்கள், விதை, உரங்கள் வாங்குவதற்கும் தனியார்களிடம் கடன் வாங்கியவர்கள், கருகியப் பயிரைக்கண்டு தங்கள் உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை. தனியார் வட்டிக் கடைக்காரர்களின் கொடுஞ் சொற்களுக்கு அஞ்சியே இந்நிலை தொடர்கிறது. ஓர் உயிர் இழந்தாலே ஓலமிடுகிற நாம் பலரின் கண்ணீர் கண்டு பதைக்காமல் இருக்கமுடியுமா?
நாம் இன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ளோம். விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியுள்ள நாம், மிகச்சிறந்த வானிலை ஆய்வு மையங்களைக் கொண்டுள்ள நாம் பருவ நிலை தவறும் என்பதை முன்கூட்டியே அறியத்தவற வாய்ப்பில்லை. உடனடியாக விவசாய செயல் அலுவலரும், மேலாண் அதிகாரிகளும், இச்செய்தியை விவசாயப் பெருங்குடி மக்களுக்குக் கொண்டுசென்று விவசாய தொடர்பான செயல்களை ஏன் நிறுத்தி வைக்கவில்லை. மழை பொய்த்துவிடும் என்று அறிந்தே அரசு மௌனம் காத்ததா போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த மழைக் காலம் வரை விவசாயிகளுக்கு மீன் இனப்பெருக்கக் காலங்களில் மீன் பிடிப்பதற்கு தடை செய்து மீனவர்களுக்கு அந்த மூன்று மாதங்களுக்கும் உதவித் தொகை வழங்குவதுபோல விவசாயிகளுக்கும் வழங்கவேண்டியதும் அவசியம். மழை பொய்த்தாலும் நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதைப்போல ஆழ்துளை கிணரை அமைத்து சொட்டு நீர்ப்பாசனம் விவசாயம் செய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில் மானியம் அளித்து உதவலாம். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதும் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. விவசாயிகள் உயிர் துறந்த பிறகு வருந்துவதைவிட மேலும் இதுபோன்ற துர்பாக்கிய நிலை தொடராமல் காக்கும் வகையில் அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டியது அவசியம். விவசாய அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளை இந்த மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது பயனளிக்கும்.
ஒரே ராக்கெட்டில் இத்தனை செயற்கை கோள்களை அனுப்புகிறோம் என்று கூறும் இஸ்ரோ விவசாயத்திற்காகவும் ஒரு செயற்கைக்கோளை ஏன் அனுப்பக்கூடாது. இதில் கிடைக்கக்கூடிய தகவல்கள் மூலமாக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க உதவக்கூடுமே.இஸ்ரோ இதனை கவனம் கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பள்ளி விடுமுறை வந்தால், எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைகளும் பெரியவர்களுமாக வெளியூர்களிலிருந்து பலர் வந்து தங்கிவிடுவோம்.
முப்பது, நாற்பது பேருக்கு வேண்டுமே என்று வழக்கத்தைவிட முப்பது மடங்கு பால் வாங்க முடியுமா? தயிரில் நிறைய தண்ணீர்விட்டு, நீர்மோராக்கிவிடுவார்கள். `மோர்தான்!’ என்று சத்தியம் செய்தால்தான் நம்ப முடியும். அப்படி ஒரு திரவமாக இருக்கும்.
அதைச் சாப்பிடப் பிடிக்காமல், நான் ஒருமுறை துணிந்து, `பாட்டி! இன்னிக்கு ஒரே ஒரு நாள் எனக்கு மட்டும் கெட்டியா தயிர் குத்த முடியுமா?’ என்று கெஞ்சிக் கேட்டுவிட்டேன்.
பாட்டியின் பதில் உடனடியாக வந்தது: `நான் மாட்டேம்பா. பாரபட்சம் காட்டினா, அப்புறம் கடைசி காலத்திலே கை கால் விளங்காமப் போயிடும்!’
இப்படி ஏதாவது பயமுறுத்தி வைத்தால்தான் மனிதர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என்று யாராவது கட்டிவிட்ட கதையோ என்று அப்போது தோன்றியது. ஆனால், இறக்கும்வரை சமையல், தோட்ட வேலை என்று பாட்டி நன்றாகத்தான் இருந்தார்கள்.
வாழும்போது ஒருவரின் நடத்தை எப்படி இருக்கிறதோ, சாகும்வரை, இன்னும் சொல்லப்போனால், இறப்பிற்குப் பின்னும் அதன் பாதிப்பு இருக்கிறது. அதாவது, ஒருவருடைய சந்ததிகள் மூத்தவர்களின் செயலின் விளைவுகளை அனுபவிக்க நேர்கிறது.
நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தபோது, இளம் பெண்பாடகி ஒருத்தியின் இசைப்புலமையைப் பாராட்டினேன்.
“எல்லாம் ஒங்க ஆசிர்வாதம்,” என்றாள்.
`பெரியவர்களின் நல்வாழ்த்துகள் நன்மையை விளைவிக்கும் என்றால், ஒருவர் தீங்கு செய்தால்?’ என்று என் யோசனை போயிற்று.
கதை 1
`உங்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தபின், எதற்காக இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டீர்கள்?” என்று வயது முதிர்ந்த உறவினர் ஒருவரைக் கேட்டேன்.
(நான் யாரைப் பார்த்தாலும், கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்பேன். அனேகமாக, எவரும் பதிலளிக்கத் தயங்கியதில்லை. வெகு சிலரே ஆத்திரப்பட்டிருக்கிறார்கள்).
`சக்கை’ என்று அவர் வர்ணித்த முதல் மனைவி அவரை வெறுத்ததில் ஆச்சரியமில்லை. தான் ஒருத்தியாகவே பாடுபட்டு குழந்தைகளை வளர்க்க நேரிட்டபோது, தந்தையைப்பற்றி பெருமையாக எதுவும் சொல்ல முடியவில்லை. குழந்தைகளும் தான்தோன்றித்தனமாக வளர்ந்தார்கள். தாய் கவலைப்படவில்லை. `பெரியவர்கள் ஒழுங்காக இருந்தால்தானே அதைப் பார்த்து, அவர்கள் குழந்தைகளும் சரியாக வளர்வார்கள்!’ என்று அலட்சியமாகச் சொன்னார்.
வயதானபின், இரண்டாவது மனைவியையும் நிராதரவாக விடத் தயங்கவில்லை மனிதர்.
இப்படி சுயநலத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்நாள் முழுவதையும் கழித்துவிட்டவர்களின் அடுத்த தலைமுறைகள் பாவ மூட்டையைச் சுமக்கிறார்கள்.
கதை 2
பதின்ம வயதான தன் மகள்களை ஒத்த பெண்களை சிரிப்பும், வேடிக்கையுமாகப் பேசிக் கவர்வதே தான் ஆணாகப் பிறந்ததன் பலன் என்பதுபோல் நடந்துகொண்டார் அந்த மனிதர். பெண்களைச் சிரிக்க வைத்தால், அவர்களது எதிர்ப்பு குறைந்துவிடும், எளிதில் தன் வலையில் விழுந்துவிடுவார்கள் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை. பெற்ற மகள்களே அவமானத்துடன் குறுகும்படி இருந்தது, `எல்லாப் பெண்களும் என் காதலிகள்தாம்!’ எனபது போலிருந்த அவரது நடத்தை. உறவினர்கள் அவரைத் தம் வீட்டில் சேர்க்கவே அஞ்சினார்கள்.
(மேல் நாடுகளில் இந்த சமாசாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்களோ, என்னவோ! ஆனால், இந்தியாவில் இப்படி நடப்பது அறியாப்பெண்களின் மனநிலையை, அவர்களது எதிர்காலத்தை, பெரிதும் பாதிக்கும்).
அவரது காலம் முடிவதற்குள் தன் லீலைகளின் விளைவுகளை அவர் காணவேண்டிவந்தது. `தகாது’ என்று தெரிந்தே அடுக்கடுக்காக தவறு செய்வது எத்தனை தீய காரியம்!
மூன்று குழந்தைகளுக்குப் பிள்ளைப்பேறே கிட்டவில்லை. ஒருவனுக்கு ஆண்மை இல்லை. தப்பிப் பிறந்த பேரக்குழந்தைகளையும் அவரது வினை தொடர்ந்தது. பிறக்கும்போதே நோய். ஒருவனுக்குக் கல்யாணமான அன்றே மனைவி அவனுடன் வாழ மறுத்துப் போய்விட்டாள்.
`அப்பாவியான குழந்தைகள் எப்படித் துயர்ப்படுகிறார்கள்!’ என்று உறவினர்கள் பரிதாபப்பட்டாலும், அவர்களுக்கும் காரணம் தெரிந்தே இருந்தது. பல தாய்மார்களின் சாபம் சும்மா விடுமா!
வேறு சிலர், தம் நடத்தையில் மி்கக் கவனமாக இருப்பார்கள். `என்னைப்பற்றித் தவறாகப் பேச என்ன இருக்கிறது!’ என்ற மிதப்புடன், பிறரை ஓயாது விமர்சிப்பார்கள்.
கதை 3
விவரம் அறியாத வயதில் வத்சலாவை சற்று வயதானவருக்கு மணமுடித்தார்கள். அதனால் விளைந்த கலக்கமோ, குழப்பமோ, அவளுக்கு ஆண்-பெண் உறவைப்பற்றி கண்டபடி பேசுவதில் அளப்பற்ற ஆர்வம். அண்ணன்-தங்கை அன்பாக இருந்தால்கூட அவர்களுக்குள் தகாத உறவு இருக்கவேண்டும் என்று பேசுவாள்.
விளைவு: தன் இறுதிக்காலத்தில் இருபது ஆண்டுகள் படுத்த படுக்கையாக, அத்தியாவசியத் தேவைக்காக பேசக்கூட இயலாத நிலை ஏற்பட்டது. நாவைச் சரியான முறையில் பயன்படுத்தாத பாவமோ!
அம்மா இப்படிப் பேசுவதைக் கேட்டே வளர்ந்த ஆண்குழந்தைகள் பதின்ம வயதிலேயே `செக்ஸ்’ என்ற விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டி, பல சிறுமைகளுக்கு உள்ளாகி, நோய்வாய்ப்பட்டுப்போனார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலும் பல கோளாறுகள்.
வயதானவர்களே போர்!
பெரும்பாலான இளைஞர்களுக்கு முதியோர் என்றால் இளக்காரம். தாம் என்றும் இளமையாகவேதான் இருக்கப்போகிறோம் என்ற மிதப்புடன் நடந்துகொள்வார்கள்.
அவர்களே மூப்படைந்ததும், அவர்கள் நடந்துகொண்டதைப்போலவே இளைஞர்கள் அவர்களை அலட்சியப்படுத்த, அதை மாற்றத் தெரியாது, வருத்தத்துடன் ஏற்பதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்?
சிறு வயதிலிருந்தே எனக்கு முதியவர்களுடன் பேசுவதும் பழகுவதும் பிடித்த சமாசாரம். `இவர்களுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது!’ என்று பிரமிப்பாக இருக்கும்.
ஒரு முறை என் தாயின் அத்தை சென்னையிலிருந்த எங்கள் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். அவரை எப்படித் தனியாக ரயில் நிலையத்துக்கு அனுப்புவது என்ற பிரச்னை எழுந்தது. பதினைந்து நிமிடத்துக்குமேல் நடந்து போகவேண்டும். (அந்தக் காலத்தில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது)
என் பாட்டி பதின்ம வயதாக இருந்த என்னைச் சிபாரிசு செய்தார், `நிரு கையைப் பிடிச்சுண்டு போய், மெதுவா எல்லாத்தையும் காட்டி அழைச்சிண்டு போகும்!’ என்று.
நான் உடனே சம்மதித்தேன். வெளியில் அதிகம் போய்வர உடல் வலுவோ, வாய்ப்போ இல்லாதவர்கள், பாவம்!
என் வழக்கம்போல், சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல், பார்ப்பதையெல்லாம் விளக்கினேன்.
அத்தை பாட்டி அந்நாளை, அந்தச் சில நிமிடங்களை எவ்வளவு தூரம் மதித்தார்கள் என்று பதினேழு வருடங்களுக்குப்பின் தெரிந்தது.
“நீ அத்தைக்கு என்ன பண்ணினே? என்னை எப்போ பார்க்கிறபோதும், `நிர்மலாவுக்குக் கல்யாணமாகி, பதினோரு வருஷத்துக்கு அப்புறம் ஒரு பிள்ளைக்குழந்தை (ஆண்) பிறந்து, அதுவும் அல்பாயுசில போயிடுத்தாடி?’ன்னு அழறா!” என்று என் தாய் கேட்டபோதுதான் எனக்கு அந்தச் சம்பவமே நினைவில் வந்தது.
`எவ்வளவு அனாதரவாக உணர்ந்தால், இதைப்போய் நினைவு வைத்திருப்பார்கள்!’ என்ற பரிதாபம் ஏற்பட்டது.
முற்பகல் செய்யின்
சமீபத்தில் ஒரு மருத்துவர், `உங்களுக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகியும் ஒரு பல்கூட ஆடவில்லையா? ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற எந்த வியாதியும் கிடையாதா?’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `என்றோ பெரியவர்கள் செய்த ஆசிர்வாதம்!’ என்றுதான் சொல்லத் தோன்றியது.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி. பள்ளியிலே மிகச் சிறப்பாகப் படிக்கக்கூடிய ஒரு மாணவனின் மதிப்பெண்கள் திடீரென குறைய ஆரம்பித்தது மட்டுமின்றி வகுப்புக்களில் அவனுடைய கவனமும் குறைந்து காணப்பட்டது. இதைப்பற்றி ஆசிரியர்கள் பள்ளி முதல்வரிடம் கருத்துத் தெரிவித்த பொழுது அந்த மாணவனுடைய பெற்றோரிடம் இதை பற்றி பேசினால் என்ன என்று தோன்றியது. சந்தர்ப்பவசமாக அந்த மாணவனுடைய தந்தை அடுத்த தினம் பள்ளியிலே முதல்வரைப் பார்க்கத் தானாகவே வந்திருந்தார். முதல்வர் அதைப் பற்றி பேசுவதற்கு முன்பாகவே அவர் தனது பையிலிருந்து தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் பள்ளியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தைக் கொண்டுவந்திருந்தார். தான் வெளியூரில் வேலைக்குச் செல்வதால் தனது குழந்தைகளை தம்முடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால், அதே தினம் மதியத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் தாயாரோ, அவரது கணவர் பள்ளியிலிருந்து குழந்தைகளை எடுப்பதற்கான கடிதம் கொணர்ந்தால் அதை பெற்றுக்கொள்ளவேண்டாமென்றும், தங்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமையின் காரணமாகவே அவர் செய்வதாகவும் கூற, அப்பொழுது அந்தக் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப் பட்டத்திற்கான உண்மையான காரணம்.
மாணவர்களின் கற்றலை பெற்றோர்களின் ஒற்றுமை, பிடிவாதங்கள், தகராறுகள், பழக்க வழக்கங்கள் மிக அதிக அளவில் பாதிக்கின்றன. ஆகவே, தங்களுக்குள் ஏதாவது கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், சில நேரங்களில் அவை விஸ்வரூபம் எடுத்து சட்ட ரீதியான தீர்வுக்குள் கட்டுப்பட்டிருந்தாலும், பெற்றோர்கள் குழந்தைகளின் மனநலம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தப்பாதிப்புக்களின் தாக்கங்கள் அவர்களை பாதிக்காத அளவில் பார்த்துக்கொள்ளுதல் மிக அவசியம்.
“it is easier to bring strong children, than to repair broken men” என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.’உடைந்த மனிதர்களை சரிசெய்தவிட, வலுவான குழந்தைகளை வளர்த்தல் எளிதானது”. இது முற்றிலும் உண்மை. இந்த வலுவான குழந்தைச் செல்வங்களை உருவாக்குவதில் வீட்டுச்சூழ்நிலைகளின் பங்கீட்டின் விழுக்காடு மிக அதிகமானது. இதை பெற்றோர்களும் வீட்டுப் பெரியவர்களும் உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
ஒரு பள்ளியிலே இறுதி ஆண்டிலே படிக்கின்ற ஒரு மாணவனின் அரையிறுதித் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக இருந்ததற்காக முதல்வர் அந்த மாணவனுடைய தந்தையை அழைத்தார். அவர் ஒரு பெரிய வியாபாரி, அவரோ முதல்வரின் முன்னால் அந்த மாணவனை தரக்குறைவாகப் பேசி திட்ட, பொறுமையாக இருந்த மாணவன், தந்தை பேசி முடித்ததும். ‘ இவ்வளுவுதானா? இன்னும் ஏதாவது சொல்லணுமா?” என்று தந்தையைப் பார்த்துக் கேட்டுவிட்டு முதல்வரிடம் “சார், என்னுடைய அம்மா சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார்கள். இவரோ தினசரி மாலையிலே வீட்டில் உட்கார்ந்து குடிப்பதுமட்டுமின்றி, யார்யாரையோ வீட்டுக்கு கூட்டிவந்து கும்மாளம் செய்கின்றார். நான் எப்படி நிம்மதியாகப் படிப்பேன்?” என்று சொன்னபோது, முதல்வரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சில நேரங்களில் உண்மை மிகக் கசப்பாக இருக்கும். அவைகளை சந்திப்பதற்குக் கூட தயக்கம் ஏற்படலாம். ஆகவே பல நேரங்களில், வெறும் மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவனுடைய உள்ளுணர்வுகளையும் திறன்களையும் நிர்ணயித்தல் தவறாக அமையலாம்.
டாக்டர் டோரோதி லா நோல்டே என்பவர் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கீழ்க்கண்ட வார்த்தைகள் எல்லோராலும் போற்றப்படுபவை
If children live with criticism, they learn to condemn.
If children live with hostility, they learn to fight.
If children live with fear, they learn to be apprehensive.
If children live with pity, they learn to feel sorry for themselves.
If children live with ridicule, they learn to feel shy.
If children live with jealousy, they learn to feel envy.
If children live with shame, they learn to feel guilty.
If children live with encouragement, they learn confidence.
If children live with tolerance, they learn patience.
If children live with praise, they learn appreciation.
If children live with acceptance, they learn to love.
If children live with approval, they learn to like themselves.
If children live with recognition, they learn it is good to have a goal.
If children live with sharing, they learn generosity.
If children live with honesty, they learn truthfulness.
If children live with fairness, they learn justice.
If children live with kindness and consideration, they learn respect.
If children live with security, they learn to have faith in themselves and in those about them.
If children live with friendliness, they learn the world is a nice place in which to live.
தான் படம்பிடித்த அழகிய அணிற்பிள்ளையை இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்குரிய படமாகத் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். அவருக்கு நம் நன்றி!
இயற்கையின் படைப்பில் உயிர்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் அழகுதான் என்றாலும் அணிற்பிள்ளையின் அழகும் துறுதுறுப்பும் பார்த்தமாத்திரத்தில் நம் உள்ளம் கவர்வது. கூரிய முன்பற்களால் அது பழங்களையும் கொட்டைகளையும் கொறிக்கும் அழகே தனி!
இந்தப் படத்தில் அழகிய அணிலின் வாயில் அடைக்கலமாகியிருக்கின்றது ஒரு குணில் (குறுந்தடி). அதனைக் கடிப்பதா வேண்டாமா எனும் யோசனையில் அணிலார் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
அணில்கண்ட நம் கவிஞர்கள் அணிபெற எழுதியிருக்கும் கவிதைகளைக் கண்ணுற்று வருவோம் இனி!
***
அழகுப்பிள்ளையாம் அணிற்பிள்ளை கூடுகட்டும் அறிவுப்பிள்ளை; கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை; மரங்களில் தாவும் வீரப்பிள்ளை என்று அதன் செயல்களைக் கனிவோடு நமக்குக் கவனப்படுத்துகின்றார் திருமிகு. நாகினி.
மரத்திலிருந்த நீ மண்ணுக்கு வந்தது, ”மரத்தை அழிக்காதே!” என மானுடனை எச்சரிக்கவா? அழகாய்க் கனி உண்பதை விடுத்துக் கண்டதையும் உண்பது சரியாமோ? என்று அணிற்பிள்ளையிடம் தன் கவிதைவழி உரையாடுகின்றார்திரு. பழ. செல்வமாணிக்கம்.
அகரம் கற்றுக்கொடுத்த அரிச்சுவடி நண்பன் நீ! அனில் பிள்ளையெனும் அழகுப் பெயர் கொண்டவன் நீ! சேது பந்தனம் அமைக்கயிலே மண் சுமந்த மனித நேயன் நீ! உயிரினம் மொத்தமும் ஆண்டவன் படைப்பு! உதவி செய்தது உந்தன் சிறப்பு! பரிசாய் கிடைத்தது மூவர்ணக்கோடு! அன்னல் ராமனும கொடுத்தார் உவப்போடு! முன் காலிரண்டை கையாக்கி கொய்யாக்கனி அதில் ஏந்தி உண்ணும் எழில் காண கண் இரண்டு போதாது! அழகாய் மரத்தில் கூடமைத்து குட்டிகளை காத்திருப்பாய்! நீ ஓய்வாய் இருந்து ஒரு நாளும் பார்த்ததில்லை! மரத்தை விட்டு மண்ணுக்கு வந்த கதை என்ன? மரத்தை அழிக்கும் மனிதனுக்கு அறிவுரை சொல்ல வந்தாயோ! இயற்கை அழிந்தால் இன்னல் வரும் என்பதனை பாங்காய் சொல்ல வந்தாயோ! பழத்தை உண்பதை விட்டுவிட்டு கண்டதை தின்பது சரியாமோ ! செயற்கை உணவை தின்பதெல்லாம் மனிதன் செய்யும் மூடத்தனம் ! மறந்தும் அதை நீ செய்யாதே !
***
வாழ்வில் வரும் சோதனைகளையும் சாதனையாக்குவது எப்படி என்பதை அணிற்பிள்ளை வாயிலாய் அறிந்துகொண்டதாக அதிசயிக்கிறார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.
அதிசய அணிலே
அணிலே அணிலே அதிசய் அணிலே ஆச்சர்யத்திலே மூழ்கிறேன் உனைக் கண்டு இயற்கைப் பேரிடர்கள் உன்னையும் விட்டு வைக்கவில்லை ஊரே தத்தளித்தது புயலில் எங்கு இருந்தாயோ எப்படி இருந்தாயோ ஏறெடுத்துப் பார்ப்பார் எவருமில்லை ஐயம் கொண்டேன் நின் இருப்பைப் பற்றி ஒரு மரம் கூட நிற்கவில்லை ஓடி ஓடி எங்கு வாழ்ந்தாய் ஔவையைப் போல உன்னைப் புகழ கவியேதுமறியேன்…. கற்றேன் புது பாடம் உன்னிடம் வாழ்க்கை வாழ்வதற்கே சாவதற்கல்ல வாழ நினைத்து விட்டால் சோதனையை சாதனையாக்க வேண்டுமென துளிர் விடும் மரத்திற்காக துணிவுடன் வாழ்கிறாய் மண்ணில் மண் இருக்கும் வரை மரம் இருக்கும் மரம் சாய்ந்தாலும் வேர்கள் சாவதில்லை துன்பத்தைக் கண்டு துவளாத நின்னைக் கண்டு என்னுள்ளும் துளிர்க்கிறது நம்பிக்கையெனும் வேர்!
***
”கம்பர் போற்றிய இராமன் தடவினால் உனக்கு முதுகில் கோடு வரும்; ஆனால் கலியுக மாந்தன் தடவினால் உனக்குக் கேடல்லவா வரும்! எட்டியே நில்! அவன் கிட்டே செல்லாதே!” என்று அணிலை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
அணிலே ஒரு சேதி…
இராமன் தடவியதில் கோடு வந்தது, மனிதன் தடவினால் கேடு வந்துவிடும்..
கேட்டுக்கொள் அணிலே கூட்டுக்குள் இருந்துகொள், மாட்டிக்கொண்டால் அதையும் பிரித்து வேட்டையாடிவிடுவான்..
உன்பசிக்கு ஓன்றும் கொடுக்கமாட்டான், பழத்தைத் தின்று நீ பாதியை மீதிவைத்தால், அணில் கடித்த பழம் அதிக சுவையென்று அதையும் பறித்திடுவான்..
வயிற்றிலடிப்பது அவன் வாடிக்கைதான், அதனால் அவன் கிட்டே வராதே, எட்டியே செல் எப்போதும்…!
***
மண்ணுக்கு வந்த அணிற்பிள்ளை மாந்தர்க்குத்தான் எத்தனை எத்தனை சேதிகளைச் சொல்லாமல் சொல்லுகின்றது! அவற்றையெல்லாம் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியிருக்கும் நம் கவிஞர்கள் கெட்டிக்காரர்கள்தாம்!
***
ஒவ்வொரு உயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ பாடங்களை இயற்கை ஒளித்துவைத்திருக்கிறது. கைம்மாறு கருதாமல் உழவரின் நண்பராய் உழைக்கும் நாங்கூழ் புழுக்களாகட்டும், சோம்பலின்றிச் சுறுசுறுப்பாய் இயங்கும் எறும்புகளாகட்டும், ஒற்றுமையாய் இணைந்து தேனிறால் படைக்கும் தேனீக்களாகட்டும், கரவாது தன் இனத்தோடு கரைந்துண்ணும் காக்கைகளாகட்டும் மனிதர் கற்க இவை ஒவ்வொன்றுமே அற்புதப் பாடத்தைப் பொற்புடன் நடாத்துகின்றன!
அவ்வகையில் அணிற்பிள்ளையிடம் கற்ற பாடத்தை, பெற்ற ஞானத்தைப் பட்டியலிடும் கவிதையிது!
பெண்ணியம் பல வருணங்களில் பேசப்படுவதையும், உதட்டளவில் பெண்பாலாரும், ஆண்வர்க்கமும் உணர்ச்சி பொங்க பேசி விட்டு, பெண்களை துச்சமாக வீட்டில் நடத்துவதையும், ‘அடிமைப்பெண்’ அணுகுமுறையை தாய்க்குலமே தாங்குவதையும், பல வருடங்கள் கண்டு களைத்துப்போன எனக்கு இன்று உலகம் போற்றும் கூகிள் புதிமை பேசிய பழமை பெண்ணிய தொண்டர் ஆகிய திருமதி சாவித்ரி பூலே அவர்களின் 186வது ஜன்மதினத்தை கொண்டாடியது என்னை இளப்பாற்றியது.
Google Marks Savitribai Phule’s 186th Birth Anniversary With Beautiful Doodle.
அன்றொரு நாள் மஹாத்மா பூலே ஆதர்ச தம்பதியைப் போற்றி நான் வரைந்த கட்டுரையும், ஆங்கிலத்தில் ‘இன்றைய இந்தியா’ இதழ் படைத்த கட்டுரையும் இணைப்பதன் மூலம், பெண்ணியம் போற்றத்தக்க விதத்தில் செழிக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
அன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’
“ அன்னியரிடமிருந்து பெறும் விடுதலையை விட சமுதாய முன்னேற்றம் அளிக்கக்கூடிய ஜனநாயகம் தான் முக்கியமானது என்று போதித்தவரும், மேல்மட்டத்தின் அடிமைகளாக தாம் உழல்வதை அடிமட்டத்து ஹிந்துக்களுக்கு உணர்த்தியவருமான புத்துணர்ச்சி சூத்திரன் தான் ஜோதிராவ் பூலே.’’
~பாபா சாஹேப் அம்பேத்கர்.
நவம்பர் 28, 1890 அன்று அமரரான பாமரர் ஜோதிராவ் பூலே மே 11, 1888 அன்று ‘மஹாத்மா’ என்று பொதுமக்களால் போற்றப்பட்டவர். மஹாத்மா காந்தி பிற்கால மஹாத்மா. அருமை நண்பர்களே! குறித்துக்கொள்ளுங்கள். மஹாராஷ்டிரத்தில் சமுதாய சீர்திருத்தம் பதின்னெட்டாம் நூற்றாண்டிலேயே தலையெடுத்தது என்றாலும், பெண்ணியம் போற்றப்பட்டது என்றாலும், பல நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடிய கறிகாய் கடைக்காரன் வீட்டுப்பையன் ஜோதிராவ் தான் கண்ணில் படுவார்; பிறந்த தினம் ஏப்ரல் 11, 1827. கொடுத்து வைத்த மஹானுபாவன். அவருக்கு 13 வயதில் வாய்த்த இல்லத்தரசி சாவித்திரி பாய் எல்லா விதத்திலும் இந்த புரட்சிக்காரனுக்கு ஈடு கொடுத்தார். இருவரும் திவ்ய தம்பதி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தாமதமாக ஏழு வயதில் தொடங்கி 20 வயது வரை, முண்டியடித்துக்கொண்டு, ஒரு இஸ்லாமிய ஆசிரியரும் ஒரு கிருத்துவ அண்டை வீட்டுக்காரரும் அளித்த ஊக்கத்தால், கற்ற கல்வி, இவரை தாமஸ் பெய்ன் அவர்களின் ‘மனித உரிமை’ என்ற இறவா வரம் பெற்ற ( ஆங்காங்கே அவ்வப்பொழுது தடை செய்யப்பட்டதால், வாசகர்கள் கூடினர்.) நூலிடம் அடைக்கலம் நாட தூண்டியது, 20 வயதில். இவருடன் கூட்டு சேர்ந்தவர்கள்: சதாசிவ பல்லல் கோவாந்தே,மோரோ விட்டல் வல்வேகர்& சகாராம் யஷ்வந்த் பரஞ்சிபே. மூவரும் பக்கா பார்ப்பனர்கள். நால்வரின் நட்பும், கூட்டு சமூகப்பணியும் ஆயுசு பர்யந்தம் தொடர்ந்தது. சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். 1. 20 வயதில் என் மனதையும் ஆக்ரமித்துக்கொண்டவர் தாமஸ் பெய்ன். ஆறு வருடங்கள் முன்னால், அவரால் உலகம் அடைந்த பயனை பற்றி நான் எழுதிய கட்டுரையை தேடினேன். கிடைக்கவில்லை. 2. எந்ததொரு காலகட்டத்திலும், பிராமணர்களில் சிலர் முற்போக்காக இன அபேதவாதிகளாக இயங்கியதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது ~ராஜாஜி.
அடுத்த வருடமே (1848), சூத்திரர்களின், அதி சூத்திரர்களின் பெண் குழந்தைகளுக்கு பள்ளி அமைத்தார். முதல் மாணவி, மனைவி. அதற்கு அடுத்த வருடமே, இருவரும் ஜாயிண்ட்-சந்நியாசம் எடுத்துக்கொண்டதாகச் சொல்லலாம். பஞ்சமர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதா? என்று கடும் எதிர்ப்பு. கல்வீச்சு. மேல்மட்டத்தின் தாக்குதல் தாங்க முடியாத தந்தை இவர்களை வீட்டை விட்டு போகசொல்கிறார். நல்லதா போச்சு. இங்கு ஒரு நுட்பம் காணவேண்டும், ஐயா. ‘பூலே’ ஒரு காரணப்பெயர். மஹாராஷ்ட்டிராவில் பேஷ்வா (பிராமணர்கள்) அதிகாரம் கொடிகட்டி பறந்தது. அந்த ராஜகுடும்பத்துக்கு பூக்கார வம்சம், பரம்பரை, பரம்பரையாக , இவரது. ‘பூலே’ என்றால் பூக்காரன். பூ வேண்டும். ஆனால் பூக்காரன் தள்ளுபடி! எப்படி? அடுக்குமா?
ஆரம்ப கல்வியின் பயனை நன்கு அறிந்த பூலே அவர்கள், அடிமட்டத்தின் வறுமை, தற்காப்பு இழந்த நிலை, மேல்மட்டத்தின் ஆளுமையில் அடங்கி கிடந்த நிலை எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் என்று உறுதி பட கூறி, இடை விடாத உழைப்பினால், பள்ளிகள் பல நிறுவினார். இதற்கெல்லாம் உற்றதுணை, பிராமண தோழர்கள்.
இவருடைய புரட்சி அன்றாட நடவடிக்கையில் பிரதிபலித்தது. தன் வீட்டில் பஞ்சமர்களுக்கு ஸ்னான கட்டம். சம பதி போஜனத்திற்கு வருக என்ற இவருடைய அறிவிப்பை அச்சிலேற்ற அச்சப்பட்டன, இதழ்கள். பிற்காலம் அழுத்ததுடன் தீண்டாமை பிரச்சாரம் செய்தவர்களில் பேச்சில், இவருடைய தீவிரம் காண இயலாது. சாத்தூர் பச்சை மிளகாய்.
உசிலம்பட்டி பெண் சிசு காப்பாளர்களே! செவி சாய்க்கவும். இவரது காலத்தில், கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னால், பிராமணர் வீடுகளில் விதவைகள் மறுமணம் தடை. குழந்தை விவாகம் தடபுடல். இளம் விதவைகள் கரு தரிப்பது உண்டு. சிசுஹத்தியும் தெருவில் விடுவதும் உண்டு. மண்ணாங்கட்டி சமூகம் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கரு தரித்த விதவைகளுக்கு புகலிடம் கொடுத்து, அவ்வாறு 1873ல் பிறந்த குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்ட மஹானை ஏன் ‘மஹாத்மா’ என்று விளிக்கக்கூடாது? அதே வருடம், இவரது தலைமையில் ‘சத்ய ஶோதக் சமாஜ் ( வாய்மை நாடுவோர் சங்கம்) நிறுவப்பட்டது. முதல் சபதம்: ‘சமத்துவம் போற்றுவோம். யாவரும் தெய்வத்தின் மக்கள்’. அடுத்த படியாக, பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு விசுவாசம்.
வேதங்கள் பெரிதல்ல; சிலை வழிபாடு வேண்டாம்; நான்கு வர்ணங்கள் வேண்டாம். இன பாகுபாட்டை ஒழி; ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமே;சமய வெறியும், ஆவேச தேசாபிமானமும் நன்மை தரா. இப்படியெல்லாம் தீவிர ‘திராவிட?’ போதனை செய்த பூலே அவர்கள் 1876ல் துரைத்தனத்தாரால், பூனே முனிசிபாலிடி கெளன்சிலராக நியமிக்கபட்டார். 1877ல் பஞ்சம் வந்த போது ஏழை பாழைகள், குழந்தைகளை கூட புறக்கணிக்க நேர்ந்தது. அந்த சிறார்களுக்கு அநாதை ஆசிரமம் அமைத்தார், மஹாத்மா.
பிரம்மோ சமாஜம், பிரார்த்தனா சமாஜம், சர்வஜனிக் சபை, இந்தியன் நேஷனல் காங்கிரஸ் ஆகியவையும் இவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டன. மக்கள் தொண்டு உதட்டளவில் என்று குப்பை கொட்டிய இந்த சபைகள், பிராமண ஆதிக்கத்தில் சிக்கியவை என்றார். நல்ல வேளை. இந்த தி/அ.தி./ம./ப~ க. திராவிட கட்சிகள் சாதி என்னும் சகதியில் உருண்டு, பிரண்டு வருவதை பார்க்காமல் கண்ணை மூடியது, மஹாத்மா பூலே அவர்களின் கொடுப்பினை. வெள்ளைக்காரனையும் அவர் விடவில்லை. அரசு போஷாக்கில் இருந்த அந்தக்காலத்து டாஸ்மாக் கடைகளை எதிர்த்தார். ராஜாங்கமானாலும், வீண் செலவு செய்யக்கூடாது என்றார். ஒரு சமயம் விக்டோரியா ராணியின் சார்பில் வந்திருந்த கன்னாட் பிரபுவை வரவேற்க, அணிகலம் பூண்ட படோடாபிகள் சூழ்ந்திருந்த மீட்டிங்கில், ‘இவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்ல. கிராமத்துக்கு வந்து பாருங்கள் என்று அறை கூவல் விட்டு, அவையோரை அசத்தினார். பிற்காலம் இன்னொரு மஹாத்மா இந்த மாதிரி வாரணாசியில் செய்த கதை தெரியுமோ?
சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் தான் இல்லை. கெடு நெருங்கி விட்டது. இவரது பிராமண துவேஷத்தை அலட்சியம் செய்யலாகாது, அதில் கசப்பான உண்மைகள் இருப்பதால். பரிகாரமாக, ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஜி.சுப்ரமண்ய ஐயர் பற்றி தெரியுமோ? ஹிந்து பத்திரிகை அவரை தாக்கிய கதை தெரியுமோ?
உயர் மதிப்பு நோட்டுகள் 500, 1000 தடை செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகிவிட்டன. புதிய ₹2000, 500 தாள்கள் புழக்கத்தில் வந்துவிட்ட சூழலில் சுமாராக 15,000 கோடி உரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளன. இதனுடைய தாக்கங்கள் குறித்த ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டின்மீது பற்றுகொண்டுள்ள மக்கள் இத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பல இன்னல்களுக்குப் பிறகும் வரவேற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கிகளிலிருந்து பண அட்டைகள் மூலம் பெறப்படும் பணத்தின் தொகை அதிகரிக்க வேண்டிய அவசியமோ, காசோலைகள் மூலம் பெறப்படும் தொகைகள் அதிகரிக்க வேண்டிய தேவையக்காட்டிலும் இத்திட்டம் வெற்றி பெற அனைத்து ஏடிஎம் களிலும் பணத்தாள்கள் நிரப்பப்பட வேண்டியதே உடனடித் தேவையாக உள்ளது. தங்கு தடையற்ற முறையில் தங்கள் பணத்தை எளிமையாகப் பெற முடிந்தால் மட்டுமே இத்திட்டம் மேலும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் ஏடிஎம்கள் மூடப்பட்டே உள்ளன என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆரம்ப நாளிலிருந்தே அனைத்து ஏடிஎம்களும் சரி செய்யப்பட்டு பணம் நிரப்பப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இத்தனை இன்னல்கள் வந்திருக்காது. 60 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை இன்னும் சரி செய்யப்படாதது வேதனைக்குரியதுதான். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி பணம் கையிருப்பில் இருந்தும் அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. வங்கி நிர்வாகத்தில் உள்ளவர்கள் முற்றும் துறந்தவர்களோ, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல என்பதையும் இது உணர்த்துகிறது. அவர்களும் கவனிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டியது இத்திட்டத்தின் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது.
எத்தனை பெரிய சிறந்த திட்டமாக இருப்பினும் அதனுடைய வெற்றி என்பது அடித்தள மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் அது தோல்வி அடைந்ததாகவே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. கருப்புப் பணம் மட்டுமன்றி கள்ளப்பணமும் ஒழிக்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளுக்கு கிடைக்கப் பெறாமலிருந்த எல்லைப் புறங்களிலும் தீவிரவாதம் நடைபெறும் இடங்களிலும் நிகழ்வுகள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரிந்துகொள்ளவோ அறிந்து கொள்ளவோ சாத்தியங்கள் குறைவு. அவர்தம் அன்றாட பிரச்சனைகள் குறையும் விதமாக, செலவினங்களின்போது இது தெரியவேண்டும். அப்பொழுதுமட்டுமே தாம் பட்ட இன்னல்களுக்கு பலன் கிடைத்ததாக நிறைவளிக்கக்கூடும்.
ரியல் எஸ்டேட் துறையில் விற்பனைகள் மிகவும் குறைந்துவிட்டாலும் விற்பனைத் தொகை குறைந்தபாடில்லை. மத்திய அரசு வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளும் அதைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாகும். மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ஆணைகள் மூலமாக இதைக்கட்டாயப்படுத்தலாம் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
நுகர் பொருட்கள் விலைகள் குறைய வேண்டும். அதாவது நம்முடைய உரூபாய் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி, பெட்ரோல் லிட்டருக்கு ₹ 70 ஆக மாறிவிட்டது. சாதாரண காலங்களில் அதாவது பழைய ₹ 500, 1000 நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்பிருந்ததைவிட மிகவும் அதிகரித்துள்ளது. அந்நிய பணப்புழக்கத்தில் நம் உரூபாய் நோட்டுகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதையே இது காட்டுகிறது. உரூபாயின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் போல நமது உரூபாயின் மதிப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். நம் உரூபாயின் மதிப்பை மற்றவர்கள் நிர்ணயிப்பதைவிட நாம் நிர்ணயிக்க வேண்டிய காலம் இது. குறைந்தபட்சம் டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 50 ற்கும் குறைவாக வரவேண்டும். இதனுடைய தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சதுர அடியின் விலை ₹ 3000 லிருந்து ₹1000 ற்கு வரவேண்டும். முத்திரைத் தாள் கட்டணங்களும், அரசு நிர்ணயிக்கும் மதிப்பீடுகளும் குறைக்கப்படவேண்டும். இதுபோன்று அனைத்து மக்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உணவுப் பண்டங்களிலிருந்து காய்கறி வரை இதனுடைய பாதிப்பு இருக்க வேண்டும்.
அரசினால் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமே செயல் வடிவில் இருப்பதைத் தவிர்த்து அரசின் நற்சொற்களும் செயல் வடிவில் இருக்க வேண்டும். ஆனால் அரசு அறிவித்த பணப்பரிமாற்றக் கட்டணங்கள் இன்னும் வங்கிகளில் நீக்கப்படவில்லை. (RTGS, NEFT) போன்ற கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டியில், அதாவது வரி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பொருளாதார நிலை சிறப்பான நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.
மனித வாழ்வியலுக்கு அடிப்படைத் தேவைகளாகத் திகழ்வது உணவு, உடை, இருப்பிடம் ஆகியன. மனிதகுல வரலாற்றில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதே பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவை. இவைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள், சிதைவுகள் அனைத்தும் வரலாறாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவைகளே ஒரு நாட்டின் அடையாளமாக ஆகிவிடுகின்றன. ஜப்பான் நாட்டின் அடையாளம் சற்றே வித்தியாசமானதாகவே தென்படுகிறது. சமீபத்தில் நான் லெஸ்லி டவுனர் அவர்களின் ஆங்கில வழி ஜப்பானிய “கெய்ஷா” என்ற விரிவான புதினத்தை தமிழில் மொழிபெயர்த்தபோது இந்த எண்ணம் உறுதியானது. ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் வீழ்ச்சி என அனைத்தும் அந்நாட்டின் பெண்களின் நிலையை வைத்தே எளிதாக எடை போட முடியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
மெய்க்கோ
உலக அரங்கில் நவீன ஜப்பான் பொருளாதாரத்தில் பெருமளவு முன்னேறியிருக்கின்றது. ஜப்பானியப் பெண்கள் அதிகாரம் மற்றும் தன்னாட்சியைப் பொறுத்தவரை பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். ஒரு ஆண் வீட்டின் தலைவனாகவும் குடும்பத்தின் வெளி உலக பொது விவகாரங்களைக் கட்டுப்படுத்தக்கூடியவராகவும் இருக்கின்றான். வீட்டில் உள்ள மனைவி குடும்பத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுடன் செயல்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜப்பானில் குடும்ப கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பங்களில் ஆணாதிக்கம் கண்டுவருகின்றது. 1947 அரசியலமைப்பில் பாலியல் சமத்துவக்கொள்கை நிறுவப்பட்டது. பாரம்பரியக் குடும்ப அமைப்பு சட்டக் கட்டமைப்பை கலைத்து வந்தாலும், பெண்கள் நிலையில் சட்ட மாறுதல்களால் நடைமுறைத் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புச் சட்டங்கள், கல்வி சமத்துவம், மற்றும் வேலை, தொழில் முன்னேற்றம் போன்றவைகள் சிறந்துள்ளன.
ஜப்பானில் பாரம்பரியக் கலைகள் என்பது காரியங்களைச் செவ்வனே செய்யும் விதத்தைக் கற்கும் வடிவமேயன்றி ஒருவர் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கானது அல்ல. பூரணத்துவம் என்பதே இதன் கொள்கை; மரபின் பூரண வெளிப்பாடு, சரியான இடம், காலம் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு சரியான கிமோனோ உடையைத் தேர்ந்தெடுத்து அணிவது போன்றவை. ஒரு கெய்ஷா என்பவள், பாரம்பரிய முறையில் அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம்மை முழுமையாக கலைக்கு அர்ப்பணிக்கும் ஒரு கலைஞர்.
கெய்ஷா என்பவர்கள் யார்?
கெய்ஷாவின் வரலாறுகள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றாலும், அவை பழைமையான விபச்சாரத்தொழில் என்றே கருதப்பட்டும் வருகிறது. உலகளவில் பலர் ‘கெய்ஷா’ என்பது பாலியல் தொழிலாளி என்பதன் ஜப்பானியச் சொல் என்றே கருதுகிறார்கள். ‘courtesan’ என்கிற ‘அரசவை அணங்குகள்’ என்ற பதம் சற்று நெருக்கமாகத் தோன்றினாலும், அவர்களின் வரலாற்றை கருத்தில்கொண்டால் அது வேறு பாதைக்கு இட்டுச்செல்வதே நிதர்சனம். கெய்ஷா என்ற வார்த்தையின் பொருள், ‘கலைகளின் நபர்’ என்பது. ஆரம்பகால கெய்ஷாக்கள் ஆண்கள்தான். அவர்களுடைய முக்கியமான பணிகளே, நாட்டியம், இசை, கவிதை போன்றவைகளே.
கெய்ஷா வரலாறு:
பெண் பொழுதுபோக்காளர்களான, 7ஆம் நூற்றாண்டின் சபூருகோ, 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான ஷிராப்யோஷி போன்றோர்களை வேராகக்கொண்டிருந்தவர்களே கெய்ஷா என்பவர்கள். பிரபு வம்சத்தினருக்காகச் செயல்படுவதும், சக்கரவர்த்திகளின் காமக்கிழத்திகளாகவும் இருந்தனர். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஜப்பானில் கேளிக்கை விடுதிகளின் முதல் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டன. மற்ற பல ஜப்பானியக் கலாச்சார அம்சங்கள் போன்றே அவர்கள் சீன மிங் வம்சத்தினரைப்போன்ற மாதிரிகளாயினர். 1600களின் மத்தியில் மீண்டும் இடம்பெயர்ந்த பின்பு அவர்கள் ‘ஷிமபாரா’ என்றழைக்கப்பட்டனர்.
இதற்குள் ஈடோவில் யோஷி-வாரா எனும் ஒரு சதுப்புநில வாழிடம், தோகுகாவா ஷோகுனேட்டின் ஆதரவுடன் விபச்சார மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் விபச்சாரங்கள் தடை செய்யப்பட்டு, அதற்கான கடுமையான சட்டங்களும் போடப்பட்டன. இதோடு, எந்தவொரு வாடிக்கையாளரும் ஒரு விபச்சார விடுதியில் 24 மணி நேரங்களுக்குமேல் தங்க அனுமதியில்லை; அரசவை அணங்குகள் சாதாரண வண்ணமிட்ட கிமோனோக்கள் மட்டுமே உடுத்த வேண்டும்; சந்தேகப்படும்படியான அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத புதிதாக வருபவர்கள் குறித்து நகர ஆளுநர் அலுவலகத்தில் புகார் செய்ய வேண்டும் என்ற சட்டங்களும் போடப்பட்டன.
ஜப்பான் வெகு நாட்களாகக் காத்திருந்த, நூற்றாண்டுகளின் உள்நாட்டுப் போர்களைத் தொடர்ந்த அமைதியான காலங்களில், பல சாமுராய்கள் சமுதாயத்திற்கு இவர்களின் சேவைகளின் தேவைகள் இனி இல்லை என்பதைக் கண்டறிந்தனர். பல முன்னாள் பிரபு குடும்பங்களின் வாரிசுகள், யோஷிவாரா, ஷிமபாரா போன்ற இடங்கள் மெருகேற்றிக்கொள்வதற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்த இடம் என்ற எண்ணத்தில் அரசவை அணங்குகளாகியிருந்தனர். அமைதியானச் சூழல் மகிழ்ச்சியையும், வணிகர்களின் முன்னேற்றத்தையும் உயர்த்தியிருந்தன.
ஹானாமிச்சியினுள் பலவகையான அரசவை அணங்குகள் பிரிவுகள் இருந்தன, பத்தாண்டுகளில் தலைமை குரு மற்றும் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட தரங்கள் பல முறைகள் மாறியிருக்கின்றன என்றாலும் ஒருபோதும் அது நல்ல முறையில் அல்ல. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் அந்தச் சூழ்நிலை சற்றே மாறி, கொயோட்டோ மற்றும் ஒசாகாவில் ஒரு புதிய முறையிலான பொழுதுபோக்காளர்கள் வந்தனர். ஆரம்பகால கெய்க்கோ ஆண்களாக இருந்தனர். பின் வெகு விரைவிலேயேத் தோன்றிய பெண்கள் ‘ஓடோரிகோ’ என்ற நாட்டியக்காரிகளாகவோ அல்லது ஷேமிசென் வாசிப்பவர்களாகவோ இருந்தனர். வெகு விரைவிலேயே பெண் கெய்ஷாக்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டனர். யோஷிவாராவில் இவர்களைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர பதிவிடும் முறையை துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அவர்களை வரி செலுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் தீவிரமாகக் கட்டுப்படுத்தினர். உண்மையில் இந்த சட்டத்திட்டங்களே கெய்ஷாக்கள் கலைஞர்களாகவும், பொழுதுபோக்காளர்களாகவும் உருவாக வழிவகுத்தது.
அரசவை அணங்குகளைக்காட்டிலும் மிகவும் எளிமையாகவே அவர்கள் உடுத்தியிருந்தபோதும் அவர்கள் நவீன தலைவர்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினராலேயே கெய்ஷா வாழ்க்கைக்கு விற்கப்பட்டதோடு அவர்களுடைய கன்னித்தன்மையும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டு, ‘மிஸூ-ஏஜ் என்ற சடங்கிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இது போன்ற பழக்கங்கள் நிறுத்தப்பட்டு, கெய்ஷா தொழில் படிப்படியாக சரிவைச் சந்தித்தது.
“கெய்ஷாக்களிடம் வரும் ஆண்கள் பெரும்பாலும் சமூகத்தின் மிக உயர்மட்டத்தில் இருப்பவர்கள். அதனால் அந்த அகம்பாவங்களை சுமந்தவாறே வருவார்கள். கெய்ஷா செய்யும் முதல் காரியம் அவர்களின் அந்த ஆணவத்தை மறக்கச்செய்வதுதானாம். அதாவது அச்சம் சிறிதும் இல்லாமலும், அதேசமயம் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும், அவர்களை கோபம் கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைசாலிகளாம். அவர்களை ஒரு சாதாரண மனிதனாக்கிய பின்பு உறவு கொண்டு அதுபோன்றொரு சுதந்திர உணர்வை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிடுவார்களாம். அப்படி அங்கு வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் சுயத்தை மீட்டெடுக்கும் கலையைத்தான் “கெய்ஷாக்கலை” என்கிறார்கள்.
தலைநகரங்களில் காணக்கூடிய இருபெரும் பிரபலமான ஹனாமிச்சி (கெய்ஷா விடுதிகள்) டோக்கியோவும், கொயோட்டோவும். டோக்கியோ யோஷிவாரா கேளிக்கை விடுதிகளில் காபூக்கி கலைஞர்களும், நடிகர்களும் வணிகப்பெருமக்களுடன் கலந்துறவாடிக்கொண்டிருப்பர். 1600 – 1868 ஈடோ காலங்களில் ஜப்பான் வெளியுலகத் தொடர்பை பெருமளவில் குறைத்திருந்ததோடு, ஒரு மிகப்பெரும் கலாச்சார முன்னேற்றம் கண்ட காலமாகவும் இருந்தது. நடிகர்கள், ஸூமோ மல்யுத்த வீரர்கள், கெய்ஷாக்கள் போன்றோரே, கேளிக்கை உலகின் வண்ணமிகு யுகியோயி என்கிற மரத்துண்டு ஓவியங்களின் (மிதக்கும் உலகின் படங்கள்) மாதிரிகளாகக் கலக்கிக்கொண்டிருந்தனர். கொயோட்டோவைப் பொறுத்தவரை ஷிமபாரா மாவட்டம் இன்றளவிலும் கெய்கோ எனக்குறிப்பிடப்படும் மெய்க்கோ பாரம்பரியமான தேநீர் இல்லங்களில் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டுபவர்களாக இருக்கின்றனர்.
ஒரு முதுமொழி பகர்ந்துள்ளதைப்போல, அரசவை அணங்குகளின் பொய் என்பது, ‘நான் உன்னை காதலிக்கிறேன்’, அந்த வாடிக்கையாளரின் பொய், ‘நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்பதுதான். ஒரு மனிதனின் வரவை தொடரச் செய்வதற்கு, தன் காதலை பிரகடனப்படுத்துவதைக்காட்டிலும் வேறு வழி ஏதும் இருக்கமுடியாது. பதினேழாம் நூற்றாண்டில், அரசவை அணங்குகளுக்கு காதலை பிரித்துவிடும் வழிகளைக் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் இருந்தன. உதாரணமாக, ஒருவன் கிளம்பிச் செல்ல தயாராகும்போது, சில துளிகளாவது கண்ணீர் விடவேண்டியது மிக அவசியம். திட்டப்படி தேம்பி அழத்தெரியாத அனுபவசாலியாக இராமல் ஆரம்ப நிலையில் இருப்பவராக இருந்தால், அந்தப் புத்தகம் அவர்களுக்குக் கொடுக்கும் பாடம், தங்கள் கண் இமைகளை இரண்டு முறை இழுத்துவிட்டு, ஏதாவது சிறிய பொருளை ஒரு ஐந்து நிமிடத்திற்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கவேண்டும், அல்லது தங்கள் கிமோனோவின் கழுத்தின் உட்புறம் வரும் தீச்சுவாலைகள் தங்கள் கண்களை உறுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.
ஜப்பானில் ஒழுக்கத்திற்கு முரணான கெய்ஷா என்ற பாலியல் அமைப்பும், மொத்த பாலுணர்வுக் கலாச்சாரமும், கடுமையான கன்பியூசயனிச சமூக அமைப்பினின்று எழுந்தது. சர்வாதிகாரத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பாமல் அடிபணிதல் ஒன்றே கன்பியூசனிசத்திற்கு தேவை. இந்த இருண்மையான உலகிலிருந்து இவர்கள் உருவான விதம் பற்றி தாம் அறிந்து கொண்டதை ஆழ்ந்த ஆய்வின் அடிப்படையில் வழங்கியுள்ளார், கெய்ஷா நூலின் எழுத்தாளர், லெஸ்லி டவுனர். ஆழ்ந்த அமைதியினூடே இருந்த அந்த மாயமான வரையறைக்குள்ளிருந்த ஒரு உலகில் வாழும் கெய்ஷாக்களைக் கண்டுபிடித்து சந்திப்பது சாமான்ய காரியமல்ல. விருது பெற்ற எழுத்தாளர், ஜப்பானிய அறிஞர், அருமையான கதை சொல்லியுமான லெஸ்லி டவுனர், பல மாதங்கள் அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து அந்த மாய உலகின் மறைவிலிருந்த குறிப்பிடத்தக்க பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். “பதினேழாம் நூற்றாண்டின் திருப்பத்தில் ஒருவேளை நீங்கள் கொயோட்டோவிற்கு வர நேர்ந்திருந்தால், கவர்ச்சியூட்டும் முன்னணி கேளிக்கை மனைகளாகப் பெருகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த ஒழுக்கக் கேடான கேளிக்கைக் கும்பல் கிழக்கு மலைகளின் அடிவாரத்தில் உள்ள காமோ ஆற்றின் கரையிலுள்ள யசாகா ஆலயத்தின் அடர்சிவப்பு வாயில்வரை உங்களையும் இழுத்துச் சென்றிருக்கும்”, என்கிறார்.
ஆச்சரியமூட்டும் ஜப்பான் கலாச்சாரம்.. ஜப்பானியப் பெண்களின் பரிதாப நிலை….
’எங்கள் மனைவியர் வீட்டில் சமையல் மற்றும் குழந்தைகள் என்று கட்டுண்டிருந்தனர். அவர்களுடனான எங்களின் உறவுகள் எப்பொழுதும் வீட்டு விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்களாகவே இருக்கின்றன. இதைக்கடந்து, ஆண்களுக்கு மற்ற உலக நடப்புகள் பற்றிப்பேச ஒரு மேம்பட்ட வித்தியாசமான துணையாக, கலை மற்றும் கருத்துகள் பற்றி விவாதிக்கக்கூடிய ஒரு பெண் தேவைப்படுகிறாள். எங்களுக்கு மகிழ்ச்சியூட்டி உற்சாகப்படுத்துகிற, அறிவாளியான நன்கு படித்த பெண்கள் தேவை. ஒரு கெய்ஷா இருக்க வேண்டியதும் இப்படித்தான்”
1930 களின் மத்தியில் ஆன்றோர்கள், கவிஞர்கள், கெய்ஷாவை பணியமர்த்திய விடுதியாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் ஷிம்பாசி கெய்ஷா இல்லங்களின் கூட்டமைப்பின் இயக்குநர்கள் போன்ற அனைவரின் வாதங்களும் The Geisha Reader’ என்ற நூலில் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டன. அதில் கவிஞர் சக்குடாரோ ஹாகிவாரா, சமுதாயத்தில் கெய்ஷாவின் பங்கை ஒப்புக்கொள்ளக்கூடிய வாதமாக இப்படி முன்வைத்திருக்கிறார். இதிலிருந்தே ‘கெய்ஷா’ என்பதன் தத்துவம் தெளிவாக விளங்குகிறது.
ஆம், கெய்ஷாக்கள் ஜப்பானின் பழைய அரசாட்சிக் காலத்தில் அப்போதைய பிரபுக்களை மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட பெண்கள். இவர்களை உயர்குடித் தாசிகள் என்றும் சொல்லலாம். கெய்ஷா என்ற சொல்லின் பொருள், கலைபயின்றவள், அளிப்பவள் என்பது. ஆயிரம் ஆண்டுகளாக ஆண்களை மகிழ்விக்கும் கலையைக்கற்றுத் தேர்ந்த அதையே பிழைப்பாகவும் நடத்திக்கொண்டிருந்தவர்கள். காமம் என்பது உடற்சுகம் மட்டும் சம்பந்தப்பட்டதன்று. ஒரு ஆணின் அகங்காரத்தை நிறைவு செய்யும் வகையில் பல்வேறு கலைகளைப்பயின்றவர்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிகவும் விரிவான, தெளிவான நூல், லெஸ்லி டவுனரின், ‘கெய்ஷா’.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகித பொம்மைக்கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான அனைத்து சுற்றுலா கவர்ச்சிகளைக்காட்டிலும் மிகக் கவர்ச்சிகரமான ஒரு விசயம் என்றால் அது கெய்ஷாவாகத்தான் இருக்கும். ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து ஒரு தனிப்பட்ட சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. இவள் பிரபுக்களைத் தம் காதல் வலையில், மயக்கு மொழியில் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியோ அன்றி பாலியல் தொழிலாளியோ அல்ல. ஒரு சக்கரவர்த்தியாக இருந்தால்கூட அவளது விருப்பத்திற்கு மாறாக அவளைத் தீண்ட முடியாது. ஒரு கெய்ஷாவின் காதலுக்காக ஏங்கி பித்துப்பிடித்தவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் பலர் உண்டு. அதேபோல் சாமுராய்களின் உறவிற்கு மிக உண்மையாக இருந்து, அவர்களுக்காகத்தம் உயிரையும் அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு.
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த விசித்திரமான கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பதுதான். ஜப்பானியக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் இந்த கெய்ஷா. ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளமும் கெய்ஷாதான். தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம், ஜப்பானிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மர்ம முடிச்சுகளை தெளிவாக விளக்கியுள்ளார் லெஸ்லி டவுனர்.
கெய்ஷா தொழில் பழகுபவர்களை மெய்க்கோ என்பார்கள். மெய்க்கோவின் வாழ்க்கை முறைமைக்கும் கெய்ஷாவின் வாழ்க்கை முறைமைக்கும் பெரும் இடைவெளி இருந்தது. இது அழகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதொரு தொழில் என்பதே உண்மை. சமூகப் பின்னணிக்கு இங்கு இடமில்லை. மெய்க்கோ பயிற்சிகளுக்கு கடின உழைப்பும், நீண்ட நேரமும் ஈடுபட வேண்டியிருந்ததால், அவர்கள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. சமீப காலத்திலும் சரி இன்றும் சரி இந்த இடைவெளி இருக்கத்தான் செய்கிறது. இதற்கான சரியான காலகட்டம் விபச்சாரம் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்ட 1958 ஆம் ஆண்டு என்று தன்னிடம் பேசிய அனைவரும் கூறியதாகச் சொல்கிறார் லெஸ்லி. கடந்த காலத்தில் காதல் என்பது தடை செய்யப்பட்ட கனியாக, சட்ட விரோதமாக இருந்த காரணத்தினாலேயே அதன்மீது அதீதமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இன்றும்கூட கெய்ஷாக்கள் மதிப்பிழக்கச் செய்யும் செயல்களிலிருந்து விலகி இருப்பினும், அவர்கள் மதிக்கப்படுவதில்லை. அவர்கள் கொயோட்டோவின் அடையாளச் சின்னமாக இருந்தனர். மத்திய இரயில் நிலையத்திற்கு வருகிற பயணிகளை “கொயொட்டோவிற்கு வருக!” என்று வரவேற்கிற மெய்க்கோவின் படம் பொறித்த பதாகைகள் வரவேற்றன. கெய்ஷா உலகின் விளிம்பில் இருந்தவர்கள், தாங்கள் அறிந்த கெய்ஷாவை உயர்த்தும் விதமாக, அவர்களின், ஐதீகங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை வெளிப்படையாக, மகிழ்ச்சியுடன் விவரிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மகளை ஒரு கெய்ஷாவாக ஆக அனுமதிப்பார்களா என்று கேட்டபோது, அவர்கள் தலையைச் சாய்த்து நோக்கியவாறு, முணுமுணுப்பாக, “ஆம்.. இது சற்று சிரமமான கேள்விதான்” என்பார்களாம்.
கெய்ஷா எண்ணிக்கையில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியும் இருந்தது. வயது முதிர்ந்த கெய்ஷாக்களும், கடைக்காரர்களும் காமோ நதி, ஈஸ்டர்ன் ஹில்ஸ் மத்தியில் இருந்த மொத்த பகுதிகளிலும், வடக்கிலிருந்து, நான்காவது பாலத்திலிருந்து ஐந்தாம் பாலம்வரை ஒரு வித்தியாசமான உலகமாகவே இருந்த நாட்களை நினைவுகூருவார்கள். ஒவ்வொரு வசிப்பிடமும் ஒரு தேநீர் இல்லமாகவோ அல்லது கெய்ஷா இல்லமாகவோ இருந்தது. ஒவ்வொரு கடையும் கெய்ஷா சமூகத்திற்கு பணிபுரிந்தது. உச்சமான 1920 களில், நாடு முழுவதும் 80,000 கெய்ஷாக்கள் இருந்தனர். கியானில் மட்டுமே 2,500 கெய்ஷாக்களும், 106 மெய்க்கோக்களும் இருந்தனர். 1948 களில், போருக்குப் பின்னர் தேநீர் இல்லங்கள் திறக்கப்பட்டபோது, அங்கு 1,200 கெய்ஷா மற்றும் 160 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அந்நாட்களில், பூக்கள் மற்றும் வில்லோ உலகம் செழித்தோங்கும் தொழிற்சாலைகளாக, நெறிமுறை மற்றும் சடங்குகளால் ஆளப்பட்டு வந்தன. தேநீர் கடைக்குக் கடை, மரக்காலணிகள் தடதடத்தபடி கெய்ஷாக்கள் செல்வர். தினந்தோறும் தேநீர் இல்ல தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தி வருவார்கள். சில நேரங்களில் நாள் முழுவதும், அடுத்த நாள் வரையிலும் கூட கேளிக்கைகளில் ஈடுபட்டவாறு இருந்தனர். ஆனால் 1999 வாக்கில், 195 கெய்ஷாக்களும், 55 மெய்க்கோ மட்டுமே கொயோட்டோவில் இருந்தனர். அதில் 90 கெய்ஷா மற்றும் 22 மெய்க்கோ கியானில் இருந்தனர். ஒரு கட்டத்தில் எவை அவர்களை கெய்ஷா ஆக்கியதோ அது மறைந்த பின்னும் அவர்கள் கெய்ஷா என்று அழைக்கப்படவில்லை. நவீன ஜப்பானில், அவர்கள் அதற்கு மேலும் கேளிக்கை தொழிலின் இதயமாகவும் இருக்கவில்லை, அல்லது அந்தத் தலைமுறையின் மிக விருப்பமான பெண்களாக – கடற்கன்னிகை போலவோ ஆராதிக்கப்படுபவர்களாகவோ இல்லை. காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாக ஆனபின் அவர்கள் எந்த விதமான பங்களிப்பை அளிக்க இயலும்?
ஆற்றோரத்து மக்களுக்கு இணையாக மதிப்பற்று இருந்த காபூக்கி நடிகர்கள், தலைவர்கள், மதிப்பிற்குரியவர்களாக மாறினர். மாற்றவொண்ணாத ஈடோ காலத்தில் புதையுண்டிருந்த அவர்கள் இப்போது மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாடக உடைகளை அணிந்துகொள்கிறார்கள். ஆனால் கெய்ஷாவே இந்தப் போக்கை தொடர விரும்பினாலும், அவர்களுக்கு அது வாய்க்கவில்லை. அந்த மலர் மற்றும் வில்லோ உலகின் சாரமே அதன் இரகசியம்தான்.
பணம் படைத்தவர்கள் மத்தியில் கெய்ஷாக்கள் இருந்தாலும் அதனால் பிழைப்பவர்கள் இல்லை அவர்கள் என்பதோடு அதனால் அவர்களுக்கு ஒரு இலாபமும் இருக்கவும் இல்லை.
ஒரு கெய்ஷாவின் குடும்பம் என்பது எப்படியிருக்கும் என்ற ஆர்வம் எழுவது இயற்கை.
ஆரம்பப் பள்ளியில் கெய்ஷாக்களின் மகள்கள் பலர் படித்துக்கொண்டிருந்தனர் . சில நேரங்களில், இன்னாருடைய தந்தைதான், இப்படியான ஒரு கட்டுமான தொழிலகத்தின் உரிமையாளர் இன்னாருடைய தந்தை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பல் மருத்துவர் அல்லது ஒரு நடிகர் என்றபடி வதந்திகளும் உலவின. ஏனைய ஜப்பான் மக்கள் இதை விநோதமானதாகக்கூட நினைத்திருக்கலாம் என்றாலும் இந்த கெய்ஷா மாவட்டங்களில் ஒரு பெற்றோர் குடும்பங்கள் என்பது சர்வ சாதாரணம்தான். இதனால் குழந்தைகள் குற்ற உணர்வால் சிரமப்பட்டார்களா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதுதான். உண்மையைச் சொல்லப்போனால் எவருக்கும் இரண்டாவது சிந்தனையேகூட இருந்ததில்லை. அவர்கள் கெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரே தொல்லைதான். அடிக்கடி அவர்கள், ‘இன்று மாமா வருகிறார்கள்!’ என்று சொல்வதைக் கேட்கலாம். அவர்களுடைய தந்தை வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டுவது அனைத்தும் கிடைக்கும் என்பது அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது. மேலும் “தயாரிப்புக்குக் கட்டணம்” என்பது அவளை உருவாக்கியதற்கும், அதுவரை வளர்த்ததற்கான கட்டணமும் ஆகும்.
அவள் பள்ளிவிட்டு திரும்பியவுடன், சுத்தம் செய்வது, மெய்க்கோவிற்கு உதவுவது மற்றும் கெய்ஷாவிற்கு கிமோனோ அணிவதிலும் மற்றும் ஒப்பனை செய்வதிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும். அவள் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருந்ததோடு, அவளுக்கென்று நண்பர்களும் கிடையாது. அவளுக்கு 7 மற்றும் 20ந் தேதி என மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கும். இதெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அந்நாட்களில், அனைத்து இடங்களிலும் குழந்தைகள் நிரம்பியிருந்தனர். அது சாதாரணமானதாகவே இருந்தது. எவருமே, யார் யாருடைய பெற்றோர் என்று கேட்டதே இல்லை.
ஆக்கிரமிப்புக்கு முன்பாக, அதாவது 1958 ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு முன்பாக, ‘ஸெகென்’ – அழகான இளம் பெண்களைத் தேடி கிராமப்புறத்தின் ஏழ்மை நிறைந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களைக் கொயோட்டோவிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு மேலும் பயிற்சி கொடுப்பது வழக்கம். அந்நாட்களில் பணிப்பெண்கள் கொயோட்டோவிற்கு ஆறு அல்லது ஏழு வயதிற்குள் வந்து விட்டாலும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் பயிற்சிக்குப் பிறகு பதினொரு வயதில் மெய்க்கோ ஆகிவிடுவார்கள். அதனாலேயேதான் அவர்கள், தாங்கள் அதிகம் உயரமாக வளராதபோதும், தங்கள் உயரத்தை கூட்டிக் காட்ட நான்கு அங்குலம் உயரத்திற்கு காலணி அணிந்திருந்தார்கள். நவீன கால மெய்க்கோக்கள் தங்கள் வாடிக்கையாளர்களைக்காட்டிலும் அதிக உயரமாகக் காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் பலவித மாற்றங்கள் இருந்துகொண்டிருந்தன. முந்தைய போர்க்கால நாட்களில் கொயோட்டோவின் பெரும்பாலான மெய்க்கோக்கள் கெய்ஷா குடும்பங்களிலிருந்துதான் வந்தனர்; அவர்கள் தாய்மார்கள், பாட்டிமார்கள் மற்றும் சில நேரங்களில் அவர்கள் கொள்ளுப்பாட்டிகள் கூட கெய்ஷாவாக இருந்திருக்கின்றனர். நாட்டுப்புறத்திலிருந்துவந்த பெண்கள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்தனர். ஆனால், நாகரீக காலங்களில், பல கெய்ஷா மகள்கள் வேறு தொழிலை மேற்கொள்ளவோ அல்லது ஒரு சாதாரணமான மனிதனை மணந்து, ‘சாதாரண’ வாழ்க்கை வாழவோதான் விரும்பினார்கள். சில மூத்த முன்னாள் கெய்ஷாக்கள் தங்களுடைய உண்மையான பெயரைச் சொல்லி குறிப்பிடுவதைக்கூட விரும்பவில்லை. காரணம், தன் மகன்கள், மகள்கள், தற்போது பேரக்குழந்தைகள் மற்றும் மதிப்பிற்குரிய ஏனைய குடும்ப உறுப்பினர்கள் உட்பட எவருக்கும் தான் ஒரு கெய்ஷாவாக இருந்தது தெரியாமல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
பண்டைய நாட்களில், வறுமை காரணமாக பெற்றோரே தங்கள் குழந்தைகளை விற்கும் நிலை இருந்தது. போருக்கு முன்னால், கெய்ஷாவின் பெண்கள் தங்களுடைய ஆறாவது வயது, ஆறு மாதம், ஆறு நாட்களில் நாட்டிய வகுப்புகள் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்நாட்களில், இது ஒரு முக்கியமான தொழிலாகக் கருதப்பட்டதோடு, போல்ஷாய் பாலே மாணவர்கள் போல இளம் வயதிலேயே குழந்தைகள் தமது பயிற்சியைத் துவங்கினர். நவீன கால மெய்க்கோ பதினான்கு அல்லது பதினைந்து வயதுவரை தங்களுக்கான பயிற்சியை ஏதும் மேற்கொள்ளவில்லை. இதற்குள் முறையான கல்வி பயின்றிருந்தனர். இந்தக் கல்வி அவர்களை கேள்வி கேட்கச் செய்திருந்தது. நாட்டிய வகுப்பில் திரும்பத் திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். சீடனாக கீழ்படிந்து நடக்க வேண்டும். ஒரு கெய்ஷா குடும்பத்தின் நான்காம் தலைமுறை என்ற உயரிய தகுதியுடைய ஒரு எழுபது வயது முதிய பெண்மணி, ‘பழைய காலங்களில் பெண்களிடம் குறைந்தபட்ச அடிப்படை மரியாதைகளையாவது எதிர்பார்க்க முடிந்தது,’ என்று ஆச்சரியத்தில் புருவம் உயர என்னிடம் கூறினார். தற்போது, அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை: ஒரு கிமோனோவை எப்படி அணிவது, எப்படி நடப்பது, எவ்வாறு அழகாக, ஒரு முட்டி மற்றையதைவிட, ஒன்று அல்லது இரண்டு அங்குலம் உயரமாக இருக்கும்படி மண்டியிடவோ அல்லது ஃபியூசுமா என்ற சரிவு, காகிதக் கதவுகளை, கைகள், விரல்கள் மற்றும் கட்டை விரலை நேராக வைத்துக்கொண்டு ஒன்றாக சேர்த்து நளினமாக அழுத்தம் கொடுத்து திறக்கும் முறைமையையோ அறிந்திருக்கவில்லை. சிலர் அதற்கு முன்பு தரை விரிப்பில் (டடாமி) உட்கார்ந்ததே இல்லை. சிலருக்கு சாப்ஸ்டிக்குகளைப் பயன்படுத்தவும்கூடத் தெரியவில்லை. ‘அவர்களுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்!’ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் கூறியதையும் குறிப்பிடுகிறார் லெஸ்லி.
சிகையலங்காரம் என்பது அவர்களின் முக்கியமான அடையாளமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் இஷிஹாரா, கியானின் பழம்பெரும், மெய்க்கோ மற்றும் தாயூ சிகையலங்காரங்கள் குறித்து நான்கு நூல்கள் எழுதியுள்ளார். தாயூ அரசவை அணங்குகளின் தனிப்பட்ட சிகையலங்காரத்தை உருவாக்கத் தெரிந்த ஒரே மனிதர் ஜப்பானிலேயே அவர் மட்டும்தான். ‘ஈடோ காலங்களில் ஒருவரைப் பற்றிய அனைத்தும் அவருடைய முடியைக்கொண்டே சொல்ல முடியும்’, என்கிறார் பேராசிரியர் இஷிஹாரா.
ஆம், அந்நாட்களில் ஒவ்வொரு வகுப்பு மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான சிகையலங்காரம் இருந்துள்ளது. அதை வைத்தே அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தொழில் மற்றும் அவர்கள் எந்த நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறார்கள் போன்ற அனைத்தையும் கூற முடியும். அது இன்றும் தொடரும் ஒரே இடம், கெய்ஷா உலகம் மட்டுமே. கெய்ஷா தொழிலின் ஒவ்வொரு பருவத்திற்கும் வித்தியாசமான சிகையலங்காரமும், ஜப்பானின் வெவ்வேறு பகுதி கெய்ஷாக்களுக்கும் வெவ்வேறு விதமான கிமோனோவும் உண்டு.
‘ரிப்பன், நகைகள், பட்டு மலர்கள், பேகல் வடிவில் முடியை உருட்டி உயரமாக உச்சந்தலை கொண்டையுடன், கூடிய ஒரு சிகையலங்காரம்தான் மெய்க்கோவின் முதல் சிகையலங்காரம். இதன் அர்த்தம் அவள் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறாள் என்பதுதான். ‘ஓஃபுகு’ என்ற கீழ் முடிச்சிட்ட, சற்று குறைவான சிகை அலங்காரங்களுடன் இருந்த சிகையலங்காரத்தின் விளக்கம், அவள் மேலும் கன்னியாக இல்லை என்பதால் வாழ்த்தப்படவேண்டியவள் என்பதுதான். மெய்க்கோ தன் பதின்மூன்றாம் வயதிலேயே இது போன்ற சிகையை அணிந்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். கெய்ஷாக்கள், அந்த இளம் பதின்மூன்று வயதில், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, கன்னி கழிக்கப்பட்டது வேதனையான விசயம். இதனை ‘மீசுகே சடங்கு’ என்கிறார்கள்.
சில முக்கியமான விசேசங்களுக்கு, ‘யாக்கோ – ஷிமாடா’ என்ற புத்தாண்டு விழாக்களுக்கான அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தும் உயர் அலங்காரம் உண்டு. ‘காட்சூயாமா’ என்பது பதினேழாம் நூற்றாண்டின், குளியல் இல்ல பணிப்பெண் ஒருத்தியின் பெயர் கொண்ட சிகையலங்காரம் பின்னாட்களில் அவள் பிரபல அரசவை அணங்கு ஆனாள். உண்மையிலேயே பேரழகாக இருந்த மெய்க்கோக்களின் இறுதி சிகையலங்காரம், ‘சேக்கோ’ என்ற உச்சிக்கொண்டை சிகையலங்காரம். அவள் கெய்ஷாவாகப் பட்டம் பெறும் இறுதி மாதத்திற்கு முன்பு செய்து கொள்ளும் அலங்காரம் சாக்கோ. ஒரு முன்னாள் மெய்க்கோவை அடையாளம் காட்டுவது அவளுடைய உச்சந்தலையில் காணப்படும் வட்ட வடிவ வழுக்கைதான். ஐந்தாண்டுகளாக வாரத்திற்கு வாரம், சிகையலங்காரம் செய்பவரால் இழுத்துக் கட்டப்பட்டு, அந்த முடி திரும்ப வளராமலே போனதால் ஏற்பட்ட சொட்டை அது.
லெஸ்லி, பேராசிரியர் இஷிஹாராவின் பணியை அழகாக விளக்குகிறார். “தான் தேர்ந்தெடுத்த அந்தப் பொருளான தலை முடியை வைத்து அழகை உருவாக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கலைஞனைப்போல இருந்தார். ஒரு சிறிய கரி கன்னான் மீது சுருள் இரும்புகளை சூடாக்கிக்கொண்டு முடி நீண்டு பளபளப்பாக ஆகும்வரை கேசத்தை இழுத்துப் பிடித்தான். பின் நறுமண கேச எண்ணெயுடன் வாரிக்கொண்டு, பின்ஸுயூக் எண்ணெய் (ஸுமோ மல்யுத்த வீரர்களின் உச்சிக்கொண்டை அழுத்தமாக இருப்பதற்காக பயன்படுத்தும் எண்ணெய்) யுடன் தலையை வாரி, முடியைப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டார். தலையின் மகுடப்பகுதியில் உள்ள முடியில் ஆரம்பித்து, அதை இறுக்கமாக ஒரு குதிரைவால் கொண்டையாகக் கட்டிக்கொண்டு, கையில் தயாரித்த காகிதச் சுருள்களைக் கட்டி, அடர்த்தியாகத் தெரியும்படியும், உச்சந்தலையில் முடிச்சாக வரும்படி அதைத்தள்ளிக் கட்டினார். அவர், பின்னந்தலை முடியில் சுருள், சுருளாகவும் முடிச்சிட்டு, பின் ஒரு சன்னமான மரக்குச்சியைச் செருகி அது தன் இடத்தில் வாட்டமாகப் பொருந்தும்படிச் செய்தார். அப்படியே முன்னந்தலை முடியும் சுருளாக்கப்பட்டது. பின் அவர் பக்கவாட்டில் இருந்த இரண்டு பகுதிகளைப் பிரித்து அதில் பின்ஸூக்கே எண்ணெயைத் தடவி, சுருட்டிக்கொண்டு, அவைகளை இரண்டு சிறகுகளைப் போன்று அமைத்து மத்தியில் இருந்த கொண்டையுடன், முகத்தின் இரு புறமும் வரும்படி முடிச்சிட்டார். முடிப்பட்டை (ரப்பர் பேண்ட்) போன்ற ஒரு சன்னமான மரப்பட்டை பேண்ட்டை எடுத்து அந்தச் சிறகுகள் போன்ற அமைப்பின் மத்தியில் செருகி, அது இறுக்கமாகப் பொருந்துமாறும், ஒவ்வொன்றின் இடையிலும் பொய் முடியையும் செருகி உள்ளே சரியாகப் பொருந்துமாறும் செய்தார்.
பின் அவர் ஒரு முடிக்கற்றையை எடுத்து, திபெத்திய யாக் மாட்டின் கரிய முடி வாலை எடுத்து அதை மெய்க்கோவின் முடியுடன் சேர்த்துக் குதிரை வால் கொண்டையாகக் கட்டினார். அவர் அனைத்தையும் ஒன்றாகச்சீவி, முன்புறமாக மடித்து, பின்புறமாக முடிச்சிட்டு, அதைத் திறந்து, விரித்து, மடித்து – ஆகா, அங்கு ஒரு பேகல் போன்ற உருவமைப்பில் கொண்டை. இறுதியாக அவர், முன்னந்தலை முடியை வளைத்து, அதை நடுவில் இருந்த கொண்டையுடன் இணைத்தார். மேலும் அவர் அந்த பேகலின் இடையில் ஒரு ஊசியைச் செருகி அழுத்தமாக நிற்கச் செய்து, கடினமான கருப்பு காகிதத்தின் சில துண்டுகளால் அச்சிறகுகளின் வடிவம் குலையாமல் நிற்கவும் மற்றும் ஒரு ஜோடி வழுவழுப்பான சிகப்பு ரிப்பன்களும் கட்டினார். இந்த மொத்த அலங்காரமும் செய்து முடிக்க கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் ஆனாலும், இறுதியில் அது உறுதியாகவும், பளபளப்பாகவும், விளையாட்டு நேரத்திலோ தூங்கும் நேரங்களிலோகூட அவிழாமல் ஒரு வாரம்வரை அழுத்தமாகவே இருந்தது” என்கிறார்.
அந்நாட்களில் கொயோட்டோ முழுவதும் விலையுயர்ந்த பட்டு விற்பனையாளர்கள் மற்றும் கிமோனோ வியாபாரிகள் நிறைந்திருந்தனர். அவர்கள் மெய்க்கோவை கவனித்துக்கொள்ளும் செவிலித் தாய்மார்களுக்காக அந்த டான்னா என்ற புரவலன் அந்தப் பெண்ணிற்கு ஒரு வீடு வாங்கித்தந்து, அவளுக்குரிய கன்னி கழிப்பு சடங்கிற்கான செலவும் ஏற்று அவளுக்கு ஊதியமும் அளித்து வருவான்.
முந்நூரு ஆண்டுகளாக, ஆண்கள் பணமளிப்பது பெண்கள் கொடுக்கும் பாலியல் இன்பத்திற்காக மிகவும் யதார்த்தமாக இருந்திருக்கிறது. தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 1958 முதல் இவைகளனைத்தும் பெரும் மாற்றத்திற்குள்ளானது. தற்போது இன்னும் தீவிரமாக உள்ளது. அனைத்து மெய்க்கோக்களும் தங்கள் நடனத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
ஷேமிசென்
கெய்ஷாவின் முக்கியமான வாத்தியக்கருவியான ஷேமிசென் 3 சரமுள்ள வீணை. ஓகினாவான் சேன்ஷின் என்பதன் மாற்றாக நம்பப்படுகிறது. ஷேமிசென்னின் நீளம் 1.1 முதல் 1.4 மீட்டர் வரை இருக்கும். முதன் முதலில் ஈடோ காலமான 1600-1868 களில் கேளிக்கை மாவட்டங்களில் பிரபலமாக இருந்ததோடு காபூக்கி, புன்ராகூ நிகழ்ச்சிகளிலும் அழகுக்காக பயன்படுத்தப்பட்டது. காபூக்கி பல்வேறு நடன இசை, நீண்ட இசையின் சொந்தமானதொரு வடிவை உருவாக்கிக்கொண்டது. ஷேமிசென் செஞ்சந்தன மரத்தினால் தயாரிக்கப்பட்டு, பூனை அல்லது நாயின் தோலினால் அதன் தலைப்பகுதி மூடப்பட்டிருக்கும். சரங்களை முறுக்கப்பட்ட பட்டாகவும், ஆப்புகளை பாரம்பரிய முறைப்படி தந்தத்தினால் செய்யப்படுகின்றன. பாரம்பரியமாக ஷேமிசென் வாசிப்பவர்கள் கடினமாகவும், உணர்ச்சியற்றும் இருக்கவேண்டியுள்ளன.
இகெபானா – மலர் அலங்காரம்
ஜப்பானிய இகெபானா என்ற மலர் ஏற்பாடு மிகவும் சிக்கலான ஒன்று. இதைக் கற்றுக்கொடுப்பதற்கு பல பள்ளிகள் உள்ளன. அந்தப்பள்ளிகளால், செடிகள், பூச்சாடிகள் பொறுத்து பலவிதமான அலங்காரங்கள் செய்ய கற்பிக்கப்படுகின்றன. பலவிதமான மாற்றங்களுக்குப்பிறகும் இன்றும் இகெபானா என்ற மலர் ஏற்பாடு மேல்மட்டத்தினருக்கு மட்டுமே உரித்ததாக உள்ளது.
இன்று ஜப்பானில் 3,000 இகெபானா பள்ளிகளும், உலகைச்சுற்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளன. உலகளவில் 60,000 ஆசிரியர்கள் உள்ளனர். ஜப்பானில் பெரும்பாலும் 15 மில்லியன் இளம் பெண்கள் இகெபானா பழகியுள்ளார்கள்.
ஜப்பானிய கிமோனோ
ஜப்பானியக் கிமோனோ என்பது உலக மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பாரம்பரிய உடையாகும். ‘கிமோனோ’ என்பதன் பொருள் ’ஆடை’ என்பது. 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்கள் வரை ஜப்பானியர்கள் அனைவரும் உடுத்திய உடை. மெய்ஜி காலங்களில் மெல்ல மெல்ல இறக்குமதி செய்யப்பட்ட கால் சராய்களுக்கு மாற்றம் கண்டன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், பருவங்களுக்கும் ஒவ்வொரு விதமான கிமோனோக்கள் உண்டு. அன்றாட பயன்பாட்டில் இருக்கும் சாதாரண கிமோனோ தவிர கலைஞர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய கலைநயம் மிக்க கிமோனோக்கள் தற்காலங்களில் அதிகம் காணப்படாவிட்டாலும் இன்றும் திருமணங்கள், பட்டமளிப்பு விழாக்கள் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளில் பரவலாக அணியப்படுகிறது. அதிகமாக காணப்படாததன் காரணம் இதன் அதிக விலைதான். ஒரு நல்ல தரமான கிமோனோ உடையின் விலை ஒரு மில்லியன் யென் ஆகிறதாம். மற்றொரு காரணம் மிக வித்தியாசமான இந்த உடையமைப்பு. ஓபி என்ற அலங்காரப்பட்டை அணிவது இளம் பெண்களுக்கு மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. இதனை அணிவதற்கு அவர்கள் பெரியவர்களிடமோ அல்லது கிமோனோ பள்ளியிலோ பயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
ஜப்பானியர்களின் கண்களிலும் கெய்ஷா மற்றும் மனைவிகளுக்கு பெருத்த வேறுபாடு உண்டு; ஜப்பானியப் பெண்களின் இரு துருவங்களான கெய்ஷாக்களும் மனைவியரும் கிமோனோ அணிவதில் பெரும் வேறுபாடு உண்டு. கெய்ஷாக்கள் சொல்ல முடியாத அளவிற்கு கவர்ச்சியாக இருந்தனர்; ஆனால் அது குறிப்பையும் தெரிவையும் காட்டும் மிக நுட்பமான கவர்ச்சியாக இருந்தது.
ஒரு கெய்ஷாவிற்கு, ஒரு கிமோனோவை தேர்ந்தெடுப்பதும், அதை அணிவதும் அவளுடைய பாரம்பரிய நடனப் பயிற்சி அல்லது ஷேமிசென் வாசிப்பின் கற்றல் போன்றவற்றிற்கு ஈடானது. கிமோனோ என்பது ஒரு தேநீர் விழா, பூக்கள் அலங்காரம், அல்லது தூரிகை ஓவியம் போல மிக நுட்பமானதும் மற்றும் சிக்கலானதுமானதொரு கலை. மிக சன்னமான, ஆடம்பரமான பட்டு நூலில் நெய்யப்பட்ட கிமோனோக்கள் மிக நேர்த்தியாகவும், பல நேரங்களில் மிகவும் சிக்கலான வடிவமைப்புகளுடன் சாயமேற்றப்பட்டிருந்தது; இடங்களின் வரை படங்கள், பாலங்கள், நீர் நிலைகள், மரங்கள் மற்றும் பறவைகள் போன்றவைகளும் ஒரு கிமோனோவின் ஊடே உருண்டு கிடந்ததோடு நகை போன்ற வண்ணங்களும் தீட்டப்பட்டிருந்தன.
ஒரு கெய்ஷா பருவ காலத்திற்கேற்ற கிமோனோவை இயல்பாகத் தேர்ந்தெடுப்பாள். குளிர் மாதங்களுக்கு, செப்டம்பர் மாதச் சூறாவளியிலிருந்து குளிர்பனி ஊடாக, செர்ரி மலர்கள் உதிரும் ஏப்ரல் மாத இறுதி வரை, அவள் மொத்தமான சில்க் துணியால் ஆன இரண்டு அடுக்கு கிமோனோவில் கிரேப் உள்ளடுக்கு வைத்ததை அணிகிறாள். மே மற்றும் ஜூன் மாதங்களில் அவள் மெலிதான ஒற்றை அடுக்கு கிமோனோவுக்கும், கொளுத்தும் கோடையான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவள் மிகவும் சன்னமான பஞ்சு போன்ற மென்மையான சில்க் உடைக்கும் மாறிவிடுவாள்.
காலணிகள்
பாரம்பரியமான ஜப்பானியக் காலணிகள் குறிப்பிட்ட அந்த ஆடை அணியும்போது மட்டுமே அணியப்படுகிறது. ஸோரி என்பது, கிமோனோவுடன், முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியப்பட்டும் வைக்கோற்புல் அல்லது சாயம் பூசிய மரத்தினாலான காலணிகள். ’கெட்டா’ என்பது சாதாரண வேளைகளில் யுகாட்டா எனும் உடையுடன் அணியும் உயரமான மரக்காலணிகள். இந்த வகை கெட்டா காலணிகள் தற்காலங்களில் ஸூமோ மல்யுத்த வீரர்களின் பாதங்களில் காணமுடிகிறது. அவர்கள் நடந்து வரும் முன்னே மிக வித்தியாசமான ஓசைகள் வந்து சேரும். முதிய ஜப்பானிய மக்கள் குறிப்பிட்ட இந்த ஓசையை நாகரீக காலங்களில் இழந்துவிட்ட முக்கியமான விசயங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
ஒரு கெய்ஷாவாக ஒரு பெண் பயிற்சி பெறுவதில் பலவகை சிரமங்கள் உள்ளதால் தற்காலத்தில் கெய்ஷா பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டன.
உசாத்துணை:
கெய்ஷா – ஆங்கிலத்தில் லெஸ்லி டவுனர்/ தமிழில் பவள சங்கரி
பால்மய வீதியின்
பரிதி மண்டலக் கோள்கள்
சுழன்றோடும்
விளையாட்டு மந்தை !
ஒளிமந்தை
ஒவ்வொன்றும் ஒருவிதம் !
வட்ட வடிவத்தில்
இரட்டை வளையங்கள் சுற்ற
மையக்கருவை வணங்கி
வலம்வரும்
ஒளிமய மான மந்தை !
புதுவித மந்தை !
இதுவரைக் காணா விந்தை !
சூரிய மண்டலம் சுற்றும்
சுருண்ட பால்வீதி போலின்றி
உருண்டை வடிவம் !
கோடான கோடி
ஒளிமய மந்தைகள் விரைவாய்
உந்திச் செல்லும்
பிரபஞ்சக் குமிழி விரியுது
பெரியது !
+++++++++++
‘புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது ‘
ஜான் ஹெர்ச்செல் (John F. Herschel) (1792-1871)
இதற்கு முன், செந்நிற மையக் கருவைச் சுற்றி நீல நிற வளையம் கொண்ட ஒளிமந்தைகளைக் கண்டிருக்கிறோம். அவற்றில் பலருக்குத் தெரிந்த கோக் ஒளியண்டம் [Hoag Object] போன்று சில. ஆயினும் இந்த அபூர்வ ஒளிமந்தை [Galaxy: PGC 1000714] மங்கலான பழையச் செந்நிற உட்புற வளையம் ஒன்றை வெளிப்புற வளையத்துடன் கொண்டுள்ளது.
பாட்ரிக் டிருதார்ட் [Patrick Treuthart, Co-author, Astrophysicist, North Carolina Museum of Natural Sciences]
ஜான் ஹெர்ச்செல்
இதுவரைக் காணாத புதுவித அபூர்வ ஒளிமந்தை
2017 ஜனவரி 4 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் இரட்டை வளையம் பூண்ட வட்ட வடிவ மையக்கரு ஒளிமந்தை [Galaxy] ஒன்றைத் தொலை நோக்கி மூலம் கண்டதாக வெளியிட்டுள்ளார். அந்த காலக்ஸியின் பெயர் [PGC 1000714]. அது பூமியிலிருந்து சுமார் 359 மில்லியன் ஒளியாண்டு [Light- years] தூரத்தில் உள்ளது. இதுவரை அதுபோல் யாரும் கண்ட தில்லை. புதிய தகவல் அதன் மையக்கரு சற்று நீள்வட்டம். அதைச் சுற்றிலும் உள்ளவை இரண்டு வட்ட வளையங்கள். இந்த ஒளிமந்தை கோக் தர காலக்ஸி [Hoag’s-type Galaxy] வகுப்பைச் சேர்ந்தது. ஒளிமந்தை என்பது என்ன ? நமது பூமி சுற்றும் பரிதி மண்டலம் போல் கோடான கோடி சூரிய மண்டலங்கள் சுழலும் நமது பால்வீதி காலக்ஸி [Milky Way Galaxy] ஓர் ஒளிமந்தையே. நமது பால்வீதி ஒளிமந்தை போல் கோடான கோடி காலக்ஸிகள் இயங்கி விரியும் குமிழியே நமது பிரபஞ்சம்.
[HOAG’s Bull’s Eye Galaxy]
“கண்ணுக்குத் தெரியும் கோடான கோடி ஒளிமந்தைகளில் 0.1% எண்ணிக்கைக்குக் குறைந்தே கோக் ஒளிமந்தைகள் உள்ளன,” என்று தலைமை ஆய்வாளர், புர்சின் முட்லு பக்டில் [Burcin Mutlu-Pakdil] கூறுகிறார். அந்த கண்டுபிடிப்பு அறிக்கை வெளியிட்ட புர்சின் அவரும் அவரது மாணவர் ஒருவரும் மின்னிசோடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பௌதிக ஆய்வாளர்கள். கோக் ஒளிமந்தை உருண்ட மையக்கருவை வட்ட வளையம் ஒன்று சுற்றும் தோற்றம் கொண்டது. வளையத்துக்கும் மையக்கருவுக்கும் இணைப்பு ஏதுமில்லை. ஆய்வாளர் இருவரும் தென்னமெரிக்கா சில்லி மலைமேல் உள்ள பெருவிட்டத் தொலைநோக்கியில் ஒளிமந்தையின் பல்வேறு அலைவரிசைப் படங்கள் [Multi-waveband Images] மூலம் தகவல் சேமித்தார்.
பெரும்பான்மையான காலக்ஸிகள் நமது பால்வீதி ஒளிமந்தை போல் தட்டு வடிவானவை [Disc-shaped]. ஒளிமந்தை வளையங்கள் மோதும் வாயு முகில்கள் உருவாக்கும் பரிதிகள் கொண்டவை. உட்புற, வெளிப்புற வளையங்களின் வண்ண வேறுபாடுகள், அவை வெவ்வேறு காலத்தில் தோன்றியவை என்பதை அறிவிக்கின்றன. ஒளிமந்தை வடிவங்கள் உட்புற / வெளிப்புற சூழ்நிலை ஈடுபாட்டு இயக்கங்களால் [Environmental Interactions] உருவாகின்றன. ஒளிமந்தையின் வெளிப்புற வளையம், ஒரு காலத்தில் அருகே வாயு மண்டிய குள்ளி [Dwarf] காலக்ஸியின் ஒரு பகுதியைப் பற்றிக் கொண்டதாக இருக்கலாம்.
Our Milky Way Galaxy
பால்மய வீதியை முதன்முதலில் நோக்கிய விஞ்ஞானி கலிலியோ
1600 ஆண்டின் ஆரம்ப காலத்தில் இத்தாலிய வானியல் விஞ்ஞான மேதை கலிலியோதான் முதன்முதல் நமது பால்மய வீதி (Milky Way Galaxy) காலக்ஸியைத் தனது தொலைநோக்கியில் கண்டு உளவு செய்தவர். அந்த ஒளி விண்ணரங்கில் எண்ணற்ற விண்மீன்கள் இருந்ததைக் கண்டு வியந்தார். அதற்குப் பிறகு 1755 இல் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவல் கென்ட் (Immanuel Kant) பால்மய வீதி குவியாடி போன்ற விண்மீன்களின் மந்தை (Lens-shaped Group of Stars) என்றும், அதனைப் போல் வேறு விண்மீன்களின் மந்தைகள் உள்ளன வென்றும் கூறினார். பிரிட்டனில் பணிபுரிந்த அடுத்தொரு ஜெர்மன் வானியல் நோக்காளர் வில்லியம் ஹெர்ச்செல்தான் (1738-1822) முதன்முதலில் விஞ்ஞான ரீதியாக பால்மய வீதியைத் துருவி ஆராய்ந்து எழுதியவர். அதற்குப் பிறகு அவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லும் புதல்வர் ஜான் ஹெர்ச்செல்லும் வில்லியத்தைப் பின்பற்ற ஏராளமான காலாக்ஸிகளைத் தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துப் பதிவு செய்தார்கள்.
காலக்ஸியும் அதில் சுற்றிவரும் கோடான கோடி விண்மீன்களும்
காலக்ஸி என்றால் என்ன ? சூரியனைப் போன்ற கோடான கோடி விண்மீன்கள் மையக்கண் ஒன்றைச் சுற்றிவரும் ஒரு பூத வடிவான விண்ணரங்கமே காலக்ஸியாகக் கருதப்படுகிறது. அந்த காலக்ஸியில் விண்மீன்களுடன், விண்மீனைச் சுற்றும் அண்டக்கோள்களும், ஒளிமய நிபுளாக்களும், வாயுக்களும், தூசிகளும் மண்டிக் கிடக்கின்றன ! மேலும் காலக்ஸிகளில் மாபெரும் திணிவும், மையத்தில் அளவற்ற ஈர்ப்பாற்றலும் கொண்ட கருந்துளை (Black Hole: A Single Point of Infinite Mass & Gravity) ஒன்றும் இருக்கலாம். பிரபஞ்சத்தின் பெரும்பான்மையான திணிவாகக் (Mass) கருதப்படும் 50 பில்லியனுக்கு மேற்பட்ட காலக்ஸிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் ! கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டம் இல்லாமல், அவையே பிரபஞ்சத்தின் 90% திணிவைக் கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
காலக்ஸிகள் சில சுருளாக இருப்பவை. சில நீள்வட்ட வடிவில் இருப்பவை. சில கோணலாக இருப்பவை. பால்மய காலக்ஸியும் அதன் அருகே உள்ள அன்டிரோமேடா காலக்ஸியும் சுருளானவை. காலக்ஸி முழுவதும் ஓர் அச்சில் சுற்றுவதால் விண்மீன்களைக் கவ்விக் கொண்டு சுருள் கரங்கள் தோன்றின. நீள்வட்ட காலக்ஸிகளில் சுருள் கரங்கள் எழாமல் பொதுவாகப் பழைய விண்மீன்களும் மிகச் சிறிதளவு வாயுக்களும், தூசிகளும் உள்ளன.
குடை ராட்டினம் போல் நமது பரிதி மண்டலம் தனித்து ஒரு மையக் கண்ணைச் சுற்றி வருகிறது பால்மய வீதி காலக்ஸியே ! பால்மய வீதியில் பரிதியைப் போல் நூறு பில்லியன் விண்மீன்களும், ஒருவேளை கருந்துளை ஒன்றும் இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. நமது பால்மய வீதியில் விண்மீன் முந்திரிக் கொத்துகளும் (Star Clusters) அண்டக் கோள்களும், ஒளிமயமான நிபுளாக்களும், வாயு மேகங்களும், தூசிகளும், வெற்றிடமும் சேர்ந்து உள்ளன. பூர்வீக விண்மீன்களும், நெருங்கி அடர்ந்த கொத்துக்களும் (Denser Clusters), காலக்ஸி மையத்துக்கு அருகிலும், இளைய விண்மீன்களும், தளர்ந்த கொத்துக்களும் (Open Clusters) காலக்ஸி தளத்தட்டில் அமைந்துள்ளன !
பால்மய வீதி காலக்ஸியின் தனித்துவச் சிறப்புகள்
நமது பரிதி மண்டலம் சுற்றிவரும் பால்மய வீதி என்பது ஒருவிதச் சுருள் காலக்ஸியே (Spiral Galaxy). தீபாவளி சுருளாழி மத்தாப்பு போல் சுழல்வது. பால்மய வீதியின் விட்டம் சுமார் 100 ஆயிரம் ஒளியாண்டு தூரம் (One Light Year : ஓர் ஒளியாண்டு என்பது தூர அளவு : அதாவது விநாடிக்கு 186,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி ஓராண்டு செல்லும் தூரம்). மையக் கண்ணின் தடிப்பு ஈராயிரம் ஒளியாண்டு தூரம். மையக்கண்ணில் பழைய விண்மீன்களும் ஒரு கருந்துளையும் இருக்கலாம் என்று கருதப் படுகிறது. பால்மய வீதியைச் சுற்றிலும் ஓர் “ஒளிவட்டம்” (Halo) விண்மீன் கொத்துக்களாலும் (Band of Star Clusters), கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்ட மேகத்தாலும் (Cloud of Dark Matter) அமைக்கப் பட்டுள்ளது ! அந்த சுருள் ஆழியில் நான்கு கரங்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக் கணக்கான விண்மீன்கள் தோரணங்களாய்ப் பின்னிய நான்கு கரங்களைத் தாங்கி பால்மய காலக்ஸி தன் மையத்தைக் கொண்டு சுற்றி வருகிறது !
பரிதி மண்டலம் நான்கு கரங்களில் ஒன்றான ஓரியன் கரத்தில் (Orion Arm) மையத்திலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டு தூரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது ! நமது பூமி சூரியனைச் சுற்றி வருவதுபோல், சூரியனும் பால்மய வீதியின் மையத்தை விநாடிக்கு 137 மைல் வேகத்தில் (220 கி.மீ./விநாடி) சுற்றி வருகிறது. அந்த வேகத்தில் சூரியன் ஒருமுறை முழுவட்டம் சுற்றிவர 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப் படுகிறது !
விண்முகில் எனப்படும் நிபுளாக்கள் (Nebulae) என்றால் என்ன ?
1924 இல் அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் முதன்முதல் ஒரு சுருள் வடிவான நிபுளாவைக் கலி·போர்னியா வானோக்ககத் தொலைநோக்கியில் கண்டார். நிபுளா என்றால் முகில் என்பது பொருள். அகிலத் தூசிகள், அண்டவெளி வாயுக்கள் சீர்குலைந்த விண்மீன்களில் சிதறிப்போய்க், காட்சி முறையில் கையாளப்படும் ஒரு சொல் நிபுளா ! சில வாயுக்களாய் எஞ்சிய சிதைவுக் காலக்ஸிகள் ! சில நிபுளாக்கள் பேரொளியுடன் சுருளாக, அண்டங்களாக, கதிர் வீசுபவையாக, பிரதிபலிப்பவை யாகவும் (Spiral, Planetary, Emission & Reflection Nebulae) உள்ளன. மற்றவை சூப்பர்நோவா வெடித்துச் சிதறிய துணுக்குகள். அண்ட நிபுளா என்பது (Planetary Nebula) வாயு முகில்களே ! தொலைநோக்கியில் பார்க்கும் போது கோள வடிவில் தெரிவதால் அவை அண்ட நிபுளாக்கள் என்று அழைக்கப்பட்டன. கதிர்வீச்சு நிபுளா (Emission Nebula) என்பதில் ஒளிவீசும் வாயு முகில்கள் உள்ளன. அவற்றின் உள்ளே அல்லது பின்னே சூடாக ஒளிவீசும் விண்மீன் இருக்கிறது. வாயுக்கள் அயனிகளாய்ப் பிரிந்து உயர்சக்தி புறவூதாக் கதிர்களை (High Energy Ultra-Violet Radiation) அவை உமிழ்கின்றன ! உதாரணமாக ஓரியன் நிபுளாவில் (Orion Nebula) ஹைடிரஜன் வாயுள்ள ஒருவிதப் பச்சை நிற முகில் தெரிகிறது.
பிரிட்டிஷ் ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல், அவரது தங்கை கரோலின் ஹெர்ச்செல், தனயன் ஜான் ஹெர்ச்செல் ஆகிய மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விந்தையான பல ஒளிமீன் மந்தைகளை விண்வெளியில் கண்டுபிடித்து, வானியல் வரலாற்றில் புரட்சியை உண்டாக்கினார்கள். வில்லியம் ஹெர்ச்செல் யுரேனஸ் புதுக்கோளையும், அதனிரு துணைகோளையும் கண்டவர். தங்கை கரோலின் சகோதரன் வில்லியத்துடன் துணையாகப் பணியாற்றி அவற்றைத் தொடர்ந்து பதிவு செய்து, சில வால்மீன்களையும் கண்டு பிடித்தவர். வில்லியத்தின் மகன் ஜான் ஹெர்ச்செல் வானியல், கணிதம், பெளதிகம் [Physics], நிழற்பட இரசாயனம் [Photochemistry], விஞ்ஞான வேதாந்தம் [Philosophy of Science] ஆகிய துறைகளில் தனது மேம்பட்ட பங்கை முக்கிய பகுதியில் அளித்திருக்கிறார். சார்லஸ் டார்வின், மைக்கேல் ·பாரடே, மேரி ஸோமர்வில் மற்றும் பல உலக மேதைகள் அவருடன் கொண்டிருந்த 7500 தொடர்புக் கடிதங்கள், அவரது நூற் களஞ்சியத்தில் [Archives] பாதுகாப்பாய் சேமித்து வைக்கப் பட்டுள்ளன.
நமது பால்மய வீதி ஒளிமந்தை
தந்தையைப் பின்பற்றி 20 அடி, 40 அடி குவிநீளத் தொலை நோக்கிகளில் வானைக் கண்ணளாவித் தனயன் ஜான் ஹெர்ச்செல் புரிந்த பணிகள் அநேகம். தென்னாப்பிக்காவின் தெற்குக் கோடியில் உள்ள நன்நம்பிக்கை முனையில் [Cape of Good Hope] பல்லாண்டுகள் தங்கி தென் மண்டல விண்கூரையைத் [Southern Celestical Hemisphere] தொலைநோக்கியில் உளவு செய்து 3347 இரட்டை விண்மீன்களையும் [Double Stars], 2602 நிபுளாக்களையும் [Nebulae] கண்டு பிடித்தார். அவர் வெளியிட்ட முதல் நிபுளா அட்டவணையில் [First Catalogue of Nebulae] காணும் 5079 பால்மய ஒளிமீன் மந்தைகளில் தந்தையார், வில்லியம் ஹெர்ச்செல் கண்டவை 2477. ஜான் கண்டவை: 2602.
மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நிழற்படத் துறையை [Photographic Works] வளர்ச்சி செய்த முன்னோடிகளில் முக்கிய படைப்பாளியாகக் கருதப்படுவர், ஜான் ஹெர்ச்செல். ‘·போட்டோகிரா·பி ‘ [Photography] என்னும் பெயரைப் படைத்தவ§ அவர்தான். நிழற்படத் துறையில் ‘எதிர்ப்படநிழல் ‘, ‘நேர்ப்படநிழல் ‘ [Negative, Positive Films] என்னும் வார்த்தைகளைப் படைத்தவரும் ஜான் ஹெர்ச்செல்தான்!
ஜான் ஹெர்ச்செல் புரிந்த மகத்தான விஞ்ஞானப் பணிகள்
ஜான் ஹெர்ச்செல் 1792 இல் இங்கிலாந்து ஸ்லோவ் [Slough] என்னும் நகரில் பிரிட்டனில் குடிபுகுந்த ஜெர்மன் வில்லியம் ஹெர்ச்செலுக்குப் பிறந்த ஏக புதல்வன். கேம்பிரிட்ஜில் உள்ள புனித ஜான் கல்லூரியில் பயின்று கணிதத் துறையில் 1816 இல் பட்டம் பெற்றார். ஒப்பற்ற வானியல் விஞ்ஞானிகளான தந்தை வில்லியம், அத்தை கரோலின் இருவராலும் ஜான் வளர்க்கப் பட்டார். அவர் இருவது அருகில் வளர்ந்த ஜான் ஹெர்ச்செல் வானியல் துறையில் வல்லமையும், தொலைநோக்கி மூலம் வானோக்கி உளவும் பயிற்சியும் பெற்றார். தந்தையாரைப் பின்பற்றி அவர் கண்டுபிடித்த பால்மய ஒளிமீன்களின் எண்ணிக்கையை மிகையாக்கி ஆயிரக் கணக்கான இரட்டை மீன்கள் [Double Stars], ஒளிமீன் மந்தைகள் [Star Clusters], நிபுளாக்கள் [Nebulae] ஆகியற்றைக் கண்டுபிடித்தார். முதலில் (1864) வெளிவந்த நிபுளா, விண்மீன் திரட்சி பொது அட்டவணையில் [General Catalogue of Nebulae & Clusters] ஜான் ஹெர்ச்செல் மற்றும் தந்தையார் வில்லியம் ஹெர்ச்செல் இருவரும் கண்டவை 3347 இரட்டை விண்மீன்கள்; 2400 நிபுளாக்கள்.
ஒளிமந்தை -1
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்த ஜான் ¦†ர்ச்செல் எவ்விதக் கல்வித் துறையிலும் பதவி ஏற்காமல் வாழ்நாள் முழுதும் வான்வெளி ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். அவரது கல்லூரி கணித ஆசிரியர், உட்ஹவுஸ் [Woodhouse] என்பவர். நியூட்டன் ஆக்கிய கால்குலஸ் [Calculus] போலின்றி சற்று எளிதான லெப்னிட்ஸ் [Leibnitz] படைத்த, கால்குலஸ் அணுகுமுறைக் கணிதத்தை ஆங்கிலத்தில் எழுதியவர் உட்ஹவுஸ்! கேம்ப்ரிட்ஜ் கல்லூரிப் பாடத்திட்டத்தில் ஏனோ லெப்னிட்ஸின் கால்குலஸ் அணுகு முறைகள் சேர்க்கப் படவில்லை. ஜான் தனிதாகத் தானாகப் படித்து அவ்வித எளிதான கால்குலஸ் அணுகு முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1813 இல் கணிதத்தில் முதல்வராகத் தேறி முதல்நிலைப் பட்டம் பெற்றார்.
‘கோட்டே தேற்றத்தின் மகத்தான விளைவுப்பயன் ‘ [On a Remarkable Application of Cotes’s Theorem] என்னும் கணித விளக்கவுரையை எழுதி, ராயல் சொஸைட்டியின் ·பெல்லோ [Fellow of Royal Society] ஆனார். 1820 இல் இரண்டு ‘முடிவுறும் வேறுபாடுகளின் பயன்கள் ‘ [Applications of Finite Differences] என்னும் கணிதச் சிறப்பு நூல்களை வெளியிட்டார். 1820 ஆண்டுகளின் முடிவில் கணித ஆய்வுகளிலிருந்து விலகி, ஜான் ஹெர்ச்செல் தன் முழு ஆர்வத்தையும் வானியல் துறையில் [Astronomy] மூழ்க்கினார்.
ஜான் ஹெர்ச்செல் வானியல் ஆய்வுத் துறையில் நுழைவு
78 ஆவது வயதில் [1816] தந்தை வில்லியம் ¦†ச்செல் வானியல் பணியில் தளர்ச்சி யுற்றதும், ஜான் ஹெர்ச்செல் அப்பணியை அவர்சார்ப்பில் தொடர்ந்தார். 1822 இல் வில்லியம் காலமானதும்,அத்தை கரோலின் மீண்டும் ஹானோவர், ஜெர்மனிக்குச் சென்றார். அந்த ஆண்டில்தான் ஜான் ஹெர்ச்செல் சந்திர கிரகணத்தைப் புதிய முறையில் கணிக்கும் [Eclipses of the Moon] சிறியதோர் வானியல் விஞ்ஞான முதல் ஆய்விதழை வெளியிட்டார். ஆனால் அவரது முதற் பெரும் பதிப்பு என்று கருதப்படுவது: லண்டன் ராயல் சொஸைடி வெளியிட்ட ‘இரட்டை விண்மீன்களின் அட்டவணை’ [Catalogue of Double Stars (1824)]. வில்லியம் ஹெர்ச்செல்லைப் போல், ஜானும் ஆழ்வெளியில் அதிதூரத்தில் நகரும் விண்மீன்களின் [Deep Space Distant Stars] போக்கை நோக்கி வந்தார். தொலை விண்மீன் ஒன்றின் ‘இணைத்திரிபு இடஅமைப்பைக் ‘ [Parallax of a Star] கணிக்க முயன்றார். அப்போது இரட்டை விண்மீன்கள் யாவும் ஓர் ஈர்ப்பு மையத்தைச் சுற்றி வரக் கண்டு, அவற்றின் சுற்றுவீதிகளைக் [Orbits] கணிக்க, முதன்முதல் கணித முறைகளை வகுத்தார். 1833 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொஸைடி அப்பணிக்குத் தனது ராயல் தங்கப் பதக்கத்தை அளித்தது.
பல்வகை ஒளிமந்தைகள்
1834-1838 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் கோடியில் உள்ள நன்னம்பிக்கை முனையில் [Cape of Good Hope] தங்கி தென்னக விண்கூரையை [Southern Hemisphere] நோக்கி உளவு செய்து, பால்மய விண்மீன்கள், நிபுளாக்கள் ஆகியற்றைப் பதிவு செய்தார். அங்கே தான் கொண்டுவந்த 20 அடி குவிநீளத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வான்குடையை ஆய்வு செய்தார். தென்னாப்பிரிக்க வானில் அவர் கண்ட விந்தைகள்: 1835 இல் திரும்பி பூமி நோக்கி வந்த ஹாலியின் வால்மீன் [Halley ‘s Comet, Edmund Halley (1656-1742)] அவரது தொலைநோக்கியின் கண்ணில் பட்டது. வால்மீன்களின் விந்தை யான போக்குகளை ஆராய்ந்த போது ஈர்ப்பு விசையைத் தவிர வேறு பலதீவிர விசைகளும் அவற்றின் போக்கைப் பாதிக்கின்றன என்று அறிந்தார். பரிதியிலிருந்து வால்மீனை அப்பால் விரட்டும் விசையை அவரால் கணித முறையில் வகுக்க முடிந்தது. அப்போதுதான் ஜான் ஹெர்ச்செல் முதன் முதல் பரிதிக் காற்றைப் [Solar Wind] பற்றிக் கண்டுபிடிக்க ஏதுவாயிற்று! வால்மீனைத் தள்ளும் விலக்கு விசைக்கு [Repulsive Force], பரிதியின் காற்றே காரணம் என்பதை எடுத்துக் காட்டினார். மேலும் வால்மீனின் அண்டத்தி லிருந்து வாயுக்கள் ஆவியாய் வெளியேறுகின்றன என்று முதலில் கண்டுபிடித்தவரும் ஜான் ஹெர்ச்செல்லே! 1847 இல் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டுபிடித்த வானியல் விந்தைகளை நூலாக வெளியிட்டு, லண்டன் ராயல் சொஸைடியின் இரண்டாவது கோப்லே தங்கப் பதக்கத்தைப் [Copley Medal] பெற்றார்.
ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.
பல்வேறு ஒளிமந்தைகள்
ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.
நிபுளாக்கள் என்பவை யாவை ? காலக்ஸிகளை உற்பத்தி செய்யும் மூல ஒளிமய முத்துக்களைக் [Materials that form Galaxies] கொண்ட, அல்லது காலக்ஸி விண்மீன் மந்தைகளைப் பெற்ற ஒளிமுகில் கூட்டம்! அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] வெளியிட்ட ‘நிபுளாக்களின் பேரரங்கம் ‘ [The Realm of the Nebulae] என்னும் நூலில் காலக்ஸியானது பில்லியன் கணக்கில் விண்மீ ன்களை கோளத்தில் உள்ளடக்கிக் கொண்டு, பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார். நமது பால்மய வெளிக் காலக்ஸி பில்லியன் காலக்ஸிகளில் ஒன்றானது! எத்தனை வகையான விண்மீன் ஒளித்தீவுகள் உள்ளன ?’ நிபுளா ‘: நிபுளா [Nebula] என்னும் சொல்லுக்கு ‘முகில் ‘ [Cloud] என்று அர்த்தம். அண்டக் கோள்கள், வால்மீன்கள், விண்கற்கள் [Planets, Comets, Astroids] தவிர ஏனைய வானியல் ஒளித்தீவுகள், ஒளி மந்தைகள் யாவும் முதலில் ஒரு சமயம் நிபுளாக்கள் என்று குறிப்பிடப் பட்டன. அப்பழைய அர்த்தத்தில் இன்னும் சில வானியல் நூல்கள் நிபுளா என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருவதில் குழப்பம் உண்டாகலாம்!
சில சமயம் காலக்ஸிகள் [Galaxies (M51)], விண்மீன் மந்தைகள் [Star Clusters], அகிலவெளி மீனொளி வாயு/தூசி முகில்கள் [Intersteller Gas/Dust Clouds] ஆகியவற்றை நிபுளாக்கள் என்று குறிப்பிடுகிறோம். துல்லியமாகக் கூறப்போனால் விண்மீன் மந்தைகளைக் குறிப்பிடாது ‘நிபுளா ‘என்னும் சொல் வாயுமயம் அல்லது தூசிமயம் கொண்ட ‘முகிலுக்கு’ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். பெரும்பான்மை யாக நிபுளாவின் முகிலில் இருப்பது ஹைடிரஜன் வாயு! மில்லியன் விண்மீன்கள் ஈர்ப்பு விசைகளால் கூடிய விண்வெளி மந்தைகள் இவை. பெரும்பாலும் பண்டை விண்மீன்கள் மண்டியவை! அவை சந்தை போன்று அலங்கோலமாய் அங்கு கொஞ்சம் இங்கும் கொஞ்சமாகப் பரவி, காலக்ஸியின் மட்டத்தில் திரண்டு சேராமல் உள்ளன. நமது காலக்ஸியைச் சேர்ந்த அநேக விண்மீன் திரட்சிகள் பொரி உருண்டை போன்றவை! குறிப்பிட்ட ஒரு பொரி உருண்டை ஒருசில ஒளியாண்டுகள் [A few light-years] அகலம் கொண்டது! ‘திறந்த விண்மீன் மந்தைகள் ‘ [Open Clusters (M44)]: சிதறிய முத்துக்களைப் போல் தெரிபவை இவை. நூற்றுக் கணக்கான புதிய விண்மீன்களைக் கொண்டவை. அவை யாவும் ஈர்ப்பு விசைகளால் சேர்க்கப் பட்டு, குறுகிய காலத்தில் பிரிந்து சென்று பிரகாசிப்பவை. காலக்ஸி விண்மீன் Globular Clusters மந்தைகள் [Galactic Clusters] என்றும் அழைக்கப்படுபவை. 50 ஒளியாண்டு தூரத்திற்குக் குறைந்த தொலைவில் இருப்பவை.
பேரளவு உஷ்ண வாயு மண்டிய முகிலே ஒளி உமிழும் நிபுளாக்களாய் மிளிர்கின்றன. அண்டையில் புறவூதா ஒளியை [Ultra-violet Light] வீசும் விண்மீன் ஒன்றால், நிபுளாவின் முகிலில் உள்ள அணுக்கள் சக்தி பெற்றுக் கீழ் நிலைச் சக்திக்குத் தாவும் போது, நியான் மின்விளக்கு [Neon Light] போல வெளிச்சத்தை உமிழ்கின்றன! பெரும்பாலும் ஒளிசிந்தும் நிபுளாக்கள் செந்நிறமாய்க் காட்சி தருகின்றன! அதற்குக் காரணம், ஹைடிரஜன் வாயுவின் ‘ஒளிவீச்சு நாமம் ‘ [Emission Line] சிவப்பு நிறம்! மற்ற நிறங்கள் அருகில் தென்பட்டாலும், ஹைடிரஜன் அணுக்களே மிகுந்திருப்பதால் செந்நிறமே தனித்து மேனி முழுவதிலும் தெரிகிறது! புதிதாய்த் தோன்றிய விண்மீன் அல்லது தோன்றப் போகும் விண்மீன் அண்டவெளித் தளங்களில்தான், பொதுவாக ஒளிசிந்தும் நிபுளாக்களைக் காண முடிகிறது.
பொதுவாக நீல நிறத்தில் தோன்றுபவை இந்த வகையான நிபுளாக்கள்! அருகில் பேரொளி வீசும் விண்மீன் ஒன்றின் ஒளியைப் பிரதிபலிக்கும் தூசி முகில்கள் [Clouds of Dust] இவை! பிரதிபலிக்கும் ஒளியில் மிகையாக நீல ஒளியே சிதறப்பட்டுக் கண்ணுக்குத் தென்படுகிறது! பொதுவாகச் செந்நிறத்தில் ஒளிசிந்தும் நிபுளாக்களும், நீல நிறத்தில் எதிரொளிக்கும் நிபுளாக்களும் அண்டவெளியில் இணையாக அருகிலே காட்சி அளிக்கின்றன! ஆதலால் அந்த இரண்டு நிபுளாக்களையும் ‘மலர்ச்சி நிபுளாக்கள் ‘ [Diffuse Nebulae] என்றும் குறிப்பிடுகிறார்கள்.
‘கரிய நிபுளாக்கள் ‘ [Dark Nebulae (NGC 2264)]:
பின்புறம் அடிக்கும் ஒளியைத் தடுத்து வருவதால், இந்த நிபுளாக்கள் கரிய நிபுளாக்கள் போலக் காட்சி அளிக்கின்றன! நிழற்படக் கலையில் [Silhouette Photography] ஒளியைப் பின்புலமாக்கி வடிவத்தைப் படமெடுத்தால் கரிய உருவம் முகப்பில் தென்படுவதுபோல், கரிய நிபுளாக்கள் தோற்றம் அளிக்கும்! அவை எதிரொளிக்கும் நிபுளாக்களை ஒத்தவை. ஆனால் ஒரு வேறுபாடு: ஒளியானது நிபுளாவின் முகத்தில் படாது, அதன் முதுகில் படுகிறது! கரிய நிபுளாக்கள் பொதுவாக மலர்ச்சி நிபுளாக்களின் அருகே காணப்படுகின்றன!
விண்மீன் தனது இறுதிக்கால நிலையில் வீசி எறிந்த வாயுக் கோளமே, அண்ட நிபுளா வென்று அழைக்கப் படுகிறது! நமது பரிதியும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, அதுபோல் ஓர் அண்டக்கோள் நிபுளாவை வீசி எறியலாம்! அவற்றை அண்டங்கள் என்று விளிப்பது பிழையானது. அண்டக் கோள்களுக்கும் [Planets] அவ்வகை நிபுளாக்களுக்கும் எவ்விதப் பண்பும், ஒற்றுமையும் கிடையாது! தொலைநோக்கியில் பார்க்கும் போது அண்டங்கள் போல் தோன்றலாம். அவ்வளவுதான். சாதாரணமான ஓர் அண்டக்கோள் நிபுளா ஓர் ஒளியாண்டு தூரத்துக்கும் குறைவான அகலத்தில்தான் உள்ளது!
பூத வடிவான விண்மீன் ஒன்று மரணம் அடையும் போது, பேரளவு ஒளிப்பிழம்புடன் பிரகாசித்துப் பரவிச் சிதறும்! அப்போது, அது ‘சூபர்நோவா ‘ என்று பெயர் பெறுகிறது! சில நாட்கள் சூபர்நோவா வெளியேற்றும் சக்தி, முழு காலக்ஸிக்கு இணையான பேரளவுச் சக்திபோல் தெரிகிறது! அம்மாதிரிப் பிரளய வெடிப்புக்குப் பிறகு, சூபர்நோவாவில் எஞ்சுவது, விண்மீனின் ஒரு பெரும் பகுதி! அம்மிச்சப் பகுதியின் அகலம் ஒரு சில ஒளியாண்டுகளே!
வானியல் மேதை ஜான் ஹெர்ச்செலின் மறைவு
ஜான் ஹெர்ச்செல் வெளியிட்ட ‘இயற்பியல் வேதாந்தத் தெளிவுரை ‘ [Discourse on Natural Philosophy] என்னும் நூலைப் படித்து, மைக்கேல் ·பாரடே [Michael Faraday (1791-1867)] அவரது ஞான வல்லமையைப் புகழ்ந்து கூறியது: ‘இயற்பியல் வேதாந்த நூலைப் படித்து இன்புற்ற பலருள் நானும் ஒருவன். அந்நூல் வேதாந்த மாணவருக்கு ஒரு பாடப் பதிப்பாக உதவத் தகுதி பெற்றது. அந்நூல் என்னைச் செம்மையான ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆக்கியது. என் ஒழுக்கப் பண்பாட்டை உயர்த்தியது. சொல்லப் போனால் என்னைச் சிறந்த சித்தாந்த வேதாந்தி யாக்கியது ‘.
ஜான் ஹெர்ச்செல் காலத்து விஞ்ஞானிகள் அனைவரிலும் அவர் முன்னணியில் நிற்கும் மேதையாகக் கருதப்படுபவர். 1871 ஆம் ஆண்டில் காலமான ஜான் ஹெர்ச்செல் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபேயில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கவுரையில் பிரென்ச் கணித நிபுணர் ஷான் பயாட் [Jean Biot (1774-1862)] கூறியது: ‘கணித மேதை லாப்பிளாஸ் [Laplace] 1827 ஆண்டில் மரணம் அடைந்த பின், அவருக்குப் பிறகு இணையாக மதிக்கப் படுபவர், ஜான் ஹெர்ச்செல். பிரிட்டனில் ஸர் ஐஸக் நியூட்டன் மறைவுக்குப் பிறகு, ஜான் ஹெர்ச்செல்லின் மரணமே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாக நான் கருதுகிறேன்!’
++++++++++++++++++++++++++++++++
தகவல்:
1. Results of Astronomical Observations of John Herschel By: London, Smith, Elder Co.
2. Letters & Papers of Sir John Herschel from the Archives of the Royal Society [1990]