ரா.பார்த்தசாரதி

 

 

 

பணம் கிடைத்தும்,  சில்லறைப் பணம்  கிடைக்கவில்லை

மக்களின் அன்றாட  வாழ்க்கைக்கு கையில் சில்லறை இல்லை

ஏனோ, நமக்கு  ஒவ்வொரு நாளும் பொருள் வாங்க தடுமாற்றம்

இதனை அறிந்த அரசு, மக்களுக்கு கொடுப்பதோ ஏமாற்றம் !

 

மாற்றம் ஒன்றே உலகில் என்றும்  மாறக்கூடியது

மாற்றமில்லாமல் எதையும் முடிக்க முடியாது

மக்களின் கஷ்டங்களைப் போக்க வழி தெரியாத

அரசும், அரசியலும் இதற்கு வழி வகுக்காது !

 

சில்லறைக்காக மக்கள் பொன்னான நேரத்தை கழிக்கின்றனரே

பணம் இருந்தும், பொருள் வாங்க சில்லறைக்கு அலைகின்றனரே

இன்றோ கடன் கார்ட்   மூலம் பணம் செலுத்துவதே கட்டாய வழி.

பாமர மக்கள் கார்ட்  இல்லாமல் பிதுங்குதே அவர்கள்  விழி !

 

மக்கள் படும் துன்பத்திற்கு  வழி  காண  வேண்டாமா !

எதற்கெடுத்தாலும், பணமில்லா பரிவர்த்தனையை நீட்டிக்கலாமா

இன்று நாட்டில் படிப்பறிவு இல்லாதவர்களே மிகவும் அதிகம்

கணினி  முறையினை  அமல்படுத்துவது மிகவும் சிரமம் !

 

வங்கி  கணக்கு  இல்லாமல்  இன்று பல கோடி பாமர மக்கள்

கணினி மூலம் பணம்செலுத்துவதும்,பெறுவதும் கற்றார்களா !

இன்று  பல கோடி மக்கள் கையெழுத்து போடத் தெரியாத நிலைமை

மக்களுக்கு கணினி செயல்பாட்டை  அறிவுறுத்துவது அரசின் கடமை !

 

இன்று கறிவேப்பிலை,கொத்தமல்லி வாங்கவும் கடன் அட்டைகள்

கடன் அட்டைகள் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் கருவிகள்

புலியைப்  பார்த்து பூனை சூடு போட்டுக்கலாமா ! ஒரு முடிவு வேண்டாமா

அயல் நாட்டை பார்த்து எல்லாவற்றினையும் நிலைநாட்டமுடியுமா !

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *