திருபவளவண்ணம்-  அருள்மிகு திருபவளவண்ணன் திருக்கோயில்

ag

கண்ணறியா வண்ணங்கள் காரிருளில் மறைந்திருக்கக்

கார்வண்ணம் தனக்கேற்றுக்  கண்வண்ணம் கவர்ந்தவனே

கண்வண்ணம் ஏழென்ற கருத்துள்ளே களைப்புற்றோர்

நின்வண்ணம் பார்த்தே  நிலையாகும் பவளவண்ணா !

 

பாரெல்லாம் அழகென்றால் பார்பதற்க்கே நீயெதற்கு

பார்த்தபின்னே உன்னழகை பாருக்கே அழகெதற்கு ?

பார்க்கின்ற நிறமெல்லாம் பவளத்தில் அடங்காதோ

பாற்கடலின் பாம்பணையில் பவளமே ஒளிராதோ ?

 

முத்தோடு இரத்தினங்கள் சொத்தாக வந்தாலும்

முதுமையை இல்லாத வாழ்வின்றே  பெற்றாலும் 

முடிவில்லா நிலமெல்லாம் மூவுலகில் கிடைத்தாலும்

முகுந்தா! இணையேது பவளனின் பாதங்களுக்கே !

 

மரகதமோ மாணிக்கமோ மனதாலும் வேண்டேன்

மார்பினிலே மங்கையைத் தரித்த மாமான்னா !

மங்காத நினைவாக மாலனேநீ உள்ளிருக்க

மற்றேதும் தேடாத மனம்மட்டும் தருவாயோ ?

 

வெள்ளையுள்ளம் கொண்ட செல்லப்பிள்ளை கோவிந்தா

கொள்ளைகொண்டே கோபியர் உள்ளம்  நிறைந்தாயே!

முல்லைச்சிரிப்பில் மனம்தோற்று மையல் கொண்டேன்

பிள்ளைக்கனியே!சின்னப்பாதங்கள் சீண்டிடத் தருவாயோ?

 

கலையெல்லாம் ஒன்றாக்கிக் காஞ்சியிலே திருவாகி

மலைபோன்ற துயர்நீக்கும் மாலே! மாமணியே !

சிலையாக நீயிருந்தும் உயிர்நதியாகிக் காப்பவனே!

விடைப்பிரியாத் துயரங்கள் வேங்கடனே விலக்கிடுவாய்!

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.