Skip to content

வல்லமை

    • Blog Page
    • Columns
    • Edit UPG Post
    • Home
    • LightBox
    • Login Required
    • Manage Subscriptions
    • Multiple Pages
    • My Gallery
    • Newsletter
    • Photo of the day
    • Pick Your Card
    • Post Image
    • SHORTCODES
    • Sample Page
    • Shop
    • Subscription Settings
    • Tabs and Toggles
    • Test
    • Test2
    • User’s Post Gallery
    • Video and Audio
    • oEmbed URL
    • text and lists
    • இந்த வார வல்லமையாளர்!
    • முகப்பு

Blog

  • தங்கத் தமிழ்நாடு

    தங்கத் தமிழ்நாடு

    சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

    தங்கத் தமிழ்நாடு!  எங்கள் தாய்நாடு!
    சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
    சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!
    மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!
    எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
    முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
    வங்கக் கடலெழு செங்கதிர் ஒளிபடும்
    தென்குமரி முனையில் வள்ளுவர் வழிகாட்ட
    ஆத்திசூடி ஓளவை, திருப்பாவை ஆண்டாள்,
    வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
    கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
    புது யுகக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
    கடவுளை உணர்த்திய திரைக்கவி கண்ணதாசன்,
    அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர் அணியில்
    கவிக்கோ, கவிப்பேரரசு, கண்ணதாசன்
    யாவரும் உனது  மாதவ  மக்கள்!
    யாதும் நாடே யாவரும் கேளிர்!
    மேதினியில்  உனைப் பாதுகாத் திடுவோம்!
    காசினி மீதில் நேசமாய்த் திகழும்
    மாசிலா நாடே! மைந்தர்கள்  ஒன்றாய்
    வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
    பாரதத் தாயின் தவத்திரு நாடே!
    பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
    பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

    Share
    January 24, 2020
  • மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    நீரும் நீர் சார்ந்த நெய்தல் திணை வாழ் மக்களான மீனவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் தமது இயலுமைக்கு தகுந்தபடி கோயில் தொண்டு புரிந்துள்ளனர் என்பதற்கு சில கல்வெட்டுச் சான்றுகள் உள. இக்கல்வெட்டுகளில் மீனவர் ‘சிவன்படவர்’ என்று குறிக்கப்படுகின்றனர். இதன் மற்றொரு வடிவம் தான் ‘செம்படவர்’ என்பது. மீனவர் தீண்டத்தகாத மக்கள் பிரிவினர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மாருள் ஒருவரான அரிபத்த நாயனார் ஒரு சிறந்த சிவபக்தர். இவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த ஒரு மீனவத் தலைவர். இவருக்காக திருக்குவளை சிவன் கோவிலில் சிலை நிறுவி அமுதுபடி செய்வதற்காக ஆலன் என்ற மீனவர் காசு கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது. இனி கல்வெட்டும் அதன் விளக்கமும் கீழே.

    நாகபட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், தியாகராச சுவாமி கோவிலின் மகாமண்டப வடக்கு, மேற்கு ஜகதிப்படை வெட்டப்பட்ட 19 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள்

    2. ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 4

    3. வது மார்கழி மாதத்தொரு நாள் உ

    4. டையார் திருக்கோளிலி உடை

    5. யார் கோயிலில் முன்னாளில் சிவ[ன்]

    6. படவரில் ஆலன் எழுந்தருளிவித்த

    7. அதிபத்த நாயனார்க்கு திருப்படி மா

    8. ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க

    9. ல் இரந்து பெற்ற காசாய்

    10. காலசேரி ஐய்யனையப் பட்டன்

    11. மகன் தாமோதரபட்டன் பக்கல்

    12. நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்

    13. இவன் ஒடுக்கின காசு 2100. இக்கா

    14. சு இரண்டாயிரத்தொரு நூறும்

    15. கைக்கொண்டு திருப்படி மாற்றுக்

    16. கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி

    17. அமுதபடிக்கு அளப்போமாகவு

    18. ம் நாங்கள் இப்படி செய்வோ

    19. மாக ஸம்மதித்தோம்.

    திருப்படி மாற்றுக்கு – படையல் சோறு ஆக்குவதற்கான பண்டம்; பக்கல் – இடம், ஐந்தாம் வேற்றுமை; இரந்து – கெஞ்சி கேட்டுப் பெற்ற அல்லது பிச்சை எடுத்துப் பெற்ற; ஒடுக்கின – கட்டிய, paid

    விளக்கம்: சோழவேந்தன் மூன்றாம் ராசராசனின் 4-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1219) நாகை மாவட்டம் திருக்கோளிலி என்னும் திருக்குவளை தியாகராச சுவாமி கோவிலில் ஆலன் என்ற மீனவன் சில ஆண்டுகள் முன்பு மார்கழி மாதத்தே ஒரு நாள் தான் எழுந்தருளச் செய்த அதிபத்த நாயனார் படிமைக்கு படையல் செய்வதற்கான அரிசிக்கு வேண்டிய நெல்லைப் நாள்தோறும் பெறும் ஏற்பாடாக தன் சாதி மீனவர்களிடம் பிச்சை எடுத்துப் பெற்ற 2100 காசுகளை வட்டிக்குவிட்டு அந்த வட்டிப்பணத்தில் (பொலிசை) இதனை மேற்கொள்ளும் வகையில் காலசேரி ஐய்யனையப் பட்டன் மகன் தாமோதரப் பட்டனிடம் கொடுத்தான். இந்த 2100 காசுகளைப் பெற்றுக் கொண்டு நாள் ஒன்றுக்கு இருநாழி அளவு அரிசியை அளந்து அமுதுபடிக்காக இட்டு படையல் ஆக்கி படையல் காட்டுவோம் என்று ஒப்புக் கொண்டார்அவர். இது கோவில் சிவபிராமணர் சார்பில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும். இதில் இடம்பெறும் சிவன்படவர் ஆலன் அகநாட்டு மீனவராஅல்லது கடற்கரை மீனவரா என்று தெரியவில்லை.

    பார்வை நூல்: நாகபட்டின மாவட்டக் கல்வெட்டுகள், பக்கம் 93 – 94, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    கரூர் மாவட்டம், கரூர் வட்டம், திருமுக்கூடலில் உள்ள 36 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோராசகேசரி பன்மரான

    2. திரிபுவனச் சக்கரவத்திகள்

    3. ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு

    4. யாண்டு 15-வது தட்டையூர்நாட்டு

    5. திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு

    6. இரண்டுகரைநாட்டு சிவன்படவரோம்

    7. தென்கரை அல்லூர்

    8. பெருவழிக்கு மேற்குள்ள

    9. சிவன்படவரோம். மேற்கு முடிகொண்டத்துக்கு

    10. கிழக்கு உள்ள சிவன்படவரும்

    11. வடகரை சென்னகர் முறியான

    12. பெரியவளவன் பரத்தலைக்கு

    13. மேற்குள்பட்ட சிவன்படவரும்

    14. மேற்கு மணப்பள்ளி உள்பட கிழக்குள்ள

    15. சிவன்படவரோம் இந்நாட்டு

    16. உள்ப்பட்ட சிவன்படவரோம்

    17. இத்திருமுக்கூடல் ஆளுடைய நாயனாற்க்கு

    18. ஆறாம் திருநாளுக்கும்

    19. ஆளுடைய பிள்ளையாரை எழுந்தருள

    20. பன்னவும் சாத்துப்படிக்குப் பூச்சுப்படி

    21. அமுதுபடி கறியமுது உப்பமுது

    22. மிளகமுது நெய்யமுது பால் அமுது

    23. அடைக்காய் அமுது இலையமுது

    24. பந்தம் திருவிளக்கெண்ணை திருப்பள்ளித்தாம

    25. உள்ளிட்ட வற்கத்துக்கு பணம் 20. இப்பணம் இருபதும்

    26. திருநாள்கள்தோறும் குடுக்கக்கடவோமாகவும்

    27. தூபம் தீபம் கொம்பு திருச்சின்னம் இவையும் எங்கள்

    28. தன்மமாக இடக்கடவோமாகவும் இவை தாழ்வுபட்டால்

    29. மண்கலந்தும் வெண்கலம் எடுவித்தும் தடுத்துவந்த்தும்

    30. வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும் தண்டக்கடவார்களாகவும்

    31. இத்தண்டவந்தவர்களுக்கு சோறு பாக்கு இட்டு உபசரிக்கக்கடவோமாகவும்

    32. இன்நாட்டில் சிவன்படவர் ஒருகுடி இருக்கிலும்

    33. நாடு சோறு போட்டுப் பணம் தண்டி வந்து ஒருகடவோமாகவும்

    34. இப்படி சம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம்

    35. உடையார் திருமுக்கூடல் ஆளுடைய நாயனார்க்கு இரண்டுகரை நாட்டு

    36. சிவன்படவரோம். இந்த தன்மம் மாற்றினார் உண்டாகில் வழி எழுச்சமறுவான்.

    பெருவழி – நெடுஞ்சாலை, highway; முறி – நகர்பகுதிஅல்லது சேரி; சாத்துப்படி – திருமேனி அலங்காரம்; திருப்பள்ளித் தாமம் – திருமேனிக்கு சாற்றும் மாலை; திருச்சின்னம் – ஊதுகுழலுள்ள இசைக்கருவி; அச்சம் – வாரிசு.

    விளக்கம்: கொங்கு பாண்டியனான வீரபாண்டியனின் 15-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1280) தட்டையூர் நாட்டில் அமைந்த திருமுக்கூடல் இறைவர்க்கு இரண்டுகரை ஊர்களிலும் வாழும் மீனவரான சிவன்படவர் இதாவது, தென்கரையிலுள்ள அல்லூர் நெடுஞ்சாலைக்கு மேற்கில் வாழும் சிவன்படவரும் மேற்கே முடிகொண்டத்துக்கு கிழக்கில் வாழும் சிவன்படவரும் அதேபோல் வடகரையில் சென்னகர் பகுதியான பெரியவளவன் பரத்தலைக்கு மேற்கில் அடங்கிய சிவன்படவரும் அதேபோல் மேற்கு மணப்பள்ளிக்கு உட்பட்ட கிழக்குப்பகுதியில் வாழும் சிவன்படவரும் ஆகியோர் உள்ளிட்ட இந்த நாட்டுச் சிவன்படவர் யாவருமாக இத்திருமுக்கூடல் இறைவர்க்கு ஆறாம் உற்சவ நாளில் ஆளுடையபிள்ளையாரை (ஞானசம்பந்தர்) எழுந்தருளச் செய்து திருமேனி அலங்காரத்திற்கும், பூசனைப்படி, அமுது படையல், பொறியல், உப்புச்சோறு, மிளகுச்சோறு, நெய்ச்சோறு, பால்சோறு, பாக்குச் சோறு, வெற்றிலை, தீப்பந்தம், விளக்கேற்ற எண்ணெய், திருமேனிக்கு சாற்றப்படும் மாலை ஆகிய செலவினங்களுக்கு இருபது பணம் ஒவ்வொரு ஆண்டின் உற்சவத்தின் போதும் கொடுப்போம் என்றும, இஃது அல்லாமல் தூபம், தீபம், கொம்புஊதல், திருச்சின்னம் எனும் ஊதுகுழல் இசைக்கருவியை ஆர்த்தல் ஆகியனவும் எங்கள் தர்மமாகச் செய்வோம் என்றும் இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் வீரபத்திரர்கள் வெட்டிக் கொண்டும், மண்கலந்தும், வெண்கலம் எடுத்தும், தடுத்து வந்தும் அப்பணத்தை திரட்டிக் கொள்ளலாம் என்றும், இப்படி திரட்டுபவர்களுக்கு சோறுபோட்டு வெற்றிலைப் பாக்கு கொடுத்து உபசரிப்போம் என்றும் இந்நாட்டில் ஒரேஒரு சிவன்படவர் வாழ்ந்தாலும் சோறுபோட்டு பணத்தை திரட்டி வந்து செலுத்துவோம் என்றும் இரண்டுகரைநாட்டு வாழ் சிவன்படவரும் திருமுக்கூடல் இறைவர்க்கு கல்வெட்டி உறுதி அளித்தோம். இந்த தர்மத்தை மாற்றுகின்றவன் ஏழு தலைமுறைக்கு பிள்ளை இல்லாமல் போகுவானாக என்று கூறுகின்றனர். இவர்கள் அகநாட்டு மீனவர்கள் ஆவர்.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 301. A.R.I.E.p 1917. B.No. 197 ஆசிரியர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
    January 24, 2020
  • பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு

    திருநெல்வேலி அருகில் உள்ள பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற உள்ள தமிழிணையப் பயிலரங்கில் பங்கேற்கிறேன். அழைப்பிதழ் காண்க. வாய்ப்புள்ளோர் வருக.

     

    Share
    January 24, 2020
  • விட்டு விடுதலையாகி

    விட்டு விடுதலையாகி

    பாஸ்கர் சேஷாத்ரி

    கணக்கில்லா காலை மாத்திரை
    தினசரியின் அபிச்வரி
    பெட்டிக்கடைகாரன் கடன்
    அடுக்கிய பழைய பால் கவர்
    வங்கியின் வட்டி விகிதம்
    மணியார்டர் வரும் நாள்
    அவ்வப்போது பார்க்க அப்பாவின் புகைப்படம்
    ஓரத்தில் கிடக்கும் மிதிவண்டி
    ஒரு கால் உடைந்த கைக்குச்சி
    உறக்கம் துரத்தாத இரவுகள் – எனக்கு
    இருட்டில் தான் கண்கள் தெரிகின்றன.

    Share
    January 24, 2020
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நாங்குநேரி வாசஸ்ரீ

    104. உழவு

    குறள் 1031

    சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை

    பல பொழைப்பு இருந்திச்சின்னாலும் இந்த ஒலகம் வெள்ளாமைய நம்பிதான் சுத்திக்கிட்டுருக்கு. அதனால எம்புட்டு சங்கடம் இருந்தாலும் விவசாயந்தான் ஒசந்தது.

    குறள் 1032

    உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து

    வெள்ளாம பாக்காம மத்த சோலி பாக்கவங்க எல்லாரையும் விவசாயி தாங்குததால அவுக இந்த ஒலகத்தோட அச்சாணி ஆவாக.

    குறள் 1033

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

    வெள்ளாம பாத்து கெடச்சத சாப்பிட்டு வாழுதவங்க தான் உரிமையோட ஒசந்த வாழ்க்க வாழுதாங்க. ஏம்னா மத்தவுக எல்லாரும் யாரையாவது கும்பிட்டு வருததுல சாப்பிட்டு அவுக பொறத்தாலயே சுத்துதவுகதான்.

    குறள் 1034

    பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்

    நெறைய ராசாவோட குடை நிழல தன் குடைக்குக் கீழ கொண்டு வருத வலிம விவசாயிக்கு உண்டு.

    குறள் 1035

    இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்

    தன் கையால சோலிபாத்து பொழைக்கவங்க மத்தவுககிட்ட கையேந்தி நிக்க மாட்டாக. தங்கிட்ட கேட்டு வந்தவுகளுக்கு இல்லன்னு சொல்லாம குடுக்கவும் செய்வாக.

    குறள் 1036

    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேமென் பார்க்கும் நிலை

    வெள்ளாம பாக்கவன் சொணங்கி இருந்தாம்னா எல்லாத்திலயும் ஆசய விட்டதா சொல்லுத துறவிங்க கூட வாழ ஏலாது.

    குறள் 1037

    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்

    ஒரு பலம் புழுதி மண்ணு கால் பலம் ஆகுத அளவு பல தடவ உழுது காயவிட்டாம்னா பொறவு ஒரு பிடி எரு இடாமக்கூட பயிர் செழுமையா வெளையும்.

    குறள் 1038

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு

    உழுததக் காட்டிலும் உரம் இடுதது நல்லது. இந்த ரெண்டும் செஞ்சு களை புடுங்கின பொறவு தண்ணி பாய்ச்சுததக் காட்டிலும் பயிரக் காவல் செய்யுதது நல்லது.

    குறள் 1039

    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும்

    நெலத்துக்கு உரியவன் தெனைக்கும் நெலத்தப் போய்ப் பாக்காம சொணங்கி இருந்தாம்னா அது அவன்மேல இருக்க வெறுப்பால வெலகிப் போன பொஞ்சாதி கணக்கா வாடி வெளச்சலில்லாமப் போவும்.

    குறள் 1040

    இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்

    பொழைக்க வழியில்ல னு நெனைச்சு சடவா இருக்கவனப் பாத்து பூமித்தாய் தனக்குள்ளார எளக்காரமா சிரிச்சிக்கிடுவா.

    Share
    January 24, 2020
  • படக்கவிதைப் போட்டி – 242

    படக்கவிதைப் போட்டி – 242

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அய்மான் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
    January 23, 2020
  • படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிறு குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 241க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகின்றன.

    மணல் மாளிகையிலேயே மனநிறைவு கொள்ளும் மழலையருக்கும், எத்தனை வசதி வாய்ப்புகள் வந்தாலும் நிறைவின்றி அத்தனைக்கும் ஆசைப்படும் பெரியோருக்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடு?!

    ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” எனும் குமரகுருபரப் பெருமானின் வார்த்தையை மந்திரச் சொல்லாய்க் கொண்டால் இன்றைய எந்திர வாழ்விலும் நிலைத்த இன்பத்தைக் காணலாம்!

    இனி, இப்படத்துக்கு ஏற்றதாய்க் கவிதைகள் வடித்துத்தர வாருங்கள் என்று கவிஞர்களைக் கனிவோடு அழைக்கின்றேன்!

    *****

    ”புதிய உலகுக்குப் பிள்ளைகளைத் தயார்ப்படுத்துவது பதின்மப் பருவம். அதில் பதியம் போடும் பண்புவிதைகள் நற்பலன்களை நல்கும்” என்கிறார் திரு. கே. மகேந்திரன்.

    பதின்மம்
    =========
    பதின்ம வயதினிலே
    புதுமைக் கிளர்ந்து எழும்
    மதிக்கு ஒப்புகின்ற
    பதிலைத் தேடி எழும்

    புதிய உலகமொன்று
    உதயம் ஆவததே
    பதியம் போடும் விதை
    பண்பு விதை களெனில்

    மகிழ்வைக் கெடுக்காதே
    மாண்பைப் பயிற்றிடலாம்
    மனம் நல்நிலமாமே
    குணத்தை வளர்த்திடலாம்

    இதிலே கோட்டை விட்டால்
    இனியும் வாய்ப்பு இல்லை
    இகத்தை மாற்றுதற்கு
    இவரே அடித்தளமாம்

    *****

    ”கணினி விளையாடல் நிறுத்திக் களத்திலே ஆட வேண்டும்; ஏட்டுப்படிப்பு மட்டுமன்றி எல்லாந்தெரிய வேண்டும். கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றிடவும் வேண்டும்” என்று சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மனிதம் பழக்கு!

    அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
    அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
    கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
    களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

    மணல்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
    புனல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
    சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
    கூடிவாழ்ந்து கோடிநன்மை பெற்றுவாழ வேண்டும்

    வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
    ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
    கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
    சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்!

    *****

    மணல்வீடு கட்டும் பிள்ளைகளை வைத்து மனங் கொள்ளத்தக்க நல்லுரைகளை நவின்றிருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    அடித்தளமாய்…

    மணலில் வீடு கட்டியேதான்
    மனம்போ லாடிய காலமெல்லாம்
    மணல்போல் மறைந்தே போயினவே
    மனதில் நினைவை விட்டுவிட்டே,
    கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
    களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
    பிணக்குடன் அவரைத் தடுக்காதே
    பிறகவர் உயர்வுக் கடித்தளமே…!

    மணல்வீடு கட்டிப் பிள்ளைகள் மனம்போல விளையாடிய காலமெல்லாம் மெல்ல மறைந்து வருகின்றன. (படத்தில் காணும்) இப்பிள்ளைகளேனும் அவ்வின்பத்தை அனுபவிக்கட்டும்! தடுக்காதீர்! என்று பெரியவர்களுக்குப் பொருளுரை புகலும் இக்கவிதையினை இயற்றியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
    January 23, 2020
  • உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    உள்நோக்கத்திற்கு ஆதாரமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஒரு வாரத்திற்கு முன்னால் இப்போதைய இந்திய அரசு மதத்தின் அடிப்படையில் குடிமக்களை வேறுபடுத்துகிறது என்ற கருத்தைக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் சொன்னேன். நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை; இது பொய்யான செய்தியைப் (fake news) பரப்புவது என்று வாசகர்கள் சிலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.  உள்நோக்கத்திற்கு ஆவண ஆதாரம் தேட முடியாது. ஆவண ஆதாரத்தில் உள்நோக்கம் வெளிப்படாது.  செயல்களைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் உள்நோக்கம் வெளிப்படும்.  பா.ஜ.க. அரசின் செயல்களை – மௌனங்களையும்தான் – வைத்தே என் கருத்தைச் சொன்னேன்.  இந்தக் கருத்து என்னைப்போல் சமூகச் சிந்தனை, தார்மீக உணர்வு உள்ளவர்களுக்கும் உடன்பாடே.  மற்றவர்களுக்காக என் கருத்துக்கு ஆதாரமாக இருப்பவற்றை – இது பலவாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை வைத்து மட்டும் – சொல்கிறேன்.

    குடிமக்கள் யார் என்பது ஒரு நாட்டின் தன்மையை, ஆன்மாவை விளக்கும் கேள்வி.  இதனால்தான் ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தில் இந்தக் கேள்விக்குப் பதில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. 1950 ஜனவரி 26இல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திலும் குடிமக்களை வரையறுப்பதைக் காணலாம். இந்திய நாடு பல மதம், இனம், குடியேற்றம் ஆகியவற்றை அடக்கிய மக்களைக் கொண்ட, பன்மைத்தன்மை கொண்ட நாடு என்று நம் அரசியல் சட்டம் வரையறுக்கிறது.  அதன் வாசகம் கீழே.

    Every person who was at the commencement of the Constitution (26 January 1950) domiciled in the territory of India, and (a) who was born in India, or (b) either of whose parents was born in India, or (c) who has been ordinarily resident in India for not less than five years, became a citizen of India.

    இந்தச் சட்டம் அவ்வப்போது மாறிய அரசியல் கொள்கைகள், சட்டப் பிரச்சினைகளைப் பொறுத்துத் திருத்தம் செய்யப்பட்டது.  திருத்தங்களின் விபரம் இதோ:

    The legislation related to this matter is The Citizenship Act, 1955, which has been amended by the Citizenship (Amendment) Acts of 1986, 1992, 2003, 2005, 2015 and 2019. The 1986 amendment restricted citizenship by birth to require that at least one parent had to be an Indian citizen. The 2003 amendment further restricted that aspect by requiring that a parent could not be an illegal immigrant. The 2003 amendment also mandated the Government of India to construct a National Register of Citizens. The 2019 amendment provided an easier path to citizenship for persecuted selected minorities, i.e. Hindus, Sikhs, Buddhists, Jains, Paris and Christians from the neighbouring Muslim-majority countries of Bangladesh, Pakistan, and Afghanistan who entered India before December 2014. (2003-இல் ஆண்டது வாஜ்பாயி தலைமையில் இருந்த பா.ஜ.க. கூட்டணி)

    2019-ஆம் ஆண்டுத் திருத்தத்தை பா.ஜ. க. ஆட்சி  பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றயது.  இது எப்படி குடிமக்களை வேறுபடுத்தி ஒதுக்குகிறது என்று பார்க்கலாம்.  இது எப்படி இந்தியாவின் ஆன்மாவையே காயப்படுத்துகிறது என்றும் காணலாம்.  குடிமக்களை வேறுபடுத்துவது, சட்டத்தின் உள்நோக்கம் பற்றியது;  சட்டத்தில் இது வெளிப்படையாக இல்லை; இருக்க முடியாது. வலதுசாரி அரசியல்வாதிகள் இந்தச் சட்டத்தின் நோக்கம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களைக் களைய வேண்டும் என்பதே என்று சொல்கிறார்கள்.  அண்மைப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இவர்களைக் கறையான்கள் என்றார்.  கறையானைப்போல நாட்டை அரிக்கிறார்கள் என்று சூசகமாகச் சொன்னார்.  இதற்கு எந்த ஆதாரமும் தரவில்லை.  கறையான்களை அழிப்பதுபோல் இவர்களை ஒழிக்க வேண்டும் என்பது சொல்லாமல் விட்ட நோக்கம். எப்படி ஒழிப்பார்கள் என்பதை இப்போது மத்திய அரசு அஸ்ஸாமிலும் மற்ற மாநிலங்களிலும் கட்டிக்கொண்டிருக்கும் சிறைச்சாலைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்து எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்ற பிம்பத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.  இவர்கள் இஸ்லாமியர்கள் என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  அதோடு இவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். குடியுரிமைச் சட்டத்தின் நோக்கம் பயங்கரவாதிகளைச் சிறையில் தள்ளி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று நாடகம் போடுகிறார்கள்.  மோதி, நாட்டின் காவல் நாயகன் என்னும் பிம்பத்தை வளர்க்க இந்தச் சட்டம் ஒரு கருவி.

    ஊடுருவியவர்கள் பற்றிய இந்தக் கருத்தாடலுக்கு வரலாற்றுச் சான்று இல்லை.  திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு முன்னோடியாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமக்களைக் கண்டுபிடித்தல் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்தார்கள்.  அஸ்ஸாமில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அங்குள்ள இந்துக்கள் சிலருக்கு சில காலமாக வருத்தம்.  இந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகோ பங்களாதேஷ் தனிநாடாக ஆன பிறகோ வந்தவர்கள் அல்லர்.  காலனி ஆட்சியில் அஸ்ஸாமில் விவசாயத்தை வளர்த்து கல்கத்தாவுக்கு உணவு சப்ளை செய்வதற்காக காலனிய அரசு அன்றைய பிரிபடாத வங்காளத்திலிருந்து மக்கள் அஸ்ஸாமில் குடியேற ஊக்கப்படுத்தியது.  அப்படிக் குடியேறியவர்களில் இஸ்லாமியர்களும் உண்டு (ஆதாரம் New York Review  of Books என்ற புகழ்பெற்ற இதழில் (ஜனவரி 6, 2020) வெளியான Why Hindu Nationalists Trialed India’s Citizenship Law in Assam என்னும் கட்டுரை; இதை எழுதியவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள Many Rivers, One Sea: Bangladesh and the Challenge of Islamist Militancy என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் ஜோசப் ஆல்ச்சின்.   இந்த இஸ்லாமியர்களைத்தான் பா.ஜ.க. அரசு, இவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ் குடிமக்கள்; இந்தியாவுக்குள் ஊடுருவியவர்கள் என்று நம்மை நம்பவைக்க முயல்கிறது. இவர்கள் காலனிய காலத்திலிருந்து பல தலைமுறைகளாக அஸ்ஸாமில் வாழ்பவர்கள் என்னும் வரலாற்று உண்மையை நம் கண்ணிலிருந்து மறைக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ்,  இந்தியக் குடியுரிமைக்கு ஆவணம் காட்ட இயலாதவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட மக்களில் பலர் இந்துக்கள். இந்த விளைவை பா.ஜ.க அரசு எதிர்பார்க்கவில்லை.  இவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்று ஒரு மாயையைத் தோற்றுவிப்பதற்காக, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையராக உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை மட்டும் – இந்தச் சிறுபான்மையினரில் 90 சதவிகிதத்தினருக்கு மேல் இந்துக்கள் – இந்தியா அரவணைத்துக்கொள்கிறது என்று நம் கண்ணில் மண்ணைத் தூவப் பார்க்கிறது. இந்தச் சட்டத்தால், இந்தியக் குடியுரிமை கிடைக்காமல் போகிறவர்களில் காலனிய காலத்திலிருந்து அஸ்ஸாமில் குடியிருக்கும் இஸ்லாமியர்களே அதிகம்.  பா.ஜ.க. இந்தச் சட்டத்தின் நோக்கத்தைப் பற்றித் தரும் விளக்கத்தில் ஏராளமான ஓட்டைகள். மதக் கொடுமைக்கு ஆளான சிறுபான்மையினரே, இந்தியக் குடிமக்களாகத் தகுதி பெறுவார்கள் என்றால், இஸ்லாமியர்களுக்குள்ளேயே மேற்சொன்ன நாடுகளில் சிறுபான்மையராக இருந்து அவதிப்படும் அகமதியர்கள் போன்ற பல இஸ்லாமியச் சிறுபான்மையருக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்க வேண்டும்; ஆனால், கொடுக்கவில்லை.  மியான்மாரிலிருந்துவிரட்டப்படும் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும்; செய்யவில்லை  இவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் என்பதாலேயே இந்தச் சட்டத்திற்குள் கொண்டுவரப்படவில்லை. மேலும் மேற்சொன்ன இஸ்லாமிய நாடுகளையே குறிவைப்பதால், இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பது பற்றி இந்தச் சட்டம் பேசவில்லை. (தமிழ் இனத்தைக் காப்போம் என்று மார்தட்டும் அ.தி.மு.க. இந்தச் சட்டத்திற்கு வாக்களிக்காதிருந்திருந்தால் இந்தச் சட்டம் ராஜ்ய சபையில் நிறைவேறியிருக்காது.) இவற்றால் இந்தச் சட்டத்தின் நோக்கம் பிற நாடுகளில் மதத்தின் சார்பில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் தருகிறது; இந்தப் பெருந்தன்மையைக் காட்டுவதுதான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று சொல்லித்திரிவது ஏமாற்று வேலை.

    அடுத்தது, இந்திய ஜனத்தொகைப் பதிவேடு (National Population Register). இது காங்கிரஸ் ஆட்சியிலேயே (ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி) கொண்டுவரப்பட்டது.  ஆதார் அடையாள அட்டை அமலுக்கு வந்தபோது அரசின் ஏழைகளுக்கான உதவி திட்டங்களில் இருந்த ஊழல்களை ஒழிப்பதற்காக – ஒரே நபர் இரண்டு மூன்று தடவை இடம்பெறுவதைத் தடுப்பதற்காக – ஆதார் அட்டை தேவை என்று சொல்லப்பட்டது.  இதற்கான எதிர்ப்புகள் தனிப் பிரச்சினை; அதைப் பற்றி இங்கு சொல்லவில்லை.  ஆதார் அட்டையில் உள்ள குறுகிய அளவுத் தகவல்களை வலுப்படுத்த அதிகத் தகவல்களைச் சேர்ப்பதற்கு இந்தப் பதிவேடு.  இது தற்சமயம் ஒரு இடத்தில் வசிக்கும் மக்களைப் பற்றிய விபரம் தேடுவதற்கு என்று அப்போது சொல்லப்பட்டது.  இன்று இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே மக்கள் வேலைக்காக அதிக அளவில் இடம்பெயர்வதால் அவர்களைப் பற்றிய கணிப்பு தேவை என்று சொல்லப்பட்டது. இந்த வகையில் இது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஜனத்தொகைக் கணிப்பிலிருந்து (Census) வேறுபட்டது என்று வாதிடப்பட்டது.  பா.ஜ.க. அரசு காங்கிரஸ் செய்ததைத்தான் தாங்கள் தொடர்ந்து செய்கிறோம் என்பது பாதி உண்மையை மறைப்பதாகும்.  பழைய பதிவேட்டில் இல்லாத இரண்டு கேள்விகளை பா.ஜ.க. அரசு சேர்த்திருக்கிறது.  அவை குடிமகனின் தந்தை பிறந்த இடமும் தேதியும் பற்றியவை.  இவற்றைக் கேட்பதன் காரணம் தந்தை பாகிஸ்தானிலோ பங்களாதேஷிலோ பிறந்தவரா என்று தெரிந்துகொள்ளத்தான் என்று ஊகிக்க முடியும். பா.ஜ.க. தலைவர்கள் சட்டத்தில் இது இல்லை என்று திருப்பித் திருப்பிச் சொன்னாலும், பா.ஜ.க. அரசின் இஸ்லாமிய விரோதக் கொள்கையின் மூலம் (இதைப் பற்றி ஆதாரம் வேண்டுமென்றால் ஒரு புத்தகமே எழுதலாம்) இப்படி ஊகிப்பது பிரம்மவித்தை அல்ல.  முன்னோர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்ட பிறகு அவர்களுக்கு என்ன நேரும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

    இந்தப் புதிய கேள்விகள் எதற்கு என்று எதிர்ப்பு எழுந்தவுடன் பா.ஜ.க. அரசு முதலில் இந்தத் தகவலுக்கு ஆவணம் காட்டத் தேவையில்லை என்று பின்வாங்கியது; அடுத்து இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது கட்டாயமில்லை என்று பல்டி அடித்தது. எதிர்ப்பு வந்தால் பின்வாங்குவது உள்நோக்கத்தைச் சந்தேகப்பட வைக்கிறது அல்லவா? கால் விரலைத் தண்ணீருக்குள் விட்டுப் பார்த்து, சுட்டால் எடுத்துவிடுவோம்; இல்லையென்றால் குட்டையைக் குழப்புவோம் என்பதைப் போன்றது இந்த நடிப்பு.

    தந்தையின் பிறந்த இடம், தேதியைக் கேட்பதற்கு மேல் சென்று, தாத்தாவின் பிறந்த ஊரையும் தேதியையும் விசாவின் விண்ணப்பத்தில் இப்போதைய பா.ஜ.க. அரசு சேர்த்த்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுப் பிரஜைகளாக வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியப் பயணத்துக்காக வெளிநாட்டுத் தூதரகங்களில் விண்ணப்பித்தால் அப்பா, தாத்தா பிறந்த இடம், தேதி கொடுக்க வேண்டும்.  (ஆதாரம் புதிய விசா விண்ணப்பப் படிவம்).  இந்தத் தகவல்களைத் தருவதற்கு ஆவண ஆதாரமும் காட்ட வேண்டும்.  இவை எத்தனை பேரிடம் இருக்கும்?  ஆவணம் இல்லாவிட்டால் விசா கிடைக்காது.  இந்திய வம்சாவளியினர் ஒருவர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய தந்தை, தாத்தா பாகிஸ்தானில் பிறந்திருந்தால் விசா கிடைக்கும் வாய்ப்புக் குறைவு; ஆவணச் சான்று காட்ட முடியவில்லையென்றால் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம்.  இதைத்தான் என் கட்டுரையில் நண்பர் ஒருவரின் அனுபவத்தைக் வைத்து எழுதியிருந்தேன்.

    இஸ்லாமிய எதிர்ப்பில் உள்ள ஒரு அம்சம் நாடு பிரிவினையானபோது இந்தியாவின் மதச்சார்பின்மையை ஏற்று இந்தியாவில் தங்க முடிவு செய்தவர்களின் நாட்டுப்பற்றைப் பற்றிய சந்தேகம்.  இவர்கள் இந்தியாவுக்குத் துரோகம் செய்யக் கூடியவர்கள் என்று ஒரு பிம்பம்.  இது எவ்வளவு மோசமானது, ஆதாரமற்றது என்று காட்டத்தான் இந்தியப் பற்றை வெளிப்படுத்தும் சில முழக்கங்கள் இஸ்லாமியர்களால் எழுதப்பட்டவை என்று எழுதினேன். இவற்றில் ஒன்றுக்கு ஆதாரம் இது.  ஜெய்ஹிந்த என்ற முழக்கம் சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்டது என்ற எண்ணம் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதை உருவாக்கியவர் ஹைதராபாத்தில் பிறந்து ஜெர்மனியில் பொறியியல் படிக்கும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக உயர்ந்து போரிட்ட ஒரு இஸ்லாமியர்.  அவர் பெயர் ஸைன் உல் அபிதீன் ஹாஸன் (Zain -ul Abideen Hasan). இதற்கு ஆதாரம் நரேந்திர லூதர் எழுதிய  Lengendotes of Hyderabad என்னும் ஆராய்ச்சி நூல்.  இதை நேதாஜி ஏற்றுக்கொண்டு பயன்படுத்தினார்.

    பா.ஜ.க. எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதாரம் கேட்பவர்கள் மோதியிலிருந்து பா.ஜ.க.வினர் சொல்லும் பொய்களுக்கு என்ன ஆதாரம் தருகிறார்கள்? பிரதம மந்திரி சொல்வதனாலேயே அவை உண்மை என்று நினைக்கிறார்களா? “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பது குறள். இது எல்லாருக்கும் பொருந்தும். நான் சொல்வதற்கு மட்டுமல்ல; மோதியும் அமித் ஷாவும் சொல்வதற்கும்தான்.

     

    Share
    January 22, 2020
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நாங்குநேரி வாசஸ்ரீ

    103. குடி செயல்வகை

    குறள் 1021

    கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
    பெருமையிற் பீடுடைய தில்

    கடமையச் செய்யுததுக்கு ஒருத்தன் சொணங்காம மொனயுததக் காட்டிலும் வேற ஒசத்தியான பெரும னு  ஒண்ணுமில்ல.

    குறள் 1022

    ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
    நீள்வினையான் நீளும் குடி

    மொனைப்பு நெறைஞ்ச புத்தி ரெண்டோடையும் ஓயாத காரியஞ்செய்யுதவனோட குடும்பமும் சுத்துவட்டாரமும் ஒசத்தியடையும்.

    குறள் 1023

    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்

    தன் குடும்பத்தையும் நாட்டையும் ஒசத்துத நெனைப்புல ஓயாம மொனயுதவுனக்கு  உடுப்ப வரிஞ்சு கட்டிக்கிட்டு தெய்வம் முன்ன வந்து தொணையா நிக்கும்.

    குறள் 1024

    சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
    தாழா துஞற்று பவர்க்கு

    தம் மக்கள் ஒசரணுங்குத நெனைப்புல வெரசலா காரியம் செய்யுதவனுக்கு முடிக்குத தெறம தன்னத்தானே வந்துபோடும்.

    குறள் 1025

    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு

    குத்தங்கொற இல்லாம மக்கள் நல்லா இருக்கணும்னு பாடுபடுதவன ஒலகத்தார் சொந்தக்காரனா நெனச்சி சுத்தி இருப்பாக.

    குறள் 1026

    நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்

    நல்ல ஆண்மை ங்கது தான் பொறந்த வீட்டையும் நாட்டையும் சிறப்பா ஆளுத தன்மைய உண்டாக்கிக்கிடுததுதான்.

    குறள் 1027

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை

    போர்க்களத்துல பொறுப்ப ஏத்துக்கிட்டு எதித்து நின்னு வழிநடத்துத வீரன் கணக்கா குடிமக்களத் தாங்குத சக்தி இருக்கவனுக்கு தான் அவுகள ஒசத்துத பொறுப்பு இருக்கு.

    குறள் 1028

    குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்

    குடிமக்கள ஒசத்த நெனைக்கவனுக்கு நேரங்காலம் ஒண்ணும் கெடையாது. சொணங்கி தன் பெருமய நெனச்சி சடவா இருந்தாம்னா எல்லாம் கெட்டுப்போவும்.

    குறள் 1030

    இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி

    சங்கடம் வருத சமயம் கூட இருந்து தாங்குதவுக இல்லாத வீட்டையும் நாட்டையும் அந்தச் சங்கடம் வெட்டி சாச்சிப்போடும்.

    Share
    January 22, 2020
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7

    தி. இரா. மீனா 

    அமரகுண்டத மல்லிகார்ச்சுனா

    கர்நாடக மாநிலம் தும்கூரிலுள்ள தற்போதைய ’குப்பி [அமரகுண்டா]’ மல்லிகார்ச்சுனனின் ஊராகும். ’மாகுடத மல்லிகார்ச்சுனா’ என்பது இவரது முத்திரையாகும். இலிங்கப் பெருமையை உணர்த்துவது இவர் வசனத்தின் சிறப்பாகும்.

    1.“உடலென்னும் நகரத்திற்கு உண்மை என்பது கோட்டையாம்
    அறம் பொருள் இன்பம் வீடு என்ற காவலர்களே விழித்தெழுங்கள்
    அச்சம் பெரியது ,அச்சம் பெரியது.
    அறியாமையெனும் இருள் மிகப் பெரியது!
    ஒன்பது வாயில்களை கவனத்தில் கொள்ளுங்கள்
    ஞான விளக்கை பிரகாசமாய் எரிய விடுங்கள்
    ஐந்து திருடர்கள் ஊடுருவ முயல்கின்றனர்.
    கவனம், கவனம்
    வாழ்க்கைச்  செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்
    மூலத்தின் வாயில் திறந்து
    சிறந்த வழியில் நடப்பது நன்று
    மகாமகிமை மாகுட மல்லிகார்ச்சுனனிடமான
    அறிவுணர்வை ஒரு போதும் தவறவிடக் கூடாது”

    அம்பிகர சௌடய்யா

    கல்யாண் நகரத்தின் மிகச் சிறந்த மனிதர் என்று மதிப்பிடப்படும் சௌடய்யா ஹவேரி மாவட்டம் சௌடாடனபுரா கிராமத்தைச் சேர்ந்தவர். தோணி ஓட்டும் பணி இவருடையது. பெயருக்கு முன்புள்ள அடைமொழியும், எழுதியுள்ள வசனங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. மிக வெளிப்படையான பேச்சாலும், அச்சமற்ற தன்மையாலும் சரணர்கள்  மத்தியில் குறிப்பிடத் தக்கவராக இருந்தார். இலிங்காய தர்மங்களைப் பின்பற்றி அதன் தத்துவங்களை வாழ்ந்து காட்டியவர். அம்பிக சௌடய்யா அவரது  முத்திரை. சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் சாதிப்பிரிவினைகள், கொடுமையான ஆசாரங்கள் ஆகியவற்றை கடுமையாக எதிர்ப்பதாக அவர் வசனங்கள் உள்ளன. துங்கபத்திரா ஆற்றின் கரையோரம் அவருக்கு அமைக்கப்பட்ட நினைவிடம் தற்போது வழிபாட்டு மையமாக உள்ளது.

    1. “படகோட்டி படகோட்டி என்று குறை சொல்ல வேண்டாம்
    நம்பிக்கை வைத்தால் ஒரே பிறப்பில் [துடுப்பு வலிப்பு]
    கரை  சேர்ப்பவன் அம்பிக சௌடய்யன்”
    ”அங்க அழகைப் பெரிதென நினைக்கும்
    மாசுடையவர்களே கேளுங்கள்;
    எது அங்க அழகு?
    குருவுக்கு உடல் கொடுப்பது அழகு,
    இலிங்கத்திற்கு மனம் கொடுப்பது அழகு,
    ஜங்கமத்துக்குப் பொருள் கொடுப்பதழகு,
    சேவை விருப்பமோடு பக்திக் கடலில் நீந்துவது அழகு,
    சிவனடி அடைவதே பேரழகு.
    இதை விட்டுச் சம்சாரம் பெரிதென
    மனைவி மக்கள் செல்வம்
    என்றும் நிலையென எண்ணி
    ஒரு காசும் பிறருக்குக் கொடுக்காமல்
    தானே உண்டு புதைத்து வைத்து
    இறுதியில் எமன்வாய் விழுந்து
    நரகின் நெருப்பில் அழிவதுறுதி
    இப்படி அழகற்றோர் முகம் பார்க்கலாகாதென்றான்
    உண்மையான அடியானென்னும் நம் அம்பிக சௌடய்யா”

    2. “நெருப்பு உண்மையெனில் அது பொய்யாம்
    விறகில்லையெனில் அதிலடங்கிய  நெருப்பு
    சுட்டெரிக்காதென அறிந்தவனே பிராணலிங்கியென்றான்
    அம்பிக சௌடய்யா”

    3.  “ஐயனே ,கற்களுக்காக மலைகள் தேய்ந்தன,
    இலைகளுக்காக மரங்கள் தேய்ந்தன,
    நீராடுவதற்காக எழுகடல்கள் தேய்ந்தன,
    தூபத்திற்கு நெருப்பு தேய்ந்தது,
    நறுமணத்திற்கு தென்றல் தேய்ந்தது,
    வாழ்க எனும் வாழ்த்துதலில் சொற்கள் தேய்ந்தன.
    எனக்கு எது? சரணர்கள்
    மாமனையின் வழிபாட்டிற்கு அமர்ந்தால்
    அவர்தம் காலணிகளுக்கு காவலனாவேன் என்றான்
    அம்பிக சௌடய்யா”

    4.  “எவரோ பயிரிட்ட செடியிலிருந்து மலர்பறித்து
    ஊரார் உருவாக்கிய ஏரியின் நீரெடுத்து
    உலகத்தீரே பாருங்கள் என வழிபாடு செய்தால்
    வழிபாட்டின் பலன் மலருக்கா? நீருக்கா?
    உலகிற்கா?வழிபட்டவனுக்கா?
    நானறியேன் ,நீங்கள் உரைப்பீரென்றான்
    அம்பிக சௌடய்யா”

     5. “ உடலிலணிந்த இலிங்கம் சிறுமை உடையதென்பார்
    மலையின் மீதுள்ள இலிங்கம் போற்றுதலுக்குரியது
    என்பவரைப் பாராய்!
    தலையில் எதுவுமற்ற இவர்களைக் கண்டால்
    கனமான காலணியால் “ பட பட” வென்று அடிப்பாயென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    6. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளய்ய
    காற்று உன் வசமானதல்ல
    நாளை  தூற்றிக் கொள்வேனெனில் இயலாது
    சரணர் காற்றாக வரும்போது
    உன்னைத் தூற்றிக் கொள்வாயென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    7.  “வெல்லத்திற்கு வடிவமுண்டு இனிப்பிற்கு வடிவமுண்டோ?
    அடையாளத்திற்கு வழிபாடுண்டு அறிவிற்குண்டோ வழிபாடு?
    அறிவு உறுதியானால் கையிலுள்ள அடையாளம்
    மறையுமென்றான்  நம் அம்பிக சௌடய்யா”

    8. “பூசை செய்வதேன்? கையில் வைத்துப் பூசிப்பதெதற்கு ?
    ஆலயத்திற்குச் செல்வதெதற்கு ?
    வறுமையான அந்தகனுக்கு அன்னமிட்டால்
    மூவுலமும் போற்றும்
    வறுமையால் வாடும் அந்தகனுக்கு அன்னமிடவில்லையெனில்
    பூசை செய்வதால் என்ன பயனென்றான்
    நம் அம்பிக சௌடய்யா”

    அமுகி தேவய்யா:

    சோலாப்பூரைச் சேர்ந்த தேவய்யாவின் தொழில் ஆடை நெய்வதாகும் இவர் மனைவி பெயர் வரதாணி. ”சித்த சோமநாதா” என்பது  இவரது முத்திரையாகும். சரண தத்துவ வர்ணனை, இஷ்ட இலிங்க வழிபாடு ஆகியவற்றை இவர்  வசனங்கள் பேசுகின்றன.

    1.“ஞானத்தின் வழி அறிந்தென்ன செயல்படாத வரையில்
    செயலின்றி நினைவால் மட்டும் நிறைவேறுமா?
    அந்தகன் பாதையறிதான்,முடவர் நடப்பதற்கரியார்
    ஒன்றில்லாமல் மற்றொன்றால் பயனில்லை
    அறிவற்ற செயல் உயிரில்லாதது,செயலற்ற அறிவு
    வார்த்தைகளின் வெற்றுக் கூடு
    சித்த சோமநாதனோடு இணையும் சரணனுக்கு
    இரண்டும் வேண்டும் “

    2. ’தூசு படியாத காற்றைப் போல
    மை தீண்டாத கண்மணி போல
    நெய்யின் சுவையறியாத நாக்கு போல
    மண் ஒட்டாத மண்வண்டு போல
    சித்த சோமநாதனே!
    இன்பம் பல அனுபவித்தாலும் உன் சரணர் தனித்திருப்பர்”
                                                                                                                                                                                    [ தொடரும்]

    Share
    January 22, 2020
  • சேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)

    சேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    திருவாரூர்த் திருக்கோயிலில் தம் திருப்பாத தரிசனம் தந்த  இறைவன் சுந்தரரிடம் அடியார்களின் சிறப்பை அறிவித்துப் பாடும் முறையையயும் அருளி முதல் அடியையும் எடுத்துக்  கூறியருளினார். சுந்தரர் தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியார்கள் முன் சென்று ஒவ்வொருவரையும் வணங்கினார். பின்னர் அடியார்களின் சிறப்பை இறைவன் அருளிய  முறைப்படி  ‘’தில்லைவாழ்  அந்தணர்’’ முதலாக  ஓரடிக்கு  ஒருவராகத்  திருத் தொண்டர்களைப் போற்றி, வணங்கிப் பாடினார். தில்லை வாழ்  அந்தணர் இறைவனுக்குத் தொண்டராவதில் முதன்மை பெற்றவராவர். ஆகவே முதலில் “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று  இறைவன் அருளிய திருவாக்கை  முதலடியாகக்  கொண்டு  பதினோர்  எண்சீர்த் திருவிருத்தங்கள் கொண்ட“ திருத்தொண்டத்தொகை” என்ற நூலை இயற்றினார். இந்நூலை முதனூலாகக் கொண்டு, திருத்தொண்டர் திருவந்தாதி என்ற வழிநூலைச் சார்ந்து நம் சேக்கிழார் சுவாமிகள் இந்தத் திருத்தொண்டர் புராணத்தை  இயற்றினார். திருஞான சம்பந்தரும் தில்லையில் சிவபெருமானை தரிசித்தபோது, தில்லைவாழ் அந்தணரை  முதலில் வைத்துக் “கற்றாங்கெரியோம்பி“ என்ற திருப்பதிகத்தைப்  பாடினார். இதனை,

    “ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால்
    வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே
    ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும்
    காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி” என்று இப்புராணம் பாடுகிறது.  திருஞான சம்பந்தரின் பதிகம்.

    “கற்றாங்கெரி  ஓம்பிக்  கலியை  வாராமே
    செற்றார்  வாழ்  தில்லை” என்று தொடங்குகிறது. இதனைச்  சேக்கிழார்.

    “தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
    செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
    உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
    எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

    பொருள்: தமது இறைவன் எடுத்துக்கொடுத்த மொழிகளையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய்ச் செம்பொருள் கொண்டு திருத்தொண்டத் தொகையாகிய திருப்பதிகத்தை அந்த இறைவனே அருளும் உணர்வுபெறுதலால் உலகம் ஏத்துமாறு எமது தலைவராகிய வன்றொண்டர் பாடி முடித்து அத்திருக் கூட்டத்தின் முன்னர் வணங்கினார்.

    விளக்கம்: தம்மை ஆட்கொண்டு பணித்த இறைவன். முன்னர்த் திருக்கயிலையிலும், பின்னர்த் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருவாரூருள் புகுந்தவரையிலும் பணிகொண்டவர். என்பதைத்  தம்பெருமான் என்ற தொடர் விளக்குகிறது. இறைவன் எடுத்துக் கொடுத்த  திருவாக்கையே “மொழி “ என்ற சொல் புலப்படுத்துகிறது. பின்வரும் பதிகங்களுக்குக்  காரணமான கைம்முதலாக இந்த மொழியே விளங்கியது என்பதைக் “கொடுத்தமொழி முதலாக“ என்ற தொடர் விளக்குகிறது. ’’தமிழ் மாலை‘’ என்ற தொடர் தமிழ்ப் பாட்டுக்களால் ஆன  மாலை  யாகிய பதிகத்தைக் குறிக்கிறது. “செம்பொருள்” என்பது பதிகத்தின் பொருளைக் குறித்தது. செம்மை சிவத்தன்மையாகிய  முத்தியைக்  குறித்தது. இதனை,

    “பிறப்பென்னும்  பேதைமை நீங்கச்  சிறப்பென்னும்
    செம்பொருள்  காண்ப  தறிவு “ என்ற திருக்குறளால்   அறியலாம்.  மேலும் இப்புராணம்,

    “தீதுறு பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு“  என்று பாடுகிறது.

    சைவசமய பரமாசாரிய மூர்த்திகளது தேவார திருவாசகங்களின்பயன் பிறவி நீங்கி வீடடைவதேயாம் என்பது ஆன்றோர் துணிபு. செம்பொருளால் என  இத்திருப் பதிகத்துக்குப் பொருள்கண்டார் ஆசிரியர். திருத்தொண்டர்களின் வரலாற்றையும், பண்புநலன்களையும் தொகுத்துக் கூறுவது திருத்தொண்டத்  தொகை.

    உம்பர் பிரான் – தேவவுலகிலே அரசு வீற்றிருந்தருளிய தியாயகேசர். அவர் அருளிச்செய்த உண்மையறிவினை உண்முகமாகப் பெற்றதனாலே அதனை உலகம் ஓதி உய்யும்பொருட்டுப் பாடி என்க. மொழிஎடுத்துக் கொடுத்தருளு முன்னரே பொருள்களை உண்ணின்று உணர்த்தினார். என்பது “மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டையுணர நல்கி“ என இப்புராணத்தில் கூறியதனாற் பெறலாம். எனவே திருத்தொண்டத் தொகைப்பொருள் யாவும் இறைவன் அருளிய பதிஞானத்தாற் பாடியதாலும், அவனே தந்த மொழிகொண்டு பாடியதாலும் அது முற்றும் தியாகே சருடைய வாக்கேயாய்ப் பதிவாக்காகியவேதமே என்பது துணியப்பெறுதலினாலே அதன் துணைகொண்டு பாடி என்பதைப் “பெறப்பாடி “ என்ற தொடர் விளக்கும். முன்னர்ச் சென்னியுற வணங்கிய வன்தொண்டர் இப்போது  தொண்டர்களை  வணங்கினார்  என்பதை,

    “உலகேத்த  எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார்” என்ற தொடர் விளக்குகிறது.  இனி முழுப்பாடலையும் பாடிப் பயில்வோம்,

    “தம்பெருமான்  கொடுத்தமொழி  முதலாகத்  தமிழ்மாலை
    செம்பொருளால்  திருத்தொண்டத்  தொகையான  திருப்பதிகம்
    உம்பர்பிரான்  தானருளும்  உணர்வுபெற  உலகேத்த
    எம்பெருமான்  வன்தொண்டர்  பாடியவர்  எதிர்பணிந்தார் “

    இதனால் திருத்தொண்டத்தொகையின் தோற்றமும் சிறப்பும் பொருளும் நமக்குப்  புலனாகும் வகையில் சேக்கிழாரின் பாடல் திறம் அமைந்துள்ளதை உணர்ந்து மகிழ்கிறோம்!

    Share
    January 22, 2020
  • சிகரம் சாய்ந்தது!

    சிகரம் சாய்ந்தது!

    முனைவர் ஔவை நடராசன்

    நான் சென்னைக்கு வந்த 1955ஆம் ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமாகத் தெரிந்த கொள்கைக் கோமான் – நீதி வேந்தர் – பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்களின் மறைவைப் பழுத்த கனி உதிர்ந்தது போலத்தான் என்று எழுதிவிட முடியாது.
     
    பழுத்த அந்த மாமரம், ஆயிரம் கனிகளைத் தந்த பயன்மரமாகும். ஏ.எல்.முதலியார் குடும்பத்தை உலகம் காணாத இரட்டையர் குடும்பம் என்பார்கள் ஆனால் தமிழினத்தில் மூன்று கிளைகளாகப் பூத்துக் கனிந்த அறிவார்ந்த புகழ்ச் செல்வங்கள் என்ற பெருமை நீதி வேந்தர் குடும்பத்தைத்தான் சாரும்.
     
    பேரறிஞர் அண்ணாவின் மனங்கனிந்த மூவராக – மருத்துவ மேதை பாலகிருஷ்ணன், பொறியியல் திலகம் இராதாகிருஷ்ணன், நீதிச் சிகரம் கோகுலகிருஷ்ணன் ஒளிர்ந்தார்கள் .
     
    நாம் கண்ணாரக் காண வாய்த்த மூவேந்தர்கள் எனலாம். தமிழ்க்கடல் பள்ளியகரம் நீ.க. அவர்களின் மருகர் தான் டாக்டர் பாலகிருஷ்ணன். பள்ளியகரம் பிள்ளை அவர்கள், நீதியரசர் கோகுலகிருஷ்ணனைப் புகழ்ந்து பேசாத நாளில்லை. மூவரும் ஒரே இல்லத்தில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலும் பிறகு அடையாற்று வளமனையிலும் வாழ்ந்த காலங்கள் நம் இமைகளை நனைக்கின்றன.
     
    அந்த வளமனைக்கு வராத தலைவர்கள் இல்லை. தந்தை பெரியார் முதல், தமிழ்ப்புலவர் அனைவரும் வந்து விருந்தருந்தியதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
     
    சௌந்தரம் அம்மையார் அவர்களின் வளர்ப்பு மகன் போல நான் இருந்த போது, நீதியரசர் என்னைத் தழுவி, “அம்மாவுக்குப் பிடித்த பிள்ளை” என்ற சொல்லை எந்த நாளும் காக்க வேண்டும் என்று ஒரு முறை சொன்னார்.
     
    அம்மாவோ “மகனே!  இவர் என் தம்பி” என்று நீதியரசரைச் சுட்டிக் காட்டினார். நீதியரசர் இனமானம் காக்கும் நெடுந்தூணாக நின்று இலக்கியம், இசை, கலை, கல்வி, பண்பாடு ஆகிய பல்வேறு நிலைகளில் மாபெரும் பணிகளை வெற்றியோடு நிறைவேற்றினார்.
     
    இனிமையான குரலில் – கவினார்ந்த தமிழை – கடல்மடை திறந்தது போல் உரையாற்றுவார்.
     
    அவரால் தொடங்கப்பட்டதே “மணவழகர் மன்றம்.” ,அவர் வெகுண்டு எவரும் பார்த்ததில்லை. பரிவின் பிழம்பாக வாழ்ந்தார். அவர் விரல் பிடித்து என்னை மணவழகர் மன்றப் படியில் நடக்க வைத்தார். கல்லூரிப் படிப்பை நான் முடித்தபோதே “சென்னை பல்கலைக்கழகத்தில் உன்னைச் சேர்த்து விடுகிறேன் – உன் மாமனாரும் – வருங்கால மனைவியும் எனக்கு மிக வேண்டியவர்கள். நான் பிள்ளை வீட்டுக்காரனா – பெண் வீட்டுக்காரனா என்று தெரியவில்லை” என்று பேசியதை நினைத்தால் இன்றும் என் கண்கள் கலங்குகின்றன .
     
    நான் அப்போலோவில் இதய மருத்துவத்தில் இருந்த போது, தொலைபேசியில் என்னை வினவியதை மறப்பதில்லை. ஆண்டுதோறும் தமிழிசைச் சங்க விழாவில் நான் அவரைக் காண்பது வழக்கம்.
     
    மருத்துவர் இராம்குமார் இல்ல அழைப்பிதழ் என் எதிரில் இருக்கிறது. நீதியரசர் திருப்பெயரைக் கண்டு அவ்வளவு மகிழ்ந்தேன்.
     
    எப்படி ஆறுதல் கொள்வது!
     
    மூவர் வாழ்வும் முடிந்துவிட்டது.
    மூவேந்தரால் வளர்ந்தது தானே முத்தமிழ்!
    Share
    January 21, 2020
  • அணிநடை அன்னம்!

    அணிநடை அன்னம்!

    -மேகலா இராமமூர்த்தி

    பண்டைத் தமிழர்கள் நிலத்தையும் பொழுதையும் வாழ்வின் முதற்பொருளாய்க் கருதியவர்கள். மாவொடும் புள்ளொடும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தவர்கள். பூக்களையும் அவற்றைச் சுற்றிவந்த பல வண்ண ஈக்களையும் இரசித்தவர்கள். இயற்கையோடு பிணக்கமில்லா இணக்க வாழ்வு அவர்களுடையது. அந்த இன்ப வாழ்வின் பிரதிபலிப்பை அற்றைத் தமிழ்ப் புலவோரின் தீந்தமிழ்ப் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்துவதே இதற்குத் தக்க சான்றாகும்.

    பறவைகள் குறித்த பழந்தமிழ்ப் பாடல்களை ஆராய்ந்தால், காக்கை, குருவி, குருகு, கூகை, மயில், குயில், அன்னம், அன்றில் எனத் தம் வண்ணத்தாலும் வனப்பாலும் எண்ணங் கவர்ந்த பல்வேறு பறவைகளைப் புலவர்கள் நுணுகி ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை மிகையின்றிப் பதிவு செய்திருக்கின்றார்கள். இப்பறவைகளில் அன்னம் குறித்து நம் புலவர்களின் எண்ணவோட்டம் என்ன என்று ஒருசிறிது ஆராய்வோம் ஈண்டு!

    நீர்நிலைகளில் வாழும் இயல்புடையது அன்னப்புள். வெள்ளை, கறுப்பு, சாம்பல், இவற்றின் கலவை ஆகிய நிறங்களில் அவை காட்சிதரும். வாத்தும் அன்னமும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த பறவைகளே. ஆம், அன்னம் என்பது பட்டைத்தலையுடைய பெரிய அளவிலான வாத்துதான் (Bar-headed goose). ஆனால் அன்னத்தின் நடையில் இருக்கும் நளினமும் கவர்ச்சியும் வாத்திடம் கிடையாது!

    இந்த ’நடை’ வேறுபாட்டைக் கவனித்த புலவர்கள் அன்னத்தின் அழகிய நடையைப் பெண்டிரின் நளின நடைக்கு உவமைக்கியிருக்கிறார்கள். அழகை எங்குக் கண்டாலும் எவற்றினிடத்துக் கண்டாலும் அதனைப் பெண்ணொடு பொருத்திப் பார்ப்பது என்பது ஆண்களின் உளவியலாகவே அன்றுதொட்டு இன்றுவரை தொடர்கின்றது. அதற்குப் புலவர்கள் மட்டும் விலக்காவரோ?

    புகழேந்திப் புலவர் இயற்றிய புகலரு சிறப்புடைய நளவெண்பாவில் ஒரு நயமான காட்சி…

    நிடத நாட்டரசனாகிய நளன் சோலையில் உலவிக்கொண்டிருக்கின்றான். அப்போது வெண்ணிற அன்னம் ஒன்று செந்நிறப் பாதங்களோடு ஆங்கே தோன்றிற்று. அதன் தோற்றப் பொலிவில் சிந்தை பறிகொடுத்த நளன் அதனைப் பிடித்துவருமாறு தன் சேடிப் பெண்களை ஏவ, மயிலொத்த சேடியர் ஒயிலாக ஓடிச்சென்று அவ் அன்னத்தைப் பிடித்துவந்து அரசன்முன் பணிவாக வைத்தனர்.

    பிடிபட்ட அன்னமோ அரசன் தன்னை என்ன செய்யப்போகிறானோ என்று அஞ்சி நடுங்கியது. நளன் அதனிடம், ”அஞ்சாதே மட அன்னமே! உன்னுடைய அணி நடையையும் வஞ்சிக்கொடி அனைய மங்கையரின் மணி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றில் சிறந்த நடை எது என்று தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்; வேறொன்றுமில்லை” என்று உண்மைசாற்றி அதனைத் தேற்றுகின்றான்.

    அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
    வஞ்சி அனையார் மணிநடையும் – விஞ்சியது
    காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
    மாணப் பிடித்ததார் மன்
    .  (நளவெண்பா – 34)

    அன்னத்தின் நடையைக் கண்ணகி நல்லாளின் கவின் நடைக்கு உவமைகாட்டுகின்றார் சிலம்பின் ஆசிரியர் இளங்கோவடிகள். அக்காட்சியைக் காண்போம்!

    புகாரிலிருந்து மதுரைக்குப் பொருள்தேடிப் பயணமான கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் எனும் சமணத்துறவியின் துணையோடு மதுரை மூதூரை அடைகின்றனர். அங்கே பூக்களையே ஆடையாய்ப் போர்த்துச் செல்லுகின்றாள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.
    அவ் அருங்காட்சியைக் கண்ட அன்னநடைப் பெண்ணாள் கண்ணகியும், ஐயனான கோவலனும், ”இது புனல் ஆறன்று; பூம்புனல் ஆறு” என்று அதனைத் தொழுதனர் என்கிறார் அடிகள்.

    புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
    அனநடை மாதரும் ஐயனுந் தொழுது…
    (சிலப் – மதுரைக்காண்டம்: 174-175)

    அழகிய அன்னப்புள்ளைத் தம் உள்ளத்தை உரைக்கும் காதல் தூதாக விடுத்த பாடல்கள் தமிழிலக்கியத்தில் பல உள. ’தூது’ என்பது ஒரு தனிச்சிற்றிலக்கிய வகையாக வளர்ச்சியடைந்தது பதினான்காம் நூற்றாண்டில்தான் எனினும், அதன் தொடக்கத்தைச் சங்க நூல்களிலேயே நாம் காணமுடிகின்றது.

    அன்னச்சேவலைத் தம் ஆருயிர்த் தோழனான சோழ மன்னனிடம் தூது விடுக்கும் பிசிராந்தையாரின் புறப்பாட்டு இது!

    அன்னச் சேவ லன்னச் சேவல்…
    ….குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை யாயி னிடையது
    சோழநன் னாட்டுப் படினே கோழி
    உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கெம்
    பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
    ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
    இன்புறு பேடை அணியத்தன்
    நன்புறு நன்கல நல்குவ னினக்கே
     (புறம் – 67)

    ”அன்னத்தின் சேவலே! (ஆண் அன்னமே) நீ குமரித்துறையிலே அயிரை மீனை வயிறார உண்டுவிட்டு இமயத்தை நோக்கிப் பறக்கின்றனையா? அப்படியாயின், இவ்விரு பகுதிகட்கும் இடையிலுள்ள சோழநாட்டுக்குச் செல்வாயானால், ஆங்கே உறையூர் எனும் ஊர் உளது. நீ அங்குச் சென்றால் அங்குள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; ஆனால் அங்கு வாயிற் காவலர்கள் இருப்பர். எனவே அவர்களுக்கு உன் வரவை உணர்த்தாது நேரே அரண்மனைக்குள் செல்! அங்கே எம் மன்னனாகிய பெருங்கோக் கிள்ளி இருப்பான். அவன் காதில் விழுமாறு நான் பிசிராந்தையாரின் அடிக்கீழ் வாழ்பவன் என்று சொல்! அப்புறம் பார்! உன் மதிப்பு மிக்க பேடை பூணுதற்கு நல்ல அணிகலன்களையெல்லாம் அள்ளித் தருவான் அவன்!” என்று கோப்பெருஞ்சோழனுக்கும் தனக்கும் இருந்த நட்பின் பெட்பினை அன்னச்சேவலிடம் அன்பொடு கூறி அதனை அவன்பால் தூதுவிடுக்கிறார் ஆந்தையார்.

    அன்னப்பறவைகள் வானில் விரைந்து பறக்கும் தன்மையன. அதனால் வினைமுடித்துத் திரும்பும் தலைமகன் ஒருவன் தன் தேர்ப்பாகனிடம், ”பாக! வானில் பறந்துசெல்லும் அன்னப்பறவைகள்போல் குதிரைகளை விரைந்து செலுத்து! அழகிய மையுண்ட கண்களையும், செழித்த கூந்தலையும், சிறு நுதலையும் உடைய என் தலைவியை நான் இப்பொழுதே காணவேண்டும்!” என்று துரிதப்படுத்தும் அழகிய பாடல் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

    …வயங்குசிறை அன்னத்து நிரைபறை கடுப்ப
    நால்குடன் பூண்ட கானவில் புரவிக்
    கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி தவிராது
    இனமயில் அகவுங் கார்கொள் வியன்புனத்து
    நோன்சூட் டாழி ஈர்நிலம்துமிப்ப
    ஈண்டே காணக் கடவுமதி பூங்கேழ்ப்
    பொலிவன அமர்த்த உண்கண்
    ஒலிபல் கூந்தல் ஆய்சிறு நுதலே.
      (அகம் – 334 – மதுரைக் கூத்தனார் – பிற பாட பேதங்கள்: மதுரைக் கடாரத்தனார்; மதுரைக் கந்தரத்தனார் ; மதுரைக் கோடரத்தனார்.)

    நடையழகிற்கும், விரைந்து பறக்கும் திறனுக்கும் மட்டுமன்றி மென் தூவிகளாலும் (இறகுகள்) சிறப்புடையன அன்னங்கள். அம்மென் தூவிகளை அன்றைய தமிழர் தம் பஞ்சணைகட்குப் பயன்படுத்தியமையைச் சங்க நூல்கள் அறியத்தருகின்றன.

    நெடுநல்வாடையில் போர்மேற்சென்ற அரசனைப் பிரிந்து தனித்திருக்கும் கோப்பெருந்தேவியின் பாண்டில் எனும் வட்டக் கட்டிலின் அமைப்பையும் அழகையும் விவரிக்கவரும் நல்லிசைப் புலவர் நக்கீரனார்,

    ”துணையைப் புணர்ந்தபோது உதிர்ந்த அன்னங்களின் தூவியை இணைத்து உருவாக்கப்பட்ட பஞ்சணையை மேன்மையுண்டாக விரித்து, அதன்மேல் தலையணை சாயணை முதலிய அணைகளை இட்டுவைத்து, நன்கு கஞ்சியிட்டுக் கழுவப்பட்டு, மலரிதழ்களை அகத்தே வைத்து மணமேற்றப்பட்ட தூய மடி விரிக்கப்பட்ட படுக்கையைத் தாங்கிய கட்டில் அது” என்று அதன் சிறப்பை நம்கண்முன் நிறுத்துகின்ற காட்சி படித்தின்புறத்தக்கது.

    மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
    துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
    இணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
    காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
    தோடமை தூமடி விரித்த சேக்கை
    (நெடுநல்வாடை : 131-135)

    ”துணைபுணர் அன்னத் தூவியிற் செறித்த
    இணையணை மேம்படத் திருந்து துயில்”
    என்று அன்னத்தூவியால் அமைந்த அணையை ஆசிரியர் இளங்கோவும் சிலப்பதிகாரத்தில் காட்டுகின்றார்.

    எத்துணை இரசனையோடு உலகியல் இன்பங்களைத்

    துய்த்திருக்கின்றான் அற்றைத் தமிழன் என்பதற்குச் சான்றுகள் இவை!

    அன்னத்தைப் பற்றிப் புலவர்கள் பதிவுசெய்திருக்கும் கருத்துக்கள் அனைத்துமே உண்மை என்று கொள்ளுதற்கில்லை. அவற்றில் உண்மையல்லாக் கற்பனைகளும் கலந்திருக்கவே செய்கின்றன. அப்படிப்பட்ட ஒன்றுதான் அன்னம் பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் எனும் கருத்து.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் வைத்துப் போற்றப்படும் நாலடியார், அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்துப் பாலை மட்டும் பருகும் தெளிந்த செயலைப்போல் நீங்களும் கற்கத் தக்கனவற்றைக் கற்றிடுங்கள்; அத்தகுதியற்றவற்றை விலக்கிடுங்கள் என்று அறிவுறுத்துகின்றது.

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து
    (நாலடியார் – 135)

    அன்னத்திற்கு இத்தகு பண்புண்டு என்பதைப் பறைசாற்ற இதுவரை அறிவியல் சான்றாதாரங்கள் ஏதும் கிட்டவில்லை. அல்லவற்றை நீக்கி நல்லவற்றைக் கைக்கொள்ளுதற்கு மனிதனுக்கு வழிகாட்டப் புராணங்கள் மேற்கொண்ட ’ஹம்ச க்ஷீர நியாயம்’ எனும் ஒரு கற்பனை முயற்சியே இஃது என்று கொள்வதில் பிழையில்லை.

    அன்னப்பறவை குறித்த மற்றோர் உண்மை, மேலைநாட்டு அன்னப்பறவையான சுவானும் (swan) நம் நாட்டு அன்னப்பறவையான பட்டைத்தலை வாத்தும் (Bar-headed goose) ஒன்றல்ல என்பதே. இவ்விரண்டையும் ஒன்றென எண்ணி நாம் மயங்குதற்கு, இரவிவர்மா போன்ற புகழ்வாய்ந்த இந்திய ஓவியர்களும் காரணம் எனலாம். தம்முடைய மேற்கத்தியத் தாக்கத்தால் மேல்நாட்டு சுவானை இந்திய அன்னம் என்று கருதுமாறு அவர் வரைந்ததன் விளைவு, இந்தியர் பலரும் நம் நாட்டு அன்னப்பறவை எது என்று கேட்டால் மேனாட்டு அன்னத்தைத்தான் அடையாளம் காட்டுகின்றார்கள் என்று கருத்துத் தெரிவிக்கின்றார் சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான, திரு. சு. தியடோர் பாஸ்கரன்.

    இந்தியப் பறவைகள் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளும் அறிவை மேம்படுத்திக் கொள்ளுதலே இவைபோன்ற குழப்பங்களுக்கு விடைகொடுக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது, கணினியோடு கழிக்கும் நேரத்தில் சிறிதைக் குறைத்துக் கானுயிர்களோடு களிக்கவும் நேரம் ஒதுக்குதலே ஆகும். இயற்கையோடு கை கோப்போம்! இன்பத்தை அள்ளிச் சேர்ப்போம்!

    *****

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/174630-11.html

    2. புறநானூறு –- ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18

    3. அகநானூறு – நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு, ரா. வேங்கடாசலம் பிள்ளை உரை, வெளியீடு – பாகனேரி
    வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார்.

    4. புகழேந்திப் புலவரின் நளவெண்பா –  கழகப்புலவர், செல்லூர்க்கிழார்,
    திரு.செ.ரெ. இராமசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய உரையுடன்.

     

     

     

    Share
    January 20, 2020
  • பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது

    பிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html

    https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html

    காலக் குயவன் ஆழியில் படைத்த
    ஞாலத்தின் நடுக் கருவில்
    அசுர வடிவில்
    அணுப்பிளவு உலை ஒன்று
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருப் பொருளை இடையே
    பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சமைத்துக்
    கொதிக்க வைக்குது !
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து
    பீறிடும் எரிமலைகள் !
    தாறு மாறாய் தடம் மாறி
    ஊர்ந்து தாளமிடும்
    தாரணியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடி
    பொங்கிப் பீறிடும்
    பூதக் கனல் எரிமலைகள் !
    நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !
    அணு உலை வெப்ப மீறலைத்
    தணிப்பவை அவை !
    உட்கருவின்
    பூத அணு உலையே
    பூமியின்
    அச்சைச் சுழற்றி
    ஆட வைக்கும் மின்ஜனனி !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

    +++++++++++

    2020 புத்தாண்டின் பூதப்பெரும் பேரழுத்த மின்னல் எரிமலை

    கடந்த எரிமலை பீறிட்டு நாற்பத்தி மூன்று ஆண்டுகட்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்றான லூசான் தீவில் 2020 ஜனவரி 12 ஆம் தேதி “தால் எரிமலை” [Taal Volcano] நீராவியோடு ஸல்ஃபர் ஆக்ஸைடு புகை முகிலை, 9 மைல் [14 கி.மீ.] உயரத்தில்  உமிழ்ந்து வெளியேற்றி 500,000 மக்களை வெறும் கையுடன் புலம்பெயர வைத்துள்ளது. லூசான் தீவு  தலைநகர் மணிலா விலிருந்து தெற்கே 40 மைல் தூரத்தில் உள்ளது.  எரிமலை பீறிடும்  அந்நிகழ்ச்சியைப் படமெடுத்த ஜப்பான் ஹிமாவரி- 8 துணைக்கோளை நாசா விண்வெளித் தேடல் பெருங்கூடம்  அறிவித்துள்ளது.  சுமித்சோனியன் பூகோள எரிமலைத் தோற்ற ஏற்பாடு    [Smithsonian Institution’s Global Volcanism Program] கூற்றுப்படி 1960 ஆண்டு முதல் 1977 வரை, அடுத்து 2006, 2008, 2010 & 2011 ஆண்டுகளில், தால் எரிமலை, நில நடுக்கமோடு மேளம் தட்டி வருகிறது.  அப்போது நீராவி வெப்ப நேர்வு மிகுந்து [Hypothermal Activity] பேரளவு கணப்பு திரவம், [எரிமலைக் குழம்பு]  பொங்கி வீழ்ந்து, புகைமுகில் சாம்பல் பல மைல் உயரத்துக்கு எழுகிறது.  எரிமலைக் குழம்பு துளையிட்டு வரும்போது, நீருடன் இணையும் சமயத்தில் திடீரென ஆவியாகி 8 மடங்கு பலத்த வலுவுடன் ஏறி அடிக்கிறது. இப்போது [2020 ஜனவரி 19] வரை 144 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  1572 ஆண்டு முதல் 1977 வரை 33 முறைகள் எரிமலை எழுந்து மக்களுக்கு இடர் விளைவித்துள்ளது.

     

    ++++++++++++

    எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor)

    Posted on November 28, 2017

     

    Image result for geo-reactor at centre of earth,s core

    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேல்தளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்களை உண்டாக்கியும் எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜ்ஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்றமில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப்படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக்கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கெனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன! 2000 – 2003 ஆண்டுகளுக்கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித்துள்ளது! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேல்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக்கொண்டே போகின்றன. 1973இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

     

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.

    அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலை  யங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    தகவல்:

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)

    39.geo-reactor at centre of earth,s core  [January 2002]

    40. http://gulfnews.com/news/uae/general/earth-s-core-a-reactor-that-is-shutting-down-1.351697  [March 23, 2003]

    41 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    42. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [Novenber 3, 2017]

    43. https://en.wikipedia.org/wiki/Inner_core [November 14, 2017]

    44.  https://en.wikipedia.org/wiki/Taal_Volcano

    45.  https://en.wikipedia.org/wiki/List_of_active_volcanoes_in_the_Philippines

    46. https://www.space.com/taal-volcano-eruption-philippines-9-mile-plume-video.html

    47.  https://www.bloomberg.com/news/articles/2020-01-19/philippines-keeps-guard-on-deadly-volcano-eruption-amid-quakes

    48. https://www.nbcnews.com/news/world/taal-volcano-simmers-philippine-officials-brace-long-crisis-n1118306

    49. https://www.livescience.com/taal-volcano-eruption-seen-from-space.html?

    50. https://www.cnn.com/2020/01/17/asia/taal-volcano-philippines-fatal-attraction-intl-hnk/index.html

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  [January 19, 2020 [R-2]

    SHARE THIS:

    Posted in சூழ்வெளி, சூழ்வெளிப் பாதிப்பு, பிரபஞ்சம், பேரிடர்கள், விஞ்ஞானம் | Leave a reply

     
     
     
     
     
    ReplyForward
     
     
     
     
     
     

     

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    Image result for philippines volcano"

    https://www.cnn.com/2020/01/12/asia/taal-volcano-eruption-philippines-trnd/index.html

    https://www.cnn.com/2020/01/12/asia/gallery/taal-volcano-eruption/index.html

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

     

    காலக் குயவன் ஆழியில் படைத்த
    ஞாலத்தின் நடுக் கருவில்
    அசுர வடிவில்
    அணுப்பிளவு உலை ஒன்று
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருப் பொருளை இடையே
    பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சமைத்துக்
    கொதிக்க வைக்குது !
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து
    பீறிடும் எரிமலைகள் !
    தாறு மாறாய் தடம் மாறி
    ஊர்ந்து தாளமிடும்
    தாரணியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடி
    பொங்கிப் பீறிடும்
    பூதக் கனல் எரிமலைகள் !
    நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !
    அணு உலை வெப்ப மீறலைத்
    தணிப்பவை அவை !
    உட்கருவின்
    பூத அணு உலையே
    பூமியின்
    அச்சைச் சுழற்றி
    ஆட வைக்கும் மின்ஜனனி !

    ++++++++++

    புதிய உமர் கயாம்

    +++++++++++

    2020 புத்தாண்டின் பூதப்பெரும் பேரழுத்த மின்னல் எரிமலை

    கடந்த எரிமலை பீறிட்டு நாற்பத்தி மூன்று ஆண்டுகட்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் நாட்டுத் தீவுகளில் ஒன்றான லூசான் தீவில் 2020 ஜனவரி 12 ஆம் தேதி “தால் எரிமலை” [Taal Volcano] நீராவியோடு ஸல்ஃபர் ஆக்ஸைடு புகை முகிலை, 9 மைல் [14 கி.மீ.] உயரத்தில்  உமிழ்ந்து வெளியேற்றி 500,000 மக்களை வெறும் கையுடன் புலம்பெயர வைத்துள்ளது. லூசான் தீவு  தலைநகர் மணிலா விலிருந்து தெற்கே 40 மைல் தாரத்தில் உள்ளது.  எரிமலை பீறும்  அந்நிகழ்ச்சியைப் படமெடுத்த ஜப்பான் ஹிமாவரி- 8 துணைக்கோளை நாசா விண்வெளித் தேடல் பெருங்கூடம்  அறிவித்துள்ளது.  சுமித்சோனியன் பூகோள எரிமலைத் தோற்ற ஏற்பாடு    [Smithsonian Institution’s Global Volcanism Program] கூற்றுப்படி 1960 ஆண்டு முதல் 1977 வரை, அடுத்து 2006, 2008, 2010 & 2011 ஆண்டுகளில், தால் எரிமலை, நில நடுக்கமோடு மேளம் தட்டி வருகிறது.  அப்போது நீராவி வெப்ப நேர்வு மிகுந்து [Hypothermal Activity] பேரளவு கணப்பு திரவம், [எரிமலைக் குழம்பு]  பொங்கி வீழ்ந்து, புகைமுகில் சாம்பல் பல மைல் உயரத்துக்கு எழுகிறது.  எரிமலைக் குழம்பு துளையிட்டு வரும்போது, நீருடன் இணையும் சமயத்தில் திடீரென ஆவியாகி 8 மடங்கு பலத்த வலுவுடன் ஏறி அடிக்கிறது. இப்போது [2020 ஜனவரி 19] வரை 144 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  1572 ஆண்டு முதல் 1977 வரை 33 முறைகள் எரிமலை எழுந்து மக்களுக்கு இடர் விளைவித்துள்ளது.

     

    ++++++++++++

    எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor)

    Posted on November 28, 2017

     

    Image result for geo-reactor at centre of earth,s core

     

    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)

     

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது ! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவி லிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.

    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.

    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.

    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !

     

    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.

    அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலை  யங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.

    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !

    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !

    (தொடரும்)

    +++++++++++++++++

    படங்கள்: BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    தகவல்:

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html(Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html(Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)

    39.geo-reactor at centre of earth,s core  [January 2002]

    40. http://gulfnews.com/news/uae/general/earth-s-core-a-reactor-that-is-shutting-down-1.351697  [March 23, 2003]

    41 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    42. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor  [Novenber 3, 2017]

    43. https://en.wikipedia.org/wiki/Inner_core [November 14, 2017]

    44.  https://en.wikipedia.org/wiki/Taal_Volcano

    45.  https://en.wikipedia.org/wiki/List_of_active_volcanoes_in_the_Philippines

    46. https://www.space.com/taal-volcano-eruption-philippines-9-mile-plume-video.html

    47.  https://www.bloomberg.com/news/articles/2020-01-19/philippines-keeps-guard-on-deadly-volcano-eruption-amid-quakes

    48. https://www.nbcnews.com/news/world/taal-volcano-simmers-philippine-officials-brace-long-crisis-n1118306

    49. https://www.livescience.com/taal-volcano-eruption-seen-from-space.html?

    50. https://www.cnn.com/2020/01/17/asia/taal-volcano-philippines-fatal-attraction-intl-hnk/index.html

     

    Share
    January 20, 2020
  • உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    உதிர்ந்துவிட்ட விடிவெள்ளி

    நாகேஸ்வரி அண்ணாமலை

    வளர்ந்துவரும் எல்லா நாடுகளையும்போல் இந்தியாவிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவளாகிய நான் தமிழ்நாட்டில் அம்மையார் காலத்தில் நடந்த ஊழல் பற்றியும் அவருடைய மறைவிற்குப் பிறகும் அது தொடர்வது பற்றியும் நன்றாகவே அறிந்திருக்கிறேன். ‘எப்போது தணியும் இந்த சுதந்திர தாகம்’? என்றார் பாரதி. சுதந்திரம் பெற்றுவிட்ட இந்தியாவில், ‘எப்போது மறையும் இந்த ஊழல்?’ என்று பல முறை நான் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் 1967 வரை நடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இந்தப் புற்றுநோய் பரவ ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். காங்கிரஸை அடுத்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிடக் கட்சிகள் காலத்தில் அது புரையோடிப் போய் தமிழ்நாட்டையே அழித்துவிடும் அபாயம் இருப்பதாகத் தெரிகிறது.

    ‘எப்போது மறையும் இந்த ஊழல்’? என்ற என்னுடைய இந்தப் புலம்பலுக்கு ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டதுபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் கமலஹாஸன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்துத் தன் கட்சியின் கொள்கைகளையும் எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று நானும் மகிழ்ந்துபோய் வல்லமை என்னும் ஆன்லைன் பத்திரிக்கைக்கு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை இங்கே கொடுக்கிறேன்.

    இப்போது அரசியலுக்குப் பல நடிகர்கள் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம். கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.

    சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள். வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார். படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

    இப்படியெல்லாம் என் போன்றோரிடம் நம்பிக்கையை வளர்த்த கமலஹாஸன் இப்போது ரஜனிகாந்திடம் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். நான் படித்த இந்தச் செய்தி என் கனவில் கண்ட செய்தியாக இருக்க வேண்டுமே என்று பல முறை வேண்டியிருக்கிறேன்.

    ஆனாலும் மறுபடி மறுபடி இந்தச் செய்தி கண்ணில் பட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மேலேயுள்ள என் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பதுபோல் ஒரு விடிவெள்ளி என்று நான் நினைத்திருந்த கமலஹாஸன் ஏன் இப்போது ரஜனியை அரசியலுக்கு வர அழைக்கிறார்?  உலக வரலாறு பற்றியோ நாட்டு நடப்பு பற்றியோ எதுவும் தெரியாத ரஜனியை இவர் உதவிக்குக் கூப்பிடுவதன் நோக்கம் என்ன? ‘காவிப் பக்கம் போக மாட்டேன்’ என்று உறுதியாகக் கூறிக்கொண்டிருந்தவர் ‘காவி’த் தலைவர்கள் குறிவைத்திருக்கும் ரஜனியை உதவிக்கு அழைக்கிறாரே.  இது என்ன மர்மம்?  ‘ரஜனி அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?’ என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது ‘அவர் பாதை தனி. என் பாதை தனி’ என்று கூறியவர் இன்று அவரை உதவிக்கு அழைக்கிறாரே?

    சில மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டு அரசியல் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘கமலஹாஸன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.  என் கேள்வியைக் கேட்டு அவர்கள் சிரித்துவிட்டு, ‘மக்கள் புரிந்துகொள்ளும் முறையில் அவர் பேசவில்லையே’ என்றார்கள்.  அதைக் கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.  ‘இவர்கள் ஏன் கமலஹாஸனுடைய நல்ல கொள்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை?’ என்று ஆயாசப்பட்டேன்.  கமலஹாஸனை நான் எடைபோட்டது தவறா என்று இப்போது நான் ஆயாசப்படுகிறேன்.  நான் நம்பியதுபோல் அவர் ஒரு விடிவெள்ளி இல்லையா? ரஜனியைத் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவர் அழைத்தது அறிந்து அவரைப் பற்றிய என் ஆர்வமெல்லாம் வடிந்துவிட்டது.  இது கனவாக இருக்கக் கூடாதா என்று வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

    Share
    January 20, 2020
←Previous Page
1 … 263 264 265 266 267 … 1,142
Next Page→

வல்லமை

  • Blog
  • About
  • FAQs
  • Authors
  • Events
  • Shop
  • Patterns
  • Themes

Twenty Twenty-Five

Designed with WordPress