Blog

  • கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாலயன் மருளது போக்கிய காலம்
    மலரடி திருமுடி உணர்த்திய காலம்
    தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
    திருவிளக்கு ஏற்றிடும் கார்த்திகைக் காலம்

    கந்தனை வந்தனை செய்திடு காலம்
    கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
    நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

    ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
    தெளிவதைக் கருத்தில் அமர்த்திடும் காலம்
    பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
    போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

    ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
    தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
    நீண்டிடும் மாயையை நிர்மலம் ஆக்கிய
    நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்

    நெறிபிறழ் நினைப்பினை நீக்கிய காலம்
    அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
    பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
    போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
    அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
    வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
    விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

    ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
    உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
    மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
    மண்ணிலே மலர்ந்திட்ட மாண்புடைக் காலம்

    அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
    உண்ணா முலையாள் ஒளிர்ந்திட்ட காலம்
    அருட் பெரும்ஜோதி தனிப்பெருங் கருணை
    அளவிலா ஆற்றலை அருளிய காலம்

    மரத்தில் மறைந்த மாமத யானையை
    பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
    இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
    கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்

    மாதொரு பாகனை மனமதில் இருத்தி
    மங்கலம் பொங்கிட, தீபத்தை யேற்றி
    தீமைகள் அகல கார்த்திகை விளக்கைச்
    சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்

    விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
    மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
    ஒளியினை அறிவாய்க் கொண்டிடும் வேளை
    ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்

    இருளது சூழின் எதுவுமே தெரியா
    இருளது இருப்பு மருளவே வைக்கும்
    ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
    தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்

    அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
    அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
    அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
    இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனைச் சிந்தையில் இருத்துவோம் நாளும்
    ஊற்றிடும் எண்ணெயாய் ஆகுவோம் நாங்கள்
    உணர்விலே பக்தியை இருத்தியே வாழ்வோம்

    Share
  • Dr. S.S. Badrinath passed away

    Dr. S.S. Badrinath passed away

    Baskar Seshadri

    Dr. S.S. Badrinath of the renowned Sankara Nethralaya passed away this morning. He was 83. He Inaugurated Sankara Nethralaya in 1978 and now this Institution had grown big catering to people from all over the world. On an average hundreds of people walk in to this institution for their eye ailments. Pranams. Dr Badrinath is a resident of Third Trust Cross Street, Mandavelipakkam.

    Share
  • In The Interest of Depositors , Subiksha Scam Judgement is out – Judiciary , The Last Straw

    In The Interest of Depositors , Subiksha Scam Judgement is out – Judiciary , The Last Straw

    Baskar Seshadri

    Subramaniam Ramaswamy had been sentenced to Twenty Years of Imprisonment for his Viswapriya Financial services Financial Scam since later Nineties. The directors and staff too were Imprisoned along with him. The Brand name with which he operated was Subiksha. Plenty of Supermarkets were opened in the Brand Name Subhiksha when success fell at his feet. Of the total One Hundred and Ninety Crores Penalty One Hundred and eighty crores had been ordered to be refunded to the Depositors. The company was Incorporated in 1991 and thirty-two years after the judgement had come Yesterday. Ramaswamy 57 was an Alumni of IIT and did his education in IIT – Ahmedabad. He joined CITI bank and quit the service in just a Month only to join Royal Enfield. In two Years, he left Enfield (Thoraipakkam) only to start this Financial Venture.

    Thousands of Depositors were taken for a ride for long years. In a way this Subiksha Paved the way for many financial companies to get into Fraudster methods in the Later Years. At last Truth had Triumphed. One Fine day all his chain of outlets Numbering 1600 all over South India had been shut in 2009 and that started the misfortune and had ended yesterday with a court Judgement.

    Subramaniam Was the Brainchild for the economically Priced goods in The Supermarkets in South India. His steps were not measured and it was Too Wide. Even today some shops announce that their prices are cheaper than that of Subhiksha. He revolutionised the supermarket culture but unfortunately, he chewed more than what he could.

    Share
  • கருப்பு வெள்ளை

    கருப்பு வெள்ளை

    பாஸ்கர்

    அந்த ஓரத்தில் நிற்பது மிலிட்டரி மாமா,
    கருப்பு உதடு அவருக்கு, சதா சிகரெட்
    வலப்பக்கத்தில் சங்கரன், மிருதங்கத்தில் பேசுவான்
    இடப்பக்கம்  அரைப்பாவடையில்  பக்கத்து வீட்டு சூசன்-
    நடுவில் நிற்பது ரங்கநாதம். பெரிய பாஷ்யகார்
    பக்கத்தில் வெட்கத்துடன் பூமா மாமி, -வெகுளி
    இந்த ஓரம் சீமான், என்னா உசரம். கபடியில் கெட்டி
    கீழே அமர்ந்திருப்பது ஜானு-.மோர்ஸ் கோட் மன்னன்
    அவனின் இடப்பக்கம் மைதிலி .-அடிவாங்கியே செத்துப் போனாள்
    வலப்பக்கம் ரங்கன்.—ஜோபியில் எப்போதும் மூக்குப்பொடி டப்பா
    தள்ளியே நிற்பது சாரதி, குடிப்பான், பரம சாது
    அரை நிஜாரைப் பிடித்துக்கொண்டு நிற்பது நான்.
    கருப்பு வெள்ளைப் படம் இருந்தால் மோந்து பாரும்
    காலத்தைத் தள்ளிக் காற்றோடு கலந்து பின்செல்வீர்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(474)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(474)

    உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகுங் கீழ்.

           –திருக்குறள் – 1079 (கயமை)

    புதுக் கவிதையில்…

    நல்லாடை பிறர் உடுத்துவதையும்
    நல்லுணவு உண்பதையும்
    காணும் கீழ்மகன்,
    அவர் மீது பொறாமை கொண்டு
    வேண்டுமென்றே குற்றங்காணும்
    ஆற்றல் கொண்டவனாகிறான்…!

    குறும்பாவில்…

    பிறர் உண்டும் உடுத்தும்
    நன்றாயிருப்பதைக் காணும் கீழ்மகன் அவர்மீது
    பொறாமையில் குற்றங்காண வல்லவனாகிறான்…!

    மரபுக் கவிதையில்…

    நல்ல உடைகள் பிறரணிந்து
         நல்ல உணவை உண்பதையே
    பொல்லாக் கீழோன் பார்த்ததுமே
         பொறாமை மிகவே கொண்டேதான்
    எல்லா நலனும் மறந்தேதான்
         எதற்கும் குற்றம் கண்டிடவே
    வல்லோன் ஆகும் குணத்தாலே
         வாழ்வில் கயவன் ஆவானே…!

    லிமரைக்கூ…

    உண்டும் உடுத்தும் நன்றாய்
    இருப்பாரைக் காணும் கீழ்மகன் அவர்மீது
    குற்றமே காண்பான் ஒன்றாய்…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம்
    அந்த கொணம் வேண்டாம்,
    அடுத்தவன் மேல பொறாமகொள்ளுற
    கயமத்தனம் வேண்டவே வேண்டாம்..

    அடுத்தவன்
    நல்ல ஒட உடுத்து
    நல்ல சாப்பாடு சாப்புடறதப்
    பாத்த ஒடனே
    கேடுகெட்டவன் கிட்ட
    பொறாம எண்ணத்தோட
    அடுத்தவங் கிட்ட
    குத்தங் காணுற
    கயமக்கொணம் வந்திடுதே..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    அந்த கொணம் வேண்டாம்,
    அடுத்தவன் மேல பொறாமகொள்ளுற
    கயமத்தனம் வேண்டவே வேண்டாம்…!

    Share
  • Story of How Ganapathy Subramaniam  became Gemini Ganesan

    Story of How Ganapathy Subramaniam became Gemini Ganesan

    Baskar Seshadri

    On this day Hundred and Three years ago When Ganesan was born in Pudukkottai never in their family had even thought that he would make it big one day. Ganesan wanted to become a Doctor but after the graduation in Maharaja College (He did B.Sc., Physics) he had to face many turbulences in life and he came to chennai to take an assignment at Gemini Studios as a casting assistant. His job is to ensure the testing process of the aspiring actors and see whether they fit the bill. One of the find of Ganesan was Chandrababu. He was by then married and had four children. Well before that he had taken the asylum in Muthulakshmi House in Adayar. Later she was celebrated as Dr Muthulakshmi Reddy a leading doctor and a reformist a daring approach of a woman of those days. it will be quite interesting to note that Even Vizhupuram Chinnaya Ganesan later to Become Nadigar thilakam was tested and certified by Ganesan. It was Missmalini in 1947 (a Work of RK Narayanan) His films moondru Pillaigal and Thai Ullam did not go well in the box office but it was Manam Pola Mangalyam (மாப்பிள்ளை டோய்) Marked the Entry of savitri in his life in this 1957 Release which did magic and the star was born. Remember MGR and Sivaji ganesan had already settled. He Played Pennin Perumai, Bandha Paasam and many more with Nadigar thilakam and it was only one movie with MGR (Mukarasi) From Nagarajan, it was Sridhar, Balachander, Bhimsingh, Pantulu and many more directors had done with him. Who can forget the climax of Sumaithangi, or a rightist man in Punnagai as sathyamurthy and as David aseervatham in Naan Avan Illai, it was His home production of Narayanee Films. He was a celebrated throughout his career and did the best of roles till he did his Avvai Shanmugi or Mettukudi. He had won Padmashree award and had achieved more accolades  throughout south india and other states. At the age of 85 he breathed his last around 1,30 in the noon when his family members were around him. Today it’s his Hundredth Birth Anniversary. When cremation was in the process i was in woodlands Hotel seated next to PB Srinivas. When i said that his songs had made him hero quickly he refuted and said he had become hero overnight with காலங்களில் அவள் வசந்தம் in a way Gemini Ganesan was senior to both SivajI Ganesan and MGR But Nambiar and Manohar are seniors to Gemini Too. The story of Ramaswamy Ganesan to Become Kadhal Mannan it had taken nearly fifty years. He paired with Jaya in only one movie that too as a guest role. When i think of Gemini Ganesan i recollect one  song of Velli vizha immediately. உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா. He was in the throne of people’s hearts all through.. Gemini In my view is a urban romantic street smart and he won the hearts at ease.

    Tail piece – Gemini was an ace cricketer and he had served in Madras Christian College as a Lecturer. He had a passion to Translate Kannadasan’s Arthamulla Indhu Madham in English but that could not happen unfortunately

    Additional story – Gemini was a craze in our family and in 1959 when the film Kalyana Parisu was released my mother who was in her Mid pregnancy state went to Casino with my aunts and they all decided to name the boy child as Baskar and if the baby happens to be a girl it was decided to name as Vasanthi. Reason is this – The hero Geminis Name was Baskar and the Heroine Saroja Devi’s Name was Vasanthi. It was a film that was released in Casino on April 9, 1959

    I was christened as Baskar this way.

    Share
  • மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
    தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும்
    யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
    நல்லுரான் கந்தா நீயருள வேண்டும்

    நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
    பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
    நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க
    நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

    அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும்
    புறங்கூறும் எண்ணம் புதையுண்ண வேண்டும்
    நலமான எண்ணம் உளமமர வேண்டும்
    நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும்

    அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
    அபயகரம் பன்னிரண்டு கொண்ட பெருமாளே
    வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
    மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீகந்தா
    கருணையே உருவான கடவுளே கந்தா
    வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா
    மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா

    ஆறுபடை வீடமர்ந்த அரனாரின் மைந்தா
    அரக்க மனமகற்றி ஆட்கொள்வாய் ஐயா
    காதலுடன் மனமுருகி வேண்டுகிறோம் கந்தா
    கையணைத்து இவ்வுலகில் காத்துவிடு ஐயா

    Share
  • திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பெற்ற வரத்தைப் பேணிடா நின்று
    குற்றம் இழைத்தார் கொடிய அசுரர்
    அசுரர் மாற அவதாரம் செய்தாய்
    ஆறு முகவா அடிதொழு கின்றோம்

    மாறாச் சூரர் மாறிட வைத்தாய்
    சேவலாய் மயிலாய் உன்வசம் ஆக்கினாய்
    அருளைக் கொடுத்தாய் ஆணவம் போக்கினாய்
    அரனின் மைந்தா அழகுடைக் குமரா

    வேலை ஏந்தினாய் வெற்றியைக் காட்டினாய்
    மூலப் பொருளாய் ஆகியும் நின்றாய்
    வேதம் விளக்கினாய் விண்ணவர்க்கு உதவினாய்
    பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா

    ஓடி ஓடி உன்னடி தொழுகிறோம்
    பாடிப் பாடிப் பரவசம் அடைகிறோம்
    தேடித் தேடி உன்னிடம் வருகிறோம்
    திருவருள் சுரந்து காத்திடு முருகா

    Share
  • கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உருகிடும் அடியார் உளமுறை வோனே
    மருள் நிலையகல வரமருள் வோனே
    கருணையின் உருவாய்த் திகழ்ந்திடு வோனே
    கந்தா கடம்பா காத்திடு எம்மை

    ஆசா னாகியே அப்பனுக்கு உரைத்தாய்
    அறு படையேகி அமர்ந்தே கொண்டாய்
    அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்
    ஐயா கந்தா அடைக்கலம் நீயே

    மாறா மனத்தை மாற்றிட வல்லாய்
    ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்
    பாறாங் கல்லென இருப்பார் தம்மைப்
    பக்குவம் ஆக்குவாய் பரமனின் மைந்தா

    தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்
    மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்
    நாளும் ஆவாய் கோளும் ஆவாய்
    நம்பிடும் அடியார் நற்றுணை நீயே

    Share
  • கந்தசக்ஷ்டி 3 ம் நாள் சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா!

    கந்தசக்ஷ்டி 3 ம் நாள் சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சஷ்டி விரதம் நோற்கிறோம் கந்தா
    சங்கடம் அனைத்தும் போக்கிடு கந்தா
    காவடி சுமந்து சேவடி வருவோம்
    காத்திடு எம்மை, கருணைக் கடவுளே

    இல்லம் அனைத்தும் சிறக்க வேண்டும்
    இருக்கும் குறையும் அகல வேண்டும்
    சொல்லும் செயலும்  நன்றாய் இருக்க
    நல்லைக் கந்தா அருள்வாய் நாளும்

    மனத்தில் உறுதி நிலைத்திட வேண்டும்
    வாக்கில் வாய்மை நிறைந்திட வேண்டும்
    கனவும் நனவும் உந்தன் நினைப்பை
    மனத்தில் இருக்க அருள்வாய் கந்தா

    நாளும் உன்னை நயமாய்ப் பாட
    நற்றமிழ் வல்லமை தந்திடு முருகா
    சேவற் கொடியுடன் மயிலில் அமர்ந்து
    சீரா யிருக்கச் செய்திடு முருகா

    Share
  • தேடினேன் வந்தது

    தேடினேன் வந்தது

    பாஸ்கர் சேஷாத்ரி

    (இசைக்கவி ரமணனின் பாரதி பற்றிய பேச்சில் விளைந்த பயிர் இது)

    இருளுக்கு எதிரியா அல்லது நீயே இருளா ?
    பாயும் ஒளியா வெம்மையின் ஆதியா
    வெளிச்சத்தின் ரூபியா
    நீ உயிர், அடக்க மாட்டாத ஒளியின் பயிர்
    நீ வெளியை விழுங்க வந்தவன்
    கடலில் முங்க வந்தவன்
    நீ எங்கள் காபந்து எங்களைக் காக்கும் பெரும்பந்து நீ
    உச்சம் நீ
    விஸ்தீரணன் நீ
    உலகாள்பவன் நீ
    சர்வ வியாபி
    ஒளியைப் பாய்ச்சும் உனக்கு ஒளி தருபவர்
    யார் ?
    நிழலில் இளைப்பாற யாரால் முடியும் ?
    ஆனால் நீ விளைவித்த வெளிச்சமே உன்னுயிர்
    புறக்கண்களால் தேடினால் விழிகளில் வடிநீர் அகக்கண்ணால் தேடுகிறேன் அகப்படவில்லை  நீ
    ஆனால் என்ன ?
    நீ, நான், செடி, விலங்கு, நீர் நிலை, மலை, மழலை, உயிர் எல்லாம் ஒன்றே.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் 2)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் 2)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    “படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி  இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?  பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உரு வாகியது எனலாம்.  பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.

    பனைக்கு பெண்ணைகூந்தல்காமம்உபதாகம்ஐந்தார்ஐந்தாலம்,  கரும்புரம்கரும்புல், பகற்பலி,  புற்றாலி  புற்பதிபோந்துதிருணராசன்துராரோகம்திருவிராசன்குவீரம்தாளம்தருவிராசன்புல்லூதிகம்,  புற்பதிஎன பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்; ஆண் பனை, பெண்பனைகூந்தப்பனைதாளிப்பனைகுமுதிப்பனைசாற்றுப்பனைஈச்சம்பனைஈழப் பனை   சீமைப்பனைஆதம்பனை திப்பிலிப்பனைஉடலற்பனைகிச்சிலிப்பனை குடைப்பனைஇளம்பனை, கூறைப்பனைஇடுக்குப்பனைதாதம்பனைகாந்தம்பனைபாக்குப்பனைஈரம்பனைசீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனைகொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனைகதலிப்பனை,  வலிய ப்பனை வாதப்பனை, அலகுப்பனைநிலப்பனை,  சனம்பனை – எனப்பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள்புராணங்கள்திருமுறைகள்தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!

    சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபுராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர்வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டிநிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது.  தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !

    ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
    சாறு படுவன நான்கு பனையுள
    ஏறற் கரியதோர் ஏணியிட்  டப்பனை
    ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”

    இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்!ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில்பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப் பனை மரத்தின் மேலேறி  சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு).

    காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள், திருப்ப னையூர்திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.

    திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச்  “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து

    பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்

    குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே”

    என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே !

    மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.

    தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
    வள்ளைக் குறங்கும் வளநாட  வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா”

    என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.

    பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவாகரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.

    திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்

    கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
    புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
    திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
    செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”

    இப்பாடல் அமைகிறது.இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே.நீர்க் காக் கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும்வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கை யாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!

    நம்மாழ்வார்  திருமொழியில்  பனைமரம் பற்றி பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ”  என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.

    பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம் 

    பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும் , “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும் ,

    தோடே  மடலே ஓலை என்றா
    ஏடே  இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!

    தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகத ருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.

    மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
    பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
    போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
    நாதனே முன்னே நட”

    என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……

    ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
    பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
    தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
    ஞால முணர்க நயந்து”

    நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.

    பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
    மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
    கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
    நற்றமிழும் வாழி நயந்து”

    தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….

    கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
    கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
    தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
    தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே

    என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.

    பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….

    நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
    பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
    யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
    தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”

    நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
    ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
    சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
    போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”

    வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
    ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
    காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
    நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர் “

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..

    அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
    தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
    பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
    அடுக்குப் பெட்டியும் சுடும்
    பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
    பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
    பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
    கைவல் இளையர் கருதி இளைத்த
    ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
    கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
    எனவாங்கு,
    இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

    என்று சொல்லியதோடு அமையாமல் , கற்பகதருவில் மனத்தை இருத்தி

    நரைதோல் இயனம் அரையில் கட்டி
    அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
    மார்போடணையத் தோளது தூக்கி
    உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
    கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
    பாளை தட்டி பார்த்துச் சீவி
    ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
    இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
    அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
    நாநீர் ஊற உதடு வருடி
    பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
    அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
    களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

    என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.

    நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா ….

    பட்டாங் கத்தி பள பளென
    பாலையன் கோட்டை நறறென
    பனையும் கருத்திருக்கும்
    பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
    இறக்கிய பதநீரைப் பருகினால்
    தலை கிறு கிறுக்கும்”

    தேடுதற்கும் வகையறியேன் – உன்
    திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
    ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
    உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
    பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
    பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
    நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
    நீயின்றி யாருதவி சொல்லுமையா”

    சண்டையிலே பிறப்பாய் போற்றி
    சல்லியைப் பறிப்பாய் போற்றி
    மண்டையை உடைப்பாய் போற்றி
    மகளிரை அடிப்பாய் போற்றி
    பாளையில் பிறப்பாய் போற்றி
    பனைதரும் கொடையே போற்றி”

    என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!

    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

    இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதை யைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும் விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா !

                                         (வளரும்)

    Share
  • மனமுறை தீபாவளி மகிழ்வினைத் தரட்டும்!

    மனமுறை தீபாவளி மகிழ்வினைத் தரட்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா 

    உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட
    உறவுகள் கூட உணர்ச்சி பொங்கிட
    ஒளியில் இல்லம் மூழ்கிச் சிறந்திட
    வருகின்ற நாளே மனமுறை தீபாவளி

    பட்டாசு மத்தாப்பு கைகளை நிறைக்க
    பாங்குடன் சிறியவர் பெரியவர் மகிழ
    வெடித்திடும் போதும் விரிந்திடும் போதும்
    வேதனை துன்பம் காணாமல் போகுமே

    சமயமும் சேரும் சமூகமும் சேரும்
    சாத்திரம் சடங்கு சேர்ந்துமே நிற்கும்
    இல்லமும் இணையும் இன்பமும் இணையும்
    நல்லதை உணர்த்திடும் நம்தீபா வளியும்

    மணமக்கள் வாழ்வில் மகிழ்வினை ஊட்ட
    மாமனார் வீட்டை நாடியே நிற்க
    விருந்துகள் நடக்க வெகுமதி கிடைக்க
    நலந்திகள் தீபாவளி நல்வழி சமைக்கும்

    புத்துடை மனதில் புத்துணர் வூட்டும்
    புதுப் பொலிவுடனே யாவரும் திகழ்வார்
    தித்திக்க பண்டம் வீடெலாம் மணக்கும்
    தித்திக்கும் உணர்வை ஊட்டுமே தீபாவளி

    இசையுடன் விழாக்கள் எங்குமே நடக்கும்
    இயற்றமிழ் அரங்கம் சிறப்பாய் இருக்கும்
    ஆடலும் பாடலும் அரு விருந்தாகும்
    அனைவரும் இணைந்து ஆனந்தம் அடைவார்

    ஆலயம் நோக்கி அனைவரும் ஏகுவார்
    ஆண்டவ னிடத்து வேண்டுவார் பலவரம்
    பரவசப் பக்தியில் மூழ்குவார் பலருமே
    பண்ணிசை பாடியே பரவுவார் பணிவுடன்

    சிறியவர் ஓட பெரியவர் தடுக்க
    விழுந்தவர் எழும்ப இளசுகள் சிரிக்க
    குதூகலம் என்பது விதம் விதமாக
    தீபா வளியின் அங்கமாய் மிளிரும்

    இருப்பவர் இனிப்பை நிறையவே சுவைப்பார்
    இல்லார் இனிப்பை எண்ணியே ஏங்குவார்
    கொடுத்துமே மகிழ்வோம் கொண்டாட்டம் சிறக்கும்
    நிலத்தினில் தீபாவளி நிறைவினைத்  தரட்டும்

    நிம்மதி மனத்தில் நிலைத்திடச் செய்வோம்
    சொல்லினைச் சுவையாய் கொடுத்துமே நிற்போம்
    இல்லவர் உள்ளவர் பேதத்தைக் களைவோம்
    எல்லோர் மனத்திலும் இன்பத்தை நிறைப்போம்

    Share
  • மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மாநிலம் பயனுற வந்த மகான் வள்ளலார்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும். வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும்.துன்பமில்லா மல் வாழ வேண்டும். குறை வில்லாது வாழ வேண்டும். வாழும் வாழ்வு நிறைவுடையதாக அமைய வேண்டும் என்னும் நோக்கில்தான் சமயங்களும் அதன் வழி முறைகளும் காலத்துக் காலம் வந்தபடி இருந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம்.இப்படி வருகின்ற சமயங்களில் எது உயர்ந்தது எது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது எது மிகவும் தீவிரமாக வந்திருக்கிறது நடைமுறைக்கு ஒவ்வாதவற்றை எது தாங்கி வந்திருக்கிறது என்னும் நிலை மண்ணிலே பூதாகரமாகவே வியாபித்து நிற்பதையும் காணமுடிகிறது.

    வேதங்களை முதன்மைப் படுத்திய சமயநெறிகள். சித்தாந்தத்தை முதன்மை படுத்திய சமய நெறிகள். கடவுளைப் பற்றியே எண்ணாத சமய நெறிகள். அறத்தினையே முழுமையாய் வலியுறுத்தும் சமய நெறிகள். புராண இதிகாசங்களை நம்பும் சமய நெறிகள். திருமுறைகளைஆகமத்தைஆலயத்தை மையமாகக் கொண்ட சமய நெறிகள். உருவ வழிபாட்டை முதன்மைப்படுத்தாத சமயநெறிகள். வேள்வி யினை விரும்பி நிற்கும் சமய நெறிகள். இல்லறத்தை ஒதுக்கித் துறவறத்தையே முதனிலைப்படுத்தும் சமய நெறிகள். உருவ வழி பாட்டினை உரித்தாக்கிக் கொண்ட சமய நெறிகள். இப்படிப் பல சமய நெறிகள் சமுதாயத்தை சூழ்ந்து இருந்தன என்பதைக் கட்டாயம் கருத்திருத்தல் வேண்டும்.

    சமய நெறிகள் பல தோன்றி சமுதாயத்தை பல கோணங்கள் ஆக்கி விட்டிருக்கின்றன என்பதையும் மறுத்துரைத்துவிட முடியாது. சமணம் வந்தது. பெளத்தம்வந்தது. இஸ்லாம் வந்தது. கிறித்தவம் வந்தது. இந்தியாவில் வைதீக நெறியே மேலோங்கி இருந்தது. இந்தியாவுக்கு புதிதாக வந்த சமய நெறிகளாலும். இந்தியாவில் முகிழ்த் தெழுத்த சமய நெறிகளாலும் – வைதீக சமய நெறிகள் சற்று தடுமாற்றமுறகின்ற நிலை ஏற்பட்டது. ஆனால் வைதீகம் என்பது தன்னிலையில் இறுக்கமாகவே இருந்தது . இருந்தும் வருகிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்.

    இந்தியாவுக்குள் நுழைந்த சமய நெறிகள் பால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். அந்த சமய நெறிகளின் வழியில் நடந்திடவும் விரும்பிச் சென்றார்கள். வைதீக நெறியில் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று உணரும் ஒரு நிலையும் அப்பொழுது அவசியமாகக் காணப்பட்டது. அந்தவகையில் கெளதம புத்தர் வருகிறார். மகாவீரார் வருகிறார். தயானந்த சரஸ்வதி வருகிறார். ராஜாராம் மோகன்ராய் வருகிறார். இராம கிருஷ்ண பரமஹம்சரும் வருகிறார். இவர்களின் சிந்தனைகள் ஒவ்வொன்றுமே வேறுபட்டனவாக இருந்தாலும், சீர்திருத்தம் என்னும் கருமட்டும் அனைவரது சிந்தனைகளிலும் அமைந்தே இருந்தது என்பதுதான் முக்கியமாகும்.

    வந்த சமய நெறிகளில் காணப்பட்ட நல்ல சிந்தனைகள் வைதீக சமய நெறியிலே சீராக்கம் செய்திட வேண்டும் என்னும் நிலைக்கு உந்தித்தள்ளுகிறது. கல்வி அறிவின் பெருக்கமும் சிந்தனைகளில் புத்தூக் கத்துக்கு உந்து சக்தியாகிறது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் இறைவனது பெருங்கருணையினால் மண்ணில் வந்து பிறக்கிறார் வள்ளலார் பெருமான்.

    வைதீக சமய நெறியினை மனதில் இருத்திய குடும்பத்தில்த்தான் வள்ளலார் வந்து பிறக்கின்றார். அவரின் உள்ளத்தில் முருகப்பெருமானே நிறைந்து இருக்கிறார். ஞானப்பாலை முன்று வயதில் அம்மையின் அரவணைப்பில் உண்ட  சீர்காழி தந்த ஞானக் குழந்தை சம்பந்தப் பெருமானைப் போற்றுபவராக வள்ளலார் விளங்கினார். மணி வாசகத்தை மனமுருகப் பாடினார். உருகாதார் மனத்தினையே உருக்கும் திருவாசகத்தைத் தேனாகக் கருதியே சுவைத்து தன்னையே அதன் வசமாக்கி நின்றார்.

    சிறிய வயதில் அன்னையையும் தந்தையும் இழந்து நின்றார். அண்ணனின் அரவணைப்பில் அவர் வாழும் நிலை ஏற்படுகிறது. அண்ணன் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை ஆரம்பிக்கிறார். பள்ளிப் படிப்பில் செல்லும் கவனம் கலைந்து அவரின் கவனம் – தியானம்யோகம் பக்கமாய் திரும்புகிறது. கல்வியினைக் கற்காமலேயே அவருக்குக் கலைமகள் கருணையினைத் தாராளமாகவே கொடுத்து விடுகிறாள். வள்ளலார் மனத்திலிருந்து கருத்துக்கள் மழையாகக் கொட்டி சிந்தனை வெள்ளமாய் பெருக்கெடுத்தது.

    உருவ வழிபாட்டை ஏற்று நின்றவர் மனத்தில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பரம்பொருளானவன் அரு வாய், உருவாய், அருவுருவாய் இருக்கிறான் என்றுதான் சமய நெறிகள் சாற்றுகின்றன. வள்ளலார் உள்ளம் மற்றவர்கள் உள்ளத்தைவிட வித்தியாசமாய் சிந்திக்கத்  தொடங்குகிறது. எல்லாச் சமயங்களையும் பார்க்கிறார். பார்த்தோடு அமையாமல் அவற்றின் உட்கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளுகின்றார். அவர் மனதில் ஒரு புது மாற்றம், புதுத்தெளிவு உதய மாகிறது. அந்தத் தெளிவினால் அளப்பருங்கருணையுடைய அந்தப் பரம் பொருளை அவர் அளப் பெருஞ் ஜோதியாகவே அகமிருத்தியும் கொள்ளுகிறார். நிறைவில் “ஜோதி தரிசனமே” அவரின் நிலையாக மாறுகிறது. “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே”, “ஒளி வளர் விளக்கே”. “தீபமங்கள ஜோதி நமோ நம” என்றெல்லாம் அடியார்கள் அந்தப் பரம்பொருளை விழித்ததைப், ஏற்றிப் போற்றியதயெல்லாம் வள்ளலார் மனம் உள்வாங்கிக் கொண்டது. அவர்களே அந்தப் பரம் பொருளினை ஜோதி வடிவில் உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்னும் பொழுது நானும் அவர் வழியில் ஜோதி தரிசனத்தைச் சொல்லுவதில் ஏதும் மாற்றுக்கருத்துகள் கொள்ள வேண்டாம் என்று அவர் மக்களைப் பார்த்து புகன்று நிற்கிறார். ஆனாலும் அவரின் இந்த கருத்தினுக்கு எதிர்ப்பாளர்களும் நிறையவே இருந்தார்கள்.

    வைதீக சமயம் மேன்மை மிக்கதான கருக்களைக் கொண்டிருந்த பொழுதிலும், அதனை வழி நடத்த வந்தவர்களின் மனங்களால் விளைந்தவை சமூக நலன்களைப் பாதித்து நின்றதை வள்ளலார் மனம் ஏற்க மறுத்தது. வள்ளலாருக்கு முன்னர் வந்த பலரின் சீர் திருத்தக் கருக்கள் – வள்ளலாரிடம் பதிந்தே இருந்தது. சமத்துவம் இல்லாமை என்பதுதான் வள்ளலார் உள்ளத்தைக் குத்திக் காயப்படுத்திய பெரிய கூரான முள்ளாகவே இருந்தது. அந்தச் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும் என்னும் அவா அவரிடம் பேரலையாகவே எழுந்தது. சமரசம் நிலவுவதே சமய நெறிகளின் உயிர் நாடியாக இருக்கவேண்டும் என்ப துதான் வள்ளலாரின் ஆணித்தரமான கொள்கையாகவே அமைந்தது.

    பெளத்தத்தின் அட்டசீலம், பஞ்சசீலம், சமணத்தின் அறக்கருத்துகள், இஸ்லாத்தின் சகோதரத்துவம், கிறித்தவத்தின் தொண்டு மனப்பாங்கு யாவற்றையும் வள்ளலார் அகத்திருத்தி தன்னுடைய சமரச சன்மார்க்கப் பாதையினை ஆக்கி நின்றார். வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியினை உற்று நோக்கினால் அங்கே வள்ளுவமே கைகொடுத்து நிற்பதையே பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கும். கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பொய் கூறாமை, துறவு, விருந்தோம்பல், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்னும் உண்மை, அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்னும் கரு, நன்னயம் செய்தல் என்னும் பெருநோக்கு, பழித்தது ஒழித்து விடும் கரு, உற்ற நோய் நோற்றல் உயிக்கு உறுகண் செய்யாமை என்னும் எண்ணம், அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் உயிர் செகுத்து உண்ணாமை என்னும் உயரிய நோக்கு, அத்தனையும் வள்ளலாரின் புது நெறியாக முகிழ்த்து வந்தது எனலாம். வள்ளலார் சமூகத்தில் மிகவும் சிறப்பான ஒருமைப் பாட்டினை நிலை நிறுத்திடவே தன் வாழ்வெல்லாம் எண்ணியே செயற்பட்டார் என்பதை கருத்திருத்துதல் அவசியமாகும்.

    பசிப்பிணி மருத்துவராய் வள்ளலார் விளங்கினார். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பதை வள்ளலார் மிகவும் தீவிர மாகவே மனமிருத்திச் செயற்படுத்தி நின்றார். பசித்தவர்களுக்கு முன்னால் தத்துவங்கள் பயனற்றவை என்பதில் வள்ளலார் பெருதும் உறுதியாகவே இருந்தார். அதனால் பசிப்பிணியினைப் பெரும் பிணியாக எடுத்து அதனைப் போக்குவதையே தம்முழைய சுத்த சமரசசன் மார்க்க சபையின் முக்கிய குறிக்கோளாக்கி நின்றார் வள்ளலார் எனலாம். அவரால் தொடங்கப்பட்ட இப்பாரிய பணி இன்றும் அவரின் சபையினால் அவரின் அன்பர்களினால் தொடர்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதேயாகும்.

    துறவியாக விளங்கினார். இயற்கை மருத்துவரானார். ஞானியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார். துறவியாக தூய்மையினைக் காட்டி நின்றார். திருமூலரின் பல சிந்தனைகளை வள்ளலாரும் உள்வாங்கி நின்றார். திருமூலரைப் போலவே கருத்துக்களை நுட்பமாகச், செப்பமாக நல்ல தமிழில் அருமையான பாடல்களாக ஆயிரம் ஆயிரமாய் ஆக்கி அளித்தார். அவை அத்தனையும் பல திருமுறைகளாக வகுக்கப்பட்டு “திரு வருட் பாக்களாக” சமூகத்துக்கு பெரு வெளிச்சத்தைக் காட்டியபடியே இருக்கின்றன என்பதை மறுத்து ரைத்து விடல் இயலாது.    

    ருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
      உறவு கலவாமை வேண்டும்
    பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
       பொய்மை பேசாது இருக்க வேண்டும்
    பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
        மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
        உனை மறவாதிருக்க வேண்டும்
    மதி வேண்டும்நின் கருணை நிதி வேண்டும்
       நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
    தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
      தலமோங்கு கந்த வேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
      சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

    சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
    கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
    கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே!

    இப்பாடல்கள் வாயிலாக வள்ளலாரின் ஆரம்ப நிலையினக் கண்டு கொள்ள க்கூடியதாக இருக்கிறதல்லவா !

    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

    ஏகன் அநேகன் என்னும் கருத்த்தில் , ஏகன் என்பதையே வள்ளலார் அகதில் உறுதியாக்கிக் கொண்டிரு ந்தார். அவரின் மனதில் பல சிந்தனை கள் மலர மலர கடவுள் பற்றிய கொள்கைகளையும் மாற்றியவ ராகவே வள்ளலார் வந்து நிற்கிறார் என்று அவரின் பாதையினைப் பார்க்கும் பொழுது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

          சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
    நீதியில் ஆச்சிர நீட்டென்றும் – ஓதுகின்ற
    பேயாட்டம் எல்லாம் பிதிர்த்தொழத்தலேபிறர்தம்
    வாயாட்டம் தீர்த்தன்வே மற்று

                  வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
    வேதாக மத்தின் விளைவறியீர் – சூதாகச்
    சொன்ன வலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
    என்ன பயனோ இலை.

    வள்ளலாரின் கருத்தோட்டங்கள் எவ்வாறு பரிணமிக்கின்றன என்ப தற்கு அவரே தன்னுடைய பாடல் களை எமக்கு வழங்கி நிற்கிறார். சாதியினைச் சாடுகிறார். வேதாகமங்களை மிகவும் கடுமையாக எதி ர்க்கும் நிலை வள்ளலாரிடம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு – அவரின் சீர்திருத்த மனப்பாங்குதான் என்றே கருதைட வைக்கிறதல்லவா !

                  பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை
    முத்தி பெற்றிடவும் பெற்றிலேன்
    உரியதோர் இச்சை எனக்கிலை என்தன்
    உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்
    ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில்
    ஆடலே யன்றி ஓர்விடயக்
    காதலால் ஆடல் கருதிலேன் விடயக்
    கருத் தெனக் கில்லை

    வீடும் வேண்டா விறலினராகவும் வள்ளலார் தன்னை இங்கே வெளிப்படுத்தி நிற்கின்றார். முத்தியே வேண்டா நிலை என்பதே மிகவும் உன்னதமான நிலை என்று சேக்கிழார் பெருமானே சுட்டிக் காட்டி நிற்பது இங்கு நோக்கத்தக்கதேயாகும்.

              மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்
    புனைந்துரையோ பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
    இயற்றிதனைத் தடுத்திடலாம் என்னோடுஞ் சேர்ந்திடுமின்
    என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே

    தன்னால் உருவாக்கப்பட்ட மார்க்கத்தை எந்த அளவுக்கு உறுதியானது, பயனானது, புதிய சிந்தனை களைக் கொண்டது என்பதை தனது பாடல் வாயிலாகவே எவ்வித அச்சமுமின்றி துணிவாய் வெளிப்படுத்தி நிற்பதைக் கருத்திருத்த வேண்டியது முக்கிய மாகும். மரணமிலாம் பெருவாழ்வு என்பதைச் சொல்வதற்கு எவ்வளவு மனவுறுதியும், தெளிவும் வேண்டும். அந்தத் தெளிவும் உறுதியும் மிக்கவராய் வள்ளலார் விளங்கி இருந்திருக்கிறார்.

    செத்தாரை எழுப்புவேன் என்றார். சித்துக்கள் செய்யும் சித்தராயும் விளங்கினார். செத்தாரை எழுப்பு வேன் என்பதைப் பலருமே தவறாக விளங்கிக் கொண்டு – அவரையே பல வேளைகளில் வருந்திடும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது. உயிரோடு வாழ்கின்ற பலர் நல்ல சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு, தனக்கும் பயனில்லாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல், ஏன் சமுதாயத்துக்கே பயனில்லாமல் வாழுவதைக் காண்கின்றோம். அப்படியானவர் உயிருடன் வாழ்ந்தாலும் அவர்களைச் செத்தார் என்றுதான் கணக்கில் எடுத்திட வேண்டும். அப்படியானவர்களுக்கு நல்ல உபதே சங்களைச் செய்தால் அவர்களை நல்லுணர்வுள்ளவர்களாக எழுச்சி பெறச் செய்துவிடலாம் என்னும் கருத்தில்த்தான் வள்ளலார் “செத்தாரை எழுப்பலாம்” என்று சொன்னார் என்பதுதான் உண்மை நிலையாகும்.

    வள்ளலாரின் கொள்ளகைகளை நிறையவே பலரும் விமர்சித்தார்கள். அவரின் கொள்கைகள் ஏற்பதற்குக் கஷ்டமாக இருந்தும் இருக்கலாம். ஆனால் அவர் தான் கொண்ட கருத்தைமட்டும் எதற்காகவும், யாருக்காகவும் மாற்றிவிட நினைக்கவே இல்லை. தன்மனத்துதித்த சீர் திருத்தங்களை உள்ளடக்கி தன்னுடைய “சுத்த சமரச சன்மார்க்க நெறியினை” முன்வைத்தார். அதனை நடைமுறைப்படுத்தவும் தன் காலத்தில் அவர் செயற்பட்டு நின்றார். அவருக்கென்றே ஒரு அடியார் திருக்கூட்டமும் திரண்டது. அவரின் ஜோதி வழிபாட்டினையும் ஆதரித்தும் நின்றது. இன்றும் அந்த ஜோதி தரிசன வழிபாடு நிற்காமலே நடந்த படியேதான் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

    சைவத்திருமுறைகளை நாமனைவரும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளலாரின் அருட்பாடல்களும் திருமுறைகளாகப் பலராலும் போற்றப்பட்டு வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அன்னைத் தமிழை நேசித்தார். அந்த தமிழில் அரிய தத்துவக் கருத்துக்களை எமக்கெல்லாம் அள்ளியும் வழங்கினார். தமிழால் தன்கருத்துக்களைக் கூறுவதையே அவர் பெருமையாகவும் பெரும் பேறாகவுமே எண்ணினார். விமர்சனங்கள் பல – அவரின் கொள்கைகளுக்கும், அவரின் அருட்பாடல்களுக்கும் முன்வைக்கப்பட்டாலும் அவர்; ஞானியாக, யோகியாக, சீர்திருத்தச் செம்மலாக, சமூகத்தின் அழுக்குகளை அகற்ற வந்த சமூக மருத்துவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாநிலம் பயனுற வந்த “பெரு வெளிச்சம்” ஆகவே ஆகியிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 1)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மனிதவாழ்வுக்கும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதன் தன்னுடைய ஆரம்பத்தை ஆரம் பித்ததே மரங்களுக்கு மத்தியிலேதான். அப்படி ஆரம்பித்த மனிதன் நாளடைவில் மரங்களின் இணைப்பிலிருந்து விடுபட்டு  மரங்களை ஒருபக்கமாக ஒதுக்கி விட்டுமரமற்ற இடங்களை வாழ்வாக்கி வாழத் தலைப்பட்டு விட்டான். மனிதன் ஒதுக்கினாலும் மரங்களின்றி மனித வாழ்வு திருப்தி அடைவதாக இல்லை என்றே சொல்லலாம். மரங்களும் மனிதனை விட்டு விடுவதாகவும் இல்லை. காட்டு மரங்கள் என்னும் நிலை மாறி நாட்டு மரங்களிடையே மனிதன் வாழும் ஒரு நிலை உருவாகி இருப்பதை இன்று கண்டு கொள்ளமுடிகிறது எனலாம்.

    இந்திலையில் கற்பகதரு என்று போற்றப்படும் பனையையும்அதன் வரலாற்றையும்அதன் பயன்பாட்டையும்அதன் முக்கிய த்துவத்தையும் அறிந்து கொள்ளுவது பொருத்தமாய் இருக்கும் என்று கருதுகிறேன்.

    பனை என்பது உலகில் பல இடங்களையும் தொட்டே வருகிறது எனலாம். உலக அளவில் நோக்குகையில் பனையின் தொகையானது ஏறத்தாள நூற்று ஐம்பது மில்லியன்கள் வரை இருக்கலாம் என்று புள்ளிபிபரங்கள் மூலம் அறியக்கிடக்கின்றது.

    கற்பகதருவான பனையின் தொடக்கம் எப்போது எனும் வினாவுக்கு – சரியான விடையினை பனைபற்றி ஆராய்ந்த தாவரவியலாளர்களே கூறமுடியாத நிலையில் மிகவும் தொன்மை மிக்கதாய் விளங்குகிறது என்பது  முக்கிய கருத்தெனலாம். ஆபிரிக்காவில்த்தான் இம்மரம் முதலில் தோன்றி இருக்கலாம். அதன் பின்னரே  தான் மற்றைய இடங்களுக்கும் பனையானது வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் கருத்தும் காணப்படுகிறது.

    இந்தியாஇலங்கைஇந்தோனேஷியாமடகஸ்கார்கம்பூச்சியாதாய்லாந்துமியன்மார்என்று பல இடங்களில் பனை காணப்படுகிறது. இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் பெருமளவு பனைகள் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலும் கணிசமாக பனை காணப்படுகிறது. கிழக்கில் பனை இருந்தாலும் பனையின் எழுச்சி என்பது இலங்கையில் வடபகுதியிலேயே இருக்கிறது என்றே கொள்ளலாம். ஏனென்றால் அங்கு காணப்படும் வரட்சிதான் முக்கிய காரணமாய் அமைகிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    பனை மரத்தைப் பற்றி எங்கள் இலக்கியங்களும் கூறி நிற்கின்றன. இலக்கியங்களில் கையாளப்படும் அளவுக்கு எங்கள் கற்பதரு இருக்கிறது என்றால் அதன் பெருமையினை நாங்கள் கருத்திருத்துவதும் அவசியம் அல்லவா !

    பனையினைத் தமிழர் தங்கள் மரம் என்று பெருமையுடன் கூறிக் கொள்ளுவார்கள். நினைப்பதைக் கொடுக்கும் நிலையில் இருப்பதால் இதனை கற்பகதரு என்று போற்றிவருதும் வழமையாய் இருந்துவருகிறது.

    குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை பனையோடு நெருக்கமாய் உறவாடியே வந்திருக்கிறோம்! பனை முறத்தால் எங்கள் மறத் தமிழ் பெண் புலியையே விரட்டினாள் என்பதையும் எங்கள் இலக்கியங்கள் காட்டுவதையும் நாம் கருத்திருத்த வேண்டும் !

    சங்க இலக்கியம் தொடக்கம் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் வரை கற்பகதருவாம் பனையினை வியந்தே நிற்பது கருத்திருத்த வேண்டிய விஷயம் அல்லவா !

      ” ……………………….. ஏந்துபுகழ்
    போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெருந்தானை மலைத்த பூவும் “

    என்று தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. இங்கு பனையினைக் காணவில்லையே என்று எண்ணுகிறீர்களா? “போந்தை” என்னும் சொல் பனையின் பூவினைக் குறிக்க சங்ககாலம் பயன்படுத்திய தாகும். அதனையே தொல்காப்பியம் காட்டி நிற்கிறது. “ஏந்துபுகழ் போந்தை” என்றால்  – உயர்வான புகழினை உடைய பனம் பூ – என்பது அர்த்தமாகும். பனையானது பழந்தமிழர் வாழ்வில் எந்தளவுக்குச் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விஷயம்தானே !

    புறநானூறிற்றிலும் பனையின் பெருமை சுட்டிக் காட்டப்படுகிறது.

      ” கையது வேலே காலது புனைகழல்
    மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
      வட்கர் போகிய வளரிளம் போந்தை “

    கையிலே வேல்காலிலே வீரக்கழல்உடலிலிலே வேர்ப்புகழுத்திலே பசும்புண்இவற்றுடன் பனம்பூம் மாலையும் – உடைய வனாய் அதியமான் என்னும் அரசன் காணப்பட்டான் என்று புற நானூறு புகன்று நிற்கிறது. இங்கும்போந்தை” என்னும் சொல்லானது பனம்பூவினாலான மாலையைக் குறிக்க வந்திருகிறது. அரசனின் போர்க்கோலத்தில் பனையின் பூவினால் ஆகிய மாலை அக்காலத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கி இருக்கிறது என்பது பனைக்குக் கிடைத்த முக்கியத்துவத்தை தெரிவிக்கிறது அல்லவா!

    இரும்பனையின் குரும்பை நீரும்” – (பனை நுங்கின் நீர்), “இரும் பனை வெண்தோடு மலைந்தேன் அல்லன்” (பனம்பூச் சூடிய சேரன் அல்லன்)

    என்றும் புறநானூறு காட்டி நிற்கிறது. பனைபற்றிய எடுத்துக் காட்டுகள் புறநானூற்றில் இன்னும் பல இடங்களில் சுட்டப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. மடல் இலக்கியத்திலும் பனையினைக் காணுகிறோம்.

    கலித்தொகைநற்றிணைகுறுந்தொகைஅகநானூறு ஆகிய சங்கத் தமிழும் பனையினைத் தொட்டுக் காட்டுகின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    சிலம்பும்வள்ளுவமும் பனையினை விட்டுவிடவில்லை. சிலம்பில் மூவேந்தர்களுடைய மாலைகள் பற்றி வரும்வேளை பனையும் வந்து நிற்கிறது.

        ” தோள் நலம் உணீய கம்பைப் போந்தையொடு “

        ” பலர் தொழ வந்து மலாவிழ் மாலை
    போந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல் “

    என்னும் சிலம்பின் பாடல்கள் பனையின்பூ மாலைகள் பற்றிக் காட்டி நிற்கிறது.

      “தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன் தெரிவார்”

    என்று வள்ளுவம் பனையினைப் பக்குவமாய் காட்டி இருக்கிறது.

    கடையார் நட்பிற் கமுகனையர் ஏனை
    இடையாயார் தெங்கின் அனையர் – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்றிட்டதே
    தொன்மை யுடையார் தொடர்பு “

    என்று நாலடியார் என்னும் அறநூல் பனையின் பெருமையையைப் பறைசாற்றி நிற்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். நால டியார் பனையினைப் போற்றுவதைக் காண்பதிலிருந்து பனையென் னும் கற்பகதரு அக்காலத்தும் பெருமைமிக்கதாய் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது அல்லவா !

      ” நடுவூருள் வேதிகை கற்றுக்கோட் புக்க
    படுபனை யன்ன பலர்நச்ச வாழ்வார்
    குடிகொழுத்தக்க கண்ணுங் கொடுத்துண்ணா மக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை “

    நாலடியார் இங்கும் பனைபற்றி சொல்கிறது. பெண்பனையினை யாவரும் – நல்லவர்களை அதாவது வள்ளல்களை விரும்புவது போல் ஊர் நடுவே விரும்பிபுவர் என்று காட்டுவது நோக்கத்தக்கது. ஆண்பனை அப்படி அல்ல என்று காட்டினாலும் பனைபற்றிய நிலை காட்டப்படுவது கருத்திருத்த வேண்டியதே !

    (வளரும்)

    Share