தேடினேன் வந்தது

பாஸ்கர் சேஷாத்ரி
(இசைக்கவி ரமணனின் பாரதி பற்றிய பேச்சில் விளைந்த பயிர் இது)
இருளுக்கு எதிரியா அல்லது நீயே இருளா ?
பாயும் ஒளியா வெம்மையின் ஆதியா
வெளிச்சத்தின் ரூபியா
நீ உயிர், அடக்க மாட்டாத ஒளியின் பயிர்
நீ வெளியை விழுங்க வந்தவன்
கடலில் முங்க வந்தவன்
நீ எங்கள் காபந்து எங்களைக் காக்கும் பெரும்பந்து நீ
உச்சம் நீ
விஸ்தீரணன் நீ
உலகாள்பவன் நீ
சர்வ வியாபி
ஒளியைப் பாய்ச்சும் உனக்கு ஒளி தருபவர்
யார் ?
நிழலில் இளைப்பாற யாரால் முடியும் ?
ஆனால் நீ விளைவித்த வெளிச்சமே உன்னுயிர்
புறக்கண்களால் தேடினால் விழிகளில் வடிநீர் அகக்கண்ணால் தேடுகிறேன் அகப்படவில்லை நீ
ஆனால் என்ன ?
நீ, நான், செடி, விலங்கு, நீர் நிலை, மலை, மழலை, உயிர் எல்லாம் ஒன்றே.