கருப்பு வெள்ளை

பாஸ்கர்

அந்த ஓரத்தில் நிற்பது மிலிட்டரி மாமா,
கருப்பு உதடு அவருக்கு, சதா சிகரெட்
வலப்பக்கத்தில் சங்கரன், மிருதங்கத்தில் பேசுவான்
இடப்பக்கம்  அரைப்பாவடையில்  பக்கத்து வீட்டு சூசன்-
நடுவில் நிற்பது ரங்கநாதம். பெரிய பாஷ்யகார்
பக்கத்தில் வெட்கத்துடன் பூமா மாமி, -வெகுளி
இந்த ஓரம் சீமான், என்னா உசரம். கபடியில் கெட்டி
கீழே அமர்ந்திருப்பது ஜானு-.மோர்ஸ் கோட் மன்னன்
அவனின் இடப்பக்கம் மைதிலி .-அடிவாங்கியே செத்துப் போனாள்
வலப்பக்கம் ரங்கன்.—ஜோபியில் எப்போதும் மூக்குப்பொடி டப்பா
தள்ளியே நிற்பது சாரதி, குடிப்பான், பரம சாது
அரை நிஜாரைப் பிடித்துக்கொண்டு நிற்பது நான்.
கருப்பு வெள்ளைப் படம் இருந்தால் மோந்து பாரும்
காலத்தைத் தள்ளிக் காற்றோடு கலந்து பின்செல்வீர்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *