”கண்ணிலே ஏரார்ந்த கண்ணி இடுகின்றாள்,
மண்ணுண்ணப் போவார் மடியிறங்கி’’ -எண்ணத்தில்:
நோக்கம் அவளுக்கு நெற்றித் திலகமல்ல,
காக்கைக்கு குஞ்சுபொன் குஞ்சு’’….!
’’அன்னை புரியும் அலங்காரம் பாராது
என்னதான் அப்படி யோசனை -கண்ணனே
ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா?
ஆதலினால் தானே அலுப்பு’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
சூரியனின் உட்புறக்கரு மேற்புறக் கோளத்தை விட நான்கு மடங்கு மிக வேகமாய்ச் சுழல்கிறது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை ! பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறுவனுக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)
+++++++++++++++++++++
கதிரவனின் சினம் எல்லை மீறிக்
கனல் நாக்குகள் நீளும் !
கூர்ந்து நோக்கினால் பரிதி ஓர்
போர்க்களம் !
நெற்றிக் கண் திறந்து
வெள்ளிச் சுடரொளி இரட்டிக்கும் !
துள்ளிக் கதிரலை பாயும் !
பொல்லாச் சிறகுகள் விரிந்து
பல்கோடி மைல் பயணம் செய்யும் !
வெப்ப அணுக்கரு உலையாம்
சூரியன் !
வீரியம் மிக்க தீக்கதிர்கள் !
பீறிட்டெழும் ஒளிப்பிழம்பு வீச்சுகள் !
மீறி வெளிப்படும் காந்த அலைச்
சூறாவளி !
குதித் தெழும்பும்
கோரத் தீப்பொறிகள் !
வட துருவத்தில்
வண்ணக் கோலங்கள் விளையாடும் !
வடுக்கள் முகத்தில் களையாகும் !
துணைக்கோள்கள்
முடமாகும் !
புவிக்கோள் தகவல் அமைப்புகள்
தவிக்கும் !
கோடான கோடி ஆண்டுக்கு முன்
செவ்வாய்க் கோள்
நீரை ஆவியாக்கியது
சூரியப் புயலே !++++++++++++++++
சூரிய உட்கரு வேகச் சுழற்சி கண்டுபிடிப்பு, கடந்த பத்தாண்டு களில் நாசா ஸோஹோ விண்ணுளவியின் ஒரு பெரும் சாதிப் பாகக் கருதப்படுகிறது. 40 ஆண்டுகளில் ஆழ்ந்து தேடி சூரிய விஞ்ஞானிகள், அதன் உட்கருவில் ஒருவித நடுக்க அதிர்ச்சி அலை [Seismic Wave] இருக்கும் நீடித்த சான்றை அறிந்துள்ளார்.
பெர்ன்ஹார்டு ஃபிலேக் [ ESA’s SOHO Solar Project Scientist ]
இதுவரைச் சூரிய அலை அதிர்வுகள் [Solar Oscillations] பற்றி அறிந்தவை எல்லாம் ஒலி அலைகள் [Sound Waves] மட்டுமே. ஆனால் மேலும் கீழும், மற்றும் மட்டத்தில் கடலலைகள் போல் இயங்கும் சூரிய ஈர்ப்பலைகளும் [Gravity Waves, (G-Waves) ] உள்ளன. 40 ஆண்டு களாய்ச் சூரியனில் நாங்கள் இந்த ஈர்ப்பலைகளைத் தேடி வருகிறோம். முடிவாக அந்த ஈர்ப்பலைகளின் தட முத்திரையை முதன்முறை அளந்து உறுதியாகக் கண்டுபிடித் துள்ளோம்.
எரிக் ஃபாஸ்ஸட் [ Astronomer Cote d’ Azur Observatory ]
நாற்பது ஆண்டுத் தேடலில் கண்டுபிடித்த அற்புத சுழற்சி
சூரிய விஞ்ஞானிகள் நாற்பது ஆண்டுகள் ஆய்வு செய்து சூரியனில் ஒருவித நடுக்க அலைகள் [Solar Seismic Waves] இருப்பதை நாசாவின் ஸோஹோ விண்ணுளவி [SOHO Solar Probe] மூலம் உறுதியாக அறிந்துள்ளார்கள். இதை 2017 ஆகஸ்டு முதல் தேதி நாசாவின் ஸொஹோ மூலம் ஆய்வுகள் செய்து, வானியல் இதழில் அறிவிப்பது ஈசா விஞ்ஞானிகள். இந்த தணிவு அதிர்வு அலைகள் [Low Frequency Waves ] ஜி முனைப்பாடு [G – Modes] என்று அறிவிக்கப் பட்டுள்ளன. ஜி – முனைப்பாடு சொல்வதென்ன வென்றால், சூரியனின் உட்கரு மேற்தளத்தைப் போல் நான்கு மடங்கு வேகம் உடையது. பூமியின் ஊடே பூகம்பம் செல்வது போல், சூரிய கோளத்தில், சூரிய விஞ்ஞானிகள் ஸோஹோ விண்ணுளவி மூலம் ஈர்ப்பலைகள் பாய்வதைக் காண்கிறார்.

சூரியனில் ஒலி அலைகள் [Sound Waves] மூலம் தொடர்ந்து சத்தம் கிளம்புகிறது. காரணம் சூரியனின் உட்தளத்தில் கனல்சக்தி சுழலோட்டம் [ Constant Convection ] எப்போதும் நிகழ்ந்து கொண்டுள்ளது. பிரென்ச் விஞ்ஞானி எரிக் ஃபாஸ்ஸட்டும் அவரது குழுவினரும் ஸோஹோ மூலம் 16.5 ஆண்டுகள் தகவல் சேமித்து ஆய்வு செய்ததாக அறியப் படுகிறது.
ஜி -அலைகளின் தடம் [Imprint of G -Waves] காட்டுவது சூரிய உட்கரு வாரத்துக்கு ஒருமுறை சுற்றுகிறது என்று. சூரியனின் மையத் தளம் 25 நாட்களுக்கு ஒருமுறையும், துருவங்கள் 35 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றன. ஜி – முனைப்பாடுகள் [G -modes] நமது சூரியனிலும், மற்ற விண்மீன்களிலும் காணப்படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள், புதிய பரிதி விஞ்ஞானத்தை [Solar Science] இப்போது துவங்கப் போகிறது என்பது புல்லரிப்பை உண்டாக்குகிறது.
“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை ! பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம். யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது. ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை. அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”
ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964)
1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன ! அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும். ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன ! அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின !
புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab)

“சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,. எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”
புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist)
“சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவிடும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA,)

1859 ஆண்டில் பரிதியில் நேர்ந்த பூதப்புயல் !
1.4 மில்லியன் கி.மீடர் (சுமார் 869000 மைல்) அகண்ட பரிதியின் நிறை மட்டும் பரிதி மண்டலத்தின் அனைத்துக் கோள்களின் நிறையில் 99.86 % பங்கு ! அந்த நிறைக் கணக்கிட்டால் அந்த அளவு மில்லியன் பூமிகளை விடச் சற்று பெரியது ! சூரியன் வெளியேற்றும் சராசரி எரிசக்தி ஆற்றல் : 383 பில்லியன் டிரில்லயன் கிலோ வாட் (10^21 kws) ! அந்த ஆற்றலை ஒப்பு நோக்கினால் ஒவ்வொரு வினாடியும் 100 பில்லியன் டன் டியென்டி (TNT) வெடிப்புச் சக்திக்கு இணையாகும் ! ஆனால் பரிதிச் சக்தி வெளியேற்ற அளவு எப்போதும் ஒரு நிலையானதல்ல ! பரிதியின் மேற்தளத்தைக் கூர்ந்து நுணுக்கமாக நோக்கினால் அதன் காந்தத் தளங்கள் தீவிரமாய்க் கொந்தளிக்கும் ஓர் போர்க்களமாய்த் தெரியும் ! வானவிற்கள் போல வளைந்த ஒளிப் பிழம்புக் கொதிப்பு முகில்கள், அலையும் கரிய சூரிய வடுக்களுடன் (Boiling Arc-Shaped Clouds of Hot Plasma, dappled with Dark, Roving Sunspots) காணப்படும். விஞ்ஞானிகள் கணிக்க முடியாத நிலையில், எப்போதாவது ஒருமுறை பேரளவு சக்தி வாய்ந்த “சூரிய தீவீச்சுகள்” அல்லது எரிவாயு வெளியேற்றம் (Solar Flares or Coronal Mass Ejection) உண்டாகும். அது வெப்பச்சக்தி வெடிப்பில் மின்னோட்ட வாயுவாக (Explosive Burst of Hot Electrified Gases) இமாலயச் சிகர அளவில் வெளியேறுகிறது !
1859 ஆம் ஆண்டு வேனிற் காலத்தில் பரிதிக்கும் பூமிக்கும் இடைப்பட்ட 150 மில்லியன் கி.மீடர். (93 மில்லியன் மைல்) தூரத்து அண்டவெளியில் சூரியனை நோக்கும் வானியல் நிபுணர் ஆகஸ்டு 28 ஆம் தேதி அதன் முகத்தில் அநேக வடுக்களைக் (Sunspots) கண்டனர். அந்த வடுக்கள் அனைத்தும் பரிதியின் மிக அடர்த்தியான தீவிரக் காந்தக் களங்களில் (Extremely Intense Magnetic Fields) காணப்பட்டன ! அந்த காந்தக் களங்கள் உட்தளப் பின்னலில் பிணைந்து திடீரெனத் தாவும் சூரிய தீக்கனல் வீச்சை (Violent Release of Energy – A Solar Flare) உருவாக்கக் கூடியது. ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அநேக தீக்கனல் வீச்சுகள் அடித்தன ! அந்த நாட்களில் செப்டம்பர் முதல் தேதி ஒரு பூதகரமான தீவீச்சு உண்டானது ! அந்த ஒரு நிமிடத்தில் மட்டும் பரிதியின் ஒளி திடீரென இரண்டு மடங்கானது !

பரிதிச் சூறாவளியால் ஏற்பட்ட தீவிர இன்னல்கள்
“1859 செப்டம்பர் முதலிரு நாட்களில் நேர்ந்த பரிதிச் சூறாவளில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,” என்று புரூஸ் சுருடானி கூறினார். “எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை. பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும். ஒரே ஒரு தீவிர தீவீச்சு 17 மணி 40 நிமிடத்தில் விரைவில் பூமியைத் தாக்கி விட்டது.” என்றும் சுருடானி கூறினார். “என்னைப் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி : அதைப் போன்று பூரணக் கோரப் புயல் ஒன்று பரிதியில் அடுத்து நிகழுமா ? அதற்கு நான் பதில் சொல்வது : ஆம் அப்படி நேரலாம் என்பதே. ஏன் 1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியை விட மிகப் பெரும் நிகழ்ச்சி எதிர்காலத்தில் ஏற்படலாம் !” என்றும் சுருடானி கூறினார்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட அந்தச் சூறாவளியின் போது ஏதோ ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்து விட்டதாகப் பூலோக மாந்தர் கதி கலங்கினார் ! பரிதிப் புயல் தாக்கிய சில மணி நேரங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய தந்திக் கம்பிகள் (Telegraph Wires) ஒரே சமயத்தில் இணைப்பு இடையூறாகி (Short Circuit) அநேக இடங்களில் தீப்பற்றின. பரிதித் தூள்களால் தூண்டப்படும் வடதுருவ வண்ண மின்னொளிகள் (Northern Colour Lights) பெருஞ்சுடரில் காட்சி அளித்ததைத் தென்புறங்களில் ஹவாயி, ஹவானா, ரோமாபுரியில் கூடத் தெரிந்ததாக அறியப்படுகின்றது ! அதே சமயத்தில் தென் துருவத்திலும் வண்ணக் கோலங்கள் காணப்பட்டன என்று தெரிகிறது !

சூரியனின் எரிவாயுத் திணிவு வெளியேற்றத்தில் (Coronal Mass Ejection) உள்ள காந்தக் களங்கள் அடர்த்தியான தீவிரத்தில் விரைந்து பூமியின் காந்தத் தளங்களை நேராக எதிர்க்கின்றன ! அதாவது 1859 செப்டம்பர் முதல் தேதி பூகாந்தத்தை அமுக்கிக் கொண்டு பரிதியின் மின்னேற்றத் துகள்கள் (Charged Particles) பூகோள மேல் உயர வாயு மண்டலத்தை ஊடுருவின ! அத்தகைய கோர விளைவுகள் வானில் ஒளிமயக் காட்சிகளையும், மின்னியல் பரிமாற்றுத் துறைகளையும், தகவல் அனுப்பு & ஏற்பு அமைப்புகளையும் (Electrical Grids & Communication Networks) பேரளவில் பாதித்தன ! உலகின் 140,000 மைல் நீளத் தந்தித் தொடர்புச் சாதனங்கள் பல மணி நேரங்கள் முடங்கிப் போயின. பேரளவு தீவீச்சு வெளியேற்றமானது பூமியில் ஏற்படும் பூத பூகம்ப ஆற்றலை விட மில்லியன் மடங்குச் சக்தி வாய்ந்தது !
1994 இல் உண்டான சூரியப் புயல் தகவல் தொடர்பு துணைக்கோள்களைத் தாக்கிச் செய்தித்தாள் பதிப்புகள், தொலைக்காட்சி ஏற்பாடுகள், அமெரிக்கா, கனடா ரேடியோ அறிவிப்பு அமைப்புகள், செல் ·போன் கம்பியில்லாத் தொடர்புகள், பூகோளத் தளச்சுட்டு ஏற்பாட்டுத் துணைக்கோள்களின் தொடர்புகள் (TV Signals to Global Positioning Sytems – GPS Systems) மின்சாரம் பரிமாற்றுத் தொடர்புகள் (Electrical Power Grids) பாதிக்கப் பட்டன. 1989 மார்ச்சில் ஏற்பட்ட தீவிரமற்ற ஒரு சிறிய பரிதிப் புயலில் கனடாவின் ஹைடிரோ-குவபெக் மின்சாரப் பரிமாற்றம் (Hydro-Quebec Power Grid) முடக்கப்பட்டு 9 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைப்பட்டது ! அதனால் விளைந்த நிதி விரயம் பல மில்லியன் டாலர் என்று கணிக்கப்படுகிறது.

பரிதி வாயுக் கோளத்தின் உள்ளமைப்பு
பரிதியின் விட்டம் 863,400 மைல், பூமியைப் போல் 109 மடங்கு விட்டம் ! அதன் எடை பூமியைப் போன்று 333,000 மடங்கு கனத்தது. சூரியனின் கொள்ளளவு [Volume] பூமியைப் போல் 1.3 மில்லியன் மடங்கு! கண்ணைப் பறிக்கும் பரிதியின் பெருஞ்சுடர் மேல்தளம் ‘ஒளிமயக் கோளம்’ [Photosphere] என்று அழைக்கப் படுகிறது. அடிக்கடி ஒளிமயக் கோளத்தில் ‘கரும் வடுக்கள்’ [Dark Patches], சில சமயம் 50,000 மைல் அகலத்தில் காட்சி அளிக்கின்றன! அவற்றைப் ‘பரிதி வடுக்கள்’ [Sunspots] என்றும் குறிப்பிடுவதுண்டு. பரிதித் தேமல்களில் உஷ்ணம் [4000 டிகிரி C], மேல்தள உஷ்ணத்தோடு [6000 டிகிரி C] ஒப்பிட்டால் எப்போதும் குறைந்தே இருக்கிறது. ஒளிமயக் கோளத்தை ஒட்டி யுள்ளது ‘செந்நிறக் கோளம்’ [Chromosphere] செந்நிறக் கோளுக்கு அப்பால் புறத்தே வெண்ணிறத்தில் ஒளிர்வது, ‘சுருள்தீ வளைவுகள்’ [Corona]. செந்நிறக் கோளும், சுருள்தீ வளைவுகளும், சூரிய கிரகணம் [சந்திரன், பூமிக்கும் பரிதிக்கும் நேரிடையில் கடக்கும் சமயம்] நிகழும் போதுதான் காண முடியும்! கண்களுக்குப் புலப்படாதபடி, செந்நிறக் கோளத்தி லிருந்து சில சமயங்களில் ஆயிரக் கணக்கான மைல் உயரத்தில் வாயுத்தீ நாக்குகள் [Flares of Luminous Gas] தாவி எழுவதுண்டு!

பரிதிக்கு நகர்ச்சி உண்டா ? உண்டு. விண்வெளியில் எந்த அண்டமும் நகர்ச்சி இல்லாமல் அந்தரத்தில் நிற்பதில்லை! மற்ற அண்ட கோளங்களைப் போல், சூரியனும் தன்னைத் தானே மெதுவாகச் சுற்றுகிறது. காலையில் கீழ்வானில் உதயமாகும் பரிதி, வான வீதியில் நகர்ந்து மாலையில் மறைவது போல் தெரிகிறது. ஆனால் மெய்யாக நகர்வது பூமி! சூரியன் நகர்வதில்லை! ஆனால் பரிதிக்கு வேறு முறையில் நகர்ச்சி உள்ளது. பரிதி தனது அச்சில் சுற்றும் போது, மத்திம ரேகைப் பகுதியில் சுற்றுக்கு 25 நாட்களும், துருவப் பகுதியில் 34 நாட்களும் ஆகின்றன. பரிதி பூமியைப் போல் திரட்சிப் பொருள் [Solid] எதுவும் இல்லாமல், வாயுக் கோளமாக இருப்பதால், சுற்றும் காலங்கள் நடுப்பகுதியிலும், இரண்டு துருவங்களிலும் மாறுபடுகின்றன. சுற்றும் சந்திரனைப் பூமி சுமந்து கொண்டு, தானும் தன்னச்சில் சுழன்று கொண்டு, சூரியனைச் சுற்றி வருகிறது. அதைப் போல தன்னைச் சுற்றி வரும் ஒன்பது அண்டக் கோள்களைத் தாங்கிக் கொண்டு, சூரியனும் தன்னச்சில் சுழல சூரிய குடும்பம், பிரபஞ்சத்தில் மற்ற அகிலவெளி ஒளிமய மந்தைகளைப் போல் [Intersteller Galaxy] பால்மய வீதியில் நகர்ந்து கொண்டே போகிறது!

சூரியனில் தெரியும் கருமை நிற வடுக்கள்
சூரிய கோளத்தில் தெரியும் கரும் புள்ளிகளை [Black Spots], 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே சைனாவில் வானியல் ஞானிகள் கண்டு குறிப்பிட்டிருக்கிறார்கள்! அவற்றைப் பரிதிவடுக்கள் [Sunspots] என்ற பெயரிலும் குறிப்பிடுகிறார். பரிதி வடுக்களில் கருந் தழும்புகளும் [Umbra], அவற்றைச் சுற்றிச் செந்நிற விளிம்புகளும் [Penumbra] சூழ்ந்துள்ளன! பரிதி வடுக்கள் இரட்டையாக இணைந்தே, சூரியனில் குறிப்பிட்ட சில வளைய மண்டலங்களில் மட்டுமே தோன்றுகின்றன. ஒடுங்கிய குறுக்கு ரேகைக் [Lattitude] களத்தில் மத்திம ரேகைக்கு [Equator] 35 டிகிரி வடக்கிலும், தெற்கிலும் பரிதி வடுக்கள் அங்கும் இங்கும் படர்ந்துள்ளன! மத்திம ரேகையை நெருங்க நெருங்க, வடுக்களின் எண்ணிக்கை அதிகமாகி 8 டிகிரி குறுக்கு ரேகையில் ஒன்றும் இல்லாமல் பூஜியமாகிறது. மற்ற வெப்பக் களங்கள் 6000 டிகிரி C உஷ்ணத்தில் கொந்தளிக்க, வடுக்களின் உஷ்ணம் 1500-2000 டிகிரி C குன்றி, களங்கள் கருமை நிறத்தில் தோன்றுகின்றன. அதற்குக் காரணங்கள் இன்னும் அறியப் படவில்லை! ஒரு வேளை காந்த சக்தி கொந்தளிப்பால், பரிதி வடுக்கள் உண்டாகி இருக்கலாம்! பரிதியில் ஒற்றை வடுவைக் காண்பது அபூர்வம். இரட்டை, இரட்டையாகவே தோன்றும் வடுக்களின் காந்தம் எதிர்முறையில் வட தென் துருவங்கள் போல நடிக்கின்றன. வடுக்கள் 20 நாட்களே நீடித்துப் பின்பு மறைந்து விடுகின்றன. பரிதி தன்னைத் தானே சுற்றும் போது, வடுக்களும் நகர்வதால். பரிதி சுழலும் வேகத்தை பூமியிலிருந்து தொலை நோக்கிகள் மூலம் அறிய முடிகிறது.

2010-2012 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் அசுர சூரியப் புயல் !
1859 இல் ஏற்பட்ட சூரியப் புயலை விட அசுர ஆற்றல் படைத்த சூறாவளி 2010-2012 ஆண்டுகளில் உண்டாகலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் கதிரலைப் புயலடிப்பு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் 300 புவியிணைப்புச் சுற்றுத் துணைக்கோள்களைப் (GEO – Geosynchronous Earth Orbiting Satellites) பேரளவில் பாதிக்கும் ! அவற்றால் பயன் பெறும் தகவல் துறைகள் முடக்கமாகி வருமானம் 30 பில்லியன் டாலர் நட்டமடையும் என்று கணிக்கப் படுகிறது ! ஜியோ துணைக்கோள்களின் ஆண்டு வருவாய் 97 பில்லியன் டாலர் (2006 டாலர் மதிப்பு) ! அதாவது குறைந்தது 30% வருவாய் இழக்கப்படும் என்று கருதப் படுகிறது ! மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய அகில நாட்டு விண்வெளி நிலையம் (International Space Station) பூமியிலிருந்து சுற்றும் உயரம் தாழ்த்தப்பட்டு, மீண்டும் பழைய சுற்று வீதிக்கு எழ முடியாமல் இடர்ப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !

(தொடரும்)
++++++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004)
25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001)
26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004)
27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003)
28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006)
29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt
30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\
31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/
32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php)
33 The Solar Spectral Irradiance & Its Vaiations.
34 http://www.thinnai.com/?module=displaystory&story_id= 40804101&format=html (திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? 35.http://www.dailygalaxy.com/
my_weblog/2017/08/nasaesa- discovers-suns-core-rotates-4- times-faster-than-surface-a- new-window-of-solar-physics- begins.html [August 1, 2017] 36.https://www.sciencedaily.
com/releases/2017/08/ 170801094354.htm [August 1, 2017] 37. https://phys.org/news/
2017-08-sun-core-rotates- faster-surface.html [August 1, 2017] 38. http://zeenews.india.com/
space/surprise-discovery- scientists-reveal-that-suns- core-rotates-four-times- faster-than-its-surface- 2029419.html [August 2, 2017] 39.http://www.dailygalaxy.com/
my_weblog/2017/08/suns-core- makes-one-complete-rotation- per-week-not-predicted-by- prior-models.html [August 7, 2017] ******************
S. Jayabarathan [ jayabarathans@gmail.com] [August 11, 2017] (R-1) -
முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா?
பவள சங்கரி
தலையங்கம்
முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா? தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்காக முதியோர் சிறுசேமிப்பு செய்த பணத்தை டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பது நியாயமா?
முதியோரின் மன நிலையை ஆட்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.. இறுதிக் காலத்தில் யாரிடமும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், கையேந்தாமல் தன்னிறைவு பெறவேண்டும் என்ற முனைப்பில் அரும்பாடுபட்டு சேமித்து வைத்து அதை அரசு வங்கிகளை மட்டும் நம்பி வைப்புத்தொகையாக வைத்து, வட்டியை மட்டும் வாங்கி செலவு செய்துகொண்டிருக்கும் முதியவர்களின் நிலை பற்றிய உளவியல் பிரச்சனை இது..
யதார்த்தமாக வாழ்க்கையை சந்திக்கக்கூடிய மனிதர்கள் நாங்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்க்கவும் முடியவில்லை, வரவேற்கவும் முடியவில்லை. இது எங்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் எந்தவொரு புதிய சட்டமாக இருப்பினும் மக்களின் ஒப்புதலுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக பிரிட்டனில் பிரெக்ஸிட் இப்படித்தானே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஒரு சாதாரண வியாபாரி மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும் போக்குவரத்து நிலையங்கள் (லாரி பயன்பாட்டாளர்கள்) ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 வண்டி பயன்படுத்தினாலே 6 இலட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக செலுத்தப்பட வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இவை அரசுக்கு செலுத்தப்படாத வருமானங்கள். இன்று 2 இட்லி சாப்பிட்டாலே 5 ரூ ஜிஎஸ்டி வரியாக செலுத்த வேண்டியுள்ளது. இப்படி ஒரு சூழலில் ஒரு நாளைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புதிய வருமானமாக வருகின்றன. இன்னும் 15 நாட்களில் ஸ்குவாட் வேறு வரப்போகிறது. இப்போது மக்கள் தாமாக முன்வந்து வரிவிதிப்பை ஏற்கும்போது முதியோரின் சிறு சேமிப்பில் கைவைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை பாழாக்குவது சரியா? நம் கண்முன்னே ஒரு நாட்டில் தம் மக்களுக்கு வாழ்வதற்காக ஆண்டுதோறும் சுமாராக 1 இலட்சம் டாலர்களை மக்களுக்கு வழங்கி அவர்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு சுவீடன் நாட்டில் நடந்தது. மிகப்பெரிய ஒரு வருமானம் வரும்போதுகூட அரசு ஏன் முதியோர் சிறுசேமிப்பில் கை வைக்க வேண்டும்? தற்போது உள்ள அரசு வருமானங்களை சரியான முறையில் நிர்வகித்தாலே மக்களுக்கு பல நன்மைகள் செய்ய முடியுமே?
பிரதமர் மோடி அவர்களின் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டுள்ள ஒரு முதியவரின் வேதனையான மடல் இது 🙁
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜீ!
மதிப்பிற்குரிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜீ!
உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை இதைப் படிப்பதற்காக செலவிட்டு இந்த விஷயத்தில் சரியான ஒரு முடிவு எடுப்பீர்கள் என்னும் நம்பிக்கையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன் முதலில்.
நான் இந்த நாட்டின் மூத்த குடிமகன். 1.8.2012 அன்று அரசுடமை வங்கியில் 40 லட்சம் ஐந்து வருடங்களுக்கு டெபாசிட் செய்தேன். ஒவ்வொரு மாதமும் எனக்கு ரூ. 35,352/- கிடைத்தது. எந்தப் பிரச்சினையுமில்லாமல் என் வாழ்க்கையை நடத்த முடிந்தது. 5 வருடம் முடிந்ததும், இப்போது மீண்டும் அந்தப் பணத்தை டெப்பாசிட் செய்தேன். இப்போது மாதம் ரூ.26489/- தான் கிடைக்கிறது. ஏற்கனவே வாங்கியதை விட ரூ.8863/-, அதாவது 25% குறைவான தொகை இது. இந்த இழப்பை எப்படி சரிக்கட்டுவது அல்லது மருந்து, காய்கறி, பருப்பு இவைகளில் எதைத் தியாகம் செய்வது என நீங்களே சொல்லுங்கள்.
2014ல் நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு எதையும் நீங்கள் செய்யவில்லை. புதிதாக எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. ஆனால் இருப்பதையும் குறைத்து விட்டீர்கள். எந்தப் பொருட்களின் விலையும் 2014ல் இருந்தது போல் இல்லை. உங்களால் புள்ளி விபரங்களைக் குறைக்க முடிந்திருக்கிறதே தவிர விலைகளை குறைக்க முடியவில்லை. பருப்பு, உப்பு, வெங்காயம், இப்போது தக்காளியென தினசரி பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமயங்களில் சில பொருட்களை எட்டி பார்க்கக் கூட திராணி இல்லை எங்களுக்கு.
இந்த வட்டி விகிதக் குறைப்பிற்கு Demand மற்றும் supply ஐக் காட்டி அரசியல் மட்டும் கோட்பாட்டு ரீதியான காரணத்தை உங்களால் சொல்ல முடியும். ஆனால் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்க தாங்கள் விரும்பினால், அது டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பதாய் இருக்கக் கூடாது. வராக்கடன்கள் என்னும் எரிமலைகளின் மீது வங்கிகள் இயங்குகின்றன.
தங்கள் பொன்னான காலங்களை எல்லாம் பல நிறுவனங்களுக்கும், தேசத்துக்கும் சேவை செய்து வாழ்ந்த எங்களைப் போன்ற மூத்த குடிமக்கள் மரியாதைக்குரிய வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பது அரசின் கடமையல்லவா? இந்த 25 % இழப்பினை எப்படி ஈடு கட்ட முடியும் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எந்த அமைச்சரோ, எம்பியோ, எம்.எல்.ஏவோ தங்கள் வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வருவார்களா? இல்லையென்றால் மூத்த குடிமக்கள் மட்டும் ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?
உங்களைப் போல எங்களின் ஊதியத்தை நாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. எந்த விவாதமும் இல்லாமல் உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க உங்களுக்கு இரண்டு நிமிடங்கள் போதும். ஆளும் கட்சி மேஜைகளில் இருப்பவர்களும், எதிர்க் கட்சி மேஜையில் இருப்பவர்களும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும். பற்றாக்குறை, பொருளாதாரம் மற்ற எல்லாக் காரணங்களையும் உங்களால் கடந்து விட முடியும்.
மூத்த குடிமக்களுக்கான இந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஆரம்பத்தில் 9.20 சதவீதமாக இருந்தது. ஜூலை, 2014ல் அது 8.3 சதவீதமாக குறைந்தது. அதுவும் 15 லட்சம் வரைதான். இந்த வட்டி விகிதம் ஓய்வு பெறுகிற ஒருவருக்கு கிடைப்பதைப் போல 12 சதவீதமாக இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பொருளாதார ரீதியான மரியாதையோடு தலை நிமிர்ந்து வாழ்வதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். எங்களின் சேமிப்பு மூலமாக வாழும் அவலநிலையில் நாங்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நான் எதுவும் தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.மரியாதையோடும், நன்றியோடும்-
-
“ஸ்ரீராம தர்ம சரிதம்” (4)
மீ.விசுவநாதன்பகுதி: நான்கு
பாலகாண்டம்
ஸ்ரீராமன் சந்தித்த அனுமனும், சுக்ரீவனும்பம்பைநதிக் கரையில்தான் பணிவுமிக்க தூய
பக்தனான அனுமனைப் பார்த்தான்ஸ்ரீ ராமன் !
தெம்புதுளிர் விட்டதுபோல் திருமுகத்தில் மெல்லத்
தெரிந்ததுநல் நம்பிக்கை ! தேவிதனைத் தேட
அன்புள்ள சுக்ரீவன் அரவணைப்பும் பெற்றான் !
அக்னிசாட்சி யோடவனும் அன்னையைக் கண்டு
இன்பத்தைத் தருவதாக இதயத்தால் சொல்லி
இராமனுடன் நட்புதனை இயல்பாகப் பெற்றான் ! (31)வாலி வதம்
அதன்பின்னே வாலியுடன் அவன்பகையைக் கூறி
அருள்கூர்ந்து தவுமாறு ஆறுதலாய்க் கேட்டான் !
இவன்கவலை போக்குதற்கு இப்போதே ஈந்தேன்
என்வாக்கை என்றுதன்வில் மீதடித்துச் சொன்னான் !
சிவபக்தன் ராவணனை சிறைபிடித்த வாலி
சேர்த்துள்ள பலந்தன்னை ஸ்ரீராமன் கேட்டு
அவன்கதை முடிப்பதற்கு ஆயத்த மானான் !
அங்குளஆச் சாமரங்கள் அத்தனையும் சாய்த்தான்! (32)மலைபோன்ற துந்துபியின் வலிவுடலைக் காட்ட
மடக்கியதன் கால்விரலால் வானுயரம் வீச
சிலைபோல நின்றிட்ட சுக்ரீவ(ன்) அங்கே
சிரித்தஸ்ரீ ராகவனின் செம்மையினைக் கண்டான் !
உலையிட்ட அரிசியைப்போல் உள்வெந்த கோபம்
உடனங்கு பொங்கிவர கிஷ்கிந்தை வாசல்
இலைபோட்டு அழைத்ததுபோல் இடியோசை போலே
எதிர்ப்பகையை சுக்ரீவன் எதிர்கொண்ட ழைத்தான் ! (33)குரல்வந்த திசைநோக்கி குகைவெளியில் வாலி
குதிபோட்டு வரும்வேளை குணவதியாம் தாரை
குரல்தாழ்த்தித் தடுத்தாலும் கோபத்தை வெல்லும்
குறியறியா வாலியினைக் கொன்றானே ராமன்
விரல்தட்டிச் விட்டிட்ட வினைமுடிக்கு(ம்) அம்பால் !
வேதனைதான் என்றாலும் வித்திட்டான் வாக்கை !
பரல்முத்து மணிமகுடம் சுக்ரீவன் ஏற்க
பறந்தனர்கள் வானரர்கள் சீதையினைத் தேடி . (34)சுந்தரகாண்டம்
கழுகினமாம் “சம்பாதி” கருத்ததனைக் கேட்டு
கடல்தாண்டி அனுமனும் காற்றாகச் சென்று
மொழுகினதோ தங்கத்தால் முழுபூமி (இ)லங்கை
முத்தாக ஒளிர்வதிலே முகம்பார்த்துக் கொண்டான் !
மெழுகாக உருகிவரும் சீதைமுகங் கண்டு
மெய்முழுதும் பூமிவிழ விநயமுடன் நின்றான் !
தொழுதான், அறிமுகமும் கொண்டவுடன் (இ)ராம
தூதனவன் ஆதாரங் கொடுத்துப்பின் வந்தான் ! (35)தன்னையங்கு எதிர்த்தவரை தவிடுபொடி ஆக்கி
தளபதி”அட் சயகுமாரன்” தலையினையும் கொய்தான் !
அன்னையவள் வைதேகி அசோகவனம் விட்டு
அத்தனையும் தீவைத்து ஆத்திரமும் தீர்த்தான் !
பின்னையவன் பெருங்கடலைப் பெருமையுடன் தாண்டி
பேரின்ப ராமனிடம், “கண்டேன்நான் சீதை”
உன்னையே நினைத்திருக்கும் உத்தமியாம் கோதை
உனக்கான செய்தியிது உண்மையெனச் சொன்னான் ! (36)இராவண வதமும், சீதையின் தவமும்
கடல்நீரைக் குறிவைத்தே ஓரம்பை எய்த
கணப்போதில் கடல்மன்னன் காட்சியினைத் தந்து
“இடரொன்றும் இல்லாமல் இலங்கைக்குச் செல்ல
இப்போதே உதவிகளைச் செய்துதரு கின்றேன்
கடல்நீர்மேல் “நளன்”கல்லை வைத்தாலே போதும்
கடகடென கற்பாலம் கண்முன்னே தோன்றும்
திடமான பாலமிது வெற்றியுடன் நீங்கள்
திரும்பிவரும் நற்காலம் தெரிகிறதே” என்றான் ! (37)போரினிலே இராவணனைக் கொன்றவுடன் சீதை
புடம்போட்ட தங்கமெனப் புரியவேண்டி அந்த
ஊரினிலே அனைவர்முன் உத்தமியைக் கோபக்
குரலாலே இராமனுமே குத்துகின்ற போது
மாரியிலும் தூய்மையாம் மகராசி அன்னை
மனத்தாலே தீக்குளித்து மானத்தைக் காத்தாள் !
வாரிவாரிப் பூச்சொரிந்து வாழ்த்தினரே அக்னி,
வானோர்கள் எல்லோரும் ! மகிழ்ந்தான்ஸ்ரீ ராமன் ! (38)ஸ்ரீராமன் பரத்வாஜர் ஆஸ்ரமம் வருதல்
இலங்கைக்கு மன்னனாக வீடணனை ஆக்கி
இறந்துபோன வானரரை எழுப்பிவிடச் செய்து
கலங்கிநின்ற மனத்தோர்க்கு கவலைகளை நீக்க
கல்யாண ராமனாகக் காட்ச்சிதர வேண்டி
நிலங்குளிரும் கார்குணத்தான் நேரயோத்தி செல்ல
நினைத்தங்கு புட்பகச்சீர் விமானத்தில் ஏற்றிப்
புலம்பெயர்ந்தான் ! பரத்வாஜர் புகழ்க்குடிலில் கொஞ்சம்
பொழுததனைக் கழித்திடவே புத்திதனைக் கொண்டான் ! (39)ஸ்ரீராம ராஜ்யம்
பக்திமிகு அனுமனிடம் பரதனிடம் சென்று
பக்குவமாய் வரும்செய்தி பகன்றிடவே சொன்னான் !
எத்திக்கும் இராமனையே எதிர்பார்க்கும் காலம்
இறங்கி”நந்தி கிராமத்தில்” இன்பமுடனி ருந்தான் !
தித்திக்கும் செய்தியினால் தேர்க்கூட்ட மாகத்
தேடிவந்த மக்களுக்குத் தேனாட்சி தந்தான் !
முக்திக்கு வழிகாட்டும் முனிவர்க(ள்) எல்லாம்
மோனத்தில் ஞானத்தில் மூழ்கிதனை வென்றார் ! (40)இன்பத்தைத் தவிரவேறோர் எண்ணமின்றி மக்கள்
ஏற்றமுடன் வாழ்ந்தார்கள் ! எல்லோர்க்கும் தர்ம
உன்மத்த மேறிநல்ல உள்பலங்கொண் டார்கள் !
உடன்பிறந்தோர், நண்பர்கள், உற்றோர்கள் என்று
அன்பொழுக வென்றார்கள் ! ஐயங்கள் தீர்க்கும்
ஆசார்ய மேலோர்கள் அற்புதம்செய் தார்கள் !
பொன்போன்ற காலமிது ! புகழ்ராம காதை
பொய்யில்லா தர்மத்தால் புவியாண்ட சத்யம் ! (41)பதினோறா யிர(ம்)ஆண்டு பற்றின்றி ஆட்சி
பார்த்துவந்தான் இராமராஜன் ! பட்டினியும் இல்லை,
பதிஇறப்பு மில்லை, பசுக்களுக்குப் பச்சைப்
பசேலென்ற புற்களுக்குப் பஞ்சமென்ப தில்லை !
நிதிக்குறையு மில்லை!ஓ(ர்) ஏழைகூட இல்லை !
நிறைவாக எவ்வுயிரும் எப்போதும் வாழ்ந்த
பதியன்றோ இராமனாண்ட பண்புள்ள தேசம் !
படிப்போர்க்கும் கேட்ப்போர்க்கும் பல்லாண்டு கூடும் ! (42)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில்
முதலாவது ஸர்க்கம் (பகுதி) முடிவடைந்தது) -
வெண்பூ வெண்பாக்கள்
கிரேசி மோகன்
———————————————–
காளிதாச கம்ப குமர குருபரர்கள்
தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
கைக்குட்டை யாய்கையில் கட்டு….(17)படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு….(19)அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது….(20)கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….கிரேசி மோகன்….! -
தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா
தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 நடைபெற உள்ளது
தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா 15.8.2017 காலை 8.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.
அரும்பாடுபட்டு நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது நமது கடமையாகும். அந்த வகையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், தனது அன்னையின் வாக்கின்படி வேலூர் மாவட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் நோய் தீர்க்கும் பீடமாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு பிரதான தெய்வமாக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதா 73 பரிவார தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளது மட்டுமல்லாது இதுவரை எங்கும் பார்த்திராத வகையில் பீடத்தின் நுழை பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற குழந்தைகளாக பாதுகாத்திடும் அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை செய்து உலக நலன் கருதி வழிபட்டு வருகிறார் என்பது ஸ்வாமிகளின் கூடுதல் சிறப்பாகும்.
நாளை 15.8.2017 காலை 8.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஊர் பிரமுகர்களின் முன்னிலையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினத் திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.. மேலும் இந்த வைபவத்தில் அனைத்து பொதுமக்களும் வந்திருந்து பங்கேற்று பாரதமாதா மற்றும் சுதந்திரதேவியின் அருளையும் பெறவேணுமாய் தன்வந்திரி குடும்பத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தேக நலன் மட்டும் இல்லாமல் தேச நலம் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சுதந்திர தின விழா நடைபெற உள்ளது என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் .
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!! .தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
Email : danvantripeedam@gmail.comWeb : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
“சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையைஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமனமீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய்ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்… -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும்
கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள்
போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை
போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….
”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!இன்னா செய்தார்க்கு நன்னயம் செய்கிறான் கன்னையன்….!
-
ஜீவான்மன்
ஆடு நனைய அழுகின்ற ஓநாய்
வாடும் மனமாம் வெறும்தாளில் –
கூடாம் உடலில் உயிரைக் கொடுத்த
மடலோ வியனே கடவுள்காண்….!ஆர்வம் முறுக்கிட ஆசை கிழித்திட
போர்வை மனமோ நார்நாராம்
கந்தையா னாலும் கசக்கிக் கட்டிட
புந்தியை ஈசா பிழிந்திடுவாய்….!கைலாஸங்கள் வைகுண்டங்கள்
காண்போர் கண்ணுக்கு மெய்யாகும்
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….மதங்கள் நூறு ஜாதிகள் கோடி
ஆதி அந்தமும் ஒன்றல்லோ
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை…!பூரணத்தைப் பரிபூரணமாக
ஜீரணம் செய்யும் சூரணமே
ஏனோ ஜீவா இந்த விசாரம்
ஆன்மனாகிநீ ஆள் உலகை….கிரேசி மோகன்….(தொடரலாம்….!) -
பொருள் ஒன்று, பயன் வேறு
ரா.பார்த்தசாரதி
உலை அரிசிக்கு தெரிவதில்லை – அது
உருமாறி பலரின் பசியாற்றப் போவது!
ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை – அது
அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!
அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை – அது
மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!
வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை – அது
சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!
ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை – அது
ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!
அரிசி ஒன்று தான் – ஆனால்,
பயன் வேறு வேறு!
மலர்கள் ஒன்று சேர்ந்து திருமண மாலையாகிறது
மலர்கள் சிதறி சவ ஊர்வலத்தில் மிதிபட்டு பாழாகிறது !
மாவிலை தோரணமாகி கல்யாண வீட்டில் தொங்குகிறது
மாவிலை காய்ந்தால் சருகாகி ,எருவாகி பூமிக்குள் அடங்குது !
தென்னை மரம் சுவையான இளநீர் தந்து தாகம் தீர்க்கிறது
அதன் ஓலையோ சவத்திற்கு படுக்கையாகிறது !
வாழ்க்கை ஒன்று தான் – அது
வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!
-
எல்லாமே தப்புதான்
ரா.பார்த்தசாரதி
தெரிந்தே குப்பையை தெருவில் போடுகிறாய் !
குப்பையை தொட்டியில் போடவேண்டும் என அறிந்திருப்பாய் !
வீட்டைப் பெருக்கி குப்பையை தெருவில் போடுகின்றாய் !
குப்பை தொட்டி இருந்தும், தொட்டியின் பக்கத்தில் போடுகின்றாய் !
பிளாஸ்டிக் கழிவையும், மிச்ச மீதிகளையும் வீதிக் கால்வாயில் போடுகின்றாய்
கழிப்பறையிலும் , சாக்கடையிலும் போட்டு தண்ணீர் ஊற்றிவிடுகின்றாய் ,
கட்டிட இடி பாடுகளை கொட்டி, தண்ணீர் வாராமல் வீட்டை மேடாக்குகிறாய்
சுயநலத்துடன் உன் வீட்டை தண்ணீர் புகாமல் தற்காத்துக் கொள்கின்றாய் !
ஏரி ,ஆறு, குளங்களை ஆக்கிரமித்து பிளாட் போடுகிறோம்,
பள்ளமான இடத்தில் கட்டிடங்கள் கட்டிக்கொள்கின்றோம்,
விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும், இலஞ்சத்திற்கும் துணை போகிறோம் !
அதிகாரத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் அடி பணிகின்றோம் !
வெள்ளம் வந்தபோதுதான் நமது இடத்தின் நிலைமை உணர்ந்தோம்,
எல்லா பொருட்களை இழந்து நடுதெருவில் நின்றதை அறிந்தோம்,
சாக்கடை நீரும், குடிநீரும் கலந்து மக்களுக்கு ஊறு விளைவித்ததே,
அரசாங்கமும், மருத்துவ முகாம் மூலம் துன்பங்களை தீர்த்ததே !
மக்கள் பட்ட கஷ்டங்களை எல்லோரும் அறிவர்
சிறு தொகை கொடுத்து மக்களை திருப்தி படுத்தினர் ,
சிறுதொகை அளித்ததால் இழந்ததை மறந்தனர் ,
பெற்றும், நம் அரசாங்கத்தையும்,அரசியலையும்,குறை கூறினர்!
வரும் தேர்தலுக்கா, மக்களின் நல்வாழ்விற்கா
இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதா !
எதனையும் திட்ட மிட்டு செய்வது நல்லதே
திட்டம் இல்லாமல் எதையும் அரசாங்கம் செய்யாதே !
நமக்கு தெரிந்தது எல்லாம் பணம் கொடுத்தால் மகிழ்ச்சி
இல்லாவிடின் அரசாங்கத்தையும், அரசியலையும் இகழ்கின்றோம்
ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் துணை போகிறோம்
என்றுமே உணர்வதில்லை எல்லாமே தப்புதான் என்று.!
-
பசிப்பிணி மருத்துவம்!
-மேகலா இராமமூர்த்தி
”பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா” என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்!பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்…அவை எவை?
“மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்”மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில்முயற்சி, தேன்மொழி பேசும் பெண்கள்மீது வருங் காதல் ஆகியவையே அப்பத்து. இவ்விவரத்தை நமக்குத் தருவது ஔவையின் ’நல்வழி.’ வறுமை வந்தால் இப்பத்துக்குமே வந்திடும் ஆபத்து!
காரிகையர் மீது வரும் காதலைக் கூடப் பொசுக்கிவிடக் கூடியது பற்றியெரியும் பசித்தீ என்பது பசியின் வீரியத்தைப் பாருக்கு உணர்த்துகின்றது.
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி எனும் பாவி”
என்று பசியின் கொடுமையை உணர்த்தி, அதனைப் பாவி என்று ஏசுகின்றது மணிமேகலைக் காப்பியம். ’இன்மை என ஒரு பாவி’ என்று ஏற்கனவே வள்ளுவர் வறுமையைச் சாடியிருப்பது நாமறிந்ததே. அதைத்தான் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சற்றே மாற்றிப் பசிப்பிணி எனும் பாவி என்கிறார்.பிணியென்று வந்துவிட்டால் அதற்கு மருத்துவம் தேவையல்லவா?
பசிப்பிணிக்கு மருத்துவம் அப்பிணியால் பீடிக்கப்பட்டு வாடுவோர்க்கு, வருந்துவோர்க்கு வயிறார உணவளிப்பதே.
வந்தோர்க்கெல்லாம் வரையாது உணவளித்த வள்ளல் ஒருவனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்று புறநானூற்றுப் புலவரொருவர் புகழ்ந்துரைக்கின்றார். அவர் சாமானியர் அல்லர்; சோணாட்டு வேந்தராகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் அரசப் புலவர் அவர்!
யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானுங் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ று இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
மற்றும் மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் – 173: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்)”என் வாழ்நாளையும் பெற்று நீ வாழ்க” என்று சிறுகுடிகிழான் பண்ணனை வாழ்த்தியபடிச் செல்கின்ற பாணர்களே! இதோ என்னருகில் நிற்கும் இந்தப் பாணர்களின் வறுமையை நோக்குங்கள். பழுமரத்தில் பறவைகள் ஆரவாரிப்பதுபோல் ஊணொலி அரவம் எங்கும் கேட்கின்றது. தப்பாது மழை பெய்யுங் காலம்நோக்கித் தம் முட்டைகளைச் சுமந்தவாறு மேட்டுநிலத்தை நோக்கி நகரும் சிற்றெறும்புகளின் வரிசையொழுங்குபோலச் சோறுடைய கையராய்த் தம் சுற்றத்தோடும் சிறுபிள்ளைகளோடும் செல்வோரைக் காண்கின்றபோதும் எம் பசிவருத்தத்தால் மீண்டும் மீண்டும் உம்மைக் கேட்கிறோம்… “பசிப்பிணி மருத்துவன் (சிறுகுடிகிழான் பண்ணன்) இல்லம் பக்கமா… தூரமா… எமக்குக் கூறுங்கள்?” என்று தன்னை ஓர் இரவலனாய் உருவகித்துக் கிள்ளிவளவனே பாடிய அற்புதப் பாடலிது.
அவனால் பசிப்பிணி மருத்துவனாய்ப் பாராட்டப்பெற்றுத் தனக்குரிய வாழ்நாளும் பெற்று வாழ்க என்று வாழ்த்தப்பெறுபவன் சிறுகுடி எனும் சோழநாட்டுச் சிற்றூரில் வசித்துவந்த பண்ணன் எனும் நிலக்கிழான். அரசனையே (அவனினும் எளிய) ஓர் நிலக்கிழானின் கொடைத்தன்மை பெரிதும் கவர்ந்து, அவன்பால் அன்புகொள்ள வைக்கின்றதென்றால் அக்கிழானின் வண்மை உண்மையிலேயே போற்றத்தக்கதுதான்!
மன்பதையில் வாழும் மக்கள் யாக்கை உணவின் பிண்டமே ஆகும். ஆதலால் உண்டிகொடுத்தோர் மானுடர்க்கு உயிர்கொடுத்தோரே ஆவர். மாதவிமகள் மணிமேகலை வற்றாது சுரக்கும் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரங்கொண்டு பசியால் வாடுவோர்க்கெல்லாம் வரையாது உணவூட்டி அறச்செல்வியாய்த் திகழ்ந்தாள்; புகார்நகரச் சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாய் மாற்றினாள் என்று அவள்புகழ் பாடுகின்றது மணிமேகலைக் காப்பியம்.
வளமையுடையோர் இருப்பதுபோலவே வறுமையுடையோரும் வையத்தில் என்றும் இருக்கவே செய்கின்றனர். எல்லாரும் சமநிலை எய்துந்தன்மை ஏட்டளவிலும் பாட்டளவிலுமே இன்றுவரைச் சாத்தியமாகியிருக்கின்றது; நாட்டளவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. ஆதலால், தம் செய்வினைப் பயனால் வளமையும் வசதியும் வாய்க்கப்பெற்றோர், வறுமையாளரின் இன்மையைப் போக்குதற்கும் அவர்வாழ்வின் புன்மையை நீக்குதற்கும் தம் செல்வத்தின் சிறுபகுதியையேனும் பயன்படுத்துதல் வேண்டும். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது சான்றோர் நன்மொழியன்றோ!
-
உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[61]
மேதையர், சித்தர்கள் போதிக்கட்டும்
விரும்பு வதையோ, விரும்பாத வற்றையோ;
அறுந்து போகா, முறியா, அப்பால் தாண்டா
நிரந்தரத் தொடர்பில் சேரும் இணைப்பு தவிர.
[61]
For let Philosopher and Doctor preach
Of what they will, and what they will not – each
Is but one Link in an eternal Chain
That none can slip, nor break, nor over-reach.
[62]
வானம் என்னும் கவிழ்த்திய கும்பாவின்
கீழே நாம் கூடி வாழ்கிறோம், சாகிறோம்,
கை உயர்த்தி உதவிக்கதை அழைக்காதே,
நீயோ நானோ என்றுருளும் மலட்டுத் தனத்தில்.
[62]
And that inverted Bowl we call The Sky,
Whereunder crawling coop’t we live and die,
Lift not thy hands to it for help – for It
Rolls impotently on as Thou or I.
[63]
புவிமுதற் களிமண்ணால் இறுதி மனிதன் வடித்து
கடைசி அறுவடைக்குப் பின் விதை விதைத்தார்;
ஆம் முதல்நாள் புலர்ச்சி படைத்தோன் எழுதியது
கடந்த காலப் பொழுது கணக்கில் இருப்பதை.
[63]
With Earth’s first Clay They did the Last Man knead,
And then of the Last Harvest sow’d the Seed:
Yea, the first Morning of Creation wrote
What the Last Dawn of Reckoning shall read.
-
எழுத்து -3
வேதா.இலங்காதிலகம்
எழுத்து வார்த்தை ஒரு மந்திரம்.
அழுத்தி வரலாறு படைக்கும் சுந்தரம் (நன்மை)
அழுக்கின்றி நீரின் மேலும் வானத்திலும்
முழுக்கவென் தலை மேலும் சுற்றுகிறது.
விழுந்திடாத வண்ணத்துப் பூச்சிச் சிறகசைவு.
எழும் இரகசியக் கனவின் பெருக்கம்.
விழுந்து பொங்கி நனைக்கும் நீரூற்று.
வழுதில்லா மலரின் மலர்வு எழுத்து.
என்னிலிருந்து பிறக்கும் எழுத்து விதை
மின்னும்! உலகெங்கும் பறவையாய் பரவும்!
அன்னியக் காடு, அமைதி வெளி,
சின்னக் கற்பாறை, சதுப்பு நிலமென
என்னவொரு வித்தியாசமின்றிப் பாரெலாம் பரவுகிறது.
இன்னலற்ற காற்றாக இறுக்கம் இன்றி
இன்னமுத அன்பாக என்றும் ஊடாடுகிறது.
என்னை வெகு சுதந்திரமாக ஆக்குகிறது.
கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து
என் புலன் உயிரிற்குள் புகுந்தது.
கன்னங்கரு இரவிலும் வெள்ளி தங்கமாய்
மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.
என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.
சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.
வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல, சுகமான சுமை
வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.
வின்னியாசம் (பேச்சுத் திறமை)எழுத்தால் தானே நிறைவுறும்.
பொன்னிலவொளி நிறையும் முற்றமாய் எழுத்து
மென்னகையோடு கைபிடித்துலவும் உலக நடைபாதையில்.
என் கவிக் கதிரின் பிரகாசம்
அன்வயமாய் (இயைபு) நாளும் மக்களோடு கரையட்டும்.
அன்பித்துக் கனவுகளைக் கைத்தடியாக எழுப்பட்டும்.
இன்பித்துத் துணிவை ஏற்றட்டும் எழுத்து.
உன்னதமாயாடும் மயிலின் நடனம் எழுத்து.
-
பிரளயப் பிளவுப் பாறைகள்
-காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
பிரளயப் பிளவுப் பாறைகள்
2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளன. அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.
சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில் வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.
அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத்திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின் நிலையிலிருந்து புரள்கின்றன. இவ்வாறு நிலத்திட்டுகள் புரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம். அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவுபட்டுள்ளன. இவ்வாறு பாறைகள் பிளவுபட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.
இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது. அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும் தாக்கி அழித்துள்ளது.
பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் எல்லாம் ஒன்று திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வருகின்றது. இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.
பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன. காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.
பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க …. “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவுபட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகத்தில் பழனி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.
இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்” இருப்பதை நன்கு காணமுடிகிறது.
புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள் பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன..
கொடைக்கானல் மலையில் “குணா குகை” என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?
(குறிப்பு – கட்டுரையாளரின் இந்தக் கருத்து அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்)
கொதித்து எழுந்து தருக்கள் அறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லாம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல் (திருவிளையாடல் புராணம் 1299.மண் புதைக்கத் திசைபுதைக்க மயங்கி இருள் போல் வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா (திருவிளையாடல் புராணம் 1302)நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத்
தெளிந்தோர் ஏழு பவப் பெரும் பௌவம் போலப்
பசைஅற வறந்தது அன்றே (திருவிளையாடல் புராணம் 1305)













