-காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

 

பிரளயப் பிளவுப் பாறைகள்

 

2004ஆம் ஆண்டு தமிழகத்தைச் சுனாமி தாக்கியது. ஆனால் இதைப்போலப் பல ஆயிரம் மடங்கு பெரிதான மிகப்பெரிய இரண்டு சுனாமிகள் அடுத்தடுத்துத் தோன்றி பாண்டிய நாட்டைத் தாக்கியுள்ளன.  அந்நிகழ்ச்சியைப் திருவிளையாடல் புராணம் விரிவாகக் கூறுகிறது.

சுனாமி பற்றிக் குறிப்பிடும் திருவிளையாடற் புராணப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

kalai1

ஊழிக்காலத்தில் குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டதாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  பக்தி இலக்கியங்களான தலபுராணங்களிலும் கடல்கோள் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன.  இதில் குறிப்பாகத் ‘திருவிளையாடல் புராணத்தில் வங்கக்கடல் கரையைக் கடந்து மதுரையைத் தாக்கியதாகக் குறிப்புகள் உள்ளன.

அந்தமான் நிக்கோபார் நிலப்பரப்பை ஒட்டிப் பெரும் நிலத்திட்டுகள் இருந்துள்ளன. இப் பெரும் நிலத்திட்டுகள் அவற்றின்  நிலையிலிருந்து புரள்கின்றன.  இவ்வாறு நிலத்திட்டுகள் புரள்வதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் பிரளயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றிலும் உள்ள நிலப்பகுதிகளில் பெரும் நிலநடுக்கங்கள் உண்டாகியுள்ளன.  இந்த நிலநடுக்கம் மதுரை உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கங்களினால் பாறைகள் பிளவுபட்டுள்ளன.  இவ்வாறு பாறைகள் பிளவுபட்ட காரணத்தினால், இந்தப் பாறைகளிடையே பெரும் சந்துகள் (இடைவெளிகள்) உருவாகி இருக்கின்றன.

இங்கே பெரும் நிலநடுக்கத்தால் பாறைகள் பிளவுபட்டுப் பாறைகளிடையே பெருஞ்சந்துகள் உருவாகிக் கொண்டிருந்த அதேநேரத்தில், அந்தமான் நிக்கோபார் பகுதியில் ஏற்பட்ட பிரயத்தைத் தொடர்ந்து பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகியுள்ளது.  அந்த பெருஞ் சுனாமியானது அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சுற்றியுள்ள பர்மா, இந்தோனேசியா முதலான  நாட்டு நிலப்பரப்புகளையும், மதுரையை மையமாகக் கொண்டு தென்னிந்தியாவையும் தாக்கி அழித்துள்ளது.

பிரளயத்தினால் ஏற்பட்ட பெரும் கடல்வெள்ளம் கரையைக் கடந்து தமிழகத்தைத் தாக்கும் போது, கடல்நீரால் அடித்துவரப்பட்ட கழிவுகள் எல்லாம் ஒன்று திரண்டு மாபெரும் கழிவுவெள்ளம் ஒன்று தோன்றிச் சுனாமி அலைகளுக்கு முன்னே வருகின்றது.  இந்தக் கழிவுவெள்ளமானது முன்னர் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டிருந்த பெரும் சந்துகளில் சென்று சேர்ந்து அடைக்கிறது.

kalai2

பெரும் நிலநடுக்கத்தினால் பாறைகள் பிளவுபட, பிளவுபட்ட பாறைகளுக்கு இடையே சுனாமியின் கழிவுகள் சென்று சேர்ந்து பிளவுகளை அடைத்துள்ளன.  காலப்போக்கில் இவ்வாறு சுனாமிக் கழிவுகளும் பாறைகளுடன் இறுகிப் பாறைகளாக மாறிவிடுகின்றன.

பாறைகளுக்கு இடையே மண்புதைந்த இந்த நிகழ்ச்சியை “மண்புதைக்க, திசைபுதைக்க …. “ கடல்வெள்ளம் வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ளபடி, பிளவுபட்ட பாறைகளிடையே மண்புதைந்து கிடக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்“ இருப்பதைத் தமிழகத்தில் பழனி அருகே விருப்பாச்சி என்ற இடத்தில் நன்கு காணும்படியாக உள்ளது.

இதைப் போன்று, தமிழகத்தை ஒட்டிய ஆந்திரமாநிலத்திலும் பிரளயத்தினால் பிளவு பட்டு மண்புதைந்து கிடைக்கும் “பிரளயப் பிளவுப் பாறைகள்”  இருப்பதை நன்கு காணமுடிகிறது.

புராணங்கள் எல்லாம் பொய் எனப் பலரும் கூறிவரும் இந்நாட்களில், புராணத்தில் பாடப்பெற்றுள்ள பாடல் வரிகளுக்குப் பொருள்கூறும் வகையிலான “பிரளயப் பிளவுப் பாறைகள் பல தமிழகத்திலும் ஆந்திராவிலும் காணக்கிடைக்கின்றன..

கொடைக்கானல் மலையில் “குணா குகை” என்று அழைக்கப்படும் பாறைப்பிளவும் பிரளய காலத்தில் உண்டான மாபெரும் நிலநடுக்கத்தில் தோன்றியதாக இருக்குமோ?

(குறிப்பு – கட்டுரையாளரின் இந்தக் கருத்து அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்)

கொதித்து எழுந்து தருக்கள் அறக் கொத்தி எடுத்து எத்திசையும்
அதிர்த்து எறிந்து வகைள் எல்லாம் அகழ்ந்து திசைப் புறம் செல்லப்
பிதிர்த்து எறிந்து மாட நிரை பெயர்த்து எறிந்து பிரளயத்தில்
உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வரும் ஆல் (திருவிளையாடல் புராணம்  1299. 

மண் புதைக்கத் திசைபுதைக்க மயங்கி இருள் போல்  வருநீத்தம்
விண் புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து இரவி
கண் புதைக்க வரும் அளவில் கண்டு அரசன் நடுங்கிப்
பெண் புதைக்கும் ஒருபாகப் பிரான் அடியே சரண் என்னா (திருவிளையாடல் புராணம் 1302)

நிவப்பு உற  எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய் விட்டு
உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்
சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத்
தெளிந்தோர் ஏழு பவப் பெரும் பௌவம் போலப்
பசைஅற  வறந்தது அன்றே (திருவிளையாடல் புராணம் 1305)

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “பிரளயப் பிளவுப் பாறைகள்

  1. சுனாமிப் பேரலை உயர்ச்சி, நில நீட்சி கடற்கரையில் சில நிமிடங்களில் நேரும். ஒரு மைலுக்கு மேலும் நிலத்துக்குள் கடப்பது வெகு, வெகு அபூர்வம். இதுவரை வரலாற்றுச் சான்றில்லை. திருவிளையாடல் புராணத்தில் சுனாமி மதுரையில் தாக்கியதாக எந்த வரிகள் கூறுகின்றன ?

    சுனாமி கடற்கரையைக் கடந்து 100 மைலுக்கு அப்பால் மதுரை வரை சென்றது என்பதற்குப் போதிய ஆதாரம் வரலாற்றில் இல்லை. உப்புக் கடல் நிலவளத்தைச் சிதைத்ததற்கும் ஓர் ஆதாரம் இல்லை. பூகம்பம் அந்தமானில் ஏற்பட்டால், தமிழகத்தில் நில நடுக்கம் ஏற்படலாம். ஆனால் நிலப்பிளவு ஏற்பட ஆதாரம் இல்லை.

    சி. ஜெயபாரதன்

    Tsunamis cause damage by two mechanisms: the smashing force of a wall of water travelling at high speed, and the destructive power of a large volume of water draining off the land and carrying a large amount of debris with it, even with waves that do not appear to be large.

    While everyday wind waves have a wavelength (from crest to crest) of about 100 metres (330 ft) and a height of roughly 2 metres (6.6 ft), a tsunami in the deep ocean has a much larger wavelength of up to 200 kilometres (120 mi). Such a wave travels at well over 800 kilometres per hour (500 mph), but owing to the enormous wavelength the wave oscillation at any given point takes 20 or 30 minutes to complete a cycle and has an amplitude of only about 1 metre (3.3 ft).[35] This makes tsunamis difficult to detect over deep water, where ships are unable to feel their passage.

    The velocity of a tsunami can be calculated by obtaining the square root of the depth of the water in metres multiplied by the acceleration due to gravity (approximated to 10 m/s2). For example, if the Pacific Ocean is considered to have a depth of 5000 metres, the velocity of a tsunami would be the square root of √(5000 × 10) = √50000 = ~224 metres per second (735 feet per second), which equates to a speed of ~806 kilometres per hour or about 500 miles per hour. This formula is the same as used for calculating the velocity of shallow waves, because a tsunami behaves like a shallow wave as it peak to peak value reaches from the floor of the ocean to the surface.

    The reason for the Japanese name “harbour wave” is that sometimes a village’s fishermen would sail out, and encounter no unusual waves while out at sea fishing, and come back to land to find their village devastated by a huge wave.

    As the tsunami approaches the coast and the waters become shallow, wave shoaling compresses the wave and its speed decreases below 80 kilometres per hour (50 mph). Its wavelength diminishes to less than 20 kilometres (12 mi) and its amplitude grows enormously – in accord with Green’s law. Since the wave still has the same very long period, the tsunami may take minutes to reach full height. Except for the very largest tsunamis, the approaching wave does not break, but rather appears like a fast-moving tidal bore.[36] Open bays and coastlines adjacent to very deep water may shape the tsunami further into a step-like wave with a steep-breaking front.

    When the tsunami’s wave peak reaches the shore, the resulting temporary rise in sea level is termed run up. Run up is measured in metres above a reference sea level.[36] A large tsunami may feature multiple waves arriving over a period of hours, with significant time between the wave crests. The first wave to reach the shore may not have the highest run up.[37]

    About 80% of tsunamis occur in the Pacific Ocean, but they are possible wherever there are large bodies of water, including lakes. They are caused by earthquakes, landslides, volcanic explosions, glacier calvings, and bolides.

    https://en.wikipedia.org/wiki/Tsunami

  2. தீவிரச் சுனாமிப் பேரலைகள் உள்நாட்டுக்குள் இத்தனை தூரம் புகமுடியது. உப்புக் கடல்வெள்ளம் பாதித்த தடங்கள் மதுரையில் எங்கேயாவது காணப்படுகின்றனவா ? நான் ஒரு மதுரைவாசி. எழுமாட வியனகர் என்பது மதுரையாக இருக்க முடியாது. மாதவி / மணிமேகலை காலத்தில் காவேரிப் பூம்பட்டிணம் கடல் கொண்டதாகப் படித்துள்ளோம். அவ்வளவே !

    சி. ஜெயபாரதன்.

  3. திருவிளையாடல் புராணப் பாக்களில் அழிந்து போனதாகக் கருதப்படும் எழுமாட வியனர் சுனாமி அடித்ததில் சிதைந்து போனது. அது கடற்கரை அருகில் பூம்புகார் போல் இருந்திருக்க வேண்டும். கடந்த பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்த அந்த நகரம் இப்போதுள்ள மதுரை என்பது ஒவ்வாத கற்பனை.

    சி. ஜெயபாரதன்

  4. சுனாமிப் பேரலைகள் நீண்ட கடற்கரைப் பகுதிகளை இணை அணி அணி மதிலாக தொடர்ந்து, உயர்ந்து விட்டுவிட்டுத் தாக்கிப் பின் சுருங்கி ஓய்கின்றன ! பெரும்பான்மையான கடல் வெள்ளம் மீண்டும் கடல் குழியில் இழுத்துக் கொள்ளப் படுகிறது. சுமார் அரை மணி நேரப் பாதிப்புதான். ஆனால் அழிவுகள் அசுர வடிவானவை.

    பேரலை மதிலின் நீளம் பல்லாயிரம் மைல் அகற்சி கொண்டது. சுனாமி ஆற்று நீரோட்டம் போல் சுமார் ஆயிரம் அடி அகற்சியில் ஓடுவதில்லை. 2004 சுனாமி போல் ஒன்று மதுரையைத் தாக்கி இருந்தால், மதுரைக்கு வடக்கிலும், தெற்கிலும் [தமிழ் நாடு, ஆந்திரா, இலங்கை] பற்பல நகரங்கள் உப்புக் கடல் வெள்ளத்தில் மூழ்கி இருக்க வேண்டும்.

    சி. ஜெயபாரதன்

  5. Tsunami 2004 Facts and Figures. This deadliest tsunami 2004 caused by a 9.0 magnitude earthquake, killing more than 250,000 people in a single day is the most devastating tsunami in modern times, traveled 375 miles (600 km) in a mere 75 min. That’s 300 miles (480 km) per hour, leaving more than 1.7 million homeless affecting 18 countries.
    Tsunami 2004: Asian tsunami, Indian Ocean tsunami, Box…

    http://www.tsunami2004.net/tsunami-2004-facts/

  6. சுனாமி மதுரைக்கு வரவில்லை. அதேபோல, கல்வெட்டுகள், இலக்கியங்களில் உள்ள பெயர் மணலூர். வடமொழியில் சிகதாபுரி.

    புராணத்தில் சுனாமி போலவே, மணவூர் என்பது ஊர்ப்பெயர். ஆனால், ஊரின் பெயர் மணலூர்.

    டாக்டர் சிங்கநெஞ்சன் மடல்களால் மணலூருக்கு எப்பொழுதும் சுனாமி வரவில்லை என தெரிகிறது.

    நா. கணேசன்

  7. /////திருவிளையாடற் புராணத்தில் உள்ளது ஐயா.
    இந்தப் பிரளந்தின் போது பர்மாவும் மதுரை போன்றே பாதிக்கப் பட்டுள்ளது. பர்மாவில் தட்டோன் நகரிலும் கீழடி(மணவூர்) போன்றதொரு அகழ்வாராய்ச்சி நடைபெற்றுள்ளது. மதுரைக்கு வந்த பெருஞ்சுனாமி பற்றித் திருவிளையாடற் புராணத்தில் பாடப்பெற்றுள்ளது போன்று, பர்மா புத்தவிகார்களில் பெருஞ்சுனாமியால் அவர்களது புத்தவிகார்கள் அழிந்த செய்திகள் உள்ளன ஐயா/////

    /// காளைராஜன்.///

    திருவிளையாடல் புராணத்தில் வந்த சுனாமி மதுரையைத் தாக்கியது என்று யார் எழுதிவைத்துள்ளார் ? எழுமாட வியனகர் என்பது பூம்புகார் போன்று ஒரு கடற்கரை நகர். உள்நாட்டு மதுரை இல்லை.

    சி. ஜெயபாரதன்

  8. நண்பர் காளைராஜன்,

    /////பெருஞ்சுனாமியால் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பஃறுளியாறு, பன்மலையடுக்கம், குமரிக்கோடு எல்லாம் அழிந்துள்ளன.////

    இந்த நிகழ்ச்சி 10,000 ஆண்டுகட்கு முன்பு நேர்ந்த பனியுகக் காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப் படுகிறது. சுனாமிப் பேரலைகள் இவ்விதம் செய்திருப்பாகச் சொல்லும் உங்கள் ஊகிப்பு முற்றிலும் தவறானது.

    /////தமிழகம் (ஆந்திராவும்) முழுவதும் பெரும் நிலவெடிப்புகள் நீண்டபிளவுகள் உண்டாகியுள்ளன.///

    தவறான ஊகிப்பு.

    பூகம்பம் அந்தமானில் நேர்ந்தால், பல ஆயிரம் மைல் தூரமுள்ள தமிழக, ஆந்திரா நிலங்கள் பிளக்கா.

    ////(மதுரை அருகே) வத்தலக்குண்டுக்கு மேற்கே மண்மலை தோன்றியுள்ளது. தூத்துக்குடிக்கு மேற்கே இரண்டு மண்மலைகள் உண்டாகியுள்ளன.///

    கடல் மணல் / மண் மலைகள் சுனாமியால் உருவாகி 300 மைல் தூரம் செல்லா.

    ////தமிழகம் எங்கும் bedding rocks, bedding sand படிமங்கள் உருவாகி உள்ளன. தென்னிந்தியா ஒரு பீடபூமியாக மாறியுள்ளது.////

    சுனாமிப் பேரலைகள் இவ்விதம் செய்யா.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.