Blog

  • பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    அண்ணாகண்ணன்

    தூக்கம் வந்தால் தூங்கிவிடு
    தும்மல் வந்தால் தும்மிவிடு
    அழுகை எழுந்தால் அழுதுவிடு
    சிரிப்பு வந்தால் சிரித்துவிடு
    ஆசைப் பட்டால் அடைந்துவிடு
    அதற்காய் நீயும் உழைத்துவிடு
    உணர்வை அடக்கிக் குறுகாதே
    ஒளித்து வைத்து மருகாதே

    தெரிந்தால் தெரியும் என்றுசொல்
    தெரியாது என்றால் அதையும்சொல்
    புரிந்தால் புரிந்தது என்றுசொல்
    புரியாவிட்டால் அதையும்சொல்
    பிடித்தால் பிடித்தது என்றுசொல்
    பிடிக்காவிட்டால் அதையும்சொல்
    வேண்டாம் என்றால் விட்டுவிடு
    வேண்டும் என்றால் மொட்டுவிடு

    அப்படி நடந்தால் அதுவும்சரி
    இப்படி நடந்தால் இதுவும்சரி
    எப்படி நடந்தாலும் சரியேதான்
    எல்லாம் நமது நன்மைக்கே
    அதிகம் யோசித்துக் குழம்பாதே
    உள்ளம் சொல்வதைக் கேட்டுநட
    திரும்பிப் பார்க்க நேரமில்லை
    ஓடிக் கொண்டே விளையாடு

    காதலில் கற்பனை அதிகமுண்டு
    கனவைக் கலைத்து எழுந்துவா
    நிஜத்தைப் பேசு நேருக்குநேர்
    நிலைப்பது நிலைக்கும் நீயேபார்
    வெற்றிகளாலே நீபேசு
    வேண்டியதெல்லாம் பின்தொடரும்
    ஆக வேண்டிய வேலையைப் பார் – இந்தா
    பறக்கும் முத்தம் பற்றிக்கொள்

    =======================================

    Photo courtesy: Maxpixel.net

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-112

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-112

    நாங்குநேரி வாசஸ்ரீ

    112. நலம் புனைந்து உரைத்தல்

    குறள் 1111

    நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்

    அனிச்சம் பூவே நீ மென்மையா மெத்துனு இருக்கதால. உன்னைய வாழ்த்துதேன். ஆனா உன்னையக்காட்டிலும் நான் ஆசப்படுத என்காதலி மென்மையானவ.

    குறள் 1112

    மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று

    நெஞ்சே! இவ கண்ணு பலபேரு பாக்க விரும்புத பூ கணக்கா இருக்குனு நெனைச்சு அந்தப் பூக்களப் பாத்தா நீ மயங்குதியோ.

    குறள் 1113

    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

    மூங்கில் கணக்கா தோள் இருக்க இவளுக்கு தளிர் கணக்கா மேனி, முத்துப் பல்லு, மயக்குத வாசம் (நறுமணம்), மை பூசின கண்ணு வேல்.

    குறள் 1114

    காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று

    குவளைப் பூவுக்கு பாக்குத தன்ம வந்திச்சின்னா இவ கண்ணுக்கு ஈடா நாம இல்லையேன்னு தேம்பி தலை குனிஞ்சி நிலத்தப்பாக்கும்.

    குறள் 1115

    அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
    நல்ல படாஅ பறை

    தன்னோட மென்மைய அறிஞ்சிக்கிடாம காம்பு எடுக்காத அனிச்சம்பூவ தலையில வச்சிக்கிட்டதால நொந்து நூலாப்போன இவ இடுப்புக்கு இனி நல்ல பறை ஒலிக்காது.

    குறள் 1116

    மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்

    இவ மொகத்துக்கும் நிலாவுக்கும் உள்ள வித்தியாசத்த அறிஞ்சிக்கிடமுடியாம நட்சத்திரங்க ஒரு நிலையில நிக்காம திரியுதுங்க.

    குறள் 1117

    அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து

    தேஞ்சு பொறவு வளந்து வெளிச்சத்தக் குடுக்குத நிலாவுல இருக்க களங்கம் கணக்கா சிறுசா கூட இவ மொகத்துல உண்டா? கெடையாதே.

    குறள் 1118

    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி

    இவ மொகத்துலேந்து வீசுத ஒளி கணக்கா நிலாவே நீயும் ஒளி வீசினா நீயும் என் காதலுக்கு உரிம பெறுவ.

    குறள் 1119

    மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி

    நிலாவே! பூ கணக்கா கண்கள் இருக்க இவ மொகத்த ஒத்து இருக்கணும்னு நீ நெனைச்சா எல்லாரும் பாக்குதமாரி வானத்துல வளையவராத.

    குறள் 1120

    அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்

    அனிச்சம்பூவுன்னாலும், அன்னத்தோட இறகுன்னாலும் என் காதலியோட பாதத்துக்கு நெருஞ்சிமுள்ளு கணக்கா செரையக் குடுக்கும். (அவ பாதம் அம்புட்டு மென்மை)

    Share
  • காதலர் தினம்

    காதலர் தினம்

    சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்

    காதல்
    சில சமயம்
    விளையாட்டானது!
    சில சமயம்
    விபத்தானது!
    சில சமயம்
    விபரீதமானது!
    சில சமயம்
    வினையானது!

    காரணம் பெரிதல்ல,
    காரியமே பெரிது.
    எதனால் வந்ததென்று
    எவர்க்கும் தெரியாது.
    எது ஈர்த்ததென்றும்
    எவர்க்கும் தெரியாது.
    காதல் வென்றால் வைரம்,
    தோற்றால்  ஒரு வைரஸ்.

    காதலர்களே,
    முயன்று மணப்பீர், இல்லையேல்
    முயன்று மறப்பீர்.

    வாழ்வதற்குத்தான்
    காதல் வேண்டும்.
    மாள்வதற்கல்ல.

    வாழ்க காதல்!
    வாழ்க காதலர்தினம்!
    வாழ்க காதலர் தினமும்!

    Share
  • நஞ்சு கலவாத நட்பு

    நஞ்சு கலவாத நட்பு

    நிர்மலா ராகவன்

    (பழகத் தெரிய வேணும் – 3)

    சீனப்பெண்கள் பிறருடன் நட்புகொள்ளும் வழி எது தெரியுமா?

    முதல் பெண்: ஐயோ, இப்போது சிக்கன் என்ன விலை விற்கிறது, பார்த்தீர்களா!

    இரண்டாமவள்: ஸேலோ (செத்தோம்!).

    மூன்றாவது: நாம் என்ன செய்தாலும், மாமியாரை மட்டும் கவரமுடியாது. மாமியார் கர்ப்பமாக இருந்தபோது, எந்தவிதமான உடல் உபாதையும் இருந்ததில்லை. நாம்தான் வியாதி கொண்டாடுகிறோமாம்.

    இரண்டாமவள்: ஹேலோ ஹேலோ  ஹேலோ! (ஆமாம், ஆமாம், ஆமாம்).

    நல்லதோ, கெட்டதோ, எதிரிலுள்ளவர்கள் சொல்வதை அப்படியே ஆதரிக்க வேண்டும். நல்ல விஷயமாகத் தோன்றினால், மூன்று ‘ஆமாம்’.

    இவ்வாறு, உரையாடல்வழி நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்.

    எனக்கு அம்மொழி தெரியாது. ஆசிரியைகளின் பொதுவறையில் இவ்விரண்டு வார்த்தைகளும் அடிக்கடி ஒலிக்கும். அவர்களைக் கேட்டு, அர்த்தம் தெரிந்துகொண்டேன்.

    இத்தகைய நட்பு ஆழமானதல்ல. பொழுதைக் கழிக்க ஒரு வழி. அவ்வளவுதான். ஒருவர் அருகில் இல்லாதபோது அவரைப்பற்றிப் பிறரிடம் குறையும் கூறுவார்கள்.

    பார்ப்பவர்களிடமெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் குணமும், பொறாமையும் நட்பை வளர்க்குமா?

    துஷ்டரைக் கண்டால்..

    ஒரு கோப்பையில் நஞ்சு.

    இன்னொன்றில் நஞ்சு கலந்திருக்கலாமோ என்ற ஐயம்.

    இவற்றில் எதைக் கையில் எடுப்போம்?

    நட்பும் இப்படித்தான். ஒருவனுக்கு நற்பண்புகள் இல்லை என்று தெரிந்தும், ‘அவனை நான் மாற்றிவிடுவேன். அவனுடைய தீயகுணங்கள் எனக்குள் தொற்றிவிடாது. நான் மனோதிடம் உள்ளவன்,’ என்று சாதிப்பது அறிவீனம். நம் குறைகளை உணராது, அல்லது ஏற்க விரும்பாது, நமக்கு நாமே அதிக மதிப்பெண்கள் அளித்துக்கொள்வதால் வரும் வினை. சறுக்குவது எளிது.

    ஒருவரது மகிழ்ச்சியை எப்படியெல்லாம் குலைக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பார்கள் நண்பர்கள் என்ற போர்வையில் நடமாடுபவர்கள்.

    கதை

    உயர் அதிகாரியான கேசவனின் மனைவி, பலர் முன்னிலையில் அவனைப் பழிப்பாள்.

    அதனால் அவனுக்குத் தன்கீழ் உத்தியோகம் பார்த்த முரளியின் இன்பமான இல்லற வாழ்க்கையைக் கண்டு பொறாமை.

    முரளியை மனைவி வத்சலாவுடன் தன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தான் கேசவன். அவளுக்கு முரளியினுடைய குடிப்பழக்கம் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும்.

    நண்பன் சிறுநீர் கழிக்க உள்ளே போனதும், “நேற்று வெகு நேரம் கழித்துத்தானே முரளி வீட்டுக்கு வந்தான்? என் வீட்டில்தான் குடித்துக்கொண்டிருந்தான்,” என்று வத்தி வைத்தான்.

    வத்சலா எந்தவித அதிர்ச்சியையும் காட்டாதது அவனுக்கு ஏமாற்றம்தான்.

    வீடு திரும்பியதும், “இந்த மனிதனைப்போய் நண்பன் என்று நம்பினீர்களே, பாவம்!” என்றபடி, நடந்ததை விவரித்தாள் அவள்.

    “விளையாட்டாக அப்படிச் சொல்லி இருப்பார்!” என்று அதிகாரிக்குப் பரிந்தான் முரளி.

    மறுமுறை சந்தித்தபோது, “உன் மனைவி அன்று ஏதாவது சண்டை பிடித்தாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் கேசவன்.

    “இல்லையே!” என்றபோது, முரளிக்கு மனைவி கூறியதில் இருந்த உண்மை புரிந்தது.

    என்ன இருந்தாலும், மேலதிகாரி. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்த்தானே ஆகவேண்டும்!

    பல வருடங்களுக்குப்பின், “உன் மனைவி வத்சலாவுக்கு நீ நிகரே இல்லை. நான்தான் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும்,” என்று கேசவன் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தபோது, முரளிக்கு வெறுத்துப்போயிற்று.

    குடிப்பழக்கத்தால் இணைந்த இருவரும் நிம்மதியற்று, மற்றவரைவிட்டு விலக முடியாது தவித்தனர். இன்னும் எப்படியெல்லாம் இவனைக் கவிழ்க்கலாம் என்று யோசித்தான் கேசவன். மேலும் மேலும் தீய பழக்கங்களில் முரளியை ஈடுபடுத்த முயன்றபோது, அவன் விலகினான்.

    ஏதோ ஒரு தீய பழக்கத்தால் ஒன்று சேர்ந்து, அதை நெருங்கிய நட்பு என்று மகிழ்பவர்களுக்கு இறுதியில் கசப்புதான் மிஞ்சும்.

    மாறாக, நல்ல நண்பராக இருந்தால், ஒன்றாக மது அருந்தினாலும், ‘இல்லவே இல்லை,’ என்று பொய்சத்தியமாவது செய்வார்!

    கதை

    நள்ளிரவில் ஒரு நண்பர் சிவநேசனை அழைத்து, “என் கார் நின்றுவிட்டது. உதவி செய்ய உடனே வா,” என்று அழைப்பு விடுத்தார்.

    இருவரும் பதின்ம வயதிலிருந்தே சிறந்த நண்பர்கள். ஆனாலும், தூக்கக்கலக்கத்தில் எழுப்பி உதவி கேட்கிறானே என்று சிவநேசனுக்கு எரிச்சல்.

    “நான் போகப்போவதில்லை,” என்று, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டார்.

    “உங்களுக்கு ஒரு ஆபத்து என்றுல் அவர் வருவாரா?” என்று கேட்டாள் மனைவி.

    “வருவான்!”

    “நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்பித்தானே அழைக்கிறார்! நீங்கள் போகத்தான் வேண்டும்,” என்று மனைவி வற்புறுத்தலாகக் கூற, சிவநேசன் எழுந்தார்.

    ‘நான் என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பது ஏமாளித்தனம். இத்தகையவர்களை ‘நல்லவர்’ என்று பாராட்டுகிறவர்கள் அனேகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள்.

    கதை

    எவ்வளவு விஷயங்களை இந்த ஆசிரியை தெரிந்து வைத்திருக்கிறாள் என்று மாணவர்களை பிரமிக்கவைக்கும் நோக்கத்துடன் ரோஸ் என்ற சீன ஆசிரியை இந்தியாவைப்பற்றி என்னிடம் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

    அடிக்கடி இது தொடர்ந்தது.

    ‘நெருங்கிய தோழிதானே!’ என்றெண்ணி, ஒரு நாள் நான் அவளிடம் ஒரு புத்தகத்தை இரவல் கேட்டேன்.

    “மலிவுதான். உங்களால் வாங்கிக்கொள்ள முடியாதா!” என்றாளே, பார்க்கவேண்டும்!

    அடுத்தடுத்து வந்த நாட்களில், என்னிடம் பழையபடி உறவுகொண்டாடி, ஏதேதோ சந்தேகம் கேட்டாள்.

    விறைப்பாக எழுந்த என் ஒரே பதில்: “தெரியாது”.

    என் கோபம் புரிந்து, அந்த புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்தாள்.

    நான் அதைத் தொடவே மறுத்துவிட்டேன்.

    முகத்தில் அழுகையைக் காட்டினாள்.

    ‘நாடகமாடுகிறாளோ!’ என்ற சந்தேகம் எனக்கு. இப்படிப்பட்டவர்களுடன் உறவாடுவதைவிட தனிமையே மேல் என்று தோன்றிப்போயிற்று.

    தம்மை உயர்த்திக்கொள்ளும் முயற்சி

    சிலர் ஒருமுறை சந்தித்தபின், அடிக்கடி நம்முடன் உறவு கொள்ள முயற்சிப்பார்கள்.

    கதை

    வேற்றூரிலிருந்து வந்திருந்த மேரியை ஒரு பொதுநிகழ்ச்சியில் சந்தித்தேன். சில நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.

    மறுநாளே அவளிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. பெரிதாக எதுவும் சமாசாரம் கிடையாது.

    அடுத்து வந்த சில மாதங்களில், நாள் தவறாது அழைக்க ஆரம்பித்தாள். அப்படித் தினமும் பேச என்ன இருக்கிறது? சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியதுடன், திரைப்படப்பாடல்களின் வரியைக் கேட்பாள்.

    பிறரைப்பற்றி ஓயாது குறைகூற ஆரம்பித்தாள். அவர்கள் எனக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தர்மசங்கடமாக இருந்தது. என்னைப்பற்றி அவதூறாகச் சிலர் பேசியதையும் என்னிடமே கூறினாள்.

    கோலாலம்பூரிலிருந்து தொலைதூரத்தில் நிகழ்ந்த ஓர் இலக்கிய நிகழ்வுக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள்.

    “பார்வையாளராக நானும் வருவேன். நீங்க என்னோட அறையிலதான் தங்கணும்,” என்றாள் மேரி, பிடிவாதமாக.

    ‘சில நிமிடங்களிலேயே அவ்வளவு பேரைக் குறை கூறுவாளே! இரண்டு நாட்கள் முழுவதும் இவளுடன் எப்படிக் கழிப்பது!’ என்று அயர்ந்தேன்.

    மாடியும் கீழுமாக விஸ்தாரமாக இருந்த இடத்தில், ஊடகத்துறையிலிருந்த இளம்பெண் ஒருத்தியுடன் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    நான் அவளுடன்தான் தங்க வேண்டும் என்று மேரி நிர்வாகத்தினருடன் சண்டை பிடித்தாளாம். அவர்கள் ஒப்பவில்லை.

    என்னைச் சந்தித்தபோது, “நீங்க கேக்கலியா, என்கூடத்தான் தங்குவேன்னு?” என்று கேட்டபோது, “அவர்களுக்குத் தலைக்குமேல வேலை, பாவம்! எதுக்கு நான் வேற கஷ்டப்படுத்தணும்?” என்றுவிட்டேன்.

    “ஒங்க கூட இருக்கிற பெண்ணை ஒங்களுக்கு மொதல்லேயே தெரியுமா?”

    “தெரியாது”.

    இந்த இரண்டு கேள்விகளையும் பல முறை கேட்டபோது, என் பொறுமை மீறியது. “எதுக்கு ஓயாம பேசறது? ஒங்களுக்குப் பொழுதுபோகாட்டா, லைப்ரரிக்குப் போறது! இல்லே..,” என்று சிடுசிடுத்தேன்.

    அதிலிருந்து அவள் என்னை அழைப்பதில்லை.

    ‘படித்த, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கப்போகிறேன்,’ என்று முடிவெடுப்பதுபோல், ‘இவளுடன் நடந்தால் என்னையும் கவனிப்பார்களே!’ என்ற எதிர்பார்ப்பா? (காதலோ, நட்போ இப்படி முன்னேற்பாடுடன் வருவதில்லை). நம் நிலை சரிந்தால் மறந்துவிடுவார்கள்.

    உண்மையான நட்பு

    பத்து ஆண்டுகள் ஒன்றாகப் படித்து, அல்லது ஒரே துறையில் ஈடுபட்ட ஓரிருவர் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறார்கள். குறைகளைப் பெரிதுபடுத்தாது, ஒருவர் மற்றவரை அப்படியே ஏற்கும் தன்மை கொண்டவர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டி, ஒருவரையொருவர் ஊக்குவிக்கிறார்கள்.

    இம்மாதிரியான நண்பர்கள் உடலால் பிரிந்துபோனாலும், மனதால் விலகுவதில்லை.

    Share
  • பென்சில்லையா

    பென்சில்லையா

    பாஸ்கர் சேஷாத்ரி

    “இங்க பென்சில்லையா வீடு எது?”

    “வீடா? அந்த முக்குல ஒரு குடிசை. அதான் வூடு, நீ யாரு?”

    “சுகு”

    “என்னவோ?”

    அங்கு தள்ளி நின்று குரல் கொடுத்தேன்.

    “யாரு?”

    வெளியே வந்தவர் என்னை பார்த்து வணக்கம் சொன்னார்.

    “என்னப்பா? இரண்டு பேரை அனுப்பினேன்.”

    பதில் இல்லை.

    “ரொம்ப சோர்வா இருக்கு சார்”

    “கொஞ்சம் வந்துட்டு போ. வீட்ல உக்கார முடியல. பக்கத்துல ஒரே சண்டை. குழந்தை வேற இருக்கு.”

    “புரியுது சார். கொஞ்ச நாளா மனசு சரியில்லை. இருபது வருஷமா உள்ளே இறங்கி மலத்தை வெள்ள கொட்டறேன். அப்பெல்லாம் தெரியல. இப்ப முடியல”

    “உண்மை தாம்பா, ஒத்துக்கிறேன், உன் வேலையை யாரும் செய்ய முடியாது. என் நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.”

    “ஈசியா சொல்ட்ட. காலைல சட்டையை அவுத்துட்டு உள்ளே போனா நரகம். என் துணிய வண்ணான் கூட வாங்க மாட்றாங்க. இருட்டுல இறங்கி உள்ளே போய் வேலை செஞ்சா சோறு இறங்க மாட்டேங்குது.”

    “கோச்சிக்காதே பா. கொஞ்சம் வந்துட்டு போப்பா.”

    “இவ்வளவு வருஷம் தெர்ல சார். நீ சட்டை போட்டுகினு வேலைக்கு போவ. நான் அவுத்துட்டு போனும்.”

    “என்ன சொல்ற?”

    “பொண்டாட்டி சொன்ன கேக்கும்.”

    “ஆனாலும் சண்டை வரும்.”

    “தொழிலை மாத்திக்க முடியல? படிக்கல.”

    “ஆந்திராலேந்து வந்து முப்பது வருஷம் ஆச்சு”

    “எல்லாம் சரிதாம்பா. நீ என்ன பணம் கேட்டாலும் கொடுக்கிறேன். அரை மணி வந்துட்டு போ. ஆட்டோ காசு தாரேன்.”

    “பாத்தியா. நீயே உன் வண்டில உக்கார உடமாட்ற.”

    “அது இல்லப்ப.”

    “பரவால்லை சார். எல்லாம் பழகி போச்சு.”

    “எப்பவும் மலத்தண்ணீர்ல மூழ்கி உடம்பெல்லாம் அரிப்பு. டாக்டர் என்ன வேலை செய்யறேன் கேட்டா பதில் சொல்ல முடியல.”

    “கஷ்டம் தான். நான் என்ன செய்யணும், சொல்லு.”

    “இது பரவால்லே சார். காசு கொடுப்பே. நான் செய்வேன்.”

    “ஆனா வீட்டுக்கு வந்து பெத்த குழந்தையை கொஞ்ச முடியல. ஓடிப்போவுது.”

    “சொல்லு சார். உடம்புல நாத்த மருந்து போட்டா குழந்தை கொஞ்சுவா இல்ல?”

    “அவன் கையை பிடித்து கொண்டேன். என்னை மன்னிச்சுடுப்பா.”

    “விடு கையை. நீ ஏன் சார். கிளம்பு சார். தோ வரேன்”

    “இல்லப்பா. எனக்கு குத்துது பா.”

    “வுடு சார். கொஞ்சம் ஊத்திண்டு வரேன். பணம் கூட வேணாம் சார். அந்த மருந்து கொடு சார்.”

    இவன் தேடும் தெய்வங்களுக்கு சமமானவன். ஒரு நாளில் காலில் விழ வேண்டும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 67 (வருமுறை)

    சேக்கிழார் பாடல் நயம் – 67 (வருமுறை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
    தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
    அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
    திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்
    இப்பாடலில்  தில்லைவாழ் அந்தணர்களின்  சிறப்பியல்பு கூறப்பெறுகின்றது.

    விதிமுறைப்படி அமைக்கின்ற  மூவகை அக்கினிகளாகிய ஆகவனீயம், தக்கிணாக்கினி, காருகாபத்தியம் என்னும்  யாக நெருப்புகளை வழுவாமல்  காப்பர். அறத்தையே  குறிக்கோளாகக் கொண்ட தத்துவ நெறிகளில் வளரும் அரிய நால்வகை வேதங்களையும், ஆறுவகை வேதாங்கங்களையும் இடைவிடாமல்  பயிலவர். அவற்றில் முழுத்திறமையும்  பெற்றவராய், இனிய நடம் புரியும் தில்லை நடராஜருக்கு அடிமைத்திறம் புரிவர். அத்தகைய அருட்செல்வம் பெற்றவர்களாகத்  தில்லைவாழ் அந்தணர் விளங்கினர்.

    வேதங்களாகிய உண்மை நூல்களில்  விதித்த  முறைகளினின்றும் வழுவாமல் மூவகை எரிகளை அவர்கள் ஓம்புவர் என்பதை ‘வருமுறை எரி மூன்று  ஓம்பி‘ என்ற தொடர் கூறுகிறது. அம்மூவகை எரிகளுள் ஆகவனீயம் என்பது, யாக சாலையில்  தேவர்களுக்காக  வேதிகையின்  வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப் பெறுவதாகும். தக்கிணாக்கினி என்பது வேதிகையின் தெற்கில் அரைச்சந்திர வடிவில் குண்டம் அமைத்து வளர்க்கப் பெறுவதாகும்.

    இதுதென்புலத்தாருக்குஉரியதாகும். ஆகவனீயத்தை   அடுத்து வட்டவடிவில்  குண்டம்  அமைத்து வளர்க்கப்  பெற்று, இல்வாழ்வோரால் இல்வாழ்வோரால் ஓம்பப் பெறுவது காருகாபத்தியம். ‘வைதிகாக்கினி, சைவாக்கினி, வைந்தவாக்கினி’என்ற மூவகை எரிகளியும் எரிமூன்று என்பர். இறக்கும் வரை காத்து, இறந்தபின்னும் அக்கிரியைக்கும் உதவுமாறு  வளர்ப்பதை ‘ஓம்பி’ என்ற சொல் குறிக்கும்.

    சிவமாகிய பரதத்துவத்தை அடையும் நெறியே தத்துவ நெறியாகும். இவ்வாறு அக்கினியை  ஓம்புதல் மன்னுயிர்கள் அருளை மேற்கொள்வ தற்காக  என்பர். இதனை ஞான சம்பந்தர்,

    “கற்றாங்கு எரி ஓம்பிக்  கலியை  வாராமே  செற்றார்” என்பார்.

    பதி, பசு, பாசம் ஆகிய மூன்றனுள் பதியைப்போலவே பசுவும் பாசமும் அநாதியானவை என்பது  திருமந்திரம். அதனைக் கருதியே ‘’மன்னுயிர்‘’ என்றார். வேதத்தின் அங்கங்கள் ஆறு. அவை சிக்ஷை , கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தோபிசிதி, ஜோதிஷம் ஆகியவை. இவற்றைக் கற்றுக் கொண்ட பின்னரே, வேதப்பொருள்களை  ஆராய வேண்டும் என்பது விதி! கசடறக்  கற்றல் என்ற நெறிப்படிப்  பயின்றவற்றைக் கடைப்பிடிப்பதில் மிகுந்த உறுதி கொள்ளுதலையே, “பயின்று வல்லார்” என்ற தொடர் குறிக்கிறது. இங்கே தருமம் என்பது பூர்வ மீமாம்சையில் கண்ட யாகம் முதலான கிரியைகள்; தத்துவ நெறி என்பது உத்திர மீமாம்சையில்  கண்ட பிரேம உபாசனைகள். அடிமைத்திறத்தால் அடையும் திருவருளை ‘ஆளாகும் திரு’ என்கிறார். ஆள் ஆம் திருவினால் சிறந்த சீரைப் பெற்றவரே  தில்லைவாழ்  அந்தணர் ஆவார்!

    ஆகவே  தில்லைவாழ்  அந்தணர்கள்  மூவகை அக்கினிகளையும் வளர்த்துக் காத்தலால் இறைவன்  அடியார்களுள் முதன்மை பெற்றனர்; நால்வேதங்க ளையும், ஆறு  அங்கங்களையும் அறத்தையே  குறிக்கோளாகக்  கொண்டு பயின்றமையால்  அடியார்களுள்  முதன்மை பெற்றனர்; இறைவனுக்கு அடிமைத்திறம் பூண்டு ஆளாகும் அருட்செல்வத்தைப் பெற்றுத் தொண்டு புரிதலால் திருத்தொண்டர்களுள் முதலிடம் பெற்றனர். இறைவனை நோக்கியே புரிந்த பூசைகளால் இறைவனையே ஆளாகக்  கொள்ளும் திறமும் பெற்றனர்! அதனாலேயே இறைவன் ‘’தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!’’ என்று தம்மையே கூறிக் கொண்டாரோ? என்று கருதும் வகையில் இறைவனும் பின்னர் பல முறை அடியார்க்குத் தொண்டு புரிந்த எளிமைத் திறத்தை இத்தொடர் உணர்த்துகிறது!

    அந்தணர்  ஓதும்  ஓங்காரத்தினுள் இறைவனே ஒடுங்குவார் என்பதைத் திருமூலர்,

    நூலும் சிகையும் உணரார்  நின்மூடர்கள்
    நூல் அது  வேதாந்தம்   நுண்சிகை  ஞானமாம்
    பாலொன்றும்  அந்தணர்  பார்ப்பார்  பரம் உயிர்
    ஓர் ஒன்று  இரண்டினில்  ஓங்காரம்  ஓதிலே !

    என்கிறார். அப்பர் பெருமானோ,

    “அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின்  அகத்தானை“ என்று பாடுகின்றார்! தில்லைவாழ் அந்தணர் திறம் அத்தகையது!  இதனைச்  சேக்கிழார் பெருந்தகையே,

    இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
    தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
    அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
    முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்?
    என்று பாடுவதை அறிந்து நாமும் மகிழ்கிறோம்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 245

    படக்கவிதைப் போட்டி – 245

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.02.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 244-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 244-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குஞ்சுக் குருவியொன்று வாய்பிளந்தபடி தன் தாயைப் பரிதாபமாகக் பார்த்துநிற்கும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் பதிவுசெய்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. அடடா…படக்கவிதைப் போட்டி 244க்கு ஏற்ற படம் இதுவன்றோ என்றிதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றிகள்!

    அலைபேசிகளின் மின்காந்த அலைகளின் தாக்கத்தால் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகின்றது அறிவியல்.

    காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றார் மகாகவி பாரதி. நாமோ நம் மகிழ்ச்சிக்காவும் சௌகரியங்களுக்காகவும் பிற உயிர்களின் இருப்பிடத்தையும் பெருக்கத்தையுமே அழிக்கத் தொடங்கிவிட்டோம் அருளின்றி!

    ”குருவியும் மகிழ்வாய் வாழ்ந்திட நினைக்கும்
    பெருமனம் பெற்றால் மானுடம் சிறக்கும்!”

    இனி கவிஞர்களின் முறை! கற்பனை வானில் நீங்களும் சிட்டுக்குருவியைப் போல் சிறகடித்துப் பறந்து, கருத்து மணிகளை அள்ளித் தாருங்கள் என்று உங்களை அன்பொடு அழைக்கிறேன்!

    *****

    காட்டுமரங்களை வெட்டிய மனிதனின் அருளற்ற செயலால் கூடிழந்த குருவிகள் இப்போது வாடி நிற்கின்றன என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனால்…

    குஞ்சுக் குருவிக் குணவில்லை
    கூட்டிச் செல்லவும் வழியில்லை,
    அஞ்சிட வேண்டும் மனிதனுக்கு
    அவனால் வந்ததே இந்நிலைமை,
    கொஞ்சமும் இரக்கம் ஏதுமின்றிக்
    காட்டு மரங்களை வெட்டிவிட்டான்,
    தஞ்ச மடைய இடமில்லை
    தாயே இயற்கை காப்பாயே…!

    *****

    வாழ்வின் நிலையாமை கண்டு கலங்காமல் முயற்சியோடு சிறுகிளையில் கூடுகட்டும் பறவைகளின் பண்பதனை நாமும் கற்றிடுவோம் என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    திட்டமிடு!

    நிலையாமை நித்தியமென்று
    நித்தமும்தான் சோகங்கொண்டு
    சித்தமது கலங்கி நாளும்
    சோம்பற்கொண்டு சுருங்கிடாமல்
    சிறுகிளையில் இடங்கண்டு
    சுயமுயற்சி தான்கொண்டு
    தனக்கென்று கூடு கட்டும்
    திறமதனைக் கற்றிடுவோம்…

    சிட்டதனின் வாழ்க்கையிங்கு சிலநாட்கள் என்றாலும்
    கிட்டிய வாழ்நாளைச் சோம்பலின்றி
    கட்டமைத்துக் கடமையாற்றும் பண்பு கற்று
    திட்டமிட்டுச் சீரமைத்து வாழ்ந்திடுவோம்…

    *****

    எம் சிறகை உடைத்துச் சிறையில் அடைக்கும் மனிதா! அனைவரும் ஒருநாள் இறக்கத்தானே போகிறோம்? எம்மையும் கொஞ்சம் வாழவிடேன்! என்று சிட்டு சொல்லும் சத்தான செய்தியைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    சிட்டுக்குருவி சொல்லும் செய்தி

    அழிந்து போகும் இனங்களின்
    பட்டியலில் இன்று நான்
    இயற்கை கூட எமக்கெதிராய்த் திரும்பிட
    யாமிருக்கும் இடம் யாவும்
    தீக்கு இரையாய் மாறியதே!

    அடைக்கலம் தந்த வானம் எங்கும்
    ஆனந்தமாய்ப் பறந்து திரிய
    சிலர் வாழ்க்கை இங்கு
    வலியவருக்கு இரையாய் மாறியது!

    இயற்கை அழகை ரசிக்க நினைத்து
    சிறகை உடைத்துச் சிறை பிடித்து
    சுயநலமாய் எமது சுதந்திரத்தைப் பறித்து
    கூண்டில் அடைத்து ரசிக்கும் ஒரு கூட்டம்!

    விருப்பம் அதை அறியாமல்
    தன் விருப்பத்தைத் திணிப்பது போல்
    எம் (பறவை) மனமதை அறியாமல்
    வளர்ப்பதாய்ச் சொல்லி மகிழும்!

    வளர்க்க வில்லை என்றாலும்
    எதையும் அழிக்காமல்
    இயல்பாய் இருக்க விட்டாலே
    அழிவைத் தானே தள்ளிப்போடுமே

    பிறப்பென்று துவங்கிய யாவும்
    இறப்பென்று ஒரு நாள் அழியும்
    உணர்ந்து நடந்திடு
    இன்று நான்…. நாளை நீ……..

    *****

    சிட்டுக்குருவிகளை மையமாக வைத்து நல்ல கருத்துக்களைத் தம் கவிதைமாலையில் கட்டித் தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    தாபத்திலே தாய்ப்பறவை!

    நாங்கள் செய்த காடு
    அழித்துக் கொண்டிருக்கிறாய் ஆணவத்தோடு!
    நாங்கள் கட்டிய கூடு
    அதை பார்த்து தான் வந்தது நீயிருக்கும் வீடு!

    அத்தி அரசு ஆலமென விதைத்தோம் எச்சத்தோடு
    எங்கள் அழிவைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் அலட்சியத்தோடு!
    பார்த்துப் பார்த்து நீ பேணிக் காப்பதெல்லாம் இரக்கத்தோடு
    பிராய்லர் கோழிகளைத் தானே கூண்டோடு!

    வாய்திறந்து பார்க்கிறது என் குஞ்சு பசியோடு
    தீவனத்திற்குத் திரிந்தால் எல்லாமே கட்டிட வீடு!
    கொத்திக் கொடுக்க செங்கல்தான் இருக்கிறது சிமெண்டோடு
    தாபத்தில் தரையில் நிற்கிறோம் வெறும் வயிற்றோடு!
    எங்களுக்கு நீ செய்வது நன்றி கேட்ட கேடு!

    ”வீடு கட்டுவதற்காக வனத்தை அழித்த மானுடரால் தீவனத்துக்குத் தவிக்கின்றோம் நாங்கள்! கொத்தித் தின்ன செங்கல் தானே இருக்கின்றது சிமெண்டோடு; மனிதா நீ எமக்குச் செய்வதோ பெருங்கேடு” என்ற தாய்ப்பறவையின் அவலக்குரலைத் தன் கவிதையில் உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-111

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-111

    நாங்குநேரி வாசஸ்ரீ

    111. புணர்ச்சி மகிழ்தல்

    குறள் 1101

    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள

    கண்ணால பாத்து, காதால கேட்டு, மோந்து, உண்டு தொட்டு பாத்து அனுவிக்க சந்தோசம் முழுக்க மினுங்குத வளையல் அணிஞ்சிருக்க இந்த அழகானபிள்ள கிட்ட நெறைஞ்சு இருக்கு.

    குறள் 1102

    பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து

    நோய் தீக்க வெவ்வேற மருந்து இருக்கு. நகநட்டு அணிஞ்சிருக்க இவ தந்த காதல் நோய்க்கு இவளேதான் மருந்து.

    குறள் 1103

    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு

    தாமரைக் கண்ணனோட ஒலகம் ங்கது தான் விரும்புத காதலியோட தோள அணைச்சுக்கிட்டு ஒறங்குதது கணக்கா சந்தோசத்த குடுக்கக்கூடியதோ.

    குறள் 1104

    நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்

    விட்டுப் பிரிஞ்சு எட்ட நின்னா சுட்டுப் பொசுக்குது  கிட்டத்துல நின்னா குளுகுளுன்னு இருக்க இந்த புது தினுசு கங்க (நெருப்ப) இவ எங்கேந்து வேங்கினாளோ.

    குறள் 1105

    வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்

    பூ சூட்டியிருக்க இவ தோளத் தழுவுதது, நாம ஆசப்படுத பொருள் நெனச்ச பொழுதெனைக்கும் வந்து சந்தோசத்த குடுக்குதது கணக்கா சந்தோசத்தத் தருது.

    குறள் 1106

    உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
    கமிழ்தின் இயன்றன தோள்

    இவளத் தழுவுத நேரமெல்லாம் என் உசிரு புத்துணச்சி பெறுததால இவ தோள அமுதத்தால(அமிழ்தம்) செஞ்சிருப்பாங்கனு நெனைக்கேன்.

    குறள் 1107

    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு

    அழகா மா நிறமா இருக்க இவளத் தழுவும்போது கெடைக்க சுகம் சொந்த வீட்ல ஒக்காந்து சுயமா சம்பாரிச்ச பொருள பங்குபோட்டு குடுத்து சாப்பிடுத நேரம் கெடைக்க சந்தோசத்துக்கு சமானம்.

    குறள் 1108

    வீழும் இருவர்க் கினிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு

    காத்துகூட ஊடேயில பூந்துகிட முடியாத அளவு இறுகக் கட்டிப்பிடிக்கது காதலிக்கவங்களுக்கு சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 1109

    ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்

    சிறுசா கோவப்படுததும், உணந்து சமாதானமாகுததும் அதுக்குப் பொறவு கூடி சந்தோசமா இருக்கதும்தான் கலியாணம் முடிச்சு வாழுதவங்க பெறுத பயன்கள்.

    குறள் 1110

    அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு

    புத்தகங்களப் படிக்கையில ஒவ்வொருக்கையும் இப்பம்வரைக்கும் தெரியாதத புதுசா கத்துக்கிடுதமாரி இருக்கது கணக்கா நகநட்டு பூட்டியிருக்க இவளச் சேருத நேரமெல்லாம் புது சந்தோசம் தோணுது.

    Share
  • காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா?

    காலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா?

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P. Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சத்தின் ஊழ்விதியை
    வரையப் போவது
    புரியாத கருஞ்சக்தியா?
    விரைவாய்க் குடை விரிக்கும்
    பிரபஞ்சத்தைக்
    கருஞ்சக்தி
    உருவாக்குமா அல்லது
    முறித்து விடுமா?
    ஒளிமந்தைகளின்
    ஈர்ப்பு விசைக்கு எதிராய்
    விலக்கு விசைபோல்
    கலக்குவது எது ?
    காலவெளிக் கடல் அலையில்
    விண்வெளியின்
    உண்மை நிறம் கருமையா?
    ஆழியைச் சுற்றிக்
    கோள்கள் படைக்கும்
    காலக் குயவனின்
    களிமண் கட்டிகள்
    கருமைப் பிண்டமா?
    இருந்தும், இல்லாத கரும்பிண்டமும்
    கருஞ்சக்தியும், மெய்யாக
    இல்லையென
    பிரபஞ்சத்தின் ஊழ்விதியை
    வரையப் போவது
    புரியாத கருஞ்சக்தியா?
    விரைவாய்க் குடை விரிக்கும்
    பிரபஞ்சத்தைக்
    கருஞ்சக்தி
    உருவாக்குமா அல்லது
    முறித்து விடுமா?
    ஒளிமந்தைகளின்
    ஈர்ப்பு விசைக்கு எதிராய்
    விலக்கு விசைபோல்
    கலக்குவது எது?
    காலவெளிக் கடல் அலையில்
    விண்வெளியின்
    உண்மை நிறம் கருமையா?
    ஆழியைச் சுற்றிக்
    கோள்கள் படைக்கும்
    காலக் குயவனின்
    களிமண் கட்டிகள்
    கருமைப் பிண்டமா?
    இருந்தும், இல்லாத கரும்பிண்டமும்
    கருஞ்சக்தியும், மெய்யாக
    இல்லையென
    தற்போது சவால் விடுகிறார்!
    இது நிஜமா? அது நிஜமா?
    புது யுகத்தில்!

    ++++++++++++++++++++++++++++

    1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” [Dark Energy] என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை!  கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity)! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் [ஒளிமந்தைகள்] நகர்ச்சியைக் கட்டுப்படுத்து கிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாத வாறு அவற்றுள் இடைவெளி களை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.
    கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ்  (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)
    ++++++++++++++++++

    மர்மக் கருஞ்சக்தி விரைவாய் விரிக்கும் பிரபஞ்சம் 

    +++++++++++++++

    வானியல் பௌதிக நிபுணர் கருஞ்சக்தியை விளக்கும் புதிய நியதி

    ஏறக்குறைய 100  ஆண்டுக்கு முன்பு நமது பிரபஞ்சம் விரிந்து வரும் மெய்ப்பாட்டை விஞ்ஞானிகள் கண்டுள்ளார் என்று தெரிந்திருந் தாலும், அது எப்படி நேர்கிறது என்பதை 1990 ஆண்டுகளில்தான் ஆற்றல் மிகுந்த தொலைநோக்கிகள் மூலமாய் நோக்கி அறிந்து கொண்டுள்ளார்.  அகில நாட்டு நவீனப் பௌதிக இதழில் மேல்நிலைக் கல்வி மாணவர் அலெக்சாண்டர் தெப்பிலிகாவ் 2019 டிசம்பர் 2 இல் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  அது கருஞ்சக்தி பற்றியது.  அதில் பிரபஞ்சம் எல்லைக் கோடு கொண்டுள்ளதாக அனுமானம் செய்திருந்தார்.  கிடைத்த இலக்கத் தகவல்களில், பிரபஞ்சம் விரிவது மட்டுமின்றி, வேக வளர்ச்சியில் பெருவிரிவு அடைவதாக அறிந்தார்.  அந்த விரிவு மூன்று அல்லது நான்கு பில்லியன் ஆண்டுகட்கு முன்னதாகவே ஆரம்ப மானது என்பதும் தெரிகிறது.

    பல்லாண்டுகளாக பிரபஞ்சம் வெறும் பிண்டப் பொருள் [விண்மீன், கோள்கள், முரண்கோள், வால்மீன், ஒளிமந்தை உருவாக்கி வாயுக்கள் (Intergalactic Gases)] கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது.  அப்படி ஆயின் பிரபஞ்ச வேக வளர்ச்சி விரிவு, கவர்ச்சி ஈர்ப்புக்கு முரணாகக் காணப் படுகிறது.  அடுத்து பிரபஞ்சம் சிறிது கருஞ்சக்தி கொண்டுள்ளது என்னும் கருத்து பரவியது.  பிறகு பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி அளவில் 70% கொண்டுள்ளது என்பது கணிக்கப் பட்டது.

    +++++++++++++++++++++++++++++

    பல்வேறு ஒளிமந்தைகள்

    +++++++++++++++++

     
    20 ஆம் நூற்றாண்டுப் பிரபஞ்ச விளக்கமும் ஐயப்பாடும்.
    இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் ஊகித்த பிரபஞ்சம் ஐன்ஸ்டைன் பொது ஒப்புமைச் சமன்பாடு [Einstein’s Equation of General Relativity], நியூட்டனின் அகிலவியல் ஈர்ப்பியல் கோட்பாடு [Newton’s Universal Gravitation], துகளியல் இயக்கப்பாடு  [Quantum Mechanics] ஆகியவற்றின் விதிமுறைகளை உறுதிப்படுத்துபவை.  பலரும் ஒப்புக் கொண்ட தற்போதைய  மாடல் பிரபஞ்சம் “பெருவெடிப்புக்குப் பிறகு விரிவாக ஆரம்பித்து, அதன் பின்பு அதிவிரைவாய் விரிந்தோடுகிறது ” என்பது.  ஆனால் முக்கிய மாக இந்த மாடலில் ஓர் ஆரம்ப நிலைக் கோட்பாடு எடுத்துக் கொள்ளப் படவில்லை என்பது என் கருத்து என்று கௌரவப் பேராசிரியர், டாக்டர் ஆன்ரே மேய்தர் [Andre Maeder] [Dept of Astronomy in University of Geneva Faculty of Science] துணிவுடன் கூறுகிறார்.
    அவர் சொல்ல வருவது: சூன்ய வெளிப் பரிமாண மாறாமை [Scale Invariance of the Empty Space]  என்னும் ஒரு புதிய கருத்து..  அதாவது  சூன்ய வெளியும் அதன் விரிவுக்கு அல்லது சுருக்குக்குப் பிறகு பண்பாடுகள் எதுவும் மாறுவதில்லை  [The empty space and its properties do not change following a Dilation or Contraction].  மேலும்  ஆன்ரே மேய்தர் குறிப்பிடுவது, சூன்யவெளிப் பரிமாண மாறாமை மின்காந்த அடிப்படை நியதியிலும் உள்ளது என்று. 
    சூன்யவெளிப் பரிமாண மாறாமை நியதி என்றால் என்ன ?
    டாக்டர் ஆன்ரே மேய்தர் சொல்கிறார் : பெருவெடிப்பு போன்ற மாபெரும் வெடிப்புகளின் பண்பாடுகள் மாறாது இருப்பதுபோல், விண்வெளியின் உள்ளணிக் கட்டமைப்பும் [Lattice Structure of Space]  மாறாமல் அமைந்துள்ளது.   அப்போது நவீன பிரபஞ்சவியல் பௌதிகத்தில் கரும்பிண்டம், கரும்சக்தி போன்றவை இருப்பதாக ஊகிக்கப் பட்டு வருகின்றன.  மாபெரும் வெடிப்பில் உள்ளணிக் குள்ளே விரிவையும், சுருக்கமும் உண்டாகலாம்.  கரும் பிண்டமும், கரும்சக்தியும் ஒளிமந்தைகள் [காலக்ஸிகள்] விண்மீன்கள் நகர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன.  1998 ஆண்டுகளில்தான் ஒளிமந்தை கள் விரைவு வேகத்துக்கு கரும்சக்திதான் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்.
    பிரபஞ்சத்தில் இருந்தும் இல்லாத கரும்பிண்டம், கருஞ்சக்தி ஆரம்ப முதலே விஞ்ஞானிகட்கு ஐயப்பாட்டை அளித்துள்ளது.  அவற்றைப் பற்றி அறிந்த சில விஞ்ஞானிகள் மெய்யாக அவை உள்ளனவா என்று தேடினர்.  மற்றும் சில விஞ்ஞானிகள் ஆன்ரே மேய்தர் போன்று அவை மெய்யாக இல்லை என்று துணிந்து கூறினார். சூன்யவெளிப் பரிமாண  மாறாமைக் கோட்பாடின்படி, பிரபஞ்ச விரிவும், வேகத் துரிதமும் ஏற்கனவே இருப்பதால், கரும் பிண்டமும், கரும்சக்தியும் விண்வெளியில் இருக்க முடியாது என்று ஆன்ரே மேய்தர் தன் புதிய கருத்தைக் கூறுகிறார்.
    +++++++++++++++++++++
    fig-1d-energy-distribution-of-the-universe
    இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை !   அனைத்து அறிவுப் பாதைகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும், முடிவிலே மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”
    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன் என்னும் நூலில்)
    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம்!
    அமெரிக்க வானியல் மேதை,  எட்வின் ஹப்பிள்

    பிரபஞ்சத்தை விரித்துச் செல்லும் புரிந்தும் புரியாத புதிரான குதிரைச் சக்தி!
    இருபதாம் நூற்றாண்டின் அற்புத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு, புரிந்தும் புரியாத புதிரான கருஞ்சக்தி. 1990 ஆண்டின் ஆரம்பத்திலேதான் பிரபஞ்சம் விரிந்து செல்கிறது என்பது சற்று உறுதியாக அறியப் பட்டது.   கருஞ்சக்தியின் திரட்சி [Dark Energy Density] பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீள் முறிவை (Expansion & Recollapse) நிறுத்தும் அளவுக்கு ஆற்றல் உடையது. அதுபோல் கருஞ்சக்தியின் சிறிதளவு திரட்சியும் பிரபஞ்ச விரிவைத் தொடர்ந்து நீடிக்கவும் தகுதி கொண்டது.   ஆயினும் காலக்ஸி ஒளிமந்தைகளின் ஈர்ப்பு விசைகள் கருஞ்சக்தியின் பிரபஞ்ச விரிவாக்கத்தைக் குன்றச் செய்யும் என்று சிலரால் சிந்திக்கப் படுகிறது.   இதுவரைக் கருஞ்சக்தி புரியும் பிரபஞ்ச விரிவியக்கம் சிறுக்கவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.   பிரபஞ்சம் முழுவதும் பிண்டம் [Matter] நிரம்பி, அவற்றின் ஈர்ப்பு விசைகள் ஒன்றை ஒன்றை இழுத்து தம்மிடையே வைத்துக் கொண்டுள்ளன.1998 ஆம் ஆண்டில் உருவான ஹப்பிள் விண்ணோக்கி  [Hubble Space Telescope] தூரத்தில் உள்ள சூப்பர் நோவாவைக் [Supernovae] கண்டு பிரபஞ்சம் இன்றைவிட முன்பு மெதுவாக விரிந்து வந்தது என்று சான்றுகள் தந்துள்ளது! ஆதலால் அண்டங்களின் ஈர்ப்பு விசைகள்  பிரபஞ்சத்தின் விரிவைக் குன்ற வைக்க வில்லை என்பது தெரிகிறது;  மாறாகப் பிரபஞ்ச விரிவு நாளுக்கு நாள் விரைவாகி பலூன் போல் ஊதி உப்பி வருகிறது!
    அகிலவியல் விஞ்ஞானிகள் மூன்று வித விளக்கங்களோடு எதிர்கால விளைவுகளை ஊகித்தார்கள்.
    1.   “அகிலவியல் நிலைத்த இலக்கம்”  [Cosmological Constant] என்று இணைக்கப் பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதி முன்பு புறக்கணிப்பான ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி [Einstein’s Theory of Gravity].  இந்த இலக்கே  கருஞ்சக்தியைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்வது.

    2.  விண்வெளியில் பரவியுள்ள ஏதோ ஓர் “சக்தி திரவ இயல் ஆவி”  [Energy Fluid] பிரபஞ்சத்தை விரியச் செய்வது.

    3.   ஐன்ஸ்டைன் ஈர்ப்பியல் நியதி தவறாய் இருக்கலாம்.   பிரபஞ்ச விரிவை விளக்கும் புது நியதி படைக்கப் படலாம்.

    ஆதலால் அகிலவியல் விஞ்ஞானிகள் சரியான கருத்து அறிவிக்க முடியாமல் தற்போது அதைக் கருஞ்சக்தி [Dark Energy] என்று குறிப்பிட்டு வருகிறார்.

    பிரபஞ்சத்தின்  எதிர்காலக் கோர முடிவு  [Cosmic Doomsday]

    மாயா [Maya Forecast] கணித மேதைகள் முன்பு பயங்கரமாய்க் கணித்தபடி இந்த உலகம் 2012  இல் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.   ஆனால் அகிலவியல் விஞ்ஞானிகள், கருஞ்சக்தி புரிந்து வரும் தீவிரப் பிரபஞ்ச விரிவின் வரலாற்றை ஆராய்ந்து [using MZ Parameterization] பரிமாண அளவீதப்படி பிரபஞ்சத் தலைவிதியை கணித்துள்ளார்.

    கருஞ்சக்தி, கரும்பிண்டம், கருந்துளை [Dark Energy, Dark Matter, Black Hole] ஆகிய மூன்றும் பிரபஞ்ச விண்வெளியின் பண்பாட்டு உட்பகுதிகள் [Properties of Space] என்று கருதப்படுகின்றன. விண்வெளி என்பது ஒன்று மில்லாத சூனியப் பிரதேசமில்லை என்று முதன்முதலில் அறிவித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.   அவை மூன்றைப் பற்றியும்  இப்போதுதான் விஞ்ஞானிகள் ஓரளவு புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.   தற்போதைய விஞ்ஞானக் கணிப்புப்படி  பிரபஞ்சத்தில் 70% கொள்ளளவு பரவியுள்ளது கருஞ்சக்தியே.   அத்தகைய பேராற்றல் படைத்த பெருஞ்சக்தி பிரபஞ்சத்தின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மூன்றையும் கட்டுப் படுத்துகிறது.  பலூன் ஊதுவது போல் பிரபஞ்சத்தை உப்பி வரும் கருஞ்சக்தி பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அதை உடைத்துக் கிழித்து அழித்து விடலாம் என்று ஊகிக்கப் படுகிறது.   சைனாவின் அகிலவியல் நிபுணர் நமது பால்வீதி காலக்ஸி முறிந்து கிழிந்து போக சுமார் 32.9 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று கணித்துள்ளார்.

     

     

    பிரபஞ்சத்தின் தலைவிதியை எழுதப் போகும் கருமைச் சக்தி !

    நமது அகிலாண்ட கோடியின் எதிர்கால முடிவு வரலாற்றைத் தீர்மானிக்கப் போவது புரிந்தும் புரியாத புதிரான கருமைச் சக்தியே (Dark Energy) !  பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி இருப்பதை நாசா பிப்ரவரி 2003 இல் நிரூபித்துக் காட்டினாலும் அந்த “அகில விசை” (Cosmic Force) இன்னும் புரியாத ஓர் மர்மச் சக்தியாகவே இருந்து வருகிறது.  ஈர்ப்பு விசைக்கு எதிரான விலக்கு விசை இந்தக் கருமைச் சக்தி.  காலாக்ஸியில் உள்ள எண்ணற்ற விண்மீன்கள் தமது கவர்ச்சி விசையால் ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு மையத்தைச் சுற்றி வர நடுவில் உள்ளப் பூதக் கருந்துளையின் அசுரக் கவர்ச்சி விசை அத்தனை கோடான கோடி விண்மீன்களையும் தன்வசம் ஈர்த்துப் பிடித்துக் கொள்கிறது.  பிரபஞ்சத்தில் உள்ள பில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகளை ஒன்றை விட்டு ஒன்றை உந்தித் தள்ளி வருவது இந்த கருமைச் சக்தி என்னும் விலக்கு விசையே !  அதாவது பிரபஞ்ச விரிவை முடிவின்றித் தொடர்ந்து இயக்கி வருவது இந்தப் புதிரான கருமைச் சக்தியே !

    fig-3-the-big-rip-of-the-universe

    இந்த முடிவிலா விரிவு நியதி பிரபஞ்சம் முடிவில் ஒரு “பெரும் நொறுங்கலில்” (Big Crunch) சிதைந்து விடும் என்னும் ஒரு கருத்தை முறியடிக்கிறது.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முதல் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பிரபஞ்சம் ஒருநாள் விரிவை நிறுத்தி ஈர்ப்பு விசையால் திரண்டு உள்வெடிப்பில் (Implosion) முறியும் என்று கருதினார்கள்! நாசா ஆராய்ச்சியாளர் WMAP “நுண்ணலை வேறுபாடு விண்ணுளவி” (Microwave Anisotropy Probe MAP, Launched in 2001) மூலம் அறிந்ததில் பிரபஞ்சத்தில் “கனல் தளங்கள்” (Hot Spots) இருப்பதைக் கண்டு, பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Expansion of the Universe is Accelerating) நிரூபித்தார்கள்.  அதாவது விலக்கு விசையானக் கருமைச் சக்தி மட்டுமே அத்தகைய விரைவாக்கத்தைப் புரிய முடியும் என்பது தெளிவானது !  நமது பிரபஞ்சத்தின் விரிவு மிக வேகத்தில் நிகழ்வதால் ஈர்ப்பு விசையால் இழுத்துச் சிறிதாகி அது நொறுங்கிச் சிதையும் என்னும் அவரது கோட்பாடு புறக்கணிக்கப் படுகிறது.

    fig-1a-path-of-dark-matter

    “இந்த புதிய கோட்பாடு பிரபஞ்சத்தைப் பற்றிய நமது கருத்தை மாற்றிவிடும்,” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி அந்தோணி லாஸன்பி கூறினார். இதை மற்றோர் விஞ்ஞானி இப்படிக் கூறுகிறார்: “ஒரு பந்தை மேல் நோக்கி வீசுவதைப் போன்றது இது.  கவர்ச்சி விசை மட்டும் இருக்கமாயின் மேலே செல்லும் பந்து மெதுவாகி நின்று திரும்பித் தரையை நோக்கி விழும்.  விலக்கு விசை எதிராகத் தள்ளுவதால், பந்து நிற்காமல் தொடர்ந்து விரைந்து செல்கிறது.” அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologists) நமது பிரபஞ்ச உருவை அளக்க அதனுள் அடங்கிய பிண்ட சக்தியைக் கூட்டிச் சமீபத்தில் வெளியிட்டார்.  அந்த அறிவிப்பின்படி கருமைச் சக்தியே (74%) பெரும்பான்மை யாக உள்ளது.  அடுத்து கருமைப் பிண்டம் (Dark Matter) 22%  மூன்றாவது கோடான கோடி எண்ணிக்கையில் இருக்கும் காலாக்ஸி ஒளிமந்தைகள், வாயுக்கள், தூசி துணுக்குகள், விண்கற்கள் போன்றவை (பரிதி மண்டலத்தின் கோள்கள் உட்பட): 4%.

    fig-1b-microwave-anisotropy-probe

    ஐன்ஸ்டைன் அறிவித்த அகிலவியல் நிலையிலக்கம் (Cosmological Constant)

    1917 ஆம் ஆண்டில் பிரபஞ்சத்தைப் பற்றி ஐன்ஸ்டைன் ஆக்கிய ஓர் சமன்பாட்டில் அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அந்தக் காலத்தில் விரிந்து செல்லும் பிரபஞ்சத்தைப் பற்றிக் கருத்துக்கள் எழவில்லை.  பிரபஞ்சம் நிலையானது. (Universe was Static) அது விரியாதது, சுருங்காதது என்ற கருத்தே நிலவியது. அத்தகைய நிலையான ஒரு பிரபஞ்சத்தையே ஊகித்து பூதகரமான கவர்ச்சி விசையைச் (Gravitational Force) சமன் செய்ய அவர் ஒரு அகிலவியல் நிலையிலக்கத்தைப் பயன்படுத்தினார்.  அதற்குப் பிறகு 1929 இல் அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் தன் தொலை நோக்கியைப் பயன்படுத்தி பிரபஞ்சம் மெய்யாக விரிவதை எடுத்துக் காட்டினர்!  உடனே ஐன்ஸ்டையின் அதை ஒப்புக்கொண்டு தான் “வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு (Biggest Blunder of Life) என்று சொல்லிச் சமன்பாட்டிலிருந்து “அகிலவியல் நிலை யிலக்கத்தை”  நீக்கினார். அப்போது ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தின் விரிவு விரைவேற்றம் அடைகிறது (Expansion of the Universe is Accelerating) என்பதை அறியத் தவறினார்.

    fig-2-the-three-scenerios-of-the-universe

    நியூட்டனின் இரண்டாவது நியதிப்படி உந்துவிசை = பளுநிறை X விரைவேற்றம் (Force = Mass X Acceleration). அதைத் திருப்பிக் கூறினால் ஒரு பளுநிறை விரைவேற்றத்தில் நகர்ந்தால் அதை உந்தித் தள்ளுவது ஒரு விசையாக இருக்க வேண்டும்.  அதாவது காலாக்ஸி ஒளிமந்தைகளின் வேகத்தை விநாடிக்கு விநாடி மிகுதியாகச் செய்வது ஒருவித மர்ம விசை என்று கருதப்பட்டது.  ஐன்ஸ்டைன் தவறெனக் கருதிப் புறக்கணித்த அகிலவியல் நிலையிலக்கமே பின்னால் அந்த மர்ம விசைக்குச் சார்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நிலையிலக்கமே காலாக்ஸி ஒளிமந்தைகளை உந்தித் தள்ளும் கருமைச் சக்திக்கு விதையிட்டது என்று உறுதியானது!

    பிரபஞ்சத்தைக் கிழிக்குமா கருமைச் சக்தி?

    1998 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் ஒரு புதியக் கண்டுபிடிப்பை வெளியிட்டது விஞ்ஞான உலகை அசைத்து விட்டது!  அந்தக் கண்டுபிடிப்பு இதுதான் : ஏதோ ஓர் மர்ம விசை பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை விரைவாக்கம் (Accelerating the Rate of Expansion) செய்கிறது! அந்தப் புதிரான விசைக்குத்தான் “கருமைச் சக்தி” (Dark Energy) என்று பெயர் வைத்தார். கருமைச் சக்தியின் உட்கலப்பு (Composition) என்ன வென்று தெரியாவிட்டாலும், அதுவே பிரபஞ்சத்தின் விரிவு வீதத்தை (Expansion Rate) ஆட்சி செய்கிறது என்றும் பிரபஞ்சத்தின் முடிவான தலைவிதியை (Ultimate Fate) நிர்ணயம் செய்கிறது என்றும் தெளிவானது.

    பிரபஞ்சத்தின் விரிவியக்க வீதம் மிகையாகத் துரிதமாகும் போது, கருமைச் சக்தியைச் சார்ந்த “சக்தியின் திணிவு” (Energy Density Associated with Dark Energy) வலுவாகி முடிவிலே அகிலத்தில் ஈர்ப்பாற்றல் பிணைத்துள்ள வடிவண்டங்கள் (Gravitational Objects) எல்லாம் பிளந்து கொண்டு சிதைந்து விடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்! அதாவது மிகையாகும் துரித விரைவாக்கம் சூரிய மண்டலம் போன்ற உள்ளகக் குழுக்களைப் பிளந்து விடும் என்பது ஒன்று.  உதராணமாக நமது பரிதியிலிருந்து பூமியைப் பிரித்து அதைச் சிதைத்து விடலாம்! அவ்விதம் சிறுகச் சிறுகச் சீர்குலைத்து இறுதியில் அணுக்களைக் கூடப் பிரித்து விடலாம்! ஆனால் கருமைச் சக்தி காலாக்ஸி பூதக் கொத்துக்களில் (Galactic Superclusters) ஒன்றை விட்டு ஒன்றைப் பிளக்கும்படிச் செய்யாது என்றும் அவர் சொல்கிறார். கருமைச் சக்தியானது பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காலத்தில் சீர்குலைக்கும் இந்த அழிவியல் இயக்கத்தைப் “பெரும் பிளவு” (Big Rip) என்று அந்த விஞ்ஞானிகள் பெயரிடுகிறார்!

    பூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த அமெரிக்க விஞ்ஞானி

    அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது! வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.

    கருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் இயக்கக் கருவிகள்!  நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது.  அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.

    பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன்!

    காலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம்.  அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion).  சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம்:

    1.  கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.

    2.  பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் :  பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது.

    சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters)!

     

    3.  மிகச் சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது! அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன.  கருமைச் சக்தி வலுவற்ற தாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும்! அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What is Dark Energy ? & How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Spaceflight Now – Hubble’s Evidence for Dark Energy in the Young Universe (Nov 16, 2006)
    21 Large Synoptic Survey Telescope (LSST) – Dark Energy
    22 The Sydney Morning Herald – Saving the Universe (Feb 11, 2003)
    23 A Mysterious Dark Energy Fills the Universe By : Rhiannon Buck [Feb 12, 2008]
    24 The Newyork Times – Dark Energy Stunts Galaxies’ Growth By : Dennis Overbye [Dec 17, 2008]
    25 The Daily Galaxy – Will Dark Energy Save the Universe ? (Jan 20, 2009)
    26 Astronomy Magazine – Will Dark Energy Tear the Universe Apart ? By : Liz Kruesi (February 2009)
    27  NASA Science : Dark Energy : http://science.nasa.gov/astrophysics/focus-areas/what-is-dark-energy/ (May 18, 2012)
    28  Discover Magazine : http://blogs.discovermagazine.com/cosmicvariance/2011/10/04/dark-energy-faq/ (Oct 4, 2011)
    29  http://universe-review.ca/F02-cosmicbg.htm  (The Observable Universe & Beyond)
    30  http://www.eurekalert.org/pub_releases/2012-07/sicp-dea071112.php  [Dark energy and fate of the Universe]  (July 22, 2012)
    31 Stellar Chemistry : Dark Energy & Fate of the Universe, Staff  Writers, /Beijing, China (July 25, 2012)
    32   http://en.wikipedia.org/wiki/Dark_energy   (July 26, 2012)
    33.  https://www.space.com/8588-dark-energy-dark-matter-exist-scientists-allege.html  [June 13, 2010]
    34. https://phys.org/news/2017-11-dark-energy.html  [November 22, 2017]
    35.  https://gizadeathstar.com/2017/11/space-time-not-scale-invariant-swiss-professor-challenges-dark-matter-new-hypothesis/  [November 26, 2017]
    36.  http://rense.com/general72/exis.htm
    37.  http://www.newsweek.com/dark-matter-dark-energy-new-model-universe-719719  [November 22, 2017]
    38.  https://www.space.com/39001-dark-matter-doesnt-exist-study-suggests.html [December 7, 2017]
    39. https://scitechdaily.com/astrophysicists-developed-a-new-theory-to-explain-dark-energy/
    40. https://room.eu.com/news/new-theory-unifies-dark-matter-with-dark-energy

    ******************

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-10

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-10

    தி. இரா. மீனா  

    உக்கடிசுவ கப்பிதேவய்யா

    “கூடல சங்கம தேவரல்லி பசவண்ண சாட்சியாகி” இவரது முத்திரையாகும். பசவேசரின் மகாமனைக்குக் காவல்காரனாகப் பணி செய்தவர். காயகத்தின் மேன்மை, பசவனிடம் பக்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    1.“ஞானத்தை வரவேற்று மாயையைத் திருப்பியனுப்புகிறேன்
    அறிவை வரவேற்று அறியாமையை விரட்டுகிறேன்
    அருவத்தை வரவேற்று உருவத்தைத் திருப்பியனுப்புகிறேன்.
    உலகியலை வரவேற்றுஉலகியலற்றதைத் திருப்பியனுப்புகிறேன்
    கூடலசங்கம தேவரில் பசவரை அறிந்தோருடன் சேர்ந்து
    அறியாதவரை அகற்றுகிறேன்”

    2.“எண்ணங்களில் மருட்சியுடையவர் வரவேண்டியதில்லை.
    அறிவற்றவர்கள் விரைவாகச் சென்று விடுங்கள்.
    மூன்றுவகை மலத்துடன் போரிடுபவர்கள் விலகிவிடுங்கள்.
    தன்னை அறிந்தவர்களே வாருங்கள்,
    பரப்பிரும்ம வடிவம் கொண்டவர்களே வாருங்கள்
    மனவுறுதி கொண்டவரே வாருங்கள்
    நற்செயல்களைச் செய்பவர்களே வாருங்கள்
    கூடலசங்கமதேவனின் பசவன் எனக்களித்த காயகம் இதுவே”

    உப்பரகுடிய சோமிதேவய்யா

    இவரின் முத்திரை “காருடேஸ்வரலிங்கா’என்பதாகும். ஆத்மா-உடல் தொடர்பு, அறிவு—செயல் சமன்பாடு, பிரசாத உயர்வு ஆகியவை குறித்து இவர் வசனங்கள் அமைகின்றன.

    1. “கடவுளான பின்னர் வழிபாடு  பெறுவதற்கென வருவதெதற்கு?
    முழுமை நிர்வாணத்தைச் சாதித்து விட்டாரெனில்.
    ஆடிப் பாடிப் போற்றி திரிவோருடன் கலப்பெதற்கு?
    பிறர் வீட்டுவாசலில் நின்று நில் வா போவெனச்சொல்வதெதற்கு?
    உயர் ஆத்மாவிற்கு இங்கு அங்கு எனும் வேறுபாடில்லை
    எங்கிருப்பினும் எது செய்யினும் பேரானந்தமே
    காருடேஸ்வரலிங்கத்தை அறிந்த சரணருக்கு மாயையில்லை.”

    2.”பாம்பிடம் நஞ்சிருக்குமெனில் அதன் முழு அங்கத்திலும்
    பரவியிருக்குமா? நஞ்சிருக்க வேண்டியது ஓரிடத்தில்.
    பூமியில் புதையலிருக்குமெனில் அது எங்கும் புதைந்திருக்குமா?
    எல்லாச் சமயங்களிலும்  கடவுள் உண்டென்று சொன்னால்
    நாத்திகரிடமும் நிறைந்திருப்பானோ?
    பரமபக்தர்களிடம் மட்டும் நிறைந்திருப்பான்.
    புதையலைக் கண்டு தோண்டியெடுப்பதை அறியவேண்டும்.
    நச்சுப் பாம்பின் விடமிருக்குமிடம் அறிந்து பிடிக்கவேண்டும்.
    கடவுள் இருக்குமிடமறிந்து தொழவேண்டும்.
    ஆசைகளுக்கு ஆட்படுகின்ற கூட்டத்திற்கு மும்மலங்களுண்டு.
    காருடேஸ்வரலிங்கமறிந்தவன் இரண்டழித்து பேரானந்தமடைவான்”

    உரிலிங்கதேவா

    நாயகன்—நாயகி பாவனையில் கடவுளைப் போற்றியவன். ”உரிலிங்க தேவா” என்பது இவரது முத்திரையாகும். இலிங்காயத்தைப் பின்பற்ற விரும்புபவர்களுக்கு இவர் “இஷ்டலிங்க தீட்சை தருவார். திருடன் ஒருவனை பக்தனாக மாற்றியவர் என்று இவரைப் பற்றிய கதையொன்றுண்டு. இஷ்டலிங்க தீட்சை  வழிபாடு செய்வதற்காக சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருகிறா. அவற்றைத் திருடிப் போக பெட்டண்ணா என்ற திருடன் வருகிறார். இஷ்டலிங்க தீட்சை வழிபாட்டைக் கண்ட திருடன் அதில் தன்னை இழந்து திருட வந்த தன் வேலையை மறந்து விடுகிறான். மாறாக உரிலிங்க தேவாவிடம் தனக்கு இஷ்டலிங்கம் தரும்படி கெஞ்சுகிறான். ஆனால் உரிலிங்கா அவனுக்குச் சிறிய கல்  ஒன்றைக் கொடுத்து அதை வழிபடுமாறு சொல்கிறார். பெட்டண்ணா  அவ்வாறே செய்ய அந்தக் கல் இஷ்டலிங்கமாக மாறியது. இவர் வசனங்கள் எளிய நடையும், மென்மையான பாவனைகளும் கொண்டவை.

    1.“அகத்தில் நிறைந்து புறத்தில் காட்சி தருவாய்
    கடைக்கண்ணில் வடிவெடுத்து மனதில் நிற்பாய்
    எனக்குள் தோன்றும் சோதி நீ உரிலிங்க தேவனே”

    2.“யாரையும் போலில்லை என் காதலன்
    உலகெலாம் அவன் மனைவியர்; பிறர் வியக்கும் கணவன்
    அவரவர் தன்மையறிந்து இணைவான்
    அவரவர் மனமறிந்து மகிழ்விப்பான்
    யாரையும் வஞ்சியான், என்னைப் பிரியாதவன்
    நீ விரும்பினால் உயர்மந்திரம் ஓது  தோழி, உன்னை
    விட்டகலான், உன் ஆணை, உரிலிங்கதேவன் தன் மீதாணை.”

    3.“என் நெஞ்சில் அவன் புகழ் உள்ளது
    சகோதரர்களே என்னிடம் வந்ததேன்?
    உங்களை அணைக்க இடமில்லை
    நீங்கள் அணைக்க வரின் என் காதலன் குறுக்கிடுவான்
    உரிலிங்க தேவன் அணைத்து, சக்தியற்றுப்போய்
    சக்கையாகவுள்ள என்னிடம் வந்ததேன்?”

    4.“சுவையான முத்தம்,அமுத உணவெனக்கு
    அணைப்பே ஆபரணம், தொடுதலே ஆடை
    பார்வையே சம்போகம், உடனிருப்பதே உயர் உறவெனக்கு
    உரிதேவனோடு இணைவதே பராபர சொற்கூட்டத்தின் சுகம் “

    5. “காமனே!, இருவர் மீதும் ஓரம்பு விடுவாய்
    நீ சாதாரண அம்பாளியில்லை
    கணை தொடுத்தால் இருவரும் ஒன்றாவர்
    அம்பு தொடுக்கும் வகை அதிசயமானது.
    வில்லாளனே, நாங்கள் இருவரும் ஒன்றிணைய
    என்மீதும் உரிலிங்கதேவர் மீதும் ஓரம்பு விடுவாய்”

    6.“உடலுக்கு உடலாகி மனத்திற்குள் மனமாகி இணைந்தான்
    இணைந்தவனின் ஊடலும் கூடலும் யாதெனச் சொல்வேன்?
    அவன் கண்கள் என்னுள் கலந்ததை எப்படி விளக்குவேன்?
    நான் தானென விவரிக்க இயலாமல்
    இணைந்தான் பாராய் உரிலிங்க தேவன்.”

    7. “பொதுவானவர் போல வருவதில்லை
    பொதுவானவர் போல இருப்பதில்லை
    பொதுவானவர் போலப் போவதில்லை
    புண்ணியனாக வருவார்
    அறிவாளியாக இருப்பார்
    முக்தியடைந்தவராய்ப் போவார் பார்ப்பீர்! உரிலிங்க
    தேவனே உன்னடியார்கள்  உவமைக்கப்பாற்பட்டவர்கள்”

    8.“பாடுவேன் என் காதலனை,வேண்டுவேன் அவனை
    கூடுவேன் என் காதலனை, நாளும்
    அவனே நண்பனெனக்கு
    அவனே என்னுயிர் கேளாய் தோழி
    உரிலிங்க தேவனே என்னோடிருப்பான் நாளும்”

    உளியுமேஸ்வர சிக்கண்ணா

    ராய்ச்சூர் மாவட்டம் தேவரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். உளியு மேஸ்வரா அல்லது மல்லிகார்ச்சுனன் இவரது முத்திரையாகும். “குடும்பப் பற்றை விடுதல், சரணரைப் போற்றுதல், சேவை மனப்பான்மை,  பரந்த மனப்பான்மை ஆகியவை பற்றி இவரது வசனங்கள் பேசுகின்றன.

    “ஆற்று நீரெடுத்து வந்து
    பறித்த இலையைத் தின்று
    இலிங்கத்தை இருப்பிடமாக்கிக் கொள்ள வேண்டும்
    அறிவெனும் ஆடையணிந்து
    இலிங்கத்தை இருப்பிடமாக்கிக் கொள்ள வேண்டும்.
    அறிவனைத்தையும் மூடி மறைத்து
    பிறருக்கு ஆசையைக் காட்டி
    குத்திகுத்தியெனைச் சுட்டெரிப்பாரோ ?
    உளியுமேஸ்வரனே”

    [தொடரும்]

    Share
  • தமிழ்ச் சிறுகதை உலகின் மன்னன்!

    தமிழ்ச் சிறுகதை உலகின் மன்னன்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை, அவற்றின் நடையை, கருத்துச் சொல்லும் உத்தியை மாற்றிய புரட்சி எழுத்தாளராக விளங்கிய பெருமைக்குரியவர் சொ. விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன். 1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாளன்று கடலூருக்கு அருகிலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் வட்டாட்சியர் சொக்கலிங்கம் பிள்ளை – பர்வதத்தம்மாள் இணையரின் தலைமகனாய்ப் பிறந்த அவருக்கு தமிழ்நாட்டு வழக்கப்படி அவரது தந்தைவழிப் பாட்டனாரின் பெயரான விருத்தாசலம் என்பது சூட்டப்பட்டது. புதுமைப்பித்தன் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருடைய அருமைத் தாயார் காலமானார்.

    தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளை பணிமாற்றல் காரணமாகப் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்ததால், புதுமைப்பித்தனின் தொடக்கக் கல்வியும் பல ஊர்களுக்கு மாறி மாறி ஓர் ஒழுங்கின்றித் தொடர்ந்தது. அவருக்கும் பள்ளிக் கல்வியில் இளமை முதலே அவ்வளவாக விருப்பமிருக்கவில்லை. ”செஞ்சி மலைக்கோட்டையில் சுற்றி வருவதில்தான் எனக்குப் பிரியம்; பள்ளிக்கூடம் எனக்குக் கசந்தது” என்று புதுமைப்பித்தனே தம் ஆரம்பக் கல்வி குறித்து நண்பர்களிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

    தந்தையார் திருநெல்வேலிக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்ததும் புதுமைப்பித்தனின் பள்ளிப்படிப்பும் 1918ஆம் ஆண்டுக்குப் பின் ஒரே இடத்தில் நிலைத்தது.

    பள்ளிப் பாடநூல்களைத்தாம் புதுமைப்பித்தன் வெறுத்தாரே தவிர இதர நூல்கள்பால் அவருக்கு வெறுப்பேதும் இருக்கவில்லை. பிறகு ஒருவாறு பள்ளிக்கல்வியில் தேறிக் கல்லூரிப் படிப்புக்குத் திருநெல்வேலியிலிருந்த இந்துக் கல்லூரிக்குச் சென்றார் அவர். அப்போதும் கல்விநூல்களில் ஈடுபாடு ஏற்படவில்லை அவருக்கு; நாவல்கள் படிப்பதிலேயே, குறிப்பாகத் துப்பறியும் நாவல்கள் படிப்பதில், மிகுந்த ஆர்வம் கொண்டு தினந்தவறாது நாவல்கள் படித்துவந்தார். தினமும் இரவு 1 மணி 2 மணிவரை புதுமைப்பித்தன் நாவல்கள் படித்துக்கொண்டிருக்க அவருடைய தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையோ மகன் கல்லூரிப் பாடங்களைத்தாம் விடிய விடியக் கண்விழித்துப் படிக்கிறான் என்று நினைத்து மகிழ்ந்திருக்கின்றார்.

    கல்லூரியில் படித்துவந்த காலத்திலேயே இலக்கியப் படைப்பில் புதுமைப்பித்தனுக்கு அதிக நாட்டமிருந்தது. அதனால் இலக்கிய நண்பர்களும் பலர் இருந்தார்கள். நண்பர்களோடு அரட்டை, நாவல் வாசிப்பு என்று காலம் கழித்து வந்ததால் புதுமைப்பித்தனின் கல்லூரிப் படிப்பும் கால தாமதமாகவே நிறைவுற்றது.1931ஆம் ஆண்டு அவர் பி.ஏ. பட்டத்தோடு தம் கல்லூரிப் படிப்புக்கு விடைகொடுத்தார்.

    புதுமைப்பித்தனின் தந்தையார் எப்படியாவது தம் மகனையும் தம்மைப் போலவே ஓர் அரசாங்க வேலையில் சேர்த்துவிடவேண்டும் என்று எண்ணிச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை; காரணம் புதுமைப்பித்தன் பி.ஏ. தாண்டுவதற்கு முன்பே அவருடைய வயது 25ஐத் தாண்டியிருந்தது.

    அரசாங்க வேலை கிடைக்காவிட்டால் போகிறது; எப்படியாவது மகனை ஒரு வழக்கறிஞராக்கிவிட வேண்டும் என்று விரும்பிய சொக்கலிங்கம் பிள்ளை, மகனைச் சட்டப்படிப்புப் படிக்கவைக்கிற சம்பந்தமாகத் தேடியலைந்து, அதற்குச் சம்மதித்த திருவனந்தபுரம் மராமத்துத் துறை மேற்பார்வையாளரான சுப்பிரமணியம் பிள்ளை என்பவரின் மகளான கமலாம்பாளை 1931 ஜூலையில் புதுமைப்பித்தனுக்கு மணமுடித்து வைத்தார்.

    ஆனால் திருமணத்துக்குப் பின்பு தந்தையின் திட்டப்பட்டி சட்டப்படிப்பில் சேரவில்லை புதுமைப்பித்தன். கல்லூரிப் படிப்பே அவருக்கு வேப்பங்காயாய்க் கசந்தநிலையில் மீண்டும் பீனல்கோடை (Penal Code) கட்டிக்கொண்டு அழ அவருக்கு விரும்பவில்லை. எனவே வழக்கம்போலவே இலக்கிய அரட்டையில் நண்பர்களோடு ஈடுபட்டுப் பொழுதைப் போக்கி வந்தார்.

    இதைக்கண்ட புதுமைப்பித்தனின் தந்தையார் அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். அவரோடு சேர்ந்து புதுமைப்பித்தனின் மாற்றாந்தாயும் புதுமைப்பித்தனை வசைபாடவே தந்தை வீடு சுடுகாடு போலானது புதுமைப்பித்தனுக்கு!

    ஒருநாள் மனைவி கமலாம்பாளோடு வீட்டைவிட்டு வெளியேறினார் அவர். சித்தப்பா வீட்டில் சிலநாள், மாமனார் வீட்டில் சிலநாள், வேறுசில உறவினர்கள் வீட்டில் சிலநாள் என்று மனைவியோடு தங்கலானார். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் வேலைவெட்டியில்லாத ஒருவன் உறவினர் வீடுகளில் மனைவியோடு தங்கியிருக்க முடியும்? எனவே மனைவியை மட்டும் அவருடைய பிறந்தகமான திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவிட்டுத் தாம் மட்டும் அங்குமிங்குமாகக் காலம் கழிக்கலானார். அவரைப் பற்றியிருந்த இலக்கிய தாகம் அப்போதும் அவரை விடவில்லை; மாறாக மேலும் உரம்பெற்று வளர்ந்தது!

    அப்போது காந்தி பத்திரிகையில் ‘கண்டதும் காதல் – பொய்யா? மெய்யா?’ எனும் தலைப்பில் சுவையான விவாதம் ஒன்று ஆரம்பமாயிற்று; புதுமைப்பித்தன் இந்த விவாதத்தின் மூலமாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். ’குலோப்ஜான் காதல்’ என்ற தலைப்பில் கண்டதும் காதல் விவகாரத்தைக் கிண்டல் செய்து ஓர் அருமையான கட்டுரையை எழுதி அனுப்பினார். அக்கட்டுரை 1933இல் காந்தியில் வெளிவந்தது. காந்தி பத்திரிகையில் எழுதியதுபோலவே மணிக்கொடியிலும் கதைகள் எழுத ஆரம்பித்தார் புதுமைப்பித்தன்.

    அவருடைய சர்ச்சைக்குரிய கதைகளான பொன்னகரம், கவந்தனும் காமனும், ஆண் சிங்கம் போன்றவையெல்லாம் மணிக்கொடியில் வெளிவந்த கதைகள்தாம். அவரது படைப்புக்களின் அசாதாரணத் தன்மை, தீயை நிகர்த்த வேகம், புதிய கோணம் முதலியவற்றைச் சிலர் பாராட்டினார்கள். வேறு சிலரோ அவரது படைப்புகளைக் கண்டு மிரண்டுபோனார்கள்!

    தமக்குப் பத்திரிகைப் பணி ஒன்றைத் தேடி சென்னை வந்து சேர்ந்தார் புதுமைப்பித்தன். மணிக்கொடி, ஊழியன், தினமணி, தினசரி போன்ற பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தார்.

    புதுமைப்பித்தன் என்ற பெயரில் மட்டுமல்லாது, சொ. விருத்தாசலம், சொ.வி, வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராசாரி எனும் பற்பல பெயர்களில் அவர் தம்முடைய இலக்கியத் திருவிளையாடல்களைப் புரிந்திருக்கின்றார். கதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம், பாட்டு, அரசியல் கட்டுரைகள், ஓரிரு ஓரங்க நாடகங்கள் முதலியவற்றைப் படைத்திருக்கின்றார்.  நிறைவுபெறாத நெடுங்கதைகள் சிலவும் எழுதியிருக்கின்றார்.

    பல புனைபெயர்களை அவர் சூடிக்கொண்டிருந்தாலும் அவருக்கு நின்றுநிலைத்துவிட்ட பெயர் புதுமைப்பித்தன் என்பதே. அதுபோல் எத்தனையோ விதமான இலக்கியப் படைப்புகளை அவர் தந்திருந்தாலும் அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தவை காலத்தை வென்று நிற்கும் அவருடைய சிறுகதைகளே. ஏனெனில் அவருடைய அறிவாற்றல், கற்பனை வளம், ஆழமும் அகலமும் கொண்ட சிந்தனை வீச்சு முதலியவற்றுக்கு உரைகல்லாக அவருடைய சிறுகதைகளே திகழ்கின்றன.

    வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயராக 1944இல் அவதாரம் எடுத்த புதுமைப்பித்தன், படைப்பாளிகளை வாழும் காலத்தில் கௌரவிக்காமல், செத்த பிறகு கொண்டாடுவதைக் கிண்டல்செய்து ஒரு பாடல் எழுதினார். அதன் ஒரு பகுதி இது:

    ”ஐயா நான் செத்ததற்குப் பின்னால் நிதிகள் திரட்டாதீர்!
    நினைவை விளிம்பு கட்டிக் கல்லில் வடித்து வையாதீர்!
    வானத்து அமரன் வந்தான் காண்
    வந்ததுபோல் போனான் காண் என்று புலம்பாதீர்!
    அத்தனையும் வேண்டாம் அடியேனை விட்டுவிடும்!”

    பத்திரிகைத் துறையில் எவ்வளவோ உழைத்தும் எண்ணற்ற கதைகள் படைத்தும் புதுமைப்பித்தனின் வாழ்வு பெரிதாக வளம்பெறவில்லை. எனவே ஒரு கட்டத்தில் பத்திரிகைத் தொழிலுக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

    பிரபல எழுத்தாளராக மக்களிடம் பரிச்சயமாகியிருந்த அவருக்கு ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த ’அவ்வையார்’ படத்தில் வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படத்திற்கு புதுமைப்பித்தன் எழுதிய வசனங்களில் ஒன்று இது:

    அதியமான் அவ்வைக்குச் சாகா வரமளிக்கும் நெல்லிக்கனியை அளிக்க முற்படுகின்றான். அப்போது அவ்வை அவனை பார்த்துக் கேட்கிறாள்: “மன்னா! உலகத்துக்குள் வர ஒருவழிதான் உண்டு; போவதற்கோ பல வழிகள் இருக்கின்றன. அத்தனை வழிகளையும் இந்த நெல்லிக்கனி அடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறாயா?”

    பொருளாழமும் இலக்கியச் சுவையும் மிக்க இத்தகு வசனங்களை ’அவ்வையார்’ படத்துக்குப் புதுமைப்பித்தன் எழுதியிருந்தும், அவருடைய வசனங்களை ஜெமினி ஸ்டுடியோ யாது காரணத்தாலோ பயன்படுத்திக்கொள்ளவில்லை. அடுத்து, ’காமவல்லி’ எனும் படத்திற்கு அவர் வசனம் எழுதினார்.

    படத்துறைக்கு வந்த ஓராண்டுக்குள் தம்முடைய தாயார் பர்வதத்தின் பெயரால் ’பர்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற திரைப்படக் கம்பெனி ஒன்றைத் தொடங்கிச் சொந்தப் படமெடுக்கும் முயற்சியில் இறங்கினார் புதுமைப்பித்தன். இத்தனைக்கும் அவருடைய கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பொருளாதார பலமும் அப்போது இல்லை. அவருடைய இந்த விபரீதமுயற்சியில் முழுத்தோல்வியே அடைந்தார்.

    அப்போது எம்.கே. தியாகராஜ பாகவதர் தயாரித்து நடித்த ’ராஜமுக்தி’ படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றார் புதுமைப்பித்தன்.  ’புனே’வில் தங்கி அப்படத்திற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் காசநோயால் பீடிக்கப்பட்டுப் பெரிதும் அவதியுற்றார். 1948ஆம் ஆண்டு அவருடைய காசநோய் மிகவும் தீவிரமாகிவிட்ட நிலையில் மே மாதம் தம் மனைவியின் ஊரான திருவனந்தபுரத்துக்கு வந்துசேர்ந்தார். 1948ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியன்று நள்ளிரவு இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார் அந்த அற்புத எழுத்தாளர்.

    இன்று தமிழ்நாட்டாரால் ’சிறுகதை உலகின் மன்னன்’ என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் உயிரோடிருந்த காலத்தில் இலக்கிய உலகில் அவருக்கு நண்பர்களைவிடப் பகைவர்களே அதிகம். ஆனால் இந்தப் பகைமைக்குப் புதுமைப்பித்தனின் கதைகள் முக்கியக் காரணமன்று! அவர்சொல்லும் கருத்துக்கள், எழுதும் மதிப்புரைகள், விமர்சனங்கள் முதலியவற்றின் வெளிப்படைத் தன்மையே காரணம் எனலாம்.

    கருத்துக் கூறுவதிலும் விமர்சனம் செய்வதிலும் புதுமைப்பித்தனிடம் இருந்த தீவிரத்தன்மை எப்படி அவருக்குப் பகைவர்களை உருவாக்கியதோ அவ்வாறே அவரது விமர்சனத்தை ஆவலோடு வரவேற்கும் நண்பர்களையும் உருவாக்கித் தந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.

    இலக்கிய ரசிகரும் சிறந்த எழுத்தாளருமான கு. அழகிரிசாமி புதுமைப்பித்தனைப் பற்றிக் குறிப்பிடும்போது,

    “இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் பாரதி; தமிழ் வசனத்துக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன். ஆனால் பாரதிக்குமுன் தமிழில் மிகச் சிறந்த கவிச் செல்வங்கள் இருந்தன; புதுமைப்பித்தனுக்குமுன் மிகச் சிறந்த வசனச் செல்வங்கள் இருந்தன என்று சொல்ல முடியாது. புதுமைப்பித்தன் தமிழ்நாட்டு வசன இலக்கியத்தின் சொத்து. அவர் வசன இலக்கியத்தின் மன்னர்” என்கிறார்.

    ஷேக்ஸ்பியரையும் (Shakespeare) தாந்தேயையும் (Dante) பற்றி ஓர் ஆங்கில விமர்சகர் “ஷேக்ஸ்பியர் வாழ்க்கையின் அகலத்தை அளந்தான்; தாந்தே ஆழத்தை அளந்தான்” என்று குறிப்பிடுகின்றார். புதுமைப்பித்தனுக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இம்மாதிரியே நாம் சொல்லலாம். புதுமைப்பித்தன் வாழ்க்கையின் ஆழத்தை அளந்த ஆசிரியர்.

    புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிப்போர், ”அவர் தம்முடைய கதைகளில், சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளாரே தவிர சிக்கல்களுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயலவே இல்லை” என்பார்கள்.

    ”இலக்கியம் என்பது எளிய மக்களின் வாழ்வைச் சொல்வது; ஏழைகளின் இன்னல்களை, துயரங்களை எழுத்தில் பதிவு செய்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன்; நடப்பதைச் சொல்வதுதான் என் வேலை; அதற்கு முடிவு தருவது என்னுடைய வேலை அன்று!” என்று இந்த விமர்சனத்துக்கான விடையையும் அப்போதே சொல்லிவிட்டார் புதுமைப்பித்தன்.

    பதினைந்து ஆண்டுகளே படைப்புலகில் ஈடுபட்டிருந்தபோதிலும் புதிய இலக்கியவாதிகளை ஒளிகுன்றச் செய்யும் பல்கதிர்ச்செல்வனாய்ப் புதுமைப்பித்தன் ஒளிர்ந்தார். தமிழ் வசன நடைக்குப் புதுவேகமும் புதுப்பொலிவும் தந்தார்.

    துன்பக்கேணி, நாசகார கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சிற்பியின் நரகம் முதலியவை இலக்கியத் தரம் வாய்ந்த, இறவாத புகழுடைய அவருடைய படைப்புக்கள். அகல்யை, சாபவிமோசனம் போன்றவை பழைய புராணக் கதைகளின் முடிவுகளை மாற்றிப் புதிய கோணத்தில் அவர் படைத்தளித்தவை.

    புதுமைப்பித்தன், வலுவற்றுக் கிடந்த தமிழ்வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சீவி; உலக இலக்கியவாதிகளின் சங்கத்தில் தாமாகவே இடம் பிடித்துக்கொண்ட மேதை; சிறுகதை இலக்கியத்தின் ஆசிய ஜோதி, எதார்த்தவாதிகளின் முன்னோடி. குறுகிய காலமே வாழ்ந்து மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களைவிட்டு மறையாமல் சிறுகதை உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் திகழ்ந்துவரும் மணிக்கொடி எழுத்தாளர். 2002இல் அவருடைய படைப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. திருநெல்வேலியில் ஒரு தெருவுக்குப் புதுமைப்பித்தன் வீதி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

    பாரதி பரம்பரை என்று கவிதை உலகில் பாரதிக்குப்பின் ஒரு பரம்பரை உருவானதுபோலவே, புதுமைப்பித்தன் பரம்பரை என்று கூறுகின்ற வகையில் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியவர் அவர். அவருடை கதைகளில் மிளிரும் வைரம் பாய்ந்த சொல்லாட்சி, வளமான வசன நடை, எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் செயற்கைப் பூச்சுகளற்ற காட்சியமைப்புகள், கதைக்களத்திற்கேற்ப நடையை மாற்றும் அவருடைய அசாதாரணத் திறன், சமுதாயச் சிறுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக அவர் எழுப்பும் கலகக்குரல், கதையோடு இழைந்தோடும் அங்கதம் போன்றவை சிறந்த கதாசிரியர்களாகப் பரிமளிக்க விரும்புவோர் கற்றுக் கைக்கொள்ள வேண்டிய உத்திகளாகும்.

    ****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://ta.wikipedia.org/wiki/புதுமைப்பித்தன்

    https://archive.org/details/PuthumaipithanVaralaru/mode/2up

    https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2011/may/15/தமிழ்ச்-சிறுகதையின்-தந்தை-புதுமைப்பித்தன்-352536.html

     

    Share
  • THEOLOGICAL VALUE OF PATTINATHAR SONGS

    THEOLOGICAL VALUE OF PATTINATHAR SONGS

    Dr.S.Nagaretnam, M.A., M.Ed., M.Phil., D.G.T.
    Principal,
    Valliyammaiyar Hindu T.T I.,
    Kulasekarapattinam.
    Tuticorin district-628206.                                                        

    *****

    INTRODUCTION

    Down through history, we see that men who disobey God were destroyed beyond recognition. All religions talk about the love of God for the fellowmen. In Tamil literature, we see quite a number of examples. This had a great impact on the minds of the readers including Pattinathar. Pattinathar was often influenced by the Hindu epics. He often talks about Dharma which is the absolute truth. He reiterates strongly that it is the truth that will overcome flaws and dishonesty.

    Pattinathar songs are innumerable and invaluable. Pattinathar has written Manimalai, Thirukkulumalabum, Manikovai, Thiruvidai Maruthoor Mummani Kovai, Thiruvanthaathi, and Oorupa Orupahthu. He lived in the 11th century. Pattinathar’s songs demand people  turn from sin to God. It creates an awareness of one’s ability and emptiness. It also enhances the reader to look for absolute truth and peace. It enlightens people to recover from their earthly pleasures. It leads to the formation of good behavior and a contented mind. The very word purifies the mind and thought. They also form good behavior and a contented mind.

    The essay attempts to analyze the theological value of Pattinathar’s songs in different aspects like God’s rule over us, means to reach God, God’s forgiveness, and God’s quality.

    GOD RULES US

    God has created this world, and all living beings are made to play a definite role in this world. According to his will, it will move about. This is crystal clearly explained in Pattinathar’s songs. In P.P.Thiru: 4 he clearly says,

     “It is God who created this world as a creature to experience this world. This is portrayed as a painting that is made beautiful according to the mind of the painter. We are like a puppet in his hand when the rope is torn, we fall flat. So, we are governed and controlled by God.”

     In P.P.Thiru :32,he says

    “According to a man’s good deeds, his birth is decided. Pattinathar cries to God, “Please help me to evade the evil and walk in the right path so that I can reach your holy feet without any hurdle. And make me an instrument of peace, let me help you and other fellowmen.”

    In P.P.KAILAYAM: 7  he says,

    “Lord, I am born worse than a dog. I am governed by my sense. Young monkey is all the time attached to its mother. Like that mother, you lead me as you like.”

    MEANS TO REACH GOD

    “Desire is the root cause of all evils,” says Buddha. It is quite true. It is the desire that destroys men. Desire creates quite a lot of unwanted behaviour. Pattinathar also appeals that if we uproot desire, then definitely we can reach God. There are a number of songs that cite men in those ways.

     In P.P.Thiru:5 he says,

    “Love for gold women and land remains Maya. These are the hurdles that prevent us from reaching God. Because of this desire, we get relationships with several relatives. Is there any benefit from these relatives? None. Maya becomes still greater. But we develop a friendship with good people pray to God and they destroy Maya completely.”

    In P.P.Thiru:8 he says,

    “Desires hurdles us from reaching God. We are much worried about our belly i.e. food. In addition to this, we long for gold and wealth. All these things prevent us from thinking about God. So, it is better we discard desire to its very root.”

    In P.P.Thiru: 12 he says,

    “Without God’s blessings, it is difficult to give up worldly pleasures. Hence one must learn to control oneself and seek the abode of God.”

    GOD FORGIVES US

    God the Supreme Being accepts and forgives us amidst limitations and flaws. There are a number of examples cited by Pattinathar.

    In P.P.Thiru:9 he says,

    “Lord I often sin against you. I hardly think of you. I never read holy books about you. I have done innumerable sins. Do forgive me the very prayer makes God forgives us.”

    In P.P.Thiru:10 he says,

    “In all the births I have killed a number of living beings. And I know very well that I should not kill. Do forgive and fill me with your force. Lord at least in my next birth I should not kill other living beings. Thus, he cries to God, the creator. Hence save me, lord. Everything is subjected to destruction. But God remains forever, nothing yields his everlasting power.”

    In P.P.Thiru:13 he says,

    “Even the place where we live might not give us pleasure. Our relatives, mother, wife, and children are not permanent. Nothing shall accompany us except for his help. So when we live in this world we ought to seek God’s help.”

    GOD’S QUALITY

    According to man’s deed, he is blessed or punished. Many of the songs of Pattinathar suggest this notion. In P.P.Thiru:20 he says,

    “Water is pure, but depending on the nature of the land it begets the colour and the taste. Likewise, God’s presence is felt in air, land, water, etc. He is omnipotent.”

    CONCLUSION

    Beyond doubt, Pattinathar exhorts the people to search for eternity. He also emphasizes the importance of the everlasting peace that is awarded for the men who lead a worthy, chase life. He adds that desire causes all evils. Hence man must realize his total emptiness and seek his holy feet for true happiness.

    He also stresses that man is limited in power. He can possess unlimited power if he attaches himself to God, the almighty. It is God who is the Supreme Being who governs everyone in this corrupted world. If we want to be redeemed from these earthly, transitory possessions we ought to lead detached life. And our minds should be set high at the feet of his holiness which alone can yield perennial peace.

    REFERENCES

    1) SHARMA.R.A., Fundamentals of Educational Research, Loyal Book Depot, 1993.
    2) Fox, Davis J. Research Process in Educational new work, Holt Richard and Winston 1969.
    3) Meyyappan, S, Pattinathar Padalgal, Chidambara Manivasagar Pathipagam,1986.

    *****

    ADDRESS FOR COMMUNICATION:

    Dr.S.Nagaretnam,M.A.,M.Ed, M.Phil., D.G.T,
    135/6F, West street,
    Polepettai,
    Tuticorin-628002

    MY EMAIL ID: Sunjana1969@gmail.com

     

     

    Share